TerrorisminFocus

Thursday, June 29, 2006

இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்

சேவை வரி பற்றி மிகவும் வருத்தப்பட்டு sreegopi என்பவர் ஒரு பதிவு சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அவர் இதுபோல் பல்வேறு விவசாயிகள் பிரச்சனைகளை பற்றி தொடர்ந்து பதிவுகள் எழுதிவருகிறார். நல்ல ஆத்மா. விவசாயிகள் பிரச்சனை நமது நாட்டின் அனைத்து விசயங்களுடனும் பின்னி பினைந்து உள்ள ஒரு விசயம். ஆனால் எல்லோரும் அதை தனிப்பட்ட ஒரு பிரச்சனையாக இருப்பதுபோல் பேசுகிறார்கள். நமது நாட்டின் பொருளாதார கொள்கைக்கும், காலனி ஆதிக்க வரலாறுக்கும் இதில் மிகப் பெரிய பங்கு இருப்பதைப் பற்றி யாரும் பேசக்காணும். இதில் உச்ச கட்டம் விவசாயிகள் பிரச்சனை என்ற பெயரில் ஒருவர் யாரோ இன்னொரு அரைவேக்காட்டை திருப்திப் படுத்த வங்கிகள் பிரச்சனையைப் பற்றி எழுதினார்.
இந்த சூழ்நிலையில் sreegopi - யினுடைய கட்டுரையை கண்டேன். என்னுடைய ஆதாங்கத்தையும் கொட்டியுள்ளேன்.
+++++++++++++++++++++++++++++++++++

நண்பர் Sreegopi
,

இந்த அரசே தனது உண்மையான முகத்தை காட்டும் இடத்தை நோக்கி வெகு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் customs வரியை குறைத்துக் குறைத்து முழுமையாக அதை எடுத்துவிடுவதும்(இறக்குமதிக்கு வசதியாக). மறுபக்கம் சேவைவரியை உயர்த்தி உயர்த்தி இந்தியாவில் service tax regime கொண்டு வருவதும் தான் நமது மானமிகு, மக்கள் துரோக, ஏகாதிபத்திய சேவை(இதற்கு சேவை வரி கிடையாது, வரும்படி உண்டு), மறுகாலனியாதிக்க ஏஜெண்டுகளின் திட்டம்.

இதைத் தனது வாயாலேயே சொல்லியுள்ளார் வேதாந்த கம்பெனி போர்டு ஆப்ஃ டைரக்டர்ஸ் மெம்பரும், என்ரான் டுபாக்கூர் கம்பெனிக்கு, அரசை தோல்வியுரச் செய்ய சட்ட ஆலோசனை கொடுத்தவருமான இந்நாள் நிதிஅமைச்சர் திரு. ப. சிதம்பரம். அவரது திட்டப்படி ஒரு வருடத்துக்கு ஒரு சதவீதம் உயர்த்துவதாக உத்தேசம். ஆனால் இந்த வருடம் 2% உயர்த்தியுள்ளார்கள்.

சேவைத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கு அடுத்ததாகத் தயாராக இருப்பவை வக்கீல், டாக்டர் ஆகியன.

இது போக வருமான வரியை மாதச் சம்பளக்காரர்களிடமிருந்து பிடுங்க அனைத்து வழிவகைகளையும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். HRA, Insurance போன்ற வரி விலக்குகளை எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்பட்டால் IT வலைதளத்தில் verify செய்து கொள்ளவும்.

VAT, பெட்ரோல், டீசல் வரிகள் போன்று ரொம்ப சிக்கலில்லாமல் நேரடியாக நம்மிடமிருந்து பிடுங்கும் இன்னுமொரு திட்டம் இந்த சேவை வரி.

இவை எல்லாமே அவர்கள் உலக வங்கி, உலக வர்த்தக கழகத்திற்கு வாக்கு கொடுத்தது போலவே செய்து வருகிறார்கள். இதில் leftகள் தடுப்பதாக வருத்தம் வேறு. உண்மைதான், அந்த வோட்டுக் கம்யூனிஸ்டுகளின் முகமூடி இல்லையெனில் நமது அமேரிக்காவை நக்கி பிழைக்கும் சாலச்சிறந்த ஜனநாயகத்தின் கோடூர முகம் மக்களுக்கு எப்பொழுதோ தெரிந்திருக்கும். இந்த வகையில் செல்வன் இந்திய ஜனநாயகத்தில் வோட்டுக் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை மிகச் சிறப்பாகப் புரிந்தது போல் தெரிகிறது. போலிகள் எல்லை மீறும் போது மட்டும் சிறிது சீறுவார்.

இப்படிப் பிடுங்கிய பணத்தில் அவன்(MNC) நோகாமல் நொங்கு தின்பதற்கு பிரகாசமான விளக்குகளைப் பிடிக்க infrastructure developement வேறு(infrastructure for whom என்ற RUPE -ன் வலையில் படிக்கவும்). அதுவும் பற்றாது என்று NALCO போன்ற உலகின் சிறந்த கம்பெனிகளை விற்று மாமா வேலை பண்ண இந்த அரசு தயாராகிவருகிறது. இடஓதுக்கீடு பற்றி வாய் கிழியப் பேசிய அறிஞர் நாராயணமூர்த்தி பெரிய நகரங்களைத்தாண்டி தனது கம்பெனியைத் தொடங்க வேண்டுமெனில் சலுகை(அவர் வர்க்கத்திற்கு மட்டும் இடஒதுக்கீடு) கேட்கிறார். இது பரவாயில்லை, இவர்கள் இந்தியாவில் கம்பெனி தொடங்கப் பல சலுகைகள்(ஒரு பிரயோசனமும் இல்லை என்றாலும்). தண்ணீர் பத்து வருடங்களுக்கு free, குறைந்த விலையில் மின்சாரம், refined resourceஆக, அப்படியே தின்பதற்குத் தயாராக(ready made) தனது சொந்த துட்டை செலவழித்து தயாரான IT தொழிலாளர்கள், முக்கியமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், no labour Law, வரிச் சலுகைகள், மக்களை அடகுவைத்து வாங்கிய கடனில் இவர்களுக்கு infrastructure.

