TerrorisminFocus

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, October 26, 2009

கவிதையைப் படிக்கும் முன்….

கவிதையைப் படிக்கும் முன்….

காலனி(ணி)க் கவிதை
""
ஆனால்,
நீ என்னோடு வரும்போழுது,
உன் பிஞ்சுப் பாதங்களால்
மேலத்தெருவில் அழுத்தமாய்
பாதம் பதித்து நடக்க வேண்டும்.

உன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை
அந்தத் தெருவில் குடிகொண்டிருக்கும்
ஜாதியத்தின் செவிகளை
துளைத்தெடுக்க வேண்டும்.

செய்வாயா என் செல்ல மகளே!
""


"இப்பொ யாருங்க சாதி பாக்குறாங்க? " வினயமாகக் கேட்டார் ஆனந்த பவனில் காபி குடித்துக் கொண்டிருந்த ஆறுமுகப் பாண்டியன். தினமலர் செய்தி ஏட்டில் முக்குலத்தோர் மணமாலையில் மணமகன் தேடி விளம்பரம் கொடுத்திருந்த செய்தித் தாளை அருகில் வைத்துக் கொண்டே.

"ஏதாவது சிறுசா நடந்துடக் கூடாது, உடனே தலித்து தலித்துன்னு கூப்பாடு போட்டு ஊரக் கூட்டிருவாங்க. வேலையத்த பயளுக.", அமைதி விரும்பியாக அறவுரை வழங்கினார் 'Veg ஒன்லி' விளம்பரம் கொடுத்து வீடு வாடகைக்கு விடும் பக்கத்து வீட்டு பரசுராமன்.

"அதெல்லாம் அந்தக் காலம், இப்போ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வைச்சி மேல் சாதிக்காரன கொடுமப்படுத்துறாங்க" சமூக நீதி போதனை செய்தார், பேராசிரியர் திருவேல்முருகன், தனக்குப் பின்னால் ஒட்டியிருந்த கீழ் வெண்மணி நினைவுநாள் சுவரொட்டியையும், கடையில் தொங்க விடப்பட்டிருந்த வாரப் பத்திரிகையில் தெரிந்த கயர்லாஞ்சி தீர்ப்பையும் தனது தொந்தியால் மறைத்துக் கொண்டே..

"அவா அவா வேலய அவா அவா செஞ்சா லோகத்துல என்ன பிரச்சினை வந்துடப் போறது?" பாதாளச் சாக்கடையில் இறங்கி கழிவு அகற்றியவருக்கு 10 ரூபாய் அருளிக் கொண்டே நவீன வர்ணாஸ்ரமத்தை அழுத்தம் திருத்தமாக கேட்டார் ஹரிராமன், பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி பல்லிளித்துக் கொண்டிருந்தது - "அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கு நீதிமன்றத் தடை கோரும் வழக்கு விசாரணைக்கு வந்தது."

"தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் அவனோட அடையாளங்களை பெருமையா காட்டிக் கொள்வதை யார் தடுத்தாங்க?" நெத்தியில் கண்ணைக் கூசுச் செய்யும் அளவு நாமம் போட்டுக் கொண்டே நியாயம் பேசினார் வெங்கடராம நாயக்கர், மாட்டுக் கறி தின்ற ஹரியான தலித்துக்களின் தோலுரித்துக் கொன்ற ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டுதான் நியாயப்படுத்தினர் என்பது, கண்ணில் நிழலாடியது.

தடித்த, சொரனையற்ற சாதியக் காதுகளுக்கு எவ்வளவு அருகில் சென்று காலனி(ணி)ச் சத்தங்கள் ஒலிக்க முடியுமோ அவ்வளவு அருகில் சென்று ஒலிக்கட்டும், அப்பொழுதாவது சாதிய வண்ணம் பூசிய இந்த ஆபாசங்களையே நியாயம், நீதி என்று பேசுபவர்களின் செவிட்டுத் தனம் கிழிகிறதா என்று பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான வன்கொடுமைகளை தினமும் தொகுத்து வழங்கும் ஒரு தளம்.


காலனிச் சத்தங்கள்

என் செல்ல மகளே!
நீ பிறந்ததில் எனக்கு
மிக்க மகிழ்ச்சி.

உன் தாத்தாவிற்குத்தான்
என் மீது கொஞ்சம் வருத்தம்.
குலசாமி பெயர் விடுத்து,
மரித்தவர்களின் ஊர்ப்பெயரை
உனக்கு சூட்டியதற்காக…
முடிந்தவரை விளக்கிவிட்டு
பிடிவாதமாய்,
வெண்மணி என்றே உனக்கு
பெயரிட்டு விட்டேன்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள்
மரிக்கவில்லை.

