TerrorisminFocus

Monday, August 14, 2006

அடிமை நாடும், போலி சுதந்திரமும்

சுதந்திரமும் சூழ்ச்சியும்:

1947 - இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளையன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசமான கையாட்களிடம் அவன் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான மும்பை கடற்படை வீரர்களின் எழுச்சியும் தெலிங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டமும் நாடெங்கும் பற்றிப் படர்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும், அன்று காங்கிரசு - முஸ்லிம் லீக் தலைமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு புரட்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தன.


ஒரு மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, இந்தியாவைத் திரைமறைவிலிருந்து ஆட்டி வைக்கும் திட்டத்துடன், தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. இந்தப் போலி சுதந்திரத்திற்கு வயது 60.


இன்று, வாயளவில் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல், வெளிப்படையாகவே நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன ஏகாதிபத்திய வல்லரசுகள். தற்போது நம்மீது திணிக்கப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் உண்மையான பொருள் மறுகாலனியாதிக்கம் என்பதுதான். நமது நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், மக்களின் தேவையையோ நாட்டு நலனையோ கணக்கில் கொண்டு வகுக்கப்படுவதில்லை. மாறாக, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆணையைத்தான் எல்லா அரசாங்கங்களும் பணிவுடன் அமல்படுத்தி வருகின்றன.


இந்தக் கொள்கைகளால் இந்தியத் தரகு முதலாளிகளின் லாபம் விண்ணை முட்டுமளவு உயர்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ மரணக் குழிக்குள் சரிகிறது. இது தெரிந்தும் "இந்தியா ஒளிர்கிறது" என்று குதூகலிக்கிறார்கள் ஏகாதிபத்திய அடிமைகள். உலகையே தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் போர்வெறி பிடித்து அலையும் அமேரிக்க வல்லரசின் எடுபிடியாகவும் ஆசியப் பகுதிக்கான அடியாளாகவும் இந்தியா மாற்றப்பட்டு விட்டது. இந்த அடிமைகளோ, "இந்தியா வல்லரசாவதற்க்கு இதுதான் சிறந்த வழி" என்று குதூகலிக்கிறார்கள்.


இவர்கள் சுதந்திர உணர்வற்ற பிழைப்புவாதிகள், நாட்டுப்பற்றும் சுயமரியாதை உணர்வுமற்ற புழுக்கள் - ஆனால் படித்த புழுக்கள், "ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் எனப் படித்துப் பட்டம் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளாகி லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்; குடும்பத்தோடு அமேரிக்காவில் குடியேறலாம்; பன்னாட்டு முதலாளிகளுடன் சேர்ந்து கூட்டாக இந்தியாவைக் கொள்ளையிடலாம்" என்றெல்லாம் கனவு காணும் இத்தகைய அற்பர்கள்தான் மறுகாலனியாக்க அடிமைத்தனத்தை முன்னேற்றம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள்.


அன்று பகத்சிங் முதலான போராளிகள் நாட்டு விடுதலைக்காக தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த போது இத்தகைய மானமற்ற புழுக்கள் பிரிட்டிஷ் அரசின் பதவி நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். கலெக்டராக, ஜட்ஜாக, போலீசு அதிகாரியாக, அமைச்சராக, துரைமார்களுக்கு தொண்டூழியம் செய்யும் விசுவாசமான அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு வெள்ளைக்காரனின் நிர்வாகத்திறனை மெச்சி, அவன் ஆட்சி நீடிக்க வேண்டுமெனப் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தார்கள்.


அன்றைக்கும் இன்றைக்கும் வேறென்ன வேறுபாடு? அதிகார நாற்காலியில் அந்நியன் நேரடியாக அமர்ந்திருந்தால்தான் காலனியாதிக்கமா? கல்லாவில் அமர்ந்திருந்தால்தான் கடைமுதலாளியா?


"பிரிட்டனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை நிற்க வேண்டுமென்றும், தன்னை மீறி வேறு அரசுகளுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் வெல்லெஸ்லியின் துணைப்படைக் கொள்கை அன்று இந்திய மன்னர்களை நிர்பந்தித்தது. இன்றைய அமேரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கரமிப்புப் போர்களுக்கேல்லாம் இந்திய இராணுவம் அடியாள் வேலை செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறது, இரானுடன் உறவைத் துண்டிக்குமாறு உத்தரவிடுகிறது, இந்திய அணு ஆயத உற்பத்திக்குத் தடை விதிக்கிறது.


அன்று டல்ஹவுஸியின் வாரிசிலிக் கொள்கை, வாரிசு இல்லாத மன்னர்களின் நாட்டை இணைத்துக் கொள்வதாகக் தொடங்கி, பின்னர் எல்லா சமஸ்தானங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதில் முடிந்தது. இன்றோ, 'நட்டமாகும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்' எனத் தொடங்கிய தனியார்மயக் கொள்கை, லாபமீட்டும் பொதுத்துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பசிக்கு விருந்தாக்க வேண்டும் என்று வளர்ந்திருக்கிறது.


அன்று ஜமீன்தாரி, ரயத்வாரி, மகல்வாரி முறைகள் மூலம் விவசாயிகளைப் பிழிந்து கஜனாவை நிரப்பியது பிரிட்டிஷ் அரசு. இன்று அரசுக் கொள்முதல் ரத்து, மானிய வெட்டு, தானியக் கொள்முதலில் அன்னியக் கம்பெனிகள், அதிலும் ஊகவணிகம், விவசாயிகளின் பாரம்பரிய விதைகளையே அன்னியன் உடைமையாக்குவது போன்ற சதிகள் மூலம் விவசாயியைக் கடனாளியாக்கி விவசாயத்தை விட்டே துரத்துகிறது அரசு.


அன்று கந்து வட்டிக்குக் கடன் பட்ட தமிழ்நாட்டின் விவசாயிகளை ஏமாற்றிக் கப்பலேற்றி, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் அவர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. இன்றோ கடன்பட்ட விவசாயிகளின் பிள்ளைகள், 'கொத்தடிமையாவோம்' என்று தெரிந்தே மலேசியாவுக்கு ஓடுகிறார்கள். பஹரைனில் தீக்கிரையாகி சவப்பெட்டியில் வீடு திரும்புகிறார்கள்.


எதுவும் பழங்கதையல்ல. கடந்த காலத்தின் காலனியாதிக்கக் கொடுமைகளைப் பூதக் கண்ணாடியால் பெருக்கிக் காட்டியதைப் போல இன்று நம் கண் முன்னே காட்சி தருகிறது மறுகாலனியாதிக்கம். இதற்கெதிராக நம்மைப் போராட தூண்டும் உந்துவிசையாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக, 200 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளையனுக்கு எதிராக வீரச்சமர் புரிந்திருக்கிறார்கள் தென்னகத்தின் வீரர்கள், தமிழகத்தின் வீரர்கள்!




விடுதலைப் போராட்ட வீர வரலாறு-ஒரு பார்வை:

1801 ஜூன் மாதம் திருச்சியிலிருந்து சின்ன மருது வெளியிட்ட பிரகடனம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. "இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே வெள்ளையர்களை விரட்டியடிக்க சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று திரளுமாறு" மக்களை அறை கூவி அழைக்கிறான் சின்ன மருது. இந்தியா ஒரு நாடு என்ற கருத்து அக்காலத்திய பேரரசர்களிடமே உருவாகியிராத போது துணைக் கண்டத்தின் விடுதலைக்கே குரல் கொடுத்த இந்த அறிக்கைதான் இந்தியாவின் முதல் விடுதலைப் போர்ப் பிரகடனம்.


1795-இல் வெள்ளையருக்கெதிராக திப்பு நடத்திய போரில் தொடங்கி, 1806-இல் வேலூர்க் கோட்டைச் சிறையில் சிப்பாய்கள் நடத்திய புரட்சி வரை நீடித்த இந்தப் போர்தான் இந்தியாவின் உண்மையான முதல் சுதந்திரப் போர். ஆனால் தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிப்பது, இசுலாமியர்களை புறக்கணிப்பது என்ற இந்து தேசியக் கண்ணோட்டத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பெருமைமிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.


1799-இல் சீரங்கப்பட்டினம் கோட்டையின் வாசலில் ஒரு சாதரணப் போர்வீரனைப் போலப் போரிட்டு மடிந்தான் திப்பு சுல்தான். நிஜாமும், பேஷ்வாவும், ஆறுகாட்டு நவாபும் துரோகமிழைத்துவிட்ட நிலையில் தென்னிந்தியா முழுவதும் உள்ள விடுதலை வீரர்களுடன் கூட்டணி அமைத்தான். தீரன் சின்னமலை திப்புவுடன் நின்று வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரைக்கு சின்ன மருது பாதுகாப்பு கொடுத்தான். கும்பினியாட்சியை எதிர்த்து சின்ன மருது நடத்திய போருக்கு திப்பு ஆயுதமும் நிதி உதவியும் வழங்கினான்.


திப்பு சுல்தான் கேளிக்கைகளில் திளைத்திருந்த மன்னனுமல்ல, சின்ன மருது கிணற்றுத் தவளையை ஒத்த பாளையக்காரனுமல்ல; இருவரும் ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழி அறிந்தவர்கள். பிரெஞ்சுப் புரட்சியால் கவரப்பட்ட திப்பு தன்னை 'குடிமகன் திப்பு' என்றே அழைத்துக் கொண்டான். சின்ன மருதுவோ "ஏழை மக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ கும்பினியாரை எதிர்த்துப் போரிட வேண்டும்" என்று கூறி விடுதலைப் போருக்கு மக்களையும் அறைகூவி அழைத்தான்.