ஆனால் இந்திய சந்தையை ஆண்டு வந்த சிறு தேசிய முதலாளிகளை திட்டமிட்டு ஒழித்து விட்டார்கள்(கர்நாடகாவில் கடந்த 8 வருடங்களில் 80,000 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன). கடந்த பத்து வருடங்களில் IT துறையால் கிடைத்த நேரடியாக, மறைமுகமாகக் கிடைத்த வேலை வாய்ப்பு 5 லட்சம் சொச்சம். ஆனால் இதே நேரத்தில் சிறு தொழிற்சாலைகளின் அழிவால் வெளியேறிவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்திற்கும் அதிகம். இவர்கள் இன்று reserve பட்டாளமாக, contract laboureஆக. இதை வளங்களின் வறுமை என்று சொல்லுவதா. இது போக விவசாயிகளை நிலத்தை விட்டு விரட்டும் திட்டமாக விவசாய வேலை வாய்ப்பை உடைத்ததில் வேலை இழந்தவர்கள் வேறு. அந்தக் கூட்டம் அவர்களது(வோட்டு கட்சிகளின்) விளக்கு பிடிக்கும்(Infrastructure developement) வேலைக்கு குறைந்த கூலிக்கு நகரத்தில் குவியும் உழைப்பு வளம், இப்படி சங்கிலித் தொடராக இவர்களின் உலகமயமாக்கம் நாட்டை சுற்றி சூறையாடி இவர்களுக்கு கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது.

கூரையை பிய்துக்கொண்டு கொட்டியதில் என்ன நடந்தது என்பதை நமது தி ஹிந்து sub editor சாய்நாத் கூறுகிறார்:

""Well, good news for someone, anyway. The collective net worth of 311 Indian billionaires is now Rs.3.64 trillion. This is up 71 per cent from last year, when it was a paltry Rs.2.13 trillion. The tribe has also grown. It now includes 133 new entrants who just months ago were merely millionaires. The daily newspaper that tracks this elite club (Business Standard, November 9, 2005) puts it simply: "India's billionaires have never had it so good."

Some hundreds of millions might never have had it so bad either. So just before we pop the corks on those bottles, have a look at the news from the nation's farm households. There are millions of those, not 311. The average monthly per capita expenditure (MPCE) of farm households across India was Rs.503 in 2003. That is just about Rs.75 above the rural poverty line. And it is an average across regions and classes and income groups. So even this dismal figure hides huge inequities. ""


இதில் ஏற்கனவே ஒத்துக் கொண்டது போல் SEZ(Special Economic Zone) க்கு அடுத்து, SIR(SIR தானா என்று சரியாக ஞாபகம் இல்லை. SIP ஆகவும் இருக்கலாம்) என்ற கல்வி தனியார்மயம், உலகமயத்துக்கான திட்டம் வர இருக்கிறது. இதில் இடஓதுக்கீடாவது மண்ணாவது. 100% காந்தி தாத்தாவிற்குத்தான் இடஒதுக்கீடு(அதுவரை இந்திய கரன்சி, டாலராக மாறவில்லை என்றால்).

இன்னும் capital convertibility act வேறு உள்ளது,

இதுவரை அமல்படுத்திய, தண்ணீர் தனியார்மய திட்டங்கள், கிராம வளங்களை கொள்ளையிட அடிக்கல் நட்டிய கிராம சுய தேவை பூர்த்தி செய்யும் திட்டங்கள், Patents Rights, விதை நெல் சீர்திருத்தச் சட்டம்(விதைகள் மீதான பாரம்பரியமான விவசாயிகளின் உரிமையைப் பறிக்கும் திட்டம்), நாட்டைக் காட்டிக் கொடுத்த ராணுவ ஒப்பந்தங்கள், retail business FDI, real estate FDI, உணவுப் பொருள், விவசாய இடுபொருள் சில்லரை-மொத்த விற்பனையில் FDI, பல்வேறு இறக்குமதி சலுகைகள், இன்னும் பல இவை எதுவும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டது இல்லை(இவற்றில் வெகு சில கையெழுத்திடப்பட்டு பிறகு விவாதிக்கப்பட்டன என்பது பாரளுமன்றம் ரப்பர் stamp என்பதை நிருபிக்கிறது).

'white man's burden' என்ற உணர்வுக்கு அன்று சொறிந்து விட்டு இந்திய விடுதலையை மறுத்த கூட்டங்கள் தான் technology, developement என்று பல வார்த்தைகளைப் போட்டு இன்றும் சொறிந்து கொடுக்கிறார்கள். 'புல்லுக்கும் பாயும் நீர்' என்று ஒரு பழமொழி உள்ளதே அதுதான். மூலதனத்தின் போக்கில் சிறிது வசதியான பகுதியில் சிக்கி கொண்ட சில்லுகள்தான் இவர்கள். தங்களையும் சுரண்டக்கொடுத்து, தானும் சுரண்டி - உண்டி பெருப்பவர்கள் இந்த கூட்டம். இத்தகைய உற்பத்தி உறவில் இருப்பதாலேயே இவர்களும் இதே தானும் அடிமை, இன்னொருவனையும் அடிமைப்படுத்து என்று சொல்லும் இந்து சனாதன தர்மத்திற்கும் ஆதரவாகப் பெரும்பாலும் உள்ளனர்.

அன்றைய இந்தியாவிற்கும், இன்றைய இந்தியாவிற்கும் 6 வித்தியாசம் சொல்லுங்கள் பார்ப்போம்.

மராமத்து பணிகளைக் கைவிட்டு விவசாய பஞ்சத்தால் கொன்றது அன்றையகாலனியாதிக்கம். மிஞ்சியவர்களை ஸ்ரீலங்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களாக அனுப்பியது(டைட்டானிக் போல இப்படி சென்ற ஒரு கப்பல் விபத்துக்குள்ளாகி ஆயிரக்கணக்கில் இறந்தார்கள்), மேலும் அப்படி கிடைத்த அத்துக் கூலி ஆட்களுக்கு ஒரு வேளை கஞ்சி கொடுத்து கட்டியதுதான் சென்னை பங்கிங்காங் கால்வாய். இப்படி அன்று நாடு கடந்து அகதிகளை விரட்டியது காலனியாதிக்கம். இன்று மனித வளத்தின் மகிமையை உணர்ந்து அப்படி கொல்லாமல் அந்த reserve வளத்தை பெரு நகரங்களில் நவீன நாடோடிகளாக அகதிகளாக குறைந்த கூலிக்கு ஒட்ட சுரண்டுகிறது இன்றைய காலனியாதிக்கம் என்பதை தவிர்த்து வேறு வித்தியாசம் தெரியவில்லை.

