TerrorisminFocus

Showing posts with label ஆணாதிக்கம். Show all posts
Showing posts with label ஆணாதிக்கம். Show all posts

Wednesday, June 02, 2010

சுய விமர்சனம் செய்யத் தயங்கும் பதிவுலகின் ஆணாதிக்க வக்கிரம் - ஒரு முழுப் பார்வை!!

பதிவுலகில் நர்சிம் பிரச்சினையொட்டி நடந்துள்ளவை குறித்த அசுரன் தளத்தின் பார்வைகள் இரு பகுதிகளாக வைக்கப்பட்டுள்ளன. பகுதி 1 - பொதுவாக நர்சிம் பிரச்சினையை பலரும் அனுகிய விதம், குறிப்பாக வினவில் எழுப்பட்ட மாற்றுக் கருத்துக்களுக்கு பதில் சொல்லுவிதமாக, வினவில் இடப்பட்ட அசுரன் பின்னூட்டங்கள் இந்தப் பகுதியில் உள்ளன.


பகுதி 2 - இந்தப் பிரச்சினையை ஒட்டி பைத்தியக்காரன் - சுகுணா நிகழ்வை மையமாக வைத்து கருத்துக்கள், கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

யார் யாருக்கு எப்படி விருப்பமோ அப்படி ஆரம்பித்து படித்துக் கொள்ளுங்கள், விவாதம் செய்யுங்கள்.

பகுதி 1

நர்சிம் பிரச்சினையில் பிற பதிவர்களை தேவையில்லாமல் இழுத்துள்ளது குறித்தும் சாதி குறித்தும்:

இதில் தேவையில்லாமல் பிற பதிவர்களை இழுத்துள்ளதாகக் குறைப்பட்டுள்ள நல்லவர் அன் கோவினர் (வால் பையன் போன்றோரும் கேட்டுள்ளனர் அவர்களை குறித்து அல்ல இந்த பதில்) அந்த இத்யாதி பதிவர்களின் ஆணாதிக்க வக்கிர ஆதரவுதான் இங்கு கேள்விக் குட்ப்படுத்தப்பட்டுள்ளது என்கிற விசயத்தையோ அல்லது அவ்வாறான ஆணாதிக்க வக்கிரம் தொடர்ந்து இங்கு நிகழ்கிறது என்கிற உண்மையையோ அல்லது அவ்வாறு தொடரும் ஆணாதிக்க வக்கிரத்துக்கு ஆழ்ந்த மௌனத்தையும், அதனை எதிர்க்கும் நடவடிக்கைகளுக்கு அழுத்தமான கண்டனத்தையுமே அவர்கள் பதிந்துள்ளார்கள் என்கிற உண்மையையோ திட்டமிட்டே மறைத்து வருகிறார்கள்.

பழமைபேசி என்கிற சாதிக்கு புனுகு பூசும் நல்லவருக்கு யாராவது சாதியை தட்டிக் கேட்டு எழுதிவிட்டால் பொங்கிவிடும். சாதி என்பது சாதி எதிர்ப்பாளர்களிடம் மட்டுமே நிலவும் ஒரு கற்பனை பொருள் என்பதாகத்தான் அவரது எழுத்தை படித்தால் புரிந்து கொள்ள முடியும். அவரது கருத்தில் வாயில் பீ தினிக்கும் கவுண்டனும், அதை ‘மகிழ்ச்சியுடன்’ சுவைக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்காரனும் ஒன்றுதான். அதாவது அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்களாம். இரண்டு பேரும் நிறுத்துங்கடா என்று போலீஸ்க்காரன் குரலில் சொல்வதுடன் தன்னை வரம்பிட்டுக் கொள்கிறார் இந்த புனுகு வியாபாரி. அதே நடைமுறையைத்தான் நர்சின் விவகாரத்திலும் கை கொள்கிறார்.

பஸ்ல டிக்கெட் கொடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மட்டுமே பொங்கு ஜாக்கி சேகர் என்ற நல்லவர் பொதுவாக மக்கள் கொத்து கொத்தாக செத்தொழிவது குறித்தெல்லாம் கருத்து சொல்வதில்லை(ஈழப் பிரச்சினை ஒரு எக்ஸெப்சன்). ஆனால் அது போன்ற மக்கள் பிரச்சினைகளை பேசுபவர்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்லவன் வேசம் கட்டி திட்டுவதற்கு அணி சேர்வார். அவருக்கு ஏற்ற ஆட்களின் சேர்மானம் அவருக்கு தேவைப்படுகிறது அல்லவா?

ஜாக்கி சேகர்: இவரும் சாதியை ‘எதிர்க்கும்’ ஒரு நல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது, அதாவது சாதி வெறியுடன் நடக்கும் தாக்குதல்கள் குறித்தது எல்லா காலங்களிலும் வாய் திறாவதிருந்து விட்டு அவ்வாறான சாதி வெறியை நுட்பமான வேறொரு தளத்தில் அம்பலப்படுத்தும் போது ‘மட்டும்’ அம்பலப்படுத்துபவரையே சாதி வெறியர் என்று அவதூறு செய்து எதிர்க்கும் டிகால்டி சாதி ‘எதிர்ப்பாளர்கள்’ இவர்கள்.

சுருக்கமா சொன்னாக்க, “ஏம்பா நாங்க அமைதியா வாழ்க்கையை ரசிக்க வந்திருக்கோம் இங்கயும் வந்து பொதுப் பிரச்சினையை பேசி எங்க அமைதியை ஏம்பா கெடுக்குற” என்ற ரகம் இவர்கள்.

இந்தப் பிரச்சினையில் சாதி எங்கே வந்தது என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது. பொதுவாக சாதிய ஒடுக்குமுறை நிகழும் விதம் எப்படிப்பட்டது என்பதை இங்கு பொருத்திப் பார்த்தால் புரியும்.

ஒரு கவுண்ட சாதி பன்னியும் இன்னொரு கவுண்ட சாதி பன்னியும் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் கொலை செய்து கொள்வார்கள். அடித்துக் கொள்வார்கள். ஆனால் இதுவே ஒரு தரப்பு தாழ்த்தப்பட்ட சாதி எனில் வாயில் பீ திணிப்பது, அம்மாவையும் – பையனையும் வன்புணர வைத்து கொடுமைப்படுத்துவது போன்ற மனு தர்ம தண்டனைகளை கையிலெடுப்பார்கள்.

இதுதான் நர்சிம்மின் எதிர் பதிவிலும் நிகழ்ந்துள்ளது. ‘அவளோட பிறப்பு அப்படிப்பட்டது’ என்றும் ‘ என்னோட வளர்ப்பு அப்படிப்பட்டது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளவை, அதுவும் தாம்புராஸ் என்ற பார்ப்பன சாதி வெறி சங்கத்தில் உயர் பொறுப்பில் இருப்பவரின் பிள்ளையிடம் இந்த கருத்து வருகிறது எனில் அது அப்பாவித்தமான ஒன்றாக கருத இயலாது.

சாதி குறித்து வினவுதான் பேசுகிறது என்று கதறும் ஜாக்கி சேகர், உ.த. போன்ற நல்லவர்கள் நடைமுறையில் இது போல சாதி சங்கங்களுடன் ஒட்டி உறவாடி, சாதியத்தை நடைமுறையில் கொள்ளும் நபர்களுடன் விமர்சனமின்றி பழகி வருகிறவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அங்கு விமர்சனமின்றி சாதியத்தை ஆதரிக்கும்(மௌனமாக இருப்பதன் மூலம்) ஆதரிக்கும் இவர்கள். இங்கு சாதியை வினவுதான் கிளப்புகிறது என்று சீன் போடுகிறார்கள். இன்று வினவு சாதி பேசிவிட்டதாக கதறும் பழமை பேசி முதலான இவர்கள் இதே தமிழ்மணத்தில் நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டு பார்ப்பனசாதியை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரியும் டோண்டுவை என்றாவாது இப்படி சொல்லியிருப்பார்களா?

ஒருவேளை ஆணாதிக்க வக்கிரமும் ஒரு கருத்து சுதந்திரம்தான் என்ற அதி உன்னத கருத்து சுதந்திர காவாளிகளா .. அன் கோவினர் இருக்கலாம். ஆனால் வினவுக்கு மட்டும் கருத்து சுதந்திரத்தை இவர்கள் புறக்கணிக்கும் மர்மம் என்ன? லீனா விவகாரத்திலும் சரி, நர்சிம் விவகாரத்திலும் சரி பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் பார்ப்பனிய நரித்தனமே இவர்களின் அளவு கோலாக இருக்கும் மர்மம் என்ன? நாட்டாமைகளின் தவறுகளுக்கு ஒரு மன்னிபே போதும் என்று இவர்கள் தடவிக் கொடுக்கும் மர்மம் என்ன?

அதாவது நாட்டாமை நம் வாயில் பீ திணிக்கலாம் அல்லது ஆண்குறியை திணிக்கலாம். ஆனால் நீ அதனை எதிர்க்கும் பொழுது சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, அவாளின் நாகரிக வரம்புகளுக்கு உட்பட்டே எதிர்க்க வேண்டும் என்பதே இவர்கள் சொல்ல வரும் தீர்ப்பு.

