TerrorisminFocus

Showing posts with label சுகுணா. Show all posts
Showing posts with label சுகுணா. Show all posts

Wednesday, April 28, 2010

பின்னுட்டம்

நேற்று மாலையிலிருந்து எனது பதிவில் நானே பின்னூட்டம் இட முடியவில்லை. கீழ்வரும் தகவல் வந்து மன்னிப்பு கேட்கிறது. (test என்று பின்னூட்டமிட்டால் வருகிறது)

""
We're sorry, but we were unable to complete your request.

When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

* Describe what you were doing when you got this error.
* Provide the following error code and additional information.

bX-6rscy0
""

எனவே, எனது பின்னூட்டங்களுக்காக ஒரு பதிவு. இந்தப் பதிவில் உ.த. அண்ணாச்சிக்கான எனது பதிலின் 3வது பாகம் மற்றும் சுகுணாவுக்கான பதில்கள் இடம்பெறுகின்றன.

இந்தப் பதிவு ஏன் என்று பிற்கால சந்ததியினர் குழம்பிவிடக் கூடாது என்பதால் இந்த பின்னூட்டப் பதிவுக்கான மூலத்தை இங்கு கொடுக்கிறேன் "வினவை அவதூறு செய்யும் அராஜகவாதிகளின் புனிதக் கூட்டணி!!"

முதலில், உ.த.வுக்கான 3வது பாகம்:

//ஆனால் கை கலப்பும், நேரடித் தாக்குதலும் மட்டும் கூடவே கூடாது..!
//

மீண்டும் மீண்டும் உ.த. பொய் சொல்கிறாரே? யாருடன் கைகலப்பு நிகழ்ந்தது, யாரை நேரடியாகத் தாக்கினார்கள்?


//இதைத்தான் தப்பு என்கிறோம். இதைச் செய்ய நீங்கள் யார்? யார் உங்களுக்கு இந்த அனுமதியைக் கொடுத்தது...? இந்திய அரசா..? தமிழக அரசா..? இந்திய அரசியலமைப்புச் சட்டமா..? மொதல்ல அதைச் சொல்லுங்க..! அரசுகளையும், சட்டத்தையும் நம்பித்தான் இங்கே மக்கள் வாழ்கிறார்களே தவிர.. உங்களை நம்பி அல்ல.. உங்களுக்காகவும் அல்ல.! உங்களிடம் இது பற்றி விளக்க வேண்டிய அவசியமும் மக்களுக்கில்லை..!
//

தமிழச்சியை வெளியே அனுப்பு என்று சொன்னவர், தியேட்டரில் படம் பார்க்க வந்த அப்பாவி ரசிகர்களை 'டேய்' 'நாய்' என்று கத்தி ரவுடித்தனம் செய்து கலவரப்படுத்தியவர் கேட்கும் கேள்விதான் இது. உ.த இவ்வாறு ரவுடியிசம் செய்துள்ளது குறித்து அவரது கேள்வியை அவருக்கே திருப்பிக் கேட்டால் எப்படியிருக்கும்? இதோ: இதச் சொல்ல/செய்ய நீ யாருயா? யார் உங்களுக்கு இந்த அனுமதியைக் கொடுத்தது...? இந்திய அரசா..? தமிழக அரசா..? இந்திய அரசியலமைப்புச் சட்டமா..? மொதல்ல அதைச் சொல்லுங்க..!


உ.த. அவர்களே, எதைச் செய்யனும்னு நீங்கள் சட்டப் புத்தகத்த பாத்து கண்டுபிடியுங்கள், எங்களுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை/அவசியமில்லை. எது ஜனநாயகத்திற்கு பொருத்தமானதோ அதை செய்வோம். அதில் ஒன்று கூட்டத்தில் கேள்வி கேட்கும் உரிமை.

நேத்து வரைக்கும் 'கருத்துரிமை' என்ற புனித வார்த்தைகளின் பின்னே ஒழிந்து கொண்டு கல்லெறிந்தவர் அந்த புனித கோவனம் கிழிந்தவுடன், சட்டவாதம் என்ற புதருக்குப் பின்னே ஒழிந்து கொள்ள முயற்சிக்கிறார். வாழ்த்துக்கள் உ.த. இவ்வாறே தொடர்ந்து எழுதுங்கள்...

