TerrorisminFocus

Showing posts with label சோசலிசம். Show all posts
Showing posts with label சோசலிசம். Show all posts

Friday, October 19, 2007

மாசி என்பவர் ஒரு பொய்யரா?

மாசி(Ma. Sivakumar) என்பவர் பொய்யரா அல்லது காந்தியவாதியா? என்று எனக்கு சந்தேகம் வந்ததில்லை. ஏனேனில் இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் பெரும்பாலும் இருப்பதில்லை. சமீபத்தில் மாசியினுடைய பொய்கள் இமாலயத்தை விஞ்சி செல்கின்றன.

மாசி சொல்கிறார் இந்தியா ஒரு சோசலிச நாடாக இருந்தது என்று. மாசி சொல்கிறார் கம்யுனிஸ்டுகள் மொட்டையாக பதில் சொல்லி தப்பிக்கிறார்கள் என்று.

இந்தியா ஒரு சோசலிச நாடாக இருந்ததா? அப்படி எந்த காலத்திலும் இருந்ததில்லை. ஆனாலும் கூட இன்றைய உலகமய பொருளாதாரத்தால் வளப்பமுறும் ஒரு சிறுபான்மை மக்கள் விரோத கும்பல் மட்டுமே இப்படி ஒரு பொய்யை முன் வைப்பதன் மூலம் உலகமயத்திற்க்கு புனித வட்டம் கட்டுகின்றனர்(மாசி எந்த கும்பல் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும்).

1947 போலி சுதந்திரத்திற்க்குப் பிறகு இந்தியா ஏகாதிபத்திய மூலதனத்திலிருந்து விடுதலை பெற்ற சோசலிசா நாடாக இருந்ததா என்றால் இல்லை. மாறாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க மூலதனங்கள் இங்கு முகமூடி போட்டுக் கொண்டு வேலை செய்தன அவ்வளவுதான் வித்தியாசம். சில போலச் செய்தல் பாணி சோசலிச நடவடிக்கைகள மட்டுமே இவர்கள் இந்தியாவை சோசலிச நாடு என்று சொல்ல வாய்ப்பளிக்கின்றன(எ-கா: ரேசன் கார்டு, அரசு தொழிற்சாலைகள், கோட்டா உற்பத்தி முறை, பலமான அரசு வங்கிகள் பொது நிறுவனங்கள் etc).

ஆனால் இதே காலகட்டத்தில்தான் பசுமை புரட்சி, வெண்மை புரட்சி என்ற பெயர்களில் ஏகாதிபத்திய நிறுவனங்கள் இங்கு தமது சுரண்டலை விரிவுபடுத்தத் தொடங்கின. யூனியன் கார்பைடு முதல் சுசுகி வரையான நிறுவனங்கள் இந்திய தரகு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தமது மூலதன சுரண்டலுக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டனர். தமது ஆயுதங்களை விற்க்கும் சந்தையாக இந்தியாவை வைத்துக் கொண்டனர். பசுமை புரட்சி என்ற பெயரில் இஸ்ரேல் முதலான நாடுகள் தமது ஆயுத ரசாயனங்களை பூச்சிக் கொல்லி மருந்தாகவும், உரமாகவும் விற்று மண்ணையும், நீரையும் நாசமாக்கினர். பெரிய அணைக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தே஡ல்விகரமான(தோல்விகரமானது என்று இந்திய அரசே பல்வேறு கட்டங்களில் ஒத்துக் கொண்டுள்ளது) திட்டங்களில் மக்களின் வரிப்பணத்தை முடக்கினர். இதே காலகட்டத்தில்தான் சமூக ஏகாதிபத்தியமான ரஷ்யாவிற்க்கும், அமெரிக்காவிற்க்கும் அல்லக்கை தேசமாக இந்தியா வேலை செய்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலையைப் போல அப்பட்டமாக அடிவருடித்தனம் செய்ய இந்திய அரசாலும் இயலவில்லை, அப்பட்டமாக நாட்டாமைத்தனம் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களாலும் இயலவில்லை என்ற ஒரே காரணம் மட்டுமே 1990 களுக்கு முந்தைய இந்தியாவை சோசலிச இந்தியாவாக கருத ஆதாரம் ஆகி஢விடாது.

