TerrorisminFocus

Showing posts with label மோடி. Show all posts
Showing posts with label மோடி. Show all posts

Wednesday, October 16, 2013

அன்பான வாக்காள வடிவேலு பெருமக்களே....

எங்கூருல நான் பத்தாங்கிளாஸ கடேசி பரிட்ச்சேல மட்டும் பாஸாகி பிரமோசன் ஆன காலத்திலேயே பாராளுமன்றம், நீதிமன்றம்னு பஹுல் விட்டுட்டு திரிஞ்சவர்தான் அஸ்வின். இவருக்கு எங்கள விட ஒரு வயசுதான் அதிகம் (இப்ப வரைக்கும் அப்படித்தான்னா பாத்துக்கோங்களேன்) ஆனாப் பாருங்க சின்ன வயசுல இருந்தே ரொம்ப கருத்தாப் பேசுவாப்புல. ரொம்ப நா கழிச்சி போன வாரம் அவர பாத்தேன். இப்பயும் அதே கருத்தாப் பேசும் சுபாவம் மட்டும் மாறவில்லை.


பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பிறகு, இந்தியா இப்ப இருக்குற நிலமய நினைச்சி உச்சுக் கொட்டி பேசத் துவங்கினார். சமூக அக்கறையுடன் பேசுகிறார் கவனிப்போம் என்று கேட்கத் துவங்கினேன். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் தீர்வு என்று கடைசியாக ஒன்றைச் சொன்னார் பாருங்கள், நான் அப்படியே ஷாக்காயிட்டேன். அவர் சொன்ன தீர்வு இதுதான், இந்தியாவுல எங்கும் ஊழல், எதிலும் ஊழல், உலகத்துல இருக்குற அத்தன பேரும் இங்க வந்து ஆட்டையப் போடுறானுங்க அதுக்கு அரசாங்கமும் துணை போகுது. இதுக்கெல்லாம் காரணம்... மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸு அரசாங்கம் எனவே இந்தியாவ தூக்கி அப்படியே அலேக்கா மோடி கையில கொடுத்துட்டா நாடு இன்னைக்கோ நாளைக்கோ வல்லரசாயிடும் என்றார். இதச் சொன்னா என்ன பைத்தியக்காரன்னு சொல்றாய்ங்க என்று வடிவேலு போல அவர் பினிசிங் டச் வைக்காத ஒன்றுதான் குறை. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பாத்திரம் விளக்குவது போல என் தரப்பை விளக்கினேன்.



இவர் மட்டுமல்ல இந்தியாவின் நடுத்தர வர்க்கப் படித்த கும்பலில் ஒரு பகுதியினர் இப்படியான வாக்காள வடிவேலுகளாகவே தீர்வு சொல்லித் திரிகிறார்கள். அடிப்படை பொது அறிவு கூட இல்லாமல் கூட்டத்தோடு கோவிந்தா சொல்லும் மந்தை மனோபாவம் மேலோங்கிய நிலையில்தான் இத்தகையோர் இருக்கின்றனர். சில சுலபமான விவரங்களை பரிசீலித்தாலே தீர்வு என்ற பெயரிலான இத்தகைய அடி முட்டாள்தனங்கள் புரிபடும்.

முதல் விசயம்,  இந்தியத் தேர்தல் முறை விகிதாசார அடிப்படையிலானது அல்ல, பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவர் ஆட்சிக்கு வருகின்ற முறையிலான அமைப்பு அல்ல என்பதையெல்லாம் விட்டு விடுவோம். இவர்கள் வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பது மோடியையா? இல்லை குறைந்த பட்சம் பாஜகவையா? அல்லது இவர்கள் வோட்டு போட்டு நிராகரிப்பது காங்கிரசையா/மன்மோகனையா? இரண்டும் இல்லை என்பதே உண்மை. அவரவர் தொகுதியில் நிற்கும் அல்லக்கை நொல்லக்கை கிரிமினல் வேட்பாளர்களில் ஏதோ ஒரு பொறுக்கியைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். அமெரிக்கா போல நேரடியாக நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை இங்கிருந்தாலாவது யோசிக்கலாம். அதுதான் இங்கு கிடையாதே அதனால்தான் தேர்தலில் போட்டியே போடாத மன்மோகன் பிரதமராக முடிந்தது. நிலமை இப்படியிருக்க மக்கள் வோட்டு போடாம விட்டாத்தான் நாட்டுக்கு எதோ கெட்டது நடந்துடும் என்று நம்புகிறார்கள். அதனால் இருப்பதில் பெஸ்ட் பொறுக்கி யாருன்னு தேர்ந்தெடுத்து போறோம். அது இப்போதைக்கு மோடி என்பது வடிவேலுகளின் கருத்து.


இரண்டாவது விசயம். காங்கிரசுக்கு மாற்று என இவர்கள் முன் வைக்கும் பாஜக எப்படியாப்பட்டது? அவர்கள் ஆட்சி செய்த முந்தைய காலத்திலும், அவர்கள் தற்போது ஆட்சி செய்த மாநிலங்களிலும், இப்போது எதிர்கட்சியாக நாடாளுமன்றத்தை நாறடித்து வரும் நிலையிலும், காங்கிரசுக்கு போட்டியாக ஊழல்கள், கிரிமினல் வேலைகள் என்று பட்டையை கிளப்பி வருகிறார்கள். ஈயம் பித்தளையைப் பார்த்து இழித்த கதைதான் இது. மோடி மட்டும்தான் நல்லவன் என்று பாஜகவே சொல்கிறது. வாக்காள வடிவேலுகளுக்கும் இது புரிந்துதான் உள்ளது. மோடி நல்லவன் என்றே வைத்துக் கொள்வோம், தனிமனிதனால் நாட்டை நிர்வாகிக்க முடியுமா? ஒரு வேளை பாஜக நினைத்தால் மோடியை தூக்கியெறிந்து விட்டு இன்னொரு கேடியை பிரதமராக்க முடியுமே? அந்த மேற்படி கேடி தேர்தலில் போட்டி கூட இட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதானே இந்திய 'ஜனநாயகம்'  சொல்கிறது.

மூன்றாவது விசயம். மோடியே பெரும் கிரிமினல், ஊழல் பேர்வழியாக குஜராத்தை ஆட்சி செய்து வருவதும். பன்னாட்டு கம்பனிகளுக்கு பல லட்சம் கோடி குஜராத்து வளங்களை முறைக்கேடான முறைகளில் தாரை வார்த்துள்ளதும், ஐநா அவார்டு கொடுத்தாய்ங்க, எங்கூரு பஸ்ஸாடண்டு சும்மா ஏரோப்ளேன் இறங்குற ரேஞ்சுல இருக்கும், உலக வங்கியிலேயே கோடிக்கணக்குல டேபாசிட் பன்னிருக்கோம், பிரிட்டிஸ் தூதுவரே எங்கள ரொம்ப்பப நல்லவன்ன்ன்னு சொல்லிட்டாரு, ஜப்பானுல ஜாக்கிசானு கூப்பிட்டாஹ, அமெரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாஹ  என்பதாக வகை தொகையில்ல்லாம இவர்கள் கொடுத்த பில்டப்புகள் அனைத்தும் பச்சை பொய்கள் என்பதும் தொடர்ச்சியாக அம்பலமாகி வருகின்றன. காங்கிரசு அரசை மக்கள் வெறுத்து ஒதுக்க காரணமாக அமைந்த அதே சி ஏ ஜியின் அறிக்கைகள்தான் மோடியின் ஊழல்களையும் பட்டியலிடுகின்றன. ஆஹ இவன் ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் மாறப் போவதில்லை. என்ன, இவன் கொஞ்சம் மசாலா ஜாஸ்தி போட்டு படம் காட்டுவான். அவ்வளவுதான் வித்தியாசம்.



ஆனாப் பாருங்க வாக்காள வடிவேலுகள் ஒரு தடவ முடிவெடுத்துட்டா அத பிற்பாடு அவிங்களே நினைச்சாலும் மாத்திக்க மாட்டாய்ங்க. ஒரு அஞ்சு பத்து வருசம் பிஞ்ச செருப்பாலேயே அடி வாங்கின பிறகுதான் முடிவ மாத்திக்குவாய்ங்க. அதுவும் பிஞ்ச செருப்பு தூள் தூளாகிப் போயிருச்சி இதுக்கு மேல அடி வாங்க நினைச்சாலும் அது அந்த செருப்புக்கு ஆகாத காரியம் என்ற நிலையின் காரணமாகவே வேறு செருப்பைத் தேடும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மேற்கொள்வார்கள்.ஏன்னா, நாங்க கருத்தாப் பேசுவது  மட்டுமல்ல, கருத்தா அடியும் வாங்கவோம்.


ஆஹவே அன்பான வாக்காள வடிவேலு பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை இந்த முறையும் மறக்காமல் பிஞ்ச செருப்புக்கே குத்தி இன்னும் ஏழேழு ஜென்மங்களுக்கும் செருப்படி வாங்கி சாபல்யம் அடைவீர்.

அசுரன்
 

இதச் சொன்னா என்ன பைத்தியக்காரன்னு சொல்றாய்ங்க...



தொடர்புடைய பதிவுகள்:

Mr. NaMo NaNo

சு.சாமி, சோ ராமசாமி – இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை!


நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !

மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !

இவனுங்க அப்பனுங்க எல்லாம் குதிருக்குள்ளே இல்லையாம், அவனுங்களே சொல்றானுங்க!!!

Saturday, September 28, 2013

பூவாடைக்காரி தெய்வமும், பெண் பித்து பிடித்த தஞ்சை நாயக்கர் அரசும்!!

ஆந்திர தேசத்து தெலுங்கு சாதியினர் பலர் முஸ்லீம் அரசர்களின் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட அடக்குமுறைகளுக்கு தப்பிப் பிழைத்து அலை அலையாக தமிழகம் வந்தது பற்றி கி ராஜநாரயணன் நாவலில் ஒரு விவரிப்பு உண்டு. இதே போன்று பொதுவில் முஸ்லீம் அரசுகள் இந்தியாவில் பாலியல் அத்துமீறல்கள், கொடுமைகள், கோயில்கள் மீது தாக்குதல், 'இந்து'க்கள் மீது ஒடுக்குமுறை செய்தது குறித்து பொதுபுத்தி ஒன்று உருவாக்கப்பட்டு பரவலாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு வகைப்பட்ட உயர்சாதி/மேட்டுக்குடி அரசியல் உருவாக்கிய சமூக உளவியலே. புத்தி கெட்ட நடுத்தர வர்க்க பேமானிகளால் பராமரிக்கப்பட்டு பரப்புரை செய்யப்படுகிறது. இதனை புரிந்து கொள்ள இங்கே வலைப்பூக்களிலும் மோடிக்கு நேரடியாக வக்காலத்து வாங்கும் நேர்மையும்(காவி கும்பலிடம் இதை எதிர்பார்ப்பது தப்புதான்), தைரியமும் இன்றி 'இந்து'க்கள் பாதிக்கப்படுவதாக உச்சுக் கொட்டி, காஷ்மீருக்கெல்லாம் கேமராவை சூம் செய்து கதை சொல்லும்  வெள்ளை வேட்டிக்குள் காவி டவுசர் போட்ட பதிவர்களைச் சொல்லலாம். இவர்களின் நம்பகத்தன்மைக்கு உரைகல் அதே 'இந்து'க்கள் தீண்டாமைக் கொடுமைக்கும், படுகொலைக்கும் ஆதிக்க சாதி வெறியர்களால் ஆட்படும் போது பாரமுகமாக இருப்பது. இவர்களின் கரிசனம் 'இந்து' மீது அல்ல என்பது இங்கு புலப்படும்.

சரி இதற்கும் பூவாடைக்காரிக்கும் என்ன தொடர்பு?... பிடிக்காத மாமியார் கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்று சொல்வார்களே அது போல. முஸ்லீம் மன்னர்களின் அடாவடித்தனங்களை மட்டும் சூம் போட்டு காட்டும் வரலாற்றுப் பார்ப்பனியம், அதே அளவுக்கும், அதை விட கொடூரமாகவும் 'சாதி இந்து' அரசர்கள் செய்துள்ள கொடுமைகளைப் பற்றி பேசுவதில்லை. உதாரணத்திற்கு சொல்ல வந்துதான் பூவாடைக்காரி தெய்வம் உருவான கதை.

