TerrorisminFocus

Friday, June 22, 2007

ராமதாஸ்க்கு எங்கேங்கேங்கேங்கேங்யோ அதிருது!

நண்பர் குழலி ராமதாஸ் ஆதரவாளர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம்தான். ஆனாலும் அவரது ஆதரவு ராமதாஸ் பேரச் சொன்னாக்க அதிருது என்று விளம்பரம் செய்யும் அளவு போவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க இயலவில்லை.

ராமதாஸ் ஒரு தரகு அரசியல் பிழைப்புவாதி என்பதை தாண்டி ஒன்றும் கிடையாது எனபதை நண்பருக்குச் சொல்வது எனது கடமை என்றே கருதுகிறேன். மேலும் அவர் பேரச் சொன்னாக்க ஒரு சொறிநாய்க்குக் கூட அதிராது என்ற உண்மையையும் அவருக்குச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

கொஞ்ச நாள் முன்ன சென்னையில திரும்பன பக்கமெல்லாம், 'அன்று கொள்ளையடித்தான் வெள்ளைக்காரனை விரட்டினோம் இன்று கொள்ளையடிக்கும் அம்பானியை விரட்டுவோம்' என்பது போல புரட்சிகரமான சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. என்னாடயிதி அதிசயம் ராமதாஸ் ஒரு உண்மையான மக்கள் விடுதலை தலைவராக மாறிவிட்டாரா என்று சின்ன அதிர்ச்சி, பிறகு ஒரு சின்ன சந்தேகம் மனதில் எழுந்தது ஒரு வேளை அம்மாவுக்கும், அய்யாவுக்கும் மாற்றி மாற்றி கூஜா தூக்கிய நரித்தனம் போலவே இதுவும் ஒரு அரசியல் தந்திரமோ என்று. கடைசியில் நான் சந்தேகப்பட்டதுதான் உண்மையாகியது.

ரிலையன்ஸ் அம்பானியை கல்லாவ காலி பண்ண சொல்லி ரொம்ப வீறாப்பா பேசுன நம்ம அதிருது தலைவர் மாலடிமை(ராமதாசு) கொஞ்ச நாள்லேயே அம்பானியின் கால்ல விழும் போராட்டம் நடத்தி தனக்கு யார் பேரச் சொன்னா எங்க எப்படி அதிரும் என்று வெளிப்படுத்தினார். (ரிலையன்ஸ் சில்லறை வியாபாரம் எதிர்ப்புப் போராட்டம்). (மாலடிமை - இங்கு மால் என்று சொல்வது ராமரை, பெரிய அடுக்குமாடி கடை என்ற பொருளில் இங்கு மால் பயன்படுத்தப்படவில்லை).

கற்புக்கும், சிகரெட்டுக்கும் நேரடியாக செருப்பு, வெளக்குமாறு போன்று ஆயுதங்களை ஏந்திக் கொண்டு மாதர்களை போராட வைத்த மாலடிமைக்கு சில்லறை வியாபாரம் என்றவுடன் படு சில்லறைத்தனமாக காலில் விழும் போராட்டம் நடத்த தோன்றிய மர்மம் எனக்கு தெளிவாகவே புரிகிறது. பெரியாரை தங்களது தலைவராக கருதிக் கொள்ளும் இவர்கள் காலில் விழும் போராட்ட நடத்திய பொழுது யாருடைய சுயமரியாதை பறி போனது என்று புதிய வியாக்கானங்களை தரும் அபாயம் உள்ளது.

மாலடிமையினுடைய சீமந்த புத்திரன் அன்புமணி துன்பமணியாக அவதாரமெடுத்த சம்பவங்களும் உண்டு. அதில் வெகு விமரிசையான ஒன்று, கோக், பெப்ஸி கம்பேனிகளுக்கு பூட்ஸ் நக்கியதுதான்.

பெப்ஸி, கோக் கம்பேனிகளுக்கு காவடி தூக்கி மாலடிமையின் புத்திரன் பாராளுமன்றத்தில் நின்றுக் கொண்டு ஆற்றிய உரையைப் போன்றதொரு கேவலமான, அப்பட்டமான அடிவருடித்தன உரையை மன்மோகன் சிங்கிடம் மட்டுமே கேட்டிருக்கிறேன்.

அப்பனுக்கு அம்பானியக் கண்டாக்க அதிருது, புத்திரனுக்கு கோக் பெப்ஸி பேரக் கேட்டாக்க அதிருது. நம்ம நண்பர் குழலியோ ராமதாஸ் பேரச் சொன்னா யார்யாருக்கோ அதிருது என்று விளம்பரம் இடுகிறார். யாதர்த்தத்தை பரிசீலித்து உணர அவருடைய ராமதாஸ் ரசிப்புத் தன்மை தடுக்கிறது எனில் அவருக்கும் ரஜினி ரசிகனுக்கும் என்ன வேறுபாடு? இது ஒரு கேள்விதான்.

ஏகாதிபத்திய பாத தாங்கி ராமதாசுக்கு இவ்வளவு ஆடம்பரம் அவசியமில்லை என்பது எனது கருத்து.. நீங்க என்ன சொல்றீங்க குழலி? பேசாம அவர் பேர ஏகாதிபத்திய அடிமை என்று மாற்றச் சொல்லுங்கள்.

குழலி இந்த கருத்துக்களை உள்வாங்கி பரிசீலித்து பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

நண்பர் குழலியின் கருத்தை கேட்க்க ஆவலுடன் காத்திருக்கும்.

அசுரன்


Related articles:

அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்

அக்காமாலா, கப்ஸியும் - இம்சை அரசன் துன்பமணியும்

**
தோழர்களின் விமர்சனத்தை முன்னிட்டு தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை நீக்குகிறேன்

54 பின்னூட்டங்கள்:

said...

மரம்வெட்டி சீட்டுக்காக கையேந்தி காடுவெட்டிகுரு போன்ற ரவுடிகளோடு கூட்டு வைத்து கொல்லைப்புற வழியாக அண்புமணியை உள்நுழைத்து கேவலமான நாலாந்தர அரசியல் நடத்தும் ராமதாசை செருப்பால் அடித்ததுபோல கேட்டு இருக்கிறீர்கள் அசுரன் அண்ணே.

குழலியின் வன்னிய இனத்தைச் சேர்ந்த கட்சி என்பதால் கூடுதல் பாசம் அவருக்கு.

ராமதாஸ் கொலையே செய்தாலும் குழலிக்கு நல்லவரே!

நீங்க கலக்குங்க தலை!

said...

நீங்கள் இவ்வளவு இதுபோன்ற வார்த்தைகளைப் போட்டு விமர்சிக்கும் அளவுக்கு மோசமானவர் அல்ல டாக்டர் அய்யா என்பது என் கருத்து.

said...

அசுரன் அய்யா!

ஒருத்தனையும் விட மாட்டிங்களா அய்யா! போட்டுத் தாக்கறீங்க

அப்பால சண்டை சூடானதுக்குப் பிறகு வர்ரேன்

விடு ஜூட்!

said...

தோழர்,

இந்த காரியகிறுக்கன் ரஜினிய பத்தி நமக்கு ஏற்கனவே தெரியும், அவனுக்கு எதிரா போராட்டம் பண்ண ராமாதாசு தியட்டர்ல புகுந்து திரைய கிழிச்சாரு பொட்டிய தூக்கி வெளில போட்டாரு பயங்கர அலப்பறை பண்ணாரு ஆனா கொடுமைய பாருங்க அம்பானிக்கு எதிரா ரிலையன்ஸ் பிர்ஷ்சுல புகுந்து ஒரு கத்திரிகாய கூட தூக்கி வெளியில போடல.. மருத்துவரய்யா பலே கில்லாடிதான்.. நம்ம புரட்சி நடிகர் திருமா மருத்துவர் அய்யாவுக்கு தமிழ்குடிதாங்கினு கொடுத்த பட்டத்த விட நீங்க ஏகாதிபத்திய கொட்டைதாங்கினு கொடுத்துருக்க பட்டம்தான் பொருத்தமா இருக்கு, குடும்பமேல்ல வரிஞ்சி கட்டிக்கிட்டு அந்த வேலைய பார்க்குறாய்ங்க...

ஸ்டாலின்

said...

இதில் ராமதாஸை குறை சொல்ல என்ன வேண்டியிருக்கிறது. அவரை தங்களின் வாழ்வில் ஒளியேற்ற வந்த மகான் என்று
நினைக்கும் குழலி போன்றவர்களைத்தான் குறை சொல்லவேண்டும். ராமதாஸ் ஒரு நாதாரி என்று தெரிந்தும், அவரை மூடத்தனமாக நம்பும்
பகுத்தறிவுக்கூட்டத்தைத்தான் குறை சொல்லவேண்டும்.

ஒரு குப்பையை வைத்துக்கொண்டு இவ்வளவு செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று ரஜினியையும், சங்கரையும், ஏவிம்-யையும்
குறைசொல்வதைவிட அதற்கு காரணமான முட்டாள் ரசிகர்களைத்தான் குறைசொல்லவேண்டும்.

இதில் ராமதாஸும்,ரஜினியும், சங்கரும் மற்றும் ஏவிம்-மும் நாதாரிகளாக இருந்தாலும் பிழைக்கத்தெரிந்த புத்திசாலிகள், ஆனால் அவர்களின்
விசுவாசிகளான தொண்டர்களும், ரசிகர்களும்?

நீங்களே பதில்சொல்லுங்கள்.

said...

அன்பார்ந்த தோழர்

தங்களுடைய / நமது கருத்துக்களின் நியாயத்தை,தங்களுடைய தேவையற்ற சொற்கள் பின்னுக்கு தள்ளி விடும் என நான் கருதுகிறேன்.

தாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்பும், தாங்கள் முன்வைத்திருக்கும் வாதமும மிகச் சரியானவை. ஆனால், தேவையற்ற கொச்சைப் பதங்கள் மிக அதிகமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது நாம் தனிமைப்படுவதற்கே வழி செய்யும். அரசியல் வன்மை என்பது நிச்சயமாக கொச்சையான சொற்களின் வன்மையல்ல என நான் உறுதிபடக் கருதுகிறேன்.

இது ஒரு தோழமைரீதியிலான விமர்சனமே. இவ்விமர்சனத்தினால் நமது அரசியல் எதிரிகள் சற்றே தற்காலிகமாக குதூகலமடைந்தாலும் பரவாயில்லை.

said...

//நீங்கள் இவ்வளவு இதுபோன்ற வார்த்தைகளைப் போட்டு விமர்சிக்கும் அளவுக்கு மோசமானவர் அல்ல டாக்டர் அய்யா என்பது என் கருத்து. //

ராமதாஸ் மீது ஆரம்பத்திலிருந்தே நல்ல மதிப்பெல்லாம் கிடையாது லக்கிலுக். அவருடைய சமூகத்தை நாகரிப்படுத்தினார் என்பது போல வாதஙக்ள் வைக்கக் கூடும். ஆனால் அவருடைய நடவடிக்கைகள் எல்லாமே வாரிசு அரசியல் வட்டத்தை தாண்டி வேறு எங்கும் சென்று விடவில்லை.


தேவையற்ற வார்த்தை பிரயோகம் சரியில்லை என்று நீஙக்ளும், அரசு பால்ராஜும் கருதுகின்ற பட்சத்தில் அவற்றின் வன்மையை குறைத்துக் கொள்கிறேன்.

அசுரன்

said...

நன்றி தோழரே!

said...

//நண்பர் குழலியின் கருத்தை கேட்க்க ஆவலுடன் காத்திருக்கும்.//
விளக்கமாக பேசுவதற்கு தற்போது நேரம் இடம் கொடுக்கவில்லை, பிறிதொரு சமயத்தில் பேசலாம், அப்படியே பேசினாலும் அதில்

புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை, ஏழெட்டு பதிவுகள் பாமக பற்றி எழுதியிருக்கிறேன், அவைகளை படித்தாலே நான் என்ன

ரசிக்கிறேன் எதற்காக ரசிக்கிறேன் என்பது புரிந்து கொள்ள இயலும்.

மருத்துவர் இராமதாசு பெயரை கேட்டால் ஒரு சொறிநாயாவது அதிர்ந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் ரஜினி அதிர்ந்தது

என்னமோ மறுக்க முடியாத நிஜம், ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி வைத்த ரஜினி பலம் என்கிற மாயபலம், கருணாநிதி, ஜெயலலிதா

எல்லாம் உடைத்து பார்க்க பயந்த ரஜினி என்கிற மாய பலூனை பொத்தல் போட்டு புஸ்.. என்று காற்று போன பலூனாக்கியவர்

ராமதாஸ். சிவாஜி பட கூச்சலில் அதை ரஜினி ரசிகர்களுக்கு நினைவு படுத்தும் விதமாக போடப்பட்டது தான் அந்த பதிவு,

நேரக்குறைவினால் பதிவு எழுதுவதை விட இப்படி ஜிம்பிலிக்கா கோடிங்கில் ரஜினி ரசிகர்களை கலாய்ப்பது எனக்கு எளிதாகவும்

குறைந்த நேரமே எடுத்துக்கொள்ளும் என்பதாலும் அப்படி ஒரு பதிவு போட்டேன்.


நக்சல்பாரி இயக்கங்களுக்கும் வெகுசன கட்சிகளுக்கும் (உங்கள் பாணியில் சொல்வதென்றால் ஏன் நானும் கூட பல நேரங்களில்

சொல்வது தான் இந்த கட்சிகளை கார்ப்பரேட் கட்சிகள் என்று) இடையில் இருக்கும் இடைவெளியை ஓரளவிற்காவது நிரப்புவது பாமக,

விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகளே.... கார்ப்பரேட் கட்சிகளால் எப்படி பொது மக்களுக்கு எந்த பயனுமில்லையோ அதே போல

வெகுசனங்களின் பங்களிப்பு இல்லாத நக்சல்பாரி இயக்கங்களினாலும் பெரிய அளவுக்கு தாக்கமோ பயனோ பொது மக்களுக்கு

இல்லை.... அதனாலேயே இரண்டிற்கும் இடையில் இருக்கும் அந்த கட்சிகளையும் அதன் தலைவர்களையும் ஓரளவிற்கு நான் ரசிக்கவே

செய்கிறேன்.

பாமக, ராமதாஸ் இவர்களின் எல்லா செயல்களையும் ஆதரிக்க வேண்டுமென்றோ எல்லா செயல்களுக்கும் பொறுப்பேற்க

வேண்டுமென்றோ எந்தவித கட்டாயமும் எமக்கு இல்லை..... பாமகவை மிக அருகில் இருந்தும் விடுதலை சிறுத்தைகளை

அருகிலிருந்தும் பல வருடங்களாக பார்த்திருப்பதால் எமக்கு வெகுசன ஊடக செய்திகளையும் தாண்டி இரு இயக்கங்களையும் அதன்

செயல்பாடுகளையும் ஓரளவிற்கு தெரியும் என்பதால் அவ்வியக்கங்கள் பற்றிய என் கருத்துகள் பொது புத்தியிலிருந்து சற்று மாறுபட்டே

இருக்கிறது.

நீங்கள் சொன்ன குற்றசாட்டுகளை எல்லாம் முற்றிலும் ஏற்கவோ முற்றிலும் மறுக்கவோ இயலாது, மற்ற கார்ப்பரேட் கட்சிகள் வாய்மூடி

மவுனியாக இருக்கும் போது இவர்கள் மட்டுமே குரல் கொடுத்தார்கள்... பொதுவிவாதத்தை எழுப்ப முயற்சித்தார்கள்... மகஇக

போன்றவைகள் இவர்களையும் விட தீவிரமாக செயல்பட்டிருக்கலாம், ஆனால் அது எத்தனை தூரம் விவாதத்தையும் பொதுமக்களிடம்

தாக்கத்தையும் ஏற்படுத்தியது?

