மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்
அந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி விழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.
கரி மருந்தின் நாற்றமும், புதிய ரத்தத்தின் நாற்றமும் கலந்து அந்த சூழலை இன்னும் மோசமாக்கியிருந்தன. இறந்து குளிந்த உடல்களின் வெப்பம் வெளியெங்கும் நிரப்பியிருந்தன. அந்த வெப்பம் அச்சமூட்டும் வகையில் அமனுஸ்யமாக இருந்தது. ஆழ்ந்த, புகை மண்டிய அமைதி பெரும் களக்கத்தை உருவாக்குவதாக இருந்தது. உயர்ந்து நின்ற மதில் சுவரில் தெறித்து சிதறி படிந்த புத்தம் புதிய சதை துணுக்குகள் அந்த பேரமைதிக்கு கருமை வண்ணம் பூசின. ஆம், அது மயானங்(களின்) அமைதி. ஆயினும் சிலர் குற்றுயிரும், கொலையுயிருமாக முனகும் குரல் ஆங்காங்கே கேட்கிறது. அந்த குரல்கள் அமைதியில் உறைந்துபோய் செவிகளின் கவனத்தை ஈர்க்கும் வலுவை இழந்து தேம்பின.

மண்ணின் நிறம் என்ன என்று மறந்து போகும் அளவு அங்கே ரத்தம் விளாறிக் கிடந்தது பூமி. அன்று சிவந்தது பூமி மட்டுமல்ல.
சிவந்த கண்கள்:
அமெரிக்காவில் ஒரு புரட்சிகர இதழில் வந்த விளம்பரம் இது: "இந்திய புரட்சிக்கு ஆள் தேவை, சம்பளம் - புரட்சிக்காரன் என்ற பட்டம், துப்பாக்கி குண்டு". அது கதார் பார்ட்டி எனப்படும் புரட்சிகர அமைப்பின் விளம்பரம். சம்பளத்தை ஏற்றுக் கொண்டு இணைந்தவர்களில் அஜித் சிங் என்ற பெரியவரும் ஒருவர். பிரிட்டிஸ் அரசை எதிர்த்து சதி செய்ததாக ஒன்றல்ல, 22 வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அவர் சம்பளத்திற்க்கேற்ற பணியைச் செய்தார்.
அவர் இப்போழுது பஞ்சாபின் கோதுமை வயல்களின் ஓடாக ஓடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னே குதறி எடுக்கும் கொலை வெறியுடன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு பெரும் மூச்சிறைப்புடன் ஏகாதிபத்திய பிரிட்டிஸ் வெறி நாய்கள் பெரும் வேகத்தில் துரத்திக் கொண்டிருந்தன. அவர் பிறகு துருக்கி, ஆஸ்திரியா, ஜெர்மனி, என்று கடைசியில் பிரெசில் வரை துரத்தப்பட்டார்.
அவருக்கு ஒரு பாசமிகு மருமகன் இருந்தான். அவன் ஒரு கன்றுக் குட்டியைப் போன்ற மென்மையும், துள்ளிக் குதிக்கும் உட்சாகமும் நிரம்பியவனாக இருந்தான். அவன் கண்கள் மட்டும்... நீங்கள் நேர்மையானவர் இல்லையெனில்.. அவனது கண்களைப் பார்க்காதீர்கள் பயந்து விடுவீர்கள். அவை நெருப்புக் கோளங்களைப் போல கனன்று கொண்டிருந்தன. பிரிட்டிஸ் ஏகாதிப்பத்தியம் எனும் பெருங்காட்டை எரித்து சாம்பலாக்க வந்த அந்த அக்னி குஞ்சின் பெயர் 'பகத் சிங்'. அவன் கண்களில் சுதந்திர தனலையும், உள்ளத்தில் உலை போல கொதிக்கும் விடுதலை ஊற்றையும் கொண்டிருந்தான்.
அது பிரிட்டிஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு தீ இந்தியா முழுவதும் பரவி படர்ந்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கி தனது முழு வேகத்தில் ஆடத் தொடங்கியிருந்த வேளை. இந்தியா முழுவதும் போராட்ட வடிவங்கள், நோக்கங்கள் மாறத் தொடங்கியிருந்த வேளை. பஞ்சாப் மற்ற மானிலங்களுக்கெல்லாம் முன்பாக முழித்துக் கொண்டு தனது போராட்டத்தை நவீன வழியில் ஏற்கனவே தொடங்கிவிட்டிருந்த வேளை.
அன்று, சுதந்திர வேள்வித் தீக்கு விறகுகளாய் வீழ்ந்த வாசமிகு மலர்களின் எண்ணிக்கை சொல்லிமாளாது. அந்த மலர்களுக்கும் குடும்பங்கள் இருந்தன, அழகிய குழந்தைகள் இருந்தன, நல்ல மனைவி வாய்த்திருந்தாள், ஒரு சலாம் போட்டால் நித்தம் சோறு தானே தேடி வர, உட்கார்ந்த இடத்தில் உண்ணும் வாழ்க்கைக்கான வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.
முட்டாள்கள், அவர்கள் அந்த சுகங்களை ஆண்டு அனுபவிக்கும் அறிவைப் பெற்றிருக்கவில்லை, அதனால்தான் இன்று நாம் ஒரு அரைகுறை சுதந்திரத்தையும் கூட வீணடிக்கும் - மறுகாலனியத்தை, நாடு மீண்டும் அடிமையாவதை, கண்ணாற ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.
இரண்டு இந்தியா, மத்தியில் பகத்சிங்:
1612-ல் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியார், ஜஹாங்கீர் மன்னனை பல்வேறு பரிசுப் பொருட்கள் கொடுத்து வளைத்துப் போட்டு சூரத்தில் தனது முதல் கம்பெனியை(வணிக மையம்) தொடங்கினான். கமிசன் பணத்திற்க்கு மயங்கிய ஜஹாங்கீர் மன்னன், பிரிட்டிஸாருடன் தனது உறவை குறிப்பிட்டு சிலாகித்து எழுதிய கடிதம் இன்றைய இந்திய தரகு வர்க்கத்தின் பிறந்த தேதி என்ன என்பதற்க்கு சாட்சியாக இன்றும் நிற்கிறது:
"உங்களது ராஜாங்கத்தின் அன்பிற்க்கு இணங்கி, எனது ஆளுமையின் கீழுள்ள அரசுகள், துறைமுகங்கள் அனைத்திலும் வந்திறங்கும் ஆங்கிலேய தேசத்து வியாபாரிகள் எனது நண்பர்களாக கருதி வரவேற்க்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளேன். இங்கு அவர்கள் எங்கு வாழ விரும்புகிறார்களோ அங்கு முழு சுதந்திரத்துடன், எந்த தடையுமின்றி வாழலாம். அவர்கள் எந்த துறைமுகத்தில் வந்திறங்குகிறார்களோ அங்கு போர்த்துகீசியர்களோ அல்லது வேறு யாரும் அவர்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க துணிய மாட்டார்கள். அதே போல அவர்கள் தங்கும் இடத்திலும் கூட யாரும் அவர்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க துணிய மாட்டார்கள். அவர்கள் விருப்பம் போல விற்க்கலாம், வாங்கலாம், அவர்கள் நாட்டுக்கு எதையும் கொண்டு செல்லலாம் என்பதற்க்கு உத்திரவாதம் கொடுக்குமாறு எனது ஆளுனர்கள், தளபதிகளுக்கும் கட்டளை பிறப்பித்துள்ளேன். இதே போல நமது நட்பையும், அன்பையும் பறைசாற்றும் நடவடிக்கையாக, எனது அரண்மனையை அலங்கரிக்க உதவும் அனைத்து விதமான பரிசுப் பொருட்களையும், கலைப் பொருட்களையும் கப்பல்களில் கொண்டு வருவதற்க்கு மேதகு அரசாங்கம் தனது வியாபாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்...."
இன்றைக்கு ஸ்பெசல் எக்கானாமிக் சோன்(SEZ) என்ற பெயரில் அதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜஹாங்கீருக்குப் பதில் நாம் வோட்டு போட்டு தேர்ந்தெடுத்த புரோக்கர்கள். இதை வெறுமனே கட்டுரையின் வசதிக்காக SEZயையும், அன்றைய பிரிட்டிஸ் வணிக மையங்களையும் ஒப்பீட்டு கூறவில்லை. உண்மையில் அதன் அனைத்து அம்சங்களிலும் SEZ என்பவை இந்தியாவுக்குள் இருக்கும் அன்னிய தேசங்கள். அவை ஆரம்ப கால கிழக்கிந்திய கம்பேனியின் வணிக மையங்களிலிருந்து எந்த வகையிலும் மாறுபட்டதில்லை.
1600 களில் மன்னரிடம் சலுகைகளை கெஞ்சிப் பெற வேண்டிய நிலையிலிருந்த கிழக்கிந்திய கம்பேனி. 1700 களில் தனக்கென சொந்த ராணூவத்துடன் தனது வணிக மையங்களில் முழு கட்டுப்பாட்டை உறுதி செய்த, அரசை நிர்ப்பந்திக்கும் சக்தி பெற்றவையாக மாறின. இதனைக் கொண்டு 1717-ல் முழுமையான சுங்க வரி விலக்கைப் பெற்றனர்.
இதே நடைமுறை இன்றும் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் மன்மோகன் சிங், தனது பொருளாதார திட்டங்களின் ஒரு இலக்காக சேவை வரி ராஜாங்கத்தைச் சொல்கிறார். அதாவது சுங்க வரியை முற்றிலுமாக ஒழித்து, வெறும் சேவை வரி மட்டும் இருக்கும் வரி அமைப்பை நோக்கி போவதுதான் அவ்ரது திட்டம். இதற்க்காக வருடம் 1% வீதம் சேவை வரியை உயர்த்துவது, சேவை வரியின் கீழ் வரும் துறைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, சுங்க வரியின் கீழ் வரும் துறைகளை குறைத்துக் கொண்டே வந்து முற்றிலும் அதை ஒழிப்பது. இதுதான் திட்டம். ஆக, ஏகாதிபத்தியங்கள் கட்ட வேண்டிய வரிகளையும் நாம்தான் கட்ட வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.
பிளாசிப் போரின் வெற்றிக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பேனி தனது ராணுவ வலிமையைக் கொண்டே இந்திய தேசங்களை தனது பொருளாதார, அரசியல் நலன்களுக்கு அடிபணியச் செய்தது. அதில் இரண்டு விதமான தேசங்கள் உருவாகின. ஜான்ஸி ராணி போன்றவர்களிடமிருந்து பிடுங்கிய நேரடி ஆட்சியில் உள்ள பகுதிகள். பகுதி ராஜாக்களிடமிருந்து வரி விதிப்பு, வெளியுறவுத் துறை, ராணூவம் போன்ற துறைகளைக் கட்டுப் படுத்தும் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்ட பதிலி அரசு உள்ள பகுதிகள். அதாவது ராஜாக்கள் எல்லாம் கம்பேனியின் பிரதினிதிகளாயினர். இதை எதிர்த்து விடுதலைப் போரில் மாண்ட மாவீரர்கள்தான் வீரபாண்டிய கட்ட பொம்மன், சின்ன மருது முதலானோர்.
இதில் இந்த இரண்டாவது விசயம்தான் தற்பொழுது இந்தியாவில் நடந்து வருகிறது. அதாவது உள்ளூர் ராஜாக்கள் ஏகாதிபத்திய பிரதினிதிகளாக நம்மை சுரண்டக் கொடுப்பது. இதற்க்கு ஜன நாயகம் எனும் கவர்ச்சிகரமான பெயர் வேறு.
வரி விதிப்பைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியத்துக்கு வருமான வரிச் சலுகை, குறைந்த விலை மின்சாரம், இலவச நிலம், சுங்க வரி ரத்து என ஒரு பக்கம் கொடுத்து இன்னொரு பக்கம் மக்களின் பெயரில் கடன் வாங்கி அவர்களுக்கான உள் கட்டுமானங்களை கட்டி வருகிறார்கள். இதே நேரத்தில் உள்ளூர் போட்டியை ஒழிப்பதற்க்கு VAT வரி விதிப்பை திணித்து முற்று முதலாக நமது வரிவிதிப்பின் பலன்களை அவர்களின் வியாபார நலன்களுக்கு மாற்றி விட்டார்கள்.
வெளியுறவுத் துறை:ஈரானுக்கு எதிராக நாம் ஐ.நா. வில் போட்ட வோட்டு, நட்வர் சிங் பிரச்சனை, சமீபத்தில் இந்தியாவின் நிலைப்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து கண்டனத்துக்காளான அமெரிக்க தூதுவர், முசாரபின் சமீபத்திய புத்தகமான- தீச் சுவட்டின் நான்(In the Line of fire) - அவர் ஏதோ ஒரு சக்தி இந்திய பாகிஸ்தான் ஒப்பந்தத்தை நிறைவேறாமல் கெடுத்ததாக கூறியிருந்தது ஆகியன மிகத் தெளிவாக இந்திய வெளியுறவுத் துறை நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதைக் கூறியது.
ராணுவம்:சமீபத்தில் போடப்பட்ட ராணுவ ஒப்பந்தம் நமது ராணுவத்தை அமெரிக்க ராணுவத்தின் துணை ராணுவமாக மாற்றி விட்டது. இது தவிர்த்து அணு ஆயுத ஒப்பந்தம் நம்து நாட்டின் பாதுகாப்பு அமெரிக்காவின் கையில் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஆக இந்த விசயத்திலும் கூட நாமது நாடு எந்த வகையிலும் பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இருந்த எட்டப்பரின் சமஸ்தானத்தில் இருந்த சுய உரிமையின் அளவைத் தாண்டி ஒரு எட்டு அடிகூட போகவில்லை.
