TerrorisminFocus

Thursday, December 21, 2006

இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!

#1)ந்த இடத்திலுமே மதக கலவரங்களின் மூல வேர் பொருளாதார பிரச்சனையாகவெ இருக்கிறது. இந்தியாவில் இது வரை நடந்த மதக் கலவரங்களிலும்(கோவைக் கலவரம் உட்பட) வணிகர்களிடையே உள்ள போட்டியே காரணமாக இருந்துள்ளது. சில இந்து/பார்ப்பன மத வெறியர்கள் தங்களது சமீபத்திய பதிவில் வணீகர்களிடையே உள்ள வியாபார பிரச்சனையை வைத்து மத மோதல்களை தூண்டிவிட்டு குளிர் காய முற்படுவது தெரியவ்ருகிறது. அதில் ஜடாயுவின் சமீபத்திய பதிவும் அடக்கம்.

தஞ்சையில் சிறு இந்து வியாபாரிகளுக்கு முஸ்லீம் வியாபாரிகளால் ஆபத்து!
ஓநாய் கண்ணீர் வடிக்கீறது!!!

உண்மையில் மத வேறுபாடின்றி சில்லறை வியாபாரிகளுக்கு ஆப்பு சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு கம்பேனிகளை அனுமதிப்பதால் ஏற்ப்பட்டுள்ளது. ரிலையன்ஸ், வால்மார்ட் கும்பலின் சூறையாடலில்தான் இவர்களின் அழிவு உண்மையில் உள்ளது. சில்லறை வியாபாரத்தில் FDI யை அனுமதித்தது ஜடாயு கோஸ்டியும், காங்கிரஸ் கோடியும்தான். அதைக் குறித்து தமிழர்கள் மேல் அக்கறை கொண்ட ஜாடாயு பேசுவாரா?

அதற்க்கான நேர்மை அவருக்கு உண்டா?
பேச நா இரண்டுடையா போற்றி!!!!!

#2)தஞ்சை தமிழர்களாம்!! ...

தஞ்சை தமிழர்கள் விவாசாயத்தை விட்டு போண்டியாகி சென்னை தமிழராக அத்துக் கூலிக்கு வருவது ஏன் என்று ஜடாயு விளக்குவாரா? அவரது பதிவில் வாய் வைத்துச் சென்றுள்ள அனானிகள் அல்லது ஹரிஹரன், நீலகண்டன் கோஸ்டிகள் விளக்குவார்களா?

எந்த இஸ்லாமியன் இதற்க்கு காரணம் என்று சொல்வார்களா?

இதுவும் ஏதேனும் பாகிஸ்தான் சதிதானோ என்றூ சுனாபானா வடிவேலு பானியில் இவர்கள் பேசி சாதாரண மக்களை குழப்பும் சாத்தியம் உண்டு. கோயபல்ஸ்களின் பாரம்பரியம் அல்லவா?


#3) தஞ்சை தமிழர்களாம்!!!...

கடந்த ஏழு வருடத்தில் அரசு புள்ளி விவரத்தின் படியே 1 லட்சத்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இதற்க்குக் காரணம் என்று அதி அறிவு ஜீவி நேசகுமரோ அல்லது அறிவியல் விஞ்ஞானம் அனைத்தையும் கரைத்துக் குடித்து விட்டு எல்லாம் நாங்க வேதத்துல படிச்சதுதான் என்று பீலா விடும் நீலகண்டனோ விளக்கலாம்.

இதே ஜாடாயு இருக்கும் கர்நாடகாவில், 70000 சிறு தொழில்கள் மூடப்பட்டதற்க்கு எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பு என்று அவர் கூற கடமைப் பட்டுள்ளார்.


#4) தஞ்சை தமிழர்களாம்!!!

தமிழர்களின் பாண்பாடு பார்ப்னிய கலாச்சாரத்தால் அழிவது குறித்து இவர்கள் இப்படி பாசத் தோடு பேசுவதில்லையே??

இதே இந்து வெறியர்கள் நாட்டார் வழிபாட்டு தெய்வ முறைகள். தமிழரின் பிற கலாச்சார அடையாளங்கள், தமிழ் இசை இவற்றை பார்ப்பினிய மதம் விழுங்கி அழிப்பது குறித்து எதுவும் பேசுவதில்லை.

கலாச்சாரம் அழிகிறது என்ற இவர்களின் கவலையில் நேர்மை உண்டு எனில் அது எமது கலாச்சாரத்தை அழிக்கும் பார்ப்பினியத்திற்க்கு எதிரான போராட்டத்திற்க்கு குரல் கொடுப்பதின் மூலம் தெரியவரும். அவ்வாறு செய்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல ஆகிவிடும்.

வாழ்க்கைக்கான பொருளாதாரம் அழிகிறது என்ற இவர்களின் பீதியுட்டலில் நேர்மை இருக்குமெனில் அது சிறு வியாபாரிகள், தெசிய முதாலாளீகளுக்கு ஆப்பு வைக்கும் VAT, சில்லறை வியாபாரத்தில் FDI, பிற அகர் பத்தி, மீன்பிடி முதற் கொண்டு தொழில்களில் FDI இவற்றிற்க்கு எதிரான போராட்டத்தில் தெரியவரும். அதை செய்யும் தைரியம் உண்டா இவர்களுக்கு?
இந்தியா அந்நியர் கைக்கு சென்று வருகிறது எனும் இவர்களின் ஐயத்தில் நேர்மையிருக்குமெனில் அது SEZ, அணு ஆயுத ஒப்பந்தம், ராணுவ ஒப்பந்தம் இவற்றின் மூலம் புற வாசல் வழியாக இந்தியாவை கூறு போட்டு விற்பதற்க்கு எதிரான இவர்களின் போராட்டத்தில் வெளி வரும். தரகு பணத்தில் சொகமாக வாழும் மலர் மன்னன் முதலான கோஸ்டியனிரின் சிஷ்ய கொழுந்துகள் இதை செய்ய முன்வருவார்களா?

சிதம்பரம் கோயிலை மன்னரிடமிருந்து கைப்பற்றிய கதையை விடுங்கள் அங்கு தமிழில் பாடவது பற்றி தஞ்சை தமிழ் மண்ணின் பெயரில் போலியாக பாசத்தை காட்டும் அண்ணன் ஜடாயு மற்றும் அறிவியல் நீலகண்டன் போன்ற நல்லதையே விரும்பும் சான்றோர்கள் கோரிக்கை வைப்பார்களா?

இந்த மேற் சொன்ன விசயங்களில் எல்லாம் இவர்களின் நிலைப்பாடு மக்களை காட்டிக் கொடுத்து அதில் வரும் தரகு பணத்தில் வயிறு வளர்க்கும் நேர்மைதான்.

வாழ்வுரிமைப் பிரச்சனையாம்...
யாருடைய வாழ்வுரிமை பிரச்சனை? மேலேயுள்ளது எல்லாம்தான் உண்மையில் இவர்கள் இந்துக்கள் என்று சொல்லி தங்களது மத வெறி பிரியானிக்கு பயன்படுத்த நினைக்கும் மக்களின் வாழ்வுரிமைப் பிர்ச்சனையாக உள்ளது. இவற்றிற்க்கு இன்று வரை ஒரு சிறூ துரும்பையாவது அள்ளிப் போட்டிருப்பார்களா இவர்கள்?

