TerrorisminFocus

Tuesday, January 30, 2007

IT தொழிலாளியும் - ஆளவந்தானும் - நம்ம பாமரனும்!

ய்யா, இங்கன எழுதிறுக்கறத நாஞ் சொல்லைய்யா... நம்ம பாமரன் அண்ணாச்சி சொல்றாப்புல. இதுதான் IT துறையின் பொதுவான நிலைமைன்னு(அதாவது கடும் வேலையும், களி வெறியாட்டமும்) நான் நினைக்கலைய்யா. ஆனா இது மிகப் பெரும்பான்மையா அதுவும் குறிப்பா நம்ம BPO கொத்தடிமைக இப்படித்தான் லோல் படுறாங்கய்யா.

நம்ம பாமரன் - குறிப்பா இத சென்னையில நடந்த சில பல ரெய்டுகள், அதையடுத்து IT தொழிலாளர்களின் பிரதிநிதிகளும், அவர்களை சுரண்டுபவர்களின் பிரதிநிதிகளும் இரவு நேர வாழ்க்கைக்கு, கேளிக்கைக்கு ஆதரவாக கோரிக்கை வைத்த தருணத்தை மனதில் கொண்டு - எழுதியது எனத் தெரிகிறது. IT தொழிலாளி இந்த கோரிக்கை வைக்கிறதுல அவனோட உழைப்பின் களைப்பை போக்கும் தேவை தெரிகிறது. ஆனா அவனோட முதலாளி இந்த கோரிக்கை வைக்கிறதுல எங்க அவன் ஆக்கப்பூர்வமா வேற வகையில தன்னோட ஓய்வ செலவழிச்சு விளிப்படைஞ்சிறுவானோ அப்படிங்கற பயம் தெரியுது.

எது எப்படியாகினும், இது பிற எந்த துறையைச் சேர்ந்தவர்களை விடவும் IT மக்களுக்கு பொருந்தும் என்பதால் இங்க பதியுறேன். காட்டுத்தனமா முட்டி மண்டைய உடைசிக்க எல்லாரையும் கூப்பிடுறேன் சாமி..... வந்து ஜல்லிக்கட்ட பழைய ரத்த களறியோட ஆரம்பிங்க.... (நம்ம பெசல் காளை 'நாடோடி'க்கு சிறப்பு அழைப்பு வைக்க கடைமைப்பட்டுள்ளேன்).

எப்பா..... பெசல்(Special) IT ஜல்லிக்கட்டு விழா ஆர்கனைஸர் அசுரன கொஞ்சம் பாத்து முட்டுங்கபா.... போன தடவ வாங்குன அடியே கொஞ்சம் அதிகந்தான்.

சமீபத்துல ஒரு மெயில் வந்தது சாமி... அதுல கார்ல போற ஒருத்தன் மேல கல்ல விட்டு எறிவான் ஒரு சின்னப் பயபுள்ள. கார நிப்பாட்டி இன்னாடா இப்படி கார கண்டம் ஆக்கிட்டயேடான்னு கேட்டதுக்கு அப்பால அந்த பொடிப்பயபுள்ளயோட சொல்லுவான், அவனோட ஊனமான தங்கச்சிக்கு உதவி செய்றதுக்காக இவன கல்ல விட்டு அடிச்சி நிப்பாட்டுனேன்னு. கட்சில கதையொட மாரல்னு இன்னா சொல்வாங்கன்னா,

நீ வாழ்க்கைல இத்த மாதிரிதான் வேக போயினுக்கிற...

எத்த பத்தியும் கண்டுஹாம போயினுக்கிற....

உம் பொழப்ப மட்டும் பாத்துனே போயினுக்கிறா... (அத்து கூட சோக்கயில்லா... கொஞ்சம் செக்காயிகினுதான் கீது)

ஆனா... அப்பாலக்கூடி எவனாச்சும் உம் மண்டயில கல்லலா அடிச்சு நிப்பாட்டும் போது இத்த நீ ஃபீல் பன்னக் கூடாது. இத்ததான் பாமரனும் சொல்றாரு. அவ்வள்வுதாம்பா....

ஸ்டார்ட் மூசிக்....

அசுரன்

Related Article:

#1 அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!

44 பின்னூட்டங்கள்:

said...

சில நாட்கள் முன்னாள் இதே தலைப்பில் விஜய் டி.வியில் நடந்த ஒரு விவாதத்தில் பாமரன் முன் வைத்த கருத்துக்கள்!

இன்று ஐ.டி தொழில்நுட்பத்துறை மற்ற துறைகளை விட வேலை வாய்ப்பு தருவதில் முன்னனியில் நிற்கிறது. இத்துறை தரும் சம்பளமோ மற்ற துறைகளை விட இரண்டு மூன்று மடங்கு அதிகமானது. இந்தப் பின்னனியில் இந்தத் துறையின் வளர்ச்சி சமூகத்திலும் அதன் கலாச்சாரத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் எப்படிப் பட்ட ஒன்று என்பதைப் பற்றிய விவாதம் இந்த நேரத்தில் அவசியம்!

சரியான நேரத்தில் 'சல்லிக்கட்டுக்கு' ஸ்டார்ட் ம்யீசிக்' கொடுத்த அசுரனுக்கு நன்றி! :))))

இந்த துறையில் இருப்பதால் நான் கவனித்த சில விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். ஐ.டி துறையைச் சேர்ந்த மற்ற பதிவர்களையும் விவாதத்தில் எதிர்பார்க்கிறேன்.

1) இளம் வயதில் - பணம் காசை கையாளும் பக்குவம் வராத இருபதுகளின் ஆரம்ப காலங்களிலேயே - இருபத்தைந்தாயிரம் வரை சம்பளம் பெறும் வாய்ப்பு, இந்த துறையில் உள்ள இளம்தலைமுறைக்கு உள்ளது. இந்த 'சுமையை' இவர்கள் எந்த வகையில் கையாளுவார்கள்? இதற்கு பதிலளிக்கும் முன் - இந்தப் பொடியன்கள் எல்லோரும் பெரும்பாலும் சொந்த நகரங்களில் இருந்து பெருநகரங்களுக்கு நகர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..

2) கூர்கான் / நோய்டா போன்ற நகரங்களின் மால்களில், பப்களில் நான் கவனித்த வரையில் இருபதுகளின் ஆரம்பத்தில் உள்ள இளசுகள் தான் காசை தண்ணீராக செலவு செய்கிறார்கள். வருமானத்தை திட்டமிட தெரியாத பருவத்தின் கோளாரு!!

3) சென்னையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மானவர்கள் காசுக்காக சின்னப் பசங்க ரெண்டு பேரை கொன்னு போட்டு இருக்கிறான்கள். விசாரணையில் செல்போன் வாங்க காசு வேண்டித்தான் இப்படி செய்ததாக சொல்லியிருக்கிறான்கள் - நுகர்வு வெறி என்பது ஐ.டி துறையோடு நின்று போவதில்லை தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பாதிக்கிறது.

4) இரவு வாழ்க்கையினால் பாலியல் சீர்கேடு வருகிறது என்பதைப் பற்றி எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு - தவறு செய்யவேண்டும் என்று நினைப்பவன் - வேலி தாண்ட வேண்டும் என்று நினைப்பவன் எங்கிருந்தாலும் - செய்வான். இங்கே வாய்ப்புகள் அதிகம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

5) வீக் எண்ட் பார்டிகள் என்பது பொதி சுமக்கும் கழுதையின் முன்னே கட்டித் தொங்க விடப்பட்ட - காரெட். ஒவ்வொரு வீக் பார்டியும் ஒரு ரீசார்ஜிங் ஸ்டேஷன் போன்றது.

6) இரவு வாழ்க்கையினால் மாறிப் போகும் ஜீரண சைக்கிள். மற்றும் உடல் கோளாருகள்.

கடைசியா.....

//IT ஜல்லிக்கட்டு விழா ஆர்கனைஸர் அசுரன கொஞ்சம் பாத்து முட்டுங்கபா....//

பாத்தா....!!! எல்லோரும் வந்து நல்லாவே முட்டுங்கையா :))))

said...

என்னா ஒரு பயபுட்டயும் காணும்... ஜல்லிக்கட்டுன்ன உடனே பயந்து அல்லகழண்டு ஓடிட்டானுவலா?