அன்றைக்கு பிரிட்டிஸாரின் வரி சுரண்டலை ஈடுகட்ட விவசாயிகளைச் சுரண்டியதால் பல இடங்களில் விவசாய கிளர்ச்சிகள் வெடித்துக் கிளம்பின. மாப்ளா கலகம்(1805), முதல் இந்திய சுதந்திரப் போர்(1857), முதல் தென்னிந்திய சுதந்திரப் போர்(1805) இவையெல்லாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயிகளின் கோபத்துடன் தொடர்பு கொண்டிருந்தன.
இந்தியா அரசர்களைப் பற்றிய பாடங்களில் நாம் இன்றும் படிப்பது அசோகர் மரம் நட்டினார், குளம் வெட்டினார் என்பதைத்தான். இதன் பொருள் என்னவென்றால் இந்தியாவில் பொது பணித்துறை என்பது அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதில் செலவாகும் பணத்தை மிச்சப்படுத்தி பிரிட்டிசார் கொழுக்கலாம் என்று பொதுப்பணித்துறையை முற்றிலுமாக பிரிட்டிஸ் அரசு கைகழுவியது. இதன் விளைவாக விவசாயம் பொய்த்து பல கொடுமையான பஞ்சங்கள் வந்து லட்சங்களில் காவு கொண்டன.
இன்றைய அரசும் தனது பொதுப் பணீத்துறையை கைகழுவிக் கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி இயற்கை வளங்களை ஏகாதிபத்தியத்துக்கு பட்டயம் வேறு எழுதிக் கொடுத்து வருகிறது. ஆறு, குளம் முதலான அனைத்து வளங்களும் அவனது சந்தைக்கு சேவை செய்ய தாரை வார்க்கிறது. விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அன்றைக்கு தனது துணி தொழிற்சாலைகளுக்கு தேவையான் சாய பயிர்களை பயிரிட நிர்பந்தித்து விவசாயிகளை கொன்று குவித்தான் கும்பினிக்காரன். இன்று அரிசி, கோதுமை, கரும்பு என்று நாட்டு மக்களுக்கு தேவையான விவசாய பொருட்களை விளைவிப்பவர்களை நஸ்டத்திற்க்கு தள்ளி அவர்களை பூ பயிரிட செய்து தனது சென்ட் வியாபரத்திற்க்கான பின் நிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறான்.
"ஊரன் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய் காசுக்கு ரெண்டு விற்க்க சொல்லி காயிதம் போட்டான் வெள்ளக்காரன்" -என்பதுதான் இன்றைய தேசிய முதலாளிகளின் நிலை. தனது சொந்த முதலீட்டில் ஆரம்பிக்கும் பனியன் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பனியனுக்கு ஒரு பன்னாட்டு கம்பேனி வந்து விலை வைப்பான்.
பிரிட்டிஸின் நேரடி ஆதிக்கதில் இருந்தது முதல் இந்தியா, தற்பொழுது WTO, உலக வங்கி, மற்றும் பன்னாட்டு நிதி ஆதிக்க கும்பல்களின் நேரடி ஆதிக்கதில் இருப்பது இரண்டாவது இந்தியா. இரண்டுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். முதலில் வைப்பாட்டி, இரண்டாவதில் பொட்டு கட்டி விடப்பட்ட தேவதாசி. வேறு வித்தியாசம் எதுவும் இல்லை.

விடுதலை வேள்வியில் பகத்சிங்:
1600-ல் ஆரம்பித்த இந்த சுரண்டல் வளர்ந்து முழுமையாக இந்தியா முழுவதும் ஆக்கிரமித்து ஒரு அரசாங்கமாக தன்னை 1800 களில் மாற்றிக் கொண்டது. இந்த காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் இந்தியா முழுவதும் கிளர்ந்தெழுந்தன.
இவை ஒரு அலை வடிவில் மேலோங்குவதும் பின்வாங்குவதுமாக பிரிட்டிஸ் இந்தியாவைத் தொடர்ந்து தாக்கி அரசியலமைப்பில் தொடர் மாற்றங்களை ஏற்படுத்தி வந்த போராட்டங்களாக இருந்தன. இந்த நிலையில் இந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய காந்தி ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டார்.
காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை அவர் காட்டிக் கொடுத்த பிற்ப்பாடு ஏற்ப்பட்ட ஒரு மோன நிலையைக் கலைக்கும் சிங்கத்தின் கர்ஞனையாக இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உள்ளே நுழைகிறார் பகத் சிங்.
செப்டம்பர் 27, 1907 அதாவது நேற்றிலிருந்து சரியாக 99 வருடங்களுக்கு முன்பு. விவசாயிகள் சாயப் பயிர் விளைவிக்க மறுத்து போரிட்ட வீரம் செறிந்த இந்திய திரு நாட்டில். துப்பாக்கி பயிரிடலாமா என்று யோசித்த பகத் சிங் என்ற புரட்சிகர இளைஞன் பூமிக்கு வந்தான்.
அவனது குடும்பமே சுதந்திரப் போராட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்த பாரம்பரியத்தை உடையது. அவனும் கூட தனது மக்களுக்கு ஏகாதிபத்தியம் இழைத்த கொடுமைகளை மனதில் பெரும் நெருப்பாய் பூட்டி வைத்திருந்தான்.
சந்திரசேகர் ஆசாத்தால் உருவாக்கப்பட்ட இந்துஸ்தான் சோசலிச ராணுவ குடியரசு எனும் அமைப்பில் தன்னை பகத்சிங் இணைத்துக் கொண்டார்.
லாலாலஜபதிராயை லத்தியால் அடித்தே(1928) கொன்ற சாண்டர்சன் என்ற ஏகாதிபத்திய கொழுப்பு ஏறிய பன்றியை சுட்டுக் கொன்றதுதான் மக்கள் மத்தியில் இந்த அமைப்பை பிரபலப்படுத்திய முதல் நடவடிக்கை.
இதயனையடுத்து, தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் சட்டம் ஒன்றும், மக்களின் போராடும் உரிமைகளைப் பறிக்கும் சட்டம் ஒன்றும் நிறைவேற்றப்பட்ட அன்று பாராளுமன்றத்தில் யாரும் இல்லாத இடத்தில் குண்டு வீசி சரணடைந்தனர்.
யார் இந்த பகத்சிங்:
பகத்சிங்கை சாதரணமான பரவசமான துணிச்சல நடவடிக்கைக்கு சொந்தக்கார இளைஞர் என்று சுருக்கிப் பார்க்க முடியுமா?.
அவரது தெளிந்த சிந்தனைகளைப் பார்க்கும் பொழுது அவ்வாறு எண்ணத் தோன்றவில்லை. அரசியல் ரீதியாக் சுதந்திரப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் காந்தியின் ஏகாதிபத்திய சேவை-அகிம்சா எனும் போலி தத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளாகவே பகத்சிங்கின் நடவடிக்கைகள் இருந்தன.
காந்தி 'வெடிகுண்டின் பாதை' என்ற புத்தகத்தை எழுதினார் அதற்க்கு எதிராக 'வெடிகுண்டின் தத்துவம்' என்ற ஒரு அருமையான புத்தகத்தை எழுதினார்.
முக்கியமாக, இந்துஸ்தான் சோசலிஸ்டு ராணுவ குடியரசின் பல்வேறு பிரிட்டிஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, காந்தியின் போலி அஹிம்சா தத்துவ மயக்கதிலிருந்து மக்களின் அரசியல் உணர்வு மட்டத்தை மீட்டெடுத்து, தட்டி எழுப்ப வேண்டியதன் தேவையை உணர்ந்து, வரலாறு முழுவதும் காந்தியின் சுதந்திரப் போராட்ட பங்களிப்பை கேள்விக்குள்ளாக்கும் ஒரு மிகப் பெரிய நடவடிக்கையாகவே பாரளுமன்ற குண்டு வேடிப்பைப் பார்க்க முடியும்.
அதாவது இந்திய சுதந்திரப் போராட்ட மரபில் தமது பங்களிப்பு என்றென்றைக்கும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் ஒரு விசயம் என்பதை தெளிவாக உணர்ந்து திட்டமிட்டதுதான் அந்த குண்டு வீசி சரணடையும் நடவடிக்கை. அது உண்மையில் தூங்கிக் கொண்டிருந்த இந்தியர்களீன் காதுகளை கிழித்து விடுதலை உணர்வு ஊட்டச் செய்வதற்க்கான ஒரு அரசியல் செயல் தந்திர நடவடிக்கையாகவே உள்ளது. அந்த இலக்கை வெற்றிகரமாக எட்டினார் பகத்சிங்.
கோர்ட் நடவடிக்கைகளை பிரச்சார மேடையாக மாற்றி நாடு முழுவதும் ஒரு பேரலையை உருவாக்கினார். அவர் இருந்த வரை காந்திக்கும், ஏகாதிபத்தியத்திற்க்கும் பேரச்சத்தை ஏற்படுத்தி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் பகத் சிங்.
அன்றைக்கு இப்படி புரட்சிகரமாக இளைஞர்கள் இருந்த பொழுதுதான். இந்திய கம்யுனிஸ்டு கட்சி தனது முதல் மாநாட்டில் வன்முறை போராட்டம் பற்றி தெளிவான தீர்மானம் கூட இயற்ற வக்கின்றி தடுமாறிக் கொண்டிருந்தது. வோட்டுக் கட்சிகளின் தடுமாற்றம் அங்கே ஆரம்பிக்கிறது.
அவர் இறந்தார். ஆனால் ஒரு விதையாக் மண்ணில் புதைந்தார். ஆயிரமாயிரம் வீரர்களை தேசாபிமானிகளை இன்றுவரை உருவாக்கும் வல்லமை படைத்த ஒரு கற்பக விருட்சமாக இந்த மண்ணில் வேரூண்றி நிற்கிறார். இந்த விசயத்தில் காந்தி எந்த காலத்திலும் பகத்சிங்கின் அருகில் கூட வர அருகதையின்றி வெறும் கதையாடல்களுக்கான கருப்பொருளாக, புனித பிம்பமாக எஞ்சி நிற்கிறார்.
இதோ பகத்சிங்கின் செய்தி, சிறை எண் 14-ல் பொறிக்கப்பட்டிருந்தது.
"உயிர்வாழ வேண்டும் என விரும்பும் எனது இயற்கையான விருப்பத்தை மறைக்க எதுமில்லை. ஆனால் நான் உயிர்வாழ்வது சில வரையறைகளுக்குற்பட்டது. பரோலிலோ அல்லது சிறையிலோ வாழ்வதற்க்கு எனக்கு விருப்பமில்லை. புரட்சிகர அமைப்புகளின் குவிமையமாக இன்று நானிருக்கிறேன். அதன் தியாகங்கள் என்னை மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளன. இந்த இடம் மிக உயர்ந்தது, எந்தளவுக்கு என்றால் ஒருவேளை நான் உயிருடன் மீண்டு வந்தால், அந்த உயர்ந்த மதிப்பிற்க்கு தகுதியாக நான் வாழ்வது சந்தேகமே. தற்பொழுது எனது பல்கீனங்கள் மக்களுக்கு தெரியாது, ஆனால் தூக்குமேடையை என்னால் ஏமாற்ற முடிந்தால், ஒரு நாள் எனது பலகீனங்கள் வெளி தெரிந்து விடும். எதிர்காலத்தில் எனது புரட்சிகர மன உணர்வு குன்றலாம், அது அணைந்தும் கூட போகலாம்.

ஆனால், ஒரு வீரனைப் போல முகத்தில் புன்னகை வழிய இப்பொழுது தூக்கிலிடப்பட்டால், காலாகலத்திற்க்கும் இந்தியத் தாய்மார்கள் தங்களது குழந்தைகளையும் கூட எனது எடுத்துக்காட்டை பின்பற்றச் சொல்லி ஊக்கப்படுத்துவார்கள். எங்களை தூக்கில் போடுவது, விடுதலை வேள்வியில் மலரும் மலர்களின் எண்ணீக்கையை அதிகப்படுத்தும். அதன் அளவு எந்தளவுக்கு இருக்குமென்றால், இனிமேலும் ஏகாதிபத்திய சாத்தான்களால் புரட்சியை எதிர்த்து நிற்க்க முடியாது என்ற அளவில் இருக்கும்........"
மீண்டும் பகத்சிங்கின் தேவை:
கமிசன் பணத்துக்கு நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்கம் எனும் ஒரு புதிய வர்க்கத்தின் வித்து, அன்றைய ஜஹாங்கீர் மன்னன் பிரிட்டாஸருடன் செய்து கொண்ட வியாபார உறவில் போடப்பட்டது. அது இன்று பரிணாம வளர்ச்சியடைந்து அம்பானிகளாக, மன்மோகன்களாக, வாஜ்பேயிகளாக, புத்ததேவ்களாக நிற்கிறது.
காலனியாதிக்கத்துக்கு நன்றி சொல்லிய மன்மோகன் சிங் எனும் மாமா, என்ரான் கம்பேனிக்கு இந்தியாவை கூட்டிக் கொடுக்கும் வேலை செய்த மாமா பா. சிதம்பரம், புனிதம், பாரம்பரியம் என்று புருடா விட்டு மத வேறியைத் தூண்டிக்கொண்டே இன்னொரு பக்கம் புனித கங்கை மாதாவை சுயஸ் டிமெடரண்ட் கம்பேனிக்கு கூட்டிக் கொடுத்த வாஜ்பேயி, SEZ மற்றும் இதர உலகமய திட்டங்களை மனித முகத்துடன் செயல்படுத்த சொல்லும் வோட்டுக் கட்சி கம்யுனிஸ்டுகள்.
