TerrorisminFocus

Tuesday, September 26, 2006

ஏன் ஒப்பாரி வைக்கிறேர்கள் அமேரிக்க அடிவருடிகளே??!!!!

சிறிது நாட்களுக்கு முன்புதான் முத்தமிழ் குழமத்தில் பொதுவுடமை முன்னணி தோல்வியடைந்து ஓடிவிட்டதாக புரளி கிளப்பினார் திரு டாலர் செல்வன். அந்த சமயத்தில் உண்மை நிலை வேறு என்று கூறி நான் கூட ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன். இப்பொழுது உண்மையிலேயே அங்கு ஏகாதிபத்திய முகாம் தோல்வியைடையும் நிலையில் உள்ளது. அவர்களின் ஒரே வாதமான இந்தியாவில் வறுமை குறைந்து வருகிறது என்பதும் முற்று முதலாக நொறுக்கப்பட்டுவிட்டது. கீழே முத்தமிழ் குழமத்தில் நான் வைத்த வாதத்தை இங்கு சில மாற்றங்களுடன் தருகிறேன். தகவல்களிலோ அல்லது சொல்ல வந்த கருத்துக்களிலோ மாற்றம் செய்யப்படவில்லை. அங்கு அவசரமாக அடித்தது, இங்கு கொஞ்சம் நிதானமாக presentationயை மட்டும் மாற்றி உட் தலைப்புகளுடன் தருகீறேன்

********************


//////////////
நான் சொன்னது:
இப்பொழுதும் 60% தற்க்கும் மேற்ப்பட்ட மக்களின் GDP குறைந்து கொண்டே வருகிறதே. பிறகு எப்படி மக்கள் முன்னேறி விட்டார்கள் என்று சொல்ல முடியும். மேலும், விவசாய இடுபொருள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதே(100 மடங்கு அல்லது 200 மடங்கு) பிறகு எப்படி அவர்களின் வாழ்க்கை முன்னேறியிருக்கும். இதே சமயத்தில் அவர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் விலை பாதியாக குறைந்துள்ளது.

செல்வன் சொன்னார்:
வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்போது எப்படி அவர்கள் வருமானம் குறைகிறது என்று சொல்ல முடியும்? விவசாயிகள் வருமானம் குறையவில்லை,அதிகரித்தது.அதே சமயம் மற்ர துறையினரின் வருமானம் விவசாயிகளை விட அதிகமடங்கு அதிகரித்துள்லது.கம்ப்யூட்டர் தொழிலாளி விவசாயை விட அதிகம் தான் சம்பாதிப்பான்.அதனால் விவசாயி ஏழையாவதில்லை.விவசாயிக்கும் வருமானம் அதிகரிக்கும்,ஆனால் கம்ப்யூட்டர் தொழிலாளியை விட குறைவாக அதிகரிக்கும்
//////////////


உண்மை நிலை, செல்வனின் புள்ளி விவரத்துக்குள்ளேயே:


இந்த இடத்தில்தான் அரசாங்கத்தின் ஆளும் வர்க்கத்தின் புள்ளி விவரம் முரன்படுவதையும், அதிலிருந்து பெறும் உண்மைகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

அதாவது, விவசாய இடுபொருள் வளர்ச்சி 100 அல்லது 200 மடங்கு உயர்ந்துள்ளது என்பது அரசாங்க புள்ளிவிவரம், வெறு சில NGO க்களின் புள்ளி விவரங்கள், இவற்றைத் தவிர்த்து நேரடியாக விவசாயிகள் பார்க்கும் விசயம் ஆகியன இதை உறுதிப்படுத்துகிறது(செல்வன் உங்களுக்கு சந்தேகமிருந்தால் வலையில் தேடவும் அல்லது sree என்ற பெயரில் எழுதும் விவசாயியிடம் நேரடியாக கேட்டு பொருட்களின் விலை ஆண்டு வாரியாக எப்படி உயர்ந்துள்ளது என்று பார்க்கவும்).

இதே நேரத்தில் விவசாய பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் விலை இரு மடங்கு குறைந்துள்ளது. இதே நேரத்தில் விலைவாசி மிக அதிகமாகியுள்ளது. முந்தைய எந்த வருடங்களையும் விட அதிகமாக, உயர்ந்துள்ளது. ஆக, இப்படி இந்தியாவின் 60% மேற்ப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை பல பக்கங்களீலிருந்தும் தாக்குதலுக்காளாகி உள்ளது.

