TerrorisminFocus

Showing posts with label உலகமயம். Show all posts
Showing posts with label உலகமயம். Show all posts

Thursday, October 07, 2010

இந்து என்று சொல்லுடா மாட்டுக் கறி தின்னுடா!!

மாட்டுக் கறி லெக் பீசு 1:

காமன்வெல்த் போட்டியில் வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறி போடுகிறார்கள் - என்று மோடி புகார் கொடுத்துள்ளாராம். அவருக்கு மாட்டுக்கறி லெக் பீசு கொடுக்கப்படவில்லை என்ற வருத்தத்தில் சொல்லியது போலத் தெரியவில்லை.

ஏனேனில், போன முறை வைப்ரெண்டு குஜராத் நிகழ்ச்சிக்கு குஜராத்து வந்த வெளிநாட்டுக்காரர்களுக்கு மோடி அரசு மாட்டுக்கறி கொடுக்கவில்லை. காரணம், கிருமிகள்.... ஸாரி மன்னிக்கவும். காரணம் என்று அவர் கூறியது இதோ:
"அவர்களிடம் குஜராத் மக்கள் சாப்பிடும் உணவைத்தான் உங்களுக்குத் தர முடியும் என்று நாங்கள் கூறியபோது அதை மறுக்காமல் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்."

ஆஹ, அவரது இந்த லாஜிக்கின் படி இந்திய மக்கள் சாப்பிடும் உணவைத்தான் காமென்வெல்த் கும்பலுக்கும் தர வேண்டும் என்று அவர் கருதுகிறார். அதையே வலியுறுத்தியுள்ளார். இது சரிதான். இந்த கூற்றின் தர்க்க முடிவு என்னவென்றால் மாட்டுக்கறி சாப்பிடுபவன் இந்தியனல்ல என்று ஆகிறது.

அப்படியானால் இந்தியாவில் வாழும் பெரும்பான்மை உழைக்கும் மக்களாயுள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், சூத்திர மக்களும் மாட்டுக்கறியை பாரம்பரியமாகவே சாப்பிடுகிறார்கள் என்ற வகையில் அவர்கள் இந்திய மக்கள் அல்ல என்று ஆகிறது. ஏனேனில், இந்திய மக்கள்தான் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்களே? அல்லது இந்திய மக்கள் என்று எதிர்காலத்தில் மோடி கும்பல் அனுமதிக்கும் மக்கள் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது அல்லவா?

இன்னொரு பக்கம், உலகமய ஏகாதிபத்திய அரசியலானது இதே உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை மறுத்து அவர்கள் மீது அறிவிக்கப்படாததொரு யுத்தத்தை அரசியலமைப்புக்கு விரோதமாக நாடு முழுவதும் நடத்தி வருவதன் மூலம் அதே தாழ்த்தப்பட்ட, சூத்திர மக்களை இந்தியர்கள் இல்லை என்று சூசகமாக அறிவித்துவிட்டது. என்னவொரு பொருத்தம் பாருங்கள் இந்துத்துவவாதிகளுக்கும், ஏகாதிபத்தியவாதிகளுக்கும்.

எனவே, இந்தியன் என்று நம்புபவன் உழைக்கும் மக்களை அழித்தொழிக்கும் உலகமய அரசியலை எதிர்ப்பதன் மூலமும், இந்து என்று நம்புபவன் மாட்டுக்கறி தின்பதன் மூலமும் தமது நேர்மையை நிரூபிக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாக மாறிவிட்டது.

நான் இந்தியன் என்றோ இந்து என்றோ நம்பிக் கொண்டிருக்கவில்லை ஆயினும் உலகமயத்தை மாட்டுக்கறி லெக்பீசு வறுவலை ருசித்துக் கொண்டே எதிர்ப்பேன்.

அசுரன்

Wednesday, November 11, 2009

சுகாதாரத்துறை தனியார்மயம் - தாய்மையை கருவறுக்கும் அவலம்

னியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் முதலில் கேட்க்கப்படும் கேள்வி மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதுதான். ஆம் என்று சொன்னால் ஆபத்து அங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று பொருள். நமக்கு தேவையோ இல்லையோ எதையாவது அறுத்துக் கட்டி, எக்ஸ்ட்ரா பணம் சேர்த்து காப்பீட்டின் மூலம் கறந்துவிடுவார்கள் தனியார் மருத்துவமனைகள்.

இந்த அவலம் எந்தளவுக்குச் சென்றுள்ளது என்றால், அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்களுக்கு அவர்களின் கருப்பை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இப்படி வெட்டி எடுப்பது தேவையே இல்லை என்ற போதிலும் பண வெறி பிடித்தழையும் தனியார் மருத்துவமனைகள் இவ்வாறு செய்து வருவது வெளி வந்துள்ளது.

ஒரு பக்கம் தரகு பன்னாட்டு முதலாளிகளுக்கு வருடா வருடம் வரி தள்ளுபடியாக மட்டும் பல லட்சம் கோடிகளில் கொடுத்துள்ள அரசு, இன்னொரு பக்கம் அடிப்படை வசதிகளை தனியார்மயப்படுத்தி வருகிறது. இவ்வாறு மிகப் பெரிய அளவில் தனியார்மயமான ஒரு துறைதான் மருத்துவத் துறை. ஏற்கனவே, ஏழை எளிய மக்களிடம் மதுரை, சென்னை, கோவை நகரங்களில் கிட்னி திருடப்பட்டது போன வருடம் வெளிவந்தது. இந்த வருடம் தாய்மை திருடப்படுகிறது.

மக்களின் வரிப்பணத்தில் தரகு பன்னாட்டு முதலாளிகளுக்கு அள்ளி வழங்கும் அரசு. மக்களுக்கு அத்தியாவசியமான சுகாதரத்துறையிலும் அவர்களை கை விட்டு அனாதரவாக அலைய விடுகிறது. தனியார் மருத்துவமனைகள் ஒன்றுதான் ஒரே கதி என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இதனை வைத்து தனியார் மருத்துவ கம்பெனி பிசினஸ் சக்கை போடு போடுகிறது. மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் மருத்துவத்துறை ஏற்கனவே இந்தியாவில் மிக அதிகப்படியாகவே தனியார்மயப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மிச்ச சொச்சம் இருக்கும் தொழில் நேர்மை, மருத்துவரின் புனிதம் போன்ற பழைய உலகத்து அடையாளங்கள் சுத்தமாக வழித்தெடுக்கப்பட்டு உலகமய கொள்கைகளுக்கு ஏற்ப மருத்துவத்துறையும் முதலாளித்துவ லாப வெறிக்கு இரையாகி வருகிறது. மெரினா பீச்சில் கிரிக்கெட் விளையாண்டால் மண்டை உடையும், அமைதி கெடும் எனவே தடை செய்தது சரி என்று பேசிய மிக நல்லவர்கள் எல்லாம் இது போன்ற பிரச்சினைகளைப் பற்றி பேசும் போது காணாமல் போய் விடுகிறார்கள்.

நாட்டை வல்லரசாக்குகிறோம் என்ற பெயரில் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகள் மூலம் இந்த நாடு கருவறுக்கப்படுவதன் அம்சங்களாகத்தான் இவை நடைபெறுகின்றன. இத்தகைய தனியார்மயமும், லாப வெறியும், போட்டியும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால் நாளைய உலகம் சுடுகாட்டில்தான் வசிக்கும்.

Surgeries under govt insurance plan in question
Publication: The Times Of India - Chennai; Date: Nov 10, 2009; Section: Front Page; Page: 1
Hysterectomy On Many Women Was ‘Needless’

Pushpa Narayan | TNN

Chennai: At 25, it was a surgery Meena Kumari least expected. She had complaints of an irregular menstrual cycle last year. A city-based private hospital then diagnosed a small fibroid as the problem and removed her uterus. Covered as she was by the government employees’ health insurance scheme, the hospital sent a Rs 40,000 bill to the insurance company.

Sounds routine, but her surgery has now been termed “needless” by an expert panel of doctors from the insurance company running the scheme. What’s more, an ongoing audit by doctors working for Star Health and Allied Insurance has revealed that Meena’s case resembled a sizeable number of hysterectomies done under the scheme in the last one year — they were unwarranted and left many young women unfit to conceive.

The findings suggest medical ethics violations and an excessive tendency to use elaborate procedures on patients, presumably to inflate bills. “Many young women need not have gone through the surgery. Many of them needed just medicines to regularise their periods. They had no family history of cancer or any problem with their reproductive system,” said V Jagannathan, chairman, Star Health, who has recently been holding marathon meetings against such practices.

The insurance scheme covers 12 lakh government employees and their dependents. Since its launch in late 2008, 16,000 women have undergone hysterectomies or overectomies for removal of uterus or ovaries. According to the data, 30% of the surgeries were suspect, and of these, at least 540 women were in the age group of 25-35 — and more than 100 in the 20-30 age group. As a result of the surgery, many of those under 30 may have hit menopause early, apart from losing all chances of bearing a child.

Under The Knife

At least 540 women in 25-35 age group have had their uterus or ovaries removed

Case sheets of patients show that for fibroids as small as 1.4cm, uterus and ovaries have been removed

Around 30% of such surgeries have been termed needless by doctors employed by insurance firms

Tamil Nadu health secretary VK Subburaj said the state health department was yet to get any formal complaint Hospitals warned on unwanted surgeries

Chennai: An audit by doctors working for Star Health and Allied Insurance has revealed that tendency to use elaborate procedures on patients to inflate bills is commonplace.