பதிவுலக சர்வாதிகாரம் என்று வினவு குறித்து பேசும் .. ஜாக்கி சேகர் போன்ற ஜனநாயகவாதிகள் (அல்லது ஆணாதிக்கவாதிகள்) பதிவுலகில் நிகழும் பெண்களுக்கு எதிரான சர்வாதிகாரம் குறித்து வினவு எழுப்பிய கேள்விக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார்கள். இது தொடர்பில் ஒரு வார்த்தை என்பவரது பதிவிலிருந்து சில வரிகள்:
http://oruvaarthai.blogspot.com/2010/06/blog-post.html
//நானெல்லாம் பதிவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகின்றது.பதிவுலகம் ஒருசுதந்திரமான உலகம்என்று தான் நான் கேள்விப்பட்டு வந்தேன்.

அதில் என்ன வேண்டுமானாலும் நம் மனம் விட்டு எழுதலாம், நாம் வெளியிலே சொல்லத் தயங்கும் கருத்துகளை துணிந்து வெளிஉலகுக்கு சொல்லலாம் என்று தான் கேள்விப்பட்டு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது இந்த பதிவுலகமும் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது என்று.

புதிதாக யார் வந்தாலும் அவர்கள் பதிவுலகில் தாக்கு பிடிப்பது மிகவும் கடினம் தான்.

ஏற்கனவே இங்கு கோட்டை கட்டி கோவணத்தை கொடியாக்கி பறக்க விட்டுக் கொண்டிருக்கும் ஒரு கும்பல் புதியவர்கள் எழுதும் நல்ல எழுத்துகளை எல்லாம் மட்டமாக விமர்சனம் செய்தும்,கேவலமான முறையில் பின்னூட்டங்கள் போட்டும் அவர்களை பதிவுலகை விட்டே துரத்தி விடுவார்கள் என்று நண்பர் ஒருவர் சொன்னதை கேட்டு நான் அதிர்ந்து போனேன்.

இப்படி இவர்களின் கையில் பல பிரபலங்களும் (பெயர்கள் வேண்டாம்…) சிக்கி, கடைசியில் அவர்களும் பதிவுலகம் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருக்கிறார்கள் என்றும் அவர் சொன்ன போது இங்கும் இலங்கை அரசாங்கத்தைப் போல ஒரு சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறதோ..? என்ற சந்தேகம் எழுந்தது.

அங்கே தமிழர்களுக்கு எதிரான சர்வாதிகாரம் என்றால்…! இங்கே நல்ல எழுத்துகளுக்கு எதிரான சர்வாதிகாரம்..!//

வினவின் கருத்துக்களால் தமது பொந்துகளில் இருந்து பதறித் துடித்து வெளிவந்துள்ள இந்த கரப்பான் பூச்சி பதிவர்கள் அத்தனை பேரும் நர்சிம் நடு ரோட்டில் ஒரு பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கிய பொழுது தமது பொந்துகளில் பதுங்கிக் கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில .. கரப்பான் பூச்சிகள் ஸ்லைட்டாக தலையை தூக்கிப் பார்த்துவிட்டு அவர்களின் மென்மையான இதயத்திற்கு நர்சிமின் பயங்கரவாதம் ஒத்து வராது என்பதால் தமது முகம் கோண மீண்டும் பொந்துகளில் பதுங்கிக் கொண்டனர். சொல்ல மறந்துவிட்டேனே, நர்சிம்மின் காதில் விழுமாறு அவர்கள் இவ்வாறு கூறிய பிறகுதான் தமது பொந்துகளில் பதுங்கினர்: ‘அய்யா நர்சிம் அவர்களே, உங்களிடம் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்பார்க்கவில்லை, நன்றி வணக்கம்’ (நன்றி வணக்கம்நமது உபயம், பொருத்தமா இருக்குமென்பதால்).

அதே அவர்கள் இந்த வன்முறை குறித்து பேசி வினவு தோழர்கள் அதே களத்திற்க்கு வந்தவுடன் ஆக்ரோசத்துடன் ஒன்று கூடி கரப்பான் பூச்சி பாதுகாப்பு அமைப்பாக அன் அபீசியலாக அணி திரண்டு வினவை புறக்கணிப்போம் இயக்கம் ஆரம்பித்துள்ளனர். நல்ல கூட்டணி.

இந்த புதிய கூட்டணியில்முக்கி நபர் ஒருத்தரை சொல்லாமல் விட்டு விட்டேன். அவர்தான் கோவி கண்ணன். நர்சிம் பிரச்சினை பற்றிய பதிவுகளில் கூட தனது மனிதாபிமான கோமணத்தைகழற்றி காயப் போட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பற்றிய தனது நெம்ப நல்லவன் கருத்தை எழுதிக் கொண்டு செல்கிறார். இதில் சில விசயங்கள் உள்ளன, ஒன்று ரயில் தகர்ப்புக்கு மாவோயிஸ்டுகள் பொறுப்பேற்கவில்லை என்று அன்றைக்கே ஒரு அறிக்கை விட்டனர் இரு நாட்கள் கழித்தும் விரிவான அறிக்கை விட்டுள்ளனர் ஆனால் அது கோவிக்கு தேவையில்லாத விசயம். மேலும், ‘அப்பாவிசி ஆர் பி எப் மற்றும் போலீஸால் அங்கு கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கிலானவர்கள் (வேற யாரு மக்கள்தான், அதப்பத்தி நமக்கென்னையா) பற்றியும் அவருக்கு கவலையில்லை. அவரது கவலையெல்லாம் நர்சிம் பற்றிதான்ஸாரி சேத்துப் போன அப்பாவி போலீசு பற்றிதான்(ரெண்டும் ஒன்னுதான்). அதே சிங்கப்பூர் சிந்தனையோட்டம் நர்சிம் விசயத்திலும் வெளிப்படுகிறது, நர்சிம் விசயத்தில் இவர் நடுநிலைவாதியாம். அப்படின்னா என்னவென்றால், நர்சிம் நடுரோட்டில் வன்கொடுமை செய்யும் பொழுது அமைதியாக பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பிறகு கருத்துச் சொல்லுவது ஆகும். சூப்பரப்பு

கோவி கண்ணன் இந்த பிரச்சனையில் தீர்வை தேடுகீறாராம், என்ன வகையான தீர்வு? அதாவது நர்சிமை முல்லையே ஹன்டில் செய்து கொள்வாராம், மற்றபடி நர்சிமின் ஆணாதிக்க வக்கிரம் உள்ளிட்ட இன்ன பிற ஆதிக்க உட்க் கூறுகளை கண்டித்து எழுதினால் அது நமது விளம்பரம் அல்லது அரசியலுக்கு பயன்படுத்துவது என்கிறார். நல்லது கோவி எமது அரசியல் எது என்பதை வெளிப்படையாகவே வைத்துள்ளோம், அது ஒடுக்குமுறை நிகழும் இடமெல்லாம் அதனை ஏறி அடிப்பத்தே ஆகும். ஆனால் நரசிம் மற்றும் நீங்கள் உள்ளிட்டவர்களின் அரசியல் என்ன? அரசியலே இல்லாத அத்துவான காடுகள் எதிலும் வாழ்கிறீர்களா என்ன?

அல்லது ஆணாதிக்கம், பார்ப்பனியம் நரசிம் எழுத்துக்களில் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா என்ன? அப்படியெனில் அதுதான் உங்களது அரசியல்.

நல்லவர்களின் புனிதக் கூட்டணி மீண்டும் கூடியுள்ளது. நர்சிம்மை சும்மா மென்மையாகத் தட்டியுள்ள உ.த. அண்ணாச்சிதான் வினவை வெளியேற்றுவோம் இயக்கத்துக்கு மீண்டும் தலைவராக முன்னிலை வகிக்கிறார். இந்தப் பிரச்சினைக்கு இவர்களின் தீர்வு, ரேப் செஞ்சிட்டு 2000 ரூவா அபராதம் கட்டிட்டு போயிடு என்ற மைனர் குஞ்சு தீர்ப்புதான். அட்வான்ஸ் புக்கிங்கில் இனிமேல் ரேப் செய்யும் வசதி வரவுள்ளதாக பட்சி சொன்னது.

அட்வான்ஸ் புக்கிங் விவரத்தை வினவை புறக்கணிக்கும் இயக்கத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு உ.த. அண்ணாச்சி அறிவிப்பார்(பிறகு தனது பெயரையும் அதற்குப் பொருத்தமாக மாற்றிக் கொள்வாரா’மாம்(ஸ்)’).

இதனிடையே சிலரது வரலாற்றை மீண்டும் ஒரு முறை கிழித்து பார்ப்போம்.

STD1:
குசும்பன் நெம்ப நல்லவனைப் போல தனது பதிவில் இன்று எழுதியுள்ளார்.