ஏற்கனவே டாலர் செல்வன் குறீப்பிட்டிருந்த விவசாய வீடுகளின் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளது எனும் கணக்கு ஒரு டுபாக்கூர் என்பதை கூறியுள்ளேன். அதை மீண்டும் கூறுகிறேன். விவசாயியின் வருமான உயர்வுக்கும் அதே காலகட்டத்தில் விலைவாசி, விவசாய இடுபொருள் உயர்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவனது வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போயுள்ளதுதான் தெரிகிறது. அதாவது அவனது வருமான உயர்வு என்பது, அவனது வாழ்க்கை செலவினங்கள் உயர்ந்ததுடன் ஒப்பிட்டால் நெகட்டிவ்வின் செல்லும் என்பதுதான் இதன் அர்த்தம்.

அப்படியில்லையென்றால் ஏன் தற்கொலை நடக்கிறது என்பதை, அதுவும் நாடு முழுவதும் எல்லா இடங்களிலும், என்பதை செல்வன் விளக்கிக் கூறவேண்டியுள்ளது.



விவசாயியின் தாழ்வும், இந்தியாவின் போலி முதலாளித்துவ வளர்ச்சி எனும் கான்சர் திட்டுக்களும்:


இதே நேரத்தில் உத்திரவாதமான வேலையின்றி நகரத்தில் அமைப்பு சார்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரமும் சரிகிறது(எ-கா, அசோக் லேலாண்ட் - இங்கு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது ஆனால் அதே நேரத்தில் நிரந்தர ஊழியர்கள் பல மடங்கு குறைக்கப்பட்டு, காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். அதுவும் குறைந்த எண்ணீக்கையில். ஆக உற்பத்தி அதிகரித்துள்ளது ஆனால் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது). இதே நேரத்தில் சிறு தொழில், சில்லறை வணிகம் போன்ற அதிக வேலை வாய்ப்பு தரும்(விவசாயத்தை அடுத்து) துறைகள் வீழ்ந்து வருகின்றன.

இதே நேரத்தில், உதிரிப் பாட்டாளி எனும் அமைப்பு சார தொழிலாளர்கள் மிக மிக மிக அதிகமாக உருவாகி வருகிறார்கள். இவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமைகளும் கிடையாது(கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ , கால் டாக்ஸி, நகர சுத்திகரிப்பு(onyx etc), securities, மற்ற பிற சேவை வழங்கும் துறைகளில்). இவர்களீன் சம்பளம் அதலபாதாளம், எந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது.

இதே நேரத்தில் மிக குறைவான சதவீதமுள்ள ஒரு வர்க்கம்(தகவல் தொழில் நுட்ப தொழிலாளர்கள் போன்று) உருவாக்கும் மூலதன சுழற்ச்சி விலைவாசியை ஊதிப் பெருக்குகிறது. இதே நேரத்தில் அடிப்படை தேவைகளான மருத்துவ வசதி, தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து ஆகியவை சாதரண ஏழை மக்களின் கைகளிலிருந்து நழுவிச் செல்கிறது(விலை உயர்வு, செய்ற்கையாக உருவாக்கப்படும் தட்டுப்பாடுகள்-மருத்துவம், கல்வி). இதேல்லாம் யாராலும் மறுக்க இயலாத உண்மைகள். வேண்டுமானால் செல்வன் மறுத்துக் கொள்ளட்டும்.



ஆளும் வர்க்கத்தின் தகவல்களை எடை போடும் முறை:

ஆக, செல்வன். நீங்கள் வேண்டுமானால் ஆளும் வர்க்கத்தின் புள்ளி விவரங்கள் எப்பொழுதுமே சரியாக இருக்கும் என்று நம்பிக் கொள்ளுங்கள்.
ஆனால் நாங்கள் சந்தேகப்படுவோம், மார்க்ஸையும் கூட சந்தேகப்படுவோம், ஒவ்வொரு முறையும் நடைமுறையோடும், பல்வேறு புள்ளிவிவ்ரங்களோடும் ஒப்பிட்டுப் பார்த்தே முடிவுக்கு வருவோம்.

உங்களது ஆளும் வர்க்கத்தின் புள்ளி விவரங்களிலேயே உள்ள முரன்பாடுகளிலிடுந்துதான் அவர்களை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. அத்துடன் யாதர்த்தில் உள்ள உண்மைகளைப் பொருத்திப் பார்த்துத்தான் முடிவுக்கு வரவெண்டியுள்ளது. அந்த உண்மை நாங்கள் சொல்லும் விசயமாகவே உள்ளது.

நிற்க,



புள்ளி விவர கணக்குகள் சொல்லும் சில சுலபமான உண்மைகள்:

நானும் கூட சில சுலபமான புள்ளிவிவர கணக்குகளைப் போடுகிறேன்,

**//5. Average earning of an Indian - US$ 440 per year or about (This is based on a GDP of US$ 440 billion and 1 billion people) Rs. 1,727// **

1727 ரூபாய் என்னத்துக்கு காணும் என்று சொல்லுங்கள்?