இந்தியாவில் அன்னிய மூலதனம் குறித்தும், மாசி உள்ளிட்டவர்கள் பொய்களை அம்பலப்படுத்தவும் கீழே உள்ள கட்டுரை உதவும்: The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh

சோசலிசம் என்பது தனியுடைமைக்கு எதிரானது (தனியுடைமையை இல்லாதொழிக்கும் வளர்ச்சிப் போக்கு கொண்டது) மாறாக இந்திய஡வில் இவர்கள் இருந்ததாக சொல்லும் சோசலிசம் எந்த காலத்தில் தனியுடைமைக்கு எதிரானதாக இருந்தது? இந்தியாவில் சோசலிசம் இருந்ததாக சொல்லும் இந்த வருடங்களில் டாடா பிர்லா கும்பல்களேல்லாம் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தார்களா? காதில் பூ சுற்றுவதற்க்கு ஒரு அளவு வேண்டாம்? ஒரு சிறிய விவசாய சீர்திருத்தம் கூட இந்த காலகட்டத்தில் நடந்து விடவில்லை என்பது ஒன்றே சோசலிசம் என்று இந்தியாவை இவர்கள் சொல்லும் பொய்க்கு ஒரு அத்தாட்சியாகும் (நில உச்ச வரம்பு சட்டமும், நிலங்களை பகிர்ந்து கொடுக்கும் திட்டமும் படு தோல்வி என்பதனை அடுத்தடுத்த ஐந்தாண்டு திட்ட அறிக்கைகளும், வேறு சில ஆய்வறிக்கைகளும் மிகத் தெளிவ஡க எடுத்துரைக்கின்றன. மேலும் விவசாய சீர்திருத்தம், விவசாயத்தில் சோசலிசம் என்ற பொய்களின் அவலம் விவசாயத்தின் தொடர் ஧தால்விகளின் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியும் ஒரு உண்மை ஆகும்).

இந்தியாவில் உலகமயத்திற்க்கு முன்பு இருந்தது சோசலிச பொருளாதாரம் இல்லையெனில் அது எவ்வகையில் தற்போதைய பொருளாத஡ரத்துடன் மாறுபட்டது? இந்திய சிறு மூலதனத்தை சேகரமாக்கும் ஒரு வளர்ச்சிக் கட்டமாகவும், ஏகாதிபத்தியம் தற்காப்பு நிலையிலிருந்த பொழுது தனது இருப்பை பாதுகாக்க பயன்படுத்திய தந்திரமாகவுமே 1947க்கு பிறகான காலகட்டம் உள்ளது. மேலும் தரகு மூலதனத்தை (டாடா பிர்லா ரிலையன்ஸ் கும்பல்) வளப்படுத்துவதும், தேசிய முதலாளித்துவத்தை தேவைப்படுகின்ற அளவு வளர்த்து விடுவதும஡ன ஒரு போக்கு கொண்டதாகவே இந்த காலகட்டம் முழுவதும் இருக்கிறது. எந்த வகையிலும் சோசலிசம் என்று சொல்லிக் கொள்வதற்க்கான அடிப்படையில்லாத ஒரு பொருளாதார அமைப்பை சோசலிசம் என்று பொய்யாக சொல்வதற்க்கு மாசிக்கு சில தேவைகள் இருக்கலாம்(இருக்கலாம்..). சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நியாயப்படுத்துவதும், அதனை எதிர்ப்பவர்களை அறிவற்றவர்கள் என்பதாக கூற கருத்து அடிப்படைகளை உருவாக்குவதும், சிபொமாவின் கேடுகளுக்கு புனித வட்டம் கட்டவும் என்று பல காரணங்கள் இருக்கலாம்(இருக்கலாம்...).