“One patient told us how she had agreed to the surgery only because she was told the fibroid could turn cancerous,” Star Health chairman Jaganathan said.

Parallel audits on other insurance schemes show that uterus removal for women below 30 years was very low. “We have 1.5 lakh women under the age of 35 covered under the company’s own general health insurance scheme. Of this, just seven women below the age of 35 have had their uteruses removed,” Jagannathan said.

Case sheets of patients billed to Star show that for fibroids as small as 1.4cm, many patients in the government scheme had had their uterus and ovaries removed. Reacting to the findings, fertility expert Dr Priya Selvaraj said: “As far as possible, we ensure that a woman retains her reproductive organs.”

Health secretary VK Subburaj said the health department was yet to get any formal complaints. “If any hospital is found violating rules we will initiate criminal action,” he said. Recently, the insurance company removed two private hospitals in Nagercoil and Kanyakumari for charging extra from beneficiaries of the Kalaignar health insurance scheme.

There are also false claims by some hospitals. A patient who underwent cataract surgery was found not to have an intra-ocular lens implanted as mentioned in the bill.

Finance secretary G Gnanadesikan said state employees had benefited much from the scheme. “We paid premium of Rs 120 crore for 12 lakh employees, who get Rs 2 lakh cover for two years. At the end of the first year, we have received claims for more than Rs 125 crore.”

அசுரன்

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.கவின் கருணையா? நரித்தனமா?

அமெரிக்கா - மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்!

தரகு முதலாளிகளுக்கு மானியம் தொழிலாளிகளுக்கு திருவோடு

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

உலக வங்கி உத்தரவு : தனியார்மயமாக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள்

மருந்துப் பரிசோதனை: சோதனைச்சாலை எலிகளாக மாற்றப்படும் ஏழைகள்

சிறுநீரகக் கொள்ளை :வெட்கங்கெட்ட இந்திய அரசு

தாய்மையை விலை பேசும் உலகமயம்

தாய்மை விற்பனைக்கு

Tuesday, January 06, 2009

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

பொருளாதார சீர்குலைவு சில சமயம் மேட்டுகுடியினரையும் பாதித்து விடுகிறது. சத்யம் கம்பேனியின் இயக்குனர் ராஜு வரவு செலவு கணக்கில் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டு பதவி விலகியுள்ளார். பாகசுர கம்பேனிகள் தமது வரவு செலவில் எப்போதுமே மோசடிதான் செய்கின்றன என்பது இங்கு கவனிக்க வேண்டிய விசயம். இது ஒரு பக்கம் இருக்க. அசுரன் தளத்தில் டிசம்பர் 2006ல் IT ஊழியர்களுக்காக ஒரு கட்டுரை இடப்பட்டது. அது இங்கே மறு பிரசூரம் செய்யப்படுகிறது.

சத்யம் கம்பேனி கவிழ்ந்து கிடப்பதற்கும் பழைய IT ஊழியர் கட்டுரையை மறுபிரசூரம் செய்வதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

இருக்கிறது நண்பர்களே. சத்யம் கம்பேனியின் நிறுவனர்களில் ஒருவராகிய, இன்றைக்கு வேறு ஒரு கம்பேனியின் இயக்குனராக இருக்கும் G. B. பிரபாத், உலகமயம், முதலாளித்துவ பொருளாதாரம், மிக குறிப்பாக IT துறை குறித்து கடுமையான விமர்சனங்களுடன் எழுதிய ஒரு நாவலை முன்னிட்டே இந்த பதிவு எழுதப்பட்டிருந்தது.

வெறுமனே நாம் IT துறை குறித்து பேசுவதற்கும் அதே உண்மைகளை அந்த துறையின் தலைமை சக்திகளில் ஒருவரின் வாயிலிருந்தே கேட்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதால் பிரசூரிக்கப்படுகிறது. IT ஊழியர்களின் கருத்தை அறியும் ஆர்வத்தில் அது அப்பொழுது பிரசூரிக்கப்பட்டது. இதோ மீண்டும் அந்த கட்டுரையின் தேவை எழுந்துள்ளது. எனவே மறுபிரசூரம்.

ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையும் படிக்கவும்:
ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

வாழ்த்துக்களுடன்,
அசுரன்

__________________________________

லேஆப்ஃ(Lay Off), லேஆப்ஃ குறித்த பயம், சந்தையின் உத்திரவாதமின்மை மற்றும் பங்கு சந்தை சரிவு குறித்த பயம், தாரளமாக சகட்டு மேனிக்கு முதலீடு செய்தல், வார இறுதி நாட்களில் தலையை அடகு வைத்தாவது இன்பம் நுகர எத்தணிப்பது, வீட்டுக்கள் ஒருவர் வேலை முடித்து வரும் பொழுது இன்னொருவர் வேலைக்கு கிளம்பும் ஒரு விதமான உறவு முறை இயல்பாக மாறிப் போனது, நுகர்வு வெறி, தனக்கு முடியாத அளவுக்கும் அதிகமாக விசயங்களை இழுத்துப் போட்டுக் கொள்வது, தன்னையே சந்தேகப்படுவதும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை சந்தேகப்படுவதும் - இவையெல்லாம் உலகமயம் இந்தியாவுக்கு கொடுத்த பரிசுகள் என்று நாங்கள் சொல்லவில்லை. சத்யம் நிறுவனத்தின் இணை நிறுவனர் G.B. பிரபாத் சொல்கிறார்.

இந்த விசயங்கள் எல்லாம் சேர்ந்து உலகமய பொருளாதார அமைப்பில் பின்னி பிணைந்துள்ள அனைத்து வர்க்கங்களையும், அனோமிய் என்ற மனோநோய்க்கு இட்டுச் செல்கிறது. இந்த அனோமிய் பின்புலமாக கொண்டு ஏகாதிபத்திய சமூக அமைப்பை கலாச்சார, பண்பாட்டு தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாத்.

அதாகப்பட்டது, உலகமய பொருளாதாரத்தின் உடன் விளைவாக அது சார்ந்த உற்பத்தி உறவுகளில் ஈடுபட்டுள்ள மனிதர்களுக்கு வரும் மனோவியாதியை அடிப்படையாகக் கொண்டு சத்யம் கம்யுட்டரின் இணை நிறுவனர்(Co Founder) G.B. பிரபாத் ஒரு நாவல் எழுதியுள்ளார். அது குறித்து இந்து பத்திர்க்கையின் மெட்ரோப்ளஸ் அவரை அணுகி ஒரு சிறிய உரையாடல் ஒன்றை நடத்துகிறது. அந்த அனுபவம் ஒரு சிறு கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உலகமயத்தின் பலன்களை அனுபவித்தவர்களில் ஒருவரான அவர், உலகமயம் சார்ந்த சுரண்டல் பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்தியாவின் முகத்தை மாற்றியவர்களில் முக்கியமானவரான அவர், அதன் பின் விளைவுகள் அவருடன் உற்பத்தி ரீதியாக நெருங்கிய தொடர்புள்ள வர்க்கத்தினரையே(IT employee etc) பாதிப்பதை உணர்கிறார். ஆக, அந்த அம்சத்தில் உலகமயத்தின் மோசமான பக்கங்களை அம்பலப்படுத்துகிறார். உலகமய ஏகாதிபத்திய பொருளாதாரத்தை அவர் படு மோசமான அளவு விமர்சிப்பதாக மெட்ரோ ப்ளஸ் சொல்லுகிறது.

தரகு வர்க்க பிரபாத் சொல்கிறார்: "நான் பங்களித்து உருவாக்கிய ஒரு உலகம் எனது மனதை கவர்தாக இல்லை". "சில நேரங்களில் நம் நோக்கத்திற்க்கு மாறான விசயங்களை உருவாக்கி விடுகிறோம்".

யுப்பி கலாச்சாரமும், தனி மனித நுகர்வு வெறியும், ஒட்டு மொத்த சமூகத்தின் உயர் பண்புகள் அதலபாதளத்தில் புதைக்கப்பட்டும் உள்ள சூழலில் (இது பொதுவாக புரட்சிகர சூழலுக்கு முந்தைய சூழல்தான்) இது போன்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதில் அவரது தொழில் துறையின் பங்களிப்பை மதிப்பிட்டு கூறியவைதான் மேலெயுள்ள அவரது வரிகள்.

வேலைவாய்ப்பு, ஐந்திலக்க சம்பளம், சராசரியை விட சிறிது(சிறிது மட்டுமே) சுகமான(சுகாதாரமான அல்ல) வாழ்க்கை இவற்றை காரணம் காட்டி உலகமயத்திற்க்கு ஆதரவாகவும், தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குரல்களுக்கு எதிராகவும் கோசமிடும் IT தொழிலாளர்களை இங்கு விவாதம் செய்ய அழைக்கிறேன். உங்களது துறையைச் சேர்ந்த முன்னணி வீரர் ஒருவர் வாயிலிருந்துதான் நாங்கள் சுட்டிக் காட்டும் அதே பிரச்சனைகள் பற்றிய அங்க்லாய்ப்பு வந்துள்ளது.

நாங்க சொன்னாக்க நம்ப மாட்டீங்க. இவர் சொல்றாரே என்ன சொல்லப் போறீங்க....?