//இதுவரை பதிவுலகில் நடந்து வந்த பிரச்சினைகளின் பொழுது எல்லாம் அந்த அந்த சமயத்தில் பிரச்சினனகளள பற்றி பதிவு போட்டே வந்திருக்கிறேன், எவ்வித உள்நோக்கமும் இன்றி, இப்பொழுதும் அதன் படியே செய்திருக்கிறேன்.//

இது குசும்பு எழுதியுள்ளது. குசும்பு ஏற்கனவே இது போல பெண்களுக்கெதிரான வன்முறைகளை குசும்பாக எழுதியுள்ளார் என்பதற்கு உதாரணம் தமிழச்சி விவகாரம். அவரை நர்சிம் பிரச்சினையில் இங்கு சொல்லிக் காட்டியவுடன் அவருக்கு கோபம் வருகிறது, ஆனால் அவரோ இஸ்டம் போல பாதிக்கப்பட்டவர்களையே கிண்டல் நையாண்டி செய்து எழுதுவார், யாருக்கும் கோபம் வரக்கூடாது. இதுதான் குசும்பனுடைய ஆட்ட விதி. இனி தமிழச்சி விவகாரத்தில் குசும்பனுடைய ஆட்டம் எப்படிப்பட்டது என்பது குறித்து அசுரன் பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது:

//குசும்பன் பதிவில் உண்மையில் குசும்புதான் செய்துள்ளார். அவற்றில் எனக்கு ஒப்புதல் இல்லை. உண்மையில் அக்கறையெனில் தமிழச்சியை நேரடியாக சரியான தர்க்க முறையில் விமர்சித்திருக்க வேண்டும். அதைவிடுத்து குசும்பன் எழுதியது ஒரு கீழ்த்தரமான விளம்பர யுக்தியே. ஏனெனில் இதற்க்கு முன்பு தமிழச்சி எழுதியதை சாக்கிட்டு தமிழ்மண பதிவர்கள் சிலர் அதே போன்ற பாணியில் கிண்டல் நடையில் பல பதிவுகள் எழுத கடைசியில் பாதிக்கப்பட்டது தமிழச்சியே. சில்லுண்டி வேலை செய்த பதிவர்கள் பாதுகாப்பாக ஒதுங்கி கொள்ள பாதிக்கப்பட்டவருக்கே தண்டனை கொடுக்கப்பட்டது.

விசயம் அப்படியிருக்க அதே உத்தியை மீண்டும் குசும்பன் செய்வார் எனில் தமிழச்சி பார்த்து கொண்டு சும்மாயிருப்பார் என்று எனக்கு தெரியவில்லை. குசும்பன் தமிழச்சியை கிண்டல் செய்யலாம் எனில் Provided அந்த சூழல் தமிழச்சியை கிறுக்கச்சியாக்கும் எனில் தமிழச்சிக்கும் ‘யாருடா டேய்’ என்று கேட்க்க அதே சுதந்திர உரிமையுள்ளது என்றே கருதுகிறேன்.//

இப்படி குசும்பனை குறித்து எழுதியவுடன் குசும்பன் அன்றைக்கும் வந்து இதே போல வசனம் பேசித் திரிந்தார்.

எப்படி அன்றைக்கு தமிழச்சி 'யாருடா டேய்' என்று ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமையை அசுரன் தளம் ஆதரித்ததோ, அதே போலத்தான் லீனாவுக்கு எதிரான வினவின் குரலையும், நர்சிம்மை எதிர்க்கும் வினவின் குரலையும் ஆதரிக்கிறது அசுரன் தளம்.

இதுல இன்னொரு முக்கிய புரளி என்னவென்றால் நர்சிம் மன்னிப்பு கேட்டு விட்டாராம். இப்படி அவரது கொ.ப.செக்கள் புரளி கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் (அதில் உ.த.வும் உண்டு).

யாரிடம் கேட்டார் என்பது தெரியாது. அவரது பதிவில் அப்படி எதுவும் இல்லை(மன்னிப்பு என்றால் முதலில் தவறு என்னவென்று சொல்ல வேண்டும், இல்லையெனில் எதற்கு மன்னிப்பு கேட்கிறார் என்பதே நமக்கு தெரியாது).

இவர்களின் இன்னொரு நியாயம், அதான் ரேப் செஞ்சவனும், பாதிக்கப்பட்டவனும் சகஜமா போயிட்டானுங்கள்ள என்ற வாதம். இது அப்படியே சாதிக் கொடுமை நடந்த இடங்களில் வன்கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஆதரவாக பேசுபவர்களை எதிர்த்து ஆதிக்க சாதி அடிவருடிகள் வைக்கும் வாதத்தின் இன்னொரு பிரதியே ஆகும்(கோவி கண்ணன்).

நடந்துள்ள அநீதி இரு சாரரும் அமைதியாக போனவுடன் ஆறிப் போகின்ற ஒன்று அல்ல. பதிவுலகில் தொடரும் ஆணாதிக்க வக்கிரத்தின் ஒரு வெளிப்பாடுதான் நர்சிம். எனவே இதை தனியொரு சம்பவமாக திரிக்கும் உ.த. போன்றவர்களின் நோக்கம் மிக கேவலமானது மட்டுமல்ல, அது மிகவும் சுயநலமான ஆணாதிக்க தன்மை கொண்டது.

//பிரச்சினையை பற்றி மற்றும் பேசினால் நன்று. அதைவிட்டு சம்பந்தமில்லாதவர்களை இழுப்பது நோக்கத்தை திசைதிருப்பும். அவரவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் பதிவிடுவதுதான் இயல்பு. இவர் சொல்லவில்லையே என டிமாண்ட் செய்வது நல்லதல்ல.//

இந்தக் கருத்தைப பொறுத்த வரையில் அவ்வாறு கோருவது சரி என்றே கருதுகிறேன். எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லாதவர் பிற்பாடு விளக்கம் கொடுத்தால் முடிந்தது பிரச்சினை. ஆனால் இவ்வாறு கோராமல் இருந்தால் அந்த மௌனமே அநீதிக்கான அங்கீகாரமாகிவிடும். எனவே, இங்கு மௌனம் உடைக்கப்பட வேண்டும் என்ற வினவின் அனுகுமுறை 100% சரியே.


பாகம் - 2

இனி சுகுணா - பைத்தியக்காரன் - வினவு விவகாரத்தை மையமாக வைத்து:

//லீனா பிரச்சினை போன்ற ஒருசில பிரச்சினைகளில் உங்களோடு முரண்பட்டாலும்

தொடர்ச்சியாகப் பல சமயங்களில் உங்களை ஆதரித்து எழுதியிருப்பவன் நான்.//

இவ்வாறு எழுதியுள்ளார் சுகுணா. அதாவது ரொம்ப நியாயவான் போல. அவர் மீது லீனா பிரச்சினையின் போதே அசுரன் தளத்தில் வைக்கப்பட்ட விமர்சனம், 'சுகுணா நீங்கள் வினவின் முதுகில் குத்தியுள்ளீர்கள்' என்பதே ஆகும். லீனா பிரச்சினையிலும் சுகுணா நெகிழ்ச்சியுடன் அசுரன் தளத்தில் சில பல பின்னூட்டங்கள் இட்டார். அந்த நெகிழ்ச்சியின் பின்னால் உள்ள போலித் தனங்களை அவரது அதே நெகிழ்ச்சியுடன் அசுரன் தளத்தில் கேள்விக் குட்ப்படுத்திய பொழுது சுகுணா வழக்கம் போல காணமல் போயிருந்தார். அவரது பழைய பிரதி மட்டும் பின்னூட்டத்தில் கேட்பாரற்று கிடந்து என்னைப் பார்த்து பல்லிளித்தது.

இன்று இதே வகையான 'நெகிழ்ச்சியுடன்' நர்சிம் பிரச்சினையில் வினவை கேள்வி கேட்கிறார் சுகுணா. அவரை வினவு அறம் நழுவி அவதூறு செய்ததாக சொல்லும் சுகுணா அவற்றை ஒரு பகடியாகத்தான் வினவு வெளிப்படுத்தியிருந்தது என்பதை மறைக்கும் அதே வேளையில், சுகுணா ஆணித்தரமாக வினவின் மீது பல அவதூறுகளை செய்துள்ளது குறித்து அசுரனில் மிக 'நெகிழ்ச்சியுடன்' கேள்வி கேட்கப்பட்டிருந்தது. சுகுணா நேர்மையான விளக்கம் தருவார் என்ற அதீத நம்பிக்கையுடன் கேட்டிருந்த கேள்விகளுக்கு இன்று வரை பதில் சொல்லாமல் இருக்கும் அவரது அறம் எங்கு வழுவியது என்று அவர்தான் சொல்ல வேண்டும்.

//நர்சிம்மின் பார்ப்பனத்திமிர், ஆணாதிக்கத் திமிரை அம்பலப்படுத்த உங்களிடம் உண்மையிலேயே சொந்தமாகச் சரக்கு இல்லையா?//

என்று கேட்டுள்ளார் சுகுணா. உருவாக்கப்படுபவை அனைத்துமே பிரதிகள் என்று கருதும் சுகுணா இந்தக் கேள்வியை எழுப்புவது ஒரு வேடிக்கை என்றால், சொந்தச் சரக்கு இல்லாத அறிவிழிகள்தான் வினவு உள்ளிட்ட நாங்கள் என்று ஒத்துக் கொள்வதில் எமக்கு வருத்தம் ஒன்றுமில்லை.