இப்படி இன்றைய மறுகாலனியாதிக்க சூழலில், நவீன கறுப்புப் பார்ப்பனர்களாகவும், தரகு வர்க்க அரசியல் வியாபாரிகளாகவும் வோட்டுக் கட்சி தலைவர்கள் பரிணமித்திருக்கிற நிலையை பார்த்தால் வேறு என்ன சொல்லத் தோன்றும், நாடு அடிமையாகிறது என்பதை தவிர்த்து.
எப்படி இன்றைக்கு பார்ப்பினிய கட்டமைப்பு, பார்ப்பனியத்தை உள்வாங்கிய எந்த சாதியைச் சேர்ந்தவனும் அதிகார தலைமை பீடத்திற்க்கு வரலாம் என்று கால்த்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டதோ அது போல இன்றைய ஏகாதிபத்திய மறுகாலனிய கட்டமைப்பு, ஏகாதிபத்திய தரகு பண்பாட்டை சுவிகரித்துக் கொண்ட யாரும் அரசியல் தலைமை பீடத்திற்க்கு வரலாம் என்று காலத்தின் தேவைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டது.
அதுதான் புதிய மொந்தையில் பழைய கள். அதுதான் இந்த போலி ஜன நாயகம் சட்டமன்ற நாடாளுமன்ற அரசியல். இந்த சட்டமன்ற நாடாளுமன்ற சட்டிக்குள் உட்கார்ந்து எவ்வளவு உயர்ந்த ரக குதிரையை ஓட்டினாலும், அது ஏகாதிபத்தியம், பார்ப்பினியம் வரையறுத்த எல்லையைத் தாண்டி ஓடாது.
இந்த கட்டமைப்புக்கு வெளியே, மாற்று அமைப்பு தேடி, வழி தெரியாமல், விஜயகாந்துகளை ஊக்குவிக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம் சரியான அரசியல் விதைகளை விதைத்து, தோழர் பகத்சிங் வழியில் இந்திய விடுதலையை முழுமைப் பெறச் செய்யும் கடமை, நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
அது உறுதியாக சட்டங்களிடையே கடவுளர் படங்களாக மாற வழிவகுக்கும் காந்தியின் வழியல்ல, நடைமுறையில் மக்களின் விடுதலையை உத்திரவாதப் படுத்திக் கொடுக்கும் பகத்சிங் வழிதான் என்பது வரலாறு நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம். இன்றைக்கு பகத்சிங்கின் பிறந்த நாளில் நமது அண்ணை தேசத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தில் பங்கெடுக்க உறுதியெடுப்போம்.
ஊர் கூடி தேரிழுத்தோம், தேர் நகர்ந்தது தெரியும், அதன் இலக்கை அடைந்ததா தெரியவில்லை?
இன்று, வீழழுக்கு நீரிறைக்கிறோம். தேர் நடுவீதியில் சமைந்து நிற்கிறது. வா மீண்டும் இழுப்போம். அதன் வழித் தடத்தில் கொண்டு சேர்ப்போம்!
அசுரன்.

(பகத் சிங், ஜாலியன்வாலாபாக் படுகொலைக் களத்தில் இருப்பதாக வரும் பகுதி மிகைப் படுத்தப்பட்டது. அவர் அங்கு சென்று இரத்தம் தோய்ந்த மண்ணை அள்ளி பத்திரப்படுத்திக் கொண்டார் என்ற அளவில்தான் எனக்கு விசயம் தெரியும். மற்றபடி அவர் அங்கு சென்ற பொழுது அந்த கொலைக் களம் என்ன நிலைமையில் இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சி எடுக்கவில்லை.)
*****************
வெட்டிப்பயல் அவர்களின் ஒரு பின்னூட்டம். இதை கட்டுரையுடன் கொடுத்தால் சரியாக இருக்கும்:
வெட்டிப்பயல் said:
கட்டுரையில் இன்னும் அவரை பாதித்த நிகழ்ச்சிகளை அருமையா எழுதியிருக்கலாம்.
அவர்கள் குண்டு போட்டது ஆள் இல்லாத இடத்தில் அதுவும் தாங்கள் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் என்று உலகுக்கு உணர்த்தவே!!!
இன்னும் அவர் சிறையில் இருந்த உண்ணாவிரதத்தை விட்டுவிட்டீர்கள். 93 நாட்கள் என்று நினைக்கிறேன். மகாத்மாகூட அத்தனை நாள் உண்ணாவிரதம் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே!!!
34 பின்னூட்டங்கள்:
test
அசுரன்
மிக நல்ல பதிவு.
நன்றி.
அசுரன்,
இன்றய சூழலில் நினைவுகூறத் தக்கவர் பகத் சிங்! அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள்.
ராஜா
சிவபாலன் மற்றும் ராஜவனஜின்
வருகைக்கு நன்றி,
செப் 27 பகத் சிங்கின் பிறந்த நாள்....
அசுரன்
அசுரன்,
ஏகாதிபத்திய எதிர்ப்பை உயிர்முச்சாக கொண்டு வாழ்ந்த பகத்சிங் போர்குணத்தையும்,
இன்றைய இந்தியா ஏகாதிபத்திய அடிமைகள் முலம் மறுகாலனியாக்கப்பட்டு வருவதை தெளிவாக உணரும் வண்ணம் எழுதி உள்ளிர்கள்.
நன்றி.
நல்ல பதிவு அசுரன். மிகைப்படுத்தப் பட்டதாக இருந்தாலும் பகத் சிங்கின் இளம் வயதுக் கதை மிக அருமை.
//இந்த கட்டமைப்புக்கு வெளியே, மாற்று அமைப்பு தேடி, வழி தெரியாமல், விஜயகாந்துகளை ஊக்குவிக்கும்//
அதாவது வெயிலுக்கு பயந்து வெள்ளாவியில் விழுந்த கதையாக!!
//ஊர் கூடி தேரிழுத்தோம், தேர் நகர்ந்தது தெரியும், அதன் இலக்கை அடைந்ததா தெரியவில்லை?
இன்று, வீழழுக்கு நீரிறைக்கிறோம். தேர் நடுவீதியில் சமைந்து நிற்கிறது. வா மீண்டும் இழுப்போம். அதன் வழித் தடத்தில் கொண்டு சேர்ப்போம்!//
மயக்கத்தில் இருக்கும் எம்மக்கள் மயக்கம் தெளிந்து, தொடை தட்டி தோள் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை தோழா! அப்போது, எகாதிபத்தியமும், மறுகாலனியாதிக்கமும் அத்தேர்ச் சக்கரத்தின் அடியில் நசுக்கப்பட்டு அழிக்கப்படும். இது கனவு அல்ல, சூளுரை!
எரிமலையின் வாயை அடைக்கும் கோந்து இவ்வுலகில் இல்லை.
//ஊர் கூடி தேரிழுத்தோம், தேர் நகர்ந்தது தெரியும், அதன் இலக்கை அடைந்ததா தெரியவில்லை?
இன்று, வீழழுக்கு நீரிறைக்கிறோம். தேர் நடுவீதியில் சமைந்து நிற்கிறது. வா மீண்டும் இழுப்போம். அதன் வழித் தடத்தில் கொண்டு சேர்ப்போம்!//
நிச்சயமாக,
மயக்கத்தில் இருக்கும் எம்மக்கள் மயக்கம் தெளிந்து, தொடை தட்டி தோள் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை தோழா! அப்போது, எகாதிபத்தியமும், மறுகாலனியாதிக்கமும் அத்தேர்ச் சக்கரத்தின் அடியில் நசுக்கப்பட்டு அழிக்கப்படும். இது கனவு அல்ல, சூளுரை!
yes...
//ஏகாதிபத்திய எதிர்ப்பை உயிர்முச்சாக கொண்டு வாழ்ந்த பகத்சிங் போர்குணத்தையும்,
இன்றைய இந்தியா ஏகாதிபத்திய அடிமைகள் முலம் மறுகாலனியாக்கப்பட்டு வருவதை தெளிவாக உணரும் வண்ணம் எழுதி உள்ளிர்கள்.
//
கரும்பலகை,
செப் 27 பகத்சிங் பிறந்த நாள் இல்லையா அன்றைக்கு அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் முகமாக மக்களிடம் உண்மைகளை உறக்க சொல்ல வேண்டும் என்ற உந்துதலில் இந்தக் கட்டுரையை எழுதினேன்.
தங்களது கருத்துக்களுக்கு நன்றி,
அசுரன்
//நல்ல பதிவு அசுரன். மிகைப்படுத்தப் பட்டதாக இருந்தாலும் பகத் சிங்கின் இளம் வயதுக் கதை மிக அருமை. //
போன்ஸ்,
தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி,
அசுரன்
அசுரன் உங்க அளவுக்கு எனக்கு அரசியல் அறிவு இல்ல...
இருந்தாலும் நீங்க காந்தியை பற்றி தவறாக சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது...
காந்தி உயர்ந்தவரா, பகத் சிங் உயரந்தவரானு கேட்டா எனக்கு ரெண்டு பேரையும் பிரிச்சு பாக்க தெரியாது. தன் நாட்டு மக்களுக்காக உயிரை விட்ட இருவருமே ஒன்றுதான். தங்களின் நம்பிக்கையின் விளைவில் அவர்கள் போராடினார்கள்.
கட்டுரையில் இன்னும் அவரை பாதித்த நிகழ்ச்சிகளை அருமையா எழுதியிருக்கலாம். ஜாலியன் வாலா பாக் படுகொலையை விட்டுவிட்டீர்கள்.
அவர் கல்லூரில அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் விட்டுவிட்டீர்கள்.
அவர்கள் குண்டு போட்டது ஆள் இல்லாத இடத்தில் அதுவும் தாங்கள் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் என்று உலகுக்கு உணர்த்தவே!!!
இன்னும் அவர் சிறையில் இருந்த உண்ணாவிரதத்தை விட்டுவிட்டீர்கள். 93 நாட்கள் என்று நினைக்கிறேன். மகாத்மாகூட அத்தனை நாள் உண்ணாவிரதம் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே!!!
காந்திக்கு கொடுக்கும் அதே மரியாதையை சுபாஷ் சந்திர போஸிற்கும், பகத் சிங்கிற்கும், சந்திர சேகர அஸாத்திற்கும் கொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.
கரும்பலகையின் வருகைக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி,
அசுரன்
**********
//நல்ல பதிவு அசுரன். மிகைப்படுத்தப் பட்டதாக இருந்தாலும் பகத் சிங்கின் இளம் வயதுக் கதை மிக அருமை. //
பொன்ஸ்,
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி,
அசுரன்
//மயக்கத்தில் இருக்கும் எம்மக்கள் மயக்கம் தெளிந்து, தொடை தட்டி தோள் கொடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை தோழா! அப்போது, எகாதிபத்தியமும், மறுகாலனியாதிக்கமும் அத்தேர்ச் சக்கரத்தின் அடியில் நசுக்கப்பட்டு அழிக்கப்படும். இது கனவு அல்ல, சூளுரை!//
//எரிமலையின் வாயை அடைக்கும் கோந்து இவ்வுலகில் இல்லை. //
சபாபதி சரவணன்,
உணர்வு கொந்தளிக்கும் தங்களது வார்த்தைகளுக்கு நன்றி,
அசுரன்
***************
வழிமொழிந்து ஆதரவு தெரிவித்த தோழி லிவிங் ஸ்மைலுக்கும் நன்றிகள்,
அசுரன்
காந்தி நல்லவரா? கெட்டவரா?
வேட்டிபயல் அவர்களே,
முன்பொருமுறை மா.சிவகுமாருடன் காந்தி குறித்து ஒரு விவாதம் நடந்தது. அதன் பகுதிகளை தங்களுக்கு தருகிறேன். அதன் சுட்டி:
http://masivakumar.blogspot.com/2006/06/14.html
நான் மா.சிவகுமாரிடம் கேட்டிருந்த கேள்விகள்:
1. காந்தி ரெயிலிலிருந்து தள்ளி விட்ட பின்புதான் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினார் என்பதன் மர்மம் என்ன? இந்த சம்பவம் பற்றிய காந்தியின் சுயசரிதையில் உள்ள அவரது எழுத்துக்களை படித்தால் சில விசயங்கள் புரிபடும்.
அதற்கு முன்பு வசதியான தனது இந்திய இங்கிலாந்து வழ்க்கையில் மக்கள் கஸ்டப்படுவது தெரியாமலேயே இருந்ததின் மர்மம் என்ன?
2. பெரும்பாலான மக்கள் போராட்டங்களில் அவர் நிலபிரபுத்துவ(இந்த வார்த்தை உங்களுக்கு அந்நியமான வார்த்தையில்லை என்று கருதுகிறேன். சிலருக்கு இந்த வார்த்தை பிடிப்பதில்லை) ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது ஏன்?
3. வன்முறையைக்கூட அரசு நடத்தினால் சரிதான் என்று பல நேரங்களில் முரன்பட்டதேன்?
4. சுபாஸ் சந்திர போஸ் தலைமை பதவிக்கு வர விடமால் மிரட்டல் நாடகம் நடத்தியது ஏன்?
5. அம்பேத்காரால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டது ஏன்?
