TerrorisminFocus

Wednesday, April 25, 2007

சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!

சில்லறை வணிகத்தில் பன்னாட்டு-தரகு மூலதனத்தை அனுமதிப்பதை ஆதரித்தும் எதிர்த்தும் சமீப காலத்தில் இங்கு பல கட்டுரைகள் இடப்பட்டன. அவற்றில் சில்லறை வணிகத்தை இது போன்ற பகாசுர கம்பேனிகளுக்கு திறந்து விடுவதை ஆதரித்து எழுப்பப்பட்ட வாதங்களை சாரமாக தொகுத்து அவற்றிற்கு பதில் கொடுப்பதொடல்லாமல், உண்மையில் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் மக்கள் விரோத திட்டங்களில் ஒன்றுதான் என்பதை நிறுவும் விதமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ரெட்டை நாக்குக்காரர்கள்:

சில்லறை வணிகத்தில் வால்மார்ட் போன்ற கம்பேனிகள் நுழைந்தால் விவசாயிகளுக்கு லாபம் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இதனை விலாவாரியாக பின்னர் பார்க்கும் முன்பாக சில சுலபமான உண்மைகளை பார்த்து விடுவது சரியாக இருக்கும். கடந்த 50 வருடங்களில் விவசாயத்திற்கு நன்மை என்ற பெயரில்(பசுமை புரட்சி, etc) இது போல சுற்றப்பட்ட பல பூக்களில் ஒன்றாகவே இதையும் நம் காதில் சுற்றுகிறார்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள். தரகு முதலாளி ரிலையன்ஸ் கோதுமை கொள்முதல் செய்த அழகு இங்கு கண் முன் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுதே(இணைப்பு: RUPE) இப்படி ஒரு பொய்யை சொல்வது இவர்களால் மட்டுமே இயன்ற ஒரு விசயம். அரசு கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்து அதன் மூலம் கட்டாயமாக தனக்கு கொள்முதல் செய்யும் சூழலை உருவாக்கி குவிண்டாலுக்கு 50 ரூபாய் மட்டும் அதிகப்படியாகக் கொடுத்து விவசாயிகளைச் சுரண்டினான் ரிலையன்ஸ். அதே கோதுமை அதே நேரத்தில் கிலோவுக்கு 6 முதல் 8 ரூபாய் வரை விலை ஏற்றப்பட்டு சந்தையில் விற்க்கப்பட்டது.

நிற்க, இந்திய அரசு நியயாமாக செய்து தர வேண்டிய விவசாயத்திற்க்கான உள்கட்டுமானங்களை செய்து தராமல் ஏமாற்றுவது, பிறகு உள்கட்டுமானங்கள இல்லாததை காரணம் காட்டியே விவசாயத்தை பன்னாட்டு கம்பேனிகளுக்கு கதவை திறந்து விடச் சொல்லும் இந்த பதர்கள். பன்னாட்டு கம்பேனிகளுக்கு அரசே பெரும் கடன்களை வாங்கி உள்கட்டுமானங்களை கட்டி தருவது குறித்து பாராட்டுகிறார்கள். தேசத் தூரோகிகளின் உள்மன விகாரம் வெளிப்படும் இடம் இதுதான். வெளிநாட்டு மச்சானுக்கு பல்லக்கு தூக்கும் இவர்கள் உள்நாட்டு சகோதரனுக்கு கட்டுமான வசதி செய்து தராமல் ஏய்ப்பதுடன், அந்த காரணத்தை காட்டியே அவனை விலையும் பேசுகிறார்கள்.

"இந்தா பார் விவசாயி, நான் வால்மார்டை உள்ளே நுழைய விட்டால் உனக்கு நல்ல விலை கிடைக்கும் ஆனா வியாபாரியின் வாழ்க்கை வம்பாக போய்விடும், அதை நீ கண்டுக்க கூடாது" வேண்டுமென்றே விவசாயத்தை காயப்பொட்டுவிட்டு இப்பொழுது இப்படி பச்சையானதொரு பேரம் பேசுகிறார்கள், சகோதர வர்க்கத்தை விரோதிகளாக்க பார்க்கிறார்கள் இந்த அடிமை வர்க்கத்தினர். இந்த கோஸ்டிகளை தரகு கோஸ்டி என்று சும்மாவா சொல்கிறார்கள்? ஆக, பிரச்சனையின் மூல காரணமான நாட்டமை ஏகாதிபத்தியத்தை திரை மறைவில் மறைத்துவிட்டு பண்ணையடிமைகளான விவசாயிக்கும், வியாபாரிக்கும் முரன்பாட்டை உருவாக்குவதன் மூலம் ரிலையன்ஸ்க்கு புனித வட்டம் கட்ட இங்கு சில அடிமைகள் அலைகிறார்கள்.

இவர்கள் நுகர்வோர் நுகர்வோர் என்று பேசும் போதெல்லாம் நாம் ஏதோ இந்திய ஜனங்கள் எல்லாத்தையும் சொல்கிறார்கள் என்று நினைத்தால் தவறு செய்கிறோம். டாலர் செல்வன் என்பவர் தனது கட்டுரையின் முதல் வரியிலேயே 70 லட்சம் நகர் புறத்து நடுத்தர வர்க்கத்தை மனதில் கொண்டே இந்த உலகமய நகர்வு என்று போட்டுடைக்கிறார். மீதி உள்ளவன்... அவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன. நான் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு சில வெப்சைட்டுகளை அலசி புள்ளிவிவரங்களை காட்டினால் இந்தியாவில் வறுமையில்லை என்றூ தெரிந்து விடும். இல்லையென்றால் வறுமைக் கோட்டின் வரையறையே மாற்றிவிட்டால் வறுமை என்பது இல்லாமல் போய்விடாது? முன்பொருமுறை வறுமை குறித்து இவர் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைகளை உடைத்த பொழுது வந்த உண்மைகள் இவை.

சரி இவர் சொல்லும் இந்த 70 லட்சம் என்ற எண்ணிக்கை உண்மையா என்று பார்த்தால் அதுவும் பொய்யே. ஏனேனில் இந்திய நகரங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. அது விவசாயிகளுக்கு அடுத்ததாக மிகப் பெரிய வர்க்கமாக உள்ளது. இவர்களை நம்பி செயல்படும் அண்ணாச்சி கடைகளுக்கு சமாதி கட்டி அந்த இடத்தில் தனது வாய் வைத்து சுரண்டுவதே ரிலையன்ஸ் கோஸ்டிகளின் நோக்கம். உண்மையில் இவர்கள் கிராம சந்தைகளை பிடிக்கும் திட்டத்தையும் தமது பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளனர். வாடிக்கையாளர் சேவை, குறைந்த விலை என்பதெல்லாம் இந்த அழிவு வேலையில் கிடைக்கும் லாபத்தில் நமக்கு கொடுக்கும் பங்குதான். கோழி குருடாய் இருந்தால் என்ன குழம்பு ருசியாய் இருக்கிறதா என்று பார்ப்போம் என்று பிழைப்புவாதம் பேசி அண்ணாச்சிகளின் ரத்த கறைபட்ட பலசரக்கு சாமான்களை வாங்கி தின்னத் தயாரான அடிமைகள் குறித்து ஒன்றும் சொல்வதற்க்கில்லை. சுயமரியாதையும், மனிதாபிமானமும் உள்ளவர்களை நோக்கியே இந்த கட்டுரை பேசுகிறது.

திருபாய் அம்பானியின் ஆதிக்கத்தையும் அமெரிக்க ஆதிக்கத்தையும், சந்தையை பிடிக்க அவர்கள் செய்யும் மோசடிகள் அதற்க்காக சட்டத்தை தமது இஸ்டம் போல மாற்றும் திமிர்த்தனம் இவை பற்றி பேசப் பயப்படும் இந்த டாலர் அடிமைகள்தான் கோயேம்பேடு மொத்த வியாபாரிகளின் ஆதிக்கத்தைப் பற்றி பேசுகிறார்கள். இவர்கள் சொல்லுவது படி பார்த்தால் நுகர்வோரை சுரண்டி கோடிகள் கொள்ளையடித்து உலக பணக்காரர்கள் பலரின் சுவர்க்கமாய் திகழ வேண்டும் கோயெம்பேடு. அப்படியாப்பட்ட கோயம்பேடு உலக பணக்காரர்களின் ஆதிக்கத்தை பிடுங்கும் வகையில்தான் உலக பரம ஏழை புரட்சிக்காரன் அம்பானியை ஆதரிக்கிறார்கள் இவர்கள். இவர்களது நோக்கத்தின் அடிப்படை ஆதிக்கம் செய்வதன் மேலான இவர்களது வெறுப்பு அல்ல. மாறாக, இவர்களுக்கு டாலரில் பிஸ்கெட் போடுபவர்கள் ஆதிக்கம் செய்கிறார்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் வேட்கையே காரணம்.

சரவணபவனின் சில வெளிநாட்டு ஹோட்டல்களையும் வால்மார்ட்டையும் ஒப்பிடுவது, பீசா விற்க்கும் பன்னாட்டு கடைகளையும் ராவா தோசை விற்க்கும் உள்நாட்டு கடைகளையும் ஒப்பிடுவது என்று வகை தொகையின்றி பூ சுற்றும் இவர்கள், ரிலையன்ஸ் சென்னையில் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே கோயெம்பேடு உள்ளிட்ட இடங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டது குறித்து மௌனமே சாதிப்பார்கள். அவர்களுக்கு அண்ணாச்சி, புண்ணாச்சி, விவசாயி மீது எல்லாம் இப்போதான் பாசம் பொத்துக் கோண்டு வருகிறது. இது வரை அவர்கள் கஸ்டப்பட்ட போதெல்லாம் இந்த அமெரிக்க அல்லக்கைகள் எங்கே போயிருந்தார்கள் என்று பார்த்தால் தூர தேசத்தில் இந்தியாவை கூட்டிக் கொடுப்பது எப்படி என்கிற கான்பெரென்ஸ் ஏதிலாவது உட்கார்ந்து அறிவுஜீவி ஜல்லியடித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

வால்மார்ட் பல சரக்கு விற்க்காதாம். அதாவது இந்த பூனை பால் குடிக்காதாம். இப்போதைக்கு என்றூ ஒரு வரி சேர்த்து சொன்னால் அதில் உண்மை இருக்கும். கடைசில பாலை குடிப்பதுதானே திட்டம். இதோ சென்னையில் இன்னும் 100 கடைகள் திறக்க இருக்கிறார்கள். மாமிசம் விற்க்கும் கடைகளூம் இதில் அடக்கம் என்பதை குறிப்பிட்டே தீர வேண்டும்.

வேலைக்கு உணவு கேட்டு டெல்லியில் போராடும் விவசாயிகள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் ஒரு அன்பர் வாக்குவம் கிளீனர் வாங்க மதுரை கடைகளில் ஏறி இறங்கி கஸ்டப்பட்ட கதையை சொல்லி வால்மார்ட்டை வரவேற்க்கும் பொழுது நமது மனதில் பெரும் பாரம் ஏறி உட்கார்கிறது. ஏண்டா சும்பன்களா உங்க சூத்தை தாண்டி யோசிக்கவே தெரியாதாடா? இந்தியாவுல உன்னோட ஜனத்தொகை 20% இருக்குமா? அதிலும் உன் ரேஞ்சுக்கு எத்தனை பேர் இருக்கான்? 10%?.. வக்கிரம் பிடித்தவர்களே.

மதுரையில் வால்மார்ட் வந்தால் நூற்றுக்கணக்கில் கடைகள் அம்பேலாகிவிடும், உள்ளூர் தேசிய முதலாளிகள் சட்டியேந்துவார்கள் என்பதை குரூர இன்பத்துடன் சொல்லும் அந்த அன்பர். அது எப்படி நடந்தேறும் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறாராம். நரமாமிசம் தின்னும் இவர்களை மனிதர்களாக என்னால் பார்க்க முடியவில்லை. நாடு என்பது அதன் மக்கள்தான் எனில் அவர்களுக்கு ஆப்பு செருகப்பட்டு ரத்தம் வழிவதை பார்க்க ஆவலுடன் செயல்படும் இவர்கள் தேசத் துரோகிகளே.

இந்தியாவில் அதிகமான பேர் வேலை பார்க்கும் துறை விவசாயம், அதனை அடுத்து அதிகமாக மக்கள் வேலை பார்க்கும் துறைதான் சில்லறை வியாபாரம் மற்றும் சிறு தொழில் துறை.

சில்லறை வியாபரத்தில் இவர்கள் எப்படி குறைந்த விலைக்கு பொருட்களை அதுவும் விவசாயிக்கும் நியாயமான விலை கொடுத்து விற்க முடியும்?

விவசாயிகளுக்கு நியாய விலை என்பதே ஒரு கேலிக் கூத்து என்பதிருக்க, அதை இப்பொழுதைக்கு விட்டு விட்டு வேறு எந்த வகைகளில் விலை குறைப்பை அவர்கள் செய்வார்கள் என்று பார்க்கலாம்.

சில வழிகள் உள்ளன அவற்றில் பிரதானமானது அண்ணாச்சி கடை முறையில் பலருக்கு கிடைத்து வந்த வேலை வாய்ப்புகளை பறிப்பதன் மூலம் மொத்த சந்தையை மற்றும் உற்பத்தியை தான் கையகப்படுத்திக் கொண்டு, அதன் மூலம் செமிக்கப்படும் மூலதனம், மற்றும் தனது சொந்த கடையில் வேலை செய்பவர்களை ஒட்டச் சுரண்டுவது ஆகியவையே அந்த வழிகள் ஆகும். அதாவது, அண்ணாச்சி கடைகளில் போடப்படும் மூலதனம் என்பது ஒரு பெரும் எண்ணிக்கையிலானவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கும். அந்த கடைக்கு சப்ளை செய்பவர், வேலை பார்ப்பவர், கடை முதலாளி, அங்கிருந்து வாங்கி சில்லறை வணிகம் செய்பவர், தள்ளுவண்டி வியாபாரி என்று பெரிய சமூக தொடர்புடன் ஒவ்வொரு பகுதியிலும் இயங்குகின்றன அண்ணாச்சி கடைகள். அந்த சந்தைகளை கைப்பற்றி இந்த வலைப் பின்னல் மொத்தத்தையும் சிதைத்து விட்டுத்தான், இந்த வலைப்பின்னலில் இயங்கி வரும் பலரின் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிட்டுத்தான் குறைந்த விலை குறித்து பேசுகிறார்கள் பாகாசுர கம்பேனிகள். எப்படி? 20 ரிலையன்ஸ் கடைகளால் கோயெம்பேட்டின் 40% வியாபாரத்தை சாகடிக்க முடியும் எனில், அதாவது கோடிக்கணக்கானவர்களின் வயிற்றில் அடிக்க ஒரு 20 கடைகள் போதுமெனில். அப்படி அடுத்தவன் வயிற்றில் அடித்து மிச்சமாகும் பணத்தில் ஒரு கொசுறை நுகர்வோருக்கு கொடுப்பதில் அவனுக்கு என்ன துன்பம் இருக்கப் போகிறது. அதை வாங்கி தின்பவனுக்கு சூடு சொரனையிருக்கிறதா என்பது தனியாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய கேள்வி.

இரண்டாவது, தனது சொந்த தொழிலாளியை சுரண்டுவது: தனது நாட்டின் குடிமக்களுக்கு உரிமைகளை குறைவின்றி வழங்க ஆவன செய்யும் அமெரிக்காவிலேயே வால் மார்ட் உள்ளிட்டவர்கள் செய்யத் துணிந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு அவர்களின் ஆண்டறிக்கையே சாட்சியாக உள்ளது(The Wal-Mart Manifesto) (Google Search for the document - Reviewing and Revising Wal-Mart's Benifit Strategy - BOD Retreat FY06: Benifits Strategy). இந்தியாவிலோ ஏற்கனவே தொழிலாளர்களின் நிலை ரொம்பவே நல்ல நிலைதான். அதுவும் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சட்ட பாதுகாப்பையும் நீக்கச் சொல்லி பன்னாட்டு தரகு முதலாளிகள் நிர்பந்தித்து வருகிறார்கள்.

இந்தியாவிலோ வால் போஸ்டர் ஒட்டினாலே தேச பாதுகாப்பு சட்டம் பாயும் நிலை, வேலை நிரந்தரம் கேட்டால் போலீசின் தடியடி, சட்டங்கள் செல்லுபடியாகாத SEZக்கள் என்று ஜனநாயகம் தலை விரித்து ஆடுகிறது. தொழிலாளர் உரிமையாவது, மசிறாவது. சமீபத்திய விலை வாசி உயர்வின் போதும் கூட அணி திரண்டு போராட வகையின்றி மனதிற்க்குள் புழுங்கிய மக்கள் கூட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துதான் இந்த பாகசுர கம்பேனிகள் கடை பரப்புகின்றனர். ஆக தொழிலாளர்களை அதிக வேலை, குறைந்த கூலிக்கு சுரண்டுவது என்பது இந்தியாவில் வெகு சுலபமே. அப்படியொரு முறை ஏற்கனவே இங்கு மிகப் பரவலாக இருக்கிறது. இதுதான் அவர்களின் குறைந்த விலை என்பதற்க்கு பின்னுள்ள இன்னொரு ரகசியம். தமது கோடுர சுரண்டலை பரப்பி லாபம் சம்பாதிக்க எச்சில் ஒழுக காத்திருக்கின்றன பன்னாட்டு - தரகு கம்பேனிகள். அவர்களுக்கு புனிதர் பட்டம் கட்டி பூசை போடுகிறார்கள் அடிவருடிகள்.

இடைத் தரகர்களை ஒழிப்பதாகவும் அதனாலேயே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வதாக இவர்கள் சொல்லும் போது நாம் ஏதோ ஆன்லைன் சூதாட்டக் காரர்களையும், மொத்த மண்டிக்காரர்களையும் ஒழிக்கப் போவதாக நினைத்தால் அவர்கள் அப்படியில்லை என்று சொல்கிறார்கள். மொத்த மண்டிக்காரர்களின் இடத்தில் பன்னாட்டு கம்பேனிகளை மாற்றி வைப்பது மட்டும்தான் இந்த அம்சத்தில் ஒரே வித்தியாசம். இது போல மாற்றுவது விவசாயிகளின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடாது என்பதற்க்கு பஞ்சாப் பெப்ஸி ஒப்பந்த விவசாயிகளும், சமீபத்திய கோதுமை கொள்முதல் சதிகளும் சாட்சிகளாக உள்ளன. அப்படியென்றால் இவர்கள் சொல்லும் இடைத் தரகர்கள் யார்?


இதோ அந்த கோடீஸ்வர, கொள்ளைக்கார(?) இடைத்தரகர்கள்:
சென்னையில் பல இடங்களில் சமீபத்தில் ரிலையன்ஸ் கம்பேனி கடை ஆரம்பித்தது. ஆரம்பித்த முதல் வாரத்திலேயே கோயெம்பேட்டில் 40% வியாபரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. சில்லறை வியாபாரிகள் கோயெம்பேட்டில் வாங்கும் சரக்கின் அளவு குறைந்துவிட்டது. வெளியூர் லாரிகளின் வரத்து குறைந்து விட்டது. தொழிலாளிகளுக்கு வேலை குறைந்து வருமானமும் குறைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிட்டது.

