TerrorisminFocus

Wednesday, June 13, 2007

தன்மானமும் ரஜினி ரசிகனும்!

ரஜினி என்கிற கெட்ட கேப்மாறி ஒன்னத்துக்கிமில்லாம ஒரு படத்தை எடுத்து உழைக்கும் மக்கள் உழைத்து சேர்க்கும் பணத்தை கொள்ளையடிக்க செய்யும் அத்தனை கூத்துக்களும் பொழுது போக்கு என்ற பெயரில் புனிதப்படுத்தப்படுகிறது. அவனது வக்கிரமான பிழைப்புவாத நடவடிக்கைகள் வெளிப்படையாக இருப்பினும் கூட அதனை விமர்சனம் செய்யக் கூட ரசிகர் கூட்டம் அனுமதிக்காத அளவுக்கு போதையேற்றி விடப்பட்டுள்ளது. ரசிகர்களின் கூச்சலும் அவனுக்கு வெறியேற்றிவிட அவனை விட அதிகமாய் கூச்சலிடும் ஊடகங்களின் மாமாத்தனமும் என்றைக்குமில்லாத அருவெறுக்கத்தக்க நிலையை அடைந்து காதுகளை கசடாக்குகிறது.

ரஜினிக்கு காவடி தூக்க இங்கு தமிழ்மணத்திலும் கூட 'ஏதோ தாமெல்லாம் கொஞ்சம் விவராமனவர்கள்' என்று நினைத்துக் கொள்ளும் சில அடி மடையர்களும் ரஜினிக்கு கோமணம் தூக்கி பதிவுகள் போடும் மானக் கேடு நடந்து வருகிறது. இந்த படு கேடு கெட்ட நிலையில் கலகக் குரலாய் ஒலித்த இந்த பின்வரும் கட்டுரையை இங்கு பிரசூரிக்கிறேன். கட்டுரை ரஜினி குறித்து எல்லா அம்சங்களிலும் வலுவான வாதஙக்ளை வைப்பதில் வெற்றிகரமானதாக இருக்கிறது என்று சொல்ல மாட்டேன். சில வாதங்கள் பலவீனமாகவே இருக்கின்றன. ஆயினும் சிந்திக்க தெரிந்த ஆறரிவு ஜீவன்களுக்கு கட்டுரை சிறப்பாக உதவும் என்பதில் ஐய்யமில்லை.

ரஜினிக்கு மூத்திர கும்பா தூக்கிய பிற அல்லக்கைகள் இங்கு வந்து அவமானப்பட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

ரஜினி படம் குறித்து இன்னும் ஒரு தெளிவான மிகச் சிறப்பான விமர்சனம் இங்குள்ளது:
ஊடக ஒளியில் உலவும் கழிசடை - சிவாஜி- I


ரஜினி என்னும் கழிசடைத்தன போதையிலிருந்து ரசிகனை முகத்திலறைந்து மீட்ப்பது எப்படி என்பது குறித்த நடைமுறை அனுபவம் இங்குள்ளது:
கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில் இவனுக்கு என்னடா பால்குடம்?


**********************


ரஜினி பிம்பமும் உண்மையும்
- திருவாளர் தினா

நன்றி: கீற்று

ஜூனியர்கள் அறியாத ரகசியங்கள்!

ஒரு திரைப்படம் வெற்றி பெற எது முக்கியம்?

நல்ல கதை?... ... ..ஊகும்

நல்ல திரைக்கதை?.. ... .. ஊகும்

திறமையான இயக்குநர்?... .. ஊகும்

கதாபாத்திரத்தை உணர்ந்த நடிகர்கள்?... ஊகும்

தொழில்நுட்பக் கலைஞர்கள்?...... ...... ஊகும்.


திரைத்துறையினரில் சிலரைக் கேட்டால், இவை எல்லாவற்றையும் விட பூஜை போட்ட நாளிலிருந்து படம் வெளியாகும் நாள்வரை நடைபெறும் `கட்டுமானப் பணி'தான் முக்கியம் என்பார்கள். கட்டுமானப் பணியா? அது இன்ஜினியர், மேஸ்திரி, கொத்தனாரு, சித்தாளு சம்பந்தப்பட்ட வேலையாச்சே என்று குழம்புகிறீர்களா? ஒருவேளை, திரைப்படங்களுக்குப் போடப்படும் செட்டிங்குகளாக இருக்குமோ என யோசிக்கிறீர்களா? இது வேறுவிதமான கட்டுமானப் பணி. அதுக்குப் பேருதாங்க `பில்டப்பு'

டப்பும் பில்டப்பும் இருந்தால் படத்தை ஓட்டிவிடலாம் என்று கணக்குப் போட்டுச் செயல்படும் திறமைமிக்கவர்கள் திரையுலகில் அதிகரித்துக்
கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பில்டப்பு கொடுக்கப்பட்ட படங்களில் முதலிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் சிவாஜிக்கு உண்டு. ஏ.வி.எம். தயாரிக்க, ஷங்கர் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரஜினி நடிக்கும் படம் இது என்பதை நேற்றுப் பிறந்த குழந்தைகளும் நாளைக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளும்கூட தெளிவாகச் சொல்லிவிடும்.