***/// The World Bank's definition of the poverty line**, for under developed countries, like India, is US$ 1/day/person or US $365 per year. As per this definition, more than 75% of all Indians are, probably, below the poverty line! ///***


அரசு புள்ளி விவரத்தின் படி நகரங்களில் ஒரு மாதத்துக்கு 269 ரூபாய்க்கு மேல் இருந்தால், அதாவது ஒரு நாளைக்கு 10 ரூபாய் கம்மியாக சம்பாதித்தால் போதுமாம் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளதாக அர்த்தமாம். இந்த கணக்குப் படி பிச்சைக்காரன் கூட இந்தியாவில் வறுமைக் கோட்டிற்க்கு மேல் உள்ளவந்தான். இதே விசயம் கிராமப் புறங்களில் 276 ரூபாய்.

எந்த அடிப்படையில் வறுமைக் கோடு என்பதை அரசு தீர்மானிக்கிறது என்பது ஒரு முரன் நகைச்சுவையான விசயமாக உள்ளது. முரன் ஏனெனில் அது பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை துயரத்தை மறைப்பதால்.

ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவாசிய தேவைகள் சுருங்கிவரும் பொழுது எப்படி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதாக வெறும் முரன்பட்ட அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் முடிவெடுப்பது? அதுவும் செல்வனுக்கு சாதகமாக தோன்றும் அரசு புள்ளிவிவ்ரமும் கூட போலி என்பது போல இருக்கும் பொழுது.


இங்கே திரும்பவும் நிற்க.....


*************XXXXX*************



வறுமை குறைகிறது எனும் புள்ளி விவரம் உண்மையா?:

Poverty in India : Myth and Reality; Definition and Identification; Critical Evaluation/Ratnakar Gedam. 1995

இந்த மேற்சொன்ன புக்குல என்ன சொல்றாங்கன்னா, இந்தியாவில் வறுமைக் கோடு பற்றிய வரையறை தவறு அதனால் வறுமைக் கோட்டை தாண்டிய மக்களின் எண்ணிக்கை over estimation. அப்படின்னு சொல்றாராம். இது யாரும் கம்யுனிஸ்டு எழுதிய புத்தகமல்ல.(இந்த புத்தக விவரம் கூகுள் சேர்ச்சில் கிடைத்தது).

நான் ஏற்கனவே இது குறித்து குறிப்பிட்டிருந்தேன். அதாவது இந்தியாவில் வறுமைக் கோடு பற்றிய வரையறை மாற்றப்பட்டு போலியான கணக்குகள் கொடுக்கப்படுவதாக. இது குறித்து செல்வன் கருத்துச் சொல்லாமல் நழுவினார். மேலும் அந்த சமயத்தில் இது குறித்தான தெளிவான தரவுகள் எதுவும் என்னிடம் இல்லாததால் மேற்கொண்டு பேசாமல் இருந்து விட்டேன். இன்னோருவர் செல்வனிடம் வறுமைக் கோடு வரையறை என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்க்கும் செல்வன் பதில் சொல்லவில்லை.


வறுமை குறைகிறது எனும் புள்ளி விவரம் உடையும் இடம்:

இந்த இடத்தில் செல்வனின் அனைத்து வாதங்களும் அம்பலப்பட்டு வெறுமனே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற வாதத்தில் மட்டுமே ஏகாதிபத்திய சுரண்டல் பொருளாதாரத்தின் புனித பிம்பத்தை கட்டிக் காப்பதில் வந்து நிற்கிறது(அதுவும் பெரிய அளவில் கிடையாது).

இங்கு வறுமைக் கோடு என்பதற்க்கு அரசு என்ன விளக்கம் சொல்கீறது என்ற விசயத்தை சேர்த்துப் பேசினால் அது
எவ்வளவு பெரிய மோசடியாக இருக்கீறது என்று தெரியவரும்.

பின்வரும் சுட்டியில் உள்ள கட்டுரை மற்றும் அரசு வறுமைக் கோடு விளக்கத்தைப் பார்த்து பரிசீலித்து எழுதுகிறேன். http://www.indiatogether.org/2006/mar/ddz-povline.htm


**//"The official estimates of the poverty line are based on a norm of 2400 calories per capita per day for rural areas and 2100 per capita per day for urban areas." This goes back to the 1970s; at that time, we decided to measure poverty levels by considering a minimum nutritional level. More accurately, the measure was the amount of money required to buy food equivalent to this nutritional level. If you earned more than this amount, you were above the poverty line. //**


அதாவது 2400 கலோரி சத்துள்ள உணவு வாங்கும் அளவு சம்பாதித்தால் போதுமாம் அவர் வறுமைக் கோட்டிற்க்கு மேலுள்ளவர். அதாவது 2004-ல் இந்த அளவு ஒரு மாதத்திற்க்கு 540 ரூபாய்(இது inflation ரேட்டை வைத்து கணக்கிடப்பட்டது. அரசு புள்ளிவிவரம் இல்லை என்று அந்த கட்டுரையாளர் கூறுகிறார்).