'அமெரிக்காவின் மிகபரவலான நோய் - தனிமை' இது இந்தியாவில் இப்பொழுது பரவி வருகிறது என்கிறார் இவர். மேலும், 'இங்கு தனிமையில் இருப்பவர்கள் பெரும்பான்மையாகவும், பிறர் அவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டும் உள்ளன்ர். இந்த புதிய சூழலுக்கு சரியான பெயர் வைக்க விரும்புகிறேன்' என்கிறார். தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் யாரேனும் இந்த பெயர் வைப்பு வைபவத்திலும் அவருக்கு உதவலாம்.

பொருள் நுகர்வு நாட்டம், கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாளித்துவம், தொழில்நுட்ப சாதனங்களைச் சார்ந்த ஒரு வாழ்க்கை இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கும் ஒரு நிச்சயமற்ற சமுதாயம் குறித்த நிலையை சித்த்ரிக்கிறது அந்த நாவல். ஆயினும் இன்றைய இந்தியாவின் இளைய சமுதாயம் அப்படிப்பட்ட ஒரு சமூக வாழ்வை அடைவதைத்தான் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

"ஆனால் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அப்படி ஒரு நிலை இருப்பதை நாம் உணர்வதில்லை அல்லது அதிலிருந்து ஓடி ஒளிய விரும்புகிறோம். முரன்நகையாக, தகவல் தொடர்பின் உச்சத்தில் உள்ள ஒரு உலகத்தில், தனிமையும், அதீத அச்சமும், மனச் சஞ்சலுமும்தான் அதிகப்படியாக உணரப்படுகிறது. எந்த ஒரு உறவும் உத்திரவாதப்படுவதாக இல்லை." இப்படி சொல்வது நாம் அல்ல. ஏகாதிபத்தியத்தின் குலக் கொழுந்து திருவாளர் பிரபாத், சத்யம் இணை-நிறுவனர் கூறுகிறார்.

"அதிகப்படியான தனிமனித வாதம் நிலவுகிறது, முற்றுமுதலாக நாம் தனி மனித மோக வயப்பட்டுள்ளோம், நாம் இணையத்தின் மூலமாக ஒரே ஒரு நபரிடம் மட்டுமே தொடர்பு கொள்கிறோம் அது நாம்தான்' - இப்படி ஏகாதிபத்திய தனிமனித வாதத்தின் அவலத்தை அம்பலப்படுத்துகிறார் பிரபாத்.

"எனது தாத்தாவோ அல்லது உங்களது தாத்தாவோ தனது வேலையை இழந்து விடுவது குறித்தோ அல்லது தனது மனைவி தன்னைவிட்டு விலகிவிடுவது குறித்தோ கவலைப்பட்டதுண்டா?" இப்படி கேட்ப்பது நாமல்ல. இது போன்ற நிலையிலுள்ள வர்க்கத்தை சுரண்டி, கொழுத்த லாபம் சேர்க்கும் தரகு வர்க்க முதலாளி பிரபாத் கேட்க்கிறார்.

சொல்லுங்கள் IT தொழிலாளர்களே என்ன பதில் சொல்லலாம் என்று? பிரபாத் உங்களுக்கு உலகமயத்தின் நன்மைகள் பற்றி தெரியாது என்று அறீவுரை பகர்வோமா? தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு சாலவும் சிறந்த் ஒரு எதிர்காலம் ஒளிமயமாக காத்திருக்கிறது, உங்களது பயம் ஒரு துர் கனவு என்று ஆலோசனை சொல்லுவோமா? வேலை வாய்ப்பு குறித்து RBIயும் சொல்கிறது, உலகமயத்தின் சாரதிகளில் ஒருவரும் சொல்கிறார் இன்னுமா மயக்கம்?

அவர் தொழில்நுட்பம் முதலாளித்துவ/ஏகாதிபத்தியத்தின் கையில் மாட்டிக் கொண்டு படும் பாடு குறித்தும் குத்திக் காட்டுகிறார், "தொழில்நுட்பத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலும் அதை வைத்து என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும் தான் விசயம் உள்ளது. தொழில்நுட்பம் என்பதை பொருத்தளவில் தன்னளவில் எந்த ஒரு நல்லது கெட்டதுகளை கொண்டிருப்பதில்லை."

முதலாளித்துவத்தின் இழி நிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகிறார். "முதாலாளித்துவத்தால் செலுத்தப்படும் தொழில் நுட்பம் குறித்து யாரேனும் எச்சரிக்கை செய்து கொண்டிருக்க வேண்டும்". "முதலாளித்துவம் நமது உள்ளுணர்வுகளை கட்டவிழ்த்து விடுகிறது, நாமோ நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நம்க்கு தீங்கு விளைவிக்கும் என்றூ பார்க்கிறொம்'. இதே விசயத்தைத்தான் இயற்கையுடன் முரன்படும் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் இரு கட்டுரையாக இங்கு பிரசுரிக்கப்பட்டது.

பிரபாத்தின் இந்த கட்டுரை கூட தனிமனித வாதத்தின் அடிப்படையில்தான் பிரச்சனையை அணுகுகிறது. அது எந்த அம்சத்திலும் உலகமய பொருளாதாரத்தில் ஆதாயமடையும் துறைகளில் ஏற்ப்படும் விளைவுகளை சித்தரிப்பதைத் தாண்டி, இதே பொருளாதாரம் இந்தியாவின் இதர பெரும்பான்மை மக்களின் வாழ்வை சுனாமியாக சூறையாடி இருப்பது குறித்து எதுவும் சொல்லுவதாக தெரியவில்லை.

நாம் எதை இழந்து எதை பெறுகிறீர்கள்? கணிணியுடன் இணைந்து அதன் ஒரு உறுப்பாக மாறி சொந்த வாழ்க்கையை இழப்பதுடன், சமூக வாழ்க்கையையும் இழந்து திக்கற்ற நிற்கிறோம். எந்த ஒரு தொழிலில் ஈடுபடுபவனுக்கும், அந்த தொழிலில் ஈடுபடும் உடல் உறுப்பு(கை, கால், விரல் etc) செய்யும் வேலைக்கேற்ற பாதிப்பை அடையும். அப்படியெனில் கணிணியின் ஒரு அங்கமாக மாறிப் போன நமது மூளைக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்ப்படுகிறது?
பெங்களூரில் போன வருடம் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும் சதவீதத்தனிர் IT துறையினர் என்ற விசய்ம் நமக்கு எதை உணர்த்துகிறது? மனோ தத்துவ நிபுனர்களை அணுகுபவர்களில் அதிகம் பேர் IT துறையினர் என்ற் தகவல் எதைக் காட்டுகிறது? நமது மன அழுத்தத்தை குறைக்க நம்மை சுரண்டிக் கொழுக்கும் தரகு வர்க்க முதலாளிகள் அரங்கேற்றும் கேளிக்கைகள் எதைக் காட்டுகிறது?

குறைந்த கூலி என்ற அம்சமும், இந்திய பணத்தின் மதிப்பு டாலருக்கு நிகராக குறைவாக இருப்பது இந்த அம்சங்கள் உண்மையாக இருக்கும் காலம் மட்டுமே நமது வேலை உத்திரவாதப்படுத்துகிறது. நமது மென்பொருள் தயாரிக்கும் திறமையல்ல மாறாக அவனுக்கு லாபம் தயாரித்துக் கொடுக்கும் திறமை-அதாவது குறைந்த கூலி- இதுதான் மதிக்கப்படுகிறது. இது தவிர்த்து உலக பொருளாதார சூழல், நம்மைவிட குறை கூலி உழைப்பை வழங்க தயாராயிருக்கும் வேறு நாடுகள், உள்நாட்டிலேயே வெளி நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வழி வகுக்கும் SEZ. இப்படி கண் முன்னே நமது உரிமைகளை குழி பறிக்க தேவையான விசயங்கள் நடக்கும் போது கூட சுகநாட்ட வாதத்தில் மூழ்கி திளைத்து நிதர்சனத்தை உள்வாங்கும் திறன் இழந்து நிற்கிறோமே என்ன செய்யலாம்?

வார இறுதி நாட்களிலும் வேலை, IBM-ன் யுட்டலிசேசன் டார்கெட்(90% மேல் ஒவ்வொரு நபரும் billable ஆக இருக்க முயற்சி செய்ய வேண்டும்), விப்ரோவின் மாணவ தொழிலாளர்கள், இப்படி நமது உழைப்பை சுரண்டி கோடிகளில் குளீர் காயுபவர்கள், கம்பேனியின் ஒரு துறையில் லாபம் இல்லையென்றவுடன் சம்பளத்தை குறைப்பதும் நடக்கிறது. கம்பேனி ஒட்டு மொத்தமாக லாபம் எடுக்கும் போதே இவ்வாறு எனில் இந்திய தொழிலாளர்கள் இனிமேலும் அவர்களின் டார்லிங்குகள் கிடையாது என்ற நிலை வரும் பொழுது என்ன செய்வார்கள்? இது தவிர்த்து பல்வேறு உடல் உபாதைகள் வேறு.

நம்மை விட அதிக உரிமைகளை சட்ட ரீதியாக பெற்றுள்ள அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட இந்த கம்பேனிகளின் அநியாயங்களை எதிர்த்து போரிடுவதற்க்கு சங்கமாக திரண்டுள்ளனர். அதுவும் அமெரிக்க கார்ப்போரேட் வரலாற்றில் முதல் முறையாக IBM IT (Alliance@IBM) தொழிலாளர்கள் சங்கமாக திரண்டு பென்சன் பணத்தில் அவன் கைவைப்பதை எதிர்த்து போராடி வெற்றி பெற்றுள்ளனர். உரிமைகள் உத்திரவாதமான அவர்களுக்கே சங்கம் தேவைப்படுகிறது, நமக்கு?