2500 காய், கனி, பூக்கடை வியாபாரிகள், சுமார் 20,000 தொழிலாளர்கள், அன்றாடம் அதிகாலை 2 மணி முதல் ஆட்டோ க்களிலும், வேன்களிலும், இரு சக்கர வண்டிகளிலும் வந்து காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரக்கணக்கான மளிகைக் கடைக்காரர்கள், கோயெம்பேட்டில் சரக்கு எடுத்து, தள்ளு வண்டியிலும் கூடையிலும் மைல் கணக்கில் சுமந்து தெருத் தெருவாய் கூவி விற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் உழைப்பாளிகள்....

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஊட்டி, நீலகிரி, பொள்ளாச்சி, கம்பம், நெல்லை, தூத்துகுடி, சேலம், தர்மபுரி என்று தமிழகத்தின் பல்வேறு சந்தைகளில் காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரம் வணிகர்கள், அந்தச் சந்தைகளில் பல லட்சம் தொழிலாளர்கள், அந்த காய்கனிகளை எல்லாம் சென்னைக்குச் சுமந்து வரும் லாரிகள், வேன்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்.... என்று கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை தான் இவர்களின் கணக்கில் அந்த இடைத் தரகர்கள். இவர்களின் வயிற்றில் அடித்து சுரண்டுவதுதான் அந்த மிச்சப்படுத்தப்படும் பணம். சரி அந்த பணம், அதாவது இடைத்தரகர்களை ஒழிப்பதால் உருவாகும் அந்த பணம் விவசாயிகளுக்குப் போய் சேருமா?

அதுவும் கிடையாது, அரசு அதிகாரத்தில் தனது முழு செல்வாக்கையும் கொண்டுள்ள இது போன்ற கம்பேனிகள், ஏற்கனவே விவசாய உற்பத்தி பொருட்களின் மீது அரசு கொண்டிருந்த கொள்முதல் உரிமைகளை பின் வாசல் வழியாக தனது வசம் எடுத்துக் கொள்ள துவங்கியுள்ளன. அரசு கொள்முதலை குறைத்து விடுவதன் மூலம் விவசாயிகளை நிர்பந்தித்து தன்னிடம் விற்க்கச் செய்வார்கள். தான் விருப்பட்ட விலைக்கு விளை பொருட்களை விற்க்கும் சூழலை இந்த ஏகாதிபத்திய மூலதனத்தால் வெகு சுலபமாக உருவாக்க முடியும். சேட்டுகள் சொல்வார்களாம், "லாபம் என்பது என்ன விலையில் விற்கிறாய் என்பதில் அல்ல, மாறாக என்ன விலைக்கு வாங்குகிறாய் என்பதில் உள்ளது" என்று. சாதாரண சேட்டுக்கு தெரிந்த இந்த வியாபார ரகசியம் ரிலையன்ஸ்க்கு தெரியாதா என்ன? அவர்கள் விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கி நம்மிடம் குறைந்த கூலிக்கு விற்பார்கள் என்று நம்புவதற்க்கு ஒருவன் மகா கேனையானாக இருக்க வேண்டும் அல்லது விசுவாசமான அடிமையாக இருக்க வேண்டும்.

ஒரு வேளை அடிவருடிகள் இப்படி வாதம் வைக்க முயற்சி செய்யலாம். அதாவது, சேட்டுக்கள் லெவலுக்கு அந்த சூத்திரம் சரியாக வரும், ஆனால் பெரும் முதலீட்டில் செய்யும் ரிலையன்ஸ் ரேஞ்ச்சுக்கு அந்த சூத்திரம் சரி வராது என்று. ஆனால் துரதிருஷ்டவசமாக வால்மார்ட்டுக்கு பொருட்களை உற்பத்தி செய்து சப்ளை செய்பவர்களின் துயரம் அமெரிக்கா முழுவதும் நாறுகிறது (Search for: The man who said no to Walmart). வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுப்பதற்க்காக, விநியோகஸ்தர்களையும், உற்பத்தி செய்பவர்களையும் நசுக்கும் வால்மார்ட் என்ற தலைப்பில் அங்கு பல கட்டுரைகள் காணக் கிடைக்கும். ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தவரிடமிருந்து வாங்குவதில் தனது சுரண்டலை முன்னிலைப்படுத்தும் இந்த கம்பேனிகள். இந்தியாவில் என்ன செய்யும்? ரிலையன்ஸ் நேர்மை(??) குறித்து ஆயிரத்தெட்டு உதாரணங்கள் இருக்கின்றன.

இது முதலாளித்துவ சந்தையின் விதி. மூலதனம் கடவுள் கொடுக்கும் அட்சய பாத்திர பொருள் அல்ல. அது உழைப்பின் தவிர்க்க இயலா ஒரு விளை பொருள் அவ்வளவுதான். ரிலையன்ஸ் உள்ளிட்டவர்களிடம் திரளும் அந்த மூலதனம் என்பது பல கோடிக்கணக்கானவர்களின் உழைப்பை சுரண்டி சேகரமானதே. லட்சம் விவசாயிகளின் சாவு குறித்து மௌனம் சாதித்த அடிவருடிகள் தீடீரென்று விவசாயிகளின் மீது பாசம் காட்டுவதற்க்கும், நடுத்தர வர்க்க வியாபாரிகளின் சந்தை ஆதிக்கத்தின் மீது வெறுப்பை உமிழ்வதற்க்கும் பின்னால் உள்ள இயங்கியல் கோடிகளை சுரண்டிக் கொடுக்கும் இந்த அட்சயப் பாத்திரத்தின் மீதான முறை தவறிய காமம்தான்.

அண்ணாச்சி கடைகள் நடத்தும் இந்த சிறு வணிகர்கள் அல்லது இவர்கள் பாசையில் இடைத்தரகர்கள் யார்?

விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்றுக் கடை வைத்த அண்ணாச்சிகள், விவசாயம் அழிந்து போனதால் நகர்ப்புறத்துக்கு பிழைப்புத் தேடி ஓடிவந்த நிலமற்ற விவசாயிகள், தலித் மக்கள், வேலை இழந்த தொழிலாளர்கள், வேலை கிடைக்காததால் சுய தொழில் தொடங்கிய படித்த இளைஞர்கள், குடும்ப பாரத்தைக் கூடையில் சுமக்கும் ஆதரவற்ற பெண்கள்....... பாரிதாபத்துக்குரிய இந்த மக்களுடைய வயிற்றில் அடித்துச் சொத்து சேர்ப்பதற்க்கு அம்பானிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது இந்த அரசு. அதாவது குரங்கு அப்பம் பிரித்த கதை. அதாவது விவசாயி, வியாபாரி முரன்பாட்டில் குரங்கு அம்பானி வயிறு வளர்க்கும் கதை.

25,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் கடை திறக்க இருக்கும் ரிலையன்ஸ் எப்படி அந்த மூலதனத்தை கொழுக்க வைக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் அது நமது ஒவ்வொரின் சதையையும் கொத்தி கிளறிதான் கொழுக்க முடியும் என்பதனை புரிந்து கொள்ளலாம். உண்மைதான், நுகர்வோன் என்ற முகமூடி போட்டுக் கொண்டால் நமது சதையை கொத்திக் கிழிக்கும் வலி தெரியாமல் இருக்க நுகர்வுக் கலாச்சார போதை மருந்து கொடுக்கப்படும்.

சிறுபான்மை பெருநிலக் கிழார்களின் கையிலிருந்து நிலத்தை பறித்து உண்மையிலெயே நிலத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கு பிரித்து கொடு, அதனை கூட்டுப் பண்ணை மூலம் ஒன்றிணை, விவசாயிக்கு மையப்படுத்தப்பட்ட நாடு முழுவதற்க்குமான திட்டம் போடு, உள்கட்டுமானங்களை கடன் வாங்கி அல்ல, மாறாக வேலைக்கு உணவு திட்டத்தின் மூலமே கட்டிக் கொடு, பிறகு பார் இந்தியாவில் உருவாகும் வேலை வாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும். விவசாயத்தின் மறுமலர்ச்சியையும். இதனை செய்ய இந்த அரசு தயாராயில்லை. சிறுபான்மை நிலக் கிழார்களையும், பெரும் பணக்காரர்களையும் சிறு அளவு கூட கஸ்டப்படுத்த தாயாராயில்லை இந்த அரசு. மாறாக பெரும்பான்மை உழைக்கும் மக்களை லட்சக்கணக்கில் பலி கொடுத்து வருகிறது. கறிச் சோறு கேட்ட காட்டேரி தலைப் பிள்ளையைத்தான் தின்பேன் என்று நின்றதாம் அது போல தரகு வர்க்கமும், ஏகாதிபத்தியமும் இந்தியாவின் முதுகெலும்பை உடைத்துதான் வயிறு வளர்ப்பேன் என்று நிற்கிறது. அதற்க்கு நியாயம் கற்ப்பிக்கவும் சில துரோகிகளை அது விலை கொடுத்து வாங்கியுள்ளது.

அனைவருக்கும் மேலாக காய்கனிகளை பூக்களையும் விளைவிக்கும் பல லட்சம் விவசாயிகளையும் இவர்களின் விசச் சுழற்யில் சிக்க வைக்கிறார்கள் இந்த துரோகிகள். இவர்கள் அனைவரின் வாழ்க்கையை சில கோடீஸ்வரர்களின் வயிறு வளர்க்க காவு கொடுக்கிறது இந்த அரசு.

ஏகாதிபத்திய அடிவருடிகளின் தத்துவ அடிப்படை - பார்ப்பனியத்துடன் ஒரு கள்ள உறவு:
ஒரு நுகர்வோனே குறைந்த விலை பொருளூக்காக வால்மார்ட், ரிலையன்ஸ் கோஸ்டிகளை அனுமதிக்கிறான். இதன் மூலம் வியாபாரிகள், விவசாயிகள் சுரண்டப்படுவதற்க்கு அவன் துணை போகிறான். இவை குறைந்த விலை, தரம் என்பனவற்றை காட்டி நியாயப்படுத்தப்படுகிறது. அதே நுகர்வோனை அவனது பணியிடத்தில் குறைந்த கூலிக்கு ஒப்பந்த தொழிலாளியாகவோ அல்லது வேறு வடிவிலோ இதே தரகு வர்க்க, ஏகாதிபத்திய கூட்டணி சுரண்டுகிறது.

இது எப்படி? உன்னை சுரண்ட என்னை அனுமதி, நீ அவனை சுரண்ட நான் வழி செய்து கொடுக்கிறேன் என்று இந்த அமைப்பை ஒரு பொருளாதார சுரண்டல் படிநிலையாக நிலைத்திருக்க செய்வதன் மூலம் தனது சுரண்டலை நியாயப்படுத்திக் கொண்டு தலைமை சுரண்டல்க்காரனாக சமூகத்தின் மீது ஏறி உட்கார்ந்து உள்ளது தரகு-ஏகாதிபத்திய வர்க்கம்.

இதே கதையை வேறு எங்கோ கேட்டது போல இருக்கிறதல்லவா? 'நீ எனக்கு அடிமையாக இரு, உனக்கு கீழே ஒரு அடிமையை வைத்துக் கொள்" எனும் இந்திய வர்ண-சாதி அமைப்புதான் அது. ஒவ்வொரு வர்ணமும் தனக்கு கீழேயுள்ள வர்ணத்தையும், ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழேயுள்ள சாதியையும் சுரண்ட வழி செய்து கொடுப்பதன் மூலம் சுரண்டல் என்பது நியாயமனது என்ற பொதுக் கருத்தை உருவாக்குகிறது பார்ப்ப்னியம். இந்த தார்மீக பலத்தின் துணை கொண்டு பூசாரி வர்க்கம் தலைமை சுரண்டல்க்காரனாய் சமூகத்தின் மீது தன்னை இறுத்திக் கொள்கிறது.

ஆக, இந்த அம்சத்தில்தான் ஏகாதிபத்தியமும், பார்ப்பினியம் கள்ள உறவு கொள்கின்றன. இதுதான் ஏகாதிபத்தியமும் பார்ப்பினியமும் தத்துவ ரீதியாகவும் இணையும் புள்ளி. அந்த கள்ள உறவின் தாயாரிப்புகள்தான் இந்த அடிவருடிகள். பாருங்களேன் நீங்களே, ஏகாதிபத்திய ஜல்லியடிக்கும் இந்த அடிவருடிகள் அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல, அதே கையோடு இந்துத்துவ ஜல்லியடிப்பதும், இந்துத்துவ ஜல்லியடிக்கும் அத்தனை பேரும் அதே கையோடு ஏகாதிபத்திய ஜல்லியடிப்பதும் - இப்படி இந்த கள்ள உறவை நடு வீதியில் வெட்கமின்றி இவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். நாமோ நாட்டுப்பற்றையும், சுயமரியாதையும் விளம்பரப்படுத்துவதைக் கூட தீவிரவாதம் என்று கூறி முடங்கிக் கிடக்கிறோம்.

இதோ, சில்லறை வணிக பிரச்சனையிலும் கூட குறைந்த விலை, நிறைந்த தரம், விவசாயிக்கு நல்ல விலை என்று சில பொய்களின் ஊடாக பார்ப்பினியமும், ஏகாதிபத்தியமும் முச்சந்தியிலே காமுற்று இன்புறுவது கண்ணுக்கு தெரியவில்லையா உங்களுக்கு?

வால்மார்ட்டுக்கு காட்டப்படும் ஒளிவட்டம் - உபயம் திருமலை ஒலி/ஒளி அமைப்பு:
தீடிரென்று இவர்களுக்கு இந்திய தொழிலாளர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு ஊத்துகிறது. இந்திய முதலாளிகளின் கடைகளில் வியர்வையிலும், வெக்கையிலும் மிக கடுமையாக கஸ்டப்படுகிறார்களாம் தொழிலாளர்கள். வால்மார்ட் இந்தியாவுக்கு வந்தால் தொழிலாளர்களை கையில் வைத்து சீராட்டுமாம். ஏனேனில் வால்மார்ட்டின் சர்வதேச பெயர் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தனது தோழிலாளர்களை அப்படி பாதுகாக்குமாம்.

ஐரொப்பாவில் 30,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்த பொழுது IBM தனது பெயர் கெட்டுப் போகும் என்று யோசித்ததில்லை, சமீபத்தில் அமெரிக்காவின் ஒரு பெரிய சாக்லேட் கம்பேனி தனது உற்பத்தி கூடத்தை ஆசியாவுக்கு மாற்றியதன் மூலம் அமெரிக்காவில் சில ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பும் போது இவ்வாறு யோசித்ததில்லை அல்லது வேறு எந்த பன்னாட்டு கம்பேனியும் தனது தொழிலாளர் விரோத நடவடிக்கையால் (IBM - தொழிலாளர் யூனியன்) தனது பெயர் பாதிக்கப்படும் என்று யோசிதத்தில்லை, குறைந்த கூலிக்கு வெய்ஸ் ஸ்டூடண்ட் என்ற பெயரில் பெரிய அளவில் சுரண்டும் விப்ரோ இப்படி யோசிக்கவில்லை. இன்னும் சொன்னால் பொருட்களை வாங்கி நுகரப் போகும் எவனும் தான் வாங்கும் பிராண்டுக்கு உரிய கம்பேனி எவனை சுரண்டி தயாரிக்கிறது என்றெல்லாம் யோசிக்கப் போவதில்லை. அப்படி யோசித்தால் லிவி ஜீன்ஸ் முதல் நாம் அணியும் பல பன்னாட்டு-தரகு பிராண்டு ஆடைகள், திருப்பூரிலும், பெங்களூரிலும் கொத்தடிமை-சிதறிய உற்பத்தி முறையில்தான் தயாரிக்கப்படுகின்றன. நைக்கும், ரிபோக்கும், தெற்கு ஆசியாவின் ரத்தத்தால்தான் வண்ணமூட்டப்படுகின்றன. இந்த கம்பேனிகள் எல்லாம் தமது பெயர் பாதிக்கப்படும் என்று யோசித்ததும் இல்லை. அதனை வாங்கி உபயோகப்படுத்தும் வெட்கங்கெட்ட அல்பைகளும் இதன் தயாரிப்பு பாதை குறித்து யோசிப்பது இல்லை.
சரி, உண்மையில் வால்மார்ட்டில் வேலை பார்ப்பவர் நிலை என்ன? வால்மார்ட்டின் போர்ட் ஆப் டைரெக்டர்ஸின் 2006 அறிக்கை ஒன்று போன வருடம் பார்வைக்கு வந்தது. அதில் செலவீனத்தைக் குறைக்கும் முகமாக, வேலை பார்ப்பவர்களின் மருத்துவ அலவன்ஸ், விடுமுறை அலவன்ஸில் கைவக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள்.

மருத்துவ அலவன்ஸ் அதிகமாக காரணமென்ன என்றும் வால்மார்ட் ஆய்வு செய்து சொல்கிறது. சதை பொடுவது என்பதும், சர்க்கரை நோயும் வால்மார்ட் தொழிலாளர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறதாம் நாட்டின் சராசரி தொழிலாளர்களை விட வால்மார்ட் தொழிலாளர்கள் சீக்கிரம் வயதானவராகிவிடுகிறார்கள் (அதாவது வயசான கிழடுகளை வேலைக்கு வைத்து மாரடிக்கிறார்களாம்).

இந்த செலவை குறைக்க ஏதுவாக அதிக காலம் வால்மார்ட்டில் தங்கி அதிக சம்பளம் வாங்குபவர்களை குறைத்து, குறை கூலி புதியவர்களை தொடர்ந்து எடுப்பது குறித்து கோடிட்டு காட்டுகிறது அந்த அறிக்கை. அதாவது வால்மார்ட்டின் தொழிலாளர்களை என்றும் இளைமையாக வைத்து ஒரு சமூகத்தின் இளமையை சுரண்டு என்று வழிகாட்டுகிறது அந்த அறிக்கை. இதன் அர்த்தம் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை எடுத்து அவர்கள் முதுமை அடைந்தவுடன் வீசி எறி என்பதுதான். அமெரிக்காவிலேயே இப்படி ஆலகால விசத்தை ஏதோ பத்து ரூபா பன்னீர் சோடா போல குடிக்க வைக்கும் வால்மார்ட் அடிமை நாடு இந்தியாவில் என்னவெல்லாம் செய்யும் என்பதற்க்கு எந்த அளவுகோலும் கிடையாது. ஏனேனில் இந்தியாவில் உலகமயம் நுழைந்த பிறகு நிரந்தர பணி என்பது தொழிலாளர்களைப் பொறுத்தவரை குதிரைக் கொம்பைவிட அதிசயமான ஒன்று. 2003-ல் மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் தமது நிரந்தர வேலையை விட்டு வெளியேற்றப்பட்டனர்(பிசினெஸ் ஸ்டேண்டர்ட் - 20.01-2004). இந்தியாவில் வேலை வாய்ப்பு என்பது Working poverty வகையினத்தைச் சேர்ந்ததாக மாற்றப்பட்டு வெகு காலமாகிவிட்டது(வேலையில்லாதோர் 7.6% ஆனால் வறுமைக் கோடிட்ற்க்கு கீழேயுள்ளோர் 30% மேல். ஆகா மிகப் பெரும்பாலானோர் வேலை செய்தும் வறுமையாக இருப்பவர்ஆவர்).

