TerrorisminFocus

Tuesday, December 05, 2006

அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!

லேஆப்ஃ(Lay Off), லேஆப்ஃ குறித்த பயம், சந்தையின் உத்திரவாதமின்மை மற்றும் பங்கு சந்தை சரிவு குறித்த பயம், தாரளமாக சகட்டு மேனிக்கு முதலீடு செய்தல், வார இறுதி நாட்களில் தலையை அடகு வைத்தாவது இன்பம் நுகர எத்தணிப்பது, வீட்டுக்கள் ஒருவர் வேலை முடித்து வரும் பொழுது இன்னொருவர் வேலைக்கு கிளம்பும் ஒரு விதமான உறவு முறை இயல்பாக மாறிப் போனது, நுகர்வு வெறி, தனக்கு முடியாத அளவுக்கும் அதிகமாக விசயங்களை இழுத்துப் போட்டுக் கொள்வது, தன்னையே சந்தேகப்படுவதும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை சந்தேகப்படுவதும் - இவையெல்லாம் உலகமயம் இந்தியாவுக்கு கொடுத்த பரிசுகள் என்று நாங்கள் சொல்லவில்லை. சத்யம் நிறுவனத்தின் இணை நிறுவனர் G.B. பிரபாத் சொல்கிறார்.

இந்த விசயங்கள் எல்லாம் சேர்ந்து உலகமய பொருளாதார அமைப்பில் பின்னி பிணைந்துள்ள அனைத்து வர்க்கங்களையும், அனோமிய் என்ற மனோநோய்க்கு இட்டுச் செல்கிறது. இந்த அனோமிய் பின்புலமாக கொண்டு ஏகாதிபத்திய சமூக அமைப்பை கலாச்சார, பண்பாட்டு தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாத்.

அதாகப்பட்டது, உலகமய பொருளாதாரத்தின் உடன் விளைவாக அது சார்ந்த உற்பத்தி உறவுகளில் ஈடுபட்டுள்ள மனிதர்களுக்கு வரும் மனோவியாதியை அடிப்படையாகக் கொண்டு சத்யம் கம்யுட்டரின் இணை நிறுவனர்(Co Founder) G.B. பிரபாத் ஒரு நாவல் எழுதியுள்ளார். அது குறித்து இந்து பத்திர்க்கையின் மெட்ரோப்ளஸ் அவரை அணுகி ஒரு சிறிய உரையாடல் ஒன்றை நடத்துகிறது. அந்த அனுபவம் ஒரு சிறு கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உலகமயத்தின் பலன்களை அனுபவித்தவர்களில் ஒருவரான அவர், உலகமயம் சார்ந்த சுரண்டல் பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்தியாவின் முகத்தை மாற்றியவர்களில் முக்கியமானவரான அவர், அதன் பின் விளைவுகள் அவருடன் உற்பத்தி ரீதியாக நெருங்கிய தொடர்புள்ள வர்க்கத்தினரையே(IT employee etc) பாதிப்பதை உணர்கிறார். ஆக, அந்த அம்சத்தில் உலகமயத்தின் மோசமான பக்கங்களை அம்பலப்படுத்துகிறார். உலகமய ஏகாதிபத்திய பொருளாதாரத்தை அவர் படு மோசமான அளவு விமர்சிப்பதாக மெட்ரோ ப்ளஸ் சொல்லுகிறது.

தரகு வர்க்க பிரபாத் சொல்கிறார்: "நான் பங்களித்து உருவாக்கிய ஒரு உலகம் எனது மனதை கவர்தாக இல்லை". "சில நேரங்களில் நம் நோக்கத்திற்க்கு மாறான விசயங்களை உருவாக்கி விடுகிறோம்".

யுப்பி கலாச்சாரமும், தனி மனித நுகர்வு வெறியும், ஒட்டு மொத்த சமூகத்தின் உயர் பண்புகள் அதலபாதளத்தில் புதைக்கப்பட்டும் உள்ள சூழலில் (இது பொதுவாக புரட்சிகர சூழலுக்கு முந்தைய சூழல்தான்) இது போன்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதில் அவரது தொழில் துறையின் பங்களிப்பை மதிப்பிட்டு கூறியவைதான் மேலெயுள்ள அவரது வரிகள்.

வேலைவாய்ப்பு, ஐந்திலக்க சம்பளம், சராசரியை விட சிறிது(சிறிது மட்டுமே) சுகமான(சுகாதாரமான அல்ல) வாழ்க்கை இவற்றை காரணம் காட்டி உலகமயத்திற்க்கு ஆதரவாகவும், தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குரல்களுக்கு எதிராகவும் கோசமிடும் IT தொழிலாளர்களை இங்கு விவாதம் செய்ய அழைக்கிறேன். உங்களது துறையைச் சேர்ந்த முன்னணி வீரர் ஒருவர் வாயிலிருந்துதான் நாங்கள் சுட்டிக் காட்டும் அதே பிரச்சனைகள் பற்றிய அங்க்லாய்ப்பு வந்துள்ளது.

நாங்க சொன்னாக்க நம்ப மாட்டீங்க. இவர் சொல்றாரே என்ன சொல்லப் போறீங்க....?

'அமெரிக்காவின் மிகபரவலான நோய் - தனிமை' இது இந்தியாவில் இப்பொழுது பரவி வருகிறது என்கிறார் இவர். மேலும், 'இங்கு தனிமையில் இருப்பவர்கள் பெரும்பான்மையாகவும், பிறர் அவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டும் உள்ளன்ர். இந்த புதிய சூழலுக்கு சரியான பெயர் வைக்க விரும்புகிறேன்' என்கிறார். தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் யாரேனும் இந்த பெயர் வைப்பு வைபவத்திலும் அவருக்கு உதவலாம்.

பொருள் நுகர்வு நாட்டம், கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாளித்துவம், தொழில்நுட்ப சாதனங்களைச் சார்ந்த ஒரு வாழ்க்கை இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கும் ஒரு நிச்சயமற்ற சமுதாயம் குறித்த நிலையை சித்த்ரிக்கிறது அந்த நாவல். ஆயினும் இன்றைய இந்தியாவின் இளைய சமுதாயம் அப்படிப்பட்ட ஒரு சமூக வாழ்வை அடைவதைத்தான் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

"ஆனால் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அப்படி ஒரு நிலை இருப்பதை நாம் உணர்வதில்லை அல்லது அதிலிருந்து ஓடி ஒளிய விரும்புகிறோம். முரன்நகையாக, தகவல் தொடர்பின் உச்சத்தில் உள்ள ஒரு உலகத்தில், தனிமையும், அதீத அச்சமும், மனச் சஞ்சலுமும்தான் அதிகப்படியாக உணரப்படுகிறது. எந்த ஒரு உறவும் உத்திரவாதப்படுவதாக இல்லை." இப்படி சொல்வது நாம் அல்ல. ஏகாதிபத்தியத்தின் குலக் கொழுந்து திருவாளர் பிரபாத், சத்யம் இணை-நிறுவனர் கூறுகிறார்.

"அதிகப்படியான தனிமனித வாதம் நிலவுகிறது, முற்றுமுதலாக நாம் தனி மனித மோக வயப்பட்டுள்ளோம், நாம் இணையத்தின் மூலமாக ஒரே ஒரு நபரிடம் மட்டுமே தொடர்பு கொள்கிறோம் அது நாம்தான்' - இப்படி ஏகாதிபத்திய தனிமனித வாதத்தின் அவலத்தை அம்பலப்படுத்துகிறார் பிரபாத்.

"எனது தாத்தாவோ அல்லது உங்களது தாத்தாவோ தனது வேலையை இழந்து விடுவது குறித்தோ அல்லது தனது மனைவி தன்னைவிட்டு விலகிவிடுவது குறித்தோ கவலைப்பட்டதுண்டா?" இப்படி கேட்ப்பது நாமல்ல. இது போன்ற நிலையிலுள்ள வர்க்கத்தை சுரண்டி, கொழுத்த லாபம் சேர்க்கும் தரகு வர்க்க முதலாளி பிரபாத் கேட்க்கிறார்.

சொல்லுங்கள் IT தொழிலாளர்களே என்ன பதில் சொல்லலாம் என்று? பிரபாத் உங்களுக்கு உலகமயத்தின் நன்மைகள் பற்றி தெரியாது என்று அறீவுரை பகர்வோமா? தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு சாலவும் சிறந்த் ஒரு எதிர்காலம் ஒளிமயமாக காத்திருக்கிறது, உங்களது பயம் ஒரு துர் கனவு என்று ஆலோசனை சொல்லுவோமா? வேலை வாய்ப்பு குறித்து RBIயும் சொல்கிறது, உலகமயத்தின் சாரதிகளில் ஒருவரும் சொல்கிறார் இன்னுமா மயக்கம்?

அவர் தொழில்நுட்பம் முதலாளித்துவ/ஏகாதிபத்தியத்தின் கையில் மாட்டிக் கொண்டு படும் பாடு குறித்தும் குத்திக் காட்டுகிறார், "தொழில்நுட்பத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலும் அதை வைத்து என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும் தான் விசயம் உள்ளது. தொழில்நுட்பம் என்பதை பொருத்தளவில் தன்னளவில் எந்த ஒரு நல்லது கெட்டதுகளை கொண்டிருப்பதில்லை."

முதலாளித்துவத்தின் இழி நிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகிறார். "முதாலாளித்துவத்தால் செலுத்தப்படும் தொழில் நுட்பம் குறித்து யாரேனும் எச்சரிக்கை செய்து கொண்டிருக்க வேண்டும்". "முதலாளித்துவம் நமது உள்ளுணர்வுகளை கட்டவிழ்த்து விடுகிறது, நாமோ நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நம்க்கு தீங்கு விளைவிக்கும் என்றூ பார்க்கிறொம்'. இதே விசயத்தைத்தான் இயற்கையுடன் முரன்படும் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் இரு கட்டுரையாக இங்கு பிரசுரிக்கப்பட்டது.

பிரபாத்தின் இந்த கட்டுரை கூட தனிமனித வாதத்தின் அடிப்படையில்தான் பிரச்சனையை அணுகுகிறது. அது எந்த அம்சத்திலும் உலகமய பொருளாதாரத்தில் ஆதாயமடையும் துறைகளில் ஏற்ப்படும் விளைவுகளை சித்தரிப்பதைத் தாண்டி, இதே பொருளாதாரம் இந்தியாவின் இதர பெரும்பான்மை மக்களின் வாழ்வை சுனாமியாக சூறையாடி இருப்பது குறித்து எதுவும் சொல்லுவதாக தெரியவில்லை.

நாம் எதை இழந்து எதை பெறுகிறீர்கள்? கணிணியுடன் இணைந்து அதன் ஒரு உறுப்பாக மாறி சொந்த வாழ்க்கையை இழப்பதுடன், சமூக வாழ்க்கையையும் இழந்து திக்கற்ற நிற்கிறோம். எந்த ஒரு தொழிலில் ஈடுபடுபவனுக்கும், அந்த தொழிலில் ஈடுபடும் உடல் உறுப்பு(கை, கால், விரல் etc) செய்யும் வேலைக்கேற்ற பாதிப்பை அடையும். அப்படியெனில் கணிணியின் ஒரு அங்கமாக மாறிப் போன நமது மூளைக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்ப்படுகிறது?
பெங்களூரில் போன வருடம் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும் சதவீதத்தனிர் IT துறையினர் என்ற விசய்ம் நமக்கு எதை உணர்த்துகிறது? மனோ தத்துவ நிபுனர்களை அணுகுபவர்களில் அதிகம் பேர் IT துறையினர் என்ற் தகவல் எதைக் காட்டுகிறது? நமது மன அழுத்தத்தை குறைக்க நம்மை சுரண்டிக் கொழுக்கும் தரகு வர்க்க முதலாளிகள் அரங்கேற்றும் கேளிக்கைகள் எதைக் காட்டுகிறது?

குறைந்த கூலி என்ற அம்சமும், இந்திய பணத்தின் மதிப்பு டாலருக்கு நிகராக குறைவாக இருப்பது இந்த அம்சங்கள் உண்மையாக இருக்கும் காலம் மட்டுமே நமது வேலை உத்திரவாதப்படுத்துகிறது. நமது மென்பொருள் தயாரிக்கும் திறமையல்ல மாறாக அவனுக்கு லாபம் தயாரித்துக் கொடுக்கும் திறமை-அதாவது குறைந்த கூலி- இதுதான் மதிக்கப்படுகிறது. இது தவிர்த்து உலக பொருளாதார சூழல், நம்மைவிட குறை கூலி உழைப்பை வழங்க தயாராயிருக்கும் வேறு நாடுகள், உள்நாட்டிலேயே வெளி நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வழி வகுக்கும் SEZ. இப்படி கண் முன்னே நமது உரிமைகளை குழி பறிக்க தேவையான விசயங்கள் நடக்கும் போது கூட சுகநாட்ட வாதத்தில் மூழ்கி திளைத்து நிதர்சனத்தை உள்வாங்கும் திறன் இழந்து நிற்கிறோமே என்ன செய்யலாம்?

வார இறுதி நாட்களிலும் வேலை, IBM-ன் யுட்டலிசேசன் டார்கெட்(90% மேல் ஒவ்வொரு நபரும் billable ஆக இருக்க முயற்சி செய்ய வேண்டும்), விப்ரோவின் மாணவ தொழிலாளர்கள், இப்படி நமது உழைப்பை சுரண்டி கோடிகளில் குளீர் காயுபவர்கள், கம்பேனியின் ஒரு துறையில் லாபம் இல்லையென்றவுடன் சம்பளத்தை குறைப்பதும் நடக்கிறது. கம்பேனி ஒட்டு மொத்தமாக லாபம் எடுக்கும் போதே இவ்வாறு எனில் இந்திய தொழிலாளர்கள் இனிமேலும் அவர்களின் டார்லிங்குகள் கிடையாது என்ற நிலை வரும் பொழுது என்ன செய்வார்கள்? இது தவிர்த்து பல்வேறு உடல் உபாதைகள் வேறு.

நம்மை விட அதிக உரிமைகளை சட்ட ரீதியாக பெற்றுள்ள அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட இந்த கம்பேனிகளின் அநியாயங்களை எதிர்த்து போரிடுவதற்க்கு சங்கமாக திரண்டுள்ளனர். அதுவும் அமெரிக்க கார்ப்போரேட் வரலாற்றில் முதல் முறையாக IBM IT (Alliance@IBM) தொழிலாளர்கள் சங்கமாக திரண்டு பென்சன் பணத்தில் அவன் கைவைப்பதை எதிர்த்து போராடி வெற்றி பெற்றுள்ளனர். உரிமைகள் உத்திரவாதமான அவர்களுக்கே சங்கம் தேவைப்படுகிறது, நமக்கு?

IT தொழிலாளிக்கு எதிராக எப்படியெல்லாம் ஆப்பு வைப்பது, சுரண்டலை அதிகப்படுத்தி எப்படியெல்லாம் லாபத்தை அதிகப்படுத்துவது என்பது குறித்து கலந்து பேசி ஒரு பொது முடிவுக்கு வருவதற்க்கு IT முதலாளி சங்கமாக திரள்கிறான்(NASCOM, CII). National Skills Registry என்ற பெயரில் நமக்கு அடையாள எண் கொடுத்து மையப்படுத்தப்பட்ட ஒரு தகவல் கிடங்கை ஏற்படுத்தியுள்ளான். தேவைப்பட்டால் இந்தியாவின் எந்த ஒரு IT தொழிலாளி மீதும் கரும் புள்ளி குத்தி இந்தியாவில் அவனுக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்க விடாமல் செய்யலாம். ஆக, எதிர்காலத்தில் IT தொழிலாளி மீது அவனுக்கு ஆதிக்கம் தேவைப்படும் என்பதை உணர்ந்து இப்பொழ்து தயாராகிறான் அவன். நாமோ பலி ஆடுக்கு நல்லா தீவனம் கிடைக்கிறது என்று தேமேவென்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எதை இழந்து எதை பெறுகிறோம்? நமது பெற்றோர்கள் அரசு நிறுவனங்களில் வேலை பார்த்து ரிடையர் ஆகி வெளி வரும் பொழுது பெண்ணின் திருமணம், பையனின் படிப்பு, அது போக குறிப்பிடத் தகுந்த பென்சன், கையில் ஒரு பெரிய தொகை, இவை தவிர்த்து வீடு வாசல் அமைதியான வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் என்று இருந்தார்கள். நமது நிலைமை?

இந்த அம்சங்களையேல்லாம் விளக்கி ஒரு கட்டுரை ஆறேழு மாதங்களுக்கு முன்பு வந்து மிகப் பரவலாக அனைவராலும் மெயிலில் அனுப்பட்டது.

இதை விடுங்கள் ஒரு சமூகமே சீரழிந்து கொண்டிருக்கும் பொழுது, நாம் மட்டும் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட முடியுமா? கார்போரேட் லெசன் என்ற பெயரில் சிறு கதைகள் அடங்கிய ஒரு இமேயிலை பெரும்பாலனவர்கள் படித்திருப்பீர்க்ள். அதில் குழுவில் ஒருவருக்கு பிரச்சனை வரும் பொழுது நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நமக்கும் ஆபத்து வரும் பொழுது பேரிடராக இருக்கும் என்பதை வலியுறுத்தி ஒரு கதை வரும். இந்த சமூகம் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வோரு மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்ய உற்பத்தி செய்கிறது. இதில் சமூகத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதி துன்பத்தில் துவளும் பொழுது நாம் மட்டும் எப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட முடியும்?

என்ன செய்யலாம்? க்ளையண்டின் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வு சொன்ன நேரம் போக நமது பிரச்சனைகளையும் ஆய்வு செய்து தீர்வு குறித்து யோசிக்கலாம். After all, மற்ற யாரையும் விட சிந்திக்கும் திறமையிலும், அதற்க்கு தேவையான தகவலகளின் அருகாமையிலும் நாம் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறோம். பிரச்சனை நம்மை பற்றி சிந்திக்க நமக்குக் கிடைக்கும் சொற்ப நேரம்தான்......

என்ன செய்யலாம்?.....

அசுரன்***********

அனோமிய் நோய் குறித்து:

ஒவ்வொரு சமூகமும், மனிதனும் தான் ஈடுபட்டுள்ள உற்பத்தியின் தன்மையைப் பொறுத்த அறிவு, மனவள முதிர்ச்சி அடைகிறான். இதுதான் சமூக பரிணாமத்துவம் குறித்த மார்க்ஸிய பொருள்முதல்வாதப் பார்வை. ஆக, ஏகாதிபத்திய சமூகத்தில் ஒரு பக்கம் நுகர்வு வெறி மூலமாகவும், இன்னொரு பக்கம் அதிகப்படியான சுரண்டல் மூலமாகவும்(12 மணீ நேரம் வேலை) சமூகத்துடனான தொடர்பை இழக்கிறான் மனிதன். அதே நேரத்தில் நுகர்வு வெறியை நியாயப்படுத்தவும், சமுகமாக தன்னை உணர்ந்து கூட்டுச் சேர்வதற்க்கான அடிப்படைகளை அடித்து நொறுக்கவும் தேவையான பல்வேறு பொதுக் கருத்துக்களை அவனது ஊடக பலத்தின் மூலம் உறுதிப் படுத்துகிறான். அப்படி ஒன்றுதான் தனிமனித வாதம். இதன் காரணமாக முந்தைய சமூகத்தின் மதிப்புவாயந்த பண்புகள் இன்று இழிச்சவாயத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பார்க்கப்படுகிறது. விளைவு, இந்த சூழலிலான உற்பத்தியில் ஈடுபடும் ஒரு மனிதன் தனது பழைய உயர் மதிப்புகளை இழக்கிறான். இவை தவிர்த்து இந்த சூழல் உருவாக்கும் கலாச்சார பிரச்சனைகளும், தொழில் ரீதியான பிரச்சனைகளும், உடல், மன உபாதைகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு மனோ வியாதிதான் - அனொமிய்.

"Alienation and purposelessness experienced by a person or a class as a result of a lack of standards, values, or ideals" - Anomie(அனொமிய்)

"தரம் தாழ்ந்த நிலை, உயர் பண்புகளை இழத்தல் இவற்றின் விளைவாக ஏற்ப்படும் அந்நியப்படுதலும், எந்த ஒரு குறிப்பிட்ட லட்சியமோ/நோக்கமோ அற்ற வாழ்க்கையும் ஏற்ப்படுத்தும் மனவியல் பிரச்சனை" - அனோமிய் எனப்ப்டுகிறது.

Must Read articles:

IBM IT union
software_job_india
workers-of-cyber-world-uniteatleast

corporate-lesson-secret-of-dreaming
it-survivors-staying-alive-in-software
are-we-living-at-mercy-of-their-profit
still-sleaping-jobs-started-flying
இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1
அழிவில் லாபமும், லாபத்தால் அழிவும் - பாகம் II
கணிணி தொழில்நுட்ப வல்லுனர்களே !

இது குறித்து கருத்துக்களை ஆலோசனைகளை எனக்கு தனிமடலிலும் அனுப்பலாம்:

asuran07@gmail.com

91 பின்னூட்டங்கள்:

said...

அருமையாக எழுதி இருக்கீங்க அசுரன், பயனுள்ள தகவல்கள்...!!!!

said...

anomie is linked to alienation. Marx discussed alienation in EPM.
The alienation is a capitalist society has been studied by many others including existential philosophers and psychologists.
Alienation may not be there in the
socialist utopia.But in the so ocalled socialist societies also
anomie and alienation is found.
The humanistic marxism address this issue seriously and talks
about solutions.
Your PK and PJ type of marxism
rejects the humanistic marxism
and ridicules Fromm and others
who have pointed out the relevance of the writings of 'early' marx and existentialism for marxism.
It celebarates the stalinist vision of society and dictatorship in name of proletarian dictatorship.

said...

அசுரன்,

கட்டுரையின் எந்த பகுதியை குறிப்பிட்டு சொல்வது என்றே தெரியவில்லை... மொத்தத்தில் சுர்ரென்று உறைக்கும் வார்த்தைகள்.

//சொல்லுங்கள் IT தொழிலாளர்களே என்ன பதில் சொல்லலாம் என்று?//

"IT கூலிகளே" என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

கடந்த இரண்டு வருடங்களாக என் நன்பர்கள் வட்டத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இது போன்று குறைந்த கூலிக்கு பிள்ளை பிடிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வேலைகளை shift செய்தார்கள்(IBM, HP, CSC, EDS, Accenture), இன்று அவர்களை சந்திக்கும் போது ஒவ்வொருவனும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளை சொல்கிறார்கள்.. வாழ்க்கைத் தரம் என்னவோ அப்படியே தான் உள்ளது. நுகர்வு வெறியில் கையில் வாங்கும் காசெல்லாம் 'தண்ணீராய்', புகையாய் கரைகிறது. தங்கியது என்னவோ பழைய வாழ்க்கையை நினைத்து ஏக்கம் தான்.

//இந்திய தொழிலாளர்கள் இனிமேலும் அவர்களின் டார்லிங்குகள் கிடையாது என்ற நிலை வரும் பொழுது என்ன செய்வார்கள்?//

:-(

said...

இந்த அருமையான பதிவிற்கு என்னுடைய பின்னூட்டக் காவாளித்தனம் - 1

எங்கய்யா அந்த பாலவைக் கானோம்?

said...

மிக மிக நேர்த்தியான பதிவு.

//பெங்களூரில் போன வருடம் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும் சதவீதத்தனிர் IT துறையினர் என்ற விசய்ம் நமக்கு எதை உணர்த்துகிறது? மனோ தத்துவ நிபுனர்களை அணுகுபவர்களில் அதிகம் பேர் IT துறையினர் என்ற் தகவல் எதைக் காட்டுகிறது? நமது மன அழுத்தத்தை குறைக்க நம்மை சுரண்டிக் கொழுக்கும் தரகு வர்க்க முதலாளிகள் அரங்கேற்றும் கேளிக்கைகள் எதைக் காட்டுகிறது? //

அந்த கேளிக்கையின் பயனாகத்தான், சாலையோர உழைக்கும் மக்களை கார் ஏற்றி நசுக்கிக் கொல்கிறார்களே!!

//'அமெரிக்காவின் மிகபரவலான நோய் - தனிமை' இது இந்தியாவில் இப்பொழுது பரவி வருகிறது என்கிறார் இவர். மேலும், 'இங்கு தனிமையில் இருப்பவர்கள் பெரும்பான்மையாகவும், பிறர் அவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டும் உள்ளன்ர். இந்த புதிய சூழலுக்கு சரியான பெயர் வைக்க விரும்புகிறேன்' என்கிறார்.//

//"எனது தாத்தாவோ அல்லது உங்களது தாத்தாவோ தனது வேலையை இழந்து விடுவது குறித்தோ அல்லது தனது மனைவி தன்னைவிட்டு விலகிவிடுவது குறித்தோ கவலைப்பட்டதுண்டா?" இப்படி கேட்ப்பது நாமல்ல. இது போன்ற நிலையிலுள்ள வர்க்கத்தை சுரண்டி, கொழுத்த லாபம் சேர்க்கும் தரகு வர்க்க முதலாளி பிரபாத் கேட்க்கிறார். //

நீங்கள் முன் வைத்திருக்கும் கேள்விகள் எதிர்கொள்ள பயங்கரமானது. இதைத் தவிர்க்கத்தான் இப்போதெல்லாம் இந்த நிறுவனங்களே "Dating Allowance" தருகிறார்கள்.

//கம்பேனி ஒட்டு மொத்தமாக லாபம் எடுக்கும் போதே இவ்வாறு எனில் இந்திய தொழிலாளர்கள் இனிமேலும் அவர்களின் டார்லிங்குகள் கிடையாது என்ற நிலை வரும் பொழுது என்ன செய்வார்கள்? இது தவிர்த்து பல்வேறு உடல் உபாதைகள் வேறு. //

இருக்கவே இருக்கிறது யோகா, தியானம், கார்ப்பரேட் சாமியார்கள் பக்காவாக வகுப்பு எடுக்கிறார்கள். உட்கார்ந்து நாலு மூச்சு இழுத்துவிட்டால் போயிற்று. நோயாவது ஒண்ணாவது!!

said...

அசுரன்,
சிறப்பானதொரு பதிவு. இது குறித்து நானே ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். ஒரு சாதாரண IT தொழிலாளியாக இருந்து உலகமாயமாக்கலுக்கு எதிராக நான் ஒன்றும் செய்வதற்கில்லை. இருப்பினும், அதனால் நான் நன்மை மற்றும் தீமை, இரண்டையும் அனுபவித்தும், பார்த்தும் இருக்கிரேன். இங்கே(IT துறையில்) client-கிற்கு இருக்கும் மரியாதையும், மதிப்பும் அவனுக்காக உழைக்கும் தொழிலாளிக்கு இல்லை.

onsite என்ற வாய்ப்பு பெற என் சக தொழிலாளி படும் (அறிவற்ற)அவஸ்தை கண்டு அவனுக்குகாக நான் வருத்தப்பட்டிருக்கிரேன். தன்னையும், தன் குடும்பத்துடனான சந்தோஷத்தை இழந்தேனும் பணம் ஈட்ட அவன் கொள்ளும் முயற்சி, அந்தோ பரிதாபம். தாய் இறந்தாலும் client அனுமதித்தால் தான் அவள் சடலத்தையேனும் பார்க்க முடியும்.

அவன் வேலை செய்யும் company-யே அவன் மேல் அக்கறை கொள்வதில்லை. அவன் 24 மணி நேரம் வானத்திலேயே பறக்க வேண்டும் என்றபோதும், அவனுக்கு வசதியில்லா economic class தான். தொழிலாளர் நலன் பேணபடுவதில்லை இங்கு.

இவனுக்கும் பணம் மட்டுமே குறி. சக மனிதனை பற்றி கவலையில்லை இவனுக்கு. சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்லில்(உண்மையோ பொய்யோ), ஒரு IT பணியாளர் தன் desk-ல் இறந்து கிடந்ததை, ஒரு வாரமாகியும் யாரும் கவனிக்கவேயில்லையாம்.

பிரச்சனை என்னவென்றால், நம் மக்கள் அமைதியானவர்கள், அவர்கள் போராடமாட்டார்கள். அதுவும், onsite, salary hike என்றால் பார்வைக்கு வேரு எதுவுமே தெரியாது.