நகரவாழ்வின் விழுமியங்களோடு
சங்கமித்து நிறைய வருடங்கள்
உருண்டோடிவிட்டன.
அதன் தொடர்ச்சியாய் – இப்பொழுது
நீயும் வந்துவிட்டாய்…

கடந்துவந்த தூரங்களின்
நீளத்தை என்றாவது ஒருநாள்- நீ
கேட்டறிய வேண்டும் என்பதே
என் ஆவல்.

ஏனெனில்,
தழும்புகளற்ற காயங்கள்
என்னிடம் நிறைய உண்டு.
அதை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது
உனக்குள் ஒரு பண்புமாற்றம்
நிகழலாம் என்பது என் நம்பிக்கை.

முரண்களின் மூட்டையாக
இருக்கும் இந்த சமூக அமைப்பின்
சிக்கல்களை
அறுத்தெறிவதற்கான ஆயுதமாக…
அந்த நம்பிக்கை
உனக்குள்ளும் ஊடுருவலாம்.

அழகிய ஓவிய வேலைப்பாடுகளடங்கிய
பீங்கான் குவளைகளில்,
நீயும் நானும்- இப்பொழுது
தேநீர் அருந்திகொண்டிருக்கிறோம்,
இவை நாம் எட்டிய
குறைந்தபட்ச வாழ்க்கை.

இது நடந்தது கூட
உடனடி நிகழ்வல்ல,
ஒரு நெடிய போராட்டத்தின்
விளைவு.

பனை மரத்து ஓலைகள்,
செரட்டைகள்,
அலுமினிய கிண்ணங்கள்…
இவைகள்தான்
உனது முன்னோர்களின்
தேநீர் குவளைகள்

அதாவது,
‘நாகரிக’ சமூகத்தை
தலைகுனியச் செய்திடும்
இருண்ட கணங்கள்.

“மனிதர்களை ‘மனிதர்’
நாயினும் கேவலமாய்
நடத்த முடியுமா அப்பா?”
என்று நீ கேட்கலாம்.

ஆம்,
இப்பொழுதும் இந்த வன்கொடுமைகள்
தொடர்கிறது…
புதிய வடிவங்களில்.
நீ எதிர்கொள்ளும்போது
இன்னும் நவீனப்பட்டிருக்கலாம்.

ஆனாலும்,
உன் கல்விக்கூடத்தில்
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்,
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,
………………………………’ என்று,
நாடே புனித திருவுருவாய்
இருப்பதுபோல்
வெற்று வார்த்தைகளை
உன்னுள் இட்டு நிரப்புவார்கள்

அப்பொழுது
உண்மையையும், பொய்யையும்,
உரசி பார்த்துக்கொள்ள
நம் பகிர்தல் உனக்கு பயன்படலாம்.

என் செல்ல மகளே!
நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்கள் – உண்மையில்
அழகானவை, அற்புதமானவை.

எல்லா அப்பாக்களையும் போல்
அந்நிமிடங்களை மிகுந்த
ரசனையோடு விழுங்கியுள்ளேன்.

இருக்கட்டும்.
கடைவீதிக்கு சென்ற போதுதான்
உன் அம்மாவின் செல்ல கத்தல்
ஞாபகத்திற்கு வந்தது.

“குழந்தை இருக்கும் வீட்டில்
பொம்மைகளைவிட -
புத்தகங்கள்தான் அதிகமாய் உள்ளது,
அவள் எவற்றோடுதான் விளையாடுவாள்?”

உனக்கான பொம்மைகள்
விளையாட்டு பொருட்கள்,
நிறைய வண்ணங்கள்
கொஞ்சம் தூரிகைகள்…

எல்லாம் வாங்கிவிட்டேன்
குறிப்பாக,
நீ விரும்பி கேட்ட
அழுத்தி நடந்தால்
இசை எழுப்பக்கூடிய காலணிகளையும்
கவனமாய் வாங்கிக் கொண்டேன்.

அடுத்த வாரம்
அநேகமாய் நாம் ஊருக்கு
செல்ல நேரிடும்.

அப்பொழுது மேலத்தெரு வழியாகத்தான்
தாத்தா வீட்டிற்கு செல்வோம்.

அந்த வழியாக,
உன் கொல்லுத் தாத்தா,
தாத்தா…, ஏன் நானும் கூட
செருப்பை கையில் தூக்கியபடிதான்
கடந்து சென்றுள்ளோம்

ஆனால்,
நீ என்னோடு வரும்போழுது,
உன் பிஞ்சுப் பாதங்களால்
மேலத்தெருவில் அழுத்தமாய்
பாதம் பதித்து நடக்க வேண்டும்.