ஆனால் நிறைய சொந்த சரக்கு உள்ளதாக நம்பும் நீங்கள் ஏன் இது வரை ஆணாதிக்கத்தை எதிர்த்து ஆக்கப் பூர்வமான ஒரு பங்களிப்பை முன் வைக்கவில்லை? மாறாக ஆணாதிக்க வக்கிர எதிர்ப்பை சிதைக்கும் வகையில் உங்களது சொந்த சரக்கை அடுத்தவனின் இ மெயில் ஐடியை திருடி அம்பலப்படுத்தும் அளவுதான் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதுதான் ஆக வெட்கக் கேடானதாக கருதுகிறேன் சுகுணா.

ஆதரவு சக்தி என்று சொல்லிக் கொண்டு முதுகில் குத்துவேன் என்பவர்களை அதே போலத்தான் திருப்பி அடிக்க முடியும் என்று லீனா விவகாரத்தில் சொன்னதை சுகுணாவின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரக் கடமைப்பட்டுள்ளேன்.

இனி பைத்தியக்காரன் விவகாரம், பைத்தியக்காரன் எழுதிய ஒரு பதிவை அடிப்படையில் மாற்றம் செய்து அதை விட இரு மடங்கு பெரிய பதிவாக வினவு இட்டுள்ளது. இதன் பொருள் அந்தப் பதிவு ஒரு கூட்டு முயற்சி என்பதே ஆகும். இதனைத்தான் வினவும் சொல்லியுள்ளது. பைத்தியக்காரனின் பங்களிப்பை வெளியிடாமல் மறைத்ததில் வேறு காரணங்கள் இருக்கலாம். இது போன்ற நிகழ்வுகள் பதிவுலகில் வெகு சகஜமான ஒன்று. இது போல நடவடிக்கைகளை பட்டியலிட்டால் இன்றைக்கு நல்லவன் வேசம் கட்டி ஆடும் ஒருத்தன் பாக்கியில்லாமல் (அசுரன் உள்ளிட்டு) துரோகிகளாக மாறிவிடுவார்கள். இந்த விவகாரத்தை சுகுணா வெளிப்படுத்திய விதம் தெளிவாகத் திட்டமிட்டு நர்சிம் எதிர்ப்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி ஒற்றுமையை குலைக்கும் நோக்கமே ஆகும். இதை பெரிய குற்றமாக முன்னிறுத்துபவர்களில் பலரின் நோக்கம் நர்சிம்மின் ஆணாதிக்க திமிரின் வீரியத்தை குறைத்துக் காட்டுவதாகவே உள்ளது (அல்லது அந்த நோக்கத்திற்கு பழியானதாகவே உள்ளது).

இதில் அடுத்த விசயம், பைத்தியக்காரன் நடைமுறை வாழ்வில் ஒரு பார்ப்பனராக உள்ளார் என்ற குற்றச்சாட்டு இதற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர் பைத்தியக்காரன், இவற்றை அவர் பொய் என்று மறுத்துள்ளார் தனது பதிவில். இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதனை இன்று சொல்லும் அவரது நண்பர்களான சுகுணா போன்றோர் அவர் ஒரு வேளை பார்ப்பன நடைமுறைகளைக் கொண்டவராக இருப்பின் அவரை விமர்சினமின்றி சந்தர்ப்பவாதமாகவே நட்பு பாராட்டியுள்ளனர் என்று தெரிகிறது. சந்தர்ப்பம் பாதகமாக போனவுடன் திருப்பி அடிக்கிறார்கள்.

இந்த விசயத்தில் பைத்தியக்காரன் நர்சிம்மை நேரடியாக, வெளிப்படையாக, முதல் ஆளாக கண்டித்ததுடன் இல்லாமல், வினவில் வெளிவந்த பதிவையும் வெளிப்படையாக ஆதரித்தும் எழுதியுள்ளார். மேலும், நர்சிம்மை கண்டித்து பதிவு எழுதுவேன் என்றும் நர்சிம்மிடமே கூறியதாக பதிவில் எழுதியுள்ளார். இது பாராட்டத்தக்கது.

இதில் அடுத்து வருகின்ற இன்னொரு விசயம், முல்லை வன்னியர் சாதி போரத்தில் உள்ளார் என்பது மற்றும் பார்ப்பன நடைமுறையுள்ள பைத்தியக்காரனை வினவு எப்படி பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள். பைத்தியக்காரனின் சொந்த வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புள்ள, பார்ப்பனிய எதிர்ப்பாளராக தங்களைக் காட்டிக் கொள்ளும் சுகுணா போன்ற சந்தர்ப்பவாதிகள் பைத்தியக்காரனது பார்ப்பன நடைமுறைகளை (ஒருவேளை பைத்தியக்காரன் அவ்வாறனவரெனில்) கண்டிக்காதிருந்துவிட்டு, இன்று பைத்தியக்காரனை அவரது எழுத்தின் மூலம் அறிந்து கொண்டு அவரது முற்போக்கு கூறுகளின் அடிப்படையில் அவருடன் செயல்பட்டுள்ள வினவு குழுவை அதற்குப் பொறுப்பாக்கியுள்ளது மிகக் கேவலமானதொரு உத்தி.

நியாயமாக, சுகுணாதான் இதற்கு பதில் சொல்லவேண்டும். எப்படி சுகுணா இத்தனை நாள் பைத்தியக்காரனை விமர்சிக்காமல் இருந்துவிட்டு இன்று நர்சிம் என்ற பார்ப்பானிய ஆணாதிக்க வெறியனை காப்பாற்றுவதற்காக முற்போக்கு வேசம் கட்ட இயலுகிறது உங்களால்?

பைத்தியக்காரன் நர்சிம்மை எதிர்ப்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டுதான் செயல்பட்டுள்ளார். அவரது பங்களிப்பு இருந்த பதிவில் அவர் பெயர் மறைக்கப்பட்டது ஒன்றுதான் அவரது-வினவினது தவறு. மற்றபடி பெர்சனல் தகவல் என்று என்ன வெளிவந்துவிட்டது என்று தெரியவில்லை. ஒருவருடைய தந்தையின் முக்கியமான அரசியல் பின்னணி அம்பலப்படுத்தப்படுவது பெர்சனல் எனில், பெயர் சொல்லி அழைப்பதே பெர்சனல் என்று ஆகிப் போகும். இதனை மன்னிக்கவே முடியாத துரோகமென்று கதறும் நல்லவர்கள் சுகுணாவும், பைத்தியக்காரனின் இமெயிலில் இருந்து திருடி வெளிப்படுத்திய நண்பரும் செய்ததை என்னவென்று சொல்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இவ்வாறு பைத்தியக்காரனை மன்னிக்கவே முடியாத துரோகி என்று அவதூறு செய்துள்ளவர்கள்தான் நர்சிம்மை மன்னித்துவிடலாம் என்று சொம்பு தூக்கி கிளம்பியுள்ளனர். பைத்தியக்காரனோ, வாய் திறந்து தம்மீதான ஒடுக்குமுறையை வெளிப்படுத்தத் தயங்கிய பெண் பதிவர்களின் சார்பில் துரோகி பட்டம் வாங்கியுள்ளார். சுகுணா, உ.த., கோவி. கண்ணன் போன்றோர் என்னவாகியுள்ளனர் என்பது அவர்களுக்கே தேவையில்லாத ஒன்று? அடுத்த வேளை சோறு கிடைக்குதா ரைட்டு விடு....

இந்தச் சம்பவம் எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் எடுக்கும் நிலைப்பாடுகளின் போது பல்லிளிக்கும். அன்று தெரிந்து விடும் எது சரியென்று மிகத் தெளிவாக, சந்தேகங்களுக்கிடமின்றி, மனக் கிலேசங்களுக்கிடமின்றி.

மேலும், இன்று பைத்தியக்காரனை அம்பலப்படுத்த என்ற முகாந்திரத்தில் இமெயில் ஐடியிலிருந்து திருடி எழுதியுள்ள சுகுணா, இதே போல உயர்வான தனது லட்சியங்களுக்காக ஆனந்த விகடனிலிருந்து திடுடித் தரலாமே? தருவாரா என்று வினவு கேள்வி எழுப்புகிறது. ஆனந்த விகடனா அல்லது லட்சியமா என்றால் ஆனந்த விகடன் என்றே சொல்வார் சுகுணா, ஆனால், பைத்தியக்காரன் நட்பா, ஆணாதிக்க பார்ப்பனிய எதிர்ப்பா என்ற கேள்வியில் அவர் தேர்ந்தெடுத்துள்ளது ஆணாதிக்க பார்ப்பனிய எதிர்ப்பையே. இதுவும் பாராட்டத்தக்கதே.