எம்மா நேரந்தான் யாருமே இல்லாத டீக்கடல டீ ஆத்துற மாதிரி நடிச்சுகிட்டெ இருக்குறது.... யாரவது வந்து டீ குடிக்கிற மாதிரியாவது நடிங்கப்பா....

அசுரன்

said...

//1) இளம் வயதில் - பணம் காசை கையாளும் பக்குவம் வராத இருபதுகளின் ஆரம்ப காலங்களிலேயே - இருபத்தைந்தாயிரம் வரை சம்பளம் பெறும் வாய்ப்பு, இந்த துறையில் உள்ள இளம்தலைமுறைக்கு உள்ளது. இந்த 'சுமையை' இவர்கள் எந்த வகையில் கையாளுவார்கள்? இதற்கு பதிலளிக்கும் முன் - இந்தப் பொடியன்கள் எல்லோரும் பெரும்பாலும் சொந்த நகரங்களில் இருந்து பெருநகரங்களுக்கு நகர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..

2) கூர்கான் / நோய்டா போன்ற நகரங்களின் மால்களில், பப்களில் நான் கவனித்த வரையில் இருபதுகளின் ஆரம்பத்தில் உள்ள இளசுகள் தான் காசை தண்ணீராக செலவு செய்கிறார்கள். வருமானத்தை திட்டமிட தெரியாத பருவத்தின் கோளாரு!!

3) சென்னையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மானவர்கள் காசுக்காக சின்னப் பசங்க ரெண்டு பேரை கொன்னு போட்டு இருக்கிறான்கள். விசாரணையில் செல்போன் வாங்க காசு வேண்டித்தான் இப்படி செய்ததாக சொல்லியிருக்கிறான்கள் - நுகர்வு வெறி என்பது ஐ.டி துறையோடு நின்று போவதில்லை தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பாதிக்கிறது.

4) இரவு வாழ்க்கையினால் பாலியல் சீர்கேடு வருகிறது என்பதைப் பற்றி எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு - தவறு செய்யவேண்டும் என்று நினைப்பவன் - வேலி தாண்ட வேண்டும் என்று நினைப்பவன் எங்கிருந்தாலும் - செய்வான். இங்கே வாய்ப்புகள் அதிகம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

5) வீக் எண்ட் பார்டிகள் என்பது பொதி சுமக்கும் கழுதையின் முன்னே கட்டித் தொங்க விடப்பட்ட - காரெட். ஒவ்வொரு வீக் பார்டியும் ஒரு ரீசார்ஜிங் ஸ்டேஷன் போன்றது.

6) இரவு வாழ்க்கையினால் மாறிப் போகும் ஜீரண சைக்கிள். மற்றும் உடல் கோளாருகள்.
//

ராஜவனஜ்,

சரியாகவே சொல்கிறீர்கள்... ஆயினும் இதனை உணருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஐந்திலக்க சம்பளத்தின் பழைய மதிப்பு இப்போ கிடையாது.

IT துறையில் சம்பளம் மாநகரங்களில் ஊதி பெருக்க வைத்துள்ள ஒரு சந்தை இவர்களின் கழுத்தை பிடித்து நெருக்குகிறது.

விலைவாசி உயர்வு முதல் பல்வேறு காரணங்களால் இந்த சம்பளம் ஒன்றும் கிடையாது என்ற நிலையே இன்றுள்ளது.

இது இன்னும் தரம் தாழ்ந்து போகும் முன் விழித்துக் கொண்டால் நல்லது.

இனி வரும் காலங்களில் அமெரிக்க அரசு protectionist பொருளாதாரமாக மாறும் வாய்ப்புள்ளது என்று ஆருடம் சொல்கிறார்கள் சமீபத்திய டாவோஸ் மாநாட்டைப் பற்றி எழுதுபவர்கள்.

இது உறுதியாக இந்தியாவை குறீப்பாக IT துறையை பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. மேலும், இதற்க்கு இணையாக குறை கூலி அன்னியப் பிரதேசங்களும், SEZக்களும் உருவாகி வருகின்றன. இவையும் கூட IT தொழிலாளர்களை கூடிய விரைவில் சுய உணர்வடையச் செய்யும்

அசுரன்

said...

அடங்கொக்கா மக்கா....

நிறய பேரு இந்த பதிவுக்குத்தான் வந்துட்டு போயிறுக்கானுக ஆனா ஒரு பயலும் பின்னூட்டம் போடல.... பாசிடிவா குத்திருக்கறத பாத்தாக்க நாம் சொன்னது சரி சொல்ற மாதிரி தெரியுது....

இப்ப இங்க இத சொல்லிட்டம்ல அமெரிக்க டைம் வேற அவிங்க வந்து சகட்டு மேனிக்கு குத்திட்டு போவாங்க பாருங்க...

அசுரன்

said...

அமெரிக்க டைம்-தான்....
ஒரு + குத்து போட்டாச்சு ::)

விளக்கமா பின்னூட்டம் போடலாம்...ஆனா நமக்கு எங்க அவ்வளவு சுறுசுறுப்பு :(((

said...

Who needs this Pamaran's nonsense.Many IT professionals know
how to take care of themselves and
are aware of social problems.The expoters in Tirpur make more than enough money but refuse to clean up the pollution caused by them and want govt. money for that.The leather expoters also make more than enough money and want govt. to spend for cleaning up the pollution caused by them.Ask this
Pamaran to go and give his views to them first.In this country
it has become a fashion to write
nonsense about IT professionals.

said...

//எம்மா நேரந்தான் யாருமே இல்லாத டீக்கடல டீ ஆத்துற மாதிரி நடிச்சுகிட்டெ இருக்குறது.... யாரவது வந்து டீ குடிக்கிற மாதிரியாவது நடிங்கப்பா....//

தோ... வந்தோம்ல..

//IT துறையில் சம்பளம் மாநகரங்களில் ஊதி பெருக்க வைத்துள்ள ஒரு சந்தை இவர்களின் கழுத்தை பிடித்து நெருக்குகிறது.//

சந்தை மட்டுமல்ல.. தேவையே இல்லாத போலி கவுரவம் ஒரு பிரச்சினை! - அதாவது அதிக சம்பளம் வாங்குவதால் இன்னின்ன வழிமுறைகளில் காசை அள்ளி விட வேண்டும் என்கிறது போன்ற மனப்போக்கை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு புறம் மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் அதிகம் சம்பாதித்தாலும் மறுபுறம் போலி கவுரவத்தைக் கட்டிக் காப்பாற்ற தேவையற்ற முறைகளில் செலவு செய்கிறார்கள் - வேறு வகையில் சொல்வதானால் - நுகர்வு வெறி!

//இனி வரும் காலங்களில் அமெரிக்க அரசு protectionist பொருளாதாரமாக மாறும் வாய்ப்புள்ளது என்று ஆருடம் சொல்கிறார்கள் சமீபத்திய டாவோஸ் மாநாட்டைப் பற்றி எழுதுபவர்கள்.//

ஐயா.... இந்த டாலரை மையமாகக் கொண்ட பொருளாதாரமே எப்போது வேண்டும்மானாலும் மண்ணைக் கவ்வும் என்று நாம் பேச்சை ஆரம்பித்தாலே அமெரிக்க தாசர்கள் பாஞ்சு பிராண்டுறாங்களே.... எதுக்கும் நீங்க கொஞ்சம் சாக்கிரதையா இருங்கப்பூ..

இதப் பத்தி ஒரு சுட்டி http://www.globalresearch.ca/index.php?context=viewArticle&code=ENG20061014&articleId=3482

R.V

said...

அன்பு அனானி,

IT தொழிலாளர்கள் எமது சகோதரர்கள்... அவர்களின் நலனில் வேறு யாரையும் விட எமக்கு அக்கறை அதிகமுள்ளது. அவர்களை விழிப்படையச் செய்யவே இந்த பதிவு,

நீங்க்ள் குறிப்பிட்ட மேற்சொன்ன சமூக விரோதிகளை எதிர்த்து பாமரன் எழுதுவதுண்டு என்பதிருக்க. நான் பாமரனின் வக்கீலோ கொள்கைப் பரப்பு செயலாளரோ கிடையாது.

மேலும் அந்த திருப்பூர் ச்மூக விரோதிகளோடு ஏன் IT தொழிலாளர்களை ஒப்பிடுகிறீர்கள்? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்திய சமூகத்தின் அவலம் குறித்து எந்த பிரக்ஞையும் இன்றி தனது பேங்க் பேலன்ஸ் மற்றும் நுகர்வு நாட்டம் ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டு தனது சொந்த எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் IT துறையின் பெரும்பான்மை மக்களை எச்சரித்தே இந்த பதிவு உள்ளது.