தஞ்சை நாயக்கர் ஆட்சி காலத்தில் பாளையக்காரர்கள் கண்ணில் படும் அழகிளம் பெண்களை கடத்திச் சென்று வன்புணர்ந்து அடிமைகளாக விற்று விடுவர். பிரேவ் ஹார்ட் படத்தில் வருமே - திருமணம் ஆனால் முதலிரவு அப்பகுதி படைத்தலைவனுடன் நடக்க வேண்டும் என்று, அது போல பூப்படைந்த பெண்களை கடத்தி வந்து வன்புணர்ச்சிக்குள்ளாக்குவர். இதிலிருந்து தப்பிக்க பூப்படைந்த பெண்களை கௌரவக் கொலைகள் செய்வதும் நடந்துள்ளது. அப்படி கொல்லப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பான பெண் தெய்வப் பெயர் வழங்கப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் இவ்வகை தெய்வங்களுக்கு பூவாடைக்காரி என்று பெயர் வழங்கப்படுகிறது. (தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி - 1 இராமச்சந்திரன்.சீ - உங்கள் நூலகம், ஆ, சிவசுப்பிரமணியன் செப் 2013)

விடுதலைப் போர் வீரன் கட்டபொம்மனுக்கும் கூட இவ்வகை கதையாடல் உண்டு. அது குறித்து நாட்டுப்புற வழக்கும் உள்ளது. 7 அண்ணன்களுக்குப் பிறந்த தங்கையை கட்டபொம்முவிடமிருந்து காக்க அவர்கள் கொன்ற கதை அது. இதே போல இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்ட கேரளாவை கொள்ளையடித்த கதை. பல்வேறு 'இந்து' மன்னர்கள் பக்கத்து நாடுகள் (இந்தியாதான் 50 கிமீ 100 கிமீ உள்ளயே) மீது  படையெடுத்து கோயில்களை கொள்ளையடித்த வரலாறுகள். இவைகள் நிகழ்காலத்தில் கலவரத்தை உண்டாக்கும் ரசவாதத்திற்கு உட்படாத கல்வெட்டுக்கால வரலாறுகள்.  காரணம் வரலாறு நெடுகிலும் காவி டவுசர்கள் பார்ப்பனியத்தின் பெயரில் உருவாக்கி வைத்துள்ள திட்டமிட்ட முஸ்லீம் வெறுப்பு கருத்தாக்கம்.

எப்படி இன்றைய காவி டவுசர் பதிவர்கள் அய்யோ காஷ்மீர் என்று அலறி போலியாக துடித்தாவது மோடிக்கு காவடி தூக்குகிற அதே வேளையில் கண்முன்னே சக 'இந்து'வுக்கு நிகழும் கொடுமையைக் கண்டும் காணாமல் போகிறார்களோ, மூடி மறைக்கிறார்களோ அதே போல வரலாறு நெடுகிலும் மன்னர் என்றாலே அடாவடித்தனம், ஒடுக்குமுறை சுரண்டல் என்ற உண்மையின் ஒரு பக்கத்தை மட்டும் முஸ்லீம் என்று குறிப்பிட்டு காட்டி பிரிவினை கிளப்புகிறார்கள்.

இந்த அடிமடையர்களுக்கும் அல்லக்கை கூட்டம் உண்டு. ஏனேனில் நாம் இருப்பது காலனிய அடிமைத்தனத்தில் ஊறித் திளைத்த சாதி வெறி இந்தியாவில். இது இதற்கு மீறி சிந்தித்தால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும். இவர்களின் மொன்னைத்தனத்திற்கு ஒரு பூவாடைக்காரியை உருவாக்கினால் ஒழிய இதற்கு விடிவில்லை.

அசுரன்

தொடர்புடைய பதிவுகள்:
'இந்து' மன்னர்களால் இடிக்கப்பட்டவை எவை? 

தெய்வங்கள் உருவான கதை 

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

 




Friday, May 27, 2011

பாலாறும், தேனாறும் ஓடுதாம் குஜராத்தில்!!

குஜராத்து ஒளிருகிறது என்றும், ரத்தக் கறை படிஞ்ச கைனாலும் ஊழலற்ற ஆட்சி கொடுக்கும் உத்தமரய்யா நம்ம மோடி, அவர்தான் இந்தியாவ வாழ வைக்கப் போற தெய்வம்மய்யா என்றும் வெளக்கமாத்து மோடிக்கு பார்ப்பன பட்டுக் குஞ்சலங்கள் காவடி எடுத்து ஆடின. இவர்களின் பிரச்சாரத்தையும் உண்மை என்று நம்பி ரொம்ப நல்லவர்களாம், பாசிட்டிவ் திங்கிங் 'எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பர' பிரிவு ஒன்றும் கூத்தாடியது.

இந்தியாவின் டிராபிக் ராமசாமி(நன்றி பாரதி தம்பி) அன்னா ஹசாரே வேறு தனது உண்ணாவிரத நாடகத்தின் முடிவில் மோடியின் குஜராத்து ஒளிருது, அங்கு நடக்கும் ஆட்சி வடிவை பிற மாநிலங்களும் பின்பற்றனும் என்று வெறும் உரலை இடித்துக் கொண்டிருந்த பட்டுக் குஞ்சலங்களுக்கு சிறிது அவலை எடுத்துப் போட்டார். இதில் மோடிக்கு விளம்பரம் கிடைத்ததோ இல்லையோ ஹசாரேயின் டவுசர் கழண்டு காவி கோமணம் பல்லிளித்து விட்டது.

இதோ, சுதாரித்துக் கொண்ட ஹசாரே குஜராத்து வளர்ச்சியின் அருகதை என்னவென்று சொல்லியுள்ளார். 'குஜராத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்றும் மது விலக்கு சட்டமிருந்தும் கூட சாராய வெள்ளம் ஓடுகிறது என்றும், ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் மோசடி கோலோச்சுகிறது' என்று போட்டுடைத்துள்ளார்.

கூடப் போன அக்னிவேஷ் அவர்கள், குஜராத்து ஒளிர்வதற்கு சிரியல் பல்பு போட்டு கரண்டு சப்ளை பன்னுபவர்கள் யார் என்று நேற்று சொல்லியுள்ளார். 'அமெரிக்க ஊடக மாமாக்களின் உதவியுடன் குஜராத்தின் வளர்ச்சி பற்றி பொய்யான சித்திரத்தை முன்னிறுத்துகிறார்கள்' என்றுள்ளார் அக்னிவேஷ் (மாமா - வார்த்தை உதவி நாம்). இவிங்களோட போன கெஜ்ரிவால்னு ஒருத்தர், இப்படியே நிலத்த புடுங்கினு இருந்தா குஜராத்தில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றுள்ளார்.

ஏற்கனவே குஜராத்து வளர்ச்சியின் தராதரம் என்னவென்பதை பலரும் தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதி வருகிறார்கள். ஆயினும் ஏகாதிபத்திய சுரண்டல் வேட்கைக்கு பொருத்தமாக திட்டங்களை மின்னல் வேகத்தில் நடைமுறைப்படுத்த குஜராத்து போன்று அரசு பாசிசம் இருக்குமிடங்கள் வசதியாக இருக்கின்றன. எனவேதான் இதனை ஒரு மாடலாக அனைத்து ஊடகங்களும் முன்னிறுத்துகின்றன. ஆனால் அங்கோ உண்மையில் விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள், முஸ்லீம் சிறுபான்மையினர் என பல மக்கள் பிரிவினரும் அரசியல்-பொருளாதார-கலாச்சார ரீதியாக ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள். தொழிலாளர்கள் உரிமைகள் ஏதுமற்று அற்பமான உரிமைகளை கோருபவர்கள் கூட பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள். இந்து மதவெறி பயங்கரவாதமும், அரசு-ஏகாதிபத்திய பயங்கரவாதமும் சேர்ந்து ஒடுக்குகின்றன குஜராத்தில்.

குஜராத்தில் சாராய ஆறு மட்டும் ஓடவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின், முஸ்லீம் சிறுபான்மையினரின் ரத்த ஆறும், விவசாயிகளின், தொழிலாளர்களின் கண்ணீர் ஆறும் சேர்ந்தே ஓடுகிறது. இதனைத்தான் வளர்ச்சி என்கிறார்கள் மக்கள் விரோதிகள். இதற்கு இசைப் பாட்டு பாடுகிறார்கள் யுப்பி வர்க்க அல்பைகள்.

அசுரன்

Thursday, January 10, 2008

மரணத்த விக்குறான் மோடி, மானத்த விக்குறார் கிருக்ஷ்ணசாமி!!

ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை புதிய கலாச்சாரம் பத்திரிகை சார்பில் அனானியாக ஒரு தோழர் பின்னூட்டமிட்டுச் சென்றுள்ளார். காமாரஜர் அரங்கத்தை மோடி என்கிற சொறி நாய்க்கு வாடகைக்கு விடுவதை கண்டித்தும் அது வெறுமே காங்கிரஸ் என்ற கும்பல் சம்பந்தப்பட்டது அல்ல தமிழர்களின் மானம், சுயமரியாதை சம்பந்தப்பட்டது எனவே அதனை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது என்று அனைத்து ஜனநாயக, முற்போக்கு அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது. படித்துப் பார்க்கவும்.

**************************

ம.க.இ.க. பொதுசெயலர் தோழர் மருதையன்
இன்று பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கை

"மரண வியாபாரி நரேந்திர மோடி பங்கேற்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்சிக்கு காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு தரக்கூடாது" என்று காங்கிரஸ் தலைவரிடம் நாங்கள் கோரியிருக்கிறோம் இந்த கோரிக்கையை முன் வைத்து சத்தியமூர்த்தி பவன் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எங்களது தோழர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருக்ஷ்ணசாமியோ "வியாபார ரீதியில் நிர்வகிக்கப்படும் யார் கூட்டம் நடத்துகிறார்கள் என்பதை தமிழக காங்கிரஸ் கண்கானிக்க முடியாது என்றும் இந்த விசயத்தில் தலையிட முடியாது" என்றும் கூறியிருக்கிறார். வியாபார விசத்தில் இவ்வளவு கறாராக நடந்து கொள்ளும் காங்கிரஸ் தலைவர் அரசியல் விசயங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

சமீபத்திய குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி அரசை "மரண வியாபாரிகள்" என்று விமர்சித்ததிற்காக சோனியாவை 'வெளி நாட்டுக்காரி' என்று சாடினார் மோடி. முன்னால் ம.பி முதல்வர் திக் விஜை சிங் மோடியை 'இந்து பயங்கரவாதி' என்று சரியாகவே குறிப்பிட்டார். "அது பிரச்சாரம்-இது வியாபாரம்" என்கிறாரா கிருக்ஷ்ணசாமி? அப்படியானால் லக்ஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் பணம் கட்டினால் அவர்களுக்கும் காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு விடுவாரா?


இனப்படுகொலை குற்றத்திற்காக மோடி மீது அய்ரோப்பாவில் வழக்கு உள்ளது. அவர் அங்கே சென்றால் மறு கனமே கைது செய்யப்படுவார். இனப்படுகொலை குற்றவாளி என்ற காரணத்தினால் தான் "அமெரிக்காவில் கால் வைக்க கூடாது" என்று மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வியாபார ஒப்பந்தம் போடுவதற்காக கூட அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ மோடி நுழைய முடியாது என்பது தான் இதன் பொருள். அமெரிக்க, அய்ரோப்பிய முதலாளிகளே வியாபாரத்தை பொருட்படுத்தாத போது கிருஸ்ணசாமி வியாபாரத்தில் இவ்வளவு குறியாக இருப்பது ஏன் ?


2002 இனப்படுகொலையின் போது காங்கிரஸ் எம்.பி இஸான் ஜாப்ரியை அவரது வீட்டில் வைத்தே கண்டதுண்டமாக வெட்டிக்கொன்றதும் மோடியின் காவிப்படை தான். இந்த கொலையில் முதல் குற்றவாளி மோடி தான் என்றும், அவரை கைதுசெய்ய வேண்டும் என்றும் ஜாப்ரியின் மனைவி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். "கொலை வேறு வியாபாரம் வேறு" என்கிறாரா கிருஸ்ணசாமி?

