வாஜ்பேயிக்கு கட்டாயம் கொடுக்கனும் பாரத ரத்னா!
வாஜ்பேயி - தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர் என்று சில முற்போக்காளர்களால் (ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்.... :-)) பெருமிதமாக புகழப்பட்டவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து தற்போது சர்ச்சைகள் நடந்து வருகின்றன. இது தேவையற்றது என்பது என் கருத்து. எது தேவையற்றது? வாஜ்பேயிக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதா? கிடையாது. அவருக்கு கொடுப்பது குறித்த சர்ச்சைகள் தேவையற்றது என்பதே என் கருத்து.
பாரத ரத்னா விருதுக்கு வேறு எந்தவொருத்தரையும் விட மிக மிக பொருத்தமானவர், அந்த விருதுக்காகவே பிறந்தவர் என்று சொன்னால் அது வாஜ்பேயிதான். குறிப்பாக பாரத ரத்னாவில் உள்ள பாரத என்ற சொல்லே இப்படி அந்த விருது பிற்காலத்தில் வாஜ்பேயிக்கு கொடுக்கப்படும் என்று தெரிந்தே வைக்கப்பட்ட பெயர் என்று கூறுமளவு அவர் மிகப் பொருத்தமானவர்.
அப்படியென்ன அவர் பொருத்தமானவர்? என்ன கேள்வி இது... சும்மாவா பின்னே... வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து கொண்டிருந்த பொழுது அதில் போராடியவர்களை காட்டி கொடுத்த காவளிப் பய வேலை பார்த்து தியாகம் செய்தவரல்லவா நம்ம வாஜ்பேயி? இப்படியொரு STD... ஸாரி ஹிஸ்டரி இருக்கும் போதே பாராளுமன்றத்தில் தான் விடுதலை போராட்ட தியாகி என்று உண்மை சொன்னவரல்லவா இந்த குடு குடு கிழட்டு தியாகி. குஜராத் இனப்படுகொலை குறித்து நீலிக் கண்ணீர் வடித்துவிட்டு அந்த பக்கம் போய் அதனை நியாயப்படுத்திய பிரதமரல்லவா இந்த யோக்கியன். இது தவிர்த்து பன்னாட்டு கம்பேனிகளுக்கு பாரத மாதாவை கூட்டிக் கொடுத்த பெருமையென்ன? கங்கா மாதாவை கொப்போடும் குலையோடும் அப்படியே அல்வா சாப்பிடுவது போல தேம்ஸ் வாட்டர்ஸ் கம்பேனிக்கு கூட்டி கொடுத்த பெருமையென்ன?
அவரை வயதான தாத்தா என்று சொல்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் என்றுமே ஒரு பக்கத்து வீட்டு மாமாதான். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலிருந்து இன்று மறூகாலனியாதிக்க அரசியல் நடவடிக்கைகள் வரை தான் என்றும் மார்க்கண்டேயனாய் வலம் வரும் ஒரு இளம் மாமா என்று நீரூபித்தவர் இந்த சரியான முடிச்சவுக்கி கட்சியில் இருக்கும் ஆக கேவலமான தவறான நபர் (சரியாத்தான் சொல்லிருக்கேன் ஏன்னா நான் ப்ர்ர்ர்... வகை முற்போக்காளன் அல்ல).
"யோக்கியன் வற்றான் செம்பெடுத்து உள்ள வை"....
இவரைப் போல பாரத ரத்னா விருது பெற்ற இன்னொருவர் தமிழகத்தில் பார்ப்பன பண்பாட்டு புரட்சி ('பயங்கரவாத பொறுக்கி' என்று படிக்கவும்) கும்பலுக்கு மேடையமைத்துக் கொடுத்த புரட்சி தலிவர் எம் சி ஆர் என்பது யாதேச்சையான விசயமல்ல.
வாஜ்பேயிக்கு அந்த விருதை கொடுக்கவில்லை எனில் அது அந்த விருதுக்குத்தான் அவமானம். அந்த விருதென்ன இதற்க்கு முன்பு அவமானப்பட்டதேயில்லையா? அப்படியில்லை நண்பர்களே. வாஜ்பேயி இதுக்கு முன்ன பட்ட அவமானங்களுடன் ஒப்பிடும் போது விருது கிடைக்காத அவமானம் ஒன்றும் கிடையாது. ஆனா விருதுக்கு அப்படியில்ல. அம்புட்டதான்.... ஒழுங்கா கொடுத்துபுடுங்க...
அசுரன்