உன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை
அந்தத் தெருவில் குடிகொண்டிருக்கும்
ஜாதியத்தின் செவிகளை
துளைத்தெடுக்க வேண்டும்.

செய்வாயா என் செல்ல மகளே!

நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்களை விட,
அப்போதைய நிமிடங்கள் இன்னும்
அழகானதாய், அற்புதமானதாய் இருக்கும்.

- முகிலன்

Sunday, January 13, 2008

கு. ராமன் என்ற அக்யூஸ்ட் தெருப் பொறுக்கியா அவதாரமா? - கவிதை

கு. ராமன் என்ற அக்யூஸ்ட் தெருப் பொறுக்கியா தெய்வீகப் பிறவியா? என்ற இந்த கேள்விக்கே இடமில்லை ஏனேனில் பார்ப்பானின் அகராதியில் இரண்டிற்க்கும் அர்த்தம் ஒன்றுதான் என்று நிறுவுகிறது சமீபத்தில் படித்த ஒரு சிறந்த கவிதை.

தோழர் துரை. சண்முகம் கவிதை எழுதுவதில் ஒரு அசுரர். கலை என்பது மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து அவர்களை மயக்கி ஒரு போதையாக வேலை செய்து ஆளும் வர்க்க சேவை செய்யும் இந்த காலத்தில். இவரிடம் தவழும் கவிதை எனும் கலை இந்த இழிந்த சுரண்டல் சமூகத்தின் உறவுகளை அதன் கூர்மையான உண்மைகளின் மூலம் சதாரண உழைக்கும் மக்களுக்கு புரிய வைக்கும் வேலையைச் செய்கிறது. கலை யாரிடமிருந்து பிறந்ததோ அவர்களுக்கு தேவையானதை செய்கிறது. தனது வாழ்க்கை தேவைகள் அபரிமிதமாக நிறைவேறப்பெற்ற வளப்பமான வெள்ளைக்காரன்கள் தமக்கு தேவையான புதிய உணர்வுகளை கஞ்சாவிலும், காஞ்சியிலும், வேதத்திலும், மகாபலிபுரம் லாட்ஜ்களிலும், ஹோமோவிலும், வாழும் கலைகளிலும், கிருஷ்ணனிடமும், பாபாவிடமும் அகல்வாய்ந்து தேடிக் கொண்டிருக்கும் பொழுது. இந்த கொழுப்பெடுத்த பன்றிகளின் உல்லாச வாழ்க்கைக்கு காரணமான உழைக்கும் வர்க்கத்தின் உணர்வுகளோ வேலை பார்க்குமிடத்தில் முதலாளிக்கும், ஓய்வு நேரத்தில் ரஜினி - ஸ்ரேயா விரசத்திற்க்கும், விஜய் - அஜித் உரசலுக்கும் அடகு கொடுக்கப்படுகிறது. மொத்தத்தில் தனக்கு தேவையான உண்மையான புதிய உணர்வுகளை என்றுமே கிடைக்கப் பெறாமல் அடிமைத் தனத்தால் நிரந்தரமாக ஆசிர்வதிக்கப்படுகிறான். கொழுப்பெடுத்த பன்றிகளுக்கும், உழைத்து நொந்த உள்ளங்களுக்கும் ஒருங்கே புதிய உணர்ச்சிகளை அறிமுகப்படுத்தும் புரட்சியாளர்களின் அந்த அடிப்படை கடமையை தோழரின் கவிதைகள் என்றுமே சிறப்பாக செய்து வருகின்றன.

நமது மூதாதையான நரகாசுரர் கொல்லப்பட்ட நாளையே கொஞ்சம் கூட வெட்கமின்றி தீபாவளியாக கொண்டாடி வரும் போதும் துரை. சண்முகம் எழுதுகிறார் 'இனிய ஏழு' என்ற கவிதையை. பாட்டாளி வர்க்கத்தின் திபாவளியாம் நவம்பர் ஏழு புரட்சி தினத்தை மெச்சி. பிறக்கும் போதே சாக்லேட்டின் சுவையறிந்தா ரசிக்க கற்றுக் கொள்கிறது குழந்தை? புரட்சி நாளாம் ஏழு என்பதும் மனிதனாகப் பிறந்தவனுக்கு இனிமையாக இருப்பதும் அந்த அம்சத்திலேயே என்று எழுதியிருப்பார் அந்த கவிதையில்.

