TerrorisminFocus

Wednesday, April 25, 2007

சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!

சில்லறை வணிகத்தில் பன்னாட்டு-தரகு மூலதனத்தை அனுமதிப்பதை ஆதரித்தும் எதிர்த்தும் சமீப காலத்தில் இங்கு பல கட்டுரைகள் இடப்பட்டன. அவற்றில் சில்லறை வணிகத்தை இது போன்ற பகாசுர கம்பேனிகளுக்கு திறந்து விடுவதை ஆதரித்து எழுப்பப்பட்ட வாதங்களை சாரமாக தொகுத்து அவற்றிற்கு பதில் கொடுப்பதொடல்லாமல், உண்மையில் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் மக்கள் விரோத திட்டங்களில் ஒன்றுதான் என்பதை நிறுவும் விதமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ரெட்டை நாக்குக்காரர்கள்:

சில்லறை வணிகத்தில் வால்மார்ட் போன்ற கம்பேனிகள் நுழைந்தால் விவசாயிகளுக்கு லாபம் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இதனை விலாவாரியாக பின்னர் பார்க்கும் முன்பாக சில சுலபமான உண்மைகளை பார்த்து விடுவது சரியாக இருக்கும். கடந்த 50 வருடங்களில் விவசாயத்திற்கு நன்மை என்ற பெயரில்(பசுமை புரட்சி, etc) இது போல சுற்றப்பட்ட பல பூக்களில் ஒன்றாகவே இதையும் நம் காதில் சுற்றுகிறார்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள். தரகு முதலாளி ரிலையன்ஸ் கோதுமை கொள்முதல் செய்த அழகு இங்கு கண் முன் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுதே(இணைப்பு: RUPE) இப்படி ஒரு பொய்யை சொல்வது இவர்களால் மட்டுமே இயன்ற ஒரு விசயம். அரசு கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்து அதன் மூலம் கட்டாயமாக தனக்கு கொள்முதல் செய்யும் சூழலை உருவாக்கி குவிண்டாலுக்கு 50 ரூபாய் மட்டும் அதிகப்படியாகக் கொடுத்து விவசாயிகளைச் சுரண்டினான் ரிலையன்ஸ். அதே கோதுமை அதே நேரத்தில் கிலோவுக்கு 6 முதல் 8 ரூபாய் வரை விலை ஏற்றப்பட்டு சந்தையில் விற்க்கப்பட்டது.

நிற்க, இந்திய அரசு நியயாமாக செய்து தர வேண்டிய விவசாயத்திற்க்கான உள்கட்டுமானங்களை செய்து தராமல் ஏமாற்றுவது, பிறகு உள்கட்டுமானங்கள இல்லாததை காரணம் காட்டியே விவசாயத்தை பன்னாட்டு கம்பேனிகளுக்கு கதவை திறந்து விடச் சொல்லும் இந்த பதர்கள். பன்னாட்டு கம்பேனிகளுக்கு அரசே பெரும் கடன்களை வாங்கி உள்கட்டுமானங்களை கட்டி தருவது குறித்து பாராட்டுகிறார்கள். தேசத் தூரோகிகளின் உள்மன விகாரம் வெளிப்படும் இடம் இதுதான். வெளிநாட்டு மச்சானுக்கு பல்லக்கு தூக்கும் இவர்கள் உள்நாட்டு சகோதரனுக்கு கட்டுமான வசதி செய்து தராமல் ஏய்ப்பதுடன், அந்த காரணத்தை காட்டியே அவனை விலையும் பேசுகிறார்கள்.

"இந்தா பார் விவசாயி, நான் வால்மார்டை உள்ளே நுழைய விட்டால் உனக்கு நல்ல விலை கிடைக்கும் ஆனா வியாபாரியின் வாழ்க்கை வம்பாக போய்விடும், அதை நீ கண்டுக்க கூடாது" வேண்டுமென்றே விவசாயத்தை காயப்பொட்டுவிட்டு இப்பொழுது இப்படி பச்சையானதொரு பேரம் பேசுகிறார்கள், சகோதர வர்க்கத்தை விரோதிகளாக்க பார்க்கிறார்கள் இந்த அடிமை வர்க்கத்தினர். இந்த கோஸ்டிகளை தரகு கோஸ்டி என்று சும்மாவா சொல்கிறார்கள்? ஆக, பிரச்சனையின் மூல காரணமான நாட்டமை ஏகாதிபத்தியத்தை திரை மறைவில் மறைத்துவிட்டு பண்ணையடிமைகளான விவசாயிக்கும், வியாபாரிக்கும் முரன்பாட்டை உருவாக்குவதன் மூலம் ரிலையன்ஸ்க்கு புனித வட்டம் கட்ட இங்கு சில அடிமைகள் அலைகிறார்கள்.

இவர்கள் நுகர்வோர் நுகர்வோர் என்று பேசும் போதெல்லாம் நாம் ஏதோ இந்திய ஜனங்கள் எல்லாத்தையும் சொல்கிறார்கள் என்று நினைத்தால் தவறு செய்கிறோம். டாலர் செல்வன் என்பவர் தனது கட்டுரையின் முதல் வரியிலேயே 70 லட்சம் நகர் புறத்து நடுத்தர வர்க்கத்தை மனதில் கொண்டே இந்த உலகமய நகர்வு என்று போட்டுடைக்கிறார். மீதி உள்ளவன்... அவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன. நான் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு சில வெப்சைட்டுகளை அலசி புள்ளிவிவரங்களை காட்டினால் இந்தியாவில் வறுமையில்லை என்றூ தெரிந்து விடும். இல்லையென்றால் வறுமைக் கோட்டின் வரையறையே மாற்றிவிட்டால் வறுமை என்பது இல்லாமல் போய்விடாது? முன்பொருமுறை வறுமை குறித்து இவர் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைகளை உடைத்த பொழுது வந்த உண்மைகள் இவை.

சரி இவர் சொல்லும் இந்த 70 லட்சம் என்ற எண்ணிக்கை உண்மையா என்று பார்த்தால் அதுவும் பொய்யே. ஏனேனில் இந்திய நகரங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. அது விவசாயிகளுக்கு அடுத்ததாக மிகப் பெரிய வர்க்கமாக உள்ளது. இவர்களை நம்பி செயல்படும் அண்ணாச்சி கடைகளுக்கு சமாதி கட்டி அந்த இடத்தில் தனது வாய் வைத்து சுரண்டுவதே ரிலையன்ஸ் கோஸ்டிகளின் நோக்கம். உண்மையில் இவர்கள் கிராம சந்தைகளை பிடிக்கும் திட்டத்தையும் தமது பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளனர். வாடிக்கையாளர் சேவை, குறைந்த விலை என்பதெல்லாம் இந்த அழிவு வேலையில் கிடைக்கும் லாபத்தில் நமக்கு கொடுக்கும் பங்குதான். கோழி குருடாய் இருந்தால் என்ன குழம்பு ருசியாய் இருக்கிறதா என்று பார்ப்போம் என்று பிழைப்புவாதம் பேசி அண்ணாச்சிகளின் ரத்த கறைபட்ட பலசரக்கு சாமான்களை வாங்கி தின்னத் தயாரான அடிமைகள் குறித்து ஒன்றும் சொல்வதற்க்கில்லை. சுயமரியாதையும், மனிதாபிமானமும் உள்ளவர்களை நோக்கியே இந்த கட்டுரை பேசுகிறது.

திருபாய் அம்பானியின் ஆதிக்கத்தையும் அமெரிக்க ஆதிக்கத்தையும், சந்தையை பிடிக்க அவர்கள் செய்யும் மோசடிகள் அதற்க்காக சட்டத்தை தமது இஸ்டம் போல மாற்றும் திமிர்த்தனம் இவை பற்றி பேசப் பயப்படும் இந்த டாலர் அடிமைகள்தான் கோயேம்பேடு மொத்த வியாபாரிகளின் ஆதிக்கத்தைப் பற்றி பேசுகிறார்கள். இவர்கள் சொல்லுவது படி பார்த்தால் நுகர்வோரை சுரண்டி கோடிகள் கொள்ளையடித்து உலக பணக்காரர்கள் பலரின் சுவர்க்கமாய் திகழ வேண்டும் கோயெம்பேடு. அப்படியாப்பட்ட கோயம்பேடு உலக பணக்காரர்களின் ஆதிக்கத்தை பிடுங்கும் வகையில்தான் உலக பரம ஏழை புரட்சிக்காரன் அம்பானியை ஆதரிக்கிறார்கள் இவர்கள். இவர்களது நோக்கத்தின் அடிப்படை ஆதிக்கம் செய்வதன் மேலான இவர்களது வெறுப்பு அல்ல. மாறாக, இவர்களுக்கு டாலரில் பிஸ்கெட் போடுபவர்கள் ஆதிக்கம் செய்கிறார்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் வேட்கையே காரணம்.

சரவணபவனின் சில வெளிநாட்டு ஹோட்டல்களையும் வால்மார்ட்டையும் ஒப்பிடுவது, பீசா விற்க்கும் பன்னாட்டு கடைகளையும் ராவா தோசை விற்க்கும் உள்நாட்டு கடைகளையும் ஒப்பிடுவது என்று வகை தொகையின்றி பூ சுற்றும் இவர்கள், ரிலையன்ஸ் சென்னையில் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே கோயெம்பேடு உள்ளிட்ட இடங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டது குறித்து மௌனமே சாதிப்பார்கள். அவர்களுக்கு அண்ணாச்சி, புண்ணாச்சி, விவசாயி மீது எல்லாம் இப்போதான் பாசம் பொத்துக் கோண்டு வருகிறது. இது வரை அவர்கள் கஸ்டப்பட்ட போதெல்லாம் இந்த அமெரிக்க அல்லக்கைகள் எங்கே போயிருந்தார்கள் என்று பார்த்தால் தூர தேசத்தில் இந்தியாவை கூட்டிக் கொடுப்பது எப்படி என்கிற கான்பெரென்ஸ் ஏதிலாவது உட்கார்ந்து அறிவுஜீவி ஜல்லியடித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

வால்மார்ட் பல சரக்கு விற்க்காதாம். அதாவது இந்த பூனை பால் குடிக்காதாம். இப்போதைக்கு என்றூ ஒரு வரி சேர்த்து சொன்னால் அதில் உண்மை இருக்கும். கடைசில பாலை குடிப்பதுதானே திட்டம். இதோ சென்னையில் இன்னும் 100 கடைகள் திறக்க இருக்கிறார்கள். மாமிசம் விற்க்கும் கடைகளூம் இதில் அடக்கம் என்பதை குறிப்பிட்டே தீர வேண்டும்.

வேலைக்கு உணவு கேட்டு டெல்லியில் போராடும் விவசாயிகள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் ஒரு அன்பர் வாக்குவம் கிளீனர் வாங்க மதுரை கடைகளில் ஏறி இறங்கி கஸ்டப்பட்ட கதையை சொல்லி வால்மார்ட்டை வரவேற்க்கும் பொழுது நமது மனதில் பெரும் பாரம் ஏறி உட்கார்கிறது. ஏண்டா சும்பன்களா உங்க சூத்தை தாண்டி யோசிக்கவே தெரியாதாடா? இந்தியாவுல உன்னோட ஜனத்தொகை 20% இருக்குமா? அதிலும் உன் ரேஞ்சுக்கு எத்தனை பேர் இருக்கான்? 10%?.. வக்கிரம் பிடித்தவர்களே.

மதுரையில் வால்மார்ட் வந்தால் நூற்றுக்கணக்கில் கடைகள் அம்பேலாகிவிடும், உள்ளூர் தேசிய முதலாளிகள் சட்டியேந்துவார்கள் என்பதை குரூர இன்பத்துடன் சொல்லும் அந்த அன்பர். அது எப்படி நடந்தேறும் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறாராம். நரமாமிசம் தின்னும் இவர்களை மனிதர்களாக என்னால் பார்க்க முடியவில்லை. நாடு என்பது அதன் மக்கள்தான் எனில் அவர்களுக்கு ஆப்பு செருகப்பட்டு ரத்தம் வழிவதை பார்க்க ஆவலுடன் செயல்படும் இவர்கள் தேசத் துரோகிகளே.

