தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
சோவியத் யூனியன் உலகின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வெற்றிகரமாக சோசலிசத்தை சாதிக்க முடியும் என்று நிரூபித்த நாடு. அதே நாடுதான் முதலாளித்துவத்தின் தோல்விக்கும் உதாரணமாக இன்று நின்று கொண்டிருக்கிறது. அது 1920களை ஒட்டிய கறுப்பு வெள்ளை காலகட்டம், உலக ஏகாதிபத்திய நாடுகள் முதல் உலகப் போர் முடிந்து ஒரு பத்தாண்டுகளிலேயே மீண்டும் ஒரு உலக யுத்தம் செய்வதற்க்கான தாயாரிப்புகளில் தீவிரமாக இருக்கின்றன. இந்த முறை அரசியல் களம் சிகப்பு நிறமாக இருந்தது ஒரு முக்கிய வித்தியாசம்.
துரோகிகளை உருவாக்கிய புதிய புரட்டல்வாதம் உருவான அந்த நெருக்கடி மிகுந்த வரலாற்று காலகட்டம் குறித்து ஜார்ஜ் தாம்சனின் 'மார்க்ஸ் முதல் மாவோ வரை' புத்தகத்திலிருந்து:
"சோவியத் அரசு வலுவடைய அடைய, ஏகாதிபத்திய அரசுகளிடையே உள்ள முரன்பாடுகளும் மேலும் கடுமையாகின. முதல் சோசலிச அரசுக்கு எதிரான தமது பகைமையில் அவை ஒன்றுபட்டன. அதன் வளர்ந்து வரும் வலிமையின் முன்னால் அவை பிளவுபட்டன. இப்பிளவு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளூம் வர்க்கத்துக்குள் பிரதிபலித்தது. பிரிட்டனில் சேம்பர்லினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட பெரும்பான்மையாக இருந்த பிரிவு சோவியத் யூனியனைத் தாக்குமாறு ஹிட்லரை ஊக்குவித்தது. ஹிட்லர் சோசலிசத்தை அழிப்பதுடன் இந்த நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் பலவீனப்படுத்திக் கொள்வான் என்றும், அதனால் பிரிட்டன் ஐரோப்பாவின் மிகப்பலம் பொருந்திய அரசாக உருவாகும் என்றும் இப்பிரிவு நம்பிக்கை கொண்டிருந்தது.
பிரிட்டனிடமும், பிரான்சிடமும் ஸ்டாலின் பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்தார். இது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். அது ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை என்பது தெளிவாகியதும், அவர் ஹிட்லருடன் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்."
"மேற்கில் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்ட ஹிட்லர் இப்போது கிழக்கில் தாக்குதல் தொடுக்கத் தாயாராக இருந்தான். பிரிட்டனின் ஆதரவைப் பெற ஒரு முயற்சி செய்தான்; ஆனால் சர்ச்சில் பிரிட்டிசு மக்களின் ஆதரவுடன் பிரிட்டனை சோவியத் யூனியன் பக்கம் நிறுத்தி தன் பதிலை வழங்கினார். இதன் பொருள் பிரிட்டிசு ஆளூம் வர்க்கம் தனது குறிக்கோளைக் கைவிட்டு விட்டது என்பதல்ல, அதன் நடைமுறைத் தந்திரம் மட்டுமே மாறியது. சர்ச்சிலின் நோக்கம் என்னவென்றால், ஜெர்மனியைத் தோற்கடிக்க சோவியத் யூனியனுக்கு இயலும் வகையில் ஆதரவு தருவது; இதன் மூலம் சோவியத் யூனியன் தனது சக்தி அனைத்தையும் செலவிடும்; அதன் பிறகு பிரிட்டன் உண்மையான வெற்றியாளனாகி விரும் என்பதுதான். மீண்டும் ஒரு முறை அவர்கள் தவறாகக் கணக்கிட்டு விட்டார்கள். சோவியத் மக்கள் அளவிட முடியாத இழப்புகளை அனுபவித்தனர். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் இறந்தனர்; இரண்டரைக் கோடி மக்கள் வீடிழந்தனர். இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் பலன்களைக் காட்டிலும் அதிகமான பொருள்வகைச் சேதம் ஏற்பட்டது; ஆயினும் அவர்கள் வெற்றி பெற்றனர். முதல் சோசலிச அரசு பாசிசத்திலிருந்து உலகைக் காப்பாற்றியது."
நீலகண்டன் என்பவர் தனது பொய்யுரைகளின் தொடர்ச்சியாக சமீபத்தில் இன்னுமொரு பொய்யை எழுதியிருந்தார். அதாவது ஹிட்லருடன் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்து கொண்டு ஏதோ பெரிய துரோகம் செய்தது போல அதில் சித்தரித்திருந்தார். இவர்கள் அரைப் பொய்யர்கள் என்று சொன்னதன் அர்த்தம் இதுதான். அதாவது உண்மையில் ஸ்டாலின் பிரிட்டிஸ், பிரான்சிடம் ஒப்பந்தம் போட கோரிக்கை வைத்த பொழுது அவர்கள் மறுக்கவும் வேறு வழியின்றி ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டதன் மூலம் ஒரு வருடம் போருக்கான தயாரிப்புக்கு அவகாசம் கிடைப்பதை உறுதிப் படுத்திக் கொண்டார். இந்த உண்மையின் கடைசிப் பாதியை மட்டும் வைத்து பொய்யுரைகளை எழுதும் இது போன்ற ஜென்மங்களை எந்த லிஸ்டில் சேர்க்க? மேலும் அவரது அந்த கட்டுரையில் ஸ்டாலின்தான் உண்மையில் ஹிட்லரை வளர்த்தார் என்று குறிப்பிடுகிறார். உண்மையில் நெருக்கடியை தவிர்க்க ஒரு வருட அவகாச காலகட்டத்தில் ஹிட்லருடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி சில அரசியல் பொருளாதார நடவடிக்கைகளை ஹிடலரின் ஜெர்மனியுடன் செய்து கொண்டதை மட்டும் சுட்டிக்காட்டி இவ்வாறு அவதூறு கிளப்புகிறார் பொய்கண்டன்.
இதில் குறிப்பாக ஒரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது,
பிரிட்டனோ அல்லது அமெரிக்காவோ அல்ல மாறாக சோவியத் யூனியன் தான் போரினால் அதிகம் இழப்படைந்த நாடு. ஆனால் சில நூறு வருடம் உலகம் முழுவதும் சுரண்டிக் கொழுத்த பிரிட்டன் இரண்டாம் உலகப் போரின் நிறைவில் தனது பொருளாதாரத்தை புனரமைத்துக் கொள்ள அமெரிக்காவின் உதவியை நாடியது. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரிட்டிஸ் காலனிய நாடுகளின் விடுதலை உள்ளது. ஆனால் முதல் உலகப் போர் முதல் தொடர்ந்து பல கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்த சோவியத் ரஸ்யா இரண்டாம் உலகப் போரின் பெரும் இழப்புகளுக்குப் பிறகும் கூட தனித்து நின்று வல்லரசாக மீண்டது, எந்த நாட்டையும் சுரண்டாமல். இந்த சாதனையைத்தான் நீலகண்டன் போன்ற பொய்யர்கள் அவதூறு புளுதி கிளப்பி மறைக்க முற்படுகிறார்கள். தெருப் புழுதியால் சூரியனை மறைக்க இயலுமா?