கடைசி வரியைப் படித்தீர்களா?

கல் எறிந்துதான் சுய உணர்வடைய வேண்டுமா? அப்படி ஒரு நிலை வருவதை நான் விரும்பவில்லை. சொந்த சகோதர வர்க்கங்கள் அடித்துக் கொண்டு சாவதையும் அவர்களிடையே மத்தியஸ்தம் செய்வதின் மூலம் இருவரையும் சுரண்டும் வர்க்கம் தனது மேலாதிக்கத்தை உறுதி செய்வதையும் நான் விரும்பவில்லை.

இதை உணர்த்தவே... அதாவது IT தொழிலாளர்கள் தங்களை சுரண்டும் MNC மற்றும் தரகு வர்க்க கம்பேனிகளின் முதலாளிகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்களே. அந்த மாயையை களைத்து அவர்களது நலன் எந்த வகையிலும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலனிலிருந்து பிரிக்க முடியாதது என்பதை உணர்வதை நோக்கி சிந்திக்க வைக்கவே இந்த பதிவு.

அசுரன்

said...

பாசிட்டிவ் குத்து குத்திய டன்டணக்கா முதல் டீ குடிப்பதுபோல நடிக்காமல் உண்மையிலே நல்ல மசாலா டீ குடிக்க வந்த ராஜவனஜ் வரை அனைவருக்கும் ந்ன்றி,

குறிப்பாக, ஜல்லிக்கட்டில் இறங்கி மல்லுக்கட்ட தயாரான அனானி நண்பருக்கு நன்றிகள்

அசுரன்

said...

//சந்தை மட்டுமல்ல.. தேவையே இல்லாத போலி கவுரவம் ஒரு பிரச்சினை! - அதாவது அதிக சம்பளம் வாங்குவதால் இன்னின்ன வழிமுறைகளில் காசை அள்ளி விட வேண்டும் என்கிறது போன்ற மனப்போக்கை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு புறம் மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் அதிகம் சம்பாதித்தாலும் மறுபுறம் போலி கவுரவத்தைக் கட்டிக் காப்பாற்ற தேவையற்ற முறைகளில் செலவு செய்கிறார்கள் - வேறு வகையில் சொல்வதானால் - நுகர்வு வெறி!
///

Very very Valid Point....

இந்த பாயிண்டக்கூட எடுத்து யாருனா வந்து வாதம் செய்யலாம்.

and Thanks for the URL

Ausran

said...

சமீபத்துல ஒரு மெயில் வந்தது சாமி... அதுல கார்ல போற ஒருத்தன் மேல கல்ல விட்டு எறிவான் ஒரு சின்னப் பயபுள்ள. கார நிப்பாட்டி இன்னாடா இப்படி கார கண்டம் ஆக்கிட்டயேடான்னு கேட்டதுக்கு அப்பால அந்த பொடிப்பயபுள்ளயோட சொல்லுவான், அவனோட ஊனமான தங்கச்சிக்கு உதவி செய்றதுக்காக

In real life the car owner will get
insuarnce money and the little fellow will get nothing except beatings.So keep your moral story
to yourself.

said...

"Very very Valid Point....
இந்த பாயிண்டக்கூட எடுத்து யாருனா வந்து வாதம் செய்யலாம்".

எனது இப்பதிவைப் பார்க்கவும். நம்ம ராஜா வனஜ் கூறுவது போல அதிகம் சம்பாதித்தால் அதை வேறு நல்ல வ்ழியிலே செலவிடலாமே. ஆடம்பர செலவு செய்ய மாட்டேன் என்றால் தலை சீவி விடுவார்களாமா?
http://dondu.blogspot.com/2006/09/blog-post_14.html

நான் அவர்கள் இடத்தில் இருந்து, கம்பெனி வீட்டிலிருந்து 20 கிலோமீட்டருக்குள் இருந்தால் சைக்கிளில்தான் செல்வேன். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வாஙக டோ ண்டு சார்,

தேவைக்கேற்ப்ப செலவு செய்யும் பண்புதான் சரி.... ஆனால் அது உலகமய பொருளாதாரத்துக்கு பிடிக்காதே ;-)))

உங்களிடம் அந்த நல்ல பண்பு இருப்பது பாராட்டுக்குரியது. அதை அனைவரும் சுவிகரிக்க வேண்டும்.

ஆனால் இந்த மனப்போக்கை உருவாக்கும் ஒரு சமூக பொருளாதார் சூழல் இருக்கிறதே அதை என்ன செய்வது? அது தொடர்ந்து இந்த மனப்போக்கை உருவாக்கிக் கொண்டே இருக்கீறதே அதை என்ன செய்வது? எந்த பொறுப்புமற்ற வெரும் நுகர்வு நாட்டம் மட்டுமே கொண்ட ஒரு இளைய தலைமுறையை உருவாக்குகிறதே அதை என்ன செய்வது?

இதுதான் இன்றைக்கு மிக மிக அதிகமாக கவலையளிக்கும் விசயம் இது நிதர்ச்னம் என்பதையும் இதனை நாம் வெறும் கருத்துத் தளத்தில் போராடி வெல்ல முடியாதும் என்பதையும் உணர வேண்டும்.

அசுரன்

said...

//In real life the car owner will get
insuarnce money and the little fellow will get nothing except beatings.So keep your moral story
to yourself. //

ஆஹா..ஆஹா....

Good Take Mr Great Annony...

ஆனால் விசயம், அடித்து நொறுக்க இருக்கும் மக்கள் சிறுவர்கள் அல்ல. அவர்கள் மாநகரங்கள் உற்பத்தி செய்யும் உதிரி ப்பட்டாளிகள் மற்றும் ரிசர்வ பட்டாளம்.

இவர்கள் தஙகளை பண்படுத்திக் கொள்ள எந்த வாய்ப்பும் இல்லாத ஒரு சமூகச் சூழலில் வள்ர்கிறார்கள், வாழ்கிறார்கள். இவர்களின் மிக எளிதான டார்கெட் இவர்களுக்கு அருகிலேயே கொஞ்சமே கொஞ்சம் ஆடம்பரமாக வாழும் உயர் நடுத்தர உலகமய யுப்பி வர்க்கம்தான். இதில் IT தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.

அவர்களின் அன்-ஆர்கனைஸ்ட் குற்றச் செயல்களுக்கோ அல்லது ஆர்கனைஸ்ட் கிளர்ச்சிகளுக்கோ எந்த இன்ஸ்யுரன்ஸும் இழப்பு-ஈடு செய்ய முடியாது, நீங்கள் அவர்களை அடித்து விரட்டவும் முடியாது... :-))

நான் இங்கு கார், கல், சிறுவன் எ-கா மூலம் குறிப்பிடுவது சமூக அழுத்தத்தின் விளைவான வன்முறையை.

இப்போ உங்க கருத்த சொல்லுங்க அனானி

அசுரன்

said...

//ஆனால் இந்த மனப்போக்கை உருவாக்கும் ஒரு சமூக பொருளாதார் சூழல் இருக்கிறதே அதை என்ன செய்வது? அது தொடர்ந்து இந்த மனப்போக்கை உருவாக்கிக் கொண்டே இருக்கீறதே அதை என்ன செய்வது? எந்த பொறுப்புமற்ற வெரும் நுகர்வு நாட்டம் மட்டுமே கொண்ட ஒரு இளைய தலைமுறையை உருவாக்குகிறதே அதை என்ன செய்வது?//

இதற்கான பதிலை திரு டோண்டு அவர்கள் கட்டாயம் சொல்வார் என்று நானும் எதிர்பார்க்கிறேன்.

( வேறென்ன.. பின்னூட்டக் காவாளித்தனம் தான் ;) )

R.V

said...

அசுரன் அவர்களே,
இது சம்பந்தமாக நான் போட்ட இன்னொரு பதிவு இதோ. http://dondu.blogspot.com/2006/11/blog-post_12.html

And who cares about the globalisation, when it interferes with my liberty?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//Many IT professionals know
how to take care of themselves and
are aware of social problems.//

I know that a Director of ITES co. He asked that which laguage has speak by fisherman while the time of Tsunami.
It is the scale of their social awareness.

