TerrorisminFocus

Friday, July 14, 2006

கேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்?


Photobucket - Video and Image Hosting

தனது நிலத்தில் தானே எருதாக - ஏர் கலப்பையை முதுகில் பூட்டி உழும் ஒரு விவசாய குடும்பம்.
குட்டக் குட்டக் குனிய கற்றுக் கொடுத்த நமது பாரம்பரிய வர்னாசிரம் பண்பாட்டை ஆளூம் வர்க்கம் தூக்கிப் பிடிக்கும் மர்மம் இதோ இங்கே தெரிகிறது.

நாம் அஹிம்சா விரும்பிகளாம்....சொல்லுவது யார்? மூன்று வேலையும் மூக்குப் பிடிக்க உண்ணும் புண்ணிய ஆத்மாக்கள்.(இதில் எந்த தனிமனித தாக்குதலோ அல்லது உள்குத்தோ இல்லை. இது பொதுவான தத்துவ விமர்சனம்).

அடிமையாய் வாழ பழக்கப்பட்டவன், உரிமை என்பதை பற்றி எந்த அறிமுகமும் இல்லாதவன், ஜனநாயகத்தை அவனுக்காக ஓட்டுப் பொறுக்கும் ஆத்மாக்களின் வாய்களிலும், வசவுகளிலுமே அறிந்தவன் - எப்படி தனக்கான உரிமைகளை கேட்டு போராடுவான்? அவன் அஹிம்சாவின் வன்முறையை தனது பிறப்பால் ஏற்றுக் கொண்டவன்.

அவனை பீடித்திருக்கும் அத்தனை பழமைவாத தத்துவ, பித்துவ பண்பாட்டு மாயைகளையும் அதன் மூல வேர்களையும் அடித்து நொறுக்க வேண்டும்.

அதுதான் அவனை, எமது மக்களை, இந்த நாட்டின் முதுகெலும்பாய் கூனிக் குறுகி வாழ்கை நடத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை விழிப்புறச் செய்யத் தேவையான முதல் நடவடிக்கையாக உள்ளது.

இந்த விவசாயிக்கு சலுகைகளை அல்ல தனக்கான நியயமான கோரிக்கைகளைக்க்கூட எழுப்பத் தெரியவில்லை.

தொடர்ச்சியாக நிலத்தால் வஞ்சிக்கப்பட்ட அந்த விவசாயிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது:
"இந்த வருடமும் சரியாக விளையாது என்று தெரிந்த பின்னும் ஏன் பயிர் செய்கிறேர்கள்?"

அதற்க்கு அவர் சொன்ன பதில்:
"நாங்கள் கடவுள் குழந்தைகள் எங்களை அவர் கைவிட மாட்டார்".

இது மத வெறி பன்றிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விசயம்தான்.

எமக்கும் கூட ஒருவகையில் இது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் இந்த நம்பிக்கை இல்லையெனில் அவர் தற்கொலை செய்திருப்பார்.

இதை அவரே சொல்கிறார்:
"வேறு யாராகவும் இருந்தால் இன்னேரம் தற்கொலை செய்திருப்பார்கள்".

இன்னொரு வகையில் மகிழ்ச்சி. அவரது தத்துவ மயக்கத்தை போக்கினால் அவரது எதிரிகளின் முதுகில் ஏர்கலப்பையை கட்டி உழுவ செய்வதற்க்கு ஒரு உயிர் அங்கே காத்திருக்கிறது என்பது.

இந்த செய்தி, நேபாளத்தில் எனது சகோதரன் இதே நடவடிக்கையை மேற்கொண்ட போழுது இங்கே குய்யோ முறையோ என்று கூவிய மதவெறி பன்றிகளுக்கு உறுதியாக மகிழ்ச்சியளிக்கும் விசயமல்ல.