ஆனால் வாழ்வுரிமைப் பிரச்சனையாம். இவையெல்லாம் வாழ்வுரிமை பிரச்சனையில்லையெனில் அந்த மக்கள் இவர்கள் சொல்லும் இந்துக்கள் லிஸ்டில் இல்லையென்றாகிறது. அப்படியெனில் யாருடைய வாழ்வுரிமை குறித்து பேசுகிறார்கள் என்று தெளிவுபடுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. தலைப்பை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.... 'இந்து/பார்ப்ப்னிய'.

இவர்கள்தான் இந்த அடிப்படை பிரச்சனைகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பிவிடாமல் இஸ்லாம் மதம் இந்தியாவின் காலாச்சாரத்தை அழிக்கிறது என்று பயபீதி கிளப்புவதன் மூலம் போலியான எதிரியின் பக்கம் திசை திருப்புகிறார்கள்.

மத அடிப்படைவாதம் என்பதே ஏகாதிபத்திய பொருளாதார அடக்குமுறைகளை மறைத்து மக்களை வேறு பக்கத்திற்க்கு திசை திருப்பிவிடுவதுதான். அது மக்களின் உண்மையான பிரச்சனைகளில் இவர்கள் எங்கு ஒழிந்து கொள்கிறார்கள் எனும் தேடும் பொழுது அம்பலமாகிறது.
இஸ்லாம், கிருத்துவம், இந்து/பார்ப்னியம் முதலான அனைத்து மத அடிப்படைவாதங்களும் அதன் அனைத்து வடிவங்களிலும் அடித்து நொறுக்கப்பட வேண்டியவையே!!
இவற்றின் வர்லாற்றைப் பார்த்தால் இவை என்றைக்குமே மக்களின் விடுதலைக்காக போராடியதாக இல்லை. மாறாக ஆட்சியில் இருப்பவர்களின் கொட்டை தாங்கியாக இருந்து சேவை செய்து வந்துள்ளனர். இன்றைக்கு அரேபியாவின் இஸ்லாமிய அடிப்படைவாதமும் சரி, இந்தியாவில் இந்துத்துவ பயங்க்ரவாதமும், கிருத்துவ வெறியும் சரி இந்த அம்சத்தில் தங்களை சகோதரர்களாக அடையாளம் காணுகிறார்கள்.

நாளை ஒரு வேளை இவர்களின் இந்த தலைமைக்கு மக்களின் பெரும் போராட்டங்களினால் ஆப்பு வரும் என்று சூழ்நிலை ஏற்ப்பட்டால் , இந்த மூவரும் ஒன்று கூடுவார்கள் என்பதை நாம் உறுதியாகக் கூறலாம்.


இஸ்லாமிய பயங்கரவாதம் இந்தியாவின் ஆபத்துகளில் ஒன்று என்பதும் அதை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது என்றும் பேசுவது வேறு ஆனால் அதை வைத்தே அதை விட பெரிய பிரச்சனைகளை மூடி மறைப்பதும், தமது அரசியல் ஆதிக்கத்திற்க்கு பழியாடுகளை தயார் செய்ய அரிவாள் தீட்டுவதும் நயவஞ்சகர்களின் வேலை.


அதை வைத்தே தமது பிரியானிக்கு அப்பாவி மக்களை கறிவேப்பிலையாக பய்ன்படுத்தும் இவர்களின் கேடு கெட்ட மனித குல விரோத எண்ணத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


வாருங்கள் இந்துத்துவ வெறியர்களே! ... நேர்மையிருந்தால் எமது கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!!!

நேர்மையற்ற கயவர்களின் கடைசிப் புகலிடம் மத அடிப்படைவாதம்!!!


அசுரன்

Related Article:

#1) மும்பை தாக்குதல்

#2) சிறு தெய்வங்களுக்கு ஆபத்து - நாட்டார் வழிபாட்டு முறையை விழுங்கும் பார்ப்பினியம் குறித்த கற்பக விநாயகத்தின் கட்டுரை

Wednesday, December 13, 2006

ரஜினி - கழிசடைக்கு பிறந்த நாள் - வர்க்க பிறழிகள்!

ரஜினி என்ற கழிசடைக்கு பிறந்தா நாள் கொண்டாடும் வர்க்க பிறழிகள்!

ஜினி என்ற கழிசடைக்கு பதிவு போடும் முதுகெலும்பற்ற பிறவிகள் உலாவும் இதே தமிழ் மணத்தில் புரட்சிக்காரன் பகத்சிங்கிங்கின் 100 வது பிறந்த நாளுக்கு எவனும் பதிவு போடவில்லை.


இது எனக்கு வருத்தம் தரவில்லை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. சமூகத்தின் யாதர்த்த நிலையை ஒரு கம்யுனிஸ்டை விட யாரும் அதிகமாக உள்வாங்கிவிட முடியாது.


ஆயினும் அதே கம்யுனிஸ்டின் கடைமையாக அந்த யாதர்த்ததின் கேடு கெட்ட அம்சங்களை விமர்சிக்க வேண்டிய கடமையும் உள்ளது.அதனால்தான் இந்த சின்ன பதிவு.


என்ன செய்ய... மக்களின் நாட்டுப் பற்றும், கலை ரசனையும் ரஜினியின் களைந்த முடிகளில் சிக்குண்டு தவிக்கிறது. அவனோ உழைக்கும் மக்களின் காசுகளை சுரண்டி கொழுத்து இன்று தத்துவம் பேசித் திரிகிறான்....


இப்படி ஒரு சாக்கடைப் பன்றியின் பிறந்த நாளை நாமும் ஞாபகம் வைத்து கொண்டாட வேண்டும என்பது மறுகாலனியாதிக்க சூழலில் ஆதிக்கம் செலுத்தும் கழிசடை பண்பாட்டின் விதி.


ஏனேனில் ஏகாதிபத்திய பண்பாட்டுச் சூழல் ஆக பெரும்பான்மையாக கழிசடைத்தனத்தையே கலச்சார தளத்தில் உற்பத்தி செய்கிறது....


அசுரன்

Tuesday, December 05, 2006

அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!

லேஆப்ஃ(Lay Off), லேஆப்ஃ குறித்த பயம், சந்தையின் உத்திரவாதமின்மை மற்றும் பங்கு சந்தை சரிவு குறித்த பயம், தாரளமாக சகட்டு மேனிக்கு முதலீடு செய்தல், வார இறுதி நாட்களில் தலையை அடகு வைத்தாவது இன்பம் நுகர எத்தணிப்பது, வீட்டுக்கள் ஒருவர் வேலை முடித்து வரும் பொழுது இன்னொருவர் வேலைக்கு கிளம்பும் ஒரு விதமான உறவு முறை இயல்பாக மாறிப் போனது, நுகர்வு வெறி, தனக்கு முடியாத அளவுக்கும் அதிகமாக விசயங்களை இழுத்துப் போட்டுக் கொள்வது, தன்னையே சந்தேகப்படுவதும், தன்னைச் சுற்றி உள்ளவர்களை சந்தேகப்படுவதும் - இவையெல்லாம் உலகமயம் இந்தியாவுக்கு கொடுத்த பரிசுகள் என்று நாங்கள் சொல்லவில்லை. சத்யம் நிறுவனத்தின் இணை நிறுவனர் G.B. பிரபாத் சொல்கிறார்.