ஸ்டாலின் குறித்து அவதூறு பேசும் எந்த நாயும் இந்த அதிசயம் குறித்தும், ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருந்த பெரு மதிப்பு குறித்தும், மக்களை இயக்கி சாதனைகள் பலச் செய்ய செய்த உணர்வு நிலை என்ன என்பது குறித்தும் எதுவும் சொல்வதில்லை. நழுவி ஓடிவிடுகிறார்கள்.
ஸ்டாலின் குறித்தான அவதூறுகளை அங்கு விஜயம் செய்து பல இந்திய தலைவர்களூம் மறுத்துள்ளனர். ஆயினும் பொய்யிலே பிறந்த இவர்கள் தமது புரளிகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதில் மட்டும் கொஞ்சம் கூட சளைக்கவில்லை.
சரி இங்கு சுருக்கமாக ரஸ்யாவில் கடும் நெருக்கடியான சூழலில் வர்கக் போராட்டம் கைவிடப்பட்ட சூழல் எது என்பதையும். அது எப்படி எதிர் வர்க்கங்களின் கையில் அதிகாரத்தை ஒப்படைத்தது என்பதனையும் பார்ப்போம்.
ஸ்டாலினின் இரு தடுமாற்றங்கள் - தொடர் புரட்சி:
1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டாலின் கீழ்காணும் தொலை நோக்குமிக்க எச்சரிக்கையை விடுத்தார்:
"நாம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து ஐம்பது அல்லது ஒரு நூற்றாண்டு பின் தங்கியுள்ளோம். இந்த இடைவெளியை நாம் பத்தாண்டுகளில் நிரப்ப வேண்டும். ஒன்று நாம் இதைச் செய்தாக வேண்டும் அல்லது நாம் வீழ்ந்தாக வேண்டும். "
இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். அவர்கள் சோவியத்துடனான இறுதி மோதலுக்கான தயாரிப்புகளைச் செய்கிறார்கள். இந்த நெருக்கடியான பின்னணியில்தான் சோவியத் ரஸ்யாவில் எதிர் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஸ்டாலின் எடுத்துச் சென்ற விதம் குறித்து நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.
1933 இல் முதல் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. 1937-ல் இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. இவையணைத்தும் பல இன்னல்களையும், அனுபவக் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்ப்பட்ட இழப்புகளுடன் வெற்றியை அடைந்தன. இதற்க்கு காரணம் சாதாரண மக்கள் காட்டிய துணிச்சல் மிக்க வேலைப்பாணியே.
முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் ஸ்டாலின் அறிவிக்கிறார்:
"சோவியத் அரசு அதிகாரத்தின் வளர்ச்சி, செத்துக் கொண்டிருக்கும் வர்க்கங்களின் கடைசி எச்சங்களின் எதிர்ப்பை ஆழப்படுத்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவ்வர்க்கங்கள் செத்துக் கொண்டிருப்பதாலும் அவர்களது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாலுமே, அவர்கள் தாக்குதலின் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு கூர்மையான வடிவத்துக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள்.."
இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் நடுவில் மேற்சொன்னதை உறுதிப்படுத்தி எதிரிகளுக்கு எதிரான வர்க்க போராட்டத்தின் தேவையை உறுதிப்படுத்துகிறார் ஸ்டாலின்.
இந்நிலையில் 1936-ல் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது அனைவருக்கும் சம உரிமை வழங்கியது. அதாவது இரண்டாம் ஐந்தாண்டு திட்ட முடிவில் அவர் முந்தைய சமூகத்தின் எச்சங்கள் என்று கூறி சோவியத் மக்களை எச்சரிக்கை செய்ததையே மறந்துவிட்டு, எதிரிகள் இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் எல்லாருக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறார். இதன் மூலம் தான் கொடுத்த எச்சரிக்கைக்கு மாறாக அவரே நடந்து கொள்கிறார். அதாவது முந்தைய சமூகத்தின் எச்சமாகிய முதாளித்துவ ஆட்களுக்கு சம உரிமை கொடுக்கிறார். இதன் அர்த்தம் வர்க்க போரட்டத்தை கைவிடுவது என்பதுதான். இதன் அர்த்தம் எதிரிகளுக்கும் சம உரிமை கொடுப்பது என்பதாகும். இதன் அர்த்தம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவது என்பதாகும்.
இதன் விளைவாக கட்சிக்குள் அத்தனை பிற்போக்குவாதிகளும் ஊடுருவுகிறார்கள். இதனை விரைவிலேயே உணர்ந்து ஸ்டாலின் இதற்க்கெதிராக விழிப்புடன் இருக்குமாறு 1937-ல் எச்சரிக்கிறார். சோவியத்தின் அழிவுக்கு உள்ளிருந்து வேலை செய்பவர்கள் தனித்து நிற்ப்பதில்லை. இவர்களுக்கு எல்லைக்கு வெளீயே உள்ளா சோவியத்தின் பகைவர்கள் உதவுகிறார்கள் என்று எச்சரிக்கிறார்.
ஒரு யுத்த அபாயத்தை எதிர்கொண்ட நிலை, உள்நாட்டு சதிக்கெதிரான நெருக்கடி இவையணைத்தும் சேர்த்து சோவியத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் ஏற்ப்படுத்திய அழுத்ததின் விளைவுதான் ஸ்டாலினின் இந்த முதல் தடுமாற்றத்துக்கு காரணமாக அமைகிறது. இதே நேரத்தில் கட்சி முதல் பல இடங்களில் ஊடுருவிய எதிரிகளை உணர்கிறார் ஸ்டாலின். அதனை எதிர்கொள்வதற்க்கு அவர் கையாண்ட அதிகாரத்துவமான முறை இரண்டாவது தடுமாற்றமாக இருக்கிறது. இதன் விளைவாக ஏற்கனவே எதிரிகள் ஊடுருவியிருந்த போலிஸ் துறையின் கையில் எதிரிகளை ஒழிக்கும் பொறுப்பை ஒப்படைக்கப்படுகிறது. விளைவு எதிரிகள் உண்மையில் சோவியத்தின் நண்பர்களை ஒழிக்கிறார்கள்.
எங்கே தவறு நிகழ்கிறது?
