இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1
இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்!
ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. "பொதுச் சொத்தின் அவலம்" (The Tragedy of the commons) என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.
1968 டிசம்பரில் 'சயின்ஸ்' என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளிவர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது. இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது.
ஹார்டின் முன்வைக்கும் "அறிவியல் பூர்வமான" ஆய்வின் முடிவுகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்:
"இந்த உலகின் வளங்கள் வரம்புக்குட்பட்டவை. எனவே அவற்றை நுகரும் மக்கத்தொகையும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்க முடியும். ஆனால் ஏழைகள்தான் வகைதொகையின்றி பெற்றுத் தள்ளுகிறார்கள். வேண்டுகோள்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்குரிய "தண்டனை" வழங்கப்பட வேண்டும். பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினி கிடந்து சாகவேண்டியுதுதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
பொதுச் சொத்து என ஒன்று இருப்பதனால் தான் இப்படி உருவாகும் கூட்டம் அதனை நாசமாக்குகிறது. எனவே பொதுச் சொத்துக்களை, ஆறு, கடல், காடு போன்றன தனியாருக்கு விற்றுவிடலாம் அல்லது அவற்றைப் பயன்படுத்தும் உரிமை குறிப்பிட்ட அளவு சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்க அவற்றை ஏலம் விடலாம். பொதுச்சொத்தின் அழிவா தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்" என்று கூறுகிறார் ஹார்டின்.
கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனத்தில் ஏளனம் செய்து ஒதுக்கிய மால்தஸ் பாதிரியின் மக்கள் தொகைக் கோட்பாடுதான் ஹார்டின் முன் வைக்கும் "அறிவியல்" ஆய்வின் வழிகாட்டி எனினும் இதனை "இன்னொரு அமெரிக்கக் குப்பை" என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது. இந்தக் "குப்பை" தான் இன்று உலகவங்கியின் பைபிள். உலக வங்கியின் ஆணைக்கிணங்க மகாராட்டிர அரசு கொண்டு வந்துள்ள "நீர்வள ஒழுங்குமுறைச் சட்டம்" என்பதே "ஹார்டின் சட்டம்" தான்.
"தனது சொத்தாக இல்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்கமாட்டான். இது மனித இயல்பு எனவே இயற்கை வளங்களைத் தனிச் சொத்தாக்குவது ஒன்றுதான் அவற்றைப் பாதுகாப்பதற்குகந்த அறிவியல் பூர்வமான வழி" என்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள்" |
"மாநிலத்தின் நீர்வளங்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை முதலாளிகள் அதிகாரிகள் வல்லுனர்கள் அடங்கிய மூவர் குழுவிடம் ஒப்படைப்பது ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு பாசன வரி ரூ. 8000. இரண்ரு பிள்ளைகளுக்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 12000" என்ற விதிமுறைகளின் பொருள் வேறேன்ன?
"எனக்குப் பிள்ளையில்லை நிலமும் இல்லை. அரசாங்கம் எனக்கு நிலம் தரப்போகிறதா?" என்று மகாராட்டிர அரசை நோக்கிக் கேள்வி எழுப்பினார் ஒரு விவசாயி. உடைமைகள் ஏதுமற்ற இந்தப் பாமர விவசாயியின் கேள்வி உலக முதலாளி வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலமாக்குகிறது. நீர்வளத்தைப் பாதுகாப்பதோ இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதோ உலக முதலாளிகளின் நோக்கமல்ல அவற்றைத் தங்களது தனிச் சொத்தாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது வேட்கை.
"உங்களுக்கு வேலை கொடுப்பதற்க்காகத்தான் நான் ஆலை தொடங்குகிறேன்" என்று தொழிலாளியிடம் கூறும் இந்தப் பரோபகாரிகள் "இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு"த்தான் அதனைத் தாங்கள் சொத்தாக மாற்றிக் கொள்ள விரும்புவதாக நம்மிடம் சொல்கிறார்கள்.