சின்னமலை, பூலித்தேவன், சின்ன மருது, வேலு நாச்சியார், ஒண்டிப்பகடை, சுந்தரலிங்கம், கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையத்தேவன் போன்றோர் தனித்தனியாகப் போராடி மடிந்த வீரர்கள் அல்ல. அவர்கள் தமக்குள் கூட்டிணைவுகளை உருவாக்கியிருந்தனர். நெல்லைக் கூட்டிணைவுக்கு கட்டபொம்மனும், திண்டுக்கல் கூட்டிணைவுக்கு கோபால நாயக்கரும், கன்னட நாட்டில் துந்தாஜியும், கேரளத்தில் கேரளவர்மனும், கோவையில் கானிஜகானும் தலைமை தாங்கினர். அனைவரும் இணைந்து உருவாக்கியிருந்த 'தீபகற்பக் கூட்டிணைவு' தனது ஆட்சிக்கே பேராபத்து என்று கும்பினிக்காரன் ஆஞ்சினான்.


1800-1801-ஆம் ஆண்டுகளில் மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்தப் போரில் சுமார் 30,000 வீரர்கள் தென்னிந்தியா முழுவதும் கும்பினியாட்சியை நிலைகுலைய வைத்திருக்கின்றனர். சாதி மத வேறுபாடுகளைக் கடந்து கிளர்ந்தெழுந்த இந்தப் போராட்டம் 1806-ஆம் ஆண்டு வேலூர் புரட்சியில் முடிவடைந்தது. இந்த விடுதலை வீரர்கள் காலனியாதிக்கத்தை ஒழிப்பதுடன் தம் கடமை முடிந்ததாகக் கருதவில்லை. கண்ணீரில்லாத மகிழ்ச்சியான வாழ்வை மக்கள் பெற வேண்டும் எனக் கனவு கண்டான் சின்ன மருது. பிரெஞ்சு புரட்சியால் கவரப்பட்ட திப்புவோ நாட்டைத் தொழில்மயமாக்கவும், மக்களுக்கு நல்வாழ்வு வழங்கவும் கனவு கண்டான். ஒரு சோசலிச இந்தியாவைப் படைக்க விழைந்தான் பகத்சிங்.



தூரோக வரலாறும் - தேர்தல் அரசியலும்:

அன்று அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்; இன்றோ அவர்களது கனவும் தோற்றுக் கொண்டிருக்கிறது. பகத்சிங்கின் மண்ணிலிருந்து ஒரு மண்புழுவாம் மன்மோகன் சிங்! மருதுவின் சிவகங்கை மண்ணிலிருந்து சிரழிவுவாதி சிதம்பரம்! வீரர்களின் மண்ணிலிருந்து தப்பிப் பிறந்துவிட்ட இந்த ஈனர்கள், கூசாமல் துரோகிகளின் மொழியில் பேசுகிறார்கள்.


சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட பின் சிவகங்கை அரியணையை கும்பினியாரிடமிருந்து பிச்சையாகப் பெற்ற கவுரி வல்லபத் தேவன், கர்னல் அக்னியூவின் காலில் விழுந்து வணங்கினான் என்கின்றன ஆவணங்கள். "200 ஆண்டுகள் எங்களுடன் வணிகம் செய்தீர்கள். மேலும் 200 ஆண்டுகள் வணிகம் செய்ய உங்களை அழைக்கிறோம்" என்று கூறி இன்றைய ஐரோப்பிய முதலாளிகளிடம் பல்லிளிக்கிறார் ப.சிதம்பரம்.


'கடவுளே' என்று கும்பினியாரை விளித்துக் கடிதம் எழுதிய துரோகி தொண்டைமான், சின்ன மருதுவை 'நாய்' என்று கடிந்து ஏசுகிறான். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங்கோ காலனியாட்சி செய்த நன்மைகளுக்காக பிரிட்டனுக்கு நன்றி கூறுகிறார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக போராடும் உண்மையான நாட்டுப்பற்றாளகளான நக்சல்பாரிகளை "இந்தியாவின் மிகப்பெரிய உள் நாட்டு அபாயம்" என்று கூறி ஒடுக்குவதற்கு திட்டம் தீட்டுகிறார்.


அன்று கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தது தொண்டைமானின் கூலிப்படை. இன்று கோலாவுக்கு எதிராக போராடும் அனைவரையும் ஒடுக்க நெல்லை மண்ணிலேயே எதிரிக்கு ஏவல் செய்கிறது தமிழக போலீசு. அன்று வெள்ளையனை எதிர்த்த விடுதலை வீரர்களைத் தன்னுடைய படைகளைக் கொண்டே ஒடுக்கினான் ஆற்காட்டு நவாப்; இன்று, ஜப்பானிய ஹோண்டா நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் தொழிலாளர்களை நரவேட்டையாடுகிறது அரியானா போலீசு.



மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க உறுதியெடுப்போம்:

முந்தைய காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடியது இந்த மறுகாலனியாதிக்கம். இதனை முன்னேற்றம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். பதவிக்கும் பவிசுக்கும் ஆசைப்பட்டு அன்று ஆங்கிலேயருக்குச் சேவகம் செய்தவர்களை 'ஈனப்பிறவிகள்' என்றான் சின்ன மருது. இன்று நாடே அன்னியனுக்கு அடிமையாகி வருவதை அறிந்தும் அமைதி காப்பதும், அலட்சியம் காட்டுவதும் கூட ஈனச் செயல்தான்.


விடுதலைப் போரில் முதல் குரல் எழுப்பிய தமிழகத்திலிருந்து இன்றைய மறுகலனியாக்க எதிர்ப்புப் போரும் துவங்கட்டும்! விடுதலைப் போராளிகளின் தியாக வரலாறு நம்மை முன்னோக்கிச் செலுத்தும் உந்து விசையாகட்டும்!


************

மேலே உள்ள கட்டுரை புதிய காற்று என்ற வலைப்பூவில் இருந்த ஒரு பதிவிலிருந்து மறுபதிப்பு செய்யப்படுகிறது.

*****

தொடர்புடைய பதிவுகள்:

47 பின்னூட்டங்கள்:

said...

போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்த - பின்னூட்ட கயமைத்தனம் #1

said...

அசுரா!

"இரவில் பெற்றோம்; இன்னும் விடியவே இல்லை" என்று சொன்ன புதுக் கவிஞனின் வாக்கு என்றும் நிலைத்து நிற்கும் வகையில் இந்திய விடுதலை உள்ளது.

அமெரிக்கா இந்தியாவை(முழு உலகையும்தான்) மூன்று வகையில் ஆக்கிரமித்துள்ளது.

1)உலகமயமாக்கல்:-

இதனால் உள்ளூர் உற்பத்தியும் அதனைத் தொடர்ந்து உற்பத்தியாளனும் ஒழிக்கப் படுவார்கள். உள்ளூர் சரக்கை விட அமெரிக்கச் சரக்கு விலை போகும். உதாரணமாக அமெரிக்காவின் 350மி.லி.பெப்சி அரபு நாடுகளில் ஒரு ரியால் அல்லது திர்ஹம் விலை. ஆனால் உள்ளூர் உற்பத்தியான பெட்ரோல் ஒரு காலன் (ஏறத்தாழ 5 லி.) 5 திர்ஹம். இப்போது புரிகிறதா?

2) ஊடகம்:-

அமெரிக்காவின் ஊடகங்களான சி.என்.என் fox போன்றவற்றின் வழியாகப் பண்பாட்டுச் சீரழிவையும் பொய்ச் செய்திகளையும் பரப்ப முடியும். இதைப் பார்த்துத்தான் இந்திய ஜி டிவி சன் ஜெயா எல்லாம் ஆடுகின்றன.

3) பேரழிவு ஆயுதங்கள்:-

ஆயுத விற்பனையின் மூலமே பொருளாதாரப் பெருக்கம் கொண்ட அமெரிக்கா உலகில் என்றும் போர் நீடிக்கத் தனது குள்ளநரித் தந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டே இருக்கும். அதற்கு அடிதாங்க இங்கிலாந்து.

உலகில் அமெரிக்கா இருக்கும் வரை எந்த நாடும் சுதந்திர நாடு என்று சொல்லிக் கொள்ள முடியாது.

said...

1.ஊழல்
2.வறுமை
3.வேலைஇன்மை
4.மத வெறியும் அதன் விளைவான சிருபான்மை தீவிரவாதமும்
5.பன்னாட்டு நிறுவனங்களின் மறு காலனியாதிக்கம்
6.தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான அநியாயங்கள்
7.ஓட்டுப்பொறுக்கி கழிசடை அரசியல்
8.சினிமா சீரழிவு கலாச்சாரம்
9.உழைக்கும்மக்களுக்கெதிரான அடக்குமுறைகள்
இவை எல்லாம்நாம் பெறவேண்டிய உண்மையான விடுதலைகள். போலித்தனமான சுதந்திரம் மேட்டுக்குடிகளுக்கும், அரசியல், அதிகார வர்க்கத்துக்கும் இனிப்பாக இருக்கலாம். உழைக்கும் வர்க்க அடித்தட்டு மக்களின் அவலம் அப்படியேதான் இருக்கிறது.

முதலாளித்துவ போலி சுதந்த்திரத்துக்கு ஆதரவு பேசும் அரைவேக்காடுகளுக்கு புரியும்படி எழுதப்பட்டுள்ள கட்டுரைக்கு மிக்க நன்றி.


இஸ்ஸத்

said...

Adi Athiradi,

You have identified the Problems Correctly.

Thanks and Regards
Asuran

said...

//முதலாளித்துவ போலி சுதந்த்திரத்துக்கு ஆதரவு பேசும் அரைவேக்காடுகளுக்கு புரியும்படி எழுதப்பட்டுள்ள கட்டுரைக்கு மிக்க நன்றி.//

Hats Off

Izaath.....

Thanks,
Asuran

said...

அசுரன்,
புரட்சிகரமான கருத்துக்கள். நிச்சயம் எல்லோரும் சிந்திக்கவேண்டியதுதான். இந்தச் சிந்தனைகள் நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை வகைப்படுத்தவேண்டுமே தவிர நம்மை தனிப்படுதக்கூடாது.

உலகளாவிய அரசியல், உலகளாவிய வணிகமெல்லாம் இல்லாமல் இன்றைக்கு ஒரு நாடும் இல்லை எனச் சொல்லலாம்.

கொள்கை அடிப்படையில் வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்து நிற்பது ஒரு தனிமனிதனுக்கு இயலும் ஒரு நாட்டுக்கே இயன்ற விஷயமா அது?

