ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
'We have a growing middle class, reared on a diet of radical consumerism and aggressive greed. Unlike industrialising Western countries, which had colonies from which to plunder resources and generate slave labour to feed this process, we have to colonise ourselves, our own nether parts. We have begun to eat our own limbs. The greed that is being generated (and marketed as a value interchangeable with nationalism) can only be sated by grabbing land, water and resources from the vulnerable.'
"பேராசையும், நுகர்வு வெறியும் உந்தித்தள்ள அகோர பசியெடுத்து வளர்ந்து வரும் ஒரு நடுத்தர வர்க்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். தொழில்மயமான மேற்கு நாடுகள் தங்களது காலனிகளின் வளங்களைக் கொள்ளையடித்தும், அடிமை உழைப்பு மூலமும் இந்த பசிக்கு இரையிட்டது போலல்லாமல், இங்கு நாம் நமது சொந்த நாட்டின் பகுதிகளையே காலனியாதிக்கத்துக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. நமது சொந்த உடல் உறுப்புகளையே நாம் புசித்து வருகிறோம். இப்படி உற்பத்தியாகும் பேராசை நிலங்களையும், நீர் நிலைகளையும் இன்ன பிற வளங்களையும் பலவீனமானவர்களிடமிருந்து பறிப்பதன் மூலம் திருப்திப் படுத்தப்படுகிறது." - தெஹல்கா பேட்டியில் அருந்ததிராய்
சமீபத்தில் நந்திகிராமில் போலி கம்யுனிஸ்டு காட்டேறிகள் நடத்திய வெறியாட்டத்தை ஒட்டி அருந்ததி ராய், தெஹல்கா பத்திரிக்கைக்கு கொதிப்புடன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில்தான் இந்த வரிகள் வருகின்றன. இந்தியாவின் இன்றைய நிலையை இதை விட சுருக்கமாக எடுப்பாக சொல்லி விட முடியாது. இதனை புரிந்து கொள்ள ஒருவன் சமூக விஞ்ஞானங்கள் அனைத்தும் கற்றவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படை மனிதாபிமானமும், சுயமரியாதையும், சமூக அக்கறையும் இருந்தால் போதும்.
துரதிருஷ்டவசமாக அல்ல, மாறாக ஏகாதிபத்தியம் திட்டமிட்டே இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தில் ஒரு பிரிவினரை தனது ரொட்டித் துண்டுகளுக்கு அடிமையாக்கியுள்ளது. நுகர்வு கலாச்சாரத்தில் தோய்ந்து போன அவன் தான் ஒரு ஒட்டுண்ணியாக இந்த சமூகத்தின் மீது ஒட்டிக் கொண்டு உறிஞ்சி உயிர் வாழ்வது குறித்த பிரக்சை என்பதே இல்லாமல் மயங்கிக் கிடக்கிறான். தனது வாய், ஆசன வாய், தனது பிறப்புறுப்பு(குழந்தைகள்) இவற்றிலிருந்து வெளியேறும், உள்ளேறும் விசயங்கள் குறித்து மட்டுமே அதிகபட்சம் சிந்திப்பதை பெரும்பான்மை உலகமய யுப்பி வர்க்கத்தார் செய்து வருவதை ஏகாதிபத்திய கலாச்சார தாக்குதல் உறுதிப்படுத்துகிறது.
என்றாவது இவர்கள் தமது ஐந்திலக்க சம்பளம் அமெரிக்க கம்பேனிகளுக்கு படு குறைவானதாகவும், ஒரு சராசரி இந்தியனுக்கு மிக உயர்வானதாகவும் தெரிகிறதே ஏன் என்று யோசித்திருப்பார்களா? குறை கூலி பிரதேசம் என்ற பெயரை இந்தியாவுக்கு வாங்கி தந்த தியாகிகள் யார் என்று என்றாவது யோசித்திருப்பார்களா? சராசரியை விட சிறிது வளப்பமான வாழ்க்கை வாழும் வசதியை உறுதிப்படுத்திக் கொடுத்த வள்ளல் யார் என்று யோசித்திருப்பார்களா?
இதோ அந்த தியாகிகள்-உழைக்கும் மக்கள் இந்திய சமூகத்தின் அன்றாட தேவைகளுக்காக மாடுகளாய் உழைத்து கிடக்கிறார்கள். காலையில் பால் போடும் இளைஞன், பத்திரிக்கை வீசியெறியும் சிறுவன், காலை உணவு அருந்தும் கடை சிப்பந்திகள், அந்த உணவுக்கு தேவையான எண்ணைய், மசாலா முதலானவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயி, காலை ஆறு மணிக்கெல்லாம் வேலை செய்யத் துவங்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், 4 மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்யும் அண்ணாச்சி குடும்ப கடைகள், காய்கறி மொத்த கொள்முதற்சாலை தொழிலாளர்கள், கம்பேனிக்கு இட்டுச் செல்லும் பேருந்து ஓட்டுனர்கள், தண்ணீர் லாரிகள், தனியார் தண்ணீர் சப்ளை வேன் ஓட்டுனர்கள் - இப்படி இன்றைய யுப்பி வர்க்கத்தின் ஒவ்வொரு தேவையுடனும் ஒரு பெரும் சமூக உழைப்பு பின்னி பிணைந்திருப்பதை அவர்கள் என்றுமே உணர்வதில்லை.
குறைந்தது தமது ஆபார்ட்மென்ட் வாட்ச் மேனுக்கு குடும்பம் உண்டு அவரது உழைப்பு எத்தனை மணிநேரம் நமது பாதுகாப்புக்காக சுரண்டப்படுகிறது என்றளவிலாவது இந்த வர்க்கம் யோசித்ததுண்டா?
இவர்களைப் போன்ற சிறுபான்மையினர் தவிர்த்து மிகப் பெரும்பான்மை சமூகம், நகரங்களிலும், கிராமங்களிலும் மிக பின் தங்கிய சிதறிய உற்பத்தி முறையில் குறைந்த விலையில் பொருட்களை தொடர்ந்து உற்பத்தி செய்வதுதான் யுப்பி வர்க்கத்தின் ஐந்திலக்க சம்பளத்தை மிக பெரிய சம்பளமாக வைத்திருக்கச் செய்யும் காரணி என்பதை என்றுமே இவர்கள் உணர்வதில்லை. அது குறித்தான் விவாதங்களிலும் தமது சாதனை குறித்தான வெற்று சவடால்களையே பதில்களாக இட்டுச் செல்கின்றனர். தமிழ்மணத்தில் உலகமய யுப்பிகள் குறித்த கட்டுரைகள் பலவற்றில் நான் கண்டுணர்ந்த விசயம் இது.
"பேராசையும், நுகர்வு வெறியும் உந்தித்தள்ள அகோர பசியெடுத்து வளர்ந்து வரும் ஒரு நடுத்தர வர்க்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். தொழில்மயமான மேற்கு நாடுகள் தங்களது காலனிகளின் வளங்களைக் கொள்ளையடித்தும், அடிமை உழைப்பு மூலமும் இந்த பசிக்கு இரையிட்டது போலல்லாமல், இங்கு நாம் நமது சொந்த நாட்டின் பகுதிகளையே காலனியாதிக்கத்துக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. நமது சொந்த உடல் உறுப்புகளையே நாம் புசித்து வருகிறோம். இப்படி உற்பத்தியாகும் பேராசை நிலங்களையும், நீர் நிலைகளையும் இன்ன பிற வளங்களையும் பலவீனமானவர்களிடமிருந்து பறிப்பதன் மூலம் திருப்திப் படுத்தப்படுகிறது." - தெஹல்கா பேட்டியில் அருந்ததிராய்
சமீபத்தில் நந்திகிராமில் போலி கம்யுனிஸ்டு காட்டேறிகள் நடத்திய வெறியாட்டத்தை ஒட்டி அருந்ததி ராய், தெஹல்கா பத்திரிக்கைக்கு கொதிப்புடன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில்தான் இந்த வரிகள் வருகின்றன. இந்தியாவின் இன்றைய நிலையை இதை விட சுருக்கமாக எடுப்பாக சொல்லி விட முடியாது. இதனை புரிந்து கொள்ள ஒருவன் சமூக விஞ்ஞானங்கள் அனைத்தும் கற்றவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படை மனிதாபிமானமும், சுயமரியாதையும், சமூக அக்கறையும் இருந்தால் போதும்.
துரதிருஷ்டவசமாக அல்ல, மாறாக ஏகாதிபத்தியம் திட்டமிட்டே இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தில் ஒரு பிரிவினரை தனது ரொட்டித் துண்டுகளுக்கு அடிமையாக்கியுள்ளது. நுகர்வு கலாச்சாரத்தில் தோய்ந்து போன அவன் தான் ஒரு ஒட்டுண்ணியாக இந்த சமூகத்தின் மீது ஒட்டிக் கொண்டு உறிஞ்சி உயிர் வாழ்வது குறித்த பிரக்சை என்பதே இல்லாமல் மயங்கிக் கிடக்கிறான். தனது வாய், ஆசன வாய், தனது பிறப்புறுப்பு(குழந்தைகள்) இவற்றிலிருந்து வெளியேறும், உள்ளேறும் விசயங்கள் குறித்து மட்டுமே அதிகபட்சம் சிந்திப்பதை பெரும்பான்மை உலகமய யுப்பி வர்க்கத்தார் செய்து வருவதை ஏகாதிபத்திய கலாச்சார தாக்குதல் உறுதிப்படுத்துகிறது.
என்றாவது இவர்கள் தமது ஐந்திலக்க சம்பளம் அமெரிக்க கம்பேனிகளுக்கு படு குறைவானதாகவும், ஒரு சராசரி இந்தியனுக்கு மிக உயர்வானதாகவும் தெரிகிறதே ஏன் என்று யோசித்திருப்பார்களா? குறை கூலி பிரதேசம் என்ற பெயரை இந்தியாவுக்கு வாங்கி தந்த தியாகிகள் யார் என்று என்றாவது யோசித்திருப்பார்களா? சராசரியை விட சிறிது வளப்பமான வாழ்க்கை வாழும் வசதியை உறுதிப்படுத்திக் கொடுத்த வள்ளல் யார் என்று யோசித்திருப்பார்களா?
இதோ அந்த தியாகிகள்-உழைக்கும் மக்கள் இந்திய சமூகத்தின் அன்றாட தேவைகளுக்காக மாடுகளாய் உழைத்து கிடக்கிறார்கள். காலையில் பால் போடும் இளைஞன், பத்திரிக்கை வீசியெறியும் சிறுவன், காலை உணவு அருந்தும் கடை சிப்பந்திகள், அந்த உணவுக்கு தேவையான எண்ணைய், மசாலா முதலானவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயி, காலை ஆறு மணிக்கெல்லாம் வேலை செய்யத் துவங்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், 4 மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்யும் அண்ணாச்சி குடும்ப கடைகள், காய்கறி மொத்த கொள்முதற்சாலை தொழிலாளர்கள், கம்பேனிக்கு இட்டுச் செல்லும் பேருந்து ஓட்டுனர்கள், தண்ணீர் லாரிகள், தனியார் தண்ணீர் சப்ளை வேன் ஓட்டுனர்கள் - இப்படி இன்றைய யுப்பி வர்க்கத்தின் ஒவ்வொரு தேவையுடனும் ஒரு பெரும் சமூக உழைப்பு பின்னி பிணைந்திருப்பதை அவர்கள் என்றுமே உணர்வதில்லை.
குறைந்தது தமது ஆபார்ட்மென்ட் வாட்ச் மேனுக்கு குடும்பம் உண்டு அவரது உழைப்பு எத்தனை மணிநேரம் நமது பாதுகாப்புக்காக சுரண்டப்படுகிறது என்றளவிலாவது இந்த வர்க்கம் யோசித்ததுண்டா?