"இது பேராசை அல்ல இயற்கையைப் பாதுகாப்பதற்க்கு இதுதான் அறிவியல்பூர்வமான வழி" என்றும் நமக்கு விளக்கமும் சொல்கிறார்கள்.
"தனக்கு சொந்தமில்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்க மாட்டான் ஏனென்றால் தனிச் சொத்தைச் சேர்ப்பதுதான் மனிதனின் இயல்புணர்ச்சி. எனவே பொதுச் சொத்தான இயற்கையைத் தனிச் சொத்தாக்குவதொன்றுதான் இயற்கையைப் பாதுகாப்பதற்கான வழி" என்பதே முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் பன்னாட்டு நிறுவனங்களும் முன் வைக்கும் வாதங்கள்.
சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்புணர்ச்சி! பொதுச் சொத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு முதலாளித்துவம் முன்வைக்கும் "அறிவியல் பூர்வமான" இந்தக் காரணத்தைத்தன் பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பதற்க்கும் முதாலாளித்துவம் பயன்படுத்தி வருகிறது. கம்யூனிசத்தை எதிர்ப்பதற்குப் பயன்பட்ட இந்தக் காரணம் இன்று தேசியத்தை எதிர்ப்பதற்கும் உலகின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் முதலாளித்துவ சர்வதேசியத்தை நியாயப்படுத்தவும் ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப் படுகிறது.
பொதுச் சொத்தைச் சூறையாடத் தூண்டும் இதே "இயல்புணர்ச்சி"தான் கோடிக்கணக்கான சிறு உடைமையாளர்களின் தனிச் சொத்தைச் சூறையாடுமாறும் பன்னாட்டு முதலாளிகளைத் தூண்டுகிறது.
எனவே, முதலாளித்துவச் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக வீரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது. |
எனவேதான், தண்ணீர் முதல் கடல், காடு, மலை, உயிரணுக்கள், விதைகள் ஈறான அனைத்தையும் தனியார்மயமாக்கும் ஏகாதிபத்திய வெறித்தனத்தை இன்று கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி கம்யூனிஸ்டு அல்லாத பலரும் எதிர்த்துப் போராடுமாறு தள்ளப்படுகிறார்கள்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற அடிப்படையில் இத்தகைய போராட்டங்கள் வரவேற்க்கப்பட வேண்டியவையெனினும் இவர்கள் முன்வைக்கும் மாற்றுகள் பலவீனமானவை, முரன்பாடானவை. முதலாளித்துவ சொத்துடமையை இவர்கள் ஏற்றுக் கொள்வதால் தற்போதிருக்கும் நிலையை தக்க வைப்பது, சிறு தொழில் மற்றும் சிறு உடைமைகளைப் பாதுகாப்பது, மரபுரிமைகளைக் காப்பது என்ற பல கோணங்களிலேயே இந்த மாற்றுகள் முன்வைக்கப்படுகின்றன.
சூழலியம், புவி ஜனநாயகம், மையப்படுத்துதல் எதிர்ப்பு, மரபுக்குத் திரும்புதல் போன்றவை எவையும் முதலாளித்துவத்தைப் தகர்ப்பது பற்றிப் பேசுவதில்லை. "சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்பு" என்று கூறும் முதலாளித்துவத்தை இவர்கள் யாரும் சித்தாந்த ரீதியில் கேள்விக்குள்ளாக்குவதில்லை. மாறாக, வெவ்வேறு விகிதங்களில் அந்தக் கருத்துடன் உடன்படுகிறார்கள்.
ஆனால், "சொத்துரிமை மனிதனின் பிரிக்கவொண்ணாத உரிமை" என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால் சொத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் உரிமை, அதாவது அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் உரிமையும் மேற்படி பிரிக்கவொண்ணாத உரிமையின் அங்கமாகி விடுகிறது.
எனவே, முதலாளித்துவச் சொத்துடமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.