ஸ்டெர்லைட் நச்சு தொழிற்சாலையையும், என்ரான் டூபாக்கூர் தொழிற்சாலையையும், தமிரபரணி திருடன் கோகோ கோலாவையும், போபாலின் விச வாயுவையும், ஒரிஸ்ஸாவின் இரும்பு கொலைகாரர்களையும், ஹோண்டா காக்கி-பன்னாட்டு ரவுடிகளையும், பசுமை புரட்சி கொள்ளையர்களையும், ராணுவத்தை அடிமைப் படுத்திய நாட்டாமைகளையும் - ரத்தின கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதானே இந்தியா? அவர்கள் இன்று வரை தமது கிரிமினல் நடவடிக்கைகளை செய்து வந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? பிறகு எப்படி ரிலையன்ஸின் சில்லறை வியாபாரத்தில் மட்டும் இந்த அரசும், அதிகார வர்க்கமும் தொழிலாளர் நலனை/மக்கள் நலனை முன்னிறுத்தும் என்று நம்புவது?

மையப்படுத்தப்பட்ட கடைகள் நமக்கு புதிதா என்ன?
இதில் இன்னொரு வாதமாக, மையப்படுத்தப்பட்ட சில்லறை விற்பனை அங்காடிகள் பரிணமிப்பது என்பது இயல்பு என்று சில எடுத்துக்காட்டுகளுடன் பேசுகிறார் பத்ரி. இது ஏதோ சரியான வாதம் என்பது போலத்தான் தெரியும். ஆனால் இவர்கள் வசதியாக உலக மூலதனம் என்ற ஒன்று இந்தியாவை சுரண்டிக் கொண்டிருப்பதையும், ரிலையன்ஸ் போன்றவர்கள் அந்த மூலதனத்தை இந்தியாவுக்குள் விளையாட உதவி செய்யும் அவர்களின் சகோதரர்கள் என்பதையும் மறைத்து விடுகிறார்கள். அதாவது இவர்கள் சொல்லும் உள்நாட்டு மையப்படுத்தப்பட்ட கடைகள் என்பவை தனித் தீவுகள். ஆனால் ரிலையன்ஸ் பாணி கடைகள் என்பவை ஒரு பெரிய சுரண்டல் இயந்திரத்தின் பகுதிகள். உலக சந்தையின் துணை உறுப்புகள்.

மையப்படுத்தப்பட்ட விற்பனை அங்காடிகள் பத்ரி சொல்வது போல உருவாவது என்பது ஒவ்வொரு ஊரிலும் அல்லது சில ஊர்களை மையப்படுத்தி ஒரு சின்ன முதலாளி ஆரம்பிப்பார். இது போல பல கடைகள் பல இடங்களில் உருவாகும், பல பெயர்களில். ஆக, இந்த முறையில் சில்லறை விற்பனை வளர்வது என்பது இந்திய சில்லறை வணிகத்தின் இயல்பான வளர்ச்சி. ஏனேனில் ஒரு இந்திய முதலாளியின் மூலதனம் என்பது சிறிய அளவானதே. எனவே அவர் அதற்க்குட்ப்பட்டே தனது கடையின் வீச்சை வைத்துக் கொள்வார். இது போன்ற வளர்ச்சி சில்லறை வணிகத்தை அடுத்தக் கட்டத்திற்க்கு எடுத்துச் செல்லும் ஒரு வளர்ச்சிப் போக்காக இருக்கும் அதே நேரத்தில், மூலதனத்தின் சுழற்சி என்பது மிகப் பரவலான ஆட்களிடம் செல்லும் வகையில் இருக்கும்.

மேலும் பன்னாட்டு தரகு கம்பேனிகள் சந்தையில் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதில்லை, அவர்கள் விவசாய உற்பத்தியையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிடுவர். உலக சந்தையும் அவர்களின் கையில் இருக்கும். ஆக, ஒரு சாதாரண இந்திய முதலாளி மையப்படுத்தப்பட்ட கடைகள் ஆரம்பிப்பது என்பது ரிலையன்ஸ், ஹெரிடேஜ் போன்றவர்கள் ஆரம்பிப்பது போன்று ஆக்டோ பஸின் ஆயிரம் கரம் கொண்டு வளைத்துப் பிடிக்கும் வடிவிலானது அல்ல. இரண்டையும் ஒப்பிடுவது என்பதே படு முட்டாள்தனமானது.

ரிலையன்ஸ், ஹெரிடேஜ் உள்ளிட்டவர்கள் ஒரே நேரத்தில் சென்னையில் மட்டும் 60 கடைகள் என்பது போல ஆரம்பிப்பது ஒரு சில தரகு முதலாளிகள் சந்தை மீது தமது கிடுக்கிப் பிடியை போட்டு லாபத்தை ஒட்டு மொத்தமாக சுரண்டும் ஒரு திட்டம் தானே தவிர்த்து அது எந்த வகையிலும் பத்ரி குறிப்பிடுவது போலான இயல்பான வளர்ச்சி இல்லை. ஏனேனில் இது போன்ற பெரிய அளவில் மூலதனத்தை திரட்டும் பலத்தில் இந்திய முதலாளிகள் தற்போது இல்லை. அந்த அளவுக்கு அவர்கள் வளரும் வாய்ப்பை கொடுக்காமலேயே அதற்க்கு முன்பாக தரகு - ஏகாதிபத்திய மூலதனத்தை சில்லறை வணிகத்தில் இறக்குவது என்பது இங்குள்ள பலம் குன்றிய முதலாளிகளையும், வியாபாரிகளையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் எவனோ ஒருவனின் லாபத்திற்க்கு பலி கொடுக்கும் சதி திட்டம்தான். இந்த பலியை கொடுக்கும் அளவு என்ன பிரச்சனை நமக்கு சில்லறை வணிகத் துறையில் வந்துவிட்டது? ஒரு அன்பர் சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனம் வருவதை எதிர்த்து ஏதோ ஒரு கட்டுரையில் இட்டிருந்த பின்னூட்டம் தான் ஞாபகத்துக்கு வருகிறது:
"விரையை விற்று, குழந்தையை விலைக்கு வாங்குவது போல"
விரையை விற்க்கத் தயாரான கோழைகளுக்காகவும், முட்டாள்களுக்காவும் இந்த கட்டுரை எழுதப்படவில்லை.

இந்தியாவில் உண்மையிலேயே முதலாளித்துவ வளர்ச்சி தேவைப்படும் விவசாயத் துறையை வேண்டுமென்றே பழைய உற்பத்தி முறையில் கட்டி வைத்து நாசமாக்கும் இந்த அரசு, பல கோடிக்கணக்கானவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை புகுத்துவது பச்சை துரோகம். அம்பானிக்கு ஒன்றும் இந்திய நடுத்தர வர்க்கத்திற்க்கு விலை குறைவாக பொருள் கொடுக்க வேண்டும் என்று ஆசை இல்லை, அரசுக்கும் கூட நடுத்தர வர்க்கத்தின் நலன் மீதெல்லாம் பற்று கிடையாது. ஆயினும் அவர்கள் சொல்லுவது என்னவோ அதைத்தான்.

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். உங்கள் சகோதரனின் இழவில் விளையும் இலவசங்களை கொண்டு வந்து வீட்டை நிரப்பப் போகிறீர்களா? அப்படியாகும் பட்சத்தில் இந்தியா முழுவதும் இழவு வீடாகத்தான் இருக்கும்.

விலை உயராதா?

விலை குறைவாக கொடுப்பான் பிறகு விலையை கூட்டுவான் போன்ற வாதங்களையெல்லாம் விடுங்கள். கடந்த ஐந்தாறு வருடங்களில் குறிப்பாக கடந்த இரு வருடங்களில் விலைவாசி சகட்டு மேனிக்கு ஏறியுள்ளதே இதற்க்கு உறுதியாக அண்ணாச்சி கடைகள் காரணமல்ல. அம்பானி கும்பலின் தரகு வேலையின் காரணமாக இந்தியாவுக்குள் நுழைந்த அன்னிய மூலதனமே காரணமாக உள்ளது. இதனை inflation, அதாவது பண வீக்கம் என்ற ஒரு பேன்சியான பெயர் சொல்லி சப்பை கட்டு கட்டும் புன்னிய அடிவருடி ஆத்மாக்கள், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்க்கு (இணைப்பு: வறுமைக் கோடு குறித்த கட்டுரை) கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது குறித்த கேள்விகளுக்கு ஆழந்த மௌனம் அல்லது மையமான விசயத்தை விட்டு விட்டு வேறு எதிலாவது விவாதம் செய்வது என்ற நழுவல் போக்கையே பதிலாக தந்துள்ளனர். அது எப்படி இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தாழ்ந்து வரும் பொழுது இந்தியாவின் வாங்கும் திறன் அதிகரித்து அதனால் விலைவாசி உயர்ந்தது என்ற முரன்பட்ட விசயம் நடக்க முடியும்?

ஒருவேளை தூக்கு போட்டு செத்து போன விவசாயி கிறுக்கனா? அல்லது அரை வயிறு சாப்பிட்டு மனித குழந்தையா அல்லது வேறு எதுவுமா என்று சந்தேகம் கொள்ளும் அளவு உள்ளவர்கள் ஏதேனும் சாமிக்கு வேண்டிக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறார்களா? அல்லது 8 ரூபாயில் ஒரு நாளை ஓட்டும் இந்திய ஏழைகளுக்கு கின்னஸ் சாதனை படைக்கும் ஆசைதான் அவ்வாறான வாழ்க்கை வாழ காரணமா? வேலைக்கு உணவு கேட்டுப் போராடி துப்பாக்கிக் குண்டுகளை பதிலாகப் பெற்ற பஞ்சாப் விவசாயிகள் புத்தி பேதலித்தவர்களா?

ஆனால் துரதிருஷ்டவசமாக அன்னிய மூலதனம் எங்கெல்லாம் நுழைந்துள்ளதோ அங்கெல்லாம் விலை உயர்வு, வர்க்கப் பிளவு என்பவையும் வீரியமாக ஊடுருவுகின்றன. எதிர்காலத்தில் ரிலையன்ஸ் விலையை உயர்த்தும் என்று நாம் சொன்னவுடன் இவர்கள் தொலை தொடர்பு துறையில் விலை குறைந்து வருவதை சுட்டிக் காட்டி நியாயப்படுத்துகிறார்கள். தொலை தொடர்பு துறையைப் பொறுத்தவரை, அது நுகர்வோரின் அத்தியாவசிய தேவையாக திணிக்கப்பட்ட ஒன்றுதானேயன்றி. ஏற்கனவே டிமாண்ட் இருக்கிற ஒரு சந்தையல்ல. அதுவும் உலகமயத்தின் தேவைகளுக்காக சாலையமைத்தால் போன்ற உள்கட்டுமான திட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவில் தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சி என்பது உள்ளது. ஆக, தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சி என்பது அவர்களின் சந்தை தேவைக்கான ஒரு வளர்ச்சி. கவனித்துப் பாருங்கள், அவனது சந்தை வளர்ச்சிக்கு எவையெல்லாம் அத்தியாவசியமோ அவையெல்லாம் விலை குறைவதும், மாறாக மக்களின் அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் விலை கூடுவதும் என்ற இந்த அம்சத்தில் சில்லறை வணிகம் என்பது எந்த பகுதியில் வருகிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும், உற்பத்தியையும், உலக சந்தையையும் தனது கையில் வைத்திருக்கும் இவர்கள் உலகளவில் தமது தேவைக்கேற்ப விலையை உயர்த்தியும், குறைத்தும் கொள்ளையடிப்பார்கள். சமீபத்தில் பல பொருட்களின் விலை உயர்ந்து பொழுது பா. சிதம்பரம் என்ன சொன்னான்? "உலக சந்தையில் விலை ஏறிவிட்டது, நான் என்ன செய்ய?" - இதே போலத்தான் ரிலையன்ஸ் விலையைக் கூட்டும் போதும் சொல்லுவான் நம்ம பா.சி.

உலக சந்தையில் விலை கூடி விட்டது என்று இவர்கள் கூறும் காரணம் உண்மையல்ல. நாம் திரும்ப திரும்ப எச்சரிக்கை செய்தும் தெரிந்தே இந்தியாவின் வளங்களை உலக மூலதனத்துக்கு கூட்டி கொடுத்தானே அதுதான் உண்மைக் காரணம். இது நடக்காது என்று கனவு காண்பவர்களுக்கு தற்போதைய விலைவாசி உயர்வே உதாரணம். இப்படி விலை அதிகமானால் ரிலையன்ஸை குற்றம் சொல்வீர்களா நீங்கள்? எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த போது மக்கள் மனதினுள் புழுங்கிக் கொண்டு அமைதியாக வாங்கிச் செல்லவில்லை?

இவையெல்லாம் காட்டுவது என்னவென்றால் இன்று விலையை குறைத்து சந்தையை தனது வசப்படுத்திக் கொள்ளூம் ரிலையன்ஸ் கோஸ்டிகள். நஸ்டத்தில் பத்து வருடம் கூட கடை நடத்தி பிறகு ஒரே வருடத்தில் தனது லாபம் அனைத்தையும் சுரண்டிக் கொள்ளூம் சகல பலமும் படைத்தவர்கள் என்பதைத்தான். ஏனேனில், உற்பத்தி, சந்தை, உலக சந்தை, அதிகாரம் என அனைத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய இவர்கள் உண்மையில் நேரடியாக விலையை கூட்ட வேண்டும் என்று கூட அவசியமில்லை, சந்தையில் விலை கூடுவதை திரை மறைவிலிருந்து செய்வது. பிறகு சந்தை விலையை விட கொஞ்சம் குறைத்து இவன் விற்பான்.

ஏகாதிபத்தியம் நேரடியாக வாய் வைத்து உறிந்து மாட்டிக் கொள்ளூம் முட்டாள் தனத்தை செய்ததெல்லாம் அந்தக் காலம். இன்று தான் சுரண்டுவதற்க்கு முன்பு சுரண்டப்படும் மனோநிலைக்கு மக்களை தாயார்ப் படுத்தத் தேவையான எல்ல புறச் சூழல்களையும் உருவாக்கி விட்டுதான் காரியமாற்றுகின்றனர் அவர்கள்.

உண்மையில் இவர்களின் திட்டம் என்ன?
இந்திய சந்தை முழுவதையும் தமது வசப்படுத்திக் கொள்வது என்பது அவர்களது திட்டத்தின் ஒரு பகுதி எனில், விவசாய சுயசார்பை அழித்தல், தனது சந்தைத் தேவைக்கான பின் நிலமாக இந்திய விவசாயத்தை மாற்றுதல், இதுதான் இவர்கள் திட்டத்தின் இன்னொரு பகுதி.

அன்று சுதந்திர போராட்டத்தில் தரம் குறைவான, விலை அதிகமான உள்நாட்டு பொருட்களை வாங்கச் சொல்லி, முரட்டு கதர் ஆடைகளை அணியச் சொல்லி அறைக் கூவிய போது எந்த முட்டாள் பொறுக்கியும் தரம், விலை என்று பேசிக் கொண்டிருக்கவில்லை. இன்றோ தமது ஆன்மாவை அமெரிக்கனிடம் அடகு வைத்து விட்டு தேசம், பாசம் என்று பொய்யுரை பகர்கிறவர்கள்தான் தரம், விலை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையிலோ கேடு கெட்ட பிழைப்புவாதிகளாக மாறி அருவெறுக்கும் பண்புடையவர்களாக வலம் வருகிறார்கள். பக்கத்து வீட்டில் இழவு விழுந்தால் கூட தனது மதிய உணவுக்கு பிரியாணி கிடைப்பதை விட்டுக் கொடுக்க இயலாத அளவு சுருங்கிய கம்பளிப் பூச்சிகளாய் வலம் வருகிறார்கள் இந்த அல்பைகள்.

அண்ணாச்சி கடையால் உனக்கு அப்படியென்னா நஸ்டம் வந்து விட்டது? இல்லை விவசாயிதான் என்றாவது அண்ணாச்சி கடையை தனது நஸ்டத்திற்க்கு காரணம் என்று எங்காவது சொல்லியிருக்கிறானா? இதோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விலை வாசி உயர்கிறதே இதுதானே பிரச்சனை? இதற்க்கு அண்ணாச்சியா காரணம்? தண்ணீரை தனியாருக்கு தாரை வார்த்து நகரத்து ஏழைகளை தாகத்தில் தவிக்க விடுகிறானே அதுதானே பிரச்சனை? கல்வியை தனியாருக்கு கைகழுவி சாதரணப் பட்டவர்களுக்கு கல்வி மறுக்கும் புதிய மனு நிதியல்லவோ பிரச்சனை? காப்புரிமைச் சட்டம் மூலம் மருந்து பொருள் விலையை ஏற்றி வெறி நாய்க் கடி மருந்து கூட கிடைக்காமல் தவிப்பதல்லவா பிரச்சனை? பொது மருத்துவமனைகளை கைவிட்டு தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதல்லவோ பிரச்சனை? விவசாயிக்ளை விவசாயத்தைவிட்டு விரட்டுவதல்லவா பிரச்சனை? விவசாயத்தை ஒழித்து இந்தியாவின் சுயசார்பை அழிப்பது அல்லவா பிரச்சனை? கோடிக்கணக்கில் பஞ்சம் பிழைக்க ஓடி வரும் கொத்து விவசாயியை நகரங்களில் அத்து கூலிக்கு ஒட்டச் சுரண்டுவதல்லவா பிரச்சனை? அரை வயிறு சாப்பிட்டு உயிர் வளர்த்து நானும் மனிதன் தான் என உருவத்தில் நம்ப வைக்கும் கோடிக்கணக்கான ஏழை இந்தியர்களின் வயிற்று கொதிப்பல்லவா பிரச்சனை?

எது உனது பிரச்சனை?

இந்தியாவில் யாராவது அண்ணாச்சி கடை சரியில்லை என்று போராடினார்களா? அல்லது இந்திய மக்கள் போராடிய விசயங்களுக்குத்தான் இந்த அரசு எதாவது செய்துள்ளதா? குறைந்த பட்சம் நாட்டின் மீது ஏதோ அதீத பாசம் உள்ளது போல நடிக்கும் அடிவருடிகளாவது இந்தியா மக்கள் இது வரை போராடிய அடிப்படை பிர்ச்சனைகள் குறித்து எதாவது எழுதியுள்ளார்களா? இது வரை?

இப்பொழுது மட்டும் என்ன விவசாயிகள் மீதும் நடுத்தர வர்க்கத்தின் மீதும் பாசம்? உனது பாசத்தின் பின்னால் ஒழிந்திருக்கும் உனது திட்டம் என்ன?