இந்த விசயங்கள் எல்லாம் சேர்ந்து உலகமய பொருளாதார அமைப்பில் பின்னி பிணைந்துள்ள அனைத்து வர்க்கங்களையும், அனோமிய் என்ற மனோநோய்க்கு இட்டுச் செல்கிறது. இந்த அனோமிய் பின்புலமாக கொண்டு ஏகாதிபத்திய சமூக அமைப்பை கலாச்சார, பண்பாட்டு தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாத்.

அதாகப்பட்டது, உலகமய பொருளாதாரத்தின் உடன் விளைவாக அது சார்ந்த உற்பத்தி உறவுகளில் ஈடுபட்டுள்ள மனிதர்களுக்கு வரும் மனோவியாதியை அடிப்படையாகக் கொண்டு சத்யம் கம்யுட்டரின் இணை நிறுவனர்(Co Founder) G.B. பிரபாத் ஒரு நாவல் எழுதியுள்ளார். அது குறித்து இந்து பத்திர்க்கையின் மெட்ரோப்ளஸ் அவரை அணுகி ஒரு சிறிய உரையாடல் ஒன்றை நடத்துகிறது. அந்த அனுபவம் ஒரு சிறு கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

உலகமயத்தின் பலன்களை அனுபவித்தவர்களில் ஒருவரான அவர், உலகமயம் சார்ந்த சுரண்டல் பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்தியாவின் முகத்தை மாற்றியவர்களில் முக்கியமானவரான அவர், அதன் பின் விளைவுகள் அவருடன் உற்பத்தி ரீதியாக நெருங்கிய தொடர்புள்ள வர்க்கத்தினரையே(IT employee etc) பாதிப்பதை உணர்கிறார். ஆக, அந்த அம்சத்தில் உலகமயத்தின் மோசமான பக்கங்களை அம்பலப்படுத்துகிறார். உலகமய ஏகாதிபத்திய பொருளாதாரத்தை அவர் படு மோசமான அளவு விமர்சிப்பதாக மெட்ரோ ப்ளஸ் சொல்லுகிறது.

தரகு வர்க்க பிரபாத் சொல்கிறார்: "நான் பங்களித்து உருவாக்கிய ஒரு உலகம் எனது மனதை கவர்தாக இல்லை". "சில நேரங்களில் நம் நோக்கத்திற்க்கு மாறான விசயங்களை உருவாக்கி விடுகிறோம்".

யுப்பி கலாச்சாரமும், தனி மனித நுகர்வு வெறியும், ஒட்டு மொத்த சமூகத்தின் உயர் பண்புகள் அதலபாதளத்தில் புதைக்கப்பட்டும் உள்ள சூழலில் (இது பொதுவாக புரட்சிகர சூழலுக்கு முந்தைய சூழல்தான்) இது போன்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதில் அவரது தொழில் துறையின் பங்களிப்பை மதிப்பிட்டு கூறியவைதான் மேலெயுள்ள அவரது வரிகள்.

வேலைவாய்ப்பு, ஐந்திலக்க சம்பளம், சராசரியை விட சிறிது(சிறிது மட்டுமே) சுகமான(சுகாதாரமான அல்ல) வாழ்க்கை இவற்றை காரணம் காட்டி உலகமயத்திற்க்கு ஆதரவாகவும், தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குரல்களுக்கு எதிராகவும் கோசமிடும் IT தொழிலாளர்களை இங்கு விவாதம் செய்ய அழைக்கிறேன். உங்களது துறையைச் சேர்ந்த முன்னணி வீரர் ஒருவர் வாயிலிருந்துதான் நாங்கள் சுட்டிக் காட்டும் அதே பிரச்சனைகள் பற்றிய அங்க்லாய்ப்பு வந்துள்ளது.

நாங்க சொன்னாக்க நம்ப மாட்டீங்க. இவர் சொல்றாரே என்ன சொல்லப் போறீங்க....?

'அமெரிக்காவின் மிகபரவலான நோய் - தனிமை' இது இந்தியாவில் இப்பொழுது பரவி வருகிறது என்கிறார் இவர். மேலும், 'இங்கு தனிமையில் இருப்பவர்கள் பெரும்பான்மையாகவும், பிறர் அவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டும் உள்ளன்ர். இந்த புதிய சூழலுக்கு சரியான பெயர் வைக்க விரும்புகிறேன்' என்கிறார். தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் யாரேனும் இந்த பெயர் வைப்பு வைபவத்திலும் அவருக்கு உதவலாம்.

பொருள் நுகர்வு நாட்டம், கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாளித்துவம், தொழில்நுட்ப சாதனங்களைச் சார்ந்த ஒரு வாழ்க்கை இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கும் ஒரு நிச்சயமற்ற சமுதாயம் குறித்த நிலையை சித்த்ரிக்கிறது அந்த நாவல். ஆயினும் இன்றைய இந்தியாவின் இளைய சமுதாயம் அப்படிப்பட்ட ஒரு சமூக வாழ்வை அடைவதைத்தான் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

"ஆனால் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அப்படி ஒரு நிலை இருப்பதை நாம் உணர்வதில்லை அல்லது அதிலிருந்து ஓடி ஒளிய விரும்புகிறோம். முரன்நகையாக, தகவல் தொடர்பின் உச்சத்தில் உள்ள ஒரு உலகத்தில், தனிமையும், அதீத அச்சமும், மனச் சஞ்சலுமும்தான் அதிகப்படியாக உணரப்படுகிறது. எந்த ஒரு உறவும் உத்திரவாதப்படுவதாக இல்லை." இப்படி சொல்வது நாம் அல்ல. ஏகாதிபத்தியத்தின் குலக் கொழுந்து திருவாளர் பிரபாத், சத்யம் இணை-நிறுவனர் கூறுகிறார்.

"அதிகப்படியான தனிமனித வாதம் நிலவுகிறது, முற்றுமுதலாக நாம் தனி மனித மோக வயப்பட்டுள்ளோம், நாம் இணையத்தின் மூலமாக ஒரே ஒரு நபரிடம் மட்டுமே தொடர்பு கொள்கிறோம் அது நாம்தான்' - இப்படி ஏகாதிபத்திய தனிமனித வாதத்தின் அவலத்தை அம்பலப்படுத்துகிறார் பிரபாத்.

"எனது தாத்தாவோ அல்லது உங்களது தாத்தாவோ தனது வேலையை இழந்து விடுவது குறித்தோ அல்லது தனது மனைவி தன்னைவிட்டு விலகிவிடுவது குறித்தோ கவலைப்பட்டதுண்டா?" இப்படி கேட்ப்பது நாமல்ல. இது போன்ற நிலையிலுள்ள வர்க்கத்தை சுரண்டி, கொழுத்த லாபம் சேர்க்கும் தரகு வர்க்க முதலாளி பிரபாத் கேட்க்கிறார்.

சொல்லுங்கள் IT தொழிலாளர்களே என்ன பதில் சொல்லலாம் என்று? பிரபாத் உங்களுக்கு உலகமயத்தின் நன்மைகள் பற்றி தெரியாது என்று அறீவுரை பகர்வோமா? தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு சாலவும் சிறந்த் ஒரு எதிர்காலம் ஒளிமயமாக காத்திருக்கிறது, உங்களது பயம் ஒரு துர் கனவு என்று ஆலோசனை சொல்லுவோமா? வேலை வாய்ப்பு குறித்து RBIயும் சொல்கிறது, உலகமயத்தின் சாரதிகளில் ஒருவரும் சொல்கிறார் இன்னுமா மயக்கம்?