இவர்களைப் போன்ற சிறுபான்மையினர் தவிர்த்து மிகப் பெரும்பான்மை சமூகம், நகரங்களிலும், கிராமங்களிலும் மிக பின் தங்கிய சிதறிய உற்பத்தி முறையில் குறைந்த விலையில் பொருட்களை தொடர்ந்து உற்பத்தி செய்வதுதான் யுப்பி வர்க்கத்தின் ஐந்திலக்க சம்பளத்தை மிக பெரிய சம்பளமாக வைத்திருக்கச் செய்யும் காரணி என்பதை என்றுமே இவர்கள் உணர்வதில்லை. அது குறித்தான் விவாதங்களிலும் தமது சாதனை குறித்தான வெற்று சவடால்களையே பதில்களாக இட்டுச் செல்கின்றனர். தமிழ்மணத்தில் உலகமய யுப்பிகள் குறித்த கட்டுரைகள் பலவற்றில் நான் கண்டுணர்ந்த விசயம் இது.
உலகமய சம்பளமும், உள்ளூர் சம்பளமும்:
குங்குமம் எழுதுகிறது, மதுரையை சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டினர், தறி பட்டறைகளையும், வயல் வெளிகளையும் இன்ன பிற சிறு வீத, பின் தங்கிய அடிமை உற்பத்தி முறைகளை உடைய பட்டறைகளை, தொழிற்பேட்டைகளை அதிசயமுடன் பார்த்துச் செல்வதாக. அத்துடன், இது போல இந்திய உழைப்பாளிகள் நவீனமயமாகாமல் தமது உழைப்பை நாள் முழுவதும் செலுத்துவது வெளிநாட்டினருக்கு வியப்பாக இருப்பதாக குங்குமம் எழுதுகிறது. நமக்கு வியப்பாக இருப்பதெல்லாம் வெளிநாட்டினனின் கண்ணுக்கு வியப்பாகவாவது தெரியும் பெரும்பான்மை இந்திய மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏன் இந்த ஐந்திலக்க ஒட்டுண்ணிகளின் பார்வையில் விழுவதே இல்லை என்பதுதான்.
ஒரு எடுத்துக்காட்டுக்கு நாம் அன்றாடம் உணவு சாப்பிடும் தோசைக் கடை ஒன்றில் தோசை சுடுபவரை எடுத்துக் கொள்வோம், காலை 6:00 மணிக்கு சற்று முன்பாக கடைக்கு வந்து கழுவி அடுப்பை சூடேற்றி வைத்தால் ஒரு ஏழு ஏழரைக்கு கடை களை கட்ட ஆரம்பித்தவிடும், காலை கூலி வேலைக்கு வந்தவர்கள், அடுத்ததாக வெள்ளை காலர் உத்தியோகத்துக்கு செல்பவர்கள் என்று ஒவ்வொருவராக அவரவர் வேலை வசதிக்கேற்ப்ப காலர் கலருக்கேற்ப வந்து பதினொன்று வரை தோசைக் கடை ஓடும், இதனிடையே மதியம் புரோட்டா மாவு ரெடியாகியிருக்கும் (சில இடங்களில் இவரே புரோட்டா மாவும் தாயரிக்க வேண்டியிருக்கும்) மாலை மூனு மூனரை வரை புரோட்டா, அம்லேட் கடை ஓடும், சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை தோசை கம் புரோட்டாவுக்கான தாயாரிப்புகள் ஆரம்பமாகிவிடும், இது இரவு 10:00, 11:00 மணிவரை ஓடும். இதற்க்கப்புறம் கடையை கழுவி எடுத்து வைத்து அடுத்தநாளுக்கான தாயாரிப்புகளை செய்தால், தூங்குவதற்க்கு பணிரென்டரை ஆகிவிடும். பிறகு மீண்டும் காலை 6:00 மணி.
ஒரு பால் கறந்து விற்பவரை எடுத்துக் கொண்டால் அவரது உழைப்பு காலை 4:00 மணிக்கு ஆரம்பிக்கிறது. இதே முறையிலான உற்பத்தியில்தான் காய்கறி கடைக்காரர் முதல் பேப்பர் போடும் பையன் வரை பலரும் ஈடுப்பட்டு இந்த சமூகத்தை உயிர்ப்புடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விவசாயியின் வாழ்க்கையும் இப்படித்தான், காலை காய்கறி, தானியங்களை கட்டி எடுத்து நகர சந்தைகளில் விற்பது ஒரு காலம் எனில், விதைப்பு இல்லாத நாட்களில் திருப்பூர்களிலும், சென்னைகளிலும் பனியன் பட்டறைகள், ஹோட்டல் கடைகளில், கட்டுமான இடங்களிலும் தமது உழைப்பை இடையறாமால் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆடு மேய்ப்பவனின் வாழ்க்கை ஆடுகளுடன் முற்று முதலாக கட்டுண்டு அவன் சாகும் வரை ஆடோ டு ஆடாக சாக சபிக்கப்பட்டதொரு வாழ்க்கையைத்தான் இந்த சமூகம் அவனுக்கு உத்திரவாதப்படுத்தியுள்ளது. இவையணைத்தும் அற்பக் கூலிக்கு சுரண்டப்படும் உழைப்பு.
இந்தியாவில் Working poverty அதிகம். இந்தியாவில் வறுமைக் கோட்டை அரசு நிர்ணயம் செய்திருப்பதே ஒரு பெரிய மோசடி என்பதிருக்க, அதனை உண்மை என நாம் அங்கீகரித்தால் கூட 30% கிட்ட வறுமைக் கோட்டிற்க்கு கீழ் இருக்கும் ஒரு சமூகம்தான் இந்தியா. அதில் பெரும்பான்மையினர் வேலை செய்தும் வறுமையில் இருப்பவர்கள். அரசு புள்ளி விவரத்தின் படியே சில நூறு ரூபாய்கள்தான் கிராம ஆண்டு சராசரி வருமானமாக உள்ளது. நமக்கு சோறு போடுபவர்கள் சோறின்றி இருக்கு கொடுமை இது.
இவர்களுக்கு இந்த சமூகம் என்ன திருப்பிக் கொடுக்கிறது? இவர்களுக்கு என்றாவது தமது சொந்த வாழ்க்கையை நிதானமாக நின்று சிந்தித்துப் பார்க்கவோ அல்லது உழைப்பின் களைப்பை வியாபாரமாக்கும் சந்தை கலாச்சார ஆபாசங்களை மீறி ஆக்கப்பூர்வமான கலைகள் குறித்தோ, அல்லது அவர்களது சொந்த அறிவு மேன்மை குறித்தோ சிந்திப்பதற்க்கோ வாய்ப்புகளையாவது இந்த சமூகம் கொடுத்துள்ளதா? இப்படி அவனது சிந்தனை, உடல் உழைப்பு முழுவதையும் தோசைக் கல்லிலும், பசுவின் மடுவிலும், உழு மாடுகளுடனும், கட்டிட குவியல்களிலும் கட்டி வைத்து அடிமையாக்கி சுரண்டுவது குறித்து என்றாவது இந்த வளங்களை அனுபவிக்கும் வர்க்கங்கள் யோசித்திருக்குமா? ஒரு பெரிய சமூகமே இப்படி ஜனநாயகமின்றி - 'விடிந்தால் பட்டறை அடைந்தால் படுக்கை' என்று முடக்கப்பட்டு, ஒட்டு மொத்த சமூகத்தின் அறிவு அழிவு ஏற்படும் புதிய மனு நிதியின் அவலம் குறித்து என்றாவது அறிவு ஜீவிகள் என்று பீற்றிக் கொள்ளும் நடுத்தர வர்க்க மேதைகள் யோசிப்பதுண்டா?
ஒரளவு வளமான நடுத்தர வர்க்க பின்புலத்தில் பிறந்து, இந்த சமூகத்தின் கூட்டு உழைப்பின் பலன்களையெல்லாம் அனுபவித்து விட்டு, தமது அறிவை வளர்த்துக் கொண்டு, இந்த பலங்களின் அடிப்படையிலேயே இன்று உலகமயப் பொருளாதாரத்தில் தன்னை ஒரு வளப்பமான இடத்தில் உட்கார வைத்துக் கொண்டு ஒட்டுண்ணியாக வாழும் இந்த வர்க்கம் - அதனை ஏதோ தமது தனிப்பட்ட சாதனை போலவும், மற்ற ஏழை தொழிலாளர்கள் எல்லாம் முட்டாள்கள், பிழைக்கத் தெரியாதவர்கள், சோம்பேறிகள் என்றும் வியாக்கியனம் செய்யும் அல்பத்தனமான் திமிர்தனத்தைத்தானே இவர்கள் பெரும்பாலும் இந்த சமூகத்திற்க்கு திருப்பிச் செலுத்தும் கடமையாக் வெளிப்படுத்துகிறார்கள்.
இப்படி சுரண்டிச் சேர்த்த சில்லறை பணத்திலிருந்து சிலர் தானம் செய்து தமது சமூக அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். இந்தியாவை ஒட்டச் சுரண்டிய வெள்ளைக்காரன் இது போல அற்ப தொகையை தானம் செய்து விட்டு அதனையே அவனது கொள்ளைகளை நியாயப்படுத்து பயன்படுத்துவது எந்தளவுக்கு மொள்ளமாறித்தனமோ அந்தளவுக்கு மொள்ளமாறித்தனம் இந்த செயல். சம்பாதித்த பணம் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களை இது போல அற்ப கூலிக்கு சுரண்டி சேர்த்த பன்னாட்டு மூலதனத்தின் ஒரு பகுதி, அதில் இவன் சேமிக்கும் பணம் என்பது உள்நாட்டு உழைக்கும் மக்களை அற்ப கூலிக்கு சுரண்டுவதால் சேகரமாகும் பணம். இதில் உனக்கு என்ன நல்லவன் என்ற மன நிம்மதி வேண்டிக் கிடக்கிறது?
சிலர் இருக்கிறார்கள் - 'சார் சாதி பேச வேண்டாம், மத பேச வேண்டாம், வர்க்க பிரிவினை பேசி நாம் பிரிந்து கிடக்க வேண்டாம். எல்லாரும் மனிதர்கள் சார்' என்று இங்கே தமிழ்மணம் போன்ற இடங்களில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இங்கே அன்பை பேசு என்பதுதான் இவர்களின் கோரிக்கை. ஏனேனில் தமிழ்மணத்தில் பொழுதைக் கழிக்க வரும் இவர்களுக்கு நமது சத்தங்கள் நாரசமாக இருக்கிறதாம். இவர்களது ஆன்ம நிம்மதியை கெடுக்கிறதாம். அதிர்ச்சியாய் இருக்கிறதாம். ஏனேனில் இவர்கள் எல்லாம் தேவ லோகத்தில் வசிப்பவர்கள் அல்லவா? ரொம்ப நல்லவர்கள் அல்லவா? எந்த பிரச்சனைக்கும் போகாதா உத்தமர்கள் அல்லவா?
உண்மையில் இவர்கள்தான் படு கேவலமான அயோக்கியர்கள். ஒட்டுண்ணியிலேயே வீரிய வகையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இங்கே ஒரு பெரும் சமூகமே துன்பக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது அது குறித்தான பேச்சைக் கூட சகிக்கவொன்னாத அளவு தமது சொந்த சுகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படு கேவலமான பிழைப்புவாதிகள் இவர்கள். சுரண்டலின் பலன்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டே அது குறித்தான் விவாதங்களை தவிர்ப்பதோடல்லாமல் தமது வர்க்கத்தாரிடமும் நல்ல பெயர் எடுக்கும் நாரிகள் இவர்கள்தான்.