இப்படி சேம நல அரசு என்ற சோவியத் ரஷ்யா கால ஜிகினா முகமூடி இனிமேல் தேவையில்லை என்பதை உணர்ந்து தனது அப்பட்டமான காலனி ஆதிக்க சேவையை நியாயப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ள இந்த அரசு, தன்னை முற்றிலுமாக இலக்கணப் பூர்வமான ஓர் அரசு செய்ய வேண்டிய வேலைகளை மட்டும் செய்யும் நிலையை நோக்கி வெகு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது இங்கு சட்டம், போலிசு, நீதிமன்றம், வரி வசூல் மட்டுமே பார்க்கப்படும் என்கிறது அரசு. அந்த அரசுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்காமல் சீக்கிரம் அனுப்பி வைப்பதுதான் நீங்கள்(Sreegopi) மேற்சோன்ன பிரச்சனைக்கும் சேர்த்து தீர்வு கொடுக்கும். அதாவது மக்கள் இங்கு 'அரசுக்கு ஈமக்கிரியை' செய்யப்படும் என்ற போர்டு தொங்கவிட்டு வியாபாரம் செய்தால்தான் அடுத்த சந்ததிக்கு ஏதாவது விட்டு செல்ல முடியும்.


sreegopi,

விவசாயத் துறையை(not only Agri) முற்றிலுமாக MNC -க்களுக்கு தேவையான கச்சா பொருள்களுக்கான விளைநிலமாக மாற்றுவதுதான் அவர்களது திட்டம். நமது பாரம்பரிய, மரபு விவசாய உற்பத்திப் பொருட்களை அன்று ஆங்கிலேயன் அவுரி பயிர் செய்யச் சொல்லி அழிக்க முற்பட்டான். இன்று அவனைவிட வேகமாக பன்னாட்டு முதலாளிகள் பூ, மூலிகை, கற்றாழை போன்றவற்றை, அவனுக்கு தேவையானவற்றை பயிர்விக்கும் விதமாக மொத்த விவசாய உற்பத்தி முறையையும் கள்ளத்தனமாக கார்பொரேட் மயமாக்கி வருகிறான். அதாவது விவசாயியை முதலாளி ஆக்காமல், அவனை அத்துக் கூலிக்கு அரைப்பாட்டாளியாக நகரங்களுக்கும், கிராமத்திற்கும் அலைக்கழித்து அவனை நிலத்திலிருந்து பிடுங்கி இந்திய விவசாயத்தை கார்போரேட் மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. தரிசு நில மேம்பாட்டு திட்டம் எல்லாம் அப்படித்தான். சமீபத்திய உணவு தானிய இறக்குமதி பற்றிய தகவல் சேகரித்து வருகிறேன். இதுவும் கூட WTO-ல் ஒத்துக்கொண்டபடி உணவு தானிய, விவசாய விளை பொருள், விவசாய இடுபொருள் மொத்த உற்பத்தி, விற்பனை, சில்லறை விற்பனையில் MNC-க்களுக்கு சந்தையை clear பன்னிவிடும் வேலையோ என்று ஒரு சந்தேகம் வருகிறது.

நமது நாட்டுக்கு தேவையான விவசாய பொருட்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த கூட்டுறவு அமைப்புகளை கட்டாமல், குளிர்பதன பாதுகாப்பு கிட்டங்கிகளை நாடு முழுவதும் கட்டாமல், விவசாயிகளுக்கு நாட்டுக்கு தேவையான விளை பொருட்களை நவீன முறையில் பயிர் செய்வதற்கு பயிற்றுவிக்காமல், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்திலிறங்கா புண்ணியாத்மாக்களிடமிருந்து நிலங்களை பிடுங்கி பிரித்துக் கொடுத்து கூட்டுறவு பண்ணை கட்டாமல் இந்திய விவசாயம் அடிமை சேவகம் செய்வதை தடுக்க முடியாது(இன்னும் முழுமையாக அடிமை சேவகம் இல்லை. ஆனால் அவனது திட்டம் அதுதான்). கண்ட கம்முனாட்டியும் சென்ட் போடுவதற்கு இங்கு பூ- விளைவித்து பாதுகாக்க ஓசூரில் கிட்டங்கி கட்ட அடிக்கல் நாட்டியுள்ள தங்க தலைவலி ஜெயலலிதா, நான் மேற்சொன்ன விசயங்களில் ஏதாவது ஒன்றை செய்திருக்கலாம். செய்ய முடியாது. அல்லது அம்மாவுக்கு இலவசமாக மக்கள் காதில் பூ வைக்கும் திட்டமிருந்து அதற்காக அந்த கிட்டங்கி கட்டப்படுகிறா? மின்சாரம் ஏன் இலவசமாக கொடுக்க முடியாது என்ற கேட்ட பொழுது, "உலக வங்கி தரக்கூடாதுன்னு சொல்லுது' என்ற அரசியல் அனுபவமின்றி T. பொன்னையன் போட்டுக் உடைத்தாரே, இன்னுமா விளங்கவில்லை.

இல்லை.. தேர்ந்தெடுத்த தேவடியாக்கள் நாடாளுமன்றத்தில் முந்தானை விரிக்க சண்டை இட்டுக்கொண்டிருக்கும் பொழுது, சம்பந்தமில்லா உலகவங்கியும், WTO -வும், அமெரிக்க embassy யும் நமது அரசியல் தலைமைப்பாத்திரத்தை அபகரித்துள்ளதைத்தான் உலகின் பெரிய ஜனநாயகம் என்று கூறுகிறீர்களா? அடிமைத்தளை, காலனியாதிக்கம், வீரம், தியாகம், சுயமரியாதை போன்ற வார்த்தைகள் 1947 - க்கு பிறகு அகராதிகளிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை.

சுயமரியாதை என்பது பல பேருக்கு பார்ப்பன எதிர்ப்பில் மட்டுமே கிளர்ந்தெழுகிறது. அது அப்படியல்ல. அது எல்லா வித அடக்குமுறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழவேண்டும்.

35 பின்னூட்டங்கள்:

said...

ஐயா,என்னுடைய பதிவுகளை பற்றிய உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.உங்களின் இந்த பதிவில் மிக அருமையான விவரங்களை அளித்துள்ளீர்கள் நடக்க இருப்பதை பற்றிய உங்கள் ஆதங்கம் காந்தியடிகளின் நாட்டுப்பற்றுக்கு இணையானது என்பதில் எந்த ஐயமும் இல்லை.என்ன செய்வது சாதாரண குடிமக்களான நமக்கு இந்த தேசத்தின் மீது இருக்கும் பற்று நாட்டை ஆளும் அதிகாரவர்கத்திடம் இல்லையே.
"சுயமரியாதை என்பது பல பேருக்கு பார்ப்பன எதிர்ப்பில் மட்டுமே கிளர்ந்தெழுகிறது. அது அப்படியல்ல. அது எல்லா வித அடக்குமுறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழவேண்டும்". உங்களின் இந்த வரிகள் அற்புதமானவை. நன்றி

said...