இரண்டாவது, முல்லையின் வன்னிய சாதி சார்பு. இது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவ்வாறெனில் அது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அதனை உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் கூட முல்லை வன்னிய சாதி சார்பாக இருப்பதே அவர் மீதான வன்கொடுமையை நியாயப்படுத்தி விடுமா? இந்தக் கேள்வியை வெகு திறமையாக முன் வைக்கும் அல்பவாதி தியாகு அவரது பதிவுகளில் அவருக்கு ஆதரவாக எழுதிக் கொண்டிருக்கும் ஒற்றை பதிவரான குழலியின் வன்னிய சாதி ஆதரவு தெரியாதோ என்னவோ? தோழர் தோழர் என்று ஈசிக் கொண்டுள்ளார். தியாகு தன்னை தியாகியாக் காட்டிக் கொள்ள பகித பிரயத்தனம் செய்து வருகிறார், அவர் தோழர்களால் புறக்கணிக்கப்பட்டதன் பின்னணி கருங்காலித்தனம் என்ன என்பது இங்குள்ளது. இது குறித்த சின்னதொரு கேள்விப் பட்டியலுக்கு பதில் சொல்லுங்கள் என்ற பொழுது ஓடிப் போனவர்தான் தியாகு. அன்றைய அவரது எதிர்வினையின் சுருக்கம் இதுதான் 'எந்த அடிப்படையில் தோழர்களை இவ்வளவு கேவலமாக தொடர்ந்து குறிபிடுகிறீர்கள்' என்றதற்கு அவரது ஒற்றை வார்த்தை பதில் 'அதை விவாதம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்' என்பதே ஆகும்.

அதாவது இன்று முல்லையை நர்சிம்முடன் (நர்சிம் ஏதோ செஞ்சுட்டார் விடுங்க பாசு) சமதானமாக போகச் சொல்லி இவர்கள் வைக்கும் அதே கருத்துத்தான் தியாகு வைத்ததும். அதாவது நர்சிம்முக்கு எப்படி எந்த வரையரையுமின்றி ஆகக் கேவலமாக அவதூறு செய்யும் உரிமையுண்டோ - அதை வரையரையின்றி மன்னிக்க மட்டுமே நமக்கு உரிமையுண்டோ அதே போல, லீனாவுக்கு எப்படி எந்த வரையறையுமின்றி ஆகக் கேவலமாக அவதூறு செய்யும் உரிமையுண்டோ - அதை ஆக நாகரிகமாக மறுத்து விளக்க கேட்க மட்டுமே நமக்கு உரிமையுண்டோ அதே போல தியாகுவுக்கும் சகட்டு மேனிக்கு அவதூறு செய்ய உரிமை உண்டு - நமக்கு அதை விவாதம் என்று எடுத்துக் கொண்டு கண்டுகொள்ளாமல் செல்லும் உரிமை மட்டுமே உண்டு என்பதே தியாகு முன்னிறுத்தும் தீர்ப்பு. தியாகு மட்டுமல்ல இந்த பிரச்சினையில் சகல வண்ணங்களிலும் வினவுக்கு எதிராக நிலைப்பாடெடுத்துள்ளவர்களின் பொது அரசியலும் இதுவே(தெரிந்தோ தெரியாமலேயோ). அதனால்தான் லீனாவின் மொழிக்கு பொருத்தமான வினவின் மொழி நடை அதிர்ச்சியுடன் பேசப்படுகிறது (வினவு பின்னூட்டங்கள் குறித்து தமிழச்சி, செல்வநாயகி போன்றோரின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்), நர்சிம்மின் பொது அரசியலான ஆணாதிக்க பெண் ஒடுக்குமுறை உடல் மொழியினை எதிர்க்கும் வினவின் ஆக்ரோசமான மொழி நடையும் இதே அம்சத்தில்தான் விமர்சிக்கப்படுகிறது.

இவையனைத்தும் நாட்டாமைகள் அப்படித்தான்யா இருப்பாங்க நீ கண்டுக்காம போவயா என்ற பொது புத்தி அடிப்படையிலே எழும் தீர்ப்புகள் ஆகும். அதாவது
நாட்டாமைகள் அப்படித்தான்யா இருப்பான் நீ அதே மாதிரி திருப்பிச் செய்வியா? இப்போ பாரு அமைதியா தீர்க்க வேண்டியது சிதைஞ்சு போச்சி என்று கூறுபவர்கள் எப்படி நாட்டமையின் ஒடுக்குமுறையை எதிர்மறையில் நியாயப்படுத்துகிறார்களோ அதுவேதான் இன்று வினவு விசயத்திலும் நடந்துள்ளது. குறிப்பாக தியாகுவின் ஒரு கருத்தைக் கவனிக்கலாம், புதிய தமிழகம், வி.சி. போன்றவை சாதி சண்டையைத் தூண்டுவதாக எழுதி வினவை அவர்களுடன் ஒப்பீடு செய்துள்ளார். இந்த ஒப்பீடு மிகச் சரியானது என்பதே எனது கருத்தும். அதாவது ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்வன்முறையை, எதிர்வினையை வினவு தூண்டுகிறது என்பது மிகச் சரியே. ஆனால் சாதிச் சண்டை என்பது சாதி ஒடுக்குமுறையை (தியாகு பாசையில் அமைதி) விட மேலானது என்பதை தியாகு போன்ற ஆதிக்க சாதிவெறிக்கு சொம்படிக்கும் துரோகிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனது வாயில் திணிக்கப்படும் பீயை விட அதனை எதிர்த்த எனது வயிற்றில் ஒரு கத்தி செருகப்படுவதை ஏற்றுக் கொள்வேன் என்ற விடுதலை உணர்வே தாழ்த்தப்பட்ட சாதியினரின் வன்முறைக்கு பின்னுள்ளது. இதனை இழிவுபடுத்தி எழுதும் தியாகு போன்றோர் லீனாவுக்கு ஆதரவாகவும், நர்சிம்மை மறைமுகமாக நியாயப்படுத்துபவர்களாவும் இருப்பதில் ஆச்சர்யமில்லை.

தியாகு ஓடிப் போன பின்னணி:

"இதற்கு முன்பு வினவுடன் முரன்பட்ட தோழர்கள் யார்? மணி என்பவர் வந்த நாள் முதல் ஒரே லடாய்தான், அப்புறம் இராயகரனுடனான காரசராமான விவாதப் பதிவுகள். இவர்களெல்லாம் இன்றும் தோழர்களாகத்தான் உள்ளனர். இது தவிர்த்து பலர் கடுமையான முரன்பாடுகள் இருந்த பொழுதும் நண்பர்களாகவும், தோழர்களாகவுமே உள்ளனர். தியாகுவே கூட முரன்பட்டுள்ளார் முன்பு. தியாகுதான் காரல் மார்க்ஸ் என்ற முகமூடி அம்பலாமன பிறகும் கூட தோழர்கள் அவருக்கு பல விதங்களில் விளக்கவே முற்பட்டனர்(புறக்கணிக்கவில்லை). பலமுறை அவரது பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் (லீனா கூட்டத்தில் அடிதடி செய்ததாக ஒரு பொய், அவரை வேசி என்றதாக ஒரு பொய், இன்னும் பல) விளக்கம் கொடுத்த பிறகும், அவைகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்ட பிறகும், அவை குறித்து சட்டை செய்யாமல் எதிரிகளின் வார்த்தைகளில் விமர்சித்து அதே அவதூறுகளுடன் ஒரு பதிவும் இட்டார். அவரது நோக்கம் விமர்சனம் செய்வதல்ல, சேறு அடிப்பது என்றே புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பிற்பாடு அவர் காரல் மார்க்ஸ் என்ற பெயரில் லீனா விவகாரத்துக்கு முன்பிருந்தே வினவு தோழர்களை அவதூறு செய்துள்ளதும் வெளிவந்தது. இவ்வாறு கறுப்பு ஆடாக நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளதே தியாகு விசயத்தில் மிகக் கடுமையாக தோழர்கள் அவரை புறக்கணிக்கக் காரணமானது. ஒருவருடன் பழகுவதற்கு பரஸ்பரம் நம்பகத்தன்மை வேண்டும். அதுவும் புரட்சிகர அமைப்புகளில் தோழர்களாக இருப்பதற்கு இது மிக அவசியம். அது இல்லாத ஒருவருடன் யாருமே பழகுவதை தவிர்க்கவே செய்வார்கள். தியாகுவின் நம்பகத்தன்மைதான் இங்கு பிரச்சினையேயொழிய அவரது விமர்சனம் அல்ல. வினவு பின்னூட்ட விவாதங்களே இதற்கு சாட்சி.
"

பேக் டூ முல்லையின் வன்னிய சாதி அடையாளம், பதிவுலகில் பொது எதிரிகளுக்கு எதிராக அனைத்து வேறுபாடுகளையும் களைந்து
கொண்டு போராடியுள்ளதற்கு சுகுணாவே சாட்சி. பொது எதிரிகள் என்பதில் பொதுவாக பார்ப்பனியம், மத அடிப்படைவாதம், பெண்ணடிமைத்தனம், ஈழம் போன்றவை இதுவரை பதிவுலகில் பல வகையான ஐக்கியக் கூட்டுகளை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு அரசியல் முன்னுக்கு வருவதும் அது சார்ந்து அணி சேர்க்கை நிகழ்வதும் நடதுள்ளது. அன்றைக்கு இவர்கள் யாரும் இது போன்ற அல்பத்தனமான காரணங்களை முன் வைத்து பிரதான தாக்குதல் இலக்கிலிருந்து திசை திருப்பவில்லை. இன்றைக்கு வினவை எதிர்க்கும் தேவை இவர்களை இது போன்ற காரணங்களை கண்டுபிடிக்கத் தூண்டுகிறது.