சீனாவில் சிபொமா ஒரு தோல்வி என்பதை வலியுறுத்தும் பின்வரும் கட்டுரைக்களுக்கு அப்படியே மாசி விளக்க்ம கொடுத்தால் இன்னும் சிறப்பு. சீனாவில் சிபொமா கொத்தடிமை கூடாரமாக இருப்பதை அம்பலப்படுத்தி நாம் மட்டும் கட்டுரை எழுதியதாக் யாரும் எண்ணிவிட வேண்டாம். நண்பர் பத்ரி அவர்கள் கூட சிபொமா பற்றி தமிழ்மணத்தில் விவாதம் பொறி பறந்து கொண்டிருந்த பொழுது சீனாவில் அது தோல்வியடைந்த இந்த அம்சம் குறித்து கட்டுரை எழுதி கேள்வி எழுப்பியிருந்தார். சீனாவில் உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் போராட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று சீன அரசின் அறிக்கையே ஒத்துக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் சீனாவில் மொத்தமே 6 சிபொமாக்களோ என்னவோதான் உள்ளன. இந்தியாவில் இது வரை அனுமதி கொடுத்துள்ள சிபொமா எண்ணிக்கை 300க்கும் மேல்.

சிபொமா குறித்த பத்ரியின் கட்டுரை:

சிபொமா குறித்து அசுரனில் வந்த கட்டுரை: நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ! சிபொமா குறித்த எந்தவொரு கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல், அதிலுள்ள மோசடிகள் குறித்து எந்தவொரு கேள்வியும் எழுப்பாமல், சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது இங்கு ஏன் முடியவில்லை என்று மட்டும் ஆத
ங்கத்துடன் கேள்வி கேட்டுள்ளார் மாசி. ரொம்ப நோண்டி அவரிடம் கேள்விகள் கேட்டால் நான் ஏங்க அசுரன் அப்படி கேக்க போ஧றன் என்பது போல ஏதாவது மழுப்பலான பதில்களை கைவசம் எப்பொழுதும் வைத்திருக்கிறார் மாசி.

இது தவிர்த்து புஜ(புதிய ஜனநாயகம்)வில் சீனாவின் இன்றைய நிலைமைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் சில கட்டுரைகள் வந்தன. அவற்றின் மென்வடிவம் இன்னும் வலையேற்றப்படவில்லை(தமிழ்சர்க்கிள்). அந்த கட்டுரைகளிலும் சீனா உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் வாழ்க்கைத் தரம் படு பாதாளத்திற்க்கு சென்றுள்ளது குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன.

மாசி தனது பதிவில் கம்யுனிஸ்டுகளிடம் அவரது சிபொமா குறித்த அந்த கேள்வியை கேட்டால் ஒரு நாட்டினுடைய அனுபவத்தை அப்படியே இன்னொரு நாட்டுக்கு பொருத்த முடியாது என்ற ஒற்றை பதிலை மட்டும் சொல்வதாக எழுதியுள்ளார்(கதை விட்டுள்ளார்). எந்த கம்யுனிஸ்டிடம் அவர் விவாதித்தார் என்று சொன்னால் வசதியாக இருக்கும். அல்லது இதோ இங்கு ஒரு கம்யுனிஸ்டு காத்துக் கெ஡ண்டிருக்கிறேன், சி.பொ.மா குறித்து விவாதம் செய்ய. உண்மையில் மாசிதான் எந்தவொரு விவாதத்திலும் தரவு, தர்க்க ரிதியாக ஸ்திரமாக வாதிடாமல் நழுவும் போக்கு கொண்டவர். ஒரு கருத்து சர்வாதிகாரியாக திரும்ப திரும்ப எந்த ஒரு தர்க்க அடிப்படையுமின்றி ஒரே
கருத்தை முன் வைத்து வாதிடும் போக்கு கொண்டவர் அவர். இதனை குறிப்பிட்டு அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும், அவருடனான எமது முந்தைய விவாதங்களும் இதற்க்கு சாட்சியாக எமது தளத்திலும், அவரது தளத்தில் சில கட்டுரைகளாக கிடக்கின்றன (காந்தி மற்றும் அஹிம்ஸை குறித்தான கட்டுரைகள்).