*************
அனைவரும் அறிந்த ஒரு உதாரணத்திலிருந்து தொடங்குவோம். நகராட்சிக் குழாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. குடம் நிறைந்து தண்ணீர் சாலையில் ஓடுகிறது. ஒரு வழிபோக்கர் குழாயை மூடிவிட்டுச் செல்கிறார். அவர் அந்த குழாயின் உரிமையாளர் அல்ல.
விளைந்த பயிரை மாடு மேய்ந்து கொண்டிருக்கிறது. அந்த வழியே செல்லும் விவசாயி அதனை விரட்டிவிட்டுச் செல்கிறார் அவர் அந்த நிலத்தின் உடைமையாளரல்ல.
தண்ணீரின் பயன் மதிப்பையும் தானியத்தின் பயன் மதிப்பையும் அவர்கள் உணர்ந்திருப்பத்ன் வெளிப்பாடுதான் அவர்களது நடவடிக்கைகள். ஒழுகும் குழாயைக் காணும் ஹார்டினும் பதறுகிறார். சுமார் எத்தனை லிட்டர் தண்ணீர் வீணாகியிருக்கும் என்று மதிப்பிட்டு அதனை 12 ரூபாயால் பெருக்கிப் பார்க்கிறார். தண்ணீருக்கு முதலாளித்துவம் நிர்ணயித்திருக்கும் சந்தை மதிப்பின்படி சுமார் 1200 ரூபாய் தண்ணீர் வீணாகியிருக்கிறது. "தனியாமயம்தான் இதற்குத் தீர்வு" என்று உடனே குரல் கொடுக்கிறார்.
மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும், மனிதவளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாராபட்சம் காட்டுவதில்லை. பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்ரு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு? ஒரத்தப்பாளையம் கழிவுநீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு? |
வழிப்போக்கனின் பார்வையில் அங்கே வீணாகிக் கொண்டிருந்தது பயன் மதிப்புமிக்க தண்ணீர். எனவேதான் அவர் குழாயை மூடுகிறார். ஹார்டினின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் குழாயை மூடுவதில்லை.
ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரை குடத்தில் நிரம்பியிருக்கும் தண்ணீருக்கும் வழிந்து தெருவில் ஓடும் தண்ணீருக்கும் வேறூபாடு இல்லை. ஏனென்றால் அது விலைமதிப்பு நிர்ணயிக்கப்படாத நகராட்சித் தண்ணீர், இலவசக் குடிநீர். சரக்காக மாற்றப்படும் வாய்ப்பில்லாத தண்ணீர், குடத்தில் நிரம்பினாலும் தெருவில் ஓடினாலும் அது அவர்களைப் பொருத்தவரை வீணானதுதான்.
மனிதன் உள்ளிட்ட இயற்கை அனைத்தையுமே முதலாளித்துவம் பண்டமாகவும், உற்பத்திச் சாதனமாகவுமே பார்க்கிறது. எனவே அத்தகைய பண்டம், தான் மட்டும் நுகரக் கூடியதாகவோ, தான் மட்டுமே சுரண்டக்கூடியதாகவோ, தன்னால் விற்கப்படக் கூடியதாகவோ இல்லாதவரையில் எந்த ஒரு பொருளின் பயன் மதிப்பையும் அது பொருட்படுத்துவதில்லை.
தொடரும்..............
kUijad;
Gjpa fyhr;rhuk;- nrg;lk;gH 2005
********************
புதிய கலாச்சாரம் - செப்டம்பர் 2005 இதழில், மருதையன் எழுதி பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இங்கு இரண்டு பகுதிகளாக பதிக்கப்படும். மேலே காண்பது முதல் பகுதி.
28 பின்னூட்டங்கள்:
I am not able to read the article. Please check.
Sivabalan,
This is not a Unicode article. The font used is Bamini. Which is available at http://www.tamilcircle.net.
Please download and install the font in your system.
sorry for the inconvenience.
I would resolve this next morning.
Thanks and Regards,
Asuran
I have installed it. I think I need to restart the computer.
Anyway thanks alot for reply.