கிருக்ஷ்ணசாமியின் மீது தாக்குதல் நடந்த உடனே "தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குழைந்து விட்டது" என்று குமுறினார் அவரது மகன் விக்ஷ்னு பிரசாத். குஜராத் முசுலீம்கள் கொல்லப்பட்ட போது "அதை கண்டு கொள்ள கூடாது" என்று போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தவர் தான் இந்த மோடி இதை எதிர்த்த சிரீ குமார் என்ற குஜராத் உளவுத்துறையைச் சேர்ந்தவர் தனது பதவியையே இழந்திருக்கிறார். ஆனால் கிருக்ஷ்ணசாமியோ 'வியாபாரத்தை இழக்க முடியாது' என்கிறார்.


காமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டம் தான் மோடியின் ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மையை கிருக்ஷ்ணசாமி மறுக்கிறாரா? காந்தி கொலையை நியாயப்படுத்தும் " நான் கோட்சே பேசுகிறேன்" என்ற நாடகம் மற்ற மாநிலங்களிலெல்லாம் தடை செய்யப்பட்ட போதும் அதை குஜராத் முழுவதும், நடத்திக்காட்டியவர் மோடி. பணம் கொடுத்தால் கோட்சே நாடகத்தை நடத்துவதற்கும் காமராசர் அரங்கத்தை கிருக்ஷ்ணசாமி வாடகைக்கு விடுவார் போலிருக்கிறது.

இது மதச்சார்பின்மை நிலவும் பெரியார் பிறந்த மண். உலகமே காறி உமிழ்ந்த ஒரு மத வெறி கொலைகாரன் இந்த மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவமானம். கிருக்ஷ்ணசாமிக்கு பணம் தான் முக்கியம் என்றால் அவர் நட்டப்பட வேண்டாம்! காமராசர் அரங்கத்திற்கான ஒரு நாள் வாடகையை மக்களிடம் வசூலித்து நாங்கள் அவருக்கு தந்து விடுகிறோம், பணத்தைக் காட்டிலும் மானமும் மனிதாபிமானமும் மதச்சார்பின்மையும் தான் நமக்கு முக்கியம்.

மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை கொடுப்பதற்கு தமிழகத்தின் எல்லா கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மதவெறிக்கு துணை போகும் கிருக்ஷ்ணசாமியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். டில்லியில் உள்ள எமது தோழமை அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். மதவெறி கொலைகாரன் மோடி தமிழகத்தில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் !

இவன்
மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க. 10.12008



Related Articles:

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் நம்ப விரும்புகிறோம் அல்லவா??!!!

பாஸிஸ்டுகளின் வெற்றி !!

குஜராத் : தோல்வி யாருக்கு?

வர்ணாசிரம கிரிமினலும்! ஹவாலா கிரிமினலும்!

“இறுதித் தீர்ப்பு” குஜராத் படுகொலை :ஆவணப்படம்

வரலாறு பழிக்கிறது நாம் கோமாளிகள் என்று!

மோடியின் ராம ராஜ்ஜியம்Do we have a choice?

இந்துத்துவம் என்றால் பொய்த்துவம், பித்தலாட்டம், கர...

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி!

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில் 1 -2

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!

Rama.... Rama....

Friday, January 04, 2008

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் நம்ப விரும்புகிறோம் அல்லவா??!!!

குஜராத் இனப் படுகொலைகள் அரசே திட்டமிட்டு செயல்படுத்திய ஒன்று என்பதை தெஹல்கா விடியோக்கள் அம்பலப்படுத்தின. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை தமது பத்திரிக்கைகளில் வெளியிடாமல் கள்ள மௌனம் சாதித்தன அனைத்திந்திய பத்திரிக்கைகளும். செத்து சுண்ணாம்பாகிப் போன டாயானாவை பற்றியும், சாகாமலேயே வலம் வந்து கொண்டிருக்கும் உலக அழகி ஐசுவர்யாராய் அவரது கணவர் சகிதம் நகர்வலம் வருவது பற்றியும், இன்ன பிற பிராசாந்த், வரலட்சுமி உள்ளிட்ட உள்குடும்ப விவகாரங்கள் பற்றியும் ருசிக்க ருசிக்க புகைப்படங்களுடன் வெளியிடும் இந்த பத்திரிக்கைகள் தெஹல்கா பற்றி மௌனம் காத்தது காரியப் பூர்வமானது. தற்செயலானது அல்ல.

ஒருவன் எதை பேசுகிறான் என்பது மட்டுமல்ல எதை பேசாமல் மௌனம் காக்கிறான் என்பதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததே. இது போன்ற குழப்பங்களுக்கும் ஊகங்களுக்கும் அவசியமில்லை என்று குமுதம் பத்திரிகை வெளிப்படையாகவே தனது RSS சார்பை, பார்ப்பன பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனவரி முதல் வாரத்துக்கான குமுதத்தில் கடைசிப் பக்கங்களில் வந்துள்ள தலையங்கத்திலும், அதற்க்கு அடுத்த பக்கங்களில் இல. கனேசனுடைய கருத்து தொகுப்பு என்ற பெயரிலும் தனது இந்த வர்க்க பாசத்தை விளம்பரப்படுத்தி நமது வேலையை மிச்சப் படுத்தியுள்ளது குமுதம் 'செட்டியார் அன் கோ' பத்திரிகை. குமுதம் பத்திரிகையின் அப்பட்டமான பார்ப்பன கொழுப்பை பேசும் முன்பாக அதனது மறைமுக பார்ப்பன நடவடிக்கைகளை சிறிது பார்த்து விடலாம்.

தமிழர்களை அடித்து மிரட்டி பந்தாடி வரும் அதே மலேசியாவில் அப்படிபட்ட சமபவங்கள் எதுவுமே நடக்கவில்லை என்பது போல செட்டியார் சாதி வெறியர்கள் தமது சாதி பெருமையை பறைசாற்றி மாநாடு நடத்துகிறார்கள். தமிழ், தமிழர்கள் என்று வரிக்கொருமுறை அறிவித்துக் கொண்டு தமது சாதி பாசத்தை தமிழ் முகமுடியில் மறைக்கும்
நரித்தனம் வேறு. ஆயினும் மலேசிய தமிழர்களின் உரிமைகள் குறித்தோ மலேசிய அரசின் பாசிச நடவடிக்கைகள் குறித்தோ எதுவும் காட்டிக் கொள்ளவில்லை இந்த மாநாட்டில். அந்த மாநாட்டில் குமுதம் இதழ் உரிமையாளர் ஜவஹர் பழனியப்பன் என்பவன் பேசுகிறான் தனது சாதி பெருமையை. இதை கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இப்படி வெளிப்படையாக சாதி பெருமை பேசும் இழி பண்பை அவர்கள் விளம்பரப்படுத்துவது தற்செயலான நிகழ்வு அல்ல.

இதே இதழில் இதற்க்கு முந்தைய பக்கத்தில் தமிழகத்தை இருளில் தள்ளிய கழக ஆட்சி என்று ஒரு கட்டுரை. தமிழகம் ஏதோ பிறரது ஆட்சியில் பிரகாசமாக ஒளிர்ந்தது போலவும். கழக ஆட்சியில்லாத பிற மாநிலங்கள் எல்லாம் மிக பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டுள்ளது போலும். தமிழகத்தின் சாபக் கேடுகளுக்கு பின்னால் இருப்பது எல்லாம் கழக ஆட்சியே காரணம் என்பது போலும் அர்த்தம் வரும் வகையில் கழகம் என்ற சொல்லை கவாளித்தனமாக பயன்படுத்தும் ஒரே கும்பல் தமிழக பார்ப்பன கும்பல்தான். தலைப்பை பார்த்தவுடன் இந்த சந்தேகம் நமக்கு வந்ததால் எழுதியவர் யார் என்று பார்த்தால் அது 'சாவித்திரி கண்ணன்' என்ற பெண்மனி. பாப்பாத்தியாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதே நமது கருத்து.

ஆதாம் பால பிரச்சினையின் போது கருணாநிதி மீது பழி போட்டு அவரை கண்டனம் செய்து எழுதப்பட்ட குமுதம் கட்டுரையும் கூட பாப்பாத்தி எழுதியதுதான் என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. இதே இதழின் கடைசிப் பக்கத்தில் பயோடேட்டா பகுதியில் கருணாநிதியின் சமீபத்திய சாதனை என்று 'ராமர் பால பிரச்சினையில் மீண்டு வந்தது' என்று எழுதியுள்ளது இந்த பார்ப்பன குசும்பு பிடித்த மேல்சாதி வெறி பத்திரிகை. இது நமக்குத்தான் அசிங்கம். சூத்திரன் கருணாநிதியை பாப்பான் நாக்கை வெட்டுவேன் என்று மிரட்டுகிறான். நீதிமன்றம் ஞாயிற்றுக் கிழமை கடையை திறந்து வைத்து மிரட்டுகிறது. பத்திரிக்கைகள் எல்லாம் சேர்ந்து மனு நீதியின் அடிப்படையிலேயே பார்ப்பானின் கேடுகெட்ட திமிர்த்தன துடுக்குப் பேச்சை விமர்சனம் செய்யாமல் நியாயமான கேள்வி கேட்ட கருணாநிதியை விமர்சிக்கின்றன. தினமலம் பத்திரிகை முதல் பக்கத்தில் தினமும் கருணாநிதியை கேவலப்படுத்தி எழுதுகிறது. பார்ப்பான் எல்லாம் ஒற்றுமையாக கூடி நின்று ஒப்பாரி வைத்து இதை ஏதோ பொது பிரச்சினை என்று ஆக்கிவிடுகிறார்கள். தீடீரென்று பார்த்தால் கருணாநிதியை தாக்காமல் ராமர் பாலம் குறித்து ஒரு கட்டுரை தினமலம் பத்திரிகையில் உள் பக்கத்தில் அமுக்கி வாசித்து வருகிறது. என்னாடயிதி அதிசயம் என்று பார்த்தால் அதே பத்திரிகையில் பொதுப் பணித்துறை விளம்பரங்கள் பக்கத்துக்கு பக்கம் வாரியிறைத்து நிறைந்து கிடக்கிறது. கருணாநிதியும் ராமன் ஒரு நல்ல இளவரசன் என்பது போல எதையெதையோ சொல்லி பார்ப்பன கும்பலுடன் சமரசம் செய்து கொள்கிறார். இதுதான் பயோடேட்டா பகுதியில் குமுதம் பத்திரிக்கை திமிர்த்தனத்துடன் தனது பார்ப்பன குசும்பை, ஊளை கொழுப்பை ஒழுக விட அடிப்படை.

முன்பொருமுறை குமுதம் பத்திரிகையுடன் அவரது முதல் சண்டையின்(எதிரிகளாக இன்றுவரை இருவரும் செயல்படும் அளவு இந்த சண்டை இருந்தது) போது கருணாநிதி குமுதம் நிருபரை இவ்வாரு மிரட்டினார் 'நான் அடிச்சா நீ தாங்குவயாயா?" என்று. இதோ இன்று பார்ப்பன ஊழை கொழுப்பெடுத்த குமுதம் ஒட்டு மொத்த தமிழக உழைக்கும் மக்களையும், மனிதாபிமானிகளையும் அவமானப்படுத்தி பார்ப்பன திமிரை பத்திரிகையில் எழுதுகிறது. வாசகனோ நமீதாவின் அரைடவுசர் படம் தூக்கத்தை கெடுத்தது என்று வாசகர் கடிதத்தில் ஒப்பாரி வைக்கிறான்.