அவர் தொழில்நுட்பம் முதலாளித்துவ/ஏகாதிபத்தியத்தின் கையில் மாட்டிக் கொண்டு படும் பாடு குறித்தும் குத்திக் காட்டுகிறார், "தொழில்நுட்பத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலும் அதை வைத்து என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும் தான் விசயம் உள்ளது. தொழில்நுட்பம் என்பதை பொருத்தளவில் தன்னளவில் எந்த ஒரு நல்லது கெட்டதுகளை கொண்டிருப்பதில்லை."

முதலாளித்துவத்தின் இழி நிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகிறார். "முதாலாளித்துவத்தால் செலுத்தப்படும் தொழில் நுட்பம் குறித்து யாரேனும் எச்சரிக்கை செய்து கொண்டிருக்க வேண்டும்". "முதலாளித்துவம் நமது உள்ளுணர்வுகளை கட்டவிழ்த்து விடுகிறது, நாமோ நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நம்க்கு தீங்கு விளைவிக்கும் என்றூ பார்க்கிறொம்'. இதே விசயத்தைத்தான் இயற்கையுடன் முரன்படும் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் இரு கட்டுரையாக இங்கு பிரசுரிக்கப்பட்டது.

பிரபாத்தின் இந்த கட்டுரை கூட தனிமனித வாதத்தின் அடிப்படையில்தான் பிரச்சனையை அணுகுகிறது. அது எந்த அம்சத்திலும் உலகமய பொருளாதாரத்தில் ஆதாயமடையும் துறைகளில் ஏற்ப்படும் விளைவுகளை சித்தரிப்பதைத் தாண்டி, இதே பொருளாதாரம் இந்தியாவின் இதர பெரும்பான்மை மக்களின் வாழ்வை சுனாமியாக சூறையாடி இருப்பது குறித்து எதுவும் சொல்லுவதாக தெரியவில்லை.

நாம் எதை இழந்து எதை பெறுகிறீர்கள்? கணிணியுடன் இணைந்து அதன் ஒரு உறுப்பாக மாறி சொந்த வாழ்க்கையை இழப்பதுடன், சமூக வாழ்க்கையையும் இழந்து திக்கற்ற நிற்கிறோம். எந்த ஒரு தொழிலில் ஈடுபடுபவனுக்கும், அந்த தொழிலில் ஈடுபடும் உடல் உறுப்பு(கை, கால், விரல் etc) செய்யும் வேலைக்கேற்ற பாதிப்பை அடையும். அப்படியெனில் கணிணியின் ஒரு அங்கமாக மாறிப் போன நமது மூளைக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்ப்படுகிறது?
பெங்களூரில் போன வருடம் தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும் சதவீதத்தனிர் IT துறையினர் என்ற விசய்ம் நமக்கு எதை உணர்த்துகிறது? மனோ தத்துவ நிபுனர்களை அணுகுபவர்களில் அதிகம் பேர் IT துறையினர் என்ற் தகவல் எதைக் காட்டுகிறது? நமது மன அழுத்தத்தை குறைக்க நம்மை சுரண்டிக் கொழுக்கும் தரகு வர்க்க முதலாளிகள் அரங்கேற்றும் கேளிக்கைகள் எதைக் காட்டுகிறது?

குறைந்த கூலி என்ற அம்சமும், இந்திய பணத்தின் மதிப்பு டாலருக்கு நிகராக குறைவாக இருப்பது இந்த அம்சங்கள் உண்மையாக இருக்கும் காலம் மட்டுமே நமது வேலை உத்திரவாதப்படுத்துகிறது. நமது மென்பொருள் தயாரிக்கும் திறமையல்ல மாறாக அவனுக்கு லாபம் தயாரித்துக் கொடுக்கும் திறமை-அதாவது குறைந்த கூலி- இதுதான் மதிக்கப்படுகிறது. இது தவிர்த்து உலக பொருளாதார சூழல், நம்மைவிட குறை கூலி உழைப்பை வழங்க தயாராயிருக்கும் வேறு நாடுகள், உள்நாட்டிலேயே வெளி நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வழி வகுக்கும் SEZ. இப்படி கண் முன்னே நமது உரிமைகளை குழி பறிக்க தேவையான விசயங்கள் நடக்கும் போது கூட சுகநாட்ட வாதத்தில் மூழ்கி திளைத்து நிதர்சனத்தை உள்வாங்கும் திறன் இழந்து நிற்கிறோமே என்ன செய்யலாம்?

வார இறுதி நாட்களிலும் வேலை, IBM-ன் யுட்டலிசேசன் டார்கெட்(90% மேல் ஒவ்வொரு நபரும் billable ஆக இருக்க முயற்சி செய்ய வேண்டும்), விப்ரோவின் மாணவ தொழிலாளர்கள், இப்படி நமது உழைப்பை சுரண்டி கோடிகளில் குளீர் காயுபவர்கள், கம்பேனியின் ஒரு துறையில் லாபம் இல்லையென்றவுடன் சம்பளத்தை குறைப்பதும் நடக்கிறது. கம்பேனி ஒட்டு மொத்தமாக லாபம் எடுக்கும் போதே இவ்வாறு எனில் இந்திய தொழிலாளர்கள் இனிமேலும் அவர்களின் டார்லிங்குகள் கிடையாது என்ற நிலை வரும் பொழுது என்ன செய்வார்கள்? இது தவிர்த்து பல்வேறு உடல் உபாதைகள் வேறு.

நம்மை விட அதிக உரிமைகளை சட்ட ரீதியாக பெற்றுள்ள அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட இந்த கம்பேனிகளின் அநியாயங்களை எதிர்த்து போரிடுவதற்க்கு சங்கமாக திரண்டுள்ளனர். அதுவும் அமெரிக்க கார்ப்போரேட் வரலாற்றில் முதல் முறையாக IBM IT (Alliance@IBM) தொழிலாளர்கள் சங்கமாக திரண்டு பென்சன் பணத்தில் அவன் கைவைப்பதை எதிர்த்து போராடி வெற்றி பெற்றுள்ளனர். உரிமைகள் உத்திரவாதமான அவர்களுக்கே சங்கம் தேவைப்படுகிறது, நமக்கு?

IT தொழிலாளிக்கு எதிராக எப்படியெல்லாம் ஆப்பு வைப்பது, சுரண்டலை அதிகப்படுத்தி எப்படியெல்லாம் லாபத்தை அதிகப்படுத்துவது என்பது குறித்து கலந்து பேசி ஒரு பொது முடிவுக்கு வருவதற்க்கு IT முதலாளி சங்கமாக திரள்கிறான்(NASCOM, CII). National Skills Registry என்ற பெயரில் நமக்கு அடையாள எண் கொடுத்து மையப்படுத்தப்பட்ட ஒரு தகவல் கிடங்கை ஏற்படுத்தியுள்ளான். தேவைப்பட்டால் இந்தியாவின் எந்த ஒரு IT தொழிலாளி மீதும் கரும் புள்ளி குத்தி இந்தியாவில் அவனுக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்க விடாமல் செய்யலாம். ஆக, எதிர்காலத்தில் IT தொழிலாளி மீது அவனுக்கு ஆதிக்கம் தேவைப்படும் என்பதை உணர்ந்து இப்பொழ்து தயாராகிறான் அவன். நாமோ பலி ஆடுக்கு நல்லா தீவனம் கிடைக்கிறது என்று தேமேவென்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எதை இழந்து எதை பெறுகிறோம்? நமது பெற்றோர்கள் அரசு நிறுவனங்களில் வேலை பார்த்து ரிடையர் ஆகி வெளி வரும் பொழுது பெண்ணின் திருமணம், பையனின் படிப்பு, அது போக குறிப்பிடத் தகுந்த பென்சன், கையில் ஒரு பெரிய தொகை, இவை தவிர்த்து வீடு வாசல் அமைதியான வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் என்று இருந்தார்கள். நமது நிலைமை?