இந்தியாவில் அதிகமான பேர் வேலை பார்க்கும் துறை விவசாயம், அதனை அடுத்து அதிகமாக மக்கள் வேலை பார்க்கும் துறைதான் சில்லறை வியாபாரம் மற்றும் சிறு தொழில் துறை.

சில்லறை வியாபரத்தில் இவர்கள் எப்படி குறைந்த விலைக்கு பொருட்களை அதுவும் விவசாயிக்கும் நியாயமான விலை கொடுத்து விற்க முடியும்?

விவசாயிகளுக்கு நியாய விலை என்பதே ஒரு கேலிக் கூத்து என்பதிருக்க, அதை இப்பொழுதைக்கு விட்டு விட்டு வேறு எந்த வகைகளில் விலை குறைப்பை அவர்கள் செய்வார்கள் என்று பார்க்கலாம்.

சில வழிகள் உள்ளன அவற்றில் பிரதானமானது அண்ணாச்சி கடை முறையில் பலருக்கு கிடைத்து வந்த வேலை வாய்ப்புகளை பறிப்பதன் மூலம் மொத்த சந்தையை மற்றும் உற்பத்தியை தான் கையகப்படுத்திக் கொண்டு, அதன் மூலம் செமிக்கப்படும் மூலதனம், மற்றும் தனது சொந்த கடையில் வேலை செய்பவர்களை ஒட்டச் சுரண்டுவது ஆகியவையே அந்த வழிகள் ஆகும். அதாவது, அண்ணாச்சி கடைகளில் போடப்படும் மூலதனம் என்பது ஒரு பெரும் எண்ணிக்கையிலானவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதாக இருக்கும். அந்த கடைக்கு சப்ளை செய்பவர், வேலை பார்ப்பவர், கடை முதலாளி, அங்கிருந்து வாங்கி சில்லறை வணிகம் செய்பவர், தள்ளுவண்டி வியாபாரி என்று பெரிய சமூக தொடர்புடன் ஒவ்வொரு பகுதியிலும் இயங்குகின்றன அண்ணாச்சி கடைகள். அந்த சந்தைகளை கைப்பற்றி இந்த வலைப் பின்னல் மொத்தத்தையும் சிதைத்து விட்டுத்தான், இந்த வலைப்பின்னலில் இயங்கி வரும் பலரின் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிட்டுத்தான் குறைந்த விலை குறித்து பேசுகிறார்கள் பாகாசுர கம்பேனிகள். எப்படி? 20 ரிலையன்ஸ் கடைகளால் கோயெம்பேட்டின் 40% வியாபாரத்தை சாகடிக்க முடியும் எனில், அதாவது கோடிக்கணக்கானவர்களின் வயிற்றில் அடிக்க ஒரு 20 கடைகள் போதுமெனில். அப்படி அடுத்தவன் வயிற்றில் அடித்து மிச்சமாகும் பணத்தில் ஒரு கொசுறை நுகர்வோருக்கு கொடுப்பதில் அவனுக்கு என்ன துன்பம் இருக்கப் போகிறது. அதை வாங்கி தின்பவனுக்கு சூடு சொரனையிருக்கிறதா என்பது தனியாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய கேள்வி.

இரண்டாவது, தனது சொந்த தொழிலாளியை சுரண்டுவது: தனது நாட்டின் குடிமக்களுக்கு உரிமைகளை குறைவின்றி வழங்க ஆவன செய்யும் அமெரிக்காவிலேயே வால் மார்ட் உள்ளிட்டவர்கள் செய்யத் துணிந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு அவர்களின் ஆண்டறிக்கையே சாட்சியாக உள்ளது(The Wal-Mart Manifesto) (Google Search for the document - Reviewing and Revising Wal-Mart's Benifit Strategy - BOD Retreat FY06: Benifits Strategy). இந்தியாவிலோ ஏற்கனவே தொழிலாளர்களின் நிலை ரொம்பவே நல்ல நிலைதான். அதுவும் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சட்ட பாதுகாப்பையும் நீக்கச் சொல்லி பன்னாட்டு தரகு முதலாளிகள் நிர்பந்தித்து வருகிறார்கள்.

இந்தியாவிலோ வால் போஸ்டர் ஒட்டினாலே தேச பாதுகாப்பு சட்டம் பாயும் நிலை, வேலை நிரந்தரம் கேட்டால் போலீசின் தடியடி, சட்டங்கள் செல்லுபடியாகாத SEZக்கள் என்று ஜனநாயகம் தலை விரித்து ஆடுகிறது. தொழிலாளர் உரிமையாவது, மசிறாவது. சமீபத்திய விலை வாசி உயர்வின் போதும் கூட அணி திரண்டு போராட வகையின்றி மனதிற்க்குள் புழுங்கிய மக்கள் கூட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துதான் இந்த பாகசுர கம்பேனிகள் கடை பரப்புகின்றனர். ஆக தொழிலாளர்களை அதிக வேலை, குறைந்த கூலிக்கு சுரண்டுவது என்பது இந்தியாவில் வெகு சுலபமே. அப்படியொரு முறை ஏற்கனவே இங்கு மிகப் பரவலாக இருக்கிறது. இதுதான் அவர்களின் குறைந்த விலை என்பதற்க்கு பின்னுள்ள இன்னொரு ரகசியம். தமது கோடுர சுரண்டலை பரப்பி லாபம் சம்பாதிக்க எச்சில் ஒழுக காத்திருக்கின்றன பன்னாட்டு - தரகு கம்பேனிகள். அவர்களுக்கு புனிதர் பட்டம் கட்டி பூசை போடுகிறார்கள் அடிவருடிகள்.

இடைத் தரகர்களை ஒழிப்பதாகவும் அதனாலேயே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வதாக இவர்கள் சொல்லும் போது நாம் ஏதோ ஆன்லைன் சூதாட்டக் காரர்களையும், மொத்த மண்டிக்காரர்களையும் ஒழிக்கப் போவதாக நினைத்தால் அவர்கள் அப்படியில்லை என்று சொல்கிறார்கள். மொத்த மண்டிக்காரர்களின் இடத்தில் பன்னாட்டு கம்பேனிகளை மாற்றி வைப்பது மட்டும்தான் இந்த அம்சத்தில் ஒரே வித்தியாசம். இது போல மாற்றுவது விவசாயிகளின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடாது என்பதற்க்கு பஞ்சாப் பெப்ஸி ஒப்பந்த விவசாயிகளும், சமீபத்திய கோதுமை கொள்முதல் சதிகளும் சாட்சிகளாக உள்ளன. அப்படியென்றால் இவர்கள் சொல்லும் இடைத் தரகர்கள் யார்?


இதோ அந்த கோடீஸ்வர, கொள்ளைக்கார(?) இடைத்தரகர்கள்:
சென்னையில் பல இடங்களில் சமீபத்தில் ரிலையன்ஸ் கம்பேனி கடை ஆரம்பித்தது. ஆரம்பித்த முதல் வாரத்திலேயே கோயெம்பேட்டில் 40% வியாபரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. சில்லறை வியாபாரிகள் கோயெம்பேட்டில் வாங்கும் சரக்கின் அளவு குறைந்துவிட்டது. வெளியூர் லாரிகளின் வரத்து குறைந்து விட்டது. தொழிலாளிகளுக்கு வேலை குறைந்து வருமானமும் குறைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிட்டது.

2500 காய், கனி, பூக்கடை வியாபாரிகள், சுமார் 20,000 தொழிலாளர்கள், அன்றாடம் அதிகாலை 2 மணி முதல் ஆட்டோ க்களிலும், வேன்களிலும், இரு சக்கர வண்டிகளிலும் வந்து காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரக்கணக்கான மளிகைக் கடைக்காரர்கள், கோயெம்பேட்டில் சரக்கு எடுத்து, தள்ளு வண்டியிலும் கூடையிலும் மைல் கணக்கில் சுமந்து தெருத் தெருவாய் கூவி விற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் உழைப்பாளிகள்....

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஊட்டி, நீலகிரி, பொள்ளாச்சி, கம்பம், நெல்லை, தூத்துகுடி, சேலம், தர்மபுரி என்று தமிழகத்தின் பல்வேறு சந்தைகளில் காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரம் வணிகர்கள், அந்தச் சந்தைகளில் பல லட்சம் தொழிலாளர்கள், அந்த காய்கனிகளை எல்லாம் சென்னைக்குச் சுமந்து வரும் லாரிகள், வேன்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்.... என்று கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை தான் இவர்களின் கணக்கில் அந்த இடைத் தரகர்கள். இவர்களின் வயிற்றில் அடித்து சுரண்டுவதுதான் அந்த மிச்சப்படுத்தப்படும் பணம். சரி அந்த பணம், அதாவது இடைத்தரகர்களை ஒழிப்பதால் உருவாகும் அந்த பணம் விவசாயிகளுக்குப் போய் சேருமா?

அதுவும் கிடையாது, அரசு அதிகாரத்தில் தனது முழு செல்வாக்கையும் கொண்டுள்ள இது போன்ற கம்பேனிகள், ஏற்கனவே விவசாய உற்பத்தி பொருட்களின் மீது அரசு கொண்டிருந்த கொள்முதல் உரிமைகளை பின் வாசல் வழியாக தனது வசம் எடுத்துக் கொள்ள துவங்கியுள்ளன. அரசு கொள்முதலை குறைத்து விடுவதன் மூலம் விவசாயிகளை நிர்பந்தித்து தன்னிடம் விற்க்கச் செய்வார்கள். தான் விருப்பட்ட விலைக்கு விளை பொருட்களை விற்க்கும் சூழலை இந்த ஏகாதிபத்திய மூலதனத்தால் வெகு சுலபமாக உருவாக்க முடியும். சேட்டுகள் சொல்வார்களாம், "லாபம் என்பது என்ன விலையில் விற்கிறாய் என்பதில் அல்ல, மாறாக என்ன விலைக்கு வாங்குகிறாய் என்பதில் உள்ளது" என்று. சாதாரண சேட்டுக்கு தெரிந்த இந்த வியாபார ரகசியம் ரிலையன்ஸ்க்கு தெரியாதா என்ன? அவர்கள் விவசாயிகளிடம் அதிக விலை கொடுத்து வாங்கி நம்மிடம் குறைந்த கூலிக்கு விற்பார்கள் என்று நம்புவதற்க்கு ஒருவன் மகா கேனையானாக இருக்க வேண்டும் அல்லது விசுவாசமான அடிமையாக இருக்க வேண்டும்.

ஒரு வேளை அடிவருடிகள் இப்படி வாதம் வைக்க முயற்சி செய்யலாம். அதாவது, சேட்டுக்கள் லெவலுக்கு அந்த சூத்திரம் சரியாக வரும், ஆனால் பெரும் முதலீட்டில் செய்யும் ரிலையன்ஸ் ரேஞ்ச்சுக்கு அந்த சூத்திரம் சரி வராது என்று. ஆனால் துரதிருஷ்டவசமாக வால்மார்ட்டுக்கு பொருட்களை உற்பத்தி செய்து சப்ளை செய்பவர்களின் துயரம் அமெரிக்கா முழுவதும் நாறுகிறது (Search for: The man who said no to Walmart). வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுப்பதற்க்காக, விநியோகஸ்தர்களையும், உற்பத்தி செய்பவர்களையும் நசுக்கும் வால்மார்ட் என்ற தலைப்பில் அங்கு பல கட்டுரைகள் காணக் கிடைக்கும். ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தவரிடமிருந்து வாங்குவதில் தனது சுரண்டலை முன்னிலைப்படுத்தும் இந்த கம்பேனிகள். இந்தியாவில் என்ன செய்யும்? ரிலையன்ஸ் நேர்மை(??) குறித்து ஆயிரத்தெட்டு உதாரணங்கள் இருக்கின்றன.