அன்று அவுரி பயிரிடச் சொன்ன பிரிட்டிஸ்க்காரனுக்கும், இன்று பூ பயிரிட சொல்லும் இந்திய அரசுக்கும் என்ன வித்தியாசம். ஆனால் அன்று விவசாயிகள் தமது ரத்தத்தை நிலத்தில் சிந்தத் தயாரனார்களே ஒழிய அவுரி பயிரிட ஒத்துக் கொள்ளவில்லை. இதோ இன்றுக் கூட நந்திகிராமம் நமக்கு வழி காட்டுகிறது. உலகமய தாக்குதலில் லட்சம் விவசாயிகள் பூச்சிகளாய் இறந்தார்கள், இந்தியா எனும் பெரும் மலைப்பாம்பு சிறு அசைவைக் கூட காட்டவில்லை. மாறாக, நந்திகிராமத்தில் பதினான்கு நந்திகிராம மக்கள் தமது உயிரை வீரமுடன் தியாகம் செய்தன்ர். இதோ வெற்றியடைந்துள்ளனர். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அழுத குழந்தை பால் குடிக்கும்.

முடிவு செய்யுங்கள். சிறு முதலாளிகளின் அங்காடிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், பெட்டிக் கடை அண்ணாச்சிகளிடம் மட்டும்தான் பொருள் வாங்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டுப் பற்றை காட்ட இதை விட சுலபமானதொரு வழி இருப்பது போல தெரியவில்லை. இந்த சின்ன தியாகம்கூட செய்ய தாயாரில்லாத பிழைப்புவாதிகளை அவமானப்படுத்துங்கள். இதில்கூட சுயநலமாக சிந்திக்கும் ஒருவனின் உறவு எந்த காலத்திலும் நமக்கு ஆபத்துதான் என்பதை உணருங்கள்.


அசுரன்


மே 1 ரிலையன்ஸ் முற்றுகைப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் எல்லாம் கலந்து கொண்டு ரிலையன்ஸ் எதிர்ப்பை உரக்க ஒலிப்போம்!

தொடர்புடைய கட்டுரைகள்:

Tuesday, April 24, 2007

தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!

சோவியத் யூனியன் உலகின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வெற்றிகரமாக சோசலிசத்தை சாதிக்க முடியும் என்று நிரூபித்த நாடு. அதே நாடுதான் முதலாளித்துவத்தின் தோல்விக்கும் உதாரணமாக இன்று நின்று கொண்டிருக்கிறது. அது 1920களை ஒட்டிய கறுப்பு வெள்ளை காலகட்டம், உலக ஏகாதிபத்திய நாடுகள் முதல் உலகப் போர் முடிந்து ஒரு பத்தாண்டுகளிலேயே மீண்டும் ஒரு உலக யுத்தம் செய்வதற்க்கான தாயாரிப்புகளில் தீவிரமாக இருக்கின்றன. இந்த முறை அரசியல் களம் சிகப்பு நிறமாக இருந்தது ஒரு முக்கிய வித்தியாசம்.

துரோகிகளை உருவாக்கிய புதிய புரட்டல்வாதம் உருவான அந்த நெருக்கடி மிகுந்த வரலாற்று காலகட்டம் குறித்து ஜார்ஜ் தாம்சனின் 'மார்க்ஸ் முதல் மாவோ வரை' புத்தகத்திலிருந்து:

"சோவியத் அரசு வலுவடைய அடைய, ஏகாதிபத்திய அரசுகளிடையே உள்ள முரன்பாடுகளும் மேலும் கடுமையாகின. முதல் சோசலிச அரசுக்கு எதிரான தமது பகைமையில் அவை ஒன்றுபட்டன. அதன் வளர்ந்து வரும் வலிமையின் முன்னால் அவை பிளவுபட்டன. இப்பிளவு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளூம் வர்க்கத்துக்குள் பிரதிபலித்தது. பிரிட்டனில் சேம்பர்லினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட பெரும்பான்மையாக இருந்த பிரிவு சோவியத் யூனியனைத் தாக்குமாறு ஹிட்லரை ஊக்குவித்தது. ஹிட்லர் சோசலிசத்தை அழிப்பதுடன் இந்த நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் பலவீனப்படுத்திக் கொள்வான் என்றும், அதனால் பிரிட்டன் ஐரோப்பாவின் மிகப்பலம் பொருந்திய அரசாக உருவாகும் என்றும் இப்பிரிவு நம்பிக்கை கொண்டிருந்தது.

பிரிட்டனிடமும், பிரான்சிடமும் ஸ்டாலின் பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்தார். இது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். அது ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை என்பது தெளிவாகியதும், அவர் ஹிட்லருடன் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்."

"மேற்கில் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்ட ஹிட்லர் இப்போது கிழக்கில் தாக்குதல் தொடுக்கத் தாயாராக இருந்தான். பிரிட்டனின் ஆதரவைப் பெற ஒரு முயற்சி செய்தான்; ஆனால் சர்ச்சில் பிரிட்டிசு மக்களின் ஆதரவுடன் பிரிட்டனை சோவியத் யூனியன் பக்கம் நிறுத்தி தன் பதிலை வழங்கினார். இதன் பொருள் பிரிட்டிசு ஆளூம் வர்க்கம் தனது குறிக்கோளைக் கைவிட்டு விட்டது என்பதல்ல, அதன் நடைமுறைத் தந்திரம் மட்டுமே மாறியது. சர்ச்சிலின் நோக்கம் என்னவென்றால், ஜெர்மனியைத் தோற்கடிக்க சோவியத் யூனியனுக்கு இயலும் வகையில் ஆதரவு தருவது; இதன் மூலம் சோவியத் யூனியன் தனது சக்தி அனைத்தையும் செலவிடும்; அதன் பிறகு பிரிட்டன் உண்மையான வெற்றியாளனாகி விரும் என்பதுதான். மீண்டும் ஒரு முறை அவர்கள் தவறாகக் கணக்கிட்டு விட்டார்கள். சோவியத் மக்கள் அளவிட முடியாத இழப்புகளை அனுபவித்தனர். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் இறந்தனர்; இரண்டரைக் கோடி மக்கள் வீடிழந்தனர். இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் பலன்களைக் காட்டிலும் அதிகமான பொருள்வகைச் சேதம் ஏற்பட்டது; ஆயினும் அவர்கள் வெற்றி பெற்றனர். முதல் சோசலிச அரசு பாசிசத்திலிருந்து உலகைக் காப்பாற்றியது."

நீலகண்டன் என்பவர் தனது பொய்யுரைகளின் தொடர்ச்சியாக சமீபத்தில் இன்னுமொரு பொய்யை எழுதியிருந்தார். அதாவது ஹிட்லருடன் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்து கொண்டு ஏதோ பெரிய துரோகம் செய்தது போல அதில் சித்தரித்திருந்தார். இவர்கள் அரைப் பொய்யர்கள் என்று சொன்னதன் அர்த்தம் இதுதான். அதாவது உண்மையில் ஸ்டாலின் பிரிட்டிஸ், பிரான்சிடம் ஒப்பந்தம் போட கோரிக்கை வைத்த பொழுது அவர்கள் மறுக்கவும் வேறு வழியின்றி ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டதன் மூலம் ஒரு வருடம் போருக்கான தயாரிப்புக்கு அவகாசம் கிடைப்பதை உறுதிப் படுத்திக் கொண்டார். இந்த உண்மையின் கடைசிப் பாதியை மட்டும் வைத்து பொய்யுரைகளை எழுதும் இது போன்ற ஜென்மங்களை எந்த லிஸ்டில் சேர்க்க? மேலும் அவரது அந்த கட்டுரையில் ஸ்டாலின்தான் உண்மையில் ஹிட்லரை வளர்த்தார் என்று குறிப்பிடுகிறார். உண்மையில் நெருக்கடியை தவிர்க்க ஒரு வருட அவகாச காலகட்டத்தில் ஹிட்லருடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி சில அரசியல் பொருளாதார நடவடிக்கைகளை ஹிடலரின் ஜெர்மனியுடன் செய்து கொண்டதை மட்டும் சுட்டிக்காட்டி இவ்வாறு அவதூறு கிளப்புகிறார் பொய்கண்டன்.

இதில் குறிப்பாக ஒரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது,

பிரிட்டனோ அல்லது அமெரிக்காவோ அல்ல மாறாக சோவியத் யூனியன் தான் போரினால் அதிகம் இழப்படைந்த நாடு. ஆனால் சில நூறு வருடம் உலகம் முழுவதும் சுரண்டிக் கொழுத்த பிரிட்டன் இரண்டாம் உலகப் போரின் நிறைவில் தனது பொருளாதாரத்தை புனரமைத்துக் கொள்ள அமெரிக்காவின் உதவியை நாடியது. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரிட்டிஸ் காலனிய நாடுகளின் விடுதலை உள்ளது. ஆனால் முதல் உலகப் போர் முதல் தொடர்ந்து பல கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்த சோவியத் ரஸ்யா இரண்டாம் உலகப் போரின் பெரும் இழப்புகளுக்குப் பிறகும் கூட தனித்து நின்று வல்லரசாக மீண்டது, எந்த நாட்டையும் சுரண்டாமல். இந்த சாதனையைத்தான் நீலகண்டன் போன்ற பொய்யர்கள் அவதூறு புளுதி கிளப்பி மறைக்க முற்படுகிறார்கள். தெருப் புழுதியால் சூரியனை மறைக்க இயலுமா?

ஸ்டாலின் குறித்து அவதூறு பேசும் எந்த நாயும் இந்த அதிசயம் குறித்தும், ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருந்த பெரு மதிப்பு குறித்தும், மக்களை இயக்கி சாதனைகள் பலச் செய்ய செய்த உணர்வு நிலை என்ன என்பது குறித்தும் எதுவும் சொல்வதில்லை. நழுவி ஓடிவிடுகிறார்கள்.

ஸ்டாலின் குறித்தான அவதூறுகளை அங்கு விஜயம் செய்து பல இந்திய தலைவர்களூம் மறுத்துள்ளனர். ஆயினும் பொய்யிலே பிறந்த இவர்கள் தமது புரளிகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதில் மட்டும் கொஞ்சம் கூட சளைக்கவில்லை.

சரி இங்கு சுருக்கமாக ரஸ்யாவில் கடும் நெருக்கடியான சூழலில் வர்கக் போராட்டம் கைவிடப்பட்ட சூழல் எது என்பதையும். அது எப்படி எதிர் வர்க்கங்களின் கையில் அதிகாரத்தை ஒப்படைத்தது என்பதனையும் பார்ப்போம்.


ஸ்டாலினின் இரு தடுமாற்றங்கள் - தொடர் புரட்சி:


இரண்டாம் உலகப் போரில் வெளிநாட்டு எதிரிகளை வெற்றிகரமான செயல் தந்திரத்தின் மூலம் முறியடித்த ஸ்டாலின் உள்நாட்டு எதிரிகளை அவ்வாறூ முறியடிப்பதில் தோல்வியுற்றார். இது குறித்து ஒரு சின்ன சித்திரம்.

1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டாலின் கீழ்காணும் தொலை நோக்குமிக்க எச்சரிக்கையை விடுத்தார்:

"நாம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து ஐம்பது அல்லது ஒரு நூற்றாண்டு பின் தங்கியுள்ளோம். இந்த இடைவெளியை நாம் பத்தாண்டுகளில் நிரப்ப வேண்டும். ஒன்று நாம் இதைச் செய்தாக வேண்டும் அல்லது நாம் வீழ்ந்தாக வேண்டும். "

இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். அவர்கள் சோவியத்துடனான இறுதி மோதலுக்கான தயாரிப்புகளைச் செய்கிறார்கள். இந்த நெருக்கடியான பின்னணியில்தான் சோவியத் ரஸ்யாவில் எதிர் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஸ்டாலின் எடுத்துச் சென்ற விதம் குறித்து நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.

1933 இல் முதல் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. 1937-ல் இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. இவையணைத்தும் பல இன்னல்களையும், அனுபவக் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்ப்பட்ட இழப்புகளுடன் வெற்றியை அடைந்தன. இதற்க்கு காரணம் சாதாரண மக்கள் காட்டிய துணிச்சல் மிக்க வேலைப்பாணியே.
முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் ஸ்டாலின் அறிவிக்கிறார்:

"சோவியத் அரசு அதிகாரத்தின் வளர்ச்சி, செத்துக் கொண்டிருக்கும் வர்க்கங்களின் கடைசி எச்சங்களின் எதிர்ப்பை ஆழப்படுத்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவ்வர்க்கங்கள் செத்துக் கொண்டிருப்பதாலும் அவர்களது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாலுமே, அவர்கள் தாக்குதலின் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு கூர்மையான வடிவத்துக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள்.."


இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் நடுவில் மேற்சொன்னதை உறுதிப்படுத்தி எதிரிகளுக்கு எதிரான வர்க்க போராட்டத்தின் தேவையை உறுதிப்படுத்துகிறார் ஸ்டாலின்.

இந்நிலையில் 1936-ல் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது அனைவருக்கும் சம உரிமை வழங்கியது. அதாவது இரண்டாம் ஐந்தாண்டு திட்ட முடிவில் அவர் முந்தைய சமூகத்தின் எச்சங்கள் என்று கூறி சோவியத் மக்களை எச்சரிக்கை செய்ததையே மறந்துவிட்டு, எதிரிகள் இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் எல்லாருக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறார். இதன் மூலம் தான் கொடுத்த எச்சரிக்கைக்கு மாறாக அவரே நடந்து கொள்கிறார். அதாவது முந்தைய சமூகத்தின் எச்சமாகிய முதாளித்துவ ஆட்களுக்கு சம உரிமை கொடுக்கிறார். இதன் அர்த்தம் வர்க்க போரட்டத்தை கைவிடுவது என்பதுதான். இதன் அர்த்தம் எதிரிகளுக்கும் சம உரிமை கொடுப்பது என்பதாகும். இதன் அர்த்தம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவது என்பதாகும்.

இதன் விளைவாக கட்சிக்குள் அத்தனை பிற்போக்குவாதிகளும் ஊடுருவுகிறார்கள். இதனை விரைவிலேயே உணர்ந்து ஸ்டாலின் இதற்க்கெதிராக விழிப்புடன் இருக்குமாறு 1937-ல் எச்சரிக்கிறார். சோவியத்தின் அழிவுக்கு உள்ளிருந்து வேலை செய்பவர்கள் தனித்து நிற்ப்பதில்லை. இவர்களுக்கு எல்லைக்கு வெளீயே உள்ளா சோவியத்தின் பகைவர்கள் உதவுகிறார்கள் என்று எச்சரிக்கிறார்.

ஒரு யுத்த அபாயத்தை எதிர்கொண்ட நிலை, உள்நாட்டு சதிக்கெதிரான நெருக்கடி இவையணைத்தும் சேர்த்து சோவியத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் ஏற்ப்படுத்திய அழுத்ததின் விளைவுதான் ஸ்டாலினின் இந்த முதல் தடுமாற்றத்துக்கு காரணமாக அமைகிறது. இதே நேரத்தில் கட்சி முதல் பல இடங்களில் ஊடுருவிய எதிரிகளை உணர்கிறார் ஸ்டாலின். அதனை எதிர்கொள்வதற்க்கு அவர் கையாண்ட அதிகாரத்துவமான முறை இரண்டாவது தடுமாற்றமாக இருக்கிறது. இதன் விளைவாக ஏற்கனவே எதிரிகள் ஊடுருவியிருந்த போலிஸ் துறையின் கையில் எதிரிகளை ஒழிக்கும் பொறுப்பை ஒப்படைக்கப்படுகிறது. விளைவு எதிரிகள் உண்மையில் சோவியத்தின் நண்பர்களை ஒழிக்கிறார்கள்.

எங்கே தவறு நிகழ்கிறது?


1935 வரை லெனினியத்தின் பாதையில் நடை போட்ட ஸ்டாலின் ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்து ஏற்படுத்திய அழுத்தத்தின் விளைவால் தடுமாறுகிறார். இந்த விசயத்தில் சோவியத் ரஸ்ய பாட்டாளி வர்க்கம் செய்யத் தவறிய விசயம் மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே முந்தைய சமூகம் உருவாக்கிய இடைவேளியை குறைக்கும் முயற்சிகளில் போதிய கவனம் செலுத்தாமை ஆகும். இதனை நிறைவேற்றும் பண்பாட்டு புரட்சிக்கான அறைக்கூவலை லெனின் தனது கடைசிக் கட்டுரைகளில் ஒன்றில் எழுப்புகிறார். இதனை ஸ்டாலினும் கூட மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனால் பண்பாட்டு புரட்சிக்கான தேவை உணரப்பட்டதோடு நின்று விட்டது. ரஸ்ய பாட்டாளி வர்க்கம் சந்தித்த கடும் இன்னல்கள் அதனை அந்த திசையில் தொடர்ந்து பயணித்து பண்பாட்டு புரட்சியை செய்வதிலிருந்து திசை திருப்பி விட்டது. ஸ்டாலினின் முதல் தவறுக்குப் பிறகு அவர் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை களத்தில் இறக்கியிருந்தால் அதிகார வர்க்கத்தின் எதிர் புரட்சி நடவடிக்கைகள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் ஸ்டாலின் தவறு செய்வதற்கு வரலாறு அவருக்கு கொடுத்த வாய்ப்புகளுடன் ஒப்பிடும் போது தனது முதல் தவறை திருத்ததுவதற்க்கு வரலாறு அவருக்கு கொடுத்திருந்த வாய்ப்புகளின் அளவு வெகு சொற்பமே.

ஸ்டாலின் மக்களை அணி திரட்டி எதிர் புரட்சியாளர்களை வெல்வது என்பது நடக்க இயலாதது அல்ல. ஏனேனில் மக்களுக்கு அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை இல்லாமல் செய்வதில் பெரிய அளவில் வெற்றி பெற்ற மாவோ இந்த முறையில் மக்களை அணி திரட்டிதான் சீனாவில் அழிவு வேலை செய்ய முற்ப்பட்ட எதிர் புரட்சி கும்பல்களை முறியடித்தார்.

இவை காட்டுவது என்னவென்றால், பாட்டாளி வர்க்கம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தவுடன் புரட்சி நிறைவு பெறுவதில்லை என்பதைத்தான். மாறாக இன்னும் கோடூரமானதொரு உயரந்த வடிவத்திலான புரட்சிக்கு பாட்டாளி வரக்கம் தன்னை தாயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது என்பதைத்தான். வர்க்கங்கள் இந்த உலகில் இருக்கும் வரை ஒவ்வொரு வர்க்கத்தின் கருத்தும் ஏதோ ஒரு வகையில் கட்சியின் உள்ளே நிலவுவதை தவிர்க்க முடியாது. எனவே அவற்றுக்கு எதிரான போராட்டம் என்பதும் தவிர்க்க முடியாது. இது சோசலிச சமூகத்தை கம்யுனிச சமூகமாக வளர்த்தெடுக்கும் கால முழுவதிற்க்கும் பொருந்தும். இதனைத்தான் லெனினியமும் வலியுறுத்துகிறது. அதாவது தொடர் புரட்சி.