சிவப்புக் கொடி நாடுகள்கூட அப்படியொரு வரைமுறையில் கட்டுக்கோப்பிலிப்போது இல்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்க்கப்படவேண்டியதே அதே சமயம் உலகளாவிய வணிகத்தில் நமக்கு என்ன பங்கு என்பதைத் தேடிக் கொள்வதே சிறந்தது. இதற்கக சில சமரசங்கள் செய்வதும் தப்பில்லை.

வியாபாரத்தில் பல யுத்திகள் தேவைப் படுகின்றனவே.

சமரசம் இல்லாமல்தான் பணம் சேர்ப்பேன் என்றால் எப்படி? எந்த வேலையில் சமரசம் இல்லை?

உங்களின் பல கருத்துக்கலோடு ஒத்துப் போகிறேன்.

said...

சிறில் அலெகஸ்,

முதல் முறை வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி.

//உலகளாவிய அரசியல், உலகளாவிய வணிகமெல்லாம் இல்லாமல் இன்றைக்கு ஒரு நாடும் இல்லை எனச் சொல்லலாம்.//

இதை யாரும் மறுக்கவில்லை. க்யுபா, வெனிசுலா, மற்றும் பல லத்தீன் அமெரிக்க நாடுகள் உலகாளாவிய வணிகம் செய்யவில்லையா?

அவை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லையா?

இந்தியா போன்ற நாடுகளில் நடக்க இருக்கும் புரட்சி என்பது புதிய ஜன நாயக புரட்சி. இது சாரம்சத்தில் ஒரு முதலாளிய புரட்சி.

அதாவது முதலாளி செய்ய வேண்டிய புரட்சியை உழைக்கும் வர்க்கம் செய்வது.

அதனால் இந்திய தொழில் நுணுக்க வல்லமையை பரவலாக்கி வளர்க்கும் காலம் வரை தனியார்-அரசு இணைந்த ஒரு பொருளாதாரம் இருக்கும். அதுதான் சீனாவில் இருந்தது.

எடுத்துக்காட்டு 1970 வரையான சீனா.

அங்கு(சீனாவில்) தேசிய முதலாளிகள்(வெள்ளையன் போன்றவர்கள்) ளிடமிருந்து அரசு வன்முறையாக சொத்துக்களை பறிக்கவில்லை.


சீனா அந்த காலகட்டத்தில் தனது திட்டங்களை கடந்து சாதனை படைத்தது.

ஆனால் உலகளாவிய வணிகம் அல்ல பிரதான நோக்கம், உள் நாட்டு சுயதேவை பூர்த்தி செய்வதும், உள் நாட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதும். அதற்க்காக அடிமை சேவகம் செய்யும் இந்த அரசு தூக்கியெறியப்படவேண்டும்.

உலகாளாவிய வணிகம் என்பதும் புரட்சிக்கு பிந்திய சமூகத்தில் இருக்கும். இந்தியா ஒரு தனிச் சங்கிலியாக அறுந்து போக முடியாது.

இன்னும் சொன்னால் இந்தியாவில் ஏற்படும் புரட்சியே ஒரு உலகாளாவிய பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விசயம்தான். உலக வணிகம் தவிர்க்க இயலாமல் புரட்சியையும் வணிகம் செய்கிறது.


//அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்க்கப்படவேண்டியதே அதே சமயம் உலகளாவிய வணிகத்தில் நமக்கு என்ன பங்கு என்பதைத் தேடிக் கொள்வதே சிறந்தது. இதற்கக சில சமரசங்கள் செய்வதும் தப்பில்லை.

வியாபாரத்தில் பல யுத்திகள் தேவைப் படுகின்றனவே.//

உலகாளாவிய வணிகத்தின் நோக்கம் என்ன?

வியாபாரம்தான் - மனித சமூகத்தின் ஒரே பொருள் உற்பத்தி/விநியோக முறையா?

வேறு வழிகளில் இது வரை செய்யப்பட்டதில்லையா?

சொவியத் ரஸ்யா இருக்கிறது, மாவோவின் சோசலிச சீனா இருக்கிறது...


பணம் ஒரு இடைப் பொருள் மட்டுமே. அது பண்டமாற்றுக்கான பொருள் மட்டுமே. இந்தியாவில் ஒரு புதிய ஜன நாயக புரட்சிக்கு பின்போ அல்லது மேற்கு நாடுகளில் ஒரு சோசலிச புரட்சிக்கு பின்போ பணம் என்பது இருக்காது என்று தங்களுக்கு யார் சொன்னது.

அப்படிப்பட்ட ஒரே இரவிலான மாற்றங்களை ஆன்மிகவாதிகள் தான் சொல்வர்ர்கள்(அற்புதங்கள் என்று).

பொருள்முதல்வாதியான கம்யுனிஸ்டுகள் நடைமுறையை, யாதார்த்தத்தை எந்த காலத்திலும் நிராகரிப்பதில்லை.


அமேரிக்காவின் பணம் அங்கு கெத்ரீனா சூறாவளி அடித்தபோது ஒன்றையும் பிடுங்கிப் போட வக்கற்று இருந்தது(டெக்ஸாஸ் கவர்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு துண்டு துணிகூட கொடுக்க வழியின்றி கையை விரித்தார். அவர் கூறீய காரணம் டெக்ஸாஸில் எல்லாம் பணம் கொடுத்து தனியாரிடம் வாங்க வேண்டும்.).

வளங்கள் அய்யா..... வளங்கள் தான் பிரதானம்...

அதை மனித சமுகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதுதான் பிரதானம்.

சீனாவில் ஒரு நதி(மஞ்சள் நதியல்ல. மற்றொரு நதி) அது தொடர்ந்து பல ஆயிரம் வருடங்களாக கடும் துயரத்தை கொடுத்து வந்தது. அந்த வருடம் ஜூலை மாதம் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களை அந்த நதி கொன்றது.

மாவோ ஒரு அறைகூவல் விடுத்தார். அந்த நதியை கட்டுபடுத்த,

நாலரை லட்சம் மக்கள் திரண்டு அந்த நதியின் பல்வேறு உப நதிகாள் இவற்றின் கரைகளை உயர்த்தினர். ஒரே மாதத்தில் வேலையின் 5இல் ஒரு பங்கு முடிக்கப்பட்டது. மொத்தம் உலகின் சுற்றளவு போல 37 மடங்கு நீளத்திற்க்கு 3அடி உயரம் 3 அடி அகலம் உள்ள சுவர் எழுப்பும் அளவுக்கு மண் வெட்டி எடுக்கப்பட்டு அந்த தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டது.

இதுபோல ஒரு விசயத்தை - மக்கள் தங்களது விசயங்களை தாங்களே நிர்வாகித்துக் கொள்ளும் ஒரு சமூகத்தை, அரசு ஒரு காவல்காரன் மற்றும் CO-ORDINATOR வேலையை மட்டும்(அதுவும் சுற்றி ஏகாதிபத்திய அச்சுறுத்தல் காரணமாக் காவல்காரன் வேலை) பார்க்கும் ஒரு சமூகத்தை காட்டுங்களய்யா?

இது போல பல அற்புதங்கள் அங்கு நிகழ்த்தப்பட்டன (கொசு ஒழிப்பு இயக்கம் etc).

நாடு அடிமையாகிறது என்ற எனது கருத்துடன் நீங்கள் ஒத்துப் போகிறீர்கள் என்றால் எனக்கு மிக்க சந்தோசம்.

எனது பதில்கள் பற்றிய தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தவும்.

தங்களது சந்தேகங்களை தெளிவாக்கவும்.... எனது தவறுகளை திருத்திக் கொள்ளவும்...


நன்றி,
அசுரன்.

said...

உங்கள் பதிலும் உங்கள் பதிவு போலவே கார சாரமாக உள்ளது :)

கம்யூனிஸ்ட் நாடுகள் பத்தி சொல்றீங்க மேற்கு வங்காளத்தில் அல்லது கேரளத்தில் இவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள்?

உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாட்டு வணிபம் தேவைப் படுகிறதே?

சைனாவும் இதைப் பின்பற்றவில்லையா? தென் அமெரிக்க நாடுகள் எதுவும் இந்தியாவைப் போல வளர்ச்சி மிகுந்ததாகவும், உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இல்லையே. பல தென் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவை நேரடி அல்லது மறைமுகமாக சார்ந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைமாதிரிதான் கதை... என்னைக் கேட்டால் கூழும் முக்கியம் மீசையும் முக்கியம். அதனால மீசைய கொஞ்சம் வெட்டி விட்டுட்டு கூழ் குடிப்பது நல்லது... சமரசம்.

ஏதோ எனக்குத் தெரிந்தது. உலக அரசியலில் என் அறிவு மிகக் குறைவே.. நீங்கள் எனக்கு பதில் சொல்லாவிட்டாலும் நான் கவலைப் படமாட்டேன்..

என் அரியாமையை நீக்க பதில் அளிக்கிறீர்களென்றால் நன்றி.

உங்கள் பதிவின் அடிப்படை நோக்கம் நாம் தலை நிமிர்ந்து நிற்கும் ஒரு நாடாக வரவேண்டும் என்பதே அதை மதிக்கிறேன்.

:)

said...

//கம்யூனிஸ்ட் நாடுகள் பத்தி சொல்றீங்க மேற்கு வங்காளத்தில் அல்லது கேரளத்தில் இவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள்?//

இவையெல்லாம் கம்யுனிஸ்டுகள் கிடையாது.
ஏன் இவை கம்யுனிஸ்டுகள் கிடையாது என்பதற்க்கு அவர்கள் கம்யுனிசத்தை நடைமுறையில் கொண்டவர்கள் அல்ல என்பதுதான் சுலபமான பதில்.


//உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாட்டு வணிபம் தேவைப் படுகிறதே?//

வெளி நாட்டு வணிகம் பற்றிய எனது முந்தைய பின்னூட்டத்திலேயே சொன்னதுதான். அதாவது வெளி நாட்டு வணிகம் புரட்சிக்கு பிந்தைய அமைப்பிலும் இருக்கும்.