IT தொழிலாளிக்கு எதிராக எப்படியெல்லாம் ஆப்பு வைப்பது, சுரண்டலை அதிகப்படுத்தி எப்படியெல்லாம் லாபத்தை அதிகப்படுத்துவது என்பது குறித்து கலந்து பேசி ஒரு பொது முடிவுக்கு வருவதற்க்கு IT முதலாளி சங்கமாக திரள்கிறான்(NASCOM, CII). National Skills Registry என்ற பெயரில் நமக்கு அடையாள எண் கொடுத்து மையப்படுத்தப்பட்ட ஒரு தகவல் கிடங்கை ஏற்படுத்தியுள்ளான். தேவைப்பட்டால் இந்தியாவின் எந்த ஒரு IT தொழிலாளி மீதும் கரும் புள்ளி குத்தி இந்தியாவில் அவனுக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்க விடாமல் செய்யலாம். ஆக, எதிர்காலத்தில் IT தொழிலாளி மீது அவனுக்கு ஆதிக்கம் தேவைப்படும் என்பதை உணர்ந்து இப்பொழ்து தயாராகிறான் அவன். நாமோ பலி ஆடுக்கு நல்லா தீவனம் கிடைக்கிறது என்று தேமேவென்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எதை இழந்து எதை பெறுகிறோம்? நமது பெற்றோர்கள் அரசு நிறுவனங்களில் வேலை பார்த்து ரிடையர் ஆகி வெளி வரும் பொழுது பெண்ணின் திருமணம், பையனின் படிப்பு, அது போக குறிப்பிடத் தகுந்த பென்சன், கையில் ஒரு பெரிய தொகை, இவை தவிர்த்து வீடு வாசல் அமைதியான வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் என்று இருந்தார்கள். நமது நிலைமை?

இந்த அம்சங்களையேல்லாம் விளக்கி ஒரு கட்டுரை ஆறேழு மாதங்களுக்கு முன்பு வந்து மிகப் பரவலாக அனைவராலும் மெயிலில் அனுப்பட்டது.

இதை விடுங்கள் ஒரு சமூகமே சீரழிந்து கொண்டிருக்கும் பொழுது, நாம் மட்டும் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட முடியுமா? கார்போரேட் லெசன் என்ற பெயரில் சிறு கதைகள் அடங்கிய ஒரு இமேயிலை பெரும்பாலனவர்கள் படித்திருப்பீர்க்ள். அதில் குழுவில் ஒருவருக்கு பிரச்சனை வரும் பொழுது நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நமக்கும் ஆபத்து வரும் பொழுது பேரிடராக இருக்கும் என்பதை வலியுறுத்தி ஒரு கதை வரும். இந்த சமூகம் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வோரு மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்ய உற்பத்தி செய்கிறது. இதில் சமூகத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதி துன்பத்தில் துவளும் பொழுது நாம் மட்டும் எப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட முடியும்?

என்ன செய்யலாம்? க்ளையண்டின் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வு சொன்ன நேரம் போக நமது பிரச்சனைகளையும் ஆய்வு செய்து தீர்வு குறித்து யோசிக்கலாம். After all, மற்ற யாரையும் விட சிந்திக்கும் திறமையிலும், அதற்க்கு தேவையான தகவலகளின் அருகாமையிலும் நாம் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறோம். பிரச்சனை நம்மை பற்றி சிந்திக்க நமக்குக் கிடைக்கும் சொற்ப நேரம்தான்......

என்ன செய்யலாம்?.....

அசுரன்

***********

அனோமிய் நோய் குறித்து:

ஒவ்வொரு சமூகமும், மனிதனும் தான் ஈடுபட்டுள்ள உற்பத்தியின் தன்மையைப் பொறுத்த அறிவு, மனவள முதிர்ச்சி அடைகிறான். இதுதான் சமூக பரிணாமத்துவம் குறித்த மார்க்ஸிய பொருள்முதல்வாதப் பார்வை. ஆக, ஏகாதிபத்திய சமூகத்தில் ஒரு பக்கம் நுகர்வு வெறி மூலமாகவும், இன்னொரு பக்கம் அதிகப்படியான சுரண்டல் மூலமாகவும்(12 மணீ நேரம் வேலை) சமூகத்துடனான தொடர்பை இழக்கிறான் மனிதன். அதே நேரத்தில் நுகர்வு வெறியை நியாயப்படுத்தவும், சமுகமாக தன்னை உணர்ந்து கூட்டுச் சேர்வதற்க்கான அடிப்படைகளை அடித்து நொறுக்கவும் தேவையான பல்வேறு பொதுக் கருத்துக்களை அவனது ஊடக பலத்தின் மூலம் உறுதிப் படுத்துகிறான். அப்படி ஒன்றுதான் தனிமனித வாதம். இதன் காரணமாக முந்தைய சமூகத்தின் மதிப்புவாயந்த பண்புகள் இன்று இழிச்சவாயத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பார்க்கப்படுகிறது. விளைவு, இந்த சூழலிலான உற்பத்தியில் ஈடுபடும் ஒரு மனிதன் தனது பழைய உயர் மதிப்புகளை இழக்கிறான். இவை தவிர்த்து இந்த சூழல் உருவாக்கும் கலாச்சார பிரச்சனைகளும், தொழில் ரீதியான பிரச்சனைகளும், உடல், மன உபாதைகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு மனோ வியாதிதான் - அனொமிய்.

"Alienation and purposelessness experienced by a person or a class as a result of a lack of standards, values, or ideals" - Anomie(அனொமிய்)

"தரம் தாழ்ந்த நிலை, உயர் பண்புகளை இழத்தல் இவற்றின் விளைவாக ஏற்ப்படும் அந்நியப்படுதலும், எந்த ஒரு குறிப்பிட்ட லட்சியமோ/நோக்கமோ அற்ற வாழ்க்கையும் ஏற்ப்படுத்தும் மனவியல் பிரச்சனை" - அனோமிய் எனப்ப்டுகிறது.

Must Read articles:

IBM IT union
software_job_india
workers-of-cyber-world-uniteatleast

corporate-lesson-secret-of-dreaming
it-survivors-staying-alive-in-software
are-we-living-at-mercy-of-their-profit
still-sleaping-jobs-started-flying
இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1
அழிவில் லாபமும், லாபத்தால் அழிவும் - பாகம் II
கணிணி தொழில்நுட்ப வல்லுனர்களே !

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

இது குறித்து கருத்துக்களை ஆலோசனைகளை எனக்கு தனிமடலிலும் அனுப்பலாம்:

asuran07@gmail.com

Monday, April 28, 2008

தத்துவ குருடர்களும், முதலாளித்துவ வளர்ச்சியும்!!!

சில தத்துவ குருடர்களும், வரலாற்று குருடர்களும் முதலாளித்துவ வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை கூட்டிக் கொடுப்பதையே மார்க்ஸியம் என்று சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு மார்க்ஸியத்திலிருந்தே இதற்க்கான மறுப்பை அறிமுகப்படுத்தும் முகமாக ஒரு பழைய பதிவை மீள் பதிவு செய்கிறேன்.
___________________________________________________________________
இன்றைக்கு சுதந்திர வர்த்தகம் குறித்து பேசும் ஏகாதிபத்திய அடிவடுடிகள், தொழில் வளர்ச்சி, தொழில் முதலீட்டிற்க்கான மூலதன்ம் இவற்றையே காரணமாக கூறி ஏமாற்றுகிறார்கள். ஆனால் உலகில் முன்னேறி நிற்க்கும் நாடுகளின் வரலாறை பார்க்கும் பொழுது இவர்களின் இந்த கூற்று பொய் என்று தெரிய்வருகிறது.

Free Trade குறித்து மார்க்ஸின் கட்டுரைக்கான ஏங்கெல்ஸின் முன்னுரை.

""After a long and violent struggle, the English industrial capitalists, already in reality the leading class of the nation, that class whose interests were then the chief national interests, were victorious. The landed aristocracy had to give in. The duties on corn and other raw materials were repealed. Free Trade became the watchword of the day. To convert all other countries to the gospel of Free Trade, and thus to create a world in which England was the great manufacturing centre, with all other countries for its independent agricultural districts, that was the next task before the English manufacturers and their mouthpieces, the political economists.""

பிரிட்டிஷ் முதலாளிகளின் இடத்தில் இன்றூ தேசம் கடந்த பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் உள்ளனர். மூன்றாம் உலக நாடுகளை தங்களது சந்தை மற்றும் உற்பத்திக்கான பின்நிலங்களாக வைத்துள்ளனர் என்ற அளவில் ஒப்பிட்டு புரிந்து கொள்ள இந்த வரிகள் உதவும்.

