TerrorisminFocus

Tuesday, July 29, 2008

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

குண்டு வெடிப்புகளின் அரசியல், இது மிக முக்கியமான சமூக ஆய்வு பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக பார்ப்பன இந்து பயங்கரவாதிகள் சமீப காலங்களில் குண்டு வெடிப்புகளின் ஈடுபட்டு பிடிபட்டுள்ளதும். அவை எல்லாமே இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது பலி போடுவதை நோக்கமாக கொண்டிருந்தன என்கிற அம்சமும், இங்கு முக்கியமாக கவனிக்கத்தக்கது. தற்போதைய பெங்களூர் குண்டு வெடிப்புகளும் கூட இந்த கோணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக பெங்களூர் குண்டு வெடிப்புகள் தொழில் நேர்த்தியில்லாத குழுவால் செய்யப்பட்டுள்ளது என்பதும், உள்ளூர் குழுக்கள் செய்துள்ளன என்ற போலீசின் சந்தேகமும் இங்கு கவனிக்கத்தக்கது. இவை நடந்துள்ள மாநிலங்களும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் பார்ப்பன ஊடகங்கள் காட்டிய அவசரமும்(குறிப்பாக டைம்ஸ் ஆப்பு(ஆப்பு இந்தியாவுக்கு) இந்தியா பத்திரிகை) சந்தேகத்தை வரவழைக்கிறது. பெங்களூர் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று முதல் பக்கத்தில் சில சந்தேகங்களை எழுப்பியிருந்தது டைம்ஸ் ஆப்பு இந்தியா. அதில் அங்கு சமீபத்தில் நடந்த மசூதியில் பன்றி மாமிசம் வீசப்பட்ட சம்பவத்திற்கு பலி வாங்குவதாக இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று பொறி பற்ற வைக்கப்பட்டிருந்தது. விசாரணை ஆரம்பிக்கக் கூட இல்லை, ஆனால் தீர்ப்புக்கான நகல் எழுதப்பட்டுவிட்டது. வெடித்த குண்டுகள் IED வகை Crude வெடி குண்டுகள். இதே வடிவத்திலான குண்டு வெடிப்புகள்தான் மாலேகான் மசூதி குண்டு வெடிப்பு உள்ளிட்ட சமீபத்திய சில மசூதி குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பஜ்ரங் தள் பார்ப்பன பயங்கரவாதிகள் கடந்த சில வருடங்களில் கைது செய்யப்பட்டுள்ள குண்டு வெடிப்புகள் இதே வகையைச் சேர்ந்தவை என்பதும் கவனிக்கத்தக்கது.
பெங்களூரில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் எல்லாமே மக்கள் அதிகம் கூடும் இடத்தில், மக்கள் வராத பகுதியாக வைக்கப்பட்டிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. சமீபத்திய காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தோல்வியடைந்துள்ளதும், அதன் உறுப்பினர்கள் மாற்றி வோட்டு போட்டிருந்ததும், இவை பாஜகவின் இமேஜை பெரிய அளவில் டேமேஜ் செய்துள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. மன்மோகனை ஆட்சிக் கட்டிலில் உறுதிப்படுத்த அமெரிக்க ஆளும் கும்பல் இங்கு பஞ்சாயத்து செய்திருக்கலாம் என்பதும், பாஜகாவின் உடன்பாடு அதில் கோரப்பட்டிருக்கலாம் என்பதும் ஒரு அம்சமாக இருந்த போதும், பாஜகாவின் இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது நிதர்சன உண்மை. ஆகவே, மீண்டும் தேச வெறி பிரச்சாரம் செய்ய வேண்டிய நிர்பந்தம் அந்த கட்சிக்கு ஏற்ப்பட்டுள்ளது. இந்த விசயத்தை குண்டு வெடிப்புகளின் அரசியல் குறித்த மிகப் பெரிய உண்மை ஒன்றுடன் ஒப்பிட வேண்டியுள்ளது. குண்டு வெடிப்புகளின் அரசியலால் ஆதாயம் அடைவது என்றைக்குமே ஆளும் ஒடுக்குமுறை கும்பல்தான். இந்தியாவில் அது பாஜகாதான். குஜராத்திலும் கூட தொடர்ந்து பயங்கரவாத பீதியை உற்பத்தி செய்வதற்க்கு மோடி செய்த நாடகங்கள் வெட்ட வெளிச்சமானதை இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

நிற்க, இவையெல்லாம் ஒரு சம்பவம், அதன் அரசியல் குறித்த உண்மையின் பல்வேறு கோணங்களை, உறவுகளை பார்க்க உதவுவததற்க்காக இங்கு சொல்லப்பட்டுள்ளவைதானேயன்றி எதுவும் அறுதியிட்டுக் கூறப்படவில்லை. அப்படி அறுதியிட்டு கூறுவதற்க்கு அத்வானி, மோடி போன்ற அணைத்தும் தெரிந்தவர்கள் அல்ல கம்யூனிஸ்டுகள். அத்வானி, மோடி கும்பலிடம் இருப்பது போல அதி உன்னத ஜோசிய கும்பல் எதுவும் கம்யுனிஸ்டுகளிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு கீழே குண்டு வெடிப்புகளின் அரசியல் குறித்த ஒரு விரிவான கட்டுரை வினவு தளத்திலிருந்து மறு பிரசூரம் செய்யப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புகள் யார் செய்தனர் என்ற ஆய்வு செய்வதை விட அதன் பாரிய வெகு மக்கள் விரோத அரசியலையும், அது யாருக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது என்கிற அம்சத்தையுமே பிரதானமாக விவரித்து இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. படித்து பாருங்கள்.
__________________________________________________________