ஆனால் தாங்கள் சொல்லுவது போல் வெளி நாட்டு வணிகம் உள் நாட்டு தேவைக்கு மிக மிக முக்கியமான ஒன்று என்பது உண்மையல்ல.

ஒரு வேளை 30 கோடி ஜனங்களுக்கு வேண்டுமானால் ஏதொ ஒரு வகையில் அது குறைந்த பட்ச தேவையாக இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மக்களுக்கு இன்றைய இந்த சமூக அமைப்பிலும் கூட வெளி நாட்டு வணிகத்தால் ஒரு புண்ணாக்கு பலனும் கிடைப்பதில்லை.(புண்ணாக்கு - இது காரசாரத்திற்க்காக உபயொகப்படுத்திய வார்த்தை. தய்வு செய்து தவறாக எண்ணாதீர்கள். கருத்துக்களை விமர்சனம் செய்யும் போது எனது அணுகுமுறை சிறிது காட்டுத்தனமாக இருக்கும். தனிப்பட்ட முறையில் இனிமையானவன் என்று நண்பர்கள் சொல்லுவார்கள் :-))


//சைனாவும் இதைப் பின்பற்றவில்லையா? தென் அமெரிக்க நாடுகள் எதுவும் இந்தியாவைப் போல வளர்ச்சி மிகுந்ததாகவும், உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இல்லையே. //


china currently is not a communists state.

இந்தியாவின் வளர்ச்சி என்பதை அப்ப்டியே இயந்திரகதியாக லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பொருத்திப் பார்க்க முடியாது. இந்தியா மிகப் பெரிய நிலப்பரப்பில் பல்வேறு diversity(பூகோளம், தட்பவெப்பம், வளங்கள், சாதி etc).

ஒன்றுமே இல்லாத க்யுபா கம்யுனிசத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமலேயே மக்களின் அடிப்படை வசதிகளை தீர்த்து வைத்துள்ளதே...... எல்லா வளமும் உள்ள இந்தியா மாபெரும் அற்புதங்களை நிகழ்த்தும் என்பதற்க்குத்தான் மாவோவின் சீன எடுத்துக்காட்டை சொன்னேன்.

மேலும் இந்தியா சில விசயங்களில் அவர்களை(லத்தீன் அமெரிக்கா) விட பெட்டர். பல விசயங்களில் உலகிலேயே worst என்ற நிலைதான் உள்ளது.

நமக்கு ஒரு பாரம்பரியமான செழுமையான வரலாறு உள்ளதை மறந்து விடுகிறேர்கள்.


//கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைமாதிரிதான் கதை... என்னைக் கேட்டால் கூழும் முக்கியம் மீசையும் முக்கியம். அதனால மீசைய கொஞ்சம் வெட்டி விட்டுட்டு கூழ் குடிப்பது நல்லது... சமரசம்.//

இது எனக்கு புரியவில்லை எனவே பதிலளிக்கவில்லை.


//நீங்கள் எனக்கு பதில் சொல்லாவிட்டாலும் நான் கவலைப் படமாட்டேன்..//

தங்களது சின்சியாரிட்டியை நான் மதிக்கிறேன். தங்களுடன் ஒரு ஆக்கப்பூர்வமான விவாதத்திற்க்கு என்றைக்குமே தயாராக உள்ளேன். எனவே தயங்காமால் எந்த வித கருத்துக்களையும் முன்வைக்கவும்.



//என் அரியாமையை நீக்க பதில் அளிக்கிறீர்களென்றால் நன்றி.//

பதிலுக்கு நீங்களும் எனது அறியாமையை தயங்காமல் சுட்டிகாட்டி உதவி செய்ய கோருகிறேன்.



//நாம் தலை நிமிர்ந்து நிற்கும் ஒரு நாடாக வரவேண்டும் என்பதே அதை மதிக்கிறேன்//

நானும் மதிக்கிறேன்.


தங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

எனது 'அனானிக்கு ஒரு பதில் - புரட்சி, கம்யுனிசம், அதிகார ருசி' என்ற பதிவில் நான் இட்ட பின்னூட்டங்களில் சில பயனுள்ள தகவல்கள் உள்ளன. விருப்பட்டால் படித்து பார்க்கவும். மேலதிகமான புரிதலுக்கு உதவும்.

நன்றி,
அசுரன்

said...

போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்த - பின்னூட்ட கயமைத்தனம் #3

said...

போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்த - பின்னூட்ட கயமைத்தனம் #4

said...

போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்த - பின்னூட்ட கயமைத்தனம் #5

said...

போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்த - பின்னூட்ட கயமைத்தனம் #6

This post alone is not appearing in Thamizmanam.

said...

சமீபத்தில் நான் விரும்பி படித்த ஒரு பதிவு. உலகமயமாக்கல் தவிர்க்க முடியாத ஒன்றானாலும், தனித்துவத்தை ஈடாக தந்து சில உடன்படிக்கைகளில் கையொப்பம் இடுவதை தவிர்த்திருக்கலாம். சில அமைச்சர்களின் குடும்ப விடுமுறைக்காகவும் ஸ்விஸ் வங்கியில் பணமுதலீட்டுக்காகவும் தம் மக்களை பணயம் வைத்து தடுப்பூசிகள் பரிசோதனைக்கு ஒப்புகொண்ட கேவலம் நடந்திருக்கிறது.

said...

தங்கள் வருகைக்கு நன்றி தேன் துளி,

//உலகமயமாக்கல் தவிர்க்க முடியாத ஒன்றானாலும், தனித்துவத்தை ஈடாக தந்து சில உடன்படிக்கைகளில் கையொப்பம் இடுவதை தவிர்த்திருக்கலாம். சில அமைச்சர்களின் குடும்ப விடுமுறைக்காகவும் ஸ்விஸ் வங்கியில் பணமுதலீட்டுக்காகவும் தம் மக்களை பணயம் வைத்து தடுப்பூசிகள் பரிசோதனைக்கு ஒப்புகொண்ட கேவலம் நடந்திருக்கிறது. //

உலகமயம் என்ப்து ஏகாதிபத்திய சந்தை வெறிக்கு தீனி போடும் ஒரு திட்டமே. ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவான அந்த நாடுகளில் உருவாக வாய்ப்பான புரட்சிகர சூழலை தவிர்க்கவும் தள்ளிபோடவும் உலகமயம் அதற்க்கு தேவைப்படுகிறது.

உண்மையில் ஏகாதிபத்தியத்தின் இருப்பு அதற்க்கு எதிரான எதிர்ப்பை உலகமயமாக்கியுள்ளது.

ஆகவே அந்த அடிப்படையில் உலகமயம் தவிர்க்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.


//வங்கியில் பணமுதலீட்டுக்காகவும் தம் மக்களை பணயம் வைத்து தடுப்பூசிகள் பரிசோதனைக்கு ஒப்புகொண்ட கேவலம் நடந்திருக்கிறது.//

இந்த காரணங்களால்தான் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என்கிறோம். இன்னுமொரு விடுதலைப் போராட்டத்தின் தேவை நாளுக்கு நாள் மிக அதிகமாகி வருகிறது.

எவ்வளவு கொடுமை பாருங்கள். ஒரு பக்கம் பேடன்ட்ஸ் ரைட்ஸ் மூலமாக கிடைத்து வந்த மருந்து பொருள் விலையை ஏற்றி கிடைக்கவிடாமல் செய்து மறுபுறம் மருந்தில்லாமல் தவிக்கும் இந்திய ஏழைகளை பரிசோதனைச் சாலை எலிகளாக பயன்படுத்த கையெழுத்திட்ட வேசிகளை என்ன செய்யலாம்?....

இது குறித்து சில கட்டுரைகள் புதிய ஜன நாயகம் பத்திரிக்கையில் வந்துள்ளன படித்துப் பாருங்க்ளேன்.(The link for the book is provided in this blog)

சில மேலதிகமான தகவல்கள்:

==> 30,000 deaths/year due to rabies(dog bite) still govt(BJP) banned low cost rabies manufactured by Kings Institute(Govt) for the shake of MNCs capturing Indian market. International Patents Right has dwindled our already suffering health care system. The first affected is Cancer drug rosed from 250 Rs to 800 Rs. Rabies 4.50 Rs in Govt hospital to 750Rs in Private.

==> 50% world's Malnutritioned Children are in India.

==> World's biggest AIDS hub(still reacent budget increased tax on AIDS and Cancer drugs)

==> 70% of people are pinned up with Agri field, Which contributes only around 5% of GDP(thus 5% of our economy is shared by 70% of people)

==> 60% of Indian children are malnutritioned which is higher than sub sahara.

==> India ranked 7th for world's most dangerous country for children.

==> India's slipped down to 147th rank in social Indicator(Health, Education, food, Child care etc) from 127th rank the previous year.

==> 40% of Indians are half starved.

==> Seasonal death tolls - Summer 700, Rainy 700, Winter 700.

==> 1 Lakh farmers suicide death in 7 years(this is govt statistics. The real statistics will be around 2 Lakhs, as govt rejected most of the Suicide as not Farmers on technical ground-Ex: Wife of a farmer is not a farmer as she is not entitled to any farming land).

==> 70,000 small scale industries closed in karnataka alone in the last 7 years.

==> After globalisation the jobs created by IT & ITES and the other second level third level jobs created by this fields are around 4 to 5 lakhs. The jobs lost due to the closer of small scale industries and labour policies of big corporates are around 13 lakhs. These reserve people are now serving the profit by working as a contract employee. No job secutiry.

==> TCS charimen warned in the CII meeting in Mumbai on Sep 2005, that around 40 crore unemployed will be in India on 2016. That is the biggest threat to India. The recent report by govt says around 28 crore unemployed will be in India on 2020. RBI statement on 2005 December says employement growth has diminished after Globalisation.

==> The agri field is not modernised and they are coming to cities as neo nomads to sell their low cost labour. This huge internal diaspora population going to be the biggest internal threat to India. Especialy the middle class. After the farmers are driven away from Agri field it will be in the hands of MNCs to serve their market needs(the market may not be India).