இது முதலாளித்துவ சந்தையின் விதி. மூலதனம் கடவுள் கொடுக்கும் அட்சய பாத்திர பொருள் அல்ல. அது உழைப்பின் தவிர்க்க இயலா ஒரு விளை பொருள் அவ்வளவுதான். ரிலையன்ஸ் உள்ளிட்டவர்களிடம் திரளும் அந்த மூலதனம் என்பது பல கோடிக்கணக்கானவர்களின் உழைப்பை சுரண்டி சேகரமானதே. லட்சம் விவசாயிகளின் சாவு குறித்து மௌனம் சாதித்த அடிவருடிகள் தீடீரென்று விவசாயிகளின் மீது பாசம் காட்டுவதற்க்கும், நடுத்தர வர்க்க வியாபாரிகளின் சந்தை ஆதிக்கத்தின் மீது வெறுப்பை உமிழ்வதற்க்கும் பின்னால் உள்ள இயங்கியல் கோடிகளை சுரண்டிக் கொடுக்கும் இந்த அட்சயப் பாத்திரத்தின் மீதான முறை தவறிய காமம்தான்.

அண்ணாச்சி கடைகள் நடத்தும் இந்த சிறு வணிகர்கள் அல்லது இவர்கள் பாசையில் இடைத்தரகர்கள் யார்?

விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்றுக் கடை வைத்த அண்ணாச்சிகள், விவசாயம் அழிந்து போனதால் நகர்ப்புறத்துக்கு பிழைப்புத் தேடி ஓடிவந்த நிலமற்ற விவசாயிகள், தலித் மக்கள், வேலை இழந்த தொழிலாளர்கள், வேலை கிடைக்காததால் சுய தொழில் தொடங்கிய படித்த இளைஞர்கள், குடும்ப பாரத்தைக் கூடையில் சுமக்கும் ஆதரவற்ற பெண்கள்....... பாரிதாபத்துக்குரிய இந்த மக்களுடைய வயிற்றில் அடித்துச் சொத்து சேர்ப்பதற்க்கு அம்பானிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது இந்த அரசு. அதாவது குரங்கு அப்பம் பிரித்த கதை. அதாவது விவசாயி, வியாபாரி முரன்பாட்டில் குரங்கு அம்பானி வயிறு வளர்க்கும் கதை.

25,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் கடை திறக்க இருக்கும் ரிலையன்ஸ் எப்படி அந்த மூலதனத்தை கொழுக்க வைக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் அது நமது ஒவ்வொரின் சதையையும் கொத்தி கிளறிதான் கொழுக்க முடியும் என்பதனை புரிந்து கொள்ளலாம். உண்மைதான், நுகர்வோன் என்ற முகமூடி போட்டுக் கொண்டால் நமது சதையை கொத்திக் கிழிக்கும் வலி தெரியாமல் இருக்க நுகர்வுக் கலாச்சார போதை மருந்து கொடுக்கப்படும்.

சிறுபான்மை பெருநிலக் கிழார்களின் கையிலிருந்து நிலத்தை பறித்து உண்மையிலெயே நிலத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கு பிரித்து கொடு, அதனை கூட்டுப் பண்ணை மூலம் ஒன்றிணை, விவசாயிக்கு மையப்படுத்தப்பட்ட நாடு முழுவதற்க்குமான திட்டம் போடு, உள்கட்டுமானங்களை கடன் வாங்கி அல்ல, மாறாக வேலைக்கு உணவு திட்டத்தின் மூலமே கட்டிக் கொடு, பிறகு பார் இந்தியாவில் உருவாகும் வேலை வாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும். விவசாயத்தின் மறுமலர்ச்சியையும். இதனை செய்ய இந்த அரசு தயாராயில்லை. சிறுபான்மை நிலக் கிழார்களையும், பெரும் பணக்காரர்களையும் சிறு அளவு கூட கஸ்டப்படுத்த தாயாராயில்லை இந்த அரசு. மாறாக பெரும்பான்மை உழைக்கும் மக்களை லட்சக்கணக்கில் பலி கொடுத்து வருகிறது. கறிச் சோறு கேட்ட காட்டேரி தலைப் பிள்ளையைத்தான் தின்பேன் என்று நின்றதாம் அது போல தரகு வர்க்கமும், ஏகாதிபத்தியமும் இந்தியாவின் முதுகெலும்பை உடைத்துதான் வயிறு வளர்ப்பேன் என்று நிற்கிறது. அதற்க்கு நியாயம் கற்ப்பிக்கவும் சில துரோகிகளை அது விலை கொடுத்து வாங்கியுள்ளது.

அனைவருக்கும் மேலாக காய்கனிகளை பூக்களையும் விளைவிக்கும் பல லட்சம் விவசாயிகளையும் இவர்களின் விசச் சுழற்யில் சிக்க வைக்கிறார்கள் இந்த துரோகிகள். இவர்கள் அனைவரின் வாழ்க்கையை சில கோடீஸ்வரர்களின் வயிறு வளர்க்க காவு கொடுக்கிறது இந்த அரசு.

ஏகாதிபத்திய அடிவருடிகளின் தத்துவ அடிப்படை - பார்ப்பனியத்துடன் ஒரு கள்ள உறவு:
ஒரு நுகர்வோனே குறைந்த விலை பொருளூக்காக வால்மார்ட், ரிலையன்ஸ் கோஸ்டிகளை அனுமதிக்கிறான். இதன் மூலம் வியாபாரிகள், விவசாயிகள் சுரண்டப்படுவதற்க்கு அவன் துணை போகிறான். இவை குறைந்த விலை, தரம் என்பனவற்றை காட்டி நியாயப்படுத்தப்படுகிறது. அதே நுகர்வோனை அவனது பணியிடத்தில் குறைந்த கூலிக்கு ஒப்பந்த தொழிலாளியாகவோ அல்லது வேறு வடிவிலோ இதே தரகு வர்க்க, ஏகாதிபத்திய கூட்டணி சுரண்டுகிறது.

இது எப்படி? உன்னை சுரண்ட என்னை அனுமதி, நீ அவனை சுரண்ட நான் வழி செய்து கொடுக்கிறேன் என்று இந்த அமைப்பை ஒரு பொருளாதார சுரண்டல் படிநிலையாக நிலைத்திருக்க செய்வதன் மூலம் தனது சுரண்டலை நியாயப்படுத்திக் கொண்டு தலைமை சுரண்டல்க்காரனாக சமூகத்தின் மீது ஏறி உட்கார்ந்து உள்ளது தரகு-ஏகாதிபத்திய வர்க்கம்.

இதே கதையை வேறு எங்கோ கேட்டது போல இருக்கிறதல்லவா? 'நீ எனக்கு அடிமையாக இரு, உனக்கு கீழே ஒரு அடிமையை வைத்துக் கொள்" எனும் இந்திய வர்ண-சாதி அமைப்புதான் அது. ஒவ்வொரு வர்ணமும் தனக்கு கீழேயுள்ள வர்ணத்தையும், ஒவ்வொரு சாதியும் தனக்கு கீழேயுள்ள சாதியையும் சுரண்ட வழி செய்து கொடுப்பதன் மூலம் சுரண்டல் என்பது நியாயமனது என்ற பொதுக் கருத்தை உருவாக்குகிறது பார்ப்ப்னியம். இந்த தார்மீக பலத்தின் துணை கொண்டு பூசாரி வர்க்கம் தலைமை சுரண்டல்க்காரனாய் சமூகத்தின் மீது தன்னை இறுத்திக் கொள்கிறது.

ஆக, இந்த அம்சத்தில்தான் ஏகாதிபத்தியமும், பார்ப்பினியம் கள்ள உறவு கொள்கின்றன. இதுதான் ஏகாதிபத்தியமும் பார்ப்பினியமும் தத்துவ ரீதியாகவும் இணையும் புள்ளி. அந்த கள்ள உறவின் தாயாரிப்புகள்தான் இந்த அடிவருடிகள். பாருங்களேன் நீங்களே, ஏகாதிபத்திய ஜல்லியடிக்கும் இந்த அடிவருடிகள் அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல, அதே கையோடு இந்துத்துவ ஜல்லியடிப்பதும், இந்துத்துவ ஜல்லியடிக்கும் அத்தனை பேரும் அதே கையோடு ஏகாதிபத்திய ஜல்லியடிப்பதும் - இப்படி இந்த கள்ள உறவை நடு வீதியில் வெட்கமின்றி இவர்கள் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். நாமோ நாட்டுப்பற்றையும், சுயமரியாதையும் விளம்பரப்படுத்துவதைக் கூட தீவிரவாதம் என்று கூறி முடங்கிக் கிடக்கிறோம்.

இதோ, சில்லறை வணிக பிரச்சனையிலும் கூட குறைந்த விலை, நிறைந்த தரம், விவசாயிக்கு நல்ல விலை என்று சில பொய்களின் ஊடாக பார்ப்பினியமும், ஏகாதிபத்தியமும் முச்சந்தியிலே காமுற்று இன்புறுவது கண்ணுக்கு தெரியவில்லையா உங்களுக்கு?

வால்மார்ட்டுக்கு காட்டப்படும் ஒளிவட்டம் - உபயம் திருமலை ஒலி/ஒளி அமைப்பு:
தீடிரென்று இவர்களுக்கு இந்திய தொழிலாளர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு ஊத்துகிறது. இந்திய முதலாளிகளின் கடைகளில் வியர்வையிலும், வெக்கையிலும் மிக கடுமையாக கஸ்டப்படுகிறார்களாம் தொழிலாளர்கள். வால்மார்ட் இந்தியாவுக்கு வந்தால் தொழிலாளர்களை கையில் வைத்து சீராட்டுமாம். ஏனேனில் வால்மார்ட்டின் சர்வதேச பெயர் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தனது தோழிலாளர்களை அப்படி பாதுகாக்குமாம்.

ஐரொப்பாவில் 30,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்த பொழுது IBM தனது பெயர் கெட்டுப் போகும் என்று யோசித்ததில்லை, சமீபத்தில் அமெரிக்காவின் ஒரு பெரிய சாக்லேட் கம்பேனி தனது உற்பத்தி கூடத்தை ஆசியாவுக்கு மாற்றியதன் மூலம் அமெரிக்காவில் சில ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பும் போது இவ்வாறு யோசித்ததில்லை அல்லது வேறு எந்த பன்னாட்டு கம்பேனியும் தனது தொழிலாளர் விரோத நடவடிக்கையால் (IBM - தொழிலாளர் யூனியன்) தனது பெயர் பாதிக்கப்படும் என்று யோசிதத்தில்லை, குறைந்த கூலிக்கு வெய்ஸ் ஸ்டூடண்ட் என்ற பெயரில் பெரிய அளவில் சுரண்டும் விப்ரோ இப்படி யோசிக்கவில்லை. இன்னும் சொன்னால் பொருட்களை வாங்கி நுகரப் போகும் எவனும் தான் வாங்கும் பிராண்டுக்கு உரிய கம்பேனி எவனை சுரண்டி தயாரிக்கிறது என்றெல்லாம் யோசிக்கப் போவதில்லை. அப்படி யோசித்தால் லிவி ஜீன்ஸ் முதல் நாம் அணியும் பல பன்னாட்டு-தரகு பிராண்டு ஆடைகள், திருப்பூரிலும், பெங்களூரிலும் கொத்தடிமை-சிதறிய உற்பத்தி முறையில்தான் தயாரிக்கப்படுகின்றன. நைக்கும், ரிபோக்கும், தெற்கு ஆசியாவின் ரத்தத்தால்தான் வண்ணமூட்டப்படுகின்றன. இந்த கம்பேனிகள் எல்லாம் தமது பெயர் பாதிக்கப்படும் என்று யோசித்ததும் இல்லை. அதனை வாங்கி உபயோகப்படுத்தும் வெட்கங்கெட்ட அல்பைகளும் இதன் தயாரிப்பு பாதை குறித்து யோசிப்பது இல்லை.
சரி, உண்மையில் வால்மார்ட்டில் வேலை பார்ப்பவர் நிலை என்ன? வால்மார்ட்டின் போர்ட் ஆப் டைரெக்டர்ஸின் 2006 அறிக்கை ஒன்று போன வருடம் பார்வைக்கு வந்தது. அதில் செலவீனத்தைக் குறைக்கும் முகமாக, வேலை பார்ப்பவர்களின் மருத்துவ அலவன்ஸ், விடுமுறை அலவன்ஸில் கைவக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள்.