சரியாகச் சொல்வதென்றால், தூய்மைவாதிகளைத்தான் கூட்டுச் சேர்க்கலாம் எனில், பெண்களை செக்ஸ் வக்கிரத்தின் இலக்காக சித்தரிப்பதில் ஒன்று படுபவர்கள் செந்தழல், லக்கி போன்றோர். ஆனால் இன்று இருவரும் எதிரெதிர்
நிலைப்பாடுகளில் நிற்கிறார்கள் (லக்கி நர்சிம்மை ஆதரிக்கிறார் என்று தோனவில்லை. அவரது இயல்பான எதையும் பகடி செய்யும் குசும்பனுடைய நடைமுறை இங்கும் செயல்பட்டிருக்கலாம் என்பது எனது அனுமானம்) ஆனால் லக்கி பொதுவாக ஒரு விசயம் தவறு என்று அழுத்தமாக விமர்சனம் செய்யப்பட்ட இடங்களில் அவற்றை ஒத்துக் கொண்டுள்ளார் (சில சொற்பமான சம்பவங்கள் தவிர்த்து). செந்தழலோ மிகப் பாராட்டத்தக்க வகையில் நர்சிம்மின் ஆணாதிக்க பார்ப்பனியத்தை சமரசமின்றி எதிர்த்து நிற்கிறார். இன்னொரு பக்கம் குழலி (வன்னிய சாதி அடையாளத்தை முன்னிறுத்தியவர்) நர்சிம்மை சமரசமின்றி எதிர்த்து நிற்கிறார். எனவே குழலியின் சாதி அடையாளம் அவரை புறக்கணிக்க அடிப்படை வழங்கிவிடுமா? செந்தழல் மற்றும் லக்கி போன்றோர் முல்லைக்கு ஆதரவாக பேசுவதற்கு அருகதையே இல்லை என்று சொல்ல இயலுமா? நியாயவான் கல்லெறியட்டும் என்ற நடைமுறை பிரதான குற்றத்தை நோக்கிய தாக்குதல் இலக்காக செயல்படுத்த மட்டுமே பொருத்தமான ஒரு நடைமுறை தந்திரமாகும். எதிர்ப்பவரெல்லாம் கல்லெறியட்டும் என்பதே ஆதிக்கத்துக்கு எதிரான தந்திரமாக இருக்க முடியும். ஆதிக்க வெறிக்கும், ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்வினைக்கும் ஒரே தண்டனை என்பது எனக்கு ஒவ்வாத விசயம். எப்படி போலீஸு ரவுடிகளுக்கு பாசத்தையும், அவர்களால் கொல்லப்பட்ட போராடும் மக்களின் மீது வெறுப்பையும் கோவி கண்ணனால் தர இயலுகிறதோ அப்படிப்பட்டதொரு சார்பு நிலைதான் என்னுடையதும்.


இது தவிர்த்து வினவின் மீது வெகு சொற்பமான சிலரால் ஆக்கப் பூர்வமான விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவையும் புதிதானவை அல்ல. அசுரன் தளத்தில் ஆரம்ப காலங்களில் வெளிவந்த பதிவுகளின் ஆணாதிக்க சொல்லாடல்கள் இடம் பெற்றதை தோழி லிவிங் ஸ்மைல் குறிப்பிட்டதன் பேரில் திருத்திக் கொள்ளப்பட்டது. இன்று வரை அது போன்ற சொல்லாடல்களை பயன்படுத்துவதில் மிக எச்சரிக்கையாகவே அசுரன் தளம் இருந்து வருகிறது. அது போன்ற விமர்சனங்களை தோழர்கள் பரிசீலித்து உள்வாங்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மேலும், இன்று தமிழச்சி, செல்வநாயகி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை தோழர்களுக்கு உணர்த்தாது இருந்துவிட்ட தடித்தனத்திற்கும் வருந்துகிறேன். பரவசநிலையில் வினவின் பின்னூட்டத்தில் நிகழ்ந்த அதீதங்களை கடந்து சென்றது மிக வெட்கமுறச் செய்கிறது. இது குறித்து தோழர்களுக்கு வேறு கருத்துகூட இருக்கலாம்.


பொதுவாக ஒரு எதிர்க் கருத்தை முன் வைத்த விதம் குறித்து பல மாற்று கருத்துக்கள் விமர்சனங்கள் இருக்கும். அது போலவே வினவு பதிவு குறித்து வால்பையனுடைய பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் அவரால் முன் வைக்கப்பட்டன. தேவையின்றி பதிவு திசை திரும்பி விட்டது என்பது அவரது முக்கியக் கருத்து, தேவையின்றி பதிவர்கள் பெயர்கள் இழுக்கப்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு. இது குறித்து பைத்தியக்காரன் விளக்கம் அளித்துள்ளார் (பெண் பதிவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேதான் அவ்வாறு செய்யப்பட்டது என்று). பதிவு திசை திருப்பப்பட்டது என்பதும், பதிவின் மையக்கருத்துடன் ஒன்று சேர்பவர்கள் சமரசமற்ற ஒற்றுமையை முன்னிறுத்தாததே திசை திருப்பட்டதின் முக்கியப் பின்னணி என்பதும் என் கருத்து. இப்படி பலருக்கு பல கருத்துக்கள்.

இவையணைத்தும் முன்னிறுத்தும் ஒற்றை புரிதல், பதிவுலகம் இன்னும் ஆணாதிக்க வக்கிரத்தை துணிச்சலான சுயவிமர்சனக் கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ளும் தார்மீக வலுவின்றி இருப்பதுதான் பொதுவில் அம்பலமாகியுள்ளது. இதை உணர்ந்து கொள்வதே அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு அடிகோலும்.

இந்த அடிப்படையில் வினவின் மீதான தமது பல்வேறு விமர்சனங்களை மீறி இந்த பிரச்சினையின் கூர் முனையை வலுப்படுத்தும் வகையில் ஆதராவாக நின்ற செல்வநாயகி, தமிழச்சி, ஈழப் பதிவர்கள், ஜாமலன், முத்து தமிழினி(எப்படி இருக்கீங்க தோழர் முத்து தமிழினி? ரொம்ப நாள் ஆச்சு உங்கள பாத்து), செந்தழல் ரவி, வால் பையன்(சில விமர்சனங்களுடன்) உள்ளிட்ட பதிவர்கள் சரியான செயல்பாட்டை முன்னிறுத்தியுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள். பல்வேறு தியாகங்களுடன் பதிவுலகில் ஆணாதிக்க வக்கிரம் இனி முக்காடு போட்டே எச்சரிக்கையுடன் உலாவ முடியும் என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வினவு குழுவுக்கு வாழ்த்துக்கள். மற்றபடி சொந்த செலவில் சூனியம் வைத்து தாம் யார் என்பதை வெளிக்காட்டிக் கொண்டுள்ள பதிவுல நாட்டாமைகள், நடுநிலைவாத கொழுந்துகள், போலி முற்போக்கு, சுய நல சந்தர்ப்பவாதிகளுக்கும் வாழ்த்துக்கள்.


அசுரன்


தொடர்புடைய பதிவுகளின் உத்தேசத் தொகுப்பு:

ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!


Tuesday, June 01, 2010

ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!

சநர்சிம்மின் ஆணாதிக்க பொறுக்கித்தனத்தை எதிர்க்கும் பதிவர்கள் கீழே உள்ள விட்ஜெட்டை தமது பதிவில் இணைத்துக் கொள்ளவும்.





ஆணாதிக்க‌ பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம். - supperlinks

கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும் - கார்க்கி

வினவு தோழர்களை ஆதரிப்போம் வாருங்கள் - பைத்தியக்காரன்

பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம்? - வினவு

திருந்தவே மாட்டாயா, நீ நர்சிம்! -மாதவராஜ்

நர்சிம், கார்க்கி…. த்தூ! - மாதவராஜ்

நடுநிலை நாடகம் - Drருத்ரன்

கார்ப்பொரேட் தேவிடியாத்தனம் - வால் பையன்

இதுதான் பதிவுலகமா???? - கண்ணகி

வினவு தோழர்கள் - பாரி அரசு

நசுங்கும் சொம்புகள்! - வால் பையன்

பதில் சொல்லுங்கள் பதிவர்களே...? - ஒரு வார்த்தை

Wednesday, July 18, 2007

சுஜாதா என்ற சில்லறை பொறுக்கி!