பிறப்பால் வர்னாசிரம பிரிவை/ஏற்றத்தாழ்வை மறைமுகமாக/நேரடியாக வரவேற்பவர்கள் அந்த பெரியவரின் - தனது தொழிலின் மீதான காதலை பாருங்கள். நிலத்தை விற்று பான்மசால கடை வைப்பதற்க்கு தனது மகனை அனுமதிக்கவில்லை அவர். மாறாக இப்பொழுது நிலத்தை தனது முதுகில் பிணைத்துள்ளார். சுயமரியாதையுள்ள மனிதர்.

நகரங்களுக்கு சென்று வேலை செய்யவும் அவர் தாயாராயில்லை.

வெறும் பழைமைவாத கருத்துக்களால் கட்டுண்ட சுயமரியாதையின் அவலம் இது. புரட்சிகர சுயமரியாதைதான் இன்றைய தேவை. விடுதலையின் திறவுகோல் அதுதான்.

இதை ஐந்திலக்க எச்சில் சோற்றுப் பருக்கையுண்ணும் சுய நல, தனிமனித சிந்தனை வெறிபிடித்த, நுகர்வுகலாச்சார ரோகம் பாதித்த யுப்பி வர்க்கம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

அமெரிக்க ஊழியனின் வேலையிழப்பில் தனது சந்தோசத்தை உத்திரவாத படுத்திக் கொண்டு. சொந்த சகோதரர்களுக்கிடையிலேயே(அமேரிக்க, இந்திய தொழிலாளர்கள்) போட்டியை உருவாக்கி தனது லாபத்தை மட்டும் உத்திரவாதப்படுத்தியுள்ள பன்னாட்டு பன்றிகளையே-அஸீம், நாரயணமூர்த்தி- கடவுளாக கருதும் யுப்பி வர்க்கம் சிந்திக்க வேண்டும்.

இது யுப்பி வர்க்க நலன் சாராத பொது நலமல்ல...
சமூக அக்கறையற்ற அவனது(யுப்பியின்) நலனும் மேலதிகமாக பின்னிப் பிணைந்துள்ள ஒரு விசயம் இது.

கிராமப் புறத்தில் வேலையிழந்து நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் எதிர்கால உதிரிப் பாட்டாளியும், நகர சேரிகளிலேயே வளர்ந்த இன்றைய உதிரிப் பாட்டாளியும் தான் இந்த சமூகம் மிக மிக அதிகமாக உற்பத்தி செய்யும் சந்தைப் பொருள்.

கேட்க நாதியற்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட இந்த வர்க்கம் சமூகம் தன்மேல் திணித்த வன்முறையை திருப்பி செலுத்துவான். அதுவும், தன்னை பண்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவனுடைய வன்முறையைப் பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை.
இவனது இலகுவான இலக்கு யார்? அவனது அருகிலேயே அவனைவிட சிறிது அதிகமான சுகவாழ்வு வாழும் நடுத்தர வர்க்கம்தான்.
வருத்தப்படா வாலிபர் சங்கங்களா? அல்லது வர்க்க ஸ்தாபனங்களா? என்பதை முடிவு செய்ய நிர்பந்திக்கும் தருணங்களாய அவை இருக்கும்

ஒவ்வொரு வினையும் அதற்க்கு சம்மான எதிர்வினைகளை கொண்டது.
கேடு கெட்ட இந்தியா - யானை கட்டியா போரடித்தோம்?
****************

16 பின்னூட்டங்கள்:

said...

பொனபார்ட்,

நிதர்சனம் எப்போதும் சுடும் என்பது உங்கள் பதிவைப் பார்த்ததும் உண்மையாகிறது. முதுகில் ஏர்க்கட்டி உழும் இவரைப்போன்ற விவசாயிகள் இன்னும் இருப்பதால் தான் இந்தியா உணவுக்காக மீண்டும் வெளினாட்டிடம் கை ஏந்தாமல் உள்ளது என்பதை சுகவாசிகள் புரிந்துக்கொள்ளவே மாட்டார்கள் அவர்களுக்கு தான் அமெரிக்க பிஸ்ஸா இருக்கிறதே!