மேலும் இங்கு பிரிட்டனுக்கும் அதனுடன் சுதந்திர வர்த்தகம் செய்ய விழைந்த நாடுகளுக்கும் இடையிலான முதலாளித்துவ வளர்ச்சி வித்தியாசம் என்பது மிக குறைவு. எனவே இந்த வர்த்தக உறவால் ஏற்பப்டும் பாதிப்பு குறைவே. ஆனால் இந்தியாவுடன் பிற் ஏகாதிபத்தியங்களுக்கு உள்ள ஒப்பிட இயலா வித்தியாசத்துடன் பொருத்திப் பார்க்கும் பொழுது இந்தியாவுக்கு அது மரண அடியாக பாதிப்பு கொடுக்கும் என்பதை விவசாயிகளின் தற்கொலைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பிரிட்டனின் இந்த சுதந்திர வர்த்தக நோக்கத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஏனேனில், இது பிரிட்டனில் தொழில் வளர்ச்சியை மிக வேகமாக முடுக்கி விடும் எனவே புரட்சிக்கான சூழல் மிக வேகமாக வளரும் என்ற அடிபப்டையில். ஆக, ஏகாதிபத்தியத்தின் பொருளாதார் வளர்ச்சிக்கு சுதந்திர வர்த்தகம் உதவி புரிவதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இது எந்த வகையிலும் சுதந்திர வர்த்தகத்தில் இணையும் பிற நாடுகளுக்கு உதவிகரமானது இல்லை எனப்தை கீழே விவரிக்கிறேன்.

அன்றைய பிற முதலாளித்துவ நாடுகள் பிரிட்டனின் உலக மேலாதிக்க திட்டங்களைப் பார்த்துக் கொண்டு புளிய்ம பழமா பறித்துக் கொண்டிருந்தார்கள்? இல்லை மாறாக அவர்களும் தமது சொந்த உற்பத்தியை மிக வேகமாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுதந்திர வர்த்தகம் மூலமாக இல்லை, மாறாக தமது பொருளாதாரத்தை இறுக்க மூடி வெளி நாட்டு மூலதனத்திலிருந்த பாதுகாத்தன் மூலமே தமது பொருளாதாரத்தை வளர்த்தனர்.

""The foreign countries did nothing of the kind. France, for nearly 200 years, had screened her manufactures behind a perfect Chinese wall of protection and prohibition, and had attained in all articles of luxury and of taste a supremacy which England did not even pretend to dispute.""

இங்கு பிரான்ஸ் தேசம் தனது சொந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை புரொக்டசனிஸ்ட் முறை மூலம் காபந்து செய்து வளர்த்தது குறித்து ஏங்கெல்ஸ் சொல்கிறார். இது போலவே ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என எல்லா நாடுகளும் தமது தொழில் வளர்ச்சியை இப்படி பொத்தி பொத்தி பாதுகாத்துதான் வளர்த்தனர்.

ஏங்கெல்ஸ் ஒரு ரயில் பிரயாணத்தில் தன்னுடம் பயணம் செய்த சக பயனியான இரும்பு வியாபாரியிடம் பேசுகிறார். இரும்பு வியாபாரி அமெரிக்காவின் protectionist பொருளாதார கொள்கையை விமர்சித்து பேசுகிறார்.

"Was it not inconceivable that a nation of sharp businessmen like the Americans should pay tribute to indigenous ironmasters and manufacturers, when they could buy the same, if not a better article, ever so much cheaper in this country?"

அதாவது இரும்பை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்யும் இங்கிலாந்திலிருந்து வாங்குவதை விடுத்து ஏன் உள்ளூர் இரும்பு உற்பத்தியாளர்களை அமெரிக்க ஊக்கப்படுத்துகிறது என்கிறார். மேலும் அவர் free trade என்ற இன்றைய உலகமயத்தின ஆதார நியதியை ஆதரித்து பேசுகீறார்.

இதற்கு எங்கெல்ஸ் பின்வருமாறூ கூறுகிறார்,

""Well," I replied, "I think there is another side to the question. You know that in coal, waterpower, iron, and other ores, cheap food, homegrown cotton, and other raw materials, America has resources and advantages unequalled by any European country; and that these resources cannot be fully developed except by America becoming a manufacturing country. You will admit, too, that nowadays a, great nation like the Americans' cannot exist on agriculture alone; that would be tantamount to a condemnation to permanent barbarism and inferiority; no great nation can live, in our age, without manufactures of her own. Well, then, if America must become a manufacturing country, and if she has every chance of not only succeeding but even outstripping her rivals, there are two ways open to her: either to carry on for, let us say, 50 years under Free Trade an extremely expensive competitive war against English manufactures that have got nearly a hundred years start; or else to shut out, by protective duties, English manufactures for, say, 25 years, with the almost absolute certainty that at the end of the 25 years she will be able to hold her own in the open market of the world. Which of the two will be the cheapest and the shortest? That is the question. If you want to go from Glasgow to London, you take the parliamentary train at a penny a mile and travel at the rate of 12 miles an hour. But you do not; your time is too valuable, you take the express, pay twopence a mile and do 40 miles an hour. Very well, the Americans prefer to pay express fare and to go express speed.""

அதாவது அமெரிக்காவில் அளப்பரிய வளங்கள் உள்ளன. இவற்றை வளர்த்தெடுக்க அமெரிக்க ஒரு உற்பத்தி பொருளாதாரமாக மாற வேண்டும். விவசாயத்தை மட்டும் நம்பி ஒன்றும் செய்ய முடியாது. இதை சாதிகக் இரு வழிகள் உள்ளன. ஒன்று தனது நாட்டை திறந்து விடுவதன் மூலம் இங்கிலாந்து முதலாளீகளுடன் முட்டி மோதி தந்து நாட்டு உற்பத்தியை வளர்ப்பது. இன்னொன்று தனது நாட்டை இறுக்கமாக மூடி சொந்த நாட்டு உற்பத்தியை வளர்த்தெடுப்பது.

நீ ஒரு இடத்துக்கு போக சாதா ரெயிலும், எக்ஸ்பிரஸ் ரயிலும் இருந்தால் காசு கொஞச்ம் கூட ஆனாலும் பரவாயில்லை என்று எக்ஸ்பிரஸ் ரெயிலில்தானே செல்வாய்? அதைத்தான் அமெரிக்க செய்கீறது. தனது நாட்டின் உற்பத்தியை வேகமாக வளர்த்தெடுக்க காசு அதிகமாகா செல்வனாலும் பரவாயில்லை என்று அமெரிக்க த்னது கதவுகளை மூடி கொண்டுள்ளது. என்று ஏங்கெல்ஸ் பதில் சொல்கீறார்.

இப்படி ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் தமது பொருளாதாரத்தை பொத்தி பொத்தி வளர்த்துவிட்டு இன்று இந்தியா போன்ற நாடுகளை கதவைத் திறந்து விடச் சொல்கின்ற்ன. அதற்க்கு சில அடிவருடிகளின் ஆதரவு வேறு.

இவர்களின் ஒரே வாதம், இந்தியாவில் தொழில் புரட்சி நடக்க இந்தியாவை திறந்து விட வேண்டும் என்பதுதான். ஆனால் இவர்களின் அப்பன் நாடுகள் எதுவும் இவர்களின் இந்த கூற்றை நடைமூறையில் இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றூம் கூட தனது விவ்சாய உற்பத்தியை protectionist கொள்கையின் மூலம் காத்து வருபவர்கள்தான் ஏகாதிபத்திய்ஙகள். அதாவது இந்தியாவை தமது குறை விலை பருத்தியால், பாலால் நிறைக்கும் ஏகாதிபத்திய்ங்கள், தமது நாட்டில் இந்திய விவசாய பொருட்களை அனுமதிப்பதில்லை. அனுமதித்தாலும் நாம் சந்தையில் நிற்க முடியாது ஏனேனில் ஒவ்வொரு நாடும் தனது உள்நாட்டு விவசாய உற்பத்தியாளருக்கு 100% வரை மானியம் தருகீறார்கள்.

ஆக நேற்றைய வரலாறு நமக்கு சொல்வது , "ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சி என்பது, உற்பத்தி வளர்ச்சி என்பது அதனை வெளிநாட்டு மூலதனத்திலிருந்து பாதுகாப்பதில் அடங்கியுள்ளது என்பதை" அதாவது உள்நாட்டு முதலாளிகளை வளர்ப்பதில் அடங்கியுள்ளது.

இன்றைய ஏகாதிபத்தியங்கள் தமது விவசாய உற்பத்தியில் நடைமுறைப்படுத்தும் கொள்கையும் இதையேதான் சொல்கீறது.

தமது சொந்த் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக பேசும் போது குறைந்த் விலை, தொழில்நுட்பம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டாமல் தமது பொருளாதாரத்தை கட்டி காத்து வளர்த்த அன்றைய முதலாளித்துவ நாடுகளும், இன்றைய் ஏகாதிபத்திய நாடுகளின் தேசபக்தி எங்கே? இதே தொழில் வளர்ச்சியை நாட்டை திறந்து விட்டு நாறடித்தால்தான் சாத்தியம் என்று கதை கட்டி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் அடிவருடிகளின் தேசத் துரோகம் எங்கே?

இவர்களின் யாருக்கு தேசப்பற்று உள்ளது? வெறுமனே சுதந்திர தின விழாவுக்கு கட்டுரை எழுதி மிட்டாய் கொடுத்தால் தேசப்பற்றா?

அடிவருடிகள் பதில் சொல்வார்களா அல்லது வழக்கம் போல ஓடி மறைந்து கொள்வார்களா?

இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவின் தொழில் வளர்ச்சி ஓரளவு நல்ல நிலையில், இங்கிலாந்துடன் போட்டி போடும் நிலையில் இருக்கும் பொழுதே அதன் சந்தையை இங்கிலாந்துக்கு திறந்து விடுவது அதன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்பதுதான் உண்மை. இந்தியாவோ எந்த வகையிலும் உற்பத்தியில் ஏகாதிபத்திய நாடுகளின் அருகிலேயே இல்லை. இந்நிலையில் திறந்து விடுவது என்பது சுத்தமாக இந்தியாவை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும் என்பதுதான் உண்மை.