இப்போதிருக்கும் காலநிலையில் அரசியல் சூழலில் ஒருவன் தீவிரவாதி என்று பெயர் சூட்டப்பட்டு நாயை சுடுவது போல சுடப்பட்டு

சாவதையோ அல்லது வெகுசனத்திற்கு எந்த நன்மையும் இல்லாமல் முழுக்க முழுக்க வெறும் லாப நட்ட கணக்கு மட்டும் பார்க்கும்

கார்ப்பரேட் கட்சிகளாகவும் இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களும் மறுக்கப்பட்டவர்களுக்கும் ஓரளவிற்காவது நன்மையை யார்

செய்கிறார்களோ அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை நான் ரசிக்கவே செய்கிறேன்.

மருத்துவர் இராமதாசும், திருமா அவர்களும் தொடக்க காலத்தில் தேர்தல் பாதையை எதிர்த்தவர்கள், ஓட்டரசியலை வெறுத்தவர்கள்

அதையே தொடர்ந்திருந்தால் தீவிரவாத சட்டையை அணிவித்து நாயை சுடுவது போல சுட்டிருப்பார்கள், அத்தோடு கதை

முடிந்திருக்கும் ஆனால் இப்போதோ குறைந்த பட்ச அரசியல் படுத்துதலை அவர்களின் மக்களுக்கு செய்திருக்கிறார்கள்....

இவ்வியக்கங்களின் அரசியல் சமரசங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவ்வியக்கங்கள் நீர்க்க ஆரம்பிக்கும், இப்போதைக்கு செய்து

கொண்டிருக்கும் அரசியல் சமரசங்களால் அவ்வியக்கங்கள் தொடக்கத்தைவிட இப்போது நீர்த்திருந்தாலும் முழுமையாக நீர்க்கவில்லை,

அப்படி நீர்க்கும்போது அந்த அரசியலை நான் ஏற்க மாட்டேன்....

மக்கள் மீது பேரண்பு கொண்ட திறமையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை உடையவர்கள் தீவிரவாதி என்று பெயர்

சூட்டப்பட்டு சுடப்பட்டு அல்லது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் யாருக்கும் உபயோகமில்லாமல் போவதை விட ஒடுக்கப்பட்ட

மறுக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவிற்காவது நன்மை பயக்கும் நெளிவு சுளிவுகளோடு செயல்படுபவர்கள் யாரானாலும் அவர்களை

ரசிக்கவே செய்கிறேன்....

நேரமின்மையாலும் முன்போல அதிகம் வலையுலகில் புழங்க இயலாததாலும் (இவைகளையெல்லாம் விட ரசிக்க சில விசயங்கள் என்

வாழ்க்கையில் இப்போது இருப்பதால்) உடனுக்குடன் பதில்களையோ வாதங்களோ செய்ய இயலாது, உங்கள் வாதங்களை தொடர்ந்து

வையுங்கள் அவைகள் பலரின் சிந்தனைகளை தூண்டட்டும்....

said...

நீங்கள் வலப்புறம் பட்டியலிட்டிருக்கும் நூல்களும், இதழ்களும், நீங்கள் ஓர் ஆழ்ந்த வாசகர் என்பதையும், நீங்கள் முன்னிலைப்படுத்தும் பிரசினைகள் உங்களது சமூக நோக்கையும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் சில சொற்கள் உங்கள் வாதத்தின் கூர்மையை வேறு திசைக்குத் திருப்பிவிடக்கூடும்.இயன்றவரை அவற்றைத் தவிர்க்க முயற்சியுங்கள்.

நீங்கள் (மார்க்க்சிய வெளிச்சத்தி) ஆராய வேண்டிய விஷயம் எப்படி இந்திய அரசியல் என்பது வெறும் தேர்தல் அரசியலாகத் திரிந்து விட்டது என்பதும், அப்படித் திரிந்த நிலையிலும் கூட எப்படி நம் அரசியல் கட்சிகளுக்கு சித்தாந்த முகம் வேண்டியிருக்கிறது என்பதுவும் ஆகும். இது குறித்த ஓர் விரிவான விவாதத்தை நீங்கள் முன் மொழியலாம்.

அன்புடன்
மாலன்

said...

குழலி,

விரிவான பதிலுக்கு நன்றி.

எனது விரிவான எதிர்வினைக்கு முன்பு கொஞ்சமா ஒரு நகைச்சுவை.... :-))

//மருத்துவர் இராமதாசு பெயரை கேட்டால் ஒரு சொறிநாயாவது அதிர்ந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் ரஜினி அதிர்ந்தது //

ஒரு சொறிநாய் ரஜினியை விடவும் பலமடங்கு உயர்வானதே என்பது எனது கருத்து. அதனால்தான் ராமதாஸை கண்டு ரஜினி அதிர்ந்ததில் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லை :-))

அசுரன்

said...

தோழர் அரசு குறிப்பிட்டிருப்பது போன்று ஒரு கொச்சையான பதக்தை நானும் எனது பின்னூட்டத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். அவர் தோழர் அசுரன் மீது வைத்திருக்கும் விமரிசனத்தை என் மீதும் சொல்லப்பட்டிருக்கும் விமரிசனமாக எடுத்துக்கொண்டு இனி அது போன்ற பதங்களை பயன்படுத்த மாட்டேன் என்றும் கூறிக்கொள்கிறேன்..

தோழமையுடன்
ஸ்டாலின்

said...

//ஒரு சொறிநாய் ரஜினியை விடவும் பலமடங்கு உயர்வானதே என்பது எனது கருத்து. அதனால்தான் ராமதாஸை கண்டு ரஜினி அதிர்ந்ததில் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லை :-))//

மெய்யாலுமே இப்போ மானிட்டர் ஸ்க்ரீன் அதிருது நைனா :-)))))

said...

அசுரன் அண்ணே,
உங்களை மாட்டிவிட்டுட்டேன்னு கோவிக்க கூடாது. இது எதோ எட்டு விளையாட்டாம். உங்களபத்தி 8 தகவல் வந்து சொல்லுங்க!!
இதோ பதிவ பாருங்க !!! நன்றி!!!

said...

அண்ணே,
உங்களை மாட்டிவிட்டுட்டேன்னு கோவிக்க கூடாது. இது எதோ எட்டு விளையாட்டாம். உங்களபத்தி 8 தகவல் வந்து சொல்லுங்க!!
இதோ பதிவ பாருங்க !!! நன்றி!!!

said...

நீங்கள் வலப்புறம் பட்டியலிட்டிருக்கும் நூல்களும், இதழ்களும், நீங்கள் ஓர் ஆழ்ந்த வாசகர்

Malan has missed a smiley there.
If Asuran was a serious reader he would have referred to the articles in EPW on Nandigram issue
and on SEZs or atleast the exchange between scholars and 'Ganapati' on naxal politics.
On many issues like corporate sector and retail trade EPW has published many articles.Is there any evidence in his posts that he
reads EPW or Monthly review regularly. I find none. He is happy with abusing his sworn enemies . He writes as if he as has answers for all issues and questions when he does not even know the right questions.

said...

விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட அசுரனுக்கும், ஸ்டாலினுக்கும் நன்றி.

@குழலி

//கார்ப்பரேட் கட்சிகளால் எப்படி பொது மக்களுக்கு எந்த பயனுமில்லையோ அதே போலவெகுசனங்களின் பங்களிப்பு இல்லாத நக்சல்பாரி இயக்கங்களினாலும் பெரிய அளவுக்கு தாக்கமோ பயனோ பொது மக்களுக்கு
இல்லை.... அதனாலேயே இரண்டிற்கும் இடையில் இருக்கும் அந்த கட்சிகளையும் அதன் தலைவர்களையும் ஓரளவிற்கு நான் ரசிக்கவேசெய்கிறேன்.//

கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் உப்பு, krackjack பிஸ்கட் போல, இல்லையா? மக்களின் வாழ்வை நிர்ணயிக்கும் அரசியலை, ரசிக சீமானாக ஒதுங்கி நின்று ரசிக்க முடிவெடுத்து விட்டால்,பிறகு அங்கே பகுத்தறிவும், உண்மைத் தேடலும் மங்கும் என்பது உண்மைதான். நிகழ்காலமே எல்லாவற்றையும் தீர்மானித்து விடுமென்றால், ரசியப் புரட்சி 1905-டன் முடிந்து போயிருக்கும். நக்சல்பாரி இயக்கங்கள் வெகுசனப் பங்களிப்புடன் செயல்படத் துவங்கி பல ஆண்டுகளாகி விட்டன. எதிர்காலம் மக்களின் பங்கேற்பில் அளவுரீதியிலான மாற்றத்தையும், பண்புரீதியான மாற்றத்தையும் ஏற்படுத்தும்.ஏனெனில் நாம் விரும்பும் வண்ணத்தில், விரும்பும் நேரத்தில்
அமைத்துக் கொள்ள, புரட்சி எப்பொழுதும் ரசிக்கத் தக்க மலர்ப் படுக்கையல்ல.

//மருத்துவர் இராமதாசும், திருமா அவர்களும் தொடக்க காலத்தில் தேர்தல் பாதையை எதிர்த்தவர்கள், ஓட்டரசியலை வெறுத்தவர்கள்
அதையே தொடர்ந்திருந்தால் தீவிரவாத சட்டையை அணிவித்து நாயை சுடுவது போல சுட்டிருப்பார்கள், அத்தோடு கதை
முடிந்திருக்கும் ஆனால் இப்போதோ குறைந்த பட்ச அரசியல் படுத்துதலை அவர்களின் மக்களுக்கு செய்திருக்கிறார்கள்....//

எது குறைந்த பட்ச அரசியல் படுத்துதல்? கடந்த் தேர்தலில் காசு தர அம்பானி மறுத்ததற்காக, ரிலையன்ஸ் வந்தவுடன் சண்டபிரசண்டம் செய்து விட்டு, பின்னர் காலில் விழும் போராட்டம் நடத்துவதா? இது மக்களின் போராட்டத்தை பின்னுக்கு இழுத்து ஊடறுக்கும் கருங்காலித்தனம். கொஞ்சம் கொஞ்சமாய் போராட்டங்களின் மீதான, அமைப்புகள் மீதான நம்பிக்கையை அழித்து, அவர்களை இயலாமையிலும், விரக்தியிலும் தள்ளும் அயோக்கியத்தனம்.இது நெளிவு, சுளிவில்லை.வெளிப்படையான பச்சோந்தித்தனம்.இந்த அயோக்கியத்தனத்தின் மீது நமக்கு ஆத்திரம் வரவில்லையென்றால், நமது யோக்கியத்தின் மீது தான் கேள்வி பிறக்கிறது.பிறகு, அசுரன் கேட்பது போல இந்த குருட்டு அபிமானத்திறகும், ரஜினி ரசிகனின் மடத்தனத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

//அப்படி நீர்க்கும்போது அந்த அரசியலை நான் ஏற்க மாட்டேன்....//

ஏற்பது, நிராகரிப்பது...ரசிகர்களுக்கு எல்லாம் சுலபம்.ஏனென்றால், செயல்படுவது தான் சிக்கல்.வேடிக்கை
பார்ப்பதற்கு பொறுப்பேற்பது அவசியமா என்ன?

மார்டின் லூதர் கிங் சொன்னது போல,
“It is not the violence of a few that scares me. It is the silence of the many.”

மெளனமாய் வேடிக்கை பார்க்கலாம்,ரசிக்கலாம், விளையாடலாம், பொழுது போக்கலாம், ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நம்மைப் போன்ற நிரபராதிகள்தான் ஹிட்லர் ஆட்சியிலும் வாழ்ந்தார்கள். நமது செயலின்மையும், மெளனமும், ரசனைகளிலிருந்து விடுபட முடியாத மாயையும் ஒரு சமூகக் குற்றம் என்பது புரியாத வரை, அதனை உணராத வரை,கலாம் முதல் கருணாநிதி வரை ரசித்துக் கொண்டிருக்கலாம்!

said...

அசுரன் அய்யா,
ராமதாசு அயோக்கியங்கற்றது இருக்கட்டும். உங்க சோஷலிசம் சொரிநாய் பூட்ஸ் நக்கியது லெவல்லதான் இருக்குதுபோல. வாழ்க சோஷலிசம்!

நன்றி.

said...

If Ramadoss hears Vijaykanth name, he will "athiruvar"

said...

ஒரு தமிழன் இன்னொரு தமிழனைக் கண்டிக்கச் சில வரைமுறைகளை வகுத்துக் கொள்வது நல்லது.இது நமக்கென நாமே செய்து கொள்ள வேண்டியது.காஞ்சி சுப்புணிக்குப் பின்பாவது தமிழர்கள் உணர்ந்து செயல் படுத்திட மிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
அரசியல் என்றாலே அழுக்கு என்பதுதான் பொருள்,பயன் எல்லாமே.
அங்கே உள்ள சூழ்நிலைகளில் எப்படி நடக்கிறார்கள் என்பது நல்லவர்கள் யாரும் நினைக்கும்படி கட்டாயம் இருக்காது!
அவர்கள் செய்த,செய்யுங் குறைகளை ஒதுக்க வேண்டாம்,சுட்டிக் காட்டலாம்.அதைப் பார்ப்பனர்கள் சிரித்து மகிழுமாறு செய்திட வேண்டுமா?
மருத்துவர்.அன்புமணி சில நல்லதுகளைச் செய்துள்ளார்.இள வயதிலே துணிவுடன் இட ஒதுக்கீட்டில்
செயல்பட்டுள்ளார்.பார்ப்பனர்கள் அவரைக் கவிழ்க்கத் துடிக்கின்றனர்.இதிலே நாமுமா?
தயைசெய்து சினந்தவிர்த்து,சிந்தித்துச் செயல்பட வேண்டுகிறேன்.

said...

//நக்சல்பாரி இயக்கங்களுக்கும் வெகுசன கட்சிகளுக்கும் (உங்கள் பாணியில் சொல்வதென்றால் ஏன் நானும் கூட பல நேரங்களில்
சொல்வது தான் இந்த கட்சிகளை கார்ப்பரேட் கட்சிகள் என்று) இடையில் இருக்கும் இடைவெளியை ஓரளவிற்காவது நிரப்புவது பாமக,
விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகளே.... கார்ப்பரேட் கட்சிகளால் எப்படி பொது மக்களுக்கு எந்த பயனுமில்லையோ அதே போல

வெகுசனங்களின் பங்களிப்பு இல்லாத நக்சல்பாரி இயக்கங்களினாலும் பெரிய அளவுக்கு தாக்கமோ பயனோ பொது மக்களுக்கு

இல்லை.... அதனாலேயே இரண்டிற்கும் இடையில் இருக்கும் அந்த கட்சிகளையும் அதன் தலைவர்களையும் ஓரளவிற்கு நான் ரசிக்கவே

செய்கிறேன்.