ஒரு பாத்திரம் தேய்க்கும் பெண் கூட இதைவிட பல மடங்கு அதிகமாக சம்பாதிப்பார் என்பதும், அவரது குடும்பமும் கூட வறுமையான குடும்பம் என்பதும், ஆனால் அரசு புள்ளிவிவரப்படி அவர் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் வரமாட்டார் என்பதும். ஆக, இவையனைத்தும் அரசின் இந்த போலியான வரையறையை அம்பலப்படுத்த போதுமான விசயங்கள்.

ஏகாதிபத்திய ஆதரவு முன்ணனி அந்த பாத்திரம் கழுவும், தனது பிள்ளைகளை படிக்க வைக்க வழியின்றி வேலைக்கு அனுப்பும், அந்தப் பெண்ணைக் கூட வறுமைக் கோட்டிற்க்கு மேல் உள்ளவர் என்று சொல்லும் சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது.

ஒரு கணக்குக்கு பாருங்கள்: பொருளாதாரத்தின் கீழ்த் தட்டில் உள்ள மக்கள் தங்களது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை உணவுக்கு செல்வழிப்பதாகக் கொண்டால், இந்த 540-யை உணவுக்கு செலவழிக்க அவர்கள் 1620 ருபாய் சம்பாதிக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் இது வரை எத்தனை சதவீதம் என்றும் அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா என்பதையும் செல்வன் கணக்கிட்டுத் தரட்டும்.

ஆக, ஒவ்வொரு ஆண்டும் ஏற்ப்படும் விலைவாசி உயர்வு, மற்ற அத்தியாவசிய தேவைகளான இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவம், போக்குவரத்து இவற்றின் விலை உயர்வு தட்டுப்பாடு,
இவற்றை அடிப்படையாகக் கொண்டு வறுமைக் கோடு தீர்மாணிக்கப்படவில்லை. பிறகு எப்படி இந்த தகவல் சரியானதாக இருக்கும்.

இவர்களின் வாதத்திற்க்கே வந்தால் கூட 1977 லிருந்து 1987 வரையான வருட்ங்களில்தான் வறுமை மிக கடுமையாக குறைந்துள்ளது(அந்த போலி வரையறைப்படி). உறுதியாக இந்த வருடங்களில் உலகமய, தாராளமய கொள்கைகள் இந்தியாவுக்குள் வரவில்லை. ஆக இந்த புள்ளிவிவரம் உண்மை என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொண்டால் கூட அது அவர்களின் பொருளாதர திட்டத்திற்க்கு ஆதரவாக இல்லை. இதில் ப்ளானிங் கமிசன் 19% வறுமைக் கோடுக்கு கீழே என்கிறது, தேசிய கண்க்கிட்டு நிறுவனம்(NSS) 36 % என்கிறது.

ஆக , இவர்களின் விளக்கமும், புள்ளிவிவ்ரமும் உரிக்க உரிக்க வெங்காயம் கதைதான். அதாவது ஒன்னுமில்ல. அப்புறம் அதில் விவாதம் செய்ய என்ன இருக்கீறது.

வேண்டுமானல், இந்த ஏகாதிபத்திய அமெரிக்க அடிவருடி குழுக்கள் ஒன்று செய்யட்டும்,
இந்தியாவில் வறுமைக் கோடு என்பதன் விளக்கத்தை சரியாக திருத்தி, இன்னொமொரு கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரத்தை வைக்கட்டும் அப்புறம் வாதாடலாம்.

விசயம் மீண்டும் நான் சொன்னதுதான், அதாவது, ஆளும் வர்க்கம் தனது கௌரவத்திற்க்காக சில புள்ளிவிவரங்களை தரும் ஆனால் அதே ஆளூம் ர்க்கம் தனக்குள் உள்ள போட்டி பொறாமையால் தரும் புள்ளிவிவ்ரங்களும் வெளிவரும், இது தவிர்த்து ந்டைமுறையிலும் நாம் விசயங்களைப் பார்க்கிறோம். இவற்றின் அடிப்படையில்தான் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.