இந்த அம்சங்களையேல்லாம் விளக்கி ஒரு கட்டுரை ஆறேழு மாதங்களுக்கு முன்பு வந்து மிகப் பரவலாக அனைவராலும் மெயிலில் அனுப்பட்டது.

இதை விடுங்கள் ஒரு சமூகமே சீரழிந்து கொண்டிருக்கும் பொழுது, நாம் மட்டும் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட முடியுமா? கார்போரேட் லெசன் என்ற பெயரில் சிறு கதைகள் அடங்கிய ஒரு இமேயிலை பெரும்பாலனவர்கள் படித்திருப்பீர்க்ள். அதில் குழுவில் ஒருவருக்கு பிரச்சனை வரும் பொழுது நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நமக்கும் ஆபத்து வரும் பொழுது பேரிடராக இருக்கும் என்பதை வலியுறுத்தி ஒரு கதை வரும். இந்த சமூகம் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வோரு மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்ய உற்பத்தி செய்கிறது. இதில் சமூகத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதி துன்பத்தில் துவளும் பொழுது நாம் மட்டும் எப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட முடியும்?

என்ன செய்யலாம்? க்ளையண்டின் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வு சொன்ன நேரம் போக நமது பிரச்சனைகளையும் ஆய்வு செய்து தீர்வு குறித்து யோசிக்கலாம். After all, மற்ற யாரையும் விட சிந்திக்கும் திறமையிலும், அதற்க்கு தேவையான தகவலகளின் அருகாமையிலும் நாம் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறோம். பிரச்சனை நம்மை பற்றி சிந்திக்க நமக்குக் கிடைக்கும் சொற்ப நேரம்தான்......

என்ன செய்யலாம்?.....

அசுரன்



***********


அனோமிய் நோய் குறித்து:

ஒவ்வொரு சமூகமும், மனிதனும் தான் ஈடுபட்டுள்ள உற்பத்தியின் தன்மையைப் பொறுத்த அறிவு, மனவள முதிர்ச்சி அடைகிறான். இதுதான் சமூக பரிணாமத்துவம் குறித்த மார்க்ஸிய பொருள்முதல்வாதப் பார்வை. ஆக, ஏகாதிபத்திய சமூகத்தில் ஒரு பக்கம் நுகர்வு வெறி மூலமாகவும், இன்னொரு பக்கம் அதிகப்படியான சுரண்டல் மூலமாகவும்(12 மணீ நேரம் வேலை) சமூகத்துடனான தொடர்பை இழக்கிறான் மனிதன். அதே நேரத்தில் நுகர்வு வெறியை நியாயப்படுத்தவும், சமுகமாக தன்னை உணர்ந்து கூட்டுச் சேர்வதற்க்கான அடிப்படைகளை அடித்து நொறுக்கவும் தேவையான பல்வேறு பொதுக் கருத்துக்களை அவனது ஊடக பலத்தின் மூலம் உறுதிப் படுத்துகிறான். அப்படி ஒன்றுதான் தனிமனித வாதம். இதன் காரணமாக முந்தைய சமூகத்தின் மதிப்புவாயந்த பண்புகள் இன்று இழிச்சவாயத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பார்க்கப்படுகிறது. விளைவு, இந்த சூழலிலான உற்பத்தியில் ஈடுபடும் ஒரு மனிதன் தனது பழைய உயர் மதிப்புகளை இழக்கிறான். இவை தவிர்த்து இந்த சூழல் உருவாக்கும் கலாச்சார பிரச்சனைகளும், தொழில் ரீதியான பிரச்சனைகளும், உடல், மன உபாதைகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு மனோ வியாதிதான் - அனொமிய்.

"Alienation and purposelessness experienced by a person or a class as a result of a lack of standards, values, or ideals" - Anomie(அனொமிய்)

"தரம் தாழ்ந்த நிலை, உயர் பண்புகளை இழத்தல் இவற்றின் விளைவாக ஏற்ப்படும் அந்நியப்படுதலும், எந்த ஒரு குறிப்பிட்ட லட்சியமோ/நோக்கமோ அற்ற வாழ்க்கையும் ஏற்ப்படுத்தும் மனவியல் பிரச்சனை" - அனோமிய் எனப்ப்டுகிறது.

Must Read articles:

IBM IT union
software_job_india
workers-of-cyber-world-uniteatleast

corporate-lesson-secret-of-dreaming
it-survivors-staying-alive-in-software
are-we-living-at-mercy-of-their-profit
still-sleaping-jobs-started-flying
இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1
அழிவில் லாபமும், லாபத்தால் அழிவும் - பாகம் II
கணிணி தொழில்நுட்ப வல்லுனர்களே !

இது குறித்து கருத்துக்களை ஆலோசனைகளை எனக்கு தனிமடலிலும் அனுப்பலாம்:

asuran07@gmail.com

Friday, December 01, 2006

பெண்மையை ஒரு பெண் தரிசிக்கும் தருணம்!

தோழி பொன்ஸ் எழுதிய 'பெண் ஏன் அடிமையானால்' கட்டுரை இப்பொழுது பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருப்பதால்(:-)), அந்த பரபரப்பின் ஊடாக, பெண்ணடிமைத்தனம் இல்லை என்பதாக நம்பும் ஒரு பெண், அதை - பெண்கள் மீதான சமூகத்தின் வன்முறையை - நேரடியாக அனுபவிக்கும் தருணம் குறித்த ஒரு சிறுகதையை இங்கு மறு பிரசூரம் செய்கிறேன். புதிய கலாச்சாரம் இதழ் ஏப்ரல் 2005-ல் வந்த கதை.
பெண்மை என்பது எவ்வளவு வன்மம் நிறைந்த ஒரு கருத்தாக்கம் என்பதை இந்த கதை படிக்கும் பொழுது உணர்கிறோம்.
பொம்பளையா அவ?.... எவ்வளவு சுலபமான கேள்வி. தனக்கான நியாயமான உரிமையுடன் வாழ தலைப்படும் ஒரு பெண்ணாக இந்த கேள்வியை அனுபவித்து பாருங்கள்.... அதன் வலி புரியும், அதன் வன்முறை புரியும்.
ஒரு பெண்ணின் மீது களங்கம் கறிபித்து அவதூறு கிளப்புவதற்க்கு இந்த சமூகம் எந்த முகாந்திரமும் எதிர்பார்ப்பதில்லை. அவள் நடைமுறை வழக்கங்களை உடைக்க வேண்டாம், சிறிது கீறினாலே போதும் அதையே தனக்கான அழைப்பிதழாக எடுத்துக் கொண்டு நாட்டமை செய்ய தன்னெழுச்சியாக முன் வருகிறது இந்த சமூகம்.