At the end of the day, ஒரு IT தொழிலாளிக்கு கிடைப்பது கொஞ்சம் பணம், கொஞ்சம் மதிப்பு, நிறைய சிதைந்த உறவுகள், நிறைய முதுகு வலி.

ஒரு முறை என் நண்பனிடம் சொன்னேன், "இந்தியாவில் கம்யூனிசம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, ஆனால் அதன் இருப்பை சாத்தியபடுத்தும் காரணங்கள் நிச்சயம் உண்டு".

said...

//நாங்க சொன்னாக்க நம்ப மாட்டீங்க. இவர் சொல்றாரே என்ன சொல்லப் போறீங்க....?//

யார் சொன்னாலும் கேட்கும் மன நிலையில் யாரும் இல்லை.

புயலுக்குப்பின் வரும் அமைதியாக இது ஊத்திக் கொள்ளும் போதுதான் சொரணை வரும். எவ்வளவு சீக்கிரம் இந்தியாவை குத்தகைக்குவிடமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் புயலுக்குப்பின் அமைதி வரும்.

சிதம்பரம் &கோ குத்தகை வியாபாரத்தை நன்றாகவே நடத்துகிறார்.

said...

//ஒரு IT பணியாளர் தன் desk-ல் இறந்து கிடந்ததை, ஒரு வாரமாகியும் யாரும் கவனிக்கவேயில்லையாம்.//

IT என்று ஞாபகம் இல்லை . நியூயார்க்கில் ஒரு பத்திரிக்கை அலுவலகம் என்று நினக்கிறேன்.

said...

செந்தழல் ரவியின் வருகைக்கு நன்றி. இந்த பயனுள்ள தகவல்களை வைத்து என்ன செய்யலாம் என்று கருத்து தெரிவித்தால் நன்மையாகப் போகும். ஏனேனில் வலைப்பூ உலகில் வேலை வாய்ப்பு செய்திகள் வாசிக்கும் முன்னணி நபர் என்ற அளவில் இந்த கட்டுரை குறித்து உங்களது கருத்துக்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை...

என்ன செய்யலாம் செந்தழல் ரவி?

அசுரன்

said...

PJ, Pk குறித்து கருத்து தெரிவித்துள்ள அனானி இரவி சிரினிவாஸாக இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது... ஏனெனில் இது போல பேசும் வசதி படைத்தவர் எனது சிற்றறிவுக்கு எட்டியவரை அவர் மட்டுமே. மேலும் இங்கு சோசலிச சமூகம், ஸ்டாலின்ச சமூகம் சிறந்தது என்று வாதம் நடைபெறவில்லை. இது போல சம்பந்தமில்லாமால் சோசலிசத்தின் மீது தாக்குதல் தொடுப்பதும் இரவியின் சிறப்பு தகுதி. ஆகவேதான் இந்த சந்தேகம்.

பரவாயில்லை.... அனானி, இந்த கட்டுரை விவாதிக்கும் விசயம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே... அதாவது IT தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்து...

அசுரன்

said...

அமைப்பை கலாச்சார, பண்பாட்டு தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து "ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாத் .....

அந்த அனுபவம் ஒரு சிறு கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அசுரன், மேலே உள்ள இணைப்புகள் வேலை செய்யவில்லை.

said...

//"IT கூலிகளே" என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

கடந்த இரண்டு வருடங்களாக என் நன்பர்கள் வட்டத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இது போன்று குறைந்த கூலிக்கு பிள்ளை பிடிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வேலைகளை shift செய்தார்கள்(IBM, HP, CSC, EDS, Accenture), இன்று அவர்களை சந்திக்கும் போது ஒவ்வொருவனும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளை சொல்கிறார்கள்.. வாழ்க்கைத் தரம் என்னவோ அப்படியே தான் உள்ளது. நுகர்வு வெறியில் கையில் வாங்கும் காசெல்லாம் 'தண்ணீராய்', புகையாய் கரைகிறது. தங்கியது என்னவோ பழைய வாழ்க்கையை நினைத்து ஏக்கம் தான்.
//

Sevindian,

சரிதான், ஏகாதிபத்தியம் பணம் கொடுப்பது அதை நமது பெட்டிக்குள் வைத்து பூட்டிக் கொள்ளவா? அந்த பணத்தை சுற்றுக்கு விட்டு மீண்டும் தனது பெட்டிக்கு வரவைக்க தேவையான எல்லா பொருளாதார சூழலையும், கலாச்சார சூழலையும் உறுதிப்படுத்துகிறான்.

அதனால் கை நிறைய கழுதை விட்டை என்ற கதைதான்...

பின்னூட்ட காவாளித்தனம் செய்தமைக்கு மிக்க நன்றி.....

அசுரன்

said...

//அமைப்பை கலாச்சார, பண்பாட்டு தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து "ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாத் .....

அந்த அனுபவம் ஒரு சிறு கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அசுரன், மேலே உள்ள இணைப்புகள் வேலை செய்யவில்லை///

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கல்வெட்டு. சரி செய்கிறேன். அவை பிரபாத் குறித்து வரும் முதல் லிங்க்கில் உள்ள கட்டுரைக்கான இன்னொடு லிங்க். ஆயினும் உடனடியாக சரி செய்கிறேன்.

அசுரன்

said...

கல்வெட்டு,

சரி செய்யப்பட்டுவிட்டது. இப்பொழுது அந்த இணைப்புகள் வேலை செய்கின்றன. வேறு ஏதேனும் குறை இருந்தால் தெரியப்படுத்தவும்.(அய்யா... என்று இதுதான் சாக்கு என்று பாலா வருவார் என்று நினைக்கிறேன்.. :-)))

அசுரன்

said...

அசுரன்,
வேலை செய்கிறது.
நன்றி!

said...

////இந்திய தொழிலாளர்கள் இனிமேலும் அவர்களின் டார்லிங்குகள் கிடையாது என்ற நிலை வரும் பொழுது என்ன செய்வார்கள்?//

அதுவரையில் கோக், பீட்ஸா என்று கொண்டாடலாமே! ஏனய்யா கிலியூட்டுகின்றீர்கள்!

இந்தியச் சமூகம் படித்தவர்கள் நிறைந்த ஆரவார, போலிநாகரீகப் பிரிவினர் இப்படியெல்லாம் பட்டு அவதியுற்று பின்பு கிடைக்கும் அனுபவம் இனிமேல் கூலியாக இருக்கும் போது கூடுதல் வேலை காப்புரிமையையாவது எடுக்க வேண்டும் என அறிவுறுத்தும்!

இப்போது ஐடி கூலிகளுக்கு வேறு வழியில்லை. ஐடி பூம் பபிள் உடையும் போது யோசிப்பார்கள்.

நான் மத்திய கிழக்கின் ஆயில் பூம் காலியாகும் போது யோசிக்கலாம் என்று இருக்கிறேன்!

எந்த பபிள் முதலில் உடையும் என்று சொல்லுங்கள் புரோக்கன் பபிள் சூழலைச் சந்திக்கத் தயாராவதற்குத்தான்
:-)))

நாளைவரை வேலை கேரண்டி இருக்கு. இன்னிக்கு நைட் காலா பார்ட்டி கொண்டாட்டம்! ஏன் வீணா சாயந்திரமே யோசிக்க வேண்டும்! :-)))

said...

//என்ன செய்யலாம் செந்தழல் ரவி?//

அசுரன் அய்யா,

முதல்ல செந்தழல் அய்யாவோட தொழிலை நிறுத்த சொல்லலாம். நம்ம தரகு முதலாளித்துவ தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி engineering colleges எல்லாவற்றையும் மூடிடச் சொல்லி வற்புறுத்தலாம்.
இப்போ அங்கே படிக்கும் பசங்களுக்கு IT வேலையால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்து எடுத்து சொல்லி நம்ம இயக்கத்துலே புதிய கலாசாரம் கமிஷன் ஏஜென்
டா சேத்து விடலாம்.

இன்னும் ஒரு குழு நம்ம அசுரன் அய்யா தலைமையிலே அமெரிக்கா போய் அங்கு IBM HP MicroSoft etc etc
பெரிய கம்பெனிகளில் வேலை செய்யும் IT கூலிகளை வேலை செய்ய விடாமல் தடுத்து, அவர்கள் எப்படி எம் மக்களை இங்கு அடிமைப்படுத்தறாங்கன்னு எடுத்து சொல்லி அவங்க மனம் திருந்தி அங்கேயும் புதிய கலாசார ஏஜென்டுகளை அப்பாய்ன்ட் செய்யலாம்.
இன்னும் பெரிய யோசனையெல்லாம் எங்க அசுரன் அய்யா காட்டிய பாதையிலே நாங்க போய் கண்டுபிடிப்போம். எம் மக்களை கூலியாக்க முயற்சிக்கும் அமெரிக்க பார்ப்பனீயத்துக்கும்,அதற்கு விளக்கு பிடிக்கும் திராவிடீயத்துக்கும் செம்மையா ஆப்பு வைப்போம்.

பாலா

என்ன செவ்விந்தியரே,

திருப்தி தானே?
ஆமா, உங்களை அமெரிக்க வந்தேறிகள் துரத்தி விட்டாங்களா? அதான் செவ்விந்தியன்னு பேர் வச்சிகினீங்களா?

பாலா

said...

//நாம் எதை இழந்து எதை பெறுகிறீர்கள்?//

எனக்கு இரவு ஷிப்டுகளில் வேலை செய்த அநுபவம் கொஞ்சம் உள்ளது அசுரன். கண் எரிச்சலோடும், constipation தொல்லைகளுடனும், வெண்டிங் மிஷின் டீயும், லேய்சும்... கொடுக்கும் எக்ஸ்டிரா கொலஸ்டிரால் ஒரு பக்கம்..வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்துக் கூட பேச முடியாத எரிச்சலும், ஒரே சுவற்றுக்குள் வேறு வேறு உலகங்களாய் விலகி நிற்கும் உறவுகளும்... அதைக் கடந்து வந்த பின் இப்போது நினைத்தாலும் பெருமூச்சு வருகிறது. இதில் பெண்களின் நிலை இன்னும் கடினம். வாரக் கடைசியில் வரும் வீக் எண்ட் 'தண்ணி' பார்ட்டிகள் அடுத்த ஒரு வாரத்துக்கான charge.

மெக்காலேயின் திட்டம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது - IT கூலிகள் பிறப்பால் இந்தியர்கள். மற்றபடி அவனுக்கு சேவை செய்ய அவனுடைய திட்டப்படியான கல்வியைக் கற்று, அவன் கலாச்சாரத்தைக் கற்று, அவன் வாயில் வருமாறு புனைப்பெயர்கள் வைத்துக் கொண்டு(maggie, justine, மயிறு, மட்டை.,etc.,etc என்று) அவனுக்கான கூலித் தொழிலை கௌருவமான பெயரில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் மிக முக்கியமான ஒன்று - எந்த RMCயிலும் ( Remote Monitoring(or) Support Center ) BPOவிலும் முக்கியமான Core தொழில்நுட்பத்தை கையில் தர மாட்டார்கள். Engineering level என்று சொல்லக் கூடிய மையமான தொழில்நுட்பங்கள் இன்னும் அவன் கையில் தான் உள்ளது.ஒரு பக்கம் இது ஒருவகையான தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது. அவன் ஏதோ நமக்கெல்லாம் மேலானவனோ என்கிற தோற்றத்தைத் தருகிறது. அடுத்தபடியாக அவன் கூடாரத்தை கலைத்து விட்டு வேறு நாடுகளில் கூலிப் பட்டாளத்தை தேடிப் போய் விட்டால் இங்குள்ளவர்கள் நிலை கவலைக்கிடம் தான்.

Call Centre பற்றி சொல்லவே வேண்டாம் இப்போதே இலங்கையும் மற்ற கீழ் திசை நாடுகளளும் "எங்கள் மக்கள் நல்ல ஆங்கிலம் பேசுவார்கள்" என்று விளம்பரத்தில் இறங்கி விட்டனர்.

படு வேகமாய் வீங்கி வீங்கிப் பெருத்த பலூன் உடையும் நிலைக்கு வர ரொம்ப நாட்கள் ஆகாது என்று தான் தெரிகிறது.

//.(அய்யா... என்று இதுதான் சாக்கு என்று பாலா வருவார் என்று நினைக்கிறேன்.. :-)))//

:))))))) இப்போது தானே பன்னாடை ஆராய்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.. இனிமேல் இனைய தாம்பிராஸ் தலைவரும் செயலாளரும் சேர்ந்து இதே போல் நாட்டுக்கு முக்கியமான வேறு ஏதாவது ஒரு ஆராய்ச்சியில் இறங்கியிருப்பார்கள்..

said...

அசுரன்,

அங்க வெச்சு இங்க வெச்சு கடைசியில் IT யில் கையை வைத்து விட்டீர்கள் போல் உள்ளது.

வசந்த்

said...

இன்னும் முழுமையாக படிக்க இயலவில்லை. படித்துவிட்டு வருகிறேன்.

வசந்த்

said...

மற்றொன்று,

இப்போதெல்லாம் தங்கள் படிவுகளை தமிழ்மண புகப்பில் காண முடியவில்லை. ஒரு வேலை நான் சரியாக கவணிக்கவில்லையோ..

வசந்த்

said...

//அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!//

அண்ணே உங்களுக்கு எங்க மேலே இவ்வளவு பாசமா?..
கண்ணுல தண்ணிவருதுனே..

said...

HRD NOTICE OF A COMPANY IN AN SEZ TO ALL EMPLOYEES

[Though it seems to be a joke will come to effect in future]Dear STAFF ,
Please be advised that these are NEW rules and regulations
implemented to raise the efficiency of our firm.

1) TRANSPORTATION :
It is advised that you come to work driving a car according to your
salary.
a) If we see you driving a Honda, we assume you are doing well
financially and therefore you do not need a raise.
b) If you drive a 10 year old car or taking public transportation,
we assume you must have lots of savings therefore you do not need a
raise.
c) If you drive a Pickup, you are right where you need to be and
therefore you do not need a raise.

2) ANNUAL LEAVE :
Each employee will receive 52 Annual Leave days a year ( Wow! said 1
employee).
- They are called SUNDAYs.

3) LUNCH BREAK:
a) Skinny people get 30 minutes for lunch as they need to eat more
so that they can look healthy.
b) Normal size people get 15 minutes for lunch to get a balanced
meal to maintain their average figure.
c) Fat people get 5 minutes for lunch, because that's all the time
needed to drink a Slim Fast and take a diet pill.

4) SICK DAYS :
We will no longer accept a doctor Medical Cert as proof of sickness.
- If you are able to go to the doctor, you are able to come to work.

5) TOILET USE :
Entirely too much time is being spent in the toilets.
a) There is now a strict 3-minute time limit in the cubicles.
b) At the end of three minutes, an alarm will sound, the toilet
paper roll will retract, the door will open and a picture will be
taken.
c) After your second offence, your picture will be posted on the
company bulletin board under the "Chronic Offenders" category.
d) Subsequent pictures will be sold at public auctions to raise
money to pay your salary.

6) SURGERY :
As long as you are an employee here, you need all your organs.
- You should not consider removing anything. We hired you intact.
- To have something removed constitutes a breach of employment.

7) INTERNET USAGE :
All personal Internet usage will be recorded and charges will be
deducted from your bonus (if any) and if we decide not to give you
any, charges
will be deducted from your salary.
- Important Note: Charges applicable as Rs.20 per minute as
we have 4MB connection.

Just for information, 73% of staff will not be entitled to any
salary for next 3 months as their Internet charges have exceeded
their 3 months salary.

Thank you for your loyalty to our company. We are here to provide a
positive employment experience. Therefore, all questions, comments,
concerns, complaints, frustrations, irritations, aggravations,
insinuations, allegations, accusations, contemplation, consternation
and input should be directed elsewhere.

Best regards ,
HRD

said...

அசுரன்,
நல்ல பதிவு. நான் சொல்லவேண்டும் என்று நினைத்ததை எல்லாம் ஹரி(பூவாசம்) அவர்கள் ஏற்கனவே அற்புதமாகச் சொல்லிவிட்டார்.

தீர்வுகளாக நான் முன்வைப்பவை:
வெளிநாட்டினருக்கு வேலை செய்து தரும் வழக்கத்தைக் குறைத்துக் கொண்டு (மொத்தமாக ஒழிக்க முடியும் என்று தோன்றவில்லை..), நம் நாட்டிலேயே புதுப் புது ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கண்டுபிடிப்புகள் நடத்தலாம். அதன் மூலம், நம் நாட்டினருக்குத் தேவையான மென்பொருளை நாம் உருவாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக இரவு நேர வேலைகள், ஆன்சைட் அவலங்கள் குறைதல் என்று சரி செய்ய இயலும்.

ஆனால், தனிமனிதன் என்றவகையில் இது போன்ற செயல்பாட்டால் கிடைக்கும் சம்பளம் குறைந்து போகும் என்ற கவலை தான் முதலில் முன்நிற்கும் என்று தோன்றுகிறது.

அத்துடன், ஆராய்ச்சி என்று வரும்போது, நம் நாட்டில் பொதுவாகவே ஆராய்ச்சியாளர்கள் குறைவு. என்னுடன் படித்த மாணவர்களில் பலர் ஆராய்ச்சிப் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காகவே வெளிநாட்டுக்குப் போனார்கள்.

இங்கிருக்கும் ஊழல், சுரண்டல், ஆராய்ச்சி மாணவர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் என்று பட்டியலிடுகையில், இந்தியாவில் ஆராய்ச்சி என்பது கனவாகவே தோன்றுகிறது.

இந்த விசயத்தைப் பொறுத்தவரை, இன்றைக்கு முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்கள், தகவல் தொழிற்நுட்ப முதலாளிகள் முயன்று, ஆராய்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்யலாம்.

இன்னும், எங்கள் நிறுவனத்தில் இருப்பது போல் விருப்பமுள்ளவர்கள் சேர்ந்து வறுமையில் உள்ள மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, வேறு சில குழு நடவடிக்கைகள் ஈடுபடுவது என்று அந்தந்த நிறுவன ஊழியர்களைத் தனித்தீவாகி விடுவதிலிருந்து காப்பாற்றலாம்..

said...

//As long as you are an employee here, you need all your organs.//

அசுரன் அய்யா,

என்னங்க இது? அதான், நம்ம கருப்பு அய்யாவை வேலையிலேந்து தூக்கிட்டாங்களா?
கருப்பு அய்யாவை நம்ம இயக்கத்திலேந்து தூக்கிடுங்கன்னு சொன்னது நான் தான். ஆனா அதுக்காக இப்படியா?

பாலா

said...

கலக்கிட்டீங்க அசுரா!!

said...

அசுரன்,

பாலா தன்னுடைய கடமையான பின்னூட்ட கயமையை மிகச்சரியாக செய்கிறார்.. நீங்கள் என்னடாவென்றால் ஒரு நன்றி கூட சொல்லவில்லையே?

//ஆமா, உங்களை அமெரிக்க வந்தேறிகள் துரத்தி விட்டாங்களா? அதான் செவ்விந்தியன்னு பேர் வச்சிகினீங்களா?//

அட எம்பூட்டு அறிவு பாலய்யாவுக்கு..!! கரீட்டா சொல்லிபிட்டாரே

said...

///புயலுக்குப்பின் வரும் அமைதியாக இது ஊத்திக் கொள்ளும் போதுதான் சொரணை வரும். எவ்வளவு சீக்கிரம் இந்தியாவை குத்தகைக்குவிடமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் புயலுக்குப்பின் அமைதி வரும்.

சிதம்பரம் &கோ குத்தகை வியாபாரத்தை நன்றாகவே நடத்துகிறார். ///

மிகச் சரி.... கல்வெட்டு

**************

சபாபதி சரவணன்,

//அந்த கேளிக்கையின் பயனாகத்தான், சாலையோர உழைக்கும் மக்களை கார் ஏற்றி நசுக்கிக் கொல்கிறார்களே!!//

இது குறித்து புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வந்திருந்தது படீத்தீர்களா?

//இருக்கவே இருக்கிறது யோகா, தியானம், கார்ப்பரேட் சாமியார்கள் பக்காவாக வகுப்பு எடுக்கிறார்கள். உட்கார்ந்து நாலு மூச்சு இழுத்துவிட்டால் போயிற்று. நோயாவது ஒண்ணாவது!! //

போதை மருந்து கொடுத்தால்தான் வலி உணரமால சுரண்ட முடியும். சும்மாவா சொன்னார் மார்க்ஸ் மதம் ஒரு அபின் என்று.

இந்தியாவில் அந்த அபின் கொஞ்சம் ஜாஸ்தியாகவே மக்களின் மனங்களில் குடி கொண்டுள்ளது. அதனால் இங்கு கொஞ்சம் அதிகப்படியான சக்தியை செலவழித்துத்தான் விழிப்புறச் செய்ய வேண்டும். நண்பர் ஹரி சுட்டிக் காட்டும் அந்த சொம்பிப் போன மனோபாவமும் இதன் விளைவுதான். ஆயினும், யதார்த்தத்தில் தினமும் நடந்து வரும் விவசாயிகள் கிளர்ச்சிகள் நமக்கு சுட்டிக் காட்டுவது இந்திய சமூகம் ஒரு எரிமலையாக குமுறிக் கொண்டிருப்பதையே.

இந்த விசயத்தை ஹரி கண்ணுற வேண்டும். மேலும் எந்த ஒரு புரட்சிகர சூழலுக்கு முன்பும் அந்த சமூகம் ஆகக் கேடான சுயநலம், சந்தேகம், தனிமனித வாதம், கோழைத்தனம் போன்ற பண்புகளில் மூழ்கித் திளைக்கும். இவையனைத்துமே சமூக பொருளாதார பிரச்சனைகளின் அழுத்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முதல் முயற்சியின் வெளிப்பாடு. இவை தோல்வியுறுவதை ஓவ்வொரு மனிதனும் தனது சொந்த அனுப்வத்தில் உணர்வதும், அந்த நேரத்தில் அவர்களை அணி திரட்டி விழிப்புணர செய்ய ஒரு புரட்சிகர அமைப்பு இருப்பதும் அவசியமாகிறது.

*****************************

நண்பர் ஹரி,

//onsite என்ற வாய்ப்பு பெற என் சக தொழிலாளி படும் (அறிவற்ற)அவஸ்தை கண்டு அவனுக்குகாக நான் வருத்தப்பட்டிருக்கிரேன். தன்னையும், தன் குடும்பத்துடனான சந்தோஷத்தை இழந்தேனும் பணம் ஈட்ட அவன் கொள்ளும் முயற்சி, அந்தோ பரிதாபம். //

எதை இழந்து எதைப் பெறுகிறோம்? இவையணைத்தும் நமது preference அல்ல. உலகமயத்தின் மூலமாக ஊடகங்கள் நமக்குள் திணீக்கும் நமது தேவைகள்தான் இவற்றை தீர்மாணிக்கிறது.//அவன் வேலை செய்யும் company-யே அவன் மேல் அக்கறை கொள்வதில்லை. அவன் 24 மணி நேரம் வானத்திலேயே பறக்க வேண்டும் என்றபோதும், அவனுக்கு வசதியில்லா economic class தான். தொழிலாளர் நலன் பேணபடுவதில்லை இங்கு.
//
பிரச்சனையை தெளிவாக சொல்கிறீர்கள் என்ன செய்யலாம் ஹரி?..... அதுவும் சென்னையில் IT தொழிலாளர்களின் நிலைமை மிக மோசம்.

//இவனுக்கும் பணம் மட்டுமே குறி. சக மனிதனை பற்றி கவலையில்லை இவனுக்கு. //
அதுதான் தனிமனித வாதம் நுகர்வு கலாச்சாரம்,. இதன் விளைவுதான் அனொமிய். இதன் விளைவுதான் தற்கொலைகள். பல்வேறு கலாச்சார பிரச்சனைகள், குடும்ப உறவுகளில் சிக்கல்.

//பிரச்சனை என்னவென்றால், நம் மக்கள் அமைதியானவர்கள், அவர்கள் போராடமாட்டார்கள்..//

ஹரி இங்குதான் தவறு செய்கிறீர்கள். தினமும் களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் விவசாய பேருங்குடிகளை கவனியுங்கள்., நமது மக்களின் விடுதலைப் போராட்ட மரபுகளை கவனியுங்கள். நீங்கள் உங்களை சுற்றியுள்ள சிலரை அவதனிப்பதன் மூலம் முடிவுக்கு வருவதாக கருதுகிறேன். இந்திய சமூகம் போராட்ட உணர்வு குன்றிய சமூகம் என்பது பொதுவான அம்சம் அல்ல. அது குறிப்பிட்ட வர்க்கத்தினரிடம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது அதிகம் என்பது வேண்டுமானல் சரியாக இருக்கலாம். ஆயினும் இவை அனைத்தையும் மீறி பொருளாதார காரணிகள் ஒரு சூப்பர் பவராக சமூகத்தின் ஒட்டு மொத்த மனோநிலை மீது ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த வகையில் இந்திய சமூகத்தின் எழுச்சி என்பது தவிர்க்க இயலாதது. இதைத்தான் பிரதமர் மன்மோகன் சிங் கூட தனது சமீபத்திய பிரிட்டன் உரையில் கோடிட்டு காட்டுகிறார்.

கல்வெட்டு குறீப்பிட்டுள்ள பின்வரும் வரிகளை கொஞ்சம் கவனமாக உள்வாங்குங்கள். மேலும் குழு ஒற்றுமையின் தேவை குறித்து ஒரு கதையை குறீப்பிட்டிருந்தேனே அதன் அர்த்தத்தை உள்வாங்குங்கள். உங்கள் கேள்விக்கு சந்தேகத்துக்கு விடை பிறக்கும்

//புயலுக்குப்பின் வரும் அமைதியாக இது ஊத்திக் கொள்ளும் போதுதான் சொரணை வரும். எவ்வளவு சீக்கிரம் இந்தியாவை குத்தகைக்குவிடமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் புயலுக்குப்பின் அமைதி வரும்.//
//At the end of the day, ஒரு IT தொழிலாளிக்கு கிடைப்பது கொஞ்சம் பணம், கொஞ்சம் மதிப்பு, நிறைய சிதைந்த உறவுகள், நிறைய முதுகு வலி.///

ஒரு கழிவாக, தனது முதலாளிக்கு லாபத்தையும், சமூகத்து கலாச்சார சீர்கேட்டை பரப்பியவனாகவும் கடைசியில் வெளி வரும் அவலம் இருக்கும் என்பதை கோடிட்டு காட்டுகிறீர்கள்.
//"இந்தியாவில் கம்யூனிசம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, ஆனால் அதன் இருப்பை சாத்தியபடுத்தும் காரணங்கள் நிச்சயம் உண்டு".
//

அது இன்றைய வரலாற்றுக் கட்டத்தின் விளைவு, இப்போழுது நடக்கும் வரலாற்றுக் கட்டம் சோசலிச புரட்சிக்கான கட்டம். ஆகவே கம்யுனிசத்திற்க்கான புற, அக நிலைகள் இல்லாத இடங்களே இருக்காது.

அசுரன்

said...

////
//அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!//

அண்ணே உங்களுக்கு எங்க மேலே இவ்வளவு பாசமா?..
கண்ணுல தண்ணிவருதுனே..
////

வாங்க நாடோடி,

என்ன சொல்ல வர்றீங்க.... ?

சொல்றத நேரடியாவே சொல்லலாம்.

பயமாயிருக்குதா வாதத்துல தோத்துருவோம்னு?

அசுரன்

said...

வசந்த்,

தங்களின் வருகைக்கு நன்றி. படித்துவிட்டு உங்களது விரிவான கருத்துக்களை பகிர்ந்து செல்லுங்கள்.

//அங்க வெச்சு இங்க வெச்சு கடைசியில் IT யில் கையை வைத்து விட்டீர்கள் போல் உள்ளது.//

இது வெகு நாட்களாக மனதில் இருந்த விசயம்தான். மேலும் எனது ஆங்கில பதிவு பிரதானமாக IT தொழிலாளர்களை மனதில் வைத்தே எழுதப்பட்டுள்ளது.

மேலும், இன்றைக்கு உண்மையிலேயே அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிற ஒரு வர்க்கம் அவர்கள்தான். இந்த சமூகத்தில் எந்த சம்பவங்களும் தன்னைப் பாதிக்காது என்ற மயக்கத்திலும், சில அல்ப சலுகைகளின் பால்ப்பட்ட மோகத்திலும் மயங்கிக் கிடக்கிறார்கள்.