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!
vinavu எழுதியது

மாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன. உற்றாரைப் பலிகொடுத்த உறவினரின் சோகம் பத்திரிகைகளில் படிமங்களாக, குண்டுவெடித்த இடங்களை வழக்கமாக பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்களின் பயணமாக, வெடித்த இடத்தில் பதட்டமாக இருக்கும் வாழ்க்கை வெடிக்காத இடங்களில் சகஜமாக, அடுத்த பரபரப்புச் செய்திகள் வரும்வரை குண்டு வெடிப்பை தொலைக்காட்சிப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் அலைவரிசைகள், விளம்பர இடைவெளிகளில் மகிழ்ச்சியாக, மொத்தத்தில் நாடு வழமையாகவே இயங்குகிறது. முன்புபோல நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வலிமையினை இப்போது அடிக்கடி வெடிக்கும் குண்டுகள் இழந்துவிட்டன. பொழுதுபோக்குகளில் மையம் கொள்ளும் இன்றைய நுகர்வுக் கலாச்சார வாழ்க்கை சமூக நிகழ்வுகளை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்குத் திறமையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. குண்டுகள் வெடிப்பதற்குப் பிந்தைய விளைவுகளின்பால் அனுதாபமோ, வெடிப்பதற்கு முந்தைய அரசியலின்பால் கவனமோ அற்றுப்போய்விட்டதனால் இப்போது குண்டுகள் மலிவாக வெடிக்கின்றன. எனினும் குண்டுகள் வெடிப்பதற்குக் காரணம்தான் என்ன?
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனாதைப் பிணங்களை சடங்குக்காக அறுத்து நீதிமன்றத்திற்காகப் பதிவு செய்து யாரும் கோருபவர் இல்லாமல் எரிக்கப்படுவது போல குண்டு வெடிப்பின் அலசல்கள் அரசியல் அரங்கிலும், ஊடகவெளியிலும் உயிரின்றி பேசப்படுகின்றன. அண்ணாசாலையில் தொழிலாளி ஊர்வலம் சென்றால் அதைப் போக்குவரத்திற்கு இடையூறு என்று இந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் நடுத்தரவர்க்க அறிவாளிகள் போல குண்டுவெடிப்பைத் தடுப்பதற்கு பலரும் ஆலோசனைகளை இலவசமாக வழங்குகின்றனர். போலீசின் அலட்சியம், உளவுத்துறையின் குறைபாடு, பலவீனமான மத்திய அரசு, குண்டு வைப்பவர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்காதது, பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் சதிகளை முறியடிக்காதது என்று நீளும் இந்தப்பட்டியல் ஆத்திச்சூடி அறஞ்செய விரும்பு போல மக்களிடம் மனப்பாடமாய் இறக்கப்பட்டிருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தையை தூக்கத்தில் எழுப்பி தீவிரவாதத்திற்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் கூட அழகாய் ஒப்புவிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் குண்டு வெடிப்பு நிகழ்கிறுது என்றாலும் இது தேசத்திற்கெதிரான போர் என்று முழங்கும் அத்வானி பொடா போன்ற கடுமையான சட்டங்களை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிறார். புரட்சித் தலைவியும் அதனை வழிமொழிகிறார். ஈழத்தமிழர்களை ஆயுள்தண்டனை கைதிகளாக முகாம்களில் அடைத்து கண்காணிப்பது போல வங்கதேச அகதிகளை கண்காணிக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது தினமணி. நாடாளுமன்றத் தாக்குதலுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி அப்சல்குருவை இன்னும் தூக்கில் போடாதது தீவிரவாதிகளுக்கு குளிர் விடச்செய்திருக்கிறது என்கிறார் ஒரு தலைவர். உதட்டளவிலோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, உள்ளத்தில் இருக்கும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பினாலோ பேசப்படும் இந்த போதனைகளால் குண்டுகள் அழிந்துவிடுமா?
குண்டுகள் இந்த வெற்றுப்பேச்சினை சட்டை செய்வதில்லை. ஓரிடத்தில் குண்டுவெடிப்பது ஏதோ தீபாவளி பட்டாசு வெடிப்பது போல, ஹாலிவுட் படத்தில் நிகழ்வது போல அவ்வளவு சுலபமில்லை. அதிரடிக்காட்சிகளை நொறுக்குத்தீனியாக மனதில் பதியவைத்திருக்கும் திரைப்பட-தொலைக்காட்சி உணர்ச்சி, உண்மைக்கும் கற்பனைக்குமான வேறுபாட்டை, நிஜத்தின் வலியை உணர்த்துவதில்லை. உண்மையில் குண்டு வைப்பதற்கு இரும்பு மனம் கொண்ட நபர்கள், அதுவும் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலுடன், பிடிபட்டால் போலீசின் சித்திரவதைக்கும், நீதிமன்றத்தின் மரணதண்டனைக்கும் பயப்படாத நெஞ்சுரத்துடன் வேண்டும். இந்த மன உறுதியை வைத்து இவர்கள் வாழ்க்கை முழுவதும் கொள்கைக்காக களமிறங்குபவர்கள் என்று பொருளல்ல. இது குறிப்பிட்ட சமூகக் காரணத்தால் கணநேரத்தில் வந்துபோகும் சாகச உணர்வு. குறிப்பிட்ட நடவடிக்கையின் காலம் வரைக்கும் மனதில் இருக்கும் தற்கால உறுதியால் நினைத்ததை முடிக்கும் வல்லமையினை இவர்கள் பெறுகிறார்கள். அதே சமயம் இவற்றை தனிநபராக இருந்து மட்டும் செய்ய முடியாது. இரகசியமாய் பணம் திரட்டுவது, பொருட்களை சேகரிப்பது, தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வது, ஆயுதங்களை சோதித்தறிவது, இரகசிய இடங்களை உருவாக்குவது, எல்லாவற்றுக்கும் உதவி செய்யும் ஆதரவாளர்களை அணிசேர்ப்பது வரை பல தயாரிப்புகள் வேண்டும். இலட்சியத்தின்பால் இருக்கும் உறுதியுடன் கூடவே அப்பாவி மக்களை கொல்லுவது குறித்த இரக்கமின்மையும் கணிசமாக வேண்டும். ஆனாலும் சங்கபரிவாரங்களால் அடுத்த பிரதமராக முன்னிறுத்தப்படும் அத்வானி இரும்புக் கரம் கொண்டு குண்டுகளை அடக்கமுடியுமென வன்மையாக எடுத்துரைக்கிறார். அதன்படி குண்டுகளை அடக்க முடியுமா?அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே பொடா சட்டமும், அதில் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுவதும், வங்கதேச ஏழை அகதிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விரட்டப்படுதும், இசுலாமிய அமைப்புகள் பல தடைசெய்யப்பட்டதும் என ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனையோ செய்து பார்த்தும் குண்டுகள் மறையவில்லையே! சொல்லப்போனால் இந்த இரும்புக்கர நடவடிக்கைகள் குண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. எனில் இந்த சட்டதிட்டங்களை தகர்த்தெறியும் வலிமையினை குண்டுகள் எங்கிருந்து பெற்றன?
குண்டுகள் அந்த வலிமையினை வரலாற்றின் அநீதியிலிருந்து பெற்றுக்கொண்டன. குண்டுகளினுள் பொதியப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களின் வீரியத்தினைவிட சமகால வரலாற்றின் வீரியம் அதிகமானது. குண்டுகள் தன்னளவில் இயல்பாக வெடித்துவிடுவதில்லை. கூர்ந்து நோக்கினால் அவை வரலாற்றின் விளைபொருட்கள்! 1992 பம்பாய் கலவரத்திற்கு பிந்தையதுதான் 1993 பம்பாய் குண்டுவெடிப்பு! 2002 குஜராத் கலவரத்திற்கு பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு! 1996 கோவை கலவரத்திற்கு பிந்தையதுதான் 1999 கோவை குண்டுவெடிப்பு! இந்த சங்கிலித் தொடர் நிகழ்வின் தீர்மானிக்கும் கண்ணியாக கலவரங்கள் இருக்கின்றது. இருதரப்பார் அடித்துக்கொள்வதுதான் கலவரம் என்பதன் இலக்கணமாக இருக்கும்போது அவற்றைக் கலவரங்கள் என அழைப்பது பொருத்தமற்றது. சரியாகச் சொல்வதானால் அவை இந்துமதவெறியர்களால் தொடுக்கப்பட்ட போர்! இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை! இவற்றின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டால் குண்டுகளின் தோற்றுவாயை அறிந்து கொள்ள இயலுமா?
நிச்சயம் முடியும். 91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது. அதன் உச்சம் பம்பாய் கலவரமாக வெடித்தது. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே தனது சாம்னா பத்திரிகையின் மூலம் இசுலாமிய மக்களை அடித்து விரட்டுமாறு கட்சிக் குண்டர்களுக்கு ஆணையிட்டார். போலீசு உதவியுடன் இசுலாமிய குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டன. இந்த உண்மைகளை எடுத்துக்கூறி குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை இன்றைக்கு குப்பைத்தொட்டியி்ல் தூங்குகிறது. ஒரு வேளை நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களைக் கொன்ற சிவசேனா வெறியர்களை தண்டித்திருந்தால் பின்னர் பம்பாயில் குண்டுகள் வெடிக்காமலே போயிருக்கலாம். ஆனால் ஒருவேளை என்ற சொல்லை வரலாற்றை பரீசீலிப்பதற்கு பயன்படுத்தலாமே ஒழிய வரலாற்றை மாற்றிப்போட்டு கற்பனை செய்வதற்கு இடம் கிடையாது. இன்று பம்பாய் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களில் பல அப்பாவிகள் நிரபராதியாக பல வருடங்களாக சிறையில் கழித்தார்கள். எனினும் பம்பாய் கலவரக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பதோடு வழக்கே நடைபெறவில்லை. கலவரங்களுக்கு சலுகை! குண்டுகளுக்கு தண்டனை! எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும். 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நரோடா பாட்டியாவின் சவக்கிடங்கு, கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்ட காட்சி, பெஸ்ட் பேக்கரியின் 17பேரை உயிரோடு எரித்த சம்பவம், இரத்தக் கவிச்சி அடிக்கும் வெறியுடன் இந்து மதவெறியர்கள் சம்பவங்களை குதூகலத்துடன் தெகல்காவின் கேமராவில் வருணித்த ஆதாரம், முடிவில்லா குஜராத்தின் இனப்படுகொலைப் படிமங்கள் உணர்ச்சியுள்ள எவருக்கும் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. ஆனால் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்காக, செய்யாத குற்றத்திற்காக பல அப்பாவி முசுலீம்கள் சிறையில் வாடும்போது இனப்படுகொலை செய்த இந்து மதவெறிக் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். குண்டுகள் செய்யும் இரகசிய ஏற்பாடுகளெல்லாம் இந்து மதவெறியர்களுக்கு தேவையில்லை. குஜராத்தில் அவர்கள் நடத்திய நரவேட்டைக்கான துப்பாக்கிகள், குண்டுகள், ஆயுதங்கள், எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாக இறங்கின. குண்டுகளின் ஏற்பாடுகளை சதிகள் எனப்பார்க்கும் பொதுப்புத்தி இந்துமதவெறியர்களின் ஏற்பாடுகளை கலவரங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாகப் பார்க்கின்றது. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
கோவையில் காவலர் செல்வராசு கொலைசெய்யப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட முசுலீம் மக்கள் கொலைசெய்யப்பட்டு பல கோடி மதிப்பிலான இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோவை சங்கபரிவார ரவுடிகளை கைது செய்து தண்டிக்க முடியாத இந்த சமூக அமைப்பு கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து தண்டித்திருக்கிறது. அதிலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பல வருடங்களை சிறையில் கழித்து விட்டு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குற்றமின்றி தண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு மனைவியையும், குழந்தைகளையும் நிர்க்கதியில் தவிக்கவிட்டு வாழ்வைத் தொலைத்திருக்கும் இந்த சாதரண மனிதர்களுக்கு இந்த சமூக அமைப்பின் மேல் எத்தனை பெரிய கோபம் இருக்கும்? இவர்கள் எவரும் படித்து வசதியாக வாழும் நடுத்தரவர்க்கத்தினரோ, இசுலாமிய மதத்தின் பால் ஆழ்ந்தபிடிப்போ, வெறியோ, இந்துக்களின் மீது விரோதமோ கொண்டவர்கள் அல்லர். இவர்களின் நெஞ்சில் வஞ்சினத்தை ஏற்றுவதற்கு ஐ.எஸ்.ஐ தேவையில்லை. அது உண்மையுமில்லை. இரக்கமற்று தனிமைப்படுத்தும் சமூகத்தின் காரணத்தால் இந்த இளைஞர்களின் அவலம் குண்டுகளாக பரிமாணம் கொள்கின்றன. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
இந்து மதவெறியர்கள் இந்தியாவில் நடத்தியிருக்கும் கலவரங்களில் பதிவு செய்திருக்கும் கொலைக்கணக்கும், பொருள் இழப்பும் அளவில் குண்டுகளை விட பலநூறு மடங்கு அதிகம்தான். ஆனால் அவை பொதுவில் தீவிரவாதிகள் செய்த குற்றமென்று மதிப்பிடப்படுவதில்லை. பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சிறு கும்பலான சங்கபரிவாரம் செய்யும் அநீதிக்கான அங்கீகாரம் பெரும்பான்மையின் மவுனத்தில் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் எல்லா இந்துக்களும் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடி மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மவுனம் அநீதியை மறுக்கவில்லை. அதுவே அநீதியின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் விளைவால் உண்மையான தீவிரவாதிகளான இந்துமதவெறியர்கள் பொது அங்கீகாரத்துடன் எல்லாக் கட்சிகளைப்போல ஒரு கட்சியாக இயங்குகிறார்கள். சமூகநீதி, திராவிடம் பேசும் எல்லா கட்சிகளும் இந்து மதவெறியர்களுடன் தேர்தல் கூட்டணி வைப்பது முதல் அரசில் பங்கேற்பது வரை முரணின்றி செய்கின்றன. இந்தியாவின் பொதுவாழ்வில் இந்து மதவெறியர்கள் அதிகாரத்துடன் ஆணவமாக நடந்து கொள்வதற்கு இத்தனை சலுகைகள் இருக்கும்போது குண்டுகளுக்கான முயற்சிகள் எங்கோ இரகசியமாக நடந்து கொண்டுதானே இருக்கும்?
குண்டுகள் உருவாதற்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டு குண்டுகள் மட்டும் வேண்டாம் என்று நினைப்பதி்ல் பயனொன்றும் இல்லை. இந்திய அரசியல் அரங்கில் இந்துமதவெறிச் சக்திகள் கறுவருக்கப்படாதவரை குண்டுகளையும் கருவறுக்க முடியாது. மதசார்பாற்ற அரசியல் அதன் உண்மையான பொருளில் அமலுக்கு வராதவரை குண்டுகள் வந்து கொண்டே இருக்கும். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வெல்லும்வரை குண்டுகள் தோல்வி அடையப்போவதில்லை. ஆகையால் குண்டுகளை நாம் நியாயப்படுத்துகிறோமா?
குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி. அதாவது இந்துமதவெறியர்களின் கோரப்பிடியிலிருந்து இசுலாமிய மக்களை பாதுகாப்பதில் குண்டுகள் தோல்வியடைவதோடு உண்மையில் பாதுகாப்பின்மையைத்தான் அதிகப்படுத்தியிருக்கின்றன. குண்டுகளின் முக்கியமான விளைவுகளே இந்துமதவெறியை வலுப்படுத்துவதும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துவதும்தான். தற்போதைய குண்டுவெடிப்புகளில் கூட இந்துமதவெறியர்கள் எவரும் சாகவில்லை என்பதோடு அப்பாவி உழைக்கும் மக்கள்தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிர்கால குண்டுவெடிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாநகரங்களில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசு உழைக்கும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இப்படி குண்டுகள் வெடித்தால் நிச்சயமாக கொல்லப்பட இருக்கின்ற உழைக்கும் மக்கள்தான் உண்மையில் பார்ப்பன இந்துமதவெறியால் ஏற்கனவே அடிமைகளாக நடத்தப்படுவர்களாகவும், வர்க்க ரீதியில் இந்துமதவெறியர்களை வீழ்த்துவதற்கான சக்தியாகவும் இருக்கின்றனர். குண்டுகள் இந்த மக்களைத்தான் இந்துமதவெறியர்களின் கைகளில் எளிதாக மாற்றித் தருகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் வாழ்க்கைப் போராட்டத்தால் கவலையில் உழன்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களை இரக்கமின்றி கொல்லும் குண்டுகளில் பாசிச மனமும் கலந்திருக்கிறது. மறுபுறம் தமது எதிர்வரிசையில் எல்லாப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்கும் வேலையையும் குண்டுகள் அடி முட்டாள்தனமாக செய்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க குண்டுகளால் இசுலாமிய மக்களுக்கு என்ன பாதிப்பு?
ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும் எண்ணிறந்த பாதிப்புகளை இசுலாமிய மக்கள்தான் எதிர்கொள்கின்றனர். குண்டுகளின் அரசியலுக்கு கடுகளவும் தொடர்பில்லாத அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் இருப்பதும், இசுலாமிய மக்கள் அனைவரையும் பொதுச்சமூகம் தீவிரவாதிகளாக பார்ப்பதும், இதன் தொடர் விளைவாக இசுலாமிய மக்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை, கல்வி இல்லை, வேலை இல்லை மொத்தத்தில் மதிப்பு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்படுகிறது. இதையே இந்துமதவெறியர்கள் பிரச்சாரத்தின் மூலம் செய்வதை குண்டுகள் தமது வெடிப்பின் மூலம் செய்கின்றன. யாரை எதிர்த்து உருவனதோ அவர்களுடன் எதிர்மறையில் ஒன்றுபடுவதுதான் குண்டுகளின் தர்க்கரீதியான முடிவு. வெடிமருந்தின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் குண்டுகள் வெகுஜன அரசியல் நடவடிக்களுக்காக பொறுமையுடன் ஈடுபடுவதில்லை. பொறுமையிழந்து அவசர அவசரமாக வெடிக்கும் குண்டுகள் நீண்டகால நோக்கில் இசுலாமிய மக்களைத்தான் காவு கேட்கின்றன. குண்டுகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் என்ன தொடர்பு?
குண்டுகளின் தோற்றுவாயை சமூக நிலைமைகளே தோற்றுவிக்கின்றன என்ற போதிலும் குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குண்டுகள் தாம் இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கும் புனிதப்போரில் ஈடுபட்டிருப்பதாக நம்புகின்றன. இதை பல இசுலாமிய சமுதாயப் பெரியோர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் குண்டுகள் தாம்தான் உண்மையான இசுலாமியர்கள் என்று கற்பித்துக் கொள்கின்றன. ஆனால் உலக வரலாறு நெடுகிலும் இந்தக் கற்பிதம் பொய்யென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இசுலாமிய மதம் ஒரு தீர்வாக அமைய முடியாது. கூடவே உலகில் இசுலாமிய மதத்தை உண்மையாக பின்பற்றும் நாடு எதுவும் கிடையாது, அப்படி இருக்கவும் முடியாது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை. இசுலாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பாக்கிஸ்தானில் சன்னி, ஷியா பிரிவுகளிடையே மசூதியில் குண்டு வைத்துக் கொல்லும் அளவுக்கு பிளவு இருப்பதும், ஷரியத்தின் சட்டதிட்டங்களை கறாராக பின்பற்றும் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் விசுவாசிகளாக இருப்பதும், ஏழை இசுலாமிய மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்த பணஉதவி செய்யும் அரபு ஷேக்குகள் தனிப்பட்ட வாழ்வில் களிவெறியாட்ட பொறுக்கிகளாக இருப்பதும் இந்த உண்மைகளை எடுத்தியம்பும். ஆனால் குண்டுகள் இந்த யதார்த்த்த்தை மறுப்பதுடன் கற்பனையான மத உலகை சித்தரித்துக்கொண்டு வாழ முயல்கின்றன. எனில் குண்டுகளின் எதிர்காலம் என்ன?
எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது. சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது. அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது. இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.