இது தவிர்த்து அடுக்கடுக்காக பல பொய்களை சொல்லிச் செல்கிறார் மாசி. இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்பாம், ஜனநாயகமாம்... அதாவது சிபொமா விசயத்தில் மக்களுக்கும் அரசுக்கும் நடந்த மோதலுக்கு காரணம் இந்த அமைப்பை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்தானே தவிர்த்து மற்றபடி இந்த அமைப்பு ஜனநாயகமாகவே உள்ளது என்கிறார் மாசி. அது சரி மாசி.. சிபொமாக்கள் வருவது நின்றுவிட்டதா என்ன? மக்களின் குரல் துப்பாக்கி குண்டில் கறைந்தது மட்டுமே நடந்துள்ளது. மற்றபடி நந்திகிராமிலும், கலிங்காநகரிலும் பன்னாட்டு மூலதனம் பதுங்கு குழியில் பயந்து ஒளிந்திருப்பதிற்க்கு காரணம் மாசி சிலாகிக்கும் போலி ஜனநாயக அமைப்பு அல்ல மாற஡க அந்த குறிப்பிட்ட பகுதி மக்களின் போராட்டம் மட்டுமே காரணம். இந்த போராட்ட உணர்வும் தியாகமும் பிரிட்டிஸ் ஆட்சி செய்த
பொழுதும் இருந்த ஒன்றுதான். உடனே பிரிட்டிஸ் அரசின் ஜனநாயக சிறப்பே சிறப்பு என்று மாசி பதிவு போட்டாலும் போடுவார். அவரது நோக்கம் தனது வர்க்க நலனுக்கேற்ற சமூக அமைப்புக்கு புனிதம் பிம்பம் கட்டும் வேலை. இதே இடத்தில் சீனா குறித்த தனது அறியாமையையும் முன் வைக்கீறார் மாசி. சீனாவில் உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் போராட்டங்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. அங்கும் பிரச்சினைகள் கருக் கொண்டு வளர ஆரம்பித்து விட்டன என்ற உண்மை எந்தளவுக்கு அவருக்கு தெரியும் என்று நமக்கு தெரியவில்லை. குறைந்த பட்சம் சீன அரசின் அதிகாரப்பூர்வ ஆண்டறிக்கைகளை வாசித்தாலே சில தெளிவுகள் கிட்டும் என்று தெரிகிறது.

இந்திய நாடாளுமன்றத்திற்க்கு ஒரு அதிகாரமும் கிடையாது என்பதுதான் உண்மை. எ-காவிற்க்கு 1990 காட்ஸ் ஒப்பந்தமும், தற்போநதய அணு ஆயுத ஒப்பந்தமும் நாடாளுமன்ற ஒப்புதல்(123-agreement - அடிமை ! அடியாள் !! ) இன்றியே நடைமுறைக்கு வந்துள்ளன(இது தவிர்த்து பல்வேறு ஒப்பந்தங்களும் கூட இதே போல). இந்த ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கூட நாடாளுமன்றாத்திற்க்கு அதிகாரம் இல்லை என்பது குறித்தாவது மாசிக்கு தெரியுமா? இதுதான் ஜனநாயகம். இவ்வளவுதான் ஜனநாயகம். மாறாக நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே மக்கள் செய்துள்ள போராட்டங்களே இந்த அரசை பின்வாங்கச் செய்துள்ளது(சிபொமா முதல் சில்லறை வணிகம் வரை). இப்படிப்பட்ட போலி ஜனநாயகத்தை, நாடாளுமன்ற ரப்பர் ஸ்டாம்பை கேள்வி கேட்டு (அணு அயூத ஒப்பந்தம் சம்பந்தமாக) போடப்பட்ட வழக்கை விசாரிக்கக்கூட எடுக்காமல் நீதிமன்றம தள்ளுபடி செய்து விட்டது. காரணம் கேட்ட பொழுது வந்த பதில்தான் மாசி கட்டியெழுப்பும் புனித போர்வையை கிழிக்கீறது. நீதிமன்றம் சொன்னது: "வழக்கை நிராகரிக்க காரணம் சொல்லும் அவசியம் நீதிமன்றத்திற்க்கு இல்லை. வழக்குகளை எடுப்பதும் நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் தனிப்பட்ட விருப்பம்(discretion) சார்ந்தது". என்னே உங்கள் ஜனநாயக மான்பு!!! இதே நீதிமன்றம் பார்ப்ப்னியத்திற்க்கு ஆபத்து வந்த ஆதாம் பால பிரச்சினையிலும் சரி, உழைக்கும் மக்களை மாநகரங்களை விட்டு விரட்டியடிப்பது உள்ளிட்ட ஏகாதிபத்திய திட்டங்களிலும் சரி யாரும் கூப்பிடாமலே வந்து தனது அதிகாரத்தை வைத்து மிரட்டியுள்ளது. அரசு என்பது அரசாங்கம் என்பது வெவ்வேறு என்பதாவது மாசிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இந்த அரசு தரகு அதிகார வர்க்க அரசு, அரசாங்கம் என்பது அதற்க்கான முகமூடி
அவ்வளவுதான். முகமூடியை மாற்றி/சீர்திருத்தி எந்த பிரயோசனமும் இல்லை.

