பூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்!!!
ம க இ க சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா? இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்பல்கள். இவை புதியவை அல்ல. ம க இ கவின் விமர்சனக் கணைகள் தாக்கும் வலி தாங்காமல் சந்தர்ப்பவாத புலம்பல்கள் இப்படித்தான் இருக்கும்.
இப்போது, சுப உதயகுமாரின் நெக்ஸ்டு ஸ்டெப்பு அரசியல் நடவடிக்கைக்கு தோதாக ம க இ க வை அவதூறு செய்து வெளியிடப்பட்டுள்ள கடிதம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்ற பெயரில் காவிக்கு காவடி தூக்க முயற்சி செய்து அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் கதையாகிப் போன 'சோழத்து' 'நாய'கர்களின் சோகம், இவை ம க இ க பற்றிய மேற்படி புலம்பல்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளன.
முழுக்க நனைந்தாலும் முக்காடு போடும் பாரம்பரியமிக்க 'தமிழ்'தேசிய, 'காந்திய' தலைவர்கள், மற்றும் வைகுண்டராஜனின் வைக்கோல் பொம்மைகள் ம க இ கவின் கடி எறும்புக் கடி எறும்புக் கடி எறும்புக் கடி மட்டுமே என்றே உறுதிப்படுத்தி ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள். போகட்டும் விட்டுத் தொலைவோம் ஒரேயொரு கேள்வியுடன், ஒரு எறும்புக் கடிக்கா இத்தனை அலப்பரை 'தோழர்களே'.
பூனைகளே எங்கே கண்களை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்!!!
அசுரன்
1 பின்னூட்டங்கள்:
அசுரனின் அதிரடி அருமை!
Post a Comment