TerrorisminFocus

Showing posts with label கிரிமினல். Show all posts
Showing posts with label கிரிமினல். Show all posts

Wednesday, September 15, 2010

'வினை'யகர் சதுர்த்தி!!

பெரும்பாலான வீதி முனைகளில் இருட்டின் துணையுடன் ஒன்னுக்கடிக்கக் கூடிய வாய்ப்பான இடங்கள் அமைந்திருக்கும். பாதசாரிகளின் 'ஒன்னாம்' நம்பர் அவசரத் தேவைகளுக்கு உடனடித் நிவாரணமாக அமைபவை இத்தகைய முனைகளே. மூத்திரச் சந்துகளை விட இந்த தெரு முனைகள் சுகாதாரமானவை, பாதுகாப்பானவையாகும் என்பது இவற்றின் பிரபல்யத்திற்கான காரணமாக அமைகின்றன. அப்படியான மூத்திர முக்குகளையெல்லாம் திட்டமிட்டு ஆக்கிரமித்து விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் விநாயகனின் சிலையை வைக்கும் அபாயகரமான கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகி வருகிறது. இது தமிழகத்து ஆண்களின் உயிர்நாடியில் கை வைக்கும் ஒரு அத்துமீறல் என்பதாகவே நான் உணர்கிறேன்.

அத்தகையதொரு மூத்திர உரிமையை மீறிய விநாயகனின் சிலை ஒன்றை கே கே நகரில் பார்த்தேன். அந்த வினை தீர்க்கும் வினாயகர் சிலைக்குப் பின்னே 'முஸ்லீம்களுக்கு சலுகை இந்துக்களுக்கு ஒன்றுமில்லையா' என்ற வினையான வாசகம் வக்கிரமாய் சிரிக்கிறது. உபயம், காவி பயங்கரவாத கட்சிகளில் ஒன்றான இந்து மக்கள் கட்சி. பெரும்பான்மை இந்து உழைக்கும் மக்கள் தெரு முனைகளில் ஒன்னுக்கடிக்கும் உரிமையை சிலை வைத்து தடுத்துள்ளதைத்தான் இப்படிச் சொல்கிறார்களோ என்று மனதில் எழுந்த சிறு ஐய்யத்தை முஸ்லீம் என்ற வார்த்தை களைத்தது. இது வேறு ஏதோவொரு பிரச்சினை என்று புரிந்தது. ஆனால், 'இந்துக்களுக்கு ஒன்றுமில்லையா' என்பதன் பொருள் மட்டும் புரியாமலேயே குழப்பியது. யாராவது விளக்கினால் தேவலாம் என்றும் தோன்றியது. இத்துடன் இன்னொரு கிளைக் கேள்வி எழுந்தது அது இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மல்லாக்கப் படுத்து விட்டத்த பாத்தா எவ்வளவு சுகமா இருக்கு... ம்... அதுவும் கால விரிச்சுப் படுத்தா எவ்வளவு காத்தோட்டம்..

எனக்கும், சச்சார் கமிட்டியில் அறிக்கை எழுதியவருக்கும் தெரிந்த வரையில் இந்தியாவிலேயே ஏழ்மையான, வறிய, பின் தங்கிய, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினர் தாழ்த்தப்பட்டவர்களும், முஸ்லீம்களும்தான், இந்துக்களல்ல எனும் போது இந்துக்கள் என்று குறிப்பிட்டு வினாயகனுக்கு பின்னே ஒளிரும் இந்த வாசகங்கள் வன்மம் நிறைந்தவையாகத்தான் தோன்றுகின்றன.

தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள்தான் என்று வினாயகன் சிலை வைத்தவர்கள் சொல்லக் கூடுமோ என்று ஒரு சிறு எண்ணம் தோன்றியது. ஆனால், அவர்களும் இந்துக்கள்தான் எனில் ஏன் கோயிலுக்குள் விடுவதில்லை, கோயில் மரியாதைகளை அவர்களுக்குக் கொடுப்பதில்லை, அவர்களுக்கு ஏன் பலரும் வீடு வாடகைக்குக் கொடுப்பதில்லை, அவர்களுடன் திருமணம் பந்தம் ஏன் வைத்துக் கொள்வதில்லை, சாதிப் பெருமிதம் என்று காட்டிக் கொள்ள பூனூல், நாமம் என்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏன் எதுவும் இல்லை, மாட்டு மாமிசம் சாப்பிட்டால் ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் பிற சாதி இந்துக்களால் தாக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது நாடு முழுவதும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சாதி வெறி தாக்குதல் நடத்தப்படுவதை இதே 'இந்து'க்களின் கட்சிகள் ஏன் கண்டு கொள்வதேயில்லை என்று பல கேள்விகள் மூளையை சல்லடையாகத் துளைத்தன.

இவற்றுக்கு கிடைத்த ஒரே விடை இந்துக்கள், கடவுள் என்ற பெயரில் இந்த கட்சிகள் நடத்துவதெல்லாம் மதவெறி பிரச்சாரம் மட்டுமே என்பதே ஆகும்.

ங் கொய்யால குப்புறக் கவுத்திடாய்ங்களே....

இந்தக் கட்சிகளை விட வன்மம் நிறைந்தவையாக உள்ளன வினாயகனின் பெயரில் நடைபெறும் இந்த மதவெறி அரசியலை, எவன் இழவு கொட்டினால் எனக்கென்ன என் வீட்டில் இனிப்பு சேவு கிடைக்கிறதா போதும் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு வினாயகனை மட்டும் வாழ்த்தும் படித்த, நுண்ணறிவு நிரம்பிய சிலரின் நடவடிக்கைகள்.

இவர்கள் வழிபடும் ஒரு கடவுளின் பெயரால் நடக்கும் மதவெறி அயோக்கியத்தனத்தை எதிர்த்து குரல் கொடுக்க ஞாபகமாக மறந்துவிடும் இவர்களை என்னவென்று சொல்ல? இவர்கள் வழிபடும் வினாயகனை அவமானப்படுத்தி வினாயகன் என்றால் ஒரு மதவெறி, ரத்தவெறி பிடித்த மிருகம் என்ற பிம்பத்தை உருவாக்கும் காவி பயங்கரவாத கட்சிகளின் மேல் பக்தர்களின் கோபம் திரும்பவதில்லையே ஏன்?

இந்தக் கேள்விகளால் வறட்சியுற்ற எனது மூளை அடுத்த டாபிகிற்க்கு வேகமாக தாவ எத்தணித்தது. துரதிருஷ்டவசமாக அதுவும் இந்துக்கள் பற்றியதாகவே அமைந்துவிட்டது. இதோ அடுத்த டாபிக்...

இந்துக்கள் என்றால் யார் என்பது குறித்தும், மத நல்லிணக்கத்தின் சாத்தியக்கூறு குறித்தும் தோ. பரமசிவன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். (நன்றி: நறும்புனல்)

(தோ. பரமசிவன்)

இந்து” என்ற சொல் சமய ஆதிக்கச் சொல்லாக மட்டுமின்றி அரசியல் ஆதிக்கச் சொல்லாக வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்து என்பவன் யார்? இந்தியச் அரசியல் சட்டப்பிரிவுகள் “இந்து” என்ற சொல்லாடலுக்கு நேரிடையான வரவிலக்கணத்தை தரவில்லை..என்பது தான் இந்து என்ற சொல்லாடலை வைத்துப் பிழைக்கும் இந்துத்வவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.ஆகவே இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும்..அந்தச் சொல் பல்வேறு சமயஙகளையும், நம்பிக்கைகளையும், வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை நெறிப்படுத்தி சட்டமாக்க வேண்டும்.அதுவரை சமய நல்லிணக்கம் என்பது சமயச் சிந்தனையாளர்களின் கனவாவே இருக்க முடியும்...

(மூத்திர தெருமுனைகளை ஆக்கிரமித்த குற்றத்திற்காக அடித்து நொறுக்கப்பட்ட விநாயகன்)

(கிளைக் கேள்வி: மூத்திர முக்குகளை ஆக்கிரமித்து உரிமைமீறலில் ஈடுப்பட்டுள்ள வினாயகனை மூத்திரச் சந்தில் வைத்து அடித்து நொறுக்குவதுதானே தர்க்க(லாஜிக்கல்)ரீதியாக சரியாக இருக்கும்? ஏன் கடலில் கொண்டு போய் அடித்து நொறுக்குகிறார்கள்?)