பாமக, ராமதாஸ் இவர்களின் எல்லா செயல்களையும் ஆதரிக்க வேண்டுமென்றோ எல்லா செயல்களுக்கும் பொறுப்பேற்க

வேண்டுமென்றோ எந்தவித கட்டாயமும் எமக்கு இல்லை..... பாமகவை மிக அருகில் இருந்தும் விடுதலை சிறுத்தைகளை

அருகிலிருந்தும் பல வருடங்களாக பார்த்திருப்பதால் எமக்கு வெகுசன ஊடக செய்திகளையும் தாண்டி இரு இயக்கங்களையும் அதன்

செயல்பாடுகளையும் ஓரளவிற்கு தெரியும் என்பதால் அவ்வியக்கங்கள் பற்றிய என் கருத்துகள் பொது புத்தியிலிருந்து சற்று மாறுபட்டே

இருக்கிறது.//

அய்யா அசுரன் அவர்களே,
குழலி தன்னுடைய பின்னூட்டத்தில் சில செய்திகளை மிகத் தெளிவாக செல்லியிருக்கிறார்...
நான் உங்கள் அளவுக்கு பல நூற்களையோ கற்றோ அல்லது பல போராட்டங்களில் பங்கு பெற்றவனோ கிடையாது...ஆனால் என்றைக்காவது ஒருநாள் பாலும், தேனும் ஓடும் நம்நாட்டில் அதனால் இப்போது நக்சல்பாரி இயக்கத்தில் இணைவோம் என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது...
அந்தந்த காலக்கட்டத்தில் இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஓரளவு கீழ்நிலையில் இருப்பவர்கள் பாதிக்கபடாமல் சமூகத்தை கொண்டு செல்வது மிகமுக்கியம்..
அந்த வகையில் பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் இரண்டு அமைப்பும் அடிமட்ட மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன....
மனிதன் அந்தந்த காலக்கட்டத்தில் அவனுடைய சூழ்நிலையில் தனக்குண்டான உரிமைகளுடன் வாழ்வதையே விரும்புகிறான்...
மக்களின் அன்றாட செயல்களில் இருந்து விலகி எதையோ பறிக்கொடுத்து விட்டோம் என்கிற உணர்வோடு... ஒரு விளிம்பு நிலை போராட்டம் தான் நக்சல்பாரி இயக்கமாக இருக்கிறது....

நன்றி

said...

அசுரனுக்கு,
மருத்துவர் இராமதாஸ் பற்றிய தங்களது விமர்சனங்கள் 'அனைத்தையும்' சீரணிக்க முடியவில்லை.

குழலியின் கூற்றில் உண்மைகள் ஏராளம்.

உங்களைப்போன்ற ஒருசில தமிழர்களை தவிர - பெரும்பாலானவர்கள் - பத்திரிக்கை உலகம் மற்றும் ஆன்மீகவாதிகளும் ரஜினியை ஒரு மாயசக்தியாகத்தான் கருதி வந்தனர். இது வரலாறு.

மரவெட்டி என்று ஏளனமாக அழைக்கப்படும் மருத்துவர்தான் - கலைஞர் மர்றும் செயலலிதா போன்றவர்களே தொடப்பயந்த சூப்பர் ஸ்டாரை - வைக்கவேண்டிய இடத்தில் வைத்துக்காட்டினார்.

அடுத்து, தமிழர்களின் தலைவர்களாக - தாயாகவும் -அம்மாவாகவும் 'பீலா'விட்டுக்கொண்டு - சொந்த மகன்களையும் - மருமகன்களையும் - வளர்ப்பு மகன்களையும் வைத்து - தொலைக்காட்சி மூலம் அரசியல் வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களின் ஏகபோக அரசியல் தொழில் உரிமைக்கு ஆப்பு வைத்து -தலித்களுக்கும் 'காப்புரிமை' பெற்று தந்தவர் அவர்தான்.

நெடுங்காலமாக நிலவிவந்த தமிழக அரசியல் போக்கில் மாறுதல் கொண்டு வந்தவரும் அவர்தான்.

சூதுவாது நிறைந்த ஓட்டுப்பொறுக்கி தமிழக அரசியல் வாதிகளை வென்றெடுக்க -அவர் எடுத்த 'இராஜ தந்திர' முடிவுகளை நரித்தனம் என்று சிறுமைப்படுத்தாதீர்கள்.

மருத்துவர் இராமதாஸ் - உத்தமர் என்று நான் கொடிபிடிக்கவில்லை, ஆனால் நீங்கள் சொல்கிற 'அளவிற்கு' மோசமானவர் அல்ல என்றுதான் 'கருப்புக்கொடி' காட்டுகிறேன்.

தோழமையுடன்,
பிறைநதிபுரத்தான்

said...

அசுரன் அய்யா,

தரகு முதலாளித்துவ,மற்றும் மறு காலனி ஆதிக்க மோகினியின் பால் லயிப்பு கொண்ட கேவலமான அரசியல்வாதிகளில்,நம்ம மரம் வெட்டி அய்யாவைவிட கேவலமான நபர் மஞ்சதுண்டு அய்யா தான்.ஆனா நம்ம கட்சியோ மஞ்சதுண்டுக்கு ஜல்லி அடிக்குது,மரம்வெட்டிக்கு எதிர்ப்பு தெரிவுக்குது.எதனால இந்த கொள்கை முரண்பாடு?

said...

கருணாநிதி தரகு தாத்தாவுக்கு அசுரனில் ஆதரவு தெரிவ்க்கப்பட்டதாக புரளி கிளப்பும் குடுமி பார்ட்டி கொஞ்சம் கண்ணைத் திறந்து எனது முந்தைய கட்டுரை ஒன்றை படிக்கவும். (பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே).

தனது கருத்துக்களை வன்மையாக பதிய வைத்த தோழர் ஸ்டாலினுக்கு நன்றிகள்.

நண்பர் விடாது கருப்பு, லக்கிலுக்கிற்க்கு நன்றிகள். சரியான அம்சத்தில் விமர்சனம் செய்து தவறை சரி செய்த அரசுபால்ராஜுக்கு நன்றிகள்.

விரிவான விளக்கம் தந்த குழலிக்கு நன்றீ

//எப்படி இந்திய அரசியல் என்பது வெறும் தேர்தல் அரசியலாகத் திரிந்து விட்டது என்பதும், அப்படித் திரிந்த நிலையிலும் கூட எப்படி நம் அரசியல் கட்சிகளுக்கு சித்தாந்த முகம் வேண்டியிருக்கிறது என்பதுவும் ஆகும்.//

மேலேயுள்ள விசயத்தை விவாதிக்க ஆலோசனை தந்த மாலனுக்கு நன்றிகள்.

என்னை மாட்டிவிட்ட குட்டி பிசாசுக்கு நன்றிகள் இப்போது சொல்ல மாட்டேன். எட்டு போட்டு லைசன்ஸ் வாங்கிய பிற்பாடே அவருக்கு என் நன்றிகள் கிட்டும்.

வழமை போல தமது அறிவு ஜீவி பட்டத்துக்கு நான் போட்டியாக வந்துவிடுவேன் என்ற படு தவறான கருத்தில் சம்பந்தமில்லாமல் உளறிச் சென்றுள்ள அனானி அலைஸ் மை பெஃஸ்ட் பிரண்டுக்கு நன்றிகள். நானெல்லாம் படு மட்டமான அரைகுறை என்பதை அவர் இப்பொழுதாவது புரிந்து கொள்ளட்டும். எனவே போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்கள்தான் வெற்றி பெற்றவர்.

குழலிக்கு மிக அருமையாக எளிமையாக விளக்கம் கொடுத்த அரசு பால்ராஜுக்கு இன்னுமொரு நன்றி.

ராமதாசுக்கு விஜயகாந்த பெயரை கேட்டாலும் அதிரும் என்ற கருத்து தெரிவித்த சதுக்க பூதத்திற்க்கு நன்றி.


தமிழன் என்ற அன்பர் ராமதாஸ் உள்ளிட்ட தரகு மாமாக்கள் இன்னமும் தமிழர் நலனுக்காக பாடுபடுவது போல நம்புகிறார் என்று தெரிகிறது. அவர் எந்த தமிழர்களை குறிப்பிடுகிறார் என்று தெளிவுபடுத்தினால் நன்று.

என்னை கேட்டால் பார்பனர்களின் பலமே ராமதாஸ், வீரமணி, கருணாநிதி, CPI, CPM இவைதான். இவர்களை ஒழித்துவிட்டால் பார்ப்பனர்கள் பதுங்குவதற்க்கு இடமின்றி நம்மிடம் அடிப்பட்டு ஒழிந்துவிடுவர்.

நக்சல்பாரி இயக்கங்கள் வெகு மக்கள் பங்களிப்புடனே போராட தொடங்கி நாட்கள் பல கடந்த பின்பும் கூட அது பற்றிய வெகுசன ஊடகங்களின் மூடி மறைப்பினால் மதி மய்ங்கி இன்னமும் அதே வாதங்களை முன் வைத்துள்ள பாரி. அரசு மற்றும் குழலி இருவரும் இந்த வாதங்களை பரிசீலிக்கவும். கோக்கை எதிர்த்தும், ரிலையன்ஸை எதிர்த்தும் மக இக நடத்தியது வெகு சன இயக்கமே. மலம் கழிக்கும் போராட்டம் கூட வெகு சன இயக்கமே. இதை கூட செய்ய துப்பில்லாத ராமதாஸ உள்ளிட்ட மக்கள் துரோகிகளை கிஞ்சித்தும் கூட தலைவர்களாக என்னால் கருத இயலவில்லை. மக்களின் எதிரிகளுக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக் கூட ஆட்டுவடு தமது வயிற்றுப் பிழைப்புக்கு ஊறாகிவிடும் என்று பயந்து சாகும் இந்த கோழைகளை ஒழிப்ப்துதான் இந்திய மக்களின் விடுதலைக்கு வழி சொல்லும். மேலும் ஏதோ மக இக தோழர்கள் எல்லாம் போலீசின் துப்பாக்கிகளுக்கு பலியாகி வருவது போல குழலி எழுதியுள்ளது யாதார்த்திற்க்கு சுத்தமாக பொருந்தவில்லை. அவர் புரட்சிக்ர இயக்கத்தின் இடது சாகசவாத பாதை குறித்து பயப்படுகிறார் எனில் இன்றைய புரட்சிகர இயக்கங்கள் அந்த பாதையின் தவறுகளால் பாடங்கள் கற்று மக்கள் திரள் இயக்கங்களாக மலர்ந்து வருகின்றன.

இதே கருத்துக்களை சொன்ன பிறைநதிபுரத்தானும் மேலே சொன்னவற்றையும், குழலிக்கான எமது விளக்கங்களையும் பரிசிலிக்கவும். அவர் கொஞ்சமா நல்லவர், கொஞ்சமா கெட்டவர் என்பதெல்லாம் சும்மா சப்பைக் கட்டுக்கள்தான். இந்த வரையறைப்படி எவரையும் நல்லவ்ர் என்று சொல்லிவிடலாம். ஜெயல்லிதா கூட நல்லவர்தான் இந்த அம்சங்களில். பிறைநதிபுரத்தானுக்கு நன்றி.

இனி ஒவ்வொருவரின் மையமான வாதங்களுக்கு எதிர்வினையாக பின்னூட்டங்கள் வரும்.

அசுரன்

said...

இப்போ இவ்வளவு விறாப்பாக எழுதியுள்ள கிழாமத்தூர் எக்ஸ்பிரஸ் அதே எக்ஸ்பிரஸ் வேகத்துடன் இங்கு அசுரனிலும் இன்னும் பல இடங்களிலும் எழுதப்பட்ட வெகு சன இயக்க போராட்ட அறைக் கூவல்களின் போது எங்கே ஒளிந்திருந்தார் என்று தெரியவில்லை.

யாருயா உங்கள் காட்டுக்குள்ள உக்காந்து கணக்கு போடச் சொன்னது? நாட்டுக்குள்ளாற மக்கள் அணி திரட்டி போராடுன்னுதானே சொல்றோம். அத்த செய்யிறாரா உங்க தலைவர் ராமதாஸ்ன்னு கேள்விக் கேக்குறோம். அவர் ஒன்னும் செய்யாம இருந்தாக் கூட பரவாயில்ல ஆனா மத்தியில உக்காந்துக்கிட்டு ஏகாதிபத்திய சேவையில்ல செய்யிறாரு.

இத்தச் சொன்னாக்க அதுக்கு பதில் சொல்லும் நேர்மையின்றி இல்லாத குற்றச்சாட்டுகளை வைப்பது சரியில்லை.

நக்சல் என்று இவர் இங்கு மாவோயிஸ்டுகளை மட்டுமே குறிப்பிடுகிறார். அது போகாத ஊருக்கு போகும் வழி என்று இங்கு அசுரனிலேயே கூட பல முறை சொல்லியாகிவிட்டது என்பது அவருக்கு தெரிந்தும் கூட இந்த ஒற்றை வாதத்தை தவிர்த்து வேறு எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை என்பது பரிதாபகரமானதே.

அவலை நினைத்து உரலை இடித்த கதைதான்.

அசுரன்

said...

கிழாமத்தூர் சொல்லும் ஜனநாயக பாதையின் அருகதை என்னவென்பதையும் இதே அசுரன் தளத்திலேயே எழுதியுள்ளது. அப்பொழுதும் நம்ம எக்ஸ்பிரஸ் ஓடிப் போன இடம் தெரியவில்லை. ஒருவேளை ராமதாஸை அம்பலப்படுத்தியவுடன்தான் கொஞ்சம் சொரனை வந்ததா தெரியவில்லை. அய்யோ பாவம். ஆமா இவருக்கும் கொஞ்சம் நாள் முன்ன இவர் விமர்சித்த ரஜினி ரசிகர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று இவரே இன்னுமொரு கட்டுரை எழுதினால் சிறப்பாக இருக்கும். செய்வாரா?

அசுரன்

said...

அசுரன்,
பீடி குடிக்கக்கூடாது என்று சொல்வது, சாராயம் குடிப்பவன் கட்சியில் இருக்கக்கூடாது என்று சொல்வதும் கொள்கை.தனது கட்சி சார்பில் சுகாதரத்துறை அமைச்சர் இருந்தும் இவைகளின் உற்பத்தியை சட்டபூர்வமாகத் தடை செய்ய முயற்சி செய்யாமல் இருப்பது அரசியல்.மக்களிடம் என்ன பேசவேண்டும் அரசியலில் என்ன செய்ய வேண்டும் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும்.
அரசியல்வாதிகளுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் எனப்து தெளிவாகவே தெரியும். மக்களுக்குத்தான் (இரசிகர்களுக்கு) புரியவில்லை.

சாராயக்கடைகளை அரசு எடுத்து நடத்துவதை அ.தி.மு.க ஆட்சியில் விமர்சனம் செய்த அய்யா இப்போது கருணாநிதி வீட்டுமுன் போராட்டம் நடத்துவாரா?
குஷ்பூ ,இரஜினி விசயங்களில் காட்டிய தீவீரத்தை இவர்கள் கிரிக்கெட் கிளப் வேட்டி விசயத்தில் காட்டமாட்டர்கள். ஏனென்றால் அங்கே பல அம்பானிக்கள் உண்டு. எந்தப் பிரச்சனைக்காக போராட்டம் நடத்த வேண்டும் என்பது இவர்களின் சுய நலன் கருதி (அல்லது கட்சியின் நலன்) தீர்மானிப்பது.அதற்கும் மக்கள் நலத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

**
கொள்கைகளில் சமரசம் என்பதே ஓட்டு அரசியல் என்றாகிவிட்ட நிலையில் எந்த அரசியல் கட்சியிடம் இருந்தும் நாட்டுக்கு நல்லது கிடைக்காது.கருணாநிதி ,திருமா, இராமதாஸ் போல் நக்சல்பாரி இயக்கங்களும் அதிகார ருசி கண்டவுடன் அம்பானிகளுக்கு கும்பிடு போட்டாலும் ஆச்சர்யம் இல்லை.இது ஒட்டு மொத்த சமுதாயத்தின் குற்றம்.