இந்த குறிப்பிட்ட இதழுக்கு முந்தைய வாரத்தில் வெளிவந்த குமுதம் இணைப்பு இதழ் 'மினி குமுதம் - வீட்டு உபயோக குறிப்புகள்' இதழில் முதல் சில பக்கங்களில் முக்கியமானவர்களாக முன்னிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் பார்ப்பன பெண்களாக இருந்ததும் கூட தற்செயலான நிகழ்வு அல்ல. அதே இதழில் அரசு பதில்கள் பகுதியில் ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது, "தெஹல்கா செய்தி பொலியாக இருக்கலாம் என்று சோ சொல்கிறாரே?" என்று. அதற்க்கு அரசு பதில் பின்வருமாறு சொன்னது, "'சோ' பூசனிக்காயை சோற்றில் மறைக்கலாம் ஆனால் யானையை சோற்றில் மறைக்க முயற்சி செய்கிறார்" என்று பகடி செய்தது. அதற்க்கு அடுத்த வாரத்தில் இதே பொய்யை அதாவது தெஹல்கா வீடியோ ஒரு போலி என்று கூறி கட்டுரையில் பேசுகிறார் இல. கனேசன். இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்பது இருக்கட்டும், 'சோ' என்ன புரிந்து கொள்ளலாம் என்றால் யானையை சொற்றில்தான் மறைக்க முடியாது ஆனால் கட்டுரை முழுவதும் பொய்யாக எழுதுவதன் மூலம் மறைக்கலாம் என்று குமுதம் சோவுக்கு பாடம் எடுக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். சோ என்ற பார்ப்பன இரட்டை நாக்கு மொட்டை குசும்பனுக்கே பாடம் எடுக்கும் அளவு குமுதம் செட்டியார் கும்பல் பார்ப்பன கொழுப்பேறி உள்ளது என்று வேண்டுமானால் நாம் புரிந்து கொள்ளலாம். மோடியின் பெருமை பேசி பார்ப்பன பொய் பரப்பும் அந்த இல கனேசன் கட்டுரைக்கு தலைப்பு 'மோதி மிதித்த மோடி!'.

அரசு பதில்கள் பகுதியில் சோவை காலை வாரியதாக வாசகர் முன்பு நாடகம் ஆடிய அதே குமுதத்தில் பயோடேட்டா பகுதியில் கலைஞருக்கு ஒரு சொட்டு போடுகிறது குமுதம். எதற்க்கு?.... நீண்ட கால சாதனையாக திராவிட கொள்கைகளை விடாமலிருப்பதற்க்காகவாம். அதென்ன கலைஞருடைய அந்த விடாத திராவிட கொள்கை? நேற்று இராமன் எந்த இன்ஞினியரிங் காலேஜ் என்கிற மிகச் சாதாரணமான கேள்வி கேட்டுவிட்டு இன்று ராமன் ஒரு சிறந்த இளவரசன் என்பதை நான் மறுக்கவில்லை என்று சரண்டர் ஆகிவிட்டு, நாளை இந்த விசயத்தை முதல் பக்கத்தில் எழுதி அசிங்கப்படுத்தும் தினமலம் பத்திரிக்கைக்கு பொதுப்பணித்துறை விளம்பரங்களை அள்ளிக் கொடுப்பதன் மூலம் திரை மறைவு ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுதான் திராவிட கொள்கை என்று குமுதம் சொல்லாமல் சொல்கிறது. ஏனேனில் இந்த சம்பவங்கள் எப்படி நடந்திருக்கும் என்று நம்மால் கற்பனை செய்து கொள்ள முடிகிறது. இவையெல்லாம் குமுதத்திற்க்கு தெரியாமல் இருந்திருக்காது.

நம்ம பையன் ஒரு கதை எழுதிருக்கான் உங்க பத்திரிக்கையில பிரசுரம் செஞ்சுடரேலா என்பதில் ஆரம்பித்து பார்ப்பன உயர் வர்க்க குடும்பங்கள் தமிழக பத்திரிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தும் விசயம் கொஞ்சம் கூர்மையாக இந்த பத்திரிகைகளை வாசித்தாலே புரியக் கூடிய ஒன்றுதான். தெஹல்கா அம்பலப்படுத்தலை தொடர்ந்து கூட இந்த பத்திரிக்கைகளுக்கு இதே வட்டங்களிலிருந்து தெளிவான இன்ஸ்ட்ரெக்சன்ஸ் வந்திருக்கும் என்பதுதான் நமது அனுமானம். அரசு மற்றும் அரசாங்க வட்டங்களில் இந்த பார்ப்பன பயங்கரவாத கும்பலின் நெருக்கத்திற்க்கு மலர்மன்னன் என்ற பார்ப்பன RSS குண்டனுக்கு அவன் மண்டைக்காடு கலவரத்தை
அரங்கேற்றிக் கொண்டிருந்த பொழுது உதவிய அன்றைய போலீசு துறை அமைச்சர் எம் ஜி ஆர் என்கிற சிகப்பு விஜயகாந்தே நல்லதொரு உதாரணம்.

மோடியின் பெருமை பேசி RSS பத்திரிகையாக தன்னை விளம்பரப்படுத்தியுள்ள ஜனவரி மாத முதல் வார இதழில் அந்த குறிப்பிட்ட தலையங்கத்தில் குமுதம் என்ன எழுதியுள்ளது?

"மத வாதத்திற்க்கு கிடைத்த வெற்றியா என்று கூட விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் குஜராத் மாநிலத்தில் மோடி ஆட்சியில் உருவான விளைவுகளை மதக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு பார்த்தாக வேண்டும்." - குமுதம்.

மோடி ஆட்சியில் உருவான முக்கிய விளைவான, சமூகத்தை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்தியதையும், வெறும் புரளியின் அடிப்படையிலேயே 3000 முஸ்லீம்களை கொன்று குவித்ததையும், அதை பெருமையாக சொல்லிக் கொண்டு இன்றுவரை திமிராக வலம் வருவதையும் மனிதாபிமானமுள்ளவர்கள் கண்டிப்பதும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று கோருவதும் குமுதத்தின் அகராதியில் மதக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்பதாம். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட மதவெறி துவேசத்தை இன்னும் ஒரு மடங்கு அதிகமாக பேசிய மோடி, தனது வெற்றிக்கு சமூகத்தை மதத்தின் அடிப்படையில் பிளந்ததையே நம்பியுள்ளார் என்பதை சொல்லாமல் சொல்கிறார். ஆனால் பார்ப்பன வெறி பத்திரிகை குமுதமோ இப்படி விமர்சனம் செய்வதை, மனிதாபிமானியாக இருப்பதை மதக் கண்ணாடி அணிந்திருப்பதற்க்கு ஒப்பானது என்று சொல்கிறது. பார்ப்பனியத்திற்க்கு எதிராக பேசினாலே அதை போலி மதச் சார்பின்மை என்று சாணியடிக்கும் RSS கும்பலின் அதே தந்திரம்தான் மனிதாபிமானத்தை மதக் கண்ணாடி என்று சாணியடிக்கும் குமுதத்தின் இந்த கருத்திற்க்கும் பின்னால் உள்ளது.

"76,000 கோடி அளவிற்கு அபாரமாக முதலீடு குவிந்திருப்பதை ரிசர்வ் வங்கியே உறுதிப்படுத்தியிருக்கிறது. பொருளாதாரம் 10.6 % உயர்ந்திருக்கிறது. கிராமங்களுக்கு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்திலும் சாதனை நிகழ்ந்திருக்கிறது." - குமுதம்.

இப்படி குஜராத்தின் வளர்ச்சி என்று குமுதல் பட்டியலிடும் எதுவும் அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததற்க்காக ஆதரமாக இல்லை. இந்த அளவுகோல்களை இந்தியா முழுவதற்க்கும் கூட பொருத்திப் பார்த்து மோடியை விட மன்மோகன் சிங் சூப்பர் என்று நிறுவ முடியும். ஆனால் இவை உண்மையில் மக்களை மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளன என்பதை அங்கு விவசாயத்தில் நிகழ்ந்துள்ள தற்கொலைகளே சாட்சி சொல்லும். இந்தியாவின் தற்கொலை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் எனப்படும் மாநிலங்களில் ஒன்றாக தகுதி பெறும் நிலையிலேயே குஜராத் உள்ளது. குஜராத் விவசாயிகள் தற்கொலையை மறைத்து விட்டது மோடி அரசு என்று பஜகாவினுடைய விவசாயிகள் சங்கமான கிசான் சபா குற்றம் சாட்டுகிறது. குஜராத்தின் உணவு உற்பத்தி இந்த ஒரு வருடத்தில் மட்டும் 10 லட்சம் டன்களுக்கும் மேல் குறைந்து விட்டது. ஒவ்வொரு குஜராத்க்காரனின் தலை மீதும் 19 ஆயிரத்து சொச்சம் ரூபாய் கடன் இந்த ஒரு வருடத்தில் ஏறி உள்ளது. குஜராத் தனது தகுதியை மீறி கடன்களை குவித்துள்ளது என்று பா சிதம்பரம் குற்றம் சாட்டுகிறார். கேள்வி முறையின்றி குஜராத் வளங்களை சுரண்டுவதற்க்கு பன்னாட்டு கம்பேனிகளுக்கு உரிமை கொடுக்கும் பாசிச சூழலை உருவாக்கியுள்ளதை நாம் விமர்சனம் செய்வதைத்தான் மதக் கண்ணாடி போட்டு பார்க்காதே என்று அவதூறு பேசுகிறது குமுதம். விவசாயம் குறித்து ஒரேயொரு புள்ளிவிவராமவது போட்டு எழுதலாமே குமுதம் பத்திரிக்கை? ஏன் ஒரே வரியில் விவசாயம் வளர்ந்துள்ளது என்ற பொய்யை - ஒரு திமிங்கலத்தையே தனது தலையங்கத்தில் மறைத்துவிட்டது குமுதம்? படிக்கும் வாசகன் நமீதா எந்தளவுக்கு மறைக்காமல் காட்டுகிறாள் என்பதில்தான் ஆர்வமாக இருப்பான் என்று தெரிந்த திமிர்தான் இதற்க்கு அடிப்படை. உண்மையில் குஜராத் இந்தியாவின் பல மாநிலங்களையும் விட சோசியல் இண்டெக்ஸ் எனப்படும் சமூக முன்னேற்றத்திற்க்கான அளவுகோலில் மிக மோசமாகவே செயல்பட்டுள்ளது.

RSS பிரச்சாரமாக வந்துள்ள இந்த தலையங்கத்திற்க்கு முந்தைய பக்கங்களில் வந்துள்ள "தமிழகத்தை இருளில் தள்ளிய கழக ஆட்சிகள்" என்ற கட்டுரையும் இந்த RSS தலையங்கமும் வெவ்வேறல்ல. தலையங்கத்தில் குஜாராத் ஒளிர்கிறது என்ற இந்துத்துவ பிரச்சாரமும், அந்த கட்டுரையில் தமிழகம் இருளில் என்ற திராவிட அரசியல் மீதான வெறுப்பு பிரச்சாரமும் சரியான தாள சுதியில் இணைந்து ஒலிக்கும் வகையில் RSS பார்ப்பன குசும்புக்கு ஏற்ப இசையமைக்கப்பட்டது.

"2002 ல் குஜராத்தில் நடந்த கோத்ரா சம்பவத்துடன் மோடியை தொடர்படுத்தும் சில பதிவுகள் ஊடகத்தில் பரபரப்பாக வெளிவந்தன." - குமுதம்.

