TerrorisminFocus

Showing posts with label மேற்கு வங்கம். Show all posts
Showing posts with label மேற்கு வங்கம். Show all posts

Thursday, June 18, 2009

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!

லால்கார், மேற்கு வங்கத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியாகும். இங்கு தற்போது ஈழம் அளவுக்கு இல்லாவிடிலும் அதனை ஒத்ததொரு கோடூரமானதொரு தாக்குதலை இந்திய அரசும் அதன் அல்லக்கையான CPM அரசும் மேற்கொண்டு வருகின்றன. துணை ராணுவப் படை உதவியுடன் அங்கு மக்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் போராட்டத்தை முறியடிப்பதுடன், இந்த போராட்டத்தை வழி நடத்தும் மாவோயிஸ்டு புரட்சியாளர்களை ஒழித்து கட்டவும் வேலைகள் நடந்து வருகின்றன.

""Sources say the forces want to minimize casualties and will thus move slowly.""


மேலேயுள்ள வார்த்தைகளின் அர்த்தம் அங்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களை கொன்றொழிக்கும் முடிவில் அரசு படைகள் இறங்கி விட்டன என்பதே ஆகும். இதற்கு தோதாக ஊடகங்களும் தமது வார்த்தைப் பிரயோகங்களை மாற்றிக் கொண்டுள்ளன. சில நாள் முன்பு வரை பழங்குடியின மக்கள் அரசுக்கு எதிராக போராடுவதாக எழுதி வந்த ஊடகங்கள் திடீரென்று நேற்று முதல் மாவோயிஸ்டு அராஜகம் என்று எழுதத் துவங்கியுள்ளன. ஆனால், உண்மையில் அங்கு உள்ள பழங்குடியின மக்கள் தமது வாழ்வாதார உரிமையை பறிக்கும் பன்னாட்டு-தரகு கம்பேனிகளுக்கும், அவர்களின் அல்லக்கையான CPMக்கும் எதிராக மக்கள் கமிட்டி அமைத்து போராடி வருகிறார்கள். இவர்களுக்கான அரசியல் தலைமையைத்தான் மாவோயிஸ்டுகள் வழங்கி வருகிறார்கள்.


தரகு கம்பேனியான ஜிண்டால், இரும்பு எஃகு ஆலை அமைக்க ஏதுவாக காடுகளை அழித்து, அங்குள்ள பழங்குடி மக்களை விரட்டி விட்டு 5000 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ CPM-போலி கம்யூனிஸ்டு பாசிஸ்டுகள் ஏற்பாடுகள் செய்து வருவதை எதிர்த்தே மக்கள் அங்கு போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த ஆறேழு மாதமாகவே நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை சிதைக்க போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், நந்திகிராம பாணி CPM குண்டர் படை தாக்குதல்களையும் தொடர்ந்து ஏவி வருகிறது CPM-போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டு கட்சி. இதற்கு உள்ளூர் CPM காலிகளின் காட்டிக் கொடுப்பு வேறு உதவியுள்ளது.

இன்னிலையில், போலீசின் அடக்குமுறைக்கு எதிராக 600மேலான கிராமத் தலைவர்களை ஒன்று கூட்டி 'போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி''யைக் கட்டியமைத்தனர் மாவோயிஸ்டுகள். இதனைத் தொடர்ந்துதான் CPM குண்டர் படை தாக்குதல்கள் நடந்தன. சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட சி.பி.எம். ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகள் சதிகளைப் புரிந்து கொண்ட பழங்குடியின மக்கள், தாங்கள் கட்டியமைத்துள்ள ''போலீசு அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கமிட்டி'' (கஇஅகஅ) முடிவின்படி, ஏப்ரல் 6ஆம் தேதியன்று கொல்கத்தா நகரில் ஆர்ப்பாட்ட பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினர். பல்வேறு மனித உரிமை ஜனநாயக உரிமைக்கான அமைப்புகளும், எழுத்தாளர்கள் பத்திரிக்கைகள் கலைஞர்கள் உள்ளிட்ட அறிவுத் துறையினரும் பங்கேற்ற இந்தப் பேரணியும் பொதுக்கூட்டமும், லால்கார் பகுதியை இன்னுமொரு நந்திகிராமமாக இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கத் துடிக்கும் போலி கம்யூனிச ஆட்சியாளர்களை மக்களிடம் திரைகிழித்துக் காட்டுவதாக அமைந்தது.