Sivabalan,
Thanks for the interest shown. Next article I would avoid these kind of inconvenieces.
I terribly sorry.
With Concern,
Asuran.
அற்புதமான எழுத்து. தொடர்ந்து எழுதி வாருங்கள் அசுரன்.
Asuran
I am sorry, still it is not working. Kindly check.
சிவபாலன்,
பதிவு இப்பொழுது சரிப்படுத்தப்பட்டுவிட்டது. யுனிகோட் முறையில் மாற்றப்பட்டுவிட்டது, இனிமேல் படிப்பதற்க்கு சிரமம் இருக்காது.
நன்றி,
அசுரன்
விடாது கறுப்பு,
தங்களது தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி
அசுரன்
விடாது கறுப்பு,
அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் ம.க.இ.க செயலாளர். மருதையன்.
இந்த பாராட்டுக்கள் அவருக்கு உரித்தன.
இந்த வார "ஆனந்த விகடனில்", அவரது, மக்கள் கலைகளின் அழிவும், அதில் பொதிந்துள்ள மனித சமுதாயத்தின் சிதைவும் பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது.
படித்து பாருங்கள்.
நன்றி,
அசுரன்
If capitalism is against Nature what is the record of Socialism or
Communism.Look at the erstwhile USSR or China.China at Mao's times also disregarded environmental protection.
அஹா, மிக அருமையான முறையில் நன்கு இந்த விசயத்தை கிரகித்து அதன் விகாரங்களை அம்பலப் படுத்தி இருக்கிறார், இந்த கட்டுரையாளார்.
நீர், நிலைகள் தனியார் மயமாக்கள் ஒரு பெரிய சோகம். இது நடந்தேறினால். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு சில பகுதிகளில் மிக மும்ரமாக நடத்தப் பட்டு, அது மக்களையும் பாதித்து, தனி நபர்கள் தனது வீட்டுத் தோட்டத்தில் கிணறு வெட்டக் கூட அனுமதி கிடைக்காத வண்ணம் இது போன்ற தனிமய சுரண்டல்கள் வெற்றிகரமாக நடந்தேறி விட்டது.
இது போன்ற இன்னல்கள் நகர் புறங்களில் வாழும் மக்களை காட்டிலும் கிரமப் புறங்களில் வாழும் மக்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. நகரப்புறங்களில் உள்ள மக்கள் இதனைப் பற்றிய ஒரு ப்ரஞையும் அற்ற நிலையில் கூட தன் வாழ் நாளை வாழ்ந்து சாகலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இந்த ஏகாதிபத்திய சுரண்டல்கள் அவர்களை அடிமையாக்கி, பணம் பெருக்கி மாத மாதம் 'பில்"கள் கட்டுவதிலேயே காலத்தை கடத்துவதால். இந்த இயற்கை வள தனியர்மயமாக்கள் அவர்களின் கவனத்தை ஈர்ப்பது கிடையாது.
ஆனால் வளர்ந்த நாடுகளில் வாழும் கிரமப்புற மக்கள் ஆறுகளையும், வனங்களையும் தனியார்மயமாக்கி அதானல் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு அது இன்று பெரிய அளவில் போரட்டங்களாக எங்கெல்லாம் WTO summit நடந்து ஏனையெ நாடுகளுக்கும் இத் திட்டங்களை அமுல் படுத்தக் கூறி திணிக்கும் பொருட்டு இவர்கள் தெருவில் நின்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்து கிறார்கள். இது முன்னமே பாதிக்கப் பட்டவர்களின் குரல்.
நாம் இப்பொழுதுதான் இவ் அழிவுப் பாதையை நோக்கி நடந்து கொண்டு இருக்கிறோம். இந்தப் பதிவு நீண்டு கொண்டே போவதால். தனியாக பதியலாம்மென்று எண்ணுகிறேன். மேலும் உங்கள் பதிவையும் அங்கு "Tag" பண்ண விடுவீர்கள் என்ற எண்ணத்துடன்.
அன்பு,
தெகா.