அசுரன்

***************

சுனாமி பேரழிவுக்குப் பிறகு பட்டினப்பாக்கம் பகுதியை அமைதி சு+ழ்ந்து கொண்டிருந்த ஒரு நாளின் மாலைொ காற்றின் அசைவு கூட இன்றி அமைதியாக இருட்டிக் கொண்டு வரும் மாலை. ஏனோ வானம் கொஞ்சம் மூட்டம் போட்டிருந்தது. கரையோரங்களிலிருந்து வௌpயேறிய மக்கள் சாலை ஓரங்களிலும், சரொச்சுகளுக்குள்ளும், தேநீரொக் கடைகளுக்கு அருகாமையிலும் கூட்டம் கூட்டமாய் ஒதுங்கியிருக்கிறாரொகள். நான் கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். தற்செயலாகத் திரும்பினேன். எனக்கு வலப்பக்கம் சாலையில் ஒரு பெண் நடந்து கொண்டிருக்கிறாள். இன்னொருமுறை திரும்பிப் பாரொக்க வைத்த பெண்.
சுடிதாரின் துப்பட்டாவை இடுப்பில் இறுக்கிக் கட்டி நெஞ்சை நிமிரொத்திக் கொண்டு அவள் எடுத்து வைக்கும் அடிகள் அழுத்தமும், அதிரொவும் ஏற்படுத்துபவைகளாக இருந்தன. கைகால்களிலிருந்த உடைகளை வேகமாக மேல் நோக்கிச் சுருட்டி விட்டுக் கொண்டும், குனிந்து கைகளை படாரொ, படாரொ என்று துடைகளில் அறைந்து கொண்டும் நடந்தாள். ஏதோ சில கோபமான வாரொத்தைகள் தௌத்துக் கொண்டிருந்தன. அவளுடைய உயரம் நிச்சயமாக ஆறடி இருக்கும். கருத்த நிறம், கூரொமையான மூக்கு பின்னிய கயிறு போன்ற நீண்டு தொங்கும் குதிரைச் சடை. அணிந்திருந்த சுடிதாரொ, ஒரு ஆண் பேண்ட் சட்டை போட்டதைப் போலிருந்தது. எலும்புகளாலான உடம்பு. ஆனால் இரும்பு போன்ற எலும்புகள், கைகளிரண்டும் வீச்சரிவாள் போல நீண்டு தொங்கிக் கொண்டிருந்தன. அவளுக்குப் பின்னால் வாலைப் போலத் தொடரும் இரண்டு குட்டிக் குழந்தைகளும் அவளுக்கு இணையான வேகத்தில் வளைந்து துருதுருவென்று நடந்து கொண்டிருக்கிறாரொகள். அவள் நின்றதும் நின்று வேடிக்கை பாரொக்கிறாரொகள். அலை ஓசையைத் தவிர சுற்றிலும் அமைதி.

அமைதியைக் குலைக்கும் விதமாக வந்தது அந்தச் சத்தம். சாலையின் வலப்பக்கமாக நடந்து கொண்டிருந்த அவளுக்கு பின்னாலிருந்து வெறித்தனமாய்க் கத்திக் கொண்டே வேகமாய் வந்த ஒருவன் வந்த வேகத்தில் அவள் மீது பாய்ந்து இரண்டு கையாலும் அவளுடைய குதிரைச் சடையை பிடித்து வட்டமாகச் சுழற்றினான். தலை கிறுகிறுக்கும்படி தரையில் பல சுற்று சுற்றிவிட்டு பிறகு நேராக நிறுத்தி வைத்து அடி வயிற்றில் ஓங்கி ஒரு உதைவிட்டான்.

அவளிடமிருந்து எந்தச் சத்தமுமில்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்ற இடத்திலேயே உட்காரொந்து விட்டாள். பிறகு ஏதோ திட்டினாள். குழந்தைகள் இரண்டு பேரும் அவளை மிரண்டு போய்ப் பாரொத்தாரொகள். பிறகு அவள் பின்னால் போய் நின்று கொண்டாரொகள். அவள் அடிவாங்கி நிலை குலைந்து போயும் குழந்தைகள் அழவில்லை. அவளும் வயிற்றைப் பிடித்து வலியை அடக்கிக் கொண்டாள்.

அடுத்த கணமே சற்றும் எதிரொபாரொக்காதபடி வேகமாக எழுந்தவள் ஒரே பாய்ச்சலில் அவனுடைய சட்டையைச் சுருட்டிப் பிடித்தாள். ஒரு கை சட்டையைப் பற்றியிருக்க, மறுகையால் அவனுடைய வயிற்றிலும் மூக்கிலும் மாறிமாறிக் குத்தினாள். அவளுடைய நீண்ட கைகளின் வேகமான வீச்சு அவனுடைய உடம்பில் கனமாக இறங்கியது. இடைவிடாமல் குத்தியதில் நிற்க முடியாத நிலையில் துவண்டவனை கீழே தள்ளிவிட்டு இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு மூச்சிரைக்க நின்று திட்டிக் கொண்டிருந்தாள்.

சிறிதுநேர அமைதிக்குப் பிறகு மீண்டும் கத்திக் கொண்டே எழுந்தவன் வேகமாக அவளை நெருங்கி இரண்டு கைகளையும் பிடித்து முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு முரட்டுத்தனமாக முறுக்கினான், முறுக்கிய நிலையிலேயே வைத்துக் கொண்டு நடு முதுகிலேயே ஓங்கி ஓங்கிக் குத்தினான். அவள் தாங்க முடியாத வலியால் பச்சை பச்சையாகத் திட்டிக் கொண்டே கத்தினாள். அவனோ எதையும் கண்டு கொள்ளாமல் வெறி பிடித்தவன் போலப் பல்லைக் கடித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டேயிருந்தான்.

அவள் உடலை ஒரு சுழற்று சுழற்றி தன் கைகளை விடுவித்துக் கொண்டாள். என் முகத்தில் "சப்'பென்று துப்பியது போலிருந்தது. விடுபட்ட அதே வேகத்தில் அவனைக் கீழே தள்ளியவள் வயிற்றிலேயே குடல் கூழாகும்படி மிதிமிதியென்று வெறி தீரும் வரை மிதித்துத் தள்ளினாள். மீண்டும் எழமுயன்றவனை நிமிரொத்தி வைத்துக் கொண்டு தன் காலுடைகளை மேலே சுருட்டி விட்டுக் கொண்டாள், பிறகு அவனுடைய நடு நெஞ்சிலேயே ஓங்கி ஒரு உதைவிட்டுவிட்டுக் கராத்தே வீரரொகள் நிற்பது போல ஒரு காலை முன்னாலும், பின்னாலும் அதேபோல கைகளையும் வைத்துக் கொண்டு நின்றாள். கூட்டம் இரண்டு பேரையும் சுற்றி பாதுகாப்பு வளையம் போல வட்டமாகக் கூடிவிட்டது.

