TerrorisminFocus

Showing posts with label மலம். Show all posts
Showing posts with label மலம். Show all posts

Thursday, May 14, 2009

கம்யுனிஸ்டுகளா இவர்கள்? கம்முனாட்டிகள், மலம் உருட்டும் வண்டுகள்!!!

கொஞ்ச காலம் முன்னாடி மதவாதம்தான் நாட்டின் பெரிய எதிரின்னு சொல்லிக் கொண்டு காங்கிரசுக்கு சிரத்தையாகக் கோமணம் கட்டிக் கொண்டிருந்தனர் CPM காம்ரேடுகள். காங்கிரசு கோமனம் குத்திய உள் குத்து வலி தாங்காமல் ஒரு கட்டத்தில் 'காங்கிரசு இந்தியாவை கூட்டிக் கொடுப்பதுதான்' நாட்டின் முதன்மை அபாயம்ன்னு சொல்லிக் கொண்டு வெளியே வந்தனர். ஆனால், இந்த காலகட்டம் முழுவதும் கேரளாவிலும், மே.வாவிலும் இவர்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூட்டிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் என்பது வேறு விசயம்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற புனிதப் ப(கு)சு சோம்நாத் சாட்டர்ஜி CPMலிருந்து வெளியேறினார். இன்னிலையில் தேர்தல் வந்தது.

உடனே கொஞ்சம் கொஞ்சமாக காம்ரேடுகளின் பஞ்ச் டயலாக்குகள் உருமாறத் துவங்கின. முதல் கட்டமாக மதச்சார்பற்ற அரசு அமைப்போம் என்ற முழக்கத்தை முன்னுக்குக் கொண்டு வந்தனர்.

அத்துடன் சேர்ந்து ஜெயலலிதா எனும் இந்துத்துவ பாசிஸ்டை மதச்சார்பற்ற ராணியாக உருவகப்படுத்தினார்கள். இதன் அடுத்த கட்டமாக, மதச் சார்பற்ற அரசு அமைக்க எதையும் செய்வோம் என்றார் கரத். அடுத்த கொஞ்ச நாளிலேயே காங்கிரசுடன் கூட்டணி குறித்து மே 16க்கு அப்புறம் முடிவு செய்வோம் என்றார்.

"காங்கிரசு ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல" என்று புத்ததேவு குத்துதேவாக மாறி ஒரு ஓரத்தில் பஞ்ச் ஒன்றை குத்தி வைத்தார். இவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் ரெண்டு செண்டர் குத்து குத்தி இடதுசாரிகளுடன் நாங்கள் குத்தாட்டம் போடத் தயார் என்றார்.

உடனே பாரளுமன்ற கோவனம் சோம்நாத் சாட்டர்ஜி தான் சாகும் போது ஒரு சாதாரண CPM தொண்டனாக சாக விரும்புவதாகக் கூறி செண்டிமெண்டு குத்து அடித்தார்.


இவையணைத்தும் தெளிவாக CPMன் காங்கிரசு நோக்கிய சவாரியை சுட்டிக்காட்டின.


இப்படி எல்லாம் கூடி வந்த வேளையில், சனியன் திடீரென்று யெச்சூரி நேற்று பின்வருமாறு கருத்துக் கூறினார்: "காங்கிரசு அரசுக்கு நாங்கள் ஆதரவு குத்தாட்டம் போட மாட்டோம்", "கரத் சொன்னது அவரது சொந்த கருத்து" என்றார் யெச்சு ஊறி.

இதை பார்க்கும் பொழுது ஏதோ CPM தனது கொள்கையில் விலகுவதும் பிறகு மீண்டும் சரியான பாதைக்கு வந்து விட்டதும் போன்று யாருக்காவது தோன்றினால் அவரை நினைத்து பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

எப்பொழுதுமே சந்தர்ப்பவாதத்தின் எல்லா நிலைகளையும் ஆதரித்து தனது கட்சி அணிகளை மாற்றி மாற்றி பேச விடும் மொள்ளமாறித்தனத்தை CPM வெகு காலமாக செய்து வருகிறது. கம்யுனிசம் குறித்து கரத் கதறினால், முதலாளித்துவம் குறித்து ஜோதிபாசு உளறுவார்.

வட கிழக்கில் பாஜகவுடன் CPM மாநிலத் தலைமை கள்ளத் தேர்தல்க் கூட்டு சேர்ந்தால், இந்திய தலைமையோ அந்த அணிகள் எமது நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதுடன் முடித்துக் கொள்வார்.