நான் சென்னையிலிருந்த காலம் அது, பெசண்ட் நகர் சிக்னல் வாட்டர் டேங்க் சாலையின் ஆரம்பத்தில் சில புரோட்டாக் கடைகளை கடந்தால் தள்ளு வண்டியில் தோசைக் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார் ஒரு அண்ணாச்சி. சிரிவில்லிபுத்தூர்க்காரர் அவர். இரவு நேரங்களில் அங்குதான் நமக்கு சாப்பாடு. அமிர்தமாக இருக்கும். மாலை ஆறு மணி போல ஆரம்பித்து இரவு விடிய விடிய கடை ஓடும். அதுதான் அவரது பிரதான வருமானம். முக்கியமாக இரவு எட்டு முதல் பத்து மணி வரையான பீக் அவரில் எவ்வளவு காசு பார்க்க முடியுமோ அவ்வளவு லாபம் அவருக்கு. அந்த நேரங்களில் அவரது கைகள் படு பரபரப்பாக இயங்கும். மின்னலின் வேகத்துடன் சுற்றி பல்வேறு கோரிக்கைகளை வைத்து நிற்க்கும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வெறி கொண்டு இயங்குவார் அவர். அது கலைக் கண் கொண்டு உற்று நோக்குவோருக்கு இரை கேட்டு கீச் கீச் என்று கதறும் குஞ்சுகளை திருப்திப்படுத்தும் ஒரு பறவையின் தாய்மையை ஒத்ததாக தோன்றும். ஆனால் நிதர்சனத்தில் அவரை உந்தித்தள்ளும் குழந்தைகளின் படிப்பு, தங்கையின் மருத்துவ செலவு இன்னபிற வாழ்க்கை துயரங்கள் எனது கண்ணில் நிழலாடும். அவரது இந்த பேராசையால் காக்க வைக்கப்பட்ட நபர்கள் பலர் (ஆம், இந்த அடிப்படை தேவைகளை பேராசை என்று அல்பவாதிகள் சொல்வார்கள் - "சார், இருக்கறவங்கள திருப்தியா வைச்சாலே ஒழுங்கா கடை ஓடும், அவனுக்கு பேராசை சார். அதான் ரெகுலர் கஸ்டமர காக்க வைச்சு கடசில விரட்டி விட்டுற்றான்). அப்படி காக்க வைக்கப்பட்டு இழந்த வாடிக்கையாளர்கள் பலர். ஆனால் இவை அவரை பாதிப்பதில்லை. அவரை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தி கொன்று கொண்டிருக்கும் வேறு ஒரு விசயம் இருந்தது.
தொடர்ந்து இப்படி வேக வேகமாக தோசை சுட்டதால் அவரது மணிக்கட்டு முற்றிலும் சேதமாகி, சவ்வு வலுவிழந்து அவருக்கு பெரும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த வலியையும் மீறி அவர் தொடரந்து தோசை சுட்டுக் கொண்டேயிருப்பார். இதுதான் அவரை உண்மையில் கலவரப்படுத்திக் கொண்டிருந்த விசயம். ஏனேனில் அவரது மூலதனம் என்பது அவரது மணிக்கட்டின் வேகம்தான். அந்த கடையில் பெரும்பாலும் வேலை தேடும் இளைஞர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் வருவார்கள். முக்கியமாக அன்றாடம் கூலி வேலை செய்து வயிறு கழுவுபவர்களும் பெரும்பான்மையாக வருவார்கள்.
முகமெல்லாம் வெள்ளை பொடி - அவர் கட்டிட இடிபாடுகளில் வேலை செய்கிறார் போலும், இரவு பத்து மணி போல வருகிறார், பழுப்பு நிற சட்டை - வேட்டியா, லுங்கியா அல்லது கிழிந்த பேண்டா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒரு ஆடை. கடும் உழைப்பின் வலு ஏறிய உடலமைப்பு. கண் இமைகளில் கூட வெள்ளைப் பொடிகள் நிற்கின்றன. வாய் திறந்து பேசும் போது வித்தியாசமாக பற்கள் பழுப்பு நிறத்திலும், உதடுகளில் ஒட்டிய பொடிகள் வெள்ளை நிறத்திலுமாக காட்சி தருகின்றது. சிரி வில்லிபுத்தூர் அண்ணாச்சியிடம் கேட்க்கிறார் - "இட்லி எத்தன ரூபாய்". வேலை சிரத்தையாக இருக்கும் அண்ணாச்சி பதில் சொல்கிறார். ஒரு நொடியில் கால் பங்கு நேரம் கணக்குப் போடுவது போன்று நிதானித்த பிறகு வெள்ளை பொடி தொழிலாளி, அண்ணாச்சியிடம் 4 இட்லிகளை கேட்க்கிறார். அருகே 5 தோசைகளை சாப்பிட்ட பிறகு ஆம்லேட்டுக்காக நின்று கொண்டிருந்த எனக்கு அதற்க்கு மேல் சாப்பாடு இறங்கவில்லை.
வெள்ளைத் தொழிலாளியின் உழைப்பின் தேவை என்னவென்பதை பார்க்கும் போதே என்னால் உணர முடிகிறது. அது நான்கு இட்லிகளில் அடங்கிவிடும் விசயம் அல்ல என்பதை உணரும் போது எனது வயிறு தானே சுருங்கிக் கொள்கிறது. கொடுமையில் கொடுமை உழைப்பவரின் வறுமை. எனது மனசாட்சி இந்த சமூகத்தின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நாகரீகமான வாழ்க்கை வாழ்கிறாயே பதிலுக்கு என்ன செய்யப் போகிறாய் என்று என்னை குத்திக் கிழிக்கிறது. மங்கிய சோடியம் விளக்கின் அழுக்கு மஞ்சள் வெளிச்சம் இந்தியாவின் இழி நிலையை நினைத்து மௌனமாக அழுவது போன்ற எண்ணம் வலுப்பட்டது. வெளியே பரவும் அந்த சோக மஞ்சள் உள்ளே மனதுள் கருமையாய் படர்ந்தது. சென்னையின் இரவு நேர காற்றழுத்த இறுக்கம் இந்த சோகத்தை இன்னும் மோசமானதாக மாற்றியது. ஒன்றும் செய்ய இயலாமல் வெறுமே நின்று வேடிக்கை பார்க்க வைக்கும் அந்த சூழல் என்னுள் கழிவிரக்கத்தை தோற்றுவித்தது.
சிலர் அவன் தண்ணியடிப்பதற்க்காக காசு சேர்க்கிறான் என்று சொல்லக் கூடும். இருக்கலாம். ஆயினும் தண்ணியடிப்பதுதான் அவனை மறுநாள் சூரியன் வரும் முன் எழுந்து மீண்டும் ஒரு உழைப்பு சுரண்டலுக்கு உட்படுத்த அவனை தாயர் செய்கிறது எனில் அதனையும் சேர்த்து தருவிக்கும் அளவிலாவது அவனது கூலி இருப்பதுதானே நியாயம் என்று சொல்லத் தெரியாத அல்பைகள்தான் இவ்வாறு அவனை குற்றம் சாட்டுகிறார்கள். அந்த அல்பைகளோ யுப்பி வர்க்கத்தின் அஜீரண தீர்த்த யாத்திரைகள் குறித்து சம்பிரதாயப் பூர்வமான மௌனம் சாதிப்பார்கள்.
இப்படிஇந்திய சமூகத்தின் பெரும் மனித வளத்தை அற்ப கூலிக்கு அடிமைகளாய் வைத்து சுரண்டுவதால்தான் நமக்கு முட்டை 2:50க்கும், தோசை 5:00 ல்லது 6:00 ரூபாய்க்கும் கிடைக்கிறது. தொழிற்சாலைகளில், பனியன் பட்டறைகளில் ஒப்பந்த கூலிகளாக விவசாயிகளை சுரண்டுவதால்தான் லிவி ஜீன்ஸ் லாபத்தையும் உள்ளடக்கி 1000 ரூபாயில் கிடைக்கிறது. இந்த பாணி உற்பத்தி முறையில் இருக்கும் சேவைகள் எல்லாமே நமக்கு மிக குறைவான விலையில் கிடைக்கின்றன. ஒருவேளை உண்மையிலேயே இந்த தியாகிகளுக்கு/பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் என்னாகும்?
அப்படி ஒரு சூழல் உருவாகும் போது புரட்சி செய்ய வேண்டிய தேவை குறித்து நாம் எதுவும் சொல்லித் தர வேண்டாம், யுப்பி வர்க்கமே நம்மிடம் வந்து புரட்சியின் தேவை குறித்து பேசும். ஏனேனில் அது போன்ற சூழலில் அவனது பழைய வளப்பமான வாழ்க்கைத் தரத்தை பேணுவதற்க்கு தற்போதைய ஐந்திலக்க சம்பளம் போதாமல் போயிருக்கும். தேவையான சம்பளத்தை உயர்த்தி தருவதற்க்கோ அவனது இன்றைய பாசமிகு பன்னாட்டு தரகு முதலாளிகள் தாயாராயிருக்க மாட்டார்கள்.
இதுதான் ஐந்திலக்க சம்பளத்தின் லட்சணம். இதுதான் இந்திய மூளைக்கு உண்மையிலேயே சந்தை மதிப்பை உயர்த்தி தரும் காரணி. இதுதான் பல உலகமய தொழிலாளர்களை ஏதோ தாம் சாதனை செய்ததாக சுய திருப்தியில் அலைய வைக்கும் சமூக பொருளாதார பின்னணி. ஏனேனில் அவர்கள் கணக்கில் திறமை என்பதும் சாதனை என்பதும் சம்பள இலக்கங்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் கணக்கில் தன்னலமின்றி இந்திய சமூகத்துக்கு தமது உழைப்பை கொடுக்கும் பெரும்பான்மை மக்கள் திறமையற்றவர்கள். இந்த உண்மைகளையெல்லாம் மறைக்கத்தான் இந்தியா ஒளிர்கிறது என்ற தோல்விகரமான பிரச்சாரம் இன்று வரை தொடர்கிறது.
இப்போ சொல்லுங்க, உங்களோட இந்தியா ஒளிர யார் காரணம்? சோறு போட்ட உங்க சகோதரர்களின் இந்தியா உண்மையில் ஒளிர்கிறதா? எந்த இந்தியாவின் பக்கம் நீங்கள் இருக்கிறீர்கள்? உங்களது இந்தியாவை ஒளிரவைத்தவர்களின் இந்தியாவை ஓளிரவைக்க நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
அதிகமான கேள்விகளோ?...
மன்னிக்கவும்..... சுலபமான ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்.
உங்களுக்கு நன்றியுணர்ச்சி உண்டா?
A Song for Working People:
05 Megam Pozivatha...(If you have problem listning click here) |
A Song for Alpaigal:
தொடர்புடைய சுட்டிகள்:
பாடல்கள்: பாரடா உனது மானிடப் பரப்பை - பாரதிதாசன் பாடல்கள், மகஇக வெளியீடு.
பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 83
தொலைபேசி: 23718706
56 பின்னூட்டங்கள்:
//அது கலைக் கண் கொண்டு உற்று நோக்குவோருக்கு இரை கேட்டு கீச் கீச் என்று கதறும் குஞ்சுகளை திருப்திப்படுத்தும் ஒரு பறவையின் தாய்மையை ஒத்ததாக தோன்றும். ஆனால் நிதர்சனத்தில் அவரை உந்தித்தள்ளும் குழந்தைகளின் படிப்பு, தங்கையின் மருத்துவ செலவு இன்னபிற வாழ்க்கை துயரங்கள் எனது கண்ணில் நிழலாடும்.//
அற்புதம்!