சிவாஜியைப் பற்றி அதை விடவும் கூடுதலான தகவல்களையும் சொல்லக் கூடும். ஏனென்றால் சிவாஜி படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ஓர் ஆண்டுக்கு மேலாகியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பில்டப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. சிவாஜி என்ற படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது சன் டி.வி.க்குத் தலைப்புச் செய்தி. தினத்தந்தியில் தினம் ஒரு சிவாஜி தகவல் இடம்பெறாமல் இருந்ததில்லை. நாளிதழ்கள், வார இதழ்கள், புலனாய்வு இதழ்கள் என எதைப் புரட்டினாலும் சிவாஜி பற்றி ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்படும் செய்திகளுக்குத் தனி இடம் தரப்பட்டிருக்கும் (தாகம் உள்பட)

படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில நாட்களில் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அதிமுக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டார். ‘சிவாஜி என்ற தலைப்பை வைப்பதற்காக நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டோம். அவர்களும் பெருந்தன்மையுடன் ஒப்புதல் அளித்துவிட்டார்கள். அந்தப் பெயரையே டைட்டிலாக வைத்துப் படம் எடுக்கிறோம்" என்பதுதான் தயாரிப்பாளர் தந்த தகவல். அட.. ஙொக்கமக்கா! இதுதாம்ப்பு பில்டப்புக்குப் பிள்ளையார் சுழி.

சிவாஜி என்று பெயர் வைத்ததால் நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தின் அனுமதியை வாங்கினார்களாம். ரஜினி ஏற்கனவே பாட்சா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அல்-உமா பாட்சாவிடம் அனுமதி வாங்கினாரா? முத்து என்ற படத்தில் நடித்தார். அதற்காக மு.க.முத்துவிடமோ, மதுரை முத்து குடும்பத்தாரிடமோ, முத்துராமன் மகன் கார்த்திக்கிடமோ அனுமதி வாங்கினாரா? அவையெல்லாம் எங்கள் தயாரிப்பு அல்ல என்று ஏ.வி.எம். நிறுவனம் சொல்லக்கூடும். ஏ.வி.எம் நிறுவனத்திலேயே வசந்தி என்ற பெயரில் படம் தயாரித்து வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் எத்தனையோ வசந்திகள் இருக்கிறார்கள். எந்த ஒரு வசந்தியிடமாவது ஏ.வி.எம். இப்படி அனுமதி கேட்டிருக்குமா? சிவாஜி என்ற தலைப்புக்காக சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டதாகக் கட்டுமானப் பணிக்கு அடித்தளம் போட்டார்கள்.

அப்படியே அனுமதி கேட்பது என்றால் யாரிடம் கேட்டிருக்க வேண்டும்? வி.சி. கணேசனாக இருந்த நடிகர் திலகத்திற்குச் சிவாஜி கணேசனாகப் பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அவருடைய இயக்கத்திற்கும் உடைமைகளுக்கும் உரிமையுடைய திராவிடர் கழகம் இருக்கிறது. அவருடைய கொள்கைகளை முழங்கும் பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. ஏ.வி.எம்.மின் நிலைப்பாட்டின்படி பார்த்தால் இவர்களிடமல்லவா அனுமதி கேட்டிருக்க வேண்டும்? போக் சாலையில் உள்ள அன்னை இல்லத்திற்குச் சென்று அனுமதி கேட்டவர்கள் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குமல்லவா சென்று அதே அனுமதியைக் கோரியிருக்க வேண்டும்? கேட்பவன் கேணையனாக இருப்பான். எழுதுபவன் ஏமாளியாக இருப்பான் என்று கணக்குப் போட்டே ரஜினி+ஷங்கர் கூட்டணி, ஏ.வி.எம்மைப் பயன்படுத்திக் கொண்டு கட்டுமானப் பணிகளை ஈஃபில் கோபுரம் அளவுக்குக் கொண்டு சென்றது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஊடகங்கள் ஏமாளிகளாகி, சிவாஜி படக்குழு கக்கிய வாந்தியையெல்லாம் வழித்தெடுத்து வெளியிட்டன.