6. நான் ஆய்வு செய்த வகையில் அவர் பிரிட்டிஸாருக்கு தேவைப் பட்ட ஒரு முகமூடி என்பதாகத்தான் தெரிகிறது. when the mask was no more required, that is freedom struggle gone out of the mask, british gave freedom to us. and in this the role of USA should be mentioned.
மா.சி யின் பதிலில் உள்ள ஒரு பகுதி:
***//தென்னாப்பிரிக்காவிலும் ரயிலில் இருந்து வெளியே எறியப்பட்ட போது, தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், இதைச் சகித்துக் கொண்டு வந்த வேலையைப் பார்த்துக் கொண்டு போகலாமா அல்லது இதை மாற்ற ஏதாவது செய்யலாமா என்று சிந்திக்கிறார்.
//***
***//சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு சாதி சமூகத்தின் இருண்ட பக்கங்களைப் பார்த்து வந்த அம்பேத்காருக்கு கசப்பாக இருந்தது இயற்கையே.//***
ஆக, இதுதான் காந்தி. இந்த பெருமையை, பழைய காலத்தை ஆங்கிலேயனிடம் இருந்து மீட்ப்பதுதான் அவரது இயங்கியல். இதை தவிர்த்து அவர் மக்கள் விடுதலை என்று பேசியவை எல்லாம் அன்றைக்கு நிலவிய கருத்துக்களால் தாக்கப்பட்டு அவற்றையும் பிரதி நிதித்துவ படுத்த வேண்டிய கட்டாயமே அன்றி வேறல்ல. அப்பொழுதும் அவர் நிலபிரபுத்துவத்தின் நலனில் ஒரு சிறு அளவு கூட சமரசம் செய்து கொள்ளவில்லை. ஏனெனில், எப்படி கீழே தள்ளிவிடப்பட்ட காந்தி விசனமுற்றாரோ அதே போலத்தானே உடமைகள் பிடுங்கப்படும் கொழுத்த சுரண்டல் நிலபிரபுவும் விசனப்படுவான் என்பதை அவரால பொருத்திப் பார்க்க முடிந்தது. ஆனால், எந்த உடமையும் இன்றி அந்த காலத்தில் அடிமையைவிட கேவலாமான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் போராட்டங்களை அவரால் அவ்வாறு பொருத்திப் பார்த்து உணர முடியவில்லை.
மா.சிக்கு சின்னக் கட்ட பொம்மன் என்பவர் கொடுத்த சில பதில்கள்:
*****
காந்தி வைக்கம் போராட்டத்தைச் சிதைத்திடச் செய்த ஈனத்தனமான செய்கையை, தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்ட, ஞானி இயக்கிய 'அய்யா' எனும் தொடர் அம்பலமாக்கியுள்ளது. அப்போராட்டத்தில், பெரியாருடன் இணைந்து போராடிய காங்கிரசுப் பிரமுகர் ஜார்ஜ் ஜோசப்பை, அப்போராட்டத்தினை விட்டு விலகிடுமாறு காந்தி கடிதம் எழுதினார். வைக்கம் போராட்டத்தில் ஜோசப் ஈடுபட்டபோது திருவிதாங்கூர் அரசு அவரை சிறையில் அடைத்தது. அப்போது சிறைக்குள் இருந்த ஜோசப்பிற்கு காந்தியின் வேண்டுகோள் வந்து சேர்ந்தது. "கிறிஸ்தவரான தாங்கள், இந்து மதத்தின் உள்விவகாரத்தில் அக்கரை காட்ட வேண்டாம். விலகிடுங்கள்" என்று. ஜோசப் மனம் நொந்து போனார். மனித உரிமை மீறலை எதிர்த்துத்தான் அவர் பெரியாருடன் இணைந்து வைக்கம் வந்தவர். அவரின் செயலை, இந்த பாவ ஆத்மாவோ, மதரீதியாய்த் தனிமைப்படுத்திடும் இழிவான செயலில் இறங்கியது.
தற்காலத்தில் இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள், ராம கோபாலன் எனும் வானரக் கூட்டத்தினர் என்பதை எண்ணிப்பார்க்கலாம். கோவிலிலே தமிழில் வழிபாடு என்று கேட்டால், நாத்திகர்களுக்கு இதைச் சொல்ல உரிமை ஏது? என்று நரித்தனமாய்க் கேட்பார்கள்? ராமகோபாலன் கூட்டத்தின் முன்னோடியாக மோகன் தாசு இவ்வாறாக வெளிப்படுகிறார் பார்த்தீர்களா?
பிற்பாடு ஜார்ஜ் ஜோசப் காங்கிரசை எதிர்க்கும் ஜஸ்டிஸ் கட்சிக்குப் போய்ச் சேரும் வேலையை காந்தியே செய்தார் என்று வ.ரா. எழுதி இருக்கிறார். இது பற்றி சிவக்குமார் என்ன கருதுகிறார்?
மதமாற்றம், கோமாதாவைப் பிரியாணி போடுவது பற்றி, நால்வகை வர்ணம் பற்றி காந்தி மஹ்ஹ்ஹ்ஹான் என்ன கருதினார்?
*****
*****
காந்தியின் எளிமை பற்றிய புரட்சிகர மயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது.
செல்வந்தராகவும், பிறப்பில் மேம்பட்ட வைசிய வர்ணத்தவராகவும் பிறந்த காந்தி, எளிய உடை உடுத்துவது என்பது அவ்வர்க்கத்தால் எளிதில் செய்யக்கூடிய செயல் என்பதையும்,
ஆனால் தூய்மையான உடையோ, ஆடம்பரமான உடையோ மறுக்கப்பட்ட மகர் சாதியில் பிறந்த அம்பேத்கர், கோட் சூட் அணிந்து அதை மறுப்பதுதான் இங்கு புரட்சிகரமான விசயம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.
காந்தியின் மற்ற எளிமைகளைப் பற்றி சரோஜினி நாயுடு கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்:- "அவரின் எளிமைக்காக காங்கிரசுக் கட்சி நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது".
பின்னே. இருக்காதா? மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் இவுக போகணும்னா, 72 டிக்கட்டையும் (பாதுகாப்பு கருதி) காங்கிரசு அல்லவா புக் செய்து மொய் எழுதியது! கூடவே பால் கறவையில் இருக்கும் ஆடுகளுக்கும் டிக்கட் எடுக்கணும்.
இந்த மாதிரி வெளி வேசம் போட்ட ஆசாமி எவ்வாறு தன்னிகரில்லா தலைவனானான்?
*****
*****
இந்த தன்னிகரில்லா தலைவலியால், நமது நாடு சந்தித்த இடையூறுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
1) வெள்ளையனை எதிர்த்துப் போர் முரசு கொட்டி மாண்ட லட்சுமிபாய்,திப்பு சுல்தான்,கட்டபொம்மன்,பூலித்தேவன்,அழகுமுத்துக் கோன் ஆகிய வீரர்களின் வாட்களோ, இந்த ஆசாமியால் சர்வோதயா/கதர் காரியாலயத்தில் 'கதர் சோப்பு' வெட்டிக்கொண்டிருந்தது.
தோழர் ஜீவானந்தம், 1920களில் காந்தி பக்தராக இருந்த காலத்தில் காரைக்குடியில் காந்தி ஆசிரமம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அவ்வாசிரமத்திற்கு விஜயம் செய்த வ.உ.சி. சினத்துடன் சொன்ன வார்த்தை "வாளெடுத்துப் போர் புரிய வேண்டிய கைகளைப் போயும் போயும் கைராட்டை சுற்ற வைத்து விட்டாயேப்பா".
2) சௌரி சௌரா போலீஸ் ஸ்டேசனை மக்கள் கொளுத்தித் தம் கோபத்தைக் காட்டியதும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தீராக்காதலர் காந்திக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்.
பின்னே! செய்ய மாட்டாரா என்ன? கொஞ்ச நாளைக்கு முன்னர்தான் முதல் உலகப்போரில், பிரிட்டிசாருக்கு ராணுவத்தில் சேர்ந்து தொண்டு செய்ய மக்களிடம் அரும்பாடுபட்டிருந்தார். அதற்கு சற்று முன்னர், தென் ஆப்பிரிக்க போயர் யுத்தத்தில், வெள்ளையனுக்கு கங்காணி வேலை செய்து விட்டுத்தானே இங்கே கப்பல் ஏறி வந்தார்?
3)புரட்சிக்காரன் பகத்சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால், அதனை, லாகூர் காங்கிரசுக்கு முன்னரே செய்து விடுங்கள் என்று இர்வினிடம் பேரம் பேசி 'காந்தி-இர்வின்'ஒப்பந்தம் போட்ட துரோகத் தலைவனாச்சே!
4)ஆங்கிலேயனை, அவன் வந்திறங்கிய இந்திய வாசலான பம்பாயிலேயே துரத்தி அடிக்கும் பாய்ச்சலோடு 1946லே இந்தியக் கடற்படையினர் 'தல்வார்' கப்பலில் செய்த ராணுவப் புரட்சியைக் காட்டிக் கொடுத்த இவரல்லவா தலைவர்?
5) சக இந்தியரை சுட மறுத்த (வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில்) கூர்க்கா ராணுவப் படையினரின் செயலைக் கண்டித்த தேசத்தலைவரல்லவா?
6)தெலுங்கானா, புன்னப்புரா, வயலார், வயநாடு ஆகிய விவசாயிகள் புரட்சியை ரத்தச் சேற்றில் நிலப்பிரபுத்துவ சக்திகள் நசுக்கிக் கொண்டிருந்தபோது 'தர்மகர்த்தா' முறை மூலம் நமது உழைக்கும் வர்க்கத்துக்கு விடிவு வரும் என கிலோக்கணக்கில் அல்வா கொடுத்த ஜென்மம் அல்லவா?
காந்தியின் சாதனைகள் தொடரும்..
*****
*****
அஹிம்சைக்கு இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்கும் நீர், கீழ்க்கண்ட விசயம் பற்றி என்ன கருதுகிறீர்?
தலித்களின் இரட்டை வாக்காளர் தொகுதியை அம்பேத்கர் ஆதரித்தபோது, அது இந்து தர்மத்தைப் பிளவுபடுத்தி விடும் என்று சொல்லி, அம்முறையைக் கைவிடக் கோரி உண்ணாவிரதம் இருந்த காந்தியின் பிளாக்மெயில் அணுகுமுறையும் அஹிம்சைதானா?
(உண்ணாவிரதம் என்பதால் அஹிம்சைதானே)
உயிரை ஊசலாட வைத்துக்கொண்டு அம்பேத்கரை மிரட்டி 'பூனா ஒப்பந்தத்தில்' கையெழுத்திடச் செய்து, தலித்களின் நலன்களுக்கு எதிராக காந்தி நடந்துகொண்ட அம்முறை, காந்தியின் பக்தர்களான தங்களுக்கு உவப்பானதா?
அவர் உண்ணாவிரதம் இருந்தபோது, ஐரோப்பாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த பெரியார், அம்பேத்கருக்கு 'அவர் சாகட்டும். அவரின் உயிருக்காகப் பணிந்து போய் தாழ்த்தப்பட்டவர்களின் நலனைப் பலி கொடுக்காதீர்கள்' என்று தந்தி கொடுத்ததையும் இங்கு நினைவுகூர்கிறேன்.
அஹிம்சையை காந்தி யாருக்கு வலியுறுத்தினார்? ஒடுக்கப்படும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு மட்டுமே. அரசின் பயங்கரவாதத்தை அவர் எப்போதுமே ஆதரித்துள்ளார். நிலப்பிரபுக்களின் சுரண்டல் அவர் கண்ணுக்குத் தெரியவே இல்லை. அந்தச் சுரண்டல் எல்லாம் என்ன அஹிம்சைப் பரம்பொருளா என்ன?
பசுவைக் கொல்லக் கூடாது என எந்த அடிப்படையில் சொல்ல வருகிறீர்கள்?
பசுவின் கறியே மலிவு விலையில் (கிலோ 60 ரூபாய் இருக்கும். 3 வருடங்களுக்கு முன் சென்னையில் 55ரூபாய்க்கு வாங்கினேன்) ஏழை மக்களுக்குக் கிடைக்கும் அதிகப் புரதம் நிறைந்த உணவு. மேலும் பசுவைக் கொல்வதால் நமக்குக் கிடைக்கும் செல்வம் சொல்லி மாளாது. பேட்டா செருப்பு, கைப்பை, ஜெர்க்கின் என்று தோல்பொருட்களும், மாருதி காரின் சீட்டு, சர்க்கரை வியாதி மருந்து, செல்லப் பிராணிகளின் தீனி, சர்க்கரை சுத்திகரிப்புத் தொழிலில் முக்கிய இடுபொருள், என அதன் பயன்பாடு எண்ணிலடங்கா. பார்ப்பனர்களின் சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் பஞ்சகவ்யத்தில் கூட பசுவின் கோரோசனம் ஒரு பங்காகும்.
உபயோகமில்லா மாட்டை எந்த ஏழையாலும் தீனி போட்டுப் பராமரிப்பதென்பது ஏலாத காரியம்.
உயர்சாதி மனோபாவத்துடனும், முசுலீம் எதிர்ப்பு இந்து வெறியாலுமே, பசு வந்தனை பஜனைகள் பாட முடியும்.
*****
*****
காந்தியின் பசு வதை எதிர்ப்பும், சுரண்டும் வர்க்கத்தின் பண்பாடுதான்.
அவர் எப்போதுமே ஆளும் வர்க்கக் கருத்தியலுக்கு ஊறு விளைவித்திடாத வகையில் மக்கள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்பதனால்தான் அஹிம்சையை எப்போதுமே உழைக்கும் வர்க்கத்திடம் இருந்து மட்டும் எதிர்பார்த்தார்.