நன்றி வினவு

Related Articles:

கோவை குண்டு வெடிப்பு சதி ஒரு பொய்யான நாடகம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி!!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

"கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!"

"கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை"

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

Friday, July 18, 2008

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்!

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!
புதிய கலாச்சாரம்
Wednesday, 16 July 2008 21:22

1967இல் நக்சல்பாரி பேரெழுச்சியின்போது ஆளும் வர்க்கத்தின் கேடயமாகச் செயல்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி, கடந்த 30 ஆண்டுகளில் ஆளும் வர்க்கத்தின் வாளாகப் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது. நந்திகிராம் அதற்கு ஒரு நாடறிந்த எடுத்துக்காட்டு. மார்க்சிஸ்டுகளின் துரோகத்தை எங்கெல்லாம் மக்கள் எதிர்க்கிறார்களோ, எங்கெல்லாம் புரட்சியாளர்களின் அரசியல் நடவடிக்கைகளால் இவர்கள் அம்பலமாகிறார்களோ அங்கெல்லாம் அரசியல் படுகொலைகளை நிகழ்த்த மார்க்சிஸ்டுகள் தயங்குவதில்லை. விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு கிராமத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணியின் செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து தனிமைப்பட்டுப் போன மார்க்சிஸ்டு கட்சிக் காலிகள் அங்கே ஒரு அரசியல் படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

கடந்த ஜூன் 20ஆம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் காரப்பட்டு இராசேந்திரன் (45) கொலை செய்யப்பட்டார். அரிவாளும் இரும்புத் தடிகளும் ஏந்திய சுமார் 16 பேர் கொண்ட கொலைக்கும்பல், நிராயுதபாணியான இராசேந்திரனைச் சுற்றி வளைத்துக் கொண்டு வெட்டிக் கொலை செய்திருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என விவசாயிகள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் அனைவரையும் அந்தக் கொலைவெறிக் கும்பல் தாக்கியிருக்கிறது. வீடுகளைச் சூறையாடி, நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்திருக்கிறது.

இந்தப் படுகொலை தற்செயலாக நிகழ்ந்து விடவில்லை. மொத்தத் தாக்குதலையும் மார்க்சிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைமை திட்டமிட்டு ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறது என்பதை நடைபெற்றுள்ள சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

காரப்பட்டு கிராமத்தின் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பில் பெரும்பான்மையினர் வி.வி.மு.வைச் சேர்ந்தவர்கள். மார்க்சிஸ்டு கட்சிக்கு ஆதரவான சுமார் 20,30 குடும்பங்கள் சற்றுத் தள்ளியிருக்கும் மேட்டுத்தெரு என்ற பகுதியில் வசிக்கின்றனர். இதே மேட்டுத் தெருவிலும் வி.வி.மு. விற்குப் பல ஆதரவாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வி.வி.மு. தோழர்களைத் தாக்குவதோ கொலை செய்வதோ கடினமென்பதால் உரிய தருணத்திற்காகக் காத்திருந்திருக்கின்றனர் மார்க்சிஸ்டு குண்டர்கள்.

வி.வி.மு.வுக்கு ஆதரவான கூலி விவசாயிகள் கரும்பு வெட்டும் வேலைக்காக ஒரு வாரம் பத்து நாட்கள் வெளியூர் செல்வது வழக்கம். ஜூன் 19ஆம் தேதியன்று அவர்களில் சுமார் 30 பேர் கரும்பு வெட்டும் வேலைக்காக வெளியூர் கிளம்பி விட்டனர். எப்போது கிளம்புவார்கள் என்று காத்திருந்த மார்க்சிஸ்டு கொலைகாரர்கள், வி.வி.மு.வின் அமைப்பாளர் ஏழுமலையை 20ஆம் தேதியன்று கொலை செய்வது என்று முடிவு செய்திருக்கின்றனர். வீடுகளில் ஆட்கள் அதிகமில்லாத மாலை நேரத்தையும் அதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். எந்த இடத்தில் கொல்வது என்றும் திட்டமிட்டு அந்த இடத்தை நோக்கி ஏழுமலையை இழுப்பதற்காகவே ஒரு நாடகத்தையும் அரங்கேற்றியிருக்கின்றனர்.