ஏகாதிபத்திய்ங்களின் இன்றைய கொள்கைகளும் சரி, நேற்றைய வரலாறும் சரி நமக்கு சொல்வது இதுதான், "சுதந்திர வர்த்தகம் என்பது உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு ஆபத்தே'. அது உண்மையான தொழில் வளர்ச்சியின் வேகத்தை முடக்கி போட்டு மந்தமான வளர்ச்சியையே உருவாக்கும் என்பதுதான் உண்மை. இந்த மந்தமான வேகத்தைத்தான் அடிவருடிகள் ஊதிப் பெருக்கி நம்மை ஏமாற்றுகிறார்கள். மாறாக 10 வருடங்க்ளில் 56 மடங்கு உற்பத்தியை வளர்த்திக் காட்டிய சோசலிச(1970's) சீனாவின் அனுபவ்ம் நமக்கு மாற்றுப் பாதையைக் காட்டுகிறது.
நாம் இழிச்சவாயர்களா? அடிவருடிகளா? தற்குறிகளா? பிழைப்புவாதிகளா? அலல்து சுயமரியாதை உள்ள தேச பக்தர்களா என்பதை அவரவர சொந்த முயற்சியில் பரிட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அசுரன்
Related Articles:

Wednesday, March 14, 2007

தேசத் துரோக அடிவருடிகளும், சுதந்திர வர்த்தகமும் - உலகமயம்!!

Thursday, February 15, 2007

இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்

ந்திய அரசு தனது வர்க்க சார்பை விட முடியாமல் தவிக்கிறது. விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பான துறை என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதனை முன்னிட்டுதான் விவசாயத்தில் குறைந்த பட்ச GDP வளர்ச்சியில்லையெனில் இந்தியாவின் GDP இலக்கை அடைய முடியாது என்று அலறுகிறார்கள் பா. சி., மண்டேக் சிங் அலுவாலியா முதலான அமெரிக்க புரோக்கர்கள்.
ஆயினும், இந்த அலறலை மக்கள் மீதான அன்பால் ஏற்ப்பட்ட அலறல் என்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் உண்மையில் இந்திய விவசாயத்தை வளர்க்க அதில் முதலாளித்துவ பாணி உற்பத்தி முறைகளை கொண்டு வர வேண்டும். ஆனால் இதனை செய்யும் தைரியமும், தனது சொந்த வர்க்கங்களுக்கு துரோகம் செய்யும் நெஞ்சுரமும் இந்த கைக்கூலிகளுக்கு இல்லை.

முதலில், அது என்ன முதலாளித்துவ பாணி உற்பத்தி முறை?

மிகப் பெரிய அளவில், ஒரே இடத்தில், மையப்படுத்தப்பட்ட முறையில் நவீன கருவிகள் உதவியுடன், பெரும் எண்ணிக்கையில் விஞ்ஞான முறைகளின் துணையுடன் செய்யப்படும் உற்பத்தி முறைதான் முதலாளித்துவ உற்பத்தி முறை. இதனை மேலைநாடுகளில் பார்த்திருக்கலாம். பல லட்சம் ஏக்கருக்கு ஒரே ஒரு பயிர்தான். விமானம் மூலம் உரம்-பூச்சி மருந்துகள், நீர் பாய்ச்சுவது மையப்படுத்தப்பட்டிருக்கும், ஒரு குறிப்பிட்ட பெரிய சந்தையை மனதில் கொண்டு திட்டமிடப்பட்ட உற்பத்தி, அதி நவீன ராட்சச யந்திரங்கள் மூலம் அறுவடை. இப்படி ஒரு தொழிற்சாலை போலவே அங்கு விவசாயம் நடைபெறுகிறது. இன்னும் சொன்னால் அங்கு விவசாய முதலாளியும், தொழிலாளியும்தான் உண்டு. விவசாயியோ அல்லது நிலபிரபுவோ கிடையாது.

ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பின்னிபிணைந்துள்ள விவசாயமோ இன்னும் சிதறிய சிறுவீத உற்பத்தி எனும் நிலபிரபுத்துவ முறையையே பின்பற்றி வருகிறது. அதிலிருந்து மேலேறி அடுத்தக் கட்டத்திற்கு வரவிடாமல் இந்தியாவின் பொருளாதாரம் ஏகாதிபத்திய முடக்கு வாதத்தால் அவதியுறுகிறது. இதைத்தான் நாம் அரைக்காலனியம், அரை நிலபிரபுத்துவம் என்கிறோம்.

ஏன் இந்திய அரசால் விவசாயத்தை வளர்க்க முடியவில்லை:

விவசாயத்தை அடுத்தக் கட்டத்திற்க்கு கொண்டு வரும் முயற்சிகள் பெரும் நிலவுடமையாளர்களுக்கும், விவசாய உற்பத்தி பொருட்களின் விற்பனை பிரிவு, சந்தை பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் புரோக்கர் கும்பல்களுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என்பதால்தான் இந்த அரசு அத்தகைய நிலச் சீர்திருத்தம், விவசாய சீர்திருத்த நடவடிக்கைகளை செய்வதில்லை. இது பிரச்சனையின் ஒரு அம்சம் மட்டுமே.

இன்னொரு முக்கிய அம்சம் ஏகாதிபத்தியத்தின் சந்தை தேவையையும், மூல வளங்களின் தேவையையும் நிவர்த்தி செய்யும் ஒரு இழிச்சவாய நாடு என்று முத்திரையை இந்தியாவிற்க்கு தொடர்ந்து குத்துவதில் உள்ள ஆர்வம். இந்த அம்சம் மிக குறிப்பாக உலகமயத்திற்க்கு பிறகு பெரும் முக்கியத்துவம் பெருகிறது.
ஏனேனில், உலகமயத்திற்க்கு பிற்ப்பாடு மேலே சொன்ன முதல் அம்சமான - நிலவுடைமையாளர் மற்றும் விற்பனை மற்றும் சந்தை பிரிவுகளும் கூட MNC, தரகு முதலாளிகளுக்கு திறந்து விடப் படுவதுதான்.

இந்திய விவசாயத்தை இப்படி அரை நிலபிரபுத்துவமாக வைத்திருப்பதில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு என்ன அரசியல் இருக்க முடியும்?

மூன்று நோக்கங்கள்,

#1) குறை கூலி மனித வளம்:
குறைந்த கூலிக்கு, சொன்னதை அடிமை போலச் செய்யும் உழைப்பாளர்களை தொடர்ந்து உருவாக்கி(பெற்றெடுத்து வளர்த்து) செய்வதற்க்கு கிராம உற்பத்தி உறவுகளை நிரந்தரமாக பாதுகாப்பது அவசியம். இது குறித்து இந்த கட்டுரையில் 'இந்த பாணி உற்பத்தி முறையின் விளைவு என்ன?' என்ற தலைப்பின் கீழ் ஓரளவு விளக்கியுள்ளேன்.

இந்த பாணி உற்பத்தி முறை எப்படி அவனுக்கு குறைந்த கூலி ஆட்களை பெற்றெடுக்கிறது,

விவசாயத்தை சுதாட்டம் போல மாற்றி, விவசாயியை நிலத்தை விட்டு ஒரு பக்கம் விரட்டுகிறது இந்த பொருளாதாரம். இதன் மூலம் நகரங்களில் குறைந்த கூலிக்கு சுரண்ட தொடர்ந்து மனித வளம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் அவனது வாழ்வை நகரங்களில் உத்திரவாதப்படுத்தாமல் கிராமம் பாதி நகரம் பாதி என்று அவனை அலைக்கழிக்கிறது. இதன் மூலம் அவன் நகரத்தில் குறை கூலிக்கு சம்பாதித்து அதை கிராமத்தில் மீண்டும் முதலிடுகிறான். அந்த முதலீட்டில் உற்பத்தியாகும் விவசாய பொருளை மிக குறை கூலிக்கு இந்த சமுகமே நுகர்கிறது. இங்கு கிராம நகர(Cost of Living) வேறுபாடு கிராமத்து கூலி தொழிலாளியை எப்படி ட்புள் சுரண்டலுக்கு உட்படுத்துகிறது என்பது புலனாகும். நகரத்திலோ அவனை தற்காலிக தொழிலாளியாக சிறு அளவிலும், சிறு பட்டறைகளில், கட்டுமான இடங்கள், ஹோட்டல் முதலான இடங்களில் உதிரி தொழிலாளியாக பெரும் எண்ணிக்கையிலும் வைத்து சுரண்டுகிறது. அவனை ஜனநாயகப்படுத்தாமல் மிக கவனமாக இந்த சமூக அமைப்பு கையாளுகிறது.