நக்சல்பாரி என்பதே விவகாரமான பெயராக உள்ளது. :-)) இவர்களும் திராவிடம் சேர்த்து "XXXX திராவிட முன்னேற்ற கழகம்" என்று பெயர் வைத்தால் வெகுஜன அரசியலில் முன்னேற முடியும்.

நக்சல்பாரிகள் போராட்டம் நடத்தினால் மட்டும் போதாது. தங்களின் போராட்ட அணுகு முறைகள் அல்லது தங்களின் செயல்பாடுகள் மக்களிடம்(சமுதாயட்தில்) எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாவிட்டால் தனது அணுகுமுறையை அல்லது போராட்ட உத்திகளை மாற்றவேண்டும்.நக்சல்பாரிகள் அல்லது நீங்கள் சொல்லும் எந்த புரட்சிகர இயக்கமாகவும் இருந்தாலும் மக்களின் மத்தியில் விளிப்புணர்வையும் தனது இலக்குகளில் measurable வெற்றியையும் ஏற்படுத்த வேண்டும்.

***

பொழுது போவதற்கு மனிதன் தன்னை சில இயக்கங்கள்/குழுக்களில் இணைத்துக் கொள்கிறான் அதானால் அவனுக்கு சந்தோசமே தவிர சமுதாயத்திற்கு என்ன நன்மை என்று கேள்விகள் கேட்பது நேரவிரயம்.

ஒவ்வொரு கட்சியும் "Why do we exist as a political party ?" என்று கேட்டு தனது கொள்கையின் மீதான வெற்றிகளை Appraisal செய்ய வேண்டும்.

கொள்கை /கடமை என்ன என்று தெரிந்தா தொண்டர்கள் அரசியலில் சேர்கிறார்கள்?

திரு.இரஜினி இரசிகன்
திரு.இராமதாஸ் தொண்டன்
திரு.கருணாநிதியின் உடன் பிறப்பு
திரு.எம்.ஜி.ஆர் (ஜெயலலிதா) வின் இரத்தத்தின் இரத்தங்கள்
திரு.சுஜாதாவின் வாசகர்கள்
...
...
சிம்புவின் இரசிகர்கள்...

இவர்களால் அனைவரும் தான் விரும்பிய பிம்பங்களின் இரசிகமணிகள். இவர்களால் என்ன பயன் நாட்டுக்கு? அவர் அவர்கள் அவர்களுக்குத் தெரிந்தததை அவர்களின் குழுக்களில் பேசிவிட்டு போய்விடுவார்கள். சுஜாதா ஏன் அம்பானிக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை என்று நீங்கள் கேட்பீர்களா? முடியாது ஏன் என்றால் எழுதுவதன் முலம் அவரின் வாசகர்களை சந்தோசமாகவைப்பதே அவரின் வேலை. ரோட்டில் போராட அல்ல. அதுபோல் அரசியல் கட்சிகளுக்கு அரசியல் நடத்துவதுதான் வேலையே தவிர மக்களின் நலன் அல்ல.

*****

எந்த இயக்கங்களும் இல்லாமல் நல்ல குடிமகன்களை தோற்றுவிக்க வேண்டும்.பள்ளிக்கூடங்களே நல்ல பட்டறை. சுய சிந்தனையுடன் கேள்விகேட்கும் குழந்தைகளை உருவாக்கிவிட்டால் நல்ல சமுதாயம் அமையும் என்று நம்புகிறேன்.

**

said...

ரஜினியை எதிர்த்ததை மட்டுமே தமது ஒரே சாதனையாக பறைசாற்றும் அவல நிலையிலுள்ள ராமதாஸ் ரசிகர்களின் நிலை ரஜினி ரசிகர்களின் நிலையை விட பரிதாபமாக இருக்கிறது.

ரஜினி ரசிகனாவது பரவாயில்லை தான் ஒரு அடிமுட்டாள் என்பதை வெட்கமின்றி சொல்லும் அளவு யாதார்த்தமானவன். ராமதாஸ் ரசிகர்களோ அப்படியல்ல ரொம்ப புத்திசாலித்தனாம முட்டாள் வேலை செய்கிறார்கள். இங்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் எல்லாரையும் நான் குறிப்பிடவில்லை. குறிப்பாக குழலி அவர் மீதும் அவரது ராமதாஸ் அபிமானத்தின் மீதும் நாம் வைத்த விமர்சனத்திற்க்கு பொறுப்பாக பதில் சொல்லியுள்ளார். அவருடன் விவாதம் தொடர்கிறது. அவரை இங்கு குறிப்பிடவில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

ஆக மொத்தம் ரமதாஸ் ரஜினி சண்டைக்கும், கமல் ரஜினி சண்டைக்கும், சரத்குமார் ரஜினி சண்டைக்கும், விஜய் அஜித் சண்டைக்கும் எந்தவொரு வித்திசாயமும் இல்லை என்பதுதான் ராமதாசின் விசிலடிச்சான் குஞ்சுகளினுடைய எதிர்வினைகளிலிருந்து தெரியவருகிறது.

ரஜினியை எதிர்த்ததற்க்கு இவர்கள் சொல்லும் வசனம் என்ன? - ஜெயலலிதாவும், கருணாநிதியும் தொடப் பயந்த ரஜினி என்பதுதான் அந்த பிரபலமான வசனம். அவன் ஒரு ஈயம் பித்தளைக்குக் கூட தேறாத லூசு என்பதும், அவனது ரசிகர்கள் பல்லு குத்தக் கூட தெம்பில்லாத கோழைகள் என்பதும் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் தெரியும் என்பதுதான் உண்மை. ஜெயலலிதா கொஞ்சம் அழுத்தமாக மூச்சு விட்டாலே அம்மா வீரலட்சுமி என்று அலறி துடித்து தான் அணிந்திருக்கும் கால்சட்டையிலேயே மூத்திரம் போய் விடும் காரியக் கிறுக்கன் தான் ரஜினி என்பது இன்று அம்பலாமகியுள்ளது. இன்னும் முக்கியமாக ரஜினியை எதிர்த்து பிரபலமாக வேண்டிய அவசியம் இருவருக்கும் இல்லை.

ஆனால் இந்த அத்தனை அம்சங்களின் மூலமும் தன்னை அரசியல் சக்தியாக ஆபத்தின்று நிறுவிக் கொள்ள வேண்டிய தேவை ராமதாசுக்கு இருந்தது என்பதுதான் ரமதாஸ் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே உள்ள சண்டைக்கு அடிப்படைக் காரணம். தகடூராம் தர்மபுரியிலும், வட தமிழநாட்டிலும் செல்வாக்கு பெற தலித்துகளை எதிரியாக்கினார் ராமதாஸ். ராமதாஸ் ஆக்சன் பட வியாபாரம் வட தமிழ்நாட்டை தாண்டி போக வேண்டிய நிலை வந்தவுடன் தமிழகம் முழுவதிற்க்கும் யாரை ஆபத்தின்றி எதிர்த்து விளம்பரம் தேடலாம் என்ற போது கிடைத்த இழிச்சவாயன் தான் ரஜினி. அவனை எதிர்த்தால் கேட்க்க ஒரு சொறி நாய் கூட வராது என்பது ராமதாஸ்க்கு மிக நன்றாகவே தெரியும்.

இது தவிர்த்து இவர் போர்க் குணத்துடன் எதிர்த்த இன்னும் சில தமிழகத்தின் ஆகக் கொடூரமான மக்கள் விரோதிகள் யார்? அது வேறு யாருமில்லை அன்பர்களே, நமது தாய்க்குல சிகரம் குஷ்புதான் அது. இவ்வளவுதான் ராமதாஸ், இவ்வளவுதான் அவரது அரசியல். இந்த பிழைப்புவாத புரோக்கர் அரசியலுக்குத்தான் இத்தனை ஜிகினா வேலைகள் செய்கிறார்கள் இங்குள்ள சில இணையத்தள ரசிக சிகாமணிகள்.

இவர்கள் யாருமே ஏன் ரிலையன்ஸ் அம்பானி காலில் ராமதாஸ் விழுந்தார் என்பதற்க்கும்,. அப்பொழுது அவரது வீரம் தொலைந்த இடம் எங்கே என்பத்ற்க்கும், சுயமரியாதை சுயமரியாதை என்று அலறுவார்களே அது தொலைந்த இடம் எங்கே என்பதற்க்கும் பதில் சொல்வதில்லை. எதுவுமே செய்யாமால் இந்தியாவை கொள்ளையடித்துச் செல்ல தரகு வேலை பார்த்து ராமதாஸும் அவரது குடும்பம் குட்டிகளும் கொழுக்க வேண்டும். அதையே மக்களின் விடுதலை என்று நாம் நம்ப வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அய்யோ பாவம் விசிலடிச்சான் குஞ்சுகளின் நிலை. நல்லது ரசிகர்களே எங்களுக்கு இழிச்சவாயன் பட்டம் வேண்டாம். அதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

ரமதாஸை நக்கல் தோணிக்க தோழர் ஸ்டாலின் நன்றாக்வே வாரிவிட்டுள்ளார்:
"அவனுக்கு எதிரா போராட்டம் பண்ண ராமாதாசு தியட்டர்ல புகுந்து திரைய கிழிச்சாரு பொட்டிய தூக்கி வெளில போட்டாரு பயங்கர அலப்பறை பண்ணாரு ஆனா கொடுமைய பாருங்க அம்பானிக்கு எதிரா ரிலையன்ஸ் பிர்ஷ்சுல புகுந்து ஒரு கத்திரிகாய கூட தூக்கி வெளியில போடல.. மருத்துவரய்யா பலே கில்லாடிதான்.."

தனது பிள்ளை துன்பமணிக்கு மத்தியில் கோக்குக்கு கோமணம் கழுவும் வேலை வாங்கிக் கொடுத்தது தவிர்த்து வேறு என்ன அதிகப்படியாக தியாகம் செய்துவிட்டார் இந்த யோக்கிய சிகாமணி என்று அவரது ரசிக கண்மனிகள் விளக்கினால் அடியேன் பாக்கியம் பெற்றவனாவேன்.

அசுரன்

said...

//என்னை கேட்டால் பார்பனர்களின் பலமே ராமதாஸ், வீரமணி, கருணாநிதி, CPI, CPM இவைதான். இவர்களை ஒழித்துவிட்டால் பார்ப்பனர்கள் பதுங்குவதற்க்கு இடமின்றி நம்மிடம் அடிப்பட்டு ஒழிந்துவிடுவர்.//

சூப்பர்! :-))))))))


தோழரே!

ஒரு சிறு எண்ணம். கிழுமாத்தூராரின் பதிவு பற்றி பேசியிருக்கிறீர்கள். நான், கிழுமாத்தூரார், குழலி முதலியானோர் ஜனநாயக அரசியல் பேசுபவர்கள். ஆனால் உங்களது விவாதங்களோ கம்யூனிஸ கட்டமைப்பிலேயே அமைகிறது. உங்களுடன் நாங்கள் என்ன விவாதித்தாலும் அதை கம்யூனிஸ கோட்பாடுகளுடனேயே apply செய்து விவாதிப்பீர்கள். இந்நிலையில் ஜனநாயக அரசியல் பேசுபவர்களும், கம்யூனிஸ சித்தாந்த அரசியல் பேசுபவர்களும் விவாதிக்கவே முடியாது என்ற சூழ்நிலை இருக்கிறது. அப்படி விவாதிக்க முற்பட்டால் ஜனநாயக அரசியல் பேசுபவர்களே கோமாளிகளாக்கப் படுவார்கள் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன் :-))))))))))

said...

//இவர்கள் யாருமே ஏன் ரிலையன்ஸ் அம்பானி காலில் ராமதாஸ் விழுந்தார்
//
இன்னும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்களேன், எனக்கு தெரிந்தவரை ரிலையன்ஸ் ப்ரெஷ் கடைக்கு சென்ற வாடிக்கையாளர்களின் காலில் விழுந்ததாகத்தான் செய்தி படித்தேன், ரிலையன்ஸ் அம்பானி காலில் விழுந்த செய்தி (அதாவது அம்பானியிடம் அடி ணிந்த செய்தி) எதுவும் இருந்தால் சொல்லுங்கள்... பேசலாம்... வெறும் வார்த்தைகள் மட்டுமல்லாமல் குறைந்த பட்ச ஆதாரமோ குறைந்த பட்ச தர்க்க லாஜிக்கோ எதிர்பார்க்கிறேன்....

மறுமொழிக்கு காலதாமதமாகும் மன்னிக்கவும்....

said...

//கற்புக்கும், சிகரெட்டுக்கும் நேரடியாக செருப்பு, வெளக்குமாறு போன்று ஆயுதங்களை ஏந்திக் கொண்டு மாதர்களை போராட வைத்த
மாலடிமைக்கு சில்லறை வியாபாரம் என்றவுடன் படு சில்லறைத்தனமாக காலில் விழும் போராட்டம் நடத்த தோன்றிய மர்மம் எனக்கு
தெளிவாகவே புரிகிறது. பெரியாரை தங்களது தலைவராக கருதிக் கொள்ளும் இவர்கள் காலில் விழும் போராட்ட நடத்திய பொழுது
யாருடைய சுயமரியாதை பறி போனது என்று புதிய வியாக்கானங்களை தரும் அபாயம் உள்ளது//

ராமதாஸ் உண்மையில் மிகத் தந்திரசாலி. உங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டதைப் போல் யாரை எதிர்த்தால் கேட்க நாதி இல்லாமல் பெரியாளாவோம்
என்பதை மிகச் சரியாக உணர்ந்த அரசியல்வாதி.

அடிப்படையிலே கருணாநிதியின் நரித்தனமும், ஜெயலலிதாவின் மொட்டையான ஆத்திரமும் ஆவேசமும் இனைந்த ஒரு கலவை தான் ராமதாஸ்.
மக்கள் எதன் காரணமாக வாழ்க்கையில் அடிபடுகிறார்கள் என்பதை ஓரளவு சரியாக அனுமானிக்கும் திறன் கொண்ட ராமதாஸ், அதை எதிர்ப்பது போல்
எதிர்த்து அடிப்படை மக்களின் இடையே ஓரளவு ஆதரவு தளத்தையும் உண்டாக்கி வைத்துள்ளார். ஆனால் நீங்கள் உங்களின் பின்னூட்டத்தில்
குறிப்பிட்டது போல் ஆதரவுத் தளத்தை தனது அரசியல் ஆதாயத்துக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கருங்காலித்தனம்
தான் ராமதாஸின் அரசிய்ல்.

சாதி சங்கத் தலைவராக தனது அரசியலை ஆரம்பித்த ராமதாஸ், தனது எல்லையை விரித்துக் கொள்ளவே தமிழ் உணர்வு, திராவிட உணர்வு, பெரியார்,
ரஜினி எதிர்ப்பு என்று சமயத்துக்குத் தகுந்த வேஷங்களைத் தொடர்ந்து மாற்றி வந்துள்ளார். இந்தத் தளங்களில் இவர் நடத்திய போராட்டங்கள் எதுவும்
ஒரு தீமானகரமான எல்லையை நோக்கி எடுத்துச் செல்லவில்லை..

ரஜினி எதிர்ப்பு என்று ஆரம்பித்து ஓரளவு பிரபலமானவுடன் அதனை அப்படியே அமுக்கி விட்டதோடல்லாமல் இப்போது ரஜினியும் அன்புமனியும்
தனிப்பட்ட முறையில் நன்பர்களாகவும் ஆகியுள்ளனர் ( ஒரு வார இதழில் தற்போது வெளியாகி வரும் ஒரு கட்டுரையில் இருந்து).. எதிர்காலத்தில்
ரஜினியின் திரைப்படம் எதற்காவது வினியோக உரிமையை பினாமி பேரிலோ, சொந்தப் பேரிலோ எடுத்தாலும் அது ஆச்சர்யமில்லை..