மருத்துவ அலவன்ஸ் அதிகமாக காரணமென்ன என்றும் வால்மார்ட் ஆய்வு செய்து சொல்கிறது. சதை பொடுவது என்பதும், சர்க்கரை நோயும் வால்மார்ட் தொழிலாளர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறதாம் நாட்டின் சராசரி தொழிலாளர்களை விட வால்மார்ட் தொழிலாளர்கள் சீக்கிரம் வயதானவராகிவிடுகிறார்கள் (அதாவது வயசான கிழடுகளை வேலைக்கு வைத்து மாரடிக்கிறார்களாம்).

இந்த செலவை குறைக்க ஏதுவாக அதிக காலம் வால்மார்ட்டில் தங்கி அதிக சம்பளம் வாங்குபவர்களை குறைத்து, குறை கூலி புதியவர்களை தொடர்ந்து எடுப்பது குறித்து கோடிட்டு காட்டுகிறது அந்த அறிக்கை. அதாவது வால்மார்ட்டின் தொழிலாளர்களை என்றும் இளைமையாக வைத்து ஒரு சமூகத்தின் இளமையை சுரண்டு என்று வழிகாட்டுகிறது அந்த அறிக்கை. இதன் அர்த்தம் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை எடுத்து அவர்கள் முதுமை அடைந்தவுடன் வீசி எறி என்பதுதான். அமெரிக்காவிலேயே இப்படி ஆலகால விசத்தை ஏதோ பத்து ரூபா பன்னீர் சோடா போல குடிக்க வைக்கும் வால்மார்ட் அடிமை நாடு இந்தியாவில் என்னவெல்லாம் செய்யும் என்பதற்க்கு எந்த அளவுகோலும் கிடையாது. ஏனேனில் இந்தியாவில் உலகமயம் நுழைந்த பிறகு நிரந்தர பணி என்பது தொழிலாளர்களைப் பொறுத்தவரை குதிரைக் கொம்பைவிட அதிசயமான ஒன்று. 2003-ல் மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் தமது நிரந்தர வேலையை விட்டு வெளியேற்றப்பட்டனர்(பிசினெஸ் ஸ்டேண்டர்ட் - 20.01-2004). இந்தியாவில் வேலை வாய்ப்பு என்பது Working poverty வகையினத்தைச் சேர்ந்ததாக மாற்றப்பட்டு வெகு காலமாகிவிட்டது(வேலையில்லாதோர் 7.6% ஆனால் வறுமைக் கோடிட்ற்க்கு கீழேயுள்ளோர் 30% மேல். ஆகா மிகப் பெரும்பாலானோர் வேலை செய்தும் வறுமையாக இருப்பவர்ஆவர்).

ஸ்டெர்லைட் நச்சு தொழிற்சாலையையும், என்ரான் டூபாக்கூர் தொழிற்சாலையையும், தமிரபரணி திருடன் கோகோ கோலாவையும், போபாலின் விச வாயுவையும், ஒரிஸ்ஸாவின் இரும்பு கொலைகாரர்களையும், ஹோண்டா காக்கி-பன்னாட்டு ரவுடிகளையும், பசுமை புரட்சி கொள்ளையர்களையும், ராணுவத்தை அடிமைப் படுத்திய நாட்டாமைகளையும் - ரத்தின கம்பளம் விரித்து வரவேற்ற நாடுதானே இந்தியா? அவர்கள் இன்று வரை தமது கிரிமினல் நடவடிக்கைகளை செய்து வந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? பிறகு எப்படி ரிலையன்ஸின் சில்லறை வியாபாரத்தில் மட்டும் இந்த அரசும், அதிகார வர்க்கமும் தொழிலாளர் நலனை/மக்கள் நலனை முன்னிறுத்தும் என்று நம்புவது?

மையப்படுத்தப்பட்ட கடைகள் நமக்கு புதிதா என்ன?
இதில் இன்னொரு வாதமாக, மையப்படுத்தப்பட்ட சில்லறை விற்பனை அங்காடிகள் பரிணமிப்பது என்பது இயல்பு என்று சில எடுத்துக்காட்டுகளுடன் பேசுகிறார் பத்ரி. இது ஏதோ சரியான வாதம் என்பது போலத்தான் தெரியும். ஆனால் இவர்கள் வசதியாக உலக மூலதனம் என்ற ஒன்று இந்தியாவை சுரண்டிக் கொண்டிருப்பதையும், ரிலையன்ஸ் போன்றவர்கள் அந்த மூலதனத்தை இந்தியாவுக்குள் விளையாட உதவி செய்யும் அவர்களின் சகோதரர்கள் என்பதையும் மறைத்து விடுகிறார்கள். அதாவது இவர்கள் சொல்லும் உள்நாட்டு மையப்படுத்தப்பட்ட கடைகள் என்பவை தனித் தீவுகள். ஆனால் ரிலையன்ஸ் பாணி கடைகள் என்பவை ஒரு பெரிய சுரண்டல் இயந்திரத்தின் பகுதிகள். உலக சந்தையின் துணை உறுப்புகள்.

மையப்படுத்தப்பட்ட விற்பனை அங்காடிகள் பத்ரி சொல்வது போல உருவாவது என்பது ஒவ்வொரு ஊரிலும் அல்லது சில ஊர்களை மையப்படுத்தி ஒரு சின்ன முதலாளி ஆரம்பிப்பார். இது போல பல கடைகள் பல இடங்களில் உருவாகும், பல பெயர்களில். ஆக, இந்த முறையில் சில்லறை விற்பனை வளர்வது என்பது இந்திய சில்லறை வணிகத்தின் இயல்பான வளர்ச்சி. ஏனேனில் ஒரு இந்திய முதலாளியின் மூலதனம் என்பது சிறிய அளவானதே. எனவே அவர் அதற்க்குட்ப்பட்டே தனது கடையின் வீச்சை வைத்துக் கொள்வார். இது போன்ற வளர்ச்சி சில்லறை வணிகத்தை அடுத்தக் கட்டத்திற்க்கு எடுத்துச் செல்லும் ஒரு வளர்ச்சிப் போக்காக இருக்கும் அதே நேரத்தில், மூலதனத்தின் சுழற்சி என்பது மிகப் பரவலான ஆட்களிடம் செல்லும் வகையில் இருக்கும்.

மேலும் பன்னாட்டு தரகு கம்பேனிகள் சந்தையில் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதில்லை, அவர்கள் விவசாய உற்பத்தியையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிடுவர். உலக சந்தையும் அவர்களின் கையில் இருக்கும். ஆக, ஒரு சாதாரண இந்திய முதலாளி மையப்படுத்தப்பட்ட கடைகள் ஆரம்பிப்பது என்பது ரிலையன்ஸ், ஹெரிடேஜ் போன்றவர்கள் ஆரம்பிப்பது போன்று ஆக்டோ பஸின் ஆயிரம் கரம் கொண்டு வளைத்துப் பிடிக்கும் வடிவிலானது அல்ல. இரண்டையும் ஒப்பிடுவது என்பதே படு முட்டாள்தனமானது.

ரிலையன்ஸ், ஹெரிடேஜ் உள்ளிட்டவர்கள் ஒரே நேரத்தில் சென்னையில் மட்டும் 60 கடைகள் என்பது போல ஆரம்பிப்பது ஒரு சில தரகு முதலாளிகள் சந்தை மீது தமது கிடுக்கிப் பிடியை போட்டு லாபத்தை ஒட்டு மொத்தமாக சுரண்டும் ஒரு திட்டம் தானே தவிர்த்து அது எந்த வகையிலும் பத்ரி குறிப்பிடுவது போலான இயல்பான வளர்ச்சி இல்லை. ஏனேனில் இது போன்ற பெரிய அளவில் மூலதனத்தை திரட்டும் பலத்தில் இந்திய முதலாளிகள் தற்போது இல்லை. அந்த அளவுக்கு அவர்கள் வளரும் வாய்ப்பை கொடுக்காமலேயே அதற்க்கு முன்பாக தரகு - ஏகாதிபத்திய மூலதனத்தை சில்லறை வணிகத்தில் இறக்குவது என்பது இங்குள்ள பலம் குன்றிய முதலாளிகளையும், வியாபாரிகளையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும் எவனோ ஒருவனின் லாபத்திற்க்கு பலி கொடுக்கும் சதி திட்டம்தான். இந்த பலியை கொடுக்கும் அளவு என்ன பிரச்சனை நமக்கு சில்லறை வணிகத் துறையில் வந்துவிட்டது? ஒரு அன்பர் சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனம் வருவதை எதிர்த்து ஏதோ ஒரு கட்டுரையில் இட்டிருந்த பின்னூட்டம் தான் ஞாபகத்துக்கு வருகிறது:
"விரையை விற்று, குழந்தையை விலைக்கு வாங்குவது போல"
விரையை விற்க்கத் தயாரான கோழைகளுக்காகவும், முட்டாள்களுக்காவும் இந்த கட்டுரை எழுதப்படவில்லை.

இந்தியாவில் உண்மையிலேயே முதலாளித்துவ வளர்ச்சி தேவைப்படும் விவசாயத் துறையை வேண்டுமென்றே பழைய உற்பத்தி முறையில் கட்டி வைத்து நாசமாக்கும் இந்த அரசு, பல கோடிக்கணக்கானவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை புகுத்துவது பச்சை துரோகம். அம்பானிக்கு ஒன்றும் இந்திய நடுத்தர வர்க்கத்திற்க்கு விலை குறைவாக பொருள் கொடுக்க வேண்டும் என்று ஆசை இல்லை, அரசுக்கும் கூட நடுத்தர வர்க்கத்தின் நலன் மீதெல்லாம் பற்று கிடையாது. ஆயினும் அவர்கள் சொல்லுவது என்னவோ அதைத்தான்.

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். உங்கள் சகோதரனின் இழவில் விளையும் இலவசங்களை கொண்டு வந்து வீட்டை நிரப்பப் போகிறீர்களா? அப்படியாகும் பட்சத்தில் இந்தியா முழுவதும் இழவு வீடாகத்தான் இருக்கும்.

விலை உயராதா?

விலை குறைவாக கொடுப்பான் பிறகு விலையை கூட்டுவான் போன்ற வாதங்களையெல்லாம் விடுங்கள். கடந்த ஐந்தாறு வருடங்களில் குறிப்பாக கடந்த இரு வருடங்களில் விலைவாசி சகட்டு மேனிக்கு ஏறியுள்ளதே இதற்க்கு உறுதியாக அண்ணாச்சி கடைகள் காரணமல்ல. அம்பானி கும்பலின் தரகு வேலையின் காரணமாக இந்தியாவுக்குள் நுழைந்த அன்னிய மூலதனமே காரணமாக உள்ளது. இதனை inflation, அதாவது பண வீக்கம் என்ற ஒரு பேன்சியான பெயர் சொல்லி சப்பை கட்டு கட்டும் புன்னிய அடிவருடி ஆத்மாக்கள், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்க்கு (இணைப்பு: வறுமைக் கோடு குறித்த கட்டுரை) கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது குறித்த கேள்விகளுக்கு ஆழந்த மௌனம் அல்லது மையமான விசயத்தை விட்டு விட்டு வேறு எதிலாவது விவாதம் செய்வது என்ற நழுவல் போக்கையே பதிலாக தந்துள்ளனர். அது எப்படி இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தாழ்ந்து வரும் பொழுது இந்தியாவின் வாங்கும் திறன் அதிகரித்து அதனால் விலைவாசி உயர்ந்தது என்ற முரன்பட்ட விசயம் நடக்க முடியும்?