//இங்கே ஒரு பெரும் சமூகமே துன்பக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது அது குறித்தான பேச்சைக் கூட சகிக்கவொன்னாத அளவு தமது சொந்த சுகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படு கேவலமான பிழைப்புவாதிகள் இவர்கள்.//
பாவம் 'நல்லவர்கள்'!
பி.கு:
சற்றே நீளத்தைக் குறைக்கலாம்!
Evaro sammattiyaa adithadhu pol oru unarvu. Meelvadharku niraya neram thaevaipattadhu.
Manee
Thank you for your meaningful ariticle
நட்சத்திர வாரத்திற்க்கு வாழ்த்துக்கள்.
(பதிவை பற்றி ஒன்றும் சொல்ல முடியவில்லை. வாயடைத்துப்போய் இருக்கிறேன்)
-விழிப்பு
//உங்களுக்கு நன்றியுணர்ச்சி உண்டா?//
இருக்கிறது. என்ன செய்ய வேண்டும்???
உழைக்கும் மக்களைப் பற்றியும், அவர்களின் சமூகப் பொருளாதார நிலைகளைப் பற்றியும் நடுத்தர வர்க்கம் உணரவேண்டும் என்பதுதான் உங்கள் கட்டுரையின் நோக்கமெனில் இதை வாசிக்கும் பெரும்பாலோர் உங்களின் மனோபாவத்தில் தான் இருப்பார்கள். ஆனால் அதற்கு என்ன செய்வது என்பதுதான் பலருக்கும் புரியாததாக இருக்கும்.
உழைக்கும் வர்க்கத்தினரின் உயர்வுக்கு அரசியல் ரீதியாக, சமூக அரங்கில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குங்கள்.
வசைமிகுந்த சொற்றொடர்களைத் தவிர்த்து, கருத்தின் மய்யத்தை உணர்த்தும் வண்ணம் எழுதுங்கள். அதுவே கவனம் பெறும்.
உங்களின் புரட்சிகர உள்ளத்தின் ஆதங்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் நன்மை பெற்று விடுதலை பெறட்டும்.
a marvellous one -
itharkkku melum oruvan workers patti sinthikkavillai entaal avarkalai ethil serppathu.
arumaiyaana thondinai seikireerkal - makkalai thatti eluppavendiyathu ovvoru nalla paditha manithanin kadamai
don't stop writing till it reaches the layman..
vaalthukaludan....
இந்த வார நட்சத்திரத்திற்கு பாராட்டுக்கள்.
மிக நீண்ட கட்டுரையை இட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலை மாறிவருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
The Maoists want to bring down the State. Given the autocratic ideology they take their inspiration from, what alternative would they set up? Wouldn’t their regime be an exploitative, autocratic, violent one as well? Isn’t their action already exploitative of ordinary people? Do they really have the support of ordinary people?
I think it’s important for us to acknowledge that both Mao and Stalin are dubious heroes with murderous pasts. Tens of millions of people were killed under their regimes. Apart from what happened in China and the Soviet Union, Pol Pot, with the support of the Chinese Communist Party (while the West looked discreetly away), wiped out two million people in Cambodia and brought millions of people to the brink of extinction from disease and starvation. Can we pretend that China’s cultural revolution didn’t happen? Or that millions of people in the Soviet Union and Eastern Europe were not victims of labour camps, torture chambers, the network of spies and informers, the secret police. The history of these regimes is just as dark as the history of Western imperialism, except for the fact that they had a shorter life-span. We cannot condemn the occupation of Iraq, Palestine and Kashmir while we remain silent about Tibet and Chechnya. I would imagine that for the Maoists, the Naxalites, as well as the mainstream Left, being honest about the past is important to strengthen people’s faith in the future. One hopes the past will not be repeated, but denying that it ever happened doesn’t help inspire confidence… Nevertheless, the Maoists in Nepal have waged a brave and successful struggle against the monarchy. Right now, in India, the Maoists and the various Marxist-Leninist groups are leading the fight against immense injustice here. They are fighting not just the State, but feudal landlords and their armed militias. They are the only people who are making a dent. And I admire that. It may well be that when they come to power, they will, as you say, be brutal, unjust and autocratic, or even worse than the present government. Maybe, but I’m not prepared to assume that in advance. If they are, we’ll have to fight them too. And most likely someone like myself will be the first person they’ll string up from the nearest tree — but right now, it is important to acknowledge that they are bearing the brunt of being at the forefront of resistance. Many of us are in a position where we are beginning to align ourselves on the side of those who we know have no place for us in their religious or ideological imagination. It’s true that everybody changes radically when they come to power — look at Mandela’s anc. Corrupt, capitalist, bowing to the imf, driving the poor out of their homes — honouring Suharto, the killer of hundreds of thousands of Indonesian Communists, with South Africa’s highest civilian award. Who would have thought it could happen? But does this mean South Africans should have backed away from the struggle against apartheid? Or that they should regret it now? Does it mean Algeria should have remained a French colony, that Kashmiris, Iraqis and Palestinians should accept military occupation? That people whose dignity is being assaulted should give up the fight because they can’t find saints to lead them into battle?
சமகாலத்தில் தேவைப்படுகிற மிக அவசியமான பதிவு. சுளீரென அழுத்தமாக இருக்கிறது. இவர்களை எல்லாம் சுட்டெரித்து விடுவதாக இருக்கிறது. படிக்க, அசை கொஞ்சம் போட, திருந்த, செயல்பட வைக்க விட்டு வையுங்கள். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் நீளத்தைக் குறைக்கலாம்
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி,
Anony, I am little confused with your comment... :)
could you summarise your big comment and come back with specific points?
before that I would like to tell you that the charges leveled agaist Mao & Stalin is proved as baseless. Please go through the previous post and this link -
http://www.tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_25u.html
Asuran
ஓ தமிழ்மண நட்சத்திரமா? வாழ்த்துகள்!
அரசு பால்ராஜ் சொன்னதுபோல், செறிவாயிருந்தாலும் இன்னும் சிறிதாக இருக்க வேண்டும். நீங்கள் எழுதுவதைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு நான் இருமுறை படிக்க வேண்டியதுள்ளது.
i am aasath
Hello Anonymous:
//I would imagine that for the Maoists, the Naxalites, as well as the mainstream Left, being honest about the past is important to strengthen people’s faith in the future.//
Marxism hasn't based on the faith. It is the process of Science. Before any invention you should find many deviated results. At the same time it will be the steps for the edge of the mountain. For this victory we have can accept all pains like motherhood
For asuran: Weel done
//சுய திருப்தியையும், ஒரு அல்பவாதிக்குரிய குணங்களையும், தற்பெருமையையும்
ஊக்குவிக்கும் சூழல் ப்ளாக்குகளில் நிலவுகின்றன. இது தவிர்க்க முடியாதது.
இவற்றினால் நானும் பாதிக்கப்பட்டேன். மீண்டு வந்தேன். எனது இந்த கெட்ட
அனுபவங்களை இங்கு குறிப்பிடுவதன் மூலம் சக வலைப்பதிவர்கள் இந்த
பிரச்சனைகள் குறித்த எச்சரிக்கையுடன் செயல்பட ஏதுவாகும் என்றூ
நம்புகிறேன். குறிப்பாக சமீபகாலத்தில் கம்யுனிசம் குறித்தும், முற்போக்கு
அரசியல் குறித்தும் எழுத வந்துள்ள பல இளம் வலையுலக தோழர்கள் இந்த
பண்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ப்தே இங்கு
வெளிப்படையாக இவற்றை அறிவிப்பதின் நோக்கம்.//
அதாவது புகழுக்காக எழுதும் நபர்களை சொல்கிறீர்கள் என பொருள் கொள்ளலாம் அல்லவா
மேலும் உங்களை பற்றி நீங்கள் ஆழமாக சொன்னபோதுதான் புரிந்தது
அசுரன் யார் என்று
நன்றி தோழரே
அசுரன்
ஏற்கனவே நான் இங்கே பின்னூடமிட்டேன்.. ஏனோ வரவில்லை.. பிளாக்கர் பிராபளமாக இருக்கும்.
நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
கலக்குங்க..
வாழ்த்துக்கள் அசுரன்,
இந்த முறை இடித்த இடி மிக தெளிவாகவும்,பலம் கூடியதாகவும் உள்ளது. அழுகை வர வைத்து விட்டீர். தன் அருகில் ஒருவன் அழுகி கீலே விழுந்தாலும், தூரமாக விலகி நின்று (சுத்தமாம்) தன் உணவை அழுது கொண்டே உன்னும் (இரக்க சிந்தனையாம்) இந்த முதுகெலும்பு இல்லாத புலுக்களுக்கு இந்த பறை ஒலி கேட்கட்டும்.
சிவபாலன்,
உங்கள் வாழ்த்து கமெண்ட் முந்தைய பதிவில் இருக்கிறது..
ஆசாத்தின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
மேதின வாழ்த்துக்கள் அசுரன்
//கொடுமையில் கொடுமை உழைப்பவரின் வறுமை//
சக மனிதரின் வாழ்வாதாரத் தேவையை, அதற்கான அவரின் உழைப்பையும் போராட்டத்தையும்
பார்த்தும் பார்க்காமல்தான் இன்றும்
நகர்ந்து கொண்டிருக்கிறோம்! அதைவிட, அதைப்பற்றி எண்ணுவதோ பேசுவதோ "மூட்-அவுட்" செய்யுமென்று தவிர்க்கத்தான் பெரிதும் நினைக்கிறோம்! பள்ளிப் பாடங்களில் வைக்கப்பட வேண்டிய கேள்விகள், பிரச்சினைகள் இவை!
உங்கள் எழுத்துக்கள், அனைவரையும் அடையட்டும்!
நட்சத்திர வாரத்திற்க்கு வாழ்த்துக்கள்.
உழைக்கும் மக்களின் வியர்வையை உறிஞ்சி வாழும் சமூக ஒட்டுண்ணிகளின் முகத்திரையினை கிழித்தெறிந்து விட்டீர்கள்.
//இங்கே ஒரு பெரும் சமூகமே துன்பக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது அது குறித்தான பேச்சைக் கூட சகிக்கவொன்னாத அளவு தமது சொந்த சுகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படு கேவலமான பிழைப்புவாதிகள் இவர்கள். சுரண்டலின் பலன்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டே அது குறித்தான் விவாதங்களை தவிர்ப்பதோடல்லாமல் தமது வர்க்கத்தாரிடமும் நல்ல பெயர் எடுக்கும் நாரிகள் இவர்கள்தான்.
