இந்து என்று சொல்லுடா மாட்டுக் கறி தின்னுடா!!
மாட்டுக் கறி லெக் பீசு 1:
காமன்வெல்த் போட்டியில் வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறி போடுகிறார்கள் - என்று மோடி புகார் கொடுத்துள்ளாராம். அவருக்கு மாட்டுக்கறி லெக் பீசு கொடுக்கப்படவில்லை என்ற வருத்தத்தில் சொல்லியது போலத் தெரியவில்லை.
ஏனேனில், போன முறை வைப்ரெண்டு குஜராத் நிகழ்ச்சிக்கு குஜராத்து வந்த வெளிநாட்டுக்காரர்களுக்கு மோடி அரசு மாட்டுக்கறி கொடுக்கவில்லை. காரணம், கிருமிகள்.... ஸாரி மன்னிக்கவும். காரணம் என்று அவர் கூறியது இதோ:
"அவர்களிடம் குஜராத் மக்கள் சாப்பிடும் உணவைத்தான் உங்களுக்குத் தர முடியும் என்று நாங்கள் கூறியபோது அதை மறுக்காமல் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்."
ஆஹ, அவரது இந்த லாஜிக்கின் படி இந்திய மக்கள் சாப்பிடும் உணவைத்தான் காமென்வெல்த் கும்பலுக்கும் தர வேண்டும் என்று அவர் கருதுகிறார். அதையே வலியுறுத்தியுள்ளார். இது சரிதான். இந்த கூற்றின் தர்க்க முடிவு என்னவென்றால் மாட்டுக்கறி சாப்பிடுபவன் இந்தியனல்ல என்று ஆகிறது.
அப்படியானால் இந்தியாவில் வாழும் பெரும்பான்மை உழைக்கும் மக்களாயுள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், சூத்திர மக்களும் மாட்டுக்கறியை பாரம்பரியமாகவே சாப்பிடுகிறார்கள் என்ற வகையில் அவர்கள் இந்திய மக்கள் அல்ல என்று ஆகிறது. ஏனேனில், இந்திய மக்கள்தான் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்களே? அல்லது இந்திய மக்கள் என்று எதிர்காலத்தில் மோடி கும்பல் அனுமதிக்கும் மக்கள் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது அல்லவா?
இன்னொரு பக்கம், உலகமய ஏகாதிபத்திய அரசியலானது இதே உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை மறுத்து அவர்கள் மீது அறிவிக்கப்படாததொரு யுத்தத்தை அரசியலமைப்புக்கு விரோதமாக நாடு முழுவதும் நடத்தி வருவதன் மூலம் அதே தாழ்த்தப்பட்ட, சூத்திர மக்களை இந்தியர்கள் இல்லை என்று சூசகமாக அறிவித்துவிட்டது. என்னவொரு பொருத்தம் பாருங்கள் இந்துத்துவவாதிகளுக்கும், ஏகாதிபத்தியவாதிகளுக்கும்.
எனவே, இந்தியன் என்று நம்புபவன் உழைக்கும் மக்களை அழித்தொழிக்கும் உலகமய அரசியலை எதிர்ப்பதன் மூலமும், இந்து என்று நம்புபவன் மாட்டுக்கறி தின்பதன் மூலமும் தமது நேர்மையை நிரூபிக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாக மாறிவிட்டது.
நான் இந்தியன் என்றோ இந்து என்றோ நம்பிக் கொண்டிருக்கவில்லை ஆயினும் உலகமயத்தை மாட்டுக்கறி லெக்பீசு வறுவலை ருசித்துக் கொண்டே எதிர்ப்பேன்.
அசுரன்