அஹிம்சையால் எதிராளியின் மனசை மாற்றுவது எனும் கற்பனையின் விஸ்தாரம் இருக்கட்டும். இப்போது நடைமுறையில் இருக்கும் சில நிகழ்வுகளைப் பேசுவோமே.
தாமிரபரணி ஆற்று நீரை அந்நிய நாட்டு கோக் நிறுவனம் ஒட்ட உறிஞ்சி நம்மைக் குடிநீர்ப் பஞ்சம் நோக்கித் துரத்த ஆரம்பித்துள்ளது. இது கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியது. நம் நாட்டில் இத்தகைய எதிர்ப்புகளை அஹிம்சை வழியில் செய்ய அரசியல் சட்டம் வழிவகை செய்துள்ளது.
போராடும் மக்கள், இதற்காக ஊர்வலம் நடத்திப் பிரச்சாரம் செய்திட முனைகிறார்கள். ஆனால் கோக்கிடம் காசு வாங்கிய காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் கோக் பற்றி நீங்கள் உங்கள் பிரச்சாரத்தில் பேசக் கூடாது என மறுக்கிறது. பாருங்கள்! இங்கே அஹிம்சை வழி மறுக்கப்படுகிறது. அதே நேரத்தில் கோக் ஆலை அமைய இருக்கும் ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் கம்சன் என்பவர் அந்த நிறுவனம் தொடங்க அனுமதியை ரத்து செய்து தீர்மானம் போடுகிறார். உடனே, கோக்கின் ஆட்களால் கடத்தப்பட்டு, மர்மமான முறையில் சாகிறார். இது ஹிம்சை. அரசோ கோக் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எதிரி, ஹிம்சையைக் கையாள அரசு மவுனசாட்சியாக நிற்கும்போது, மக்கள் போராடுவதற்குக் கூட அஹிம்சை வழி மறுக்கப்படுகிறது.
மக்கள், கோக் ஆலைக்காரன் மனசை மாற்றிட ஏதாவது ஜெபமோ, பஜனையோ பாடிக் கொண்டிருக்க முடியுமா?
நமது ஆயுதத்தை (கத்தியோ, உண்ணாவிரதமோ) நாம் தீர்மானிப்பதில்லை. தீர்மானிப்பது நமது எதிரி.
காந்தியின் சிந்தனைப்படி பார்த்தால், அவனை ஏன் எதிரியாக நினைக்க வேண்டும். அவன் அறியாமல் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள நாம் நம்மை வருத்திக் கொள்ளவேண்டும் என்பது 100% எதிரியின் நலன் காப்பதில்தான் போய் முடியும். இல்லையா?
நிலப்பிரபுத்துவம் உச்சிக்குப் போய் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த தெலங்கானாவில் ஒவ்வொரு பண்ணையாளருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், அவர்களின் அதீத சுரண்டலும், உழைக்கும் விவசாயக் கூலிகளுக்கோ ஒட்டிய வயிறே சொத்தாக இருந்ததுமே அவர்களைப் புரட்சியை நோக்கி உந்தித் தள்ளியது.
இந்த இடத்தில் பண்ணையார்கள் துப்பாக்கியால் விவசாயிகளைக் கொன்றுகொண்டிருக்கும்போது அவ்விவசாயிகளுக்கு அஹிம்சையை உபதேசிப்பது எவ்விதத்திலும் அவர்களை மேம்படுத்திட உதவி செய்யாது. இல்லையா?
விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் வழி நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டு போராடி பல மாவட்டங்களில் பண்ணையார்களின் நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள். நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. பண்ணையார்கள் ஹைதராபாத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். காந்தி ஏழை விவசாயிகளின் இச்செயலை ஏற்றுக் கொள்ளவில்லை.
உடனே அவரின் சீடர் வினோபா தலைமையில் பூமிதான இயக்கம் தோன்றிட விதை போட்டார். அதாவது நிலப்பிரபுக்களே மனசு மாறி உபரி நிலங்களை ஏழைகளுக்குத் தானமாய்த் தந்து விடுவது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கத்தி இன்றி நிலம் சொந்தமாகி விடும். இதன் நீட்சியாக தமிழ் நாட்டில் கூட பின்னாளில் காங்கிரசு அரசு எந்த ஒரு பண்ணையாருக்கும் 45 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் கூடாது என சட்டம் போட்டது. காந்தியின் சீடர்கள்தான் கில்லாடிகளாச்சே. பினாமி பேரில் 45, 45 ஏக்கர்களாய் மாற்றிக் கொண்டார்கள். உதாரணமாக கோவிந்தசாமி மூப்பனார்(கருப்பையா மூப்பனாரின் அப்பா) தனக்கு சொந்தமாய் இருந்த 1000 ஏக்கர் நிலங்களில் பெரும்பாலானவற்றை டிரஸ்ட் ஒன்றின் கீழ் மாற்றி ஏய்த்தார். சிலவற்றை பினாமிகளாய் தனக்கு சாராயத்தில் சோடா கலந்து தரும் வேலை செய்த எடுபிடி 'சோடா மாணிக்கம்' என்பவரது பேரில் கூட 45 ஏக்கர் எழுதி வைத்தார்.
இவ்வாறு நிலப்பிரபுக்களின் நலன் சரிந்து விடாதபடிக்குத்தான் காந்தியின் 'தர்மகர்த்தா' பொருளாதார முறை விளங்கியது. காந்தியின் மனப்பான்மை எப்போதுமே உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்கானதில்லை.
*****
அசுரன் சொன்னது:
*****
ஒவ்வொரு சமூக கட்டங்களையும் இயக்கும் பிரதான முரன்பாடு என்ன? காந்தி எந்த வர்க்கம்? அவரது பின்புலமாக உள்ள சமூக கட்டங்கள் என்ன? அவர் மீது ஆளுமை செலுத்திய தத்துவங்கள் என்ன? அன்றைய காலகட்டத்தின் புரட்சிகர நிலைமைகள் என்ன என்று பல்வேறு விசயங்களை கண்க்கில் எடுத்து ஆய்வு செய்தால் மிஞ்சுவது காந்தி சமூக விடுதலைக்கான ஒரு தலைவர் அல்ல. அவரிடம் தீர்வு என்று சொல்லுவதற்கான விசயங்கள் ஒன்றும் கிடையாது, அவர் சமூகத்தை பின்னுக்கிழுக்க முயற்சி செய்தவஎ என்பதுதான் முடிவாக வருகிறது. மேலும் நீங்களே சொல்லுவது போல் அவரை நிலபிரபுத்துவ பிற்போக்குத்தனம் ஆளுமை செலுத்துகிறது.
*****
மா.சிக்கு அசுரனின் சில பதில்கள்:
##//
சிவகுமார்:
உண்மையின் தேடுபவராக வாழ்ந்த அவரது பங்களிப்பு இங்குதான் ஆரம்பிக்கிறது. உலகில் என்ன கோளாறு என்பதைப் புரிந்து கொள்ள தனது வாழ்க்கையை சோதனைக் களமாக்கி, தன்னுள்ளே நடக்கும் போராட்டங்களில் வெற்றி பெற்றால்தான் வெளிப் போராட்டங்களை நடத்த முடியும் என்று வாழ்ந்து காட்டிய தகைமைதான் அவரை மகாத்மாவாக்குகிறது.//
அசுரன்:
இதை நான் மறுக்கவே இல்லை. இன்னும் இந்த விசயத்தை மனதில் கொண்டுதான் எனது மாப்ளா கலகம் கட்டுரையில் கூட காந்தி பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் இவை ஒரு தனிமனிதனுக்கு நல்ல முன்னுதாரணம். இவை ஒரு நல்ல மனித சமுதாயத்தில் தன்னலம் கருதாமல் சமூகத்தின் நலம் கருதி வாழ்வதற்க்கு நல்ல முன்ணுதாரனம். இவற்றை கட்டாயம் எந்த ஒரு சமூகப் போராளியும், தலைவரும்
தனது பண்பாடாக சுவிகரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவை எந்த காலத்திலும் அடிமைப்பட்ட மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விடாது.
காந்தியின் நேர்மையை அவரது அறிவியல் பூர்வமான சித்தாந்தமில்லா சுய தேடலை
இப்படித்தான் அன்றைய ஏகாதிபத்தியம் தனக்கு முகமூடியாக பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் எனது மாப்ளா கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தேன்: ""பிறகு பாவம் காந்தி நிரந்தர முகமூடி ஆகிவிட்டார்""
இங்கு "பாவம்" என்ற சொல்லை - அவர் ஏகாதிபத்திய சதிகளுக்கு நீங்கள் அவரிடம் இருப்பதாக(//சாதி தருமத்தை முற்றிலும் ஒதுக்க மனமில்லாத அவரது உயர்ந்த சாதிப் போக்கு//) சொன்ன பல்வேறு நிலபிரபுத்துவ தத்துவ தாக்கங்கள் காரணமாக பலியானார் - என்பதை உண்ர்ந்து பயன்படுத்தினேன்.
//
சிவகுமார்:
எனக்குப் புரிந்த வரை காந்தி போராட்டங்களின் நலிந்தவர்களின் பக்கமே சார்ந்திருந்தார். நில உரிமையாளருக்கு எதிராக ஏழை விவசாயிகளுக்கும்,
தொழிற்சாலை உரிமையாளருக்கு எதிராக தொழிலாளருக்கும், சாதி இந்துக்களுக்கு எதிராக அரிசனங்களுக்கும், இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கும் ஆதரவாக அவர் பல முறை வாதாடியிருக்கிறார், போராடியிருக்கிறார் என்றுதான் என்னுடைய புரிதல்.//
அசுரன்:
அவர் எப்பொழுதுமே சூழ்நிலைக் கைதிதான்(may be some exceptional examples be exist). இதை நேரு பல இடங்களில் பதிவு செய்துள்ளார். நேரு கூறுவதை தொகுப்பாக கூறினால் "அவர் எப்பொழுதும் குழப்பமான மனநிலையில் முடிவுகள் தெளிவாக எடுப்பதில் குளறுபடிகளுடனேயே இருந்தார்" என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.
இது மிக எடுப்பாக வெளிவந்தது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அவரிடம் ஏற்பட்ட தடுமாற்றங்களின் போது. காந்திக்கும் அன்றைய கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தும் இவ்விசயத்தில் சில புரிதல்களுக்கு உதவும்.
அவர் பெரும்பாலான நேரங்களில் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடந்துள்ளார் சில நேரங்களில் மக்களின் கடும் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளார் (வைக்கம் போராட்டம், தெலுங்கான போராட்டம்- மேலும் பல எடுத்துக்காட்டுகள் ஞாபகம் இல்லை). ஆனால் மிக பெரும்பாலான நேரங்களில் ஆளூம் வர்க்கத்தின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க சொல்லி மக்களை கேட்கிறார்.
நிலபிரபுக்களிடமிருந்து பறிமுதல் செய்த நிலங்களை திருப்பி கொடுக்க சொல்லி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர்களை கண்டித்து, தனது அரசு வரும் பொழூதும் இதே போல் நீங்கள் அடிபணியாமல் போக வாய்ப்புள்ளது என்று கண்டிக்கிறார். அவர்களுக்கு(57 வீரர்கள்) தண்டனை கொடுத்ததை சரி என்றவர். இவற்றின் மூலம் ஒரு அரசு என்ற அளவில் தானும் கூட வன்முறையை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதை உணர்த்துகிறார்.
அவர் என்றைக்குமே existing system-த்தை மாற்றக் கோரியதில்லை. அதாவது நிலபிரபுத்துவ setup-ல் மாற்றம் வருவதை விரும்பவில்லை. அவர் போராட்டத்தில் இறங்க காரணமானதாக நீங்கள் மேற்சொன்ன அதே இயங்கியல் இங்கும் அவரை உந்தித் தள்ளுகிறது(//தனது பெருமைக்கு விளைந்த பங்கம் என்றே பொருமும் அவர், //
//இந்தக் கட்டத்தில் அவரது உயர் குலத் தன்மானமும் தன்னுடைய கல்வித்
தகுதியில் இருந்த பெருமையும், போராட்ட வழியில் அவரைச் செலுத்தின.//)
அவரது பெருமை குலைந்த பொழுது அவர் பட்ட கஸ்டம் போல்தானே மற்ற அந்தஸ்த்தில் கூடியவர்களும்(நிலபிரபுக்கள், பிரிட்டிஸார்) அவர்களிடமிருந்து அந்தஸ்த்து பிடுங்கப்படும் போது பாதிக்கப்படுவார்கள் என்று அவர் எண்ணியதாலேயே உழைக்கும் மக்களின் அப்படிப்பட்ட போரட்டங்களை அவரால்
ஆதரிக்க முடியவில்லை. அப்படி ஆதரித்தாலும் அது தன்னியல்பான பெரும் மக்கள் பங்களிப்பின் நிர்பந்தத்தால் எடுத்த முடிவுகளாகத்தான் உள்ளன.
அவர் எல்லாவற்றையும் தனது சொந்த அனுபவத்தின் முடிவிலிருந்து நோக்கினார் அதனால்தான் அவரது முடிவுகளை அவரது பிற்போக்கத்தனங்கள்(நீங்களே குறிப்பிட்ட) ஆளுமை செலுத்தின.