ண்டை முழுக்க அறிவு பொங்கி காது வழியாக வழிந்து பாரத் எலெக்றானிக்ஸ் நிறுவனத்தின் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இந்திய நிறுவனமான அதை இண்டெல் போன்ற ஜூஜூபி கம்பெனிகளுடன் மோத விட்ட ரங்கராஜன் எனும் திருநாமத்தை (அது யூ வா ஒய்யா என்பது ஆய்வுக்குரியது) உடைய சுஜாதா எனும் மாபெரும் புத்திசாலி சிவாஜி படத்தில் எழுதி இருக்கும் வஜனம்:

ரஜினிகாந்த்திற்க்கு எதிர் பாத்திரமான வில்லன் ஆதி ஸ்டைலாக ரஜினியை
நோக்கி சொல்கிறார் "டேய்! நான் ஆதி..ய்ய்ய்ய்" என்று. உடனே உடனிருக்கும் நடிகர் விவேக்கோ "போடா..." என அடுத்து வாயைத் திறக்கும் முன் ரஜினி அவரின் வாயைப் பொத்தி விடுகிறார்.

உடனே "போடா கபோதின்னு சொல்ல வந்தேன்ப்பா" என்கிறார் விவேக்.

*********************

சுஜாதா எனும் சிரீரங்கம் ரங்கராஜன் எனும் விஞ்ஞானியைப் பாராட்டுவோம் வாரீர்!!



வயசாயிருச்சின்னா புத்தி மங்கிப் போயிரும் என்று சொல்வார்கள். அது போன்று சொல்வது தவறு என்று சுஜாதா நிரூபிக்கிறார். வயசான பிற்பாடுதான் இவர் புத்தி மழுங்கி இப்படி எழுதுகிறார் என்று யாரேனும் எண்ணினால் அதை பொய்யென்று சொல்லி நாங்கெல்லாம் எழுதத் துவங்கிய காலத்தில் இருந்தே வக்கிரமாக எழுதிவருகிறோம் என்கிறார். அதுவும் குறிப்பாக வெகு சனங்களின் பொதுப் புத்தியில் இருக்கும் கசடுகளை ஊக்குவித்து வியாபாரம் செய்பவர்களில் இது போன்ற கழிசடைகள் வெகு திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஆணாதிக்கம் என்பது இயல்பாக நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், சொற்களிலும் வெளிபடுகிறது. இன்றைக்கு பெண்களின் சம உரிமை குறித்து பேசும் யுகத்தில் இருக்கும் நாம் ஆணாதிக்க வக்கிரங்களை நமது நடைமுறையிலிருந்து நீக்குவதே சரியாக இருக்கும். அல்லது குறைந்த பட்சம் பொதுவில் நிலவுகின்ற ஆணாதிக்க
வக்கிரங்களை ஊக்குவிப்பதோ அல்லது அது நியாயமானது, அதுதான் பொதுவாக நிலவும் பண்பாடு என்று சொல்வதோ போன்ற சீர்குலைவு நடவடிக்கைகளாவது நிறுத்திக் கொள்வதே சரி.

சுஜாதாவோ தமது கல்லாவை நிரப்பிக் கொள்வதற்க்கு பொதுப் புத்தியில் படிந்த இந்த பலஹீனங்களை பயன்படுத்திக் கொள்கிறார். இவரின் கழிசடைத்தனம் கொஞ்சம் நாகரிகமான கழிசடைத்தனமாக இருப்பது இன்னும் வீரியமான சமூக விரோத சக்தியாக இவரை மாற்றி விடுகிறது. வாரமலர் கிசு கிசு போன்ற படித்த நடுத்தர வர்க்கம் அருவெறுப்போடு ஒதுக்கும் தரத்திலில்லாமல் கொஞ்சம் உயர்ந்த ப்ளேபாய் தரத்தில் எழுதுவதற்க்காக மட்டுமே இவர் போன்றவர்களுக்கு இலக்கிய வாசிப்பனுபவங்கள் உதவுகின்றன. இது தவிர்த்து சில மேட்டுக் குடி தடித்தனங்களை நியாயப்படுத்தும் தர்க்கங்களையும் வெகு நைச்சியாக தமது
எழுத்தின் ஊடாக வாசகனின் மூளைக்குள் செலுத்தும் திறமைக்காகவும் இவர்களின் இலக்கிய வாசிப்பனுபவம் கை கொடுக்கிறது.


இவர் பெண்களை இழிவுபடுத்தி எழுதுவதற்கு இவரது கணேஷ் வசந்த்
கதாபாத்திரங்களே சாட்சி. தண்ணீர் கொட்டிய சேலையுடன் கண்ணீர் சிந்தி
விம்மி விம்மி விசனப்படும் அபலை பெண்ணை எப்படி ரசிப்பது என்று இவரது வசந்த் நமக்கு சொல்லித் தருகிறார். இது ஒரு சாம்பிள் மட்டுமே. படிக்கும் வாசகனுக்குள் ஜேம்ஸ்பாண்டுகளும், ஆங்கிலப் பட டேம்செல் இன்
டிஸ்டெரஸ் (Damsel in Distress) எபெகக்டும் தமிழ் மொழியிலேயே கிடைத்து
விடுகிறது. இழிவான சிந்தனைவயப்பட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு ஆட்படும் தேவையும் இல்லாமல் இவரது எழுத்து நடை செய்து விடுகிறது.

இவரது வக்கிரத்திற்க்கு கீழே இன்னொரு சான்று உள்ளது படித்து பாருங்கள்:

விக்ரம் படம் வெளிவருவதற்கு முன் அதைக் குமுதம் இதழில் தொடராக
எழுதிவந்தார் சுஜாதா. அதில் கணேஷ் இன்னொரு பெண்ணிடம் பேசும் வசனம்.

"ஆணும் பெண்ணும் சமமெல்லாம் கிடையாது. நாங்களெல்லாம் நின்னுக்கிட்டே சுவரில் மூத்திரம் அடிப்போம்"

இந்த மூத்திர வசனத்திற்கு சுஜாதாவிற்கு எந்த இடத்தில் டைனமட் வைப்பது என்று பெண்கள்தான் முடிவுசெய்யவேண்டும் என்று கோபப்பட்டு எழுதுகிறார் சுகுணா திவாகர் என்ற எழுத்தாளர். இங்கு உண்மையிலேயே வக்கிரமாக எழுதிய சுஜாதாவின் எழுத்து படித்த மேல்தட்டு ஆட்களால் புகழ்ப்படுவதும் அதிலிருந்த வக்கிரத்தை கடுமையாக விமர்சித்து எழுதிய சுகுணா திவாகரின் எழுத்து சீ... இப்படி மோசமாக எழுதுறானே என்று தூற்றப்படுவதற்கும் அடிப்படையாக இருக்கும் உளவியல் என்னவென்பதை அவரவரே பரீசீலித்துக் கொள்ளட்டும். எனக்கென்னவோ சுகுணா திவாகர் இன்னும் மோசமாக திட்டி எழுதியிருந்தால் கூட சரியே என்று படுகிறது.

இவரது பிற சேவைகள் என்ன என்று பார்த்தால் பாய்ஸ் படம் இவரது
வக்கிரங்கள் எல்லாவற்றையும் தொகுத்து கொடுத்த படமாக நிற்கிறது. அந்த
படத்தில் பொடா சட்டம் பற்றி எழுதி கிழித்திருப்பார் சுஜாதா. அதான் அவர்
அதிமேதாவியாயிற்றே என்று ரசிக சிஸ்ய கோடிகளும் புழங்காகிதப்பட்டிருப்பார்கள். இதே சுஜாதா நக்கீரன் கோபால் பொடா
சட்டத்தில் கைது செய்யப்பட்ட பொழுது அதனை எதிர்த்து பத்திரிகையாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது பொடா குறித்து நேக்கு எதுவும் தெரியாது என்று கூறி பேச மறுத்த பொழுது அவரது அறிவுப்புலமை தொலைந்து போன இடம் தெரியவில்லை. அது அறிவு நாணயமற்றவர்களின் காரியப் பூர்வமான கள்ளமௌனம் ஆகும்.

இது தவிர்த்து அதே பாய்ஸ் படத்தில் விபச்சாரியுடன் சல்லாபம் செய்யும்
காட்சியில் வரும் வசனங்கள், பெண்ணின் மார்புகளை பெரிதாக்கும் வித்தைகளை சொல்லும் வசனங்கள் என்று கிளை பரப்பி சென்றது அவரது வக்கிரம். ரொம்ப சோசியலாக பழகுகிறார்களாம் இன்றைய மாணவர்கள். நமக்கு தெரிந்து பள்ளி கல்லூரிகளில் பழகும் மாணவ மாணவிகள் எல்லாம் பொதுவாக பேசி கலந்து கொள்வதுதான் நடக்கிறதே அன்றி இவர் சொல்வது போல எப்போ பார்த்தாலும் செக்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருப்பதில்லை. ஆயினும் அது போன்ற அடி மனது குறு குறுப்புகளை குற்றவுணர்வின்றி செயல்படுத்த தார்மீக பலம் கொடுக்கும் வேலையை தனது எழுத்து சேவையின் மூலம் செய்கிறார். இயல்பான பால் கடந்த நட்புணர்வு என்று ஏதேனும் இருந்தால் கூட அதனை இயல்பற்றதாக மாற்றி இழிவுபடுத்த தேவையான கருத்தியல் களைகளை விதைக்கும் வேலையை இவரது எழுத்துக்கள் உறுதிப்படுத்துகீறது. இதில் Easy Money வேறு. இந்த இழவைத்தான் அறிவு ஜீவித்தனம் என்று சொல்கிறார்கள் பல நடுத்தர வர்க்க வாசகர்கள்.