நந்திகிராம் குறித்து ஒருவர் பிளிறினால், மம்தா குறித்து ஒருவர் பிதற்றுவார். ஸ்டைரைக் தப்பு என்பார் புத்ததேவு, ஸ்ட்ரைக் எங்கள் மயிர் மூச்சு என்பார் கரத். அமெரிக்க பூட்ஸை மோந்து பார்க்க ஒருத்தர், நக்கி பார்க்க ஒருத்தர், அதை அம்பலப்படுத்த ஒருத்தர்.

முதலாளித்துவம் ஒழிகன்னு ஒரு காம்ரேடு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, இன்றைய பொருளாதாரச் சரிவிலிருந்து முதலாளித்துவத்தை காப்பாற்றும் ஐ.நா ஆலோசனை குழுவில் ஒரு காம்ரேடு பஜனை செய்து கொண்டிருப்பார்.

தாழ்த்தப்பட்டவருக்கு நெஞ்சு விடைக்க குரல் மட்டும் கொடுக்க ஒருவர், ஆதிக்க சாதிகளுடன் நெஞ்சாரத் தழுவி கூடிக் குலாவ பலர்.

இப்படி எல்லா கருத்துக்களையும் சொல்லி வைப்பதன் மூலம் எல்லா வோட்டுக்களையும் பொறுக்கலாம் என்ற மக்கள் ஜனநாயக செயல் தந்திரம்தான் CPMனுடையது.

இதுகள் காமெரெடுகள் அல்ல, கன்றாவிகள். இவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்ல கம்னாட்டிகள். மொத்தத்தில் இந்த அருவெறுக்கத்தக்க சமூக கிருமிகளின் அழிவில்தான் விடுதலைக்கான புதிய முழக்கங்கள் தமது புத்துணர்வை பேண முடியும். இல்லையேல், இந்த கம்முனாட்டிகள் கழிக்கும் மலத்தில் பிரண்டு எழுந்து மீள்வதிலேயே பல நேர்மையான அணிகளின் காலம் கடந்துவிடும்.


அசுரன்

Friday, June 27, 2008

''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்!

''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்.

துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஓர் நாள்.
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந்தார் அந்த மனிதர். வகை,வகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு ரெண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.

"வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்த‌வர்,

"பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன், 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிர் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப்போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு.

ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டேன். ரெண்டு பொண்ணுங்களும் இப்பத்தான் ஏழாவது, எட்டாவது படிக்குதுங்க. பையன் செரியான தண்டச்சோறு. அவனால ஒரு புரோசனமும் இல்ல. ஊரோட போயிட்டான். நான் ஒத்த ஆளு சம்பாரிச்சித்தான் இதுங்கள கரையேத்தனும். வயசாயிடுச்சி, ஒடம்புக்கு முடியலைன்னு ஒக்காந்திருந்தா சோறு சும்மாவா வந்துரும்?

இப்பத்தான் கண் ஆப்ரேசன் பண்ணேன். அப்பவும் பார்வ செரியா தெரில. இந்த சிலாப தூக்குறேன், உள்ள தண்ணி நிக்கிதா'ன்னு பாத்து சொல்றியா? கோச்சிக்காத... என்று உதவி கேட்கிறார்.

"மாசத்துக்கு எவ்ளோ வருமானம் வருது. வேலைன்னா எப்படி வந்து உங்களைக் கூப்பிடுவாங்க? ஏதோ... நானும் கேள்விகள் கேட்டேன்.

"பென்ஷன் பணம் வருது. அத்த வச்சிகினு சமாளிக்க முடியல. எப்பனா ஒரு வாட்டிதான் இது மேரி(மாதிரி) அடைப்பெடுக்க கூப்புடுவாங்க. அடையாறு பீலியம்மன் கோயிலாண்டதான் ஊடு.

கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன். போற வழில அங்கங்க சொல்லி வச்சிருவேன். எடத்துக்குத் ஏத்த மாதிரி 100, 200 தருவாங்க.

இவ்ளோ கஷ்டமும் யாருக்காக? பொண்ணுங்களுக்காகத்தான். அதுங்களுக்கு காலாகாலத்துல ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டேன்னா நிம்மதியா கண்ண மூடிடுவேன்''.


எப்படி இந்த வேலைக்கு வந்தீங்க?

''எல்லாம் கெவுருமண்டு வேலைக்காகத்தான். நான் ஜாதில நாயக்கரு. "போயும் போயும் இந்த வேலைக்கு வந்துக்கிறீயேடா?"ன்னு எங்காளுங்க கேழி(வசைச் சொல்) கேட்டாங்க. எஸ்.சி.ஆளு ஒருத்தர்தான் இந்த வேலைல சேத்து உட்டாரு.