இந்த கட்டுரையும் கூட அரைகுறையான ஒரு கட்டுரைதான். IT தொழிலாளி சமூகத்துடன் கொண்டுள்ள உறவு, அவனை சமூகம் எப்படிப் பார்க்கிறது, சமூகத்தை அவன் எப்படி பார்க்கிறான். அவனது முதலாளியுடன் கொண்டுள்ள உறவு, முதலாளியின் வரலாறு, நோக்கம். இந்திய போன்ற நாடுகளின் IT துறையின் தன்மை, இது உலக் பொருளாதாரத்துடன் கொண்டுள்ள உறவு. இந்த பொருளாதாரம் சமூகத்தில் ஏற்ப்படுத்தும் முரன்பாடுகளும் அதில் IT தொழிலாளி பாதிக்கப்படுவது. புரட்சிகர இந்தியாவில் ஒரு IT தொழிலாளியின் பாத்திரம், அரசியலமைப்பு IT தொழிலாளியை அனுகும் விதம், அரசியலமைப்புக்கும் அவனது முதலாளிக்கும் உள்ள உறவு. இப்படி பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி கொடுத்தால் செறிக்கும் சக்தியும், அவகாசமும் படிப்பவர்களுக்கு இல்லை. இவையனைத்தையும் ஒழுங்கமைத்து இலகுவான நடையில், வடிவமைப்பில் கொடுக்கும் திறமை எனக்கும் இல்லை. அதனால்தான் இது போல சின்ன சின்ன விசயங்களை முன் வைத்து கட்டுரைகள். பார்ப்போம், எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான கட்டுரைகளை கொடுக்க முடிகிறதா என்று.

அசுரன்

said...

//பயமாயிருக்குதா வாதத்துல தோத்துருவோம்னு?//

அண்ணே உங்ககூட வாதத்தில ஜெயிச்சா என்ன நம்ம மாவோவும், லெனினும் வந்து நம்ம அசுரன வாதத்தில நாடோடி win பண்ணிட்டானு சொல்லி எதாவது படடம் குடுக்க போராங்களா?..(அப்ப்டியே குடுத்தாலும் ஜோக் பார்ட்டி சொன்னதுதான் நியாபகத்துக்கு வருது).
அதவிட ஆயிரத்துயெட்டு வேலை இருக்கு இங்க.

அண்ணே இதுவே, இதுமட்டுமே உங்களுக்கு வேலையா இருக்கலாம். நீங்கள் கணினி தொழில்நுட்ப வல்லூனராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு வேலை குடுத்து ஒரு சிஸ்டமும் கொடுத்து பிளாக்குல பக்கம் பக்கமா பதிவு போடுர அளவுக்கு உங்களுக்கு கிடைத்த சமத்துவ முதாலாளி(எங்க(நீங்கள் கணினி தொழில்நுட்ப வல்லூனராக இருக்கும் பட்சத்தில் நம்ம) பாஸையில கேணையன்)மாதிரி எனக்கும் ஒருத்தன் மாட்டும் போது வந்து உங்களோட பக்கம் பக்கமா, உங்க பின்னூட்ட பொட்டிக்குள்ளே நான் தனி பதிவே போடுரேண்ணே.

அதுவரைக்கும் முடிஞ்சா அப்ப வந்து எட்டிபாத்துட்டுபோரேன்.

said...

///
அசுரன்,
நல்ல பதிவு. நான் சொல்லவேண்டும் என்று நினைத்ததை எல்லாம் ஹரி(பூவாசம்) அவர்கள் ஏற்கனவே அற்புதமாகச் சொல்லிவிட்டார்.
///

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பொன்ஸ்.

////
தீர்வுகளாக நான் முன்வைப்பவை:
வெளிநாட்டினருக்கு வேலை செய்து தரும் வழக்கத்தைக் குறைத்துக் கொண்டு (மொத்தமாக ஒழிக்க முடியும் என்று தோன்றவில்லை..), நம் நாட்டிலேயே புதுப் புது ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கண்டுபிடிப்புகள் நடத்தலாம். அதன் மூலம், நம் நாட்டினருக்குத் தேவையான மென்பொருளை நாம் உருவாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக இரவு நேர வேலைகள், ஆன்சைட் அவலங்கள் குறைதல் என்று சரி செய்ய இயலும்.

ஆனால், தனிமனிதன் என்றவகையில் இது போன்ற செயல்பாட்டால் கிடைக்கும் சம்பளம் குறைந்து போகும் என்ற கவலை தான் முதலில் முன்நிற்கும் என்று தோன்றுகிறது.
////

முதலில் இந்தியாவுக்கான தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளி அளிப்பதற்க்கு வலுவான இந்திய தேசிய முதலாளிகளும், வலுவான விவசாய் பொருளாதாரமும் வேண்டும். இவை இரண்டையும் வலுப்படுத்தினால் மிகப் பெரிய அளவில்(இன்றைக்கு கிடைக்கும் அவுட் சோர்ஸ்டு வேலைகளை விட) வேலை கிடைக்கும்.

அதை தவிர்த்து எனில் இந்திய பொருளாதாரத்தை சுரண்டிக் கொழுக்கும் அதே தரகு வர்க்கம் அல்லது பன்னாட்டு முதலாளிக்களுக்கு சேவை செய்யும் வேலையைத்தான் செய்ய வேண்டிவரும். நீங்கள் மேலே சொன்ன விசயம்கூட இந்த கட்டுரை IT தொழிலாளர்களின் பிரச்சனையாக சுட்டிக் காட்டும் விசயத்துக்கு தீர்வு சொல்லவில்லையே.

- சமூகத்துடனான தன்னுடைய உறவை இழத்தால்(அதிக நேரம் பணியிடத்தில் செலவழிப்பது, வாழ்க்கை பாணி அவனது சொந்த நேரத்திலும் கம்பேனியின் வளர்ச்சிக்காக சிந்தனையை செலவழிப்பது).

- இதன் விளைவான மனநோய்கள்.

- இந்த பொருளாதாரத்தின் விளைவாக நாட்டின் பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்படுவதால் ஏற்ப்படும் சமூக அழுத்தத்தின் பாற்ப்பட்ட வன்முறைக்கு ஆளாவது.

- வேலைகள் அவனை விட்டு ஓடிப்போவதை நீங்கள் சொன்ன தீர்வும் தடுக்கவில்லை. ஏனெனில், இந்தியாவிலேயே வெளிநாட்டுக்காரனை கொண்டு வந்து வேலைக்கமர்த்த SEZக்கள் வழி வகுக்கின்றன.

- IT தொழிலாளி தனது பிரச்சனைகள் என்னவென்பதை புரிந்து கொண்டால் சம்பளம் ஒரு விசயம் அல்ல. அடிப்படை வசதிகளும், சுகாதாரமான, அமைதியான வாழ்வும் தேவையென்பதை இன்றைய சூழல் அவனுக்கு உணர்த்தாமல் இருக்கலாம். ஆனால், இன்றைக்கே கூட மாநகரங்களில் IT சம்பளம் என்பது பைசா பெறாத சம்பளமாக மாறி வெகு நாட்களாகிவிட்டது. அவனுக்கு கொடுக்கப்படும் hikeகளின் அளவைத் தாண்டி அவனது அன்றாட தேவைகளின் விலை அதிகமாகிவிட்டது. இது இந்த துறையின் பிரச்சனைகள் முன்னணிக்கு வரும்பொழுது இன்னும் மோசமாக அவனை தாக்கும்.

சரி நீங்கள் சொன்ன விசயங்களை செய்ய விடாமல் தடுப்பது யார்?
///
அத்துடன், ஆராய்ச்சி என்று வரும்போது, நம் நாட்டில் பொதுவாகவே ஆராய்ச்சியாளர்கள் குறைவு. என்னுடன் படித்த மாணவர்களில் பலர் ஆராய்ச்சிப் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காகவே வெளிநாட்டுக்குப் போனார்கள்.

////

இது இந்திய சமூகம் ஒரு அரை நிலபிரபுத்துவமாக இருப்பதால் ஏற்ப்படும் விளைவு. அதாவது பெரும்பான்மை மக்கள் இன்னும் நிலபிரபுத்துவ பாணி உற்பத்தி உறவில் ஈடுபட்டிருப்படுது- தொழிற்சாலைகள், விவசாயம். காரணம் இந்தியாவில் தொழில் துறையில் ஏற்ப்படும் வேலைவாய்ப்புகள் முதலாளி வருந்திக் கூப்பிட்டு மக்களை ஜனநாயகப்படுத்துவது என்ற வடிவில் இல்லை. மாறாக, விவாசாயம், சிறு தொழில் உள்ளிட்ட துறைகளில் வேலையின்மையை உருவாக்கி, இந்த உழைப்பு சந்தையை குறைந்த கூலிக்கு சுரண்டுவது என்ற அடிப்படையில் இன்றைய ஏகாதிபத்திய தொழில் துறை வளர்ச்சி இருக்கிறது. இதன் காரணமாக, தொழிலாளி ஜனநாயகப் படுவது தடுக்கப்படுகீறது. கிராமப் பொருளாதாரத்தின் உற்பத்தி உறவுகள் நகர தொழில் கூடங்களில் தக்க வைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப துறையிலோ இது வேறு வடிவம் பெறுகிறது. இதற்க்கு மெக்காலேவுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். இந்திய சமூகத்தின் சராசரி அறிவு வளர்ச்சி அதலபாதாளத்தில் தொங்குகிறது. இதை மாற்றியமைக்க தேவைப்படுவது ஒரு ஜனநாயக புரட்சி, அதாவது முதலாளித்துவ புரட்சி.///
இங்கிருக்கும் ஊழல், சுரண்டல், ஆராய்ச்சி மாணவர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் என்று பட்டியலிடுகையில், இந்தியாவில் ஆராய்ச்சி என்பது கனவாகவே தோன்றுகிறது.

இந்த விசயத்தைப் பொறுத்தவரை, இன்றைக்கு முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்கள், தகவல் தொழிற்நுட்ப முதலாளிகள் முயன்று, ஆராய்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர் செய்யலாம்.
////

பொன்ஸ்,

உண்மையில் உங்களது இந்த வேள்ளேந்தித் தனமான பார்வை எனக்கு மிகுந்த வருத்த்தை அளிக்கீறது. உங்களது முதலாளிகளீன் அருகதையைத்தான் எனது மேற்சொன்ன பதிவின் கடைசிப் பேராக்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். அவர்களுக்கு இந்தியாவின் தொழிலாளி இனிமேலும் தேவையில்லை என்ற நிலை வரும் பொழுது அப்படியே கைகழுவிச் சென்று விடுவார்கள். அவர்களிடமே ஸ்பான்ஸர் கேட்ப்பது நம்மை நாமே அவமானப்படுத்திக் கொள்வது.

இங்கு என்ன இல்லை என்று அவனிடம் நாம் கையேந்த வேண்டும் என்கிறீர்கள்?////
இன்னும், எங்கள் நிறுவனத்தில் இருப்பது போல் விருப்பமுள்ளவர்கள் சேர்ந்து வறுமையில் உள்ள மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, வேறு சில குழு நடவடிக்கைகள் ஈடுபடுவது என்று அந்தந்த நிறுவன ஊழியர்களைத் தனித்தீவாகி விடுவதிலிருந்து காப்பாற்றலாம்..
///

இவையெல்லாம் புண்ணுக்கு புனுகு தடவுவதும். நமது சொந்த சமூக அரிப்பை தீர்த்துக் கொள்ளவும் உதவுமே அன்றி. நிரந்தர தீர்வுக்கு உதவாது,. ஏனெனில் எந்த வகையில் பார்த்தாலும் உதவி செய்ய தகுதி வாய்ந்தவர்கள் மிக சிறுபான்மை, உதவி எதிர்ப்பார்ப்பவர்கள் மிக மிக மிக அதிகம்.

இது ஒரு உட்டோ பியா என்பதாகத்தான் இருக்க முடியும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான்.

விசயம், நமது ஐந்தில்லக்க சம்பளத்தின் பின்னால் ஒழிந்துள்ள நமது முதலாளிகளீன் சுயரூபத்தை, உலகமய பொருளாதரத்தின் கேடுகளை உணர்வதும். நமது எதிர்காலத்தின் நிச்சயமற்ற தனமையை உணர்வதும், இந்தியாவின் மிகப் பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகள் நமது பிரச்சனைகளுடன் இணைந்திருப்பதை உணர்வதும். இதற்க்கெதிராக நம்மை பாதுகாத்துக் கொள்ள இன்றைக்கு நமது கையில் IT துறையின் குடிமி இருக்கும் பொழுதே தயாராகிக் கொள்வதும் அடிப்படை தேவையாக இருக்கீறாது. இதை எப்படி செய்வது என்பது குறித்த ஆலோசனைகள் பலன் தரும். ஏனெனில் எந்த வகையில் நடைமுறை தொழில் சங்க வடிவமைப்பில் இயங்குவது ஆபத்தை உருவாக்கும்(கட்டம் கட்டி பழி வாங்கப்படுதல்).

பொன்ஸ் எனது கட்டுரையை முழுமையாக ஆழ்ந்து உள்வாங்கி இன்னொரு முறை படியுங்களேன்.

அசுரன்

said...

நாடோடி,

இவ்வளவு நீட்டி முழக்கி இத்த சொல்றதுக்கு எனது பதிவில் நான் எழுப்பியுள்ள விசயங்கள் குறித்து கருத்து சொல்லியிருக்கலாம்.

அல்லது

தனிவலைப்பூ போடும் அளவு வசதி உள்ள நாடோ டிக்கு எனது பதிவில் உரையாடுவதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அல்லது அவர் இந்த பதிவின் போலித்தனங்களை எதிர்த்து பதிவு போடலாம்.

உங்கள் முதலாளிகள் நான் பதிவு போடுவது தவிர்த்து உள்ள் நேரத்தில் என்னை சுரண்டுவதன் மூலம் கோடி கோடியாக எடுக்கிறார்களே அந்த ரகசியம் குறித்து கருத்து சொல்லவும், அதற்க்கு அப்புறமும் அவர்கள் உங்களது பாஷையில் இழிச்சவாயர்கள் எனில் எனக்கு யார் இழிச்சவாயர் என்பது குறித்து சந்தேகம் பிறக்கிறது.

இதே முதலாளிகள் அமெரிக்க, ஐரோப்பிய தொழிலாளர்களை கைவிட்டு விட்டு வந்துள்ளது குறித்து நாடோடி என்ன சொல்வார்?

இன்னைக்கு 'பிசா' கேரண்டி அதனால் அதப் பத்தி எனக்கு கவலையில்லை என்று பேசும் சாத்தியம் அதிகம் உள்ளது. அப்படி ஒரு சூழல் உருவாகும் படசத்தில் இங்கு நாம் முதுகெலும்புள்ள ஆறறிவு ஜீவ்ன்களின் பிரச்ச்னை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை நான் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

இரவு ஜெயினை புடுங்கிட்டான்,. கற்பழிப்பு, கலாச்சார் சீர்கேடுன்னு தனது பின்புறத்தில் தீப்பிடிக்கும் போது மட்டும் சமூக பிரஞ்சை வரும் அசிங்கத்தையும் இவ்விடத்தில் நான் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

இதே பொருளாதாரம் இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையினரை கடும் துன்பத்தில் ஆற்றியுள்ளது குறித்து எந்த கவலையும் இன்றி, மனித தன்மையின்றி இருப்பது குறீத்தும் நான் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

ஆளூம் வர்க்கத்திற்க்கு பாத தாங்கி வேலை செய்யும் அரசியல் விழிப்புணர்வற்றவர்கள், எல்லா தொழிலாளி வர்க்கத்திடமும் இருப்பது சகஜம் தான். நாடோடி அந்த பிரிவில் வருபவர் போலும்..

தீடிர் பணம் அப்படித்தான் இருக்கும்.......

அசுரன்

said...

///
சிறப்பானதொரு பதிவு. இது குறித்து நானே ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். ஒரு சாதாரண IT தொழிலாளியாக இருந்து உலகமாயமாக்கலுக்கு எதிராக நான் ஒன்றும் செய்வதற்கில்லை. இருப்பினும், அதனால் நான் நன்மை மற்றும் தீமை, இரண்டையும் அனுபவித்தும், பார்த்தும் இருக்கிரேன். இங்கே(IT துறையில்) client-கிற்கு இருக்கும் மரியாதையும், மதிப்பும் அவனுக்காக உழைக்கும் தொழிலாளிக்கு இல்லை.
///

ஹரி,

பிரச்சனைய உணர்கிறீர்கள் வாழ்த்துக்கள்

ஒரு தனிமனிதனாக ஒன்றும் செய்ய இயலாது. ஆயினும் ஏதேனும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். ஏனெனில் இப்பொழுதாவது IT துறையின் குடுமி நமது கையில் உள்ளது ஹரிஹரன் சுட்டிக் காட்டுவது போல இந்த பபிள் உடையும் பொழுது நாம் விழித்துக் கொண்டு எந்த பயனும் ஏற்ப்படாது.

நாளை என்ன நடக்கும் என்பதை பகுத்துணர்ந்து அதற்க்கு ஏதுவாக எல்லா சட்ட வழிகளையும் தயார் செய்கிறான் IT முதலாளீகள்.

Nation Skills Registry என்பது முதன்மையாக போலி சான்றிதழ்க் காரர்களை பிடிக்க என்று சொல்லப்பட்டாலும். IBM-ன் பேச்சுக்கள் அந்த தகவல் கிடங்கின் நோக்கம் ஒட்டுமொத்த IT தொழிலாளி மீது மையப்படுத்தப்ப்ட்ட ஒரு கட்டுப்பாட்டை நிறுவுவதுதான் என்று தெரிகிறது.

அவன் விழித்துக் கொண்டான், சங்கமாக திரண்டுள்ளான். நாமோ நமது பிரச்சனைகள் குறித்து பேசுவதற்க்கு கூட பயந்து கொண்டு பிழைப்புவாதம் பேசி திரிந்து கொண்டிருக்கிறோம்(நாடோ டி).

ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம் என்று கலந்தாலோசிக்கலாம்

அசுரன்

said...

//HRD NOTICE OF A COMPANY IN AN SEZ TO ALL EMPLOYEES

[Though it seems to be a joke will come to effect in future] //

:-)

//
//அந்த கேளிக்கையின் பயனாகத்தான், சாலையோர உழைக்கும் மக்களை கார் ஏற்றி நசுக்கிக் கொல்கிறார்களே!!//

இது குறித்து புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வந்திருந்தது படீத்தீர்களா?//

தாமதமாக, இன்று தான் படித்தேன். வேதனையின் உச்சம் என்னவெனில் இந்தக் கொலைக்காரர்களின் தண்டனை மிகவும் அற்பமாக இருப்பது தான். தவிர பக். 17ல் காணும் "கருணையினால் அல்ல" என்ற கட்டுரை அருமையாக வந்துள்ளது.

//இவை தோல்வியுறுவதை ஓவ்வொரு மனிதனும் தனது சொந்த அனுப்வத்தில் உணர்வதும், அந்த நேரத்தில் அவர்களை அணி திரட்டி விழிப்புணர செய்ய ஒரு புரட்சிகர அமைப்பு இருப்பதும் அவசியமாகிறது.//

//முதலில் இந்தியாவுக்கான தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளி அளிப்பதற்க்கு வலுவான இந்திய தேசிய முதலாளிகளும், வலுவான விவசாய் பொருளாதாரமும் வேண்டும். இவை இரண்டையும் வலுப்படுத்தினால் மிகப் பெரிய அளவில்(இன்றைக்கு கிடைக்கும் அவுட் சோர்ஸ்டு வேலைகளை விட) வேலை கிடைக்கும்.//

மிகச் சரி.

said...

//////////
///////இந்திய தொழிலாளர்கள் இனிமேலும் அவர்களின் டார்லிங்குகள் கிடையாது என்ற நிலை வரும் பொழுது என்ன செய்வார்கள்?//

அதுவரையில் கோக், பீட்ஸா என்று கொண்டாடலாமே! ஏனய்யா கிலியூட்டுகின்றீர்கள்!
///////////
ஹா.... ஹா....

வாருங்கள் ஹரிஹரன்...

////
இந்தியச் சமூகம் படித்தவர்கள் நிறைந்த ஆரவார, போலிநாகரீகப் பிரிவினர் இப்படியெல்லாம் பட்டு அவதியுற்று பின்பு கிடைக்கும் அனுபவம் இனிமேல் கூலியாக இருக்கும் போது கூடுதல் வேலை காப்புரிமையையாவது எடுக்க வேண்டும் என அறிவுறுத்தும்!

இப்போது ஐடி கூலிகளுக்கு வேறு வழியில்லை. ஐடி பூம் பபிள் உடையும் போது யோசிப்பார்கள்.
/////
நாம் முன்பே தயாராகிக் கொள்வோம் என்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் வேறு வேலைவாய்ப்புகள் உத்திரவாதமான அமெரிக்க தொழிலாளர்களே சங்கமாக திரண்டுதான் தமது உரிமையை நிலை நிறுத்த் முடிகிறது எனும் போது. நமது IT தொழிலாளர்களின் நிலைமை நாயை விட(அல்லது விவசாயியை விட) கேவலாமாக நாறீ விடும்.

நம்ம முதலாளி சங்கமா திரண்டு நமக்கெதிராக சதி திட்டம் தீட்டும் பொழுது குறைந்த பட்சம் சொந்த செல்வில் சூனியம் வைக்காமல் நாம எப்படி சங்கமா திரள்வது ஒற்றுமையை பலப்படுத்துவது என்று சிந்திப்பதுதானே புத்தியுள்ள ஒருவன் செய்யக் கூடிய காரியம். அதை பத்தி பேசுங்க....

///
நான் மத்திய கிழக்கின் ஆயில் பூம் காலியாகும் போது யோசிக்கலாம் என்று இருக்கிறேன்!

எந்த பபிள் முதலில் உடையும் என்று சொல்லுங்கள் புரோக்கன் பபிள் சூழலைச் சந்திக்கத் தயாராவதற்குத்தான்
:-)))
///
எது உடைஞ்சாலும் ஆப்பு நமக்குத்தான்.///
நாளைவரை வேலை கேரண்டி இருக்கு. இன்னிக்கு நைட் காலா பார்ட்டி கொண்டாட்டம்! ஏன் வீணா சாயந்திரமே யோசிக்க வேண்டும்! :-)))
///

இந்த பிழைப்புவாதம்தான் நமக்கு அடி கொள்ளி வைக்கிறது. நக்கலாக குத்திக் காட்டி எழுதியதற்க்கு வாழ்த்துக்கள் :-)

அசுரன்

said...

உலகமயமாதலை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். தகவல் தொழில் நுட்பத் துறையில் பிரச்சினைகள்
இருக்கிறது என்றால் சரியான தீர்வுகளை தேடுவதே முறை அதை விடுத்து கற்பனாவாத
புரட்சி பேசுவது வீண் வேலை. தொழிற்சங்கம் தீர்வாகுமா இல்லை இத்துறையில் உள்ளவர்கள்
சேர்ந்து உருவாக்கும் அமைப்புகள் தீர்வாகுமா என்பதே கேள்வி. இப்போதுள்ள நிலையில்
யாரும் அத்தகைய அமைப்பினை உருவாக்க முன் வருவதில்லை. கம்யுனிஸ்ட்கள் தொழிற்சங்கம் அமைத்து குட்டையை குழப்பலாம். இத்துறையில் உள்ளவர்கள் வெகுவாக சம்பாதிப்பதால் எதிர்காலம் குறித்து திட்டமிடலாம், சேமிக்கலாம், திறனை வளர்த்துக் கொண்டு நாளைய
சவால்களை சமாளிக்கலாம்.மேலும் வேலை வாய்ப்புகள் பெருகும் போது சில ஒழுங்குமுறைகளை அரசே கொண்டு வரலாம். தந்தை ஆயுள் முழுதும் சம்பாதித்தாலும் சேமிக்க முடியாத பணத்தினை
மகன்/மகள் ஐந்தாண்டுகளில் சேமித்து, சொந்த வீட்டினை முப்பது வயதிற்குள் வாங்க முடிகிறதே.
வீண் செலவுகளை செய்துவிட்டு, குடியில் பணத்தினை தொலைத்து விட்டு முதலாளித்துவம் ஒழிக
என்றால் சிரிப்புதான் வருகிறது. தொழில் சமூகம் உருவாகும் போதும், தொழிற்சாலைகள் பெருகிய
போதும் இப்பதிவில் உள்ளது போல் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அதற்காக மார்க்ஸ்
பழைய விவசாய சமூகத்தினை பதிலாக முன்னிறுத்தவில்லை. இந்த அடிப்படை உண்மை உங்களுக்கு ஏன் புரியவில்லை. இடதுசாரி கற்பனாவாதம் எங்கும் இட்டுச்செல்லாது. தனிமை என்பது முந்தைய தொழில் சமூகத்தில் இல்லையா, அங்கும் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று ஷிப்ட் வேலைமுறை உண்டே. எனவே அப்போது எல்லாம் நன்றாக இருந்தது, இப்போது கெட்டுப் போச்சு போன்ற ஒப்பாரிகளை நிறுத்திவிட்டு காரியவாத கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை அணுகவும்.

said...

//கலக்கிட்டீங்க அசுரா!! //

வாழ்த்துக்களுக்கு நன்றி மருதநாயகம் :-))

அசுரன்

said...

"முதலில் இந்தியாவுக்கான தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளி அளிப்பதற்க்கு வலுவான இந்திய தேசிய முதலாளிகளும், வலுவான விவசாய் பொருளாதாரமும் வேண்டும். இவை இரண்டையும் வலுப்படுத்தினால் மிகப் பெரிய அளவில்(இன்றைக்கு கிடைக்கும் அவுட் சோர்ஸ்டு வேலைகளை விட) வேலை கிடைக்கும்"

இவை இரண்டும் உள்ள நாடுகளிலிருந்துதான் அவுட் சேர்சிங் மூலம் வேலைகள் இங்கு வருகின்றன. அவுட் சோர்சிங் உலகமயமாதலின் விளைவு. உலகமயமாதலில் இப்படி உழைப்புப் பிரிவினை மிகவும் சாதாரணமான ஒன்று. சீனா, மெக்சிகோவில் தயாரிப்பு தொழில், இந்தியா, ஐயர்லாந்தில் மென்பொருள் என்பது போல். உலகமயமாதலை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு இது புரியாது

said...

//- சமூகத்துடனான தன்னுடைய உறவை இழத்தால்(அதிக நேரம் பணியிடத்தில் செலவழிப்பது, வாழ்க்கை பாணி அவனது சொந்த நேரத்திலும் கம்பேனியின் வளர்ச்சிக்காக சிந்தனையை செலவழிப்பது).
- இதன் விளைவான மனநோய்கள். //

அசுரன், இவற்றிற்கான தீர்வாக எதைச் சொல்ல முடியும் என்றே தெரியவில்லை. உண்மையில் கல்லூரியை முடித்தபின் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, இரவு எட்டு மணிக்கும் முன்னால் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு நாளும் வீட்டில் செய்ய என்ன இருக்கிறது என்று யோசித்ததுண்டு. மனிதர்களை விட, புத்தகங்களே அந்த இடங்களை நிரப்பிக் கொண்டன.

ஊழியர்களுக்குள்ளே நல்ல பழக்கத்தை ஏற்படுத்த, சில நிறுவனங்கள் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. மாதந்தோறும் அது போன்ற கேளிக்கைகள் இருக்கின்றன.

மற்றபடி குடும்பத்தவருடனான நட்பு, மற்றும் நீங்கள் சொல்வது போன்ற மனவளப் பயிற்சி என்றால், எனக்குத் தோன்றிய ஒரே விசயம் குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம். அதுகுறித்தான என் ஏக்கத்தை ஒரு பதிவாகவே போட்டிருந்தேன். இப்போது யோசிக்கும் போது அது கூட போதுமான தீர்வாகத் தெரியவில்லை.

தனிமனிதர்கள் கணினி முன்னால் சரணடைந்தாற்போல் வேலை செய்கிறார்கள் என்றால், வீடுகளிலோ, தொலைக்காட்சி நேரத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது.