இவர் கொடுக்கும் அரசு புள்ளி விவ்ரம் அதே அரசு கொடுக்கும் மற்ற புள்ளிவிவரங்களுடன் முரன்படுகிறது என்ற அம்சத்திலும் தோல்வியுறுகிறது. இவர் கொடுக்கும் புள்ளி விவரமே சரியான வரையறைகளைக் கணக்கில் கொண்டு எடுக்கப்படவில்லை என்ற அம்சத்திலும் தோல்வியடைகிறது.

அப்புறம் என்னதான் சொல்லவருகிறேர்கள்?......

ஏன் ஒப்பாரி வைக்கிறேர்கள் அமேரிக்க அடிவருடிகளே??!!!!

அசுரன்.

******************

Related Article:
#1)
கம்யுனிச அவதூறு பதில் -1
#2) டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்

15 பின்னூட்டங்கள்:

said...

//உதிரிப் பாட்டாளி எனும் அமைப்பு சார தொழிலாளர்கள் மிக மிக மிக அதிகமாக உருவாகி வருகிறார்கள். இவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமைகளும் கிடையாது(கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ , கால் டாக்ஸி, நகர சுத்திகரிப்பு(onyx etc), securities, மற்ற பிற சேவை வழங்கும் துறைகளில்). இவர்களீன் சம்பளம் அதலபாதாளம், எந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது. //


மிகவும் சிந்திக்க வேண்டிய வரிகள்..

said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சிவபாலன்.
ஆம், அந்த வரிகள் சிந்திக்க வேண்டிய வரிகள். ஏனெனில் இந்த இயக்கப் போக்கின் இரண்டாவது பலிகடா நடுத்தரவர்க்கம்.

அசுரன்

said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சிவபாலன்.
ஆம், அந்த வரிகள் சிந்திக்க வேண்டிய வரிகள். ஏனெனில் இந்த இயக்கப் போக்கின் இரண்டாவது பலிகடா நடுத்தரவர்க்கம்.

அசுரன்

said...

நல்ல கட்டுரை.

கண்டிப்பாக இந்த கேள்விக்கு செல்வன் பதிலளிப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம்.

நல்ல விவாதம்.

said...

முத்து தமிழினி,

டாலர் செல்வன் ஏற்கனவே பதில் கொடுத்துவிட்டார். அது ஒரு பின்வாங்கும் முகமான பதில். அதன் பொருள் தோல்வி:

**// //** இந்த குறிகளுக்கு இடையே உள்ள செல்வனின் பதில்களைப் பார்க்கவும்.

**************

$elvan's reply:

அரசின் வறுமைக்கோடு பற்றிய விரிவுரை சரியல்ல என்பது உண்மைதான்.என்னை பொறுத்தவரை
ஐநா சபை சொன்ன ஒரு நாளைக்கு 1$ என்ற கணக்கீடே வறுமைக்கோட்டுக்கு மேல் என
உண்மையில் அர்த்தம்.ஒரு நாளைக்கு 20 ரூபா என அரசு சொல்லும் கணக்கீடு நிச்சய்ம்
போதாது


**//ஆனால் நம் அரசு சொல்லும் கணக்கீடு தான் இருக்கிறது.அதை வைத்துத்தான் வாதிட
முடியும்.இந்த கணக்கீடும் பல வருடங்களாக தொடர்ந்து எடுக்கப்படுவதால் இந்த
கணக்கீட்டின்படி மக்கள் முன்னேறுகிறார்கள் என்றால் அதுவும் நிச்சயமாக
முன்னேற்றம் தான்.//***


உதாரணம் சொல்ல வேண்டுமெனில் 1 கிலோ என்று சொல்லிக்கொண்டு முக்கால் கிலோ அளவுள்ள
எடைக்கல்லையே ஒரு வியாபாரி அளக்க பயன்படுத்துகிறான் என வைத்துக்கொள்வோம்.அந்த
எடைக்கல்லை அடிப்படையாக வைத்து தன் மகனின் எடையை அளக்கிறான்.20 கிலோ இருந்த எடை
30 கிலோவாக அதிகரித்தது என்கிறான்.உண்மையில் அது 15 கிலோவில் இருந்து
21.5கிலோவாக அதிகரித்துள்லது


**//ஆக 10 கிலோ எடை உயர்வு என்ற செய்தி தவறாக இருப்பினும் எடை உயர்வு என்ற செய்தி
உண்மைதான்.மகன் வளர்ந்திருக்கிறான்,ஆனால் தந்தை சொல்லும் அளவில் அல்ல. //**


எந்த புள்ளிவிவரத்திலும் ஓட்டைகள் உண்டு.***//ஆனால் அதனால் அவற்றின் நம்பகத்தன்மை
குறைவதில்லை,அவை நேர்மையாக பயன்படுத்தப்படும் வரை.//***


புள்ளீயியல் ஆய்வுகளை எடுத்துக்கொண்டால் அவற்றின் கண்டிப்பாக இறுதியில்
குறிப்பிட்டிருப்பார்கள்.அவை அந்த புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையை
பாதிப்பதில்லை.எனினும் அவற்றை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை
பாதிக்கிறது.