First, they need such minimum rest to body and mind .. Can they ready to speak to their TL atleast?

//In this country
it has become a fashion to write
nonsense about IT professionals.//

Do you know the fashion which is discuss about lower class/community peoples at public places. IT is not fashion. anarchisitic approach of state it.

//Anonymous said...
சமீபத்துல ஒரு மெயில் வந்தது சாமி... அதுல கார்ல போற ஒருத்தன் மேல கல்ல விட்டு எறிவான் ஒரு சின்னப் பயபுள்ள. கார நிப்பாட்டி இன்னாடா இப்படி கார கண்டம் ஆக்கிட்டயேடான்னு கேட்டதுக்கு அப்பால அந்த பொடிப்பயபுள்ளயோட சொல்லுவான், அவனோட ஊனமான தங்கச்சிக்கு உதவி செய்றதுக்காக

In real life the car owner will get
insuarnce money and the little fellow will get nothing except beatings.So keep your moral story
to yourself.
//

Insurence is the sealing of your thinking. If you face the unorganised angry of lumbans also, you will get fear at your brain and activities.

So dont assume to face revolution by you.

said...

ஆனால் விசயம், அடித்து நொறுக்க இருக்கும் மக்கள் சிறுவர்கள் அல்ல. அவர்கள் மாநகரங்கள் உற்பத்தி செய்யும் உதிரி ப்பட்டாளிகள் மற்றும் ரிசர்வ பட்டாளம்.

இவர்கள் தஙகளை பண்படுத்திக் கொள்ள எந்த வாய்ப்பும் இல்லாத ஒரு சமூகச் சூழலில் வள்ர்கிறார்கள், வாழ்கிறார்கள்.

What prevents the govts from giving them education and opportunities to grow.Pose that
question to the govts.

The IT professionals pay taxes like others.Some contribute to NGOs
and charity.The IT professionals
are not from Venus.Many of them
come from middle class families.
If they use the income to improve
the standard of living, save for
the future or for their families
benefit what is wrong with that.
Pamaran is giving an inaccurate picture.Conspicuos consumption is found among all sections, not just IT professionals.
நான் இங்கு கார், கல், சிறுவன் எ-கா மூலம் குறிப்பிடுவது சமூக அழுத்தத்தின் விளைவான வன்முறையை.
Is IT industry the root cause for this.

said...

//ஆனால் விசயம், அடித்து நொறுக்க இருக்கும் மக்கள் சிறுவர்கள் அல்ல. அவர்கள் மாநகரங்கள் உற்பத்தி செய்யும் உதிரி ப்பட்டாளிகள் மற்றும் ரிசர்வ பட்டாளம்.

இவர்கள் தஙகளை பண்படுத்திக் கொள்ள எந்த வாய்ப்பும் இல்லாத ஒரு சமூகச் சூழலில் வள்ர்கிறார்கள், வாழ்கிறார்கள்.

What prevents the govts from giving them education and opportunities to grow.Pose that
question to the govts.
///

The economy that gives you enough Buck for you to lead a happy life makes the majority people prevented from
==education and opportunities to grow==

///
The IT professionals pay taxes like others.Some contribute to NGOs
and charity.The IT professionals
are not from Venus.Many of them
come from middle class families.
If they use the income to improve
the standard of living, save for
the future or for their families
benefit what is wrong with that.
///

Dear Annony,

I have told in this blog umpteenth time the Right of anybody to secure a happy life.

And indeed when you protest here with full swing you forget that I argue for the wellfare the IT people who is my brothers too....

This includes your job security, Social security, Health etc. Please read my earlier article on IT people.

Here I just wanted to make you think about how this system exploits you in work place as well as in your Free time, while carefully securing you from the ground reality of the other traditional working class.

///Pamaran is giving an inaccurate picture.Conspicuos consumption is found among all sections, not just IT professionals.///

The Neo night life is the product of IT and ITES profession. And it is this group of people who decides the Real estate business and many of the service oreiented business of Cities.

I agree that there are many other people who benifit from this kind of society.

But my concern is about IT people so I published this. and I belive IT labour is a brother of our working class.

It could be worth talking about whether the thing discussed here is correct or wrong instead of talking "Why do you pointing me".

///
நான் இங்கு கார், கல், சிறுவன் எ-கா மூலம் குறிப்பிடுவது சமூக அழுத்தத்தின் விளைவான வன்முறையை.
Is IT industry the root cause for this. ///

We and anybody could understand that the perill of the majority people of India is not created by IT people. Instead the economy that created this little luxorious class is also responcible for the Perills of the majority people.

But do you think those poor Labour have given enough opportunity to learn this fact?

Just think about their Natural inclination. and Just compare here your ability to understand this and your capability to teach those poor working classes to realise this fact. By this avoiding the direct conflict between this two groups.

don't protest me. I just tell the truth. If you feel it is true then something should be done.

Why do you blame for telling the Fact?

Asuran

said...

////

//Many IT professionals know
how to take care of themselves and
are aware of social problems.//

I know that a Director of ITES co. He asked that which laguage has speak by fisherman while the time of Tsunami.
It is the scale of their social awareness.

First, they need such minimum rest to body and mind .. Can they ready to speak to their TL atleast?

//In this country
it has become a fashion to write
nonsense about IT professionals.//

Do you know the fashion which is discuss about lower class/community peoples at public places. IT is not fashion. anarchisitic approach of state it.

//Anonymous said...
சமீபத்துல ஒரு மெயில் வந்தது சாமி... அதுல கார்ல போற ஒருத்தன் மேல கல்ல விட்டு எறிவான் ஒரு சின்னப் பயபுள்ள. கார நிப்பாட்டி இன்னாடா இப்படி கார கண்டம் ஆக்கிட்டயேடான்னு கேட்டதுக்கு அப்பால அந்த பொடிப்பயபுள்ளயோட சொல்லுவான், அவனோட ஊனமான தங்கச்சிக்கு உதவி செய்றதுக்காக

In real life the car owner will get
insuarnce money and the little fellow will get nothing except beatings.So keep your moral story
to yourself.
//

Insurence is the sealing of your thinking. If you face the unorganised angry of lumbans also, you will get fear at your brain and activities.

So dont assume to face revolution by you.

//////

Well Said Annony

said...

///
அசுரன் அவர்களே,
இது சம்பந்தமாக நான் போட்ட இன்னொரு பதிவு இதோ. http://dondu.blogspot.com/2006/11/blog-post_12.html

And who cares about the globalisation, when it interferes with my liberty?

அன்புடன்,
டோண்டு ராகவன் ///

Dear Dondu,

I read your previous other Link. It was quite interesting. When I was in the half of reading the English article I went to some other work...

I will read and Comment about both this and the previous one.

Asuran

said...

Though Pamaran's words are little Sarcastic and harsh, It is the fact he talks about should be concider...

and don't forget the writting style of Pamaran depict the agony of Lumben class.

Unfortunately the social Violence born out of Social Unrest will speak in this Pitch only.

It is also the duty of elite Upper middle class, which consitute IT people as well, to shape this Violence....

asuran

said...

"It is also the duty of elite Upper middle class, which consitute IT people as well, to shape this Violence...."
Do you know the meaning of this sentence.Perhaps you think something in Tamil but when it
gets written in English it
becomes something different.
"and don't forget the writting style of Pamaran depict the agony of Lumben class".
Is it lumpen class.
Please write in Tamil.That is
tolerable nonsense :).

said...

//Is it lumpen class.
Please write in Tamil.That is
tolerable nonsense :).//

எழுத்துப் பிழையை தூக்கிக் கொண்டு காவடியாடும் ஆங்கிலப் பொலவர் அனானி அவர்களே..! நீங்கள் தொடர்ச்சியாக செய்த கருத்துப் பிழையை சுட்டிக் காட்டியுள்ளாரே அசுரன் அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்.

said...

அசுரண்ணா,
முரளி மாமாவை கப்புன்னு புடிச்சிட்டாங்க தெரியுமா. சில பதிவுகளில் முரளி மினோகர்னு உங்களுக்கு கூட மாமா பின்னூட்டம் போட்டாரு

said...

அசுரன் அவர்களே,பாமரனின் இந்த கட்டுரைக்கு என் எதிர்ப்பை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.