அப்புறம் அவரது பொய்களிலேயே மிகப் பெரிய பொய் வருகிறது,

//முதலில் நல்ல எண்ணமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்கள் அரசு கொள்கையை வகுக்கிறார்கள்.//
யாருய்யா இந்த நல்லெண்ணம் கொண்ட ஆத்மாக்கள்.... விவசாயிகள் ஒரு லட்சம் பேர் சாவதை வேடிக்கை பார்த்தவ்ரகளா? அல்லது அவர்கள் சாவுக்கு காரணமான கொள்கைகளை வகுப்பவர்களா? சில்லறை வணிகத்திலும் கூட பன்னாட்டு மூலதனத்தை நுழைத்த அயோக்கிய சிகாமணிகளா? அணு ஆயுத ஒப்பந்தம் முதல் பல்வேறு அடிமை ஒப்பந்தங்களை மக்களிடம் பொய் சொல்லிவிட்டு விமானம் ஏறிப் போய் கள்ளத்தனமாக கையெழுத்து போட்டு வந்தார்களே அவர்களா? வேதாந்த கம்பேனியின் நிர்வாகியாக நேற்று வரை இருந்த பா சிதம்பரமா? அல்லது தான் லீகல் அட்வைசராக வேலை பார்த்த என்ரான் கம்பேனிக்கு தான் நிதிஅமைச்சர் ஆனவுடன் 7000 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்த பா சிதம்பரமா? கங்கையை கூட்டிக் கொடுத்த வாஜ்பேயியா? ராணுவ ஒப்பந்தம் முதல் அணு ஆயுத ஒப்பந்தம் வரை மக்களிடமும், நாடாளூமன்றத்திடமும் பொய் சொல்லி கையெழுத்திட்டு வந்த மன்மோகன் சிங் உள்ளிட்ட அடிய஡ள் கும்பலா? கேள்வி கேட்க்க கூட பணம் வாங்கிய புண்ணியாத்மாக்களா? ஹவாலா முதல் பல்வேறு கொலை கொள்ளை மாபியா வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 80% மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களா? அல்லது இத்தனைக்கும் பிறகும் நாடாளுமன்ற மாண்பு காக்கும் சோம்நாத் சேட்டர்ஜியா?

ஏன் மாசி இந்தளவுக்கு தரம்தாழ்ந்து போய்விட்டீர்கள் என்று கேட்க்க மாட்டேன். பூனைக்குட்டி வெளிவந்துவிட்டது என்று வேண்டுமானல் சொல்வேன்.