புதிய உலக பொருளாதாரம் தீமைகள் அற்றது அல்ல.இருப்பதிலேயே தீமை குறைவானது என
தான் சொல்ல முடியும்.இதற்கு மாற்று பொருளாதார முறை என எதுவும் இதுவரை
வரவில்லை.பழைய கம்யூனிசம் தான் இதற்கு மாற்று என்றால் அது ஜோக்.


மிகச்சிறந்த குறைகளே அற்ற கோட்பாடு என எதுவும் இல்லை.மதத்தை தான் அதன்
பக்தர்கள் அப்படி சொல்லுவார்கள்
**//:-)//**

said...

நல்லதொரு ஆய்வு.

இப்படி ஒரு கட்டுரை எழுத நீங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தை பிரமிக்க வைக்கிறது. போய்ச்சேர வேண்டியயவ்ர்களிடம் சேருமா?

மேலும் பல அறியாமைக் கண்களைத் திறக்கிறீர்கள்!

நன்றி அசுரன்!!

said...

மலைப்பாக இருக்கிறது உங்கள் உழைப்பு..

நல்ல வாசிப்பும், தேடலும் தெரிகிறது...

உழைக்கும் மக்களாய் ஒன்று சேர்வோம்...

வேறு என்ன சொல்லவென்று தெரியல... atleast ஒரு பின்னூட்ட கயமைத்தனமாக வேணும் அமையட்டும்...

said...

அசுரன்,

ஆழமான ஆரய்ச்சி. வெளிச்சம் பாய்ச்சியதற்கு நன்றி!!!

டாலர் செல்வனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

புண்ணுக்கு புனுகு தடவும் வேலையை இந்த அரசாங்கம் எப்போது நிறுத்தப் போகிறதோ?

ஒரு அதிபயங்கர வீழ்ச்சியை நோக்கி இந்த நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போது உணரப் போகின்றனர் எம்மக்கள் ?

பஞ்சாப் (அ)சிங்கம் மன்மோகனிடமும், செட்டிநாட்டு இள(எழ)வரசர் சிதம்பரத்திடமும் பொறுப்பை கொடுத்தால், பன்னாட்டு முதலை கம்பெனிகளுக்கு கூட்டிக் கொடுக்கும் மாமா வேலையை அன்றி வேறு என்ன வேலை செய்வார்கள் ?

ஒரு பக்கம் உழைக்கும் எம்மக்களின் வாழ்வாதாரங்களை பிடுங்கியாயிற்று. நாட்டிற்கே சோறு போடும் அவர்களை தற்கொலைக்கு தள்ளியாயிற்று. போதாகுறைக்கு ஒரு சாமக் கோடங்கி "நல்ல காலம் பொறக்குது கனவு காணுங்கள், கனவு காணுங்கள்" என குடுகுடுப்பை ஆட்டுகிறார்.

எழுந்திரு தோழா! இனி, உன் விழிகள் சிவந்தால் . . . உலகம் விடியும்!!!

said...

தி.ராஸ்கோலு,

தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி,

//மேலும் பல அறியாமைக் கண்களைத் திறக்கிறீர்கள்!//

தூங்குவது போல நடிப்பவர்களை என்ன செய்யலாம்? :-))

அசுரன்.
***********************

லிவிங் ஸ்மைல்,

வருகைக்கு நன்றி,

//உழைக்கும் மக்களாய் ஒன்று சேர்வோம்...//

இதுதான் வேண்டும். அனைத்து விதமான-இன, மத, சாதி, பால், நிற- வேறுபாடு களைந்து உழைக்கும் மக்கள் ஒன்று சேரும் நாள்தான் இந்த உலகுக்கு விடிவு கிடைக்கும் நாள். அதற்க்கு நாம் ஒவ்வொருவரும் இணைந்து போராட வேண்டும்.

ஓர் கூடி தேர் இழுத்தால்தான் நகரும்.