நம்பிக்கை தான் வாழ்கை என்று சொல்வதை விட வாழ்ந்து காட்டும் இது போன்ற விவசாயிகளின் அவலக்குரல் மேல்தட்டுமக்களின் காதுகளில் எல்லாம் விழாது அவர்களது காதுகளில் இருந்த்து செல்பேசியை எடுத்தால் தானே இதெல்லாம் கேட்கும்!

said...

இவனது இலகுவான இலக்கு யார்? அவனது அருகிலேயே அவனைவிட சிறிது அதிகமான சுகவாழ்வு வாழும் நடுத்தர வர்க்கம்தான்.


அதிகமான சுகவாழ்வு வாழும் நடுத்தர வர்க்கம்தான்.
Do you realise that this includes you also.

said...

போனபெர்ட்,

சாட்டையடி போன்ற பதிவு. இதுதான் முன்னேற்றம், இதுதான் பொருளாதார வளர்ச்சி என்று கூக்குரலிட்டு காவடி தூக்கிக் கொண்டிருக்கும் நமக்கு ஒரு கண் திறப்பு முயற்சி. எதையோ தொலைத்து விட்டு அமெரிக்க ஏகாதிபத்திய கலாச்சாரத்துக்கு அடிமையாக மாறி அதைப்பற்றிப் பெருமை பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி.

இதே போன்று கொஞ்சம் காரம் குறைத்து பதிவுகள் போடுங்கள். படிப்பதற்கு எளிதாக இருந்தால் அதிகமான மக்களைப் போய்ச் சேரும்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

மா சிவகுமார்,

அஹிம்சா பற்றிய பகுதி இந்திய நிலபிரபுத்துவம் உருவாக்கிய அடக்குமுறையை பொறுத்துக் கொள்ளூம் பண்பை விமர்சித்து வரும் பகுதி.

அதை நீங்கள் தவறாக தங்களை குத்திக் காட்டுவதாக எடுத்துக் கொள்வீர்களோ என்று ஐயத்துடன் இருந்தேன்.

நல்லவேளை...

தொடர்ந்து விமர்சனம் செய்க....

நன்றி,
அசுரன்.

said...

வாருங்கள் வவ்வால்,

கையேந்த வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். இந்திய சுய தேவையை பூர்த்தி செய்யும் உற்பத்தியை உடைத்து நீர்மூலமாக்குவதுதான் நோக்கம்.

அதான் நீங்களே பார்க்கீறீர்களே தற்பொழுது விவசாய பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

நாம்தான் நடுத்தரவர்க்கம். நமது தலையில்தான் எல்லா சீரழிவும் விடியும்.

"என்ன செய்யலாம்?"

நன்றி,
அசுரன்

said...

அசுரன்,

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, நாம் இருவரும் பலவற்றில் ஒரே மாதிரி சிந்திக்கிறோம். இலக்கை எப்படி அடைவது என்பதில்தான் கருத்து வேறுபாடு. முடிந்தால் உங்களை நேரில் சந்தித்துப் பேச ஆவலாக உள்ளேன்.

நானும் கட்டபொம்மனும் நாளை (ஞாயிற்றுக் கிழமை, ஜூலை 16) சந்திப்பதாகத் திட்டமிட்டுள்ளோம். உங்கள் வசதி எப்படி?

அன்புடன்,

மா சிவகுமார்

said...

Asuran,

I am not in town, hence, this reply in Anniya mozhi.

Another eye opening article from you. Keep the good work.

said...

அசுர அண்ணே!

திரும்பவும் பொடா கொண்டு வரணும்னு ஜெயாம்மா நேத்து சொல்லிருக்கு.

"என்னா எழவடா
என்ன சொன்னாலும் தடா" பாட்டு மாதிரி பொடாவுக்கு பாட்டு ஏதும் போட்டீங்களாண்ணே?