மாலை சுமார் 5 மணியளவில் மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த வெங்கடேசன், ராமு ஆகியோர் தங்களது கொடிக்கம்பத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு தெருவில் போய்க்கொண்டிருந்த பாலு என்ற வி.வி.மு. ஆதரவாளரின் மகனிடம் வம்பிழுத்து அவரைத் தாக்கியிருக்கின்றனர். அருகாமை வீட்டிலிருந்த ஒரு பெண் இதனைப் பார்த்துக் கூச்சலிட்டிருக்கிறார். கூட்டம் கூடிவிட்டது.

வெங்கடேசன் ரவுடித்தனமாக நடந்து கொள்ளவே கைகலப்பாகியிருக்கிறது. மறுகணமே மயங்கி விழுந்ததைப் போல நடித்திருக்கிறான் வெங்கடேசன். அச்சமயம் வேறோரு வேலையாக மேட்டுத் தெருவிற்குச் சென்றிருந்த ஏழுமலை, சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு உடனே அந்த இடத்தை நோக்கி விரைந்திருக்கிறார்.
மேட்டுத்தெருவில் ஏழுமலையை வெட்ட முயன்றால் அங்கிருக்கும் வி.வி.மு. ஆதரவாளர்கள் தடுத்து விடுவார்கள் என்பதால், அவர் வரும் பாதையில் உள்ள ஒரு ஆளில்லாத இடத்தைக் கொலைக்களமாகத் தெரிவு செய்து, அங்கே சுப்பராயன் என்ற மார்க்சிஸ்டு கட்சிக்காரனின் வீட்டில் ஆயுதங்களுடன் தயாராகக் காத்திருந்த கொலைக் கும்பல், ஏழுமலை வருவதைப் பார்த்ததும் கையொலி எழுப்பி "சிக்னல்' கொடுத்திருக்கின்றது. அதுவரை மயங்கியவனைப் போல நடித்த வெங்கடேசன் உடனே எழுந்து ஏழுமலையை நோக்கி ஓடிவர, கொட்டகையில் பதுங்கியிருந்த கும்பலும் வீச்சரிவாள், இரும்புத் தடிகளுடன் ஏழுமலை மீது பாய்ந்தது.

10 பேர் ஆயுதங்களுடன் சுற்றி வளைக்கவே, தற்காப்புக்காக வயலில் குதித்து கையிலிருந்த சிவப்புத் துண்டை வீசி மக்களை அழைத்தபடியே தன்னுடைய தெருவுக்கு வந்து சேர்ந்திருக்கிறார் ஏழுமலை. மக்கள் ஆத்திரத்துடன் திரண்டு விட்டனர். ஏழுமலை வீட்டுக்கு 3 வீடு தள்ளிக் குடியிருக்கும் இராசேந்திரன், ""வெட்டுக் குத்தெல்லாம் வேண்டாம், நான் போய் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன்'' என்று நிராயுதபாணியாக அந்தக் கொலைக்கும்பலை நோக்கி, தடுத்தும் கேளாமல், ஓடியிருக்கிறார். ஏழுமலையின் மகனும், மல்லிகா என்ற பெண்ணும், அவரது மகனும், சிறுவர்களும், மூதாட்டிகளும், பிறரும் அவரது பின்னாலேயே ஓடியிருக்கின்றனர்.

சமாதானம் செய்வதற்காக இராசேந்திரன் கைகளை உயர்த்த, அந்தக் கைகளைக் கண்ட துண்டமாக வெட்டியிருக்கின்றனர். பிறகு அவர் தலையில் இறங்கியது அரிவாள். அடுத்து மல்லிகாவின் மகனை வெட்டுவதற்கு அந்தக் கும்பல் அரிவாளை ஓங்கியவுடன், ஆனது ஆகட்டும் என்று அரிவாளைத் தடுத்துப் பிடுங்கியிருக்கிறார் மல்லிகா. உடனே இரும்புக் குழாயினால் ஏழுமலையின் மகனைத் தாக்கியிருக்கின்றனர். 6 வயது சிறுவன், 13 வயது சிறுமி, 65 வயது மூதாட்டி.. என யாரும் அவர்களுடைய தாக்குதலுக்குத் தப்பவில்லை. இதற்குள் ஏழுமலையுடன் மக்கள் கூட்டம் வருவதைக் கண்டு ஓட்டம் பிடித்திருக்கிறது அந்தக் கொலைக்கும்பல்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இராசேந்திரனை உடனே ஒரு கட்டிலில் கிடத்தி அங்கிருந்த தோழர்கள் துணையுடன் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல முயன்றிருக்கிறார் ஏழுமலை. தூக்கிச் சென்ற அந்தத் தோழர்கள் மீதும் ஒளிந்து கொண்டு கல்லெறிந்திருக்கிறார்கள் அந்தப் பேடிகள். எதிர்த்தாக்குதல் தொடுத்தபடியே இராசேந்திரனை விழுப்புரம் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள் தோழர்கள்.

அவர்கள் ஊரிலிருந்து அகன்ற மறுகணமே அருகாமையில் உள்ள அரசூரில் தயாராகக் காத்திருந்த தங்களது ஆட்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தது அந்தக் கொலைக்கும்பல். அங்கிருந்து 2 ஷேர் ஆட்டோக்களில் வந்திறங்கிய மார்க்சிஸ்டு காலிகள், மேட்டுத் தெருவில் இருந்த வி.வி.மு. ஆதரவாளர்களின் வீடுகளில் புகுந்து அங்கிருந்த முதியவர்களையும் பெண்களையும் தாக்கியிருக்கின்றனர். வீடுகளை அடித்து நொறுக்கியதுடன், 27 பவுண் நகைகள், சிறுமிகளின் கொலுசுகள், சுமார் ரூ. 50,000 பணம், டி.வி., சூட்கேஸ் போன்ற பொருட்களனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர்.

இந்தக் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் உள்ளூர் செயலர் ராசுக்கண்ணு உள்ளிட்ட கொலைகாரர்கள் தப்பித் தலைமறைவாகி விட்டனர்.

வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் தம்மைத்தாமே காயப்படுத்திக் கொண்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே தயாராகக் காத்திருந்த மார்க்சிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலர் ஆனந்தன், அவர்களை ஆஸ்பத்திரியில் படுக்கவைக்க ஏற்பாடு செய்துவிட்டு, "வி.வி.மு. ஆட்கள் 10 பேர் தங்களது தோழர்களைக் கொலை செய்ய முயன்றதாக' முன்கூட்டியே தயாராக எழுதி வைத்திருந்த பொய்ப்புகாரை முதல் புகாராகத் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்திலும் கொடுத்திருக்கிறார்.

விழுப்புரம் மருத்துவமனை கைவிரித்து விட்டதால், அபாயகரமான நிலையில் சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இராசேந்திரன், வழியில் திண்டிவனத்திலேயே இறந்துவிட்டார்.

இச்செய்தியறிந்த மக்கள், மார்க்சிஸ்டு காலிகளின் வீடுகளை நோக்கிக் கூட்டமாகச் சென்றிருக்கின்றனர். ஆனால் அங்கே யாரும் இல்லை. ஓடிப்போன அந்தக் கிரிமினல்கள் தமது வீடுகளைத் தாமே சேதப்படுத்தி பொய் வழக்குக்கான தடயத்தையும் உருவாக்கி வைத்துவிட்டே ஓடியிருந்தனர். சிறிது நேரத்தில் "அமைதியை' நிலைநாட்ட பெரும் போலீசுப் படை அங்கே குவிக்கப் பட்டுவிட்டது.

···

கொலை செய்யப்பட்ட இராசேந்திரன் ஒரு பண்ணையாரோ, பணக்காரரோ, சமூக விரோதியோ அல்ல. அவர் ஒரு கரும்பு வெட்டும் தொழிலாளி. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். 5 பெண் பிள்ளைகளையும், ஒரு மூளை வளர்ச்சி குன்றிய ஆண் பிள்ளையையும் பெற்றுவிட்டு அவர்களை ஆளாக்குவதற்காக உழைத்துத் தேய்ந்து கொண்டிருந்த ஒரு சாதாரண ஏழை விவசாயி. எல்லாக் கட்சியினருடனும் சுமுகமாகப் பழகும் இயல்புள்ளவர்.

அவர் துவக்கம் முதலே விவசாயிகள் விடுதலை முன்னணியில் இணைந்து செயல்பட்டார். பின்னர் சொந்தக் காரணங்களுக்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் வி.வி.மு.விலிருந்து விலகினார். சிறிது காலம் கழித்து தே.மு.தி.க.வில் இணைந்தார். இருப்பினும் உள்ளூர்ப் பிரச்சினைகளில் வி.வி.மு. வின் நடவடிக்கைகளை ஆதரித்து வந்தார். தனிப்பட்ட முறையிலும் நியாயமானவர் என்ற நற்பெயரை மக்கள் மத்தியில் பெற்றிருந்தார்.

வி.வி.மு. வை ஆதரித்தார் என்ற ஒரு குற்றத்துக்காகப் பண்ணையார்களோ சாதி ஆதிக்க வெறியர்களோ கூட ஒருவரை சர்வசாதாரணமாக இப்படிப் படுகொலை செய்துவிடுவதில்லை. ஆனால் கொலை செய்வதற்கு இந்த ஒரு காரணமே போதுமானதென்று மார்க்சிஸ்டுகள் கருதியிருக்கிறார்கள்.