இதற்கான பொதுவான தீர்வு என்னவாக இருக்க முடியுமென்பது எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

// - வேலைகள் அவனை விட்டு ஓடிப்போவதை நீங்கள் சொன்ன தீர்வும் தடுக்கவில்லை. ஏனெனில், இந்தியாவிலேயே வெளிநாட்டுக்காரனை கொண்டு வந்து வேலைக்கமர்த்த SEZக்கள் வழி வகுக்கின்றன.//

வேலைகள் நம்மை விட்டு ஓடிப் போவதை யோசிக்கும் பொழுது, நமது விவசாயத் துறையில் இன்னும் அதிகமாக நேரம் செலவழிப்பதே நேரடித் தீர்வாகப்படுகிறது. விவசாயம் போன்ற இந்தியாவின் பாரம்பரியமிக்கத் தொழில்களில் மென்பொருளைப் பயன்படுத்தும் விதங்களை ஆராயலாம். நம் உள்நாட்டுப் பயனர்களே அதிகம் இருக்கையில் வெளிதேசத்து வாடிக்கையாளர்களுக்கு வேலை செய்து தந்து கொண்டிருப்பதை நிறுத்தலாம்.

// சரி நீங்கள் சொன்ன விசயங்களை செய்ய விடாமல் தடுப்பது யார்? //
ஆராய்ச்சிப் பக்கம் போகாமல் வெறும் வாடிக்கையாளர்களுக்குப் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் நமது நிறுவனங்களின் நிலைக்குக் காரணம், அந்தந்த பன்னாட்டு நிறுவனங்களின் உள்நாட்டுத் தலைவர்கள் தாம் என்று தோன்றுகிறது.
ப்ராஜக்ட், டார்கெட் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் இது போன்ற தன்னிறைவுகளைப் பற்றி யோசிக்காமலே போய்விடுகிறார்கள்.

// அவர்களுக்கு இந்தியாவின் தொழிலாளி இனிமேலும் தேவையில்லை என்ற நிலை வரும் பொழுது அப்படியே கைகழுவிச் சென்று விடுவார்கள். அவர்களிடமே ஸ்பான்ஸர் கேட்ப்பது நம்மை நாமே அவமானப்படுத்திக் கொள்வது.
இங்கு என்ன இல்லை என்று அவனிடம் நாம் கையேந்த வேண்டும் என்கிறீர்கள்? //

அசுரன், இந்த இடத்தில் நான் எழுதியது இந்திய மென்பொருள் முதலாளிகளைப் பற்றித் தான். வெளிநாட்டு முதலாளிகளைச் சொல்லவில்லை. இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ் போன்ற இந்திய ஊழியர்களை வைத்து வேலை வாங்கும் இந்திய முதலாளிகள் இது போன்ற ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதன் மூலமே, தன்னிறைவைப் பெற முடியும் என்று நம்புகிறேன். ஆனால், அவர்களும் லாபத்துக்கு உதவாத இது போன்ற செயல்களைச் செய்வார்களா என்பது கேள்விதான்.

//ஏனெனில் எந்த வகையில் பார்த்தாலும் உதவி செய்ய தகுதி வாய்ந்தவர்கள் மிக சிறுபான்மை, உதவி எதிர்ப்பார்ப்பவர்கள் மிக மிக மிக அதிகம். //
இது உண்மை தான்..

//நமது எதிர்காலத்தின் நிச்சயமற்ற தனமையை உணர்வதும், இந்தியாவின் மிகப் பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகள் நமது பிரச்சனைகளுடன் இணைந்திருப்பதை உணர்வதும். இதற்க்கெதிராக நம்மை பாதுகாத்துக் கொள்ள இன்றைக்கு நமது கையில் IT துறையின் குடிமி இருக்கும் பொழுதே தயாராகிக் கொள்வதும் அடிப்படை தேவையாக இருக்கீறாது.//
ஆம் என்று ஒப்புக் கொள்ள முடிந்தாலும், இதற்கு என்ன செய்வது என்பதைப் பற்றி தெளிவாக ஒன்றும் தெரியவில்லை அசுரன்..

நாளை இந்த வேலை எனக்கு இல்லாமல் போய்விட்டால், வேறு எந்த வேலை வேண்டுமானாலும் செய்து பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், இன்றைக்கு இந்த வெளிநாட்டு வாடிக்கையாளனுக்கு வேலை செய்து தருவதை நான் நிறுத்தினால், வேறு ஒருவன் இங்கே வந்து செய்யப் போகிறான். அவ்வளவு தானே?

//ஏனெனில் எந்த வகையில் நடைமுறை தொழில் சங்க வடிவமைப்பில் இயங்குவது ஆபத்தை உருவாக்கும்(கட்டம் கட்டி பழி வாங்கப்படுதல்).//
தொழிற்சங்கங்கள் கணினித் துறையில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசித்தால், நிறைய எண்ணங்கள் தோன்றுகின்றன. கொஞ்சம் பயங்கரமாகவும் இருக்கிறது - இத்தனை நாள் ஏன் தோன்றாமல் போயிற்று என்றவிதத்தில். நாளை இது குறித்து இன்னும் தெளிவாக எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்..

said...

#1)

//தொழில் சமூகம் உருவாகும் போதும், தொழிற்சாலைகள் பெருகிய
போதும் இப்பதிவில் உள்ளது போல் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அதற்காக மார்க்ஸ்
பழைய விவசாய சமூகத்தினை பதிலாக முன்னிறுத்தவில்லை. இந்த அடிப்படை உண்மை உங்களுக்கு ஏன் புரியவில்லை.//

எனது கேள்வி மிகவும் சுலபம், இந்தியாவில் நீங்கள் குறீப்பிடுவது போல மேற்கத்திய பாணி (இன்னும் தெளிவாக முதலாளீத்துவ) தொழில் புரட்சி நடக்கிறதா?

இதை உங்களால் உறுதியாக நிறுவ முடியும் எனில் உலகமயத்தை என்னால் முழுமையாக ஆதரிக்க முடியும்.

அப்படியில்லையெனில் என்னவிதங்களில் மேற்கத்திய பாணி சமூக பரிணாமத்திலிருந்து இந்திய சமூக வளர்ச்சி வித்தியாசப்படுகிறது அது உலகமய சூழலில் எந்த வகையில் நன்மை கொடுக்கும் என்று நீங்கள் விளக்க கடைமைப்பட்டுள்ளீர்கள்.

சிரமம் எனில் உலகமயத்தால் தீமை என்று விளக்கி பத்து பதிவுகளுக்கும் மேல் நானே இந்த தளத்தில் பதிந்துள்ளேன் அவற்றை மறுத்து வாதாடுங்கள். "உலகமயத்தை எப்படி பயன்படுத்துவது என்று நாம் யோசிக்க வேண்டும்' என்பது போல அடிப்படையற்ற வார்த்தை ஜாலங்களை கொண்டு பூசி மெழுகும் முயற்சி யாருக்கும் பயன்படாது.

மேலும் உங்களது மேற்கத்திய நாடுகள் விவசாயத்த்லிருந்து எப்படி முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறியது? விவசாயிகளை நிலத்தை விட்டு துரத்தியா? விவசாயத்தில் முதலாளீத்துவ வளர்ர்ச்சியை தடுத்தா?

இந்தியாவில் மேற் சொன்ன விசயங்கள் நடக்க வில்லை என்று நிறுவ முடியுமெனில் உலகமயத்தை நான் உளப் பூர்வமாக ஆதரிக்க தயார். மேலும் இந்த விசயங்களை உறுதிப்படுத்தி பேசியுள்ள பாரத பிரதமரின் முட்டாள்தனத்தையும் நீங்கள் விம்ர்சிக்க வேண்டும். ஏனெனில் அவரை விட உங்களுக்கு உலகமயம் குறித்தும், இந்திய நிலைமைகள் குறித்தும் அதிகம் தெரியும் போல தெரிகிறது.

மேலும், யார் சொன்னது சமூகத்தை பின்னுக்கிழுக்கும் தீர்வை நான் சொல்கிறேன் என்று? விவசாய்த்திலும், பரந்துபட்ட இந்திய பொருளாதாரத்த்லும் முதலாளித்துவ வளர்ச்சியை உறுதிப்படுத்தச் சொல்லி நான் சொல்கீறேன். இதை குறிப்பிட்டு பல பதிவுகள் இந்த தளத்திலேயே எழுதியுள்ளேன்.

#2) நான் சரியான தீர்வுகளை தேடித்தான் கேள்விகளை வைத்துள்ளேன். இன்னும் எனது பதிவில் எந்த இடத்திலும் பொதுவுடைமை சமூதாயம்தான் தீர்வு என்று வாதாடவில்லையே...

ஒருவேளை IT துறையின் பிரச்சனை குறித்து பேசினாலே by default அது பொதுவுடைமை ஆட்களின் பிரச்சாரம் என்ற கருத்து மயக்கத்திலிருந்து நோக்குகிறீர்களா?

ஒரு கம்யுனிச அமைப்பின் கீழ் அணி திரளுங்கள் என்று எனது பதிவில் எங்காவது கூறினேனா?(ஆம் அதைத்தான் நான் விரும்புகிறேன்)

ஆயினும் இங்கு அனானியே சொந்தமாக யூகித்து பேசுவது சரியில்லை.

சரி, அமைப்பாக திரண்டு பிர்ச்சனை தீர்ப்பது குறித்து கருத்து வைத்திருக்கிறாரா என்று பார்த்தால் இல்லை.

உலகமயத்தில் இன்னும் மிச்சம் ஏதோ இருக்கிறது என்று வெறும் வார்த்தை ஜாலமும், கம்யுனிசம் மீது காழ்ப்புணர்ச்சியையும் காட்டிவிட்டு என் கடமை முடிந்தது என்று நிற்கிறார் அனானி.

தீர்வு குறித்து சொல்லுஙளய்யா பேசி ஒரு முடிவுக்கு வருவோம்.... இப்படியே குற்றம்சாட்டிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
#3)
//தந்தை ஆயுள் முழுதும் சம்பாதித்தாலும் சேமிக்க முடியாத பணத்தினை
மகன்/மகள் ஐந்தாண்டுகளில் சேமித்து, சொந்த வீட்டினை முப்பது வயதிற்குள் வாங்க முடிகிறதே.
//
அதெல்லாம் சரிதான், இவையணைத்துமே இந்த வேலையை வேறு குறை கூலி பிரதேசத்துக்கு IT முதலாளி கொண்டு செல்லாத வரைதான். அப்ப்டி கொண்டு செல்லும் போது வீடு, செமிப்பில் கொஞ்சம் பணமும் மிச்சமிருக்கும்.

வீட்டிற்க்கு சந்தை மதிப்பு இருக்காது(ஏனெனில் IT சார்ந்த பொருளாதாரத்தின் சரிவு ரியல் எஸ்டேட்டையும் பாதிக்கும் என்பதால்), சேமிப்பு எத்தனை நாள் வரும்?

இதில் பெருகி வரும் விலைவாசி, உடல் குறைபாடுகளுக்கு உங்க முதலாளி என்ன நிவாரணம் கொடுக்க போகிறான்?

சரி இதை விடுங்க்ள் இந்த் பொருளாதாரத்தால் பாதிக்கப்படும் பெரும்பான்மை மக்களின் மீது உங்களுக்கு கருணையே கிடையாதா?#4)
///வீண் செலவுகளை செய்துவிட்டு, குடியில் பணத்தினை தொலைத்து விட்டு முதலாளித்துவம் ஒழிக
என்றால் சிரிப்புதான் வருகிறது//

குடித்து விட்டு எழுதும் நாங்கள் பொறுக்கிகள் இப்படி சொல்கிறோம் எனில் குடிக்காமால் தெளிவாக இருக்கும் நீங்களாவது ஏதேனும் தீர்வு சொல்லுங்கள்... கேட்டுக் கொள்கிறோம்...#5)
//தனிமை என்பது முந்தைய தொழில் சமூகத்தில் இல்லையா, அங்கும் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று ஷிப்ட் வேலைமுறை உண்டே. எனவே அப்போது எல்லாம் நன்றாக இருந்தது, இப்போது கெட்டுப் போச்சு போன்ற ஒப்பாரிகளை நிறுத்திவிட்டு காரியவாத கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை அணுகவும்.
//

இந்த அறிவுரை எனக்கா அல்லது உலகயமத்தின் புத்திரன் தரகு முதலாளி சத்யம் நிறுவன இயக்குனர் பிரபாத்துக்கா? ஏனெனில் நான் இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள , நீங்கள் விமர்சித்துள்ள கருத்துக்களுக்கு சொந்தக்காரர் அவர்தான்.

அவரைவிடவும் உங்களுக்கு இந்த விச்யத்தில் அதிக ஞானம் உண்டு என்று எனக்கு தெரியாமல் போய் விட்டது.

அசுரன்

said...

///
"முதலில் இந்தியாவுக்கான தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளி அளிப்பதற்க்கு வலுவான இந்திய தேசிய முதலாளிகளும், வலுவான விவசாய் பொருளாதாரமும் வேண்டும். இவை இரண்டையும் வலுப்படுத்தினால் மிகப் பெரிய அளவில்(இன்றைக்கு கிடைக்கும் அவுட் சோர்ஸ்டு வேலைகளை விட) வேலை கிடைக்கும்"

இவை இரண்டும் உள்ள நாடுகளிலிருந்துதான் அவுட் சேர்சிங் மூலம் வேலைகள் இங்கு வருகின்றன. அவுட் சோர்சிங் உலகமயமாதலின் விளைவு. உலகமயமாதலில் இப்படி உழைப்புப் பிரிவினை மிகவும் சாதாரணமான ஒன்று. சீனா, மெக்சிகோவில் தயாரிப்பு தொழில், இந்தியா, ஐயர்லாந்தில் மென்பொருள் என்பது போல். உலகமயமாதலை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு இது புரியாது
///

இரண்டு விசயம்,

#1)
//இவை இரண்டும் உள்ள நாடுகளிலிருந்துதான் அவுட் சேர்சிங் மூலம் வேலைகள் இங்கு வருகின்றன.//

இப்படி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் எனில், இந்தியாவில் இந்த இரண்டும் இல்லை என்றூ பொருள். அதாவது அவுட் சோர்சிங் மூலம் மிகச் சிறுபான்மையானவர்களுக்கு வேலை கிடைப்பதற்க்கு மிகப் பெரும்பான்மையினர் தொடர்புள்ள அந்த இரண்டு துறைகளும் வளரக் கூடாது என்று சொல்கிறீர்கள் அப்படித்தானே. இதே காரணத்தினால்தான் நாங்கள் அதை எதிர்க்கிறோம்.

உஙகளது ஒப்புதல் வாக்குமூலத்திற்க்கு நன்றி அனானி

#2)
//இவை இரண்டும் உள்ள நாடுகளிலிருந்துதான் அவுட் சேர்சிங் மூலம் வேலைகள் இங்கு வருகின்றன.//

ஏன் அப்படி வரவேண்டும். இதன் மூலம் யாருக்கு என்ன லாபம், என்ன நஷ்டம்?

இப்படித்தான் வரவேண்டுமா? அது வந்துதான் இந்தியாவில் எதுவும் ஆக வேண்டுமா?

ஆக, இந்த ஏற்றத்தாழ்வு இருப்பதுதான் உலகமயத்தின் உயிர்நாடியா?

அசுரன்

said...

//குடித்து விட்டு எழுதும் நாங்கள் பொறுக்கிகள் இப்படி சொல்கிறோம் எனில் குடிக்காமால் தெளிவாக இருக்கும் நீங்களாவது ஏதேனும் தீர்வு சொல்லுங்கள்... கேட்டுக் கொள்கிறோம்...//

:-)))

பிரச்சனை முதலில் புரிந்தால்தான் தீர்வு.
பிரச்சனை புரிவதற்கு முதலில் ..பிரச்சனை உள்ளது என்று அறியும் பக்குவம் வேண்டும்.

IT வேலை
கார்
வீடு
பிட்சா
iPOD

இதனுடன் முடிந்துவிடும் இப்போதைய நவ நாகரீக உலகம் அடுத்தவனைப் பற்றிக் கவலைப்பாடது.

பாதிக்கப்பட்டது/படுவது நாம்தான் என்று அறிவதற்கே இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். அதற்குள் வால்மார்ட் என்ன ... எல்லா மார்ட்டுகளும் பங்கு போட்டிருக்கும்.

நாமும் பல்லைக் காட்டிக்கொண்டே அடகு போவோம்.

பலசரக்குக் கடை வைப்பதற்கு எதற்கு வாலுமார்ட்டு கூட்டணி?

இங்குள்ள எவனுக்கும் துப்பில்லை?

said...

விரிவான எதிர்வினைக்கு நன்றி பொன்ஸ்,********
//- சமூகத்துடனான தன்னுடைய உறவை இழத்தால்(அதிக நேரம் பணியிடத்தில் செலவழிப்பது, வாழ்க்கை பாணி அவனது சொந்த நேரத்திலும் கம்பேனியின் வளர்ச்சிக்காக சிந்தனையை செலவழிப்பது).
- இதன் விளைவான மனநோய்கள். //

அசுரன், இவற்றிற்கான தீர்வாக எதைச் சொல்ல முடியும் என்றே தெரியவில்லை. உண்மையில் கல்லூரியை முடித்தபின் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, இரவு எட்டு மணிக்கும் முன்னால் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு நாளும் வீட்டில் செய்ய என்ன இருக்கிறது என்று யோசித்ததுண்டு. மனிதர்களை விட, புத்தகங்களே அந்த இடங்களை நிரப்பிக் கொண்டன.

ஊழியர்களுக்குள்ளே நல்ல பழக்கத்தை ஏற்படுத்த, சில நிறுவனங்கள் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. மாதந்தோறும் அது போன்ற கேளிக்கைகள் இருக்கின்றன.

மற்றபடி குடும்பத்தவருடனான நட்பு, மற்றும் நீங்கள் சொல்வது போன்ற மனவளப் பயிற்சி என்றால், எனக்குத் தோன்றிய ஒரே விசயம் குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம். அதுகுறித்தான என் ஏக்கத்தை ஒரு பதிவாகவே போட்டிருந்தேன். இப்போது யோசிக்கும் போது அது கூட போதுமான தீர்வாகத் தெரியவில்லை.

தனிமனிதர்கள் கணினி முன்னால் சரணடைந்தாற்போல் வேலை செய்கிறார்கள் என்றால், வீடுகளிலோ, தொலைக்காட்சி நேரத்தை ஆக்ரமித்துக் கொள்கிறது.

இதற்கான பொதுவான தீர்வு என்னவாக இருக்க முடியுமென்பது எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
************வேலை நேரத்தை வரம்பிடுவதும். IT தொழிலாளர்கள் தங்களது ஒற்றூமையை உணர்ந்து ஆக்கப் பூர்வமான வழிகளில் தமது oaiyvu(rest) நேரத்தை பய்ன்படுத்த அணி திரள்வதும் சாத்தியமான தீர்வுகள்.

எட்டு மணி நேர வேலையை பெறுவது என்ற கோரிக்கையெ பலரை கிலி கொள்ளச் செய்கிறதே?

இந்த கோரிக்கை நியாயம் எனில் அதை பெறுவதற்க்கான வழிகளை யோசிக்கலாம்.

தொழிற்சங்கம் என்றாலே traditional அமைப்புகளை ஏன மனதில் கொள்ள் வேண்டும். புதிய சூழலுக்கு ஏற்ற ஒன்றை நாம் விவாதித்து யோசிப்போம்.

அதில் என்ன தவறு வந்துவிடப் போகிறது. நமது ஒற்றுமையை உணர வேண்டும் என்பதைத்தான் நான் இங்கு வலியுறுத்துகிறேன்.
**********
// - வேலைகள் அவனை விட்டு ஓடிப்போவதை நீங்கள் சொன்ன தீர்வும் தடுக்கவில்லை. ஏனெனில், இந்தியாவிலேயே வெளிநாட்டுக்காரனை கொண்டு வந்து வேலைக்கமர்த்த SEZக்கள் வழி வகுக்கின்றன.//

வேலைகள் நம்மை விட்டு ஓடிப் போவதை யோசிக்கும் பொழுது, நமது விவசாயத் துறையில் இன்னும் அதிகமாக நேரம் செலவழிப்பதே நேரடித் தீர்வாகப்படுகிறது. விவசாயம் போன்ற இந்தியாவின் பாரம்பரியமிக்கத் தொழில்களில் மென்பொருளைப் பயன்படுத்தும் விதங்களை ஆராயலாம். நம் உள்நாட்டுப் பயனர்களே அதிகம் இருக்கையில் வெளிதேசத்து வாடிக்கையாளர்களுக்கு வேலை செய்து தந்து கொண்டிருப்பதை நிறுத்தலாம்.
*************

மிகச் சரியாக சொல்கிறீர்கள் பொன்ஸ்.... மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தியாவின் பாரம்பரிய தொழில்களை வளர்த்தெடுத்து அதில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள் மக்களை முதலாளித்துவ பாணி உற்பத்தி முறைக்கு மாற்றுவதும் அந்த நவீனப்படுத்தலின் ஊடாக உருவாகும் தகவல் தொழில் நுட்ப back bone-னினால் உருவாகும் வேலை வாய்ப்பில் இன்றூள்ளதை போல பல மடங்கு அதிகம் வேலை உருவாகும் என்பதுதான் நிஜம்.

ஆயினும் இந்த நிரந்தர தீர்வை நோக்கிப் போகும் முன்பாக தற்காலிகமாக நமது உரிமைகளை நிலைநாட்டவாவது ஒற்றுமையாக அணி திரள வெண்டும் என்கிறேன்.

கம்பேனி பேதம் இன்றி அவன் பொதுவாக சில அமைப்புகள் வைத்துள்ல போது ஏன் நாமும் அவ்வாறூ இணைய முடியாது என்று எண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை.
*********
// சரி நீங்கள் சொன்ன விசயங்களை செய்ய விடாமல் தடுப்பது யார்? //
ஆராய்ச்சிப் பக்கம் போகாமல் வெறும் வாடிக்கையாளர்களுக்குப் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் நமது நிறுவனங்களின் நிலைக்குக் காரணம், அந்தந்த பன்னாட்டு நிறுவனங்களின் உள்நாட்டுத் தலைவர்கள் தாம் என்று தோன்றுகிறது.
ப்ராஜக்ட், டார்கெட் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் இது போன்ற தன்னிறைவுகளைப் பற்றி யோசிக்காமலே போய்விடுகிறார்கள்.
*********

அப்படி கிடையாது என்று எண்ணுகிறேன் பொன்ஸ்,

இவையணைத்துமே இந்திய பணத்தின் மதிப்பு குறைவக இருப்பதால் உயிர் வாழும் கம்பேனிகள். ஆக, அந்த அளவு ரூபாய் தரக்கூடிய ப்ரோஜெக்ட்களை மட்டுமே இந்த கம்பேனிகள் விரும்பும். மேலும், இந்திய ப்ராஜெக்ட் என்பனவற்றை இந்தியாவில் பிறந்தவர்களினால் செய்யப்படும் ப்ராஜெக்ட் என்று நீஙக்ள் புரிந்து கொள்வதாக ஐய்யுறுகிறேன்.

பிறப்பு பிரச்சனையல்ல். அவன் சேவை செய்யும் பொருளாதார அமைப்புதான் பிரச்சனை அந்த வகையில் இன்போஸிஸ், விப்ரோ எல்லாமே தரகு வர்க்க முதலாளிகள்., அவர்கள் இந்தியர்கள் கிடையாது.....

ஏனெனில், குறை கூலி சூழ்நிலை உருவாகும் பொழுது வேறு எந்த பன்னாட்டு முதலாளிகளைப் போலவே இவர்களும் ஓடிவிருவார்கள் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

இந்திய முதலாளிகள் - சக்தி மசாலா, காளி மார்க் சோடா போன்ற சில கம்பேனிகள்
************
// அவர்களுக்கு இந்தியாவின் தொழிலாளி இனிமேலும் தேவையில்லை என்ற நிலை வரும் பொழுது அப்படியே கைகழுவிச் சென்று விடுவார்கள். அவர்களிடமே ஸ்பான்ஸர் கேட்ப்பது நம்மை நாமே அவமானப்படுத்திக் கொள்வது.
இங்கு என்ன இல்லை என்று அவனிடம் நாம் கையேந்த வேண்டும் என்கிறீர்கள்? //

அசுரன், இந்த இடத்தில் நான் எழுதியது இந்திய மென்பொருள் முதலாளிகளைப் பற்றித் தான். வெளிநாட்டு முதலாளிகளைச் சொல்லவில்லை. இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ் போன்ற இந்திய ஊழியர்களை வைத்து வேலை வாங்கும் இந்திய முதலாளிகள் இது போன்ற ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதன் மூலமே, தன்னிறைவைப் பெற முடியும் என்று நம்புகிறேன். ஆனால், அவர்களும் லாபத்துக்கு உதவாத இது போன்ற செயல்களைச் செய்வார்களா என்பது கேள்விதான்.
****************

இங்கு நீங்கள் குறீப்பிட்டுள்ள இந்திய முதலாளிகள் எனப்படும் தரகு முதலாளிகள் குறித்துத்தான் மேலே சொல்லியுள்ளேன். அவர்களது பொருளாதார நலனும், இந்தியாவின் பொருளாதார நலனும் வேவ்வேறு எதிர் எதிரானவை. ஆகவெ அவர்கள் தேசிய முதலாளிகள் கிடையாது.

அவர்கள் செய்யும் சொல்ப NGO உதவிகளும் வியட்நாம் யுத்தத்தில் ரெஸ்பான்ஸிபிள் கார்போரேட் எனும் கம்யுனிச எதிர்ப்பு தந்திரத்தின் ஒரு அம்சமே. அதாவது புண்ணுக்கு புனுகு தடவி மக்களை ஏமாற்றுவதுடன், பொன்ஸ், அசுரன் போன்ற நடுததர வர்க்க அறிவு ஜீவிக்களையும் மடை மாற்றி செயல்பட வைப்ப்தன் மூலம் தமது சுரண்டலை சிறிது காலம் நீட்டிக்கும் தந்திரமே.
************
//ஏனெனில் எந்த வகையில் பார்த்தாலும் உதவி செய்ய தகுதி வாய்ந்தவர்கள் மிக சிறுபான்மை, உதவி எதிர்ப்பார்ப்பவர்கள் மிக மிக மிக அதிகம். //
இது உண்மை தான்..
*************

நன்றி.... இது இந்த பதிவின் பிரதான விவதப் பொருள் இல்லையாகையால் இத்துடன் விட்டுச் செல்வோம்.
*****************
//நமது எதிர்காலத்தின் நிச்சயமற்ற தனமையை உணர்வதும், இந்தியாவின் மிகப் பெரும்பான்மை மக்களின் பிரச்சனைகள் நமது பிரச்சனைகளுடன் இணைந்திருப்பதை உணர்வதும். இதற்க்கெதிராக நம்மை பாதுகாத்துக் கொள்ள இன்றைக்கு நமது கையில் IT துறையின் குடிமி இருக்கும் பொழுதே தயாராகிக் கொள்வதும் அடிப்படை தேவையாக இருக்கீறாது.//
ஆம் என்று ஒப்புக் கொள்ள முடிந்தாலும், இதற்கு என்ன செய்வது என்பதைப் பற்றி தெளிவாக ஒன்றும் தெரியவில்லை அசுரன்..

நாளை இந்த வேலை எனக்கு இல்லாமல் போய்விட்டால், வேறு எந்த வேலை வேண்டுமானாலும் செய்து பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், இன்றைக்கு இந்த வெளிநாட்டு வாடிக்கையாளனுக்கு வேலை செய்து தருவதை நான் நிறுத்தினால், வேறு ஒருவன் இங்கே வந்து செய்யப் போகிறான். அவ்வளவு தானே?
*****************

இந்த வேலை இல்லையெனில் வேறு வேலை செய்வது என்பது ஒரு கேள்விக் குறியே. அதை இப்பொழுது விவாதிக்க வேண்டாம்.

இப்பொழுது யாரும் வெலையை விடச் சொல்லவில்லை. உரிமைகளுக்காக போராட ஒரு நல்ல வழிமுறையை யோசிக்க சொல்கிறேன்,. அமைப்பாக , ஒற்றுமையுடன் குரல் எழுப்ப வழி வகை குறித்து யோசிக்க சொல்கீறேன்.