சுயமரியாதை என்பது பல பேருக்கு பார்ப்பன எதிர்ப்பில் மட்டுமே கிளர்ந்தெழுகிறது. அது அப்படியல்ல. அது எல்லா வித அடக்குமுறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழவேண்டும்

It is easy to blame the brahmins and join hands with MNCs and global capital to exploit Indians.
That is what Karunanidhi,Ramadoss
and Marans are doing.Arjun Singh is
part and parcel of the govt. that
gives many concessions to capital
but cuts food subsidies.Go on blaming brahmins for all evils
and you will end up only as a
collaborator with capitalists
of all hues.DK,DMK,PMK,MDMK,
Congress,TDP,JD(S),BJP etc promise
you OBC reservation and also promise greater returns for
capitalists.OBCs oppress dalits.
DK, DMK,PMK turn a blind eye
to that.You support them.
OBC landlords benefit from all govt. schemes. They are willing
to join hands with anyone to make
money. So, dont shed crocodile tears for the poor when you are part of the gang that exploits them.

said...

//"சுயமரியாதை என்பது பல பேருக்கு பார்ப்பன எதிர்ப்பில் மட்டுமே கிளர்ந்தெழுகிறது.//

இன்றைய சூழலில் இதுக்கு மட்டும் தான் ஆட்டோ வராது. :-D

//அது அப்படியல்ல. அது எல்லா வித அடக்குமுறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழவேண்டும்". //

நிதர்சனம், நமக்குள் ஒரு ஒற்றுமை வளர மனிதனை மனிதனாக மதிக்கின்ற எண்ணம் மேலோங்க வேண்டும் (we should accept people as fellow human beings and hatred should be hated)

said...

நம் நாட்டில் பல இளைஞர்கள் மாதா மாதம் சம்பளம் வந்தால் போதும் என்று இருக்கிறார்கள். அதனால் இன்னும் சில வருடங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை பற்றி சிறிதும் கவலை இல்லை

said...

விசயமுள்ள பதிவு!!

மிக்க நன்றி!!

said...

போனபெர்ட்,

சொல்லவருவதை இன்னும் கொஞ்சம் நயமான சொற்களில், தேவடியா போன்ற சொற்களைத் தவிர்த்துச் சொல்லுங்களேன். உங்கள் கருத்தில் ஒத்துப் போகும் பலர் உங்கள் வார்த்தை பயன்பாடுகளால் படிக்காமல் போய் விடலாம்.

மக்களை உறிஞ்சும் ப சிதம்பரம் பாணி பொருளாதாரம் நம்மை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறது என்று பொறிபறக்க எழுதி யுள்ளீர்கள். பன்னாட்டு பெரு நிறுவனங்கள் மகிழும் கொள்கைகள் மட்டுமே சரியானவை என்று ஆங்கில ஊடகங்கள் ஒரு மனதாக முடிவு செய்து விட்ட நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இந்த தில்லி வாழ் பழுப்புத் தோல் துறைகள் மண்ணுக்கு வருவார்கள். இப்படியே போனால் ஒவ்வொரு குழுவும் முறை வைத்துக் கொண்டு இந்தியக் கிராமங்களில் முதுகெலும்புகளை முறித்துப் போடும் வழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

அசு,

இது போன்ற கட்டுரையை எல்லோரும் படித்து சற்று சிந்திக்க வேண்டும் என்பது எனது ஆவா!

நிறையெ விசயங்களை நன்கு அலசி ஆராய்ந்து இங்கு கொணர்ந்து தமிழில் அளித்தமைக்கு நன்றி.

உங்களுடைய கோபம் எனக்கு புரிகிறது, அதே சமயத்தில் இது போன்ற கசப்பான உண்மைகள் எல்லா தரப்பிலும் போய்ச் சேர வேண்டுமானால், தாங்களின் கடின சொற்களை மென்மை படுத்துவது உதவலாம்.

//அதாவது விவசாயியை முதலாளி ஆக்காமல், அவனை அத்துக் கூலிக்கு அரைப்பாட்டாளியாக நகரங்களுக்கும், கிராமத்திற்கும் அலைக்கழித்து அவனை நிலத்திலிருந்து பிடுங்கி இந்திய விவசாயத்தை கார்போரேட் மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.//

இந்த விதை நெல் சார்ந்த விசயம் இன்னும் சற்று ஆழமான முறையிலே ஆராய்ந்து வழங்கப் பட வேண்டிய விசயம் என எனக்குப் படுகிறது.

விதைகளின் "டைவர்சிடி" இழப்பு ஒரு மாபெரும் பேரிழப்பு, ஒரு முறை நடந்தேறினால் அதனை திரும்ப பெருவது ரொம்பக் கடினம். இந்த புது வித உலக் வங்கி விதை நெல் திட்டம், வன்மையாக கண்டிக்கத் தக்கது.

இப்பொழுது இருக்கும் சூழலில் விரைவுத் தீர்வே எல்லாவற்றிகும் உகந்தது என நம்பி, கண்மூடித் தனமாக புது புது திட்டங்களை நிறைவேற்றி வருகிறொம், காலம் கடந்து அதன் பாதிப்புகளை எதிர் கொள்ளும் பொழுது புரையோடிப்போன புற்று நோயாக சமூதாய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவது தவிர்க்க முடியாது.

மாற்றங்கள் இன்றியமையாதது தான், இருப்பினும் அவ் மாற்றங்கள் எல்லோருரையும் (இயற்கையையும் சேர்த்துத்தான்) அரவணைத்து பிணைத்துச் செல்வது ரொம்ப அவசியம். இயற்கை கற்பழிப்பு நிகழ்த்தாமல்.

நன்றி அசு உங்களுடையெ பதிவிற்கு...

said...

மா சிவகுமார்,

நடுத்தர வர்க்கத்தின் நாகரிகம் என்ற முகமூடியை உடைக்கவும், எமது ஆத்திரத்தை, ஆதங்கத்தை உழைக்கும் வர்க்கதின் வார்த்தைகளில் சொல்லவும் இது போன்ற கடினமான வார்த்தைகள் தேவைப்படுகின்றன.

இது எனது எழுத்து பாணி ஆகிவிட்டது. இது பற்றி உங்களைப் போலவே பல நண்பர்களும் கடுமையாக விமரிசித்துள்ளனர். நானும் தற்பொழுது இது போன்ற கட்டமைப்புகளை தவிர்க்கிறேன். என்ன செய்ய சில நேரங்களில் இப்படி முரன்பட்ட தன்மைகளை அருகருகே போட்டு விசயங்களை கொண்டு செல்வது எனது எழுத்து நடைக்கு நன்றாக அமைந்துவிடுவதாக கருதி விடுகிறேன்.

தங்களது அக்கறையான விமர்சனத்துக்கு நன்றி. இதுபோன்ற நடைகளை முடிந்த அளவு தவிர்ப்பேன். இதன் பாதிப்புகளை உணர்கிறேன்.

எடுத்துக்காட்டுக்கு இந்த பதிவை இமெயிலில் அனுப்பு நினைப்பவர்கள் கூட தவிர்க்க வாய்ப்பு உள்ளது.

இதையே நைச்சியாக கொடுத்தால் சரியாக இருக்குமல்லவா?

அன்புடன்,
அசுரன்.

said...