//நாடாளுமன்றத்தில் பொருளாதார மண்டலம் குறித்த விவாதத்தின் போது எதிர்கட்சிகள் வேறு ஏதாவது தலைப்புச் செய்தியை உருவாக்கும் கலாட்டாவில் இறங்கி மசோதாவை அலசலின்றி நிறைவேற விட்டிருக்கலாம்.//

இப்படி தமது சகோதரர்கள் மீது பலி விழுந்து விடக் கூடாது என்பதற்க்காக யூகங்கள் வேறு. உண்மையில் நாடாளுமன்றத்தில் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்கும் சிபொமா குறித்து கருத்து வேறுபாடே கிடையாது. அதனால் விவாதமும் தேவைப்படவில்லை. இன்னும் சொன்னால் காட்ஸ் ஒப்பந்தம் முதல் இறக்குமதி சலுகைகள், விவசாய விதை நெல் சீர்திருத்த சட்டம், தண்ணீர் தனியார்மயம் முதலான எந்தவொரு மக்கள் விரோத திட்டமும், உலகமயத் திட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யப்படவில்லை. செய்ய வேண்டிய தேவை நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் மாசியின் ஆதரவு பெற்ற நல்லொழுக்க சீலர்களுக்கும் கிடையாது. அவர்களின் சொந்த சம்பாத்தியம் மற்றும் அதிகார பகிர்வு குறித்த கட்டபஞ்சாயத்து கூடமாகவும், வோட்டு பொறுக்கி சில்லறை நாடக அரங்கமாகவும், அரட்டைமடமாகவுமே இருக்கும் அளவு மட்டுமே அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு குறித்துதான் மாசி சிலாகிக்கிறார்.