ஒருவேளை தூக்கு போட்டு செத்து போன விவசாயி கிறுக்கனா? அல்லது அரை வயிறு சாப்பிட்டு மனித குழந்தையா அல்லது வேறு எதுவுமா என்று சந்தேகம் கொள்ளும் அளவு உள்ளவர்கள் ஏதேனும் சாமிக்கு வேண்டிக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறார்களா? அல்லது 8 ரூபாயில் ஒரு நாளை ஓட்டும் இந்திய ஏழைகளுக்கு கின்னஸ் சாதனை படைக்கும் ஆசைதான் அவ்வாறான வாழ்க்கை வாழ காரணமா? வேலைக்கு உணவு கேட்டுப் போராடி துப்பாக்கிக் குண்டுகளை பதிலாகப் பெற்ற பஞ்சாப் விவசாயிகள் புத்தி பேதலித்தவர்களா?

ஆனால் துரதிருஷ்டவசமாக அன்னிய மூலதனம் எங்கெல்லாம் நுழைந்துள்ளதோ அங்கெல்லாம் விலை உயர்வு, வர்க்கப் பிளவு என்பவையும் வீரியமாக ஊடுருவுகின்றன. எதிர்காலத்தில் ரிலையன்ஸ் விலையை உயர்த்தும் என்று நாம் சொன்னவுடன் இவர்கள் தொலை தொடர்பு துறையில் விலை குறைந்து வருவதை சுட்டிக் காட்டி நியாயப்படுத்துகிறார்கள். தொலை தொடர்பு துறையைப் பொறுத்தவரை, அது நுகர்வோரின் அத்தியாவசிய தேவையாக திணிக்கப்பட்ட ஒன்றுதானேயன்றி. ஏற்கனவே டிமாண்ட் இருக்கிற ஒரு சந்தையல்ல. அதுவும் உலகமயத்தின் தேவைகளுக்காக சாலையமைத்தால் போன்ற உள்கட்டுமான திட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவில் தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சி என்பது உள்ளது. ஆக, தொலை தொடர்புத் துறையின் வளர்ச்சி என்பது அவர்களின் சந்தை தேவைக்கான ஒரு வளர்ச்சி. கவனித்துப் பாருங்கள், அவனது சந்தை வளர்ச்சிக்கு எவையெல்லாம் அத்தியாவசியமோ அவையெல்லாம் விலை குறைவதும், மாறாக மக்களின் அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் விலை கூடுவதும் என்ற இந்த அம்சத்தில் சில்லறை வணிகம் என்பது எந்த பகுதியில் வருகிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும், உற்பத்தியையும், உலக சந்தையையும் தனது கையில் வைத்திருக்கும் இவர்கள் உலகளவில் தமது தேவைக்கேற்ப விலையை உயர்த்தியும், குறைத்தும் கொள்ளையடிப்பார்கள். சமீபத்தில் பல பொருட்களின் விலை உயர்ந்து பொழுது பா. சிதம்பரம் என்ன சொன்னான்? "உலக சந்தையில் விலை ஏறிவிட்டது, நான் என்ன செய்ய?" - இதே போலத்தான் ரிலையன்ஸ் விலையைக் கூட்டும் போதும் சொல்லுவான் நம்ம பா.சி.

உலக சந்தையில் விலை கூடி விட்டது என்று இவர்கள் கூறும் காரணம் உண்மையல்ல. நாம் திரும்ப திரும்ப எச்சரிக்கை செய்தும் தெரிந்தே இந்தியாவின் வளங்களை உலக மூலதனத்துக்கு கூட்டி கொடுத்தானே அதுதான் உண்மைக் காரணம். இது நடக்காது என்று கனவு காண்பவர்களுக்கு தற்போதைய விலைவாசி உயர்வே உதாரணம். இப்படி விலை அதிகமானால் ரிலையன்ஸை குற்றம் சொல்வீர்களா நீங்கள்? எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த போது மக்கள் மனதினுள் புழுங்கிக் கொண்டு அமைதியாக வாங்கிச் செல்லவில்லை?

இவையெல்லாம் காட்டுவது என்னவென்றால் இன்று விலையை குறைத்து சந்தையை தனது வசப்படுத்திக் கொள்ளூம் ரிலையன்ஸ் கோஸ்டிகள். நஸ்டத்தில் பத்து வருடம் கூட கடை நடத்தி பிறகு ஒரே வருடத்தில் தனது லாபம் அனைத்தையும் சுரண்டிக் கொள்ளூம் சகல பலமும் படைத்தவர்கள் என்பதைத்தான். ஏனேனில், உற்பத்தி, சந்தை, உலக சந்தை, அதிகாரம் என அனைத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய இவர்கள் உண்மையில் நேரடியாக விலையை கூட்ட வேண்டும் என்று கூட அவசியமில்லை, சந்தையில் விலை கூடுவதை திரை மறைவிலிருந்து செய்வது. பிறகு சந்தை விலையை விட கொஞ்சம் குறைத்து இவன் விற்பான்.

ஏகாதிபத்தியம் நேரடியாக வாய் வைத்து உறிந்து மாட்டிக் கொள்ளூம் முட்டாள் தனத்தை செய்ததெல்லாம் அந்தக் காலம். இன்று தான் சுரண்டுவதற்க்கு முன்பு சுரண்டப்படும் மனோநிலைக்கு மக்களை தாயார்ப் படுத்தத் தேவையான எல்ல புறச் சூழல்களையும் உருவாக்கி விட்டுதான் காரியமாற்றுகின்றனர் அவர்கள்.

உண்மையில் இவர்களின் திட்டம் என்ன?
இந்திய சந்தை முழுவதையும் தமது வசப்படுத்திக் கொள்வது என்பது அவர்களது திட்டத்தின் ஒரு பகுதி எனில், விவசாய சுயசார்பை அழித்தல், தனது சந்தைத் தேவைக்கான பின் நிலமாக இந்திய விவசாயத்தை மாற்றுதல், இதுதான் இவர்கள் திட்டத்தின் இன்னொரு பகுதி.

அன்று சுதந்திர போராட்டத்தில் தரம் குறைவான, விலை அதிகமான உள்நாட்டு பொருட்களை வாங்கச் சொல்லி, முரட்டு கதர் ஆடைகளை அணியச் சொல்லி அறைக் கூவிய போது எந்த முட்டாள் பொறுக்கியும் தரம், விலை என்று பேசிக் கொண்டிருக்கவில்லை. இன்றோ தமது ஆன்மாவை அமெரிக்கனிடம் அடகு வைத்து விட்டு தேசம், பாசம் என்று பொய்யுரை பகர்கிறவர்கள்தான் தரம், விலை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையிலோ கேடு கெட்ட பிழைப்புவாதிகளாக மாறி அருவெறுக்கும் பண்புடையவர்களாக வலம் வருகிறார்கள். பக்கத்து வீட்டில் இழவு விழுந்தால் கூட தனது மதிய உணவுக்கு பிரியாணி கிடைப்பதை விட்டுக் கொடுக்க இயலாத அளவு சுருங்கிய கம்பளிப் பூச்சிகளாய் வலம் வருகிறார்கள் இந்த அல்பைகள்.

அண்ணாச்சி கடையால் உனக்கு அப்படியென்னா நஸ்டம் வந்து விட்டது? இல்லை விவசாயிதான் என்றாவது அண்ணாச்சி கடையை தனது நஸ்டத்திற்க்கு காரணம் என்று எங்காவது சொல்லியிருக்கிறானா? இதோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விலை வாசி உயர்கிறதே இதுதானே பிரச்சனை? இதற்க்கு அண்ணாச்சியா காரணம்? தண்ணீரை தனியாருக்கு தாரை வார்த்து நகரத்து ஏழைகளை தாகத்தில் தவிக்க விடுகிறானே அதுதானே பிரச்சனை? கல்வியை தனியாருக்கு கைகழுவி சாதரணப் பட்டவர்களுக்கு கல்வி மறுக்கும் புதிய மனு நிதியல்லவோ பிரச்சனை? காப்புரிமைச் சட்டம் மூலம் மருந்து பொருள் விலையை ஏற்றி வெறி நாய்க் கடி மருந்து கூட கிடைக்காமல் தவிப்பதல்லவா பிரச்சனை? பொது மருத்துவமனைகளை கைவிட்டு தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதல்லவோ பிரச்சனை? விவசாயிக்ளை விவசாயத்தைவிட்டு விரட்டுவதல்லவா பிரச்சனை? விவசாயத்தை ஒழித்து இந்தியாவின் சுயசார்பை அழிப்பது அல்லவா பிரச்சனை? கோடிக்கணக்கில் பஞ்சம் பிழைக்க ஓடி வரும் கொத்து விவசாயியை நகரங்களில் அத்து கூலிக்கு ஒட்டச் சுரண்டுவதல்லவா பிரச்சனை? அரை வயிறு சாப்பிட்டு உயிர் வளர்த்து நானும் மனிதன் தான் என உருவத்தில் நம்ப வைக்கும் கோடிக்கணக்கான ஏழை இந்தியர்களின் வயிற்று கொதிப்பல்லவா பிரச்சனை?

எது உனது பிரச்சனை?

இந்தியாவில் யாராவது அண்ணாச்சி கடை சரியில்லை என்று போராடினார்களா? அல்லது இந்திய மக்கள் போராடிய விசயங்களுக்குத்தான் இந்த அரசு எதாவது செய்துள்ளதா? குறைந்த பட்சம் நாட்டின் மீது ஏதோ அதீத பாசம் உள்ளது போல நடிக்கும் அடிவருடிகளாவது இந்தியா மக்கள் இது வரை போராடிய அடிப்படை பிர்ச்சனைகள் குறித்து எதாவது எழுதியுள்ளார்களா? இது வரை?

இப்பொழுது மட்டும் என்ன விவசாயிகள் மீதும் நடுத்தர வர்க்கத்தின் மீதும் பாசம்? உனது பாசத்தின் பின்னால் ஒழிந்திருக்கும் உனது திட்டம் என்ன?

அன்று அவுரி பயிரிடச் சொன்ன பிரிட்டிஸ்க்காரனுக்கும், இன்று பூ பயிரிட சொல்லும் இந்திய அரசுக்கும் என்ன வித்தியாசம். ஆனால் அன்று விவசாயிகள் தமது ரத்தத்தை நிலத்தில் சிந்தத் தயாரனார்களே ஒழிய அவுரி பயிரிட ஒத்துக் கொள்ளவில்லை. இதோ இன்றுக் கூட நந்திகிராமம் நமக்கு வழி காட்டுகிறது. உலகமய தாக்குதலில் லட்சம் விவசாயிகள் பூச்சிகளாய் இறந்தார்கள், இந்தியா எனும் பெரும் மலைப்பாம்பு சிறு அசைவைக் கூட காட்டவில்லை. மாறாக, நந்திகிராமத்தில் பதினான்கு நந்திகிராம மக்கள் தமது உயிரை வீரமுடன் தியாகம் செய்தன்ர். இதோ வெற்றியடைந்துள்ளனர். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அழுத குழந்தை பால் குடிக்கும்.

முடிவு செய்யுங்கள். சிறு முதலாளிகளின் அங்காடிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், பெட்டிக் கடை அண்ணாச்சிகளிடம் மட்டும்தான் பொருள் வாங்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டுப் பற்றை காட்ட இதை விட சுலபமானதொரு வழி இருப்பது போல தெரியவில்லை. இந்த சின்ன தியாகம்கூட செய்ய தாயாரில்லாத பிழைப்புவாதிகளை அவமானப்படுத்துங்கள். இதில்கூட சுயநலமாக சிந்திக்கும் ஒருவனின் உறவு எந்த காலத்திலும் நமக்கு ஆபத்துதான் என்பதை உணருங்கள்.