கொலைக் குற்றவாளியான வெங்கடேசனுக்கு வேலையும் வாங்கித் தந்து, பெண் பார்த்துத் திருமணமும் செய்து வைத்தவர்தான் இராசேந்திரன். அந்த உரிமையில் அவனைக் கண்டித்துத் திருப்பி அனுப்ப முடியும் என்று அவர் திடமாக நம்பியிருக்கிறார். ஆனால் அந்த நம்பிக்கை பொய் என்பது முதல் வெட்டு விழுந்த பின்னர்தான் அவருக்குப் புரிந்திருக்கிறது. ""அஞ்சு பொம்பளப் புள்ளங்கடா, வேணாண்டா, என்ன வெட்டாதீங்கடா'' என்று கதறியிருக்கிறார். தலையில் அரிவாள் இறங்கியவுடன் அந்தக் கதறலும் நின்றுவிட்டது.

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்! கம்யூனிஸ்டுகளின் சின்னமான அரிவாளுக்கும் சுத்தியலுக்கும் இந்தப் போலிகள் உருவாக்கியிருக்கும் புதிய அர்த்தம் இது.

···

இது ஒரு திட்டமிட்ட அரசியல் படுகொலை. ஜூன் 14ஆம் தேதி மார்க்சிஸ்டுகள் காரப்பட்டில் நடத்திய கூட்டத்தில் வி.வி.மு.வுக்கு எதிராகப் பொய்களையும் அவதூறுகளையும் நஞ்சாகக் கக்கியதுடன் "வி.வி.மு. வை ஒழித்துக் கட்டுவோம்!' என்று பிரகடனமும் செய்திருக்கிறார்கள். மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் ஏழுமலையைக் கொல்வோமென்பதை மறைமுக அறிவிப்பாகவே வெளியிட்டிருக்கிறான் பகுதிச் செயலர் ராசுக்கண்ணு. இந்தக் கொலைவெறித் தாக்குதலையும், கொள்ளையையும் மாவட்டக் கமிட்டி நுணுக்கமாகத் திட்டமிட்டுக் கொடுத்திருக்கிறது. இந்தக் கொலைத் திட்டத்தின் முன் தயாரிப்புகளை காரப்பட்டுக்கு நேரில் வந்து பார்வையிட்டிருக்கிறார் மாவட்டச் செயலர் ஆனந்தன்.
போலீசுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் இடையே நிலவும் தொழில்முறைக் கூட்டினை திருவெண்ணெய் நல்லூர் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகள் தெளிவாக நிரூபித்தன.

கொலையை நேரில் பார்த்த மல்லிகா, புகார் கொடுப்பதற்காக அன்றிரவு 11.30 மணிக்கு காவல் நிலையத்திற்குச் சென்ற போது, கொலைகாரனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே மல்லிகாவிடம் விசாரணை நடத்தியிருக்கிறார் இன்ஸ்பெக்டர். ""ரெண்டு பேர்தான் வெட்டினதா வெங்கடேசன் சொல்றான், நீ என்னம்மா இவ்வளவு பேர் சொல்ற'' என்று கூறி, மல்லிகாவின் புகாரை வெங்கடேசன் முன்னிலையிலேயே நிராகரித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் இராசேந்திரன். கொள்ளை குறித்த புகாரையும் பதிவு செய்ய முடியாதென போலீசு மறுத்திருக்கிறது.

இன்ஸ்பெக்டரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் "பணப் பட்டுவாடா' முடிந்து விட்டதை நிரூபித்தன. கொலை வழக்குச் செலவுக்கு, கொள்ளையடித்த பணம்! இது மார்க்சிஸ்டுகளின் கிரிமினல் மூளை கண்டிருக்கும் வளர்ச்சிக்குப் புதியதொரு சான்று!

மறுநாள் காலையில் ""கொலைகாரர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யாவிட்டால் இராசேந்திரனின் பிணத்தை வாங்கமாட்டோம்'' என்று விழுப்புரம் மருத்துவமனை முன் போராடினார்கள் வி.வி.மு. தோழர்கள். அதன் பின்னர்தான் கொலைக் குற்றவாளிகள் பட்டியலில் 7 பேர் சேர்க்கப்பட்டனர். ஆனால் இதனை ஈடுகட்டும் விதத்தில் வி.வி.மு. தோழர் ஏழுமலை உள்ளிட்ட 19 பேர் மீது கொலைமுயற்சி, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்துவிட்டது போலீசு.

தற்போது ஏழுமலை உள்பட 3 தோழர்கள் சிறையில் உள்ளனர். கொலைகாரர்களும் 3 பேர்தான் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மற்ற 4 கொலைகாரர்களை போலீசு "தேடி'க்கொண்டிருக்கிறதாம்! போலீசைப் பொருத்தவரை இந்தக் கொலை நக்சல்பாரி அமைப்பினரை ஒடுக்குவதற்குக் கிடைத்த வரப்பிரசாதம். இலஞ்சமும் கொடுத்து, ஆள்காட்டி வேலைஅடியாள் வேலைகளை இலவசமாகவும் செய்து தருகின்ற மார்க்சிஸ்டுகளின் சேவையில் புல்லரித்துப் போய் நிற்கிறது போலீசு நிர்வாகம்.

வி.வி.மு.வின் சார்பில் விழுப்புரத்தில் ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், சுவரொட்டிப் பிரச்சாரம் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் வாயிலாக "மார்க்சிஸ்டுபோலீசு கூட்டணி' மாவட்டம் முழுவதும் அம்பலமாகியிருக்கிறது.

எனினும், மார்க்சிஸ்டு கட்சியின் விழுப்புரம் மாவட்டக் கமிட்டி இதுவரை இக்கொலை குறித்து வாய் திறக்கவில்லை. காரப்பட்டு கிராமத்தைப் போலீசு இராச்சியமாக்கி, மக்களை மிரட்டிப் பணிய வைத்துவிட்டால், பின்னர் அங்கே தங்களது ஆட்சியை மெல்ல மெல்ல நிறுவி விடலாம் என்பதுதான் மார்க்சிஸ்டுகளின் மனக்கணக்கு.

"காதலிக்க மறுக்கும் பெண்ணைக் கடத்திச் சென்று கற்பழித்துவிட்டால் பிறகு தாலி கட்டி விடலாம்' என்று தமிழ் சினிமா வில்லனைப் போல அவர்கள் சிந்திக்கிறார்கள். லும்பன்கள், பிழைப்புவாதிகளை உறுப்பினர்களாகவும், கிரிமினல்களைத் தலைவர்களாகவும் கொண்டுள்ள ஒரு கட்சி வேறு எப்படிச் சிந்திக்கும்? நந்திக்கிராமில் வெளிப்பட்டது வெறும் வன்முறையல்ல, அதுதான் "மார்க்சிஸ்டு மூளையின்' சிந்தனை முறை என்பதற்கு காரப்பட்டு இன்னுமொரு சான்று.

···

நக்சல்பாரி எழுச்சியைக் காட்டிக் கொடுத்த மார்க்சிஸ்டு தலைமையை எதிர்த்து அக்கட்சியிலிருந்து வெளியேறி மா.லெ. இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட (மறைந்த) தோழர் ரங்கனாதனின் கிராமம் காரப்பட்டு. சுற்றுவட்டார நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்துக்கு எதிராகப் பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி அவற்றின் ஊடாக உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமையை அவர் உருவாக்கி வளர்த்திருக்கும் கிராமம் அது.

தலித் மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான கலவரங்கள் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்ற காலங்களிலும் கூட சாதிவெறி தலைதூக்காத கிராமம் காரப்பட்டு. உள்ளூர் கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த தலித் மக்களைத் திரட்டி வெற்றிகரமானதொரு கோயில் நுழைவுப் போராட்டத்தை வி.வி.மு. நடத்திய கிராமம் அது. அப்போராட்டத்தின் விளைவாக நிலைநாட்டப்பட்ட தலித் மக்களின் கோயில் நுழைவு உரிமையை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் கிராமம்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு தலித் மக்களும் பிற சாதியினரும் ஒருவரையொருவர் அழைப்பதையும் ஒரே பந்தியில் அமர்ந்து கலந்துண்பதையும் தனது பண்பாடாகவே மாற்றிக் கொண்டிருக்கும் கிராமம். ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த வி.வி.மு. தோழர்களை அழைப்பதும், அவர்கள் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பதும், வி.வி.மு. நடத்தும் ஊர்க்கூட்டங்களில் எல்லாச் சாதிகளையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவதும் வழமையாக நடைபெற்று வரும் கிராமம் அது.

தமக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள மக்கள் அங்கே போலீசுக்கோ கோர்ட்டுக்கோ போவதில்லை. பணப் பரிவர்த்தனையும் நிலப்பரிவர்த்தனையும் கூட பெரிதும் வாய்மொழியின் அடிப்படையிலேயே நடைபெறும் அளவுக்கு மக்களிடையே நம்பிக்கையும் நேர்மையும் நிலவி வரும் கிராமம் அது. கள்ளச்சாராய விற்பனை அங்கே நெடுநாள் முன்னரே ஒழிக்கப்பட்டுவிட்டது. குடித்துவிட்டுத் தெருவில் ஆடுவதும், பொது இடங்களில் புகை பிடிப்பதும் அங்கே தடை செய்யப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் ஆயுத பலம் கொண்டோ அதிகார பலம் கொண்டோ மக்களின் மீது விவசாயிகள் விடுதலை முன்னணி திணித்து விடவில்லை. கிராமத்தில் உள்ள பிற கட்சியினரின் ஆதரவோடும் ஆகப்பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடும்தான் இவை அங்கே அமல்படுத்தப்படுகின்றன. எனினும் விரல் விட்டு எண்ணக்கூடிய பிழைப்புவாதிகளும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட லும்பன்களும் இவற்றை எதிர்க்கத்தான் செய்தனர். தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. செங்கொடிக்கு எதிராகச் செங்கொடியை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம் என்பதை அந்தக் கிரிமினல்கள் புரிந்திருந்தார்கள். மார்க்சிஸ்டு கட்சியோ அவர்களை வாரி அணைத்துக் கொள்ளத் தயாராக இருந்தது.

