அம்மானா சும்மாயில்லாடா....
பாசிச வெறியும், மனிதப் பண்புகள் கிஞ்சித்துமற்ற ஆணவமும் கலந்த பேய்தான் ஜெயா என்பதை அனைவரும் அறிவோம். இந்தப் பாசிச பேயின் வாயாலேயே பாசிசச் சட்டம் என்று ஒரு சட்டம் வசவு வாங்கியுள்ளது. ஜெயலலிதா வாயால் பேர் பெற்ற அச்சட்டம்தான் மத வெறி வன்முறை தடுப்புச் சட்டம், 2011.
ஒரு மாநிலத்தில் சிறுபான்மையினரான முஸ்லீம், சீக்கியர், கிருத்துவர்கள் மீதும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதும், மொழிச் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைகளின் போது மத்திய அரசு நேரடியாக அதிகாரத்தை தனது கையில் எடுத்துக் கொள்ள இச்சட்டம் வகை செய்கிறது. இதன் மூலம் சிறுபான்மை சமூகத்தினர் காக்கப்படுவர் என்பதை இச்சட்டத்தின் நோக்கமாக மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு சொல்லுகிறது.
இச்சட்டம் உண்மையிலேயே ஆர்எஸ்எஸ் இந்து பயங்கரவாதிகளின் தேசத் துரோக சதிகளையும், கலவரங்களையும் தடுத்துவிடும் என்பது பகல் கனவே. ஆயினும், பேரளவில் கூட இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரானதொரு செயல்பாடு நடப்பதை ஜெயலலிதா கொதித்தெழுந்து எதிர்ப்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.
இதற்கு முன்பு மாநில அரசின் அதிகாரத்தை தூக்கியெறியும் சட்டங்கள் பல மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. வாட் வரி விதிப்பு முதல் வட கிழக்கு-காஷ்மீர் மாநிலங்களில் உள்ள ஆயுதப் படை சிறப்புச் சட்டம் வரை பல இவ்வாறானவையே. இவற்றையெல்லாம் பாசிசப் பேய் ஜெயா உளப்பூர்வமாகவே ஆதரித்தவர்தான். மதவெறி வன்முறை தடுப்புச் சட்டத்தை பாசிசம் எனக் குறிப்பிடும் இந்த பூதம்தான் 'பொடா', 'உபா', பசு வதை தடுப்புச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், எஸ்மா, டெஸ்மா போன்ற பாசிச சட்டங்களை எல்லாருக்கும் முந்திக் கொண்டு ஆதரித்துள்ளதுடன், தமிழ்நாட்டில் கொண்டு வந்து அமுல்படுத்தியும் உள்ளார்.
சோழியான் குடுமி சும்மா ஆடுமா என்ன? தான் ஒரு பச்சைப் பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே ஓலமிட்டவர்தான் இந்த பாசிசப் பாப்பாத்தி. இவர் இன்றைக்கு முதலமைச்சர் ஆனதில் ஊர்த் திருடன் கலைஞரின் அராஜக ஆட்சிக்கெதிரான மக்களின் வெறுப்பு ஒரு பக்கமெனில், இன்னொரு பக்கம் ஆர்எஸ்எஸ் பார்ப்பன தேசத் துரோக கும்பல் திட்டமிட்டு எல்லா வலது சாரி(வலது-இடது கம்யூனிஸ்டு வலதுசாரிகளையும் சேர்த்து) சக்திகளையும் பாசிச ஜெயாவின் பின்னே திரட்டியது முக்கியக் காரணமாக உள்ளது.
போன ஜெயலலிதா ஆட்சிகளைப் போல ஜெயாவின் தனிப்பட்ட அகங்காரமும், சசிகலா குடும்பத்தின் அவசரமும் மட்டுமே கூத்தாடும் ஆட்சியல்ல இது. கல்லு குடித்த சொறிக் குரங்கின் ஆட்டத்தைப் போல பாசிச ஜெயாவின் ஆணவத் திமிரும், ஆர்எஸ்எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதியாலோசனைகளும் சேர்ந்து களமிறங்கும் புதுவகைப்பட்ட ஆட்சி இது.
எனவேதான் மிகச் சரியாக மதவெறி வன்முறை தடுப்புச் சட்டத்தின் இலக்கு எதுவாக இருக்க முடியும் என்பதை புரிந்து முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்த முகமூடி ஆட்சி. சமச்சீர் கல்வி வெறுப்பு, ஈழத் தமிழ் ஆதரவு வேசம், இந்து மதவெறி ஆதரவு, போலீஸு ரவுடித்தனம் என ஆரம்பித்த ஒரிரு மாதங்களிலேயே தான் யார் என்பதையும், தனக்குப் பின்னே இருக்கும் காவி நோய் பீடித்த மூளை எந்த வகைப்பட்டது என்பதையும் காட்டியுள்ளார் அம்மையார். இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. பாசிச முகமுடிக்கு பின்னே இருந்து ஆடும் ஆர்எஸஎஸ் இந்து மதவெறி கும்பலின் சதிகள் எல்லாம் ஒவ்வொன்றாய் அரங்கேறும். ஈழத்தாயின் கரங்களை வலுப்படுத்தியவர்கள் எல்லாம் வறுத்தெடுக்கப்படுவார்கள். இருண்ட காலம் பாகம் 3ன் இலக்கு பரிபூரண பார்ப்பன பாசிச தமிழகம் என்பது அப்போதாவது மரமண்டைகளுக்கு உரைக்குமா தெரியவில்லை.
அசுரன்

