நான் மேலே சொல்லியிருந்தேனே காந்தியை ஆய்வு செய்வதில் உங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்று, அது இந்த விசயம்தான்:
அதாவது காந்தியை போராட்டதுக்கு இழுத்த விசயத்தை அடையாளம் கண்ட தங்களால் அதுதான் அவரது ஒவ்வொரு முடிவையும் தீர்மானிக்கும் காரணியாக இருந்ததை கவனிக்காமல் விடுகிறேர்கள்.
## வன்முறையை ஆதரித்தாக சொல்லுவது அந்த துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர் பிரச்சனையிலும், பகத்சிங் பிரச்சனையிலும் அரசு பயங்கரவாதத்தை ஆதரித்ததை. குறிப்பாக துப்பாக்கி சூடு நடத்த மறுத்த காவலர் பிரச்சனையில் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்ற வீரர்களை கண்டிக்கிறார்.
//காந்தி இல்லாவிட்டாலும், வேளை வந்ததும் இங்கிலாந்து மூட்டை கட்டியிருக்கும், அவரை ஒரு முகமூடியாகத்தான் அரசு பயன்படுத்தியது, அரசின் கைப்பாவைதான் காந்தி என்ற வாதம் கொஞ்சம் அதிகப்படியாகவேப் படுகிறது//
இது உண்மை. அன்றைய வரலாற்றுச் சூழலை ஆய்வு செய்யுங்கள். சந்தைக்கான பகுதிகள் முற்றிலுமாக ஒரு சில ஏகாதிபத்தியங்களின் கையில் மாட்டிக்கொண்டு. சந்தைக்கு புதிதாக நாடுகள் இன்றி ஏகாதிபத்தியங்கள் நேரடியான ஒரு மோதலுக்கான சூழல். இவற்றை அன்றைய லெனினுடைய பல்வேறு புத்தகங்களில் காணலாம். அமேரிக்கா தனக்கு சந்தையில் பங்கு வேண்டி அரசியல் செய்தது, ரஸ்யா என்ற தத்துவம் நிதர்சனமான நிலை, ஜப்பானின் வளர்ச்சி, ஜெர்மனியின் தொழிற்புரட்சி, இந்தியாவில் ஒரு கம்யூனிச எழுச்சிக்கான சூழல் இப்படி இந்தியாவுக்கு கிடைத்த போலி சுதந்திரத்தில் உலக, உள்ளூர் நடப்புகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன. இதில் காந்தியின் பங்கு நிச்சயமாக நெகடிவ்தான்.
காந்தியின் நடவடிக்கைகள் அனைத்தையுமே தொகுத்துப் பார்த்தால் மக்கள் போராட்டம் வெடித்துக் கிளம்பும் போதெல்லாம் இவர் மக்களின் குரலாக முன்வந்து பிசுபிசுத்துப் போகும் போராட்ட வழிமுறைகளை சொல்லுவார். பிறகு பின்வாங்குவார் . இதன் மூலம் தற்காலிகமாக மக்கள் மீண்டும் போராடும் மனநிலைக்கு வர இன்னும் ஒரு 5 அல்லது 10 வருட அவகாசம் கொடுப்பார். இதற்க்காக பல்வேறு போராட்டங்களில் பிரிட்டிஸ் அரசால் நன்றியுடன் நினைவுகூறப்பட்டுள்ளார்.
காந்தி உண்மையில் சுதந்திரம் என்ற விசயத்தை தள்ளிப் போட்டார். இது காந்தி என்ற தனிமனிதரை மட்டும் பார்க்காமல் அவரது காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை பகுத்தாய்வு செய்தால் புரியும்.
காங்கிரஸ் என்ற கட்சியை ஆங்கிலேயனே உருவாக்கியது ஏன்?
"வெடி மருந்துகள் நிரப்பட்ட பீரங்கி திரி கொழுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக" அன்றைய பிரிட்டிஸ் அரசு இந்தியாவின் நிலையை சொல்லுகிறதே அப்பொழுது காந்தி சிறுவன்தான்.
எதிர்ப்பை நிறுவனப்படுத்தி அழிக்கும் பழைய தந்திரம் தான் அது(இன்றைக்கு WSF அதுபோன்ற ஒரு அமைப்புதான்). பிரிட்டிஸ் அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியா தனக்கான அமைப்பை தானே கட்டிக்கொள்ளும் சூழல் அன்று நிலவியதால். பிரிட்டிஸ் அரசே அப்படி ஒரு அமைப்பை உருவாக்கியது. அதுதான் காங்கிரஸ்.
காங்கிரஸ் பத்தாத பொழுது பாராளுமன்ற செட்டப், தேர்தல் என்று சலுகைகளை கொடுத்து கொடுத்து போராட்டத்தை தள்ளிப் போட்ட பிரிட்டிஸ் அரசுக்கு காந்தியும் அப்படித்தான் பயன்பட்டார் என்பது பல்வேறு போராட்டங்கள் கிளர்ந்தெழுந்து சூழல், அவற்றை காந்தி சுவிகரித்து நிர்முலமாக்கியதை பார்க்கும் பொழுது தெளிவாக தெரிகிறது.
முதலுக்கே மோசமாக பம்பாய் தொழிலாளர் கலகம், தெலுங்கானா விவசாயிகல் கிளர்ச்சி, இரண்டாம் உலக்ப்போரால் பலவீனமான பிரிட்டிஸ் அரசு, அமேரிக்க பொருளாதார உதவி வேண்டி நிற்க்கும் பிரிட்டிஸ் அரசின் நிலை, சந்தையில் பங்கு கேட்கும் அமேரிக்கா.....
இச்சூழலில் ஏற்கனவே அவர்களது ஏஜன்டுகளாக, முகமூடிகளாக இருந்த காங்கிரஸ் பிற்போக்கு கோஸ்டிகளிடம் நாட்டை ஒப்புடைத்துவிட்டு. தங்களது தொடர் சுரண்டலுக்கு உறுதி செய்துகொண்டு கிளம்பிவிட்டனர்.
(இது பற்றிய எனது ஆங்கில பதிவை பார்க்கவும் அதில் ஒரு தமிழ் கட்டுரை உள்ளது:
http://kaipulla.blogspot.com/2006/06/indian-freedom-and-imperialism.html
காமராசர் விசயத்தில் ராஜாஜிக்கு ஆதரவாக காந்தி செய்ததை எந்த லிஸ்டில் சேர்க்க. அதில் அவரது மேல்சாதி தாக்கம் வேலை செய்யவில்லை என்று கூறுகிறேர்களா?
மேலும் நீங்கள் சொல்லுவது போல் தீண்டாமை போராட்டத்தை காந்தி தொடங்கவில்லை. வைக்கம் போராட்டத்திற்க்கு தீர்மானம் இயற்றக்கூட
தாயாராயில்லை அன்றைய காங்கிரஸ்.
அவரது தீண்டாமை எதிர்ப்பும்கூட புற நிலையில் நிலவிய நிர்பந்தத்தால் அவர் தள்ளப்பட்டதுதான்.
அதனால்தான் எந்த தலித் கட்சியும் காந்தியை தலைவராக சொல்ல விரும்புவதில்லை.
காந்தி ஒரு தனிமனிதராக நேர்மை, தியாகம், சகிப்புத்தன்மை, இன்ன பிற விசயங்களுக்கு முன்னுதரனமான தலைவர் ஆனால் அவர் சமூக மாற்றத்துக்கான தலைவர் அல்ல. அவரது முடிவுகளை வைத்து இந்தியாவின், உலகின் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது.
யாருக்கு அஹிம்சை:
இவை தவிர்த்து அஹிம்சா தத்துவத்தின் மூல வேர் எங்குள்ளது என்று தேடினால், அது வர்ணாஸ்ரம தர்மத்தின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டு நிலபிரபுத்துவ மயக்கத்தில் அதன் பின்பு அணி திரண்ட பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நத்தை மனோபாவத்தில், அடிமை மனோபாவத்தில் உள்ளது. ஆக, மக்கள் தங்களை உணர்ந்து கிளர்ந்து போராட வேண்டுமானால் வர்ணாஸ்ரம கட்டமைப்பிலிருந்து வெளி வர வேண்டும். இது குறித்து காந்தியிடம் ஆழ்ந்த அறிவு, வியாக்கியானமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆகவே இந்த நிலவுகின்ற வர்ணாஸ்ரம கட்டமைப்பு உருவாக்கிய, நிலபிரபுத்துவத்தின் பின்னே அணி திரள்கிற மக்களின் மந்தை மனோபாவத்தை காந்தி புரிந்து கொள்கிறார், அந்த தத்துவம்தான் அஹிம்சை என்கிற ஆளும் வர்க்கத் தத்துவம்.
அசுரன்
///
கட்டுரையில் இன்னும் அவரை பாதித்த நிகழ்ச்சிகளை அருமையா எழுதியிருக்கலாம். ஜாலியன் வாலா பாக் படுகொலையை விட்டுவிட்டீர்கள்.
அவர் கல்லூரில அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் விட்டுவிட்டீர்கள்.
அவர்கள் குண்டு போட்டது ஆள் இல்லாத இடத்தில் அதுவும் தாங்கள் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் என்று உலகுக்கு உணர்த்தவே!!!
இன்னும் அவர் சிறையில் இருந்த உண்ணாவிரதத்தை விட்டுவிட்டீர்கள். 93 நாட்கள் என்று நினைக்கிறேன். மகாத்மாகூட அத்தனை நாள் உண்ணாவிரதம் இருந்திருப்பாரா என்பது சந்தேகமே!!!///
வெட்டிப் பயல் அவர்களே,
ஆம், உண்மைதான். இந்தக் கட்டுரையை சரியான தயாரிப்பு இன்றிதான் எழுதினேன். குறுகிய காலத்தில் எழுதி வேண்டியதாகி விட்டது.
மேலும், பகத்சிங்கைப் பற்றி விலாவாரியாக எழுதுவதை விட அவரது தேவையை வலியுத்தும் விதமாக எழுத வேண்டியதாயிருந்ததால், கட்டுரையின் அளவை கணக்கில் கொண்டு, பல விசயங்களை சேர்க்க இயலாமல் போய் விட்டது.
எழுதிய பிறகு வருந்தினேன். ஆயினும் மீண்டும் திருத்தி எழுதுவதற்க்கு அவகாசம் இல்லாமலிருந்தது.
சுட்டிக் காட்டியதற்க்கு நன்றி,
அசுரன்
ராஜவனஜின் ஒரு பின்னூட்டம் தவறிவிட்டது. அதை மீண்டும் நானே இட வேண்டியதாகிவிட்டது.
அசுரன்
***************
rajavanaj said...
அசுரன்,
சுகர்வர்த்தி வங்காள காங்கிரஸ் (என்று நினைவு)என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் அகிம்ஸையை விட தல்வார் கப்பலில் நடந்த கிளர்ச்சியும், தாயகம் திரும்பிய INA வீரர்களை பிரிடிஷ் இந்திய ரானுவ வீரர்கள் கைது செய்ய மறுத்து வேலை நிறுத்தம் செய்ததும் அது போல் வேறு பல நிர்பந்தங்களும் தான் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு விடுதலை அளிக்க தூண்டியதாக படித்த நினைவு.
அம்பலப் படுத்திய உங்களுக்கு நன்றி
அருமையான கட்டுரை,பாராட்டுக்கள்,உங்களின் இப்பதிவு இன்றைய இந்தியாவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளது.ஆனால் தீர்வு பகத்சிங் கின் வழியில் மட்டும் சாத்தியம் என்பதில் நான் முரண்படுகிறேன்
நண்பர் Sreeயின் வருகைக்கு நன்றி,
//இப்பதிவு இன்றைய இந்தியாவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளது.ஆனால் தீர்வு பகத்சிங் கின் வழியில் மட்டும் சாத்தியம் என்பதில் நான் முரண்படுகிறேன்
//
என்ன காரணத்தினால் அப்படி சொல்கிறீர்கள்?
பகத்சிங் வழியென்று எதை கருதுகிறீர்கள்?
தங்களது தீர்வு என்ன?
Sree மேற்சொன்னவைகளுக்கு தனி மடலிலோ அல்லது இந்த பதிவிலோ பதிலிடுங்கள் விவாதிக்கலாம்.
நன்றி,
அசுரன்
"காலனியாதிக்கத்துக்கு நன்றி சொல்லிய மன்மோகன் சிங் எனும் மாமா, என்ரான் கம்பேனிக்கு இந்தியாவை கூட்டிக் கொடுக்கும் வேலை செய்த மாமா பா. சிதம்பரம், புனிதம், பாரம்பரியம் என்று புருடா விட்டு மத வேறியைத் தூண்டிக்கொண்டே இன்னொரு பக்கம் புனித கங்கை மாதாவை சுயஸ் டிமெடரண்ட் கம்பேனிக்கு கூட்டிக் கொடுத்த வாஜ்பேயி, SEZ மற்றும் இதர உலகமய திட்டங்களை மனித முகத்துடன் செயல்படுத்த சொல்லும் வோட்டுக் கட்சி கம்யுனிஸ்டுகள்."
அதே போல 1947-ல் சுதந்திர தினத்தை துக்க தினம் என்றும் தென்னிந்தியாவிலாவது வெள்ளைக்காரன் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று மன்றாடி தென்னிந்தியாவை கூட்டிக் கொடுக்க நினைத்த ஈ.வே.ரா. மாமாவையும் சேர்த்துக் கொள்ளவும்.