பதிவுக்குத் தொடர்பில்லதான். வேற எங்கே போயி கேக்கிறது?

-அசுரகானதாசன்

said...

தங்களின் பதிவுகளை படித்துக் கொண்டு வருகிரேன்.

தன்னை சுற்றி நடப்பது அறியாமல் மினரல் வாட்டர்களிலும் நச்சு குளிர் பாணங்களிலும் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கும் இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது.

ஏற்கனவே தண்ணீர் கெட்டு விட்டது. விவசாயம் கெட்டு கொண்டு உள்ளது. ஏழை மேலும் ஏழை ஆகிக்கொண்டே உள்ளான்.

விவசாயிகளின் மரண எண்ணிக்கை தெரியாமல் பங்கு சந்தை குறியீட்டு எண் மட்டுமே இந்தியாவின் வளற்சி என பிதற்றும் கூட்டம் அனைத்தையும் தொலைக்கும் வரை திருந்தவே மாட்டார்கள்.

உணவுத் தன்னிரைவு பற்றி இது போன்ற சிறந்த பதிவுகள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை.

said...

தங்களின் பதிவுகளை படித்துக் கொண்டு வருகிரேன்.

தன்னை சுற்றி நடப்பது அறியாமல் மினரல் வாட்டர்களிலும் நச்சு குளிர் பாணங்களிலும் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கும் இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது.

ஏற்கனவே தண்ணீர் கெட்டு விட்டது. விவசாயம் கெட்டு கொண்டு உள்ளது. ஏழை மேலும் ஏழை ஆகிக்கொண்டே உள்ளான்.

விவசாயிகளின் மரண எண்ணிக்கை தெரியாமல் பங்கு சந்தை குறியீட்டு எண் மட்டுமே இந்தியாவின் வளற்சி என பிதற்றும் கூட்டம் அனைத்தையும் தொலைக்கும் வரை திருந்தவே மாட்டார்கள்.

உணவுத் தன்னிரைவு பற்றி இது போன்ற சிறந்த பதிவுகள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை.

said...

//விவசாயிகளின் மரண எண்ணிக்கை தெரியாமல் பங்கு சந்தை குறியீட்டு எண் மட்டுமே இந்தியாவின் வளற்சி என பிதற்றும் கூட்டம் அனைத்தையும் தொலைக்கும் வரை திருந்தவே மாட்டார்கள்.

ஏழை மேலும் ஏழை ஆகிக்கொண்டே உள்ளான். //

வாருங்கள் வசந்த்,

தங்களது வருகைக்கு நன்றி,

said...

அனானி,

ஜெயாம்மா மட்டுமா சொல்லுது.....கூடவே அத்வானி செந்துதான் சங்கு ஊதுறான்....

அது வேற ஒன்னுமில்ல... பல ஆயிரம் ஆண்டுகளா ஜன நாயகத்தை மறுத்துப் பேசிப்பழகிய வழக்கம். சனதான கொழுப்பு போகமாட்டென்குது..

நன்றி,
அசுரன்

said...

I publish a mail came to my inbox.

***********


From: Vinoth Alagesan [mailto:vinoth.alagesan@flextronicssoftware.com]
Sent: Monday, July 24, 2006 12:29 PM
To: BLR_Product@flextronicssoftware.com; BLR_SIGMA@flextronicssoftware.com
Subject: How safe is Bangalore? - A Real incident happened today ealry morning [ 24-07-2006 ]