******************************
//ஏனெனில் எந்த வகையில் நடைமுறை தொழில் சங்க வடிவமைப்பில் இயங்குவது ஆபத்தை உருவாக்கும்(கட்டம் கட்டி பழி வாங்கப்படுதல்).//
தொழிற்சங்கங்கள் கணினித் துறையில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசித்தால், நிறைய எண்ணங்கள் தோன்றுகின்றன. கொஞ்சம் பயங்கரமாகவும் இருக்கிறது - இத்தனை நாள் ஏன் தோன்றாமல் போயிற்று என்றவிதத்தில். நாளை இது குறித்து இன்னும் தெளிவாக எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்..
********************

கட்டாயம் நல்ல யுக்திகளுடன் வந்து உதவுங்கள் புண்ணியமாக போகும். IT தொழிலாளிகளின் ஒற்றுமை மிக மிக அவசியமான சூழல் இது. இதைவிட ஒரு நல்ல தருணம் அமையுமா என்றூ தெரியவில்லை.

அசுரன்

said...

//இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ் போன்ற இந்திய ஊழியர்களை வைத்து வேலை வாங்கும் இந்திய முதலாளிகள் இது போன்ற ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதன் மூலமே, தன்னிறைவைப் பெற முடியும் என்று நம்புகிறேன். ஆனால், அவர்களும் லாபத்துக்கு உதவாத இது போன்ற செயல்களைச் செய்வார்களா என்பது கேள்விதான். //

பொன்ஸ் சரியான இடத்தை தொட்டு இருக்கின்றீர்கள்,
இவர்கள் தங்கள் அளவில் முதலாளிகளே தவிர நாட்டுக்காக எதுவும் செய்ய மாட்டார்கள். வெள்ளைக்காரனுக்கு சர்வீஸ் காண்ட்ராட் எடுப்பதுதான் இவர்கள் குறிக்கோள்.
இந்தியாவில் உள்ள இந்த IT புலிகள் இந்திய விவசாயிக்காக ஏதாவது யோசித்தது உண்டா?

என்னளவில் துறை சார்ந்த வெற்றி என்பது வேறு, சமூக அக்கறை/முன்னேற்றம் என்பது வேறு.

நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

said...

அவனவனா திருந்துனுங்க. குடும்பம், சமூகம் அப்பிடின்னு ஒரு சில விஷயங்கள் இருக்குனு அவனுக்கு தோணனும். சுரண்டல எதிர்த்து பேசணும், Atleast அவன் மேலாளர் கிட்ட.

சொல்றதுக்கு கஷ்டமாதான் இருக்கு, ஆனா வேற வழியில்லை. Hangout அப்பிடிங்கற வார்த்தையை இங்கே அடிக்கடி உபயோகப்படுத்தறாங்க, Atleast, அந்த Hangout-க்காக குடும்பம், சமூகத்தை அவன் திரும்பி பாத்தா போதுங்க. இல்லைனா Dating-க்கு அடுத்தபடியா, "Virtual Sex"-க்கு allowance தர ஆரம்பிச்சு, எல்லாத்தையும் virtual ஆக்கிருவான்

said...

***********
//குடித்து விட்டு எழுதும் நாங்கள் பொறுக்கிகள் இப்படி சொல்கிறோம் எனில் குடிக்காமால் தெளிவாக இருக்கும் நீங்களாவது ஏதேனும் தீர்வு சொல்லுங்கள்... கேட்டுக் கொள்கிறோம்...//

:-)))
*********

நமாதான் இத சொல்றதா நினைச்சுக்கிட்டு நாடோ டியும், அனானியும் காய்ச்சுறாங்க. கட்டுரை முழுவதும் இவர்களின் ஆதர்ச பொருளாதாரத்தை தாக்கு தாக்குன்னு தாக்கி அம்பலப்படுத்துவது இவர்க்ளின் முதலாளி பிரபாத். அவரையும் குடித்து விட்டு உளறுபவர் என்று சொல்வார்களான தெரியல....

ஆளும் வர்க்க அரசியலின் வலிமை இதுதான்.. அங்க இவிங்க முதலாளி ஒருத்தனே இதுல ஒன்னுமில்லடா கொப்பமவனேன்னு அம்பலப்படுத்துறான். இவிங்க என்னடான்னா ஒத்துக்காம நம்மகிட்ட மல்லுக்கு நிக்கிறாங்க.....

:-)))***********
பிரச்சனை முதலில் புரிந்தால்தான் தீர்வு.
பிரச்சனை புரிவதற்கு முதலில் ..பிரச்சனை உள்ளது என்று அறியும் பக்குவம் வேண்டும்.

IT வேலை
கார்
வீடு
பிட்சா
iPOD

இதனுடன் முடிந்துவிடும் இப்போதைய நவ நாகரீக உலகம் அடுத்தவனைப் பற்றிக் கவலைப்பாடது.

பாதிக்கப்பட்டது/படுவது நாம்தான் என்று அறிவதற்கே இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். அதற்குள் வால்மார்ட் என்ன ... எல்லா மார்ட்டுகளும் பங்கு போட்டிருக்கும்.

நாமும் பல்லைக் காட்டிக்கொண்டே அடகு போவோம்.

பலசரக்குக் கடை வைப்பதற்கு எதற்கு வாலுமார்ட்டு கூட்டணி?
***********

அது சரி, நாடார் சமூகத்து ஜனங்களுக்கு தெரிஞ்சா பிஞ்ச வெளக்கமாத்து கட்டையாலயே அடிப்பார்கள் ஏன்டா மளிகை சாமான் கடை வைக்கக் கூடவாட எங்காளுங்களுக்கு துப்பு இல்ல

நன்றி கல்வெட்டு :-))

அசுரன்

இங்குள்ள எவனுக்கும் துப்பில்லை?
**********

said...

//இங்குள்ள எவனுக்கும் துப்பில்லை? //

கொஞ்சம் சூடாகப் பேசி விட்டேன். :-((

இங்கு எவன்(னுக்கும்) என்ற குறியீடு ..பொதுவான சுரணையற்ற அதிகாரவர்க்கமும் அதன் அல்லகைகளையும் குறிக்க சொல்லாக பயன்படுத்தியது.
எந்த தனிநபரையும் நோக்கியல்ல.

said...

கல்வெட்டு சரியான தருணத்தில் அந்த கட்டுரையை ஞாபகப்படுத்தியுள்ளீர்கள் நன்றி :-))

http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

********

ஹரி, அதுவரை என்ன செய்வது? சும்மா பார்த்துக் கொண்டிருப்பது தகுமா. திரும்ப திரும்ப சொல்லி புரிய வைக்க வேண்டும். புரிந்தவர்கள் செயல் பட வேண்டும். செயல் படுவது குறித்து அலோசிக்க வேண்டும்.

somebody should set an example.....

அசுரன்

said...

Annonyni kku aasath

"...he hadn't sleep at night;
He hadn't sleep while sunrise"
--Iqbal

That words describe about Thippu. Yes, everynight he had not sleep. But he had thinking about the annihilation of East Indian Company. Eventhough lost his Third Mysore war, he didn't permit the Esat Indian Company within his barrier.

He gave his two sons to Wellesly for nation. So he had sorrow slightly. But he had wake-up and plan his fourth war.

But he lost this plan. Do you remember the sean of Srirangapattinam on May '1799. Everyone in the town had fallen to give the respect to their Sulthan.
Thippu vizhithiruntha iravugalaip puria mudigiratha; Ungalathu Kannini munpana thanimayien theavaiyum purigiratha?

What is the meaning of Human faced Marxism? Is it like Magalir Suia Udhavik Kuzhu, or NGO's like poor house, prevent child labour .... etc)

If you go to invent a medicine to a human body, how you treat the inputs with humanity face? Even while the discover of new countries or planets also have not human faced in this society.

We need Dialectic Materialism to change the world. This sword had help to improve Marx also. So you can't understand the dialectics. so, You want a Mesiah with Red-Flag. But, the name for this incident is Backward pulling.

Anotherone doubt,
Are you Bill gates or his agent? Because he need the participation of work within the countries. If 3rd worlds to be knock-out from their living, you sing a song spring not sink.

Before two centuries, yor name is "Vijayaragunatha Thondaiman"
His words from the lr to the East Indian premises is follows: "Sir, Why this fellow Marudhu (Brors of Marudhu) had want to join with Sivathaiah (Brors of Kattabomman) to fougt against you and became hanged.

My Lord! If anyone trust you, they became lived wealthy. I shown that the case of Mahamad Ali, Marathaas, ... etc. Also, if anyone fougt against you has destroyed like Santha Sahip.

But, I can't understand that the decision of Marudhu? ...."

-aasath

said...

அசுரன் அய்யா,

யாரோ ஒருவர், பேரு ஜிப்சி, ஒரு தனி பதிவே போட்டுட்டாரு."நம்ம புரட்சிகர கட்சி மூக்கை நீட்டாமல் இருந்தாலே போதும்,இந்த துறை பிழைச்சுக்கும்;எங்க பிரச்சனையை நாங்களே தீத்துக்கறோம்;உங்க உதவி தேவையில்லை" என்ற லெவெலில் எழுதிட்டாரு.

நான் கூட கேட்டேன்" ஏங்க, எங்க தலைவர் எழுதிய 55 பதிவுகளையும், 55x55 பின்னூட்டங்களையும் ஆழ்ந்து உள்வாங்கிவிட்டு யோசிச்சு முடிவு எடுங்கய்யா" ன்னு சொன்னேன்.

அதுக்கு அவரு "போங்கய்யா, நீங்களும், உங்க கட்சி தலைவரும். உங்க தலைவர் பின்னூட்டம் போடறதில்லயா, செம்மையா பதில் சொல்வது என்ற பெயரில் பதிவே போட்டுடறாரு;அதனால ஆழ்ந்து உள்வாங்க வேண்டிய சமாசாரம் 55 பதிவுகள் +(55x55)பின்னூட்ட பதிவுகள். உள்வாங்கி, உள்வாங்கி ,மூச்சு முட்டுதய்யா"ன்னு கைய தூக்கிட்டாரய்யா.கூடவே உங்க தலைவருக்கு சொல்லுங்க "An explanation which requires another explanation to explain the original explanation is no explanation" அப்படின்னு ஆங்கிலத்திலே வேற சொல்லிட்டு போயிட்டாரு.

என்னக்கேட்டா நம்ம கட்சி இந்த துறையை விட்டு விட்டு, பழய படி திராவிட கட்சிகளுக்கு விளக்கு பிடிச்சுக்கிட்டே அவங்க யார் கையிலே மலம் குடுக்கறாங்களோ அந்த ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் குடுத்துக்கினே இருக்கலாம்னு தோணுதய்யா.
இந்த IT பசங்க என்ன ஒடுக்கப்பட்டவங்களா? எல்லாம் குடுக்கப்பட்டவங்க.

எதுக்கும் ஒருமுறை நீங்கள், நம்ம இளைய தளபதி ராஜ்வனஜ் அய்யா, நம்ம US representative செவ்விந்தியன் அய்யா, மற்றும் நான் ஒரு சின்ன மீட்டிங் போட்டு ஒரு முடிவுக்கு வருவோமய்யா.என்ன சொல்றீங்க?

பாலா

said...

தோழர் அசுரன்,

//அவன் விழித்துக் கொண்டான், சங்கமாக திரண்டுள்ளான். நாமோ நமது பிரச்சனைகள் குறித்து பேசுவதற்க்கு கூட பயந்து கொண்டு பிழைப்புவாதம் பேசி திரிந்து கொண்டிருக்கிறோம்//

மிக மிக நல்ல பதிவு.. விவாதங்களும் நன்றாக போய் கொண்டிருக்கின்றன.. ஒரு தகவல் தொழில்நுட்ப தொழிலாளியின் வாழ்த்துக்கள்... மேலே குறிப்பிடப்படும் வரிகளை கொண்டு நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை நம் முதலாளி தீர்மாமானித்துவிட்டான் என்று தெரிகிறது...தகவல் தொழில்நுட்ப தொழிலாளிகளின் ஒருங்கினைவு ஒரு வரலாற்று தேவை... ஆக்கமான ஆழமான பணி... தொடருங்கள் தோழர்.. புரட்சிகர வாழ்த்துக்கள்....

தோழமையுடன்
ஒடுக்கப்பட்டவன்

said...

A really good post Mr.Asuran. But,

"ஆயினும் இன்றைய இந்தியாவின் இளைய சமுதாயம் அப்படிப்பட்ட ஒரு சமூக வாழ்வை அடைவதைத்தான் லட்சியமாகக் கொண்டுள்ளனர்" Do we have any choice. Beggers are not choosers. Our govt.has not provided us with adequate employment oppurtunities in our own industries. We require MNCs and their money to improve the basic infrastructure in our country. We do not have enough roads, railway lines, potable water, clothing and shelter for all. All this requires money and where from the govt.will get money for all these.

Our population is >1 billion and we need to feed all of them. Our agriculture based economy cannot sustain livelihood of all our citizens. So, some investment by MNCs are required. Backoffice is one of them.

Of course, it affects the normal life of our young, but our young does not have any choice.

said...

இந்தியாவில் நீங்கள் குறிப்பிட்டது போல உலகமய பொருளாதாரத்திற்க்கு பின்பு வறுமை ஒழிந்துள்ளது என்பது உண்மை கிடையாது என்பதை எனது 'ஏன் ஒப்பாரி வைக்கிறீர்கள் அமெரிக்க அடிவருடிகளே' என்ற பதிவில் விளக்கியுள்ளேன்.

இதே விசயத்தை நமது மானங்கெட்ட மன்மோகன் சிங்கே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதை எனது முந்தைய பதிவு 'யார் சொல்றதுனு பாத்தீகளா' வில் அம்பலப்படுத்தியுள்ளேன்.

உண்மையில் உலகமயம் வறுமையை அதிகரித்துள்ளதும், Wealth distribution என்பது மிக ஏற்றத்தாழ்வான நிலையை உருவாக்கியுள்ளது, ஏழை பணக்காரன் பிளவு அதிமாகியுள்ளது இவற்றை இந்திய அதிகார வர்க்கத்திலிருந்து ஐ.நா சபை செயலர் வரை அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர். மூன்றாம உலக நாடுகளில் ஏற்ப்பட்டுள்ள விவசாய சீரழிவுதான் WTOவின் கடைசிப் பேச்சு வார்த்தை தோல்விக்குக் காரணம். அடுத்து நடக்கவுள்ள பேச்சு வார்த்தையும் தோல்விய்டையலாம் என்று கணிக்கிறார்கள் முதலாளித்துவ ஊடகங்கள்.

உண்மையில் இந்தியாவைப் பொறுத்தவரை, விவசாயத்தை முதலாளித்துவமயமாக்குவதும், சிறு தொழில், தேசிய பெருந்தொழில்களை ஊக்குவிப்பதுமே மிகப் பெரிய அளவில்(அதாவது வேலைக்கு ஆள் கிடைக்காத அளவில்) வேலைவாய்ப்பினையும், மூலதன பரவலையும் சாத்தியமாக்கும்.

இதில் விவசாயத்தை நவீனமாக்குவது என்பது குறித்தும் சில பதிவுகள் எழுதியுள்ளேன், குறிப்பாக 'பத்ரியின் கிராமப் பொருளாதார திட்டம் - ஒரு உட்டோ பியா' என்ற கட்டுரையை படிக்கலாம்.

உண்மையில் ஒரு நாட்டை வளப்படுத்த தேவைப்படுவது மூலாதார வளங்களும், மனித வளமும், தொழில்நுட்பமும். நம்மிடம் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பமே போதுமானது. இதை கொண்டே சுயசார்புடன் நாம் வளர்ந்து மிக நுணுக்கமான அடுத்த கட்ட தொழில்நுட்பங்களை படைக்கலாம்.

இவையெதுவுமே இல்லாத க்யுபா எனும் குட்டி நாடே ஐநாவிடம் சிறந்த் ஜனநாயகா நாடு என்ற பாராட்டைப் பெற முடிந்தது எனில் காரணம், அங்கு இருக்கும் சொற்ப வளத்தை மக்கள் நலனுக்கு பயன்படுத்தியதுதான்.

ஆக, பிரச்சனி மூலதனம் அல்ல. ஏனெனில் மூலதனம் என்பதே கூலி உழைப்பின் ஒரு தயாரிப்புதான். நம்மிடம் கூலி உழைப்பும், வளங்களும், சந்தையும் மிகப் பெரிய அளவில் இருக்கும் போது மூலதனம் ஒரு பிரச்சனை இல்லை(post 1970 china is an Example in this regard).

சரி அதை விடுவோம், IT தொழிலாளர்களின் பிரச்சனைக்கு என்ன செய்யலாம் என்றூ கூறுகிறீர்கள்.

இப்பொழுது சுகமாக இருக்கிறது என்று அமைதியாக இருந்து விடலாமா?

ஏனேனில், சிறு நகரங்கள் இன்று சவக் கிடங்குகளைப் போல காணப்படுகிறது. காரணம், விவசாயம், மற்றும் சிறு தொழில்கள படுத்து விட்டதுதான். பலரும் சொல்வது, புதுசா முதல் போடாதீங்க,.... நாங்களே போட்ட காசுக்கு ஏதாச்சும் வந்தாப் போதும்னு தொழிலை ஓட்டிக்கிட்டு இரூக்கிறோம்னு.

நமது பெற்றோர்களின் தலைமுறை ஏதொ ஒன்றைச் செய்து நம்மை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளனர். ஆனால், நாளை நமது பிள்ளைகளுக்கு இதே போன்ற அளவிலாவது ஒரு நல்ல சமூகத்தை விட்டுச் செல்லும் சாத்திய கூறு உள்ளதா?

இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

சரி, குறைந்த் கூலிக்காக இன்றைய நமது முதலாளிகள அவர்களின் முன்னாள் தொழிலாளர்களை நட்டாற்றீல் விட்டு விட்டு வந்தவர்கள்தானே. நமக்கும் இதே நிலைமை வராது என்பதற்க்கு என்ன உத்திரவாதம்?(no guranty, SEZ are great threat to IT employees)

விலைவாசி உயர்வும், தரகு வர்க்க முத்லாளிகளின் வரிப்பணத்தையும் நம் தலை மீது சுமத்துவது, சுற்றுச் சூழல் சீர்கேடு, சமுதாய அழுத்தத்தின் காரணமாக ஏற்ப்படும் சமூக வன்முறை இப்படு நம்மை வாழவைப்பதாக் நாம் கருதும் பொருளாதாரம்தன் நமக்கு பல அபாயகரமான சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. இந்த பொருளாதாரம் வாழவைப்பது நிரந்தர்மல்ல ஆனால் சிக்கல்கள் நிரந்தரம். என்ன செய்யலாம்?

//Of course, it affects the normal life of our young, but our young does not have any choice. //

அதைத்தான் நானும் சொல்கிறேன். ஏகாதிபத்தியம் உங்களுக்கு சாய்ஸ் குடுத்து சுரண்டக் கூப்பீட்டால் வரமாட்டீர்கள். அதனால்தான் தனது மூலதனத்தை அவன் திணிக்கும் முன்பாக அதற்க்கு தேவையான சந்தைச் சூழலை திணிக்கிறான்.

For Ex:
சிறு தொழில் நசிவு, வேலையிழப்பு - பெருந்தொழில்களில் அவன் மூலதன்மிடுதல், குறைந்த கூலிக்கு ஆள்.

விவசாயத்தை இறுக்கிப் பிடித்து கொல்வது, விவசாயியை விரட்டுவது - விவசயி விட்டுச் சென்றுள்ள கிராம வளமும், விவசாய சந்தையும் அவன் கையில்.

அரசு நிறுவனங்களில் வேலைக்கு எடுப்பதில்லை, புதிய முதலீடுகள் இல்லை, ஆனால் ப்ரொபசனல் கல்லூரிகளை நூற்றுக்கணக்கில் ஆரம்ப்பிப்பது - அவன் வந்து முதலீடு செய்து இந்த ப்ரொபசனல்களை குறைந்த கூலிக்கு(அவனுக்கு அது குறைந்த கூலி) சுரண்டுவது.

அவன் எதையுமே தெரியாமல் செய்வதுமில்லை. தெரிந்தும் நமக்கு சாய்ஸ்க்கள் கொடுப்பதில்லை. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டாத குறைதான். அப்படி மிரட்டினால்தான் நம்புவேன் என்று சிலர் சுகநாட்டாவாதத்தில் மூழ்கி உள்ளனர். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

மேலும் நான் இந்த வேலையை விடச் சொல்லவில்லை. இதன் உத்திரவாத மின்மையை சொல்லி, இப்பொழுது நமது கையில் அதிகாரம் இருக்கும் போதே(அதாவது இப்போழுது அவன் ந்ம்மை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான்) நாம் நமது அடிப்படை உரிமைகளை கேட்டுப் பெறுவது சாலச் சிறந்தது என்பதும், எதிர்காலத்தில் அவன நம்மை கைகழுவி விட முயலும் போது நமது இந்த ஒற்றுமை நமக்கு பயன்தரும் என்பதையும்தான் இங்கு குறிப்பிடுகிறேன். ஏனெனில் இவையணைத்தையும் உள்வாங்கிக் கொண்டு அவன் தயாராகிறான்.

பாபுபிரியாவின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

அசுரன்

said...

//My Lord! If anyone trust you, they became lived wealthy. I shown that the case of Mahamad Ali, Marathaas, ... etc. Also, if anyone fougt against you has destroyed like Santha Sahip.

But, I can't understand that the decision of Marudhu? ...."//

அற்பவாதிகளை மிகச் சரியாக தேவையான இடத்தில் ஞாபகப்படுத்திய நண்பர் ஆசாத்திற்க்கு நன்றிகள்!!

'மார்க்ஸ் பிறந்தார்' புத்தகத்தில் முதலில் அவர் தனது ஆரம்பகாலத்தில் போராடிய அற்பவாதிகாள் குறித்து வருகிறது. இவர்கள் அடிக்க உதவும் பிரம்பின் மீது அதீத காதலுடன் உள்ளனர் என்று நக்கலாக வரும். அதாவது பிரம்பின் மீதும் சவுக்கின் மீதும் நாய்த்தனமான காதல் கொண்ட இவர்கள் யாரேனும் அந்த பிரம்பின் மீதும் சவுக்கின் மீதும் கைவைக்க துணிவார்கள் எனில் பாய்ந்து கடித்து கொதறி விடுவார்கள் என்று வரும்.

அதாவது இவர்களின் உரிமை குறித்து பேசினால் கூட பாய்ந்து குதறிய நாடோ டி வகையாறாக்களைத்தான் அது சுட்டுகிறது.

இவர்களின் முதலாளி பிரபாத்தே, இந்த அமைப்பு கேடானது, இதில் எதிர்காலம் என்றூ ஒன்றும் கிடையாது, முதலாளித்துவத்தின் கையில் மாட்டிக் கொண்டுள்ள தொழில்நுட்பம ஆபத்தானது' என்று சொல்லும் போது, இவர் நம்மை வந்து திட்டுகிறார் எனும் போது பிரம்பின் மீது காதல் கொண்ட அந்த உதாரணம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.

சத்யம் நிறுவனத்தின் இயக்குனர் பிரபாத் இழிச்சவாயரா அல்லது நாடோ டியா எனபதை படிப்பவர்க்ள் முடிவு செய்யட்டும்.

நீஙக்ளும் அதே அம்சத்தில் அதிகார வர்க்கத்திற்க்கு அடிமை சேவகம் செய்த விடுதலைப் போராட்ட கால அற்பவாதி ஒருவனை இங்கு ஞாபகப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!!!

அசுரன்

said...

////

That words describe about Thippu. Yes, everynight he had not sleep. But he had thinking about the annihilation of East Indian Company. Eventhough lost his Third Mysore war, he didn't permit the Esat Indian Company within his barrier.

He gave his two sons to Wellesly for nation. So he had sorrow slightly. But he had wake-up and plan his fourth war.

But he lost this plan. Do you remember the sean of Srirangapattinam on May '1799. Everyone in the town had fallen to give the respect to their Sulthan.
Thippu vizhithiruntha iravugalaip puria mudigiratha; Ungalathu Kannini munpana thanimayien theavaiyum purigiratha?

What is the meaning of Human faced Marxism? Is it like Magalir Suia Udhavik Kuzhu, or NGO's like poor house, prevent child labour .... etc)

If you go to invent a medicine to a human body, how you treat the inputs with humanity face? Even while the discover of new countries or planets also have not human faced in this society.

We need Dialectic Materialism to change the world. This sword had help to improve Marx also. So you can't understand the dialectics. so, You want a Mesiah with Red-Flag. But, the name for this incident is Backward pulling.
/////வெகு அருமை தோழர் அசாத்,

திப்புவின் தன்னலமற்ற தியாகத்தை சில வரிகளில் உணர்ச்சி பொங்க விவரித்துள்ளீர்கள்.

மார்க்ஸிசத்தை நேரடியாக வெற்றி கொள்ள முடியாது என்பதுதான் இரண்டாம் உலகப் போர அனுபவம். அதற்க்கு முன்பிருந்தே அதை திருத்தி திசை திருப்பும் வேலைகளை செவ்வனெ செய்து வந்துள்ளனர்.

அசுரன்

said...

BabuPriya kku aasath

Everyone has got two choice. One is accept the slaveness; anotherone is go to the struggle.

On the day of VOC/Bagath, many Rao Bagathurs, Thivvan Bagathurs were here to be form the biller of British Samrajyaa.

If our IT employees are begger, what is the status of the suicided farmers of Vidherba and AP.

They had got 2 options. One is escape from law as our cine stars, parlimentarians (a) politicians ...etc. Another one is suicide. They took second one like Kattabomman, Marudhu Brors, ...

But we reqired to change them as Thippu ...

I accept your concern on our cultivation process. What is the govt. plan to fulfill to the nation. If through any 2nd green revolution ... ??

Are you give the value to Rice or Gold (ie, Money). Today our govt have destroy the agriculture for SEZ. Gold/money is not use to eat.

From Lord. Dalhoshi, we have lot of Roads & Railway tracks for the mobilization of Capital from India to Europe for the name of TATA, Birla, Bajaj ... etc. Nowadays, MNCs become reqiure it.

Backoffice -- Do you know the "Naadi Jothidam". They have Life reports for all the people. It is based on Pseudo-Science. But this back-office is called as "Scientific Naadi Jothidam"

But we need the Scientific Changes on this society. We can fulfill our food requirement while came out from GATT.

-aasath

said...

////

//அவன் விழித்துக் கொண்டான், சங்கமாக திரண்டுள்ளான். நாமோ நமது பிரச்சனைகள் குறித்து பேசுவதற்க்கு கூட பயந்து கொண்டு பிழைப்புவாதம் பேசி திரிந்து கொண்டிருக்கிறோம்//

மிக மிக நல்ல பதிவு.. விவாதங்களும் நன்றாக போய் கொண்டிருக்கின்றன.. ஒரு தகவல் தொழில்நுட்ப தொழிலாளியின் வாழ்த்துக்கள்... மேலே குறிப்பிடப்படும் வரிகளை கொண்டு நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை நம் முதலாளி தீர்மாமானித்துவிட்டான் என்று தெரிகிறது...தகவல் தொழில்நுட்ப தொழிலாளிகளின் ஒருங்கினைவு ஒரு வரலாற்று தேவை... ஆக்கமான ஆழமான பணி... தொடருங்கள் தோழர்.. புரட்சிகர வாழ்த்துக்கள்....
//////

IT தொழிலாளிகளின் ஒற்றுமையின் தேவையை வலியுறுத்தியுள்ள ஒடுக்கப்பட்டவனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

அசுரன்

said...

///
I accept your concern on our cultivation process. What is the govt. plan to fulfill to the nation. If through any 2nd green revolution ... ??

Are you give the value to Rice or Gold (ie, Money). Today our govt have destroy the agriculture for SEZ. Gold/money is not use to eat.

From Lord. Dalhoshi, we have lot of Roads & Railway tracks for the mobilization of Capital from India to Europe for the name of TATA, Birla, Bajaj ... etc. Nowadays, MNCs become reqiure it.
////

Aasath,

Good Questions and Good Exposition

If possible Do send mails to me....

asuran07@gmail.com

Asuran

said...

I am Chandhrasekara aasath.

I am a mobilized person. I expect every spark on the society, even within Slaves also.

I expect the alienated anonymous

Don't waste your time with me.

-from Alfred Park, Alaghabhad

said...

aasath - your point is well taken. My only concern is, in tamilnadu alone, we have 240 engineering colleges and per year we are creating close to 25000 engineering graduates and close to 1 million graduates in other fields. Is our agrarian based economy equipped to handle this volume on a annual basis.