இதில் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தில் இருக்கிறதா இல்லையா என்ற வித்தியாசம் எதிரிகளுக்கெதிரான வன்முறையின் வடிவத்தையும், அரசுக்கும் மக்களுக்கு இடையிலான உறவை இயல்பானதாக மாற்றும் போராட்டத்தின் வடிவத்தையும் மாற்றுமே தவிர்த்து, வன்முறையையும், போராட்டத்தையும் முற்றிலும் விட்டொழித்து விடுவதில்லை. இன்னும் சொன்னால் அவற்றை இன்னும் மோசமானதாக்குகிறது. உண்மையில் புரட்சிக்கு பின்புதான் பாட்டாளி வர்க்கம் மிக நெருக்கடியான நிலையை சந்திக்கிறது.

இந்த காலகட்டத்தில் மக்களை அரசு நிர்வாகத்தில் பங்கு கொள்வது குறித்து அவர்களிடம் நிலவும் தேவையற்ற தயக்கம், அச்சம் இவற்றை களையச் செய்யும் வகையிலான பண்பாட்டு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது உயிராதாரமான ஒரு விசயமாக உள்ளது. குறுகிய காலத்தில் எதிர்புரட்சி கும்பலை முறியடித்த அதே வேளையில் இரு தடுமாற்றங்கள் மூலம் அவர்களை வேறு வடிவங்களில் நிலைபெறச் செய்த இந்த அம்சத்தில்தான் தோழர் ஸ்டாலின் மீது நாம் விமர்சனம் வைக்கிறோம். நாமும் பாடம் கற்றுக் கொள்கிறோம்.

ஸ்டாலின் எமது அதி உன்னத தோழர்:
ரஸ்யாவின் மீது அனைத்து ஏகாதிபத்தியங்களும் சுற்றி வளைத்து உள்நாட்டு சதிகளையும், எல்லையில் ஆக்கிரமிப்பு போர்களையும் செலுத்தியதும், இரண்டாம் உலகப் போர் நெருக்கடியையும், ரஸ்யாவில் ஏற்பட்ட பஞ்சத்தை ஒட்டிய பிரச்சனைகளையும் மனதில் கொண்டே ஸ்டாலினின் அந்த தவறுகளை அனுகுகிறோம்(மாபெரும் சதி). அதனால்தான் அவர் எமது பெருமைமிகு கம்யுனிச தலைவர்களில் ஒருவராக எம்மிடம் ந்஢லவுகிறார். இதனை குறிப்பிட்டுதான் ஜார்ஜ் தாம்சன் தனது "மார்க்ஸ் முதல் மாவோ வரை" புத்தகத்தில் சொல்கிறார்:

"இருபதைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவரது தலைமையின் கீழ் அதிகாரங்கள் மங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். வரலாற்றில் வேறு எந்த ராஜதந்திரியும் இத்தகைய ஒரு சுமையை இத்தனை காலம் சுமந்ததில்லை."

எமது தோழர் ஸ்டாலின் இன்றும் சுமக்கிறார். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதற்க்கு அவரது எதிரிகளால் அவரை முதுகில் குத்திதான் பழி வாங்க முடிந்தது. அதுவும் அவர் இறந்த பிற்ப்பாடு. அவர் எதில் வேண்டுமென்றாலும் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ரஸ்ய உழைக்கும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் அவர் தோல்வியடையவில்லை. குறுகிய காலத்தில் சோசலிசத்தை அவர் எந்தளவுக்கு வலிமையாக கட்டியமைத்திருந்தார் என்றால் அதனை அவர்கள் உடைத்து சிதைப்பதற்க்கு 40 வருடங்கள் தேவைப்படும் அளவுக்கு. இதோ அவரது இந்த சாதனைக்கு நிரூபனமாக இன்று ரஸ்யா மக்களின் ஆதர்ச நாயகராக ஸ்டாலின் நிற்கிறார். ரஸ்ய மக்களின் வெல்லற்கரிய மன உறுதியின் அடையாளமாக ஸ்டாலின் இன்று நினைவு கூறப்படுகிறார். மாறாக, ஸ்டாலின் கால வன்முறை என்று போலி வருத்தத்தை வெளிப்படுத்தும் கும்பலோ, அவரது சிலையை உடைத்து அவமானப்படுத்திய கருங்காலி கும்பலோ நாட்டை கூட்டிக் கொடுப்பதில் வெகு சிரத்தையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் தொழிலாளி வர்க்கத்தின் உத்வேகத்திற்க்கான அடையாளமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கிறார்.
'தோழர் ஸ்டாலின்' - அவர் எதிரிகள் மீது செலுத்திய வன்முறை எமக்கு பெருமையளிப்பதே ஆகும். அதற்க்கு நாங்கள் உரிமை கொண்டாடுகிறோம். மக்கள் விரோதிகள்தான் அவரைக் கண்டு பயப்பட வேண்டும். நாங்கள் அவரை நெஞ்சார தழுவி நன்றி சொல்வோம், "இது வரை உலகில் எங்குமே நடந்திராத, உழைக்கும் வர்க்கம் மண்ணுலகில் சொர்க்கம் படைக்கும் என்ற வார்த்தையை நிருபித்துக் காட்டியமைக்காகவும், அதற்க்கு விலையாக பெரும் பழிகளையும், அவமானங்களையும் இன்று வரை சும்ந்துக் கொண்டிருப்பதற்க்காகவும்'.

அசுரன்
தொடர்புடைய சுட்டிகள்:


ஸ்டாலின் அவதூறுகள் - அமெரிக்க உளவாளிகளா அல்லது நிரூபர்களா?

Monday, April 23, 2007

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

'We have a growing middle class, reared on a diet of radical consumerism and aggressive greed. Unlike industrialising Western countries, which had colonies from which to plunder resources and generate slave labour to feed this process, we have to colonise ourselves, our own nether parts. We have begun to eat our own limbs. The greed that is being generated (and marketed as a value interchangeable with nationalism) can only be sated by grabbing land, water and resources from the vulnerable.'

"பேராசையும், நுகர்வு வெறியும் உந்தித்தள்ள அகோர பசியெடுத்து வளர்ந்து வரும் ஒரு நடுத்தர வர்க்கத்தை நாம் கொண்டிருக்கிறோம். தொழில்மயமான மேற்கு நாடுகள் தங்களது காலனிகளின் வளங்களைக் கொள்ளையடித்தும், அடிமை உழைப்பு மூலமும் இந்த பசிக்கு இரையிட்டது போலல்லாமல், இங்கு நாம் நமது சொந்த நாட்டின் பகுதிகளையே காலனியாதிக்கத்துக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. நமது சொந்த உடல் உறுப்புகளையே நாம் புசித்து வருகிறோம். இப்படி உற்பத்தியாகும் பேராசை நிலங்களையும், நீர் நிலைகளையும் இன்ன பிற வளங்களையும் பலவீனமானவர்களிடமிருந்து பறிப்பதன் மூலம் திருப்திப் படுத்தப்படுகிறது." - தெஹல்கா பேட்டியில் அருந்ததிராய்

மீபத்தில் நந்திகிராமில் போலி கம்யுனிஸ்டு காட்டேறிகள் நடத்திய வெறியாட்டத்தை ஒட்டி அருந்ததி ராய், தெஹல்கா பத்திரிக்கைக்கு கொதிப்புடன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில்தான் இந்த வரிகள் வருகின்றன. இந்தியாவின் இன்றைய நிலையை இதை விட சுருக்கமாக எடுப்பாக சொல்லி விட முடியாது. இதனை புரிந்து கொள்ள ஒருவன் சமூக விஞ்ஞானங்கள் அனைத்தும் கற்றவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்படை மனிதாபிமானமும், சுயமரியாதையும், சமூக அக்கறையும் இருந்தால் போதும்.

துரதிருஷ்டவசமாக அல்ல, மாறாக ஏகாதிபத்தியம் திட்டமிட்டே இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தில் ஒரு பிரிவினரை தனது ரொட்டித் துண்டுகளுக்கு அடிமையாக்கியுள்ளது. நுகர்வு கலாச்சாரத்தில் தோய்ந்து போன அவன் தான் ஒரு ஒட்டுண்ணியாக இந்த சமூகத்தின் மீது ஒட்டிக் கொண்டு உறிஞ்சி உயிர் வாழ்வது குறித்த பிரக்சை என்பதே இல்லாமல் மயங்கிக் கிடக்கிறான். தனது வாய், ஆசன வாய், தனது பிறப்புறுப்பு(குழந்தைகள்) இவற்றிலிருந்து வெளியேறும், உள்ளேறும் விசயங்கள் குறித்து மட்டுமே அதிகபட்சம் சிந்திப்பதை பெரும்பான்மை உலகமய யுப்பி வர்க்கத்தார் செய்து வருவதை ஏகாதிபத்திய கலாச்சார தாக்குதல் உறுதிப்படுத்துகிறது.

என்றாவது இவர்கள் தமது ஐந்திலக்க சம்பளம் அமெரிக்க கம்பேனிகளுக்கு படு குறைவானதாகவும், ஒரு சராசரி இந்தியனுக்கு மிக உயர்வானதாகவும் தெரிகிறதே ஏன் என்று யோசித்திருப்பார்களா? குறை கூலி பிரதேசம் என்ற பெயரை இந்தியாவுக்கு வாங்கி தந்த தியாகிகள் யார் என்று என்றாவது யோசித்திருப்பார்களா? சராசரியை விட சிறிது வளப்பமான வாழ்க்கை வாழும் வசதியை உறுதிப்படுத்திக் கொடுத்த வள்ளல் யார் என்று யோசித்திருப்பார்களா?

இதோ அந்த தியாகிகள்-உழைக்கும் மக்கள் இந்திய சமூகத்தின் அன்றாட தேவைகளுக்காக மாடுகளாய் உழைத்து கிடக்கிறார்கள். காலையில் பால் போடும் இளைஞன், பத்திரிக்கை வீசியெறியும் சிறுவன், காலை உணவு அருந்தும் கடை சிப்பந்திகள், அந்த உணவுக்கு தேவையான எண்ணைய், மசாலா முதலானவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், அந்த உணவை உற்பத்தி செய்யும் விவசாயி, காலை ஆறு மணிக்கெல்லாம் வேலை செய்யத் துவங்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், 4 மணிக்கெல்லாம் எழுந்து வேலை செய்யும் அண்ணாச்சி குடும்ப கடைகள், காய்கறி மொத்த கொள்முதற்சாலை தொழிலாளர்கள், கம்பேனிக்கு இட்டுச் செல்லும் பேருந்து ஓட்டுனர்கள், தண்ணீர் லாரிகள், தனியார் தண்ணீர் சப்ளை வேன் ஓட்டுனர்கள் - இப்படி இன்றைய யுப்பி வர்க்கத்தின் ஒவ்வொரு தேவையுடனும் ஒரு பெரும் சமூக உழைப்பு பின்னி பிணைந்திருப்பதை அவர்கள் என்றுமே உணர்வதில்லை.

குறைந்தது தமது ஆபார்ட்மென்ட் வாட்ச் மேனுக்கு குடும்பம் உண்டு அவரது உழைப்பு எத்தனை மணிநேரம் நமது பாதுகாப்புக்காக சுரண்டப்படுகிறது என்றளவிலாவது இந்த வர்க்கம் யோசித்ததுண்டா?

இவர்களைப் போன்ற சிறுபான்மையினர் தவிர்த்து மிகப் பெரும்பான்மை சமூகம், நகரங்களிலும், கிராமங்களிலும் மிக பின் தங்கிய சிதறிய உற்பத்தி முறையில் குறைந்த விலையில் பொருட்களை தொடர்ந்து உற்பத்தி செய்வதுதான் யுப்பி வர்க்கத்தின் ஐந்திலக்க சம்பளத்தை மிக பெரிய சம்பளமாக வைத்திருக்கச் செய்யும் காரணி என்பதை என்றுமே இவர்கள் உணர்வதில்லை. அது குறித்தான் விவாதங்களிலும் தமது சாதனை குறித்தான வெற்று சவடால்களையே பதில்களாக இட்டுச் செல்கின்றனர். தமிழ்மணத்தில் உலகமய யுப்பிகள் குறித்த கட்டுரைகள் பலவற்றில் நான் கண்டுணர்ந்த விசயம் இது.


உலகமய சம்பளமும், உள்ளூர் சம்பளமும்:

குங்குமம் எழுதுகிறது, மதுரையை சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டினர், தறி பட்டறைகளையும், வயல் வெளிகளையும் இன்ன பிற சிறு வீத, பின் தங்கிய அடிமை உற்பத்தி முறைகளை உடைய பட்டறைகளை, தொழிற்பேட்டைகளை அதிசயமுடன் பார்த்துச் செல்வதாக. அத்துடன், இது போல இந்திய உழைப்பாளிகள் நவீனமயமாகாமல் தமது உழைப்பை நாள் முழுவதும் செலுத்துவது வெளிநாட்டினருக்கு வியப்பாக இருப்பதாக குங்குமம் எழுதுகிறது. நமக்கு வியப்பாக இருப்பதெல்லாம் வெளிநாட்டினனின் கண்ணுக்கு வியப்பாகவாவது தெரியும் பெரும்பான்மை இந்திய மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏன் இந்த ஐந்திலக்க ஒட்டுண்ணிகளின் பார்வையில் விழுவதே இல்லை என்பதுதான்.

ஒரு எடுத்துக்காட்டுக்கு நாம் அன்றாடம் உணவு சாப்பிடும் தோசைக் கடை ஒன்றில் தோசை சுடுபவரை எடுத்துக் கொள்வோம், காலை 6:00 மணிக்கு சற்று முன்பாக கடைக்கு வந்து கழுவி அடுப்பை சூடேற்றி வைத்தால் ஒரு ஏழு ஏழரைக்கு கடை களை கட்ட ஆரம்பித்தவிடும், காலை கூலி வேலைக்கு வந்தவர்கள், அடுத்ததாக வெள்ளை காலர் உத்தியோகத்துக்கு செல்பவர்கள் என்று ஒவ்வொருவராக அவரவர் வேலை வசதிக்கேற்ப்ப காலர் கலருக்கேற்ப வந்து பதினொன்று வரை தோசைக் கடை ஓடும், இதனிடையே மதியம் புரோட்டா மாவு ரெடியாகியிருக்கும் (சில இடங்களில் இவரே புரோட்டா மாவும் தாயரிக்க வேண்டியிருக்கும்) மாலை மூனு மூனரை வரை புரோட்டா, அம்லேட் கடை ஓடும், சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை தோசை கம் புரோட்டாவுக்கான தாயாரிப்புகள் ஆரம்பமாகிவிடும், இது இரவு 10:00, 11:00 மணிவரை ஓடும். இதற்க்கப்புறம் கடையை கழுவி எடுத்து வைத்து அடுத்தநாளுக்கான தாயாரிப்புகளை செய்தால், தூங்குவதற்க்கு பணிரென்டரை ஆகிவிடும். பிறகு மீண்டும் காலை 6:00 மணி.

ஒரு பால் கறந்து விற்பவரை எடுத்துக் கொண்டால் அவரது உழைப்பு காலை 4:00 மணிக்கு ஆரம்பிக்கிறது. இதே முறையிலான உற்பத்தியில்தான் காய்கறி கடைக்காரர் முதல் பேப்பர் போடும் பையன் வரை பலரும் ஈடுப்பட்டு இந்த சமூகத்தை உயிர்ப்புடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விவசாயியின் வாழ்க்கையும் இப்படித்தான், காலை காய்கறி, தானியங்களை கட்டி எடுத்து நகர சந்தைகளில் விற்பது ஒரு காலம் எனில், விதைப்பு இல்லாத நாட்களில் திருப்பூர்களிலும், சென்னைகளிலும் பனியன் பட்டறைகள், ஹோட்டல் கடைகளில், கட்டுமான இடங்களிலும் தமது உழைப்பை இடையறாமால் தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆடு மேய்ப்பவனின் வாழ்க்கை ஆடுகளுடன் முற்று முதலாக கட்டுண்டு அவன் சாகும் வரை ஆடோ டு ஆடாக சாக சபிக்கப்பட்டதொரு வாழ்க்கையைத்தான் இந்த சமூகம் அவனுக்கு உத்திரவாதப்படுத்தியுள்ளது. இவையணைத்தும் அற்பக் கூலிக்கு சுரண்டப்படும் உழைப்பு.

இந்தியாவில் Working poverty அதிகம். இந்தியாவில் வறுமைக் கோட்டை அரசு நிர்ணயம் செய்திருப்பதே ஒரு பெரிய மோசடி என்பதிருக்க, அதனை உண்மை என நாம் அங்கீகரித்தால் கூட 30% கிட்ட வறுமைக் கோட்டிற்க்கு கீழ் இருக்கும் ஒரு சமூகம்தான் இந்தியா. அதில் பெரும்பான்மையினர் வேலை செய்தும் வறுமையில் இருப்பவர்கள். அரசு புள்ளி விவரத்தின் படியே சில நூறு ரூபாய்கள்தான் கிராம ஆண்டு சராசரி வருமானமாக உள்ளது. நமக்கு சோறு போடுபவர்கள் சோறின்றி இருக்கு கொடுமை இது.

இவர்களுக்கு இந்த சமூகம் என்ன திருப்பிக் கொடுக்கிறது? இவர்களுக்கு என்றாவது தமது சொந்த வாழ்க்கையை நிதானமாக நின்று சிந்தித்துப் பார்க்கவோ அல்லது உழைப்பின் களைப்பை வியாபாரமாக்கும் சந்தை கலாச்சார ஆபாசங்களை மீறி ஆக்கப்பூர்வமான கலைகள் குறித்தோ, அல்லது அவர்களது சொந்த அறிவு மேன்மை குறித்தோ சிந்திப்பதற்க்கோ வாய்ப்புகளையாவது இந்த சமூகம் கொடுத்துள்ளதா? இப்படி அவனது சிந்தனை, உடல் உழைப்பு முழுவதையும் தோசைக் கல்லிலும், பசுவின் மடுவிலும், உழு மாடுகளுடனும், கட்டிட குவியல்களிலும் கட்டி வைத்து அடிமையாக்கி சுரண்டுவது குறித்து என்றாவது இந்த வளங்களை அனுபவிக்கும் வர்க்கங்கள் யோசித்திருக்குமா? ஒரு பெரிய சமூகமே இப்படி ஜனநாயகமின்றி - 'விடிந்தால் பட்டறை அடைந்தால் படுக்கை' என்று முடக்கப்பட்டு, ஒட்டு மொத்த சமூகத்தின் அறிவு அழிவு ஏற்படும் புதிய மனு நிதியின் அவலம் குறித்து என்றாவது அறிவு ஜீவிகள் என்று பீற்றிக் கொள்ளும் நடுத்தர வர்க்க மேதைகள் யோசிப்பதுண்டா?