அனானி,
முதலாளித்துவத்தின் அடுத்த கட்டம்தான் சோசியலிசம். அதாவது முதலாளித்துவத்தின் அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் உள்ளிழுத்து கொண்டு, அந்த தொழில்நுட்ப வளர்ச்சிகேற்ற சமூக கட்டமைப்பை அடைவதுதான் சோசலிசம்.
முதலாளித்துவத்தின் அதீத தொழில்நுட்ப வளர்ச்சி சமூதாயம் அனைத்தையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்யும்(திருப்பூர் பனியன், ford car factory). ஆனால் அதன் விளைபொருளை(capital) ஒரு தனிமனிதன் அல்லது சிறு கூட்டம் அனுபவிக்க செய்யும்.
டிஸ்ட்ரிபுயசனில் உள்ள இந்த முரன்பாட்டை களைந்து சமுதாயம் முழுமைக்குமான உற்பத்தி அதை சமுதாயம் பயன்படுத்துவது என்ற கட்டம்தான் சோசலிசம்.
இந்த நிலையை அடைந்த பிற்பாடு எந்த ஒரு விசயத்தையும் முடிவு செய்வது லாபமாக இருக்காது. மாறாக, சமூகத்தின் நலனாக இருக்கும்.
அதனால் இப்படி ஒன்றுபட்டு ஒலிக்கும் மனித சமுகத்தின் குரல் இயற்க்கையுடனான முரன்பாடுகளை உடனே உணர்ந்து தன்னை திருத்திக்கொள்ளும். அது சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம்.
இயற்கைக்கும் மனிதனுக்குமான முரன்பாடுதான் மனித அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அது எக்காலத்திலும் இருக்கும். அதை நட்பாக பயன்படுத்துவதா அல்லது பகையாக முட்டிமோதுவதா என்பதில் சொசலிசம் மட்டுமே தீர்வாக நிற்கிறது.
இந்த விசயத்தைத்தான் இந்த கட்டுரையின் இரண்டாவது பகுதி விளக்குகிறது. அதையும் படித்துப் பார்த்து தங்களது விமர்சனத்தை பதிவு செய்யுங்கள்.
தங்களது வருகைக்கு நன்றி
அசுரன்
நல்ல பதிவு போனபார்ட்.. அடுத்த பகுதியை எதிர் நோக்குகிறேன்..
அசுரன்
மிக மிக அருமையான பதிவு.
திரு.மருதையன் அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
இந்த கட்டுரை இங்கே கொடுத்த உங்களுக்கும் மிக்க நன்றி.
அன்பு தெகா,
//. நகரப்புறங்களில் உள்ள மக்கள் இதனைப் பற்றிய ஒரு ப்ரஞையும் அற்ற நிலையில் கூட தன் வாழ் நாளை வாழ்ந்து சாகலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இந்த ஏகாதிபத்திய சுரண்டல்கள் அவர்களை அடிமையாக்கி, பணம் பெருக்கி மாத மாதம் 'பில்"கள் கட்டுவதிலேயே காலத்தை கடத்துவதால். இந்த இயற்கை வள தனியர்மயமாக்கள் அவர்களின் கவனத்தை ஈர்ப்பது கிடையாது.//
மிகச் சரியாகச் சொன்னீர்கள். உறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் சரி.
//இந்தப் பதிவு நீண்டு கொண்டே போவதால். தனியாக பதியலாம்மென்று எண்ணுகிறேன். மேலும் உங்கள் பதிவையும் அங்கு "Tag" பண்ண விடுவீர்கள் என்ற எண்ணத்துடன்.//
என்னிடம் என்ன அனுமதி கேட்டுக் கொண்டு??!! சிறப்பாக செய்யுங்கள். பதிவு போட்டவுடன் எனக்கு தெரியப்படுத்த மறந்துவிடாதீர்கள்.