இப்படிக்கு,
மூத்திரச் சந்து முனிசாமி


பதிந்தவர்
அசுரன்

Friday, May 30, 2008

குஜ்ஜார் போராட்டமும், சாதிக் கொழுப்பெடுத்த பார்ப்பன வெறி டைம்ஸ் ஆப்பு இந்தியாவும்!!

பார்ப்பன கொழுப்பெடுத்த RSS பயங்கரவாத பத்திரிகை - டைம்ஸ் ஆப் இந்தியா!!!

டைம்ஸ் ஆப்பு(ஆப்பு இந்தியாவுக்கு) இந்தியா பத்திரிகை ஒரு பார்ப்பன பத்திரிகை என்பதும், குறிப்பாக அது ஒரு RSS பயங்கரவாதிகளின் அதிகாரப் பூர்வ பத்திரிகை என்பதும் பெரும்பாலனவர்கள் அறிந்ததே.

அடிக்கடி தனது பார்ப்பன தினவெடுத்த கருத்துக்கள் மூலம் பிற பிரிவு பெரும்பான்மை மக்களை அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்தி வருவதை குமுதம் உள்ளிட்ட இந்த பத்திரிகைகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

அதே நேரத்தில், பார்ப்பன கும்பலின் அநீதியான போராட்டங்களையும் கோரிக்கைகளையும் ஏதோ மிக உயர்வானது, நியாயமானது என்றும் தவறாமல் பிரச்சாரம் செய்து வருகின்றன இந்த பத்திரிகைகள். இடஓதுக்கீடை எதிர்த்து போராடிய மருத்துவ கல்லூரி பார்ப்பன கும்பல் முதல் சேது சமுத்திர திட்டம் வரை பல்வேறு பிரச்சினைகளில் இது கண்கூடு.

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சாதியினர் தம்மை ST பிரிவில் சேர்க்கக் கோரி போராடி வருவதையும் தனது பார்ப்பன கொழுப்பின் அடிப்படையிலேயே கேலி செய்துள்ளது டைம்ஸ் ஆப்பு இந்தியா. குஜ்ஜார் பிரச்சினையை பொறுத்த வரை நமக்கும் சில மாற்று கருத்துக்கள் உள்ளன. ஆனால் ஒரு பிரச்சினையை அதன் சரியான அம்சத்தில் அணுகுவதும் மாறாக அந்த பிரச்சினையை தமது மேலாதிக்க கருத்துக்களை நிறுவும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் குசும்பும் வேறு வேறு. டைம்ஸ் ஆப்பு இந்தியா போன்ற பார்ப்பன வெறி பத்திரிகைகள் இரண்டாவதையே செய்து வருகின்றன.

துப்யமேன் என்ற பெயரில் வெளிப்படையாகவே பார்ப்பினியத்தை நக்கும் டைம்ஸ் ஆப்பு இந்தியாவின் கார்ட்டூன் படங்கள் கடந்த சில நாட்களாக மிக வக்கிரமாக எழுதி வருகின்றன.