இன்று சில தமிழ் சர்க்கிள்களும், புதிய காற்றுகளும், சந்திப்புகளும் , ராஜவனஜ்களும், மற்றும் சிலரும் இழுக்கிறோம். வாருங்கள் கைகொடுங்கள்

அசுரன்
***********************

வாங்க சாபாபதி சரவணன்,

//டாலர் செல்வனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//

அதான் அவருடைய பதிலையும் மேலேயே போட்டிருக்கிறேனே? அவ்வளவுதான் சட்டி உடைஞ்சு போச்சி.... :-))


//ஒரு அதிபயங்கர வீழ்ச்சியை நோக்கி இந்த நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போது உணரப் போகின்றனர் எம்மக்கள் ?

பஞ்சாப் (அ)சிங்கம் மன்மோகனிடமும், செட்டிநாட்டு இள(எழ)வரசர் சிதம்பரத்திடமும் பொறுப்பை கொடுத்தால், பன்னாட்டு முதலை கம்பெனிகளுக்கு கூட்டிக் கொடுக்கும் மாமா வேலையை அன்றி வேறு என்ன வேலை செய்வார்கள் ?

ஒரு பக்கம் உழைக்கும் எம்மக்களின் வாழ்வாதாரங்களை பிடுங்கியாயிற்று. நாட்டிற்கே சோறு போடும் அவர்களை தற்கொலைக்கு தள்ளியாயிற்று. போதாகுறைக்கு ஒரு சாமக் கோடங்கி "நல்ல காலம் பொறக்குது கனவு காணுங்கள், கனவு காணுங்கள்" என குடுகுடுப்பை ஆட்டுகிறார்.
///

எனது உணர்வுகளை அதே வடிவத்தில் நீங்களும் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கீறது.



//எழுந்திரு தோழா! இனி, உன் விழிகள் சிவந்தால் . . . உலகம் விடியும்!!! //

ஆம், இனி பொறுப்பதற்க்கில்லை. நமது வாழ்வுரிமையை பறிக்கும் அனைத்து அதிகார வர்க்க அடையாளங்களையும் அடித்து துவம்சம் செய்ய அணி திரள்வோம்

அசுரன்

said...

அசுரன்,

முதலில் உங்கள் உழைப்புக்கு ஒரு ரெட் சல்யூட்!! முத்தமிழ் விவாதத்தில் நான் கவனித்த ஒன்று - வடிவேலு ஒரு படத்தில் கிராம பஞ்சாயத்தில், "என்ன கையப் புடிச்சு இழுத்தியா? என்ன கையப் புடிச்சு இழுத்தியா?" என்று கேட்பாரே அதே பாணியில் தான் திரு "டாலர்" செல்வனும் வேந்தனும் திரும்பத்திரும்ப ஒரே பல்லவியை பாடிக் கொண்டிருந்தனர்.
இதில் 5% விவசாயம் மட்டும் இருந்தால் போதும் அறிவிப்பூர்வ என்ற "கண்டுபிடிப்பு" வேறு.

விவசாயி தற்கொலை செய்கிறானே எலிக்கறி தின்கிறானே என்றால் எதற்கு விவசாயம் என்கிறார்கள்..

மேட்டுக்குடித் தனம் பற்றி படித்துள்ளேன்.. இப்போது நேரிலேயே பார்க்கிறேன்.
அம்பலப் படுத்திய உங்களுக்கு நன்றி.

said...

தலைப்பும் விவரங்களும் எழுச்சி மிகு உள்ளது.

நன்றி.
கரும்பலகை

said...

//மேட்டுக்குடித் தனம் பற்றி படித்துள்ளேன்.. இப்போது நேரிலேயே பார்க்கிறேன்.
அம்பலப் படுத்திய உங்களுக்கு நன்றி. //


ராஜவனஜ்,
மிகச் சரியாக சொன்னீர்கள். கொஞ்சம் கூட மனதில் பிற மனிதர்களின் உணர்வுகளைப் பற்றிய பிரக்ஜை இன்றி ரொம்ப சுலபமாக விவசாயிகள் மீதே குற்றம் சொல்லும் அந்த மேட்டுக் குடி பார்வையை அங்கிருந்த சில அல்ப பிறவிகள் சிற்ப்பாகவே எடுத்துக் காட்டினார்கள்.

அது வெறும் மேட்டுக் குடி திமிர் அல்ல. மணிரத்னம் படத்தில்(ஆயுத எழுத்து) வரும் மேட்டுக் குடி பன்றிகளின் திமிர். அதாவது எந்த விசயத்தைப் பற்றியும் அதன் உண்மையான வடிவில் புரிந்து கொள்ள முயற்சி எடுக்காமல் தின்ற நேரம் போக பொழுது போக்காக சொந்த அரிப்பை தீர்க்கும் முகமாக ஏதேனும் சமூக பணியில் ஈடுபடும் வர்க்கத்தின் திமிர்.