அசுரன்


மே 1 ரிலையன்ஸ் முற்றுகைப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் எல்லாம் கலந்து கொண்டு ரிலையன்ஸ் எதிர்ப்பை உரக்க ஒலிப்போம்!

தொடர்புடைய கட்டுரைகள்:

15 பின்னூட்டங்கள்:

said...

மிகச் சிறப்பான கட்டுரை. எந்தப் பகுதியைக் குறிப்பிட்டு பாராட்டுவது என்றே தெரியவில்லை..

நட்சத்திர வாழ்த்துக்கள் அசுரன்!


//நிற்க, இந்திய அரசு நியயாமாக செய்து தர வேண்டிய விவசாயத்திற்க்கான உள்கட்டுமானங்களை செய்து தராமல் ஏமாற்றுவது, பிறகு உள்கட்டுமானங்கள இல்லாததை காரணம் காட்டியே விவசாயத்தை பன்னாட்டு கம்பேனிகளுக்கு கதவை திறந்து விடச் சொல்லும் இந்த பதர்கள்.//

அதே போல் பொதுவினியோகத்தை சீரழித்தது.. உலக வங்கியின் வழிகாட்டுதலின் படி பலவண்ண கார்டுகள் போட்டு மக்கள் ரேசன் பொருட்கள் வாங்காமல் இருப்பதை உறுதி செய்து விட்டு.. அதன் காரணமாய் கையிருப்பில் இருந்த தானியத்தின் அளவு கூடியதைக் காரணம் காட்டியே விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதைக் குறைத்துக் கொண்டது.

சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்குவதை (அ)நீதி மன்றங்களே மறைமுகமாய் ஆதரிக்கிறது. டில்லியில் கடந்த சில மாதங்களாய் சிறு வணிகர்களின் கடைகளை ஆக்கிரமிப்பு என்று சொல்லி நீதி மன்றமே இடித்துத் தள்ள உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் ரிலையன்ஸ் பி.எஸ்.என்.எல்லுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பட்டை நாமம் போட்ட போது இதே (அ)நீதி மன்றங்கள் எங்கே போனது?

தாங்கள் எந்த வர்க்கத்துகு சாதகமானவர்கள் என்பதை அவர்கள் தெளிவாக சொல்லி விட்டார்கள்..

//கறிச் சோறு கேட்ட காட்டேரி தலைப் பிள்ளையைத்தான் தின்பேன் என்று நின்றதாம் //
//, நடுத்தர வர்க்க வியாபாரிகளின் சந்தை ஆதிக்கத்தின் மீது வெறுப்பை உமிழ்வதற்க்கும் பின்னால் உள்ள இயங்கியல் கோடிகளை சுரண்டிக் கொடுக்கும் இந்த அட்சயப் பாத்திரத்தின் மீதான முறை தவறிய காமம்தான்//

//உண்மைதான், நுகர்வோன் என்ற முகமூடி போட்டுக் கொண்டால் நமது சதையை கொத்திக் கிழிக்கும் வலி தெரியாமல் இருக்க நுகர்வுக் கலாச்சார போதை மருந்து கொடுக்கப்படும்.
//


//குரங்கு அப்பம் பிரித்த கதை. அதாவது விவசாயி, வியாபாரி முரன்பாட்டில் குரங்கு அம்பானி வயிறு வளர்க்கும் கதை.
//

நல்ல ஒப்பீடுகள்

வாழ்த்துக்கள் அசுரன்

ராஜாவனஜ்

said...

//// இன்று தான் சுரண்டுவதற்க்கு முன்பு சுரண்டப்படும் மனோநிலைக்கு மக்களை தாயார்ப் படுத்தத் தேவையான எல்ல புறச் சூழல்களையும் உருவாக்கி விட்டுதான் காரியமாற்றுகின்றனர் அவர்கள். ////

கண்கூடான உண்மை.. ஆனால், இன்னும் இந்த அல்பைகள் இதை உணராமல் இருப்பது தான் வேதனை.


///////நந்திகிராமத்தில் பதினான்கு நந்திகிராம மக்கள் தமது உயிரை வீரமுடன் தியாகம் செய்தன்ர். இதோ வெற்றியடைந்துள்ளனர். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அழுத குழந்தை பால் குடிக்கும்.//////


நிச்சயம் அப்படி ஒரு ரத்தம் சிந்தும் நாள் வரத்தான் போகிறது.

said...

ஆழமான கட்டுரை பாராட்ட வேண்டியது நிறைய உள்ளது.. நேரமின்மை.. தொடர்ந்து ஆதிக்கத்திற்கு எதிரான நம் குரலை எழுப்பிக் கொண்டே இருப்போம்.

முக்கியமாக நடசத்திர வாழ்த்துக்கள்!!

said...

சிரத்தையும், உழைப்பும் மிளிர்கின்றன.
உணர்ச்சித் தெறிப்போடு
வெடிக்கும் வார்த்தைகள்....
வாழ்த்துக்கள் தோழர்!

said...

//இவர்கள் நுகர்வோர் நுகர்வோர் என்று பேசும் போதெல்லாம் நாம் ஏதோ இந்திய ஜனங்கள் எல்லாத்தையும் சொல்கிறார்கள் என்று நினைத்தால் தவறு செய்கிறோம்.//
உண்மைதான், இவர்களின் நுகர்வோர்களெல்லாரும் வாங்கும் சக்தியுள்ளவர்கள் மட்டும்தானே!

பிரச்சினை, வியாபாரிகளிடம் மட்டுமிருந்தால் சீக்கிரம் திருத்திவிடலாம், புற்றீசலாய், அதிகாரத்திலிருப்பவர்கள் அனைவரும் வியாபாரிகளின் பணத்திற்கு அடிமையாகி நாட்டை மறப்பது தான் பெரும் பிரச்சினை! பலமுனைத் தாக்குதலாய்த் தான் உள்ளது! ஊடகங்களோ பணத்திற்கும் அதிகாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தந்து, அடிக்கட்டு மக்களின் நிலையை திரித்து எழுதுவதும், வியாபாரிகளைத் தாங்கி நிற்பதுவும் பெரும் எதிர்ப்புக்குரியது!

அமெரிக்காவில், வால்மார்ட்-ஐ "Main Street Killer" என்றுதான் அழைக்கின்றனர். இருக்குமிடங்களிலெல்லாம், அந்த ஊர் சிறு வணிக வியாபாரிகளை, அவர்களின் தொழிலைவிட்டு அழித்ததுபற்றி கூகுள் செய்தால் உங்களுக்கே தெரியும்! அதைத்தான் இன்று ரிலையன்சும் இந்தியாவில் செய்யத் துவங்கியுள்ளது!

அரசாங்கம் என்பது, மக்கள் சக்தி என்பதிலிருந்தும், மக்களின் கேள்விகளுக்கு பொறுப்பானது என்ற நிலையிலிருந்தும், வியாபாரங்களின் செயல் இயந்திரமாக மாற்றப்பட்டு வரும் நிலைதான் மிகவும் வருத்தத்திற்குரியது. இன்று இதை கேள்வி கேட்காமல்விடுவது, நாளைய சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நாம் செய்யும் பெருங்கேடாகும்!

அசுரனின் முயற்சிகளுக்கும், தொடர் உழைப்புக்கும் வாழ்த்துக்கள்!

said...

நல்ல அலசல் ....
அடிமை புத்திகளையும், அருவருடிகளையும் இனம் காண்கிறது கட்டுரை.

நட்சத்திர வாழ்த்துக்கள் அசுரன்!


//"இந்தா பார் விவசாயி, நான் வால்மார்டை உள்ளே நுழைய விட்டால் உனக்கு நல்ல விலை கிடைக்கும் ஆனா வியாபாரியின் வாழ்க்கை வம்பாக போய்விடும், அதை நீ கண்டுக்க கூடாது" வேண்டுமென்றே விவசாயத்தை காயப்பொட்டுவிட்டு இப்பொழுது இப்படி பச்சையானதொரு பேரம் பேசுகிறார்கள், சகோதர வர்க்கத்தை விரோதிகளாக்க பார்க்கிறார்கள் இந்த அடிமை வர்க்கத்தினர். இந்த கோஸ்டிகளை தரகு கோஸ்டி என்று சும்மாவா சொல்கிறார்கள்? ஆக, பிரச்சனையின் மூல காரணமான நாட்டமை ஏகாதிபத்தியத்தை திரை மறைவில் மறைத்துவிட்டு பண்ணையடிமைகளான விவசாயிக்கும், வியாபாரிக்கும் முரன்பாட்டை உருவாக்குவதன் மூலம் ரிலையன்ஸ்க்கு புனித வட்டம் கட்ட இங்கு சில அடிமைகள் அலைகிறார்கள்.//

//கோழி குருடாய் இருந்தால் என்ன குழம்பு ருசியாய் இருக்கிறதா என்று பார்ப்போம் என்று பிழைப்புவாதம் பேசி அண்ணாச்சிகளின் ரத்த கறைபட்ட பலசரக்கு சாமான்களை வாங்கி தின்னத் தயாரான அடிமைகள் குறித்து ஒன்றும் சொல்வதற்க்கில்லை. சுயமரியாதையும், மனிதாபிமானமும் உள்ளவர்களை நோக்கியே இந்த கட்டுரை பேசுகிறது.
//

said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள் அசுரன். வழக்கத்தை விடவும் அதிக வேகத்துடன் வெளிப்படுகின்றன நட்சத்திரவாரக் கட்டுரைகள்.. மிகவும் நன்று...

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி போன்ஸ்,

நட்சத்திர வாரத்தை கொஞ்சம் உருப்படியாக பயனபடுத்தும் வேகம் ஒன்றிரண்டு உருப்படியான கட்டுரைகளை என்னிடமிருந்து வெளிக் கொண்டு வந்து விட்டது.

கோபாவின் வாழ்த்துக்களுக்கு நன்றி,


அரசு பால்ராஜின் வாழ்த்துக்களுக்கு நன்றி,

அசுரன்

said...

//முடிவு செய்யுங்கள். சிறு முதலாளிகளின் அங்காடிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், பெட்டிக் கடை அண்ணாச்சிகளிடம் மட்டும்தான் பொருள் வாங்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். நாட்டுப் பற்றை காட்ட இதை விட சுலபமானதொரு வழி இருப்பது போல தெரியவில்லை. இந்த சின்ன தியாகம்கூட செய்ய தாயாரில்லாத பிழைப்புவாதிகளை அவமானப்படுத்துங்கள். இதில்கூட சுயநலமாக சிந்திக்கும் ஒருவனின் உறவு எந்த காலத்திலும் நமக்கு ஆபத்துதான் என்பதை உணருங்கள்.
//

கட்டுரையின் இந்த வரிகளை மீண்டும் வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன்

said...

கருணாநிதியின் அரிசியும், ஹிட்லரின் ரொட்டித் துண்டும் 'சிறுவணிகத்தை அழிக்கும் ரிலையன்ஸ் ·ப்ரஸ்'
http://poarmurasu.blogspot.com/2007/04/blog-post_30.html

இன்று நீதிமன்றம் இடஒதுக்கீடுக்கு தடை என்று உத்தரவு பிறப்பித்தவுடன் "அது சமுக நீதிக்கு எதிரானது" என்றும், "நீதிமன்றத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் இல்லை" என்றும் கூறி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து பந்த் நடத்தினார் கலைஞர். ரிலையன்ஸ் கடைதிறப்பதால் பாதிக்கப்படும் சிறு காய்கறிகடைகாரர்களும், சிறு வணிகர்களும் போராட்டம் நடத்தும் போது அதே சமூக நீதி அமைதி காக்கிறது.

இடஒதுக்கீட்டுக்குத் தடை என்றால் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சமுகநீதி பேசும் இவர்கள், ரிலையன்ஸ் பிரஷ் வருவதால் பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் என்று தெரிந்தும் உயர் ஜாதி பனியாவான அம்பானியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.