#2) மலிவு விலை மூல வளங்களும், மலிவு விலை சந்தைக்கான உற்பத்தி பொருட்களும்:

அ) சிறுவீத உற்பத்திகளான பட்டறை முதலாளிகளின் வளர்ச்சியை தடுப்பது. திருப்பூர் பனியன் பட்டறை முதலாளியால் திருப்பூரை தாண்டி சென்று விட முடியாது ஏனேனில் சந்தை ஒரு MNC கையிலோ அல்லது தரகு முதலாளி கையிலோ உள்ளது, இதன் மூலம் அவை காலாகாலத்தும் MNC, தரகு கம்பேனிகளுக்கு உற்பத்தி செய்யும் ஒரு தொங்கு சதையாகவே தேங்கி விடுவது.
சிறு முதலாளி, சுதந்திரமான தனது சந்தைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு, இன்று MNC, தரகு கம்பேனிகளிடம் தமது பொருளை விற்க்கிறான். ஒரு விவசாயியின் நிலையைப் போலவே அவனும் தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை வைக்க வக்கின்றி இருக்கிறான். ஏனேனில் உற்பத்தி நடந்தால்தான் அவனுக்கு சோறு, உற்பத்திக்கு MNCயும், தரகு முதலாளியும் காண்ட்ராக்ட் தர வேண்டும், அப்படி அவன் காண்ட்ராக்ட் தருவதற்க்கு அவன் சொன்ன விலைக்கு விற்க்க தயாராக இருக்க வேண்டும். இந்த கந்து வட்டி போன்ற விசச் சூழல் மலிவு விலையில் MNC, தரகு முதலாளிகளுக்கு சந்தைக்கான பண்டங்களை உற்பத்தி செய்து கொடுக்கிறது. இது ஓரளவு IT தொழிலாளிக்கும் பொருந்தும்.
ஆ) விவசாயத்தின் நவீன உற்பத்தி முறைகளை தடுப்பது - அதாவது பெரும் விவசாய கூட்டுப் பண்ணைகள், மையப்படுத்தப்பட்ட சந்தை, மையப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்திக்கான திட்டம் போன்றவற்றை தடுப்பது - இதன் மூலம் சிறுவீத உற்பத்தி மூறையால்(Ex: காண்ட்ராக்ட் Farming) தொடர்ந்து தனது தேவைகளுக்கு மட்டும் இந்திய விவசாயம் சேவை செய்வதை நிரந்தரமாக்குவது.
இதற்க்கு உதாரணம்தான் பூ விவசாயம், இறால் பண்ணைகள் etc. லாபம் எந்த பொருளுக்கு உள்ளது என்பதை அவன் நிர்னயிப்பதன் மூலம் அதனை நாம் உற்பத்தி செய்ய வைக்கிறான். சில மடையர்கள் லாபம் என்பதனை மட்டும் பார்த்து இந்த அடிமை விசச் சூழலை வளர்ச்சி என்கிறார்கள். ந்மது தேவைக்கு உற்பத்தி செய்வதை விடுத்து அவனது சந்தை தேவைக்கு உற்பத்தி செய்வதன் மூலம் பாரம்பரியமான நமது சுயசார்பு பொருளாதார வலைப்பின்னல் சின்னாபின்னமாகிவிட்டது. இந்தியாவின் சுயசார்பை இப்படி அடித்து நொறுக்குவதன் மூலம், அந்த சந்தையையும் அவனே கைப்பற்றிக் கொள்வது(கோதுமை பிரச்சனை).

#3) சந்தை:
சுயசார்பை உடைத்தெறிவதன் மூலமும், இந்திய தொழில் துறையின் வளர்ச்சி என்பது தனது வளர்ச்சியாக மட்டுமே இருக்கமாறும் பார்த்துக் கொள்வதன் மூலமும் இந்த பெரிய சந்தையை தன் இஸ்டம் போல சுரண்டுவது.
(எ-கா: பசுமைப் புரட்சி காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தமது காலவதியான ஆயுத மருந்துகளை பூச்சிக் கொல்லியாக உரமாக கொடுத்தது, தற்போதைய BT விதைகள், விதை நெல் சீர்திருத்தம், ரீட்டையல் பிசினெஸில் FDI, சுதந்திரம் அடைந்த குறுகிய காலத்திலேயே அம்பலமான 'கோக்'கின் ஆதிக்கம், பேட்டண்ட்ஸ் ரைட்ஸ் மூலம் மருந்து சந்தைய முழுமையாக கபளீகரம் செய்துவிட்டது etc).

ஆக,
மலிவு விலையில் கூலி,
மலிவு விலையில் வளங்கள்,
மலிவு விலையில் உற்பத்திப் பொருட்கள்,
உற்பத்தியின் ஒரு பெரும் பகுதியையும் கூட சிறு முதலாளி எனும் இழிச்சவாயனும், விவசாயியும் பார்த்துக் கொள்வது,

இவையெல்லாம் போக அவன் எதை உற்பத்தி செய்தாலும் வாங்கிக் கொள்ள அவனது வர்க்கத்தின் ஆதிக்கம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சந்தை. இவற்றை மீறி அவனுக்கு உள்ள பிரச்சனையெல்லாம் அவனிடையே உள்ள போட்டி போறாமைதான். இத்தனை சாதகங்கள் இருந்து வெற்றி பெருவதை வெற்றி என்று நாராயன்களும், அல்பை ஆசீமும் பெருமையாகச் சொல்வது நகைப்பிற்கிடமாகவும், உண்மையான சாதனையாளர்களை கிண்டல் செய்வதாகவும் உள்ளது.

ஆக, நாம் உற்பத்தி செய்யும் பொருளை அவன் வந்து இஸ்டம் போல விலை வைத்து வாங்கிச் செல்ல வாய்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்போம், அதே நேரத்தில் நமக்கு தேவையான பொருளை அவன் இஸ்டம் போல விலை வைத்து விற்று செல்வதையும் நாம் வாய் பார்த்துக் கொண்டிருப்போம்.
இதனைத்தான் நாம் இழிச்சவாயத்தனம் என்போம். சில, தொந்தி வளர்க்கும் அடிமைகள் இதனை வளர்ச்சி, வல்லரசு என்றும் சொல்லுவர். இந்த மேற்சொன்ன சூழல்தான் இன்று நிலவுகிறது. ஒரு பக்கம் கோதுமையை அவன் கேட்ட விலைக்கு விற்று இழிச்சவாயர்களான விவசாயிகள், இன்னொரு பக்கம் கோதுமை விலை ஆறு மாதத்தில் ஆறு ரூபாய் ஏறி நாம் அவனை வாய் பார்த்துக் கொண்டிருப்பது. இந்த சூழல் இன்னும் வெகு துலக்கமான வடிவத்தை பெறவில்லை ஆயினும் அப்படி வரும் வரை காத்திருக்க வேண்டும் எனும் முட்டாள்களுக்காக இந்த பதிவு அல்ல.

இந்த மூன்று காரணத்திற்க்காத்தான் சிதறிய சிறுவீத கிராம விவசாய உற்பத்தி முறையையும், சிறு தொழில் பட்டறை முறையையும் இந்த ஆளும் வர்க்கம் பேணி பாதுகாக்கிறது. ஒரு வேளை விவசாயத் துறையிலொ அல்லது சிறு தொழில் துறையிலோ செய்யப்படும் எந்த மாற்றமும் இந்த மூன்று காரணங்களுக்கு குந்தகம் வாராத வடிவத்திலேயே நடைபெறும். எடுத்துக்காட்டுகள்: காண்ட்ராக்ட் விவசாயம், ஊக வணீகத்தில் விவசாய பொருட்கள், சிறு தொழில் துறையின் வளர்ச்சி.

இந்த பாணி உற்பத்தி முறையின் விளைவு என்ன?

பெரும்பான்மை மக்கள் இத்தகைய சிதறிய சிறு வீத உற்பத்தி முறையிலேயே, வளர்ச்சியின்றி தலைமுறை தலைமுறையாக பினைந்திருப்பது ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவு, பண்பாட்டு வளர்ச்சியை தடுக்கிறது.
அவனை ஜனநாயகமில்லாதவனாகவே வைத்து சுரண்டுகிறது. இதன் பொருளாதார அம்சம் - அந்த சமூகத்தில் மிக பெரும் தொழில்புரட்சி என்றுமே நடந்து விட விடாமல் செய்கிறது.