ரஜினி தும்மினார், அவருடைய மருமகனுடன் கட்டிப்பிடித்து ஆடிவிட்டு அடுத்த படத்திலேயே அவரையும் கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா குனிந்து நிமிர்ந்தார், இயக்குநர் ஷங்கர் இருமினார், ஏ.ஆர்.ரகுமான் எழுந்து உட்கார்ந்தார் என்ற அளவில் தினம் ஒரு தகவலை வெளியிட்ட ஊடகங்கள், அதே சிவாஜி படத்திற்காக அதன் படப்பிடிப்புக் குழுவினருக்கு அளிக்கப்பட்ட விருந்து பற்றியும் அதில் ஒருவர் இறந்தது பற்றியும் எந்த அளவுக்குச் செய்திகளை வெளியிட்டன? படத்தின் ஒலிப் பொறியாளர் சச்சிதானந்தன் என்பவர், கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடந்த அந்த மது விருந்தில் பங்கேற்று, அங்கே 4 அடி தண்ணீர் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துபோனார். அது கொலையா, தற்கொலையா என்ற விவாதங்கள் எழுந்தது ஒருபுறமிருக்கட்டும்.

தான் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தில் நேற்றுவரை ஒன்றாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர் இன்று உயிருடன் இல்லை. அதுவும் தனது படப் பிடிப்புக்குழுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டு மரணமடைந்திருக்கிறார். சச்சிதானந்தத்தின் மனைவி கதறித் துடிக்கிறார். அவரது பிள்ளைகள் அப்பாவை இழந்து தவிக்கின்றன. ஆறுதல் சொல்லக்கூட ரஜினி அங்கே எட்டிப் பார்க்கவில்லை. ஷங்கரைக் காணோம். ஒருவரும் வரவில்லையே என்று அந்தக் குடும்பம் கதறுகிறது. நல்லது நடக்கும்போது பக்கத்தில் இல்லாவிட்டாலும், கெட்டது நடந்து விட்டால் துணைக்கு இருக்கவேண்டும் என்று தமிழகக் கிராமப்புறங்களில் சொல்வார்கள். மராட்டியத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து, பிழைப்புக்காகத் தமிழகத்திற்கு வந்து பல ஆண்டுகளாகியும் ரஜினிக்கு இந்த இங்கிதம்கூடத் தெரியவில்லை. சச்சிதானந்தத்தின் இறுதி ஊர்வலத்தில் சிவாஜி குழுவினர் ஒருவரும் இல்லை என்பதை நக்கீரனைத் தவிர வேறெந்தத் தமிழ்ப் பத்திரிகையிலும் பார்க்க முடியவில்லை.

சச்சிதானந்தன் அதிகமாகக் குடித்திருந்தார். அதனால்தான் அவர் மரணமடைந்தார் என்று செய்திகள் வெளியிடப்பட்டன. இருக்கலாம். ஒருவேளை, அவரைவிடவும் அதிகமாக ரஜினி குடித்திருந்ததால், சச்சிதானந்தன் இறந்த தகவலைக்கூட அவரது இறுதி ஊர்வலம் நடந்து முடியும் வரை அறியாமல் இருந்தாரோ! அதனால்தான் வரவில்லையோ... ... யாரறிவார் பராபரமே!

தன்னை நம்பிப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவக் கூடியவர் என்ற நல்ல பெயர் ரஜினிக்கு உண்டு. அவர்கள் நட்டமடைய விடமாட்டார் என்பதும் ரஜினிக்கு இருக்கும் குணாம்சம். இவை பாராட்டுக்குரியவைதாம். தயாரிப்பாளர் என்ற `எஜமானுக்கு' இலாபம் ஈட்டித் தரக்கூடிய நல்ல `வேலைக்காரனாக' இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் தொழிலான திரைத்துறையில் அந்தப் பணத்தின் மதிப்பை உணர்ந்து மிகப்பிரபலம் வாய்ந்த ஒரு நடிகர் செயல்படுகிறார் என்பதை யாரும் வரவேற்காமல் இருக்க முடியாது. அதே நேரத்தில், பணத்திற்குக் கொடுக்கும் மதிப்பை உயிருக்குக் கொடுக்காமல் போய் விட்டாரே என்ற கேள்விக்கு எந்தப் பதிலும் தென்படவில்லை. உடன் பணியாற்றியவர் மரணமடைந்ததும் கண்டும் காணாமல் விட்டவர், தன் படத்திற்காக ஆண்டுக்கணக்கில் தவமிருக்கும் தீவிர ரசிகர்களையும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரது படத்தை எதிர்பார்த்திருக்கும் பலதரப்பட்டவர்களையும் வைத்து என்னக் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார் தெரியுமா?