மு.கருணாநிதி
மிக்க நன்றி அசுரன் அவர்களே, விவாதிக்ககூடிய அளவிற்கு நேரமும் உண்மையில் போதுமான விஷயங்களும் எம்மிடம் இல்லையெனினும் இத்தகைய மாவீரர்கள் மறைந்துவிடினும் அவர்களின் தியாகங்கள் இன்றும் உங்களைபோன்றோர்களால் நினைவுகூறப்படுவது பெருமையாக உள்ளது.இன்றைய சுயநல உலகத்துக்கு அவரைப்போன்ற புரட்சியும் தியாகமும் அடங்கிய செயல்கள் தக்கவை அல்ல என்பதே எனது கருத்து
//"காலனியாதிக்கத்துக்கு நன்றி சொல்லிய மன்மோகன் சிங் எனும் மாமா, என்ரான் கம்பேனிக்கு இந்தியாவை கூட்டிக் கொடுக்கும் வேலை செய்த மாமா பா. சிதம்பரம், புனிதம், பாரம்பரியம் என்று புருடா விட்டு மத வேறியைத் தூண்டிக்கொண்டே இன்னொரு பக்கம் புனித கங்கை மாதாவை சுயஸ் டிமெடரண்ட் கம்பேனிக்கு கூட்டிக் கொடுத்த வாஜ்பேயி, SEZ மற்றும் இதர உலகமய திட்டங்களை மனித முகத்துடன் செயல்படுத்த சொல்லும் வோட்டுக் கட்சி கம்யுனிஸ்டுகள்."
அதே போல 1947-ல் சுதந்திர தினத்தை துக்க தினம் என்றும் தென்னிந்தியாவிலாவது வெள்ளைக்காரன் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று மன்றாடி தென்னிந்தியாவை கூட்டிக் கொடுக்க நினைத்த ஈ.வே.ரா. மாமாவையும் சேர்த்துக் கொள்ளவும்.
//
மு.கருணாநிதி alias annony,
பெரியார் வெள்ளையனின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று சொன்னது பார்ப்பினியத்தின் குடுமி கொஞ்சம் கட்டுக்குள் இருக்கும் என்ற பார்வைதான். அது ஒரு தவறான புரிதல் என்பது விமர்சனம், ஆனாலும் கூட அதன் நோக்கம் என்பது பெரும்பான்மை உழைக்கும் மக்களின் மீதான அடக்குமுறையை எதிர்ப்பது என்பதுதான் நிதர்சனம். அதில் பெரியாரின் பிழைப்புவாதம் எதுவும் இல்லை.
ஆனால், காலனியாதிக்கத்தை ஆதரிக்கும் மன்மோகன், பா.சி போன்ற நிஜ மு. கருணாநிதியின் சகலப்பாடி மாமாக்களும், இங்கு வந்து மு.கருணா நிதி என்னும் தரகு அரசியல் பெரிய மாமாவின் பெயிரில் எழுதியுள்ள சின்ன மாமாவின் சகலப்பாடிகளுக்கும் நோக்கம் என்பது இந்தியாவை கூட்டிக் கொடுத்த அதில் கிடைக்கும் லாபத்தை நக்கி வயிறு வளர்ப்பது.
வயிறு வளர்த்த கோஸ்டிகளுக்கு வாயில் அடி கொடுத்த பெரியாரை அவமானப்படுத்துவதில் சில குள்ள நரி கோழைகளுக்கு சந்தோசம், ஆனாலும் என்ன செய்ய தர்க்கம் செய்வதில் அவர்கள் திறமையற்றவர்களாகவே உள்ளதால் எங்கும் தோல்விதான். :-))
அசுரன்
//மிக்க நன்றி அசுரன் அவர்களே, விவாதிக்ககூடிய அளவிற்கு நேரமும் உண்மையில் போதுமான விஷயங்களும் எம்மிடம் இல்லையெனினும் இத்தகைய மாவீரர்கள் மறைந்துவிடினும் அவர்களின் தியாகங்கள் இன்றும் உங்களைபோன்றோர்களால் நினைவுகூறப்படுவது பெருமையாக உள்ளது.இன்றைய சுயநல உலகத்துக்கு அவரைப்போன்ற புரட்சியும் தியாகமும் அடங்கிய செயல்கள் தக்கவை அல்ல என்பதே எனது கருத்து
//
தங்களது நிலை புரிகிறது.
அசுரன்
Quiet touching.
Quiet touching.
Quiet touching.
Quite touching.
தருமி,
என்னையும் ஒரு மனுசனா மதிச்சு இங்க வந்து அஞ்சு முற டச் பன்னதா சொல்லிட்டு போயிருக்கீங்க....
ஒருக்கா நீங்க போட்ட ஒரு மெயிலுக்கு பதில் ரெடி பன்னி வைச்சிட்டு இன்னவர அத பின்னூட்டாம இருக்குறேன்.
அத மறந்து மன்னிச்சு வந்தமைக்கு மிக்க நன்றி,
அசுரன்.
ey;y gjpT fhe;jpapd; Nghyp KFj;ij tpthjpj;Js;shHfs;.
NkYk;
Rjd;
மேலேயுள்ள பின்னூட்டம் எழுத்துரு பிடிபடாமல் உள்ளது. அதை யுனிகோடுக்கு மாற்றீ கீழே:
நல்ல பதிவு காந்தியின் போலி முகுத்தை விவாதித்துள்ளார்கள்.
மேலும்
சுதன்
அசுரன்
பகத் சிங்கை முன்வைத்து தேசத்தின் நிலையை அலசியிருக்கும் பாங்கை பாராட்டுகிறேன். நன்றி
உங்கள் அடுத்த பதிவில் பின்னூட்டப் பெட்டி வேலை செய்யவில்லை அதனால் அதற்கான பின்னூட்டமும்:
உங்களின் அந்த பட்டியலில் என் பதிவும் ஒன்று என்பதனால் இதைக்கூற வேண்டியுள்ளது. சிலருக்கு அது தீவிரமான பக்தியின் பாற்பட்டதெனினும் நான் ஒரு பொழுதுபோக்குப் பதிவாகவே அதை அணுகினேன்.
ரஜினியின் அரசியல் அல்லது கொள்கைகள் குறித்தோ படங்களில் கூறப்படும் கருத்து?கள் குறித்தோ அல்லாமலே நல்ல பொழுதுபோக்கைத் தரக்கூடியவராக பலரும் ரசிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. முதலிரண்டிலும் தீவிர நம்பிக்கையாளர்கள் உண்டெனினும் கூட எல்லோருமே அந்த அளவு தீவிரமானவர்கள் அல்லவே!
இனி பகத்சிங்கிற்கு வருவோம்.
//சமூகத்தின் யாதர்த்த நிலையை ஒரு கம்யுனிஸ்டை விட யாரும் அதிகமாக உள்வாங்கிவிட முடியாது.//
நான் பார்த்தவரை கம்யூனிஸ்டுகள் பகத்சிங்கை நினைவு கூர்ந்ததாகவோ புகழ்ந்துரைத்ததாகவோ கண்டதில்லை. மாறாக பிஜேபியினரால் பகத்சிங் நினைவு கூரப்படுவதையும் கொண்டாடப்படுவதையும் கண்டிருக்கிறேன். அதுவே மிக முக்கியமாக பகத்சிங் பற்றி தீவிரமான நல்லெண்ணம் எதுவும் என்னுள் இதுவரை பதியாத்தற்கும் காரணம்!
நன்றி
http://www.hinduonnet.com/fline/fl1808/18080910.htm
//பகத் சிங்கை முன்வைத்து தேசத்தின் நிலையை அலசியிருக்கும் பாங்கை பாராட்டுகிறேன். நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ சிந்தாநதி. இந்த பதிவு சொல்லவரும் விசயம் குறித்தும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.
ரஜினி குறித்த பதிவில் இப்பொழுது பின்னூட்டம் வேலை செய்கிறது.
//உங்களின் அந்த பட்டியலில் என் பதிவும் ஒன்று என்பதனால் இதைக்கூற வேண்டியுள்ளது. சிலருக்கு அது தீவிரமான பக்தியின் பாற்பட்டதெனினும் நான் ஒரு பொழுதுபோக்குப் பதிவாகவே அதை அணுகினேன்//
பொழுதுபோக்கு என்பது என்ன? பொழுதுபோக்கு உங்களது ஆளுமையில் பாதிப்பை ஏற்ப்படுத்துவதில்லையா?
உண்மையில் பொழுதுபோக்குகள்தான் ஆளும் வர்க்கங்கள் தஙகளது ஆதரவு மனோநிலையை உருவாக்க பயன்படுத்தும் முக்கிய சாதனங்களில் ஒன்று. இன்றையை மறூகாலனியாதிக்க சூழலில் இது மிக பெரிய அளவிலான பரிணாமத்தை எடுத்துள்ளது.
இது குறித்த மருதையனின் கட்டுரை கரும்பலகையின் தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது.
பொழுது போக்கு என்பது, உங்களது பணியிடத்தால் ஏற்ப்பட்ட உடல், மன பாதிப்பை வேறூ விதமான பாதிப்புக்கு அவற்றை ஆளாக்குவதன் மூலம்(உடற்பயிற்சி, ஓவியம் etc) மடை மாற்றுவதுதானேயொழிய, அது உங்களிடம் பாதிப்பை ஏற்ப்படுத்தாது என்பது கற்பனையே.
சரி அதை விடுங்கள், ரஜினி குறீத்த பதிவெழுதிய நீங்கள் உங்கள் பிரச்சனைகள் குறித்து, இந்தியாவின் பிரச்சனைகள் குறித்து நினைவுக் கூறத் தகுந்த ஆட்கள், நாள்கள் குறித்து என்னவிதமான பங்களிப்பை செய்துள்ளீர்க்ள் என்பதை பரீசிலிக்கவும், ரஜினி குறித்த பதிவுகள் போன்றவை இன்றைய கழிசடை பண்பாட்டிற்க்கு நாம் பலியாகியுள்ளோம் என்பதை உணரவைக்கவுமே எனது அந்த பதிவு.
ரஜினி குறித்து அவனது நேர்மையற்ற, உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி(துட்டு கொடுத்து சினிமா பார்ப்பது யார்?) சம்பாதிப்பதை விமர்சித்து கூட பதிவு போட்டிருக்கலாம்.
இந்த விசயத்தில் எனது பதிவை சரியான அம்சத்திலேயே நீஙகள் பார்ப்பது போல தெரிகிறது. வாழ்த்துக்கள்.
உஙக்ளது பொழுது போக்குகளிடம் மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவும்.
//ரஜினியின் அரசியல் அல்லது கொள்கைகள் குறித்தோ படங்களில் கூறப்படும் கருத்து?கள் குறித்தோ அல்லாமலே நல்ல பொழுதுபோக்கைத் தரக்கூடியவராக பலரும் ரசிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. முதலிரண்டிலும் தீவிர நம்பிக்கையாளர்கள் உண்டெனினும் கூட எல்லோருமே அந்த அளவு தீவிரமானவர்கள் அல்லவே!
//
இந்த இடத்தில் பொழுது போக்கு குறித்த எனது பதிலையும், ரஜினியின் நேர்மையற்ற சம்பாத்தியத்தையும் சேர்த்து உள்வாங்கி உங்களது கேள்விக்கான எனது பதிலைப் படிக்கவும்.
முதல் விசயம்: பொழுது போக்குகள் மிக முக்கியமான அரசியல் ஆயுதம் எனில், ரஜினி ஒரு பொழுது போக்கு என்ற வகையில் யாருடைய ஆயுதம்?(அதிக ஆசைப்படற பொம்பளை உருப்பட்டதா சரித்திரம் இல்லை என்பது, வேத சாஸ்திரங்கள் புனிதம் என்பது போல மாயையை உருவாக்குவது இவையெல்லாம் கருத்து/கொள்கை கிடையாதா? இவற்றை எதிர்க்கும் ஒரு படத்தில் எல்லாரும் ரசிக்கும் வகையில் அந்த கழிசடை நாய் வந்து நடிப்பானா? 20 கோடி கொடுத்தால் கூட நடிக்க மாட்டான்.)
இரண்டாம் விசயம்: அரசியல் கொள்கை என்று சொல்லியிருந்தீர்கள். அதில் தீவிரமானவர்கள் என்றும் சொல்லியிருந்தீர்கள். சிந்திக்க தெரிந்த மனிதன் ஒவ்வொருவனும் ஏதேனும் ஒரு அரசியலில் தீவிரமானவந்தான். வித்தியாசம் concious ஆக அந்த அரசியலில் தீவிரமாக இருப்பது(என்னைப் போல) அல்லது அதுவன்றி தான் வாழும் சூழலில் ஆளுமையில் உள்ள அரசியலுக்கு மயங்கி தீவிரமாக இருப்பது(எ-கா: எனது IT குறித்த பதிவில் தங்களது சொந்த பிரச்சனை குறித்து பேசுவதைக் கூட பிடிக்காமல் சம்பந்தமில்லாமல் எகிறுபவர்கள், விஜயகாந்த நல்லவன் என்ற பத்திரிக்கைகளின் திட்டமிட்ட வதந்தியை-வாந்தியை நம்பி ஓட்டுப் போட்ட ஜனங்கள்)
இப்போ உங்கள் கேள்வியை இன்னும் தெளிவாக வைக்க கடமைப் பட்டுள்ளீர்கள்.
////சமூகத்தின் யாதர்த்த நிலையை ஒரு கம்யுனிஸ்டை விட யாரும் அதிகமாக உள்வாங்கிவிட முடியாது.//
நான் பார்த்தவரை கம்யூனிஸ்டுகள் பகத்சிங்கை நினைவு கூர்ந்ததாகவோ புகழ்ந்துரைத்ததாகவோ கண்டதில்லை. மாறாக பிஜேபியினரால் பகத்சிங் நினைவு கூரப்படுவதையும் கொண்டாடப்படுவதையும் கண்டிருக்கிறேன். அதுவே மிக முக்கியமாக பகத்சிங் பற்றி தீவிரமான நல்லெண்ணம் எதுவும் என்னுள் இதுவரை பதியாத்தற்கும் காரணம்!