Hi All,

I would like to share one incident which happened to my friend Gawtham, (He is working in Valtech), today early morning.
He is staying in Belandur came from his native town to banglore at 4 AM.
From Silk board he got into an auto and got down at Belandur (Out Ring Road, near Intel Office) and walked towards his house.
Suddenly one Toyota Qualis came and stopped in front of him and took him inside vehicle and started to move.
Inside the vehicle there were 5 people including driver and already caught two girls. (My friend saw that girl's ID card and found they are
Wipro employees).
They have tied everyone's legs ,hands and plastered their mouth.
Those thieves had taken all the credit cards as well as money from him. They asked him ATM PIN number for this debit card.
This guy had given wrong number.One of the thief went to the ATM and tried withdrawing it.
Then he come to know it is invalid number.They beaten him up severely front and back.
His hands got fractured and they had cut his fingers,hands using knife.
Then he told the correct number , those thief had withdrawn 18,000 from the ATM and
threw him away in some place near to Ramamoorthy nagar. He shouted for help. It is early in the morning ,everyone
scared to come and have a look . He slowly moved towards the road and got a help from one kind heart person
who had given him hundred rupees. He caught the auto and came to my house.I couldn't able to forget the way he
came to my house.This hands and legs are fully blooded as if he was met in an accident done by the vehicle.
This back side has the red marks. I took him to the hospital.He is getting treatment now.
He doesn't know what happened to those girls till now.


If you are staying late night , Plz Go only by your office cab.Take to your home for dropping you.

Folks, This is happened early in the morning. Make sure while coming from your native to bangalore,
you will be reaching between 5 to 6AM and getdown in the Bus stand where there is crowd. But be very careful on your way to house.

Unfortunately, If you are getting caught by thief, Give your cards,ATM number,jewels everything.
Your Life is more precious than your money and belongings.

If it is not very important dont carry your credit and ATM cards everyday with you.

Please fowrard this information to all your dear ones and friends.

Regards
Vinoth Alagesan.

***************

Keep it up your good work asuran.

Rajesh

said...

//Keep it up your good work asuran.

Rajesh //

Thanks Rajesh...

Thanks for your News Bit

Asuran

said...

Dear Asuran,

As a middle class person who has not understood agriculture because of city up bringing I was moved by your post.

I have read Tirukkural where farmer was kept by Valluvar as the noblest among human beings and rightly so.

I genuinely feel that we have betrayed our farmers.

Having said that I do not know enough to suggest ways and means by which we can effectively reward our farmers enough and more importantly get them respect and honour in Socity.
Is land reforms an answer/
Perhaps..
Since in ANdhra where I stay I do see lot of very rich land owners who have enormous income to the extent that they fund film financing.
On the other hand it is AP where lot of small farmers commit suicide re,meining in the grip of poverty and money lenders.

I feel ashamed that I am helpless amidst this injustice and go about doing my work and earning my salary and eating three times a day whiole poor farmers who produce the food I eat are driven to suicide

Thanks for the post Asuran.
.

said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனானி,


//Having said that I do not know enough to suggest ways and means by which we can effectively reward our farmers enough and more importantly get them respect and honour in Socity.
Is land reforms an answer///

ஆம் அதுதான் பதில் ஆனால் எந்த அரசமைப்பில் யார் நலனை முன்னிறுத்த்ம் அரசமைப்பில் இந்த சீரமைப்பு செய்யப்படுகிறது என்பது மிக முக்கியம்.

இது குறித்த எனது பிற கருத்துக்களை பின்வரும் சுட்டிகளில் காணலாம்:


==> பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோ பியா
http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_18.html

==> http://santhipu.blogspot.com/2006/08/blog-post_11.html (இந்த பதிவில் எனது commment)

*********

//I feel ashamed that I am helpless amidst this injustice and go about doing my work and earning my salary and eating three times a day whiole poor farmers who produce the food I eat are driven to suicide//

தங்களது உணர்வுகள் நியமான உணர்வுகளே... எனது மற்ற கட்டுரைகளையும் இணையத்தில் வேறு சில கட்டுரைகளையும் படித்து யார் குற்றவாளி என்பதை முடிவு செய்யுங்கள்...

நன்றி,
அசுரன்.

Related Posts with Thumbnails