சிவாஜி திரைப்படம் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது. இதனை தமிழகத்தில் மட்டும் 65 கோடி ரூபாய்க்குக் குறையாமல் விற்கவேண்டும் என்பதில் ரஜினியும் இயக்குநரும் படத்தயாரிப்பாளரும் பிடிவாதம் காட்டினர். இதுதவிர வெளிமாநிலங்கள், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகள், தொலைக்காட்சி உரிமை, ஒலிநாடா உரிமை என ஏகப்பட்ட கோடிகளுக்கான விற்பனை தனி. படம் எடுத்தவன் விற்காமல் என்ன செய்வான் என்று கேட்கலாம்.

விற்கட்டும்... இலாபகரமாகவே விற்கட்டும்.. ஆனால், தொழிலில் ஒரு நேர்மை வேண்டுமே! விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் இவ்வளவு விலையா என்று மலைத்துப் போய், குறைத்துத் தருமாறு கேட்டிருக்கிறார்கள். 65 கோடிக்குக் குறைய மாட்டோம் என சிவாஜி தரப்பு பிடிவாதமாக இருந்துவிட்டதைக் கோபத்தோடு சுட்டிக்காட்டுகிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

தமிழகத்தில் சிவாஜி படத்தை 150 பிரிண்ட்டுகள் போட்டு வெளியிட்டு, அனைத்து திரையரங்குகளிலும் அவை ஒரு நாளுக்கு 4 காட்சிகள் என 100 நாட்களுக்கும் தொடர்ச்சியாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலும்கூட 40 கோடி ரூபாய்தான் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள திரையரங்கங்களையும் அதன் கட்டணங்களையும் கணக்கிட்டுப் பார்த்தால் இவ்வளவு தான் வசூலாக முடியும்.

என்ன செய்யப் போகிறீர்கள் என்று விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் கேட்டால், "என்னங்க செய்றது? ரேட்டைக் கம்மி பண்ணிப் படப் பெட்டியைக் கொடுங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறாங்க. ரஜினி படத்தை 100 ரூபாய் கொடுத்தும் ஜனங்க பாப்பாங்கய்யா. நீ டிக்கெட் ரேட்டை ஏத்தி வித்துக்கோன்னு சொல்றாங்க" என்கின்றனர். தமிழகத்தின் பெருநகரங்கள், சிறுநகரங்கள் ஆகியவற்றில் டிக்கெட் கட்டணத்தைத் திருத்தியமைத்திருக்கிறது தமிழக அரசு.

படம் பார்க்கச் செல்லும் குடும்பத்தினர் ஒட்டுமொத்த மாதச் சம்பளத்தையும் ஒரு படத்திற்கே டிக்கெட் கட்டணமாகச் செலவு செய்ய வேண்டிய நிலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவு. ஒவ்வொரு திரையரங்கிலும் குறைந்தபட்சக் கட்டணம் எவ்வளவு இருக்கவேண்டும். அதிக பட்ச கட்டணம் எவ்வளவு இருக்கவேண்டும் என்பதை அரசு நிர்ணயித்துள்ளது.

அரசாங்கம் என்ன சொன்னால் என்ன? நாங்கள் நிர்ணயிப்பதே டிக்கெட் கட்டணம் என தனி ராஜாங்கம் நடத்த முன்வந்திருக்கிறது சிவாஜி படக்குழு. அதுவும் எப்படிப்பட்டவர்கள் இந்தக் குழுவில் இருக்கிறார்கள் தெரியுமா? 5 பைசா திருடினா தப்பா... 5 கோடி பேரு 5 பைசா திருடினா தப்பா.. 5 கோடி பேரு 5 கோடி தடவை 5 பைசா திருடினா தப்பா... என்று வசனம் எழுதி, திருட்டுக்கும் இலஞ்சத்திற்கும் எதிராகப் போர் தொடுக்கப் பிறந்தவர்கள் போலக் காட்டிக்கொண்ட `அந்நியன்'கள்தான் தமிழகத்தின் 5 கோடி மக்களிடமும் டிக்கெட் கட்டணத் திருட்டை பகிரங்கமாகச் செய்வதற்குத் தயாராகியிருக்கிறார்கள். தன்னை வைத்து நடக்கும் இந்த அநியாய வியாபாரத்திற்கு ஆதரவாகவே இருக்கிறார் ரஜினி. அதனை ஊக்கப்படுத்தவும் செய்கிறார். 1600 ரூபாய் செலுத்தி 20 டிக்கெட்டுக்கான கூப்பனை வாங்கிக் கொண்டு போ என்று ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களிடம் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறது ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம்.