ஆனால் இந்தக் கிரிமினல் கும்பல் ஒரு கட்சியாகத் திரளுவதை ஏற்பதற்கு மக்கள் தயாராக இல்லை. மார்க்சிஸ்டு கட்சி கொடிக்கம்பம் ஊன்றுவதையே மக்கள் அனைவரும் (எல்லா சாதியினரும்) திரண்டு நின்று எதிர்த்தார்கள். ""நாலு பேராக இருந்தாலும் அது அவர்களது ஜனநாயக உரிமை'' என்பதை மக்களுக்கு விளக்கிக் கூறி கொடிமரம் ஊன்றும் உரிமையை அன்று மார்க்சிஸ்டுகளுக்கு வாங்கிக் கொடுத்தவரே வி.வி.மு. தோழர் ஏழுமலைதான். ஆயினும் கொடிதான் ஊன்ற முடிந்ததே தவிர, அவர்களுடைய கட்சி அங்கே காலூன்ற முடியவில்லை.

ஊர்ப் பொதுச்சொத்தைத் திருடித் தின்பது, கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றுவது, நகரத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, தட்டிக் கேட்டால் குடித்து விட்டுத் தகராறு செய்வது, பிரச்சினை முற்றினால் சென்னைக்கு ஓடிவிடுவது, மீண்டும் வந்து வம்பு வளர்ப்பது.. இவைதான் காரப்பட்டில் மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் ஆற்றிய கட்சிப்பணிகள். இத்தகைய கட்சிப்பணிகளின் மூலம் களவாணிகளை மட்டுமே அவர்களால் திரட்ட முடிந்தது.
இவை ஒவ்வொன்றிலும் வி.வி.மு. தலைமையிலான மக்களின் எதிர்ப்பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. தற்போதைய கொலைக் குற்றவாளி வெங்கடேசன் கள்ளச்சாராயம் விற்க முயன்று ஊர்மக்களால் விரட்டியடிக்கப்பட்டவன். பிறகு கருமாதிக் கொட்டகையின் இரும்புக் குழாயைத் திருடியபோது வி.வி.மு. தோழர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டவன். இவனும் இவனது "தோழர்களும்' கரண்டு கம்பி திருடிப் பிடிபட்ட வழக்கோ நிலுவையில் இருக்கிறது. இவைதான் மார்க்சிஸ்டுகள் அங்கே ஆற்றிய மக்கள் சேவைகள்.

தங்களது "மக்கள் சேவையை' வி.வி.மு.வின் தலையீடின்றி தொடர வேண்டுமெனில், ஊராட்சித் தலைவர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று கணக்குப் போட்டுத் தேர்தலிலும் போட்டியிட்டுப் பார்த்தனர். அதிலும் தோல்வியையே கண்டனர்.

தாழ்த்தப்பட்டோருக்கான தொகுப்புவீடு கட்டும் திட்டம் வந்தது. தலைக்கு ரூ. 3000 கொடுத்தால் உடனே முடித்து விடலாம் எனக் கூறி மக்களிடம் வசூல் செய்ய முனைந்தனர். ""இலஞ்சம் கொடுக்காமல் தொகுப்பு வீட்டைப் பெறுவோம்'' என்று வி.வி.மு. மக்களை ஒன்று திரட்டியது. "நக்சலைட்டுகள் மக்கள் நலத்திட்டத்தை தடுக்கிறார்கள்' என்று கூச்சல் போட்டுப் பார்த்தார்கள் மார்க்சிஸ்டுகள்; எடுபடவில்லை. இப்படி ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டார்கள். அதன் விளைவுதான் இந்தக் கொலைவெறி!

சிந்தித்துப் பாருங்கள்! நிலப்பட்டாவுக்கும், ரேசன் கார்டுக்கும், தொகுப்பு வீட்டுக்கும் மக்கள் இலஞ்சம் கொடுக்க மறுக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆத்திரப்படலாம். மார்க்சிஸ்டுகளுக்கு ஏன் ஆத்திரம் வரவேண்டும்? எந்தக் கேசும் ஒரு ஊரிலிருந்து வரவில்லை என்றால் அந்த ஊரில் "அரசியல் சட்டத்தின் ஆட்சி' நடைபெறாதது குறித்து போலீசுக்காரன் கோபம் கொள்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மார்க்சிஸ்டு கட்சிக்காரனுக்கு ஏன் கோபம் வரவேண்டும்?

ஏனென்றால் மக்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும், மக்களுக்கும் போலீசுக்கும் இடையில் தரகுவேலை பார்ப்பதுதான் அவர்கள் ஆற்றிவரும் கட்சிப்பணி. மக்களிடம் இலஞ்சம் வசூலித்து அதிகாரவர்க்கத்துக்குப் பங்கு பிரித்துக் கொடுத்து விட்டு, அதில் கொஞ்சம் புறங்கையை நக்கிக் கொள்ளும் வேலையை திமுக, அதிமுக வின் வட்டம்மாவட்டங்கள் மட்டும் செய்யவில்லை. அதே வேலையைத்தான் போலி கம்யூனிஸ்டுகளும் செய்கிறார்கள். நக்கும் அளவிலும், போட்டிருக்கும் துண்டின் நிறத்திலும் மட்டும்தான் வேறுபாடு!

ஓட்டுனர் உரிமம் வாங்க ஆர்.டி.ஓ. ஆபீசுக்குப் போகும் மக்களுக்கு அங்கிருக்கும் புரோக்கர்கள் என்ன சேவையைச் செய்கிறார்களோ அதே "சேவை'யைத்தான் மார்க்சிஸ்டுகள் மக்களுக்குச் செய்கிறார்கள். அந்த புரோக்கர்கள் தங்களது சேவையைச் சொல்லி மக்களிடம் ஓட்டுக் கேட்பதில்லை; போலிகள் ஓட்டுக் கேட்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

மக்கள் போராட்டங்களையும் தாங்கள் பொறுக்கித் தின்பதற்கான கருவியாக மாற்றிக் கொண்டவர்கள் போலி கம்யூனிஸ்டுகள். கூலி உயர்வுக்காகத் தொழிலாளிகள் போராடும்போது தொழிலாளிகளின் கோபத்தைக் காட்டி முதலாளிகளிடம் கமிசன் பார்க்கிறார்கள். உள்ளூர் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான பிரச்சினைகள் வரும்போது, பத்தே பத்து சுவரொட்டியும் துண்டுப்பிரசுரமும் அச்சடித்து அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் "பத்திரிக்கை' வைக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து காதும் காதும் வைத்தாற்போல நடைபெறும் சமாதானப் பேச்சுவார்த்தையிலும் காசு பார்க்கிறார்கள்.

வேறு என்ன விதத்தில் கட்சிப் பணி ஆற்ற முடியும் என்பதை உண்மையிலேயே அவர்கள் அறியமாட்டார்கள். அரசியல் போராட்டம், வர்க்கப் போராட்டம் என்பது பற்றியெல்லாம் கார்த்திக் கட்சிக்காரனுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் இந்த காரத் கட்சிக்காரர்களுக்கும் தெரியும். அதனால்தான் காரப்பட்டின் கிரிமினல்கள் தங்களை வழிநடத்த வல்லது மார்க்சிஸ்டு கட்சியே என்பதைக் கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இலஞ்சத்தில் ஊறிய அரசு ஊழியர்கள், சாதிவெறியர்கள், சமூக விரோதிகள், முதலாளிகளின் கையாட்களான தொழிற்சங்கத் தலைவர்கள்.. இவர்களெல்லாம் அங்கே "தோழர்கள்'. "நான் முதலில் பார்ப்பான் அப்புறம்தான் கம்யூனிஸ்டு' என்று பிரகடனம் செய்யும் அமைச்சர், பேரனுக்கு பூணூல் கல்யாணப் பத்திரிக்கை வைக்கும் சபாநாயகர், கொலைகார சங்கராச்சாரியை அரசு விருந்தினராக உபசரிக்கும் அச்சுதானந்தன், "அத்வானி என் நெருங்கிய நண்பர்' என்று அறிவிக்கும் புத்ததேவ்.. இவர்களெல்லாம் தலைவர்கள்.

அடி முதல் நுனி வரை அழுகிப்போன இந்தக் கட்சி அம்பானிக்கும் டாடாவுக்கும் அடியாள் வேலை பார்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

"தேர்தல் பாதையா, வன்முறைப் பாதையா?' என்பதுதான் நமக்கும் நக்சலைட்டுகளுக்கும் உள்ள வேறுபாடு என்று அவர்கள் கூறுகிறார்கள். இல்லை, "ஆளும் வர்க்க அடிவருடித்தனமா, புரட்சியா?' என்பதில்தான் வேறுபாடு. "வன்முறையை யாருக்கெதிராகப் பயன்படுத்துவது?' என்பதில்தான் வேறுபாடு.