அசுரன்

Sunday, March 04, 2007

சோசலிச சமூகம் ஏன்? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பொருளாதார, சமூகப்பிரச்சனைகளில் நிபுனத்துவம் இல்லாத ஒருவர் சோசலிசத்தைப் பற்றிக் கருத்துக் கூறுவது சரியானதா? பல காரணங்களை முன்னிட்டு அது சரியே என்று நான் கருதுகிறேன்.
உலகத்திலுள்ள மிக முக்கியமான நாடுகள் மற்ற நாடுகளை அடிமைபடுத்தி வாழ்கின்றன. தோல்வி அடைந்த நாடுகளின் செல்வங்களைச் சுரண்டுவதோடு அங்கே தங்களுக்குச் சாதகமான ஒரு கல்வி அமைப்பையும் ஏற்படுத்தி அடிமைத்தனத்தை நிரந்தரமாக்கிவிடுகிறார்கள்.
இதை சமூக வளர்ச்சியில் 'காட்டுமிராண்டிக்கட்டம்" எனலாம். நாம் இந்தக் கட்டத்தைக் கடந்து விடவில்லை சோசலிசத்தின் நோக்கம் இந்த கட்டத்தைக் கடந்து சென்று உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகும். சோசலிசம் என்பது ஒருசமூக-அறவியல் இலட்சியத்தை நோக்கி முன்னேறுகின்ற இயக்கமாகும்.
மனிதசமூகம் ஒரு மாபெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது: அதன் கட்டுக்கோப்பு குலைந்துவிட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள் இத்தகைய சூழ்நிலையில் தனிநபர்கள் நாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின் மீது அக்கறையில்லாதிருப்பதும், சமூக நலங்களுக்கு எதிராக நடந்து கொள்வதும் இயல்பே.
மேலே கூறியதை விளக்கும் வகையில் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து ஒருஉதாரணத்தை தருகிறேன் இன்னொரு உலகப்போர் ஏற்படக்கூடிய அபாயத்தை பற்றியும் அத்தகைய போரில் மனித குலம் பூண்டற்றுப் போய்விடும் என்பதையும் அறிவும் பண்பும் அமையப் பெற்ற ஒருவரிடம் விளக்கி கூறினேன. "மனிதகுலம்அழிந்துவிடக்கூடாது என்று நீங்கள் கவலைப்படுவது ஏன்?" என்று அவர் என்னிடம் கேட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த மாதிரி அலட்சியமாக யாரும் பேசியிருக்க மாட்டர்கள். தன்னுடைய வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சித்து, அந்த முயற்ச்சியில் தோல்வி கண்ட ஒருவரின் அழுகுரல் என்று இதை கூற வேண்டும். நிராசையும், அவநம்பிக்கையும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கும் இன்று ஏராளமானவர்களிடம் காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? இதை மாற்றும் வழி என்ன? என்னாலியன்ற வரை இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்ச்சிக்கிறேன்.
மனிதன் ஒரே சமயத்தில் தனிநபராகவும் சமூகப் பிராணியகவும் இருக்கிறான். தனிநபர் என்ற முறையில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ளவும், தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும் பாடுப்படுகிறான். சமூகப்பிராணி என்றமுறையில் மற்ற மனிதர்களின் அங்கீகாரத்தையும் பாரட்டையும் பெறுவதற்கும், அவர்களுடைய சுக துக்கங்களில் பங்குகொள்ளவும் சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபடுகிறான். இந்த இருவகை தன்மைகளும் அடிக்கடி மோதிக்கொள்ள நேர்ந்தாலும், இவையே மனிதனின் சிறப்பியல்புகளாகும். இவை இரண்டும் எந்தஅளவில் இணைகின்றன் என்பதை பொறுத்தே மனிதனின் அக வாழ்க்கை அமைகிறது.
ஒரு தனிமனிதனுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படுக்கின்ற நேரடியான, மறைமுகமான உறவுகளின் மொத்ததையே "சமூக ம்" என்றகருத்து குறிப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. ஒரு தனி நபரால் சிந்திக்கவும் தானாக வேபாடுபடவும் முடியும். ஆனால் அவனுடைய உடல், உணர்ச்சி, அறிவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூகத்தினால் மட்டுமே முடியும். ஊடை, உணவு, வீடு, மொழி உழைப்பதற்கான கருவிகள் ஆகியவற்றை அவனுக்கு தருவது சமூகமே. அவனுடைய சிந்தனை வடிவங்களையும் உள்ளடக்கத்தையும் நிர்ணயிப்பது சமூகமே. "சமூகம்" என்ற சிறுவார்த்தையில் மறைந்திருக்கும் பல் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் சாதனைகளுமே அவன் வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றது. இந்த கோடிக்கணக்கான மக்களில் அவனுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்தவர்களின் பங்கும் உண்டு.