ரோட்டில் எச்சில் துப்புவது, ஒன்னுக்கடிப்பது, சிக்னலை மதிக்காமல் அவனவன் இஸ்டம் போல நடந்து கொள்வது, சிறு பட்டறை முதலாளியின் வீட்டு வேலைகளையும் சேர்த்தே செய்வது, போலிஸ், நீதிபதி இவர்கள் எல்லாம் ஏதோ வானத்து தேவர்கள் போல நடந்து கொள்வதும் சாதாரண கிராமத்து ஏழை அவர்களுக்கு அது போன்றே மரியாதை கொடுப்பது - இவை எல்லாம் ஜனநாயகமின்மையின் அறிகுறிதான். சமூகம் எனபது சக மனிதர்கள் இயைந்து பழகும் ஒரு அமைப்பு, இதில் அனைவருக்கும் உரிமை, பொறுப்பு உள்ளது என்ற புரிதலெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு இல்லையென்பதுதான் - இது போல பிறர் உரிமையில் தலையிடும் நடவடிக்கைகளையும், பிறரிடம் அடிமை போல நடந்து கொள்ளும் நடவடிக்கைகளையும் ஒருங்கே மேற்கொள்ள செய்கிறது.
அராஜகமும், அடிமைத்தனமும் ஒரே பொருளாதார அமைப்பு பெற்றெடுக்கும் பிள்ளைகள்தான். இதுதான் இயங்கியலின் விதி. இதைத்தான் ஜனநாயகமின்மை என்கிறோம்.
இது ஏன் இப்படி உள்ளது எனில் தனிப்பட்ட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு சிறுபட்டறை தொழிலாளி, ஒரு விவசாய கூலிக்கு இந்த சமூகம் இயைந்து இயங்குவது போன்ற ஜனநாயக அடிப்படைகளை புரிந்து கொள்ளும் உற்பத்தி முறை கிட்டவில்லை. பெரும் தொழிற்சாலை பாணி உற்பத்தியில் ஈடுபடுபவர்களிடம் இந்த பண்பாட்டை நாம் பெரும்பாலும் காணாலாம்(Exceptions இருக்கும்).
ஏனேனில் அவனது ஒவ்வொரு உற்பத்தி உறவிலும் அவன் கூட்டு உழைப்பினை உணர்கிறான். கூட்டு உழைப்பின் காரணமாக கட்டுப்பாடான தனது பங்களிப்பை செய்யும் கடமையை உணர்கிறான். எனவே தனது உரிமையையும், பிறரின் உரிமையையும் உணர்கிறான். உரிமைகளை மீறப்படும் போது உற்பத்தியில் ஏற்ப்படும் பிரச்சனைகளைப் பார்க்கிறான். ஒரே இடத்தில் தொழிலாளர்களை இணைத்து முதலாளியே அவனை அமைப்பாக ஆக்குகிறார். எனவே ஒற்றுமையின் வலிமையை உணர்கிறான். அவனிடம் இருந்து அடிமைப் புத்தி காணமல் போகிறது.
வேலை முடிந்தால், போட்டுக் கொண்டுள்ள சட்டையைத் தவிர வேலை சார்ந்த எந்த பொறுப்பும் கிடையாது என்பது அவனை சுதந்திர மனிதனாகாவும் - தான் வேறு தனது தொழிற்சாலை வேறு எனபதனையும் - தான் உண்மையில் அந்த தொழிற்சாலையின் ப்ரந்த தொழிலாளர்கள் எனும் பெரும் அமைப்பின் அங்கத்தினன் என்பதையும் உணர வைக்கிறது.

மாறாக, சிறுவீத உற்பத்தியில்(சிறு பட்டறை தொழிற்சாலை, விவசாயம்) விடிந்தால், பட்டறை முடிந்தால் படுக்கை என்று நாள் முழுவது கட்டுண்டு கிடக்கிறான். சுதந்திரம் தவிர்க்கிறான். கூட்டு உழைப்பின் பிரமாண்டத்தையும், முதலாளியே உருவாக்கிக் கொடுக்கும் ஒற்றுமையையும் அனுபவிக்கும் வாய்ப்பின்றி தான் பிறந்து வளர்ந்த நிலபிரபுத்துவ அடிமைத்தனத்தை பேணிக் காக்கும் நிலைக்குத் தள்ளப்படுகீறான். சமூகம், அரசு, வர்க்கம் என்பனவற்றைப் பற்றி சிந்திக்கவே நேரமில்லை என்பதிருக்க, அவனது உற்பத்தி முறைகளும் அதனை உணரவிடாமல் அவனை தொடர்ந்து ஏமாற்றியே சுரண்டுகின்றன.

இந்தியாவின் மிகப் பெரும்பான்மையினர் இது போன்ற உற்பத்தி முறையில்தான் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் இந்தியாவை ஜனநாயகம் இல்லாத நாடு என்கிறோம்.

ஜனநாயகம் என்பது சட்டத்திருத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசயமா?, இல்லை. அது சமூக பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம். அது சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் அலகு.

இந்தியாவில் பெரும் தொழிற்சாலைகள் ஒரு சிறு அளவிலான பிரிவினைரை மட்டுமே இது போன்ற தொழிற்சாலை பாணி ஜனநாயக உற்பத்தி முறைகளில் வைத்துக் கொண்டு, வாய்ப்புள்ள இதர பிரிவுகளையெல்லாம் சிறு பட்டறை முதலாளிகளிடம் காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். இதன் மூலம் இயல்பான முதலாளித்துவ வளர்ச்சி சமூகம் மொத்தத்திற்க்கும் பரவலாகிவிடாமல் தடுக்கப்பட்டு சமூகம் அழுகத் துவங்குகிறது.
இதை தடுக்க என்ன செய்யலாம்?

- இந்தியாவின் விவசாயத்தை ஏகாதிபத்தியங்களின் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின்நிலங்கள் என்ற அள்வைத் தாண்டி இம்மிகூட முன்னேற விடாமல் தடுக்கும் அரசையையும், அதிகாரிகளையும் என்ன செய்யலாம்?

- இந்தியாவின் சிறு தொழில் துறையையும் இதே நிலைமையில் வைத்து இந்தியா முழுமைக்குமுள்ள நடுத்தர வர்க்கத்தின் கையிலுள்ள் சிறு மூலதனத்தின் சுதந்திரத்தையும், அவர்களின் இயல்பான சாதிக்கும் தாகத்தையும் முடக்கிப் போட்டு , அவற்றையும் தனது சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின் நிலங்களாக வைத்திருக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

- இந்தியனுக்கு ஜனநாயகத்தை மறுக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

- இது பேசி தீர்க்க முடியக் கூடிய விசயமா? சீர்த்திருத்தத்தில் தீர்வு அடங்கியுள்ளதா? புரட்சி செய்யவோமா?

அசுரன்
More articles in: http://www.tamilcircle.net/

Tuesday, January 30, 2007

IT தொழிலாளியும் - ஆளவந்தானும் - நம்ம பாமரனும்!

ய்யா, இங்கன எழுதிறுக்கறத நாஞ் சொல்லைய்யா... நம்ம பாமரன் அண்ணாச்சி சொல்றாப்புல. இதுதான் IT துறையின் பொதுவான நிலைமைன்னு(அதாவது கடும் வேலையும், களி வெறியாட்டமும்) நான் நினைக்கலைய்யா. ஆனா இது மிகப் பெரும்பான்மையா அதுவும் குறிப்பா நம்ம BPO கொத்தடிமைக இப்படித்தான் லோல் படுறாங்கய்யா.

நம்ம பாமரன் - குறிப்பா இத சென்னையில நடந்த சில பல ரெய்டுகள், அதையடுத்து IT தொழிலாளர்களின் பிரதிநிதிகளும், அவர்களை சுரண்டுபவர்களின் பிரதிநிதிகளும் இரவு நேர வாழ்க்கைக்கு, கேளிக்கைக்கு ஆதரவாக கோரிக்கை வைத்த தருணத்தை மனதில் கொண்டு - எழுதியது எனத் தெரிகிறது. IT தொழிலாளி இந்த கோரிக்கை வைக்கிறதுல அவனோட உழைப்பின் களைப்பை போக்கும் தேவை தெரிகிறது. ஆனா அவனோட முதலாளி இந்த கோரிக்கை வைக்கிறதுல எங்க அவன் ஆக்கப்பூர்வமா வேற வகையில தன்னோட ஓய்வ செலவழிச்சு விளிப்படைஞ்சிறுவானோ அப்படிங்கற பயம் தெரியுது.

எது எப்படியாகினும், இது பிற எந்த துறையைச் சேர்ந்தவர்களை விடவும் IT மக்களுக்கு பொருந்தும் என்பதால் இங்க பதியுறேன். காட்டுத்தனமா முட்டி மண்டைய உடைசிக்க எல்லாரையும் கூப்பிடுறேன் சாமி..... வந்து ஜல்லிக்கட்ட பழைய ரத்த களறியோட ஆரம்பிங்க.... (நம்ம பெசல் காளை 'நாடோடி'க்கு சிறப்பு அழைப்பு வைக்க கடைமைப்பட்டுள்ளேன்).

எப்பா..... பெசல்(Special) IT ஜல்லிக்கட்டு விழா ஆர்கனைஸர் அசுரன கொஞ்சம் பாத்து முட்டுங்கபா.... போன தடவ வாங்குன அடியே கொஞ்சம் அதிகந்தான்.

சமீபத்துல ஒரு மெயில் வந்தது சாமி... அதுல கார்ல போற ஒருத்தன் மேல கல்ல விட்டு எறிவான் ஒரு சின்னப் பயபுள்ள. கார நிப்பாட்டி இன்னாடா இப்படி கார கண்டம் ஆக்கிட்டயேடான்னு கேட்டதுக்கு அப்பால அந்த பொடிப்பயபுள்ளயோட சொல்லுவான், அவனோட ஊனமான தங்கச்சிக்கு உதவி செய்றதுக்காக இவன கல்ல விட்டு அடிச்சி நிப்பாட்டுனேன்னு. கட்சில கதையொட மாரல்னு இன்னா சொல்வாங்கன்னா,

நீ வாழ்க்கைல இத்த மாதிரிதான் வேக போயினுக்கிற...

எத்த பத்தியும் கண்டுஹாம போயினுக்கிற....

உம் பொழப்ப மட்டும் பாத்துனே போயினுக்கிறா... (அத்து கூட சோக்கயில்லா... கொஞ்சம் செக்காயிகினுதான் கீது)

ஆனா... அப்பாலக்கூடி எவனாச்சும் உம் மண்டயில கல்லலா அடிச்சு நிப்பாட்டும் போது இத்த நீ ஃபீல் பன்னக் கூடாது. இத்ததான் பாமரனும் சொல்றாரு. அவ்வள்வுதாம்பா....

ஸ்டார்ட் மூசிக்....

அசுரன்

Related Article:

#1 அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!

Related Posts with Thumbnails