//
//நமக்கு வியப்பாக இருப்பதெல்லாம் வெளிநாட்டினனின் கண்ணுக்கு வியப்பாகவாவது தெரியும் பெரும்பான்மை இந்திய மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏன் இந்த ஐந்திலக்க ஒட்டுண்ணிகளின் பார்வையில் விழுவதே இல்லை என்பதுதான்.//
//சிலர் இருக்கிறார்கள் - 'சார் சாதி பேச வேண்டாம், மத பேச வேண்டாம், வர்க்க பிரிவினை பேசி நாம் பிரிந்து கிடக்க வேண்டாம். எல்லாரும் மனிதர்கள் சார்' என்று இங்கே தமிழ்மணம் போன்ற இடங்களில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இங்கே அன்பை பேசு என்பதுதான் இவர்களின் கோரிக்கை. ஏனேனில் தமிழ்மணத்தில் பொழுதைக் கழிக்க வரும் இவர்களுக்கு நமது சத்தங்கள் நாரசமாக இருக்கிறதாம்.//
//சிலர் இருக்கிறார்கள் - 'சார் சாதி பேச வேண்டாம், மத பேச வேண்டாம், வர்க்க பிரிவினை பேசி நாம் பிரிந்து கிடக்க வேண்டாம். எல்லாரும் மனிதர்கள் சார்' என்று இங்கே தமிழ்மணம் போன்ற இடங்களில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இங்கே அன்பை பேசு என்பதுதான் இவர்களின் கோரிக்கை. ஏனேனில் தமிழ்மணத்தில் பொழுதைக் கழிக்க வரும் இவர்களுக்கு நமது சத்தங்கள் நாரசமாக இருக்கிறதாம்.//
பல கேள்விகளை முன் வைத்து சிந்திக்க வேண்டியிருக்கிறீர்கள். அச்சிந்தனைகளைத் தடைசெய்ய இங்கு இயங்குபவர்களையும் பற்றியும் நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
நட்சத்திர வாரத்தை உருப்படியாகப் பயன்படுத்துகிறீர்கள். இது போல் மேலும் பலவற்றை இந்த வாரத்தில் எதிர்பார்க்கிறேன்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!!!
அசுரன்,
வாழ்த்துகள்.
சிறப்பான பதிவுகளின் தொடக்கமாக இந்தப் பதிவு அமையும் என்றே நினைக்கிறேன்.
அன்புடன்
நண்பன்
அசுரன்,
வழக்கம் போல் அருமையா எழுதி இருக்கீங்க. இங்க பிரச்சனை என்னான்னா மனித வளம் தான் எவ்வுளவு குறைச்சலாக கூலி குடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு வேலை செய்ய ஆள் தயாராக இருக்கிறார்கள். வெளிநாடுகளில் அந்த நிலைமை இல்லை அதே போல் குறைந்த பட்ச ஊதியம் போன்றவை ஒரளவுக்காவது பின்பற்றப்படுகிறது. நான் சாதாரண நிகழ்வுகள் என்று நினைத்தவைக்குள் இவ்வுளவு அர்த்தங்கள் இருக்கின்றனவா ஹீம் நல்ல சிந்தனைகள் அசுரன்.
நன்றி அசுரன்
உழைப்பாளிகளின் அவலங்களை மீண்டும் ஒருமுறை அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்.
சந்தோஷ்,
இங்கே படித்து கல்லூரியில் இருந்து வெளியே வரும் இளைஞர்களுக்கு அரசு அவர்களின் எதிர்காலத்தை உத்திரவாதப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்திருக்காத நிலையில் அவர்கள் கிடைக்கும் வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் வேலை செய்ய முன்வருவது ஆச்சர்யமல்ல. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் அப்படி குறை கூலிக்கு வேலை செய்யும் நிலைக்கு கொண்டு வர அரசே அவர்களை நிர்பந்திக்கிறது.
மேலும் இங்கே முதலாளித்துவ வளர்ச்சியும் முழுமையடைந்த ஒன்றல்ல..இன்னும் நிலபிரபுத்துவ உற்பத்தி உறவுகளை நிறுவனங்கள் உறுதிப்படுத்தியே வருகிறது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கருத்துக்கள் தெரிவித்த கோபா, நம்பி, கல்ஃப் தமிழன், சுடலைமாடன் மற்றும் அனைவருக்கும் நன்றி!
சிந்திக்க வைக்கும் பதிவு.
//மன்னிக்கவும்..... சுலபமான ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்.
உங்களுக்கு நன்றியுணர்ச்சி உண்டா?//
மிகச்சரியான கேள்வி, ஒவ்வொருத்தரும் உணர வேண்டிய கேள்வி.
நன்றி.
சாரா
"I would imagine that for the Maoists, the Naxalites, as well as the mainstream Left, being honest about the past is important to strengthen people’s faith in the future".
These are words of Arundati Roy,
expressed in the same interview.
Roy is critical of the left,Maoists,IMF, governments,NGOs and sections of civil society and media.She is not cynical but is not so optimistic of left of all shades and hues and their politics.
In other words she is unwilling
to buy the argument that all problems will be solved if there
is a revolution inspired by leftist
forces.
cleதோமைiயுடன்
ஒரு விடையத்தை சரியாக உள்வாங்கி, சொல்லவேண்டிய வடிலத்தில் உறைக்கச் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துகள். இக்கட்டுரை தமிழ்சேக்கிள் இணையத்தில் மறுபிரசுரம் செய்துள்ளோம்.
பி.இரயாகரன்
25.04.200
நான் தமிழ் செல்வன்:
சில கேள்விகள்...!
1. குறை கூலி வாங்க ஆட் கள் இருப்பதனால்தான் கம்பனிகள் இஙகு வருகின்றன.நடுத்தர மக்களின் வாழ்க்கை உயர்கிறது. இவர்கள் அந்த கம்பெனிகளில் வேலை செயபவர்கள் மட்டுமல்ல... நீஙகள் குறிப்பிட்ட அண்ணாச்சி போன்ற ஏராளமானோர்.
// இதோ அந்த தியாகிகள்-உழைக்கும் மக்கள் இந்திய சமூகத்தின் அன்றாட தேவைகளுக்காக மாடுகளாய் உழைத்து கிடக்கிறார்கள். காலையில் பால் போடும் இளைஞன், பத்திரிக்கை வீசியெறியும் சிறுவன், காலை உணவு அருந்தும் கடை சிப்பந்திகள், அந்த உணவுக்கு தேவையான எண்ணைய், மசாலா முதலானவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயி, காலை ஆறு மணிக்கெல்லாம் வேலை செய்யத் துவங்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், 4 மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்யும் அண்ணாச்சி குடும்ப கடைகள், காய்கறி மொத்த கொள்முதற்சாலை தொழிலாளர்கள், கம்பேனிக்கு இட்டுச் செல்லும் பேருந்து ஓட்டுனர்கள், தண்ணீர் லாரிகள், தனியார் தண்ணீர் சப்ளை வேன் ஓட்டுனர்கள் - இப்படி இன்றைய யுப்பி வர்க்கத்தின் ஒவ்வொரு தேவையுடனும் ஒரு பெரும் சமூக உழைப்பு பின்னி பிணைந்திருப்பதை அவர்கள் என்றுமே உணர்வதில்லை.
குறைந்தது தமது ஆபார்ட்மென்ட் வாட்ச் மேனுக்கு குடும்பம் உண்டு அவரது உழைப்பு எத்தனை மணிநேரம் நமது பாதுகாப்புக்காக சுரண்டப்படுகிறது என்றளவிலாவது இந்த வர்க்கம் யோசித்ததுண்டா? //
இவர்கள் அனைவருக்குமே இன்று வருடம் முழுவதும் வேலை இருப்பதற்கும், ஒரளவுநல்ல சம்பளம் கிடைப்பதற்கும் யார் காரணம்? எஙகள் அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் 2 குழந்தைகளையும் ப்ரைவேட் பள்ளியில் படிக்க வைப்பதற்கும் மொபெட்டில் வந்து செல்வதிற்கும் ஏதுவாக அவரது சம்பளம் உயர்ந்தது யாரால்? நீஙகள் சொல்லும் ஐந்திலக்க சம்பளம் வாஙுகுபவர்களால்தானே?
நட்சத்திர வாழ்த்துகள் அசுரன்....
தமிழ் செல்வன்,
//1. குறை கூலி வாங்க ஆட் கள் இருப்பதனால்தான் கம்பனிகள் இஙகு வருகின்றன.நடுத்தர மக்களின் வாழ்க்கை உயர்கிறது. இவர்கள் அந்த கம்பெனிகளில் வேலை செயபவர்கள் மட்டுமல்ல... நீஙகள் குறிப்பிட்ட அண்ணாச்சி போன்ற ஏராளமானோர்.//
தமிழ் செல்வன் கட்டுரையைச் சரியாகப் படியுங்கள். இந்த "குறை கூலி வாங்க ஆட்கள் இருப்பதால்" என்று நீங்கள் சொல்வதில் ஒரு விஷயம் மறைந்துள்ளது.
அது -
குறை கூலி வாங்கும் ஒரு வர்க்கம் இங்கே இருப்பதை உறுதிப்படுத்தும் நிலையை அரசு ஏற்படுத்துகிறது. உங்கள் ஐந்திலக்க சம்பளம் அதிகமாகத் தெரியக் காரணம் இங்கே அதற்க்கும் கீழே அதாளபாதாளத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டம் இருப்பதே காரணம். அந்தக் கூட்டம் அப்படியே இருக்குமாறு உறுதிப் படுத்தவே விவசாயம், கைத்தறி, சில்லரை வணிகம். இது போல் இன்னும் எத்தனையோ தேசியத் தொழில்களை நாசமடைய வைத்திருக்கிறார்கள்..
//இவர்கள் அனைவருக்குமே இன்று வருடம் முழுவதும் வேலை இருப்பதற்கும், ஒரளவுநல்ல சம்பளம் கிடைப்பதற்கும் யார் காரணம்?//
சரி தான் . அவர்கள் "ஓரளவு மட்டுமே" சம்பளம் வாங்க நீங்கள் தான் காரணம்
//Roy is critical of the left,Maoists,IMF, governments,NGOs and sections of civil society and media.//
ofcourse, Roy is critical of the Maoists and Marxist-Leninists. but she is not 'critical' of the so-called left or institutions you have mentioned. Instead she thrashes them in each and every sentence.
//She is not cynical but is not so optimistic of left of all shades and hues and their politics.In other words she is unwilling
to buy the argument that all problems will be solved if there
is a revolution inspired by leftist
forces.//
so what do you want to project out of this?. morever even marx or lenin said that all problems will be solved if there is a revolution inspired by 'leftist'forces.It seems you are too haste in judging Roy and that's why you go with the generic term 'leftists'.
The long interview of Roy, ofcourse has some sections critical of real communists of even Mao and Stalin.These things can always be debated. The crux of her opinions doesn't lie in her criticisms on revolutionary communists but on the whole picture of the burning India. what is your word on that?
Arundhati Roy again and again stresses that her criticisms on revolutionary communists should not to be equated to her charges on the imperialists and their lackeys. even after that if this is what you see, then underground anonymous,i am sorry to say, you are frozen.
//// இவர்கள் அனைவருக்குமே இன்று வருடம் முழுவதும் வேலை இருப்பதற்கும், ஒரளவுநல்ல சம்பளம் கிடைப்பதற்கும் யார் காரணம்? எஙகள் அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் 2 குழந்தைகளையும் ப்ரைவேட் பள்ளியில் படிக்க வைப்பதற்கும் மொபெட்டில் வந்து செல்வதிற்கும் ஏதுவாக அவரது சம்பளம் உயர்ந்தது யாரால்? நீஙகள் சொல்லும் ஐந்திலக்க சம்பளம் வாஙுகுபவர்களால்தானே? ////
தமிழ் செல்வா, உழைப்பை சுரண்டுவதற்கும், கொடுக்கும் சொற்ப சம்பளத்திற்கும் மேலாக உங்களுடைய இந்த தியாக வேஷம் நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு.
அசுரன் வாழ்த்து
வாத்து மடையரிடம்
வர்க்கம் பேசுகிறாய்
சோத்து சனங்களின்
சோகம் பேசுகிறாய்!
வேர்க்கும் கைகளின்
வேதனை தெரியாமல்
சேர்க்கும் பணத்தின்
சூதினை சொல்லுகிறாய்!
பசியும் வறுமையும்
பாவத்தால் வந்தது
சாபத்தால் போகாதெனும்
கோபம் கொள்கிறாய்
சின்னமனிதர்களின்
பெரிய சோகம்சொல்ல
பிறப்பெடுத்தாயா
பெய(ர்) -அசுரா
தியாகு
நீங்கள் நட்சத்திர பதிவாளரானதற்கு வாழ்த்துக்கள், உங்களின் எழுத்துக்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு சுதந்திர போராட்ட காலத்தை நினைவு படுத்துகின்றன.