பாரத ரத்னா வாஜ்பேயி இந்தியா ஒளிர்கிறது என்ற எழுதிய போது இவர் இந்தியா பழி வாங்கும் என்று புரட்சி கீதம் பாடினார். கவிதை போட்டிக்கான கல்லூரி விழாவில் தலைமை தாங்கிய வித்தக கவி போன்ற பெயர் தாங்கிகள் தமது சொல் வித்தைகளை விளம்பரப்படுத்திச் செல்ல, இவரோ கவிதை என்றால் என்னவென்று இளம் கவிஞர்களுக்கு அறிமுகப்படுத்தி அதன் நதி மூலம் ரிசி மூலம் கற்றுக் கொடுத்து கவிதை யாருக்கான புதிய உணர்வுகளை அறிமுகப்படுத்த எழுதப்பட வேண்டும் என்று கவிதையாகவும், உரையாகவும் அவர்களது சமூக கடமையை கற்றுக் கொடுத்துவிட்டு வந்தார். வெறுமே வார்த்தைகளில் விளையாட இவர் வித்தக கவி அல்லவே? அல்லது குட்டி முதலாளித்துவ சுய ஆனம் தேடல்களை அவர்களின் தொண்டை குழியில் ஆரம்பித்து குடலின் நுனி தாண்டி மலக் குடல் வரை ஆய்வு செய்ய இவர் பின் நவீனத்துவ புலியும் அல்ல. இவரது வார்த்தைகளில் இவர் ஒரு கவிஞரும் அல்ல. கவிதையை தொழிலாக கொண்டவன் கவிஞன் என்பது உண்மையெனில், கலையை தொழிலாகக் கருத முடியுமா என்ற கிளை உண்மை நமக்குப் பதில் சொல்கிறது. வேதம் ஓதி உழைக்காமல் உண்டி வளர்த்த பார்ப்பானுக்கு என்ன நியாயமோ அதே நியாயம் உற்பத்திக்கு எந்த பங்களிப்பும் செய்யாமல் வெறுமை கலைகளை ஓதி பிழைப்பு நடத்துபவர்களுக்கும் பொருந்தும். நாம் வரலாற்றில் கவிஞர் வள்ளுவரை பார்த்ததில்லை.

தோழரின் சமீபத்திய கவிதை தலைமறைவாய் நேற்று வரை அலைந்து கொண்டிருந்த பார்ப்பன கோமன ராமன் என்ற அக்யுஸ்ட் கிரிமினல் இன்று அவனது ரவுடி கும்பல் வலுப்பெற்ற தைரியத்தில் கொஞ்சம் வெளியே வந்து போதை தலைக்கேற சலம்பி கொண்டு சட்ட ஒழுங்கை கெடுத்து வருகிறான், தனது மறுகாலனியாதிக்க தலைவர்களான இன்றைய
விசுவாமித்திரர்/வச்ஷடர் கும்பலான ஏகாதிபத்தியங்களுக்காக சம்பூகனின் இன்றைய வாரிசுகளான உழைக்கும் மக்களை துன்பப்படுத்தி வருகிறான் என்ற சூழலில் அந்த தெருப் பொறுக்கி கேப் மாறியையும், அவனது ரவுடி சங் பரிவாரங்களையும் எதிர் கொண்டு மண்டை உடைக்க தேவையான புதிய உணர்வுகளை வழங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது கவிதை.

ராமன் என்பவன் செய்த பழைய தெருப் பொறுக்கித் தனங்களை பட்டியலிட்ட பிறகு கவிதை கேட்க்கிறது:
"ராமன் தேசிய நாயகனா
இல்லை தெருப்பொறுக்கியா?
நீங்களே தெரிவு செய்வீர்!"


அவன் பார்ப்பன சங்க தலைவனாக இருந்த காலத்தில் நடந்த ராமயணத்தில் அவன் உழைக்கும் மக்களுக்கு செய்த சாதி வெறி கொடுமைகளை குறிப்பிட்டு ராமனின் தலையை கேட்கிறார் துரை சண்முகம். ராமன் தலை கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை அவனது அல்லக்கைகளான தொகாடியா, அத்வானி, மோடிகளின் தலைகள் கூட எமக்குப் போதும் என்பதை அவருக்கு தெரிவிக்க ஆவலாக உள்ளது.
"இராமாயணம்
கதைதான் என்றால்
எங்களை ஆளை விடு!

இராமாயணம் வரலாறென்றால்
எங்கள் சம்பூகனை கொன்றதற்கு
ராமனின் தலையைக் கொடு!"



ராமன் என்ற ரவுடி தாதாவை வைத்து அரசியல் வியாபாரம் அல்லது விபச்சாரம் செய்யும் மாமாக்களை, மாமிகளையும் கூட அவர் தனது கவிதையில் குறிப்பிட்டு காட்டுகிறார். ராமன் ஒரு ரவுடி கேப் மாறி என்றால் ராமாயணம் ஒரு மாமா தொழில் என்று குறிப்பிடும் வரிகள்:
"மாசாஜ்பார்லர் வைத்து
ஆளைப் பிடித்து இழுத்தால்
அது விபச்சாரம்;

மனு தர்மத்தை வைத்து
ஆளைப் பிடித்து அமுக்கினால்
அது மகாபாரதம்.