1. மொத்த IT கும்பலுமே காசு வெறி பிடித்தும், இரவில் குடிக்காமல் விட்டால் பைத்தியம் பிடுத்து விடுவது போலும் சித்தரித்திருக்கிறார் பாமரன். டாஸ்மாக்கின் விற்பனை மொத்த தமிழ்நாடுமே குடிகாரந்தான் என சத்தியம் செய்யாமல் செய்கிறதே. அதற்கென்ன பதில் வைத்திருக்கிறார் அவர், அல்லது நீங்கள்தான்????

2. பப் கலாச்சாராத்தை ஒழிக்க தனிப்படை இல்லை தமிழ்நாட்டில். ஆனால் கள்ள சாராயத்தை ஒழிக்க மது விலக்குப் பிரிவு 24 மணி நேரமும் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுகிறது. பாமரானார் அவர்கள் என்றாவது கள்ள சாராயத்தை எதிர்த்து ஒரு கட்டுரை (ஒன்றே ஒன்று போதும்) எழுதியிருக்கிறாரா? அவர் புகழ் பாட என் வாய் மட்டும் இல்லை, என் பின்னால் ஓராயிரம் வாய் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

3. 20 வயதில் முடிவெடுக்கும் திறன் இருக்காது என பொத்தம் பொதுவாக முடிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகிறேன். 21 வயதில் 27 வயது அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு வட்டி, அப்பா அம்மாவுக்கு மெடி கிளெய்ம் பாலிசி, சித்தி மகனுக்கு காலேஜ் செலவு என எங்களுக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. மொத்த IT கூட்டத்தில் 10% (ஒரு லாரி அளவு :-) ) இருக்குமா இந்த குடித்து விட்டு கும்மாளம் போடும் கூட்டம். மொத்த IT கூட்டத்தையும் குனிய வைத்து கும்முகிறாரே பாமரனார்???

4. IT மக்களின் காரில் இப்போழுது கல் எறிவதை விட அம்மாவுக்கு இருதய ஆபரேஷன் 1 லட்சம் வேண்டும் என் ஒரு மெயில் தட்டிப் பாருங்கள், ஒரு வாரத்தில் உங்கள் அம்மாவின் ஆபரேசனுக்குத் தேவையான பணம் மட்டும் அல்ல, சிறந்த சிகிச்சைக்கும் வழி செய்து விடுவார்கள். யாருக்காவது இது பற்றிய மேலதிக விவரங்கள் வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்க.

5. என் அப்பாவின் ரிடையர்மெண்ட் கால சம்பளம் என் முதல் மாச சம்பளத்தை விட குறைவு என காலரை தூக்கி விட்டவர்களை விட அதை அப்படியே மொத்தமாக அவரிடம் குடுத்து காலில் விழுந்தவர்கள்தான் என் கண்ணில் நிறைய (நிறையவே...) தென் படுகிறார்கள். என் பார்வை சரியானது என உறுதியாக நான் நம்புகிறேன்.

said...
This comment has been removed by the author.
said...

அசுரன்

please mail me at kadalkanni at gmail

said...

பிரச்சனையே இல்லை என்று சொல்லவில்லை அசுரன். பிரச்சனைகள் இருக்கின்றன ஆனாலும் அது மொத்த IT துறையினரின் எண்ணிக்கையில் ஒரு 10-20% பேர் மட்டுமே. ஆனால் விலையேற்றம், சமூக அக்கரை குறித்தான தாங்களின் கருத்துக்கள் உண்மையே. ஆனால் யோசித்து பாருங்க IT துறையினால் தானே இப்பொழுது நாடு ஒரளவேணும் முன்னேறி இருக்கிறது. இந்த துறை மட்டும் இன்று இல்லையெனில் நாட்டில் எத்துணை கோடி பேர் வேலை இல்லாமல் இருந்து இருப்பர். நாட்டின் வளர்ச்சி எங்கு போயி இருந்து இருக்கும்.

said...

Udayakumar expects logic and rational analysis from Pamaran
and Asuran.That is just too much.

said...

திரு உதயகுமார் அவர்களே!

//மொத்த IT கும்பலுமே காசு வெறி பிடித்தும், இரவில் குடிக்காமல் விட்டால் பைத்தியம் பிடுத்து விடுவது போலும் சித்தரித்திருக்கிறார் பாமரன். டாஸ்மாக்கின் விற்பனை மொத்த தமிழ்நாடுமே குடிகாரந்தான் என சத்தியம் செய்யாமல் செய்கிறதே. அதற்கென்ன பதில் வைத்திருக்கிறார் அவர், அல்லது நீங்கள்தான்????//

* பாமரனின் எழுத்து நடையில் நக்கல் நையாண்டி தொனி அதிகம் இருப்பதால் அவர் அனைத்து தகவல் தொழில்நுட்பத் துறையினரையுமே குடிகாரர்களாக சித்தரிப்பது போல் உங்களுக்குப் படலாம் - ஆனால் உருவாகி, வேகமாக வளர்ந்து வரும் ஒரு பிரச்சினையை சுட்டிக் காட்டவே அவர் முயன்றுள்ளார் என்று தான் நான் நினைக்கிறேன்.

* மற்றபடி நீங்கள் குறிப்பிடுவது போல் தனிப்பட்ட முறையில் நல்ல பண்புகள் கொண்ட ஐ.டி துறையினர் நிறைய பேரை நானும் சந்தித்துள்ளேன்.

ஆனால் இதையெல்லாம் மீறி நாம் சொல்லவருவது இது தான்.

* ஐ.டி துறையில் தவறு செய்யவேண்டும் என்று நினைக்கும் ஒருவனுக்கு வாய்ப்புகள் எளிதில் கிடைக்கிறது.

* கள்ளக் காதல் செய்திகள் நமக்குப் புதிதல்ல - ஆனால் அதற்கான வசதியும் வாய்ப்பும் யாருக்கு சுலபமாகக் கிடைக்கிறது? வெளியே கள்ளக் காதல் தான் செய்தியாக இருக்கிறது - இந்தப் புதுப் பணக்காரர்களின் களி வெறியின் விளைவால் சீக்கிரமே நல்ல காதல் கூட ஒரு செய்தியாகிவிடும் அபாயம் வரும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனியுங்கள்.

* பாமரன் குறிப்பிட்டதில் நீங்கள் கவனிக்கத் தவறிய வேறு ஒரு புள்ளி - ஐ.டி துறையினருக்கும் மற்ற துறையினருக்கும இடையில் உள்ள வருமான ஏற்றத் தாழ்வுகள்.

இதன் காரணமாக சமுதாயத்தில் ஏற்படும் சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?

காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் தமிழ் நாட்டில் டெல்ட்டா மாவட்ட விவசாயிகள் போராடுகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் பதட்டம் என்று செய்தி வருகிறது - கர்நாடகத்தில் காவிரிப் பிரச்சினைகளின் போது எங்கே டென்ஷன் என்று செய்தி வருகிறது? பெங்களூரில்..

பெங்களூரில் எவன் விவசாயம் செய்கிறான்? எவனும் இல்லை எனில் ஏன் அங்கே பதட்டம் ஏற்படுகிறது?

காரணம் சிம்பிள்! அங்கே அந்த மண்ணின் மைந்தர்களான உள்ளூர்க்காரர்கள் பெருவாரியாக கார்மெண்ட் பேக்டரிகளில் குறைவான சம்பளத்தில் வேலை செய்து வரும் போது.. அதே நகரத்தில் மாதம் சில பத்தாயிரம் சம்பாதிக்கும் தமிழர்கள், உள்ளூர்க் காரர்களை விட வளமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அந்த நகரத்தின் காஸ்ட் ஆஃப் லிவ்விங் என்பது யாருடைய வருமானம் கொண்டு தீர்மானிக்கப் படுகிறது?

இது ஏற்படுத்தும் சமூக-பொருளாதார அழுத்தம் தான் ராஜ்குமார் செத்தாலும், காவிரி பிரச்சினையிலும் தமிழர்கள் மேலான கோபமாக உருவெடுக்கிறது.

விஜய் டி.வி நிகழ்ச்சியில் பாமரன் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கு, அதே நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஐ.டி துறை சார்ந்த பாதிப் பேர் ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அதில் பங்கேற்ற ஒருவர் கேட்டார் " ஒரு கால் செண்டரின் கழிவரையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய அதனை திறந்த போது குவியல் குவியலாக ஆணுறைகள் கிடைத்துள்ளது"

உடனே "எல்லா ஐ.டி துறையினரும் இப்படி என்று ராஜா சொன்னான்" என்று கிளம்பாதீர்கள் உதய்.. :-)
நான் சொல்ல வருவது இங்கே வாய்ப்புகள் அதிகம் என்று மட்டும் தான்.