அசு,

இது போன்ற கட்டுரையை எல்லோரும் படித்து சற்று சிந்திக்க வேண்டும் என்பது எனது ஆவா!

நிறையெ விசயங்களை நன்கு அலசி ஆராய்ந்து இங்கு கொணர்ந்து தமிழில் அளித்தமைக்கு நன்றி.

உங்களுடைய கோபம் எனக்கு புரிகிறது, அதே சமயத்தில் இது போன்ற கசப்பான உண்மைகள் எல்லா தரப்பிலும் போய்ச் சேர வேண்டுமானால், தாங்களின் கடின சொற்களை மென்மை படுத்துவது உதவலாம்.

//அதாவது விவசாயியை முதலாளி ஆக்காமல், அவனை அத்துக் கூலிக்கு அரைப்பாட்டாளியாக நகரங்களுக்கும், கிராமத்திற்கும் அலைக்கழித்து அவனை நிலத்திலிருந்து பிடுங்கி இந்திய விவசாயத்தை கார்போரேட் மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.//

இந்த விதை நெல் சார்ந்த விசயம் இன்னும் சற்று ஆழமான முறையிலே ஆராய்ந்து வழங்கப் பட வேண்டிய விசயம் என எனக்குப் படுகிறது.

விதைகளின் "டைவர்சிடி" இழப்பு ஒரு மாபெரும் பேரிழப்பு, ஒரு முறை நடந்தேறினால் அதனை திரும்ப பெருவது ரொம்பக் கடினம். இந்த புது வித உலக் வங்கி விதை நெல் திட்டம், வன்மையாக கண்டிக்கத் தக்கது.

இப்பொழுது இருக்கும் சூழலில் விரைவுத் தீர்வே எல்லாவற்றிகும் உகந்தது என நம்பி, கண்மூடித் தனமாக புது புது திட்டங்களை நிறைவேற்றி வருகிறொம், காலம் கடந்து அதன் பாதிப்புகளை எதிர் கொள்ளும் பொழுது புரையோடிப்போன புற்று நோயாக சமூதாய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவது தவிர்க்க முடியாது.

மாற்றங்கள் இன்றியமையாதது தான், இருப்பினும் அவ் மாற்றங்கள் எல்லோருரையும் (இயற்கையையும் சேர்த்துத்தான்) அரவணைத்து பிணைத்துச் செல்வது ரொம்ப அவசியம். இயற்கை கற்பழிப்பு நிகழ்த்தாமல்.

நன்றி அசு உங்களுடையெ பதிவிற்கு...

said...

நல்ல பதிவு அசுரன்,
சிவக்குமார் சொன்னது போல் கடுமையான சொற்களை தவிர்த்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். பெரும்பாலான மக்களுக்கு சுயநல போக்கு உருவாகி விட்டது இன்றைக்கு பொழுதை எவன் முதுகில் ஏறியாவது ஒட்டி விட்டால் போதும்.. அடுத்தவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை போன்ற மனப்பான்மை.

//சுயமரியாதை என்பது பல பேருக்கு பார்ப்பன எதிர்ப்பில் மட்டுமே கிளர்ந்தெழுகிறது. அது அப்படியல்ல. அது எல்லா வித அடக்குமுறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழவேண்டும்//

நிதர்சனமான உண்மை.. நல்ல பதிவு தொடரட்டும் உங்க எழுத்துப்பணி.

said...

சிந்திக்கத் தூண்டும் மிக நல்ல பதிவு. இங்கு பேசப்படும் விவசாயிகளின் நிலை பற்றி அதிகம் தெரியாததால் , கொஞ்சம் வெட்கமாக இருந்தால் கூட.. இப்போதாவது தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் கிடைத்திருப்பது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
சுகா

said...

good show born-apart. it is more fitting title to your naamam.
you have very interesting viewpoints. which makes me think that you were born an andhanan, and who found solace in new causes. not that it matters.
your points are valid, despite your crudeness. contain your hatreds and learn the art of finesse. you will get more people agreeing with your viewpoints.
you might also want to read some books about 18th/19th century england, at the dawn of industrial revolution and farm land converted to grazing grounds for sheep (read wool & mutton). your anger is rough and reminds me of arundhati roy, your research superb and your expressions say what you see. good stuff. go for it.

said...

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இந்த தில்லி வாழ் பழுப்புத் தோல் துறைகள் மண்ணுக்கு வருவார்கள்.

So you mean Arjun Singh,Anbumani,
Dayanidhi Maran,Chidambaram,
Balu,A.Raja,Subbulakshmi,Vekatapathy,Velu are பழுப்புத் தோல் துறைகள் (sic).

said...

You are protesting too much.The British brought us modernity.That
gave some breathing space to Dalits.Today it is not govt.
but MNCs who will play the progressive role.Ford gives
preference to african-americans.
The MNCs bring us hi-tech.Why are you so bothered about traditional agriculture.It is archaic.Let us
modernise agriculture and that is
a way to break caste in rural
areas.Dalits will benefit from
MNCs entering in agriculture as they wont discriminate on the
basis of caste. They will be treated like industrial workers
when agriculture is controlled
by corporates.Let the banias,
brahmins and land owning OBCs
suffer and let the caste system
decline.We need 200% modernity
and only the west can do that.
The banias,brahmins, and OBCs
have a vested interest in keeping India backward. If they
cant cope up with globalisation let them perish. There will be pains but no pain, no gain.For a change let them suffer and understand what pain is.We have
nothing to lose in the game.If they lose it is our gain.
Jai Bhim

said...

அரசியல் வாதிகளுக்கு விவசாயிகளைப் பற்றி சிந்திக்க எங்கு நேரம் இருக்கிறது.முக்கிய ஆதாரமான தண்ணீர்ப் பிரச்சனையே கண்டுகொள்ளப்படுவது இல்லை. நிறைய நல்ல கருத்துகள்.

said...