மாமனை வைத்து தொழில் செய்தால்
அதற்குப் பெயர் விபச்சாரம்;
ராமனை வைத்துத் தொழில் செய்வதற்க்குப் பெயர்
ராமயாணம்"


கிராமத்து வழக்கில் ராமனையும், அவனது முந்தைய சங் பரிவார கும்பல் தலைமை ரவுடியான அனுமானையும் பீச்சாங்கையால் தள்ளி இகழ்வாக பயன்படுத்தும் சொலவடையை நமக்கு ஞாபகப்படுத்துகிறது கவிதை.

""பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு
அதையும் புடுங்குச்சாம் அனுமாரு'
என்று
எங்கள் பட்டிக்காடு பழிக்காததா
உன் ராமாயணம்!"


ராமாயணத்தில் உள்ள கிளு கிளுப்பு சுவை குறித்தும் சிறிதே நமக்கு அறிமுகப்படுத்துகிறது கவிதை. சீதாப் பிராட்டியாம் ஜானகியையும், சிவாஜியின் ஸ்ரேயாவையும் ஒப்பிட்டு தீர்ப்பு தர வேண்டிய வேலை நமதல்ல அதற்க்கான தேவையும் நமக்கு இல்லை. அதை ராமாயணம் படிக்கும் பார்ப்பன் குஞ்சுகளே செய்து கொள்ளட்டும். கவிதை குறிப்பிட விரும்புவது ராமாயணம் 'A' சர்டிபிகேட் படத்திற்க்கான தகுதியை விட கொஞ்சம் அதிகம் படைத்த ஒரு கா'ம'வியம் என்பதுதான்.
"ஜானகியின்
ஆரண்ய காண்டத்துச் சங்கதிகளை
அவிழ்த்து விட்டால்
ஆபாசப்படநாயகி 'ஷகிலாவுக்கே'
அப்படி ஒரு கூச்சம் வரும்."


கம்பன் என்ற காவாளி சீதாவின் அங்க அடையாளங்களை ஜொள்ளு வடிய அனுமாருக்கச் சொல்வது கேட்டு குரங்கு கூட வெட்கப்படுவதை கவிதை சுட்டுகிறது.

காட்டுக்குப் போகும் பார்ப்பன கோமன ராமன், தனது மனைவியிடம் சொல்கிறான் பாரதனுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ என்று:
"தம்பி பரதனுக்குத் தகுந்த மாதிரி
வீட்டிலேயே நீ தங்கு' என்று"


கட்டிய மனைவியை தம்பிக்கு கூட்டிக் கொடுக்கும் புரோக்கர் ராமனை எத்தனை பேருக்குத் தெரியும்.

இப்படி சொன்ன ராமனை அதி கேவலமாக திட்டிய டேம் செல் இன் டிஸ்டெரஸ் நாயகியான ஜானகியை எத்தனை பேருக்கு தெரியும்?

60,000 பெண்டாட்டிகளை ஆண்டானா அல்லது அரசாண்டானா என்று யாருமே கேள்வி கேட்டிராத ரவுடி ராமனின் தந்தை செக்ஸ்வெறியன் தசரதன் தனது பெண்டாட்டிகளில் ஒரு பத்து பேரை கூடியிருந்தால் கூட பத்து குழந்தைகள் பிறந்திருக்கும் ஆனால் சொல்லி வைத்தது போல அசுவமேத யாகத்தில் குதிரையுடனும், பாப்பானுடனும் படுத்தெழுந்த 4 மனைவிமார்களுக்கு மட்டுமே குழந்தை பிறப்பது விந்தையே? ராமன் பாப்பானுக்கு பிறந்தான? அல்லது குதிரைக்கு பிறந்தான என்பதே கேள்வி. கவிதை இதனை சுட்டுகிறது.
"அப்பனுடைய அருமை இப்படி,
அருமை மகனுடைய
பெருமை எப்படி?

கோசலைக்கு
மைந்தன் இவன்
இருந்தாலும்,
குதிரைக்குப் பிறந்ததினால்
கு.ராமன் என்றே குறிப்பிடலாம்."