சமீபத்தில் டெல்லியிலுள்ள மார்க்சிஸ்டு கட்சியினுடைய தலைமையகத்தில் புகுந்து மத்தியக் கமிட்டி உறுப்பினர்களையே தாக்கினார்கள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள். ஆனால் நந்திகிராமிலும் சிங்கூரிலும் மக்களுக்கு எதிராக "ஆயுதப்போராட்டம்' நடத்திய மார்க்சிஸ்டுகள், பாரதிய ஜனதாவுக்கு எதிராகத் தம் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை. மதுரையில் லீலாவதி கொலை, சாத்தூரில் கள்ளச்சாராய முதலைகளுக்கு எதிராகப் போராடிய தோழர் கொலை, திருப்பூரில் சாதிவெறியர்களை எதிர்த்த தோழரின் படுகொலை.. என நேர்மையான தோழர்களையெல்லாம் எதிரிகளின் அரிவாளுக்குக் காவு கொடுத்திருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

இராசேந்திரனுக்கும் ஏழுமலைக்கும் எதிராக உயர்ந்த அவர்களுடைய அரிவாள், தங்களது தோழர்களைக் கொன்ற கொலைகாரர்களுக்கு எதிராக உயர்ந்ததில்லை. உத்தப்புரம் சாதிவெறிச் சுவரின் பத்து செங்கற்களைத் தட்டி விடுவதற்கு போலீசுப்படை வரும்வரை காத்திருந்தார்கள் மார்க்சிஸ்டுகள். ஆனால் காரப்பட்டில் தலித் விவசாயிகளின் வீடுகளைச் சூறையாடுவதற்கு மட்டும் அவர்களுடைய கைகள் தயங்கவேயில்லை.

ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்ப்பதற்கு மொட்டை போடும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம், ஒப்பாரிப் போராட்டம்! புரட்சியாளர்களை எதிர்ப்பதற்கு மட்டும் ஆயுதப்போராட்டம்! இதுதான் மார்க்சிஸ்டு கட்சி!

ஆம். இவர்கள் சிவப்புப் போர்வை போர்த்திய பாசிஸ்டுகள். சமாதானம் பேச வந்த இராசேந்திரனை, ""அஞ்சு பொம்பளப் புள்ளங்கடா, என்னக் கொல்லாதீங்கடா'' என்று நிராயுதபாணியாக நின்று மன்றாடிய அந்த ஏழை விவசாயியை, ஈவு இரக்கமின்றி வெட்டியது மார்க்சிஸ்டுகளின் அரிவாள். கும்பிட்ட கைகளை வெட்டித் தள்ளிய குஜராத் இந்து வெறியர்களின் அரிவாளுக்கும் இந்த அரிவாளுக்கும் என்ன வேறுபாடு? அந்தக் கிரிமினல்களுக்கும் இந்தக் கிரிமினல்களுக்கும் என்ன வேறுபாடு? அது காவி, இது சிவப்பு என்பது மட்டும்தான்.

கொலைகளின் மூலம் புரட்சியாளர்களை நசுக்கி விடலாம் எனப் பாசிஸ்டுகளைப் போலவே கனவு காண்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். அந்தக் கனவு விரைவில் கலையும். கலைப்போம்!

· பாலன்
புதிய கலாச்சாரம் - 2008

Friday, July 04, 2008

இன்று தெலுங்கானா புரட்சி தொடங்கிய நாள்!!!

இன்று தெலுங்கானா புரட்சி தொடங்கிய நாள்!!!

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

பெண்களும் ஆயுதமேந்தி போராடினோம்! தெலுங்கானா வீராங்கனை மல்லுஸ்வராஜ்யம் பேட்டி

1930 ஆம் ஆண்டு நான் நல் கொண்டா மாவட்டம் கருவிரால் வட் டம் கொத்த கூடம் கிராமத்தில் ராமி ரெட்டி-சொக்கம் மாஸ்தம்பதிகளின் நான்காவது மகளாய் பிறந்தேன். என் அப்பா எனக்கு ‘ஜூகுனு’ (மின்மினி) என்று செல்லமாய் பெயரிட்டார். எனது தாய்மாமா ஒரு காந்தியவாதி. உப்புசத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றவர். அவர்தான் எனக்கு சுதந்திரம் என்ற பொருளில் சுயராஜ் ஜியம் என்று பெயரிட்டார்.

எனது அண்ணன் நரசிம்ம ரெட்டி கம்யூனிஸ்டாக இருந்தார். 1943ம் ஆண்டு விஜயவாடாவில் நடை பெற்ற கட்சி வகுப்புக்கு அண்ணன் என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு வயது பதிமூன்று தான். அங்குதான் எனக்கு மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் கிடைத்தது. அந்த ஒரே நாவல் என்னை கம்யூ னிஸ்டாக மாற்றிவிட்டது. என் அம் மாவும் அதைப்படித்தார். அவர் ஆந் திர மகாசபையில் சேர்ந்து அதன் பெண்கள் அமைப்பில் பணியாற்றி னார். எங்கள் பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தனர். அம்மா தனது பெண்கள் அமைப்பின் மூலம் கோஷா எதிர்ப்பு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண் குழந்தைக ளின் கல்வி மறுப்புக்கு எதிராக போரா டினார். அன்னை மற்றும் அண்ண னின் நடவடிக்கைகள் என்னைப்பதி னான்கு வயதிலேயே புரட்சிக்காரி யாக மாற்றியது.

ஏழைகளை அடிமைகளாக நடத் துவது, அவர்களை சர்வசாதாரணமாக சாட்டையால் அடிப்பதைக் கண்டித்து ஆந்திர மகாசபை நடத்திய போராட் டங்களில் அம்மாவுடன் நானும் இணைந்து கொண்டேன். விவசாயி கள் நிலம் கோரிப் போராடினர். கம்யூ னிஸ்டுகள் அக்காலத்தில் ஆந்திர மகாசபை மூலமே போராடினர். நிலப் பிரபுக்களின் அட்டூழியம் அதிகரித் தது. தொட்டி குமரய்யா கொலை செய் யப்பட்டார். அதைத்தொடர்ந்து 1946ல் ஆயுதம் தாங்கிப் போராடுவதென கட்சி முடிவு செய்தது. கட்சியின் முக் கிய ஊழியர்களுக்கு மேஜர் ஜெய் பால்சிங் ஆயுதப்பயிற்சியளித்தார். அதில் நானும் பங்கேற்றேன். பின்பு நானும் பெண்களுக்கு ஆயுதமேந்த வும், சுடவும் பயிற்சியளித்தேன்.

தோழர் பி.சுந்தரய்யா புரட்சிக்கு ‘மக்களை எழுப்புக’ என்ற கோஷத் தைக் கொடுத்தார். ரவிநாராயண் ரெட்டி, எல்ல ரெட்டி, ரபிஅகமது, வாவிகோபாலகிருஷ்ணையா ஆகி யோருடன் என்னையும் பிரச்சாரக் குழுவில் இணைத்தார். சென்னை முதல் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் வரை ஆடல் -பாடல் கலை நிகழ்ச் சிகள் மூலம் பிரச்சாரம் செய்தோம். அப்போது சென்னையிலிருந்த தெலுங்கு சினிமா நடிகர்களும், சினிமா இயக்குநர்களும் தங்க இட மளித்து உதவினர். எனது ‘உய்யாலா’ பாடல்கள் மக்களைக் கவர்ந்தன. நானே எழுதிப்பாடுவேன். பின்பு மேடைகளிலும் கிராமங்களிலும் உய் யாலா பிரபலமாகிவிட்டது. மக்களை எழுப்புவதில் எனது கலைப்பணியை பல தோழர்கள் பின்பற்றினர்.

பின்பு நான் பிண்டிபோல் வனப்ப குதியில் மானு கோட்டை வட்டாரத் தில் பெண்கள் படையை திரட்டி அவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தேன். முந்நூறு பேர் கொண்ட பெண்கள் படையில் இரு நூறு பேர் மலைவாசிப் பெண்களாவர். அதன் பின் நான் கொரில்லா ஆர் கனைசராக்கப்பட்டேன். எங்களுக்கு கமாண்டராக மல்லுவெங்கட நரசிம்ம ரெட்டி என்பவர் இருந்தார். முடிவுகள் எடுப்பதிலும் அவற்றை நடைமுறைப் படுத்துவதிலும் அவர் மிகத்திறமை யானவர். ஐதராபாத் நிஜாமின் படை களை விரட்டியடித்தோம்.

ஒவ்வொரு தளமாகக் கைப்பற்றி முன்னேறினோம். பத்து லட்சம் ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி நிலங்களைப் பிரித்து விவசாயிகளுக்குக் கொடுத் தோம். போரில் ராஜக்கா என்ற கொரில்லா வீராங்கனை சுட்டுக் கொல் லப்பட்டார். எனது தலைமறைவு வாழ்க்கையில் அந்த புகழ்மிக்க வீராங்கனையான ராஜக்கா என்ற ஒரு பெயரையே சூட்டிக்கொண்டேன். குதிரை மீது ஏறி போர்க்களங்களைச் சுற்றி வந்தேன். கம்மம், வாரங்கல் பகுதி முழுவதும் நான் ராஜக்காவாகச் சுற்றி வந்தேன். சுந்தரய்யா என்னை ஜான்சிராணி போல் தோன்றுவதாக கூறி பாராட்டினார். என்னைக் காட்டிக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்று நிஜாம் அரசு அறிவித்தது.

1947ல் சுதந்திரம் கிடைத்தது. நேரு தலைமையில் ஆட்சி வந்தது. ‘நிஜாம் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும், நாங் கள் விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்த நிலங்களைப் பறிக்கக் கூடாது, கம்யூனிஸ்டுகள் உருவாக் கிய கிராமராஜ்யங்களை அங்கீகரிக்க வேண்டும்’ என்று நேருவிடம் கோரி னோம். நேரு வாக்குறுதியளித்து விட்டு துரோகம் செய்தார். 1948 செப்டம்பரில் ஐம்பதாயிரம் பேர் கொண்ட இந்திய ராணுவத்தை எங் கள் மீது ஏவினர். எங்கள் கட்சியின் கட்டளையை ஏற்று நாங்கள் ஆயுதங் களைக் கீழே வைத்தோம். இந்திய ராணுவம் எங்கள் தோழர்களை ஆயி ரக்கணக்கில் சுட்டுக் கொலை செய்தது.

6000 பேர் படுகொலை செய்யப் பட்டனர். முப்பதாயிரம் பேர் குற்றுயி ரும் குலைஉயிருமாக சிதைக்கப்பட் டனர். எங்கள் கிராமராஜ்யங்களை அழித்து, விவசாயிகள் பகிர்ந்தெடுத்த நிலங்களைப் பறிமுதல் செய்து மீண்டும் நிலப்பிரபுக்களிடமே ஒப்ப டைத்து காங்கிரஸ் ஆட்சி அக்கிரம தாண்டவமாடியது.

