TerrorisminFocus

Thursday, April 12, 2007

அவை நாயல்ல, MNCக்களின் விற்பனை பிரதிநிதிகள்!!

தெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா?


பெங்களூரில், கடந்த டிசம்பரில் 8 வயது சிறுமி வெறி பிடித்த தெரு நாய்களால் கடித்துக் கொல்லப்பட்ட செய்தி மனிதாபிமானம் உள்ள எவரையும் கலங்கச் செய்து விடும். காட்டில் வாழும் சிங்கம், புலி போன்ற கொடூர விலங்குகள் கூட்டாகச் சேர்ந்து மான்களை வேட்டையாடுவது போல, இந்தச் சிறுமியை நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்துக் குதறியுள்ளன. பெயிண்டராக வேலை பார்க்கும் தனது தந்தையை உணவருந்த அழைக்கச் சென்ற சிறுமி ஸ்ரீதேவி இப்படி நாய்களிடம் மாட்டிக் கொண்டதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் செய்வதறியாமல் திகைத்தனர். கற்களைத் தூக்கியெறிவதைத் தவிர அவர்களால் அந்த வெறிநாய்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. வெறிபிடித்த நாய்களோ சிறுமியைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டுத்தான் அகன்றன.


தகவல் தொழில்நுட்பத் துறையின் சொர்க்கமாக விளங்கும் பெங்களூரில், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சந்திரா லேஅவுட் பகுதியில் காலை 7.30 மணிக்கு நடந்த இந்தக் கொடூரம் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது. சமீபத்தில் கொடைக்கானலிலும் இது போன்றே ஒரு சிறுவனை நாய்கள் கூட்டமாகக் கடித்துக் குதறின. சில மாதங்களுக்கு முன்பு இதே பெங்களூரில் 16 பேரை ஒரு நாய் கடித்தது; மணிப்பூரில் ஒரே சமயத்தில் 18 பேர் நாய் கடித்தததால் ""ரேபிஸ்'' நோய் தாக்கி உயிரிழந்தனர். சேலத்திலும் ஒரு சிறுவன் நாய் கடித்து உயிரிழந்தான். கோவைசெல்வபுரத்தைச் சேர்ந்த அஜீத் என்ற சிறுவன் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு மாண்டு போனான். கோத்தகிரியைச் சேர்ந்த நாகராஜ் என்ற சிறுவன் தெரு நாய்களால் வேட்டையாடப்பட்டு நீண்ட சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துள்ளான். இப்படி நாய்க் கடியால் மக்கள் அவதியுறும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இவையெல்லாம் பத்திரிக்கைச் செய்திகளில் வந்தவை மட்டுமே; இன்னும் செய்திகளில் வராத எத்தனையோ நாய்க்கடிகளும், அதனால் மக்கள் படும் அவதிகளும் தினமும் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் மாதம் ஒன்றிற்கு மட்டும் குறைந்தது 5000 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் நாய்கடிக்கு சிகிச்சை தரப்படுகிறது. ஆனால், அரசின் கணக்குகளில் வராத எத்தனையோ நாய்கடிகளும், அரசு மருத்துவமனைகளில் மருந்தின்றி கைவிடப்பட்டவர்களும் ஏராளம்.

நாய்க்கடியில் அடிக்கடி மாட்டிக் கொள்பவர்கள், பெரும்பாலும் உழைக்கும் ஏழை, நடுத்தர மக்களே. இரவு வேலைக்குச் சென்று திரும்பும் உழைப்பாளிகளும், பள்ளிக்கோ, வேலைக்கோ சென்று திரும்பும் அவர்களது குழந்தைகளுமே. இப்படி நாய்களிடம் கடி வாங்கி அல்லற்படுகின்றனர்.