உடம்பெல்லாம் உடலுறுவுக்கான உறுப்பு தரிக்கும் சாபம் பெற்ற (சாபாமாயா அது?) செக்ஸ் வெறியன் இந்திரந்தானே தேவன். ராமன் மட்டுமென்ன விதிவிலக்கா. செக்ஸ் - மனு தர்மத்தின் படி சூத்திரனுக்கும், பஞ்சமனுக்கும் தானே விலக்கு.
"தலைவிதி என்று
எங்கள் உணர்வுகளை
ஒடுக்கியது பார்ப்பனியம்
தாய் முலைக்கு வரிபோட்டு
எங்கள் உறுப்புகளையும்
ஒடுக்கியது சாதியம்,
இதுதான் இந்துமதம்!"



உழைக்காமல் பார்ப்பானைப் போலவே உண்டி வளர்க்கும் பார்ப்பன ரவுடி கடவுள்களை கவிதை குத்திக் காட்டுகிறது. கிராமத்து நாட்டார் தெய்வங்கள் மக்களோடு மக்களாய் வாழ்வதையும் கவிதை சுட்டிக் காட்டுகிறது.
"நெய்யும் பொங்கலும்
பொய்யும் களவும் கொண்ட
பார்ப்பனச் சாமியோ
பக்கத்தில் இரண்டு
பொண்டாட்டி கேக்குது!
இருந்தும்
வெக்கமே இல்லாமல்
ஊருக்குள் இருந்து கொண்டு
ஒரு கூத்தியாளும் தேடுது!"


ராவணனுக்கு லுக்கு விட்ட சீதாபிராட்டியாம் ஜானகியையும் ஸ்லைட்டாக் நமக்கு அறிமுகப்படுத்துகிறது கவிதை.
"இதை தட்டிக் கேட்க வந்த
இராவணனிடம் - தனிமையில்
"தண்ணி குடியுங்கள்
தங்கிச் செல்லுங்கள்" என்று
சீதை 'லுக்கு விட்டது' மட்டும்
சரியாமா?"



டீசண்டாக ஐ லவ் யூ சொன்னதற்காக சூர்ப்பனகை, அவள் ஒரு சூத்திரப் பெண் என்ற ஒரே காரணத்திற்க்காக முலையறுத்த, மூக்கையறுத்த லட்சுமணன் என்ற ராமயாண காலத்து மோடி, தன்னை சந்தேகப்பட்டு அடாது சொன்ன சீதாபிராட்டியின் முலையறுக்க வேண்டாம், மூக்கையாவது அறுத்து மொக்கையாக்கியிருக்கலாம்.
"ஆர் எஸ் எஸ் கோவிந்தாசார்யாவுக்கு
பாராதிய ஜனதா உமாபாரதி - சன்னியாசி
பாசத்தோடு கொடுத்தால் ஒரு காதல் கடுதாசி
மூக்கை அரியக் காணோமே?"

உமபாரதியின் மூக்கும், முலையும் பத்திரமாகவே இருக்கின்றன இன்று வரை. பார்ப்பன பரிவாரத்தில் சேர்ந்துவிட்டால் தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுமோ?

பார்ப்பானுக்கு கோமணம் தூக்கும் அல்லக்கைகளான சிவப்பு எம் ஜி ஆர் - விசயகாந்த், நாடார் சங்க நாயகன் சரத்குமார், புரட்சி தெருப் புழுதி வைகை இன்ன பிற இத்யாதி ஆட்களை அறிமுகப்படுத்திய பிறகு ரியல் டைம் சூப்பர் ஸ்டாரை அறிமுகப்படுத்துகிறது கவிதை.
"இத்தனை பார்ப்பன்க் கூலிகளிடமும்
நாம் மல்லு கட்டத் தேவையில்லை
ஒன்று நடந்திருந்தால்!

பேசாமல் சீதையை அழைத்துக் கொண்டு
ராமன்
காஞ்சிமடம் பக்கம் போயிருந்தால்
சீறீரங்கம் உஷாவைப் போல்
சீதை கதை போயிருக்கும்......
அப்புவை வைத்து சங்கராச்சாரி
ராமனை அடித்துத் தூக்கியிருப்பான்
ராமாயணம்
அங்கேயே முடிந்திருக்கும்

நமக்கும் வேறு வேலை நடந்திருக்கும்."



பெரியாரும் அம்பேத்காரும் உரித்து உப்பு கண்டம் போட்டு தொங்க விட்ட உனது ராமனையும், இந்து பார்ப்பனியத்தையும் புதிய மொந்தையில் விற்க்கும் சாராய கடை பார்ப்பன பயங்கரவாதிகளை விரிவாகவே அறிமுகப்படுத்துகிறது கவிதை.
"இன்னொரு பக்கம்
யாருக்கெல்லாம் இதயம் இல்லையோ
யாருக்கெல்லாம் மூளை இல்லையோ
அவனே இந்துவாக இருக்க முடியும்
என்று
அம்பேத்கரும் பெரியாரும்
அறைந்து கூறினர்."