மறுகாலனியாதிக்கச் சூழலில், மக்களின் அடிப்படை வாழ்வாதரங்களை பறிக்கும் உலகமயத் திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் எல்லாம் சீரழிக்கப்பட்டுள்ளன. ஆனால், நக்சல்பாரி புரட்சியாளர்களின் போராட்டம் மட்டுமே வெற்றி பெற்று வருகிறது. அப்படிப்பட்டதொரு போராட்டம்தான் லால்கார் போராட்டம் இதனை சிதைத்து அழித்தொழிக்க மத்திய காங்கிரசும், மாநில CPM-பாசிஸ்டுகளும், இதர பெரு ஊடகங்களும் களமிறங்கியுள்ளனர். இதனை படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு போர் உக்கிரம் பெற்றிருக்கும்.

லால்கார் குறித்து மேலதிக தகவல்களுக்கு பின்வரும் புதிய ஜனநாயகம் கட்டுரையை படிக்கலாம்.

பின்னூட்டத்தில் தெரியப்படுத்தி சுட்டிகள் கொடுத்த தோழர் பூச்சாண்டிக்கு நன்றி

சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.


போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

அசுரன்


Tribals on warpath in Lalgarh; say can work better than govt


Tribals stop paramilitary from entering Lalgarh, reinforcement rushed


Security forces begin ops to free Lalgarh from Maoists

Sunday, June 01, 2008

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுடியிசம், உத்தபுரம்

மீபத்தில் நிறைவுற்ற மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்களில் CPM பெரும் சரிவை சந்தித்து உள்ளது. குறிப்பாக டாடா சலீம் கும்பலுக்கு மாமா வேலை பார்த்து மக்களை சாகடித்த சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இந்த பகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றியடைந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரசு, சுசி(SUCI) கூட்டணி நந்திகிராம் ஜில்லா பரிஷத்துகள் 53ல் 35ல் வெற்றி பெற்றுள்ளனர். ஜில்லா பரிஷத்தை கைப்பற்றியுள்ளனர். நந்திகிராமின் கிராம் பஞ்சாயத்துக்கள் பத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சிங்கூர் பகுதியிலோ 16 கிராம் பஞ்சாயத்துக்களில் 15 திரிணாமுல் காங்கிரஸ் வென்றுள்ளது. இந்த இரண்டு இடங்களும் CPMன் கோட்டைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இருபது வருடங்களில் ஜில்லா பரிஷத் அளவில் அவர்கள் தோல்வியடைவது இதுதான் முதல் முறை.

குறிப்பாக இந்த தேர்தலில் CPM சரிவு தனது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது தெரிகிறது. மேற்கு வங்காளத்தை பொறுத்த வரை CPMன் பிடி என்பது நழுவிக் கொண்டிருப்பதைத்தான் கடந்த தேர்தல்கள் அனைத்தும் காட்டியுள்ளன. ஆனால் இந்த முறை CPMன் கோட்டை என நம்பப்படும் கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் பெரும் பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டுள்ளது. இந்த பின்னடைவு வெறுமே நந்திகிராம், சிங்கூர் பகுதிகளில் மட்மல்ல. மே.வ. முழுவதுமே அரசாங்க வெறுப்பு மனோபாவம் வெளிப்பட்டுள்ளது.

போனமுறை கிராம பஞ்சாயத்துகளில் 2303 இடங்கள் வென்றது போய் இந்த முறை 1633தான் வென்றுள்ளனர். மாறாக எதிர்கட்சியினர் 917 இடங்களிலிருந்து 1463 என்று அதிகமாகியுள்ளனர். பஞ்சாயத்து ஸமிதிகளில் போன முறை 45 இடங்கள் வென்ற எதிர் அணியினர் இந்த முறை 189 இடங்களில் வென்றுள்ளனர். CPM 284 இடங்களிலிருந்து 189ஆக சுருங்கியுள்ளனர்.

CPMன் ஜனநாயக மாண்பும், ரவுடியிசமும்:
இது ஒரு பக்கம் இருக்க, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக் கொண்டே அத்தனை அராஜகங்களையும், ரவுடியிசங்களையும், பாசிச நடவடிக்கைகளையும் செய்யும் CPM இந்த தேர்தலிலும் கூட வழமை போல குண்டுகள் போடுவது, ஓட்டு போட வருபவர்களை மிரட்டி விரட்டுவது, வாக்கு சாவடிகளை கைப்பற்றுவது உள்ளிட்ட எல்லா தோழமை நடவடிக்கைகளையும் முயற்சி செய்தே பின்னடைவை சந்தித்துள்ளனர்.
(மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!)