ஒரு வணிக நிறுவனம் என்றால் அதன் வாடிக்கையாளர்களுக்கு மற்றவர்களைவிடக் குறைந்த விலையில் பொருட்களைத் தருவது தான் தொழில் தர்மம். திரைப்படத் தொழிலிலோ, இந்தப் படத்தை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்க்கிறார்கள் என்றால் அவர்களின் சட்டைப் பையை மொத்தமாகச் சுரண்டிவிடு என்பதுதான் தொழிற் கொள்கையாக இருக்கிறது. அதனைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி. தமிழகத்தின் எந்தத் திரையரங்கிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி சிவாஜி படத்திற்கான டிக்கெட் கிடைக்காது என்பதே தற்போதைய நிலைமை. சிவாஜி படத்தில் கல்வி வியாபாரத்தை எதிர்த்துக் கிளர்ந்தெழுவாராம் ரஜினி. அதைவிட அநியாய வியாபாரத்தை திரைத்துறையில் நடத்திக் கொண்டிருக்கிறாரே, அவரை எதிர்த்து யார் கிளர்ந்தெழுவது?

ஒவ்வொரு ரஜினி படத்திற்கும் கொடுக்கப்படும் பில்டப்புகளால் அவரது பிம்பம் உயர்ந்து நிற்கிறது. ஆனால், உண்மைகள் ஆழத்தில் புதைந்து கிடக்கின்றன.

"சந்திரமுகி" படத்தில் நடந்தது என்ன தெரியுமா?

- தணிக்கை இல்லாமல் தொடரும்


Related Article:

ரஜினி - கழிசடைக்கு பிறந்த நாள் - வர்க்க பிறழிகள்!

38 பின்னூட்டங்கள்:

said...

தீனாவிற்கு வாழ்த்துக்கள்!
இந்த உண்மைகளை படிச்சா,
ச்சும்மா அதிருதுல்ல..!
அதிருதோ இல்லையோ,
போலி பிம்பம் உதிருது!

labels அருமை, அசுரன்!

said...

பஞ்சு வசனம் பஞ்சு வசனம் சொல்வாங்கலே.... அது இதுதான்!!!!

//இந்த உண்மைகளை படிச்சா,
ச்சும்மா அதிருதுல்ல..!
அதிருதோ இல்லையோ,
போலி பிம்பம் உதிருது!
//

வாழ்த்துக்களுக்கு நன்றி அரசுபால்ராஜ்

அசுரன்

said...

ரஜினி என்கிற கெட்ட கேப்மாறி ஒன்னத்துக்கிமில்லாம ஒரு படத்தை எடுத்து உழைக்கும் மக்கள் உழைத்து சேர்க்கும் பணத்தை கொள்ளையடிக்க செய்யும்

Nonsense. Rajini films may be idiotic or worthless, but no one forces the working class to pay money and see this film. It is their free choice and they seem to need some form of 'entertainment' ;
why don't the MaKaIaKa produce a
good film and market it ?

said...

whatever you write nobody is going to change. People are giving importance to cinema in our country than any other countries. I'll be very happy if atleast one person changes after reading these type of articles.. anyway Vaalthukkal..

said...

உண்மை! உண்மை! 100க்கு 200சதம் உண்மை!!!

பொய்யர்கள் முகம் கிழித்தெரியப்படவேண்டும்..

said...

Jus thought of sharing that which happened in NDTV few months back…

There is a viewers’ choice show in NDTV, where they’re posed with 10 major happenings/news of that day and viewers can pick the top 5 news of their choice thro SMS. Two of the choices were 1. Wedding function of Abishek and Aishwarya 2. Poll (not even official… just the wild guesses by the fans!!) on rajini’s punch dialogue for Shivaji, followed by other political news. (For me even this seems to be ridiculous… Why do Wedding functions & punch dialogues were placed in the top 10 news??) As we could guess, most of the viewers in India opted for the poll to be the first news!! What can we say about the priorities people give??

said...

Well, I agree with you but would not use those strong words though! Because then there is no difference between us and the "mentally unstable" fans of his! Yeap, you can't even criticise the movies in a civilised manner as they take everything personal (kuttram ulla nenju?!!). He is the one reason no matter how many Mozhi, Paruththiveerans, Anbe sivams, Sethus come - he will pull Tamil cinema to the lowest levels everytime and keep it there! (and the next "thalapathi's and thala's are ready to continue that destruction!)

said...