இப்படி நாளுக்கு நாள் பெருகிவரும் நாய்களின் தொல்லை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பெங்களூரின் தென்பகுதி சுகாதார அதிகாரி நாகராஜ் என்பவர் ""மக்கள் தெருக்களில் குப்பைகளைக் கொட்டுவதும், அனுமதி இல்லாத இறைச்சிக் கடைகள் அதிகரித்துள்ளதும் நாய்கள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளன'' என்கிறார். பெங்களூர் மாநகர கமிஷனர் ஒருபடி மேலே போய், ""மக்களுக்கு சமூக அக்கறை வேண்டும், சாலையோரங்களில் கழிவுகளைக் கொட்டுவது கூடாது, சட்ட விரோதமாய் இயங்கும் இறைச்சிக் கடைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்'' என்று பழியை மக்கள் மீதே சுமத்துகின்றõர்.

தமிழகத்தில் ""சிக்குன் குன்யா'' நோய் பரவிய போது மக்களிடம் உள்ள சுகாதாரக் கேட்டினால்தான் நோய் பரவிவிட்டதாகக் கதைவிட்ட அரசின் அதே திமிர்த்தனம் இப்போது நாய்க்கடியினால் மக்கள் அவதிப்படும்போதும் வெளிப்படுகின்றது.

இப்படிப் பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு ஏன் முன்வரவில்லை? நகரங்களில் பெருகிவரும் தெரு நாய்களுக்குக் காரணம், மக்களா? அல்லது அதைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசா?

இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் லட்சக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிவதும், அவை கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகுவதும் மக்களின் நகர வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றி வருகின்றன.

முன்பெல்லாம் முனிசிபாலிட்டி நாய் வண்டி வந்து எல்லா தெரு நாய்களையும் பிடித்துச் சுருக்கு மாட்டியோ, நச்சுப் புகை கொடுத்தோ கொன்று விடுவர். ஆனால் இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லையே, ஏன்?

நாய்களின் மேல் அக்கறை கொண்ட ""ப்ளூ கிராஸ்'' போன்ற மிருகாபிமான தன்னார்வ நிறுவனங்கள் தெரு நாய்களைக் கொல்லாமல் அவற்றுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் அவற்றைப் பெருக விடாமல் தடுத்துவிடலாம் என்று அரசிடம் பரிந்துரைத்துச் செயல்படுத்தி வருகின்றன. கொக்கின் தலையில் வெண்ணை வைத்த கதையாக, பிடித்த நாயைக் கொல்லாமல், குடும்ப கட்டுப்பாடு செய்து வரும் இவர்களிடம் பிடிபடாத நாய்களில் ஒன்று, வருடத்திற்கு 10 முதல் 15 குட்டி போடுவதும், குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு தெருவில் விடப்படும் நாய்கள் மக்களைக் கடிப்பதும் தெரியாதா?

குளிர்சாதனம் செய்யப்பட்ட வண்டியில், ஏதாவதொரு பகுதிக்குச் சென்று நாய்களைப் பிடித்து கு.க. செய்து தெருவில் விட்டுவிட்டுக் கணக்கு காட்டும் இந்தத் தன்னார்வக் குழுக்களிடம் நாய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பினை ஒப்படைத்ததை மறைக்கவே அரசும் அதிகாரிகளும் மக்களின் மேல் பழி போடுகின்றனர்.

இப்படி கு.க. செய்யும் முறை பயன் தராது என்று சென்ற நூற்றாண்டிலேயே நிரூபிக்கப்பட்டும், நாய்களின் மேல் உள்ள ""கருணை''க்காக ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்கு டாலர் கருணை காட்டுவதால், அதனைக் கைவிட இந்த தன்னார்வக் கூலி நிறுவனங்கள் மறுக்கின்றன. குளுகுளு நட்சத்திர ஓட்டல்களில் கூட்டம் நடத்தித் தங்களது மிருகாபிமானத்தை வெளிப்படுத்தும் இவர்களிடம் மனிதாபிமானத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?