அசுரன் நல்ல விவரங்களுடன் எழுதியுள்ளீர்கள். இந்திய விவசாயத்தின் மீதான அக்கறையை நல்ல முறையில் வெளிப்படுத்தியுள்ளதோடு, ஆட்சியாளர்களின் கொள்கைகளையும் அம்பலப்படுத்தியுள்ளீர்கள். சில விஷயங்களில் முரண்பாடு உள்ளது. குறிப்பாக இந்திய கம்யூனி°ட்டுகள் குறித்த உங்களது நிலைபாடு. கம்யூனி°ட்டுகள் தேர்தலில் பங்கெடுப்பது என்பது ஏதோ இந்தியாவில் தோன்றிய ஒன்றல்ல; இது லெனின் காலத்திலேயே ரஷ்யாவில் தேர்தலில் பங்கெடுத்தார்கள். அதே போல் இத்தாலியிலும், ஜெர்மனியிலும் கம்யூனி°ட்டுகள் தேர்தலில் பங்கேற்றுள்ளனர். எனவே பாராளுமன்றம் என்பது தீண்டத்தகாதது அல்ல. மாறாக முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்கும் கம்யூனி°ட்டுகள், இதர முதலாளித்துவ கட்சிகளைப் போலவே ஊழலில் திளைக்கிறார்களா? ஆடம்பரத்தில் அலறுகிறார்களா? என்று பார்த்திட வேண்டும். மேலும் இந்தியாவில் பாராளுமன்ற பாதை தவறு என்று கூறியவர்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சொந்த வர்க்கங்களையே கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ஆந்திராவில் நக்சல்களின் பயங்கரவாத செயலால் இதுவரை 3000க்கும் மேற்பட்ட தலித் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இத்தகைய இடது அதிபயங்கரவாதிகளை தேட வேண்டிய நிலையில் உள்ளோம். நீங்கள் பாராளுமன்றத்தில் பங்கெடுக்கும் கம்யூனி°ட்டுகளை தாக்குவதன் மூலம் யாரை திருப்திபடுத்துகிறீர்கள்? இது எதிரி வர்க்கத்திற்கு ஆதரவான கருத்து என்பது என்னுடைய வாதம். எனவே தயவு செய்து வரலாற்றில் இருந்தும், தற்போது சூழலில் இருந்தும் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டியது கம்யூனி°ட்டுகளாக இருப்பவர்களது கடமை. மேலும் ஒவ்வொரு நாட்டின் சூழலும் வேறு, வேறானது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. நன்றி அசுரன்.

said...

Sree தங்களது வருகைக்கு நன்றி,

ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும். நீங்களும் ஒரு கை கொடுத்தால் தேர் இழுபடும் சாத்தியக்கூறு அதிகம்.

தொடர்ந்து தங்களது ஆக்கப்பூர்வமான எழுத்துச் சேவையை செய்யுங்கள் எனது பரிபூரண பங்களிப்பு எப்பொழுதும் உண்டு.

தோழமையுடன்,
அசுரன்.

said...

அனானி No 1,

எங்களை ஏதோ கண்மூடித்தனமான பார்ப்பன் எதிர்ப்பாளர்கள் என்று தாங்கள் கருதுகிறேர்கள்.

இதற்க்கு பல முறை விளக்கும் கொடுத்தாயிற்று, இருந்தாலும் ஒரு நல்ல நண்பரை, ஒரு நல்ல ஜனநாயக சக்தியை இழந்து விடக்கூடாது, எம்முடைய நிலைப்பாடுகளை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்க்காக விளக்கம் கொடுக்கிறேன்.

எமது பார்ப்பன எதிர்ப்பு பிறப்பின் அடிப்படையில் அல்ல. அது பண்பாட்டின் அடிப்படையில்.

பார்ப்பினியம் என்பது இன்றும் பண்ப்பாட்டு தளத்தில் தனது கோர அடக்குமுறையை பல வடிவங்களில் காட்டி வருகிறது. பசுவதை தடை சட்டம், ஆடு கிடா வெட்டு தடை சட்டம், மத மாற்ற தடை சட்டம், கருவறைக்குள் நுழைவதை தடுப்பது, தமிழில் அர்ச்சனை கேவலாமாக செய்வது, பொறுக்கி சங்காராச்சாரியை இன்றுவரை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது, இடஓதுக்கீட்டில் ஊடகங்களின் பார்ப்பன சார்பு, நாட்டார் வழிபட்டு தெய்வங்களை சமஸ்கிருதமயமாக்குவது என்று பல விசயங்களில் அந்த அடக்குமுறை தொடருகிறது.

இடஓதுக்கீடு தீர்வு கிடையாது என்பதும் உலகமயம் இடஓதுக்கீட்டின் space-யை சுருக்கி வருவதும் எமக்கு தெரியாமல் இல்லை. எமது எதிர்ப்பு இடஓதுக்கீட்டு எதிர்ப்பில் பொதிந்துள்ள மேல்சாதி திமிர்த்தனத்தை எதிர்ப்பதுதான்(தெரு கூட்டுவதுபோல், காய்கறி விற்பது போல் போராட்டம் நடத்துவது சாதி வெறி இல்லாமல் வேறு என்ன? அவர்கள் பூசாரி வேடம் போட்டு போராட்டம் நடத்துவார்களா? அல்லது பீ அள்ளுவது போல் போராட்டம் நடத்துவார்களா?).

அப்புறம் பார்ப்பனியத்தை எதிர்ப்பது உங்களுக்கு எதற்க்கு கோபம் வருகிறது. அதாவது தங்களுக்கு சாதி/தத்துவ சார்பு இல்லையெனில்?

தேவர், வன்னியர் போன்ற மேல்சாதி வெறியர்களை எதிர்த்து தொடர் பதிவுகளை போட்டால் ஒரு எதிர்ப்புகூட வாராது என்பதை என்னால் உறுதிபட கூறமுடியும்.

பார்ப்பினியம் தத்துவ, பண்பாட்டு தளத்தில் செய்வதை, பொருளாதார தளத்தில் பார்ப்பன, தேவர், மற்றும் பிற மேல்சாதி வெறியர்கள் நடைமுறைப் படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இங்கு(இணையத்தில்) பார்ப்பனிய எதிர்ப்பு என்பது இந்துத்துவ பிரச்சாரத்துக்கு எதிர்வினையாகத்தான் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அப்புறம் எமக்கு எல்லா ஓட்டு கட்சிகளும் தேவடியாக்கள் தான். அதை கட்டுரையிலேயே மிகத் தெளிவாக குறிப்பிட்டு கண்டனத்துக் கொள்ளாகியிருக்கிறேன். ஏதாவது கருத்து சொல்லும் முன் படித்துப் பார்த்து சொல்லவும்.

ஆக்கப் பூர்வமான விவாதங்களுக்கு(மாற்றுக் கருத்துகளும் கூட) என்றும் இந்த தள்ம் தயார் என்பதை எனது முந்தைய பதிவுகளிலுள்ள பின்னூட்டங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்

நன்றி,
அசுரன்.

said...

மருதநாயகம்,

தங்களது கோக் பற்றிய கட்டுரையை படித்து பின்னூட்டமிட்டுருந்தேன். இது போன்ற நாட்டுக்கான பங்களிப்புகள் தொடரட்டும்.

இளைஞர்கள் சுயநல வலையிலிருந்து விடுபட்டு மக்களை அணி திரட்ட வேலை செய்ய வேண்டும் என்ற தங்களது ஆவலை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்,
அசுரன்.

said...

சிவபாலன்,

எனது முந்தைய கட்டுரையில் P.C. என்ற அரசியல் தரகு விபச்சாரியை மக்கள் விரோதிகள் லிஸ்டில் சேர்த்ததன் காரணம் புரிபட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

said...