Secondly, i am not favouring MNCs, but even our locally grown companies are not investing in R&D, which is more curcial for wealth creation. By wealth, i mean Intellectual Wealth, which is more important for our future. I know that MNCs are using the low cost of india to their advantage and using the profit for more R&D, thereby squeezing our backbone. But, we have not learned from our past mistakes and even our home grown companies like bajaj, reliance, tatas, birlas and tvs are not interested in investing in Intellectual Wealth.

So, the idea should be to create wealth. Somebody should bell the cat.

"இந்தியாவில் நீங்கள் குறிப்பிட்டது போல உலகமய பொருளாதாரத்திற்க்கு பின்பு வறுமை ஒழிந்துள்ளது" - i have never mentioned that globalisation has eliminated poverty in india. but, definitely, because of globalisation close to 250000 graduates has got a job to sustain their present day living.

at least our graduates after completing their college gets some job worth rs.5000 or rs.10000 to sustain their livelihood.

I know this is not the solution, but instead of waiting for somebody to give solution, is it wrong to grab the oppurtunity thrown at us.

said...

Anonymous kku aasath

1. Alienation is not there on Feudal Society/Socialist Society also. Because workers (field) have not detached with their instruments which is use to production as well as their colleague. So anomie is utopia to this society. As per your words, the so-called socilist society where are you found that?

2. You celebrate the nowadays generation against their parents. Remove your narrow-sight specs. Young generation need five years only for it. But, at the same time a farmer/labour move beyond the earth. This acceptace, (so-called 'celebrated') properties gave a value about the son of Bil gates (as like the son of famous Vijayaragunatha Thondaiman).

3. Who drunk and celebrate their weekends? Who insist this culture.

It is Black & White cinema. But you murmur continuously that is Color cinema.

4. Are you want a Union or a association of Managers, Team leaders with operators (so-called "1885 Congress"). So you like to write a lot of petitions to your Boss. If it is correct, Who is your main Boss

5. This is not leftist Utofia. It is the first step to form a paradise on the earth. If you already got it, it is not for your knowledge. That is derived from the suppression of the whole indian society by varnashrama dharma / by gold (money) / by sex (male chavinism) / by open the indian market/ by green revolution/ by child labour/ by the govt is detached from the peoples welfare ... by etc.

5. On Feudal Society - there are 3 shifts as well as Socialist society.
On feudal - It has derived values. Any boss can't gave the lay-off to the coolie farmer. Should Retain Some relationship (backward only) with them is very important to sustain their Society's living

On Socialst Society - They (commitees) ruled them (Proliterates) as well as the friendly/enemy classes also. So, you wear a white glass. Red is raise your fear like UK after second world war

-aasath

said...

babupriya,

////
aasath - your point is well taken. My only concern is, in tamilnadu alone, we have 240 engineering colleges and per year we are creating close to 25000 engineering graduates and close to 1 million graduates in other fields. Is our agrarian based economy equipped to handle this volume on a annual basis.

Secondly, i am not favouring MNCs, but even our locally grown companies are not investing in R&D, which is more curcial for wealth creation. By wealth, i mean Intellectual Wealth, which is more important for our future. I know that MNCs are using the low cost of india to their advantage and using the profit for more R&D, thereby squeezing our backbone. But, we have not learned from our past mistakes and even our home grown companies like bajaj, reliance, tatas, birlas and tvs are not interested in investing in Intellectual Wealth.

So, the idea should be to create wealth. Somebody should bell the cat.

/////

இந்தியாவின் தொழில்நுட்பங்கள் முக்கியமாக மருத்துவ துறையில் இந்திய தேசிய முத்லாளிகளின் கண்டுபிடிப்புகளே.. அவர்களின் முழு திறமையை கட்டவிழ்த்துவிடும் வாய்ப்பு கொடுக்காமலேயே பேசுவது சரியல்ல. அப்படி கட்டவிழ்த்து விடப்பட்டு தொழில் வளர்ச்சி அதீத வேக்த்தில் நடந்த நாடு சீனா(1970க்கு முன்பு). wealth creation குறித்தும் எனது முந்தைய பதிலில் கூறியுள்ளேன். அதை இங்கும் கொடுக்கிறேன்.

***உண்மையில் இந்தியாவைப் பொறுத்தவரை, விவசாயத்தை முதலாளித்துவமயமாக்குவதும், சிறு தொழில், தேசிய பெருந்தொழில்களை ஊக்குவிப்பதுமே மிகப் பெரிய அளவில்(அதாவது வேலைக்கு ஆள் கிடைக்காத அளவில்) வேலைவாய்ப்பினையும், மூலதன பரவலையும் சாத்தியமாக்கும்.

இதில் விவசாயத்தை நவீனமாக்குவது என்பது குறித்தும் சில பதிவுகள் எழுதியுள்ளேன், குறிப்பாக 'பத்ரியின் கிராமப் பொருளாதார திட்டம் - ஒரு உட்டோ பியா' என்ற கட்டுரையை படிக்கலாம்.

உண்மையில் ஒரு நாட்டை வளப்படுத்த தேவைப்படுவது மூலாதார வளங்களும், மனித வளமும், தொழில்நுட்பமும். நம்மிடம் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பமே போதுமானது. இதை கொண்டே சுயசார்புடன் நாம் வளர்ந்து மிக நுணுக்கமான அடுத்த கட்ட தொழில்நுட்பங்களை படைக்கலாம்.

இவையெதுவுமே இல்லாத க்யுபா எனும் குட்டி நாடே ஐநாவிடம் சிறந்த் ஜனநாயகா நாடு என்ற பாராட்டைப் பெற முடிந்தது எனில் காரணம், அங்கு இருக்கும் சொற்ப வளத்தை மக்கள் நலனுக்கு பயன்படுத்தியதுதான்.

ஆக, பிரச்சனி மூலதனம் அல்ல. ஏனெனில் மூலதனம் என்பதே கூலி உழைப்பின் ஒரு தயாரிப்புதான். நம்மிடம் கூலி உழைப்பும், வளங்களும், சந்தையும் மிகப் பெரிய அளவில் இருக்கும் போது மூலதனம் ஒரு பிரச்சனை இல்லை(post 1970 china is an Example in this regard).***

As Regarding Engineering College:
****
அரசு நிறுவனங்களில் வேலைக்கு எடுப்பதில்லை, புதிய முதலீடுகள் இல்லை, ஆனால் ப்ரொபசனல் கல்லூரிகளை நூற்றுக்கணக்கில் ஆரம்ப்பிப்பது - அவன் வந்து முதலீடு செய்து இந்த ப்ரொபசனல்களை குறைந்த கூலிக்கு(அவனுக்கு அது குறைந்த கூலி) சுரண்டுவது.
********

இதே போல நாளைக்கு விவசாயிகளை எல்லாம் நகரங்களுக்கு அத்துக் கூலியாக அரைப் பிச்சைக்காரர்களாக அனுப்பிய பிறக. MNCக்களையும், தரகு வர்க்க முதலாளிகளான அம்பானிகளையும் ஆதரித்து பின்வரும் கருத்தை வைக்கலாம்:

* இந்தியாவில் விவசாயம் செய்ய ஆள் இல்லை அதனால் அவனை அதில் நுழைப்பதில் தவறில்லை

* முந்தைய விவசாயி கூட்டம் நகரங்களில் வேலையின்றி உள்ளது அதனால் குறைந்த் கூலியோ அல்லது கொடுமையோ எதோ ஒன்று வேலை கொடுக்கிறான் அதனால் வாய மூடிட்டு இருக்கனும்.

ஆனால் விசயம் அவன் வருவதற்க்கு முன்பும் சரி பின்பும் சரி, போன பிற்ப்பாடும் சரி... இந்தியாவின் சுய சார்புக்கு தேவையான எல்லா வளங்களும், தொழில் நுட்பங்களும் இருக்கவே செய்கின்றன(including giving vast Employement opportunity). அதனால்தான் க்யுபா எ-கா ஒன்றை கொடுத்தேன்

கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள், இந்த இரு நிலைமைகளையும் அவன்தான் உருவாக்கினான். அதிலிருந்தே அவனுக்கு சாதகமான சூழலையும் கருத்தையும் கூட உருவாக்குகிறான்..

என்ன செய்யலாம்... ஒன்றும் செய்யாமல் கொடுப்பதை தின்று கொண்டும் இருக்கலாம், அல்லது நமது வருங்கால சந்ததிக்கு எதையாவது மிச்சம் வைத்துச் செல்லும் கடமைக்காகவும், தனது சொந்த எதிர்கால நலத்திற்க்காகவும் ஏதாவது செய்யலாம். இந்த இரண்டில் எதை எடுப்பது எதை விடுப்பது என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது. எமது வேலை இப்படி இரு சாய்ஸ்கள்தான் இருக்கிறது என்ற விசயத்தையாவது புரிய வைப்பதுதான்.

அந்த வகையில் அதை இங்கு செய்துள்ளோம்...
///
"இந்தியாவில் நீங்கள் குறிப்பிட்டது போல உலகமய பொருளாதாரத்திற்க்கு பின்பு வறுமை ஒழிந்துள்ளது" - i have never mentioned that globalisation has eliminated poverty in india. but, definitely, because of globalisation close to 250000 graduates has got a job to sustain their present day living.
///

நானும் அந்த அர்த்தத்தில் இதை குறிப்பிடவில்லை. அதாவது உலகமயம் வறுமையை அதிகப்படுத்தியுள்ளது, இதை எற்றுக் கொள்கிறீர்களா?

இரண்டு:

வேலை வாய்ப்பை பொறுத்த வரை. RBIயின் செப் 2005 அறிக்கை குறீப்பிடுவது வேலை வாய்ப்பு கம்மியாகி உள்ளது என்பதைத்தான். காரணம், சிறு தொழில் நசிவு(கர்னாடகத்தில் 70000 சிறூ தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன, விவசாயத்தின் அழிவு).

உண்மைதான் இஞ்சினியரிங் மாணவர்களுக்கு வேலை ஓரளவு உள்ளது எனும் கூற்று. இந்த அம்சத்தில்தான் சாய்ஸ் குறித்த எனது பதில் வருகீறது. அதாவது குறைந்த கூலிக்கு ஆட்களை உருவாக்க அதிகப்படியான இஞ்சினியரிங் காலேஜ்களை இந்தியா முழுவதும் தீடீரென்று அனைத்து மாநில அரசுகளும் திறந்த மர்மம் என்ன? அது ஒரு மர்மமும் கிடையாது, ஏகாதிபத்தியத்திற்க்குத் தேவையான வளங்களை கூட்டிக் கொடுக்கும் இந்திய தரகு வர்க்க அரசியல்வாதிகள் இங்கும் அதே வேலையைச் செய்தார்கள்.

ஆயினும், இ஦தே ப்ரொபசன்ல்கள்தான் ரயில்வேயின் காலாசிப் பணிக்கு ஆயிரக்கணக்கில் விண்ணப்பித்தார்கள். அது வேலைவாய்ப்பின்மையைக் காட்டாமல் வேறு எதைக் காட்டுகிறது.

ஆம், உலகமயம் வேலை வாய்ப்பை கொடுத்துள்ளது, மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்பை அழித்து.

நான் ஒன்றும் உலகமயம வழ்ங்கும் வேலைகளை யாரும் பார்க்காதீர்கள் என்று சொல்லவில்லையே.... எனது பதிலை இன்னொருமுறை படித்துப் பாருங்களேன்...

உலகமயத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு, குறிப்பாக IT துறை. அது குறித்து உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன். அந்த அம்சத்தில் நீங்கள் தெளிவாக எதுவும் இதுவ்ரை சொல்லவில்லை.////////
at least our graduates after completing their college gets some job worth rs.5000 or rs.10000 to sustain their livelihood.

I know this is not the solution, but instead of waiting for somebody to give solution, is it wrong to grab the oppurtunity thrown at us.
////

இதற்க்கு மேலேயே பதில் சொல்லியுள்ளேன். நான் வேலை பார்க்காதே என்று சொல்லவில்லை. வேலையைப் பார்த்துக்கொள் உனக்கு டிமாண்ட் இருக்கும் பொழுதே ஒற்றுமையாகி உரிமைகளுக்கு குரல் எழுப்பு. எதிர்காலத்தில் அவன் ஆப்பு வைக்கும் போது வலுவான சக்தியைக் காட்ட இப்பொழுதே தயாராகு... என்கிறேன்,

ஏனெனில் அவன்(IT கம்பேனிகள்) சங்கமாக திரண்டு பல்வேறூ திட்டங்களை தொடங்கிவிட்ட்னர்,

IT தொழிலாளர் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது குறித்த உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன். அல்லது இப்படியே கிடைப்பதை கொண்டு எதையாவது செய்து கொண்டிருக்கலாம் தலைக்கு மேலே வெள்ளம் போகும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று ஏதேனும் எண்ணம் உள்ளதா?

அசுரன்

said...

IT -வேலை செய்பவர்களின் நிலை......இந்தியா இதனால் அடைந்த நன்மைகளை !? வலிமையான வார்த்தைகளில் உணார்திவிட்டிர்கள்...

//
"ஆனால் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அப்படி ஒரு நிலை இருப்பதை நாம் உணர்வதில்லை அல்லது அதிலிருந்து ஓடி ஒளிய விரும்புகிறோம். முரன்நகையாக, தகவல் தொடர்பின் உச்சத்தில் உள்ள ஒரு உலகத்தில், தனிமையும், அதீத அச்சமும், மனச் சஞ்சலுமும்தான் அதிகப்படியாக உணரப்படுகிறது. எந்த ஒரு உறவும் உத்திரவாதப்படுவதாக இல்லை." இப்படி சொல்வது நாம் அல்ல. ஏகாதிபத்தியத்தின் குலக் கொழுந்து திருவாளர் பிரபாத், சத்யம் இணை-நிறுவனர் கூறுகிறார்.//

//இந்த விசயத்தை ஹரி கண்ணுற வேண்டும். மேலும் எந்த ஒரு புரட்சிகர சூழலுக்கு முன்பும் அந்த சமூகம் ஆகக் கேடான சுயநலம், சந்தேகம், தனிமனித வாதம், கோழைத்தனம் போன்ற பண்புகளில் மூழ்கித் திளைக்கும். இவையனைத்துமே சமூக பொருளாதார பிரச்சனைகளின் அழுத்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முதல் முயற்சியின் வெளிப்பாடு. இவை தோல்வியுறுவதை ஓவ்வொரு மனிதனும் தனது சொந்த அனுப்வத்தில் உணர்வதும், அந்த நேரத்தில் அவர்களை அணி திரட்டி விழிப்புணர செய்ய ஒரு புரட்சிகர அமைப்பு இருப்பதும் அவசியமாகிறது.
//

மிக மிக நேர்த்தியான பதிவு.

said...

"உலகமயத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு, குறிப்பாக IT துறை. அது குறித்து உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன். அந்த அம்சத்தில் நீங்கள் தெளிவாக எதுவும் இதுவ்ரை சொல்லவில்லை" - Mr.Asuran - You think that bringing union in IT sector will solve the problem what they face. The employee in the IT sector is not faced with a financial crisis, but it is an emotional one. He saves a lot for his gen.next, but he is not saving any time for his individual life. do you think this issue can be addressed by an union in IT sector. I don't think so. probably, you can say that 8 hours work in a week can be brought about by the unions. in fact it is there in other industries as well, but do you think that even our home grown companies (leave alone MNCs) practice this. Is there any overtime paid for these excess hours spent by our industries. I am not talking about big companies, but small enterprises, again home grown companies.

Again, i am not against the union concept, but the unions are so divided with political parties joining hands and creating their own union like BMS, CITU, INTUC,etc. I had seen this and am seeing this regularly. 2 years back, when the then state govt.of TN announced bonus for PTC employees, it was welcomed by the ruling party union and opposed by the opposition party union and they stopped operating the bus, but later on joined and if my memory goes right, the govt.has not changed its stand on the issue. Again in 2001, when the then state govt.dismissed all its 1 lakh employees, the unions were also cancelled. just because, there were a hell lot of unions in place and they were not speaking in a single voice. the govt.in fact made the supreme court give its verdict in its favour, because there was no unity among the unions. so which union you want to establish in the IT sector. same divide and rule policy will work and you can't achieve anything. i don't see the union has done or achieved anything significantly post globalisation in our country, ie.after 1991.

Latest example is the privatisation of mumbai & delhi airports. has the union of these 2 airports achieved what they want and did the left parties achieved what they required. no. a very big no.

I AM ALSO IN FAVOUR OF UNION CONCEPT AND THAT TOO IN IT SECTOR AS THE SAYING GOES, "MAKE HAY WHEN THE SUN SHINES". LET THE UNIONS COME OUT WITH A CLEAR POLICY AND UNITY AMONG THEMSELVES, LEAVING ASIDE POLITICAL AFFILIATIONS OR LET THERE BE ONLY ONE UNION. AFTER ALL UNION IS A CONGLEMERATION OF PEOPLE WHO JOIN HANDS TO WORK NOT ONLY FOR THEMSELVES, BUT FOR THEIR FUTURE AS WELL".

அதாவது மற்ற தொழிலாளர்களைப் போலவே நானும் இருந்து கொள்கிறேன் என்று சொல்கிறீர்கள். அது உங்கள் உரிமை. குறைந்த பட்சம் IT தொழிலாளியை கூலிக்காரன் என்று ஒத்துக்கொள்ளும் உங்களது மனதிடத்தை நான் பாராட்டியே தீர வேண்டும். ஏனெனில், நீங்கள் அவனை இந்தியாவின் ஹோம் க்ரவௌன் கம்பேனிகளின் அதீத சுரண்டல் நிலையுடன் ஒப்பிட்டு கூறியுள்ளேர்கள். இதை சிலர் ஏற்றுக் கொள்வதில்லை(செந்தழல் ரவி கூட சில நாள் முன்பு IT கூலி என்ற வார்த்தைக்காக கோபப்பட்டு எதோ எழுதியிருந்தார்).

சரி அதை விடுங்கள்,

IT தொழிலாளர்கள் ஒற்றுமையாகக் கூடாது என்று சொல்கிறீர்களா? நான் ஒன்றும் யூனியன் கொண்டு வருவது தீர்வைக் கொடுக்கும் என்று சொல்லவேயில்லையே. இன்னும் சொன்னால் மிக அழுத்தமாக இந்த கம்பேனிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றுவதுதான் தீர்வு கொடுக்கும் என்பதையும், இந்த தொழிலாளர்களை(IT) இந்திய விவசாயத் தொழில், சந்தைக்கும், சிறு மற்றும் தேசிய பெரு தொழிலகளுக்கான முதுகெலும்பான சேவைகளை செய்வதற்க்கும் பயன்படுத்துவதுதான் தீர்வு கொடுக்கும் என்கிறேன்.

யூனியனின் தேவை சட்டப் பூர்வ உரிமைகளையாவது வாங்கிக் கொடுப்பதும், நமது முதலாளிகள் நம்மை ஒரு கழிவறைக் காகிதம் போல காரியம் ஆனதும் வீசி எறியும் சூழலில் நம்து ஒற்றுமையின் மூலம் ஒரு குறைந்த பட்ச தீர்வை நோக்கி போவதும். அல்லது அவ்வாறு அவன் தூக்கியெறியும் முன்பே அவர்களை நாம் தூக்கியெறிவதற்க்கும் நமது ஒற்றுமை அவசியம் என்ற அடிப்படையில்தான் இதை சொல்கிறேன். மேலும் சிந்திக்கவும், தகவல்களின் மிக அருகாமையிலும் இருக்கும் இவர்கள் ஒரு அரசியல் சக்தியாக மாறுவார்கள் எனில் அது இந்தியாவின் பிற உழைக்கும் மக்களுக்கு வெளிச்சம் காட்டி வழி நடத்துவதாக இருக்கும்.

IT தொழிலாளியின் ஒற்றுமை எனும் பயங்கர கனவை எண்ணி நியாயமாக் IT முதலாளிதான் பயப்பட வேண்டும். ஏகாதிபத்திய கலாச்சார தாக்குதல் இங்கு தொழிலாளி பயப்படும் சூழலை உருவாக்கியுள்ளது. மிகவும் பரிதாபகரமான சூழ்நிலை.

சரி, பிரச்சனை இருக்கிறது என்றூ சொல்கிறீர்கள். தீர்வு என்ன? உங்கள் முதலாளீகளே உங்கள் மீது பாசத்துடன் இருந்து தீர்வை சொல்வார்களா?

நீங்கள் ஒற்றுமையாக இருப்பதில் என்ன பிரச்சனை என்று தெரியப்படுத்தவும்.

இது வெறும் எட்டு மணி நேர வேலை குறித்த விசயமோ அல்லது தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களின் மன அழுத்தம் குறித்த விசயமோ மட்டும் அல்ல. அவனது உத்திரவாதமற்ற எதிர்காலம் குறித்தும், அவனது பிரச்சனை இந்தியாவின் பிற உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனையாக இருப்பதும் குறித்த விசயம். அவனுக்கு சாதகமாக இருப்பதக கருதும் ஒரு பொருளாதார அமைப்பு ஆகக் கேடாக அவனுக்கு ஆப்பு செருகுவதாக இருக்கும் விசயம். இதைத்தான் இவ்வளவு நேரம் பேசிய பிறகு சாடாரென்று வேறு தோனிக்கு மாறியுள்ளீர்கள். அதாவது இன்னும் உங்களது பிரச்சனையை நீங்கள் உணரவேயில்லை என்பது தெரிகிறது.

சரி எட்டு மணீ நேரம் வேலை என்பது சாதரண விசயமா? அது உண்மையிலேயே ஒவ்வொரு தொழிலாளிக்கும் தேவைப்படுகிற விசயம். ஏன் கம்பேனி வேலை தவிர்த்து வீட்டு அன்றாட பணீகள் தவிர்த்து வேறு உபயோகமான க்ரியேட்டிவ்வான வேலைகளில் ஈடுபட உங்களுக்கு விருப்பமில்லையா? கலை இலக்கியம் பண்பாடு குழந்தை வளர்ப்பு.. இப்படி ஆயிரத்தெட்டு விசயங்கள் உள்ளதே?

அதை விடுங்கள் உங்களது சொந்த IT துறையில் உங்களது தலைவிதியை தீர்மானிக்கும் விசயங்கள் குறித்தே பெரும்பாலனவர்களுக்கு சுத்தமாக தெரியவில்லையே.... அதை தினமும் படிப்பத்ற்க்கு கூட நேரமின்றீ அலைகிறோம்.

காலை எழுந்தவுடன் 6:30க்கு ப்ரஸ் தேய்க்க ஆரம்பித்தவுடன் ஆரம்பிக்கும் பயணம். பெரும்பாலும் இரவு 10:30 ஆகிவிடும் வீடு திரும்ப.... இதில் குறைந்தது 3:00 மணீ நேரம் ட்ராப்ஃக்கில் மாட்டிக் கொண்டு நேரம் விரயமாதல்.

மீதி நேரம் களிசடைத்தனமான கலாச்சார பொழுது போக்குகளையும் விற்பனை செய்வதன் மூலம் பணத்தையும் பிடுங்கிக் கொள்கிறான். நமது நியாயமான அறிவு வளர்ச்சியையும் சிதைக்கிறான்.

அதாவது ஒரு கூலித் தொழிலாளியுடன் ஒப்பிட்டவுடன் கோபம் கொண்ட செந்தழல் ரவி போன்றவர்கள் என்றாவது பணம், வேலைச் சூழல் என்ற விசயத்தை தவிர்த்து வேறு வகைகளில் அவனுக்கும் நமக்கும் வித்தியாசம் அறிவு வளர்ச்சி என்ற அளவில் ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்களா?

அவனிடம் இருக்கும் ஒரு அரசியல் விழிப்புணர்வு கூட இன்றித்தானே நாம் உள்ளோம்...

இந்த சமூகத்தை பாதிக்கும் எந்த விசயத்தையும் நமக்கு சம்பந்தம் இல்லாதது என்றுதானே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதாவது எல்லா வகையிலும் இந்த சமூகத்துடன் நாம் மாயக்கரங்களால் பிணைக்கப்பட்டுள்ளதை மயங்கி மறந்து விட்டு.....

மேலும் இந்த அமைப்புக்கு எந்த எதிர்காலம் கிடையாது அப்படி ஒன்றூ இருந்தால் அது இருட்டுதான் என்று சொல்வது நாங்கள் மட்டுமா? உங்கள் முதலாளிகள் ஒருவனான பிரபாத் கூறுகிறான். உங்களை விட அவனுக்கு இந்த துறையின் அம்சங்கள் அனைத்தும் குறித்து அறிவு மிக மிக அதிகமாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆயினும், நீஙக்ள் தயாராயில்லை அப்படித்தானே?

யூனியனுக்கு நான் எதிரியில்லை என்று நீங்கள் ஒரு பேச்சுக்காக சொல்வது போல தெரிகிறது ஆகவேதான் மேலெயுள்ள விசயங்கள். ஒரு வேளை நீங்கள் யூனியனை ஆதரிக்கீறீர்கள் எனில் மேலேயுள்ளவை அவ்வாறான நிலைப்பாட்டில் இல்லாத பிறருக்காக சொல்லப்பட்டது என்று எடுத்துக் கொள்ளவும்

///////////////
Again, i am not against the union concept, but the unions are so divided with political parties joining hands and creating their own union like BMS, CITU, INTUC,etc. I had seen this and am seeing this regularly. 2 years back, when the then state govt.of TN announced bonus for PTC employees, it was welcomed by the ruling party union and opposed by the opposition party union and they stopped operating the bus, but later on joined and if my memory goes right, the govt.has not changed its stand on the issue. Again in 2001, when the then state govt.dismissed all its 1 lakh employees, the unions were also cancelled. just because, there were a hell lot of unions in place and they were not speaking in a single voice. the govt.in fact made the supreme court give its verdict in its favour, because there was no unity among the unions. so which union you want to establish in the IT sector. same divide and rule policy will work and you can't achieve anything. i don't see the union has done or achieved anything significantly post globalisation in our country, ie.after 1991.

Latest example is the privatisation of mumbai & delhi airports. has the union of these 2 airports achieved what they want and did the left parties achieved what they required. no. a very big no.

I AM ALSO IN FAVOUR OF UNION CONCEPT AND THAT TOO IN IT SECTOR AS THE SAYING GOES, "MAKE HAY WHEN THE SUN SHINES". LET THE UNIONS COME OUT WITH A CLEAR POLICY AND UNITY AMONG THEMSELVES, LEAVING ASIDE POLITICAL AFFILIATIONS OR LET THERE BE ONLY ONE UNION. AFTER ALL UNION IS A CONGLEMERATION OF PEOPLE WHO JOIN HANDS TO WORK NOT ONLY FOR THEMSELVES, BUT FOR THEIR FUTURE AS WELL".
/////

IT துறையின் ஒற்றுமைக்காக நீங்கள் குரல் கொடுப்பது பெருத்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கட்டுரை எழுதியதன் நோக்கம் அந்த ஒற்றுமையை உணர வைப்பதுதானேயன்றி யூனியன் கட்ட அல்ல. மேலும் நான் எந்த ஒரு யூனியனையும் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. ஒரு தனிமனிதனாக எனக்கு தெரிந்த சரி தவறுகளை பிறருக்கு சொல்லும் தளமாகவே இங்கு இயங்கிக் கொண்டிருக்கீறேன்.

ஆக, யூனியன் தேவையெனில் அதை நீங்கள்தான் கட்ட வேண்டும். என்னால் இதற்க்கு ஏதேனும் பங்களிப்பு செய்ய முடியும் என்றால் உறுதியாக செய்யத் தாயார்.

இன்றைய வோட்டுக் கட்சிகளின் யூனியன் குறித்து சிறப்பாகவே கூறியுள்ளீர்கள். ஆனால் இது பொதுவாக வோட்டுக் கட்சி பொறுக்கி அரசியல் எல்லா தளத்திலும்(பத்திரிக்கை, டிவி, கலை இலக்கிய மன்றங்கள், வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தேர்தல், சட்டமன்ற நாடாளுமன்றம்) ஏற்ப்படுத்தியிருக்கும் பிழைப்புவாதம்தான். ஆனால், தொழிற்சங்க விசயத்தில் இதை அறிந்து கொண்டு எதிர்க்கும் நீங்கள் பிற விசயங்களில் ஆதரிக்கிறீர்களே(தேர்தலில் ஓட்டு போடுவது, சட்டமன்ற நாடாளுமன்ற வடிவத்தின் மோசடிக்கு புனித வட்டம் கட்டுவது)...