உங்களது பதிவுகளை உபயோகப்படுத்த நான் உங்களிடம் அனுமதி கேட்க மாட்டேன் :-))
அசுரன்
ஆடு நனையுதேன்னு ஒநாய் அழுததாம். அந்த மாதிரி தான் இருக்கின்றது இவர்களின் கூப்பாடு. அருமையான பதிவு. விழிப்புணர்வை பரப்பும் இந்த மாதிரியான செய்திகளை நிறைய எழுதவும்
வாருங்கள் பொன்ஸ்,
கைப்புள்ள பேரிலேய ஒரு ஆங்கிலப் பதிவு வைச்சிருக்கேன். வந்து பார்த்து(படித்து) கருத்து சொல்லுங்கள்.
சிவபாலன்,
தங்களது பாராட்டுக்கு நன்றி.
பாலசந்தர் கணேசன்,
சிலருக்கு தாங்கள் பேசும்/விரும்பும் மக்களுக்கு பயனில்லாத விசயங்களிலிருந்து திசை திருப்பும் இது போன்ற கட்டுரைகளை கண்டால் இரத்தம் கொதிக்கிறது. என்ன செய்ய..
தங்களது வருகைக்கும் பாராட்டுக்களுக்கும்,
நன்றி.
இந்தக் கட்டுரையை ஒருவர் வலைப்பதிவில் இட்டிருந்தார்.அப்போதே அதை விமர்சித்து பின்னூட்டம் இட்டிருந்தே.கட்டுரையை எழுதியவர் உலக வங்கியின் கொள்கைகளையும்
புரிந்து கொள்ளவில்லை, கார்டினின் கருத்துக்களையும் புரிந்து கொள்ளவில்லை.கார்டின்
குறித்து திண்ணையில் முன் பு எழுதியிருக்கிறேன்.சோசலிச நாடுகளிலும் சூழல் சீர்கேடு
ஏற்பட்டது,ஆனால் தனி உடமை இல்லை.இது ஏன் என்பதே கேள்வி.சுற்றுச்சூழல் சீர்கேட்டினை
குறைப்பதில் முதலாளித்துவ நாடுகள் சில பெரும் வெற்றி பெற்றுள்ளன. இதையெல்லாம்
ம.க.இ.கவினர் புரிந்து கொள்ள முயற்சி செய்ய மாட்டார்கள்.மாவோவின் சீனத்திலும்
சுற்றுப்புற சீர்கேடு இருந்தது. மேலும் சீர்கெடுப்பவர் அதற்கான பொறுப்பு ஏற்க வேண்டும்
என்ற கோட்பாடு நடைமுறையில் இல்லாதததால் இந்தியாவில் சூழல் பிரச்சினைகள்
அதிகமாக உள்ளன.சுருக்கமாகச் சொன்னால் தனி உடமை ஒழிப்பு சுற்றுச்சூழல்
சீர்க்கேட்டினை ஒழிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வரலாறு வேறு
விதமாக உள்ளது. The record of some capitalist countries in
controlling pollution is better
than that of erstwhile USSR,
east european countries and
China.
மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும், மனிதவளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாராபட்சம் காட்டுவதில்லை. பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்ரு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு? ஒரத்தப்பாளையம் கழிவுநீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு?
In India polluter pays principle
is not applied.The example above
may not occur in Switzerland or
Sweden or Germany where the polluter is responsible for the
problem (s)he creates.In other words tougher standards have to be
adhered to.One cannot damage the
ecosystem and or health of people
and get away with that.But in socialist USSR there was utter disregard for environment.The
same was true about Mao's China.
So the problem is not private property or capitalism per se.
It is a deeper problem.Marxists
have debated this.But Puthiya
Jananayagam folks wont bother
to understand that.They are happy
with cliches and slogans.
வாருங்கள் ரவி ஸ்ரினிவாஸ்,
USSR, Maoவின் சீனா இவை இயற்கை சீரழிவை தங்களது நாடுகளில் விரைவுபடுத்தியிருக்கலாம். அவை குழந்தைப் பருவ சொசலிச நாடுகள் என்பதை கருத்தில் கொள்ளவும்.