Thekkikattan என்ற இயற்கை நேசி,

தங்களது வருகைக்கு நன்றி,

எனது நடை கடினமாக இருப்பது பற்றியும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது பற்றியும் பலர் விமர்சனங்கள் செய்கிறார்கள். நீங்களும் செய்திருக்கிறேர்கள். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனது எழுத்து நடையில் அதீத கவனம் செலுத்துவேன். உடனடியாக மாற்றம் இல்லாவிட்டாலும் சிறிது காலத்தில் மாற்றம் கட்டாயம் இருக்கும். தொடர்ந்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறேன்.

விதை நெல் பற்றிய தங்களது தகவல்களுக்கு நன்றி. தங்களது கவலை முற்றிலும் நியாயமானது. இதுமட்டுமல்ல இன்னும் விவசாயம் சார்ந்த பல விசயங்களை பற்றி பல கட்டுரைகள் எழுத முடியும். இந்த கட்டுரையை பொறுத்த வரை அதை படிப்பவர்களை உணர்வுத் தளத்தில் ஒரு பலத்த அடி கொடுத்து சுய உணர்வுக்கு வர வைப்பதுதான் நோக்கம். எனவேதான் எல்லா விசயத்தையும் கலந்து ஒரு புரட்சிகர மசாலா படம் போன்று கொடுத்துள்ளேன்.

தனித் தனி தலைப்புகளில் விரிவாக எழுத விருப்பமுள்ளது. தாங்களது உதவி இதில் எவ்வகையிலேனும் இருக்குமென்றால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.


//பாதிப்புகளை எதிர் கொள்ளும் பொழுது புரையோடிப்போன புற்று நோயாக சமூதாய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவது தவிர்க்க முடியாது.

மாற்றங்கள் இன்றியமையாதது தான், இருப்பினும் அவ் மாற்றங்கள் எல்லோருரையும் (இயற்கையையும் சேர்த்துத்தான்) அரவணைத்து பிணைத்துச் செல்வது ரொம்ப அவசியம். இயற்கை கற்பழிப்பு நிகழ்த்தாமல்.//

ஆம் உண்மை என்ன செய்ய. இவை தெரிந்தும் நாம சோம்பி கிடப்பது சரியா? நமது எதிர்கால சந்ததிகளுக்கு, நமது குழந்தைகளுக்கு என்ன விட்டு செல்லப் போகிறோம்?

இதே விசயத்தைப் பற்றி எனது ஆங்கில பதிவில் தங்களுக்கு இட்ட பதிலில் எனது கட்டுரை ஒன்றுக்கான இணைப்பு கொடுத்துள்ளேன். இயற்கையை எப்படி ஏகாதிபத்தியம் சுரண்டி அந்த அழிவிலிருந்தும் லாபம் பார்க்கிறது என்பதை விளக்கி நீங்கள் முற்றிலும் எதிர்பாராத கோணத்தில் விருவிருப்பான கட்டுரை அது.
http://kaipulla.blogspot.com/2006/04/very-very-bussy-to-find-answer.html

படித்து கருத்துச் சொல்லுங்கள்.

வாழ்த்துக்கள்,
அசுரன்.

said...

சந்திப்பு,

தங்களது வருகைக்கு நன்றி,

தற்பொழுது சுருக்கமாக பதில் சொல்லுகிறேன், பிறகு விரிவாக பதில் சொல்லுகிறேன்.

எனக்கு பாராளுமன்ற வலது சந்தர்ப்பவாதத்திலும் நம்பிக்கை கிடையாது, இடது தீவிர சாகசவாதத்திலும் நம்பிக்கை கிடையாது. மக்கள் திரள் வழியில், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களுக்கு கற்றுக் கொடு என்பதில் நம்பிக்கை உள்ளவன்.


நன்றி,
அசுரன்

said...

அசு,

//தனித் தனி தலைப்புகளில் விரிவாக எழுத விருப்பமுள்ளது. தாங்களது உதவி இதில் எவ்வகையிலேனும் இருக்குமென்றால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.//

நான் இந்த விதை நெல் சம்பந்தமான அரசியல் விளையாட்டுக்கள் எப்படி அதீதாமான வியாதிகளையும், டைவர்சிடி இழப்பையும் ஏற்படுத்தி பின் தவிர்க்க முடியாத அயல் நாட்டு dependency-யை ஏற்படுத்திடுவிடும் என்பதனை, எனது இயற்கை நேசி பதிவில் இடலாமென்று எண்ணியிருந்தேன்.

இருப்பினும் என்னைவிடவும் உங்களுக்கு அதிகமான விசய ஞானங்களும் தாகமும் இருப்பதால் நீங்களே இடுங்கள் அவ்வப்பொழுது கண்டிப்பாக தாங்களுக்கு தேவையான அனைத்து கருத்து பரிமாறல்களும் என்னிடமிருந்து உண்டு.

நல்ல விழிப்புணர்வேற்று பதிவு. பாருங்கள் நிறையெ பேருக்கு இது சம்பந்தமான விசயங்கள் கிடைக்கவே இல்லை. எனவே, இங்கு அவசியம் பேசப்பட வேண்டிய ஒன்றுதான்.

said...

போனபர்ட்,

உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. உங்கள் பதிவுகளில் இருந்து உங்கள் பின்னூட்டத்தில் இருந்து சில வரிகளையோ அல்லது வாக்கியங்களையோ எடுத்து எங்கள் தளங்களில் நான் போடலாமா?

said...

வாருங்கள் முத்து(தமிழினி),

தங்கள் மீது எனக்கு சிறிது கோபம் இருந்தது. யாரோ மக்கள் விரோத கும்பல்களின் பதிவுகளிலெல்லாம் சென்று கருத்து சொல்லும் நீங்கள் இங்கு வராமல் இருந்ததை அவமானமாக கருதியிருந்தேன்.

தற்பொழுது இங்கு வந்து தங்களது ஆதரவை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

நல்ல விசயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை, கெட்ட விசயங்களுக்கு பய்ன்படுத்துபவரோ அனுமதி பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை.

உங்களது பல்வேறு பதிவுகளை படித்துள்ளேன். மாற்றுக் கருத்துக்கள் இருந்தபோதிலும் சிறப்பானவையாக உள்ளன தங்களது பதிவுகள்.

தாராளமாக பயன்படுத்த உங்களை போன்ற நட்பு சக்திகளுக்கு முழு உரிமை உள்ளது.

வாழ்த்துக்கள்,
அசுரன்.

said...

நன்றி அசுரன்

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

Anybody can create a profile in the name of anybody with or without
a photo.Please check the profile no and blogger particulars before
making any assumption.There is a blogger named Jayaraman, his name is not Pappan Jayaraman.Somebody has created this profile just today
and posted this comment.This is an attempt to defame him.In your hatred against brahmins you have
failed to verify this and have fallen in the trap.

said...