Photobucket

டைம்ஸ் ஆப்பு இந்தியாவில் வந்த கார்ட்டூன்


29 May 2008 ல் அது வெளியிட்ட கார்ட்டூனில் பொது மக்கள் குஜ்ஜார்களை எதிர்த்து கல்லெடுத்து தெருச் சண்டையில் ஈடுபட கோரிக்கை விடும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டிருந்தது இந்த கொழுப்பெடுத்த பத்திரிகை. குஜ்ஜார்கள் தமது உயிரை தியாகம் செய்தே போராடுகின்றனர். அந்த கோரிக்கை ஒரு தீர்வா என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் அந்த கோரிக்கைக்கு அடிப்படையான சமூக பொருளாதார பின்னணி சாசுவதமான பேருண்மை என்பதில் நமக்கு மாற்று கருத்துக்கள் இல்லை. மாறாக, உயர் நடுத்தர வர்க்க AIMS பார்ப்பன பொறுக்கிகளோ அல்லது RSS, விஸ்வ ஹிந்து பரிசத் பயங்கரவாதிகளோ கோழைகளாய் பிறரின் ரத்தத்தில், அப்பாவி நோயாளிகளின் மரணத்தில், சிறுபான்மை உழைக்கும் இஸ்லாமிய மக்களின் ரத்தத்தில்தான் தமது அரசியல் கள்ளச் சாராயத்தை காய்ச்சிக் கொள்கின்றனர். ஆயினும் இந்த பத்திரிகைகள் அந்த அயோக்கியத்தனமான பார்ப்பன வெறி போராட்டங்களை, பயங்கரவாத செயல்களை ஏதோ விடுதலை போராட்டம் ரேஞ்சுக்கு உயர்த்தி பிடித்து முதல் பக்கத்தில் படங்களுடன் செய்தி வெளியிட்டு தமது அரிப்பை சொறிந்து கொள்கின்றன.

குறிப்பாக அந்த கார்ட்டூன் இடஓதுக்கீடிற்கு எதிராக எல்லா மக்களும் கல்லெடுத்து போராடுவதாக குறிப்பிடுகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய பார்ப்பன மேல் சாதி வெறியர்களின் போராட்டத்தை ஏதோ மிகப் பெரிய போராட்டமாகவும், பெரும்பான்மை மக்களின் போராட்டங்களை சிறுமைப்படுத்துவதுமான இரட்டை நாக்கு அணுகுமுறை இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆயினும் இவையெல்லாவற்றையும் சூடு சுரனையின்றி படித்துக் கொண்டிருக்கும் கும்பல்தான் நமது இலக்கு. இந்தியாவில் பார்ப்பனனுக்கு மட்டும்தான் சூடு சுரனையுள்ளது என்று நம்பும் பார்ப்பனியக் கொழுப்புக்கு இந்த மயான அமைதிதான் அடிப்படை அமைத்துக் கொடுக்கிறது எனும் போது அந்த மாயான அமைதியை சுட்டுப் பொசுக்குவதுதான் நமது இலக்கு.

பிற பெரும்பான்மை மக்களை தேவடியா மகன் என்று வெளிப்படையாக சொல்லித் திரிந்த தைரியம்தான் சிறுபான்மை பார்ப்பன கும்பலின் இடஓதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தை வெகு மக்கள் போராட்டமாக திரிக்கும் திமிர்த்தனத்திற்க்கும் அடிப்படையாக உள்ளது. பெரும்பான்மை மக்களின் அன்றாட அவல வாழ்வின் காரணமாக இந்த அரசு வழங்கும் அல்ப சலுகைகளில் எப்படியாவது முட்டி மோதி தமக்கு ஒரு வாய்ப்பை பறித்துக் கொள்வதற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களை அவதூறு செய்யவும் அடிப்படை அமைத்துக் கொடுக்கிறது.

Photobucket
கிரிமினல்கள் ஜக் சுரையாவும், நிலாபும் வெகு மக்களை கிரிமினல்கள் என்று புரளி பேசும் TOI கார்ட்டூன்

இன்னும் ஒரு படி மேலே போய் அதற்க்கு அடுத்த நாள் இந்த துப்யாமென் பொறுக்கி குஜ்ஜார்களை கிரிமினல்களாக சித்தரிக்கிறது. பல் டாக்டர் தனது மகளை கொன்ற வழக்கையும், குஜ்ஜார் போராட்டத்தையும் ஒன்றாக பட்டியலிட்டு இரண்டு கிரிமினல்கள் பேசுவது போல கார்ட்டூன் போட்டுள்ளது இந்த பத்திரிகை. கையில் காயாமல் வலிந்து ஓடும் ரத்தக் கறையுடன் அலையும் பார்ப்பன மத வெறி தலைவர்களான அத்வானி, பால்தாக்காரே, வாஜ்பேயி, மோடி போன்ற சொறிநாய்களை இந்த பத்திரிகைகள் என்றைக்கும் கிரிமினல்களாக காட்டுவதில்லை. உண்மையிலேயே கிரிமினல் குற்றங்களின் மாட்டிக் கொண்டு கையும் களவுமாக பல்வேறு தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்களால் அம்பலப்படுத்தப்பட்ட பார்ப்பன மதவெறி தலைவர்கள் யாரும் இது வரை இந்த பத்திரிகைகளால் கிரிமினல்கள் என்று காட்டப்படுவதில்லை.