1935 வரை லெனினியத்தின் பாதையில் நடை போட்ட ஸ்டாலின் ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்து ஏற்படுத்திய அழுத்தத்தின் விளைவால் தடுமாறுகிறார். இந்த விசயத்தில் சோவியத் ரஸ்ய பாட்டாளி வர்க்கம் செய்யத் தவறிய விசயம் மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே முந்தைய சமூகம் உருவாக்கிய இடைவேளியை குறைக்கும் முயற்சிகளில் போதிய கவனம் செலுத்தாமை ஆகும். இதனை நிறைவேற்றும் பண்பாட்டு புரட்சிக்கான அறைக்கூவலை லெனின் தனது கடைசிக் கட்டுரைகளில் ஒன்றில் எழுப்புகிறார். இதனை ஸ்டாலினும் கூட மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனால் பண்பாட்டு புரட்சிக்கான தேவை உணரப்பட்டதோடு நின்று விட்டது. ரஸ்ய பாட்டாளி வர்க்கம் சந்தித்த கடும் இன்னல்கள் அதனை அந்த திசையில் தொடர்ந்து பயணித்து பண்பாட்டு புரட்சியை செய்வதிலிருந்து திசை திருப்பி விட்டது. ஸ்டாலினின் முதல் தவறுக்குப் பிறகு அவர் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை களத்தில் இறக்கியிருந்தால் அதிகார வர்க்கத்தின் எதிர் புரட்சி நடவடிக்கைகள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் ஸ்டாலின் தவறு செய்வதற்கு வரலாறு அவருக்கு கொடுத்த வாய்ப்புகளுடன் ஒப்பிடும் போது தனது முதல் தவறை திருத்ததுவதற்க்கு வரலாறு அவருக்கு கொடுத்திருந்த வாய்ப்புகளின் அளவு வெகு சொற்பமே.
ஸ்டாலின் மக்களை அணி திரட்டி எதிர் புரட்சியாளர்களை வெல்வது என்பது நடக்க இயலாதது அல்ல. ஏனேனில் மக்களுக்கு அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை இல்லாமல் செய்வதில் பெரிய அளவில் வெற்றி பெற்ற மாவோ இந்த முறையில் மக்களை அணி திரட்டிதான் சீனாவில் அழிவு வேலை செய்ய முற்ப்பட்ட எதிர் புரட்சி கும்பல்களை முறியடித்தார்.
இவை காட்டுவது என்னவென்றால், பாட்டாளி வர்க்கம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தவுடன் புரட்சி நிறைவு பெறுவதில்லை என்பதைத்தான். மாறாக இன்னும் கோடூரமானதொரு உயரந்த வடிவத்திலான புரட்சிக்கு பாட்டாளி வரக்கம் தன்னை தாயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது என்பதைத்தான். வர்க்கங்கள் இந்த உலகில் இருக்கும் வரை ஒவ்வொரு வர்க்கத்தின் கருத்தும் ஏதோ ஒரு வகையில் கட்சியின் உள்ளே நிலவுவதை தவிர்க்க முடியாது. எனவே அவற்றுக்கு எதிரான போராட்டம் என்பதும் தவிர்க்க முடியாது. இது சோசலிச சமூகத்தை கம்யுனிச சமூகமாக வளர்த்தெடுக்கும் கால முழுவதிற்க்கும் பொருந்தும். இதனைத்தான் லெனினியமும் வலியுறுத்துகிறது. அதாவது தொடர் புரட்சி.
இதில் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தில் இருக்கிறதா இல்லையா என்ற வித்தியாசம் எதிரிகளுக்கெதிரான வன்முறையின் வடிவத்தையும், அரசுக்கும் மக்களுக்கு இடையிலான உறவை இயல்பானதாக மாற்றும் போராட்டத்தின் வடிவத்தையும் மாற்றுமே தவிர்த்து, வன்முறையையும், போராட்டத்தையும் முற்றிலும் விட்டொழித்து விடுவதில்லை. இன்னும் சொன்னால் அவற்றை இன்னும் மோசமானதாக்குகிறது. உண்மையில் புரட்சிக்கு பின்புதான் பாட்டாளி வர்க்கம் மிக நெருக்கடியான நிலையை சந்திக்கிறது.
இந்த காலகட்டத்தில் மக்களை அரசு நிர்வாகத்தில் பங்கு கொள்வது குறித்து அவர்களிடம் நிலவும் தேவையற்ற தயக்கம், அச்சம் இவற்றை களையச் செய்யும் வகையிலான பண்பாட்டு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது உயிராதாரமான ஒரு விசயமாக உள்ளது. குறுகிய காலத்தில் எதிர்புரட்சி கும்பலை முறியடித்த அதே வேளையில் இரு தடுமாற்றங்கள் மூலம் அவர்களை வேறு வடிவங்களில் நிலைபெறச் செய்த இந்த அம்சத்தில்தான் தோழர் ஸ்டாலின் மீது நாம் விமர்சனம் வைக்கிறோம். நாமும் பாடம் கற்றுக் கொள்கிறோம்.
ஸ்டாலின் எமது அதி உன்னத தோழர்:
ரஸ்யாவின் மீது அனைத்து ஏகாதிபத்தியங்களும் சுற்றி வளைத்து உள்நாட்டு சதிகளையும், எல்லையில் ஆக்கிரமிப்பு போர்களையும் செலுத்தியதும், இரண்டாம் உலகப் போர் நெருக்கடியையும், ரஸ்யாவில் ஏற்பட்ட பஞ்சத்தை ஒட்டிய பிரச்சனைகளையும் மனதில் கொண்டே ஸ்டாலினின் அந்த தவறுகளை அனுகுகிறோம்(மாபெரும் சதி). அதனால்தான் அவர் எமது பெருமைமிகு கம்யுனிச தலைவர்களில் ஒருவராக எம்மிடம் ந்லவுகிறார். இதனை குறிப்பிட்டுதான் ஜார்ஜ் தாம்சன் தனது "மார்க்ஸ் முதல் மாவோ வரை" புத்தகத்தில் சொல்கிறார்:
"இருபதைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவரது தலைமையின் கீழ் அதிகாரங்கள் மங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். வரலாற்றில் வேறு எந்த ராஜதந்திரியும் இத்தகைய ஒரு சுமையை இத்தனை காலம் சுமந்ததில்லை."
எமது தோழர் ஸ்டாலின் இன்றும் சுமக்கிறார். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதற்க்கு அவரது எதிரிகளால் அவரை முதுகில் குத்திதான் பழி வாங்க முடிந்தது. அதுவும் அவர் இறந்த பிற்ப்பாடு. அவர் எதில் வேண்டுமென்றாலும் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ரஸ்ய உழைக்கும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் அவர் தோல்வியடையவில்லை. குறுகிய காலத்தில் சோசலிசத்தை அவர் எந்தளவுக்கு வலிமையாக கட்டியமைத்திருந்தார் என்றால் அதனை அவர்கள் உடைத்து சிதைப்பதற்க்கு 40 வருடங்கள் தேவைப்படும் அளவுக்கு. இதோ அவரது இந்த சாதனைக்கு நிரூபனமாக இன்று ரஸ்யா மக்களின் ஆதர்ச நாயகராக ஸ்டாலின் நிற்கிறார். ரஸ்ய மக்களின் வெல்லற்கரிய மன உறுதியின் அடையாளமாக ஸ்டாலின் இன்று நினைவு கூறப்படுகிறார். மாறாக, ஸ்டாலின் கால வன்முறை என்று போலி வருத்தத்தை வெளிப்படுத்தும் கும்பலோ, அவரது சிலையை உடைத்து அவமானப்படுத்திய கருங்காலி கும்பலோ நாட்டை கூட்டிக் கொடுப்பதில் வெகு சிரத்தையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின் தொழிலாளி வர்க்கத்தின் உத்வேகத்திற்க்கான அடையாளமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கிறார்.