அதாவது குஜராத்தில் நடந்தது கோத்ரா என்ற ரயில் எரிப்பு சம்பவம்தானாம். குஜராத்தில் 57 கரசேவக வெறிநாய்கள் இறந்ததுதான் குமுதத்தின் கண்களில் நிற்கிறதா என்றால் இல்லை அன்பர்களே. இந்த வரிகளின் மூலம் குஜராத் முஸ்லீம்கள் மீதான இன அழிப்பு படுகொலை தாக்குதலை கோத்ரா மூலம் நியாயப்படுத்தி பொதுமக்கள் ஆதரவை தக்க வைக்கும் அதே மோசடியான RSS வித்தையைத்தான் குமுதம் செய்கிறது. இவர்கள் யாரும் தப்பித் தவறி கூட கோத்ரா ஒரு விபத்து என்ற பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மையை தமது பத்திரிகையில் எழுதியதில்லை. குஜராத் படுகொலை குறித்து பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் கூட இப்படி கோத்ரா சம்பவம் என்றே குறிப்பிட்டு பேசுவார்கள். இதன் மூலம் குஜராத் படுகொலைகளை
நியாயப்படுத்துவதே இவர்களின் நோக்கம். கோத்ராவில் இறந்தவர்கள் மனிதர்களாக மதிக்க தகுதியுடையவர்களா என்பது தனிக் கேள்வி. ஆயினும் இந்த கோத்ரா சம்பவத்தை இவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் உள்ள மோசடியை சிறிது பார்த்துவிடலாம். காந்தி என்ற மிதவாத பார்பினியவாதியை கொன்ற கோட்சே என்ற கோழைப் பன்றி தனது கையில் ஒரு இஸ்லாமியனின் பெயரை பச்சை குத்தி கொண்டுதான் அதை செய்தான். இதன் மூலம் மக்களிடையே பரவும் முதல் செய்தி என்பது இஸ்லாமியர்கள் மீதான கோபமாக திரும்பி பார்ப்பனியத்தின் ரத்த வெறியை தீர்க்க உதவும் என்ற நரிப்புத்தியின் அடிப்படையிலேயே இதனை செய்தான் கோட்சே. இதே உளவியல் தந்திரத்தைதான் குஜராத்தில் கோத்ரா சம்பவம் நடந்தவுடன் RSS பார்ப்பன பயங்கரவாத கும்பல் செய்தது. இதோ இன்று வரை மக்களிடையே நிலவிவரும் கருத்து என்பது கோத்ரா சம்பவம் ஒரு இஸ்லாமிய/பாகிஸ்தானிய சதி என்பதே ஆகும். உண்மையில்லை என்று மறுக்க இயலாதா தெஹல்கா வீடியோவை பொய் என்றும் போலி என்றும் பேசும் இதே பார்ப்பன கும்பல்தான் கொத்ரா பொய்யையும், பாபர் மசூதி பொய்யையும், சேது பாலம் பொய்யையும் உண்மை என்பது போல பேசி மக்களிடம் வெறியை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி வளர்க்கின்றனர். குமுதம் அப்படிப்பட்ட கும்பலின் அதிகாரப் பூர்வ ஏடாக தன்னை அறிவித்துள்ளது என்பதுதான் சமீபத்திய செய்தி.

"மாநிலத்தில் நடந்த இந்த மாற்றங்கள்தான் மறுபடியும் மோடி வெற்றி பெற்றதற்கான அடிப்படை காரணம்". - குமுதம்.

உண்மையில் குஜராத்தில் நிகழ்ந்துள்ள மாற்றம் என்பது இந்துத்துவ வெறியர்களின் பொய் பித்தலாட்ட பேச்சுக்களை கண் மூடித்தனமாக நம்பும் வகையில் சிறிது சிறிதாக மூளைச் சலவை செய்யப்பட்ட மக்கள் என்ற விசயமே ஆகும். குறிப்பாக கோத்ரா சம்பவம் நடந்து முடிந்தவுடன் அத்வானி என்ன சொல்கிறான்: "இது ஒரு அந்நிய நாட்டு சதி" என்று. அஹமதாபாத் மீட்டிங்கில் தொகாடியா என்கிற பன்றி பின்வருமாறு பேசுகிறது, "இராமாயணம் கதை உங்களுக்கு தெரியுமில்லையா? அதில் அனுமன் வாலுக்கு யார் தீ வைக்கிறான்?.... ராவணன்... அனுமன் என்ன செய்கிறார்?... லங்காவை எரித்து விடுகிறார்... இப்போ கோத்ராவில் எரிந்த பெட்டிதான் அனுமனுடைய வால். தீ வைத்தது யார்?... முஸ்லீம்கள்... அனுமன் இப்போ பறந்து போறார்... இலங்கையை எரிக்க போறார்.... இலங்கை எது?" இப்படி கூறிய பிற்ப்பாடு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை பட்டியலிடுகிறான் இந்த பன்றி. இதே போல மோடியினுடைய பேச்சுக்கள் எல்லாமே குஜாராத்திகள் கத்தியால் வயிற்றில் சொருகிறான், எரிக்கிறான் என்று குறிப்பான வன்முறை செயல்பாடுகளை சொல்லி அவற்றை மக்கள் செய்யத் தூண்டும் வகையிலேயே இருந்தது. பழங்குடியினரையும், மலைவாசிகளையும் தனது NGO வேலைகளின் மூலம் லோன் வாங்கி தருவது உள்ளிட்ட விசயங்களால் தனக்கு விசுவாசமாக வைத்துக் கொண்டான். பிறகு கோத்ரா சம்பவம் நடந்தவுடன் அவர்களிடம் சென்று இதே பொய் பிரச்சாரத்தை செய்தால் அவன் இயல்பாகவே கோபம் கொண்டு வெறிச் செயலில் ஈடுபடவே செய்வான். திட்டமிட்டு சிறு சிறு கலவரங்கள் மூலம் ஒவ்வொரு பகுதியாக மக்களை பிளவு படுத்துவதும் பிறகு அந்த பிளவை பயன்படுத்திக் கொண்டு கோத்ரா அல்லது காந்தி கொலை அல்லது மண்டல் கமிசன் கோசுவாமி கோலை போன்று எதையாவது செய்து ஏற்கனவே உள்ள பிளவை வெறுப்பாக அறுவடை செய்து கொள்வதுமான பண்பாட்டு மாற்றம் தான் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. இதை நம்ப மறுப்பவர்களுக்கு இன்றைய கர்நாடகமும், சமீபத்திய தமிழக - தென்காசி கலவரமும், ஒரிஸ்ஸா கலவரமும் சாட்சியாக இருக்கின்றன. இந்த மாற்றங்கள் குறித்து குமுதம் பேசவில்லை.

இப்படி மக்கள் வெறியூட்டப்பட்டுள்ளதால்தான் படு அல்பத்தனமான பொய்களைக் கூட பார்ப்பன பயங்கரவாதிகளால் அங்கு விற்க முடிகிறது. எ-கா: இஸ்லாமியர்கள் இந்து பெண்களை கடத்திச் சென்று திருமணம் செய்வதன் மூலம் தமது மக்கள் தொகையை கூட்டிக் கொள்கிறார்கள் என்ற பொய்யை அவர்கள் வெகு சீரியசாக விவாதம் செய்வதை காணலாம். இதை தடுப்பதற்க்கென்றே ஒரு பயங்கரவாதி பிரபலமாக குஜராத்தில் உள்ளான். அவனை Frontline பத்திரிகை பேட்டியெடுத்து வெளியிட்டது. இஸ்லாமியனை மணந்த இந்து பெண்களை மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டவர்களை மணந்த மேல்சாதி பெண்களை மீட்பதும் என் கடமை என்று மார்தட்டுகிறான் அந்த மேல்சாதி வெறி சொறி நாய். மோடி என்கிற சொறி நாயோ மலம் அள்ளுவது தியானம் செய்வது ஆகும் என்று கூறி மலம் அள்ளும் சாதியைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து மலம் அள்ளச் சொல்கிறான். இதே குஜராத்தில் மலம் அள்ளுபவர்கள் உரிமை கேட்டு போராடிய போது அவர்கள் ஒடுக்கப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. இப்படி மக்களை மத வெறி பார்ப்பனிய அடிமைத்தன போதையில் ஆழ்த்தியுள்ளதால்தான் குஜராத்தை மோடி கூட்டிக் கொடுப்பதை தட்டிக் கேட்க்க ஆளில்லை. SEZ என்ற பெயரில் அடிமாட்டு விலைக்கு நிலங்கள் பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்கு விற்க்கப்பட்டுள்ளது இதற்க்கு ஒரு உதாரணம் ஆகும். குஜராத்தின் மறுகாலனிய அடிமைத்தனம் என்கிற பண்பு மாற்றமும், பார்ப்பினிய அடிமைத்தனம் என்கிற பண்பும் தனித்தனியான நிகழ்வுகள் அல்ல. இவை ஒன்றையொன்று சார்ந்த விசயங்கள் அதனால்தான் குமுதம் பத்திரிகை தனது பார்ப்பனிய சார்பை பொருளாதார முன்னேற்றம் என்கிற பொய்யான பிரச்சாரத்தின் பின் நின்று கொண்டு வெளிப்படுத்துகிறது. இதை குமுதம் பத்திரிகை மட்டுமல்ல அனைந்திந்திய பத்திரிகைகளும் செய்கின்றன என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. இவை அவற்றின் வர்க்க சார்பையே காட்டுகின்றன.

இவையேல்லாவற்றையும் தொகுத்து பார்த்து படிக்கும் வாசகர்கள் இவர்களின் இந்த கள்ள உறவை புரிந்து கொள்ளமாட்டார்களா என்றால் அதற்க்கு குமுதம் வாசகர் கடிதம் பகுதியில் நமீதாவின் அரை டவுசர் படத்தை போட்டு தூக்கத்தை கெடுத்தது குறித்து குறை படும் வாசகரே சரியான பதிலை நமக்கு சூசகமாக சொல்கிறார்.

ஏகாத்மவாதம் என்கிற RSS சித்தாந்தத்தை உருவாக்கியவரை என்கௌன்டரில் போட்டுத் தள்ளிய (இவரை போட்டுத் தள்ளியது பார்ப்பன பயங்கரவாதிகள் என்றும் ஒரு கூற்று உண்டு. அவரை போட்டு தள்ளியது இன்றும் மர்மமாகவே இருக்கிறது, போட்டுத் தள்ளப்பட்டான் என்கிற ஒரு உண்மையை தவிர்த்து) அன்றைய CPMன் இன்றைய வாரிசு புத்ததேவ் பட்டாச்சார்யா அன்றைய RSSன் இன்றைய வாரிசான அத்வானியை நண்பர் என்று விளித்து - "நந்திகிராம் வரை வந்த அத்வானி என்னை சந்திக்காமல் சென்று விட்டாரே" என்று வருத்தப்படுவதும். அதற்கு அத்வானி பதிலுக்கு நண்பர் என்றே விளித்து ஆறுதல் சொல்வதும் தற்செயலானவையல்ல. மறுகாலனிய பொருளாதாரத்திற்க்கு ஏற்ற நிர்வாக வடிவமாக பெரும்பான்மை மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் பார்ப்பனியமே இருக்கிறது என்பதாலேயே மோடிக்கு அனைத்திந்திய பத்திரிக்கைகளும் ஜால்ரா தட்டி 'vibrant குஜராத்' என்று கூவிக் கூவி பார்ப்பன பயங்கரவாதத்தை விற்க்கின்றன. குமுதம் உள்ளிட்ட RSS பத்திரிகைகள் குஜராத் ஒளிர்கிறது என்ற பிரச்சாரத்தின் பின்னே குஜராத் இனப்படுகொலைகளை மறக்க கோருவதும் இந்த அம்சத்திலேயே. ஏனெனில் மறுகாலனியத்தின் பெயரால் பார்ப்பனியம் ஒவ்வொருவர் செவிட்டிலும் அறைந்து கேட்கிறது 'ஒன்று நீ எங்கள் பக்கம் இரு அல்லது புரட்சிகாரனாய் மாறிவிடு' என்று. கலைஞர் சொல்கிறார் 'நான் உங்கள் பக்கம்" என்று. ராமதாசோ, "என்னிடம் இந்த கேள்வி கேட்பதற்க்கு நான் எந்த வகையிலும் தகுதியில்லாதவன் மேலும் கர்நாடகத்தில் தேவகௌடா என்ன செய்கிறாரோ அதையேதான் இங்கு நான் செய்கிறேன் என்னை சந்தேகப்படாதீர்கள்" என்று தாழ்மையுடன் கூறி வாழும் பெரியார் பட்டம் ஒன்றே போதும் என்று பின்வாங்கிக் கொண்டார். அரசியல் அசிங்கம் வைகோ, விஜயகாந்த, சோம பானம் புகழ் சரத்குமார் உள்ளிட்டவர்கள் நாங்கள் அல்ரெடி உங்கள் பக்கம் உள்ளோம் என்று கூறிவிட்டனர். தனது பிறந்த நாளுக்கு ஊரெல்லாம் சுவரெழுத்து எழுதி அசிங்கம் செய்து வைத்து களைத்து போயிருந்த வீரமணியோ மோடியின் தேர்தல் வெற்றிக்கு காரணம் குஜராத கலவரம் குறித்து பேசியதுதான் என்று கூறி தான் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவனல்ல RSS புரா வைத்து மறுகாலனிய சேவை செய்யும் பார்ப்பன பயங்கரவாதிகளின் சகலப்பாடியான பெரியார் புர டிரஸ்ட் ஓனர் என்பதை வெட்கமின்றி பறைசாற்றினார்.