மேலும், இவரது இந்த பிதற்றலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட பதில்

@@@@
உண்மைத்தமிழனோ, அய்யனாரோ இது சார்ந்து பதிவு போட்டதாக தெரியவில்லை. அவர்களது அதிகபட்ச கருத்துரிமை எதிரிகள் கள்ள டிக்கெட் விற்பவன், சூடு வைத்த ஆட்டோ மீட்டர், போன் கனெக்சனுக்கு கமிசன் கேட்பவன், அப்புறம் லீனாவை எதிர்க்கும் வினவு போன்றோர். லீனாவின் யோனிக் கவிதையில்தான் உனது கருத்துரிமை கொப்புளிக்கிறது என்றால், ஆப்புரேசன் கிரின் ஹண்டு போன்றவற்றில் கருத்துரிமை பறி போவது பற்றி நீட்டி முழக்க நீ தயாரில்லை எனில், உன்னுடைய கருத்துரிமை என்ற பெயரிலான அராஜகவாத பிதற்றலை யோனி மசிராகக்கூட நான் மதிக்க வேண்டிய அவசியமில்லை.
@@@@



//"அவர்களுக்கு எதிரான கூட்டம் என்று தெரிந்தும், வந்திருந்து கூட்டம் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தது தப்பு"ண்ணேன்.. இது தப்பா..?
//

இவர் தனது முந்தைய பதிவில் சொன்னது, அந்தக் கூட்டம் இ.ம. கட்சிக்காக நடக்கிறது என்று தெரிந்தும் அழையா விருந்தாளியாக வினவு வந்தது தப்பு என்று. இப்போது அதே ஆர்க்யுமெண்டை தலைகீழாக மாற்றிப் பேசுகிறார்(மாத்தி பேசுவது அவருக்கு கை வந்த கலை). மொத்தத்தில் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்யாதே என்பது உ.த.வின் கருத்து.


//"லீனாவின் கவிதையே ஆபாசம் என்றால் அதற்கு வினவு எழுதிய மறுப்பு கவிதை அதைவிட ஆபாசம்.. இருவருமே ஒருவராக மாறிவிட்டார்கள். பின்பு வினவுக்கு லீனாவைக் குற்றம் சொல்ல என்ன உரிமை இருக்கிறது?" அப்படீன்னு கேட்டேன்.. இது தப்பா..?
//

லீனா எழுதியதற்கு வினவு எழுதியது, லீனா கூட்டம் போட்டதற்கு வினவு அதே கூட்டத்தில் கலகம் செய்தது. சரியாகப் போய்விட்டது இல்லையா? பிறகு ஏன் உ.த. வினவை அராஜகவாத கம்யூனிசம் என்று விமர்சித்து பதிவு எழுதுகிறார்? அதான் சரிக்கு சரி இடிக்கு இடின்னு முடிஞ்சதே என்று சோடா குடித்துவிட்டு சும்மக் கிடக்க வேண்டியதுதானே?

மற்றபடி மீண்டும் மீண்டும் ம.க.இ.க.வினர் லீனா கூட்டத்திலும், 'இனிய நண்பர்' விசயத்திலும் அடிதடியில் இறங்கியதாக அவர் கட்டமைக்க முயன்று பொய் சொல்கிறார். அசுரனில் பதிவு எழுதி அம்பலப்படுத்திய பிறகு சில விசயங்களை 'ஆமா சொல்ல மறந்துட்டேன்' என்பது போல ஒத்துக் கொள்கிறார். அதில் ஒன்று லீனா 'ஆவேசமான கோபத்துடன் ஏதோ சில வார்த்தைகளைச் சொன்னபடியே' வந்ததாம், அப்படி வந்தது கேள்வி கேட்பதற்காகவும் இருக்கலாம் இல்லையா? என்று உ.த. கேட்கிறார், இவ்வாறு சந்தேகத்தின் பலனை லீனாவுக்கு அளிக்கும் உ.த. இதே போல சந்தேகத்தின் பலனை ம.க.இ.க.வுக்கு அளிக்க மறுப்பதோடு இட்டுக்கட்டி அவதூறும் செய்கிறார் என்பதே அவரது பிரச்சினை. மேலும் ஏதோ ம.க.இ.க.வினர் ரவுடிகள் போல வீட்டுக்கு ஆட்டோவில் வறாதீங்க என்றெல்லாம் கட்டமைக்கிறார். இவையெல்லாம் உ.த.வின் கேவலமான நோக்கங்களையே காட்டுகின்றன.