ஒரளவு வளமான நடுத்தர வர்க்க பின்புலத்தில் பிறந்து, இந்த சமூகத்தின் கூட்டு உழைப்பின் பலன்களையெல்லாம் அனுபவித்து விட்டு, தமது அறிவை வளர்த்துக் கொண்டு, இந்த பலங்களின் அடிப்படையிலேயே இன்று உலகமயப் பொருளாதாரத்தில் தன்னை ஒரு வளப்பமான இடத்தில் உட்கார வைத்துக் கொண்டு ஒட்டுண்ணியாக வாழும் இந்த வர்க்கம் - அதனை ஏதோ தமது தனிப்பட்ட சாதனை போலவும், மற்ற ஏழை தொழிலாளர்கள் எல்லாம் முட்டாள்கள், பிழைக்கத் தெரியாதவர்கள், சோம்பேறிகள் என்றும் வியாக்கியனம் செய்யும் அல்பத்தனமான் திமிர்தனத்தைத்தானே இவர்கள் பெரும்பாலும் இந்த சமூகத்திற்க்கு திருப்பிச் செலுத்தும் கடமையாக் வெளிப்படுத்துகிறார்கள்.

இப்படி சுரண்டிச் சேர்த்த சில்லறை பணத்திலிருந்து சிலர் தானம் செய்து தமது சமூக அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். இந்தியாவை ஒட்டச் சுரண்டிய வெள்ளைக்காரன் இது போல அற்ப தொகையை தானம் செய்து விட்டு அதனையே அவனது கொள்ளைகளை நியாயப்படுத்து பயன்படுத்துவது எந்தளவுக்கு மொள்ளமாறித்தனமோ அந்தளவுக்கு மொள்ளமாறித்தனம் இந்த செயல். சம்பாதித்த பணம் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களை இது போல அற்ப கூலிக்கு சுரண்டி சேர்த்த பன்னாட்டு மூலதனத்தின் ஒரு பகுதி, அதில் இவன் சேமிக்கும் பணம் என்பது உள்நாட்டு உழைக்கும் மக்களை அற்ப கூலிக்கு சுரண்டுவதால் சேகரமாகும் பணம். இதில் உனக்கு என்ன நல்லவன் என்ற மன நிம்மதி வேண்டிக் கிடக்கிறது?

சிலர் இருக்கிறார்கள் - 'சார் சாதி பேச வேண்டாம், மத பேச வேண்டாம், வர்க்க பிரிவினை பேசி நாம் பிரிந்து கிடக்க வேண்டாம். எல்லாரும் மனிதர்கள் சார்' என்று இங்கே தமிழ்மணம் போன்ற இடங்களில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இங்கே அன்பை பேசு என்பதுதான் இவர்களின் கோரிக்கை. ஏனேனில் தமிழ்மணத்தில் பொழுதைக் கழிக்க வரும் இவர்களுக்கு நமது சத்தங்கள் நாரசமாக இருக்கிறதாம். இவர்களது ஆன்ம நிம்மதியை கெடுக்கிறதாம். அதிர்ச்சியாய் இருக்கிறதாம். ஏனேனில் இவர்கள் எல்லாம் தேவ லோகத்தில் வசிப்பவர்கள் அல்லவா? ரொம்ப நல்லவர்கள் அல்லவா? எந்த பிரச்சனைக்கும் போகாதா உத்தமர்கள் அல்லவா?

உண்மையில் இவர்கள்தான் படு கேவலமான அயோக்கியர்கள். ஒட்டுண்ணியிலேயே வீரிய வகையைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இங்கே ஒரு பெரும் சமூகமே துன்பக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது அது குறித்தான பேச்சைக் கூட சகிக்கவொன்னாத அளவு தமது சொந்த சுகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படு கேவலமான பிழைப்புவாதிகள் இவர்கள். சுரண்டலின் பலன்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டே அது குறித்தான் விவாதங்களை தவிர்ப்பதோடல்லாமல் தமது வர்க்கத்தாரிடமும் நல்ல பெயர் எடுக்கும் நாரிகள் இவர்கள்தான்.

நான் சென்னையிலிருந்த காலம் அது, பெசண்ட் நகர் சிக்னல் வாட்டர் டேங்க் சாலையின் ஆரம்பத்தில் சில புரோட்டாக் கடைகளை கடந்தால் தள்ளு வண்டியில் தோசைக் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார் ஒரு அண்ணாச்சி. சிரிவில்லிபுத்தூர்க்காரர் அவர். இரவு நேரங்களில் அங்குதான் நமக்கு சாப்பாடு. அமிர்தமாக இருக்கும். மாலை ஆறு மணி போல ஆரம்பித்து இரவு விடிய விடிய கடை ஓடும். அதுதான் அவரது பிரதான வருமானம். முக்கியமாக இரவு எட்டு முதல் பத்து மணி வரையான பீக் அவரில் எவ்வளவு காசு பார்க்க முடியுமோ அவ்வளவு லாபம் அவருக்கு. அந்த நேரங்களில் அவரது கைகள் படு பரபரப்பாக இயங்கும். மின்னலின் வேகத்துடன் சுற்றி பல்வேறு கோரிக்கைகளை வைத்து நிற்க்கும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வெறி கொண்டு இயங்குவார் அவர். அது கலைக் கண் கொண்டு உற்று நோக்குவோருக்கு இரை கேட்டு கீச் கீச் என்று கதறும் குஞ்சுகளை திருப்திப்படுத்தும் ஒரு பறவையின் தாய்மையை ஒத்ததாக தோன்றும். ஆனால் நிதர்சனத்தில் அவரை உந்தித்தள்ளும் குழந்தைகளின் படிப்பு, தங்கையின் மருத்துவ செலவு இன்னபிற வாழ்க்கை துயரங்கள் எனது கண்ணில் நிழலாடும். அவரது இந்த பேராசையால் காக்க வைக்கப்பட்ட நபர்கள் பலர் (ஆம், இந்த அடிப்படை தேவைகளை பேராசை என்று அல்பவாதிகள் சொல்வார்கள் - "சார், இருக்கறவங்கள திருப்தியா வைச்சாலே ஒழுங்கா கடை ஓடும், அவனுக்கு பேராசை சார். அதான் ரெகுலர் கஸ்டமர காக்க வைச்சு கடசில விரட்டி விட்டுற்றான்). அப்படி காக்க வைக்கப்பட்டு இழந்த வாடிக்கையாளர்கள் பலர். ஆனால் இவை அவரை பாதிப்பதில்லை. அவரை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தி கொன்று கொண்டிருக்கும் வேறு ஒரு விசயம் இருந்தது.

தொடர்ந்து இப்படி வேக வேகமாக தோசை சுட்டதால் அவரது மணிக்கட்டு முற்றிலும் சேதமாகி, சவ்வு வலுவிழந்து அவருக்கு பெரும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த வலியையும் மீறி அவர் தொடரந்து தோசை சுட்டுக் கொண்டேயிருப்பார். இதுதான் அவரை உண்மையில் கலவரப்படுத்திக் கொண்டிருந்த விசயம். ஏனேனில் அவரது மூலதனம் என்பது அவரது மணிக்கட்டின் வேகம்தான். அந்த கடையில் பெரும்பாலும் வேலை தேடும் இளைஞர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் வருவார்கள். முக்கியமாக அன்றாடம் கூலி வேலை செய்து வயிறு கழுவுபவர்களும் பெரும்பான்மையாக வருவார்கள்.

முகமெல்லாம் வெள்ளை பொடி - அவர் கட்டிட இடிபாடுகளில் வேலை செய்கிறார் போலும், இரவு பத்து மணி போல வருகிறார், பழுப்பு நிற சட்டை - வேட்டியா, லுங்கியா அல்லது கிழிந்த பேண்டா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒரு ஆடை. கடும் உழைப்பின் வலு ஏறிய உடலமைப்பு. கண் இமைகளில் கூட வெள்ளைப் பொடிகள் நிற்கின்றன. வாய் திறந்து பேசும் போது வித்தியாசமாக பற்கள் பழுப்பு நிறத்திலும், உதடுகளில் ஒட்டிய பொடிகள் வெள்ளை நிறத்திலுமாக காட்சி தருகின்றது. சிரி வில்லிபுத்தூர் அண்ணாச்சியிடம் கேட்க்கிறார் - "இட்லி எத்தன ரூபாய்". வேலை சிரத்தையாக இருக்கும் அண்ணாச்சி பதில் சொல்கிறார். ஒரு நொடியில் கால் பங்கு நேரம் கணக்குப் போடுவது போன்று நிதானித்த பிறகு வெள்ளை பொடி தொழிலாளி, அண்ணாச்சியிடம் 4 இட்லிகளை கேட்க்கிறார். அருகே 5 தோசைகளை சாப்பிட்ட பிறகு ஆம்லேட்டுக்காக நின்று கொண்டிருந்த எனக்கு அதற்க்கு மேல் சாப்பாடு இறங்கவில்லை.

வெள்ளைத் தொழிலாளியின் உழைப்பின் தேவை என்னவென்பதை பார்க்கும் போதே என்னால் உணர முடிகிறது. அது நான்கு இட்லிகளில் அடங்கிவிடும் விசயம் அல்ல என்பதை உணரும் போது எனது வயிறு தானே சுருங்கிக் கொள்கிறது. கொடுமையில் கொடுமை உழைப்பவரின் வறுமை. எனது மனசாட்சி இந்த சமூகத்தின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நாகரீகமான வாழ்க்கை வாழ்கிறாயே பதிலுக்கு என்ன செய்யப் போகிறாய் என்று என்னை குத்திக் கிழிக்கிறது. மங்கிய சோடியம் விளக்கின் அழுக்கு மஞ்சள் வெளிச்சம் இந்தியாவின் இழி நிலையை நினைத்து மௌனமாக அழுவது போன்ற எண்ணம் வலுப்பட்டது. வெளியே பரவும் அந்த சோக மஞ்சள் உள்ளே மனதுள் கருமையாய் படர்ந்தது. சென்னையின் இரவு நேர காற்றழுத்த இறுக்கம் இந்த சோகத்தை இன்னும் மோசமானதாக மாற்றியது. ஒன்றும் செய்ய இயலாமல் வெறுமே நின்று வேடிக்கை பார்க்க வைக்கும் அந்த சூழல் என்னுள் கழிவிரக்கத்தை தோற்றுவித்தது.

சிலர் அவன் தண்ணியடிப்பதற்க்காக காசு சேர்க்கிறான் என்று சொல்லக் கூடும். இருக்கலாம். ஆயினும் தண்ணியடிப்பதுதான் அவனை மறுநாள் சூரியன் வரும் முன் எழுந்து மீண்டும் ஒரு உழைப்பு சுரண்டலுக்கு உட்படுத்த அவனை தாயர் செய்கிறது எனில் அதனையும் சேர்த்து தருவிக்கும் அளவிலாவது அவனது கூலி இருப்பதுதானே நியாயம் என்று சொல்லத் தெரியாத அல்பைகள்தான் இவ்வாறு அவனை குற்றம் சாட்டுகிறார்கள். அந்த அல்பைகளோ யுப்பி வர்க்கத்தின் அஜீரண தீர்த்த யாத்திரைகள் குறித்து சம்பிரதாயப் பூர்வமான மௌனம் சாதிப்பார்கள்.

இப்படிஇந்திய சமூகத்தின் பெரும் மனித வளத்தை அற்ப கூலிக்கு அடிமைகளாய் வைத்து சுரண்டுவதால்தான் நமக்கு முட்டை 2:50க்கும், தோசை 5:00 ல்லது 6:00 ரூபாய்க்கும் கிடைக்கிறது. தொழிற்சாலைகளில், பனியன் பட்டறைகளில் ஒப்பந்த கூலிகளாக விவசாயிகளை சுரண்டுவதால்தான் லிவி ஜீன்ஸ் லாபத்தையும் உள்ளடக்கி 1000 ரூபாயில் கிடைக்கிறது. இந்த பாணி உற்பத்தி முறையில் இருக்கும் சேவைகள் எல்லாமே நமக்கு மிக குறைவான விலையில் கிடைக்கின்றன. ஒருவேளை உண்மையிலேயே இந்த தியாகிகளுக்கு/பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் என்னாகும்?

அப்படி ஒரு சூழல் உருவாகும் போது புரட்சி செய்ய வேண்டிய தேவை குறித்து நாம் எதுவும் சொல்லித் தர வேண்டாம், யுப்பி வர்க்கமே நம்மிடம் வந்து புரட்சியின் தேவை குறித்து பேசும். ஏனேனில் அது போன்ற சூழலில் அவனது பழைய வளப்பமான வாழ்க்கைத் தரத்தை பேணுவதற்க்கு தற்போதைய ஐந்திலக்க சம்பளம் போதாமல் போயிருக்கும். தேவையான சம்பளத்தை உயர்த்தி தருவதற்க்கோ அவனது இன்றைய பாசமிகு பன்னாட்டு தரகு முதலாளிகள் தாயாராயிருக்க மாட்டார்கள்.

இதுதான் ஐந்திலக்க சம்பளத்தின் லட்சணம். இதுதான் இந்திய மூளைக்கு உண்மையிலேயே சந்தை மதிப்பை உயர்த்தி தரும் காரணி. இதுதான் பல உலகமய தொழிலாளர்களை ஏதோ தாம் சாதனை செய்ததாக சுய திருப்தியில் அலைய வைக்கும் சமூக பொருளாதார பின்னணி. ஏனேனில் அவர்கள் கணக்கில் திறமை என்பதும் சாதனை என்பதும் சம்பள இலக்கங்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் கணக்கில் தன்னலமின்றி இந்திய சமூகத்துக்கு தமது உழைப்பை கொடுக்கும் பெரும்பான்மை மக்கள் திறமையற்றவர்கள். இந்த உண்மைகளையெல்லாம் மறைக்கத்தான் இந்தியா ஒளிர்கிறது என்ற தோல்விகரமான பிரச்சாரம் இன்று வரை தொடர்கிறது.

இப்போ சொல்லுங்க, உங்களோட இந்தியா ஒளிர யார் காரணம்? சோறு போட்ட உங்க சகோதரர்களின் இந்தியா உண்மையில் ஒளிர்கிறதா? எந்த இந்தியாவின் பக்கம் நீங்கள் இருக்கிறீர்கள்? உங்களது இந்தியாவை ஒளிரவைத்தவர்களின் இந்தியாவை ஓளிரவைக்க நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

அதிகமான கேள்விகளோ?...

மன்னிக்கவும்..... சுலபமான ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்.

உங்களுக்கு நன்றியுணர்ச்சி உண்டா?

A Song for Working People:
05 Megam Pozivatha...(If you have problem listning click here)


A Song for Alpaigal:

01 Parada Unadhu.m...


அசுரன்


தொடர்புடைய சுட்டிகள்:



பாடல்கள்: பாரடா உனது மானிடப் பரப்பை - பாரதிதாசன் பாடல்கள், மகஇக வெளியீடு.

பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 83

தொலைபேசி: 23718706

Sunday, April 22, 2007

மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!

மெரிக்காவின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வாய்ப்புள்ளவராக ஒரு தலைவன் உருவானான். உடனே அமெரிக்க மேலாதிக்க கனவுகளை நனவாக்கும் அதன் ஏஜென்டுகள் அந்த தலைவனை போட்டு தள்ளுவதற்க்கான வேலைகளை செய்யத் துவங்கினர். அதி பயங்கர ஆயுதம் வைத்திருப்பதாகவும் இன்னும் பல பொய்களையும் ஆவணங்களாய் தாயாரித்து உலகை நம்ப வைத்தனர். அதன் பேரிலேயே அந்த நாட்டின் மீது போர் தொடுத்து நாசம் விளைவித்தனர். தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டனர். ஆனால் இன்று வரை அவர்கள் ஆவணம் என்று ஒன்றை முன் வைத்ததில் இருந்தது எதுவும் நிரூபிக்கப்படவில்லை.


அத்தனைக்கும் அந்த தலைவன் பெரிய அபயாகரமானவர் கிடையாது. அவருக்கே இவ்வளவு பெரிய சதியில் ஈடுபட்டது அமெரிக்க மேலாதிக்க இயந்திரம். அந்த தலைவன் ஈராக்கின் சாதாம் உசைன். ஆனால் வரலாற்றில் இவர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிய இரு தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு எதிராக திட்டமிடுவதற்க்கு ஒராண்டு ஈராண்டு அல்ல ஒரு நூற்றாண்டின் முக்கால்வாசி நேரம் செலவழித்து பல ஆவணங்களை, செய்திகளையும் கட்டியமைத்தனர் ஏகாதிபத்திய வெறியர்கள். ஏகாதிபத்தியத்தை சாவின் விழிம்புக்குத் தள்ளிய அந்த தலைவர்கள் ஸ்டாலினும், மாவோவும் ஆவர்.


மாவோவின் மீது அடிவருடிகள் கட்டியமைத்த அரை நூற்றாண்டு பொய்களின் தன்மையை மன்திலி ரிவியுவில் விரிவாக வந்த ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்துகிறார்கள். அந்த கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரை மாவோவின் மீதான அவதூறுகளை முறியடிக்க உதவும் என்று நம்புகிறேன்.


மாவோவின் காலத்தில் சீன குடிமக்களின் வாழ்க்கைத் தரம் பல மடங்கு உயர்ந்தது. இந்தியாவை விட பல மடங்கு மோசமான நிலையிலிருந்த சீனா குறுகிய காலத்தில் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, வேலை நிரந்தரம்., பணி பாதுகாப்பு, மருத்துவம், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்ததுடன், பெரும் தொழிற்சாலைகளையும், சிறு தொழிற்சாலைகளையும், கிராம அளவில் புறக்கடை பட்டறைகளையும் கட்டியமைத்து சீனாவை 'முற்றிலும் விவசாய நாடு' என்ற நிலையிலிருந்து தொழில் சார்ந்த நாடாக படு வேகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. இந்த காலகட்டம்தான் சீனாவில் முதலாளித்துவ வளர்ச்சியை நிறைவு செய்து சோசலிசத்தை கட்டியமைத்த சோசலிச புரட்சி கட்டம் ஆகும். இதுதான் வரலாற்றில் மாவோ மீது அவதூறு செய்ய எதிரிகள் பயன்படுத்தும் கிரேட் லீப் ஃபார்வேர்டு என்ற காலம் ஆகும்.


1959-61 காலகட்டத்தில் மாவோவினுடைய பொருளாதார கொள்கைகள் சீனாவில் பஞ்சத்தை ஏற்படுத்தியதாகவும் அதில் ஒன்று இரண்டல்ல, பல கோடிக்கணக்கில் மக்கள் மாண்டு போனதாகவும் அவதூறு கிளப்புகிறார்கள். இவர்களின் வண்டவாள புளூகுகளைப் பார்க்கும் முன்பாக சீனா அந்த காலகட்டத்தில் நிகழ்த்திய சாதனைகளைக் கொஞ்சம் பார்ப்போம்.