பார்ப்பனியத்திற்க்கு சரியான அடி கொடுத்து அதை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டோம் என்று பெருமை பேசித்திரிந்தவர்களே இதோ உங்களது தலைவர்கள் எல்லாம் பார்ப்பனியத்தின் அடி பொடிகளாய் அவதாரமெடுத்து நிற்கின்றனர். பார்ப்பனியமோ விஸ்வரூபமெடுத்து தனது உடம்பெல்லாம பொய்யும் பித்தலாட்டமும் ஒழுக நிற்கிறது. மறுகாலனிய சேவை செய்து கொண்டே பார்ப்பனிய எதிர்ப்பு செய்வதாக பம்மாத்து செய்யும் முற்போக்கு சீமான்களே இப்போது பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் முச்சந்தியில் முத்தமிட்டு சரசம் செய்கின்றனவே? என்ன செய்வதாக உத்தேசம்? அவர்கள் சரசம் செய்ய விளக்கு பிடிப்போமா? சாதிரீதியாக அணி திரண்டு ஒவ்வொருத்தரும் தனித்தனியே உரிமை கோரலாம் என்று பேன்ஸியான செயல் தந்திரம் பகன்ற கனவான்களே பார்ப்பனியத்தின் பலமே சாதி பாசத்தில் ஊறிய அடிமைகளாக மக்கள் இருப்பதுதான் என்ற உண்மை தெரிந்த பின்பு என்ன செய்வதாக உத்தேசம்? இன்னுமொரு பெரியார் அவதாரமெடுப்பார் என்று பகல் கனவு கண்டு கொண்டு பார்ப்பனியத்தின் பாதங்களில் படுத்துறங்குவதாக உத்தேசமா? இன்றைய பார்ப்ப்னியத்தை எதிர்க்க ஒரு பெரியார் போதுமா? சுயமரியாதையிழந்து பார்ப்பினியத்தின் அடிமைகளாய் வாழ்வதை விட, பெரியாரின் ஆவியை நம்முள் இறக்கிக் கொண்டு ஆயிரம், இரண்டாயிரம், லட்சம், கோடி பெரியார்களாய் கோடிக் கால் பூதமாக எழுந்து நின்று பார்ப்பனியத்தை வீதிகளில் சந்தித்து மண்டையொடைக்கலாம் அதற்க்கு தேவைப்படுவதோ பெரியாரியத்தின் சுயமரியாதையும், கம்யுனிசத்தின் மனிதாபிமனமும் அன்றி வேறல்ல.

அசுரன்


Related Articles:

பாஸிஸ்டுகளின் வெற்றி !!

குஜராத் : தோல்வி யாருக்கு?

வர்ணாசிரம கிரிமினலும்! ஹவாலா கிரிமினலும்!

“இறுதித் தீர்ப்பு” குஜராத் படுகொலை :ஆவணப்படம்

வரலாறு பழிக்கிறது நாம் கோமாளிகள் என்று!

மோடியின் ராம ராஜ்ஜியம்

Do we have a choice?

இந்துத்துவம் என்றால் பொய்த்துவம், பித்தலாட்டம், கர...

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி!

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில் 1 -2

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!

Rama.... Rama....

Sunday, November 04, 2007

வரலாறு பழிக்கிறது நாம் கோமாளிகள் என்று!

குஜாரத்தின் இன அழிப்பு படுகொலைகள் குறித்து பலமுறை பேசியாகி விட்டது. ஆயினும்.... மோடி என்ற இந்துத்துவ பயங்கரவாத நாய் குறித்து பலமுறை பேசியாகிவிட்டது. ஆயினும்.... பார்ப்ப்னிய பயங்கரவாதம் குறித்தும் பாசிசம் குறித்தும் மயிர் பிளக்க பேசி வார்த்தை கடல்களையே உருவாக்கிவிட்டோம். ஆயினும்.... நமக்கு விரும்புகிற வாய்ப்புகள் கிடைத்த இடத்திலெல்லாம் இந்துத்துவ பயங்கரவாதிகளை அந்த கடலில் முக்கியெடுத்து மூச்சு திணறடித்து வார்த்தைகளால் அடித்தே விரட்டி விட்டோம். ஆயினும்.... வார்த்தைகளால் இட்டு நிரப்ப முடியாத பயங்கரவாத வெளி என்பது இன்னும் பெரிய அளவில் விரிந்தே கிடக்கிறது. எந்தளவுக்கு என்றால் இந்துத்துவ அபாயம் குறித்த உண்மைகளை உணராமல் இருக்கும் கோடிக்கான மக்களுக்கும் இந்துத்துவ எதிர்ப்பு படிப்பறை கும்பலுக்கும் உள்ள இடைவெளி எந்தளவுக்கோ அந்தளவுக்கு. இது குஜராத்துக்கு மட்டும் பொருந்தும் உண்மையல்ல. இந்துத்துவ பயங்கரவாதமும் வெறும் அரட்டை அரங்க கூட்டத்தில் தோற்க்கடித்து ஓட விரட்ட வேண்டிய கூட்டமுமல்ல. ஆயினும்.... நாம் அப்படித்தான் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்திய தெஹல்கா அம்பலப்படுத்திய குஜராத இனப் படுகொலை குறித்தான உண்மைகள் இந்துத்துவ பயங்கரவாதம் குறித்து வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத இடைவெளியை இட்டு நிரப்பும் ஒரு முயற்சியாகவே பார்க்கத் தோன்றுகிறது. புரட்சிகர ஜனநாயக் சக்திகள் என்று சொல்லிக் கொள்ளும் நமது கடமையோ மக்களுக்கும் இந்துத்துவ எதிப்பரசியலுக்கும் இடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்புவதற்க்கு இந்த முயற்சியை பயன்படுத்திக் கொள்வதாக இருக்கிறது. ஆதிக்கத்தில் இருப்பவன் அப்பாவிகள் மீது தொடுக்கும் திட்டமிட்ட வன்முறைகள் நம்மை எப்பொழுதுமே கிளர்ந்தெழச் செய்கின்றன, அது ஈழமானலும் சரி, வட கிழக்கு - காஸ்மீரானலும் சரி. இது இனம், மதம், சாதி சார்ந்து வெளிப்படும் கோபமல்ல. மனிதம் குறித்தானது. சுயமரியாதை குறித்தானது. மனிதம் அவமானப்படுத்தப்படும் போதெல்லாம் இந்த கோபமும் ஆற்றமையும் வெளிப்படுகிறது.

சாதாரண மனித உருவில் அழையும் ஒருவன் கர்ப்பினி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை கொன்று எல்லாரிடமும் காட்டும் வெறி பிடித்தவனாக இருக்க முடியுமா? மழலை பேசும் குழந்தைகளை கொன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துபவனாக இருக்க முடியுமா? நாங்கள் இத்தனை பேரைக் கொன்றோம், இத்தனை பெண்களை வன்புணர்ச்சி செய்தோம், பெண்கள் பழங்கள் போல இருந்தனர் நாங்கள் புசித்தோம் என்று ஒருவனால் சொல்ல முடியுமா? அப்படி சொல்பவனை உயிருடன் வைத்திருக்கத்தான் தன்மானமுள்ள ஒரு சமூகம் விரும்புமா? அதுவும் தனது மனைவியை அருகில் வைத்துக் கொண்டே ஒருவன் இப்படி சொல்ல முடியுமா? இப்படி சொல்லும் ஒருவனை ஒரு சமூகம் தலைவனாக தேர்ந்தெடுக்கிறது என்றால் அதனை எப்படி புரிந்து கொள்வது? இவையெல்லாம்தான் குஜராத்தில் இன்று நடைபெற்றுள்ளன. இவை இந்துத்துவம் ஒரு சமூகத்தை எப்படி சீரழிக்க முடியும் என்பதற்க்கு சாட்சியமாகும். ஒரு பெண்ணாக தனது கணவன் அரங்கேற்றியுள்ள மனித தன்மையற்ற செயல் குறித்து குறைந்த பட்ச அதிருப்தி கூட வெளிப்படுத்தாமல் பெருமிதம் கொள்ள அந்த பெண்ணை தயார்ப்படுத்தியுள்ளது இந்துத்துவ அரசியலுக்கான ஒரு சோற்று பதம். சரஸ்வதி லஹரி படிப்பதற்க்கு பெண்களை தாயார்ப்படுத்தும் இந்துத்துவம், இன்னபிற மனு தர்ம வக்கிரங்களுக்கு இளைஞர்களையும், மாணவர்களையும் ஒட்டு மொத்த சமூகத்தையும் தயார்படுத்தி வருகிறது. நாமோ பழங்கதை பேசி(மட்டும்) கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்துத்துவ பயங்கராவதம் வார்த்தைகளை நம்பி களமிறங்கிய கூட்டமல்ல, அதனது ஆணி வேர் இந்திய மக்களின் ஜனநாயகமில்லா சாதி உற்பத்தி உறவிலும், ஆயிரம் வருடங்கள் தனது ஆதிக்கத்துக்காகவே உருவாக்கி வைத்துள்ள கருத்து நிறுவனங்கள், வரலாற்று திரிபுகள் மீதுமே நிலை கொண்டுள்ளது. முக்கியமான இந்த அரசின் வர்க்க இயல்பில்தான் இந்துத்துவத்தின் ஆணி வேர் உள்ளது. இவற்றை அழிக்கும் அறிவுப் பூர்வ வேலைகள் என்பது எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கோ அல்லது அதைவிட மிக முக்கியமனதாக களத்தில் இவர்களை அடித்து விரட்டும் வேலை உள்ளது. ஆனால், உண்மையில் முற்போக்கு வேடம் போட்டு வோட்டு பொறுக்கி அரசியல் செய்யும் கட்சிகளோ இந்துத்துவம் அம்பலமாகியுள்ள இந்த நேரத்தில் ஆழ்ந்த கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். இதுதான் நம்மை மேலதிகமாக ஆத்திரமுறச் செய்கிறது. அந்த கட்சிகளின் அல்லக்கைகளாக கோஸ்டி கானம் பாடும் படிப்பறை கும்பலின் முதுகெலும்பற்ற தனம்தான் நம்மை காறி உமிழச் செய்கிறது. அந்த கட்சிகளின் தலைவர்களின் வர்க்க இயல்புதான் இப்படி ஒரு நிலையில் அவர்களை வைத்துள்ளது. தரகு வர்க்கமாக ஒரு தலைவன் இருப்பது சமரசம் அல்ல கருங்காலித்தனம் என்பதை உண்மையான மக்கள் விடுதலை விரும்பும் ஒவ்வொருவனும் உணர வேண்டிய நேரம் இது.