இவரது அறிவுஜீவித்தனத்தின் இன்னொரு முக்கிய அம்சம் அடிக்கடி புரியாத
ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்பு வார்த்தைகளை போட்டு எழுதும் இவரது பாணி. இதில் மயங்கித்தான் நடுத்தர வர்க்க வாசகர்கள் இவரைப் போன்ற
அரைகுறைகளின் வார்த்தைகளிலிருந்து தமது உலக அறிவை வளர்த்துக் கொள்ள முயல்கீறார்கள். இப்படி ஒரு பகுத்தறிவற்ற அறியாமையின்பாற்ப்பட்ட வாசகன் - எழுத்தாளன் உறவினுடைய ஆபத்தின் ஒரு அம்சம்தான் அவரது சமூக விரோத, ஆணாதிக்கம் உள்ளிட்ட பிற வக்கிரமான எழுத்துகள் வாசகனிடம் ஏற்படுத்தும் விளைவு.

சரி வேறு என்ன விளைவுகள் உள்ளன? அவரை அரைகுறை என்று விமர்சனம் செய்யும் போது அவரது அரைகுறை புலமை வாசகனிடம் கொண்டு செல்லும் தவறான வரலாற்று, அறிவியல் விசயங்களை முன்னிட்டே அவ்வாறு விமர்சிக்கிறோம். ஏனேனில் வெகு சன பத்திரிக்கைகள் இவர் சொல்லும் அரைகுறைகளுக்கு வலுவான மறுப்புகள் அதே வெகு சன பத்திரிக்கைகளில் பிரசூரமாவதில்லை. இவரது அரைகுறை அறிவின் விளைவுக்கு ஒரு எடுத்துக்காட்டு சமீபத்தில் மரபணு ஆராய்ச்சி என்பது ஆரியர்கள் என்ற கருத்தாக்கத்தை இல்லையென்றாக்கிவிட்டது என்று ஆனந்த விகடனில் எழுதிய புரளி ஆகும்.

உண்மை என்னவெனில் ஆரியர் என்ற இனக் குழு இந்தியாவிற்குள் வந்ததில் வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு எல்லாம் ஆரியருக்கு முன்பு
இங்கிருந்த நாகரிகம் திராவிட நாகரிகமா என்பதிலும், அந்த நாகரிகத்தை
ஆரியர்கள் அழித்தனரா அல்லது அந்த நாகரிகத்துடன் கலந்து ஒன்றாகினரா
என்பதிலுமே கருத்து வேறுபாடு. அதாவது அவர்களின் கருத்து வேறுபாடு
எல்லாம் திராவிடம் குறித்த விசயங்களில்தானேயொழிய ஆரியர் குறித்த
விசயத்தில் அல்ல.

அப்படியிருக்கையில் பொதுவாக மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த விசயங்களை வெளிக் கொணர செய்யப்பட்ட ஆய்வுகளை இது போன்றவர்கள் தமது சொந்த அரசியல் தேவைக்காக திரித்து பயன்படுத்தும் பொழுதுதான் இந்த வாசக- எழுத்தாளன் உறவின் அபாயம் மிக பெரிதாக உருவெடுக்கீறது.

இது போல அறிவியலை திரித்து வரலாற்றை சிதைத்து அரசியல் செய்யும்
அமைப்புகள் எதுவென்று பார்த்தால் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளும்,
அதன் ஆதரவாளர்களுமே இதனை செய்கின்றனர். அப்படியென்றால் சுஜாதா ஒரு இந்துத்துவ ஆதராவாளரா என்று கேள்வி எழுப்பினால் பதில் ஆம் என்றே கிடைக்கிறது. அது மட்டுமல்ல அவரது இந்துத்துவா ஆதரவிற்கு பின்னணியில் அவரது சொந்த சாதி பெருமை நிற்பதும் சாதாரண வாசகனால் சீரணிக்க இயலாத பேருண்மையாக நிற்க்கிறது.

இவர் பார்ப்பன சாதி சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பார்ப்பனர்கள் தமது
உரிமைக்காக போராட வேண்டும் என்று ஆனந்த விகடன் பத்திரிக்கையிலேயே வெளிப்படையாக தனது சாதி வெறியை எழுதினார். பார்ப்பனர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு நாம் சாதிரீதியாக அணி திரள வேண்டும் என்று சாதி சங்க தலைவனைப் போல பேசினார் இந்த எழுத்தாளர். இவர்தான் தமிழகத்து நடுத்தர வர்க்க வாசகர்களுக்கு ஆதர்சமான எழுத்தாளர்.

இவரது சாதி வெறி இன்னும் வக்கிரமாக வெளிப்பட்டது அயோத்தி மடம் என்ற பெயரில் பார்ப்பன சாதியினர் தமிழகத்தில் மிகக் கோடுரமாக ஒடுக்கப்படுவதாக எழுதிய கதை. இந்த கதையை போஸ்டமார்ட்டம் செய்து அதில் உள்ள இவரது சாதி கொழுப்பெடுத்த புரளிகளை அம்பலப்படுத்தி பலரும் விமர்சித்தனர். அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வெகு சன பத்திரிக்கையில் வரவில்லை.

இதுதான் சுஜாதா - தனது சொந்த வியாபாரத் தேவைக்காக பொது மக்களின்
பலஹீனங்களை ஹைடெக்காக எழுதி சுரண்டுவதுடன் அல்லாமல், தனது சொந்த அரசியலுக்காக பொய்களையும், புரளிகளையும் கூட கடை பரப்புகிறவாராக இருக்கிறார்.

இவரது ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன், நிறவெறியும், சாதி வெறியும்
சேர்ந்தால் என்னவாக வெளிப்படும்?

சொந்த சாதிவெறிக் கொழுப்பெடுத்த சுஜாதா தனது இனவெறியை 'சிவாஜி'
படத்தில் சாலமன் பாப்பையா எனும் பட்டிமன்ற வியாபாரி மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். கன்னங்கரேல் எனும் நிறம் பூசிய தனது இரண்டு பெண்களிடமும் ரஜினியை 'பழகிப்பாருங்கள்' எனச் சொல்லும் தந்தையாக வருகிறார் சாலமன் பாப்பையா. இப்பெண்களின் கறுப்பைக் கண்டு ஓடிவிடுகிறார் ரஜினி. தமிழர்களின் இயல்பான நிறமான கறுப்பை நிற ரீதியில் இழிவுபடுத்தி இருக்கும் சுஜாதா இப்பெண்களுக்கு வைத்திருக்கும் பெயரோ அங்கவை, சங்கவை. பாரியின் மகளிர் பெயரைச் சூடிய இவரின் புத்திக்குள் இருப்பது என்ன? தமிழைப் பழி தீர்க்கும் புத்திதானே!

தமிழுக்கும், பெண் குலத்துக்கும் இவ்வாறு இலக்கியத் தொண்டு செய்து
கொண்டிருக்கும் - இரண்டு முறை இதய வலிப்புக்கு ஆட்பட்டிருக்கும் சுஜாதா எனும் எழுத்தாளரை எல்லாரும் பாராட்டி விட வேண்டும் எனும் ஆர்வத்தில்
நாம் உள்ளோம்.

செருப்போ விளக்குமாறோ ... அன்பர்களே அது உங்கள் சாய்ஸ்...

பாராட்டத் திரள வேண்டிய முகவரி:

சுஜாதா என்ற ரங்கராஜன்,
#10 ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை,
2, முதல் தளம், மயிலாப்பூர்,
சென்னை - 4



மின்னஞ்சலில் திட்டுவோர்கள் வசதிக்காக:

writersujatha@hotmail.com

பாராட்ட இயலாதவர்கள் என்ன செய்யலாம்?

இந்த எலக்கிய யாவாரியின் பெருமையை தமிழ் நாடெங்கும் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு கவிப்பேரரசருக்கு தங்கள் பாராட்டை அனுப்பலாம்.

கவிப்பேரரசர் பெயர்: மனுஷ்யபுத்திரன்

முகவரி: uyirmmai@gmail.com

உயிர்மை,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்
சென்னை 18
Phone(044) 2499 3448
Mobile: (0) 98402 71561

கட்டுரைக்கான கரு பின்னூட்டத்தில் புல்டோசர்



எதிர்வினைகளுக்கு ஒரு நல்ல எதிர்வினை:
சுஜாதாவிற்கு செருப்படி தேவையா? http/paalveli.blogspot.com/2007/07/blog-post_22.html

Related Posts with Thumbnails