இடது முன்னணி கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளில் ஒன்றான RSPக்கும், CPMக்கும் இடையே நடந்த சண்டைகள் CPMன் புரட்சிகர நடைமுறைக்கு சாட்சியாக நிற்கிறது. குண்டுகள் வீசிக் கொண்டும் துப்பாகிகளால் தாக்கிக் கொண்டும் என்று ஜனநாயக நடைமுறைகளை செழுமையாக கடைபிடித்துள்ளனர். CPM குண்டர்கள் தாக்கியதில் 4 RSP தொண்டர்கள் பலியாகியுள்ளனர். ஏற்கனவே கல்காத்தாவில் நடந்த ஒரு SEZ எதிர்ப்பு போராட்டத்தில் பார்வார்ட் ப்ளாக் கட்சி தொண்டர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது போல பல இடங்களில் குண்டு வீச்சுகள் நடந்துள்ளன. வாக்குச் சாவடி 17, 18-ல் CPM குண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டு குண்டு வீசியதில் வாக்குச்சாவடி அலுவலர் காயமடைந்ததை ஒட்டி அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நந்திகிராமில் தேர்தலுக்கு பல நாட்கள் முன்பிருந்தே தமது அயோக்கியத்தனங்களை ஆரம்பித்து விட்டனர் காமரேடுகள். மே 10 ஆம் தேதி பூமி பாதுகாப்பு சங்கத்தினர் மீது துப்பாக்கி சுடு நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. துப்பாக்கி குண்டடி பட்டவர்கள் தம்லக் ஆஸ்பத்திரிக்கு அனுப்பட்டனர். இன்னொரு இடத்தில் CPMஆல் விரட்டியடிக்கப்பட்ட 200 வீடில்லாதவர்கள் தேர்தல் பெட்டிகளை கைப்பற்றி போராட முற்பட்டுள்ளனர்.

நந்திகிராமில் CRPFக்கும் லோக்கல் போலீசுக்கும் சண்டை. வீடுகளில் ஆயுதங்கள் ஒழித்து வைத்துள்ளனரா என்றூ தேட முனைந்த CRPFயினரை லோக்கல் போலீசு தடுத்துள்ளனர். இத்துடன் CRPF, CPM சண்டை தொலைக்காட்சிகளில் நாறியது தனிக்கதை. நந்திகிராமில் பலருடைய வாக்காளர் அடையாள அட்டைகளை பறித்துள்ளனர் CPM குண்டர்கள். புகார் கொடுத்த பிற்பாடு இரண்டு இடங்களில் வேறு அடையாள அட்டைகளை உபயோகப்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டே தேர்தல் நடந்துள்ளது.

மேவவில் தனது பாசிச நடவடிக்கைகளை - அது தொழிற்சங்க தலைவர்களை, தொழிலாளர்களை அடித்து மிரட்டுவதாகட்டும், அல்லது இது போன்ற தேர்தல் வன்முறையாகட்டும் அல்லது வெகு மக்கள் போராட்டங்களை துப்பாக்கி குண்டுகளால் ஒடுக்குவதாகட்டும் - தனது குண்டர் படை கொண்டும், அரசின் அதிகாரப்பூர்வ குண்டர் படையான போலீசின் துணை கொண்டும் நிறைவேற்றி வருகிறது CPM. இன்று வரை இந்த நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு வருத்தமும் தெரிவிக்கவில்லை CPM தலைமை. மாறாக மக்கள் தமக்கு விரோதமாக செல்வதாயிருந்தால் கூட மே.வவை பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு கூட்டிக் கொடுப்பதிலிருந்து பின் வாங்க மாட்டோம் என்கிறார்கள் CPM தலைவர்கள். பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு கோபம் வரக் கூடாது என்பதற்க்காக தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. வேறு தொழில்சங்கம் வைக்கும் முயலும் தொழிலாளர்கள் மக்கள் முன்னிலையிலேயே CPM குண்டர்களால் அடித்து நொறுக்கப்படுகிறார்கள்.