மேலும் சுற்றுச்சூழல் பிரச்சனை இந்த உலகின் பிரச்சனையாக உள்ளது. அது நமது நாட்டின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல.
ஆனால் உறுதியாக, இயற்கையுடனான முரன்பாட்டை லாபவெறி பிடித்த அமீத உற்பத்தி செய்து வளங்களை அழித்து நாசமாக்கும் முதலாளித்துவத்தால் சரியாக கையாள முடியாது.
வேண்டுமானால் தான் செய்யும் சுற்றுப்புற சீர்கேடுகளை இழிச்சவாய நாடுகளுக்கு விற்க்கலாம். KYOTTA ஒப்பந்தம் தங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
தேவைக்கு உற்பத்தி செய்யும் ஒரு சோசலிச சமூகம் தனது தேவைகளை ஒட்டு மொத்த மனித குலத்தின் நலனுக்கான மாற்றிக் கொள்வதில் பிரச்சனை இருக்காது.
ஆனால் இதை ஒரு முதலாளித்துவ சமூகத்தில் கற்பனைகூட செய்ய முடியாது. அது வேறு ஏதாவது adjustment-யை எதிர்பார்க்கும். it cannot do away with porfit.
லாபம் என்ற tag கேத்ரீனா புயலில் தனது கோரமுகத்தை texas மாகணத்தில் காட்டியது தங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
ஏன் சோசலிச சமூகத்தில் இந்த முரன்பாட்டை கையாள்வது சாத்தியம் என்பதைப் பற்றி இதன் இரண்டாவது பகுதியில் வருகிறது.
இந்த கட்டுரையிலேயே வரும் வரிகள்:
"தனிப்பட்ட தொழிற்சாலையில் ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டமிட்ட உற்பத்தி, ஆனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் அராஜகமான கட்டுபாடில்லா உற்பத்தி".
தங்களது திண்ணை கட்டுரைகள் மற்றும் தங்களது முந்தைய பின்னூட்ட சுட்டிகளை கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்(நானும் திண்ணையில் தேடி எடுக்கிறேன்).
ஐரோப்பிய நாடுகளில் நீங்கள் சொன்ன விசயம் உண்மைதான். ஆனால் சுற்றுச்சூழல் பிரச்சனை ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பிரச்சனை. இவர்களுக்கு(மேற்கு நாடுகளுக்கு) அப்படி ஒரு விசாலமான(?? :-))) பார்வை இருப்பதனால்தான் reader digest போன்ற புத்தகங்களில் புவி சூடேற்றம் சரி என்று சொல்லுகிறார்களோ?
நன்றி,
அசுரன்.
மேலும் சீனா தற்போது ஒரு சோசலிச நாடா என்பதை விவாதிற்குரிய விசயமாக உள்ளது. ரஸ்யா இருந்த காலகட்டமோ சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வு தற்போது உள்ள அளவு பரவலாக இல்லாத சமயம்.
நன்றி,
அசுரன்.
Thanks.I have written a lot on
environmental issues in Thinnai,
partly as a debate with Aravindan
Nilakantan.You will understand a lot if you read John Bellamy Foster's Marx's Ecology (Indian edition is available) or journals like Capitalism,Nature,
Socialism or Monthly Review.Marxists gave importance to development of productive forces at the cost of environment.
The awareness about environmental
issues was there in the USA and
Europe in 1950s and it increased
very much in the 60s and 70s.At
that time publications from soviet union boasted that it was a problem
of capitalism and socialism was the
solution.But in USA and Europe in
the 1970s many measures were taken
and pollution was controlled.In
USSR it became worse.The same was
true of China.So it is meaningless to repeat the flawed arguments again.I am not saying that there are no problems with capitalism.I am arguing that the hypothesis put forth in the article in untenable.Ecology and
environment has been problematic
for Marxists.Can we ignore the
contribution of USSR and China
to the global warming.Why blame
only the USA.
