ராமதாஸ்க்கு எங்கேங்கேங்கேங்கேங்யோ அதிருது!
நண்பர் குழலி ராமதாஸ் ஆதரவாளர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம்தான். ஆனாலும் அவரது ஆதரவு ராமதாஸ் பேரச் சொன்னாக்க அதிருது என்று விளம்பரம் செய்யும் அளவு போவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க இயலவில்லை.
ராமதாஸ் ஒரு தரகு அரசியல் பிழைப்புவாதி என்பதை தாண்டி ஒன்றும் கிடையாது எனபதை நண்பருக்குச் சொல்வது எனது கடமை என்றே கருதுகிறேன். மேலும் அவர் பேரச் சொன்னாக்க ஒரு சொறிநாய்க்குக் கூட அதிராது என்ற உண்மையையும் அவருக்குச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.
கொஞ்ச நாள் முன்ன சென்னையில திரும்பன பக்கமெல்லாம், 'அன்று கொள்ளையடித்தான் வெள்ளைக்காரனை விரட்டினோம் இன்று கொள்ளையடிக்கும் அம்பானியை விரட்டுவோம்' என்பது போல புரட்சிகரமான சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. என்னாடயிதி அதிசயம் ராமதாஸ் ஒரு உண்மையான மக்கள் விடுதலை தலைவராக மாறிவிட்டாரா என்று சின்ன அதிர்ச்சி, பிறகு ஒரு சின்ன சந்தேகம் மனதில் எழுந்தது ஒரு வேளை அம்மாவுக்கும், அய்யாவுக்கும் மாற்றி மாற்றி கூஜா தூக்கிய நரித்தனம் போலவே இதுவும் ஒரு அரசியல் தந்திரமோ என்று. கடைசியில் நான் சந்தேகப்பட்டதுதான் உண்மையாகியது.
ரிலையன்ஸ் அம்பானியை கல்லாவ காலி பண்ண சொல்லி ரொம்ப வீறாப்பா பேசுன நம்ம அதிருது தலைவர் மாலடிமை(ராமதாசு) கொஞ்ச நாள்லேயே அம்பானியின் கால்ல விழும் போராட்டம் நடத்தி தனக்கு யார் பேரச் சொன்னா எங்க எப்படி அதிரும் என்று வெளிப்படுத்தினார். (ரிலையன்ஸ் சில்லறை வியாபாரம் எதிர்ப்புப் போராட்டம்). (மாலடிமை - இங்கு மால் என்று சொல்வது ராமரை, பெரிய அடுக்குமாடி கடை என்ற பொருளில் இங்கு மால் பயன்படுத்தப்படவில்லை).
கற்புக்கும், சிகரெட்டுக்கும் நேரடியாக செருப்பு, வெளக்குமாறு போன்று ஆயுதங்களை ஏந்திக் கொண்டு மாதர்களை போராட வைத்த மாலடிமைக்கு சில்லறை வியாபாரம் என்றவுடன் படு சில்லறைத்தனமாக காலில் விழும் போராட்டம் நடத்த தோன்றிய மர்மம் எனக்கு தெளிவாகவே புரிகிறது. பெரியாரை தங்களது தலைவராக கருதிக் கொள்ளும் இவர்கள் காலில் விழும் போராட்ட நடத்திய பொழுது யாருடைய சுயமரியாதை பறி போனது என்று புதிய வியாக்கானங்களை தரும் அபாயம் உள்ளது.
மாலடிமையினுடைய சீமந்த புத்திரன் அன்புமணி துன்பமணியாக அவதாரமெடுத்த சம்பவங்களும் உண்டு. அதில் வெகு விமரிசையான ஒன்று, கோக், பெப்ஸி கம்பேனிகளுக்கு பூட்ஸ் நக்கியதுதான்.
பெப்ஸி, கோக் கம்பேனிகளுக்கு காவடி தூக்கி மாலடிமையின் புத்திரன் பாராளுமன்றத்தில் நின்றுக் கொண்டு ஆற்றிய உரையைப் போன்றதொரு கேவலமான, அப்பட்டமான அடிவருடித்தன உரையை மன்மோகன் சிங்கிடம் மட்டுமே கேட்டிருக்கிறேன்.
அப்பனுக்கு அம்பானியக் கண்டாக்க அதிருது, புத்திரனுக்கு கோக் பெப்ஸி பேரக் கேட்டாக்க அதிருது. நம்ம நண்பர் குழலியோ ராமதாஸ் பேரச் சொன்னா யார்யாருக்கோ அதிருது என்று விளம்பரம் இடுகிறார். யாதர்த்தத்தை பரிசீலித்து உணர அவருடைய ராமதாஸ் ரசிப்புத் தன்மை தடுக்கிறது எனில் அவருக்கும் ரஜினி ரசிகனுக்கும் என்ன வேறுபாடு? இது ஒரு கேள்விதான்.
ஏகாதிபத்திய பாத தாங்கி ராமதாசுக்கு இவ்வளவு ஆடம்பரம் அவசியமில்லை என்பது எனது கருத்து.. நீங்க என்ன சொல்றீங்க குழலி? பேசாம அவர் பேர ஏகாதிபத்திய அடிமை என்று மாற்றச் சொல்லுங்கள்.
குழலி இந்த கருத்துக்களை உள்வாங்கி பரிசீலித்து பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
நண்பர் குழலியின் கருத்தை கேட்க்க ஆவலுடன் காத்திருக்கும்.
அசுரன்
Related articles:
அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்
அக்காமாலா, கப்ஸியும் - இம்சை அரசன் துன்பமணியும்
**
தோழர்களின் விமர்சனத்தை முன்னிட்டு தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை நீக்குகிறேன்