உத்தபுரமும், இரட்டை நாக்கு பாசிச CPM:
இப்படி அப்பட்டமாக ஒரு ஓட்டுக் கட்சிக்குரிய அத்தனை சீரழிவு பண்புகளையும் வெட்கமின்றி, மற்ற ஓட்டுக் கட்சிகளை விட மோசமான பாசிச முறைகளில் நடைமுறைப்படுத்தும் இந்த கட்சி பிற இடங்களில் முற்போக்கு வேடம் போட்டு ஊரை ஏமாற்றி வருகிறது. குறிப்பாக உத்தபுரம் ஆதிக்க சாதிவெறி சம்பவத்தில் CPM கட்சி மிகப் புரட்சிகர வேடம் ஏற்று சிறப்பாக நடித்து வருகிறது. உத்தபுரம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக CPMன் தமுஎச உறுப்பினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருமான ஆதவன் தீட்சன்யா குரல் கொடுப்பார், ஆனால் அதே தமுஎசவின் மேலான்மை பொன்னுசாமி உள்ளிட்டோர் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதி வெறியர்களின் தலைவனும், தேவர் சாதி வெறியனுமான முத்துராமலிங்கனின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வர். அதுவும் பாஜகவின் திருநாவுக்கரசு தலைமையில். இப்படி பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் வேசம் கட்டி இரண்டு பக்கத்து ஓட்டுக்களையும் நக்கி தின்கும் முற்போக்கு செயல்தந்திரம்தான் உத்தபுரம் விசயத்தில் வேலை செய்கிறது. குறிப்பாக சொன்னால் இவர்களது MP தொகுதியான மதுரைக்கு அருகிலுள்ள பாப்பாபட்டி, கீரிப்பட்டி பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க முடியாமல் இருந்த பிரச்சினையில் இவர்கள் அடக்கி வாசித்ததும், இந்த உத்தபுரம் பிரச்சினையில் வீறு கொண்டு எழுந்து புரட்சி வேசம் கட்டி ஆடுவதிலும் உள்ள வேறுபாட்டை தீர்மானிப்பது வோட்டு எண்ணிக்கைதானேயன்றி வேறல்ல. ஏனேனில் பாப்பாபட்டி கீரிப்பட்டியில் ஆதிக்க சாதியினர் வோட்டு எண்ணிக்கை அதிகம் ஆனால் உத்தபுரத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் வோட்டு எண்ணிக்கை அதிகம். மற்றபடி உத்தபுர தாழ்த்தப்பட்டவர்கள் மீதான ஒடுக்குமுறை இவர்களின் போராட்டத்தை தீர்மானிக்கவில்லை. இன்றைய உத்தபுர புரட்சியாளர்கள், நாளை உத்தபுரத்தை இன்னொரு நந்திகிராமாகக் கூட மாற்றுவார்கள் என்பது வேறுகதை. உத்தபுரத்தில் பெரிய நன்னூல் போல பேசும் CPM பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் மேலான்மை பொன்னுசாமி சொன்ன கருத்துக்களுக்கு கள்ளமவுனம் சாதித்த மர்மமும் இந்த வோட்டு பொறுக்கித்தனத்தில்தான் அடங்கியுள்ளது.

அசுரன்

Related Article:
CPM government has shot killed five Forward Bloc party persons over Anti SEZ protest
SEZயை எதிர்த்த பார்வேர்ட் ப்ளாக் கட்சியினர் ஐந்து பேர் CPM அரசால் சுட்டு சாகடிக்கப்பட்டனர்
கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா - CPM வெறி நாயும்! CPIயும்!

Monday, May 12, 2008

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!!

டாடாவுக்காகவும், சலீம் குருப் என்ற பன்னாட்டு கம்பெனிக்காகவும் நந்திகிராம், சிங்கூரில் ஆளும் போலிக் கம்யூனிஸ்ட்களின் குண்டர் படை '30க்கும் மேற்பட்ட மக்களை கொன்றும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும்' தனது பாசிசத்தை வெளிப்படுத்தியது.

தஸ்லீமா நஸ்ரின் விவகாரத்தில் முஸ்லீம் மதவெறியர்களுக்கு பயந்து தனது மதச்சார்பின்மை என்ற கோவனத்தையும் அவிழ்த்து விட்டது.

தற்போது அம்மணமான பின்னும் நாங்கள் மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் என தொடர்ந்து அறிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை சேர்ந்த பெண்களை ஓட்டுப் போட மறுத்த காரணத்தால் நிர்வாணப்படுத்தி ஓட விட்டு உள்ளனர் இந்த பாசிஸ்டுகள்.


இவ்வாறு நாட்டை மீண்டும் காலனியாக்குவதை செய்து கொண்டே விலைவாசி உயர்வு, 123, புஷ் விவகாரம் போன்றவற்றை கண்டித்து இவர்கள் மக்களை திசைதிருப்புவது தான் இந்த துரோகிகளின் செயல்பாடாக உள்ளது.

மேற்கு வங்கத்தின் 'மின்வாரியத்தின் தற்காலிக ஊழியர்கள் மாற்று சங்கம் அமைத்து போராடியதை' மக்கள் கூடும் இடத்தில் சிஐடியு குண்டர் படை சென்று தாக்கி ஒருவர் கொல்லப்பட்டும் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

முக்கிய இடத்தில் மக்கள் முன்னிலையில் இவ்வாறு என்றால் நந்திகிராமில் கேட்கவே தேவையில்லை. இதனை மறுப்பவர்கள் நந்திகிராமில் நடத்திய பாசிசத்தை மறுப்பதில் வியப்பில்லை.

இப்படிப்பட்ட பாசிஸ்டுகளை, 'மக்கள் முன் அம்பலப்படுத்தாமல் உண்மையான எதிரிகளை' புரட்சிகர சக்திகள் இனம் காட்ட முடியாது

செய்திவிமர்சனம்


Related News:

Related Posts with Thumbnails