==> While water scarcity is affecting everywhere. And UNO chief Kofi annan says Water wars will be the future wars. Every where water resources are provatised. Ganga was sex brokered by Vajpayee to sues demodarant. Thamirabarani was brokered to Coke(liter 1.2 paise). And lots of other rivers were given to private companies. A recent report says there wil be huge water scarcity in briton. The british govt is advising people to consume water responsible. When water scarcity hit europe Indian water resources will serve their daily need. But we Indians will end up only with the list of Indians working in MNC.

==> The Seed act prevents farmers holding seeds. They have to get license for that. Is seed a amunition?. No, But the act is to serve the Mansonta like genitically modified Seed companies to rule our Agri field.

==> India became poor due to colonial exploitation by British. Where as our PM(Who born from the place where Bhgath sing also born) went to UK to receive award from Oxford University, there he thanked our british master for their colonial rule and he said India benifitted from Colonial era.




எனது மற்றைய கட்டுரைகளையும் படித்து கருத்துச் சொல்லுங்களேன்.

நன்றி,
அசுரன்

said...

போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்த - பின்னூட்ட கயமைத்தனம் #7

said...

அசுரன் அவர்களே

நிச்சயம் நல்ல பதிவு.

நிறைய பேர் பின்னூடம் போடத்தற்கு காரணம் இதில ஆழ் அறிவு இல்லாததால் கூட இருக்கலாம்..

உண்மையில் இந்த விசயத்தைப் பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது.

said...

நல்ல விசயத்திற்காக பின்னூட கயமைத்தனத்தை வரவேற்கிறேன்.--1

மற்றவர்களும் இதில் கலந்துகொள்ளும் வரை.. இது தொடரும்..

said...

அசுரன் அவர்களே

உங்கள் கேள்விகளை தனிப் பதிவாக போட்டு உளறிவைத்திருக்கிறேன்.. நேரம் கிடைக்கும் போது அப்படியே வாங்க...

said...

நல்ல விசயத்திற்காக பின்னூட கயமைத்தனத்தை வரவேற்கிறேன்.--2

said...

//தென்னிந்தியாவின் பெருமைமிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது //

இந்த தகவல் மிகவும் வேதனையளிக்கிறது..

said...

//பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோ பியா //

உங்கள் இந்த பதிவில் பின்னூடமிட்டிருந்தேன்... தயவுசெய்து பார்க்கவும்..

said...

எனது உள்ளத்தின் உணர்வுகளை உங்கள் பதிவில் கண்டேன்.மிக மிக அருமையான பதிவு.நல்ல பல சிந்தனைகளை தூண்டும் கருத்துக்களை மிக அருமையாக எழுத்தில்வடிக்கும் உங்கள் திறமையை மனதார பாராட்டுகிறேன்.உண்மையான ஜனநாயகத்துக்கு உங்கள் பதிவுகள் நிச்சயம் வழிகாட்டியாய் அமையும்.இந்த நாட்டின் விடுதலைக்கு தங்கள் இன்னுயிரை இழந்து மறைந்த தியாக தலைவர்களின் வீரமும் நாட்டுபற்றும் நீர்த்துப்போக அனுமதித்தால் இந்தியா என்ற தேசம் இல்லாமலன்றோ போய்விடும்.

said...

போலி சுதந்திரத்தை அம்பலப்படுத்த - பின்னூட்ட கயமைத்தனம் #6

said...

இது நல்ல விசயத்திற்காக..-3

said...

இது நல்ல விசயத்திற்காக..-4

said...

நீண்ட நாளைக்குப் பின் வலைமேய வந்துள்ளதால், நல்ல பதிவு ஒன்றை மேலெழுப்ப என்னால் ஆன பின்னூட்டம்.

said...

சளைக்காமல் பின்னூட்டக் கயைமைத்தனத்தில் எனக்கு உதவி செய்த நண்பர் சிவபாலனுக்கு எனது சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....

தொடர்ந்து இது போல உதவி செய்ய விரும்பும் நண்பர்களை வரவேற்கிறேன்(வேற வழி) ;-)))

நன்றி சொல்வதிலும் பின்னூட்டக் கயைமைத்தனம் செய்யும் எண்ணம் உள்ளது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

நன்றி,
அசுரன்

said...

தி. ராஸ்கோலுக்கு பின்னூட்ட கயமைத்தனத்தின் நல்லூட்டத்தை கருதி சிறிது நேரம் கழித்தே நன்றி சொல்லப்படும் என்பதை தாழ்மையுடன் அறிவிக்கிறேன். :-))

நன்றி,
அசுரன்.

said...

//எனது உள்ளத்தின் உணர்வுகளை உங்கள் பதிவில் கண்டேன்.மிக மிக அருமையான பதிவு.நல்ல பல சிந்தனைகளை தூண்டும் கருத்துக்களை மிக அருமையாக எழுத்தில்வடிக்கும் உங்கள் திறமையை மனதார பாராட்டுகிறேன்.உண்மையான ஜனநாயகத்துக்கு உங்கள் பதிவுகள் நிச்சயம் வழிகாட்டியாய் அமையும்.இந்த நாட்டின் விடுதலைக்கு தங்கள் இன்னுயிரை இழந்து மறைந்த தியாக தலைவர்களின் வீரமும் நாட்டுபற்றும் நீர்த்துப்போக அனுமதித்தால் இந்தியா என்ற தேசம் இல்லாமலன்றோ போய்விடும்.
//


Sree gopi,

தங்கள் வருகைக்கு நன்றி,
இந்தக் கட்டுரை உண்மையில் புதியகாற்று என்ற தளத்திலிருந்து எடுத்தாண்டிருக்கிறென். தங்களது அத்தனை பாராட்டும் அவருக்கே சென்று சேர வேண்டும்.

இத் தளத்திற்க்கான லிங்க் எனது பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

நன்றி,
அசுரன்.

said...

நிச்சயமாக கயமைத்தனமல்ல..

சுதந்திரம் குறித்து எனகுள்ள கேள்விகள் பல தங்களிடம் உள்ளதைப் பார்க்கிறேன். ஆனால், அரசியல் சார்ந்து (ஆட்சி, வாணிபம்) மட்டுமே இருப்பதையும் உணர்கிறேன்.

உங்களது அனைத்துக் கேள்விக்கும் ஒத்துப் போகும் என்னை (எங்கள் சார்பாக)நினைத்துப் பாருங்கள்!!..

எத்தனை வருடம் இந்த சுதந்திர இந்தியாவில் அகதிகளாக, கேலிப் பொருளாக, கழிவாக வாழ்ந்து வந்திருக்கிறோம்!!...

அடிப்படை மனிதம் குறித்த சுதந்திரச் சிந்தனையையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..


*********

நல்ல விசயத்திற்காக பின்னூட கயமைத்தனத்தை வரவேற்ற சிவபாலனுக்கு என் நன்றிகள்...

said...

லிவிங் ஸ்மைல்,

சமீபத்தில் தங்களை முன்வைத்து வலைப்பூவில் நிகழ்ந்தவற்றை நானும் அறிவேன்.

சொத்துடமை சமூகமும் அது உருவாக்கியுள்ள பண்பாட்டு விழுமியங்களும், அடக்குமுறைகளும்தான் பால் பிறழ்ந்தவர்களின் (இந்த வார்த்தையை பயன்படுத்துவது ஒன்றும் பிரச்சனை இல்லையே?) மீதான் இந்த சமூகத்தின் பார்வைக்கும், திருநங்கைகள் பண்பாட்டு ரீதியாக மோசமாக இருப்பதற்க்கும் காரணம்.

இந்த பொருளாதார அமைப்பின் பிரச்சனைகளை அங்கீகரிக்காத யாரும் திருநங்கைகளின் நியாயமான உரிமைக் குரல்களையும் அங்கீகரிக்க மாட்டார்கள். மாறாக அவர்களின் பண்பாட்டு பிரச்சனை முன்னிறுத்தி அவமானப்படுத்துவார்கள்.

ஆனால் எனது நிலைப்பாடு திரு நங்கைகள் தனிப்பட்டு போராடி சில அரைகுறை சலுகைகளை மட்டுமே பெற முடியும் என்பதே...

ஆனால் குறைந்த பட்சம் ஒரு டீசன்டான வாழ்க்கை வாழ்வதற்க்கு அந்த சலுகைகள் தேவைப்படுகின்றன என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

இதையும் தாண்டி ஒரு சாராசரி வாழ்க்கை வாழ்வதற்க்கு... அவர்கள் தங்களுடைய பிரச்சனை தனிப்பட்டது கிடையாது.... மேலதிகமாக இந்திய உழைக்கும் வர்க்கத்தின், விவசாயிகளின் பிரச்சனையுடன் பின்னிபிணைந்து உள்ளதை உணர்ந்து இணைந்து போராட அரசியல் ரீதியாக விழிப்புண்ர்வு பெற வேண்டும்.

அதற்க்கு(அரசியல் ரீதியாக விழிப்புண்ர்வு பெற) வேலைகளில் இடஒதுக்கீடு, வேறு சில சலுகைகள் போன்ற குறைந்த பட்ச ஜனநாயகப்படுத்தும் விசயங்கள் உதவும் என்பதால் வரவேற்கிறேன்.

தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.

நன்றி,
அசுரன்

said...

// பால் பிறழ்ந்தவர்களின் (இந்த வார்த்தையை பயன்படுத்துவது ஒன்றும் பிரச்சனை இல்லையே?) //

பிரச்சனை இல்லை.. சரியான பதம் (உன்னதம் படித்திருக்கிறீர்களென நினைக்கிறேன். அல்லது, எங்கிருந்து இந்த பதம் கிடைத்தது என ஞாபகம் படுத்தி சொல்லவும்)

//இந்த பொருளாதார அமைப்பின் பிரச்சனைகளை அங்கீகரிக்காத யாரும் திருநங்கைகளின் நியாயமான உரிமைக் குரல்களையும் அங்கீகரிக்க மாட்டார்கள். மாறாக அவர்களின் பண்பாட்டு பிரச்சனை முன்னிறுத்தி அவமானப்படுத்துவார்கள். //

சரியாக சொன்னீர்கள்..