மாறாக, பின் தங்கிய, படு மோசமான ஏழ்மை நிலையிலுள்ள குஜ்ஜார்களின் ஓட்டுக்களை வாங்குவதற்க்காக பழங்குடியினர் பட்டியலில் அவர்களை சேர்ப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக பயங்கரவத கட்சிதான் உண்மையான கிரிமினல். இந்த கிரிமினல்கள் குறித்து டைம்ஸ் ஆப்பு இந்தியா, குமுதம் போன்ற RSS பயங்கரவாத, மக்கள் விரோத பத்திரிகைகள் என்றைக்கும் எழுத மாட்டார்கள். உலகமய பொருளாதாரம் இந்திய கிராமங்களை சாவின் விளிம்பில் நிறுத்தி வைத்து விளையாண்டு வரும் கிரிமினல் குற்றம் இன்னும் மேலதிகமாக இது போன்ற பெரும்பான்மை பின் தங்கிய பிரிவு மக்களின் வாழ்க்கையை மோசமாக்கி வருகிறது என்பதுதான் உண்மை. இந்த கிரிமினல் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து சிலாகித்து எழுதும் இந்த மக்கள் விரோத பத்திரிகைகள் அதன் விளைவாக எழும் வெகு மக்கள் போராட்டங்களை கேவலப்படுத்தி, சிறுமைப்படுத்தி எழுதி தமது மேல்சாதி அரிப்பை வெட்கமின்றி அப்பட்டமாகவே சொறிந்து விட்டுக் கொள்கின்றன. இது போன்ற பத்திரிகைகளை துட்டு கொடுத்து வாங்காமல் புறக்கணிப்பது என்பதுதான் தன்மானமுள்ள ஒவ்வொருவனும் செய்யக் கூடிய குறைந்த பட்ச எதிர்ப்பு நடவடிக்கை.

இவர்கள் உண்மைகளை என்றைக்கும் எழுதப் போவதில்லை. இவர்களுக்கான தண்டனைகள் வீதிகளில் வழங்கப்படும் போது உண்மைகள் எழுதும் தகுதியுள்ளவர்களுக்கோ எழுதுவதற்கு நேரமிருக்காது. இவர்களின் குரல்கள் கேட்க்க நாதியின்றி கரைந்து போய் கொண்டிருக்கும். கார்ட்டூன் எழுதிய திமிர் பிடித்த கரங்கள் தெய்வங்களை இறைஞ்சி உதவி கேட்டுக் கொண்டிருக்கும். கிரிமினல்கள் தெய்வமாகி இருப்பார்கள் அப்பொழுது.

அசுரன்

இடஓதுக்கீடு பிரச்சினையில் AIMS பார்ப்பன வெறியர்கள் அப்பாவி நோயாளிகளை பணயக் கைதிகளாக வைத்து நடத்திய மிரட்டல் நாடகத்தை அம்பலப்படுத்தி கைப்புள்ள தளத்தில் வெளியிடப்பட்ட கார்ட்டூன்:


Photobucket

This cartoon I got forwarded to my Mail from my friend. Sometime before Indian Express published a cartoon ridiculing SBI strike. Now while the upper class elite are striking against the right of oppressed people, Indian Express supporting them. This is the real face of Indian Express always against right of the people. The SBI cartoon is modifed to expose the Anti reservation strike by junior Doctors.
Cartoon & Caption: Kaipulla

Related Articles:
இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் நம்ப விரும்புகிறோம் அல்லவா??!!!
The media’s role in communalising Karnataka
குஜ்ஜார் போராட்டமும் 'சமூக நீதி"யின் வரம்பும்

Reservation!