நாய்க்குப் பிறந்த NGOக்களின் போலி மனிதாபிமானம் - டாலரால் குளிப்பாட்டப்பட்ட மேட்டுக் குடி நாய்கள்


இன்றைக்கு உலகமயமாக்கலினால் கிராமங்களில் வேலையும், நிலமும் இழந்து நகரங்களை நோக்கி ஓடிவந்து, ஒருவேளை சோற்றுக்கே அல்லாடி, தினக்கூலியாய், கொத்தடிமையாய் மக்களே கவனிப்பாறின்றி கிடக்கும்போது நாய்களை யார் கவனிப்பது? இப்படி கவனிப்பாரற்று தெருவில் விடப்படும் நாய்கள்தான் பல்கிப் பெருகுகின்றன. இப்படி தெருவுக்கு வரும் ஒரு நாயின் மூன்றாவது தலைமுறை, முழுமையாக மனிதனிடமிருந்து பிரிந்து, அதனுள் இருக்கும் விலங்கின் குணம் அதிகரித்து, வீட்டு விலங்காக இல்லாமல் காட்டு விலங்காக மாறி விடுகின்றது.

இப்படி காட்டு விலங்காகிவிட்ட தெரு நாய்கள் கூட்டமாக வாழ்வதும், காட்டு விலங்குகள் போலவே நடந்து கொள்வதும் இன்றைக்குப் பல நகரங்களில் காண முடியும். சிறுமி ஸ்ரீதேவியைக் கூட்டமாக வேட்டையாடிய நாய்களுக்குக் கண்டிப்பாக வீட்டு விலங்கின் தன்மை இல்லை. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தின் புதர்க்காடுகளில் உள்ள மான்குட்டிகளை நாய்கள் கூட்டமாகச் செயல்பட்டு வேட்டையாடுவதும் அதிகரித்துள்ளது.

காட்டு விலங்குகள் நாட்டிற்குள் வந்து மக்களைத் தொல்லைப்படுத்தினால் அவற்றைக் கொன்றொழிப்பதுதானே அரசின் கடமை! அதனை அரசாங்கம் செய்யாமல் இருப்பது ஏன்? அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

உலகிலேயே நாய்க்கடிக்கு அதன்மூலம் பரவும "ரேபிஸ்' என்ற கொடிய நோய்க்கு பெருமளவில் பலியாகும் மக்களைக் கொண்ட நாடு, நமது நாடு. இங்கு ஏற்கெனவே மலிவு விலையில் கிடைத்து வந்த "ரேபிஸ்' தடுப்பு மருந்தை இதே தன்னார்வக் குழுக்கள் மூலம் நிறுத்தியாகி விட்டது. போதாக்குறைக்குக் காப்புரிமைச் சட்டமும் திருத்தப்பட்டு விட்டது. இனிமேல் நாய்க்கடிக்கு பன்னாட்டு நிறுவனங்கள்தான் மருந்து தரவேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ. 300 முதல் ரூ. 1000 வரை விற்கப்படுகின்றது.

இப்படி உலகிலேயே "ரேபிஸ்' மருந்து அதிகமாக விற்பனையாகும் மிகப் பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இங்கே நாய்க்கடிகள் குறைந்தால் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் லாபம் குறையும். இங்கே நாய்களே இல்லையென்றால் அவர்கள் கடையை மூடிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!

நமது நாட்டு மக்களின் சாவில் லாபம் பார்க்கக் காத்திருக்கும் வல்லூறுகளாக இந்தப் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் உள்ளன. அந்நிறுவனங்கள் தரும் எச்சில் காசில்தான் இந்தத் தன்னார்வக் குழுக்கள் தங்களது மிருகாபிமானத்தைக் காட்டுகின்றன. இக்குழுக்களை நம்பித்தான் நாய்களுக்கு கு.க. செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பினை அரசு ஒப்படைத்துள்ளது. நகராட்சிகளின் நிர்வாக ஆணையம் இதற்காக ஐந்து கோடியே எழுபத்தெட்டு லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாக நாட்டு மக்களின் உயிரை இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளிடம் அடகு வைத்துவிட்டது இந்த அரசு.