மன்னிக்கவும் அசுரன்,
நீங்களும் அந்த ஐந்திலக்க எச்சில் பருக்கை சம்பளம் வாங்குபவர்களில் ஒருவர்தான் என்பதை மறந்து பேசுகிறீர்கள்.
நீங்கள் சொல்வதெல்லாம், அண்ணாச்சி உட்பட, கேட்டால் மனம் உருகிறதுதான். ஆனால் அதற்காக என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் வேலையை விட்டு தோசை சுடப் போகிறீர்களா?
சரவணபவன் அண்ணாச்சியும் சின்னதாக ஆரம்பித்துத்தான் இன்று இந்த நிலைமைக்கு உயர்ந்துள்ளார். திருபாய் அமானியும் சாதாரண டைப்பிஸ்டாக வேலை ஆரம்பித்தவர்தான்.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பதை மறந்தால் போல தெரிகிறதே.
இம்மாதிரி பதிவுகள் போட்டால், ஆகா அசுரனுக்கு என்ன இரக்க உணர்ச்சி என்று வேண்டுமானால் சிலர் பின்னூட்டம் போட்டு விட்டு போகலாம். வேறு என்ன செய்வதாக உத்தேசம்?
அடுத்த அப்ரைசலில் நல்ல சம்பள உயர்வு கேட்காமலா இருக்கப் போகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
தோழர் அசுரன்...
//இவர்களுக்கு இந்த சமூகம் என்ன திருப்பிக் கொடுக்கிறது?
ஒரளவு வளமான நடுத்தர வர்க்க பின்புலத்தில் பிறந்து, இந்த சமூகத்தின் கூட்டு உழைப்பின் பலன்களையெல்லாம் அனுபவித்து விட்டு, தமது அறிவை வளர்த்துக் கொண்டு, இந்த பலங்களின் அடிப்படையிலேயே இன்று உலகமயப் பொருளாதாரத்தில் தன்னை ஒரு வளப்பமான இடத்தில் உட்கார வைத்துக் கொண்டு ஒட்டுண்ணியாக வாழும் இந்த வர்க்கம் - அதனை ஏதோ தமது தனிப்பட்ட சாதனை போலவும், மற்ற ஏழை தொழிலாளர்கள் எல்லாம் முட்டாள்கள், பிழைக்கத் தெரியாதவர்கள், சோம்பேறிகள் என்றும் வியாக்கியனம் செய்யும் அல்பத்தனமான் திமிர்தனத்தைத்தானே இவர்கள் பெரும்பாலும் இந்த சமூகத்திற்க்கு திருப்பிச் செலுத்தும் கடமையாக் வெளிப்படுத்துகிறார்கள்.///
-இதைப் படித்ததும் நெஞ்சு கொதித்துப்போனது.
//தொடர்ந்து இப்படி வேக வேகமாக தோசை சுட்டதால் அவரது மணிக்கட்டு முற்றிலும் சேதமாகி, சவ்வு வலுவிழந்து அவருக்கு பெரும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த வலியையும் மீறி அவர் தொடரந்து தோசை சுட்டுக் கொண்டேயிருப்பார்//
-மனசு கனக்கிறது. முழு அனுபவத்தையும் படித்ததும் விழிகள் கலங்குகின்றன. எந்த காரணமுமின்றி நானும் குற்றவுணர்வுக்கு ஆட்பட்டேன்.
மிக எளிமையான வார்த்தைகளில், நடைமுறை வாழ்வில் அனைவரும் எதிர்கொள்ளும் மனிதர்களை உதாரணமாகக் காட்டி, வெகு, வெகு சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்களும், நன்றியும்...
டோண்டு,
//நீங்களும் அந்த ஐந்திலக்க எச்சில் பருக்கை சம்பளம் வாங்குபவர்களில் ஒருவர்தான் என்பதை மறந்து பேசுகிறீர்கள்.
நீங்கள் சொல்வதெல்லாம், அண்ணாச்சி உட்பட, கேட்டால் மனம் உருகிறதுதான். ஆனால் அதற்காக என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் வேலையை விட்டு தோசை சுடப் போகிறீர்களா?//
முதலில் ஒருமுறை எனது நட்சத்திர அறிமுகத்தைப் படியுங்கள். இந்த நாட்டின் மனித வளங்கள் மிக அற்பமாக கொள்ளை போகிறது, சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாடு மறுகலானியாகிறது. இதனைப் பற்றிய எந்த ஒரு கவலையும் இல்லாமல் இங்கே ஒரு சமூகமே வக்கிரத்துடன் வாழ்ந்து வருவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்.
ஏண்டா உங்களுக்கெல்லாம் சொரனையிருக்கா என்று எவராவது சுட்டிக் காட்டினால் நீங்கள் அவரிடம் "எப்போது தோசை சுடப்போகிறாய்?" என்றா கேட்பீர்கள்?
//சரவணபவன் அண்ணாச்சியும் சின்னதாக ஆரம்பித்துத்தான் இன்று இந்த நிலைமைக்கு உயர்ந்துள்ளார். திருபாய் அமானியும் சாதாரண டைப்பிஸ்டாக வேலை ஆரம்பித்தவர்தான்//
நீங்கள் அண்ணாச்சிகளையும் தீருபாய் அம்பானியையும் ஒப்பிடுவதில் இருந்தே உங்கள் அரைகுறை அறிவு வெளிச்சமாகிறது. எந்த அண்ணாச்சி அரசாங்கத்துக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாயில் நாமம் போட்டார்? "இந்த நிலைக்கு" உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டீகளல்லவா? அந்த "நிலை" இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதைப் பற்றி ஏன் நீங்கள் வாயைத் திறக்கவில்லை? அப்படிக் கேட்பவனிடம் ஏன் நீ பொட்டலம் மடிக்கப் போவதில்லை என்று கேள்வி கேட்கும் வக்கிர புத்தி தானே உங்களுக்கு?
பிரிட்டிஸ் காலத்தில் கடுமையாக நசுக்கப்பட்டது யார்? பிரிட்டிஸ்காரனுக்கு கூட்டிக் கொடுத்தும் அவனை நக்கிப் பிழைத்ததும் யார்?
விடுதலைக்கான குரல் அன்றும் நசுக்கப்பட்டு சுரண்டப்பட்டவனிடம் இருந்து தான் எழுந்தது...
நக்கிப் பிழைத்தவர்களின் மரபு இன்றும் மறுகாலனியாகத்தை எதிர்த்து விடுதலை முழக்கம் எழும் இடங்களில் எதிர்க் குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இங்கு டோண்டுவே ஒரு நல்ல சாட்சி!
பார்ப்பனியம் ஏகாதிபத்தியங்களுடன் கள்ள உறவு கொள்ளும் புள்ளி இது தான். அவன் சுரண்டட்டுமே நீ உன் அப்ரைசலைப் பற்றி மட்டும் கவலைப் படு என்கிறீர்களே.. இதற்கும் நான் உனக்கு மேல் இருக்கிறேன் அவன் உனக்குக் கீழ் இருக்கிறான் என்று சொல்லும் பார்ப்பனீயத்தும் என்ன வித்தியாசம்?
//ஏண்டா உங்களுக்கெல்லாம் சொரனையிருக்கா என்று எவராவது சுட்டிக் காட்டினால் நீங்கள் அவரிடம் "எப்போது தோசை சுடப்போகிறாய்?" என்றா கேட்பீர்கள்?//
கண்டிப்பாக சுடப்போவதில்லை நீங்கள் என்பதை அறிவேன். ஆனால் இதையெல்லாம் கூறும்போது பார்ப்பன அறிவு எங்கிருந்து வந்தது? சரி, விடுங்கள், அதெல்லாம் உங்கள் டீஃபால்ட் புலம்பல்கள். அது இல்லாமால் உங்களால் மூச்சு விடமுடியாதுதான்.
//பிரிட்டிஸ்காரனுக்கு கூட்டிக் கொடுத்தும் அவனை நக்கிப் பிழைத்ததும் யார்?//
1941 வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்த கம்யூனிஸ்டுகள் அந்த ஆண்டு சோவியத் யூனியன் தாக்கப்பட்டதும் அதற்காக பதறி வெள்ளையனுடன் சேர்ந்து கொண்டு 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது பிரிட்டிஷாருக்கு துப்பு கொடுத்து அவனை நக்கிப் பிழைத்தவர்கள் என்பதை இங்கு யாரும் மறக்கவில்லை. அதே போல 1962-ல் சீனா செய்த ஆக்கிரமிப்புபோது அதை கண்டிக்காத தேச துரோகிகளும் கம்யூனிஸ்டுகளே. அக்காலக் கட்டத்தில் அதையெல்லாம் நேரில் பார்த்தவன் நான் என்பதையும் மறக்காதீர்கள். உங்களைப் போல ஒருதலை கம்யூனிச குப்பை எழுத்துக்களை படித்துத்தான் என் அரசியல் அறிவு வளர வேண்டும் என்பதில்லை எனக்கு.
//அவன் சுரண்டட்டுமே நீ உன் அப்ரைசலைப் பற்றி மட்டும் கவலைப் படு என்கிறீர்களே//
அப்படிச் சொல்லவில்லையே. நீங்கள் அந்த அப்ரைசலை உங்கள் நலனுக்கு உபயோகித்து நல்ல சம்பள உயர்வு பெறத்தான் போகிறீர்கள் என்பது நிச்சயமாக எனக்குத் தெரியும். இதைப் போய் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பது தேவையற்றது.
மறுபடியும் கூறுகிறேன். உங்களை மாதிரி ஆஷாடபூதித்தனத்தோடு பேசுபவர்களுக்கு உண்மையைச் சொன்னால் எரியும்தான். என்ன செய்வது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு,
நீங்கள் அரைப் பொய் அரை உண்மைகளை மட்டுமே நம்பிப் பிழைப்பவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.
ஆம், ஹிட்லர் ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ பூச்சாண்டி காட்டி, கம்யூனிஸம் ஐரோப்பாவில் பரவாமல் தடுக்கப் போகிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு ஐரோப்பிய நாடாக விழுங்கத்துவங்கிய ஆரம்ப நாட்களில் பிரிட்டன் அவனுக்கு மறைமுகமாய் ஆதரவளித்தே வந்தது. ரஷ்யா பரஸ்பர ஒப்பந்தத்துக்கு அழைத்த போதும் பிரிட்டனும், பிரான்ஸும், அதனை அலட்சியம் செய்தது. பின்னர் பிரான்ஸை விழுங்கி விட்டு ரஷ்யாவின் பக்கம் அவன் பார்வையைத் திருப்பிய பின்னரே பிரிட்டன் நிலமையின் பயங்கரத்தை உணர்ந்து சோவியத்துக்கு ஆதரவளிக்க முன்வந்தது.
இந்த நிலையில் உலகில் பாசிசம் தோற்கடிக்கப் படவேண்டும் என்கிற நோக்கில் தற்காலிகமாக விடுதலை போராட்டங்களை நிறுத்தி வைத்தது அன்றைய இந்திய கம்யூனிஸ்டு கட்சி.
நீங்கள் சொன்னது போல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தது கம்யூனிஸ்டுகளல்ல, பார்ப்பனவாதிகளான RSS தான்.
கம்யூனிஸ்டுகள் எங்கே காட்டிக் கொடுத்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?
அதற்குப் பின் நடந்த தல்வார் போராட்டங்களிலும், தெலுங்கானா போராட்டத்திலும், கம்யூனிஸ்டுகள் தான் பல உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள்.