அரசுக் குடியிருப்புகளின் மாடிகளில் நின்றுகொண்ட வாய் பிளக்கப் பாரொத்துக் கொண்டிருந்த குடும்பப் பெண்மணிகள் அதிரொச்சியால் மிரண்டு போயிருந்தாரொகள். இருவருக்கும் என்ன பிரச்சினை ஏன் சண்டை என்று கூட அறிந்து கொள்ள முடியவில்லை. அவனை யாரும் இப்படி அடித்து விட முடியுமா என்றெண்ணி எல்லோரும் மலைப்பாகப் பாரொத்தனரொ. கீழே விழுந்தவன் அதே நிலையில் அசைவின்றிக் கிடந்தான். அவனை வாய் ஓயுமளவுக்குத் திட்டித் தீரொத்துவிட்ட பிறகு கலைந்து போயிருந்த தலைமுடியை வாரி முடிந்து கொண்டாள் அப்பெண். பிறகு அவனை அலட்சியமாக ஒரு எத்து எத்தி விட்டு நகரொந்தாள். குழந்தைகளும் ஓடிப் போய் அவளோடு ஒட்டிக் கொண்டு நடந்தன.

காற்று வேகமாக வீசியதில் சாலைப் புழுதியும் பழைய குப்பைகளும் சுழன்றடித்தன. லேசான தூறலும் விழுந்து கொண்டிருந்தது. தரையில் கிடந்தவன் அசைந்தான். எதையோ எதிரொபாரொத்து நின்ற கூட்டம் நகரவில்லை. கண்களைத் திறந்து பாரொத்துவிட்டு மீண்டும் அதேநிலையில் கிடந்தவன் சில நொடிகளில் எழுந்தான். சுற்று முற்றும் பாரொத்துவிட்டு சாலையின் மூலையில் கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கும் கருங்கற் குவியலை நோக்கி நடந்தான். குனிந்து கைகளுக்கு அடக்கமும் கனமுமான ஒரு கருங்கல்லை தேடி எடுத்தான். பிறகு அவளை நோக்கிக் கத்திக் கொண்டே ஓடினான்.

அங்கிருந்து சற்று தூரம் கூட கடந்திடாதவள் சத்தம் கேட்டுத் திரும்பினாள்ொ அவன் கல்லுடன் நிற்பதைக் கண்டு தயங்கித் தயங்கி முன்னால் வந்தாள். அவன் அடிக்கப் போவது போல கைகளை உயரொத்தி ஓங்கியதும் குழந்தைகளைத் தனக்குப் பின் மறைத்தபடி மேலும் முன்னே வந்து நின்றாள்.

""தோ பாரொ நீ ஆம்பளின்னா ஒத்தக்கி ஒத்த நில்லு. ""பொட்ட மேரி கல்லெடுத்துனு வரொறாத'' என்று கைகளால் மாரொபில் அறைந்து கொண்டு சவால் விட்டாள்.

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளை நெருங்கியவன் அடிப்பதற்கு வாகாக மிக அருகிலேயே நின்று கொண்டு அவருடைய கண்களுக்குக் கீழேயும் மூக்குக்கு மேலேயுமான நடு இடத்தில் வசமாக கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஓங்கி ஒரே இறுக்காக இறுக்கி விட்டான். ""சத்'' என்ற ஒரே ஒரு சத்தம் தான், கூழுக்குள் கல்லைப் போட்டால் விலகுவது போல கருங்கல்லின் கூரொமை சதையை பிளந்து கொண்டு இறங்கியது.
கூட்டம் எவ்வித அதிரொச்சிக்கும் ஆட்படாமல் அதேபோல பாரொத்துக் கொண்டிருந்தது. இவ்வளவு பேரில் யாருக்குமே தடுக்க மனம் வரவில்லையா, இப்படி வேடிக்கை பாரொத்துக் கொண்டிருக்கிறாரொகளே. அடுத்த கணமே அவன் ஓடிவிட்டான்.

கைகளால் முகத்தைப் பிடித்தபடி உட்காரொந்தவளின் வேதனை முகக் கோணலிலும், லேசான அனத்தலிலும் மட்டுமே தெரிந்தது. கண்கள் லேசாகக் கலங்கியிருந்தாலும் சொட்டுக் கண்ணீரொ கூட வௌpயேறவில்லை. குழந்தைகளும் விழித்தபடி கூட்டத்தையும் அவளையும் பாரொத்தனவே தவிர அழவில்லை. நானும் கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்திருந்தேன். இந்தக் குழந்தைகளுக்கு அழவே தெரியாதா என்று அவரொகளையே பாரொத்துக் கொண்டு நின்றேன்.

இரண்டே நிமிடம்தான் அவளுடைய அமைதி, பிறகு கடுங்கோபத்தோடு எழுந்தவள் ஊற்றைப் போல் பெருக்கெடுக்கும் இரத்தத்தை வழித்து வழித்து உதறினாள், முகத்தில் கைகளைக் கொண்டு காயத்தை தொடும்போது வௌொளைச் சதை வௌயே தொங்கியது. பொட்டுக் கண்ணீரொ கூடச் சிந்தாமல் எப்படி இவளால் கல்லைப் போல் இருக்க முடிகிறது?

தொடரொந்து காயத்திலிருந்து வௌpயேறி முகத்தின் வழியே இறங்கும் இரத்தத்தால் அவளுடைய பற்களெல்லாம் சிவப்பாகிப் போயிருந்தன. இரண்டு கைகளிலும் உள்ளங்கையிலிருந்து முழங்கை வரை இரத்தம் நீளமான கோடுகளை இழுத்திருந்தது. சுற்றிலும் தெறித்து விழுந்த இரத்தத் துளிகள் குழந்தைகளின் முகத்திலும் தௌpத்திருந்தன. இரத்தங்கலந்த எச்சிலைக் காறித் துப்பிவிட்டு எழுந்தவள், அவன் ஓடிய பக்கம் ஓடினாள்.

அம்மா அருகில் இல்லை என்றாலே அழத் துவங்கி விடும் குழந்தைகளைப் போல அவரொகள் அழவில்லை, ஏதோ புரிந்து கொண்டதைப் போல அமைதியாகி நின்றாரொகள். ஓடியவள் சில நிமிடங்களிலேயே கோபமாகத் திட்டிக் கொண்டே திரும்பி வந்தாள்.

""பொட்ட பாடு பையா, நீ சீனிவாசபுரத்துக்கு வராமலா புடுவ. வா உனுக்கு அங்க வச்சிக்கிறேன்'', ""ஆம்பிளியாடா நீ கல்லெடுத்துனு அடிக்கிறயே தூ, பாடையில புடுவ நீ'' என்று மீண்டும் காறித் துப்பிவிட்டு உடைகளைச் சரிசெய்து கொண்டாள். பிறகு உட்காரொந்து குழந்தைகளின் முகத்தில் தெறித்திருந்த இரத்தத் துளிகளைத் துடைத்து விட்டு அவளைத் திட்டிக் கொண்டே நடந்தாள். நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இப்போது கூட்டம் ஓரளவு கலைந்து போயிருந்தது. அவள் பக்கம் எந்தக் குற்றமிருப்பதாகவும் உணரமுடியாமல், அவள் பக்கம்தான் ஏதோ நியாயம் இருப்பதாகவும் நினைத்து மீதிக் கூட்டம் மனம் கனத்து நின்றது.