'தோழர் ஸ்டாலின்' - அவர் எதிரிகள் மீது செலுத்திய வன்முறை எமக்கு பெருமையளிப்பதே ஆகும். அதற்க்கு நாங்கள் உரிமை கொண்டாடுகிறோம். மக்கள் விரோதிகள்தான் அவரைக் கண்டு பயப்பட வேண்டும். நாங்கள் அவரை நெஞ்சார தழுவி நன்றி சொல்வோம், "இது வரை உலகில் எங்குமே நடந்திராத, உழைக்கும் வர்க்கம் மண்ணுலகில் சொர்க்கம் படைக்கும் என்ற வார்த்தையை நிருபித்துக் காட்டியமைக்காகவும், அதற்க்கு விலையாக பெரும் பழிகளையும், அவமானங்களையும் இன்று வரை சும்ந்துக் கொண்டிருப்பதற்க்காகவும்'.
அசுரன்
தொடர்புடைய சுட்டிகள்:
5 பின்னூட்டங்கள்:
அசுரன்,
உங்களை நட்சத்திரமாக தமிழ்மணத்தில் காண்பது மிக்க மகிழ்ச்சி.
இந்தவாரம் உங்கள் வலைபப்திவு பெரும் எண்ணிக்கையானோரின் கவனத்தை ஈர்க்கப்போவதால் மிக முக்கியமான, ஆழமான பல பதிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன்.
மார்க்சிய விஞ்ஞானத்தின் இன்றைய செல்நெறி தொடர்பாகவும், புதிய பல பரிசோதனைகள், பழைய கம்யூனிஸ்ட் அகிலத்துக்கு மாற்றாக முற்போக்காக உருவாகிவரும் மார்க்சிய புலமையாளர்களிடையேயான கருத்தாடல்கள் தொடர்பாக பல்தரப்பட்ட தளங்களுக்கான அறிமுகங்களையும் முடிந்தால் தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
மயூரன்,
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
//மார்க்சிய விஞ்ஞானத்தின் இன்றைய செல்நெறி தொடர்பாகவும், புதிய பல பரிசோதனைகள், பழைய கம்யூனிஸ்ட் அகிலத்துக்கு மாற்றாக முற்போக்காக உருவாகிவரும் மார்க்சிய புலமையாளர்களிடையேயான கருத்தாடல்கள் தொடர்பாக பல்தரப்பட்ட தளங்களுக்கான அறிமுகங்களையும் முடிந்தால் தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.//
நட்சத்திர வாரத்திற்க்கான கட்டுரைகளை முன்பே எழுதி தாயர் செய்து வைத்திருந்ததால் நீங்கள் குறிப்பிட்ட விசயங்கள் அடிப்படையிலான கட்டுரைகளை வழங்க இயலவில்லை.
மேலும், இங்கு தமிழ்மண சூழலில் கம்யுனிசத்தின் இன்றைய வளர்ச்சிப் போக்கு குறித்தான விவாதங்களை விட, கம்யுனிசம் குறித்து நிலவும் பல்வேறு தப்பபிப்ராயங்களை களைவதும், அதன் அடிப்படைகளை அறிமுகப்படுத்துவதும், கம்யுனிசம் நடைமுறைப் பிரச்சனைகளை வியாக்கியானம் செய்யும் வலிமையை அறிமுகப்படுத்துவதுமே தேவை என்று கருதுகிறேன்.
எனது மற்றய கட்டுரைகளை படித்து கருத்துச் சொல்லவும்.
அசுரன்
The Moscow Times RSS >> PDA >>
Wednesday, October 31, 2007 / Updated Moscow Time
News
Wednesday, October 31, 2007. Issue 3776. Page 1.
Ceremony at Butovo a First for Putin
By Anna Smolchenko
Staff Writer
Mikhail Metzel / AP
Putin hugging Alexy II while visiting the site at Butovo where tens of thousands of people were shot in the 1930s.
President Vladimir Putin paid a rare tribute to victims of Soviet-era repression Tuesday, using the opportunity to call for political pluralism and say that differing opinions should be able to coexist peacefully.
Putin's visit to a firing range in Butovo, in the south of Moscow, where more than 20,000 people were killed during the peak years of Stalin's terror in 1937 and 1938, was the first time he has attended ceremonies on the official day of remembrance for the victims of political repression.
It was also a rare attempt by the Kremlin to address Stalin-era crimes.
"Political disputes, battles and a struggle between opinions are necessary, but this process should be creative rather than destructive," Putin said, adding that such conflicts "should not leave the cultural and educational context."
Putin's address came minutes after he and Russian Orthodox Church Patriarch Alexy II had laid flowers at the foot of a small wooden cross at the site of mass graves.
The field containing the graves was the property of the FSB -- the successor agency to the feared NKVD and KGB -- before being handed over to the Orthodox Church in the mid-1990s.
Putin, himself a former FSB head, has in the past acknowledged the repressions as one of the worst episodes of the Soviet era, while apparently trying to cushion the blow by saying worse incidents have occurred in other countries.
On Tuesday, however, he skipped mention of other countries, focusing instead on the "colossal scale" of Russia's tragedy.
In a brief address to reporters, Putin said such tragedies "occur when ostensibly attractive but empty ideas are placed above the fundamental human values of rights and freedom."
He eulogized the victims as "people with their own opinions" and "the cream of the nation."
While an accurate number of those killed or sent to the camps by Stalin's regime remains a subject for argument, the Memorial human rights group puts the figure at 12.5 million.
Putin, who famously described the collapse of the Soviet Union as a "catastrophe," chose not to dwell too long on history Tuesday.
"While remembering this tragedy, we should focus on what is best in the country and unite our efforts for the country's development," he said.
Earlier, Putin attended a ceremony conducted by Alexy and lit a candle at the nearby Church of Christ's Resurrection and New Martyrs and Confessors.
"Mindboggling, this is incredible" he said, surveying a collection of photos of victims, Interfax reported. "Why?"
The resting place of more than 20,760 people, the Butovo firing range is the second-largest Soviet-era execution ground in Russia, according to Memorial. The largest is near St. Petersburg. Local priests say people from all walks of life were shot and buried at the site in the 1930s.
"There was a whole theatrical troupe from the Baltics executed here," said Deacon Dmitry, a priest at the church. He said people of 60 nationalities, including Japanese, Greeks and an Ethiopian, were buried there. The bodies were packed so tightly in 6-meter-deep trenches that as many as 60,000 might be buried there, he said.