மறுகாலனியாக்கம் தோற்றுவித்த பயங்கரத்தால் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாய்படாத பாடாகி விட்டது. வீட்டு விலங்குகள் இயல்பு நிலை பிறழ்ந்து காட்டு விலங்குகளாக மாறி மக்களைக் கடித்துக் குதறி அச்சுறுத்துகின்றன. வெறிபிடித்த தெருநாய்களை அடித்துக் கொல்வது மட்டுமல்ல; அதற்கு முன்பாக ஏகாதிபத்திய மறுகாலனியாக்க வெறி நாய்களையும் அவற்றின் எடுபிடிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கான பெரும் புரட்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டியுள்ளது.


அழகு


Lattest:

#1) The Hindu

#2) நாய்க்கடிக்கு மேலும் ஒரு பெங்களூர் சிறுவன் பலி.


#3) ஹைதாராபாத் கல்லூரிக்குள் இளம் பெண்களை வேட்டையாடிய நாய்கள்(நிஜ நாய்கள்).

8 பின்னூட்டங்கள்:

said...

////// "ரேபிஸ்' என்ற கொடிய நோய்க்கு பெருமளவில் பலியாகும் மக்களைக் கொண்ட நாடு, நமது நாடு. இங்கு ஏற்கெனவே மலிவு விலையில் கிடைத்து வந்த "ரேபிஸ்' தடுப்பு மருந்தை இதே தன்னார்வக் குழுக்கள் மூலம் நிறுத்தியாகி விட்டது. போதாக்குறைக்குக் காப்புரிமைச் சட்டமும் திருத்தப்பட்டு விட்டது. இனிமேல் நாய்க்கடிக்கு பன்னாட்டு நிறுவனங்கள்தான் மருந்து தரவேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ. 300 முதல் ரூ. 1000 வரை விற்கப்படுகின்றது.இப்படி உலகிலேயே "ரேபிஸ்' மருந்து அதிகமாக விற்பனையாகும் மிகப் பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இங்கே நாய்க்கடிகள் குறைந்தால் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் லாபம் குறையும். இங்கே நாய்களே இல்லையென்றால் அவர்கள் கடையை மூடிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!நமது நாட்டு மக்களின் சாவில் லாபம் பார்க்கக் காத்திருக்கும் வல்லூறுகளாக இந்தப் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் உள்ளன. அந்நிறுவனங்கள் தரும் எச்சில் காசில்தான் இந்தத் தன்னார்வக் குழுக்கள் தங்களது மிருகாபிமானத்தைக் காட்டுகின்றன. இக்குழுக்களை நம்பித்தான் நாய்களுக்கு கு.க. செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பினை அரசு ஒப்படைத்துள்ளது. நகராட்சிகளின் நிர்வாக ஆணையம் இதற்காக ஐந்து கோடியே எழுபத்தெட்டு லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. //////நாலு கால் நாய்களை வைத்து இரண்டு கால் நாய்கள் தொப்பை வளர்ப்பதை நினைக்க, நினைக்க ஜிவ்வுன்னு ஏறுது வெறி! எனக்கும்!!!

/// வெறிபிடித்த தெருநாய்களை அடித்துக் கொல்வது மட்டுமல்ல; அதற்கு முன்பாக ஏகாதிபத்திய மறுகாலனியாக்க வெறி நாய்களையும் அவற்றின் எடுபிடிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கான பெரும் புரட்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டியுள்ளது. ///

நிச்சயமாக..

said...

நாய்களை முன்பெல்லாம் பிடித்துபோய் கொன்று விடுவார்கள் அதையும்

புளுகிராஸ் கெடுத்துட்டான்க

நாய்க்கு குடும்ப கட்டுபாடு செய்வதாக சொல்லி

said...