இவர்கள் பஞ்சம் நிகழ்ந்து பலர் இறந்ததாக கூறும் காலகட்டத்தில்தான்(1949-78) சீனா தனது உணவு தானியம் உற்பத்தி செய்யும் நிலப்பரப்பை 145.9% மும், உணவு தானிய உற்பத்தியை 169.6%வும் உயர்த்தியது. இதே காலகட்டத்தில் சீனாவின் மக்கள் தொகை 77% உயர்ந்தது. ஆக சீனாவின் ஒவ்வொரு குடிமகனுக்குமான உணவின் பங்கு அபரிமிதமாக உயர்ந்தது இந்த காலகட்டத்தில்தான். விவசாயத் துறையில் இவ்வளவு வளர்ச்சி இருந்தது எனில் ஏற்கனவே பின் தங்கி போயிருந்த தொழிற்துறை திவாலாகி விட்டதா எனில் இல்லை. தொழிற் துறையில் ஆண்டு சாராசரி வளர்ச்சி 11.2% மாக இருந்தது இந்த காலகட்டத்தில்தான். 1952 சீனா விடுதலை பெற்ற போது நாட்டின் மொத்த உற்பத்தியில் 36% மாக இருந்த தொழிற்துறை 1975-ல் மாவோ மறைந்த பொழுது 72%மாக இருந்தது. விவசாயத் துறை 28% மாக இருந்தது. இத்தனையும் விவசாயத் துறையிலும் அபரிமிதமான வளர்ச்சியை உள்ளடக்கியது எனில் இந்த அசுர வளர்ச்சி வேகத்தை புரிந்து கொள்ள முடியும். இதனை பஞ்சம் என்று இவர்கள் அவதூறு செய்வதில் எந்த ஒரு நேர்மையான நோக்கத்தையும் எம்மால் காண முடியவில்லை.


இன்று தொழிற் வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை கூட்டிக் கொடுப்பதோடல்லாமல் விவசாயிகளை நிலத்தை விட்டு துரத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்று கொஞ்சம் கூட மான ரோசமின்றி சொல்லி வரும் சில அடிவருடிகள். அதாவது தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையாக விவசாயம் நாசமுற வேண்டும் என்று பச்சையாக பொய் சொல்லும் இவர்கள். விவசாயத்துறையிலும் பல மடங்கு வளர்ச்சி, தொழிற்துறையில் அதீதமான வளர்ச்சியை சாதித்துக் காட்டிய மாவோவின் சீனாவை பற்றி பேச என்ன அருகதை உள்ளது? இந்த வலுவான சோசலிச கட்டுமானத்தின் பலத்தில்தான் இன்று சீன சந்தை சோசசலிசம் என்ற பெயரில் அழிவுப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை இன்னொரு பதிவில் பார்ப்போம். ஒரு பக்கம் பழைய சோசலிச சீனாவின் போற்றுதற்குரிய சாதனையின் பலத்தையே இன்று சீனாவின் சந்தை சோசலிச உலகமயத்தின் வெற்றிகள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டே இன்னொரு பக்கம் அந்த சாதனைகளை செய்த மாவோ பற்றியும் அவதூறு கிளப்புகிறார்கள் இந்த நயவஞ்சகர்கள்.



ரஸ்யாவில் திரிபுவாதம் - சீனா தனித்து நின்று போராடுகிறது:

ஸ்டாலின் காலத்தில்(அதாவது ஒரு நான்கைந்து வருடம்) சீனாவின் வளர்ச்சிக்கு அனைத்து விதமான தொழிற் நுட்ப உதவிகளையும் செய்தது ரஸ்யா. ஸ்டாலினுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த குருச்சேவ் தலைமையிலான புரட்டல்வாத கும்பலின் எதிர்புரட்சி நோக்கத்தை புரிந்து கொண்ட மாவோ அவர்களை ஆரம்பத்திலிருந்தே அம்பலப்படுத்தி வருகிறார். ஸ்டாலினியத்தை கீழ்த்தரமாக விமர்சிப்பதன் மூலம் ரஸ்யாவில் சோசலிசத்துக்கு சீரழிவை உண்டு செய்வதை குருச்சேவ் முன்னெடுப்பதை உணர்ந்து மாவோ அவர்களை அம்பலப்படுத்துகிறார். இதனையொட்டி சீனாவிலிருந்து அனைத்து ரஸ்ய தொழில் வல்லுனர்களும் அங்கு செய்து வந்த திட்ட நகல்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார்கள். சீனா எந்த ஒரு ஆதரவும் இன்றி, சுற்றிலும் எல்லா எல்லைப் புறத்திலும் எதிரிகள் மட்டுமே முற்றுகையிட்டிருக்கும் ஒரு அபாயகரமான சூழலில் தனித்து விடப்படுகிறது.


இப்பொழுது ஆட்சிக்கு வந்து ஒரு சில ஆண்டுகளே ஆகிய நிலையில் சீனா தனியாக நின்று இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கு எதிராக போராடிக் கொண்டே புரட்சியை தொடர்ந்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு பக்கம் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியம், இன்னொரு பக்கம் தனது தொங்கு சதை நாடுகளை சுரண்டிவந்த சமூக ஏகாதிபத்தியம் ரஸ்யா. இந்த நிலையில் சீனாவில் தொழில் வளர்ச்சியை மாவோ சாதித்த விதம் ஒரு படிப்பறிவில்லா ஏழை மாணவனை பெரும் விஞ்ஞான படிப்பிற்க்கு தாயார் செய்யும் பக்குவத்தை ஒத்ததாக இருக்கிறது. ஆம், அந்த முயற்சியில் சறுக்கல்களும், தோல்விகளும் இருந்தன.


'இரண்டு கால்களில் நடப்பது' என்ற முழக்கத்தின் கீழ் வறிய நாட்டுப்புற சீனாவை தொழில் நாடாக மாற்றுகிறார் மாவோ. கனரக பெரிய தொழிற்சாலைகளை கட்டும் அதே நேரத்தில் இணையாக சிறு தொழிற்சாலைகளை கிராமப்புறத்தில் கட்டுவது என்பதைத்தான் அந்த முழக்கம் சுட்டுகிறது. இது வெறும் நாட்டின் வண்ணத்தை மாற்றும் தொழில் புரட்சியாக இல்லாமல் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சியையும், பண்பாட்டு வளர்ச்சியையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருப்பதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டார் மாவோ. இதைத்தான் ஏழை மாணவனின் விஞ்ஞானி கனவை நனவாக்கியது என்று சொல்கிறேன்.


ஆரம்ப காலங்களில் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்ட 'புறக்கடை இரும்பு உலைகள்' என்ற முறையில் தரம் குறைந்த இரும்பே உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், அதே நேரத்தில் விவசாயிகளை தொழில் முனைவோர்களாக அனுபவப்பெறுவதற்க்கான வாய்ப்பையும் இது வழங்கியது. மாவோ, தான் பாய்ந்து கடக்க விரும்பியவையாக குறிப்பிடும் விசயங்களில் முக்கியமான ஒன்று 'மக்களின் மனோபாவம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சி' என்பதும் ஒன்றாகும். இதனை ஈடேற்றும் வகையிலேயே இது போன்ற முறையில் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. சில ஆரம்ப கட்ட பின்னடைவுகள், தோல்விகளுக்குப் பிறகு குறுகிய காலத்திலேயே இந்த பாடங்கள் பயனளிக்கத் துவங்கின. சீனா சாதித்துக் காட்டியது.


இதே இடத்தில் இந்தியாவின் பின் தங்கிய நிலையையே சாக்கிட்டு ஏகாதிபத்திய மூலதனத்திற்க்கு குறைந்த விலையில் வளங்களைக் கூட்டிக் கொடுக்கும் தற்குறிகளை ஞாபகப்படுத்திக் கொள்வது தகும். தனது குழந்தை தவழ்ந்து பிறகு அடியெடுத்து வைத்து நடப்பதை காணும் ஒரு தந்தையின் மனோபாவம் எங்கே, குழந்தை அடியெடுத்து வைத்து சொந்த காலில் நின்றால் சுரண்டுவதற்க்கு வழியிருக்காதே என்று அலறி துடிக்கும் அடிவருடிகளின் மனோபாவம் எங்கே.


இன்று மூலதனம் மூலதனம் என்று கூவி அந்த பெயரிலேயே நாட்டை கூட்டிக் கொடுக்கும் அயோக்கியர்கள் நாகரிக கனவான்களாக உலா வரும் போது அன்று சீனா தனது மனித வளத்தையும், மக்கள் புரட்சியின் வெற்றியில் பெற்றிருந்த உற்சாகத்தையும் மட்டுமே மூலதனமாக இட்டு சீனாவின் பொருளாதாரத்தை சுதந்திரமான தன்னிறைவு பொருளாதாரமாக உயர்த்தி சாதனை படைத்தது. எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இன்றி தனது சொந்த பலத்தில் கையூன்றி எழுந்து நின்றது சீனா. மூலதனம் என்ற பெயரில் தனது சொந்த மக்களை கூட்டிக் கொடுக்கும் நாதாரித்தனத்தை சீனா பாட்டாளி வர்க்க அரசு அன்று செய்யவில்லை. இதோ இங்கு அடிவருடிகளுக்கோ நாயினும் தாழ்ந்து நக்கிக் குடித்தால்தான் திருப்தி.


மாவோவின் பிரபலமான 'மக்கள், மக்கள் மட்டுமே அனைத்தையும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்கள்' என்ற வரிகள் வெற்று முழக்கமாக இல்லாமல், நடைமுறையிலும் அவர் பின்பற்றிய விசயமாக இருந்தது. சீனாவின் தொழில் வளர்ச்சியாகட்டும், எதிர் புரட்சி கும்பலின் அழிவு வேலைகளுக்கு எதிரான போராட்டமாகட்டும், கொசு ஒழிப்பு போராட்டம் முதல் சீனாவின் துயரமான மஞ்சள் ஆற்றை கட்டுப்படுத்துவதாகட்டு அவர் மக்களை அணி திரட்டியே செய்தார். அதிகாரத்துவமான நடைமுறையின் மீது அவர் எப்பொழுதுமே மிக எச்சரிக்கையாக இருந்து தவிர்த்துக் கொண்டார்.


மாவோ ஒரு வெறியன், மனித உரிமைகளை மதிக்காதவன் என்று நாக்கூசாமல் பொய் சொல்லுபவர்கள், சீனா விடுதலை பெற்றவுடன் எதிரிகளிடம் கூட கருணை காட்டச் சொல்லி கட்சி அணிகளுக்கு அவர் அறிவுறுத்தியதும் அதை நடைமுறைப்படுத்தியதுமே பதிலளிக்கும். இதனை நான் சொன்னால் நம்ப மறுப்பார்கள். ஆனால் சீனாவின் அழிவில் மிக முக்கிய பங்களிப்பு செய்த மங்கோலியாவின் கடைசி பேரரசன் பூயி மன்னன் சீன சிறைச்சாலையில் மனிதனாக மாற்றப்பட்ட வரலாற்றை ஹாலிவுட் படம் 'தி லாஸ்ட் எம்பெரர்' சித்தரிக்கிறது பார்த்து உண்மை என்னவென்பதை புரிந்து கொள்ளுங்கள். அந்த படத்திற்க்கு 9 ஆஸ்கார் அவார்டுகள் வழங்கப்பட்டதை குறிப்பிட்டால் சிலருக்கு அந்த படத்தின் மீதான நம்பகத்தன்மை கூட வாய்ப்புள்ளது. அதே சீனாவில் மாவோவுக்குப் பிறகு கட்சியின் தலைமைக்கு வந்த சீரழிவு கும்பலின் தலைவர் டெங்கை மாவோ இருந்தவரை விமர்சித்து அம்பலப்படுத்தியே வந்துள்ளார். மாவோ உண்மையிலேயே இவர்கள் சொல்லுவது போல அதிகாரத்துவ நடைமுறையுடையவராக இருந்திருந்தால் டெங்கை எப்பொழுது எப்படியோ கட்டுப்படுத்தியிருக்கலாம்.



சீனாவில் பஞ்சம் - ஏகாதிபத்திய புரளிகளின் சுயமுரன்பாடு:

அமெரிக்க ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் 3 கோடி பேர் இறந்தார்கள் என்று, இன்னொரு கும்பல் 7 கோடி பேர் இறந்ததாக சொல்கிறது. பல தரவுகள் சீனாவில் அந்த குறிப்பிட்ட காலத்தில் பஞ்சம் ஏற்ப்பட்டதையே காட்டுகின்றன. ஆனால் இவர்கள் சொல்லுவது போல அதிதமாக உப்பிப் பெருக்க வைக்கப்பட்ட நிலையில் அல்ல. இதனை பிறகு பார்ப்போம் முதலில் இந்த புள்ளிவிவரங்களிலேயே புதைந்துள்ள பொய்களை பார்ப்போம்.


உலகின் மிக பெரிய பஞ்சம் சீனாவில் ஏற்ப்பட்டதாம், நாமும் கூட தினமும் செய்தித் தாள்களில் பார்க்கிறோம், ஆப்பிரிக்காவில் மில்லியன் கணக்கில் பஞ்சத்தில் வாடுகிறார்கள் என்று. ஆனால் மில்லியன் கணக்கில் இறந்ததாக எங்கும் நாம் பார்க்கவில்லை. ஆனால் சீனாவில் நடந்தது என்று நாம் நம்ப வேண்டும். ஏனேனில் அவ்வாறு சொல்லுவது ஈராக் யுத்தத்தை நியாயப்படுத்திய கனவான்கள் அல்லவா?


பங்களாதேசத்தின் வரலாற்றிலேயே மிக மோசமான பஞ்சம் 1974-75ல் ஏற்பட்டது இறந்தவர்கள் அரசு கணக்கின் படி 30,000 பேர். ஆனால் சீனாவில் 3 கோடி பேர் இறந்ததாக நாம் நம்ப வேண்டும். இதனை மீறி சீனா வல்லரசாகிய ரகசியத்தை மட்டும் இந்த நக்கிக் குடிப்பவர்கள் சொல்வதில்லை.


இந்த இடத்தில் சீனாவின் திரிபுவாத கோஸ்டிகள் குறித்து ஒரு சின்ன அறிமுகம் செய்து கொள்வோம். சீன சமூகத்தில் நிலவிய அத்தனை வர்க்கங்களூம் சீன கம்யுனிஸ்டு கட்சியிலும் பிரதிபலிக்கவே செய்தன. ஏனேனில் சீன கம்யுனிஸ்டு கட்சி தனித்து நிற்க்கும் ஒரு அமைப்பு அல்ல. சீன சமூகத்தில் வாழ்ந்து, வளர்ந்தவர்கள் சேர்ந்த அமைப்பே சீன கம்யுனிஸ்டு கட்சி. சீனா கம்யுனிஸ்டு கட்சியில் ஆரம்பத்திலிருந்தே முதலாளித்துவ பாதையாளர்களும், மாவோ தலைமையிலான பாட்டாளி வர்க்க பாதையாளர்களும் போராடி வந்துள்ளனர். இது புரட்சிக்கு முன்பிருந்தே நிலவும் ஒரு விசயம். இவர்கள் மாவோவின் ஒவ்வொரு சோசலிச திட்டங்களுக்கு எதிராகவும் அழிவு வேலை செய்தனர். மாவோவும் ஒவ்வொரு முறையும் மக்களிடம் சென்றே இந்த கும்பலை முறியடித்தார்.


மாவோவுக்கு பிறகு தலைமைக்கு வந்த டெங் சீனாவை முதலாளித்துவ சீரழிவுக்கு திசை திருப்புகிறார். சீன புரட்சி முறியடிக்கப்படுகிறது. இதற்க்கு மாவோவின் பொருளாதார திட்டங்கள் மீது முதலில் புழுதி வாரியிறைப்பது அவசியமாகிறது. இந்த புதிய திரிபுவாத கும்பல் கணக்கின் படி மாவோவின் காலத்தில் 1கோடியே சொச்சம் பேர் இறந்ததாக சொல்கிறார்கள்.


இந்த கும்பல்கள் யாருமே இவர்களது புள்ளிவிவரங்களில் உள்ள படு முட்டாள்தனமான முரன்பாடுகளூக்கு பதில் சொல்லியதேயில்லை(பார்க்க இணைப்பிலுள்ள ஆங்கில கட்டுரை). ஒரு உதாரணத்திற்க்கு1949-ல் சராசரி வாழ்க்கை காலம் 35 வயதாக இருந்து 1970-ல் அது 65ஆக உயர்ந்த மர்மம் குறித்து இவர்கள் பதில் சொல்லுவதில்லை. உலகின் ஆக மோசமான பஞ்சம் நிலவியதாக கதை எழுதும் இவர்கள் அதே காலகட்டத்தில் மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் லத்தீன அமெரிக்க நாடுகளை விட சீனாவில் சராசரி மனித வாழ் நாள் காலம் அதிகமாக இருந்த மர்மம் குறித்து எதுவும் சொல்வதில்லை. இந்த விசயங்களையெல்லாம் சீனாவில் பஞ்சம் குறித்து அதீதமாக எழுதிய ஜூடித் பானிஸ்டர் என்பவரே ஒத்துக் கொள்கிறார். இதே பஞ்ச சாவு புரளி எழுத்தாளர்தான் 1984-ல் எழுதும் பொழுது சீனா தனது வருடாந்திர சாவு எண்ணிக்கையை குறைத்ததில் சிறப்பு சாதனை படைத்துள்ளது என்கிறார். சுயமுரன்பாட்டு முத்தண்ணாக்கள். சீனாவில் பஞ்சம் மிக மோசமாக இருந்ததாக சொல்லப்படும் பகுதியில் வாழ்ந்தவர்களை பேட்டி கண்ட ஒரு நிருபரும் அங்கு இவர்கள் சொல்லுவது போல எதுவும் நிகழவில்லை. உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் அந்த காலத்தில் இருந்ததாக உறுதிப்படுத்துகிறார். அந்த நிருபர் மாவோவின் மீது நம்பிக்கைக் கொண்டவர் என்பதால் நாம் அவரது சொற்களை நம்பக் கூடாது. ஏனேனில் ஈராக் பேரழிவு ஆயுதம் போல பல உண்மைகளை அவர் சொன்னதில்லையல்லவா? இதோ அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்கி விட்டது. ஈரானுக்கு எதிராக அல்கொய்தாவின் துணை அமைப்புக்கு CIA உதவி(The Hindu - Opinion Column 18 April 2007) செய்வதாக செய்தி வருகிறது.


இதில் மிக முக்கியமான விசயம் CIA முதலான உளவு நிறுவனங்கள் இது போல ஆயிரத்தெட்டு எழுத்தாளர்களையும், 'The China Quaterly' போன்ற பத்திரிக்கைகளையும், பல புத்தகங்களையும், சமூக விஞ்ஞான ஆய்வு நிறுவனங்களையும் சீனா குறித்து புரளி செய்திகளை கட்டியமைப்பதற்க்கென்றே பிஸ்கெட்டு போட்டு வளர்த்துள்ளது. சமீப காலங்களில் இந்த எழுத்தாளர்-உளவு நிறுவன கள்ளத் தொடர்பு வெகு விமரிசையாக அம்பலப்பட்டது. இங்கு தமிழ்மணத்தில் கூட புரளிகளை, அதை நாம் புரளி என்று எத்தனை முறை அம்பலப்படுத்திய பின்பும் கூட, கூச்ச நாச்சமின்றி மீண்டும் மீண்டும் எழுதி வரும் சில அடிவருடிகள் யாரிடமிருந்து என்ன பெறுகிறார்கள் என்று தெரியவில்லை.