இந்த விசயத்தை விட்டு விடுவோம்... ஆம, தொழிற்சங்கங்க்ள் பிழைப்புவாதம் கூடாரங்களாக மாறிவிட்டன. அது மறூகாலனியாதிக்க சூழலின் தவிர்க்க இயலா விளைவு... ஆனால் நமது நலனில் நாம்தான் அக்கறை கொள்ள வேண்டும். ஆக நமக்கு ஒரு யூனியன் வேண்டுமென்றால இந்த பிழைப்புவாத கோஸ்டிகளை உதறித் தள்ளிவிட்டு ஆர்வமான IT தொழிலாளர்கள் கலந்து பேசி ஒரு அமைப்பை கட்டுவதுதான் சரியாக இருக்கும். அது அவர்களின் பிரச்சனைகளின் மூல வேர்களை சரியாக கண்டு பிடித்து அது இந்தியாவின் பிற மக்களின் பிரச்சனையாக இருப்பதையும் உண்ர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையை கொண்டிருக்க வேண்டும்.

ஏனெனில் நீஙக்ளே சொலவது போல காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.....

என்ன செய்வதாக உத்தேசம்....? எனது வாசல் என்றுமே திறந்தே உள்ளது.....

மேலும் உலகமயத்தில் IT தொழிலாளிக்கான பிரச்சனை எட்டு மணீ நேர வேலை மற்றும் மன அழுத்தம் மட்டுமே என்று நீங்கள் கருதுவதாக் தெரிகிறது. எனது முந்தைய பின்னூட்டங்களை மீண்டும் ஒரு முறை கவனமாக படியுங்கள் அதில் இது தவிர்த்து பல விசயங்கள் முக்கியமாக பொருளாதார அம்சத்தில் கூறியுள்ளேன். அவை குறித்தும் கருத்து சொல்லவும். விரிவான எதிர்வினைக்கு மிக்க நன்றி

அசுரன்

said...

பாலா,

உங்களது ஆத்திரம் புரிகிறது ஆயினும் இந்தியாவின் பிரச்சனைகளை நாங்கள் இங்கு வைக்கும் பொழுது அதை நீங்க்ள் திறந்த மனதுடன் உள்வாங்குவீர்கள் என்று நம்புகிறோம். ஏனெனில் உங்களிடம் நல்ல பண்புகள் உறுதியாக இருக்கும். அவற்றை வலிய மறைத்துக் கொண்டுதான் நீங்கள் நம்பும் ஒரு விசயத்துக்காக செயல் படுகிறீர்கள். உங்களது இன்னொரு முரன் பக்கத்தின் மீது நம்பிக்கை வைக்கிறேன். அது விரைவில் கிளர்ந்தெழுந்து உங்களிடமுள்ள இந்த பாலாவை வெல்லும் என்று நம்புகிறேன்.

உங்களது அர்த்தமற்ற பின்னூட்டங்களை தொடர்ந்து பிரசூரிக்காமல் தடுப்பது எனக்கு மனக் கஸ்டமாக இருக்கிறது.

உங்களது ஆக்க சக்திகளை நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தலாமே? அருமையான எழுத்து ந்டை... நகைச்சுவை மிளிரும் துடுக்கத்தனத்துடன் நல்ல ஆக்க சக்தியை வீணடிக்கீறீர்கள்... மிகவும் வருத்தம் தருவதாக இருக்கிறது...

அசுரன்

said...

"இந்தியாவின் பாரம்பரிய தொழில்களை வளர்த்தெடுத்து அதில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள் மக்களை முதலாளித்துவ பாணி உற்பத்தி முறைக்கு மாற்றுவதும் அந்த நவீனப்படுத்தலின் ஊடாக உருவாகும் தகவல் தொழில் நுட்ப back bone-னினால் உருவாகும் வேலை வாய்ப்பில் இன்றூள்ளதை போல பல மடங்கு அதிகம் வேலை உருவாகும் என்பதுதான் நிஜம்" - This is very true Mr.Asuran. This we saw with our own eyes during ASEAN crisis, when the so-called tiger economies crumbled, whereas our country withstood everything, just because our dependency on other economies was very much lower compared to other countries.

The idea should be to educate our home grown companies to think globally and support them with technology and allow them to innovate......etc.....

But, the million $ question is, neither our entreprenuers nor our govt.is interested in this.

said...

அசுரன்,
உங்களின் எழுத்துக்களை ஆர்வமுடன் பின்தொடர்ந்து வாசித்துவருகிறேன். தெளிவாகவும், ஆழமாகவும் ஒரு விடயத்தை அணுகி வெளிப்படுத்தும் பாங்கு கவர்கிறது. இந்தப்பதிவு மிகவும் சிந்திக்கவேண்டிய ஒன்று. குறைந்தபட்சம் 8 மணிநேரம் மட்டும் வேலை என்கிற அடிப்படைகூட இல்லாமல் பிழிந்தெடுக்கப்படும் சக்தியை மிச்சம் பிடித்துக்கொள்ளவேனும் இத்துறையினர் ஒன்றிணைந்து ஏதேனும் செய்யவேண்டும். நன்றி.

It is happy indeed that you have shared our views.....

உண்மைதான் 1990களின் இறுதியில் ஆரம்பித்த பொருளாதார சீரழிவில் வீழ்ந்த நாடுகள் பல. குப்பைத் தொட்டிகளை கிளறி பசியாறினர் மக்கள். இந்த சம்பவம் நடக்கும் முன்புகூட அந்த நாடுகளின் பங்கு சந்தை குறீயிடு காட்டுத்தனமான வேகத்தில் ஏறின... இவையெல்லாம் ஊக வணிகம்தான். இன்றும் கூட இவை இந்திய மக்களை நேரடியாக பாதிக்கவில்லை(பெரு நகரங்களில் வாழும் சில மேட்டுக் குடிகளையும் இன்றைய நவீன யுப்பிகளில் சிலரையும் தவிர்த்து). ஏனெனில் நீங்களே குறிப்பிட்டது போல இந்தியாவின் சுய சார்பு கிராம, மற்றும் சிறு தொழில், சிறு சில்லறை வியாபாரம் சார்ந்த பொருளாதாரத்தின் கீழும், மிகப் பெரிய இந்திய அரசு நிறூவனங்களை நம்பியும் உள்ள மக்கள் தொகை 80% மேல்.

ஆனால் நிலைமை இனிமேலும் பழைய காலம் போல கிடையாது. விவசாய விளை பொருட்களை பங்கு சந்தையில் நுழைய அனுமதி கொடுத்து அதன் விளைவாக சமீபத்தில் எல்லாப் பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. என்ன செய்யலாம்.......///
The idea should be to educate our home grown companies to think globally and support them with technology and allow them to innovate......etc.....
////
இதை செய்யலாம். இந்த அம்சத்தில்தான் இந்திய மருத்துவ துறையில் வெளிநாட்டு மருந்துகள், பொருட்களை இந்தியர்கள் காப்பி அடித்து செய்தது. ஆனால் அதற்க்கு ஆப்பு வைக்கும் வகையில்தான் பேண்டட்ஸ் ரைட் வந்தது.

இது இந்திய வளங்கள் மீதும், சந்தையின் மீதும் இந்திய தேசிய முதலாளிகளின்/விவசாயிகளின் கட்டுப்பாட்டை அதிகப்படுத்தும். பன்னாட்டு/தரகு முதலாளிகளால் பிசினஸ் செய்ய முடியாது.

ஆகவெதான் சிறு தொழில்களை நசியச் செய்ததும், தேசிய தொழில்களை நசியச் செய்வதும்(பால்/பருத்தி ETC இறக்குமதி, மீன் பிடித் தொழில், பத்தி முதலான தொழில்களிலும் பன்னாட்டு கம்பேனிகளை விடுவது, பல சரக்குக் கடையைக் கூட அவனுக்கு திறாந்து விடுவது etc), விவசாயத்தை நாசமாக்குவதும்.

இந்த அரசுக்கு அந்த எண்ணம் கிடையாது என்பது ஒரு பக்கம். அப்படி ஒரு எண்ணத்தோடு தொழில் தொடங்கி நடத்துவதற்க்கு பனியாரம் செய்வது, சேலைக் கடை போல சில தொழில்கள்தான் இன்னும் மிச்சம் உள்ளது. மீதி அனைத்திலும் நமது முதலாளிகள் ஒரு காண்ட்ராக்ட் முதலாளியாகவோ அல்லது ஒரு மேனேஜராகவோ வேலை செய்யும் வாய்ப்புதான் உள்ளது.////
But, the million $ question is, neither our entreprenuers nor our govt.is interested in this.
////

உறுதியாக அரசின் நோக்கம் என்னவென்பதைத்தான் மேலே கூறியுள்ளேன். சந்தையில் இந்திய முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதும், அதற்க்கு தேவையான உள்கட்டுமானம், அறிவியல் ஆராய்ச்சி கூடஙக்ள், கொள்முதல்/விநியோக மையங்கள் இவற்றை நிறுவுவதும் முதல் தேவையாக உள்ளது. தற்போதைய் அரசுகள் இதை செய்ய இயலாது ஏனெனில் அதன் வர்க்கத் தன்மை ஏகாதிபத்தியங்களுக்கு தூக்கு தூக்குவதுதான்....

உஙகள் ஏரியாவில் தேவைப்படும் ஒரு விசயத்துக்கு நீங்கள் ஆய்வு செய்து பொருள் உற்பத்தி செய்து விற்று காசு பார்க்க முடியும்(Small level - a Factory of 20 people) என்ற நிலையை நாடு முழுவதும் உருவாக்கினால் ஏற்ப்படும் தொழில் புரட்சியின் அளவை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... கஸ்டமாக இருந்தால் சீனாவின் தொழில் புரட்சி வரலாறை படியுங்கள்... :-)

We are rich in resource... Both human as well as natural....

We are one among the few countries having good technological achievement....

We have a great history....

We have great pool of Talents(unfortunately, trained by Macauley's Education system)...

What else do we need....

The Will of our people to rule ourself.... and a Struggle for that....

அசுரன்

said...

சிந்தனையை தூண்டும் பிம்பங்களை உடைக்கும் பதிவு. நீங்கள் கொடுத்துள்ள எல்லா இணைப்புகளையும் படித்துப் பார்த்து விட்டு விரிவாகச் சொல்கிறேன்

said...

//அசுரன்,
உங்களின் எழுத்துக்களை ஆர்வமுடன் பின்தொடர்ந்து வாசித்துவருகிறேன். தெளிவாகவும், ஆழமாகவும் ஒரு விடயத்தை அணுகி வெளிப்படுத்தும் பாங்கு கவர்கிறது. இந்தப்பதிவு மிகவும் சிந்திக்கவேண்டிய ஒன்று. குறைந்தபட்சம் 8 மணிநேரம் மட்டும் வேலை என்கிற அடிப்படைகூட இல்லாமல் பிழிந்தெடுக்கப்படும் சக்தியை மிச்சம் பிடித்துக்கொள்ளவேனும் இத்துறையினர் ஒன்றிணைந்து ஏதேனும் செய்யவேண்டும். நன்றி.

//

செல்வநாயகி அவர்களீன் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,

IT துறையினர் ஒன்றிணைந்து அவர்களின் உரிமைக்காக போராட வேண்டிய தேவையை ஆதரித்தமைக்கு நன்றி..

எனது கட்டுரைகளை படிப்பதோடல்லாமல் அவற்றின் மீதான விமர்சனங்களையும் வைக்க கோருகிறேன்.

அசுரன்

said...

//சிந்தனையை தூண்டும் பிம்பங்களை உடைக்கும் பதிவு. நீங்கள் கொடுத்துள்ள எல்லா இணைப்புகளையும் படித்துப் பார்த்து விட்டு விரிவாகச் சொல்கிறேன்//

ரவிசங்கர்,

வருகைக்கு நன்றி... அனைத்து பதிவு இணைப்புகளையும் படித்து விட்டு விரிவான விமர்சனங்களையும், கருத்துக்களையும் இட்டு செல்லுங்கள்

அசுரன்

said...

அசுரன் நல்ல எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
சில கருத்துக்களை முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.

உலகமயமாக்கலினால்தான் இந்த பிரச்சனை என ஏன் எண்ணவேண்டும். நம்ம ஊர்லயே ஏதோ ஒரு தொழில் புரட்சி வந்து இதுபோன்ற சம்பளமும் வாழ்கைமுறையும் சாத்தியமானா அனோமி வர சாத்தியமில்லையா?

பிற தொழில்கள்ள தொழில் சாலைகள்ள பணிபுரிகிறவர்களுக்கு என்ன விதமான மனநோய்கள் வருகின்றன? மன நோய் மட்டுமல்ல உடல் நோயும்கூட.

உலகத்தில் எல்லாருமே ஒருவகை மனநோயாளிங்கதான். இல்லையா?

உங்கள் சிந்தனைப்படி ஏழைகள சந்தோஷமா வச்சுக்கணும்னா மத்தவங்களும் ஏழையாகணுமா?

எங்க தாத்தா பாட்டி காலத்திலேயே இருந்திட்டா போதுமா?

உங்க பதிவுல நிறைய கத்துக்கவேண்டிய விஷயங்கள் இருக்கு என்பதை மறுக்க இயலவில்லை. ஆனா மாற்றம் ஒன்றே நிதர்சனம் மாதிரி இதெல்லாம் நிச்சயம் நிகழ்ந்தே தீரும்னு நினைக்கிறேன்.

'சுட்ட சட்டி தத்துவம் கறிச்சுவை அறியுமோ?'

வெறும் நோக்கங்களும் தத்துவங்களும் சோறுபோடாதே.

said...

i agree abt consumersim..bu what else is he choice..Remember abt the unemployment in 1980's and early 1990's..Did someone count where did the life of that generation went??Spoilt in Factories..What is required is the change in attitude...

said...

/////
அசுரன் நல்ல எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
சில கருத்துக்களை முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.

உலகமயமாக்கலினால்தான் இந்த பிரச்சனை என ஏன் எண்ணவேண்டும்.//

வேறு எப்படி எண்ணலாம் என்றூ சொல்லவும்...

எனது கட்டுரையில் மிகத் தெளிவாகவே குறீப்பிடுகிறேன் என்னவிதமான உற்பத்தி உறவு/ சமூக பொருளாதார சூழ்னிலை இது போல மனநோய்களை ஏற்ப்படுத்துகிறது என்று அதற்க்கு பதில் சொல்லுங்கள்.

//நம்ம ஊர்லயே ஏதோ ஒரு தொழில் புரட்சி வந்து இதுபோன்ற சம்பளமும் வாழ்கைமுறையும் சாத்தியமானா அனோமி வர சாத்தியமில்லையா?
////

அனோமி வருவதற்க்கு என்ன காரணம் என்பதை கட்டுரையும் பின்னூட்டங்களும் தெளிவாகவே சொல்கின்றன. தொழில் புரட்சியால் அனோமி வருகிறது என்று சொல்கிறதா எனது எழுத்துக்கள்? ஏன் நீங்களே ஒரு முன் முடிவெடுத்து வாதிடுகிறீர்கள். அதாவது இதை எதிர்க்க வேண்டும் என்று முன் முடிவெடுத்து.

மேலும் அனோமி என்பதை ஒரு புறக்காரணியாகக் கொண்டு ஒட்டு மொத்த தகவல் தொழில் நுட்ப தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து பேசியுள்ளேன். அது குறித்து உங்களிடம் எந்த எதிர்வினையும் இல்லை. ஏனெனில், எனது யூகம் அவற்றை நீங்க்ள் படித்திருக்கவே மாட்டீர்கள்.

எல்லாருமே மன்நோயாளி என்றால் மனநோயாளி மருத்துவரை எல்லாருமே போய் பார்க்கிறோமா? என்னவிதமான எதிர்வினை இது?//
உங்கள் சிந்தனைப்படி ஏழைகள சந்தோஷமா வச்சுக்கணும்னா மத்தவங்களும் ஏழையாகணுமா?//

இது பதிவுக்கு சம்பந்தமில்லாதது. ஆயினும், இப்படி நான் சொன்னேனா? முதல்ல தெளிவா படிங்க அதை செறிக்க முயற்சி செய்யுங்க அதுக்கப்புறம் பதில் சொல்லுங்க எதுவுமே செய்யாம ஆப் தி ரெக்கார்டு பதில் சொல்லி ஏன் உங்களோட அரைவேக்காட்டுத்தனத்தை காட்டுகிறீர்கள்?

உங்களோட கம்யுனிச விரோத அரிப்பை சொறிந்து கொள்ளலாம் என்று எனது எழுத்துகளை அனுகினால் நல்ல சூடு கொடுத்து அனுப்பப்படும்.

இங்கு இது பதிவுக்கு சம்பந்தமில்லாதது என்பதால் எதுவும் விவாதம் செய்யாமல் விடுகிறேன். உங்களுக்கு நல்ல வலு இருந்தால் எனது கம்யுனிச பதிவு ஏதேனும் ஒன்றில் இதே பதிலை இட்டு நன்றாக வாங்கி கட்டி விட்டு செல்லவும்//எங்க தாத்தா பாட்டி காலத்திலேயே இருந்திட்டா போதுமா?
//

இது போல லூசுத்தனமா கேக்குறது இந்த பதிவுக்கே சம்பந்தமில்லாதது என்பதிருக்க. கம்யுனிசத்தின் மீதான் உங்களத அடிப்படையற்ற வெறுப்புதான் இது போன்ற பதில்களில் தெரியவருகிறது.

இத மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லி பல பதிவுகளே போட்டாயிற்று,,, இந்த பதிவிலும் கூட சில விசய்ங்களை பேசியுள்ளேன். கொஞ்சம் படிங்க...

உங்க பாட்டி தாத்தா காலத்துல இருந்த பண்பாட்ட உறுதிப்படுத்துவது யார் நான் சொல்லும் பொருளாதாரமா அல்லது உங்களது இன்றைய பாசமிகு பொருளாதாரமா? சொல்லுங்கள்....
(India is not with in your cubicle. It actually outside your cubicle and A/Ced concrete buildings...)//ஆனா மாற்றம் ஒன்றே நிதர்சனம் மாதிரி இதெல்லாம் நிச்சயம் நிகழ்ந்தே தீரும்னு நினைக்கிறேன்.
//

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது - change is the only constant.. ஆயினும் பகுத்தறிவுள்ளவன் மனிதன் இந்த மாற்றங்கள் மீது தனது ஆளுமையை செலுத்துவதால்தான் இன்றைக்கு கணிணியில் உட்கார்ந்து எழுதும் நிலைக்கு வந்துள்ளான்.

எனது இந்த கட்டுரையும் கூட மாற்றங்களை கையாள நடுத்தர வர்க்கத்தை அரைக் கூவி அழைக்கிறது. அதிலும் குறிப்பாக அவர்களின் சொந்த மாற்றங்களையாவது ஆளுமை செலுத்துங்கள் என்று அழைக்கிறேன். இதில் எந்த இடத்தில் உங்களுக்கு பிரச்சனை என்பதை தெளிவுபடுத்தவும்.

ஒற்றுமையா இருடா சொன்னது வலிக்கிறதா?

//'சுட்ட சட்டி தத்துவம் கறிச்சுவை அறியுமோ?'

வெறும் நோக்கங்களும் தத்துவங்களும் சோறுபோடாதே. //

இந்த வரி எதுக்குன்னு தெளிவா விளக்கினால் நல்ல சுட்ட சட்டியின் வெம்மையை அறிவதற்க்கு நான் உதவி செய்வேன்.

ஏன் உங்களது அடிப்படையற்ற வெறுப்பை இங்கு காட்டுகிறீர்கள். அதை கொஞ்சம் லாஜிக்காவாவது காட்ட இயலுகிறதா?

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் பத்து வரி இடையில் ஒரு வரி பதிவுக்கு கொஞ்சமே கொஞ்சம் சம்பந்தப்படுத்தி....

அசுரன்

said...

///
i agree abt consumersim..bu what else is he choice..Remember abt the unemployment in 1980's and early 1990's..Did someone count where did the life of that generation went??Spoilt in Factories..What is required is the change in attitude...
///

வாங்க ஹரிஹரன்,

உரிமையை கோரு என்று சொன்னால் வேலையை விடுவதாக நான் சொல்வதாக ஏன் கருதுகிறீர்கள்... அற்பவாதிகள் குறித்த 'பிரம்பின் மீதான நாயின் காதல்' - எ-காதான் நினைவுக்கு வருகிறது. சரி அதை விடுங்கள்.

இது குறித்து ஏற்கனவே சொன்ன பதிலை மீண்டும் இடுகிறேன்.

அப்புறம் 1990, 80 குறித்த உங்கள்து கருத்து. 1990 80 கள் இந்தியாவின் பொற்காலம் என்று நான் சொன்னது போல நீங்கள் எழுதுகிறேர்கள்.

வேலை வாய்ப்பை பொறுத்த வரை 2005 செப் RBI அறிக்கை வேலை வாய்ப்பு விகிதம் குறைந்துள்ளது என்றூ கூறுகிறது,
2004 திட்ட கமிசன் அறிக்கை 1996க்கு பிறகு ஒரேயொரு வேலை வாய்ப்பு கூட் புதிதாக உருவாக்கப்படவில்லை என்று கூறுகிறது, போன வருடம் ரயில்வே கலாசி(இதுதான் ரயில்வேயிலேயே க்டை கோடி வேலை) பணீக்கு MBA, BE பட்டாதாரிகள் ஆயிரக்கணக்கில் விண்ணப்பத்தினர். இது போன்ற சம்பவங்கள் உறுதியாக 1990க்கு முன்பு கிடையாது(still I didn't say pre 1990 are golden era. I put this as hariharan compared this).

காரணம் சுலபம், சிறூ தொழில்களை அழித்தது, விவசாயத்தை கெடுத்தது, இந்திய பெருந்தொழில் துறையில் பேர்வாதிரை காலாவதியாக்கியது. இதுதான் காரணம். இதில் உருவான வேலையின்மையை குறைந்த கூலிக்கு சுரண்டுகிறான் உங்கள் முதலாளிகள்(தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள்). இதே நேரத்தில் தீடீரென்று ஒரே நேரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர முதல்வர்களுக்கு நூற்றுக்கணக்கில் இஞ்சினியரிங் காலேஜ் அனுமதி கொடுக்கும் ஐடியா கனவில் உதித்து அப்படியே ஆரம்பிக்கவும் செய்தார்கள். இதன் காரணமாக வேலைக்கு டிமாண்ட் ஏற்ப்படுத்தி அவன் கொடுக்கும் கூலிக்கு வருவதற்க்கு அதிக ஆட்களை(ரிசர்வ் பட்டாளம்) உருவாக்கினார்கள். இதிலெல்லாம் உலக வங்கிக்கு கிஞ்சித்தும் பங்கு கிடையாது என்று நீங்கள் நம்பக் கூடும்.

And also as on Sep 2005 CII meeting held in Mumbai, the then chairperson of CII The TATAs told that, the number of jobs that could possible be outsourced from US till 2016(I am not sure about the year I could be 2014) is around 35 Lakhs, whereas during the same period the number of job seeking professionals(graduates - it is not just everybody) will be around 20 crores(this number also I am not sure some discrebancy may exist). Just tell how will your economy serve this demand? Though this is out of this Article, I just put this aside to cull your argument on Employement....

It is only Small scale industry and Agri alone can able to serve this.... But the present policies are against this(which manmohan himself told in Briton recently).

For your information - Already many people tried this argument and failed.

எந்த திருடனும் தற்செயலாக திருடுவதில்லை, அதுவும் ஒரு நூறு வருட ஏகாதிபத்திய அனுபவம் கொண்ட உங்க ஆட்கள் திருடும் முன்பாக அதற்க்கான தார்மீக/பொருளாதார/தத்துவ சூழலையும் உருவாக்கி விட்டே திருடுகிறார்கள்...

Some Excerpts from my previous replies:

//முதலில் இந்தியாவுக்கான தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளி அளிப்பதற்க்கு வலுவான இந்திய தேசிய முதலாளிகளும், வலுவான விவசாய் பொருளாதாரமும் வேண்டும். இவை இரண்டையும் வலுப்படுத்தினால் மிகப் பெரிய அளவில்(இன்றைக்கு கிடைக்கும் அவுட் சோர்ஸ்டு வேலைகளை விட) வேலை கிடைக்கும்.

அதை தவிர்த்து எனில் இந்திய பொருளாதாரத்தை சுரண்டிக் கொழுக்கும் அதே தரகு வர்க்கம் அல்லது பன்னாட்டு முதலாளிக்களுக்கு சேவை செய்யும் வேலையைத்தான் செய்ய வேண்டிவரும். நீங்கள் மேலே சொன்ன விசயம்கூட இந்த கட்டுரை IT தொழிலாளர்களின் பிரச்சனையாக சுட்டிக் காட்டும் விசயத்துக்கு தீர்வு சொல்லவில்லையே.

- சமூகத்துடனான தன்னுடைய உறவை இழத்தால்(அதிக நேரம் பணியிடத்தில் செலவழிப்பது, வாழ்க்கை பாணி அவனது சொந்த நேரத்திலும் கம்பேனியின் வளர்ச்சிக்காக சிந்தனையை செலவழிப்பது).

- இதன் விளைவான மனநோய்கள்.

- இந்த பொருளாதாரத்தின் விளைவாக நாட்டின் பெரும்பான்மை மக்கள் பாதிக்கப்படுவதால் ஏற்ப்படும் சமூக அழுத்தத்தின் பாற்ப்பட்ட வன்முறைக்கு ஆளாவது.

- வேலைகள் அவனை விட்டு ஓடிப்போவதை நீங்கள் சொன்ன தீர்வும் தடுக்கவில்லை. ஏனெனில், இந்தியாவிலேயே வெளிநாட்டுக்காரனை கொண்டு வந்து வேலைக்கமர்த்த SEZக்கள் வழி வகுக்கின்றன.

- IT தொழிலாளி தனது பிரச்சனைகள் என்னவென்பதை புரிந்து கொண்டால் சம்பளம் ஒரு விசயம் அல்ல. அடிப்படை வசதிகளும், சுகாதாரமான, அமைதியான வாழ்வும் தேவையென்பதை இன்றைய சூழல் அவனுக்கு உணர்த்தாமல் இருக்கலாம். ஆனால், இன்றைக்கே கூட மாநகரங்களில் IT சம்பளம் என்பது பைசா பெறாத சம்பளமாக மாறி வெகு நாட்களாகிவிட்டது. அவனுக்கு கொடுக்கப்படும் hikeகளின் அளவைத் தாண்டி அவனது அன்றாட தேவைகளின் விலை அதிகமாகிவிட்டது. இது இந்த துறையின் பிரச்சனைகள் முன்னணிக்கு வரும்பொழுது இன்னும் மோசமாக அவனை தாக்கும்.
///////அதைத்தான் நானும் சொல்கிறேன். ஏகாதிபத்தியம் உங்களுக்கு சாய்ஸ் குடுத்து சுரண்டக் கூப்பீட்டால் வரமாட்டீர்கள். அதனால்தான் தனது மூலதனத்தை அவன் திணிக்கும் முன்பாக அதற்க்கு தேவையான சந்தைச் சூழலை திணிக்கிறான்.

For Ex:
சிறு தொழில் நசிவு, வேலையிழப்பு - பெருந்தொழில்களில் அவன் மூலதன்மிடுதல், குறைந்த கூலிக்கு ஆள்.

விவசாயத்தை இறுக்கிப் பிடித்து கொல்வது, விவசாயியை விரட்டுவது - விவசயி விட்டுச் சென்றுள்ள கிராம வளமும், விவசாய சந்தையும் அவன் கையில்.

அரசு நிறுவனங்களில் வேலைக்கு எடுப்பதில்லை, புதிய முதலீடுகள் இல்லை, ஆனால் ப்ரொபசனல் கல்லூரிகளை நூற்றுக்கணக்கில் ஆரம்ப்பிப்பது - அவன் வந்து முதலீடு செய்து இந்த ப்ரொபசனல்களை குறைந்த கூலிக்கு(அவனுக்கு அது குறைந்த கூலி) சுரண்டுவது.