இன்று ரிலையன்ஸ் செல்போனில் 24 மணி நேரமும் சன் டி.வியை கண்டுகளிக்கலாம் என்று விளம்பரம் செய்கிறான், இதனை சிவப்பு கம்பளத்தோடு சேர்த்து பார்க்கும் போது அம்பானிக்குள் கலைஞரும் அடக்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

14..... 24....ரிலையன்ஸ் கடைகள் திறப்பு...கோயம்பேட்டில் 40% வியாபாரம் பாதிப்பு, சிறு காய்கறிகடைகாரர்களும், சிறு வணிகர்களும் போராட்டம், கடையடைப்பு என தமிழகம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கும் போது கலைஞர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

பா.விஜய் எழுதிய நூல் வெளியீட்டுக்கு சென்று கொண்டும் (இந்த வித்தக கவிஞர்தான் 'சின்ன விடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா' என்று பாடல் எழுதியவர்), அம்மாவின் கருத்து மிக்க விமர்சன அறிக்கைகளுக்கு பதில் அறிக்கை எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

மற்றபடி ரிலையன்ஸால் பாதிப்பு இல்லை என்று குங்குமத்தில் எழுதிக்கொண்டு வருகிறார்கள். ரிலையன்ஸ் பிரஷ்-ஆல் எந்த பாதிப்புமில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறீர்களே, அவனை ஏன் கொண்டு வந்தீர்கள் என்று கேட்டால் பதில் இல்லை...
சரி இந்த விஷயத்தில் மற்ற தலைவர்களை பார்த்தால், பல லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் எதிர்கட்சியான அம்மா.. போராட்டம் நடக்க ஆரம்பித்தவுடன் ரிலையன்ஸை எதிர்த்து அறிக்கை விட்டார். இப்ப உத்திரபிரதேசத்திற்கு சென்று அம்பானியின் கூட்டாளியான முலாயம் சிங்கை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். இவர் இங்கு அம்பானியின் ரிலையன்ஸை எதிர்ப்பார், மேடை போட்டுப் பேசுவார் என்று எதிர் பார்க்க முடியுமா? அப்படி யோசிப்பதற்குத்தான் என்ன அடிப்படை உள்ளது?

அடுத்து பா.ம.க தலைவர் ராமதாஸ்.. என்ன சொன்னார்? 10 நாட்களில் ரிலையன்ஸ் பிரஷ்-ஐ மூடா விட்டால் நடக்கிறதே வேற என்று மார்ச் 20 யில் அறிக்கை விட்டார். இன்று ரிலையன்ஸ் செல்பவர்களின் காலைத் தொட்டு போகாதீர்கள் என்று கதறுகிறார்.

இவர்கள் தான் மத்தியில் அங்கம் வகிக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் இவரது மகன் அன்புமணி கலந்து கொண்ட கூட்டத்தில் தான் இந்த மக்கள் விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்று மக்களை பார்த்து போகாதீர்கள் என்று காலில் விழ வேண்டும்? அமைச்சரவைக் கூட்டத்திலேயே மன்மோகன் சிங், மற்றும் ப.சிதம்பரத்தின் காலில் விழுந்து ரிலையன்ஸ் பிரஷ்-ஐத் தடுத்து இருக்கலாமே?

அடுத்து சொல்லில் மட்டும் மார்க்சியம் பேசும் சி.பி.எம் யின் DYFI..இன்று மாநாட்டு கோஷங்களுடன் சேர்த்து ஆங்காங்கே ரிலையன்ஸை எதிர்த்தும் சுவரொட்டி எழுதி வருகின்றனர். இதை விட மோசடி இருக்க முடியாது. ஏனெனில் இவர்கள் ஆட்சியின் இருக்கும் மேற்கு வங்காளத்தில் தான் ரிலையன்ஸின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு இடம் வழங்கப்பட்டு உள்ளது. டாட்டா, சலிம் நிறுவனங்களுக்கும் விவசாய நிலங்களை பறி கொடுத்துவிட்டுப் போராடும் மக்களைச் சுட்டு கொன்றும் , ஒடுக்கியும் வருகிறது, சிபிஎம் அரசு. இதே ரிலையன்ஸ் பிரஷ்க்கு கூட அனுமதி வழங்க புத்ததேவ் பட்டாச்சாரியா தயாராகி விட்டார்.ஆனால் DYFI இங்கு ரிலையன்ஸை எதிர்க்கின்றனர்.

மற்றொரு தலைவர் திருமா.. இவர் எல்லாரையும் விட மிக அறிவுடன் ரிலையன்ஸால் பாதிப்பே இல்லை என்று சொல்லி விட்டார். இவர் கட்சியின் சங்கம் தான் கோயம்பேட்டில் பெரியது. கோயம்பேட்டில் மூட்டை தூக்கி , கூறு போட்டு காய்கறி வாங்கி விற்பனை செய்யும் தலித் மக்கள் தாங்கள் பாதிக்கப் படுவதாகச் சொல்லிப் போராடுகின்றனர். ஆனால் இந்த 'வாழும் அம்பேத்கர்' பாதிப்பு இல்லை என்கிறார்.

இன்று சட்டசபையின் ரிலையன்ஸ் பிரஷ் பற்றி இவர்களின் எவரும் வாய்திறப்பதில்லை. இதிலிருந்தே இவர்கள் அனைவருக்கும் அம்பானிக்கும் என்ன உறவு இருக்கிறது என்பதை அறியலாம்.

கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த மக்கள் போராட்டங்களை நாம் திரும்பிப் பார்ப்போமானால் அவை 'வேலைகொடு' என்றோ, 'சோறு போடு' என்றோ, 'கல்வி, மருத்துவமனை வேண்டும்' என்றோ இருப்பதை விட 'எங்களை வாழவிடு' என்றுதான் இருக்கிறது.
கடந்த மாதம் நந்திகிராமத்தில் மக்கள் தங்களது உயிராதாரமான நிலத்தைப் பன்னாட்டுக் கம்பெனியின் லாபத்திற்காகக் கொடுக்க முடியாது என்று போராடினார்கள். அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கு முன்பு, கலிங்க நகர் பழங்குடி மக்களின் வாழ்விடமான, கனிமவளம் மிக்க காடுகளை டாட்டாவுக்கு விற்பதை எதிர்த்துப் போராடிய பழங்குடிமக்களைச் சுட்டு வீழ்த்தினர். அதற்கு முன்பு டெல்லி விமான நிலையத்தை தனியாருக்குக் கொடுப்பதை எதிர்த்து விமான நிலைய ஊழியர்கள் போராடினார்கள். ஆனால் அவர்களது போராட்டமும் வீணாகி டெல்லி விமான நிலையம் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, இன்று சென்னை விமான நிலையத்தையும் தனியாருக்கு விற்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

வீட்டைக் கொள்ளையடிக்க வரும் கொள்ளையன் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து விட்டுக் கடைசியில் அந்த வீட்டுப் பெண்ணின் கழுத்தில் கிடக்கும் தாலியைக் குறிவைத்துப் பறிக்கும் போது அப்பெண் "இதைமட்டுமாவது விட்டுவிடு" என்று கதறுவதைப் போலத்தான், 'எல்லாவற்றையும் கொள்ளையடித்தாய் பொறுத்துக்கொண்டோம் ஆனால் இன்றைக்கு எங்களை உயிர்வாழக்கூட விடாமல் தாலியறுக்கிறாயேடா நாயே!' என்று மக்கள் போராடுகிறார்கள்.

இப்படி அரசாங்கம் - தரகு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகத் தான் செயல்படுகிறது என்பதனை மறைக்கத்தான் மக்களுக்கு 'இரண்டு ரூபாய்க்கு அரிசி', 'இலவச டி.வி' என்று கலைஞர் வழங்குகிறார். இது கூட இவர்கள் கண்டுபிடித்தது அல்ல.அன்று ஜெர்மனியில் நாஜிக்கட்சி தொடர்ந்து மக்களுக்கு எதிராக அடக்குமுறை செலுத்தி வரும் போது மக்கள் நமக்கு எதிராக போராட மாட்டார்களா என்று கட்சிக்குள்ளே ஒரு விவாதம் வந்த போது ஹிட்லர் கூறினான் ' மக்களா? அவர்களுக்கு தேவை ஒரு ரொட்டித் துண்டும் , சர்க்கஸ் மட்டுமே' என்று. அதைத்தான் இன்று மக்களுக்கு ரொட்டித் துண்டுக்குப் பதிலாக 2 ரூபாய் அரிசியும், சர்க்கஸ¤க்குப் பதிலாக கலர் டி.வி யும் வழங்குகிறார் கலைஞர்.

இன்றைக்குக் காசு இருந்தால் மட்டுமே நல்ல கல்வி பெற முடியும். இல்லையென்றால் கூலி வேலைக்குத்தான் போகவேண்டும். பணவசதியிருந்தால் மட்டுமே அப்பல்லோவுக்குப் போய் மருத்துவம் பார்க்க முடியும். இல்லையென்றால் அரசு மருத்துவமனைக்குப் போய் இன்னும் பல வியாதிகளை வாங்க வேண்டும். என்று பணம் இருத்தால்தான் உயிர்வாழலாம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இப்படி மக்களைப் பற்றி எந்தக் கவலையுமின்றி இந்த அரசு இருக்கையில் மக்களாகப் பார்த்து தாங்கள் உயிர் வாழத் தானாகக் கையை ஊன்றிக் கரணம் போட்டு, 5 வட்டி 10 வட்டிக்குக் கடன் வாங்கி, ஒரு சிறு தள்ளுவண்டி, தரைக்கடை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். அதற்கும் ஆப்பு வைக்க அம்பானியைக் கொண்டு வருகின்றனர்.
இந்த சமுதாயத்தில் வாழ்வதற்கு எல்லா முயற்சிகளும் செய்து விட்டுக் கடைசியில் வேறு வழியின்றி விவசாய நிலத்தை, குடியிருந்த வீட்டை விற்றுப் பணம் கொண்டுவந்து ஒரு சிறு மளிகைக் கடை நடத்தி எப்படியாவது வாழ்ந்துவிடலாம் என்று நம்பி இருக்கும் பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட வந்தது 'ரிலையன்ஸ் பிரஷ்'

'போட்டி போடு' என்று வாதாடும் இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களைக் கண்டிக்கும் இவர்கள்தான், 250 ரூபாய் காய்கறி கடை வைத்துப் பிழைக்கும் ஒரு பெண்னை , 25,000 கோடி போட்டு தொழில் நடத்தும் அம்பானியுடன் போட்டு போடச் சொல்கிறார்கள்.

ரிலையன்ஸ் பிரஷ்ஷால் நன்மை என்ன? என்று கேட்டால் , வேலைவாய்ப்பு உருவாகும் என்கிறார் ப சிதம்பரம். சரி. எத்தனை பேருக்கு? புதிதாக வேலை வாய்ப்பை அம்பானி உருவாக்குகிறானா என்றால் அது இல்லை. இருக்கின்ற 18 லட்சம் சிறுகாய்கறி ,சிறு மளிகைக் கடை வியாபாரிகளின் வேலையைப் பறித்து விட்டு வெறும் ஒன்று அல்லது ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை தருவானாம். இந்த அயோக்கியத்தனத்தைத் தைரியமாக இந்த ஏகாதிபத்திய அடிமை கூறுகிறது.

இத்தகையதொரு தனியார்மயம், தாராளாமயம் , உலகமய நடவடிக்கை தான் அனைத்துத் துறைகளில் முழு வீச்சாக இந்த ஆளும் வர்க்க அடிமைகளால் தினத்தோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தான் நாடு மறுகாலனியாக்கத்துக்கு உட்பட்டு வருகிறது என்று நாம் சொல்கிறோம்.
இன்று நாட் டில் இருப்பது இரண்டே அணிகள் தான்.