//
தமிழில் இடது சாரிகள்தான் பகத்சிங் குறித்து பல நூல்களை மொழி பெயர்த்தும் எழுதியும் உள்ளனர்.
இன்னும் சொன்னால் போலி கம்யுனிஸ்டுகளான CPM-ன் DYFI தனது ஒவ்வொரு பெயர் பலகையிலும் இந்த தலைப்பாகை இளைஞரின் படத்தைத்தான் வரைந்து வைத்துள்ளார்கள் :-))
ம.க.இ.க வின் சமீபத்திய கோக் எதிர்ப்பு போரட்டத்தின் லோகோ இந்த இளைஞர்தான், அவர்களீன் சமீபத்திய விடுதலைப் போராட்ட சிறப்பதழின் லோகோ, தமிழ் மக்கள் இசை விழா 2007 ந் ஹீரோ எல்லாம் இந்த இளைஞந்தான்.
பகத்சிங்கின் வெளிவராத(தமிழில்) எழுத்துகளை தொகுத்து புத்தகமாக மிக சமீபத்தில் வந்துள்ளது அதுவும் இடது சாரி குழு ஒன்றீன் முயற்சிதான். ஏன் தமிழ்நாட்டில் அவ்வப் பொழுது தலை காட்டும் PWGன் மனிதன் பதிப்பகம்தான் வெடிகுண்டின் தத்துவம் எனும் பகத்சிங்கின் தோழர்கள் காந்தியை தத்துவ தளத்த்ல் அம்பலப்படுத்தி எழுதிய நூலை வெளியிட்டவ்ர்கள்.
எனது மற்றூம் எனது நண்பர்கள், எனக்கு இது வரை அறிமுகமான யாருமே(தமிழ்நாட்டில்) பகத்சிங்கை இந்துத்துவ சக்திகள் அறிமுகப்படுத்தியாதாக் சொன்னதேயில்லை.
உங்களது கூற்று ஆச்சரியத்தை தருகிறது. வட நாட்டில் பகத்சிங் எனும் அக்னி குஞ்சை அப்படியே முழங்க இந்துத்துவ பன்றிகள் முயற்சி செய்தார்கள் என்பது தெரியும். தமிழ் நாட்டில் அந்தளவுக்கு பொதுக் கருத்தை நுண்ணிய தளத்தில் உருவாக்கும் சக்தி படைத்தவர்களாக அவர்கள் இல்லை. ஆகவே உங்களுடைய இந்த கருத்து நிரம்பவும் வித்தியாசமான ஒரு கருத்து.
மேலும் பக்த்சிங் குறித்து உங்களிடம் தீவிரமான நல்லேண்ணம் பதியக் கூடாது என்பதுதான் இந்திய ஆளூம் வர்க்கத்தின் விருப்பமும் கூட அதனால்தான் அவரை டம்மியாக்கி வரலாற்றை எழுதினார்கள் அவர்கள். உங்களது வாசிப்பு வரம்புகளை மிகப் பரவலாக விரிவு படுத்துவதுதான் உண்மையை புரிந்து கொள்ள உதவும்.
இங்கு மார்க்ஸ்க்கு பிடித்தமான ஒரு வரியை இடுகிறேன்:
"மெய்யானது எல்லாமே அறிவுப் பூர்வமானது, அறிவுப் பூர்வமானது எல்லாமே மெய்யானது" - இந்த வரிகள் பின்நவீனத்துவவாதிகளுக்கு மிகவும் பிடித்த வரிகள்.
அசுரன்
உண்மையில் பொழுதுபோக்குகள்தான் ஆளும் வர்க்கங்கள் தஙகளது ஆதரவு மனோநிலையை உருவாக்க பயன்படுத்தும் முக்கிய சாதனங்களில் ஒன்று. இன்றையை மறூகாலனியாதிக்க சூழலில் இது மிக பெரிய அளவிலான பரிணாமத்தை எடுத்துள்ளது.
இது குறித்த மருதையனின் கட்டுரை கரும்பலகையின் தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளது.
http://blackboards.blogspot.com/2006/11/2.html
ஒரு அனானி தி ஹிந்து பத்திர்க்கை கட்டுரை சுட்டி கொடுத்துச் சென்றுள்ளார். கட்டுரையை அவர் படித்தாரா தெரியவில்லை இருப்பினும் அவருக்கு நன்றீ.
கட்டுரை சொந்த செலவில் சூனியம் வைக்கும் வகையில் இருக்கிறது. காந்தியை அம்பலப்படுத்த இன்னொமொரு வாய்ப்பு அவரது ஆதரவாளர்களிடமிருந்தே ஏற்ப்பட்டது மகிழ்ச்சியளிக்கும் விசயம்தான். சரி கட்டுரையில் என்ன உள்ளது?
"Between us and the British lies an ocean of blood and a mountain of corpses. Nothing on earth can induce us to accept this compromise which Gandhiji had signed.- சுபாஸ் சந்திர போஸி"
அவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி - அதாவது பிரிட்டிஸ் வெறுப்பு பொங்கி வரும் வேலையில் ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த ஒரு அமைப்பில் இருந்து கொண்டு அதன் மூலமாக அதை சுவிகரித்து கடைசியில் காட்டியும் கொடுத்தார் காந்தி என்பதை பின்வரும் சுபாஸ் சந்திர போஸின் வார்த்தைகள் தெரியப்படுத்துகிறது. இப்படி ஒன்றை செய்வத்ற்க்காகவா அந்த போராட்டம்? காந்தி இல்லையென்றாலும் பிரிட்டிஸாருக்கு இந்தியா மக்கள் தங்களது எதிர்ப்பை காட்டியேயிருப்பார்கள். இந்தியா விடுதலைப் போராட்டத்தில் யாருமே சாகவில்லை என்ற அர்த்தம் வரும் 'கத்தியின்றி ரத்தமின்றி' என்ற வரிகளை மூனாங் கிளாஸ் பிள்ளை கூட நம்பாது. ஏனெனில் இந்தியவை விட்டு பிரிட்டிஸ்க்காரன் போனதில் 1940களில் காந்தி காங்கிரஸ தூரோகிகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்ப்பட்ட கப்பல் வீரர்களின் போராட்டம், தொழிலாளர் மாணவர் போராட்டம், தெலுங்காணா போராட்டம், அரசு ஊழியர் போராட்டம், போலீசு, ராணுவம் ஸ்ட்ரைக், பிரிட்டிஸாரின் உலகயுத்த நசிவு, அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவை ருசிக்க காத்திருந்தது இவைதான் பிரதான காரணமாக இருக்கீறது.
He did plead for the commutation of the death sentence of the three heroes, Bhagat Singh, Rajguru and Sukhdev, also. But he did not succeed because the Viceroy's moves were governed from England and these three were a challenge to the Raj and thus were not thought fit for pardon
உப்பு எடுக்க தடை செய்வது மட்டும் யாருடையதால் govern செய்யப்பட்டது? அதை மறுத்து போராட்டம் நடத்த தெரிந்த இவரால் ஏன் இதை வலியுறுத்த இயலவில்லை? அவர் அப்படி செய்ய வேண்டும் என்று விருப்பமல்ல, இதை கேட்ப்பதன் காரணம் காந்தியின் இயக்கு சக்தி என்ன என்பதை அறிய்ச் செய்யும் முயற்சியே. சட்டவாதம் பேசுவது என்றால் எல்லாவற்றையும் நியாயப்படுத்தலாம். காந்தியும் அப்படித்தான் தனக்கு தேவையெனில் சட்டமறூப்பும், தேவையில்லையெனில் சட்டவாதமும் பேசும் இரட்டை நாக்குக்கு சொந்தக்காரர் என்று சொல்கிறது இந்த கட்டுரை.
A point to be placed on Gandhiji's side of the balance is that he was already weak in the truce with the Raj, owing to incomprehensible reasons. Probably, Irwin was a better bargainer than he
சுதந்திரமும், உரிமையும் பேரம் பேசி வாங்க வேண்டிய விசயங்கள் என்றூ கட்டுரையாளர் ஒரு அல்பையைப் போல கருதுகிறார் என்று தெரிகிறது.... பேரம் பேச முடியவில்லையாம் அதனால் காந்தி வலியுறுத்தவில்லையாம். நல்ல பேரம் பேசும் ஒருவரை தலைவராக கொண்டிருந்தால் எல்லா உரிமைகளையும் பெறலாம் என்று உரிமைக்கு குறுக்கு வழி சொல்கீறார் கட்டுரையாளர்,
". And to threaten withdrawal now would be a breach of faith. "
இது காந்தி சொன்னது: பகத்சிங் விடுதலைக்கான கோரிக்கை மிக முக்கியமானதாக பேசப்பட்டு காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும் என்ற இந்திய மக்களின் நம்பிக்கைக்கு அவர் துரோகம் செய்தது குறித்த வருத்தம் அல்ல இந்த வசனம். மாறாக, பகத்சிங் பிரச்சனைக்கு மீண்டும் மக்களை திரட்டி போராடுவது என்றால் அது இர்வினுக்கு துரோகம் செய்வது என்று வருத்தப்படுகிறார் இந்த புண்ணிய ஆத்மா... ஆளும் வர்க்கத்தின் அனுதாபி என்ற, காந்தியின் மீதான எமது விமர்சந்த்திற்க்கு இது ஒரு உதாரணம்
கடைசியில் பக்த்சிங்கே தான் மன்னிக்க படுவதை விரும்பவில்லை ஆகவே காந்தியை குற்றம் சொல்லாதீர்கள் என்று காந்தியின் துரோகத்தை மறைக்க ஒட்டுத் துணியின்றி அம்மணாமாக நிற்க மனமின்றி குப்புறப்படுக்கீறார் கட்டுரையாளர். மன்னிப்பை மறுப்பது பகத்சிங்கின் நேர்மையை காட்டுகிறது. இந்திய மக்களுக்கு துரோகம் செய்வது குறித்த வருத்தம் குற்றவுணர்வு கிஞ்சித்தும் இன்றீ இர்வினுக்கு துரொகம் செய்வது குறித்து வருத்தப்பட்டு மாகாத்மா பட்டத்திற்க்கு தன்னை தாயார் செய்த காந்தியின் உணர்வுக்கு என்ன பெயர்? துரோகம் என்று நாங்கள் சொல்லுவோம். சில அறிவு ஜீவிகள் மாகத்மாவின் நற்பண்புகள் என்று சொல்வார்கள்.
ஒரு கைரிக்ஷாவின் பிரயாணம் செய்த பணக்காரனுக்கும், ரிக்ஷா இழுப்பவருக்கும் பஞ்சாயத்து பன்ன அவனோட(ரிக்ஷா) சொந்தக்கரன ஒருத்தன அல்லக்கைய வைச்சிருந்தன் பணக்காரன். ரிக்ஷா இழுத்து கை வலித்தாதால் பணக்காரனை கீழே தள்ளுவது என்று முடிவுக்கு வரும் நேரம் பார்த்து நம்ம அல்லக்கை வந்து நான் பேசிப் பார்க்குறேன் நீ ரிக்ஷாவ மட்டும் இழுக்காம அங்கேயே நிப்பாட்டுன்னாராம். ரிக்ஷா ஒடாததை பார்த்த பணக்காரன் வேற வழியில்லாம காந்தி.. ஸாரி.. அல்லக்கை சொன்னதை ஏத்துக் கிட்டு 5 மணிநேர்த்துக்கு ஒரு முறை ரெஸ்ட் விடுறேன் ஆனா அதுக்கு ஈடு செய்யும் வகையில் ரிக்ஷா ஓடும் போது என்னோட கால்களை அவன் முதுகில் தொங்கவிட்டு இளைப்பாறூவேன் என்றானாம். பேரம் பேச வக்கில்லாத காந்தி... மீண்டும் ஸாரி.. அல்லக்கை இந்த ஒப்பந்தத்த போட்டுட்டு வெளிய வந்து பின்வருமாறு கருத்துச் சொன்னாராம்: பணக்காரனுக்கு கொடுத்த வாக்குறதியை மீறுவது என்பது எனது நேர்மைக்கு ஒத்து வராது, அதனால கால்களை தொங்க்ப் போட ஒத்துக் கொள்வதை விட்டால் வேறு வழியில்லை. ஏனென்றால் நான் வருங்கலா மாகாத்மா" என்று.
அடப் போங்கடா.... நீங்களும் ..... உங்க.......
********
மற்றபடி நிலபிரபுத்துவ/பார்ப்பினிய அடிமைத்தனத்தில் இருந்த மக்களின் மந்தை மனோபாவத்தை உடைத்து அவர்களை விழிப்புணர்வுட்டும் நேர்மையான நோக்கமின்றி அந்த உணர்வுகள்க்கு ஏற்ற போராட்ட வடிவத்தை வைத்து கூட்டம் சேர்த்தார் காந்தி என்ற விமர்சனமே கட்டுரையின் பிற பகுதிகளுக்கான பதிலாக இருக்கும். விஜயகாந்திற்க்கு கூட கூட்டம் சேர்கிறது. ஆகவே அவரையும்கூட நாளைய மகாத்மா லிஸ்டில் சேர்ப்பது நிச்சயமாக நடக்குப் போகும் விசயம்.
அசுரன்
Post a Comment