//அவை நாயல்ல, MNCக்களின் விற்பனை பிரதிநிதிகள்!! //

:-)))

---
இந்த போலி மனிதாபிமானக் கும்பல் ரோட்டில் சும்மா இப்படி அட்டையைப் பிடித்து நிற்பதற்குப் பதில் ஒரு தெருவில் உள்ள குப்பையைச் சுத்தம் செய்து , அந்த தெருவில் உள்ள மற்ற நாய்களுக்கு குப்பையை எங்கே போடுவது என்று சொல்லித்தரலாம்.
---

பைரவராக இருந்தாலும் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால்தான் நல்லது.

said...

//நாய்களின் மேல் அக்கறை கொண்ட ""ப்ளூ கிராஸ்'' போன்ற மிருகாபிமான தன்னார்வ நிறுவனங்கள் தெரு நாய்களைக் கொல்லாமல் அவற்றுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் அவற்றைப் பெருக விடாமல் தடுத்துவிடலாம் என்று அரசிடம் பரிந்துரைத்துச் செயல்படுத்தி வருகின்றன. கொக்கின் தலையில் வெண்ணை வைத்த கதையாக, பிடித்த நாயைக் கொல்லாமல், குடும்ப கட்டுப்பாடு செய்து வரும் இவர்களிடம் பிடிபடாத நாய்களில் ஒன்று, வருடத்திற்கு 10 முதல் 15 குட்டி போடுவதும், குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு தெருவில் விடப்படும் நாய்கள் மக்களைக் கடிப்பதும் தெரியாதா//

ஜீவகாருண்யம் என்பது மனிதர்களைத் தவிர்த்து உள்ள ஜீவர்கள் மேல் தான் என்பது போன்ற போக்கு இப்போது பரவி வருகிறது. இன்றைக்கு ஒரு சின்ன பிரிவினர் மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் அதிகம் சம்பாதிப்பதும் அதன் மூலம் பல்வேறு கழிசடைத்தனங்களை பன்புகளாகப் பெற்று இருப்பதன் விளைவு தான் இது.ஆயிரம் அயோக்கியத்தனம் செய்தவனும் பிச்சைக்காரனுக்கு 'தருமம்' செய்து விட்டு சமூக முதுகரிப்பை சொரிந்து கொள்வதைப் போன்றது தான் இதுவும். தங்கள் குற்றவுணர்வுகளைத் தனித்துக் கொள்ள தெருநாயைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் இவர்கள்.

தமிழரங்கத்தின் கட்டுரையை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி!

said...

//நாலு கால் நாய்களை வைத்து இரண்டு கால் நாய்கள் தொப்பை வளர்ப்பதை நினைக்க, நினைக்க ஜிவ்வுன்னு ஏறுது வெறி! எனக்கும்!!!//

வருகைக்கு நன்றி லிவிங் ஸ்மைல்

//புளுகிராஸ் கெடுத்துட்டான்க

நாய்க்கு குடும்ப கட்டுபாடு செய்வதாக சொல்லி ///

கவித.... நல்லாத்தானுருக்கு


*****
பலூன் மாமா கல்வெட்டுவின் வருகைக்கு நன்றி


//ஆயிரம் அயோக்கியத்தனம் செய்தவனும் பிச்சைக்காரனுக்கு 'தருமம்' செய்து விட்டு சமூக முதுகரிப்பை சொரிந்து கொள்வதைப் போன்றது தான் இதுவும். தங்கள் குற்றவுணர்வுகளைத் தனித்துக் கொள்ள தெருநாயைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள் இவர்கள்.
//

ராஜவனஜ்ஜின் வருகைக்கு நன்றி

said...

http://www.epw.org.in/showArticles.php?root=2007&leaf=03&filename=11231&filetype=pdf

said...

ரேபிசுக்கு பயந்து மட்டும் நாயை கொல்வது குறித்து இங்கு பேசவில்லை. நாயிடம் கடிபட்டு வயிற்றில் ஊசி குத்திக் கொல்லும் கொடுமைக்கும் சேர்த்து பயந்தும், நாய்களுக்கு சேரி குழந்தைகள் பலியாவதை தடுக்கவுமே நாய்களைக் கொல்வதை ஆதரிக்கிறேன்.