Memorial services were held Tuesday across Russia, including outside the former KGB -- and now FSB -- headquarters on Lubyanskaya Ploshchad, where human rights organizations and others have traditionally gathered to mark the event.
Memorial's Yan Rachinsky said that even if Putin's motives were political and calculated for effect ahead of parliamentary elections in December, it was still positive that he had for the first time "not only celebrated the day of the Chekist, but also paid tribute to the victims of the Chekists." The term "Chekist" comes from the name of the first Soviet secret police.
Rachinsky, whose grandfather is buried at the site, said that although the state had acknowledged past atrocities, it has still shied away from responsibility and that many of the estimated 70,000 survivors of the camps struggle today to eke out a ragged existence.
Rostislav Kandaurov, the son of a priest buried at the site, said his family had not known what happened to his father for decades, and only learned of his fate in the early 1990s. His father, who stubbornly restored churches after the Soviets shut them down, was arrested in January 1937 and executed along with 500 other people on a day in February.
Kandaurov said FSB officials had helped him get lists identifying the victims.
He welcomed Putin's visit, saying that he wanted "as many people as possible to know about Butovo."
"The memory should be kept alive and people should know what happened," he said.
30. Oktober 2007 19:57
Anonym said...
Putin honors Stalin victims 70 years after terror
By Oleg Shchedrov Tue Oct 30, 1:53 PM ET
BUTOVO, Russia (Reuters) - Russian President Vladimir Putin paid his respects on Tuesday to millions of people killed under Soviet dictator Josef Stalin and called for the country to unite to prevent a repeat of its tragic past.
ADVERTISEMENT
Putin, a former KGB spy, marked Russia's annual day of remembrance for the victims of Stalin's purges with a visit to Butovo, a military training ground near Moscow where tens of thousands of people were executed by firing squads.
Millions were executed under Stalin and many more perished from abuse and disease in a vast network of prison camps, known as the Gulags.
Victims included priests and royalists but also huge numbers of people who were simply caught up in an indiscriminate spiral of killing. This year Russia marks the 70th anniversary of the bloodiest period of the purges.
Putin attended a memorial service with Patriarch Alexiy II, head of the Russian Orthodox Church, after passing a field criss-crossed with mass graves.
"We know very well that 1937 was the peak of the purges but this year was well prepared by years of cruelty," Putin said beside a mass grave after laying flowers at a memorial.
He said such tragedies "happen when ostensibly attractive but empty ideas are put above fundamental values, values of human life, of rights and freedom."
"Hundreds of thousands, millions of people were killed and sent to camps, shot and tortured," he said. "These were people with their own ideas which they were unafraid of speaking out about. They were the cream of the nation."
Historians estimate that between 20 million and 40 million died during Stalin's rule, tearing families apart and creating a climate of fear that haunted the Soviet Union.
A new history teaching manual partly authored by a top Putin strategist described Stalin as brutal, but also "the most successful leader of the USSR."
GREAT TERROR
Dozens of mainly older Russians laid flowers at a stone memorial outside the Moscow headquarters of the former KGB -- now the Federal Security Service -- to remember his victims.
Klavdia Suravykh came to see a small panel of photographs in memory of victims of Stalin's purges, and said she was the only survivor of a mass execution near Orlov, some 360 km (220 miles) south of Moscow, in 1941.
She said she lined up at the edge of a ditch with 300 other people. Gunfire killed her mother and everybody else, and the next line of victims fell on top of her.
"Everybody was killed there. Everybody. I was the only one..." she said, blinking back tears.
Stalin, who succeeded Vladimir Lenin, started a series of purges in the 1930s that became known as the Great Terror. The NKVD security service, the predecessor to the KGB, killed hundreds of thousands of people on trumped-up charges.
Butovo was just one of hundreds of killing grounds. More than 20,000 people are known to have been executed there between August 1937 and October 1938 alone.
(Additional reporting by Chris Baldwin)
30. Oktober 2007 20:03
ஸ்டலின் மீது அவதூறு கிளப்பி பிரச்சாரம் செய்யும் வேலையை ரஸ்யாவில் புடின் ஒன்றூம் புதிதாக ஆரம்பிக்கவில்லை. ஸ்டாலின் மறைந்த மறு நிமிடத்திலிருந்து ஆரம்பித்த வேலை அது. இது போன்ற புள்ளி விவரங்களின் மிகையான் பொய்களை அம்பலப்படுத்த பின் வரும் இணைப்பில் உள்ள கட்டுரை உதவும்.
ஸ்டாலின் அவதூறுகள் - அமெரிக்க உளவாளிகளா அல்லது நிரூபர்களா?
http://www.tamilcircle.net/unicode/puthiyakalacharam_book/book_2/book_25u.html
கிட்லரை வரலாற்றில் உருவாக்கியவர்கள் யார்?
http://tamilcircle.net/unicode/general_unicode/189_general_unicode.html
ஸ்டாலின் காலத்தில் நிகழ்ந்த இந்த கொலைகளைன் அளவை கோடிகளில் உயர்த்தி காட்டும் பொய்யும், இந்த கொலைகள் நடந்த காலகட்டம், அதன் வரலாற்று பின்புலத்தை மறைக்கும் பொய்களையும் நாம் மறுக்கிறோம். மேலும் ஸ்டாலினுடைய இந்த தவறை விமர்சிக்கிறோம். கீழே கட்டுரையின் சில பகுதிகளை ஒட்டியுள்ளேù அவற்றை படித்தால் இந்த வரலாற்று சம்பவங்களை நாம் எந்த அடிப்படையில் பார்க்கிறோம் என்பது புரியும்.
@@@@@@@@
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html
ஸ்டாலின் ஆட்சியின் தவறுகள் குறித்து நமக்கு பல்வேறு விமர்சனங்கள் இருப்பதையும், அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதையும் குறிப்பிடுகின்ற அதே வேளையில். இது குறித்து பல்வேறு இடங்களில், பின்னூட்டங்ளில், பதிவுகளில் எழுதியுள்ளோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஏனேனில் ஏதோ ஸ்டாலின் குறித்து இதுதான் முதல் முறையாக நாம் பேசுவதாக இவர்கள் சொல்லும் அபாயம் உள்ளது. ஸ்டாலின் மீதான எமது விமர்சனங்கள் ஏகாதிபத்தியவாதிகளோ அல்லது பிற்போக்குவாதிகளோ குறிப்பிடும் அம்சங்களில் அல்ல எனபதனை தெளிவாக குறிப்பிட்டு விடுகிறேன். இந்த விசயத்தையும் பல இடங்களில் குறிப்பிட்டும் உள்ளேன். இன்னும் சொன்னால் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள் ஜல்லியடிக்க துவங்கும் முன்பே கூட கம்யுனிஸ்டு கட்சியின் விமர்சனம் சுய விமர்சன முறைப்படி ஸ்டாலினை லெனின் விமர்சித்துள்ளார். ஸ்டாலினை மாவோகூட விமர்சித்துள்ளார். ஆனால் அவை விமர்சனம் செய்வது என்ற அம்சத்திலும் தவறுகளை திருத்த வேண்டும் என்ற அம்சத்திலுமே செய்யப்பட்டன. மாறாக பொய்களை கட்டியமைப்பதற்க்கான அடிப்படையாக அந்த விமர்சனங்கள் செய்யப்படவில்லை.