ஒன்று அம்பானி, டாடா , வால்மார்ட் போன்ற பன்னாட்டு,தரகு முதலாளிகள் - அவர்களுக்காக ஏவல் வேலை செய்யும் ஓட்டு கட்சிகள் இவை அனைத்தும் ஒரு அணி.

சிறுகாய்கறி ,சிறு மளிகைக் கடை வியாபாரிகள்,தொழிலாளர்கள்,விவசாயிகள், மாணவர்கள், உழைக்கும் மக்கள் ஆகிய நாம் ஒரு அணி.

நாமாக ஓரணியில் திரளாவிட்டாலும் அவன் இன்று நம்மை ஓரணியில் திரள வைக்கிறான்.

அரசாங்கமே அவன் பின்னால் உள்ளது, அரசாங்கமே முடிவு செய்து விட்டது என்று புலம்புவதால் ஒன்றும் நடக்க போவதில்லை, துணிந்து அவனா , நம்மளா என்று பார்த்து விடுவோம். நம் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குபவனை பார்த்து வேடிக்கை பார்க்க முடியுமா ? போராடுவதைத் தவிர வேறு வழிதான் இருக்க முடியுமா? வாருங்கள், அத்தகையதொரு போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் என்று அழைக்கின்றோம்.

(27-4-07 புரசைவாக்கத்தில் தோழர் மருதையன் உரையில் இருந்து தொகுக்கப்பட்டது)

said...

//கண்கூடான உண்மை.. ஆனால், இன்னும் இந்த அல்பைகள் இதை உணராமல் இருப்பது தான் வேதனை.//

அல்பைகளை தோழி லிவிங் ஸ்மைலும் புரிந்து கொள்கிறார் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் குறிப்பாக அழகி பட விமர்சனம் குறித்த டாலர் செல்வனின் கட்டுரையில் நீங்கள் இட்டிருந்த பின்னூட்டம் பல பக்க கட்டுரையால் செய்ய இயலாத விமர்சனத்தை செய்துவிட்டது. அல்பைகளை நன்கு புரிந்து கொண்டதனாலேயே அது போன்ற நறுக்குத் தெறித்தாற் போன்ற விமர்சனத்தை தங்களால் செய்ய முடிந்தது என்று கருதுகிறேன்.

பின்னே, சமூகத்தின் வன்முறையை அதன் முழுமையான வடிவத்தில் அனுபவித்த உங்களிடம்தான் அல்பைகள் பற்றிய பாரிய புரிதல் இருக்க சாத்தியமுண்டு, எமது புரிதல்களில் குறிப்பிடத்தகுந்த பகுதி புத்தக அறிவாக இருக்கும் போது, உங்களது புரிதல் நடைமுறை அனுபவம் சார்ந்ததாக இருப்பதாலேயே வெகு சில வரிகளில் அல்பைகளை தூசு போல துடைத்தெறிந்து விட்டீர்கள்.

வாழ்த்துக்கள் தோழி லிவிங் ஸ்மைல்,
அசுரன்

said...

santhosh's article on Retail Business

http://santhoshpakkangal.blogspot.com/2007/03/170.html

http://santhoshpakkangal.blogspot.com/2007/03/164.html

said...

நாகர்கோவிலில் விவசாயிகளும் வியாபாரிகளும் இணைந்து
அட்டகாசமான குளிர்பதனமூட்டப்பட்ட மார்க்கெட் கட்டியிருக்கிறார்கள்.
இந்த வார விகடனில் பார்க்கவும். ஆதிக்கம் இல்லாத ப்ரெஷ்
காய்கறி.

said...

TPRJoseph என்பவரின் தளத்தில் நான் இட்ட பின்னூட்டங்கள்:

///
//வாங்க முத்துக்குமரன்,


எதிர்ப்பு குரல்கள் சிலருக்கு எப்போதும் தமாசாகத்தான் இருக்கும் கொஞ்சம் மேலே ஏறிய பின். //

அப்படியா? ஏன் நேரடியாவே சொல்லுங்களேன்.. ஏன்னா நா மேஏஏஏஏல போயாச்சி... பாங்குல ஒரு கோடி பாலன்ஸ் இருக்கு..

அதனாலதான் ரோட்டடீர காய்கறி கடைகள்ல வாங்காம ரிலையன்ஸ் கடைக்கு போறேன்...

அதனால எனக்கு இது தமாஷாத்தான் தெரியுது....அப்படீன்னு சொல்லுங்க...////

அதுதான் உண்மை என்பது போல தெரிகிறது. ஏனேனில் தண்ணீர் தனியார்மயம் குறித்து முத்துக்குமரன் எழுப்பிய கேள்விக்கு உங்களது பதில் எனக்கென்ன வந்தது என்பது போலத்தான் உள்ளது.

//குடிநீரை விலைகொடுத்து வாங்குவதைப் பற்றி கூறுகிறீர்கள். இன்று தமிழகத்தில் தினம் ஒன்றுக்கு ரூ.20 கொடுத்து குடிநீர் கேன் வாங்குபவர்கள் எத்தனை சதவிகிதம் பேர் என்று நினைக்கிறீர்கள்? எல்லோரும் காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தால் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் கூட சப்ளை செய்ய முடியாது...//

தண்ணீர் தனியார் ஆனால் விலை கொடுத்த வாங்க இயலுபவ்ர்களுக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்றாகிப் போகும். இதோ இந்தியா சீனாவில் நல்ல தண்ணீர் கிடைப்பவரின் சதவீதம் படு பாதளத்திற்க்கு குறைந்துள்ளது.

அவர்கள் நாளை தனியார் த்ண்ணீர் இறைப்பு நிலையங்களை தாக்கும் போதோ அல்லது அதனை எதிர்த்து போராடும் போதோ இதே போல நீங்கள் பதிவெழுதுவீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதாவது இவர்கள் இங்கு வியாபாரம் செய்ய உரிமை உள்ளது என்று.


//
இந்த போக்கை அனுமதித்தால் நாளை மொத்த வியாபாரிகள் எல்லோருமே சில்லறை வியாபாரிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்கள்தான் ஆகவே அவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற நிலைவந்தால் என்னாவது?//

இது உங்க கற்பனைதான். அப்படியெனில் நீங்கள் மொத்த வியாபாரிகளின் ஆதரவாளரா என்று என்னால் கேட்க்க முடியும். இன்று வாழ்க்கை பறிபோகும் பெரும்பான்மை சிறுவியாபாரிகள் போராடினால் அதற்க்கு பதில் சொல்ல வக்கின்றி இப்படி சப்பை கட்டு கட்டுவது நேர்மையானது அல்ல. மேலும் இந்திய மொத்த வியாபாரிகளுக்கும் ரிலையன்ஸ் பாணி தரகு பன்னாட்டு மூலதனத்துக்கும் வேறுபாடு உள்ளது.

மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயத்தையும் காவு வாங்கும் திட்டங்களீன் ஒரு அம்சமாக சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனத்தை அனுமதிப்பது உள்ளது. இந்த் போக்கை அனுமதித்தால் என்ற எச்சரிக்கை உண்மையில் இந்த அம்சத்தை முன்னிட்டே வந்திருக்க வேண்டும். ஆயினும் உங்களது வர்க்க இயல்பு போராடும் மக்களை குறித்து எச்சரிக்க வைக்கிறது.

ராஞ்சி ரிலையன்ஸ் கடைகள் உடைக்கப்பட்டதில் எந்த பமகா அரசியல் செய்தது என்பதையும் கண்டுபிடித்த் தருவார் tpr

ஒரு பிரச்சனை நடக்கிறது எனும் பொழுது அதில் எந்த பக்கத்தை எழுதுகிறீர்கள் என்பதுதான் உங்களது அரசியல் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள உதவுகிறது.

ஓட்டுக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை எழுதிய நீங்கள் உண்மையிலேயே ரிலையன்ஸ் எதிர்ப்பில் உள்ள நியாயத்தையும் எழுதியிருக்கலாம்.


//ஆத்மசுத்தியோடு நாம் தவறு என்று கருதுவதை எதிர்த்து மட்டுமே போராடவேண்டும். ரிலையன்சோ அல்லது வேறெந்த இந்திய நிறுவனமோ ஒரு தொழிலிலோ அல்லது வணிகத்திலோ ஈடுபடுவதை நம்மால் தடுக்க முடியாது... தடுக்கவும் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து...
//

அது என்ன ஆத்ம சுத்தியோடு தவறு? உஙக்ளுக்கு தவறு என்று ஏற்புடைய தவறா? அதாவது சென்னையை அசிங்கப்படுத்தும் சேரிவாழ் மக்களின் தவறு என்பது போல, நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யும் கோடிஸ்வர ந்டைப்பாதைக் கடைக்காரர்களின் தவறு என்பது போல...(ஒரு எ-காதான்)

அது என்ன இந்திய நிறுவனம்? அமெரிக்க பெப்ஸ்யின் CEO ஒரு இந்திய பெண். அது ஒரு இந்திய நிறுவனமா?

இந்திய தேசிய முதலாளியோ அல்லது சிறு வியாபாரியோ வணிகத்தில் வாழ்வதை நீங்கள் சொல்லும் மேற்ப்படி தரகு பன்னாட்டு மூலதனங்கள் தடுக்கிறதே? அது குறித்து TPRன் கலகக் குரலை எங்குமே கேட்க்க இயலவில்லையே?

அசுரன்

**************8

//இது விஷயமா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சார். பாதிப்பு இருக்கவே இருக்காதுன்னு உறுதியா சொல்ல முடியலை. கண்டிப்பா பாதிப்புன்னும் உறுதியாச் சொல்ல முடியலை. புட்வேர்ல்டு கடைகள் ஊர் முழுக்க இருக்க. அதுலயே காய்கறிகளும் கிடைச்சிக்கிட்டுதான் இருந்தது. இப்ப காய்கறிக்குன்னு தனிக்கடை.

ஆனா ஒன்னு. மக்களுக்கு எத எங்க வாங்குறது நல்லதுன்னு தெரிஞ்சிருக்கு. குறிப்பா பெண்களுக்கு. சகோதரியோட ரிலையன்ஸ் கடைக்குப் போயிருந்தேன். சென்னையில. அங்க காய்கறிகள் அது இதுன்னு வாங்குனா. அப்ப மருமகன் பலாப்பழம் வேணும்னு கேட்டதாச் சொன்னா. நானும் ஒரு பாலாப்பழப் பாக்கெட்டைப் பையில போட்டேன். அத அவ எடுத்து வெளிய வெச்சுட்டு. இத வெளிய வாங்கனும். அங்கதான் வெலையும் குறைச்சலா இருக்கும்னு சொன்னா. நானும் சரீன்னு கேட்டுக்கிட்டேன். எது எப்படியோ! எல்லாரும் நல்லாயிருந்தாச் சரி.
//


// எது எப்படியோ! எல்லாரும் நல்லாயிருந்தாச் சரி.//

இந்த எல்லாரும்கிறதுல யாரெல்லாம் வராங்க? ரிலையன்ஸ் அம்பானிக்கு இதில் இடம் உண்டா? ரிலையன்ஸால் நால்லாயில்லாமல் போகும் ஒரு பெரும் கூட்டம் குறித்து உங்களது கருத்து என்ன? ஓ... ஒரு வேளை உங்களது கவலையெல்லாம் உங்கள் அக்காவினுடைய மருமகனுக்கு விலை குறைவாக ஆனால் தரமான பொருள் கிடைப்பது குறித்துதானா?

நல்ல பிழைப்புவாதம். ஏன் ராகவன் அடுத்தவங்க பிரச்சனை குறித்து நமது இன்றைய நாகரீக வாழ்விற்க்காக உழைத்து ஓடாய் தேய்பவர்கள் குறித்தேல்லாம் யோசிப்பீர்களா?

இவையெல்லாம் கேள்விகள்தான்

அசுரன்

said...

சும்மா....

Related Posts with Thumbnails