இப்போ நம்ம அண்ணன் சுகுணா:

வாங்க சுகுணா. நீங்க என்ன சொன்னாலும் உங்க அளவுக்கு எனக்கு எழுத்து திறமை கிடையாதுண்ணே. பாருங்க, அவதூறையே அக்கறையான வார்த்தைகளிலும், விமர்சனம் போலவும், பரிதாபகரமான கேள்வி போலவும் முன் வைக்கும் உங்களது திறமை எனக்கு உண்மையிலேயே சுட்டுப் போட்டாலும் வராதுண்ணே. சுகுணாவோட அவதூறுகள் அல்லது அக்கறையான-பரிதாபகரமான கேள்விகளைப் பட்டியலைப் பார்ப்போமா?

முதல் அவதூறு:
//அது எப்படி தோழர் முந்தாநேற்றுவரை உங்கள் நிலைப்பாடுகளை ஆதரிக்கும்போது தியாகு தோழராயிருந்தார், இப்போது சுகுணாவின் பினாமி ஆகிப்போனார்? உங்கள் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிற ஒருவர் ஏதாவது ஒரு கருத்தில் மாறுபடும்போது அவருக்கு அல்லக்கை, பினாமி, துரோகி பட்டம் சுமத்தி அவதூறு செய்வது//

இதற்கு முன்பு வினவுடன் முரன்பட்ட தோழர்கள் யார்? மணி என்பவர் வந்த நாள் முதல் ஒரே லடாய்தான், அப்புறம் இராயகரனுடனான காரசராமான விவாதப் பதிவுகள். இவர்களெல்லாம் இன்றும் தோழர்களாகத்தான் உள்ளனர். இது தவிர்த்து பலர் கடுமையான முரன்பாடுகள் இருந்த பொழுதும் நண்பர்களாகவும், தோழர்களாகவுமே உள்ளனர். தியாகுவே கூட முரன்பட்டுள்ளார் முன்பு. தியாகுதான் காரல் மார்க்ஸ் என்ற முகமூடி அம்பலாமன பிறகும் கூட தோழர்கள் அவருக்கு பல விதங்களில் விளக்கவே முற்பட்டனர்(புறக்கணிக்கவில்லை). பலமுறை அவரது பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் (லீனா கூட்டத்தில் அடிதடி செய்ததாக ஒரு பொய், அவரை வேசி என்றதாக ஒரு பொய், இன்னும் பல) விளக்கம் கொடுத்த பிறகும், அவைகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்ட பிறகும், அவை குறித்து சட்டை செய்யாமல் எதிரிகளின் வார்த்தைகளில் விமர்சித்து அதே அவதூறுகளுடன் ஒரு பதிவும் இட்டார். அவரது நோக்கம் விமர்சனம் செய்வதல்ல, சேறு அடிப்பது என்றே புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பிற்பாடு அவர் காரல் மார்க்ஸ் என்ற பெயரில் லீனா விவகாரத்துக்கு முன்பிருந்தே வினவு தோழர்களை அவதூறு செய்துள்ளதும் வெளிவந்தது. இவ்வாறு கறுப்பு ஆடாக நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளதே தியாகு விசயத்தில் மிகக் கடுமையாக தோழ்ர்கள் அவரை புறக்கணிக்கக் காரணமானது. ஒருவருடன் பழகுவதற்கு பரஸ்பரம் நம்பகத்தன்மை வேண்டும். அதுவும் புரட்சிகர அமைப்புகளில் தோழர்களாக இருப்பதற்கு இது மிக அவசியம். அது இல்லாத ஒருவருடன் யாருமே பழகுவதை தவிர்க்கவே செய்வார்கள். தியாகுவின் நம்பகத்தன்மைதான் இங்கு பிரச்சினையேயொழிய அவரது விமர்சனம் அல்ல. வினவு பின்னூட்ட விவாதங்களே இதற்கு சாட்சி.