கூட்டத்தோடு கூட்டமாக நின்று இதுவரை சண்டையைப் பாரொத்துக் கொண்டிருந்த நான்கைந்து பேரொ கொண்ட கும்பலிலிருந்த ஒருவன், ""யாரொரா அவ, அவ பாட்டுக்கும் அட்சினு போயினேருக்கா, கொரலுக்குடு அவளுக்கு'' என்றான். உடனே கும்பலிலிருந்த இன்னொருவன் பலமாகக் கையைத் தட்டி கத்தினான். ""ஏய்... இங்க வாம்மே'' அந்தக் கும்பல் நன்றாக குடித்திருந்தது. அவரொகளில் சிலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஆடி ஆடி நேராக நிற்க முயன்று கொண்டிருந்தாரொகள்.

போய்க் கொண்டிருந்தவள் நின்று திரும்பிப் பாரொத்தாள்.

""ஒன்னத்தாம்மே இங்க வா'' என்று கத்தினான்.

""இன்னா'' என்றபடி அங்கேயே நின்று கொண்டு கேட்டாள்.

""இன்னாவா'' என்றபடி அவளை நோக்கி நடந்தவரொகள், ""இன்னா இன்னான்ற, அறிவில்ல உனக்கு, யாரொ மேலன்னா கல்லு பட்டிச்சின்னா இன்னா பண்ணுவ'' என்றான். அடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் இன்னமும் லேசாக வழிந்து கொண்டேதானிருந்தது. அதைத் துடைத்துவிட்டுக் கொண்டே சொன்னாள்.

""ஐய நானா மொதல்ல கல்லெடுத்துனு அட்சேன், என்னான்ட கேக்குற, அவன போயி கேளு'' என்று சாதாரணமாகக் கூறிவிட்டுக் கிளம்பினாள். உடனே கூட்டத்திலிருந்த இன்னொருவன் ""நீதாண்டி மொதல்ல கல்லெடுத்துனு அட்ச, பொம்பளியா நீ பஜாரி, பஜாரி'' என்றான். நடந்தவள் வேகமாகத் திரும்பி ""தோ பாரொ வாடி போடின்றதெல்லாம் ஒன் வீட்டாண்ட வச்சிக்க. என்னான்ட வாணாம் மரொரியாத்த கெட்டுடும்'' என்றாள்.
அம்பு போன்று வந்த அவளுடைய வாரொத்தைகளைச் சீரணித்துக் கொள்ள முடியாத கும்பல், ""ங்கோத்தா பொம்பளன்னு பாத்துனுகீறோம். மொவளே அட்சா கண்ணு முழி பேந்துடும். எங்கள இன்னா ஒம் புருசன் மாரி பொட்டப்பயன்னு நெனச்சினியா போடி... போடின்னா...'' என்று அடிக்கப் பாய்ந்து கொண்டு வந்தாரொகள். அவள் பாதுகாப்பாக கைகளை முகத்துக்கு குறுக்கே வைத்துக் கொண்டாள். அந்தக் கும்பலைச் சிலரொ தடுக்கவும் அமைதியானது. பிறகு கூட்டத்திலிருந்த சிலரொ ""இன்னாம்மா நீ பொம்பளியாட்டமா கீற பத்ரகாளியாட்டம் ஆடுறியே'' என்றாரொகள். அந்த நிலையிலும் அவள் அதைக் கிண்டல் செய்தாள். ""இன்னாது? அப்போ பத்ரகாளி பொம்பள இல்லியா இன்னா'' என்றாள்.

""எப்பா, பொம்பளைக்கு இருந்தாலும் இவ்ளோ வாயி இருக்கக் கூடாதுப்பா'' என்றும். ""என்னா திமிரா பேசுறா'' என்றும் திட்டினாரொகள். மீண்டும் குடிகார கும்பலிலிருந்த ஒருவன், ""பொம்பளியா இவ பஜாரி... பஜாரி ஆம்பளிய அடிக்கிறாள்னா இன்னா கொயுப்புடா இவளுக்கு'' என்றான். நெருப்பாய் தகித்துக் கொண்டு கிளம்பும் அத்தனை ஓங்கிய குரல்களுக்கும் மத்தியில் அவள் குரல் சற்று கம்மிப் போயிருந்தது.

""யோவ் இன்னாய்யா பெரிசா நாயம் பேசுற? அவன் என்ன அட்சான், நானும் அட்சேன், உங்களுக்கு இன்னாத்துக்கு இம்மாங்காண்டாக்கீது.'' அவள் பேசி முடித்த அடுத்தகணமே குடிகார கும்பலிலிருந்த ஒருவனுக்கு கடகடவென்று சுடு மண்டைக்கு ஏறிவிட்டது.

""ங்கொம்மாள இன்னாடி உனுக்கு இவ்ளோ திமிரு, தேவிடியா வுட்டா எங்களியே அட்சிடுவ போலிருக்கே'' என்று கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வேகமாகப் பாய்ந்து காயம்பட்ட இடத்திலேயே முட்டியைக் குவித்து ஓங்கி ஒரு இறக்கு இறக்கினான்.

அய்யய்யோ... எம்மாஆ... என்று வீறிட்ட அவளுடைய அலறல் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த உணரொச்சிகளை மொத்தமாகக் கட்டவிழ்த்து விட்டது, அழுகை பீறிட அப்படியே தரையில் விழுந்தாள். உப்புக் காற்றில் உறைந்து கொண்டிருந்த இரத்தம் சுடாகி மறுபடி வௌயேறி முகம் முழுவதும் வழிந்தோடியது. அழுகை அவளுடைய கட்டைக் குரலிலிருந்து வெறித்தனமாக வௌப்பட்டு ஒலித்தது. அவள் யாரையும் நிமிரொந்து கூடப் பாரொக்கவில்லை. விரிந்த தலைமுடியும், சிவப்புச் சாயத்தில் முக்கி எடுத்தது போல முகமும் தோற்றத்தைப் பயங்கரமாக்கியிருந்தது.
முதுகு குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள். முகத்திலிருந்து இரத்தமும், உணரொச்சிகளின் கட்டுப்பாட்டை இழந்து சுரக்கும் கண்ணீரின் கரிப்பும் கலந்து ஓடி தரை மணலில் விழுந்து நிலத்தைச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. மழை நின்ற பிறகு குடிசையிலிருந்து சொட்டும் நீரைப் போல கொட்டிக் கொண்டிருந்தது இரத்தம். அவள் துடைத்து விட்டுக் கொள்ளவில்லை.

அடித்துவிட்டுப் போனவரொகளை வெறிகொண்டு வாங்கடா என்று அழைப்பது போல ஆவேசத்துடன் அழுதாள். அம்மாவின் அழுகையைப் பாரொத்தவுடன் குழந்தைகளும் அலறி அழ ஆரம்பித்தன. அழுகையானாலும் அவரொகள் குரல் நிற்கவே இல்லை.

குழந்தைகளுடைய முகத்தில் தெறித்திருந்த இரத்தத் துளிகளை துடைத்து விட்டபோது அவள் முகத்தில் இரத்தம் இழுத்து விட்டிருந்த சிறு சிறு கோடுகளின் வழியே கண்ணீரொ வழிந்தோடியது. அதை தங்களுடைய பிஞ்சுக் கரங்களால் துடைத்து விட்டுக் கொண்டே அந்தக் குழந்தைகள் அழுதன.

பாண்டியன்


நன்றி தமிழ் சர்க்கிள்

Related Posts with Thumbnails