அரசு என்பது சிலர் நம்பிக் கொண்டிருப்பது போல சட்டமன்றம், நாடாளுமன்றம் அல்ல. அது தேர்தல் ஜனநாயக் குறித்ததும் அல்ல இவையெல்லாம் அரசாங்கமாகும். மாறாக அரசு என்பது நீதித்துறை, காவல்துறை, ராணுவம், சிறைச்சாலை, அதிகாரிகள் என்ற இயந்திரம் குறித்தது. இந்த ஒட்டு மொத்த இயந்திரமும் குஜராத படுகொலையை செய்வதற்க்கு தமது முழு சக்தியை செயலபடுத்தியுள்ளன. போலிசுக்காரகள் RSS, VHPன் கங்காணிகளாக வேலை செய்துள்ளனர், அடியாட்படையாகவும் வேலை செய்து தப்பித்து ஓடும் முஸ்லீம் மக்களை சுட்டுக் கொன்றுள்ளனர், முஸ்லீம் மக்களின் வணிக நிறுவனங்களையும் வீடுகளையும் குறிபார்த்து அடிக்க தேவையான தகவல் தர அரசு அதிகாரிகள் முழு நேரம் வேலை செய்துள்ளனர், குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் தயாரித்து பயன்படுத்தியுள்ளனர், நீதித்துறையோ இந்துத்துவ கொலைகாரர்களை பாதுகாக்க தேவையான எல்லா வேலைகளையும் செய்துள்ளது, செய்யாத குற்றங்களுக்கு 10 வருடங்கள் கோடூரமான தண்டனை அனுபவித்து விட்டார் மாதானி என்பவர். ஆனாலும் தாம் செய்த படு பாதக குற்றங்களை தைரியமாக சொல்லிக் கொண்டு தலைவர்களாக உலாவருகிறார்கள் இந்துத்துவ கொலைகாரர்கள். இவர்கள் ஒரு வேலை சிறைச்சாலைக்கு சென்றாலும் அங்கும் தமது சுக போக வாழ்வை நடத்தவே செய்வார்கள் ஏனெனில் சிறைச்சாலை என்பதும் அரசு எந்திரம்தான். இவையெல்லாம் தெஹல்கா அம்பலபடுத்தியுள்ளது வெறும் சம்பவங்கள் குறித்த உண்மைகளை அல்ல. அது அம்பலப்படுத்தியுள்ளது நம்மால் சீரணிக்க இயலா சமூக உண்மைகளை. நம்மை செயலுக்கு தூண்டும் கடினமான உண்மைகளை.

இது ஏதோ குஜராத்துக்கு மட்டுமான உண்மை என்று பலரும் இன்று மௌனம் சாதிக்க கூடும், உலக தமிழ் த்லைவர் மீதும், இன்னபிற இத்தியாதி ஹோல்சேல் முற்ப்போக்கு டீலர்கள் மீதும் நம்பிக்கை வைத்து செயலின்றி இருக்க எண்ணக் கூடும். அவர்களுக்கு நாம் எச்சரிக்க கடமைப் பட்டுள்ளோம். ஏனேனில் குஜராத்தின் இந்துத்த்துவ மனநோய் கோத்ராவில் உருவாகி, குஜராத் படுகொலையில் வெளிவந்து இன்று குஜராத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கவில்லை. அது ஒரு நீண்ட கால பின்னணி கொண்டது. தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது மோடியை அல்ல, இந்துத்துவத்தை, ராம ராஜ்ஜியத்தை . மோடியை மட்டும் மாட்டிவிட்டு தப்பிக்க எண்ணுகிறது பார்ப்ப்னியம். நாமோ மோடி குறித்துக் கூட மக்களிடம் சென்று பேசாமல் மௌனம் சாதித்து பார்ப்ப்னியத்திற்க்கு ஒத்து ஊதுகிறோம்.

குஜராத் இனப் படுகொலைகள் தற்செயலானவை அல்ல, வெகுவாக திட்டமிட்டவை என்பதை தெஹல்கா அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் மும்பை குண்டு வெடிப்புக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள வேளையில் அதற்க்குக் காரணமான மும்பை கலவரமும், பாபர் மசூதி இடிப்பும் தீர்ப்பு வழங்காமல் இருப்பதும் அதன் குற்றவாளிகள் தைரியமாக அகில இந்திய தலைவர்களாக வலம் வருவதும் தற்செயலானவை அல்ல, கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கண் குரூடானவர் கூட குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நேர்மை தவறா நீதிமன்றத்தால் பெயில் மறுக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேல் சிறையில் வாடுவதும், அந்த குண்டு வெடிப்புக்குக் காரணமான கோவை கலவரத்திற்க்குக் காரணமானவர்கள் மீது ஒரு சிறு துரும்பு கூட இது வரை நீதிமன்றமும் போலிசும் வீசியெறியாததும் தற்செயலானவையல்ல. குஜராது முதல் மும்பை, கோவை வரை பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாகவும், குறிப்பிட்ட சமூகத்தையே குற்றவாளியாகவும் ஒட்டு மொத்த மீடியாவும், சினிமாவும், அரசு இயந்திரங்களும் சித்தரித்து வன்முறை செலுத்துவதும், இதே நேரத்தில் முஸ்லீம் குண்டு வைத்தது போல செட்டப் செய்து நாக்பூர் RSS தலைமையகத்தில் விஹெச்பி குண்டு வைத்ததற்க்கும், நாண்டட்டில் குண்டு தயாரிக்க முயன்று VHP தொண்டர்கள் இறந்த போதும், அங்கு மற்றும் இன்ன பிற இடங்களில் முஸ்லீம்கள் போல வேடம் போட்டு குண்டு வைக்க VHP திட்டமிட்டுள்ளது குறித்து பல்வேறு ஆதாரங்கள் கிடைத்த போதும், அப்பட்டமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத பயிற்சிகளை RSS குண்டர்கள் செய்வது குறித்து சில ஆண்டுகள் முன்பு பத்திரிக்கைகளில் அம்பலமாகிய போதும் அவர்கள் மீது ஒரு துரும்பைக் கூட இந்த அரசும் அரசாங்கமும் வீசாதது தற்செயலானது அல்ல.

காவிரி நீர் முதல் பல்வேறு விசயங்களில் வலிந்து மௌனம் காக்கும் நீதிமன்றம், ஜெயலலிதாவின் குற்றத்திற்க்கு அவரின் மனசாட்சிக்கு கோரிக்கை வைத்த கையோடு அதே குற்றத்திற்க்காக பல்லாயிரம் அரசு ஊழியர்களை பலி வாங்கியதும் தற்செயலானது அல்ல. வேலை நிறுத்தம் செய்வது குற்றம் என்று வியாக்கியானம் செய்த கையோடு AIMS பார்ப்பன மருத்துவ மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் மட்டும் அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தர நீதிமன்றம் அன்புமணிக்கு உத்தரவிட்டதும் தற்செயலானது அல்ல. அணு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் பேச முடியாது என்று விசாரிக்கக் கோரிய மனுவை விசாரணைக்குக் கூட எடுக்க முடியாது என்றதுடன் வழக்குகளை விசாரணைக்கு எடுப்பது எனது விருப்பம் சார்ந்தது என்ற கையோடு, கருணாநிதி அரசாங்கம் பார்ப்ப்னியத்திற்க்கு எதிராக ஏதோ செய்கிறார் என்ற தெரிந்தவுடன் உச்சி குடுமி களைந்தாட கண்டனக் குரல் எழுப்பி நீதிமன்றம் மிரட்டியதும் தற்செயலானது அல்ல. இவையெல்லாம் அரசு என்பதற்க்கும் அரசாங்கம் என்பதற்க்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொள்ள உதவும் தருணங்கள். அரசு என்பதுதான் சாசுவதமன உண்மை, அரசாங்கம் என்பது நிர்வாகத்திற்கான் ஒரு அமைப்புதான் என்ற இந்த உண்மைகளை உணர்வதற்க்கு ஒருவனுக்கு அடிப்படை பகுத்தறிவு இருந்தால் போதும். ஆனால் பகுத்தறிவு என்றும் சுயமரியாதை என்றும் ஹோல்சேல் வோட்டுரிமை பெற்ற கும்பல்கள் யாரும் இந்த உண்மைகளை வேண்டுமென்றே புரியாதது போல நடிப்பதுதான் நமக்கு ஆகக் கேவலமானதாக தெரிகிறது.

இதோ இந்துத்துவம் கடந்த ஐந்தாறு வருடங்களில் அன்னியச் செலவானி மோசடி, லஞ்சம் வாங்குது, முதல் தாய்நாட்டை வேறு யாரையும் விட வேகமாக கூட்டிக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் அம்பலமாகியுள்ளது, அம்பலப்படுத்தியுள்ளனர். இதனை எந்தளவுக்கு நாம் மக்களிடம் கொண்டு சென்றுள்ளோம். பார்ப்ப்னிய எதிர்ப்பிற்க்கு உரிமை கொண்டாடும் கட்சிகளின் நண்பர்களே உங்களது தலைமை இந்த சம்பவங்களின் போதும், இப்போதும் என்ன செய்து கொண்டிருக்கீறது என்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கீறீர்கள்? நேற்று குஜராது, நாளை கர்நாடகா, நாளை மறுநாள் தமிழ்நாடு. தெஹல்காக்கள் அம்பலப்படுத்தும் வீடியோ கேசட்டுகளின் எண்ணிக்கை மட்டுமே கூடும் - செத்து விழும் சிறுபான்மை மற்றும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக.

எந்த திருடனும் நோட்டம் விட்டுத்தான் திருடுகிறான். இந்துத்துவ பயங்கரவாதியும் களத்தை தனக்கு சாதகமாக தயார்ப்படுத்திவிட்டே காரியமாற்றுகின்றனர். அரசாங்கத்தில் இருந்தால் எல்லாம் கிழித்துவிடலாம் என்று தமது செயல்பாடுகளை வோட்டு பொறுக்கி அரசியலுக்குட்ப்பட்டே வைத்துக் கொள்ளும் போலி முற்ப்போக்காளர்களோ இந்துத்துவம் களத்தை தயார் செய்யும் காலங்களில் படுத்துறங்கிவிட்டு அது களப்பணி செய்யும் பொழுது கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். குஜராத் இனப் படுகொலைகள் தீடீரென்று வெடித்தவையல்ல. குஜராத் சமூகம் இந்த வக்கிரங்களை கண்டும் காணாமல் இருப்பதும் கூட தீடிரென்று ஏற்ப்பட்டவையல்ல. கீதாபென் என்ற பெண் இஸ்லாமிய காதலனை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக, தனது கணவனை RSS கருங்காலிக் கும்பலின் கையில் ஒப்படைக்காமல் காப்பாற்றியதற்க்காக அந்த பெண்ணை நடு வீதியில் மக்கள் கூடி நின்று பார்க்க நிர்வாணமாக்கி கல்லால் அடித்து கொன்றது RSS கும்பல். ரத்த விளாறியாக ஆதரிக்க ஆளின்றி கீழே கிடந்த அந்த பெண்-அந்த பிணத்தின் கையில் அவளது கிழிந்த உள்ளாடை இருந்தது. ஒரு வேளை வாய் கொழுப்பு சீலையில் வடிய முற்போக்கு பேச மட்டும் செய்து விட்டு களத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் நமது முகத்தில் அந்த உள்ளாடையை விசிறியடிக்க மறுமை உலகில் காத்திருப்பதைத்தான் அவள் கைகளில் துவழும் உள்ளாடைகள் உணர்த்துகின்றனவோ. இது போன்ற பல சம்பவங்களில் ஒன்று ஆகும் இது.

இந்துத்துவம் RSS அல்லது BJP போன்ற சில அமைப்பு சார்ந்த விசயமோ அல்ல என்ற பேருண்மையையும் குறிப்பிட விரும்புகிறேன்(இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் விலாவாரியாக) அது ஒரு வர்க்க இயல்பு என்ற வகையில் இந்த தரகு வர்க்க ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்கும் அத்தனை பேரிடமும் நிலவும் சித்தாந்தமாகும்.

இந்துத்துவத்தின் எதிரி இஸ்லாமியன் அல்ல என்ற கடைசி உண்மையையும் இங்கு சொல்லுவதே சரியானதாக இருக்கும். பார்ப்ப்னிய மேலாதிக்கத்துக்கு எதிரான எதுவும் இந்துத்துவ அரசியலின் எதிரிதான். தமிழத்தை அல்ல ஈரேழு உலகத்தையும் ஆட்சி செய்பவராக இருந்தாலும் பார்ப்ப்னிய அரசுக்கு எதிராக அரசாங்கம் செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டால் கீதாபென்னுக்கும், குஜராத் அப்பாவிகளுக்கும் நிகழ்ந்ததுதான் நமக்கும். ஆம் உயிருடன் வாழ பல எளிமையான வழிகள் உள்ளன. பாரதிதாசன் வார்த்தைகளில் சொலவதென்றால், நக்கிக் குடி, நாயினும் தாழ்ந்து போ.