எதை எதையோ படித்து பார்க்கும் சுகுணாவுக்கு வினவில் நடந்த விவாதம் தெரியவில்லை போலும்? ம.க.இ.கவுடன் இத்தனை நாள் பழ்கிய சுகுணா லீனா(தியாகு) விசயம் என்றவுடன் எப்படி இது மாதிரி சடாரென்று தோழர்கள் மீது அவதூறு செய்ய முடிவு செய்தார்? அவருக்கு என்ன பிரச்சினையோ?

மேலும் ம.க.இ.க. உங்களது நெருங்கிய தோழர்கள் என்று சொல்லும் நீங்கள் ஏன் இந்த விவகாரத்தில் இத்தனை நாள் அந்தத் தோழர்களை அனுகாமல் இருந்தீர்கள்? தோழர் எனில் விமர்சனம் செய்திருக்க வேண்டுமில்லையா? அதற்குப் பதிலாக தியாகுவுக்கு தகவல் சப்ளை செய்ததையும், ரோசா போன்றோரின் தளங்களில் மட்டுமே பின்னூட்டம் அதுவும் நெம்ப எச்சரிக்கையாக விட்டுள்ளதும், தியாகு மட்டுமே சுகுணாவின் கருத்து முகமூடியாக நான் புரிந்து கொள்ளது தூண்டியது.

//தியாகுவின் பதிவிலும் அய்யனார் விஸ்வநாத் பதிவிலும் அனானியாக வந்த பின்னூட்டத்தை எடுத்துக்கொள்வோம். அந்த பின்னூட்டத்தின் இரண்டாம் பகுதி இது.//

தியாகுவை பினாமி என்றது அவரது அந்த அறிவுப்பூர்வமான கேள்வி அவருக்கு உதித்திருக்காது என்ற எனது அனுபவத்திலிருந்தும் (அந்தக் கேள்வியை அவரே வினவு தளத்தில் இட்டிருந்தார்) லீனா விசயத்தில் தியாகுவுக்கான சோர்ஸ் நீங்கள்தான் என்ற நம்பிக்கையான தகவல்களிலிருந்துமே சொல்கிறேன்.

//உங்களுக்குத் தெரிந்த அளவுக்குக்கூட எனக்குத் தியாகு பழக்கம் கிடையாது. //
தியாகு வேறு மாதிரி சொல்கிறார்? உங்களிடம் அவர் எல்லா விசயங்களையுமே பேசியுள்ளாராம்?


//ஆனால் அந்த பிரச்சினை பற்றி எழுதும்போது அதைப் பதிவு செய்யாத உங்கள் அரசியல் மனச்சாட்சிக்கு நன்றி தோழர்.//

தமிழச்சியை விவகாரத்தில் உ.த. அய்யனார் குலாமினரின் முரன்பட்ட சந்தர்ப்பவாத நடவடிக்கையை அம்பலப்படுத்தவே எழுதினேன். எனவே, தமிழச்சி விவகாரத்தின் முழுப் பரிமாணம் தேவையில்லை என்றே குறிப்பிடவில்லை. மேலும், தமிழச்சியை ஆதரித்தவர்கள் என்று தோழர்கள், நண்பர்கள், முற்போக்கானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளேன். அதில் நீங்களும் உண்டு.

//ஆனால் நடந்த நிகழ்வுகளில் உங்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டும் எழுதி, தேவையான பிம்பத்தை உருவாக்கிக்கொள்கிறீர்கள். //

ஏன் இந்த படபடப்பு சுகுணா? நான் தமிழச்சி நிகழ்வை முன்னிறுத்தி எதை எழுதியுள்ளேன் என்பதை உ.த.வால் புரிந்து கொள்ள முடியவில்லை (அல்லது புரிந்து கொள்ள முற்படவில்லை) எனில் அது எனக்குப் புரிகிறது. நீங்களும் அப்படித்தான் எனில் நான் என்ன செய்ய முடியும்?