@@@@@@@@
@@@@@@@@@@@
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html
இங்கு லைசென்கோவின் அதிகார துஸ்பிரயோகம் நிகழ்த்திய பாதிப்புகளை ஸ்டாலினுக்கும், அதை லெனினுக்கும், பிறகு கம்யுனிசத்துக்கும் விரிவு படுத்தி பேசுகிறார் நீலகண்டன். ஆனால் பாதிக்கப்பட்ட தலைசிறந்த விஞ்ஞானிகளோ தனிமனித தவறுகளை கண்டிதத்தார்கள் ஆனால் சோசலிசத்தையோ இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையோ குறை சொல்லவில்லை இன்று வரை.
அன்றைய அறிவுஜீவி வர்க்கம் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் ஏகாதிபத்திய ஆட்களின் ஊடுருவல் மிகக் கடுமையாக இருந்தது. முதல் உலகப் போர், உள்நாட்டுப் போர், பஞ்சம், எல்லையில் யுத்த அபாயம், உள்நாட்டு சதி, இரண்டாம் உலகப் போர் இப்படி தொடர்ந்து கடும் நெருக்கடியிலேயே தன்னை வளர்த்து எந்த நாட்டையும் சுரண்டாமல் வல்லரசாகிய ரஸ்யாவின் இந்த கொடுமையான பாதையில் சில சறுக்கல்கள் நிகழ்ந்தன. ஏன், ஸ்டாலினுடைய மெய்காவலரையே கைது செய்து தண்டிக்கும் அளவுக்கு போனார்கள் கட்சிக்குள் ஊடுருவிய ஏகாதிபத்திய ஆதரவாளர்கள். ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் ஊடுருவியிருந்த தேச துரோகிகளை தண்டித்ததைத்தான் நீலகண்டன் இங்கு பிரதானப்படுத்துகிறார். ஆனால் இதே காரணத்திற்க்காகத்தான், அதாவது இந்த தவறுகளையும் மீறி சோசலிசத்தை எல்லா சதிகளையும் முறியடித்து நடைமுறைப்படுத்தியதற்காகத்தான் ஸ்டாலின் எமது தலைசிறந்த தலைவராக இருக்கிறார்.
சோவியத் ரஸ்யா உலகின் முதல் சோசலிச அரசு. சோசலிச அரசின் தவறுகள் இல்லாமல் இல்லை. தவறுகள் இல்லாமல் அந்த அரசில் முதலாளித்துவ பாதையாளர்கள் புகுந்திருக்க முடியாது. எனவே சோவியத் ரஸ்யா, சீன அனுபவங்களை நாங்கள் கம்யுனிஸ்டுகள் விமர்சனக் கண்ணோட்டத்துடன் தான் அனுகுகிறோம். இதன் அர்த்தம் அடிப்படையின்றி நிராகரிப்பதோ அல்லது அவதூறு தொடுப்பதோ அல்ல. மாறாக, ஒரு தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தவறுகளை களைவது என்ற அம்சத்திலேயே அவற்றைப் பார்க்கிறோம்.
@@@@@@@@@@@
@@@@@@@@@@@
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html
நீலகண்டனின் அந்த குறிப்பிட்ட கட்டுரையில் உள்ள பொய்கள், அரைப் பொய்கள், திரிக்கப்பட்ட கருத்துக்களை முடிந்தளவுஅம்பலப்படுத்தியாகிவிட்டது. சில விசயங்கள் ஏகாதிபத்திய புரளிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. கூகிளில் தேடினால் வரும் முதல் பத்து பக்கங்களில் லெனினின் பாலியில் ஒழுக்கம் முதல் மாவோவின் களி வெறியாட்டம் வரை பல மூன்றாம் தர பொய்கள் நீலகண்டனின் கட்டுரை தரத்திற்க்கு கடை பரப்பப்பட்டுள்ளன அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் வேறு எதுவும் உருப்படியாக செய்ய முடியாது.
மேலும் சோவியத் ரஸ்யாவும், சீனாவும் சத்தியமாக பண்டைய கால புனித ராம ராஜ்யம் அல்ல(:-))). அதாவது தவறுகளே நிகழாத கற்பனை தேசங்கள் அல்ல. அந்த தவறுகளை வைத்து அடிக்கப்படும் ஜல்லிகளை, அந்த நாடுகளின் சாதனைகளை முன்னுக்கு கொண்டு வந்துதான் எடை போட வேண்டியுள்ளது. இவையனைத்தையும் ஏற்கனவே கேடயம் பதிவில் தோழர் பாவேல் குறிப்பிட்டது போல வேறு பல முதலாளித்துவ அறிஞர்களின் எழுத்துக்களின் மூலமே கூட புரிந்து கொண்டால் அடிப்படையற்ற இந்த அவதூறுகளிலுள்ள பொய் தெரிய வரும்.
சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவையாக, எந்த ஒரு நாட்டையும் சுரண்டாமல் வல்லரசாகிய வெல்ல முடியா மக்கள் சக்தியை பார்த்துதான் சோசலிசத்தை நாம் எடை போடுகிறோம். இதனை சாதித்த சோசலிச உற்பத்தி முறையை பார்க்கிறோம். மாறாக இவையனைத்தையும் பற்றி எந்த ஒரு மூச்சும் விடாமல் பஞ்ச கால போட்டோ வை போட்டு வைத்து யாதார்த்தவாதம் என்ற பெயரில் குதர்க்கவாதம் பேசும் மனநோய் எமக்கு இல்லை.
@@@@@@@@@
@@@@@@
இரண்டாம் உலகப் போரில் வெளிநாட்டு எதிரிகளை வெற்றிகரமான செயல் தந்திரத்தின் மூலம் முறியடித்த ஸ்டாலின் உள்நாட்டு எதிரிகளை அவ்வாறூ முறியடிப்பதில் தோல்வியுற்றார். இது குறித்து ஒரு சின்ன சித்திரம்.
@@@@@@
@@@@@@@
1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டாலின் கீழ்காணும் தொலை நோக்குமிக்க எச்சரிக்கையை விடுத்தார்:
"நாம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து ஐம்பது அல்லது ஒரு நூற்றாண்டு பின் தங்கியுள்ளோம். இந்த இடைவெளியை நாம் பத்தாண்டுகளில் நிரப்ப வேண்டும். ஒன்று நாம் இதைச் செய்தாக வேண்டும் அல்லது நாம் வீழ்ந்தாக வேண்டும். "
இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். அவர்கள் சோவியத்துடனான இறுதி மோதலுக்கான தயாரிப்புகளைச் செய்கிறார்கள். இந்த நெருக்கடியான பின்னணியில்தான் சோவியத் ரஸ்யாவில் எதிர் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஸ்டாலின் எடுத்துச் சென்ற விதம் குறித்து நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.