அருமையான கட்டுரை.

said...

அசுரன்

கடைசியா உங்களையும் சிவாஜி பத்தி எழுத வெச்சுட்டாங்களே...

ஆனா, நீங்க சொல்றதும் சரிதான்..

ரசிகர்கள், ஆனாலும் கொஞ்சம் ஒவரா தான் போறாங்களோன்னு தோணுது...

said...

nee yellam vaiterichal pudichavan

said...

செல்லரிச்சுப் போன ஜென்மங்கள்தாம் நம் ஜென்மங்கள். எங்கே போயி முட்டிக்கிறது.

அதிலயும் இங்கே வட அமெரிக்காவில் இருபது டாலார்களுக்கு கொஞ்சம் குறைச்சலாக டிக்கெட் விற்பனையில். அப்படி என்ன பார்க்காமல் தவிர்த்து விட்டால், விக்கியா சாகப்போகிறோம்.

சுரனை கெட்ட ஜென்மங்கள். :-(

said...

வாதங்களுக்காக எழுதப்பட்டவையாக தெரிகிறது இன்னும் ஆழமாக எழுதி இருக்கலாம்.

said...

என்னது திட்டுறிங்களா ?

3 மாதத்துக்கு மயக்கம் தெளியாது !

:)))

said...

அசுரன்,
கட்டுரையை விட்டுட்டு நீங்க சொன்னத மட்டும் பார்க்கிறேன். (நீங்க எழுதறத அப்பப்போ படிச்சுட்டுதான் இருக்கேன்)

//...அத்தனை கூத்துக்களும் பொழுது போக்கு என்ற பெயரில் புனிதப்படுத்தப்படுகிறது.//
புனிதம் எல்லாம் இல்லை. The best entertainment there is. Value for money.

//ரஜினிக்கு காவடி தூக்க இங்கு தமிழ்மணத்திலும் கூட 'ஏதோ தாமெல்லாம் கொஞ்சம் விவராமனவர்கள்' என்று நினைத்துக் கொள்ளும் சில அடி மடையர்களும் ரஜினிக்கு கோமணம் தூக்கி பதிவுகள் போடும் மானக் கேடு நடந்து வருகிறது.//
யாரை சொல்றீங்க?!!!

//ஆயினும் சிந்திக்க தெரிந்த ஆறரிவு ஜீவன்களுக்கு கட்டுரை சிறப்பாக உதவும் என்பதில் ஐய்யமில்லை.//
Either எனக்கு சிந்திக்க தெரியவில்லை, இல்லை நீங்க ஐயப்பட்டிருக்கனும்!!

//....பிற அல்லக்கைகள் இங்கு வந்து அவமானப்பட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.//
எச்சரிக்கையை புறக்கணிக்கிறேன்! சூட்டை கொஞ்சம் தணிச்சுக்கோங்க!

சுவாமி!

said...

வாங்க சுவாமி,

வெகு நாள் கழித்து வருகிறீர்கள்.... கடைசியாக விவாதம் செய்த ஞாபகம் மனதில் நிற்கிறது. :-))

பொழுது போக்கு 73 கோடியில்... யாருடைய பணம்? அந்தளவுக்கு விலைமதிப்புவாய்ந்த பொழுதுபொக்கா அது? வெறும் விளமப்ரங்கள் உருவாக்கும் மாயை இல்லையா இந்த ரசனை?

இந்தளவுக்கு எல்லாவற்றயும் விரயம் செய்யுமளவு அப்படியென்ன உசத்தியான சரக்கு வைத்திருக்கிறான அந்த ரஜினி..

அப்படியென்ன அவனுடைய சர்க்கு இந்த சமூகத்துக்கு உருப்படியானது?

அப்ப்டியென்ன அந்த சரக்கு ரசிகனுக்கு உயிராதாரமான முக்கியத்துவம் வாய்ந்தது?

அதென்ன வேல்யு பார் மணி? யார் இந்த வேல்யு உருவாக்குவது? யாருடைய மணி?

இதுதான் எனது கட்சி படம், க்ட்சி படம் என்று உருவாக்கப்படும் வேல்யுவா?

அல்லது அம்பானி ஐஸ்வர்யாராய் அவுசாரிமண விழாவுக்கு உருவாக்கப்பட்டது போன்ற வேல்யுவா?

அல்லது திரைப்படக் கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள் என்று அப்பட்டமாக ரசிகனை கொள்ளயடிக்கும் வேல்யுவா?