நம் காலத்திய நெருக்கடியின் தன்மையை சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். அது சமூகத்துக்கும் தனிநபருக்கும் உள்ள உறவு பற்றியதாகும். தனிநபர் அதிகமான அளவுக்கு சமூகத்தை சார்ந்திருக்க வேண்டியிருப்பதை அவன் உணர்கிறான். ஆனால் இது ஒரு இயல்பான பினைப்பு என்றோ, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி என்றோ, அவன் கருதுவதில்லை. தன்னுடைய நியாயமான உரிமைகளை கட்டுப்படுத்தும் சக்தியாகவே சமூகத்தை கருதுகிறான். மேலும் இன்றைய சமூகத்தில் தனிநபர் போக்குகள் தீவிரம்டைகின்றன: சமூகப் பிணைப்புகள் மேன்மேலும் பலவீனமடைகின்றன. மனிதர்கள் அனைவரும் இத்தகைய படிப்படியான சீர்குலைவுக்கு ஆளாகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் தனிமை சூழ்ந்து, கவலை அதிகரிக்கிறது எளிமையான வாழ்க்கையில் நிறைந்திருக்கும் பரிசுத்தமான் மகிழ்ச்சியை அவர்கள் பெறமுடிவதில்லை. வாழ்க்கை என்பது குறுகியதாகவும் ஆபத்துகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். ஆனால் மனிதன் தன்னைச் சமுதாயத்துக்கு அர்பணித்துக் கொள்வதன் மூலம்தான், வாழ்க்கையின் நிறைவை பெற முடியும்.
முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணம். உற்பத்திச் சாதனங்கள் தனிவுடைமையாக இருக்கின்ற சமுதயத்தில் நாம் வாழ்கிறோம். இவர்கள் சட்டபூர்வமாகவே மற்றவர்கள் தங்களுடைய பயனைப் பெறமுடியாதவாறு செய்கிறார்கள். உழைப்புச் சாதனங்களை உடைமையாக வைத்திருக்கின்ற காரணத்தால், இவர்கள் தொழிலாளர்களுடைய உழைக்கும் சக்தியை விலைக்கு வாங்குகிறார்கள். தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும்பொருள் முதலாளிக்குச் சொந்தமாகிறது. அந்தப் பொருளின் மதிப்பு அதிகம், ஆனால் அவனுக்குத் தரப்படுகின்ற ஊதியம் குறைவு. இந்த வேறுபாட்டை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். முதலாளிகளிடையே போட்டியினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மூலதனம் சிலரிடத்தில் குவிகிறது. இவர்களே அரசாங்கத்தை நடத்துகிறார்கள். சட்டமன்றத்தின் பிரதிநிதிகளை அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கின்றன. ஆனால் அரசியல் கட்சிகளை ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாண்மையான ஏழைகளின் பிரதிநிதிகள் அல்ல. மேலும் பத்திரிக்கைகள். வானொலி, கல்வி அமைப்பு ஆகியவற்றை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்வகிப்பதால். மக்களாலும் தங்கள் அரசியல் உரிமைகளைச் சரியான வழியில் பயன்படுத்த முடியவில்லை. மக்களுக்கு தேவையானவற்றை இவர்கள் உற்பத்தி செய்வதில்லை. அதிகமான லாபமே இவர்களது குறிக்கோள். எல்லோருக்கும் வேலை கிடைப்பத்தில்லை. வேலையில் இருப்பவர்களுக்கும் வேலை போய்விடுமோ என்ற பயம் நிரந்தரமாக இருக்கிறது. லாப நோக்கம், தங்கு தடையில்லாத போட்டி ஆகியவையால் உழைப்பு அதிகமான அளவுக்கு வீணாவதையும், தனி நபர்களின் சமூகஉணர்வு சிதைக்கப்படுவதையும் பார்க்கிறோம். இது முதலாளித்துவ சமூகத்தின் படு மோசமான நோய்.
சோசலிச அமைப்பு மூலம்தான் இவற்றை ஒழிக்கமுடியும் என்பதில் எனக்குசிறிதும் சந்தேகமில்லை. சோசலிசப் பொருளாதாரத்தில் சமூக உடைமையாக இருக்கின்ற உற்பத்தி சாதனங்கள் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன. சமூகத்தால் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி நடைபெறுவதால் வேலை பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண்-பெண், குழந்தை-வயோதிகர் அனைவருக்கும் வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரின் திறமையும் ஊக்குவிக்கப்படுகிறது. இன்றைய சமூகத்தில் பதவிக்கும் பணத்துக்கும் நடைபெறும் போட்டிக்கு பதிலாக, "மற்றவர்களுக்காக நான்" என்ற உணர்வு வளர்க்கப்படும். எனினும் திட்டமிட்ட பொருளாதரத்தில் தனிநபர் பரிபூரணமாக அடிமைப்டுத்தப்படும் அபாயம் இருக்கிறது. அரசியல் பொருளதார சக்தி அளவுக்குமீறி மையப்படுத்தப்படும் பொழுது, அதிகார வர்க்கம் சர்வ வல்லமை படைத்ததாக மாறுவதை எப்படித் தடுப்பது? அதிகாரவர்க்கத்துக்கு எதிராக தனிநபர் உரிமைகளை எப்படிக் காப்பது? சோசலிச அமைப்பு ஏற்படும்பொழுது இது போன்றசமூக-அரசியல் பிரச்சணைகள் தீர்க்கப்பட வேண்டும்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
(Monthly Review, May 1949)
**
முருகன் என்ற பெயரில் ஒரு அன்பர் இந்த கட்டுரையை எனக்கு அனுப்பியிருந்தார்

Related Posts with Thumbnails