இப்படிக் கேவலாக உளராமல்,
பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் டோண்டு!
அசுரன்
ஐந்திலக்க சம்பளம் வாங்கும் புரட்சியாளர்கள், அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இந்த புரட்சியாளர்களை பாராட்டும் டாலர் புரட்சியாளர்கள், முதலைக் கண்ணீர் விடும் உயர் மத்தியதர
வர்க்கம் - இவர்களின் வார்த்தைகளில் ஏழைகளும், உழைப்பாளிகளும் மயங்கிவிடுவார்களா. புரட்சி என்பது அலுவலக நேரத்தில் கணினியின் விசைப்பலகையில் பிறப்பதில்லை.சுரண்டும் கும்பலின் ஒரு பகுதி இப்படி எழுதினால், இன்னொரு பகுதி என்.ஜி.ஓக்கள் மூலம் எச்சில் இலையை வீசுகிறது. உழைக்கும் மக்கள் தலித் அதாவது ஜாதிய அமைப்பின் கடைசிப் படியில் இருப்பவர்கள் என்று கொண்டால், என்.ஜி.ஒ மூலம் உதவி வீசும் இந்திய,பன்னாட்டு பெருமுதலாளிகள் பார்ப்பனர்கள்,
ஐ ஐந்திலக்க சம்பளம் வாங்கும் புரட்சியாளர்கள், அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இந்த புரட்சியாளர்களை பாராட்டும் டாலர் புரட்சியாளர்கள், முதலைக் கண்ணீர் விடும் உயர் மத்தியதர
வர்க்கம் - இடை நிலை சாதிகள். இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் சுரண்டுகிறார்கள். இதில் சரவண பவன் அண்ணாச்சியும் உண்டு, அம்பானியும் உண்டு. நாளைக்கே அம்பானியும், அண்ணாச்ச்சியும் கூட்டுச் சேருவார்கள் அது இருவருக்கும் இன்னும் சுரண்ட உதவுமென்றால்.வணிகர் சங்க வெள்ளையன்கள் அவர்களுக்கு முடிந்தவரை சுரண்டினால், அம்பானியும், வால்மார்ட்டும் அவனவனால் முடிந்த அளவிற்கு சுரண்டுவேன் என்கிறான். யார் சுரண்டினாலும் இந்தியாவில் கீழ்மட்ட உழைக்கும்
வர்க்கத்திற்கு கிடைக்கப் போவது ஒன்றுதான்.
அவர்கள் பெயரைச் சொல்லி யார்யாரோ அரசியல் நடத்துகிறார்கள், வலைப்பதிவுகளில் அனல் பறக்கும் வார்த்தைகளை அலுவலக அறைகளில் ஏ.சியை அனுபவித்த படி,ஸ்டார் பக்ஸிலும், காபி டேயிலும் உட்கார்ந்து கொண்டு எழுதுகிறார்கள்.இதெல்லாம் தேனீர் கோப்பைக்குள் நடக்கும் புரட்சி. இங்கே வீராவேசமாக பின்னூட்டம் போட்டுவிட்டு தலால் தெரு பங்கு சந்தை, வால்ஸ்டிரீட் பங்கு சந்தை நிலவரத்தை கவனிக்கப் போய்விடலாம். அப்புறம் இன்னொரு பதிவு, பல பின்னூட்டங்கள்.இதுதான் கணினி புரட்சியாளர்களின் புரட்சிகர அரசியல்.இதுக்குப் இத்தனை அலம்பலும், சவுண்டும், உதாரும் தேவையேயில்லை.
ஔஅசுரன்,
பலரும் சொன்னது போல், நானும் இந்தக் கட்டுரையைப் படித்து வாயடைத்துப் போய் இருக்கிறேன். ஆனால், அழகிய ராவணன் கேட்பது போல், இந்த மக்களுக்கு நாம் செய்யவேண்டியது என்ன?, எப்படிச் செய்ய முடியும் என்பதைப் பற்றியும் விரிவாக எழுதுங்களேன்..
//இப்படிக் கேவலாக உளராமல்,
பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் டோண்டு!//
கேவலமாக உளறுவது நீங்கள்தான் அசுரன். ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டு அதன் விளைவாக தான் விழுங்கிய போலந்தின் கிழக்குப் பகுதிகள் இன்னும் ரஷ்யாவிடம்தான் இன்றும் உள்ளன என்பதை அறிவீர்களா?
//இந்த நிலையில் உலகில் பாசிசம் தோற்கடிக்கப் படவேண்டும் என்கிற நோக்கில் தற்காலிகமாக விடுதலை போராட்டங்களை நிறுத்தி வைத்தது அன்றைய இந்திய கம்யூனிஸ்டு கட்சி.//
அந்த முடிவும் சௌகரியமாக 1941-க்கு அப்புறம்தான் செய்தது கம்யூனிஸ்டு கட்சி. அதுவும் சோவியத் யூனியனை காப்பாற்றுவதற்காக செய்தது. அதுவரை ஜெர்ட்மனிக்கு சாதகமாகத்தான் பேசிவந்தது இந்தியாவிலும்.
1962-ல் கம்யூனிஸ்டுகள் சீனாவை கண்டிக்கத் தவறியதேன்? அவர்கள் கண்ணில் இந்தியாவை விட சீனா முக்கியமாகப் போனதேன்?
இன்னொரு முக்கிய விஷயம், பதிவுக்கு சம்பந்தம் இன்றி பேச ஆரம்பித்தது நீங்கள்தான் என்பதை இப்போது நான் இட்ட முதல் பின்னூட்டத்திற்கான உங்கள் எதிர்வினையைப் பார்த்து விட்டு பேசுங்கள். ஆகவே இப்பதிவுக்கு சம்பந்தமாகவே நீங்கள் உளறுங்கள் என்று நான் கூற வேண்டியுள்ளது.
அதெல்லாம் விடுங்கள். அவை பற்றி பேசிக் கொண்டே போகலாம் வேறு இடத்தில். இப்பதிவுக்கு வாருங்கள்.
நீங்கள் மனமுருகி பதிவு போட்டதை விட வேறு என்ன செய்து விட்டதாக மார் தட்டிக் கொள்கிறீர்கள்? நான் பின்னூட்டமிட்டதே உங்கள் இந்த இரட்டை வேட நிலையைக் கண்டித்துத்தான். உங்களை மாதிரி டிராயிங் ரூமில் இருந்து கொண்டு சோஷலிசம் பேசும் பலரை நான் பார்த்துள்ளேன். ஹிந்து ராமும் உங்களைப் போலத்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இங்கே வீராவேசமாக பின்னூட்டம் போட்டுவிட்டு தலால் தெரு பங்கு சந்தை, வால்ஸ்டிரீட் பங்கு சந்தை நிலவரத்தை கவனிக்கப் போய்விடலாம். அப்புறம் இன்னொரு பதிவு, பல பின்னூட்டங்கள்.இதுதான் கணினி புரட்சியாளர்களின் புரட்சிகர அரசியல்.இதுக்குப் இத்தனை அலம்பலும், சவுண்டும், உதாரும் தேவையேயில்லை.//
யாருப்பா இந்த அனானி, சும்மா நச்சுன்னு எழுதுனவங்களையும் பின்னூட்டம் போட்டவங்களையும் நெத்தியடி அடிச்சுது? வாழ்த்துக்கள்!!!
அதிலும் அந்தக் கடைசி வரி தூக்கலோ தூக்கல், வாரலோ வாரல்!!!
தமிழ் செல்வன்:
சரி, இதற்கு என்னதான் தீர்வு?
நண்பரே... பக்கம் பக்கமாக ப்ரச்சினைகளை எழுதுகின்றீர். தீர்வாக என்ன இருக்க முடியும்? அந்த தீர்வை செயல்படுத்த யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு உள்ளது என்றும் சொல்லுங்களேன்.
அனானி,
// புரட்சி என்பது அலுவலக நேரத்தில் கணினியின் விசைப்பலகையில் பிறப்பதில்லை.//
அப்படிச் எங்கும் சொன்னதாக நினைவும் இல்லை!
மேலும் உள்ளே குமுறும் குற்ற உணர்ச்சியைத் தனித்துக் கொள்ளவோ, சமூக அரிப்பை சோரிந்து கொள்ளவோ இனையத்தில் எழுதவும் இல்லை.. தமிழ் இனைய உலகத்தில் எழுதி தீர்ப்பது புரட்சியைத் துரிதப்படுத்தும் ஒரு காரணியும் அல்ல. உயர் நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினர் இங்கே பார்ப்பனிய அரசியலும் பிழைப்புவாத அரசியலும் மட்டும் தெரிந்த ஒரு கூட்டமாக இருந்த இடத்தில் மாற்று அரசியலின் பார்வைக் கோனத்தை முன்வைக்க வேண்டிய கட்டாயம் தான் இங்கே எம்மை எழுத வைத்துள்ளது!
//உழைக்கும் மக்கள் தலித் அதாவது ஜாதிய அமைப்பின் கடைசிப் படியில் இருப்பவர்கள் என்று கொண்டால், என்.ஜி.ஒ மூலம் உதவி வீசும் இந்திய,பன்னாட்டு பெருமுதலாளிகள் பார்ப்பனர்கள்,
ஐ ஐந்திலக்க சம்பளம் வாங்கும் புரட்சியாளர்கள், அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இந்த புரட்சியாளர்களை பாராட்டும் டாலர் புரட்சியாளர்கள், முதலைக் கண்ணீர் விடும் உயர் மத்தியதர
வர்க்கம் - இடை நிலை சாதிகள். இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் சுரண்டுகிறார்கள். இதில் சரவண பவன் அண்ணாச்சியும் உண்டு, அம்பானியும் உண்டு. நாளைக்கே அம்பானியும், அண்ணாச்ச்சியும் கூட்டுச் சேருவார்கள் அது இருவருக்கும் இன்னும் சுரண்ட உதவுமென்றால்.வணிகர் சங்க வெள்ளையன்கள் அவர்களுக்கு முடிந்தவரை சுரண்டினால், அம்பானியும், வால்மார்ட்டும் அவனவனால் முடிந்த அளவிற்கு சுரண்டுவேன் என்கிறான். யார் சுரண்டினாலும் இந்தியாவில் கீழ்மட்ட உழைக்கும்
வர்க்கத்திற்கு கிடைக்கப் போவது ஒன்றுதான்.
அவர்கள் பெயரைச் சொல்லி யார்யாரோ அரசியல் நடத்துகிறார்கள்//
அந்த வர்க்கத்தின் சமூக பொருளாதார காரனிகளை உணராதவர்களால் 'ஆதரித்துக்' கொண்டே சுரண்டத்தான் முடியும்.. எல்லா சண்டாளத்தனமும் பண்ணிக்கொண்டே சிக்னலில் தர்மம் செய்து சொரிந்து கொள்வது போன்றது தான். இன்னும் கொஞ்சம் போனால் ஓரளவு கூட்டம் சேர்த்து ஒரு எம்.எல்.ஏ சீட்டு வாங்கித் தர முடியும். அதற்கு மேல் அவர்களின் விடுதலைக்கு ஒன்றும் செய்து விட அவர்களால் முடியாது தான்.
//அனல் பறக்கும் வார்த்தைகளை அலுவலக அறைகளில் ஏ.சியை அனுபவித்த படி,ஸ்டார் பக்ஸிலும், காபி டேயிலும் உட்கார்ந்து கொண்டு எழுதுகிறார்கள்.இதெல்லாம் தேனீர் கோப்பைக்குள் நடக்கும் புரட்சி. இங்கே வீராவேசமாக பின்னூட்டம் போட்டுவிட்டு தலால் தெரு பங்கு சந்தை, வால்ஸ்டிரீட் பங்கு சந்தை நிலவரத்தை கவனிக்கப் போய்விடலாம். அப்புறம் இன்னொரு பதிவு, பல பின்னூட்டங்கள்.இதுதான் கணினி புரட்சியாளர்களின் புரட்சிகர அரசியல்.//
முதலில் நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.