இதை அறிந்திருந்தும் ரசினிக்கு காவடி தூக்கும் தமிழகத்தின் சொரனையற்றத் தனம் உங்களுக்கு கோபத்தை வரவழைக்கவில்லையா?

சீனாவில் அபினுக்கு இருந்த வேல்யுவுக்கும், இன்று ரஜினிக்கு இருக்கும் வேல்யுவுக்கும் என்ன வித்தியாசம்.

என்ன கொடுமையா இது... சொந்த மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டல் கூட அழுகாத ரசிகன், ரஜினியின் வீட்டு இழவுக்கு அழும் விந்தை எந்த வேல்யுவால் உருவாக்கப்படுகிறது என்று பார்ப்பதும் அந்த வேல்யுவை உடைத்தெறிவதும் அவசியமில்லையா?

ஜெயலலிதாக்களுக்கும், கருணாநிதிக்களுக்கு காவடியெடுப்பதையும் அவர்களை திட்டினால் முந்திக் கொண்டு கோபப்படுவதையும் கூட ஒரு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இது எதுவுமே இல்லாமல் ஒரு தனிமனித நாய்க்கு என்ன இத்தனை புனித பிம்பம் வேண்டிக் கிடக்கிறது?

சோறு போடும் விவசாயிக்கு நியாய விலை கொடுக்க சொல்லி நாம் பதிவு போட்டால் இந்தளவு கோபம் கொண்டு கூட்டம் கூடுவார்களா தெரியவில்லை. ஒரு அல்பை நாய் ஒரு கொள்ளைக்கார பன்றி, ஒரு ஆன்ம வியாபாரி, அவனது சுரண்டலை விமர்சித்து பதிவ் போட்டால் அடேங்கப்பா... நுணூக்கமான விசயங்களைக் கூட சளைப்பின்றி விவாதம் செய்ய ஆட்கள் ஆர்வமாக வரிசையில் நின்று வருகிறார்கள்..

மிக மிக மிக அவமானகரமாக உள்ளது....

படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவ்ர்களில் கூட இந்தளவுக்கு அடிமடையர்கள் மண்டிக் கிடக்கும் இந்த சமூதாயத்தில் அறிவுப் புரட்சி நடப்பதாக புளுகும் அப்துல் கலாம்களின் வாயை கொள்ளிக்கட்டையால் தீய்க்க கை பரபரக்கிறது.

சுவாமி, ரஜினி சாய்பாபா போல மர்மமானாவராக இருக்கிறார். அவரை தொட்டால் யாரெல்லேம் மிகவும் புத்திசாலியாக தெரிந்தாரோ அவர் கூட வெகு சாதரணமான உண்மைகளை புரிந்து கொள்ளும் திறன் இழந்து வடிவெலு போல பேசத் துவங்கி விடுகிறார்கள்....

அதாவது "சுரியன்னா என்னா?" "சூடு என்றால் என்னா?" "கிழக்கு என்றால் என்ன?' "என்ன என்றால் என்ன?" என்பது போல....

ரொம்பவே விசித்திரம்தான்.....

சுவாமி நீங்கள் மூத்திர கும்பா தூக்கிய அல்லக்கை இல்லை என்பது எனது வலுவான நம்பிக்கை. ஏமாற்றிவிடாதீர்கள். அந்தளவுக்கு சொந்த புத்தியில்லாதா ஆள் போல தெரியவில்லை. (முந்தைய விவாதங்களில் நன்கு புரிந்து உள்வாங்கியே விவாதம் செய்தீர்கள்). ஆயினும் இந்த பின்னூட்டம் எனக்கு பயத்தை தருகிறது. ஒருவேளை நீங்களும்...... இல்லை.. அப்படியிருக்காது...

அசுரன்

said...

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

சிவாஜி யின் இம்சை இம்சையோ இம்சை

said...