தமிழுணர்வென்பது, சில 'தமிழ்த் தவளைகளை' வைத்து பஜனை நடத்தும் அளவில் தான் இருக்கிறது.. இது போன்ற தமிழரிஞர்களைத் தான் பெரியார்
தனது காலத்திலேயே விமர்சித்துள்ளார்.

//அப்பனுக்கு அம்பானியக் கண்டாக்க அதிருது, புத்திரனுக்கு கோக் பெப்ஸி பேரக் கேட்டாக்க அதிருது. நம்ம நண்பர் குழலியோ
ராமதாஸ் பேரச் சொன்னா யார்யாருக்கோ அதிருது என்று விளம்பரம் இடுகிறார். யாதர்த்தத்தை பரிசீலித்து உணர அவருடைய ராமதாஸ்
ரசிப்புத் தன்மை தடுக்கிறது எனில் அவருக்கும் ரஜினி ரசிகனுக்கும் என்ன வேறுபாடு? இது ஒரு கேள்விதான்.//

இதற்கு பதிலாக குழலியின் பின்னூட்டத்தில் அவர் வைத்திருக்கும் வாதங்களுக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது..

@குழலி

//கார்ப்பரேட் கட்சிகளாகவும் இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களும் மறுக்கப்பட்டவர்களுக்கும் ஓரளவிற்காவது நன்மையை யார்
செய்கிறார்களோ அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை நான் ரசிக்கவே செய்கிறேன்//
முடிந்திருக்கும் ஆனால் இப்போதோ குறைந்த பட்ச அரசியல் படுத்துதலை அவர்களின் மக்களுக்கு செய்திருக்கிறார்கள்....
இவ்வியக்கங்களின் அரசியல் சமரசங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவ்வியக்கங்கள் நீர்க்க ஆரம்பிக்கும், இப்போதைக்கு செய்து
கொண்டிருக்கும் அரசியல் சமரசங்களால் அவ்வியக்கங்கள் தொடக்கத்தைவிட இப்போது நீர்த்திருந்தாலும் முழுமையாக நீர்க்கவில்லை,//

குழலி பா.ம.க நடத்தும் போராட்டங்களும் அவர்களின் அரசியலும் அரசு பால்ராஜ் குறிப்பிட்டது போல் க்ராக்ஜாக் பிஸ்கட் போல பிஃப்டி - பிஃப்டி
என்று கருதுவதாக நான் நினைக்கிறேன்.. அவர் இதுவரையில் பா.ம.க எடுத்து நடத்திய போராட்டங்களின் / கையில் எடுத்துக் கொண்ட பிரச்சினைகளின்
கதி என்ன? அதன் மூலம் மக்களை எந்தளவிற்கு அரசியல் படுத்தி இருக்கிறார்கள்.. போராட்டம் எந்த முனையில் இருக்கும் போது பின்வாங்கினார்
என்பதையெல்லாம் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... குறிப்பாக லேட்டஸ் சாமெர்சால்டான ரிலையன்ஸ் எதிர்ப்பில் ராமதாஸின் சறுக்கல் பற்றி
குழலியின் கருத்தையும் எதிர்பார்க்கிறேன்..

குழலி ராமதாஸின் போராட்டம் நீர்க்கும் போது அவரை எதிர்க்கும் நிலை எடுக்கப் போவதாக சொல்கிறார்.. அப்படி எப்போது எடுத்திருந்தால்
அவர் அந்த நிலைக்கு எப்போதோ வந்திருக்க வேண்டும்..

கடைசியாக.. கட்டுரையை நான் முந்தைய வடிவத்தில் வாசிக்கவில்லை.. ஆனாலும் இன்னும் கடுமையான வார்த்தைகள் இருந்திருந்தால் அதற்கு
ராமதாஸ் மிகப் பொருத்தமானவர் தான் என்பது என் க்ருத்து

said...

லக்கிலுக்,

ஜனநாயகம் என்று நீங்கள் எதனை கருதுகிறீர்கள். இன்றைய போலி சட்டமன்ற நாடாளுமன்ற ஜனநாயக அரசியலை பேசுவதா?

நீங்கள் ஜனநாயக சக்திகள் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். நானும் ஜனநாயக சக்தி என்பதையும் சேர்த்தே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இங்கு உங்களை ஜனநாயக சக்திகள் எனும் பொழுது உங்களது வோட்டு கட்சி அரசியல் சார்பை நான் கணக்கில் கொள்ளவில்லை. பொதுவாக பெரும்பான்மை மக்களின் நலனுக்கான கருத்துக்களை நீங்கள் கேள்விமுறையின்றி ஆதரிக்கிறீரக்ளே அதுதான் உங்களை ஜனநாயக சக்திகளாக பார்க்க வைக்கிறது. எ-கா: பார்ப்பனியத்தை ச்மரசமின்றி எதிர்த்தல், ஏகாதிபத்தியத்திற்க்கு இந்தியா அடிமையாவதை விரும்பாமை etc.

இப்பொழுது எழுந்துள்ள பிரச்சனை இந்த இரண்டு அம்சங்களிலும் உங்களை ஏமாற்றும் உங்களது அபிமான தலைவர்களை நான் விமர்சனம் செய்வதுதான். அதனை விவாதிப்பதில் எங்கே கம்யுனிசம் வருகிறது? இதுவரை இந்த பதிவில் கேட்ட எந்த கேள்விக்கு கம்யுனிசத்தை இழுத்துள்ளேன்(நேரடியான குற்றச்சாட்டுகளை தவிர்த்து).


//ஜனநாயக அரசியல் பேசுபவர்களே கோமாளிகளாக்கப் படுவார்கள் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்//

ஜனநாயக அரசியலை நான் எங்கு எப்பொழுது கோமாளி ஆக்கியுள்ளேன்?

ஜனநாயக அரசியல் என்று இங்கு எதனை குறிப்பிடுகிறீர்கள்?

இங்கே கல்வெட்டு என்பவர் கம்யுனிசம் பேசுவதில்லை. பொதுவாக மக்கள் நலனை பேசுகிறார். கம்யுனிச்டுகள் போலவே, உங்களைப் போலவே அவரும் ஒரு ஜனநாயக அரசியல் சக்தி. அவரை எங்காவது கோமாளியாக்கியுள்ளேனா?

ஏன் லக்கிலுக்? :-((

அசுரன்

said...

குழலி,

//ரிலையன்ஸ் அம்பானி காலில் விழுந்த செய்தி (அதாவது அம்பானியிடம் அடி ணிந்த செய்தி) எதுவும் இருந்தால் சொல்லுங்கள்... பேசலாம்... வெறும் வார்த்தைகள் மட்டுமல்லாமல் குறைந்த பட்ச ஆதாரமோ குறைந்த பட்ச தர்க்க லாஜிக்கோ எதிர்பார்க்கிறேன்....//


ரஜினி நேரடியாக ஜெயலலிதா காலில் விழுந்தால்தான் நம்புவேன் என்று சொல்லும் ரசிகனுக்கும், ராமதாஸ் நேரடியாக அம்பானி காலில் விழுந்ததை காட்டினால்தான் நம்புவேன் என்று சொல்லும் உங்களுக்கும் ஒரு ஏழு வித்தியாசம் சொல்லுங்களேன் குழலி.

இன்னும் சொன்னால் பெரும்பாலன ரசிகர்கள் ரஜினி ஜெயலலிதா காலில் விழுந்ததையும் சேர்த்தேதான் ரசிக்கிறார்கள். அவர்களாவது அந்தளவு யாதார்த்தவதிகளாய இருக்கிறார்கள்.

ரமதாஸ் ஒன்றும் இழிச்சவாயன் இல்லை தனது அடிவருடித்தனத்தை விள்ம்பரப்படுத்திக் கொள்ள. ராஞ்சியில் கடைக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர் சில்லறை வியாபாரிகள். அது போன்றதொரு போராட்டம் கூட வேண்டாம், பாமகாவின் விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து தொடர் ஒரு வார முற்றுகைப் போராட்டம் நடத்தலாமே ரமதாஸ்? ஏன் முடியவில்லை. அப்படி நடத்தியிருந்தால் மக்களை அரசியல் படுத்தியிருக்கலாம். இங்கு மக இகவை மக்களை அரசியல் படுத்தச் சொல்லி அறிவுரை பகன்றவர்கள் யாருமே மக இகவின் போராட்டங்கள் எல்லாமே மக்களை அரசியல்ப் படுத்தி அவர்களின் சொந்த முயற்சியில் உரிமைகளை பெற வழி செய்வதாக இருப்பது குறித்து கள்ளமௌனமே சாதிக்கீறார்கள். அந்த போராட்ட வழிமுறைகளை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கவும்.

பத்து நாட்களில் கடையை காலி செய் என்று வீறாப்பாக் முழங்கியவர் குறைந்த பட்சம் குஷ்பு விவகாரத்த்லி செய்தது போல விளக்குமாறுடன் சென்று ரிலையன்ஸை முற்றுகையிட்டு அங்கு வாங்கு வருபவர்களிடம் ரிலையன்ஸை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்திருக்கலாம். இதையெதுவுமே செய்யாமல் காலில் விழுவதற்க்கு விளக்கம் கொடுக்கர்களே குழலி, உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை நான்.

எந்த வகையில் அம்பானிக்கு எதிராக இந்த காலில் விழும் போராட்டம் செயல்பட்டுள்ளது என்றாவது சொல்லுங்கள் குழலி. நாமும் அதே போராட்ட வழிமுறைகளை யோசிக்கலாம்.

எனது கட்டுரையில் கீழ் காணும் வரிகளை குறிப்பிட்டிருந்தேன். உங்களது பின்னூட்டத்தை பார்த்த பின்பு அதுதான் ஞாபகம் வருகீறது.

//கற்புக்கும், சிகரெட்டுக்கும் நேரடியாக செருப்பு, வெளக்குமாறு போன்று ஆயுதங்களை ஏந்திக் கொண்டு மாதர்களை போராட வைத்த மாலடிமைக்கு சில்லறை வியாபாரம் என்றவுடன் படு சில்லறைத்தனமாக காலில் விழும் போராட்டம் நடத்த தோன்றிய மர்மம் எனக்கு தெளிவாகவே புரிகிறது. பெரியாரை தங்களது தலைவராக கருதிக் கொள்ளும் இவர்கள் காலில் விழும் போராட்ட நடத்திய பொழுது யாருடைய சுயமரியாதை பறி போனது என்று புதிய வியாக்கானங்களை தரும் அபாயம் உள்ளது.//

அரசு பால்ராஜின் எதிர்வினை குறித்தும் உங்களது கருத்துக்களை அறிய விரும்புகிறேன் குழலி.

//மறுமொழிக்கு காலதாமதமாகும் மன்னிக்கவும்.... //

No Problem :-))

அசுரன்

said...

//அதே வேளை உலகத்தில் யாரையுமே ஒப்புக்கொள்ளமாட்டோம் ,நாங்கதான் பெரிய புடுங்கி என்றும் பிற இயக்கத்தலைவர்களையும்,இயக்கங்களையும் வாய்க்கு வந்தபடி ஏசுவதுதான் புதிய ஜனநாயகபூர்வமான (அ )!!! புரட்சிகர வழிமுறை என்று கொண்டிருப்பது இலேசான புன்னகையைமட்டுமே வரவழைக்கிறது. //

இப்படி எழுதியுள்ளார் வரவனையான். நமக்கு நகைப்பை வரவழைப்பது எல்லாம் நாம் விமர்சிக்கும் தரகு புரோக்கர் கொஸ்டி கட்சிகளை மட்டுமே அரசியல் கட்சியாக பார்க்கும் வரவனையானினுடைய அப்பாவித்தனம்தான்.

நாம் விமர்சிப்பது எல்லாம் வோட்டுக் கட்சி சீர்குலைவு அமைப்புகளை மட்டும்தான்.

மக்களின் விடுதலைக்காக மாற்று அரசியல் பேசும் அமைப்புகளை இது மாதிரி விமர்சிப்பதில்லை.

வியாபாரிகள் சங்கம் முதல் பெரியார் திராவிட கழகம் வரை நட்பு சக்திகளாய் பார்க்கும் அமைப்புகள் லிஸ்ட் பெரிது.

துரதிருஷ்டவசமாக இங்கு எழுப்பியுள்ல கேள்விகள் எதையும் தர்க்க ரீதியாக எதிர்க் கொள்ளும் திராணியின்றி நெருப்புக் கோழி போல பொந்துக்குள் தலையை விட்டு தப்பித்தாதாக எண்ணிக் கொள்ளும் தவறை செய்கிறார் வரவனையான். பாவம்...

அசுரன்

said...

//ஜனநாயகம் என்று நீங்கள் எதனை கருதுகிறீர்கள். இன்றைய போலி சட்டமன்ற நாடாளுமன்ற ஜனநாயக அரசியலை பேசுவதா?//

உங்களுக்கு இது போலியாக தெரிகிறது. எங்களுக்கு இந்த அரசியல் பலநேரங்களில் வாழ்வாதாரமாக தெரிகிறது. அரசு ஊழியர்களை மனிதநேயமின்றி காட்டுமிராண்டித்தனமாக நடத்தியவர்களை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் குறிப்பிடும் போலி சட்டமன்ற அரசியலையே நாங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. மிசா கொடுமை மூலமாக சர்வாதிகாரத்தை அமல்படுத்திய பெண்ஹிட்லரை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் குறிப்பிடும் போலி பாராளுமன்ற அரசியலையே நாங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

//நீங்கள் ஜனநாயக சக்திகள் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். நானும் ஜனநாயக சக்தி என்பதையும் சேர்த்தே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்//

நன்றி.



//இங்கு உங்களை ஜனநாயக சக்திகள் எனும் பொழுது உங்களது வோட்டு கட்சி அரசியல் சார்பை நான் கணக்கில் கொள்ளவில்லை. பொதுவாக பெரும்பான்மை மக்களின் நலனுக்கான கருத்துக்களை நீங்கள் கேள்விமுறையின்றி ஆதரிக்கிறீரக்ளே அதுதான் உங்களை ஜனநாயக சக்திகளாக பார்க்க வைக்கிறது. எ-கா: பார்ப்பனியத்தை ச்மரசமின்றி எதிர்த்தல், ஏகாதிபத்தியத்திற்க்கு இந்தியா அடிமையாவதை விரும்பாமை etc.//

பெரும்பான்மை மக்கள் நலனுக்காக சமரசங்கள் ஏதேனும் செய்துகொண்டாலும் அதில் தவறேதுமில்லை என்பது என் எண்ணம்!


//இப்பொழுது எழுந்துள்ள பிரச்சனை இந்த இரண்டு அம்சங்களிலும் உங்களை ஏமாற்றும் உங்களது அபிமான தலைவர்களை நான் விமர்சனம் செய்வதுதான். அதனை விவாதிப்பதில் எங்கே கம்யுனிசம் வருகிறது? இதுவரை இந்த பதிவில் கேட்ட எந்த கேள்விக்கு கம்யுனிசத்தை இழுத்துள்ளேன்(நேரடியான குற்றச்சாட்டுகளை தவிர்த்து)//

உங்களது விவாதங்கள் எதுவாக இருந்தாலும் கம்யூனிஸ அஸ்திவாரத்திலேயே எழுப்பப் படுவது போன்ற உணர்வு எனக்கிருக்கிறது. எம் தரப்பு அரசியலை நாங்கள் பேசவந்தாலும் உங்களது கம்யூனிஸ கட்டமைப்பு விவாதத்துக்குள் விவாதத்தை நகர்த்தி விடுகிறீர்கள்.