"உனது பிறப்பையே
வேசிமகன் என்று
இழிவுபடுத்தும்.... இந்த மதம்
இந்த இந்து மதம்
உன் சொந்த மதமா?
என்று பெரியாரும் அம்பேத்கரும்
சுரனை கொடுத்த இந்த மண்ணை
பார்ப்பன மலவண்டுகள்
அரிக்கப் பார்க்குது,"


சாதி வெறி கொடுமைகளை சிறிதே சுவைத்து பார்க்க ராமனை அழைக்கிறது கவிதை.
"ஏ! சிறீராமா
சின்ன ஜாதியில் பிறந்து
கவுண்டனிடம் மூத்திரம் குடிக்க
சீக்கிரமாய் வாடா!

பன்றியாய் பிறந்ததனால்
நீ பலமுறை தின்றிருப்பாய்
இந்துவாகத் தோள் தட்டி திண்ணியத்தில்
தேவர் சாதிப் பீ திங்க வாடா!
எடுபட்ட ராமா கோபாலா!
எங்கேடா பி.ஜெ.பீ."


கடவுளை அணுக ஹோல்சேல் உரிமைபெற்ற பார்ப்பன் ஒருவன் கூட இதுவரை ஜோதியில் ஐக்கியமாகாத சரித்திரத்தை நமக்கு நினைவூட்டுகிறது கவிதை.
"சாமி கும்பிடப்போன நந்தன்
சாம்பலாக வெளியே வந்தான்;
குகைக்குள் போன பழனி போகர்
திரும்பவே இல்லை;
அறைக்குள் போன வள்ளலார்
திரும்ப வரவே இல்லை;
வரலாற்றில்
ஒரு பார்ப்பான் கூட ஜோதியில் கலந்ததே இல்லை."


வரலாறு முழுவதும் மாமா தொழில் பார்த்தே பழக்கப்பட்ட பார்ப்பனிய சங் பரிவாரமும், அதன் தலைவன் பார்ப்பன சாதி சங்க தலைவன் ராமன் என்று ரவுடியும், இன்றும் கூட ஏகாதிபத்தியத்திற்க்கு மாமா வேலை பார்த்து பாரத மாதாவையும் அதன் தவப் புதல்வர், புதல்விகளையும் கூட்டி கொடுப்பதை கவிதை எடுத்தியம்புகிறது. சுதந்திர போராட்டத்தில் பிரிட்டிஸ்காரனுக்கு உளவு பார்த்த பாரம்பரியம் அல்லவா?
"எப்பொழுதெல்லாம்
நாம் இழிவுபடுத்தப்படுகிறோமோ
அப்பொழுதெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறது.....
எப்போதெல்லாம்
காவு கொடுக்கப்படுகிறோமோ
அப்போதெல்லாம் ராமனின் நடமாட்டம் தெரிகிறது....

காட் ஒப்பந்தம்
நாட்டை காவு கொண்ட நேரத்தில்
ராமன் ஜென்ம அர்ச்சனை!

இன்று-
அணுசக்தி ஒப்பந்தம்
நாட்டை அடிமையாக்கும் வேளையில்
ராமன் பால பிரச்சினை!"

இது வெறும் சரித்திரமல்ல ''இன்று பலி வாங்குவோம்'' என்று சங் பரிவாரம் போல பொய் தோரணங்கள் கட்ட. இது இன்றும் தொடரும் ராமயணம். நமது அடிமைத்தனத்தின் வரலாறும் இதுதான் இன்றைய நிதர்சனமும் இதுதான் என்பதை கடைசியில் பொட்டில் அடித்தால் போல சொல்லுகிறது கவிதை. வால்மீகி ராமாயணம் முடிந்து கம்ப ராமாயணம் முடிந்து இன்று புதிய அடுத்த ராமாயணம் நடக்கிறது என்று குறிப்பிடுகிறது கவிதை.
"இப்போது நடப்பது
அரசியல் ராமாயணம்
இதில் -
சீதைக்கு ஜெயலலிதா சக்களத்தி
அனுமாருக்கு சோ அண்ணன் முறை
சுக்ரீவனுக்கு விசயகாந்த் சொந்தத் தம்பி
விபீடணனுக்கோ வை.கோ. உடன் பிறப்பு!

இப்போது வருபவன் -
தசரதனுக்குப் பிறந்த ராமனல்ல;
இவன்
தாராளமயம் - தனியார்மயத்துக்குப் பிறந்த
ராமன்."


"உழைத்து வாழும் மக்களை
உழைக்க வேலையின்றி
உண்ணச் சோறின்றி
ஒதுங்க இடமின்றி -
உலகமயக் காண்டீபத்தால்
கொலை செய்யும்
அந்நிய அமெரிக்கா ராமன்களோடு
இந்த அயோத்தி ராமனையும்
சேர்த்து முடிப்போம்!"