இது நாள் வரை நாய்க்கடி ஒரு பெரிய பிரச்சனையாக இருந்ததில்லையே? ஏன் இப்பொழுது மட்டும் அதன் எண்ணிக்கை பெருகி இவ்வளவு சிக்கல்?

நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து பேசினால் ஏதோ நாய்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட சொல்வதாக கற்பனை செய்து கொண்டு பேசுகீறார்கள். நாய்கள் முன்பும் இருந்தன, இப்பொழுதும் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டன. காரணம் ABC திட்டத்தின் வெற்றி(பின்ன ABC திட்டம் என்பதே நாய்களின் எண்ணிக்கையை பெருக்கி நாய்க்கடி படுபவர்களின் எண்ணிக்கையை பெருக்கி, மருந்து விற்பனையை பெருக்கும் திட்டம்தானே? அதன்படி திட்டம் வெற்றிதான்).

ஆனால் நாய்களை கொன்று தீர்வு கண்ட நாடுகள் பல உள்ளன. மனுசனுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க துப்பில்லாத அரசாங்கத்தை வீனே ஏன் நாய்களூகு கு.பா செய்யும் வேலையில் ஈடுபடுத்த வேண்டும்? செய்ய ஆயிரம் வேலை இருக்கும் பொழுது நாய்களின் குஞ்சை பிடித்துக் கொண்டு அலைவதற்க்கு கோடிக்கணக்கில் செலவழிப்பது அடி முட்டாள்தனம்.

நாய்கள் ஏழைகளின் நண்பன் என்று பாசம் வேறு பொத்துக் கொண்டு வழிகிறது. எதுவும் ஒரு அளவுக்குத்தான். அளவுக்கு மீறினால் நஞ்சுதான். இதையே இயக்கவியல் பானியில் சொல்ல வேண்டுமென்றால் அளவு மாற்றம் பண்பு மாற்றம்(Quantitative change is Qualitative Change).

மற்றபடி அந்த EPW கட்டுரையில் புதுசா ஒரு விசயமும் இல்லை. எல்லா NGO நாய்களும் பத்திரிக்கைகளில் வாந்தியெடுத்த அதே விசயத்தைத்தான் EPW கட்டுரையும் சொல்கீறது.

அதாவது நாய்களை கொல்வதனால் மனுசன் தன்னோட மனுசத் தன்மையை இழந்து விடுகிறானாம்? அடப்போடாங்கொம்மா... லட்சக்கணக்கில் விவசாயிகள் கொல்லப்படுகிறார்க்ள் அதில் கெட்டுப்போகாத மனுசத் தன்மை நாய்கள் கொல்லப்படுவதில் செத்துப் போவதாக வருத்தப்பட்டு எழுதுகிறார் அந்த மேட்டுக் குடி அடிவருடி. வாங்கிய துட்டுக்கு நல்லா வக்கனையா எழுதிருக்காரு. நாய்கள கொல்லப்படுவதிலிருந்து காப்பதில்தான் நமது நாகரிகம் ஒழிந்துள்ளதாம். இவர்கள் இருப்பது இந்தியாவிலா அல்லது வேறு நாட்டிலா? மனிதனின் உரிமைகளே மதிக்கப்படாத இந்த நாட்டில் உட்கார்ந்து கொண்டு இந்த அடிவருடிகள் நாய்கள் குறித்து பேசும் போது இவர்கள் நாய்களுக்கு பிறந்தவர்கள் தான் என்ற உண்மை உறுதிப்படுகீறது.


அசுரன்

said...

notable one - everyone, in one occasion or other, has to face this endangered siutation -
if the local body look into this,
the possibility of risk could be averted.
a good pathivu -
annany

Related Posts with Thumbnails