ஆரம்பத்துல படாத கஷ்டமெல்லாம் பட்டேன். ஒரு நாளைக்கு ஒம்பது வாட்டி வாந்தியா எடுத்துங்கடந்தேன். சோத்த அள்ளி வாயில வச்சா போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்.

நாம இன்னாத்தான் சொன்னாலும் செரி, போடக்கூடாத்துலாம் கக்கூஸ்ல போட்ருவாங்க. அப்புறம் அடச்சிக்கும். ட்ரெய்னேஜ் மூடிய தொறந்தா போதும் ஆயிரக்கணக்குல கரப்பாம்பூச்சிங்க, பூரான், தேளுன்னு என்னென்னமோ ஓடும்.

பல்லக் கடிச்சிக்கினு உள்ள எறங்கிடுவோம். நின்ன வாக்குல காலால தடவித் தடவிப் பாப்போம். அப்பிடியே வழியக் கண்டுபுடிச்சி கண்ண மூடிக்கினு எறங்கிட வேண்டியது தான். வேல முடியிறதுக்குள்ள பத்து பாஞ்சி தடவையாவது முழுவி எழுந்திருச்சிடுவோம்.

சாதாரண தண்ணியா அது. காதெல்லாம் சும்மா "கொய்ய்ய்ய்ய்ங்'ன்னு அடைச்சிக்கும். கண்ணு, காது, மூக்கு, வாயின்னு ஒரு எடம் பாக்கியிருக்காது. இன்னா பண்றது? சோறு துன்னாவனுமே!

எங்கூட வேல செய்ற ஆளுங்கள்லாம் சரக்குப் போட்டுட்டுத் தான் காவாயில எறங்குவானுங்க. வாங்குற சம்பளத்த குடிக்கே... அழிச்சிருவானுங்க. எனக்கு அன்னிலருந்தே பீடி, குடி ரெண்டுமே கெடையாது. அதானாலதான் இன்னிக்கி வரிக்கும் நான் உயிரோட கீறேன்.

நெறயபேரு செத்துப்போய்ட்டானுங்க. எம்ஜேர் ஆட்சில, செத்துப்போனவங்க பொண்டாட்டிங்களுக்கு வேல குடுத்துட்டாரு. ''எப்பா, எப்பா... குடுத்தாலும் குடுத்தாரு எம்ஜேரு... பொண்டாட்டிங்க எல்லாம் ஊட்டுக்காரனப் பாத்து "சான்டாக் குடிச்சவனே! ஏன்டா உன்னம் சாவாம கடக்குற. எங்கனா வண்டில மாட்டி சாவாண்டா. நான் வேலைல சேந்துக்கினு ரெண்டு ஊட்டுக்காரன் வச்சிக்குவேண்டா'னு சொல்லி அசிங்கசிங்கமா பேசுவாளுங்க. அதான் எம்ஜேர் ரெண்டு வெரலைக் காட்னார்ல...?'' விரலைக் காட்டியபடியே சொல்லிச் சிரிக்கிறார் ஆதிமூலம்.

கவெர்மெண்ட் வேலையை மலை போல் நம்பி வந்த ஆதிமூலத்தின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது கண்கூடு. இத்தொழில் செய்பவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பதால் என்னென்ன நோய்களின் தாக்குதலுக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர் என்பது சாகும் வரையில் தெரியாமலேயே மறைகிறது.

2020ல் இந்தியா வல்லரசாகும் என்கிறார்கள். செவ்வாய்க்கு ராக்கெட் விட்டவர்கள், எங்கோ விண்வெளியில் தண்ணீரையும் கண்டுபிடித்துவிட்டார்கள். எல்லாம் விரல் நுனியில் என்று எத்தனையோ தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் கொண்டிருக்கிறான். முதலில் இதற்கொரு கருவி கண்டுபிடியுங்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் கைகளால் மலம் அள்ளுவதில்லை.

Related Articles:
குப்பையாகிப் போன வாழ்க்கை : குப்பையைக் கிளறித் தினியைத் தேடும் கோழியைப் போல வாழும் சிறுவர்களின் அவலக் கதை.
அக்னி ஏவுகனைப் பரிசோதனை : சாதனையா? வேதனையா?
நன்றி கெட்ட சமூகமே! நீ மூகஞ்சுழிக்கும் மலக்குழிக்குள் மூழ்கிச் சாகும் இவர்களும் மனிதர்களே!

Related Posts with Thumbnails