மற்றபடி நல்ல பண்புகளை காத்து வரும் ஐ.டி துறை சகோதரர்களுக்கு my Salutes!!!

__________________________________

உதயகுமாரின் எதிர் வினைப் பதிவில் நம் நன்பர் திரு செல்வன் கீழ் கண்டவாரு சொல்லியுள்ளார் -

//ஐடி துறையில் தொழில் சங்கம் அமைக்க அழைப்பு விடுத்து அதை அவர்கள் கண்டுகொள்ளாமல் போனதன் விளைவுதான் காம்ரேடுகளின் ஐடி துறை மீதான பாய்ச்சல். சங்கம் வைத்து சந்தா வசூலித்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை:-)//

தொழிற்சங்கம் ஒன்றும் கம்யூனிஸ்டுகள் வலுக்கட்டாயமாக புகுத்தக் கூடிய ஒன்றல்ல. அது ஒரு துறையில் / நிறுவனத்தில் உள்முகமாக ஏற்படும் அழுத்தங்களின் காரணமாக தொழிலாளர்கள் அணிதிரளும் போது நிகழ்வது.

___________________________________

ராஜாவனஜ்

said...

உதயின் கீழ்க்கண்ட பதிவில் நானிட்ட பின்னூட்டம். அது இங்கும் பொருந்தும் என்பதால் இடுகிறேன்.
http://soundparty.blogspot.com/2007/02/it.html

மிகவும் நல்ல பதிவு உதய்.

எனக்குத் தெரிந்து ஐடி துறையில் நிறையப் பேர் குடிப்பழக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். பொதுவாகவே இளைய சமுதாயம் குடிப்பழக்கத்தோடே வளரத் தொடங்குகிறது என்பதே உண்மை. நானும் கல்லூரியிலும் ஆரம்பப் பணிக்காலத்திலும் குடிப்பழக்கத்தோடு இருந்தேன். ஆனால் இப்பொழுது அறவே நிறுத்தி விட்டேன். ஆக ஐடிக்கு வந்த பிறகு ஒருவன் குடிகாரன் ஆகிறான் என்பதெல்லாம் கொஞ்சம் மிகைப்படுத்துதல். வருமுன்னமே அப்படித்தான் வருகிறான். காசு துணிச்சலைக் கொடுக்கிறது என்று வேண்டுமென்றாலும் சொல்லலாம்.

பப் கலாச்சாரம் - இது தப்புன்னு சொல்றது எவ்வளவு சரின்னு தெரியலை. குடிப்பழக்கம் உடல்நலத்திற்குக் கேடு என்பதில் மறுகருத்து கிடையாது. அது பப்பில் கள்ளச்சாராயத்தில், டாஸ்மாக்கில் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அது பொதுப் பிரச்சனை. ஐடிக்கான தனிப்பிரச்சனை கிடையாது.

புதிதாக சம்பளம் வாங்குகிற அத்தனை பேரும் அதைக் கொண்டு போய்க் குடியில் கொட்டுவதில்லை. நீங்கள் சொன்னது போல பலர் குடும்பங்களில் அது முறையாகப் பயன்படவும் செய்திருக்கிறது. சம்பளம் வந்ததும் லேட்டஸ்ட் மாடல் மொபைலும் பைக்கும் வாங்குகிறவர்களும் உண்டு. ஆனால் எல்லாரும் அப்படியல்ல என்பதே உண்மை.

காரில் கல்லெறிவது தங்கையைக் காப்பாற்ற என்று சிறுவன் சொன்னான். பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு உன்னைக் காப்பாற்ற என்று பாமரன் சொல்கிறார். பெயர்ப் பொருத்தம் அபாரம். உள்ள என்னவெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு எழுதுங்க சார்.

டாலரை நம்பிய பொருளாதார வளர்ச்சி நல்லதல்ல என்பதும் சரி. அதுக்காக அதையும் செய்யாம இருந்தா வர்ரதும் வராமப் போயிருமே! இப்ப சம்பாதிக்கிறவனும் சம்பாதிக்காமப் போயிருவான். அதுதான் பாமரன் விரும்புறதா? நாட்டோட மக்கள்தொகையில 3 சதவீதங் கூட இருக்காது ஐடி தொகை. அப்படி இருக்குறப்போ மத்த 97 சதவீதமும் முழிச்சிக்கிட்டு ஆக்கபூர்வமாச் சிந்திச்சு ஒரு அருமையான பொருளாதாரத்தைக் கொண்டு வந்தா எவ்வளவு நல்லாயிருக்கும். அடுத்தவன் வண்டி இழுக்கனும். நம்ம மட்டும் சொல்லிக் கிட்டே இருக்கனும். நல்ல நாயமய்யா.

said...

////

அசுரன் அவர்களே,பாமரனின் இந்த கட்டுரைக்கு என் எதிர்ப்பை முதலில் பதிவு செய்து கொள்கிறேன்.
////

You have the right to do soo....
:-))

And I recognize your எதிர்ப்பை.

////
1. மொத்த IT கும்பலுமே காசு வெறி பிடித்தும், இரவில் குடிக்காமல் விட்டால் பைத்தியம் பிடுத்து விடுவது போலும் சித்தரித்திருக்கிறார் பாமரன். டாஸ்மாக்கின் விற்பனை மொத்த தமிழ்நாடுமே குடிகாரந்தான் என சத்தியம் செய்யாமல் செய்கிறதே. அதற்கென்ன பதில் வைத்திருக்கிறார் அவர், அல்லது நீங்கள்தான்????
////

Did you read this part of my article Udayakumar?

இதுதான் IT துறையின் பொதுவான நிலைமைன்னு(அதாவது கடும் வேலையும், களி வெறியாட்டமும்) நான் நினைக்கலைய்யா. ஆனா இது மிகப் பெரும்பான்மையா அதுவும் குறிப்பா நம்ம BPO கொத்தடிமைக இப்படித்தான் லோல் படுறாங்கய்யா.

///
2. பப் கலாச்சாராத்தை ஒழிக்க தனிப்படை இல்லை தமிழ்நாட்டில். ஆனால் கள்ள சாராயத்தை ஒழிக்க மது விலக்குப் பிரிவு 24 மணி நேரமும் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்படுகிறது. பாமரானார் அவர்கள் என்றாவது கள்ள சாராயத்தை எதிர்த்து ஒரு கட்டுரை (ஒன்றே ஒன்று போதும்) எழுதியிருக்கிறாரா? அவர் புகழ் பாட என் வாய் மட்டும் இல்லை, என் பின்னால் ஓராயிரம் வாய் இருக்கும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
/////

The below I gave as a reply to one Annony.

அன்பு அனானி,

IT தொழிலாளர்கள் எமது சகோதரர்கள்... அவர்களின் நலனில் வேறு யாரையும் விட எமக்கு அக்கறை அதிகமுள்ளது. அவர்களை விழிப்படையச் செய்யவே இந்த பதிவு,

நீங்க்ள் குறிப்பிட்ட மேற்சொன்ன சமூக விரோதிகளை எதிர்த்து பாமரன் எழுதுவதுண்டு என்பதிருக்க. நான் பாமரனின் வக்கீலோ கொள்கைப் பரப்பு செயலாளரோ கிடையாது.

மேலும் அந்த திருப்பூர் ச்மூக விரோதிகளோடு ஏன் IT தொழிலாளர்களை ஒப்பிடுகிறீர்கள்? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்திய சமூகத்தின் அவலம் குறித்து எந்த பிரக்ஞையும் இன்றி தனது பேங்க் பேலன்ஸ் மற்றும் நுகர்வு நாட்டம் ஒன்று மட்டுமே குறிக்கோளாக கொண்டு தனது சொந்த எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையையும் கண்டு கொள்ளாமல் இருக்கும் IT துறையின் பெரும்பான்மை மக்களை எச்சரித்தே இந்த பதிவு உள்ளது.

கடைசி வரியைப் படித்தீர்களா?

கல் எறிந்துதான் சுய உணர்வடைய வேண்டுமா? அப்படி ஒரு நிலை வருவதை நான் விரும்பவில்லை. சொந்த சகோதர வர்க்கங்கள் அடித்துக் கொண்டு சாவதையும் அவர்களிடையே மத்தியஸ்தம் செய்வதின் மூலம் இருவரையும் சுரண்டும் வர்க்கம் தனது மேலாதிக்கத்தை உறுதி செய்வதையும் நான் விரும்பவில்லை.