மாறாக நம்மை மனிதர்கள் என்று நாளைய சமூகத்துக்கு நிரூபிக்க வேறொன்றும் செய்யலாம். பார்ப்ப்னியத்தின் இந்துத்துவ அரசியல் தூதுவர்களை வீதிகளில் சந்தித்து ஓட விரட்டி அடிக்கலாம். கீதாபென்னுக்கு தண்டனை கொடுத்த இந்துத்துவ பயஙகரவாதிகளை நாம் இந்திய வீதிகள் எங்கும் அதே போலான தண்டனைகளுடன் சந்திக்கலாம். இதோ இன்றே ஆளுக்கொரு கல்லெடுத்து, குறிப்பாக பெண்கள். ஆனால் அப்படி செய்தால் கருணாநிதியை மிரட்டியது எதுவோ அது, கீதேபென்னும், குஜராத் அப்பாவிகளும் கொலை செய்யப்படும் பொழுது வேடிக்கை பார்த்ததோடல்லாமல், உதவி செய்தது எதுவோ அது - அதாவது இந்த தரகு வர்க்க அரசு நம்மீது தனது தாக்குதலை தனது முழு பலத்துடன் தொடுக்கும். அப்பொழுது யாரும் அரசாஙக்த்தில் இருந்து கொண்டே பார்ப்ப்னக் கொழுப்பை பிடுங்கி எறீந்துவிடுவோம் என்று பொய் பேசித் திரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். ஏனேனில் எல்லைகள் தெளிவாகிவிடும் காலம் அது. இதோ அப்படியொரு போராட்டத்திற்க்கு மக்களை அணி திரட்ட வரலாறு நமக்கு தெஹல்கா ரூபத்தில் ஒரு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது. கைகள் கட்டுண்ட வீரபாண்டியன் போல வீரவேசம் பேசிய நாம் இனி மேலும் செயல்படாவிட்டால் கோமாளிகள் என்றுதான் அடையாளப்படுத்தப்படுவோம்.

அத்தனை அயோக்கியத் தனங்களையும் செய்து விட்டு இந்துத்துவ பயங்கரவாதம் ஆர்ப்பரித்து வருகிறது.... காவி இருள் படர்கிறது....

நீங்கள் கோமாளிகளா? சுயமரியாதை வீரர்களா? சொல்ல வேண்டாம் செய்து காட்டுங்கள்....

அசுரன்


Related Articles:

பார்ப்பனீயத்தின் சோதனைச்சாலை : நமது முகத்தில் விசிறியடிக்கப்பட்ட கீதா பென்னின் உள்ளாடை

இப்படித்தான் இருக்கும் ராம ராஜ்ஜியம்

இந்து மதவெறி பயங்கரவாதம் ! மதவெறிக்குமபல் பா.ஜ.கவும் இதர ஓட்டுப் பொறுக்கிக்கட்சிகளும் !!

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

மதன் சாவலின் சக்கர வியூகம் !

மோடியிசமும் - இந்திய மதச்சார்பின்மை முகமூடியும் !

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத...

Tuesday, October 23, 2007

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!

பாசிஸ்டுகளின் இயல்பே உண்மையை கண்டால் பயந்து அஞ்சி ஓடி ஒளிந்து கொள்வதுதான். பாருங்களேன் October 2004 ல் ஒரு பாசிஸ்டை ஒரு பொது மேடையில் நிறுத்தி உண்மைகளை கேட்ட பொழுது அது அஞ்சி நடுங்கி மேடையிலிருந்து பயந்து ஓடியது. இ஧தா அதே Octoberல் 2007ல் இன்னொரு பாசிஸ்டை வேறொரு மேடையில் நிறுத்தி உண்மைகளை கேட்ட பொழுதும் அஞ்சி நடுங்கி நா வறண்டு தண்ணீர் தாகமெடுக்க பதறி ஓடியுள்ளது.

இங்கு தமிழ்மணத்திலும், வேறு பல்வேறு இடங்களிலும், சம்பவங்களிலும் கூட பாசிஸ்டுகளின் முன்னால் மறுக்க இயலா உண்மைகளை வைத்த போதெல்லாம் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளிந்ததை பார்த்த அனுபவம் நம்மில் பலருக்கு இருந்திருக்கும். இவர்கள் அனைவருமே பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டுகள்.

அந்த அக்டோபர் சம்பவங்களை கீழே பார்ப்போம்.


October 2007-ல் ஒரு பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டு - மோடி:

CNN IBN சேனலில் Devilஒs Advocate என்ற நிகழ்ச்சியில்(கலைஞர் கருணாநிதி இவருக்கு முன்பாக இதில் தோன்றியவர். அவர் அஞ்சி நடுங்கி ஓடி விடவில்லை) மோடியை கரன் தப்பார் என்பவர் பேட்டியெடுத்தார். பாசிஸ்டு மோடியிடம் கேட்க்கப்பட்டதெல்லாம் உண்மைகள் குறித்த ரொம்ப ரொம்ப சாதாரணமான கேள்விகள் மட்டுமே. அதற்க்கு பதிலளிக்க பயந்த அந்த கோழை பின்வருமாறு கூறி ஓடி விட்டான். அவர்களிடம் கேட்க்க தகுந்த நியாயமான கேள்விகளை கேட்டால் நெஞ்சு வெடித்து மேடையிலேயே மரணித்துவிடுவார்கள் போல...


KT: Can I point out to you that in September 2003 the Supreme Court said that they had lost faith in the Gujarat government? In April 2004 the Chief Justice of the Supreme Court said that you were like a modern day Nero who looks the other side when helpless children and innocent women were being burnt. The Supreme Court seems to have a problem with you.

Modi: I have a small request to make. Please go through the SC judgment. If there is anything in writing, I ll be happy to know everything.


KT: There was nothing in writing. You are right. It was an observation.

Modi: If it is in the judgment then Ill be happy to give you the answer.


KT: But do you mean a criticism by the Chief Justice in court doesnt matter?

Modi: Its a simple request. Please go through the court judgment. Hand out the sentence you are quoting and let the people know it.

KT: Ok. In August 2004 the Supreme Court reopened some 2,100 cases out of a total of around 4600 almost 40 per cent, and they did so because they believed that justice hadnt happened in Gujarat.

Modi: Ill be happy. Ultimately the court of law will take the judgment.


KT: Ill tell you what the problem is. Even five years after the Gujarat killings of 2002, the ghost of Godhra still haunts you. Why have you not done more to allay that ghost?

Modi: This I give it to the mediapersons like Karan Thapar. Let them enjoy.


KT: Can I suggest something to you?

Modi: I have no problem.


KT: Why cant you say that you regret the killings that happened? Why cant you say that may be the government should have done more to protect Muslims?

Modi: What I had to say I have said at that time, and you can find out my statements.


KT: Just say it again.

Modi: Not necessary that I have to talk about, in 2007, everything you want to talk about.


KT: But by not saying it again, by not letting people hear the message repeatedly you are allowing an image contrary to the interest of Gujarat to continue. Its in your hands to change it.

(Modi takes mike off)

Modi: Ill have to rest. I need some water.

Paani (water).

Modi: Dosti bani rahe bas (Friendship should be maintained, thatஒs all). Iஒll be happy. You came here. I am happy and thankful to you. I cant do this interview. Itஒs ok your things are. Apne ideas hain aap bolte rahiye aap karte rahiye (These are your ideas, you keep talking, keep doing). 3-4 questions Ive already enjoyed. Nahin please.


KT: But Modi saab...

Modi: Nahin, please Karan.


KT: But Modi saab.

Modi: Karan dekho main dostana sambhand rakhna chahta hoon, aap usko koshish kariye (Karan, I want to maintain friendly relations. You make efforts towards that).


KT: Mujhe ek cheez samjhayee sir. I am not talking about doing anything wrong. I am saying why cant you correct your image?

Modi: This is not the time. Uske liye aap mujhe 2002 mein mile hote, 2003 mein mile hote mein sab kar leta (for that, you should have met me in 2002, you should have met me in 2003, I would have done all that).



Thanks: The Hindu



தேசிய நாயகன் மோடி தேசிய காமெடியனாக மாறியதற்க்கு அவனது பாசிஸ இயல்பு தவிர வேறொன்றும் காரணமில்லை. உலகப் புகழ்பெற்ற பாசிஸ்டு ஹிட்லர் அவன் ஹீரோவாக இருந்த காலத்திலேயே காமெடியனாக சித்தரிக்க (The Great Dictator) முடிந்ததற்க்கு சார்லி சாப்ளினின் திறமை மட்டும் காரணமல்ல. அவன்(ஹிட்லர்) பாசிஸ்டு என்பதும் சேர்ந்துதான் அங்கே காமெடிக்கு வலு சேர்க்கிறது. பாசிஸ்டுகள் கோழைகளாக இருப்பது இயங்கியலின் விதி. பயப் பீதியில் இருக்கும் முதலாளித்துவத்தின் கடைசிப் புகலிடம் பாசிசம். அதன஡ல் கோழைத்தனம் என்பது அதன் அடிப்படை இயல்பு.

October 2004-ல் ஒரு பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டு - ஜெயலலிதா:

இதே போல அக்டோ பர் 2004ல் ஜெயலலிதா என்ற பாசிஸ்டை மேடையில் உட்கார வைத்து சில சாதாரண கேள்விகள் கேட்டதற்க்கு அது பின்வருமாறு பதில் சொல்லி ஓடி விட்டது.
(http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/040930_jayainterview.shtml)


KT: Except for the fact that many people felt, not just the press this time, but the court was actually saying that legally you were innocent but morally you had a case to answer at least to yourself personally.

JJ: I told you I do not comment on any judgment of the Supreme Court, whether the judgment involves me personally or any other matter of public importance. I never have commented on any judgment of the Supreme Court, I will not do so.


KT: You are a very tough person, Chief Minister.

JJ: People like you have made me so.

KT: You said that you were misunderstood.

JJ: Yes.

KT: Do you think that you are badly treated by the press?

JJ: I do not wish to say anything more on this. Anyway your interview is not doing anything to help matters.

KT: My aim, Chief Minister, was to get to the core of the misunderstanding. You said that the press.

JJ: Your aim seems to have been to put as many unpleasant questions as possible and try to provoke me.

KT: Not to provoke you but to put to you the questions that have been discussed for the last three years and which in many ways may be responsible for the electoral adversityஸ

JJ: Havent you asked all of your questions? Have you got anything more to ask?

KT: I have come very close to the end of this interview, I have only one last question. Are you
confident that you can see your electoral low point over with, and that you will win in 2006?

JJ: Wait and see. I told you already I dont believe in astrology. I cant predict what will happen in the next elections but you will be around I suppose. Wait and see what happens.

KT: Is that a yes, you will win?

JJ: I said wait and see.

KT: Chief Minister, a pleasure talking to you on HARDtalk India.

JJ: I must say it wasnt a pleasure talking to you. Namaste

சாதாரண கேள்விகள் கேட்டால் அது இவர்களை தூண்டிவிடுகிறதாம். இவர்கள் சொல்லும் பொய்களை நம்பும் வெறியேற்றப்பட்ட கூட்டங்களில் பேசி பழகி விட்டார்கள் அல்லவா அதனால்தான் வித்தியாசமாக ஓரளவு சொந்த புத்தியுள்ளவர்கள் மத்தியில் பேசுவதற்க்கு இவர்களால் இயலவில்லை. இப்படி பீதி கொண்டு பயந்து ஓடுவதற்க்கு ஒரு சொறிநாயாக பிறந்திருக்கலாம். அல்லது ஒரு பன்றியாய் பிறந்து மலத்தை தின்று உயிர் வாழ்ந்திருக்கலாம். மானங்கெட்ட பொழப்பு.

அரசு இயந்திரத்தின் பலத்தில் நின்று கொண்டு அடாத ஆட்டம் ஆடும் இது போன்ற பாசிஸ்டுகளை வீதிகளில் சந்தித்து கேள்விகளாலேயே கொன்று விடலாம். அவ்வளவுதான் இவர்கள். ஒரு கரப்பான் பூச்சியை ஒத்ததோரு வாழ்க்கை, மன இயல்பு.

அசுரன்

Related Article:

கரண் தாப்பரிடம் இருந்து தப்பியோடிய மோடி: சீழ்ப் பிடித்து நாறும் இந்துத்துவ முகம்

Related Posts with Thumbnails