// மேலதிகமாக இந்திய உழைக்கும் வர்க்கத்தின், விவசாயிகளின் பிரச்சனையுடன் பின்னிபிணைந்து உள்ளதை உணர்ந்து இணைந்து போராட அரசியல் ரீதியாக விழிப்புண்ர்வு பெற வேண்டும். //

1. உழைப்பதற்கு கூட நாங்கள் விலக்கப்படுகிறோம் என்பதை தாங்கள் கவனிக்க வேண்டும்.

2. இணைந்து போராடுவதில் பிரச்சனை என்னவென்றால் அங்கேயும் நாங்கள் கேளிக்கையாக்கப் படுகிறோம் என்பதே.. தங்களை ஜனநாயகவாதிகளாக காட்டிக் கொள்ளும் சில இயக்கங்கள் கூட போதிய பக்குவமின்றியே எங்களை அணுகுகின்றனர்..

முக்கியமாக சொல்லவருவது..

ஒடுக்கப்பட்டோர் ஒன்றினைதல் என்ற கூரையின் கீழ் சமுதாயத்திற்கும், எமக்கும் இடையே விழுந்துவிட்ட விழுந்து விட்ட பனித்திரையை விலக்க இருதரப்பிலிருந்தும் முன்வர வேண்டும்.

said...

இது நல்ல விசயத்திற்காக....5

said...

//ஒடுக்கப்பட்டோர் ஒன்றினைதல் என்ற கூரையின் கீழ் சமுதாயத்திற்கும், எமக்கும் இடையே விழுந்துவிட்ட விழுந்து விட்ட பனித்திரையை விலக்க இருதரப்பிலிருந்தும் முன்வர வேண்டும். //

உண்மை.... இது சம்பந்தமாக இரு தரப்பிலு ஒரு பண்பாட்டுப் போராட்டம் தேவைப் படுகிறது.



//
1. உழைப்பதற்கு கூட நாங்கள் விலக்கப்படுகிறோம் என்பதை தாங்கள் கவனிக்க வேண்டும்.

2. இணைந்து போராடுவதில் பிரச்சனை என்னவென்றால் அங்கேயும் நாங்கள் கேளிக்கையாக்கப் படுகிறோம் என்பதே.. தங்களை ஜனநாயகவாதிகளாக காட்டிக் கொள்ளும் சில இயக்கங்கள் கூட போதிய பக்குவமின்றியே எங்களை அணுகுகின்றனர்..//

இதை உணர்ந்ததால்தான். பின் வரும் வரிகளை இட்டிருந்தேன்.
//அதற்க்கு(அரசியல் ரீதியாக விழிப்புண்ர்வு பெற) வேலைகளில் இடஒதுக்கீடு, வேறு சில சலுகைகள் போன்ற குறைந்த பட்ச ஜனநாயகப்படுத்தும் விசயங்கள் உதவும் என்பதால் வரவேற்கிறேன்.//


பிரச்சனை என்னவென்றால் திரு நங்கைகள் விசயத்தை எப்படி பார்ப்பது என்பது பற்றி எனக்கு முழுமையான அறிவு இல்லை. அப் பிரச்சனைப் பற்றி முழுமையான புரிதல் இல்லை. தகவல்கள் இருந்தால் கூட புரிந்து கொள்ளும் அளவு தத்துவத்தில் எனக்கு அறிவு கிடையாது.

வலைப்பூவில் தங்களுடைய இருப்பு இது பற்றி எனது அறிவை, புரிதலை கூடிய விரைவில் செம்மைபடுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன வைத்தது.

செம்மைபடுத்திக் கொள்ளவேன்... :-)

***********************

//பிரச்சனை இல்லை.. சரியான பதம் (உன்னதம் படித்திருக்கிறீர்களென நினைக்கிறேன். அல்லது, எங்கிருந்து இந்த பதம் கிடைத்தது என ஞாபகம் படுத்தி சொல்லவும்)//

இது இந்த தளத்திலேயே வந்த தேவர் பற்றிய கட்டுரையில் கற்பக விநாயகம்(வந்தே ஏமாத்தறோம் கட்டுரை அவருடையதுதான்) ஒரு அன்பர் பால் பிறழ்ந்தவர்களை கேவலப்படுத்திய போது கண்டிக்க உபயோகப்படுத்திய வார்த்தை.


நன்றி,
அசுரன்.

said...

//அற்பர்கள்தான் மறுகாலனியாக்க அடிமைத்தனத்தை முன்னேற்றம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள். //

உண்மையான வரிகள்...

said...

Sivabalan,

//அற்பர்கள்தான் மறுகாலனியாக்க அடிமைத்தனத்தை முன்னேற்றம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள். //

க.க.க.போ...... :-))

நன்றி,
அசுரன்.

said...

அசுரன்.. பெரிய பதிவு...முழுமையாக படிக்க முடிய வில்லை.. மேலொட்டமாக பார்த்தவரை நானும் உடன்படும் கருத்துக்கள்தான்..

முழுவதும் படித்து விட்டு கருத்து சொல்ல முயல்கிறேன்.

said...

//அசுரன்.. பெரிய பதிவு...முழுமையாக படிக்க முடிய வில்லை.. மேலொட்டமாக பார்த்தவரை நானும் உடன்படும் கருத்துக்கள்தான்..

முழுவதும் படித்து விட்டு கருத்து சொல்ல முயல்கிறேன். //


மனதின் ஓசை,

தவறாமல் தங்கள் மனதின் ஓசைதனை இங்கு இட்டு செல்லவும்....

நன்றி
அசுரன்

said...

திராஸ்கோலுக்கும், லிவிங் ஸ்மைல், சிவபாலன் மற்றும் பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி.

அசுரன்

said...

செல்வனின் அரைகுறை பிதற்றல் பதிவிற்க்கு(வழக்கம் போல), கம்யுனிசம் பற்றிய வலைப்பூ மக்களின் அறிமுகம் போதாமையை கணக்கில் கொண்டு இந்தப் பதில்:

அவரது பதிவின் தலைப்பு - "கம்யுனிஸ்டுகள் ஏன் ஒப்பாரி வைத்து அழுகிறாகள்? "

இதில் CIA, மற்றும் Wrold Bankன் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்தியா முன்னேறுகிறது என்று ஒரு போர்ஜரி வேலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். அதற்க்கு பதில் சொல்லும் முகமாக:

*************

இந்தியாவில் ஒரு சில
பகுதிகள் வீங்கிப்
பெருப்பதும் பெரும்
பகுதிகள் ஒன்றுமில்லாமல்
சுருங்குவதும் நடந்து
வருகீறது என்பதை கவனத்தில்
கொள்க. நாட்டில் ஒரு கிராம
மக்களின் சராசரி வருமானம்
என்பது
அதளபாதாளத்திற்க்குப்
போய்விட்டதாக அரசு புள்ளி
விவரம் சொல்கிறது(சாய்
நாத் கட்டுரை)(இதே
நேரத்தில் 100 புதிய
மில்லினியர்கள்
இந்தியாவில்
உருவாகியிருக்கிறார்கள் -
ஆக சராசரி என்னவோ அதேதான்
இருக்கும் போல). சமீபத்தில்
வறுமை கோடு பற்றிய அரசு
வரையறையை மாற்றீயது
தொடர்பாக கடும் விவாதம்
நடந்ததைக் கவனிக்க நமது
டாலர் செல்வனுக்கு
நேரமிருந்திருக்காது.

அப்புறம் அப்படியே,
அதிகமாகியிருக்கும்
பட்டினி சாவுகள்(அரைப்
பட்டினி ஆசாமிகள்
அதிகமுள்ள் நாடு அதாவது
சஹாரா பாலைவனத்தை விட
அதிகம் என்று UNO புள்ளி
விவரம் சொல்கிறது)(இந்த
தொடர்ச்சியான பட்டினி
சாவுகள் 1990 க்கு முன்பு
கிடையாது என்பதை மனதில்
கொள்க),


social indicator தர வரிசையில்
சறுக்கி 20 புள்ளிகள்
இந்தியா இறங்கியிருப்பது
பற்றி(இதுவும் UNO தான்),
விவசாயிகள் தற்கொலை(இதுகூட
1990க்கு முன்பு இந்தளவுக்கு
கிடையாது(இரு வருடத்தில் 1
லட்சம்)), அதளபாதாளத்தில்
தொங்கும் விவசாய குடிகளின்
ஆண்டு சராசரி
வருமானம்(இதுவும் அரசு
புள்ளிவிவரம்தான்),
குழந்தைகளுக்கான ஆபத்தான
நாடுகளில் 7 வது இடம்(இது
மட்டும்தான் அரசு புள்ளி
விவரம் கிடையாது).


அப்புறம் வெளிப்படையாக
நாட்டை அடகு வைத்துள்ள
விதை நெல் சீர்திருத்த
சட்டம்(விவசாயி
விதைப்புக்கு நெல்
செர்த்து வைப்பதை தடை
செய்யும் சட்டம்), அணு ஆயுத
ஒப்பந்தம், தண்ணீர்
தனியார்மய சட்டங்கள்,
ராணுவ ஓப்பந்தங்கள்,
காப்புரிமை சட்டம் காரணமாக
மருத்துவ
வசதியின்றி(குறிப்பாக
ரேபிஸ்) சமீபத்தில் மாண்ட
ஒரிஸ்ஸா, தமிழக, கர் நாடக
அப்பாவிகள், விலை அதிகமான
அத்தியாவசிய மருந்துகள்,
அப்படி மருத்துவ வசதி
மறுக்கப்பட்ட நோயாளிகளை,
ஏழை நோயாளிகளை சோதனை
எலியாக பயன்படுத்த அனுமதி
கொடுக்கும் சட்ட
திருத்தம், இந்த மருத்துவ
துறை அவலங்களை கூட 'இந்தியா
மெடிக்கல் டூரிஸ
மைய்யா'மாகி வருகிறது
என்று பிரச்சாரம் செய்து
மறைக்கலாம்.