புதிய உணர்வுதான் தேவையெனில் இதோ ஒரு கவிதை நூல் படித்து பாருங்கள். இந்த புதிய உணர்வு படுக்கைக்கு அனுப்பும் உணர்வல்ல. இது புரட்சிக்காக நம்மை புத்துணர்வூட்டும் கலை.

அசுரன்

"இந்து என்று சொல்லாதே ராமன் பின்னே செல்லாதே!"
- துரை. சண்முகம்

விலை ரூபாய் 20/-

நூல் கிடைக்குமிடம்:

#1)
ம. லயனல் அந்தோணிராஜ், எம். ஏ.
மதுரை மாவட்டக் கிளைச் செயலாளர்,
HRPC-TN
158, சேதுபதி குறுக்குத் தெரு,
இராமையா தெரு கடைசி,
ஜெய்ஹிந்த் புரம், மதுரை - 11
9443471003

#2)
வழக்கறிஞர் இராஜு, எம்.ஏ., எம்.எல்.
மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC-TN
702, தொடர்வண்டிச் சந்திப்புச் சாலை,
விருத்தாசலம் - 1
04143 260164

#3)
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை,
சென்னை - 600002
044 - 28412367

இது தவிர்த்து,

#4) சென்னை புத்தகக் கண்காட்சி கீழைக்காற்று வெளியீட்டகம் ஸ்டாலிலும் கிடைக்கும்.


Related Article:

Rama.... Rama....

குஜராத் விவசாயிகள் தற்கொலை: இதுதான் இந்துராஷ்டிரம்!

"குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்"

மோடியின் ராம ராஜ்ஜியம்Do we have a choice?

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

வாஜ்பேயிக்கு கட்டாயம் கொடுக்கனும் பாரத ரத்னா!

Friday, May 18, 2007

இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது!

ந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது
கூடத்து மூலையில் கிடந்த
கிழவியின் படுக்கை
திண்ணைக்குப் போனது
கேட்க ஆளின்றி
பாட்டியின் கதைகளும்,அனுபவமும்
பேச்சு மறந்து வீணாய்ப் போனது.

ஆட்டிவிடும்போது
தொலைகாட்சிக்கு
அடிபட்டுவிடும் என்று
குழந்தையின் தொட்டிலும்
கழட்டப்பட்டது முன்வாசலில்
கேபிள் கொடி படர்வதற்கு
இணங்காத
முருங்கையின் கிளை
முறிக்கப்பட்டது.

ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு
ஊறு நேராதவாறு
ஐந்து மணிக்கெல்லாம்
கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது
தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த
சினையாடு
கண்டு கொள்ள ஆளில்லாமல்
வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.

படாத இடத்தில்
தொலைக்காட்சிக்குப்
பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து
பையனின் 'ஒளிந்து பிடித்து'
விளையாட்டும்
வீட்டை விட்டு விரட்டப்பட்டது.

விளம்பர இடைவேளைக்கிடையே
கொஞ்சம் விசாரிப்பு பின்பு
வெடுகென்று முகத்தை திருப்பி
'கோலங்கள்'
குடும்பத்தின் 'கவனிப்பு' தாங்காமல்
சொல்லாமலே ஓடிப்போனான்
சொந்தக்காரன்.
தொலைக்காட்சிப் பூவில்
தேனெடுக்கத் தவித்து
சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து
பரிதாபத்தோடு
'இச்சு' கொட்டியது பல்லி.

மனிதக்குரலற்று வெறிச்சோடிய
வீதியைப் பார்த்துபீதியுற்று
அலறியது தெருநாய்
கதவைத் திறந்து கொண்டு
வந்தவனின்
மனிதக்குரைப்பைக் கேட்டு
நடுங்கிப் போனது நாய்.


"ச்சீ...நல்ல நாடகம் ஓடுறப்ப
இங்க வந்தா கத்துற நாயே...!" என
அடிக்கப் பாய்ந்து வந்த
குடும்பத்தலைவனின் விழிகளில்
இதற்கு முன் இப்படியொரு
வெறித்தனத்தைப்
பார்த்திராத தெருநாய்
உயிர்ப்பிழைத்தால் போதுமென்று
ஊரை விட்டே ஓடியது.

துரை.சண்முகம்

புதிய கலாச்சாரம் மே 2007 இருந்து

நன்றி ஸ்பார்டகஸ்



தொடர்புடைய பதிவுகள் :

" புதிய கலாச்சாரம்" மே 2007

Related Posts with Thumbnails