//ஜனநாயக அரசியலை நான் எங்கு எப்பொழுது கோமாளி ஆக்கியுள்ளேன்?

ஜனநாயக அரசியல் என்று இங்கு எதனை குறிப்பிடுகிறீர்கள்?

இங்கே கல்வெட்டு என்பவர் கம்யுனிசம் பேசுவதில்லை. பொதுவாக மக்கள் நலனை பேசுகிறார். கம்யுனிச்டுகள் போலவே, உங்களைப் போலவே அவரும் ஒரு ஜனநாயக அரசியல் சக்தி. அவரை எங்காவது கோமாளியாக்கியுள்ளேனா? //

ஜனநாயகம் என்பதை நான் பார்க்கும் விதம் வேறு. நீங்கள் பார்க்கும் விதம் வேறு. உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது :-)

உங்களுடைய Ultimate Aim புரட்சி என்பதாக நான் புரிந்துகொள்கிறேன். அப்புரட்சிக்காக எந்த சமரசமும் செய்துகொள்ள நீங்கள் தயாராக இல்லை. எனக்கும் புரட்சி அவசியமாகப் படுகிறது. ஆனாலும் தற்காலிக சமரசத்தை அவசியம் ஏற்படின் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் மதிக்கும் தலைவர்களும் அப்படியே நினைக்கிறார்கள் போலிருக்கிறது :-)

said...

//மக்களின் விடுதலைக்காக மாற்று அரசியல் பேசும் அமைப்புகளை இது மாதிரி விமர்சிப்பதில்லை. //

தோழரே!

உங்களது மாற்று அரசியல் என்ன?

ஓட்டரசியல் மட்டுமே இப்போதைக்கு இந்தியாவில் சாத்தியமாக இருக்கும் நேரத்தில் வேறு என்ன அரசியலை நம்பி நான் இறங்க முடியும்?

said...

//அரசு ஊழியர்களை மனிதநேயமின்றி காட்டுமிராண்டித்தனமாக நடத்தியவர்களை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் குறிப்பிடும் போலி சட்டமன்ற அரசியலையே நாங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. மிசா கொடுமை மூலமாக சர்வாதிகாரத்தை அமல்படுத்திய பெண்ஹிட்லரை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் குறிப்பிடும் போலி பாராளுமன்ற அரசியலையே நாங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.//

லக்கிலுக் இங்கு விவாதம் ராமதாஸ் ஒரு மாமாவா இல்லையா என்பதாக நடக்கிறது என்பதை நினைவு படுத்திவிட்டு எதிரிவினை செய்கிறேன். ஏனேனில் பொதுவான அரசியலை விவாதிக்க என்னை இழுத்துச் செல்வதன் மூலம் ராமதாஸ் தப்பிச் செல்ல முயற்சி செய்கிறார் அதனை என்னால் அனுமதிக்க இயலாது. :-))

ஓட்டு அரசியல் என்பது எதனை சாதித்துள்ளது என்று சொல்லுங்கள் லக்கிலுக். நாட்டை வெட்கமின்றி அடகு வைத்துள்ளதை தவிர்த்து.

நீங்கள் சொன்ன விசயங்களை செய்த காட்டுமிராண்டிகளுக்கு என்ன த்ண்டனை வாங்கிக் கொடுத்துள்ளது இந்த அரசியல் அல்லது இதே போன்றதொரு சம்பவம் நடந்துவிடாமல் இருக்க என்ன உத்திரவாதம் கொடுத்துள்ளது இந்த அரசியல். ஏன் கருணாநிதியின் மாஞ்சோலை படுகொலைகளையும், நீலகிரி தேயிலை தொழிலாளர் பிரச்சனைகளையும் விட்டு விட்டீர்கள். How will you punish Karunanidhi?

இவையெல்லாம் பரஸ்பரம் பலி வாங்கும் நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தை பயன்படுத்திய சம்பவங்கள்தானே தவிர்த்து மக்கள் நலனுக்காக செய்தவை அல்ல. ஏனேனில் கருணாநிதி முதல் ஜெயலலிதா வரை கூட்டுக் களவானியாக சேர்ந்து நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கு எப்படி உங்கள் அரசியல் தண்டனை வாங்கி தந்துவிடும் என்பதற்க்கு பதில் இல்லாமல் இருப்பதே இதற்க்கு உதாரணம்.


//பெரும்பான்மை மக்கள் நலனுக்காக சமரசங்கள் ஏதேனும் செய்துகொண்டாலும் அதில் தவறேதுமில்லை என்பது என் எண்ணம்! //

எது சமரசம்? சுயமரியாதையின்றி கட்டிய பெண்டாட்டியையும், தாயையும் கூட்டிக் கொடுப்பதா? ச்மரசத்திற்க்கு உங்கள் வரையறை என்ன?

என்னவிதமான சம்ரசம்? மக்களை காவு கொடுக்கும் சம்ரசமா?

நானும் சமரசவாதிதான். கம்யுனிஸ்ட் கட்சி மட்டுமே இந்திய விடுதலையை வாங்கித் தரும் என்று எங்குமே எப்பொழுதுமே நான் சொன்னதில்லை. ஜனநாயக சக்திகள் அனைத்தும் சேர்ந்துதான் விடுதலை தரும் என்று சொல்லி வருகிறேன்.

மாவோவும், லெனின், ஸ்டாலினும் எதிரிகளுடன் சம்ரசம் செய்துள்ளனர். ஆனால் கருணாநிதியும், வீரமனியும், ரமாதாஸும் கூட்டிக் கொடுத்துள்ளனர். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்று கருதுகிறேன்.

அம்பானியை சும்மா பேருக்கு எதிர்ப்பதாக பாவ்லா காட்டிவிட்டு கல்லா கட்டுவது சம்ரசமா? தண்ணீரை தனியாருக்கு அவன் கேட்க்காமேலேயே வைச்சுக்கோ வைச்சுக்கொ என்று கூட்டிக் கொடுப்பது சம்ரசமா? பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு காவு கொடுப்பது ச்மரசமா? விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு SEZக்களுக்கு கூட்டிக் கொடுப்பது சம்ரசமா? 100% வரி விலக்கு முதல் பல்வேறு சலுகைகளை கோடிகளில் அள்ளி அள்ளி பன்னாட்டு தரகு பன்றிகளுக்கு கொடுப்பது சம்ரசமா? இதையெல்லாம் கேட்டு போராடினால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டினாரே கருணாநிதி அது சம்ரசமா?


//உங்களது விவாதங்கள் எதுவாக இருந்தாலும் கம்யூனிஸ அஸ்திவாரத்திலேயே எழுப்பப் படுவது போன்ற உணர்வு எனக்கிருக்கிறது.//

நான் இங்கு எழுப்பிய கேள்விகளை கேட்க்க ஒருவன் கம்யுனிஸம் தெரிந்தவனாகவோ அல்லது கம்யுனிஸ்டு பார்வையினடிப்படையிலோ இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் கல்வெட்டை எடுத்துக்காட்டாக கொடுத்தேன். ஏன் அருந்ததிராய் இதைவிட கேவலமாக வோட்டு அரசியலின் போலித்தனத்தையும், கருணாநிதி, ராமதாஸ் வகையாறாக்கலையும் கிழித்து தோரணம் கட்டுகிறார். அவர் என்ன க்ம்யுனிஸ்டா? அப்படியே கம்யுனிசமாக இருந்தால்தான் என்ன? உண்மைகளை உரக்கச் சொல்ல என்ன கூச்சம் வேண்டிக் கிடக்கீறது?



//ஜனநாயகம் என்பதை நான் பார்க்கும் விதம் வேறு. நீங்கள் பார்க்கும் விதம் வேறு. //

எங்கிருந்து பார்த்தாலும் ஜனநாயகம் ஒன்றுதான். நீங்கள் மக்கள் விரோதி எனில் ஜன்நாயகம் என்பது உங்களுக்கு சர்வாதிகாரமாக தெரியும்,. நீங்கள் மக்களுடன் இருக்கீறீர்கள் எனில் அது ஜனநாயகமாக தெரியும். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் சர்வாதிகாரமே. அதனை நடைமூறைபடுத்துவது குறித்து உங்களது அடுத்த கேள்விகள் இருக்கும் பட்சத்தில், இங்கு விவாதிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். இதே தலைப்பை வேறு சில பதிவுகளில் விவாதிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பம் எனில் விரிவாக நாம் அந்த பதிவுகள் எதிலாவது ஒன்றில் பேசலாம்.


//எந்த சமரசமும் செய்துகொள்ள நீங்கள் தயாராக இல்லை.//

தவறு. நான் கூட்டிக் கொடுக்க மட்டுமே தாயாராயில்லை. கூட்டிக் கொடுப்பதற்க்கும் சம்ரசம் செய்வதற்க்கும் உள்ள வித்திய்சாம் மேலே ஒரு இடத்த்லி குறிப்பிட்டுள்ளேன் :-))


//நான் மதிக்கும் தலைவர்களும் அப்படியே நினைக்கிறார்கள் போலிருக்கிறது :-) //

நீங்கள் மதிக்கும் தலைவர்களின் கருணாநிதி, ராமதாஸ்கள் இருக்கும் பட்சத்தில் உங்களது இந்த கருத்தை மாற்றிக் கொள்வதே நலம். ஏனேன்லி அவர்கள் எந்த காலத்திலும் மக்கள் நலனுக்கு ஒரு மசிரைக் கூட பிடுங்கிப் போட்டதில்லை என்பது அவ்ர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளில் உறுதிப்படுவதையே இங்கும் வேறு சில பதிவுகளிலும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.


//உங்களது மாற்று அரசியல் என்ன?//

எனது அரசியல் என்ன என்பதை இந்த பதிவு முழுவதும் எழுதிய பிற்ப்பாடு ராமதாஸை திட்டும் பொழுது நீங்கள் அந்த கேள்வியை கேட்பதால் பதில் சொல்லி விவாதத்தை திசை திருப்ப விரும்பவில்லை நண்பரே :-)) கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் பதில் சொல்கிறேன்.
:-))

ஓட்டுரசியல் தவிர்த்த வேறு அர்சியலே இல்லை என்று நீங்கள் நினைப்பது தவறு. கண் முன்னால் பல இடங்களீல் தேர்தல் பாதையில்லாத அரசியல்தான் மக்கள் விரோத திட்டங்களை ஓட ஒட விரட்டியுள்ளது.

சமீபத்திய எ-கா: நந்திகிராம், சிங்கூர், விவசாய அமைப்புகளீன் பல்வேறு போராட்டங்கள், புதுச்சேரி செவல்குடி போராட்டம், கலிங்காநகர் இப்படி போன மாதத்த்லி மட்டும் பெரிய லிஸ்டே போடலாம். இது போல மக்களின் உரிமைக்காக போராடும் அரசியல் என்பது உண்மையில் சட்டமன்ற/நாடாளுமன்ற போலி அமைப்புக்கு வெளியேதான் இன்று வரை உள்ளது. பெரியார் சிலை உடைத்த பொழுது கூட அவர பெருமையை நிலைநாட்டியது வோட்டுக் கட்சிசாரா அரசியல்தான்.


விரிவான எதிர்வினைக்கு நன்றி லக்கிலுக்

அசுரன்

said...

சில கேள்விகளுக்கு தங்களின் நிலையை விளக்க முடியுமா?

சமூக வாழ்க்கையில் குறைந்தபட்சம் மக்களுக்கு என்ன உரிமைகள் உங்களுடைய இலக்கு?

லெனினின் ஒரு புத்தகத்தில் படித்தாக நினைவு
"மக்களின் சமூக,அரசியல் பிரச்சினைகள் அறுதியிடபடாதது... அதற்க்கான தீர்வுகளும் நிரந்தரமானதல்ல..." என்று

தற்போதைய அரசியல் பிரச்சினைகளுக்கு...
தங்களுடைய நிலை புரட்சி தான் தீர்வு என்றால்... நாளை உங்களுடைய புரட்சிகரமான ஜனநாயக ஆட்சியிலும்...
ஓவ்வொரு மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கும் புரட்சி செய்ய வேண்டுமா!!!

சமூக பிரச்சினைகளை அணுகும் போது அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு எல்லோருக்கும் மன அமைதியை தரும் முடிவுகளை ஆதரிக்கிறீர்களா! அல்லது முன்பே ஏதாவது ஒரு சித்தாந்ததின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை வலியுறுத்தி அதை ஏற்றுக்கொள்ளாதவர்களை அழிக்கும் எண்ணமா!!!

உங்களுடைய விளக்கம் கிடைக்குமா!!!

said...

//சமூக வாழ்க்கையில் குறைந்தபட்சம் மக்களுக்கு என்ன உரிமைகள் உங்களுடைய இலக்கு?//


தற்போதைய சூழலில் பெரும்பான்மை மக்களின் வாழ்வுரிமைதான் இலக்காக இருக்க முடியும்.

லெனின் அந்த வரிகள் சரியானதே, ஒரு ஆண்டான் அடிமை சமூகத்தில் தேவைப்படும் உரிமை என்பது அடிமை முறை ஒழிப்பு,.

இன்றைய இந்தியாவின் நிலையில் தேவைப்படுவது ஒரு முதலாளித்துவ புரட்சி. அதாவது உற்பத்தி முறைகளை முதலாளித்துவ முறைக்கு வளர்த்தெடுக்குத் தேவையான புரட்சி.


//தற்பேததைய அரசியல் பிரச்சினைகளுக்கு...
தங்களுடைய நிலை புரட்சி தான் தீர்வு என்றால்... நாளை உங்களுடைய புரட்சிகரமான ஜனநாயக ஆட்சியிலும்...
ஓவ்வெதரு மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கும் புரட்சி செய்ய வேண்டுமா!!!//

ஆம். அதுதான் நடந்தேறும். மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. என்றைக்கு இந்த சமூகம் தனியுடைமை சமுகமாக மாறியதோ அன்றையிலிருந்து சமூக புரட்சி தவிர்க்க இயலாதாதாகி விட்டது. என்ன செய்ய துரதிருஷ்டவசமாக வரலாற்றில் இது நிகழ்ந்துவிட்டது :-((


//சமூக பிரச்சினைகளை அணுகும் பேதது அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு எல்லேதருக்கும் மன அமைதியை தரும் முடிவுகளை ஆதரிக்கிறீர்களா! //

அப்படி தீர்வு சொல்க்றீரக்ள் எனில் அது பொய் என்று அர்த்தம். ரிலையன்ஸ் பிரச்சனையில் அம்பானிக்கும், சில்லறை வியாபாரிக்கும் மன அமைதி தரும் தீர்வு சொல்லுங்கள் எனது மார்க்ஸிய அரசியலை விட்டு விட்டு திமுக வின் அரசியலை பேசுகீறேன்.


//அல்லது முன்பே ஏதாவது ஒரு சித்தாந்ததின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை வலியுறுத்தி அதை ஏற்றுக்கெதள்ளாதவர்களை அழிக்கும் எண்ணமா!!!
//

சித்தாந்தம் சித்தாந்தமில்லை என்பதெல்லாம் விடுங்கள். இதற்க்கு முன்பு கேட்டவையெல்லாம் ராமதாஸ் மீதான எனது குற்ற்ச்சாட்டின் நம்பகத்தன்மையை உறுதிப்படுதத உதவும் என்பதால் பதில் கொடுத்தேன். இந்த கேள்வி அப்படியில்லை என்பது எனது கருத்து. ராமதாஸ் மீதும், வோட்டு பொறுக்கி அரசியலின் போலித்தனத்தை அம்பலப்படுத்தவும் பகுத்தறிவு போதும். எந்தவொரு சித்தாந்த பின்புலமும் தேவையில்லை. ஏனேனில் உலகமயத்தையும், போலி ஜனநாயகத்தையும் எதிர்ப்பவர் எல்லாம் ஏதாவது சித்தாந்தின் அடிப்படையில் எதிர்க்கவில்லை.