இதை உணர்த்தவே... அதாவது IT தொழிலாளர்கள் தங்களை சுரண்டும் MNC மற்றும் தரகு வர்க்க கம்பேனிகளின் முதலாளிகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்களே. அந்த மாயையை களைத்து அவர்களது நலன் எந்த வகையிலும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலனிலிருந்து பிரிக்க முடியாதது என்பதை உணர்வதை நோக்கி சிந்திக்க வைக்கவே இந்த பதிவு.

////
3. 20 வயதில் முடிவெடுக்கும் திறன் இருக்காது என பொத்தம் பொதுவாக முடிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டுகிறேன். 21 வயதில் 27 வயது அக்கா கல்யாணத்துக்கு வாங்கிய கடனுக்கு வட்டி, அப்பா அம்மாவுக்கு மெடி கிளெய்ம் பாலிசி, சித்தி மகனுக்கு காலேஜ் செலவு என எங்களுக்கும் ஒரு வட்டம் இருக்கிறது. மொத்த IT கூட்டத்தில் 10% (ஒரு லாரி அளவு :-) ) இருக்குமா இந்த குடித்து விட்டு கும்மாளம் போடும் கூட்டம். மொத்த IT கூட்டத்தையும் குனிய வைத்து கும்முகிறாரே பாமரனார்???
////

Dear Annony,

I have told in this blog umpteenth time the Right of anybody to secure a happy life.

And indeed when you protest here with full swing you forget that I argue for the wellfare of the IT people who is my brothers too....

This includes your job security, Social security, Health etc. Please read my earlier article on IT people.

Here I just wanted to make you think about how this system exploits you in work place as well as in your Free time, while carefully securing you from the ground reality of the other traditional working class.

////
4. IT மக்களின் காரில் இப்போழுது கல் எறிவதை விட அம்மாவுக்கு இருதய ஆபரேஷன் 1 லட்சம் வேண்டும் என் ஒரு மெயில் தட்டிப் பாருங்கள், ஒரு வாரத்தில் உங்கள் அம்மாவின் ஆபரேசனுக்குத் தேவையான பணம் மட்டும் அல்ல, சிறந்த சிகிச்சைக்கும் வழி செய்து விடுவார்கள். யாருக்காவது இது பற்றிய மேலதிக விவரங்கள் வேண்டுமானால் என்னைத் தொடர்பு கொள்க.
////

Not required.... Thanks for your generous Help....

And this mentallity of Arrogance make Pamaran like people to write like this...

While the economy that gave this Good salaray to yuo... The same economy make the majority of working people to send mails for their Operation... You never ever ready to heed this abysmal state of this country. that is why I mentioned the Stone throwing example.

The lumpens aggression which this soceity will face will not heed to this kind of requests... It will be more interested in throwing stones....

Evev It is not worth mentioning this here(in Asuran)... Please go to the downtroden people to settle your differences and avoid stone throwing... :-))

////
5. என் அப்பாவின் ரிடையர்மெண்ட் கால சம்பளம் என் முதல் மாச சம்பளத்தை விட குறைவு என காலரை தூக்கி விட்டவர்களை விட அதை அப்படியே மொத்தமாக அவரிடம் குடுத்து காலில் விழுந்தவர்கள்தான் என் கண்ணில் நிறைய (நிறையவே...) தென் படுகிறார்கள். என் பார்வை சரியானது என உறுதியாக நான் நம்புகிறேன்.

/////

I didn't say anything in this aspect.. Did I?

And I know this kind of feudalistic nature prevailing in IT industry(stick to all the rituals - Caste, religion etc).

and Indeed the exsistence of this feudal setup in their Family in Small twons or Villages somehow help the Indian IT from the Work pressure.

Asuran

said...

///பிரச்சனையே இல்லை என்று சொல்லவில்லை அசுரன். பிரச்சனைகள் இருக்கின்றன ஆனாலும் அது மொத்த IT துறையினரின் எண்ணிக்கையில் ஒரு 10-20% பேர் மட்டுமே. ஆனால் விலையேற்றம், சமூக அக்கரை குறித்தான தாங்களின் கருத்துக்கள் உண்மையே. ஆனால் யோசித்து பாருங்க IT துறையினால் தானே இப்பொழுது நாடு ஒரளவேணும் முன்னேறி இருக்கிறது. இந்த துறை மட்டும் இன்று இல்லையெனில் நாட்டில் எத்துணை கோடி பேர் வேலை இல்லாமல் இருந்து இருப்பர். நாட்டின் வளர்ச்சி எங்கு போயி இருந்து இருக்கும்.
///

Santhosh,

That is still disputable. Then you have to answer Why the IT people and The IT companies asked the Govt to recognize the NIght Life? Is it for 20% people?

I don't think so. I accept it is not the every IT people are like this But it is that this Industry has the Most. In the Sense a unique Cultural Identity in the brewing.

Second:
Is India is developing? If few lakhs of people engaged in IT industry people has good salaray doens't mean India is developing.

And do you like to gamble the Crores of Peoples life for this Lakhs peoples well being? Then you should worry about stone Throwing...

Please read my Economic articles and My english articles on IT and Economy and reconsider youh notion that 'India is developing'.

kaipulla.blogspot.com

The economy that bode well to IT people now will soon Crush them alike the common people... That is the point I emphasis always.

And the kind of Bullshit opinions of $elvan doens't need to be addressed. Umpteenth times we have questioned his illlogical conclusions and Exposed the dubiacity in his arguments. but he never come back with answers(even in recent arguments). But always try to gossip his Ill consived Ideas whenever a new arguments popups. Funny guy though :-))

Asuran

said...

And I forgot to say thanks to Udayakumar and Santhosh.

I request you to read my earlier article on IT. and My articles in
kaipulla.blogspot.com

thanks to Rajavanaj
And the Funny annony

Asuran

said...

Kadalkanni,

Thanks for your invitation. I will send a mail. I didn't access my mail box for the past couple of Days.

I will send a mail to you today evening. Sorry for the delay

Asuran

said...

காரணம் சிம்பிள்! அங்கே அந்த மண்ணின் மைந்தர்களான உள்ளூர்க்காரர்கள் பெருவாரியாக கார்மெண்ட் பேக்டரிகளில் குறைவான சம்பளத்தில் வேலை செய்து வரும் போது.. அதே நகரத்தில் மாதம் சில பத்தாயிரம் சம்பாதிக்கும் தமிழர்கள், உள்ளூர்க் காரர்களை விட வளமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அந்த நகரத்தின் காஸ்ட் ஆஃப் லிவ்விங் என்பது யாருடைய வருமானம் கொண்டு தீர்மானிக்கப் படுகிறது?

இது ஏற்படுத்தும் சமூக-பொருளாதார அழுத்தம் தான் ராஜ்குமார் செத்தாலும், காவிரி பிரச்சினையிலும் தமிழர்கள் மேலான கோபமாக உருவெடுக்கிறது

Who owns the malls,hotels and real estate and industries in B'lore.
In fact north indians are richer than Tamils in B'lore.The IT boom
has benefitted many middle class
Kannadigas also besides creating
employment (both direct and indirect) for many of them.
There are many Tamils working in
IT industry but to blame them
for cost of living is illogical.
Anyway it is 'nice' to know that
some self-stlyed leftists support
such irrational anger against Tamils.But given the tone and tenor
of the writings of Asuran and Raj
vanaj that is not surprising.The
only missing element is their favorite name the blame brahmins
and brahminism.

said...

//Is India is developing? If few lakhs of people engaged in IT industry people has good salaray doens't mean India is developing.

And do you like to gamble the Crores of Peoples life for this Lakhs peoples well being? Then you should worry about stone Throwing...//

//And the kind of Bullshit opinions of $elvan doens't need to be addressed. Umpteenth times we have questioned his illlogical conclusions and Exposed the dubiacity in his arguments. but he never come back with answers(even in recent arguments). But always try to gossip his Ill consived Ideas whenever a new arguments popups. Funny guy though :-))//

GOOD SHOT ASURAN...!!!

R.V

said...