எங்கள் தெலுங்கானாப் புரட்சி, காங்கிரஸ் கட்சியால் ரத்த வெள்ளத்தி லேயே மூழ்கடிக்கப்பட்டாலும் இந் திய அரசு நிலச் சீர்திருத்த உச்ச வரம் புச்சட்டத்தை கொண்டுவரவைத்தது. வினோபா போன்றவர்களைப் பூமி தான இயக்கம் துவங்க வைத்தது.

தெலுங்கானாப் போராட்டத்தால் தான் உச்ச வரம்புச் சட்டம் வந்தது. ஆனால் நிலங்கள் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேயில்லை. கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநில அரசுகளைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவ சாயிகளுக்கு நிலம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி அன்று முதல் இன்று வரை விவசாயிகளை வஞ்சித்து வரு கிறது. வளர்ச்சியின்றி தேசம் தேங்கி நிற்கிறது. நிலப்பிரபுத்துவம் தகர்க்கப் பட்டு நில வினியோகம் நடைபெறா மல் நாடு முன்னேறாது.

உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாய நிலங்களை பத்துமடங்கு விலை கொடுத்து அபகரித்து கார்ப்ப ரேட் விவசாயம் செய்து வருகிறது. வாழ வழியின்றி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரு கிறது. மதவெறியர்கள் சனாதனத்தைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். ஆண்டான் அடிமைத்தனம், பெண் அடிமைத் தனத்தையும் நிலைநிறுத்த முயற்சிக்கி றார்கள். இதற்கெதிராக பெண்களும் ஆண்களும் இணைந்து போராட வேண்டும். சமூக விரோதிகளை எதிர்த்துப் போராட பெண்கள் பயிற்சி பெற வேண்டும். ஆயுதப் போராட் டமே வழி என்பது வெறும் கூக்குரல் தான். நாங்கள் அதை நடத்தியவர்கள். இன்றைய கடமை மக்களை ஜன நாயக முறையில் வெல்வதுதான்.

1954ல் தோழர் ராஜேஸ்வரராவ் எனக்கும் கமாண்டர் மல்லு வெங்கட நரசிம்ம ரெட்டிக்கும் திருமணம் செய்து வைத்தார். அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிலிருந்து செயல்பட்டார். 2004ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். நான் ஆந்திர மாநி லக்குழுவில் பணியாற்றி வருகிறேன். 1981 முதல் 2007 வரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவராய் செயல் பட்டேன். எனது பணி இன்றும் தொடர்கிறது. எனக்கு 78 வயதாகி விட்டாலும் மார்க்சியம் வென்றே தீரும் என்ற நம்பிக்கையுடன் பணி யாற்றுகிறேன். அது உயிருள்ள வரை தொடரும்.

பேட்டி: எஸ்.ஏ.பி.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Comments 1:
துரோகத்தின் வரலாறு - தெலுங்கானா புரட்சியை வழி நடத்த துப்பற்ற அன்றைய இந்திய கம்யுனிஸ்டு கட்சி படு கோழைத்தனமாக அதனை காட்டிக் கொடுத்தது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே எந்த ஒரு மக்கள் போராட்டத்தையும் தலைமை தாங்கும் தைரியமற்ற இந்த கட்சி எண்ணற்ற போராட்டங்களை இப்படி கருவறுத்துல்லது. பிரிட்டிஸ்க்காரனை நாட்டை விட்டு விரட்டிய மும்பை மாலுமிகள் கலகம் மற்றும் தொழிலாளர் கலகத்தையும் கூட கடைசியில் காட்டிக் கொடுத்தது CPI. அந்த வரிசையில் தெலுங்கானா புரட்சியும் ஒன்று. இந்தியா தொழிலாளர் வர்க்கமும், விவசாய வர்க்கமும் தனது சொந்த கைகளில் ஆட்சியதிகாரத்தை நடத்த முடியும் என்று நிரூபித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி அது. அது குறித்த ஒரு கட்டுரை அதே போலி கம்யுனிஸ்டின் தீக்கதிர் பத்திரிகையில் வந்துள்ளது. வரலாற்றின் பக்கங்களை நாம் மறு வாசிப்பு செய்ய தூண்டுகோலாக இருக்குமென்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


Question 1:
//
மாலுமிகள் கலகம் மற்றும் தொழிலாளர் கலகத்தையும் கூட கடைசியில் காட்டிக் கொடுத்தது CPI.
//
இவை சரியான தகவல்களா?

தல்வார் கப்பல் புரட்சியில் மாலுமிகளுக்கு ஆதரவாக வேலைநிறுத்தப் போராட்டத்தை மும்பையில் கட்சி நடத்தியது. போலீசு துப்பாக்கிச்சூட்டில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுதான் சரியான தகவல்கள் எனக் கருதுகிறேன். தல்வாரைக் காட்டிக் கொடுத்தவர்கள் காங்கிரசும், ஜின்னாவும்தான்.


Ans1:
தல்வார் புரட்சியிலும் கூட இந்தியாவின் மக்களை தலைமை தாங்குவதற்க்கான் முயற்சி எதுவும் செய்யாமல் அதற்க்கான தைரியம் இல்லாமல் காங்கிரஸ் பின்னே தொங்கி கொண்டிருந்தார்கள் இவர்கள். நாடு முழுவதும் புரட்சி அலை வீசும் போது அதை ஒருங்கிணைத்து ஒரு எரிமலையாய் பிரிட்டிஸ் நாய்களை சுட்டு பொசுக்குவதை விட்டு விட்டு சரணடைய சொல்லி கடைசியில் வழக்கம் போல முடிவு செய்தனர் தோழார்கள்.

கட்சி தலைமை குறித்துத்தான் இங்கு விமர்சனமே தவிர அதன் உணர்வுப் பூர்வமான தோழர்களின் ஈடு இணையற்ற தியாகங்களுக்கும், நமக்கு கற்றுக் கொடுக்கும் முன்னுதாரணங்களுக்கு அல்ல நமது விமர்சனம்.

ஏன் இந்த போராட்டங்களின் மூலம் இந்தியாவின் தனிப் பெரும் தலைமை சக்தியாக தன்னை உயர்த்திக் கொள்ள இந்த கட்சி முயற்சி செய்ததே இல்லை? இவர்களின் பாரம்பரியம் என்று சொந்த கொண்டாடும் எந்தவொரு போராட்டமாவது இவர்களது கட்சி தலைமையால் ஆரம்பிக்கப்பட்டதாகவோ அல்லது வழி நடத்தப்பட்டதாகவோ இருக்கவில்லையே ஏன்?

காட்டிக் கொடுத்தது என்பது இந்த அம்சத்தில்தான் வருகிறது.


அசுரன்

Wednesday, July 02, 2008

மாமா வேலை பார்க்கும் பாஜக (வழக்கம் போல)

ஜூலை 3ஆம் தேதி அகில இந்திய பந்த் அறிவித்துள்ளது பாஜக பார்ப்பனிய பயங்கரவாத கட்சி. நானும் கூட ஏதோ பெட் ரோல் விலை உயர்வை எதிர்த்து இவர்கள் பந்த் நடத்தப் போகிறார்கள் போல இருக்கு என்று பார்த்தால், ஜம்மு காஷ்மீரில் நில பிரச்சினையை ஒட்டி தமது பார்ப்பன பயங்கரவாத மத வெறி அரசியலுக்கு தோதாக பந்த் செய்யப் போகிறார்கள் இந்த மாமாக்கள்.

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை உண்மையிலேயே பாஜகவின் மதவெறி அரசியல் உத்தியின் ஒரு பகுதிதான் என்பது இருக்க. நாடே பெட் ரோல் ஊற்றிக் கொண்டு எரியும் போது இந்த நாதாரி இந்த பிரச்சினையை அகில இந்திய லெவலுக்கு ஊதுவது ஏன்? இவன் இது மாதிரி செய்வது இதுதான் முதல் முறையா? கிடையாது.

ஏற்கனவே அணு ஆயுத ஒப்பந்தப் பிரச்சினையை ஒட்டி நாடே அல்லேலோஹல்லேலோ பட்டுக் கொண்டிருந்த பொழுது மிகச் சரியாக ஆதாம் பால பிரச்சினையை முன்னுக்கு கொண்டு வந்தான். அணு ஆயுத பிரச்சினை ஓடி ஒளிந்து கொண்டது.

1990-ல் நரசிம்மாராவும், மண்ணுமோகன் சீ மாமாவும் பாரத மாதாவை கொப்போடும், கொழையோடும் கூட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது பாபார் மசூதி பிரச்சினையை நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரியச் செய்து காட் ஒப்பந்தத்தை அமைதியாக அரங்கேற்ற உதவினார்கள்.

அதே போலத்தான் தற்போது எண்ணைய் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி ஜம்மு காஷ்மீரை முக்கிய விவாதமாக்குவதன் மூலம் தனது எஜமானர்களை காப்பதுடன் அல்லாமல், அடுத்த முறை ஆட்சிக்கு வருவதற்க்கு வசதியாக மதவெறியையும் தூண்டி விடுவதற்க்காகவே இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

இந்த தேச பக்தர்கள்தான் போபாலில் விசவாயு கசிய விட்ட யூனியன் கார்பைடு கம்பேனியிடமிருந்து கட்சி நிதி பெற்ற உத்தமர்கள். இது ஒன்று போதும் இவர்கள் பாரத் மாதாகி ஜெய் என்று போடும் கோஷத்தின் பின்னால் உள்ளது அப்பட்டமான கூட்டிக் கொடுக்கும் தந்திரம்தான் என்பதை புரிந்து கொள்ள.

அசுரன்

Related Posts with Thumbnails