அசுரன்

said...

//எது சமரசம்? சுயமரியாதையின்றி கட்டிய பெண்டாட்டியையும், தாயையும் கூட்டிக் கொடுப்பதா? ச்மரசத்திற்க்கு உங்கள் வரையறை என்ன?//

//மாவோவும், லெனின், ஸ்டாலினும் எதிரிகளுடன் சம்ரசம் செய்துள்ளனர். ஆனால் கருணாநிதியும், வீரமனியும், ரமாதாஸும் கூட்டிக் கொடுத்துள்ளனர்//

இந்த நிலையில் உங்களோடு எப்படி விவாதத்துக்கு வரமுடியும் என்று தெரியவில்லை :-(((((

வழக்கம்போல உங்களுக்கு "காமா சோமா" பின்னூட்டம் போடவேண்டியது தான்!

said...

நன்றி

(நான் தங்களுடைய இப்பதிவிலிருந்து விலகி வேறு சில கருத்துகளை முன்னிறுத்தி முதலில் கேள்விகளை எழுப்பி பின்பு இப்பதிவுக்கு வரலாம் என்ற முடிவோடு தான் கேள்விகளை எழுப்பினேன்... நீங்கள் தொடர்ந்து பதில் தர இயலுமானால் தொடர விழைகிறேன்...)

//தற்போதைய சூழலில் பெரும்பான்மை மக்களின் வாழ்வுரிமைதான் இலக்காக இருக்க முடியும்.//

வாழ்வுரிமை (இந்த உலகத்தில் மனித சமூகத்தில் வாழ உரிமை) இலக்கு என்றால் எதை குறிக்கிறீர்கள்? உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படை தேவை மற்றும் கல்வி கற்க, சிந்திக்க... சிந்தனை செய்த கருத்துகளை வெளியிட உரிமை என்று எடுத்துக்கொள்ளலாமா!
இப்படி எடுத்துக்கொண்டால்... இதில் எந்த உரிமை உங்களுக்கு இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தில் கிடைக்கவில்லை என்று கருதுகிறீர்கள்!!
அப்படி கிடைக்காத உரிமைக்கு உங்களுடைய புதிய ஜனநாயக பாதை என்ன தீர்வை வைக்கிறது!

இல்லை வாழ்வுரிமை என்பது உங்களுடைய பார்வையில் எதை குறிக்கிறது?

said...

திராவிட கட்சிகளே தொடத் தயங்கிய தமிழிசை இயக்கத்தை தூக்கி நிறுத்தியது மானமிகு ஐயாதான். இன்றைக்கு வட தமிழ்நாட்டில் தலித்துகள் சுதந்திரமாக, மோதல் எதுவுமில்லாமல் சம உரிமையோடு வாழ்வதற்கும் ராமதாசு அவர்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைதான். ரஜினிகாந்த் என்ன விஜயகாந்த் கூட வட தமிழ்நாட்டில் மக்களை தேடி ஓட்டு கேட்டு வரமுடியாது. இருட்டியதும் மேடை போட்டு காட்டுக் கத்தல் கத்திவிட்டு விடிந்ததும் முகத்தை மறைத்துக்கொண்டு ஒடி ஒளிவது மகஇக தோழர்களால் முடியும். எதிர்த்து நின்று விரட்டியடிக்க பாமகவினரால் மட்டுமே முடியும். ரஜினி ரசிகர்கள் போல வெற்றுக் கூச்சல் போடுவதை நிறுத்திவிட்டு கண்ணை திறந்து தமிழகத்தை நன்றாக பாருங்க அசுரன்!

said...

லக்கிலுக்,

மேற்குறிப்பிட்ட் தலைவர்கள் திராவிடம் என்கிற அரசியல் கொள்கையை காற்றில் பறகக்விட்டு வருசம் பல ஆகிறது. ஆகவே இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை திராவிடத்தின் மீதான குற்றச்சாட்டு என்று பார்ப்பது தவறு என்று கருதுகிறேன்.

இரண்டு, கூட்டிக் கொடுப்பதற்க்கும் சமரசம் செய்வதற்க்கும் உள்ளா வித்தியாசம் என்ன என்பதையும் சேர்த்தே விளக்கி அந்த பின்னுட்டம் இருக்கின்றது எனவே அதனை முழுமையாக உள்வாங்கினால் கூட்டிக் கொடுக்கிறார்கள் என்று நான் குற்றம்சுமத்துவதில் உள்ள உண்மை புரியும். அல்லது நான் கொடுத்துள்ள அந்த உதாரணங்கள் எந்த வகையில் கூட்டிக் கொடுப்பது அல்ல என்பதையும் அது சமரசம்தான் எனப்தையும் விளக்கினால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மற்றபடி ஒரு விமர்சனம் ஒரு குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதும் அதற்க்கு எதிர்வினை செய்வதும் ஒரு வாதமுறை, காமாசோமா பின்னூட்டம் இடுவது இன்னுமொரு வகை. இரண்டாவது வகை உண்மையை கண்டு ஒளிந்து கொள்ளும் முயற்சி என்பது என் கருத்து. லக்கிலுக் அதனை செய்யமாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன்.

எனது கருத்துக்களில் தவறிருந்தால் சுட்டிக் காட்டுகின்ற பட்சத்தில் திருத்திக் கொள்வதில் பிரச்சனையில்லை. தயவு செய்து நான் கொடுத்துள்ள உதாரணங்கள் எந்த வகையில் இந்தியாவை கூட்டிக் கொடுப்பது என்ற வகையில் வராது என்பதை விளக்கினால் தெளிவு பெறுவேன்.

அசுரன்

said...

//திராவிட கட்சிகளே தொடத் தயங்கிய தமிழிசை இயக்கத்தை தூக்கி நிறுத்தியது மானமிகு ஐயாதான்//

ஐயா தூக்கி நிறுத்திய அதே தமிழிசை சம்பிரதாய பண்டிகை கடைசியில் பார்ப்பன சேவையில் முடியும் என்று விமர்சனம் செய்தவர் பெரியார் எனப்தை ஏன் வசதியாக மறுந்து விட்டீர்கள் கோ. பெ. வடிவேலு?

அது நடந்தேறி அழிந்தது என்பதை ஏன் மறந்து விட்டீர்கள் கோ. பெ. வடிவேலு?

அதே நேரத்த்லி பார்ப்பனியத்தின் அத்தனை அடையாளங்களையும் உடைத்தெறிந்து உழைக்கும் மக்களின் அடையாளங்களுடன் தமிழ்மக்கள் இசை விழா கடந்த 14 வருடங்களாக பல்லாயிரக்காணக்கானவர்களின் விழாவாக நடந்துவருவதை மறந்துவிட்டீர்களே கோ. பெ. வடிவேலு.....


//இன்றைக்கு வட தமிழ்நாட்டில் தலித்துகள் சுதந்திரமாக, மோதல் எதுவுமில்லாமல் சம உரிமையோடு வாழ்வதற்கும் ராமதாசு அவர்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைதான்//

ஆமாம், நமக்கு வெள்ளக்காரன் சுதந்திரம் கொடுத்தான், தலித்துக்களுக்கு ஐயா நாட்டாமை ராமதாஸ் சுதந்திரம் கொடுத்துள்ளார். ஆதிக்க சாதி வெறிக்கு இப்படி ஒரு சப்பைக் கட்டு,....

கண்ணை அகல திறந்து பார்த்தால் ரவுடி கோஸ்டிகளின் உதவியுடன் இழிச்சவாயன் ரஜினி பட திரைப்பட காப்பியை கடத்திய ராமதாஸும்,. ரஜினி ரசிகர்களை தெருவில் நேரடியாக சந்தித்து மோதி மக்களிடம் பிரச்சாரம் செய்த மக இக வும் தெரிகிறார்கள்.

தமிழகத்தை இன்னும் நன்றாக பார்த்தால் எனக்கு ராமதாஸ் அம்பானி காலில் விழுவதும், அம்பானியின் கடை வாசலில் மகஇக அவனை வியாபாரம் செய்ய விடாமல் போராட்டம் செய்வதும் தெரிகிறது.


அசுரன்

said...

//வாழ்வுரிமை (இந்த உலகத்தில் மனித சமூகத்தில் வாழ உரிமை) இலக்கு என்றால் எதை குறிக்கிறீர்கள்? உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படை தேவை மற்றும் கல்வி கற்க, சிந்திக்க... சிந்தனை செய்த கருத்துகளை வெளியிட உரிமை என்று எடுத்துக்கொள்ளலாமா!
இப்படி எடுத்துக்கொண்டால்... இதில் எந்த உரிமை உங்களுக்கு இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தில் கிடைக்கவில்லை என்று கருதுகிறீர்கள்!!
அப்படி கிடைக்காத உரிமைக்கு உங்களுடைய புதிய ஜனநாயக பாதை என்ன தீர்வை வைக்கிறது!

இல்லை வாழ்வுரிமை என்பது உங்களுடைய பார்வையில் எதை குறிக்கிறது?///

ஒரு லட்சம் விவசாயிகளின் சாவு, பல்லாயிரக்கணக்கான நிலவுடைமையாளர்களின் பிழைப்பு SEZக்களால பறிக்கப்பட்டு அனாதைகளாய் நிற்பது,

சில்லறை வியாபாரிகளீன் கழுத்தில் விழுந்துள்ள சுருக்கு, இதற்க்கு முன்பு நடந்த பிரச்சனைகளான தறிப்பட்டறை, நெசவு தொழிலின் அழிவு, பொற்கொல்லர்களின் அழிவு, இப்படி இந்திய சமூகத்தின் பாரம்பரிய தொழிலகள் எல்லாம் ஒவ்வொன்றாக ஏகாதிபத்திய சந்தை வெறிக்கு காவு கொடுக்கப்படுகிறதே, அதில் தமது வாழ்கையை ஓட்டுவதற்க்கான உரிமையை இழந்து மக்கள் அத்துக் கூலிக்கு நாவின அடிமைகளாக வதைபடுகிறார்களே, இந்த கொடுமைக்கு எதிரான போராட்டம். இதனை முடிவு கட்டும் போராட்டம்.

இந்த உரிமைகளை கேட்டவர்களுக்கு இந்த அரசு என்ன செய்துள்ளது?

மணிப்பூர் பிரச்சனைக்கு அந்த பெண் 6 வருடம் உண்ணாவிரதம் இருந்து இன்றூ வரை போலிஸ் கைது செய்தே பலவந்தமாக வைத்துள்ளது. நர்மதா அணை பிரச்சனையில் என்ன கிழித்தது இந்த போலி ஜனநாயகம்? போபால் விசவாயு கம்பேனி Dow கெமிக்கல்ஸ் என்ற பெயரில் மே. வாவில் கால் வைப்பதற்க்காக் போலி கம்யுனிஸ்டு அரசு சில பத்து பேர்களை சுட்டுக் கொல்லவில்லையா? கலிங்கநாகரில் மக்கள் கேட்டது என்ன? வாழ உரிமைதானே? அதற்க்கு இந்த அரசு என்ன செய்தது? பன்னிரண்டு பேரை சுட்டுக் கொல்லவில்லை?

ஹரியானா ஹோண்டா பிரச்சனையில் இன்னைய தேதி வரை ஹோண்டா நிர்வாகாத்தின் படு மோசமான அந்த சர்வாதிகார போக்கை கண்டிக்க இந்த அரசுக்கு தைரியமில்லை. அதிகபட்சம் அவர்கள் சொன்னது இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்பதுதான். இது என்ன ஆக்ஸிடென்டா? திட்டமிட்டு சில பல மாதங்கள் தொழிலாளர்களை போலிஸ் துணையுடன் வதைத்த பிற்ப்பாடு திட்டமிட்டு அவர்களை நிராயுதபானியாக வரவைத்து அடித்து துவைத்தது உங்களது அரசின் பார்வையில் ஒரு ஆக்ஸிடெண்ட்.

சில்லறை வணிகர்கள் பிரச்சனையில் இந்த அரசு என்ன செய்கிறது? மருந்து பொருட்களை விலையேற்றி ரேபிஸ் மருந்து கூட கிடைக்கவிடாமல் செய்துள்ளதே இந்த அரசு, MNCக்கள் லாபம் பார்க்க காப்புரிமை சட்டத்தில் கையெழுத்துப் போட்டு அத்தியாவசிய(கான்சர்) மருந்து பொருட்களின் விலையேற்றவில்லையா? நாய்க்கடி மருந்து தட்டுப்பாடை செயற்கையாக உருவாக்கி, MNCயின் விலையுயர்ந்த மருந்துகள் மட்டும் கிடைக்குமாறு ஒரு பக்கம் செய்து விட்டு இன்னொரு பக்கம் நாய்களை கொல்லாதே என்று NGO மூலம் பிரச்சாரம் செய்து MNCக்களுக்கு வியாபார ஏஜெண்டு வேலை செய்யவில்லையா இந்த அரசு? ஒன்னத்துக்குமிலலாத சில பத்து NGOக்களை அடித்து துவைக்க நிலாத கருணாநிதி, ராமதாஸ் கோஸ்டிகளின் கரங்கள் வெக் சுலபமாக சில பத்தாயிரம் மக்களின் மீது நீலுகிறதே(மாஞ்சோலை படுகொலை, நீலகிரி தேயிலை பிரச்சனை). சுனாமியால் விரட்டப்பட்ட மக்களை கைவிட்டு கிட்னி திருடியவ்ர்கள் மீது என்ன செய்தது இந்த அரசு? சென்னை அழகு படுத்தும் நோக்கத்துடன் கடற்கரை மக்களை ஓட ஒட விரட்ட ஜெயலலிதா திட்டமிடவில்லையா? அதனை சுனாமி செய்து விட்ட காரணத்தினாலேயே மீண்டும் அந்த மக்கள் அதே இடத்தில் தமது வாழ்வை புணர் நிரணயம் செய்வதற்க்கு இந்த அரசு ஒரு துரும்பை கூட நகர்த்திப் போடாமல் ஜெயல்லிதா தொடங்கி வைத்த ஏகாதிபத்திய தரகு வேலையை தொடரவில்லையா?

இன்னும் இன்னும் பல உதாரணங்களை அடுக்கி ஒரு மிகப் பெரிய பதிவாகவே இதனை இட முடியும், இங்கு அசுரனிலும் வேறு சில தொழர்களின் தளங்களிலும் இது போன்ற பிரச்சனைகள் விரிவாக பேசப்பட்டுள்ளன.

ஆக, மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை பறிப்பதும் அதனை எதிர்த்தால் அடித்து துவைப்பதற்க்குமே அரசு, நீதிமன்றம்(நம்ம பாசையில் மனு நீதிமன்றம்), போலீஸு, ராணுவம் உள்ளன.

இவையெல்லாம் இந்திய சந்தையையும், வளங்களையும் ஏகாதிபத்திய, தரகு கம்பேனிகள் சுரண்ட மாமா வேலை செய்வதுதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். இதனை நஇல்லாதொழிப்பதே புதிய ஜனநாயக புரட்சியின் கடமை. இந்தியா இந்தியர்களுக்கே. விரிவாக பேசுவது பதிவுக்கு சுத்தமாக தொடர்பில்லாதது என்பதுடன், இதில் விவாதத்தை திசை திருப்பி ராமதாஸ் தப்பிக்க வழி ஏற்ப்படும் என்று கருதுவதனால், இதே விசயஙக்ளை பேசியுள்ள் வேறு சில எனது பதிவுகளை பரிந்துரைக்கீறேன். அங்கு படிக்கவும்.