Reservation-Haunts Again(More teeth added) -I

Monday, December 31, 2007

வர்ணாசிரம கிரிமினலும்! ஹவாலா கிரிமினலும்!

வர்ணாசிரம கிரிமினல் இராமன்!
ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி!

""இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்'' என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார்? ""அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்?'' என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொருமுறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.

ராம் விலாஸ் வேதாந்தி. 1984 முதல் விசுவ இந்து பரிசத்தின் தலைமைக்குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் (இந்துக்களுக்கு நன்னெறி காட்டும் குழு) உறுப்பினர்; 1990 முதல் ராம ஜன்மபூமி டிரஸ்ட் உறுப்பினர்; 1996, 98இல் உ.பி. மாநிலம் பிரதாப்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர். மத்திய அரசின் ரயில்வே குழு, நகர்ப்புற வளர்ச்சிக் குழு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர். இவை அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் உமாபாரதி, ரிதம்பரா வகையைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர். சமீபத்திய உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகப் பிரச்சாரம் செய்த முன்னணிப் பேச்சாளர். எல்லõவற்றுக்கும் மேலாக, பாபர் மசூதி இடிப்பையும் மதக்கலவரத்தையும் தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 11 பேரில் ஒருவர். இந்த வேதாந்தியைத்தான் ""யாரோ, எவரோ; எங்களுக்குத் தெரியவே தெரியாது'' என்கிறார்கள், இந்தப் பார்ப்பன யோக்கிய சிகாமணிகள்.

"இராமன் ஒரு கற்பனைப் பாத்திரம்' என்று கருணாநிதி சொன்னவுடனே குமுறி எழுந்த இந்த சாமியார், "உண்மையிலேயே ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பக்தனாக இருக்கலாமோ, அதன் காரணமாகக் கோபத்தில் வரம்பு மீறிப் பேசியிருக்கக் கூடுமோ' என்று வாசகர்கள் யாரேனும் நினைத்துக் கொண்டிருந்தால், அது மடமை. இந்த வேதாந்தி ஒரு தொழில்முறைக் கிரிமினல்.

""பிள்ளைவரம் தருகிறேன், புதையல் எடுத்துத் தருகிறேன்'' என்று கூறி பாமர மக்களையும் பெண்களையும் நாசமாக்கி, பிறகு மாட்டிக்கொண்டு தரும அடி வாங்கி உள்ளே போகும் "கீழ்சாதி' லோக்கல் சாமியார் அல்ல இந்த வேதாந்தி. மக்களின் மத நம்பிக்கையை மதவெறியாக மாற்றி, அந்த மதவெறியை டாலராக மாற்றிக் குவித்து வைத்திருக்கும் ஒரு சர்வதேசக் கிரிமினல். கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பிறகும், இன்னமும் கம்பி எண்ணாமல் வெளியில் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் செல்வாக்குள்ள கிரிமினல்.

மதத்தை வைத்து "பிசினெஸ்' நடத்தும் சாமியார்களை அம்பலப்படுத்துவதற்காக ""கோப்ரா போஸ்ட்'' என்ற இணையதளம் புலனாய்வு நடவடிக்கை ஒன்றில் இறங்கியது. அதில் சிக்கிய மூன்று சிகாமணிகளில் வேதாந்தியும் ஒருவன். முதலாளிகள் போல நடித்து வேதாந்தியை சந்தித்த இந்தச் செய்தியாளர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேதாந்தியிடம் பேரம் பேசுகிறார்கள். ரகசியக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்த பேரத்தை கடந்த மே 4ஆம் தேதியன்று ஒளிபரப்பியது, ""ஐ.பி.என்7'' தொலைக்காட்சி. ஒளிபரப்பான அந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.
வேதாந்தி: எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?

நிருபர்கள்: நீங்கள் விரும்பியபடி...

வேதாந்தி: இல்லை, எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்; ஒருவேளை 5 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்தால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

நிருபர்கள்: உங்களுக்கு 1.5 கோடி...

வேதாந்தி: இல்லை; 3 கோடியை வாங்கிக் கொண்டு எனக்கு 2 கோடியைக் கொடுங்கள்!