என்னைக் குறிப்பிடுவதாக எடுத்துக் கொண்டே பதிலளிக்கிறேன் -
மேலே சொன்னதனைத்தும் நான் செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் 'பக்கத்தில்'!? இருந்து கவனமாக கவனித்திருக்கிறீர்கள் ;-)
நன்று!
மேலே நான் சொன்னபடி எமது அரசியல் கணிணித் திரைக்குள் மட்டும் நடப்பதல்ல என்பது ஒரு புறமிருக்க, இங்கே நடக்கும் பார்ப்பனிய, ஏகாதிபத்திய அடிவருடி ஆதரவு, எழுத்துக்களுக்கும் பதிவுகளுக்கும் எதிர்ப்பு தேவையில்லை என்கிறீர்களா?
அது மட்டுமின்றி நான் எங்காவது இனையத்தில் புரட்சி மட்டுமே எனது ஒற்றை லட்சியம் என்று சொல்லி இருக்கிறேனா?
//.இதுக்குப் இத்தனை அலம்பலும், சவுண்டும், உதாரும் தேவையேயில்லை//
வேணும்னா ஒன்னு பண்ணலாம். நீங்களும் வாங்க இங்க நிறைய பேர் தேசபத்தி வந்தே மாதர பஜனை பாடிக்கிட்டு இருக்காங்க, நாம ரெண்டு பேரும் சேர்ந்து அதுக்கு சிங்குச்சா அடிக்கலாம்.. அப்புறம் தேனீர் கோப்பைக்குள் தடுமாறி விழுந்த புரட்சியை எப்படி மீட்பது என்று ஒரு டீயைப் போட்டுக் கொண்டே பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.
நல்லாதான் எழுதறீங்க .. இந்த பாவர்டிய குறைக்க நீங்க என்ன செஞ்சீங்க - அடுத்தவன குறை சொல்றத தவிர?
அசுரன்,
நட்சத்திரவார முதல் பதிவின் அறிமுகத்தைப் படித்தப்பிறகு கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய பதிவுகளின் வாரம் என்று முடிவுக்கு வந்துவிட்டேன்.
நீண்ட பதிவாக இருந்ததால் பணியிடையில் நிதானமாகப் படிக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் முழுமூச்சில் படிக்கத் தோன்றிய பதிவு இது.
எத்தனை பக்கங்கள் எழுதினாலும் ஏழையின் அல்லது உழைக்கும் வர்க்கத்தின் (இரண்டுமே ஒன்றுதான்) பெருமூச்சை சொல்ல முடியாது.
1) உழைப்பவனின் வியர்வைத்துளி நிலத்தில் விழும்முன் ஊதியத்தைக் கொடு.
2) மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான்.
3) பாடுபட்டு நீரிறைத்து விவசாயம் செய்த செல்வத்திற்கான ஜகாத், இயற்கையாகவே விளைந்த விளைச்சலுக்கான ஜகாத்தைவிடக் குறைவு.
என உழைப்பையும் இறை வழிபாட்டையும் இணைத்தே இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இவையெல்லாம் உங்களுக்கு நன்றியுணர்ச்சி உண்டா?
என்று பொட்டில் அடித்தாற்போல் கேட்டவுடன் சொல்லத் தோன்றியதால் சொல்லி விட்டேன்.
வாழ்த்துக்கள் அசுரரே!
மேலும் உழைப்பவர்களைப் போற்ற ?!பொங்கல், மேதினம் என்று வருடத்தில் ஒருசில நாட்களில் மட்டும் கவுரப்படுத்தி மற்ற நாட்களில் உழைப்பை உறிஞ்ச ஆயத்தமாகும் முதலாளியத்துவ சம்பிரதாயம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
நட்சத்திர வாரத்திற்க்கு வாழ்த்துக்கள்.
தோழர் பி. ரயாகரனின் வாழ்த்துக்களுக்கு நன்றி,
உங்களது வாழ்த்து என்னை தொடர்ந்து ஊக்குமுடன் எழுதச் செய்யும்
கட்டுரையை தமிழ்சர்க்கிளில் மறுபிரசூரம் செய்தமைக்கு நன்றிகள்.
புரட்சிகர வாழ்த்துக்கள்,
அசுரன்
//இந்த வார நட்சத்திரத்திற்கு பாராட்டுக்கள்.
மிக நீண்ட கட்டுரையை இட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலை மாறிவருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.//
மஞ்சூர் ராசாவின் வாழ்த்துக்களுக்கு நன்றி,
என்னவிதமான மாற்றம்? விவசாயத்தை விட்டு விட்டு லட்சக்கணக்கில் நகரங்களுக்கு அத்து கூலிகளாய வந்து நவீன நாடோ டிகளைச் சொல்கிறீர்களா?
அன்றாடம் மருத்துவ செலவுக்கும், படிப்பு செலவுக்கு கஸ்டப்படும் அடிபப்டை வசதியில்லா தொழிலாளர்களைச் சொல்கிறீர்களா?
இந்தியாவில் ஒரு நாளில் எட்டு ரூபாயில் வாழ்க்கை நடத்துபவர் அரசு புள்ளிவிவரப்படியே 30% மேல் உள்ளதைச் சொல்கிறீர்களா?
லட்சங்களில் இறந்த விவசாயிகளை சொல்கீறீர்களா?
60% இந்திய குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக இருப்ப்பதை சொல்கிறீர்களா?
நல்ல தண்ணீர் கிடைப்பவர்களின் சதவீத கணக்கு படு பாதாளத்திற்க்கு குறைந்ததை சொல்கிறீர்களா?
கல்வி தனியாராகி தவிப்பதை சொல்கிறீர்களா?
அரசு புள்ளிவிவரப்படியே 1977 - 1988 இடைப்பட்ட காலத்தில்தான் வறுமை குறைந்தது என்ற மாற்றத்தை சொல்கிறீர்களா?
உணவு இறக்குமதி செய்யும் வல்லரசு முன்னேற்றத்தை சொல்கிறீகளா?
எதை மாற்றம் என்று சொல்கிறீர்கள்?
தொலைக்காட்சியும், செல்பேசியும், நவீன போக்குவரத்து சாதனங்களும் முன்னேற்றம் எனில் அன்றைய பிரிட்டிஸ் காலனியாதிக்கம் இந்தியாவை முன்னேற்றியது என்றே சொல்லலாம்.
உண்மையில் அடிபப்டை வசதிகளான, ஆரோக்கியமான உணவு, நல்ல குடிநீர், இருப்பிடம், பணி நிரந்தரம். கல்வி, மருத்துவம் இவைதான் ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் அளவுகோல். இந்த அம்சத்தில் ஐநா புள்ளி விவரப்படியே இந்தியா போன ஆண்டு அதற்க்கு முந்தைய ஆண்டை விட பத்து தகுதிகள் இறங்கி போயுள்ளது.
ஒருவேளை இந்த இழி நிலையைத்தான் மஞ்சூர் ராசா மாறி வருகிறது என்று சொல்கிறாரோ? அல்லது அவரது சொந்த வாழ்க்கை மாற்றங்களைச் சொல்கிறாரா?
அற்ப மனிதர்கள் தாம் வாழும் குட்டையின் விளிம்பிலிருந்தே தமது உலக கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.
அசுரன்
ஆழியுரானின் வருகைகளுக்கு கருத்துக்களுக்கும் நன்றிகள்,
இது வெறுமனே வருத்தப்படுவதை தாண்டி இந்த பிரச்சனைகளுக்கு பின்னால் உள்ள அரசியல் குறித்து ஆராய்ந்து புரிந்து கொண்டு செயல்படுவதற்க்கான நேரம்.
**************
சில பொச்சரிப்பு பாண்டியர்கள் நாம் இந்தியாவின் அடிமை நிலை குறித்து பேச்வே கூடாது என்று தடை விதிக்கிறார்கள். என்ன செய்ய எங்கே யுப்பி வர்க்கமும் கூட சுய உணர்வு பெற்று இந்திய விடுதலைக்கு குரல் எழுப்பி விடுமோ என்ற பயம்தான் இது போல காப்பி கோப்பை புரட்சி என்றெல்லாம் அபத்தமாக பேசச் சொல்கிறது. ஒரு சுரண்டல் சமூகத்தில் ஒவ்வொருவரும் சுரண்டியே தனது வாழ்க்கையை நடத்துகீறார்கள். சுரண்டி வாழ்கிறோம் என்பதால் சுரண்டல் குறித்து பேசுவதோ அல்லது சுரண்டலிலிருந்து மக்களை விடுவிப்பது குறித்து விவாதிப்பதோ, செய்லபட அழைப்பதோ தவறு என்பது உண்மையில் சுரண்டலை காகக் விரும்பும் காவாளிகளின் வார்த்தைகளே. இங்கும் அது போல புலம்பிச் சென்றூள்ள காவாளிகளூக்கு இதே போன்ற கேள்விகளுக்கு பல முறை பதில் சொல்லியும் ஆகிவிட்டது. திருட்டு பயல்கள். அதனை உள்வாங்கமலேயே திரும்ப திரும்ப தமது பொய்களை சொல்லி வருகிறார்கள். தமது பிஸ்கேட் நன்றிகளை நன்றாக குலைத்து, வாலை ஆட்டி வெளீப்படுத்துகிறார்கள். அடிமை நாய்கள்.
அசுரன்
நுகர்வே மதம், நுகர்வோனே கடவுள் என்று ஒரு அடிவருடி எழுதியுள்ளது. உன் கடவுள் என் கடவுள், உன் பாதை என் பதை என்று ஒரு மசிரும் இல்லை என்பது போல தனது பதிவின் தலைப்பில் ரஜினி போல எழுதி வைத்துள்ள இவர்தான் அதே கழிசடை ரஜினி போல தனது டாலர் பிழைப்பு என்று வரும் போது என் வழி நுகர்வு வழி என்று எழுதுகிறார். இது போல முனைக்கு பின் மாற்றிப் பேசுவது, அதை சுட்டிக் காட்டி கேலி செய்தால் கூட எதுவுமே நடவாதது மாதிரி மானங்கெட்டு திரிவதெல்லாம் அமெரிக்க படிப்பு அவருக்கு கற்றுக் கொடுத்தவையாய் இருக்கும்.
அது சரி, இந்தியாவில் இவர் சொல்லும் நுகர்வோன் எத்தனை சதவீதம் என்பதனையும் எழுதி, இந்தியாவில் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் அதிகரித்திருப்பதை மறுத்த அவரது முந்தைய பொய்யுரைகள் குறித்து சேர்த்தே அவர் எழுதியிருக்கலாம். ஆனால் அது போன்றதொரு நேர்மையான நடைமுறையை இதுவரை எங்குமே அவர் காட்டியதில்லை. எனவே இந்த முறையும் வெற்று பிரச்சாரம் அளவில் தனது நிலைப்பாடுகளை காபந்து செய்யும் பரிதாபகரமானதொரு நிலையில், மானங்கெட்ட நிலையில் இருக்கீறார்....
அசுரன்
என்னுடைய கருத்தை ஒட்டியே அனைத்தும் உள்ளது! நன்றி, தொடரட்டும் தங்களது பதிவுகள்! வாழ்த்துக்கள்!
I have heared of Writing with spark.
but here is where i see that.
Post a Comment