அசுரன்

said...

//ஓட்டுரசியல் தவிர்த்த வேறு அர்சியலே இல்லை என்று நீங்கள் நினைப்பது தவறு. கண் முன்னால் பல இடங்களீல் தேர்தல் பாதையில்லாத அரசியல்தான் மக்கள் விரோத திட்டங்களை ஓட ஒட விரட்டியுள்ளது.

சமீபத்திய எ-கா: நந்திகிராம், சிங்கூர், விவசாய அமைப்புகளீன் பல்வேறு போராட்டங்கள், புதுச்சேரி செவல்குடி போராட்டம், கலிங்காநகர் இப்படி போன மாதத்த்லி மட்டும் பெரிய லிஸ்டே போடலாம்.//
இந்த இடங்களில் சிந்தப்பட்ட இரத்தங்களும் பலியான உயிர்களும் எத்தனை எத்தனை, ஓட்டரசியல் செய்த ஒரு மாயத்திற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன், சென்னை துணை நகரதிட்டம் மக்களை பாதிக்கும் என்று கருதினார்கள் ரத்தம் சிந்தாமல், பஸ் கொளுத்தாமல் நிறுத்தப்பட்டது பாமக இராமதாசின் எதிர்ப்பினால், அதையும் மீறி கலைஞர் துணை நகரத்திட்டத்தை முன்னெடுத்திருக்கலாம், அதற்கான எல்லா அதிகார பலமும் இருக்கிறது ஆனாலும் செய்யவில்லை ஏன்? நீங்கள் சொல்லும் அதே ஓட்டு பொறுக்கியரசியல் தான், எந்த திட்டமானாலும் மக்களை மீறி செய்தால் ஓட்டு விழாது என்பது தான். இரவு 12 மணிக்கு செங்கல்பட்டு எம்.பி. ஏகே மூர்த்தியை போனில் எழுப்பி துணை நகர திட்டத்திற்கு வந்து அளக்கின்றார்கள் அதிகாரிகள், இப்போ நீங்க இங்கே வந்து அதை நிறுத்த வேண்டும் என்று அழைத்தார்கள், , நந்தி கிராமத்தில் 12 வீட்டில் எழவு விழுந்து தடுக்கப்பட்டது இங்கே எதுவுமில்லாமல் வெறும் ஓட்டுப்பொறுக்கியரசியல் தடுத்திருக்கிறது.... உடனே இன்னும் பல உதாரணங்கள் நீங்கள் சொல்லலாம், நான் சொல்வதெல்லாம் ஓட்டுப்பொறுக்கியரசியலில் உள்ள குறைகளை நீக்க முயலலாம், மகஇக தோழர்கள் இருவரிடம் தனித் தனியாக பல மணி நேரங்கள் பேசியிருக்கின்றேன்.... மகஇக சொல்லும் அரசியலை விளக்க அவர்களும் ஓட்டரசியலை திராவிட அரசியலை நானும் விளக்கினோம் ஆனாலும் இருவருமே அந்ததந்த நிலைகளிலிருந்து இறங்கவில்லை... ம க இ க சொல்லும் அரசியல் அதன் மீதான விமர்சனங்கள் அதன் சாத்தியகூறுகள் ஓட்டரசியல் எல்லாவற்றையும் பதிவாகவே எழுதுகிறேன்....

said...

சென்னை துணை நகரம் திட்டம் நின்று விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா குழலி? அது இந்திய அரசியல் லாவணி கச்சேரியால் தள்ளிப் போடப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

அல்லது இதற்க்கு பெரியார் பாணியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் உங்களைப் போன்றவர்களுக்கே சென்னை துணை நகரம் திட்டம் போல ஒன்றேயொன்றுதான் தெரிகீறது எனில் எனக்கு அது கூட தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை(போன வாரம்தான் பெரியார் படம் பார்த்தேன் :-))).

மற்றபடி அரசை நிர்பந்தம் செய்யும் போராட்டங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. அது ரத்தம் சிந்தியும் இருக்கலாம் ரத்தம் சிந்தாமலும் இருக்கலாம். நான் குறிப்பிட்டிருந்த உதாரணங்கள் எல்லாம் இந்த இரண்டு வகை போராட்டங்களையும் உள்ளடக்கியதே. பேரம் பேசி நிறுத்தப்படும் திட்டங்கள் இன்னொரு நாள் உயிர் பெறும் எனப்துதான் உண்மை. ஏனேனில் பேரம் பேசப்படும் பொழுது அதிகாரம் மக்களிடமிருந்து அரசியல் தரகர்களின் கைக்கு மாறிவிடுகீறது. இப்பொழுது சென்னை துணை நகரம் திட்டம் நின்றது பேரம் பேசியதாலா அல்லது மக்களை அணி திரட்டி போராடியதாலா என்பதையும்,. நாளை இதே திட்டத்தை வேறு ஒரு அரசியல் சூழலில் கொண்டு வர முடியாதா என்பதையும், அப்படி கொண்டு வந்தால் அந்த பகுதி மக்கள் என்ன செய்வார்கள் - வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர்த்து எனப்தையும் சேர்த்து கணக்கிட்டால், மக்களை அரசியல் படுத்தாத எந்த ஒரு போராட்டமும் நீர்த்து போகும் என்பது தெரியவரும். வோட்டு அரசியல் இந்த வகையே. அது மக்களை நிராகரிக்கும் அரசியலே. அது சரி ரிலையன்ஸ், கோக் விசயங்களை மறந்துவிட்டீர்களே.... இதே போல பவரை காமித்து மத்தியில் இந்த கொலைகாரர்களை தடுத்திருக்கலாமே ராமதாஸ்? ஏன் செய்யவில்லை?

சென்னை துணை நகரத்திற்க்கும், ரிலையன்ஸ் - கோக்கிற்கும் ஏன் ராமதாஸ் வேறுபடுத்துகிறார்?

அசுரன்

said...

பிரக்ஞை என்ற சிற்றிதழ் தொடங்கப்பட்ட போது அதில் ஆசிரியர் குழுவில் இருந்தவர்தான் பின்னர் மக இகவில் வேறொரு பெயரில் இருப்பவர். மருதையன், வல்ல சபேசன், வீராச்சாமி போன்ற பெயர்கள் எதுவாக இருந்தாலும் நபர்(கள்) கொள்கைப் பிடிப்புடன், சமரசம் செய்யாமல்,
அதிகார வர்க்கம் காட்டும் சலுகைகளுக்கு விலை போகாமல் இருப்பதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.அவ்வாறு நோக்குங்கால் மக இக, அதன் தலைமை அமைப்பான மால்.லெ கட்சி (மாநில சீரமைப்புக் குழு) இன்னும் சமரசம் செய்து கொள்ளமல் இருப்பதையும், தன்னார்வக் குழுகள் மீது விமர்சனம் வைப்பதையும், சிறு பத்திரிகை இலக்கிய-பண்பாட்டுச் சேற்றில் புதைந்து போகாமல்
இருப்பதையும் அவதானிக்க இயலும். கொள்கைகள் சரியோ, தவறோ, அவ்வமைப்பும்,
அதன் முண்ணனி அமைப்புகளும் இன்னும் இயங்குகின்றன. இன்னொரு அமைப்பு, கேடயம்,
மன ஒசை பத்திரிகைகளை நடத்திய அமைப்பு/மாலெ கட்சி 1991ல் சிதறியதையும், அதற்குப்
பின் அது தேங்கி, குழுக்களாக பிரிந்துவிட்டதையும் கருத்தில் கொள்க.
இந்த்துவ பாசிசத்தினை தொடர்ந்து 1980களிலிருந்தே மக இக, அதன் அரசியல் கட்சி
தலைமை தொடர்ந்து தீவிரமாக எதிர்த்து வந்துள்ளது.பாஜக விலிருந்து பிரிந்து தனியாக இந்த்துவ கட்சி கண்ட உமா பாரதியை தன் கட்சி அலுவலகத்தில் வரவேற்ர வீரமணி எங்கே, மருதையன் எங்கே. மோடியின் இனப்படுகொலையினை
கண்டிக்காமல் பதவியில் கண்ணும் கருத்துமாக, பாஜகவுசன் அரசியல் சல்லாபம் செய்தவர்கள் கருணாநிதி, வைகோ, மற்றும் ராமதாஸ்,ஜெ காட்டுத்தனமாக அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய போது எந்த எதிர்ப்பும் காட்டாமல் மெளனம் காத்த வீரமணியை விட மருதையன்கள் பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் என்பதில் ஐயமில்லை.

வரலாறு தெரியாத
வரவனையான்கள் தாங்கள் முட்டாள்கள் என்பதை எத்தனை முறைதான் நிருபீப்பார்கள்.

said...

//நாளை இதே திட்டத்தை வேறு ஒரு அரசியல் சூழலில் கொண்டு வர முடியாதா என்பதையும், அப்படி கொண்டு வந்தால் அந்த பகுதி மக்கள் என்ன செய்வார்கள் - வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர்த்து எனப்தையும் சேர்த்து கணக்கிட்டால், மக்களை அரசியல் படுத்தாத எந்த ஒரு போராட்டமும் நீர்த்து போகும் என்பது தெரியவரும்.//

விவாதத்தின் மூலம் ஓட்டு பொறுக்கி அரசியலையும், கழிசடைகளையும், மக்களுக்கெதிரான இந்த அரசமைப்பையும் தோலுரித்து வருகிறீர்கள்.
தொடரட்டும்......
//
இதே போல பவரை காமித்து மத்தியில் இந்த கொலைகாரர்களை தடுத்திருக்கலாமே ராமதாஸ்? ஏன் செய்யவில்லை?

சென்னை துணை நகரத்திற்க்கும், ரிலையன்ஸ் - கோக்கிற்கும் ஏன் ராமதாஸ் வேறுபடுத்துகிறார்?
//

ராமதாஸின் ஓட்டு பொறிக்கி அரசியலை சொல்ல இந்த ஒரு கேள்வியே போதும்.

தோழமையுடன்
கோபா

said...

ஒரு குடுமி uncle இங்கு நடக்கும் வாக்குவாதத்தை வைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடித்து தின்க ஆர்வமுடன் வந்தது. வரவனையான் தளத்தில் அவர் சொன்ன பதிலே நாமும் சொல்கிறோம். ரத்தம் குடிக்க இங்கு வாய்ப்பு கம்மி. We are Sorry....

அசுரன்

said...

அய்யா அசுரன் அவர்களே,

நீங்கள் கொடுத்த மிக நீண்ட சமூக, அரசியல் பிரச்சினைகளின் பட்டியல்... எனக்கு உங்களின் சமூக அக்கறையை விளங்க வைக்கிறது... ஆனால் நான் ஆரம்பிக்கும் போதே லெனினின் ஒரு கொள்கையை உங்களிடம் வைத்து தான் தொடங்கினேன்

"மக்களின் சமூக,அரசியல் பிரச்சினைகள் அறுதியிடபடாதது... அதற்க்கான தீர்வுகளும் நிரந்தரமானதல்ல..."

தாங்கள் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு புரட்சி என்ற தீர்வை வைக்கிறீர்கள்....

ஒரு மனித சமூகத்தில் புரட்சி என்பது எப்போது வரும் என்று தெரிந்து கொள்வோம்... அந்த சமூகத்தில் பெரும்பான்மை மக்களுக்கான வாழ்வுரிமை பறிக்கபட்டால் மட்டுமே நடக்கும்... அதுவே உலக வரலாறு நமக்கு கற்று தரும் பாடம்...

பெரும்பான்மை மக்களின் அடிப்படை வாழ்வுரிமை நன்றாகதான் இருக்கிறது. அதனால் புரட்சி என்பதற்க்கான வாய்ப்புகள் மிகக்குறைவு தற்போதைய சமூக, அரசியல் பிரச்சினைகள் இந்திய சமூகத்தில் மக்களை பாதிக்கிறது... அதற்க்கான தற்போதைய அரசியல் தீர்வுகள் தவறானவையாக இருக்கின்றன. அதற்கு காரணம் இந்திய ஜனநாயக அரசியல் அமைப்பு அல்ல... அதை வழி நடத்திக்கொண்டிருக்கும் தலைவர்கள் தவறானவர்களாக இருக்கிறார்கள்...

தவறான தலைமைக்கு காரணம் மக்களின் சமூக, அரசியல் விழிப்புணர்வு மிகக்குறைவாக இருப்பதே.... மக்களின் சமூக, அரசியல் அறிவு மேம்பட்டால் மட்டுமே நல்ல தலைமைகள் உருவாக முடியும்...

அப்படியில்லாமல் ஓரே ஒருவரோ அல்லது ஒரு குழுவோ ஒரு சிறந்த அரசியல், சமூகத்துக்கு போராடுவது.... லெனின் என்கிற மாபெரும் சிந்தனைவாதி ஸ்டாலின் என்கிற தலைவரிடம் மக்களை அடிமையாக்கியது போலவே மீண்டும் நடக்கும்.

ஒரு சமூகம் தனக்கான அறிவை, சிந்தனையை அடையாதவரை ராமதாஸ் மாதிரியான தலைவர்கள் தான் இருப்பர்கள்.... அவர்களின் குறைந்தபட்ச அடிமட்ட மக்களின் அக்கறையை என்னை மாதிாியானவர்கள் பாராட்டதான் வேண்டி இருக்கிறது...

சில்லறை வணிகத்தை பற்றி மீண்டும் ஒரு நாள் விவாதிக்க வேண்டும்...

நன்றி

said...

சில அனாவசியமான/Anonymous, தியேட்டருக்குள் கரண்டு போனால் கத்துகிறது போல கத்துகிற பொறுக்கிப் பின்னூட்டங்களையெல்லாம் அவசியம் அனுமதிக்க வேண்டுமா அசுரன்?

said...

அசுரன்

அருமையான கருத்து மோதல்கள்... வாழ்த்துக்கள்...

ஒரு சிறிய வேண்டுகோள்,

தனி மனித தாக்குதல்களை நீங்கள் சிறிது மட்டுப்படுத்தி கொண்டால் இன்னும் உங்கள் வாதங்கள் பலரை சென்றடைய ஏதுவாக அமையும்...
உங்களால் முடியும்.. உங்கள் தாக்குதல்களை விட கருத்துகளுக்கு வீச்சு அதிகம்...

said...

அசுரன்,

எனக்கு கம்யூனிசம் தெரியாது...

ஆனால் நீங்கள் சொல்லும் கம்யூனிச ஆட்சிக்கான தீர்வு, தொடர்ச்சியான வர்க்க போராட்டங்கள் கடைசியாக சேருமிடம் ஒரு கட்சி ஆட்சியெனில்(அதற்கு வெகு தூரம் போக வெண்டும் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்).. அது அதிகார குவி மையமாக மாறி விடாதா?

அந்த குவி மையம் சர்வாதைகாரமாக கோலேச்சும் போது ஒரு வேலை மக்களுக்கு எதிராக செயல்பட்டால், இப்போது ஜனநாயக(சொ-கல்லெட்) முறையில் நமக்கு கிடைக்கும் போராட்டத்துக்கான வாய்ப்பும் மங்கி போகும் நிலையில், மக்கள் எப்படி தங்கள் நலனை பாதுக்காத்து கொள்ள முடியும்?

Related Posts with Thumbnails