//’கண்டன ஒன்றுகூடல்’ கூட்டத்தில் ம.க.இ.க நடத்திய குழப்பத்திற்குப் பின்னான பதிவுகளில் //

//நீங்களும் உங்களது தோழர்களும் நான் எழுதாத பின்னூட்டங்கள் குறித்து அவதூறுகளைப் பரப்புகிறீர்கள்..//

சுகுணாவைக் குறிப்பிட்டு இப்போ கொஞ்ச நாளைக்கி முன்பிருந்துதான் கருத்துக்கள் வருகின்றன. அதுவும் தியாகுவுக்கு பின்னால் நீங்கள் உள்ளீர்கள் என்ற நம்பகமான தகவலுக்குப் பிறகுதான் இவை நடக்கின்றன.

//ஆனால் உங்களது கருத்தில் மாறுபடும்போது அல்லக்கை என்றும் பினாமி என்றும் சிஷ்யப்பிள்ளை என்றும் மிக மோசமான முறையில் இழிவுசெய்கிறீர்கள்.//

எங்களது கருத்தில் மாறுபடுவதாக வெளிப்படையாகத் தெரிவிக்கும் நேர்மைகூட இவ்வளவு இழுத்தப் பிறகுதான் உங்கள் வாயிலிருந்து வருகிறது. அவ்வளவு எம்முடன் தோழமை எனில் எம்மை இந்த நிகழ்வுகளின்(லீனா கவிதை வினவு பதிவு) ஆரம்பத்திலேயே விமர்சித்திருக்கலாமே? போராடியிருக்கலாமே? லீனா கவிதை எழுதி அசிங்கப்படுத்தினால், நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் கருங்காலித்தனமாக கள்ளமௌனம் சாதித்து முதுகில் குத்தி அசிங்கப்படுத்தியுள்ளீரக்ளே? இவை எமக்குக் கோபத்தை உண்டாக்காது என்று நினைக்கிறீர்களா?

அ.மார்க்ஸ், சிபிஎம் புனித கூட்டணிக் கும்பலின் நோக்கம் வினவை அராஜகவாதி என்று சித்தரிப்பது எனில் எமது தோழர் என்று சொல்லும் நீங்கள் இந்த நிகழ்வுகளில் வினவு அவ்வாறான தோழர்கள் அல்ல என்று அவர்களிடம் என்னவிதமான போராட்டம் நடத்தீனீர்கள்? மாட்டிக்கிட்டான் என்று மொத்தமாகத்தானே குத்தினீங்க? இப்போ திருப்பிக் குத்துகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள்.

இரண்டாவது அவதூறு:
//என்னைப் பொறுக்கி என்றும் சமூகவிரோதி என்றும் அழைத்து அடையாளப்படுத்திய உங்கள் அன்புக்கு நன்றி தோழர்.//

அது உங்களது (அல்லது தியாகுவின்) 'அறிவுப்பூர்வமான கேள்வியின்' லாஜிக்கில் முடிவு என்று நான் சொன்னவை அவை. எனது முடிவு அல்ல அது. அவை அந்தக் கேள்வியின் முட்டாள்தனம் என்னவென்று சுட்டிக்காட்ட குறிப்பிட்டவை. அடுத்த வரியிலேயே அந்தக் குறிப்பிட்ட 'அறிவுப்பூர்வமான கேள்வி'யிலிருந்து தியாகு (அல்லது நீங்கள்) நிரூபிக்க விரும்பியது பின்நவீனத்துவத்திற்கே வெளிச்சம் என்றும் குறிப்பிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிடுவதன் பொருள், உங்களை சமூகவிரோதி, பொறுக்கி என்று நான் சொல்லவில்லை என்பதற்கான அத்தாட்சி.


//ஆனால் அதற்காக ம.க.இ.கவை விமர்சிக்கிற விமர்சன உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். //

ம.க.இ.க.வை இதுவரை நீங்கள் விமர்சிக்கவே இல்லையே? இதோ இந்த நிமிசம் வரை லீனா விவகாரத்தில் தியாகுதான் உங்களது முகமாக எனக்குத் தெரிகிறாரே ஒழிய உங்களது கருத்துக்களை எங்குமே நேரடியாக நீங்கள் சொல்லவில்லயே? ஏன்?

அசுரன்

Related Posts with Thumbnails