இந்த சட்டங்களைப் பற்றி
நாடாளுமன்றத்தில் இது வரை
ஒரு விவாதம் கூட
நடக்கவில்லையே அதைப் பற்றி
டாலர் செல்வன் என்ன
சொல்வார்?


ஒரு பக்கம் சர்க்கரை போன்ற
பொருட்களீன் சந்தை விலை
ஏறீவருவது, அதே நேரத்தில்
விவசாய்யிகளிடம் இவற்றை
கொள்முதல் செய்யும் விலை
குறைந்து கொண்டே வருவதும்
பற்றியெல்லாம் டாலருக்கு
கவலையில்லை. அவரது கவலை
எப்படி இந்த
கம்யுனிஸ்டுகள் மக்களிடம்
உண்மைகளை சொல்வதிலிருந்து
கெடுப்பது என்பதுதான்.


டாலர் செல்வனின் டாலர்
பாசமும் அவரது போலி
தேசப்பற்றும் எனக்கு
புதிதல்ல.


லட்சக்கணக்கில் அத்துக்
கூலிக்கு நவீன நடோ டிகளாக
விவசாய நிலத்தை விட்டு
விட்டு ஓடி வரும்
கிராமப்புற மக்கள்
நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு
அடையாளம் என்பவன் ஒரு
வக்கிர பாண்டியனாகத்தான்
இருக்க முடியும்.
அடுத்தமுறை வசந்த
பவன்களுக்கு சென்றால் இலை
பொறுக்கும் சிறுவனிடம்
பேசிப்பாருங்கள்,
நாகப்பட்டினம், தஞ்சை,
புதுக்கோட்டைகளின் ஏக்கம்
தெரியவரும். தங்கையின்
படிப்பு, அக்காவின்
திருமணம், மருத்துவ
செல்வுகள், அடுத்த
விதைப்புக்கு ஏற்பாடு
செய்வது.... இதேல்லாம்
டாலரில்
சம்பாதிப்பவருக்கான
கவலைகள் கிடையாது.


அப்படி உண்மையில் இவருக்கு
கவலையிருந்தால் வலைப்பூ
உலகில் ஒரு விவாசாயி
மாதமாதம் கட்டுரை எழுதி
கதுறுகிறார், அதற்க்கு
இதுவரை ஒரு பதில் ஒரு
கட்டுரை, பின்னூட்டம்
எழுதியிருக்கிறாரா இந்த
அறிவு ஜீவி(??) டாலர் செல்வன்?


வேலைவாய்ப்பு குறைந்து
விட்டது என்று நான்
சொல்லவில்லை இந்தியாவின்
RBI(reserve bank of India) சொல்கிறது. ஏழு
வருடத்தில் 70,000 சிறு
தொழிற்சாலைகள் கர்
நாடகாவில்
மூடப்பட்டுவிட்டதாக நான்
சொல்லவில்லை அரசு
சொல்கிறது, இப்படி இந்தியா
முழுவதும் வேலை
இழந்தவர்கள் 15
லட்சத்திற்க்கும்
அதிகமானவர்கள் இவர்கள்
இன்று காண்ட்ராக்ட்
தொழிலாளர்களாக
பிழியப்படுகிறார்கள்.
இதைப் பற்றி கூட டாலர்
செல்வன் ஒரு கட்டுரை
எழுதியுள்ளார்(அவர்
முரன்பாடு முத்தன்னா
என்பதை இங்கும்
நிருபிக்கீறார்).


இந்தியா is no more a low cost destination என்றூ
கூறி MNCக்கள் சிறிது
சிறிதாக கடையை கிளப்பிக்
கொண்டிருக்கிறார்கள்.


மிக சமீபத்தில் WTO வால்
இந்தியாவுக்கு ஒரு மசிரும்
கிடைக்கலன்னு எல்லா
அரசியல், அதிகார வர்க்க
தலைகளும் கட்டுரைகள்,
மேடைப்பேச்சுகள்,
பேட்டிகளில் சொன்னதை
அவதனிக்கும் அவசியம் டாலர்
செல்வனுக்கு கிடையாது.


அப்துல் கலாம் ஒரு நல்ல
நடிகர் அதுவும்
நயவஞ்சமமிக்க ஒரு காமெடி
நடிகர். மக்கள் பிரச்சனை
எதிலும் மிக கவனமாக
கருத்துச் சொல்வதை
தவிர்த்து 'கனவு காண் கனவு
காண்' ஊரை ஏமாற்றும் ஒரு
பதர்....


ஆம திரு டாலர் சொல்வது போல
இந்தியா முன்னேறும்.... ஒரு
விசயத்தை கவனத்தில்
கொண்டால்....


இந்தியாவின் எல்லைகள்
நாட்டைச் சுற்றி ஓடவில்லை
நாட்டின் குறுக்காக
ஒடுகிறது என்பதை கவனத்தில்
கொண்டால் எந்த இந்தியா
ஒளிர்கிறது என்பதும் எந்த
இந்தியா தேய்கிறது
என்பதும் தெளிவாகும்.


அய்யா செல்வன் தங்களுக்கு
உண்மையில் மிகவும் வலு
இருந்தால் எனது பொருளாதார
கட்டுரை எதையாவது
சீண்டிப்பாருங்களேன்....


இதோ Url: kaipulla.blogspot.com
poar-parai.blogspot.com


கான்சர் திட்டுக்களும்
வளர்ச்சிதான் என்ன செய்ய
நாங்கள் அவற்றை
வெட்டியெறிந்துதான்
பழக்கம்

***********

CIA புள்ளீவிவரத்தை நம்புவது
அவரவர் விருப்பம். CIAவின்
நம்பகத்தனமை பற்றி குறைந்த
பட்ச பகுத்தறிவு
உள்ளவனுக்கும் தெரியும்.
இப்போ கூட அது
நைஜீரியாவில் போர்
குழுக்களுடன் இணைந்து
செயல்பட்டது தொடர்பான
இமெயில் பேச்சுக்கள்
பத்திரிக்கைகளில்
அம்பலமாகி நாறியுள்ளது.
டாலரின் டாலர் பற்று
புள்ளியறுக்க வைக்கிறது...
சீ... ஸாரி
புல்லரிக்கவைக்கிறது.

அசுரன்.

said...

செல்வனின் அரைகுறை பிதற்றல் பதிவிற்க்கு(வழக்கம் போல), கம்யுனிசம் பற்றிய வலைப்பூ மக்களின் அறிமுகம் போதாமையை கணக்கில் கொண்டு இந்தப் பதில்:

அவரது பதிவின் தலைப்பு - "கம்யுனிஸ்டுகள் ஏன் ஒப்பாரி வைத்து அழுகிறாகள்? "

இதில் CIA, மற்றும் Wrold Bankன் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்தியா முன்னேறுகிறது என்று ஒரு போர்ஜரி வேலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். அதற்க்கு பதில் சொல்லும் முகமாக:

*************

இந்தியாவில் ஒரு சில
பகுதிகள் வீங்கிப்
பெருப்பதும் பெரும்
பகுதிகள் ஒன்றுமில்லாமல்
சுருங்குவதும் நடந்து
வருகீறது என்பதை கவனத்தில்
கொள்க. நாட்டில் ஒரு கிராம
மக்களின் சராசரி வருமானம்
என்பது
அதளபாதாளத்திற்க்குப்
போய்விட்டதாக அரசு புள்ளி
விவரம் சொல்கிறது(சாய்
நாத் கட்டுரை)(இதே
நேரத்தில் 100 புதிய
மில்லினியர்கள்
இந்தியாவில்
உருவாகியிருக்கிறார்கள் -
ஆக சராசரி என்னவோ அதேதான்
இருக்கும் போல). சமீபத்தில்
வறுமை கோடு பற்றிய அரசு
வரையறையை மாற்றீயது
தொடர்பாக கடும் விவாதம்
நடந்ததைக் கவனிக்க நமது
டாலர் செல்வனுக்கு
நேரமிருந்திருக்காது.

அப்புறம் அப்படியே,
அதிகமாகியிருக்கும்
பட்டினி சாவுகள்(அரைப்
பட்டினி ஆசாமிகள்
அதிகமுள்ள் நாடு அதாவது
சஹாரா பாலைவனத்தை விட
அதிகம் என்று UNO புள்ளி
விவரம் சொல்கிறது)(இந்த
தொடர்ச்சியான பட்டினி
சாவுகள் 1990 க்கு முன்பு
கிடையாது என்பதை மனதில்
கொள்க),


social indicator தர வரிசையில்
சறுக்கி 20 புள்ளிகள்
இந்தியா இறங்கியிருப்பது
பற்றி(இதுவும் UNO தான்),
விவசாயிகள் தற்கொலை(இதுகூட
1990க்கு முன்பு இந்தளவுக்கு
கிடையாது(இரு வருடத்தில் 1
லட்சம்)), அதளபாதாளத்தில்
தொங்கும் விவசாய குடிகளின்
ஆண்டு சராசரி
வருமானம்(இதுவும் அரசு
புள்ளிவிவரம்தான்),
குழந்தைகளுக்கான ஆபத்தான
நாடுகளில் 7 வது இடம்(இது
மட்டும்தான் அரசு புள்ளி
விவரம் கிடையாது).


அப்புறம் வெளிப்படையாக
நாட்டை அடகு வைத்துள்ள
விதை நெல் சீர்திருத்த
சட்டம்(விவசாயி
விதைப்புக்கு நெல்
செர்த்து வைப்பதை தடை
செய்யும் சட்டம்), அணு ஆயுத
ஒப்பந்தம், தண்ணீர்
தனியார்மய சட்டங்கள்,
ராணுவ ஓப்பந்தங்கள்,
காப்புரிமை சட்டம் காரணமாக
மருத்துவ
வசதியின்றி(குறிப்பாக
ரேபிஸ்) சமீபத்தில் மாண்ட
ஒரிஸ்ஸா, தமிழக, கர் நாடக
அப்பாவிகள், விலை அதிகமான
அத்தியாவசிய மருந்துகள்,
அப்படி மருத்துவ வசதி
மறுக்கப்பட்ட நோயாளிகளை,
ஏழை நோயாளிகளை சோதனை
எலியாக பயன்படுத்த அனுமதி
கொடுக்கும் சட்ட
திருத்தம், இந்த மருத்துவ
துறை அவலங்களை கூட 'இந்தியா
மெடிக்கல் டூரிஸ
மைய்யா'மாகி வருகிறது
என்று பிரச்சாரம் செய்து
மறைக்கலாம்.