அதனால்தான் எந்த விசயத்தையும் ஆழமாக சென்று கேள்வி கேட்டால் அவர்களிடம் பதில் இருப்பதில்லை.

குறை குடம் கொஞ்சம் அதிகப்படியாகத்தான் தழும்பும்

அசுரன்

said...

//தலைப்பும் விவரங்களும் எழுச்சி மிகு உள்ளது.//


கரும்பலகையின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்,
அசுரன்

said...

அசுரன் அவர்களே பல தகவல்களை அளிக்கும் உங்களின் இக்கட்டுரைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.இன்றைக்கு உண்மையில் புள்ளிவிவரங்கள் உண்மையான தகவல்களை கொண்டுள்ளதா என்பது கேள்விக்குரிய விஷயம்.விவசாயிகளின் வாழ்க்கை தரத்தைபற்றி மிக சரியாக சொன்னீர்கள் .இந்த உண்மைகளை காலம் வெகுவிரைவில் உலகுக்கு உணர்த்திவிடும்.அப்பொழுதாவது புரிந்துகொள்ளட்டும்.

said...

//அசுரன் அவர்களே பல தகவல்களை அளிக்கும் உங்களின் இக்கட்டுரைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.இன்றைக்கு உண்மையில் புள்ளிவிவரங்கள் உண்மையான தகவல்களை கொண்டுள்ளதா என்பது கேள்விக்குரிய விஷயம்.விவசாயிகளின் வாழ்க்கை தரத்தைபற்றி மிக சரியாக சொன்னீர்கள் .இந்த உண்மைகளை காலம் வெகுவிரைவில் உலகுக்கு உணர்த்திவிடும்.அப்பொழுதாவது புரிந்துகொள்ளட்டும். //

Sree,

தங்களின் வருகைக்கு நன்றி, விவசாயிகளின் வாழ்னிலை குறித்த இந்த 'கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்க்கு' என்ற கேள்வியை டாலர் செல்வன் குழுமத்திடம் கேட்டதற்க்கு இன்றுவரை பதில் இல்லை. அவர்களிடமிருந்து வருவதேல்லாம், முதலீடுகள், வேலை வாய்ப்பு, தொழில் நுட்பம். இதில் வேலை வாய்ப்பை பொறுத்த வரை RBI சொல்லுவதும், வேறு பல புள்ளிவிவரங்கள் காட்டுவதும் வேலை வாய்ப்பு ஒரு புறம் அழிக்கப்பட்டு இன்னொரு புறம் வேலை வாய்ப்பு சந்தையை செயற்கையாக பெருக்க செய்யும் தந்திரம் வெளிவருகிறது(Demand for job), தொழில் நுட்பங்களோ- ஒரு பக்கம் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கிடைத்து வந்த கல்வி, மருத்துவம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் பிடுங்கப்பட்டு, மறுபுறம் உலக பணக்கார பன்றிகளுக்கு உயர் தொழில் நுட்ப சேவைகளை வழங்கும் மையாமாக- அதாவது தொழில் நுட்பம் not for comman people என்ற நிலை உருவாகி வருகிறது. இந்த இரண்டையும் மறுக்க இயலாமல் டாலர் தலைமையிலான ஏகாதிபத்திய அடிவருடி முன்னணி, முதலீடு என்ற அம்சத்தில் மட்டும் தனது வாதங்களை உயிர்பித்துக் கொண்டுள்ளது.

இந்த பகுதி கொஞ்சம் complicated(எனது அறிவு வளர்ச்சிக்கு) என்பதால் அதை வெறு விதமாக அடிக்கும் வழியை முத்தமிழ் குழுமத்தில் செயல்படுத்தி வருகிறேன். இங்கு ஒரு விசயம் மட்டும் - அதாவது மூலதனம் (investment க்கு தேவையான பணம்) கூலி உழைப்பிலிருந்துதான் உருவாகிறது. இந்தியாவில் கூலி உழைப்பை தருவதற்க்கு கோடிக்கணக்கான உழைப்பாளர்கள் உள்ளனர். பிறகு மூலதனப் பஞ்சம் எப்படி ஏற்ப்படும். இதை இப்படி நேரடியாக அங்கு வாதட முடியாது என்பதால் சில அடிப்படை தளங்களை(ground) உருவாக்கி பிறகு இந்த வாதத்தை அங்கு வைக்க வேண்டும்.

ஆக, எல்ல முனையிலும் அவர்களின் வாதம் பல்லிளிக்கிறது...... இது போன்ற கருத்துக் குருடு அடிவருடிகள் என்றைக்குமே திருந்த மாட்டார்கள்.

அசுரன்.

Related Posts with Thumbnails