///
டாலரை நம்பிய பொருளாதார வளர்ச்சி நல்லதல்ல என்பதும் சரி. அதுக்காக அதையும் செய்யாம இருந்தா வர்ரதும் வராமப் போயிருமே! இப்ப சம்பாதிக்கிறவனும் சம்பாதிக்காமப் போயிருவான். அதுதான் பாமரன் விரும்புறதா?///

This I don't like to argue here eloborately.

But one thing is What are you going to loose to gain something?

is it your self respect for Luxory?

Is it your soverignity for The livlihood?

Is it the death or half death of the majority people for a cliques well being?

Please come to any of my Economic article. We will discuss this.

//// நாட்டோட மக்கள்தொகையில 3 சதவீதங் கூட இருக்காது ஐடி தொகை. அப்படி இருக்குறப்போ மத்த 97 சதவீதமும் முழிச்சிக்கிட்டு ஆக்கபூர்வமாச் சிந்திச்சு ஒரு அருமையான பொருளாதாரத்தைக் கொண்டு வந்தா எவ்வளவு நல்லாயிருக்கும். அடுத்தவன் வண்டி இழுக்கனும். நம்ம மட்டும் சொல்லிக் கிட்டே இருக்கனும். நல்ல நாயமய்யா.
///

Ragavan thanks for coming and thanks for your comments,

One thing you all didn't understand.

Just think who is sitting in this Internet world and arguing? is it the 3% or the 97%?

The so called 10% or so Intellects have the capacity to digest the whole socio economic scenario and shape the political moment. and the majority rural illeterate Farmers people doesn't have time and opportunity to understand this. So they don't have the capacity to shape the moment. Your opinoin in this regard born out of anger. So it doesn't see this Ground reality.

And it is individuals will to decide to work for the liberation of Country. But the stone thorwing is not any individuals will. It is the product of this soceity. But you could direct the stone thrwoing in the deserving direction. Which is obviosly not the IT people.

You have the right to say "Why me". "The problem is for every body so the majority should struggle. They should not blame me".

But unfortunately the Majority Poor Lumpen workers will not understand your 'this language'. It needs some different language to make them understand this - that is, we are brothers.

Today the ruling class which is bampering you, in the future will use this lumpen class to act against you when you are struggling for your Right :-)).

I just say it is wise for you elite people to understand the present and the future and Act upon....

But you refuse this and blame us.

No point in Blaming me or Pamaran for pointing out this. He and me criticise the Globalisation driven IT people for their musings. You get angry that We point out IT musing.

Please come out of your musing and See the reality.

Asuran

said...

//Who owns the malls,hotels and real estate and industries in B'lore.
In fact north indians are richer than Tamils in B'lore.The IT boom
has benefitted many middle class
Kannadigas also besides creating
employment (both direct and indirect) for many of them.
There are many Tamils working in
IT industry but to blame them
for cost of living is illogical.//

Mr Anony, Just see who involves in the riots.. they are common people not the executives or upper middleclass people who can atlease realise that - // the malls,hotels and real estate and industries in B'lore.In fact north indians are richer than Tamils in B'lore // -

Tamils are competing to the natives of bangalore in all walks of life... right from petty jobs to the executive level jobs in IT companies.. This sounds like I am supporting kannadigas - but what I like to point out is, any riot will have socio-economical backgrounds.... and in this case, the background for the hatred against Tamils in Bangalore is the competition faced by kannadigas in earning their bread from outer state population..

This hatred is cleverly diverted towards tamils by the politicians and the commom men fell pray to that propoganda as an channel for the outburst of his economical problems.

I think we are leaving the core topic of this article.. Let us debate this point on some other time..

R.V

said...

அசுரன், இப்பிடி ஆங்கிலத்துக்கு ஓடீட்டீங்களே. :-) படிச்சிட்டேன்.

உண்மையைச் சொல்லப் போனா...இந்தியா வளர்கிறது என்பது பொய். அதை நானும் ஒத்துக் கொண்டிருக்கிறேன். நான் முன்பே சொன்னது போல வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் பரவலாக்கப்படவில்லை. அது மிகவும் அபாயகரமானது. மறுக்க முடியாத உண்மையும் கூட.

நான் சுட்டிக்காட்ட வருவதெல்லாம் ஐடியில் இருப்பதே ஒரு தவறு என்கின்ற தொனியைத்தான். It is easy to use the word musing. but tough to convince. ஐடியில் குடிகாரர்கள் உண்டு. பேரம் பேசாமல் கிடைக்கின்ற விலைக்கு அப்பார்ட்மெண்ட் வாங்குகிறவர்கள் உண்டு. மறுப்பதற்கில்லை. ஆனால் ஐடியில் இருக்கும் எல்லாருமே அப்படித்தான் என்று முடிவு கட்டி விடாதீர்கள். அதைத்தான் நான் தவறு என்கிறேன். உதயும் சொல்ல வருவது அதைத்தான். மற்றபடி பொருலாதாரம் பற்றி எனக்குச் சரியாகத் தெரியாது. ஆகையால் அது பற்றியும் நான் விவாதிக்கத் தயாராக இல்லை. தெரியாததைப் பத்திப் பேசக் கூடாது இல்லையா. அதான்.

said...

Dear G. Ragavan,

///
அசுரன், இப்பிடி ஆங்கிலத்துக்கு ஓடீட்டீங்களே. :-) படிச்சிட்டேன்.
////

In this desktop no tamil softwares available... That is why.. :-))

///
உண்மையைச் சொல்லப் போனா...இந்தியா வளர்கிறது என்பது பொய். அதை நானும் ஒத்துக் கொண்டிருக்கிறேன். நான் முன்பே சொன்னது போல வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் பரவலாக்கப்படவில்லை. அது மிகவும் அபாயகரமானது. மறுக்க முடியாத உண்மையும் கூட.
///

Thanks for sharing our concerns... :-))

///
நான் சுட்டிக்காட்ட வருவதெல்லாம் ஐடியில் இருப்பதே ஒரு தவறு என்கின்ற தொனியைத்தான்.
///

Did my tone reflect this? No, Indeed if at all any contempt in my, Pamaran or Rajavanaj (he belongs to IT fields) arguments, it is about the below yur words
""
மற்றபடி பொருலாதாரம் பற்றி எனக்குச் சரியாகத் தெரியாது. ஆகையால் அது பற்றியும் நான் விவாதிக்கத் தயாராக இல்லை. தெரியாததைப் பத்திப் பேசக் கூடாது இல்லையா. அதான்.
""""

This don't care mentality is what we condemn.
:-))))

See, You don't bother about discussing the above, But you would bother about we discussing that this economy will cause social unrest and you are the most easy victim to that.

////
It is easy to use the word musing. but tough to convince. ஐடியில் குடிகாரர்கள் உண்டு. பேரம் பேசாமல் கிடைக்கின்ற விலைக்கு அப்பார்ட்மெண்ட் வாங்குகிறவர்கள் உண்டு. மறுப்பதற்கில்லை. ஆனால் ஐடியில் இருக்கும் எல்லாருமே அப்படித்தான் என்று முடிவு கட்டி விடாதீர்கள். அதைத்தான் நான் தவறு என்கிறேன். உதயும் சொல்ல வருவது
அதைத்தான்.
///

When we crticise, yu took the criticism and forgot the point we made out of that Criticism :-))

that is the problem.

If we say Kudikaran, Consumerism culture etc, that doesn't mean we say only IT people are doing this.

Indeed we say these musings make you not to see the ground reality. That is what We emphasis here. Just read last lines from the post. The stone throwing Example is exactly this.

And pamaran made this point by stating the recent commotion on Night life, and the real problem of Farmers suicide etc.

Which one occupaied you mind?

it is true the IT people are little more musing than other people. This you could understand from the responce for this post and my previous post. The reason for their musing is a different topic to discuss.

And I am eager to know what our friend Udayakumar feels about my responce

Asuran

said...

I have asked the below to Udayakuamr,

//And I am eager to know what our friend Udayakumar feels about my responce
///

For this Udayakumar has replied by removing his comments from this post.

I don't know what kind of Culture is this?

He has to explain.... :-((

I really didn't expect this kind of responce from him.

he differentiated from others by his Due responce initialy.

But this removal of his comments is unjust...

Asuran

said...

i feel there is no constructive arguments from the it people.they seems to be defending and deviating from the core issue.instead of taking it personally,,we should try to see where is the pit.they dont have to shy away for the weekends.keep on disscussing about it onlywill lead to neverland.

Related Posts with Thumbnails