TerrorisminFocus

Thursday, June 18, 2009

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!

லால்கார், மேற்கு வங்கத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியாகும். இங்கு தற்போது ஈழம் அளவுக்கு இல்லாவிடிலும் அதனை ஒத்ததொரு கோடூரமானதொரு தாக்குதலை இந்திய அரசும் அதன் அல்லக்கையான CPM அரசும் மேற்கொண்டு வருகின்றன. துணை ராணுவப் படை உதவியுடன் அங்கு மக்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் போராட்டத்தை முறியடிப்பதுடன், இந்த போராட்டத்தை வழி நடத்தும் மாவோயிஸ்டு புரட்சியாளர்களை ஒழித்து கட்டவும் வேலைகள் நடந்து வருகின்றன.

""Sources say the forces want to minimize casualties and will thus move slowly.""


மேலேயுள்ள வார்த்தைகளின் அர்த்தம் அங்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களை கொன்றொழிக்கும் முடிவில் அரசு படைகள் இறங்கி விட்டன என்பதே ஆகும். இதற்கு தோதாக ஊடகங்களும் தமது வார்த்தைப் பிரயோகங்களை மாற்றிக் கொண்டுள்ளன. சில நாள் முன்பு வரை பழங்குடியின மக்கள் அரசுக்கு எதிராக போராடுவதாக எழுதி வந்த ஊடகங்கள் திடீரென்று நேற்று முதல் மாவோயிஸ்டு அராஜகம் என்று எழுதத் துவங்கியுள்ளன. ஆனால், உண்மையில் அங்கு உள்ள பழங்குடியின மக்கள் தமது வாழ்வாதார உரிமையை பறிக்கும் பன்னாட்டு-தரகு கம்பேனிகளுக்கும், அவர்களின் அல்லக்கையான CPMக்கும் எதிராக மக்கள் கமிட்டி அமைத்து போராடி வருகிறார்கள். இவர்களுக்கான அரசியல் தலைமையைத்தான் மாவோயிஸ்டுகள் வழங்கி வருகிறார்கள்.


தரகு கம்பேனியான ஜிண்டால், இரும்பு எஃகு ஆலை அமைக்க ஏதுவாக காடுகளை அழித்து, அங்குள்ள பழங்குடி மக்களை விரட்டி விட்டு 5000 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ CPM-போலி கம்யூனிஸ்டு பாசிஸ்டுகள் ஏற்பாடுகள் செய்து வருவதை எதிர்த்தே மக்கள் அங்கு போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த ஆறேழு மாதமாகவே நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை சிதைக்க போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், நந்திகிராம பாணி CPM குண்டர் படை தாக்குதல்களையும் தொடர்ந்து ஏவி வருகிறது CPM-போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டு கட்சி. இதற்கு உள்ளூர் CPM காலிகளின் காட்டிக் கொடுப்பு வேறு உதவியுள்ளது.

இன்னிலையில், போலீசின் அடக்குமுறைக்கு எதிராக 600மேலான கிராமத் தலைவர்களை ஒன்று கூட்டி 'போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி''யைக் கட்டியமைத்தனர் மாவோயிஸ்டுகள். இதனைத் தொடர்ந்துதான் CPM குண்டர் படை தாக்குதல்கள் நடந்தன. சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட சி.பி.எம். ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகள் சதிகளைப் புரிந்து கொண்ட பழங்குடியின மக்கள், தாங்கள் கட்டியமைத்துள்ள ''போலீசு அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கமிட்டி'' (கஇஅகஅ) முடிவின்படி, ஏப்ரல் 6ஆம் தேதியன்று கொல்கத்தா நகரில் ஆர்ப்பாட்ட பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினர். பல்வேறு மனித உரிமை ஜனநாயக உரிமைக்கான அமைப்புகளும், எழுத்தாளர்கள் பத்திரிக்கைகள் கலைஞர்கள் உள்ளிட்ட அறிவுத் துறையினரும் பங்கேற்ற இந்தப் பேரணியும் பொதுக்கூட்டமும், லால்கார் பகுதியை இன்னுமொரு நந்திகிராமமாக இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கத் துடிக்கும் போலி கம்யூனிச ஆட்சியாளர்களை மக்களிடம் திரைகிழித்துக் காட்டுவதாக அமைந்தது.

மறுகாலனியாதிக்கச் சூழலில், மக்களின் அடிப்படை வாழ்வாதரங்களை பறிக்கும் உலகமயத் திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் எல்லாம் சீரழிக்கப்பட்டுள்ளன. ஆனால், நக்சல்பாரி புரட்சியாளர்களின் போராட்டம் மட்டுமே வெற்றி பெற்று வருகிறது. அப்படிப்பட்டதொரு போராட்டம்தான் லால்கார் போராட்டம் இதனை சிதைத்து அழித்தொழிக்க மத்திய காங்கிரசும், மாநில CPM-பாசிஸ்டுகளும், இதர பெரு ஊடகங்களும் களமிறங்கியுள்ளனர். இதனை படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு போர் உக்கிரம் பெற்றிருக்கும்.

லால்கார் குறித்து மேலதிக தகவல்களுக்கு பின்வரும் புதிய ஜனநாயகம் கட்டுரையை படிக்கலாம்.

பின்னூட்டத்தில் தெரியப்படுத்தி சுட்டிகள் கொடுத்த தோழர் பூச்சாண்டிக்கு நன்றி

சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.


போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

அசுரன்


Tribals on warpath in Lalgarh; say can work better than govt


Tribals stop paramilitary from entering Lalgarh, reinforcement rushed


Security forces begin ops to free Lalgarh from Maoists

Related Posts with Thumbnails