1933 இல் முதல் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. 1937-ல் இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. இவையணைத்தும் பல இன்னல்களையும், அனுபவக் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்ப்பட்ட இழப்புகளுடன் வெற்றியை அடைந்தன. இதற்க்கு காரணம் சாதாரண மக்கள் காட்டிய துணிச்சல் மிக்க வேலைப்பாணியே.
முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் ஸ்டாலின் அறிவிக்கிறார்:
"சோவியத் அரசு அதிகாரத்தின் வளர்ச்சி, செத்துக் கொண்டிருக்கும் வர்க்கங்களின் கடைசி எச்சங்களின் எதிர்ப்பை ஆழப்படுத்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவ்வர்க்கங்கள் செத்துக் கொண்டிருப்பதாலும் அவர்களது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாலுமே, அவர்கள் தாக்குதலின் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு கூர்மையான வடிவத்துக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள்.."
இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் நடுவில் மேற்சொன்னதை உறுதிப்படுத்தி எதிரிகளுக்கு எதிரான வர்க்க போராட்டத்தின் தேவையை உறுதிப்படுத்துகிறார் ஸ்டாலின்.
இந்நிலையில் 1936-ல் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது அனைவருக்கும் சம உரிமை வழங்கியது. அதாவது இரண்டாம் ஐந்தாண்டு திட்ட முடிவில் அவர் முந்தைய சமூகத்தின் எச்சங்கள் என்று கூறி சோவியத் மக்களை எச்சரிக்கை செய்ததையே மறந்துவிட்டு, எதிரிகள் இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் எல்லாருக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறார். இதன் மூலம் தான் கொடுத்த எச்சரிக்கைக்கு மாறாக அவரே நடந்து கொள்கிறார். அதாவது முந்தைய சமூகத்தின் எச்சமாகிய முதாளித்துவ ஆட்களுக்கு சம உரிமை கொடுக்கிறார். இதன் அர்த்தம் வர்க்க போரட்டத்தை கைவிடுவது என்பதுதான். இதன் அர்த்தம் எதிரிகளுக்கும் சம உரிமை கொடுப்பது என்பதாகும். இதன் அர்த்தம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவது என்பதாகும்.
இதன் விளைவாக கட்சிக்குள் அத்தனை பிற்போக்குவாதிகளும் ஊடுருவுகிறார்கள். இதனை விரைவிலேயே உணர்ந்து ஸ்டாலின் இதற்க்கெதிராக விழிப்புடன் இருக்குமாறு 1937-ல் எச்சரிக்கிறார். சோவியத்தின் அழிவுக்கு உள்ளிருந்து வேலை செய்பவர்கள் தனித்து நிற்ப்பதில்லை. இவர்களுக்கு எல்லைக்கு வெளீயே உள்ளா சோவியத்தின் பகைவர்கள் உதவுகிறார்கள் என்று எச்சரிக்கிறார்.
ஒரு யுத்த அபாயத்தை எதிர்கொண்ட நிலை, உள்நாட்டு சதிக்கெதிரான நெருக்கடி இவையணைத்தும் சேர்த்து சோவியத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் ஏற்ப்படுத்திய அழுத்ததின் விளைவுதான் ஸ்டாலினின் இந்த முதல் தடுமாற்றத்துக்கு காரணமாக அமைகிறது. இதே நேரத்தில் கட்சி முதல் பல இடங்களில் ஊடுருவிய எதிரிகளை உணர்கிறார் ஸ்டாலின். அதனை எதிர்கொள்வதற்க்கு அவர் கையாண்ட அதிகாரத்துவமான முறை இரண்டாவது தடுமாற்றமாக இருக்கிறது. இதன் விளைவாக ஏற்கனவே எதிரிகள் ஊடுருவியிருந்த போலிஸ் துறையின் கையில் எதிரிகளை ஒழிக்கும் பொறுப்பை ஒப்படைக்கப்படுகிறது. விளைவு எதிரிகள் உண்மையில் சோவியத்தின் நண்பர்களை ஒழிக்கிறார்கள்.
எங்கே தவறு நிகழ்கிறது?
1935 வரை லெனினியத்தின் பாதையில் நடை போட்ட ஸ்டாலின் ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்து ஏற்படுத்திய அழுத்தத்தின் விளைவால் தடுமாறுகிறார். இந்த விசயத்தில் சோவியத் ரஸ்ய பாட்டாளி வர்க்கம் செய்யத் தவறிய விசயம் மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே முந்தைய சமூகம் உருவாக்கிய இடைவேளியை குறைக்கும் முயற்சிகளில் போதிய கவனம் செலுத்தாமை ஆகும். இதனை நிறைவேற்றும் பண்பாட்டு புரட்சிக்கான அறைக்கூவலை லெனின் தனது கடைசிக் கட்டுரைகளில் ஒன்றில் எழுப்புகிறார். இதனை ஸ்டாலினும் கூட மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனால் பண்பாட்டு புரட்சிக்கான தேவை உணரப்பட்டதோடு நின்று விட்டது. ரஸ்ய பாட்டாளி வர்க்கம் சந்தித்த கடும் இன்னல்கள் அதனை அந்த திசையில் தொடர்ந்து பயணித்து பண்பாட்டு புரட்சியை செய்வதிலிருந்து திசை திருப்பி விட்டது. ஸ்டாலினின் முதல் தவறுக்குப் பிறகு அவர் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை களத்தில் இறக்கியிருந்தால் அதிகார வர்க்கத்தின் எதிர் புரட்சி நடவடிக்கைகள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் ஸ்டாலின் தவறு செய்வதற்கு வரலாறு அவருக்கு கொடுத்த வாய்ப்புகளுடன் ஒப்பிடும் போது தனது முதல் தவறை திருத்ததுவதற்க்கு வரலாறு அவருக்கு கொடுத்திருந்த வாய்ப்புகளின் அளவு வெகு சொற்பமே.
ஸ்டாலின் மக்களை அணி திரட்டி எதிர் புரட்சியாளர்களை வெல்வது என்பது நடக்க இயலாதது அல்ல. ஏனேனில் மக்களுக்கு அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை இல்லாமல் செய்வதில் பெரிய அளவில் வெற்றி பெற்ற மாவோ இந்த முறையில் மக்களை அணி திரட்டிதான் சீனாவில் அழிவு வேலை செய்ய முற்ப்பட்ட எதிர் புரட்சி கும்பல்களை முறியடித்தார்.