1959-61 களில் சீனாவில் அதி முக்கியமான பிரச்சனைகள் நிகழ்ந்ததையும், குறிப்பாக பாய்ச்சல் பொருளாதார தந்திரத்தில் சில கொள்கை தவறுகள் ஏற்ப்பட்டதையும் மாவோ ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனம் ஏற்கிறார். ஆனால் 1959 காலகட்ட பிரச்சனைகளுக்கு பிரதான காரணமாக வறட்சியையும், திரிபுவாத கும்பல்களின் அழிவு வேலையையுமே மாவோ குறிப்பிடுகிறார். ஏனேனில் இதே கொள்கைகளை அவர் எற்றுக் கொண்ட தவறுகளை களைந்து விட்டு நடைமுறைப்படுத்திய பொழுதுதான் சீனா சோசலிச வல்லரசாக மாற முடிந்தது எனும் போது மாவோ சொல்வதை நாம் நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது. மாவோ ஸ்டாலினைக் கூட தவறு செய்த பொழுது வெளிப்படையாக விமர்சித்துள்ளார் எனும் போது அவரது நேர்மை குறித்து எமக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் அந்த காலகட்டத்தின் பிற புள்ளிவிவரங்களும் இயற்கை பேரழிவினால் ஏற்ப்பட்ட சாவுகளை உறுதிப்படுத்துகின்றன. இதை விட உறுதியான ஆதாரமாக ஏகாதிபத்திய புரளியாளர்களே சீன பஞ்சம் குறித்தான அனைத்து பொய் விவரங்களுக்கும் மூலமாக இருப்பதைக் கொண்டு அந்த அவதூறுகளின் தரத்தை நம்மால் எடை போட முடிகிறது.


திரிபுவாத ரஸ்யா சீனாவின் காலை வாரிவிட்ட பிற்ப்பாடு ஒரு வேளை சீனா பாய்ச்சல் பொருளாதார திட்டத்தை நடைமுறைபடுத்தியிராவிடில் என்னாகியிருக்கும்? உறுதியாக ஏழ்மையான தனது கிராமப்புற உற்பத்தி முறைகளை வைத்துக் கொண்டு அதனால் இந்த சாதனைகளை செய்திருகக இயலாது என்பதிருக்க, பெற்ற சுதந்திரத்தையும் பறி கொடுத்து நாட்டை ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றி பெரும் இன்னலில் சிக்கியிருக்கும் வாய்ப்புகளே அதிகம் தென்படுகிறது. இது போல யூகங்களை வைப்பது சரியாக இருக்காது ஆயினும் ஒப்பிட்டு நோக்க வசதியாக இருக்கும் என்பதலேயே இந்த யூகம்.

ஒருவேளை 1949-லிருந்து இந்தியாவின் சராசரி வாழ்நாள் வளர்ச்சியை சீனாவினுடையதுடன் ஒப்பிட்டால் பல மில்லியன் கணக்கானவர்களை இந்தியா கொன்று விட்டது என்று குற்றம் சாட்டலாம். இந்தியா சீனாவைப் போல மாவோவின் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இது போன்ற பல கோடிக்கணக்கானவர்களின் சாவை தடுத்திருக்கலாம் என்று இந்தியா மீது குற்றம் சாட்டலாம். உலகின் ஆகக் கொடூரமான அரசு இந்தியா என்று கட்டுரைகள் எழுதலாம். என்ன செய்ய துரதிருஷ்டவசமாக இந்தியா ஏகாதிபத்தியத்தின் அல்லக்கையாக இருப்பதால் இது போல குழந்தைத்தனமாக எழுதும் தேவை அடிவருடிகளுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ இன்னும் ஏற்ப்படவில்லை போலும். பார்ப்போம் நேபாளத்தின் வெற்றி என்னவிதமான கதைகளை இந்த உலகுக்கு கொடுக்கிறது என்பதை.


மாவோவின் மீதான குற்றச்சாட்டுகளின் தரம் என்பது இதுதான். எந்த ஒரு ஆய்வு நோக்கமோ அல்லது நேர்மையான புரிதலுக்கான ஆவலோ இன்றி, எதிர் அரசியல் சக்திகள் மீது பழி போடும் ஒரே நோக்கம் கொண்டு எழுதுவதன் விளைவு இது போல சுயமுரன்பாட்டு முட்டாள்தனங்களுக்கு வழி வகுத்து விடுகிறது.


அசுரன்

Friday, April 13, 2007

காந்தியசத்தைவிட கொடியதொரு இசம் எது? - மா. சிவகுமார்

ந்தியாவின் காந்தியிசத்தைவிட கொடியதொரு இசம் RSS என்று மா. சிவகுமார் நேரடியாக சொல்லவில்லை. ஆனால் அவர் பல இசங்களை ஒப்பிட்டு எழுதும் அடிப்படையை நான் யூகித்து அவரது வேலையை மிச்சப்படுத்தும் விதமாக இந்த கருத்தை கூறுகிறேன்.

கொலைகளும், சாவும், வன்முறையும் மட்டுமே அளவுகோல் எனில் உலகில் காந்தியிசமே மிகக் கோடூரமான இசம். இந்திய பிரிவினையின் போதும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போதும் இழந்த உயிரிழப்புகள் அவற்றுக்கான கூலியாக குறைந்த பட்ச விடுதலையைக் கூட பெறாமல் போன துரோகத்தில் காந்தியிசமே மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகிலேயே வேறு எங்கும் இந்த கேவலம் நடந்ததில்லை. உலகில் வேறு எங்கும் இப்படி கேவலாமன முறையில் மக்கள் இறந்ததில்லை.

இந்த படுபாதக இசத்தை விட RSS இன் பார்ப்ப்னிய பயங்கரவாதம் மாகா கோடூரமானது என்று அவர் எழுதியுள்ள பதிவு --> ஆர் எஸ் எஸ் என்ற அபாயம்


ஆம், உண்மைதான் RSS பயங்கரவாதம் அஹிம்ஸை எனும் முகமூடியற்ற காந்தியமே என்ற வகையில் மிக கோடூரமானதுதான்.

அசுரன்

தொடர்புள்ள சுட்டிகள்:

மாவோவின் சீனா

மாவோவின் பாய்ச்சல் பொருளாதாரமும் ஏகாதிபத்திய பொய்களும்

ஸ்டாலின் அவதூறுகள் - அமெரிக்க உளவாளிகளா அல்லது நிரூபர்களா?

காந்தி நல்லவரா? கெட்டவரா?

அஹிம்ஸையின் இம்சை

Thursday, April 12, 2007

அவை நாயல்ல, MNCக்களின் விற்பனை பிரதிநிதிகள்!!

தெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா?


பெங்களூரில், கடந்த டிசம்பரில் 8 வயது சிறுமி வெறி பிடித்த தெரு நாய்களால் கடித்துக் கொல்லப்பட்ட செய்தி மனிதாபிமானம் உள்ள எவரையும் கலங்கச் செய்து விடும். காட்டில் வாழும் சிங்கம், புலி போன்ற கொடூர விலங்குகள் கூட்டாகச் சேர்ந்து மான்களை வேட்டையாடுவது போல, இந்தச் சிறுமியை நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்துக் குதறியுள்ளன. பெயிண்டராக வேலை பார்க்கும் தனது தந்தையை உணவருந்த அழைக்கச் சென்ற சிறுமி ஸ்ரீதேவி இப்படி நாய்களிடம் மாட்டிக் கொண்டதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் செய்வதறியாமல் திகைத்தனர். கற்களைத் தூக்கியெறிவதைத் தவிர அவர்களால் அந்த வெறிநாய்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. வெறிபிடித்த நாய்களோ சிறுமியைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டுத்தான் அகன்றன.


தகவல் தொழில்நுட்பத் துறையின் சொர்க்கமாக விளங்கும் பெங்களூரில், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சந்திரா லேஅவுட் பகுதியில் காலை 7.30 மணிக்கு நடந்த இந்தக் கொடூரம் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது. சமீபத்தில் கொடைக்கானலிலும் இது போன்றே ஒரு சிறுவனை நாய்கள் கூட்டமாகக் கடித்துக் குதறின. சில மாதங்களுக்கு முன்பு இதே பெங்களூரில் 16 பேரை ஒரு நாய் கடித்தது; மணிப்பூரில் ஒரே சமயத்தில் 18 பேர் நாய் கடித்தததால் ""ரேபிஸ்'' நோய் தாக்கி உயிரிழந்தனர். சேலத்திலும் ஒரு சிறுவன் நாய் கடித்து உயிரிழந்தான். கோவைசெல்வபுரத்தைச் சேர்ந்த அஜீத் என்ற சிறுவன் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு மாண்டு போனான். கோத்தகிரியைச் சேர்ந்த நாகராஜ் என்ற சிறுவன் தெரு நாய்களால் வேட்டையாடப்பட்டு நீண்ட சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துள்ளான். இப்படி நாய்க் கடியால் மக்கள் அவதியுறும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.



இவையெல்லாம் பத்திரிக்கைச் செய்திகளில் வந்தவை மட்டுமே; இன்னும் செய்திகளில் வராத எத்தனையோ நாய்க்கடிகளும், அதனால் மக்கள் படும் அவதிகளும் தினமும் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் மாதம் ஒன்றிற்கு மட்டும் குறைந்தது 5000 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் நாய்கடிக்கு சிகிச்சை தரப்படுகிறது. ஆனால், அரசின் கணக்குகளில் வராத எத்தனையோ நாய்கடிகளும், அரசு மருத்துவமனைகளில் மருந்தின்றி கைவிடப்பட்டவர்களும் ஏராளம்.

நாய்க்கடியில் அடிக்கடி மாட்டிக் கொள்பவர்கள், பெரும்பாலும் உழைக்கும் ஏழை, நடுத்தர மக்களே. இரவு வேலைக்குச் சென்று திரும்பும் உழைப்பாளிகளும், பள்ளிக்கோ, வேலைக்கோ சென்று திரும்பும் அவர்களது குழந்தைகளுமே. இப்படி நாய்களிடம் கடி வாங்கி அல்லற்படுகின்றனர்.

இப்படி நாளுக்கு நாள் பெருகிவரும் நாய்களின் தொல்லை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பெங்களூரின் தென்பகுதி சுகாதார அதிகாரி நாகராஜ் என்பவர் ""மக்கள் தெருக்களில் குப்பைகளைக் கொட்டுவதும், அனுமதி இல்லாத இறைச்சிக் கடைகள் அதிகரித்துள்ளதும் நாய்கள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளன'' என்கிறார். பெங்களூர் மாநகர கமிஷனர் ஒருபடி மேலே போய், ""மக்களுக்கு சமூக அக்கறை வேண்டும், சாலையோரங்களில் கழிவுகளைக் கொட்டுவது கூடாது, சட்ட விரோதமாய் இயங்கும் இறைச்சிக் கடைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்'' என்று பழியை மக்கள் மீதே சுமத்துகின்றõர்.

தமிழகத்தில் ""சிக்குன் குன்யா'' நோய் பரவிய போது மக்களிடம் உள்ள சுகாதாரக் கேட்டினால்தான் நோய் பரவிவிட்டதாகக் கதைவிட்ட அரசின் அதே திமிர்த்தனம் இப்போது நாய்க்கடியினால் மக்கள் அவதிப்படும்போதும் வெளிப்படுகின்றது.

இப்படிப் பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு ஏன் முன்வரவில்லை? நகரங்களில் பெருகிவரும் தெரு நாய்களுக்குக் காரணம், மக்களா? அல்லது அதைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசா?

இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் லட்சக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிவதும், அவை கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகுவதும் மக்களின் நகர வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றி வருகின்றன.

முன்பெல்லாம் முனிசிபாலிட்டி நாய் வண்டி வந்து எல்லா தெரு நாய்களையும் பிடித்துச் சுருக்கு மாட்டியோ, நச்சுப் புகை கொடுத்தோ கொன்று விடுவர். ஆனால் இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லையே, ஏன்?

நாய்களின் மேல் அக்கறை கொண்ட ""ப்ளூ கிராஸ்'' போன்ற மிருகாபிமான தன்னார்வ நிறுவனங்கள் தெரு நாய்களைக் கொல்லாமல் அவற்றுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் அவற்றைப் பெருக விடாமல் தடுத்துவிடலாம் என்று அரசிடம் பரிந்துரைத்துச் செயல்படுத்தி வருகின்றன. கொக்கின் தலையில் வெண்ணை வைத்த கதையாக, பிடித்த நாயைக் கொல்லாமல், குடும்ப கட்டுப்பாடு செய்து வரும் இவர்களிடம் பிடிபடாத நாய்களில் ஒன்று, வருடத்திற்கு 10 முதல் 15 குட்டி போடுவதும், குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு தெருவில் விடப்படும் நாய்கள் மக்களைக் கடிப்பதும் தெரியாதா?

குளிர்சாதனம் செய்யப்பட்ட வண்டியில், ஏதாவதொரு பகுதிக்குச் சென்று நாய்களைப் பிடித்து கு.க. செய்து தெருவில் விட்டுவிட்டுக் கணக்கு காட்டும் இந்தத் தன்னார்வக் குழுக்களிடம் நாய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பினை ஒப்படைத்ததை மறைக்கவே அரசும் அதிகாரிகளும் மக்களின் மேல் பழி போடுகின்றனர்.

இப்படி கு.க. செய்யும் முறை பயன் தராது என்று சென்ற நூற்றாண்டிலேயே நிரூபிக்கப்பட்டும், நாய்களின் மேல் உள்ள ""கருணை''க்காக ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்கு டாலர் கருணை காட்டுவதால், அதனைக் கைவிட இந்த தன்னார்வக் கூலி நிறுவனங்கள் மறுக்கின்றன. குளுகுளு நட்சத்திர ஓட்டல்களில் கூட்டம் நடத்தித் தங்களது மிருகாபிமானத்தை வெளிப்படுத்தும் இவர்களிடம் மனிதாபிமானத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?


நாய்க்குப் பிறந்த NGOக்களின் போலி மனிதாபிமானம் - டாலரால் குளிப்பாட்டப்பட்ட மேட்டுக் குடி நாய்கள்


இன்றைக்கு உலகமயமாக்கலினால் கிராமங்களில் வேலையும், நிலமும் இழந்து நகரங்களை நோக்கி ஓடிவந்து, ஒருவேளை சோற்றுக்கே அல்லாடி, தினக்கூலியாய், கொத்தடிமையாய் மக்களே கவனிப்பாறின்றி கிடக்கும்போது நாய்களை யார் கவனிப்பது? இப்படி கவனிப்பாரற்று தெருவில் விடப்படும் நாய்கள்தான் பல்கிப் பெருகுகின்றன. இப்படி தெருவுக்கு வரும் ஒரு நாயின் மூன்றாவது தலைமுறை, முழுமையாக மனிதனிடமிருந்து பிரிந்து, அதனுள் இருக்கும் விலங்கின் குணம் அதிகரித்து, வீட்டு விலங்காக இல்லாமல் காட்டு விலங்காக மாறி விடுகின்றது.

இப்படி காட்டு விலங்காகிவிட்ட தெரு நாய்கள் கூட்டமாக வாழ்வதும், காட்டு விலங்குகள் போலவே நடந்து கொள்வதும் இன்றைக்குப் பல நகரங்களில் காண முடியும். சிறுமி ஸ்ரீதேவியைக் கூட்டமாக வேட்டையாடிய நாய்களுக்குக் கண்டிப்பாக வீட்டு விலங்கின் தன்மை இல்லை. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தின் புதர்க்காடுகளில் உள்ள மான்குட்டிகளை நாய்கள் கூட்டமாகச் செயல்பட்டு வேட்டையாடுவதும் அதிகரித்துள்ளது.

காட்டு விலங்குகள் நாட்டிற்குள் வந்து மக்களைத் தொல்லைப்படுத்தினால் அவற்றைக் கொன்றொழிப்பதுதானே அரசின் கடமை! அதனை அரசாங்கம் செய்யாமல் இருப்பது ஏன்? அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

உலகிலேயே நாய்க்கடிக்கு அதன்மூலம் பரவும "ரேபிஸ்' என்ற கொடிய நோய்க்கு பெருமளவில் பலியாகும் மக்களைக் கொண்ட நாடு, நமது நாடு. இங்கு ஏற்கெனவே மலிவு விலையில் கிடைத்து வந்த "ரேபிஸ்' தடுப்பு மருந்தை இதே தன்னார்வக் குழுக்கள் மூலம் நிறுத்தியாகி விட்டது. போதாக்குறைக்குக் காப்புரிமைச் சட்டமும் திருத்தப்பட்டு விட்டது. இனிமேல் நாய்க்கடிக்கு பன்னாட்டு நிறுவனங்கள்தான் மருந்து தரவேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ. 300 முதல் ரூ. 1000 வரை விற்கப்படுகின்றது.

இப்படி உலகிலேயே "ரேபிஸ்' மருந்து அதிகமாக விற்பனையாகும் மிகப் பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இங்கே நாய்க்கடிகள் குறைந்தால் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் லாபம் குறையும். இங்கே நாய்களே இல்லையென்றால் அவர்கள் கடையை மூடிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!

நமது நாட்டு மக்களின் சாவில் லாபம் பார்க்கக் காத்திருக்கும் வல்லூறுகளாக இந்தப் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் உள்ளன. அந்நிறுவனங்கள் தரும் எச்சில் காசில்தான் இந்தத் தன்னார்வக் குழுக்கள் தங்களது மிருகாபிமானத்தைக் காட்டுகின்றன. இக்குழுக்களை நம்பித்தான் நாய்களுக்கு கு.க. செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பினை அரசு ஒப்படைத்துள்ளது. நகராட்சிகளின் நிர்வாக ஆணையம் இதற்காக ஐந்து கோடியே எழுபத்தெட்டு லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாக நாட்டு மக்களின் உயிரை இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளிடம் அடகு வைத்துவிட்டது இந்த அரசு.

மறுகாலனியாக்கம் தோற்றுவித்த பயங்கரத்தால் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாய்படாத பாடாகி விட்டது. வீட்டு விலங்குகள் இயல்பு நிலை பிறழ்ந்து காட்டு விலங்குகளாக மாறி மக்களைக் கடித்துக் குதறி அச்சுறுத்துகின்றன. வெறிபிடித்த தெருநாய்களை அடித்துக் கொல்வது மட்டுமல்ல; அதற்கு முன்பாக ஏகாதிபத்திய மறுகாலனியாக்க வெறி நாய்களையும் அவற்றின் எடுபிடிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கான பெரும் புரட்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டியுள்ளது.


அழகு


Lattest:

#1) The Hindu

#2) நாய்க்கடிக்கு மேலும் ஒரு பெங்களூர் சிறுவன் பலி.


#3) ஹைதாராபாத் கல்லூரிக்குள் இளம் பெண்களை வேட்டையாடிய நாய்கள்(நிஜ நாய்கள்).

Related Posts with Thumbnails