இந்த சட்டங்களைப் பற்றி
நாடாளுமன்றத்தில் இது வரை
ஒரு விவாதம் கூட
நடக்கவில்லையே அதைப் பற்றி
டாலர் செல்வன் என்ன
சொல்வார்?


ஒரு பக்கம் சர்க்கரை போன்ற
பொருட்களீன் சந்தை விலை
ஏறீவருவது, அதே நேரத்தில்
விவசாய்யிகளிடம் இவற்றை
கொள்முதல் செய்யும் விலை
குறைந்து கொண்டே வருவதும்
பற்றியெல்லாம் டாலருக்கு
கவலையில்லை. அவரது கவலை
எப்படி இந்த
கம்யுனிஸ்டுகள் மக்களிடம்
உண்மைகளை சொல்வதிலிருந்து
கெடுப்பது என்பதுதான்.


டாலர் செல்வனின் டாலர்
பாசமும் அவரது போலி
தேசப்பற்றும் எனக்கு
புதிதல்ல.


லட்சக்கணக்கில் அத்துக்
கூலிக்கு நவீன நடோ டிகளாக
விவசாய நிலத்தை விட்டு
விட்டு ஓடி வரும்
கிராமப்புற மக்கள்
நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு
அடையாளம் என்பவன் ஒரு
வக்கிர பாண்டியனாகத்தான்
இருக்க முடியும்.
அடுத்தமுறை வசந்த
பவன்களுக்கு சென்றால் இலை
பொறுக்கும் சிறுவனிடம்
பேசிப்பாருங்கள்,
நாகப்பட்டினம், தஞ்சை,
புதுக்கோட்டைகளின் ஏக்கம்
தெரியவரும். தங்கையின்
படிப்பு, அக்காவின்
திருமணம், மருத்துவ
செல்வுகள், அடுத்த
விதைப்புக்கு ஏற்பாடு
செய்வது.... இதேல்லாம்
டாலரில்
சம்பாதிப்பவருக்கான
கவலைகள் கிடையாது.


அப்படி உண்மையில் இவருக்கு
கவலையிருந்தால் வலைப்பூ
உலகில் ஒரு விவாசாயி
மாதமாதம் கட்டுரை எழுதி
கதுறுகிறார், அதற்க்கு
இதுவரை ஒரு பதில் ஒரு
கட்டுரை, பின்னூட்டம்
எழுதியிருக்கிறாரா இந்த
அறிவு ஜீவி(??) டாலர் செல்வன்?


வேலைவாய்ப்பு குறைந்து
விட்டது என்று நான்
சொல்லவில்லை இந்தியாவின்
RBI(reserve bank of India) சொல்கிறது. ஏழு
வருடத்தில் 70,000 சிறு
தொழிற்சாலைகள் கர்
நாடகாவில்
மூடப்பட்டுவிட்டதாக நான்
சொல்லவில்லை அரசு
சொல்கிறது, இப்படி இந்தியா
முழுவதும் வேலை
இழந்தவர்கள் 15
லட்சத்திற்க்கும்
அதிகமானவர்கள் இவர்கள்
இன்று காண்ட்ராக்ட்
தொழிலாளர்களாக
பிழியப்படுகிறார்கள்.
இதைப் பற்றி கூட டாலர்
செல்வன் ஒரு கட்டுரை
எழுதியுள்ளார்(அவர்
முரன்பாடு முத்தன்னா
என்பதை இங்கும்
நிருபிக்கீறார்).


இந்தியா is no more a low cost destination என்றூ
கூறி MNCக்கள் சிறிது
சிறிதாக கடையை கிளப்பிக்
கொண்டிருக்கிறார்கள்.


மிக சமீபத்தில் WTO வால்
இந்தியாவுக்கு ஒரு மசிரும்
கிடைக்கலன்னு எல்லா
அரசியல், அதிகார வர்க்க
தலைகளும் கட்டுரைகள்,
மேடைப்பேச்சுகள்,
பேட்டிகளில் சொன்னதை
அவதனிக்கும் அவசியம் டாலர்
செல்வனுக்கு கிடையாது.


அப்துல் கலாம் ஒரு நல்ல
நடிகர் அதுவும்
நயவஞ்சமமிக்க ஒரு காமெடி
நடிகர். மக்கள் பிரச்சனை
எதிலும் மிக கவனமாக
கருத்துச் சொல்வதை
தவிர்த்து 'கனவு காண் கனவு
காண்' ஊரை ஏமாற்றும் ஒரு
பதர்....


ஆம திரு டாலர் சொல்வது போல
இந்தியா முன்னேறும்.... ஒரு
விசயத்தை கவனத்தில்
கொண்டால்....


இந்தியாவின் எல்லைகள்
நாட்டைச் சுற்றி ஓடவில்லை
நாட்டின் குறுக்காக
ஒடுகிறது என்பதை கவனத்தில்
கொண்டால் எந்த இந்தியா
ஒளிர்கிறது என்பதும் எந்த
இந்தியா தேய்கிறது
என்பதும் தெளிவாகும்.


அய்யா செல்வன் தங்களுக்கு
உண்மையில் மிகவும் வலு
இருந்தால் எனது பொருளாதார
கட்டுரை எதையாவது
சீண்டிப்பாருங்களேன்....


இதோ Url: kaipulla.blogspot.com
poar-parai.blogspot.com


கான்சர் திட்டுக்களும்
வளர்ச்சிதான் என்ன செய்ய
நாங்கள் அவற்றை
வெட்டியெறிந்துதான்
பழக்கம்

***********

CIA புள்ளீவிவரத்தை நம்புவது
அவரவர் விருப்பம். CIAவின்
நம்பகத்தனமை பற்றி குறைந்த
பட்ச பகுத்தறிவு
உள்ளவனுக்கும் தெரியும்.
இப்போ கூட அது
நைஜீரியாவில் போர்
குழுக்களுடன் இணைந்து
செயல்பட்டது தொடர்பான
இமெயில் பேச்சுக்கள்
பத்திரிக்கைகளில்
அம்பலமாகி நாறியுள்ளது.
டாலரின் டாலர் பற்று
புள்ளியறுக்க வைக்கிறது...
சீ... ஸாரி
புல்லரிக்கவைக்கிறது.

அசுரன்.

said...

சும்மா ஒரு வெள்ளாட்டுக்கு.....

அசுரன்

said...

//சும்மா ஒரு வெள்ளாட்டுக்கு.....//

அட உங்க வெள்ளாட்டு நல்லா இருக்குங்கோவ்... இப்போ இதே போல ஒரு டாப்பிக்கில் வேறு தளத்தில் நடந்து வரும் ஒரு விவாதத்திற்கு இந்தப் பாயிண்டுகள் பயன்படும் என்று நினைக்கிறேன் -

நன்றி

அப்படியே இதை கருத்துப் பிரச்சார காவாளித்தனத்தில் சேர்த்துக் கொள்ளவும் - :)))))))))

RV

said...

சிலருக்கு சொல் புத்தியிருக்கும், சிலருக்கு சுய புத்தியிருக்கும், சிலருக்கு அடிமைத்தனமான நாய் புத்தியே இருக்கும்.
மூன்றாவதாக உள்ள ஐந்துக்களிடமிருன்து முதல் இரண்டு பேரை காப்பாற்றும் நோக்கத்தில் இந்த பின்னூட்டம்:

The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh


http://www.rupe-india.org/43/ghosh.html

said...


ஒரு மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, இந்தியாவைத் திரைமறைவிலிருந்து ஆட்டி வைக்கும் திட்டத்துடன், தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. இந்தப் போலி சுதந்திரத்திற்கு வயது 60.



அன்பு அசுரா இப்போதும் பிரிட்டிஷ் அரசின் வாலாகத்தான் இந்திய அரசு செயல்படுகிறதா? அரசியல் - பொருளாதாரம் அனைத்தையும் கண்டரோல் செய்யும் ஸ்விட் இப்போதும் பிரிட்டிஷ் அரசிடம்தான் உள்ளதா?


அப்புறம் பிரிட்டிஷீன் வாலாகத்தான் இருக்கிறது என்றால் மறைமுகமான காலனியென்று அழைக்கலாமே! ஏன் அரைக்காலனி என்று அழைக்கிறீர்கள்?


மேலும் அரைக்காலனி நாடு தற்போது மீண்டும் மறுகாலனியாதிக்கத்திற்கு உட்படுகிறது என்கிறீர்களே எப்படி? பிரிட்டிஷ் காலனியை அமெரிக்கா அடிமைப்படுத்துகிறது என்று பொருள் கொள்ளலாமா?

மேலும் தங்களைப் பற்றிய அவதூறுகளில் ஒன்று இந்தியா நான்கு நாட்டு காலனியாக இருக்கிறது என்பது. அமெரிக்கா - ரஷ்யா - ஜப்பான் - ஐரோப்பா என்று விளித்துள்ளார்கள்.

குழப்பம் யாருடையது? குழப்பத்தை தீர்த்து வைத்தால் எங்களைப் போன்ற எளிய வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.!

said...

இதனுடைய மீள்பதிவிலிருந்து வந்து இங்கு பின்னூட்டமிட்டுள்ள,
கட்டுரையின் தலைப்பை மட்டுமே படித்து பின்னூட்டமிட்டுள்ள எளிய வாசகனே உன்னைப் போன்றவர்களின் குழப்பம் தீருவதற்க்காகத்தான் இரண்டு தொடர்புடைய கட்டுரைகளை(மீள்பதிவில) இணைத்துள்ளேன் படித்து பார்த்து தெளிவாகிக் கொள்.

அசுரன்

Related Posts with Thumbnails