அவன் எதையுமே தெரியாமல் செய்வதுமில்லை. தெரிந்தும் நமக்கு சாய்ஸ்க்கள் கொடுப்பதில்லை. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டாத குறைதான். அப்படி மிரட்டினால்தான் நம்புவேன் என்று சிலர் சுகநாட்டாவாதத்தில் மூழ்கி உள்ளனர். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

மேலும் நான் இந்த வேலையை விடச் சொல்லவில்லை. இதன் உத்திரவாத மின்மையை சொல்லி, இப்பொழுது நமது கையில் அதிகாரம் இருக்கும் போதே(அதாவது இப்போழுது அவன் ந்ம்மை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறான்) நாம் நமது அடிப்படை உரிமைகளை கேட்டுப் பெறுவது சாலச் சிறந்தது என்பதும், எதிர்காலத்தில் அவன நம்மை கைகழுவி விட முயலும் போது நமது இந்த ஒற்றுமை நமக்கு பயன்தரும் என்பதையும்தான் இங்கு குறிப்பிடுகிறேன். ஏனெனில் இவையணைத்தையும் உள்வாங்கிக் கொண்டு அவன் தயாராகிறான்.
////

//As Regarding Engineering College:
****
அரசு நிறுவனங்களில் வேலைக்கு எடுப்பதில்லை, புதிய முதலீடுகள் இல்லை, ஆனால் ப்ரொபசனல் கல்லூரிகளை நூற்றுக்கணக்கில் ஆரம்ப்பிப்பது - அவன் வந்து முதலீடு செய்து இந்த ப்ரொபசனல்களை குறைந்த கூலிக்கு(அவனுக்கு அது குறைந்த கூலி) சுரண்டுவது.
********

இதே போல நாளைக்கு விவசாயிகளை எல்லாம் நகரங்களுக்கு அத்துக் கூலியாக அரைப் பிச்சைக்காரர்களாக அனுப்பிய பிறக. MNCக்களையும், தரகு வர்க்க முதலாளிகளான அம்பானிகளையும் ஆதரித்து பின்வரும் கருத்தை வைக்கலாம்:

* இந்தியாவில் விவசாயம் செய்ய ஆள் இல்லை அதனால் அவனை அதில் நுழைப்பதில் தவறில்லை

* முந்தைய விவசாயி கூட்டம் நகரங்களில் வேலையின்றி உள்ளது அதனால் குறைந்த் கூலியோ அல்லது கொடுமையோ எதோ ஒன்று வேலை கொடுக்கிறான் அதனால் வாய மூடிட்டு இருக்கனும்.

ஆனால் விசயம் அவன் வருவதற்க்கு முன்பும் சரி பின்பும் சரி, போன பிற்ப்பாடும் சரி... இந்தியாவின் சுய சார்புக்கு தேவையான எல்லா வளங்களும், தொழில் நுட்பங்களும் இருக்கவே செய்கின்றன(including giving vast Employement opportunity).
கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள், இந்த இரு நிலைமைகளையும் அவன்தான் உருவாக்கினான். அதிலிருந்தே அவனுக்கு சாதகமான சூழலையும் கருத்தையும் கூட உருவாக்குகிறான்..

என்ன செய்யலாம்... ஒன்றும் செய்யாமல் கொடுப்பதை தின்று கொண்டும் இருக்கலாம், அல்லது நமது வருங்கால சந்ததிக்கு எதையாவது மிச்சம் வைத்துச் செல்லும் கடமைக்காகவும், தனது சொந்த எதிர்கால நலத்திற்க்காகவும் ஏதாவது செய்யலாம். இந்த இரண்டில் எதை எடுப்பது எதை விடுப்பது என்பது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது. எமது வேலை இப்படி இரு சாய்ஸ்கள்தான் இருக்கிறது என்ற விசயத்தையாவது புரிய வைப்பதுதான்.
////

said...

"ஆனால் நிலைமை இனிமேலும் பழைய காலம் போல கிடையாது. விவசாய விளை பொருட்களை பங்கு சந்தையில் நுழைய அனுமதி கொடுத்து அதன் விளைவாக சமீபத்தில் எல்லாப் பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. என்ன செய்யலாம்......."

Industrialisation of agriculture will be one solution. Agriculture should be treated as an industry and all social securities like PF, Gratuity, etc.should be given to farmers by the landlords.

Farmers will not get cheated because of vagaries of monsoon, profit/loss to the landlords. Govt.can probably subsidise the social security amounts, so that the landlords are also not affected.

Secondly, Satellite imaging should be used to predict the type of crops suitable for a particular area, based on soil condition (i know this is done now also, but has not reached all people).

said...

அசுரன்,
இத்தனை கோபமாக பதிலளிக்கத்தேவையில்லை என நினைக்கிறேன். நானும் கோபமாக உங்களிடம் கேள்விகளை வைக்கவில்லை.

எல்லோருக்கும் சமூகத்தின் மீது கோபம் இருக்கும், அதுவுவும் கம்யூனிசத்தை கையில் பிடித்தவருக்கு இன்னும் இருக்கும் ஆனா அதை தனி ஆட்களிடம் கான்பிக்கத் தேவையில்லை.

நீங்க என்னை திட்டி பதில் போட்டதும் நான் பயந்துட்டு வந்து கம்யூனிஸ்ட் ஆகப் போறதில்லை என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள்.

உங்கள் பதிவுக்கு வருவோம்.

நீங்கள் அப்பப்ப மேற்கோள் காட்டும் சைனாவை விட நமது வெளிநாட்டு தொழில் கொள்கைகள் நல்லாவே இருக்குதுன்னு அமெரிக்க பத்திரிகைகள் சொல்லுது.

Sweat Shops கேள்விப் பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன் சைனாவிலே அதிகம்.

எப்படி உலகமயமாக்கலிலிருந்து தப்பமுடியும்னு நினைக்கிறீங்க? முடியாது.

ஐ.டி யில் யூனியன் வைத்தால் எல்லாம் சரியா போகுமா என்ன? யூனியன்கள் அரசியல் மயமாக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன.

கம்யூனிசம் உங்களைப்போன்ற சில தொண்டர்களிடம்தான் பலமாயிருக்கின்றது.

கம்யூனிசம் ஒரு சிறந்த ஐடியாலஜி. நடைமுறையில்?

நீங்களே சுய சோதனை செய்துகொள்ளுங்கள்.. நீங்க ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டா..?

அசுரன்... உங்கள் கருத்துக்கள் பலரையும் போய் சேரவேண்டும் என நினைக்கிறேன். தவறான வார்த்தை பிரயோகங்களை தவிர்த்தால் நல்லது. இதையே விடாது கருப்புவிடமும் சொல்லியிருந்தேன்... அவரின் சில நல்ல கருத்துக்கள் பெரிதும் வாசிக்கப்படாமல் போனதற்கு காரணம் அவரின் சொல்லாடல்தான். தவறான பதிவர்களிடமிருந்த பாடம் கற்காதீர்கள்.

உங்களைப்போல எல்லாரும் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் பாருங்க.... ரெம்ப கஷ்ட்டங்க.
எல்லாரும் செவப்புல ஆடை போட்டா நல்லாவா இருக்கும் பல வண்ணங்களும் வேணும்.
(இன்னும்பொரு லூசுத்தனமான பின்னூட்டம்)

said...

சிறில் அலெக்ஸ்,

கோபம் என்று நான் குறிப்பாக உணர்ச்சிவசப்படுவதில்லை. பதிவுக்கு சம்பந்தமில்லாமல் உணர்ச்சிவசபட்டு கம்யுனிசத்தை விம்ர்சிக்கும் முயற்சியில் இறங்கியமையால் சிறிது காட்டமாக சுட்டிக் காட்ட வேண்டியாதாகி விட்டது.

மற்றபடி பதிவின் மையப் பொருள் குறித்த விசயத்துக்கு எனது பதிலை கவனிக்கவும் சாதரணமாகவே பதில் சொல்லியுள்ளேன்.

ஆக, எனது கோபம் உங்களது கருத்தின் மீது, நீங்களோ அதை தனிமனிதன் என்று பார்க்கும் தவறை செய்கிறீர்கள்...
பிரச்சனை யாரிடம் உள்ளது?

**********
அப்புறம் உங்களது பதில்...

எனது முந்தைய பதிலில் குறிப்பிட்டு சொன்னது உங்களது எதிர்வினைகளை வைக்கும் முன்பாக அதற்க்கு ஏற்கனவே பதில் சொல்லப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆயினும் கேள்விகள் ஏற்கனவே பதில் சொன்னவைதான்.

ஆயினும் மீண்டும் சொல்கீறேன்:

///
நீங்கள் அப்பப்ப மேற்கோள் காட்டும் சைனாவை விட நமது வெளிநாட்டு தொழில் கொள்கைகள் நல்லாவே இருக்குதுன்னு அமெரிக்க பத்திரிகைகள் சொல்லுது.
///

அப்ப்டித்தான் சொல்ல வேண்டும் என்பது அந்த பத்திரிக்கைகளின் அரசியல் தேவை என்பதிருக்க, நான் எந்த சீனாவை குறிப்பிட்டு கூறுவேன் என்பது தெரியுமா?

ப்ள்ன்டாக சீனா என்றால் திரிபாகிவிடும். மாவோவின் சோசலிச சீனா குறித்து எனில் எனது கம்யுனிசம் குறித்த பதிவில் அதற்க்கான ஆதரங்களை வைத்து கருத்து சொல்லவும் நான் அதை வாதிடுகீறேன்.

இன்றைய முதலாளித்துவ சீனா எனில் அது எனது எதிரி என்று மீண்டும் கூறிக் கொள்கிறேன்.

நான் கூட சொல்லமுடியும்... கம்யுனிசம் தான் ஆகச் சிறப்பான பொருளாதார முறை என்று உஙக்ளது அமெரிக்க பத்திரிக்கைகளே கருத்து சொல்லியுள்ளன தெரியுமா? என்று... என்ன வித்தியாசம்...

அடிப்படை த்ரவுகள்(தகவல்கள்) அதன் ஊடாக தர்க்க ரீதியான வாதம் இவற்றுடன் உங்கள் கருத்தை வலுப்படுத்தவும்.///ஐ.டி யில் யூனியன் வைத்தால் எல்லாம் சரியா போகுமா என்ன? யூனியன்கள் அரசியல் மயமாக்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன..//

அரசியல் இல்லாதது என்று எதையாவது சொல்லுஙகள் தமிழ் மணத்தில் எழுதுவதை நிறுத்தி விடுகிறேன்.

eveything is politics. அரசு பற்றிய இயல் அரசியல் ஆகும். ஒரு அரசு இருப்பதை ஆத்ரிக்கும் கருத்துக்கள் எதிர்க்கும் கருத்துக்கள் இவற்றின் அடிப்படையில்தான் எல்லா கருத்து தளங்களும் நிற்கின்றன. அதானால் எல்லாமே இந்த இரண்டில் ஒன்றில் நிற்க்க வேண்டும் என்பது விதி. அது இல்லாத ஒன்றை உஙக்ளால் சொல்ல ,முடியாது.

இதைத்தான் கம்யுனிஸ்டுகள் பின்வருமாறு கூறுவார்கள்:
"எந்த அரசியலும் இல்லை என்பது ஆளும் வர்க்க அரசியலே அன்றி வேறல்ல".

there is nothing like middle or Pacifist... They are by deed Ruling Class politics....

யுனியனின் அரசியல் சரியில்லை எனில் அந்த அரசியலை சரியாக மாற்ற வேண்டும். மாறாக ஒற்றுமையே கூடாது என்று பேசுவது ஆளும் வர்க்க அரசியல் என்று சுட்டிக் காட்ட கடமைப் பட்டுள்ளேன். மேலும் இதே விசயத்திற்க்கு அனேகமாக மூன்றூ முறை இந்த பதிவிலேயே பதில் சொல்லியுள்ளேன் சிரமம் பார்க்காமல் கொஞ்சம் மேலே ஸ்கோரல் செய்து வாசித்து விடவும்.

உஙகளது கம்யுனிசம் பற்றிய கேள்விகளுக்கு மீண்டும் ஆரம்ப பாடம் எடுக்க இயலாத நிலைக்கு வருந்துகிறேன். மிகவும் அக்கறை அதிகமெனில், படிக்கும் ஆரவம் அதிமெனில் இதெ தளத்தில் சில பல பதிவுகள் இட்டுள்ளேன். தேடுவதும் கடினம் கிடையாது கம்யுனிசம் என்று அடித்து விட்டால் அவை எல்லாம் லிஸ்ட் ஆகும் அவற்றைப் படித்து சந்தெகங்களை தீர்த்துக் கொள்ளவும். அப்படியே உங்கள் கேள்விகள் குற்றச்சாட்டுகளையும் பின்னூட்டவும். அங்கு தொடரலாம்.

இங்கு உங்கள் ஏகாதிபத்தியத்தின் முகத்திரை குறீத்து பேசலாம் என்ற அளவில்தான் கட்டுரையின் வரம்பு உள்ளது. அப்படி அதன் நல்லெண்ணதிற்க்கு ஆதாரம் கொடுக்கும் வாதம் இருந்தால் வைக்கவும்.
//உங்களைப்போல எல்லாரும் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் பாருங்க.... ரெம்ப கஷ்ட்டங்க.
எல்லாரும் செவப்புல ஆடை போட்டா நல்லாவா இருக்கும் பல வண்ணங்களும் வேணும்.
//

என்னைக் குறித்த உங்களது யூகங்களை குறைந்த பட்சம் அது சந்தேகம் என்ற அடிப்படையில் கூட என்னிடம் வைத்து விளக்கம் கேட்க்காமல் அரஜகமாக முன் வைப்பதைத்தான் எனது காட்டமான விமர்சனங்கள சுட்டுகின்றன.

செவப்புல எல்லாரும் ஆடை போட வேண்டும் என்ற விருப்பம் இப்பொழுது சாத்தியமில்லை எனும் நிதர்சனத்தை உள்வாங்குகிறவன் நான்(தேசிய முதலாளி, பணக்கார விவசாயி போன்ற வர்க்கங்கள் எல்லாம் நம்ம ஆதரவு கோஸ்டிதான் ஆனா சிவப்ப அவங்கள்ளாம் உடுத்த மாட்டாங்க் இப்போதைக்கு). அப்படியிருக்கும் போது இந்தியாவின் இன்றைய நிலையில் நடக்க இயலாத ஒன்றை எப்படி கனவு காண்பேன். கம்யுனிசம் மெஜாரிட்டியாக இருக்குமேயன்றி அது முழு நிறைவாக வர சில பல வரலாற்றுக் கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது.

மற்றபடி விடாது கருப்பின் விலக்கம் என்பது highly controversy.. அதை எப்படி ஒரு protype ஆக பாஎக்கிறீர்க்ள்? இப்படி பார்ப்பதற்க்கான உங்களது தத்துவ சார்பு என்ன?

இவை உங்களது ப்தில்களை எதிர்ப்பார்க்கும் கேள்விகள் அல்ல. மேலும் இதில் விவாதம் செய்ய முற்படமாட்டேன்.

மீண்டும் வந்து கருத்திட்டமைக்காக உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அசுரன்

said...

அசுரன்,
மீண்டும் ஒருமுறை உங்கள் பதிவையும் ப்ரபாத்தின் நேர்காணலையும் படித்தேன்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இன்று பரவலாயிருக்கும் பல சமூகக் கூறுகள் இன்று இந்தியாவில் பரவலாகக் காணக் கிடைக்கின்றன.

வளர்ச்சியின் விளைவுதான் இது என்றே நான் நினைக்கிறேன்.

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

said...

//வளர்ச்சியின் விளைவுதான் இது என்றே நான் நினைக்கிறேன். //

சிரில் அலெக்ஸ்,

மீண்டும் வந்து கருத்துக்களை பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி.

மேற் சொன்ன கருத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?

அப்படியெனில், 'யார் சொல்றதுன்னு பாத்தீகளா' என்ற எனது பதிவில் மன்மோகன் சிங் தனது சொந்த வாயால் உங்களது இந்தக் கூற்றை மறுத்துள்ளதை படிக்கவும்.

அது தவிர்த்து,

'யார் சொல்றதுன்னு பாத்தீகளா'
http://poar-parai.blogspot.com/2006/11/blog-post_23.html

'ஏன் ஒப்பாரி வைக்கிறீர்கள் அமெரிக்க அடிவருடிகளே'
http://poar-parai.blogspot.com/2006/09/blog-post_26.html

'மறுகாலனியாதிக்கமும் மாவீரன் பகத்சிங்'
http://poar-parai.blogspot.com/2006/09/blog-post_28.html

'அடிமை நாடும் போலி சுதந்திரமும்'
http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_15.html

'கம்யுனிச அவதூறு பதில் - I'
http://poar-parai.blogspot.com/2006/09/1.html

'கேடு கெட்ட இந்தியா யானை கட்டிய போரடித்தோம்'
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_14.html

'பத்ரியின் கிராம்ப் பொருளாதார கட்டுரை ஒரு உட்டோ பியா'
http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_18.html

'இழிச்சவாயர்களும் இந்திய விவசாயமும்'
http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_115157825727252631.html

இது தவிர்த்து எனது ஆங்கில் பதிவான kaipulla.blogspot.com -ல் உள்ள கட்டுரைகளை படித்து உங்களது இந்த கருத்து அதற்க்கு பின்னும் சரிதான் என்று தொன்றினால் இந்த பதிவுகள் எதிலாவது பின்னூட்டவும்.

இங்கு மீண்டும் ஒரு சின்ன விசயம். இந்தியா உங்களது க்யுபிக்களையும் தாண்டி மிகப் பரந்து விரிந்து உள்ளது. நீங்கள் பார்க்கும் இந்தியா ஆக சிறுபான்மையானது என்பதும் இந்த கட்டுரையில் நான் அனுகியிருக்கும் வர்க்கமும் மிகச் சிறுபான்மையான வர்க்கம் என்பதையும் மனதில் கொள்க.

அசுரன்

said...

பாபு ப்ரியா,

தாமதமான எதிர்வினைக்கு என்னை மன்னிக்கவும். நேற்று முழுவதும் எனது பல பதிவுகளில் தொடர் விவாதம் சென்று கொண்டிருந்ததால் உங்களுக்கு பதிலளிக்க இயலாமல் போய்விட்டது.

////
"ஆனால் நிலைமை இனிமேலும் பழைய காலம் போல கிடையாது. விவசாய விளை பொருட்களை பங்கு சந்தையில் நுழைய அனுமதி கொடுத்து அதன் விளைவாக சமீபத்தில் எல்லாப் பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. என்ன செய்யலாம்......."

Industrialisation of agriculture will be one solution. Agriculture should be treated as an industry and all social securities like PF, Gratuity, etc.should be given to farmers by the landlords.
///

PF, Graduity, etc இதுதான் விவசாயத்தை தொழில் மயமாக்கும் விசயம் எனில் இந்த விசயங்கள் எல்லாமே ஆசிய கிராமப் பொருளாதாரம் எனும் 250 வருடத்துக்கு முந்தைய நிலபிரபுத்துவ பொருளாதாரத்தில் இருந்தன.

தொழில்மயமாக்குவது அல்லது முதலாளித்துவமயமாக்குவது என்றால் ஒரு துறையில் நவீன உற்பத்தி முறைகளை பின்பற்றுவது(அதாவது பொருட்களை உற்பத்தி செய்யும் நவீன முறை), அது விவசாயத்தில் ஏர்களப்பைக்கு பதில், டிராக்டர், மோட்டார் பம்பு செட்டுகள் களையெடுப்பு கருவிகள், அறுவடை இயந்திரங்கள் etc.. இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமாக பழைய உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ/தொழில்மய உற்பத்தி முறை பிரித்துக் காட்டும் அம்சம் அது மையப்படுத்தப்பட்டது. அதாவது ஒரு தொழில் கூடத்தில் எல்லாவற்றையும் சேர்த்து பெரிய அளவில் உற்பத்தி செய்வது.

இந்த விசயம் விவசாயத்தில் நடக்கவில்லை. நடப்பதை இந்த அரசு விரும்பவில்லை. அதற்க்கு தேவைப்படுவது உழபவருக்கு நிலம் சொந்தம், அவர்கள் அனைவரும் கூட்டுப்பண்ணையில் இணைந்து பெரிய அளவில் விவசாயம் செய்வது.

எனது 'பத்ரியின் கிராமப் பொருளாதாரம்- ஒரு உட்டோ பியா' என்ற கட்டுரையைப் படிக்கவும்.

////
Secondly, Satellite imaging should be used to predict the type of crops suitable for a particular area, based on soil condition (i know this is done now also, but has not reached all people).
////

மற்றபடி இப்படிப்பட்ட மிகப் பெரிய அளவில் விவசாயத்தை முதலாளித்துவ முறையில் செய்யும் பொது நீங்கள் சொன்ன பிற சேவை தொழில் நுட்பங்களின் தேவை அதிகரிக்கும் இது ஒரு பக்கம் கோடிக் கணக்கில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வேலை வாய்ப்பை உருவாக்கும்.

அதாவது, இந்தியாவுக்கும் , ஏற்றுமதிக்கும் தேவைப்படும் இந்த வருட விவசாய உற்பத்தி பொருட்கள், இடுபொருட்கள், பிற சாதனங்கள், போக்குவரத்து சாதனங்கள், விநியோக மையங்கள், பண கணக்கு வழக்கு, இயற்கை தடப்வெப்பம் பற்றிய ஆய்வுகள், வேளாண் ஆராய்ச்சிகள் - இப்படி பல கோடிக்கனக்கான அள்ள அள்ளக் குறையாத அளவு வேலை வாய்ப்பையும்(including IT field) ஒட்டு மொத்த சமூகத்தின் அறிவு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் இந்த பொருளாதாரத்தை அமல்படுத்த இந்த அரசால் முடியுமா?

அசுரன்

said...

தலைவரே,

எப்பிடிதான் இப்படி நீள நீளமாய் எழுதறத படிக்கறது.

இது போன்ற அர்த்த புஷ்டியுள்ள விஷயங்களை நீங்கள் பேசி (!??) ஒலிக்கோவையில் பதிவி செய்து வெளியிடுவது சாத்தியமா?

IT தொழிலாளர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் எதைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சொல்ல முடியுமா? ஏனென்றால் வேலை, குடும்பம், சமூக உதவி, பொழுதுபோக்கு இவை தவிர ஒரு மனிதன் மற்ற சிலவற்றிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என சொல்வதின் நியாயம் என்ன?

இன்னுமொன்று பதிவுக்கு தொடர்பில்லாதது - சிறில் அலெக்ஸுக்கான பதிலில் இன்னும் கொஞ்சம் நளினம் இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்

சல்மான்

said...

நல்ல பதிவு அசுரன். ரொம்ப அழகா ஆராய்ந்து எழுதி உள்ளீர்கள்.

said...

சல்மான்,

ஒலிப் பேழையில் வழங்குவது சாத்தியமில்லை என்பதிருக்க, எனது எழுத்துக்க்ள் அந்தளவுக்கு தரமானவை கிடையாது. பொதுவில் நான் ஆதரிக்கும், நம்பும் கருத்துக்கள் மனித குல நன்மைக்கானவை. அவற்றை எனது தரமற்ற எழுத்துக்களின் இடையில் பொறுக்கி எடுக்கும் கடினமான வேலை உங்களுக்கு உள்ளது. பார்ப்போம் எனது எழுத்து நடை எதிர்காலத்தில் தெளிவுறுகீறதா என்று...

//IT தொழிலாளர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் எதைப் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சொல்ல முடியுமா?
//
முதலில் தான் பகுத்தறிவு உள்ளவன் என்பதிலும், காட்டு விதியான திறமையானது பிழைக்கும் என்பது மனித சமூகத்திற்க்கு ஒத்து வராது என்பதிலும், குட்டி போட்டு அதை பாராமரித்து வளர்த்து உணவு தேடி வாழும் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் உள்ளது என்பதிலும், அந்த வித்தியாசம் என்பது தனது சூழ்நிலையில் மனிதன் செலுத்தும் கட்டுப்பாடு என்பதிலும், மனித சமூகத்தின் வெற்றி அதன் கூட்டு உழைப்பில் உள்ளது என்பதிலும் மிக மிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

இவையோடு மனிதன் என்பதில் பெருமை வேண்டும்.//ஏனென்றால் வேலை, குடும்பம், சமூக உதவி, பொழுதுபோக்கு இவை தவிர ஒரு மனிதன் மற்ற சிலவற்றிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என சொல்வதின் நியாயம் என்ன?//

இது நியாயம் தர்மம் குறித்த் பிரச்சனையில்லை. மேலும், இங்கு நான் வலியுறுத்துவது சமூகம் என்பதில் அந்த சமூகத்தின் அங்கமான ஒவ்வொரு மனிதனும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்கிறேன்.

சமூகத்தின் கூட்டு உழைப்பின் பலன்களை நன்கு அனுபவித்து விட்டு, கடமையை செய்யாமல் இருப்பதற்க்கு உரிமை உண்டு ஆனால், ஒரு சமூகத்தின் கேடு என்பது ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிக்கிறது எனில் கடமையைச் செய்யாமல் சுகமாக வாழுபவரையும் பாதிக்கிறது.

நாங்கள் கம்யுனிஸ்டுகள் இதை சுட்டிக் காட்டுகிறோம். உனது எதிர்காலம், உனது குடும்பத்தின் எதிர்காலம் என்ற சுயநலக் கண்ணோட்டத்திலாவது சமூக மாற்றத்தின் தேவையை புரிந்து கொள் என்கிறோம். அப்படி புரிந்து கொள்ள் மாட்டேன் என்றால் சரி என்ன செய்யமுடியும்... அனுபவி ராசா என்று நாமும் சேர்ந்து அனைத்து இன்னல்களையும், அழிவுகளையும் அனுபவிக்க வேண்டியதுதான்.

இதில் கம்யுனிஸ்டுகள் எந்த compulsionனும் செய்வதில்லை. உண்மையில் இந்த சமூகத்தின் வளர்ர்ச்சிப் போக்குதான் ஒவ்வொரு தனிமனிதனையும், compul செய்கிறது. உண்மையில் நாங்கள் அந்த கம்பல்சனை/தவிர்க்க இயலா சூழலையும் அதை தவிர்ப்பதற்க்கான வழிகளையுமே சுட்டிக் காட்டுகிறோம்.
//இன்னுமொன்று பதிவுக்கு தொடர்பில்லாதது - சிறில் அலெக்ஸுக்கான பதிலில் இன்னும் கொஞ்சம் நளினம் இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்//

இது பதிவுக்கு சம்பந்தமானதே. எனக்கும் கொஞ்சம் உறுத்தல் இருந்தது இந்த விசயத்தில். பிரச்சனை என்னவென்றால் பாபர் மசுதி இடிப்பை கொண்டாடி ஒரு இழிபிறவி எனக்கு மடல் அனுப்பி மிக வசமாக வாங்கிக் கட்டியிருந்த நேரம் அது. அதே மனநிலையில் இங்கு வந்தால் பதிவின் கருத்தை உள்வங்குவது, அதை மறுப்பது, ஏற்ப்பது என்ற அடிப்படையில் இல்லாமல் வெறுமனே கம்யுனிசத்தின் மீதன தனது வெறுப்பை காட்டும் ஒரே நோக்கத்தை பிரதானப்படுத்தி சிறில் அலெக்ஸ் கருத்திட்டிருந்தை பார்த்த பொழுது கடுமையான எழுத்து நடை முன்வந்துவிட்டது. எனது எதிர்வினையில் எனது கட்டுப்பாட்டின் அளவு தளர்ந்தது. நளினம் கெட்டது. சுட்டிக் காட்டி விமர்சனம் செய்தமைக்கு நன்றி.... பதிவில் நிகழ்ந்த விவாதம் முழுவதற்க்கும் கசடு தெளிக்குமாறு எனது அந்த எதிர்வினை ஆகிவிட்டது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்கிறேன்.

அசுரன்

said...

ரொம்பவும் வெயிட்டான பயனுள்ள பதிவு.

மேன்மக்கள் மேன்மக்கள்தான்.

said...

Comrade Super

said...

விடாது கருப்புவின் வருகைக்கும், அனானியின் வருகைக்கும் மற்றும் பல பின்னுட்டமிட்ட நண்பர்களுக்கும் நன்றி
அசுரன்

said...

Hi Asuran,,,

we respect your opinions on capitalism.
can you suggess some ways to create the awareness about these disasters to the people those who are not access to IT medias

sundar

said...

இது போல ஒவ்வொரு துறையிலும் உள்ள மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்வது, வலுவான மாற்று ஊடகங்களை உருவாக்குவது(பத்திரிக்கை, ரேடியோ, தொலைக்காட்சி), அவர்களை அணி திரட்டி போராடுவது. இதனை செயவதற்க்கு இளைஞர்கள் நிறைய முன் வரவேண்டும்.

அசுரன்

Related Posts with Thumbnails