நிருபர்கள்: எங்களுக்கும் இலாபம் வேண்டாமா?

வேதாந்தி: சரி,சரி; எனக்கும் கமிஷன் வேண்டாமா? இப்படிக் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கு எனது ட்ரஸ்ட் பணத்தை பயன்படுத்துவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. இருப்பினும் எனது ஆடிட்டரிடம் கலந்தாலோசிக்கிறேன். அயோத்தி வாருங்கள், எல்லாவற்றையும் முடித்து விடலாம்.
நிருபர்கள்: ராமஜன்மபூமி டிரஸ்ட்டுக்கு நீங்கள்தானே தலைவர்?

வேதாந்தி: ஆமாம், ஆனால் உங்கள் பணத்தை அதில் போட்டால் மீள எடுப்பது சிரமம். ஏனெனில் அது ஒரு சர்வதேச ட்ரஸ்ட். சி.பி.ஐ.யும், ஐ.பி.யும் (உளவுத் துறைகள்) அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.

நிருபர்கள்: ஆனால் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு எதுவும் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே?

வேதாந்தி: இல்லை, இந்த வேலைக்காகவே "மாத்ரி சேவா ட்ரஸ்ட்' என்று ஒன்றைத் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறேன்.

(ஆதாரம்:watch the video: http://www.ibnlive.com/videos/39845/money-launderer-leads-ram-temple-trust.html)

இந்த உரையாடலை ஒளிபரப்பிய ஐ.பி.என். தொலைக்காட்சி, அதன் பிறகு இதே வேதாந்தியிடம் நேர்காணல் எடுக்கச் சென்றது. உடனே ""தேசவிரோத முசுலீம் தே..... மகன்கள்தான் எனக்கெதிராக இந்தச் சதியை நடத்தியிருக்கிறார்கள்'' என்று வெறி கொண்டு கத்தினான், இந்தக் களவாணி. அதிர்ச்சியடைந்த அந்தச் செய்தியாளர், ""நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதால் மேற்கொண்டு நேர்காணல் நடத்த முடியாது'' என்று கூறி பேட்டியை நிறுத்திக் கொண்டார். இந்த விவகாரமும் அம்பலத்துக்கு வந்து சந்தி சிரித்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த தருணத்தில் இந்த விவகாரம் சந்தி சிரித்த போதிலும், இந்தக் காவி உடைக் கிரிமினலைச் சங்கப் பரிவாரங்கள் கைவிடவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது ராமர் சேது விவகாரத்தில் கருணாநிதிக்கு எதிராகக் கொட்டி முழக்கி வருபவருமான ரவிசங்கர் பிரசாத், "" உங்கள் தொலைக்காட்சியில் அடிபடும் பெயர்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் மிகவும் மதிப்பிற்குரியவர்கள். எனவே இந்த இரகசிய காமரா ஒளிபரப்பின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு ஐயமாக இருக்கிறது'' என்றார். விசுவ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோரோ, ""இந்த இரகசிய கேமரா நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இதில் ஏன் இந்துக்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள்?'' என்று மடக்கினார். ""கருணாநிதி இராமனை மட்டும் விமரிசிக்கிறாரே, மற்ற மதத்தினரை விமரிசிக்காதது ஏன்?'' என்று இப்போது கேட்கி றார்கள் அல்லவா, அதே கேள்விதான் கிரிராஜ் கிஷோரின் கேள்வியும்.

""கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம். ""எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் ""அவாள்'' பேசவே இல்லை.

""இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்?'' என்ற கேள்வியைப் போலவே, ""உங்கள் டிரஸ்டில் இத்தனை பணம் எப்படி வந்தது?'' என்ற கேள்வியும் கூட இவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்துகிறது போலும்! ராம ஜன்ம பூமி, ராமர் பாலம் மட்டுமல்ல; ராம ஜன்ம பூமி டிரஸ்டில் உள்ள கறுப்புப் பணமும் கூட இந்துக்களின் மத நம்பிக்கை சார்ந்த விசயம் போலும்! இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கினால், தலையை வெட்டுவார்கள், நாக்கை அறுப்பார்கள், அதை செய்து முடிப்பதற்கு எடைக்கு எடை தங்கமும் கொடுப்பார்கள் இந்தத் "துறவி'கள்!

வருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விஸ்வபந்து குப்தா இந்த உத்தம புத்திரர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ""இந்த வேதாந்தி விவகாரத்தில் உடனே கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ராம ஜன்ம பூமி நிவாஸ், விசுவ இந்து பரிஷத் இரண்டும் மதரீதியான மாஃபியாக் குழுக்களாகும். அவர்கள் ஒரே முகவரியிலிருந்து சுமார் பத்து போலியான ட்ரஸ்ட்டுகளை நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஐம்பது வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. இதற்கு வரி விலக்கும் பெறுகிறார்கள். ஆனால், எதற்கும் முறையான கணக்கு வழக்கு கிடையாது. இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வருகிறது என்று நாங்கள் கணக்கிட்டிருக்கிறோம்... மதவெறியைப் பரப்புவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்.''

வேதாந்தி ஒரு விதிவிலக்கல்ல. வேதத்துக்கு அந்தமில்லை என்று ""அவாள்'' சொல்வதைப்போல, சங்க பரிவாரம் முழுவதும் முடிவில்லாமல் நிறைந்திருக்கிறார்கள் வேதாந்திகள். இந்தக் காவி உடை மாஃபியா கும்பல் தன்னை ஒரு கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. கடத்தல், கஞ்சா, ஆயுதம் என்ற சரக்குகளைப் போல, இந்த மாஃபியா கும்பல் கையாளும் விற்பனைச் சரக்கு மதம்.

இந்த பேட்டியை வைத்தே வேதாந்தியைக் கைது செய்யலாம் என்கிறார், குப்தா. பொதுத்தொலைபேசியிலிருந்தும், மின்னஞ்சல் மூலமும் கொலை மிரட்டல் விடும் கிறுக்குப் பயல்களையெல்லாம் சிறப்புப் படை அமைத்துத் தேடிப் பிடிக்கிறது போலீசு. ஆனால், ஒரு முதலமைச்சரைக் "கொலை செய்' என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கும் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யக்கூட அஞ்சுகிறது. குப்தா கூறுவது போல வேதாந்தியை உள்ளே தள்ளுவது இருக்கட்டும், மாத்ரி டிரஸ்ட்டில் ஒரு சோதனை நடத்துவதற்குக் கூட நிதியமைச்சகம் உத்தரவிடவில்லை என்பதே உண்மை.

"தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறுக்க வேண்டுமென்று' பகவத் கீதை சொல்கிறதாம். நோட்டு மாற்றுபவனுக்கு கிருஷ்ண பரமாத்மா என்ன தண்டனை தரச் சொல்கிறார்? தெகல்காவின் கேமரா முன் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட பங்காரு லட்சுமணனைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கியது பாரதிய ஜனதா. ஆனால், வேதாந்தி மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அவர் விசுவ இந்து பரிசத்திலேயே இல்லையென்று கூசாமல் புளுகுகிறது. "சூத்திரன் திருடினால் சிரச்சேதம், பார்ப்பான் திருடினால் சிகைச் சேதம்' என்பதல்லவோ மனுநீதி!

செப்30 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் ""நான் கருணாநிதிக்கெதிராகச் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை'' என்று திமிராகப் பதிலளித்திருக்கிறான் வேதாந்தி. பா.ஜ.க.வினரோ ""அதான் வாபஸ் வாங்கிவிட்டாரே, அப்புறம் ஏன் அடிக்கிறீர்கள்?'' என்று நியாயம் பேசுகிறார்கள்.
எந்தக் காலத்திலும் நல்ல பாம்பு நஞ்சை வாபஸ் வாங்கியதில்லை; வாங்கவும் முடியாது. அதை அரைகுறையாக அடித்துத் தப்ப விடுவதுதான் ஆபத்து!

· புதிய ஜனநாயகம், அக்டோபர் 2007

நன்றி: தமிழரங்கம்

Related Posts with Thumbnails