ரவி ஸ்ரினிவாஸ்,
தங்களது புத்தக, இதழ் விவரங்களுக்கு நன்றி படித்து பயன்பெறுகிறேன்.
ஸ்டாலினின் மறைவுக்கு பிற்ப்பாடு அங்கு முதலாளித்துவ மீட்சிக் கட்டம்தான். அதனால்தான் அதை சமூக ஏகாதிபத்தியம் என்று விமர்சனம் செய்தனர் நக்சல்பாரி புரட்சியாளர்கள்.
சீனா விசயத்தில் நீங்கள் அந்த சமூகத்தின் உள்முரன்பாடுகளை கணக்கில் எடுக்காமல் குற்றம் சாட்டுவது சரியா என்று யோசிக்கவும்.
மேலும் இங்கு சீனாவா, ரஸ்யாவா, அமேரிக்காவா என்று கட்டுரையில் எங்கும் குறீப்பிட்டு காட்டவில்லை. தத்துவ ரீதியாக ஏகாதிபத்திய சமூக கட்டமைப்பிலும், சோசலிச சமூக கட்டமைப்பிலும் சுற்றூச்சூழல் சீர்கேட்டை கையாள்வது பற்றித்தான் கட்டுரை பேசுகிறது.
முதாலாளித்துவ சமூகத்தின் அராஜக உற்பத்தி, லாப வெறி, மூன்றாம் உலக நாடுகளை கடுமையாக சுரண்டி சுற்றுப்புற சீர்கேட்டை உண்டாக்குவது..இதைப் பற்றி கொஞ்சம் பேசுங்களேன். ஏனென்றால் இவைதான் ஊற்றுமூலமாக உள்ளது.
உலக சுற்றுச்சூழல் மாசுபாட்டில் அமேரிக்காவின் பெரும்(60% க்கு மேல் என்று நினைக்கிறேன்) பங்களிப்பை மறுக்கிறீர்களா?
அதை adjust செய்வதற்க்காக ஏழை நாடுகளுக்கு மாசுபாட்டை விற்பதை என்ன சொல்லுகிறேர்கள்?
சோவியத் ரஸ்யா ஒரு சமூகத்தின் தேவைக்கான உற்பத்திக்காக கண்முடித்தனமாக நடந்திருக்கலாம். ஆனால் யாருடைய தேவைகாக. யாருடையா லாப வெறிக்காக அமெரிக்க முதலான மேற்க்கு நாடுகள் மேற்சோன்ன adjustment செய்கிறாகள்?
தங்களது வீட்டை அழகாக வைத்துக் கொள்வதில் எந்த பணக்காரனையும் குற்றம் சொல்லிவிடமுடியாது. அது போல்தான் அமேரிக்கா போன்ற மேற்க்கு நாடுகளின் சுற்றுசூழல் அக்கறை.
நன்றி,
அசுரன்
நல்ல பல கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள் .உங்கள் பணி சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.நன்றி
நல்ல பல கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள் .உங்கள் பணி சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.நன்றி
Dear Ponabert,
First of all my Revolutionary Greetings and valthukkal.
I read some articles in your blogspots.
This is the first time I read a tamilan advocating Marxism Leninism, anti globalisation, ant-privatisation, anti-safronisation etc etc in web.
Also you quoted some articles from Puthiya Kalacharam ( from the great Marithiyan of MA.KA.I.KA)
From your Blogspot I found the link to tamil Aranagam and read Puthiya Jananayagam on web. Though I am a regular addict of these revolutionary magazines I was excited to found them on www. It is very rare to identify people like you having a very good command in Tamil & engllish creative writing.
நன்றி Sree மற்றும் Izzath,
தொடர்ந்து வருகை தந்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டுகிறேன்.
அசுரன்.
Hi.. I am Gomathi.. I use to read these type of articles earlier.. I read on net for the first time.. The article is really mind blowing.. I really want to read much more articles on these topics.. the people who debate against these issues should read and understand the cause of the issue and discuss it further.. hand off to the person who wrote it..
Post a Comment