இவை காட்டுவது என்னவென்றால், பாட்டாளி வர்க்கம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தவுடன் புரட்சி நிறைவு பெறுவதில்லை என்பதைத்தான். மாறாக இன்னும் கோடூரமானதொரு உயரந்த வடிவத்திலான புரட்சிக்கு பாட்டாளி வரக்கம் தன்னை தாயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது என்பதைத்தான். வர்க்கங்கள் இந்த உலகில் இருக்கும் வரை ஒவ்வொரு வர்க்கத்தின் கருத்தும் ஏதோ ஒரு வகையில் கட்சியின் உள்ளே நிலவுவதை தவிர்க்க முடியாது. எனவே அவற்றுக்கு எதிரான போராட்டம் என்பதும் தவிர்க்க முடியாது. இது சோசலிச சமூகத்தை கம்யுனிச சமூகமாக வளர்த்தெடுக்கும் கால முழுவதிற்க்கும் பொருந்தும். இதனைத்தான் லெனினியமும் வலியுறுத்துகிறது. அதாவது தொடர் புரட்சி.
@@@@@@@@@
@@@@@@@
பிரிட்டனோ அல்லது அமெரிக்காவோ அல்ல மாறாக சோவியத் யூனியன் தான் போரினால் அதிகம் இழப்படைந்த நாடு. ஆனால் சில நூறு வருடம் உலகம் முழுவதும் சுரண்டிக் கொழுத்த பிரிட்டன் இரண்டாம் உலகப் போரின் நிறைவில் தனது பொருளாதாரத்தை புனரமைத்துக் கொள்ள அமெரிக்காவின் உதவியை நாடியது. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரிட்டிஸ் காலனிய நாடுகளின் விடுதலை உள்ளது. ஆனால் முதல் உலகப் போர் முதல் தொடர்ந்து பல கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்த சோவியத் ரஸ்யா இரண்டாம் உலகப் போரின் பெரும் இழப்புகளுக்குப் பிறகும் கூட தனித்து நின்று வல்லரசாக மீண்டது, எந்த நாட்டையும் சுரண்டாமல். இந்த சாதனையைத்தான் நீலகண்டன் போன்ற பொய்யர்கள் அவதூறு புளுதி கிளப்பி மறைக்க முற்படுகிறார்கள். தெருப் புழுதியால் சூரியனை மறைக்க இயலுமா?
ஸ்டாலின் குறித்து அவதூறு பேசும் எந்த நாயும் இந்த அதிசயம் குறித்தும், ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருந்த பெரு மதிப்பு குறித்தும், மக்களை இயக்கி சாதனைகள் பலச் செய்ய செய்த உணர்வு நிலை என்ன என்பது குறித்தும் எதுவும் சொல்வதில்லை. நழுவி ஓடிவிடுகிறார்கள்.
ஸ்டாலின் குறித்தான அவதூறுகளை அங்கு விஜயம் செய்து பல இந்திய தலைவர்களூம் மறுத்துள்ளனர். ஆயினும் பொய்யிலே பிறந்த இவர்கள் தமது புரளிகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதில் மட்டும் கொஞ்சம் கூட சளைக்கவில்லை.
@@@@@@@@
@@@@@@@@
ரஸ்யாவின் மீது அனைத்து ஏகாதிபத்தியங்களும் சுற்றி வளைத்து உள்நாட்டு சதிகளையும், எல்லையில் ஆக்கிரமிப்பு போர்களையும் செலுத்தியதும், இரண்டாம் உலகப் போர் நெருக்கடியையும், ரஸ்யாவில் ஏற்பட்ட பஞ்சத்தை ஒட்டிய பிரச்சனைகளையும் மனதில் கொண்டே ஸ்டாலினின் அந்த தவறுகளை அனுகுகிறோம்(மாபெரும் சதி). அதனால்தான் அவர் எமது பெருமைமிகு கம்யுனிச தலைவர்களில் ஒருவராக எம்மிடம் ந்லவுகிறார். இதனை குறிப்பிட்டுதான் ஜார்ஜ் தாம்சன் தனது "மார்க்ஸ் முதல் மாவோ வரை" புத்தகத்தில் சொல்கிறார்:
"இருபதைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவரது தலைமையின் கீழ் அதிகாரங்கள் மங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். வரலாற்றில் வேறு எந்த ராஜதந்திரியும் இத்தகைய ஒரு சுமையை இத்தனை காலம் சுமந்ததில்லை."
எமது தோழர் ஸ்டாலின் இன்றும் சுமக்கிறார். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதற்க்கு அவரது எதிரிகளால் அவரை முதுகில் குத்திதான் பழி வாங்க முடிந்தது. அதுவும் அவர் இறந்த பிற்ப்பாடு. அவர் எதில் வேண்டுமென்றாலும் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ரஸ்ய உழைக்கும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் அவர் தோல்வியடையவில்லை. குறுகிய காலத்தில் சோசலிசத்தை அவர் எந்தளவுக்கு வலிமையாக கட்டியமைத்திருந்தார் என்றால் அதனை அவர்கள் உடைத்து சிதைப்பதற்க்கு 40 வருடங்கள் தேவைப்படும் அளவுக்கு. இதோ அவரது இந்த சாதனைக்கு நிரூபனமாக இன்று ரஸ்யா மக்களின் ஆதர்ச நாயகராக ஸ்டாலின் நிற்கிறார். ரஸ்ய மக்களின் வெல்லற்கரிய மன உறுதியின் அடையாளமாக ஸ்டாலின் இன்று நினைவு கூறப்படுகிறார். மாறாக, ஸ்டாலின் கால வன்முறை என்று போலி வருத்தத்தை வெளிப்படுத்தும் கும்பலோ, அவரது சிலையை உடைத்து அவமானப்படுத்திய கருங்காலி கும்பலோ நாட்டை கூட்டிக் கொடுப்பதில் வெகு சிரத்தையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்டாலின் தொழிலாளி வர்க்கத்தின் உத்வேகத்திற்க்கான அடையாளமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கிறார்.
'தோழர் ஸ்டாலின்' - அவர் எதிரிகள் மீது செலுத்திய வன்முறை எமக்கு பெருமையளிப்பதே ஆகும். அதற்க்கு நாங்கள் உரிமை கொண்டாடுகிறோம். மக்கள் விரோதிகள்தான் அவரைக் கண்டு பயப்பட வேண்டும். நாங்கள் அவரை நெஞ்சார தழுவி நன்றி சொல்வோம், "இது வரை உலகில் எங்குமே நடந்திராத, உழைக்கும் வர்க்கம் மண்ணுலகில் சொர்க்கம் படைக்கும் என்ற வார்த்தையை நிருபித்துக் காட்டியமைக்காகவும், அதற்க்கு விலையாக பெரும் பழிகளையும், அவமானங்களையும் இன்று வரை சும்ந்துக் கொண்டிருப்பதற்க்காகவும்'.
@@@@@@@@
தோழர் ஸ்டாலினை தவறாக சித்தரிக்கும் கலைஞர் டிவியை புறக்கணிப்போம்!
http://athikalai.wordpress.com/2011/03/31/kalaiger-tv/
Post a Comment