நன்றி அனானி,

ஆனால் பிரச்சனை என்னவென்றால் அந்த வலையில் இருப்பது அவரது (ஐயராமன்) போட்டோ தான். வேண்டுமானால் நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள். என்னாலும் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் வளைத்து வளைத்து சரிபார்த்துக் கொண்டிருக்க முடியாது.

ஒருவேளை அப்படி தவறாக பதிப்பிக்கப் பட்டிருந்தால் நீங்கள் இப்பொழுது செய்ததுபோல் மறுப்பு பின்னூட்டம்மிட்டால் அந்த தவறான பின்னூட்டம் நீக்கப்படும்.

ஐயராமன் பெயரில் வந்த பதிவர் போலி என்பதாகத்தான் தெரிகிறது.

எனவே அந்த பதிவை நீக்குகிறேன்.

+++++++++


அப்புறம் இதுதான் சாக்கு என்று தங்களது சாதி வெறி சாயத்தை, சாணியை என்மீது அடிக்காதீர்கள்.

பல விசயங்களை ஆய்வு செய்து, மயிர்பிளக்க விவாதம் செய்து, ஆதரப்பூர்வமாக எங்களது நிலைப்பாடுகளை பல இடங்களில் காதும், வாயும் வலிக்க விளக்கிய பிற்பாடும், அதையெல்லாம் படிக்காமல் அல்லது அவற்றில் தவறிருந்தால் சுட்டிக்காட்டாமல், இந்த பின்னூட்ட தவறு போன்ற ஏதவது ஒரு பிழையை பிடித்து தொங்குகிறேர்களே? தங்களுக்கு வெட்கமாக இல்லை?

பிழையை சுட்டிக்காட்டியதற்க்கு நன்றி,
உங்களது ஜெயலலிதா பாணி அரசியலுக்கு வேறு இடங்கள் உள்ளன.

நன்றி,
அசுரன்.

said...

//நான் இந்த விதை நெல் சம்பந்தமான அரசியல் விளையாட்டுக்கள் எப்படி அதீதாமான வியாதிகளையும், டைவர்சிடி இழப்பையும் ஏற்படுத்தி பின் தவிர்க்க முடியாத அயல் நாட்டு dependency-யை ஏற்படுத்திடுவிடும் என்பதனை, எனது இயற்கை நேசி பதிவில் இடலாமென்று எண்ணியிருந்தேன்.//

Thekkikattan,

உங்களிடம் உள்ள தகவல்களை கொடுத்து உதவுங்களேன். இருவரும் இணைந்து ஒரு கட்டுரை முயற்சி செய்து பார்ப்போம்.

என்ன சொல்லுகிறேர்கள்.

நன்றி,
அசுரன்

said...

அசுரன்,

தெ(ரி)ளிந்து கொண்டேன்.

மிக்க நன்றி!!!

said...

Babble,

தங்களது வருகைக்கு நன்றி,

நான் பேச வந்தது மாக பெரிய திருடனைப் பற்றி. ஒரு சுரண்டல் சமூகத்தில் அத்தனை பேரும் ஏதேனும் ஒரு வகையில் சுரண்டிதான் வாழ வேண்டி இருக்கிறது.

ஆனால் இதில் சுரண்டலுக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பவனைப் பற்றியும், நமது நாட்டை அடிமையாக்குபவனைப் பற்றியும்தான் இந்த பதிவு,

நீங்கள் சொல்லுவது போல் குற்றம்சாட்டக் கிளம்பினால். மின்சாரத்தில் ஏமாற்றும் விவசாயிலிருந்து, வறுகடலையில் ஏமாற்றும் தள்ளு வண்டிக் காரன் வரை பேச வேண்டியிருக்கும்.

தவறுகளுக்கும் வர்க்க பேதம் உண்டு.

VAT என்பது சிறு வியாபாரிகளை ஒழித்துக் கட்ட கொண்டு வந்ததுதான். சிதறிய இந்திய சில்லறை வியாபார சந்தையை மையப் படுத்தி MNCக்களுக்கு ராஜபாட்டை போடுவதுதான் VAT.

நன்றி,
அசுரன்.

said...

சந்தோஷ்,

தங்களது வருகைக்கு நன்றி!

தங்களது விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

கடுமையான் பிரயோகங்களைக் குறைத்து கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடையுமாறு எழுதுவேன்.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழல், நிலபிரபுத்துவத்தின் ஜனநாயகமறுப்பு, அடிமைத்தனம் போன்ற பிற்போக்கு பண்புகளை சுவீகரித்த்து அத்துடன் ஏகாதிபத்தியத்தின் தனிமனிதவாதம், கழிசடைத்தனம், சுயநலம், பிழைப்புவாதம், கழிவிரக்கம் இவற்றை கலந்து, இவைதான் இன்றைய சமுதாயத்தின் முன்னுதாரனமான, உன்னதமான பண்புகளாக கலை இலக்கிய ஊடகங்களால் பரப்பப்படுகின்றன.

இச்சூழல் விரைவில் மாறுபடும் என்று நம்புவோமாக!



Suka,

தங்களது வருகைக்கு நன்றி, வாழ்த்துக்களுக்கு நன்றி
தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்கள்


அனானி,

தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி,
18/19 நூற்றாண்டு வரலாறுகளை(உலகை புரட்டிப் போட்ட) இன்னும் ஆழமாக, அகலமாக படிக்க வேண்டும்.
I would try to refine my presentation.



ஏகாதிபத்திய ஆதரவு அனானி,

தங்கள் வருகைக்கு நன்றி
நீங்கள் தலித்தாக இருந்தால்..

சலுகை பெற்ற வர்க்கமாக உயர்த்திக் கொண்ட தலித்துகளின் ஒரு பிரிவினர் தங்களது சமுதாயத்தின் இதர பிரிவினரை மறந்து பிழைப்புவாதம் பேசவது கண்டு அம்பேத்கார் வருத்தப்பட்டது நியாபகம் வருகிறது.

அம்பேதகாரின் அந்த கூற்றை மெய்யாக்கிவிட்டு. Jaibhim போடுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.

கொஞ்சம் முயற்சி செய்து நமது நாட்டு நிலமைகளை புரிந்து கொள்ளுங்கள். அல்லது பின்னூட்டத்திலேயே தங்களது மாற்றுக் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வையுங்கள்.



கல்வெட்டு,
முதல் முறையாக வருகிறேர்கள் என்று நினைக்கிறேன்.
தொடர்ந்து வந்து தங்களது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எடுத்து வைக்க வேண்டுகிறேன்


பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி,
அசுரன்

said...

Chumma Loluvayki... :_))

Related Posts with Thumbnails