அசுரன்,
நானும் ரஜினி படங்களை ரசிப்பவன் தான். என்ன பால் குடம், அபிஷேகம், ஆராதனை இதெல்லாம்
கிடையாது. ஆனால் முடிந்த வரை
கும்பலாக முதல் வாரத்திலேயே
தியேட்டர் சென்று ஆர்ப்பாட்டத்துடன்
ரஜினி படம் பார்ப்பது நான் miss பண்ண விரும்பாத ஒரு அநுபவம். அதோடு நிறைய ரசிகர்கள் போல ரஜினியை அவரது படங்களை மீறி ஒரு நல்ல மனிதனாக மதிக்கிறேன்.
அவருடைய பேச்சில் இருக்கும் பண்பு, அகங்காரம் இல்லாத humility, lack of hypocrisy, தன்
ரசிகர்களின் மேல் அவருக்கு இருக்கும் அன்பு, இது எல்ல்லாமே
ஈர்க்கிறது. All with so much power,
unarguable charisma and shrewdnes.
அதோடு அடிமட்டத்தில் (தொழிலாளியாக!!!) ஆரம்பித்து இவ்வளவு தூரம் உயர்ந்து நிற்பதில் உள்ள அவருடைய உழைப்பும்
திறமையும் பிடிக்கும். இவ்வளவு combinations ஒடு இன்று இருப்பது வெகு வெகு சிலரே. In any field.
உங்களது ஆத்திரம் ரஜினியின் மீதா,
சினிமா துறையின் எல்லார் மீதா,
நடக்கும் எல்லா துறையின் மீதா,
அல்லது ரசிகர்கள் மீதா என்று
தெரீயவில்லை. இங்கு சிலர்
சொல்வது போல் தமிழன் சோற்றால்
அடித்த பிண்டம் என்றோ, தலை
குனிந்து நிற்கிறேன் என்றோ,
அவமானமாயிருக்கிறது என்றோ, என்னால் ஏற்க முடியவில்லை.
இவ்வளவு காலம் யாரும் யாரையும்
இவ்வளவு தீவிரமாக ஏமாற்ற முடியாது. If I came down from
Mars and see someone holding the
imagination of so many millions for so long a time, my bet
would be 'He is probably Good!'. So I cheer him on. And I am going to have my time off tomorrow.
Day after will be back to normal to face my own realities. But
tomorrow? I know I am going to have a very good time!!

உங்கள் கேள்விகள் எதற்கும் நேரிடையாக பதில் சொல்லவில்லை, பதில் இருந்தும். அவ்வளவு serious ஆன விஷயம் இல்லை இது. தவிர a lot of it is personal opinions. உங்கள் வரிகளில் இதில் மட்டும் உள்ள நியாயத்தை உணர்கிறேன்:
//சோறு போடும் விவசாயிக்கு நியாய விலை கொடுக்க சொல்லி நாம் பதிவு போட்டால் இந்தளவு கோபம் கொண்டு கூட்டம் கூடுவார்களா தெரியவில்லை. //
Human psycology தான். For someone to get angry, they have to relate. A mojority of the audience here probably wouldn't. என்னமோ!

சுவாமி

said...

சுவாமி,

ரஜினி உங்களை சுரண்டும் அள்வு என்பதற்க்கும், உங்களைப் போல ஓரளவு வாய்ப்புகள் கிடைககப்பெற்ற நடுத்தர வாசிகளை போல அன்றி அன்றாடம் காய்சிக்களாய் இருபப்வர்களை அவன் சுரண்டும் அளவு என்பதற்க்கும் பெருத்த இடைவெளி இருப்பதை ஒத்துக் கொள்கீறீர்களா?

ஆக இப்படி ஒரு பெரும்பான்மை மக்களின் கடுமையான உழைப்பின் ஊதியத்தை எந்தவொரு நியாயம் சொல்ல முடியாத ஒரு விசயத்தில் விரயமாக்க அவனை மயக்கும் ரஜினியைப் பார்த்தால் உங்களுக்கு கோபம் அல்லவா வரவேண்டும்?

வரவில்லையே? உங்களது எண்டெர்டெயின்மெண்ட் முதன்மை காரணியாக உங்களை செலுத்துகீறதே?

இவன் அவமானப்படுத்துகின்ற பெண்களின் இடத்தில் நம் வீட்டுப் பெண்களை வைத்துப் பார்த்தால் இதன் வக்கிரம் நமக்கு தெரியும், அப்பொழுதும் அவனை ரசிக்கிறோம் எனில் அது வேறு கதை.

எனக்கு இது போல மக்களை சுரண்டும் விசயங்களைப் பார்த்தால் பார்த்த இடத்திலேயே சுட்டுப் பொசுக்கும் ஆத்திரம் உள்ளே கிளர்ந்தெழும்.

ரஜினி எப்படிப்பட்ட அயோக்கியனாய் இருந்தால் எனக்கென்ன அவனை நான் ரசிக்கீறேன் அவ்வளவுதான் என்று நீங்கள் சொல்லவில்லை. ஆனால் ரொம்ப கேள்விகள் கேட்டு நோண்டி சென்றால் சிலர் அங்கு சென்று நின்று கொள்வார்கள்.

கருப்புப் பணத்தில் ஆரம்பித்து அதிகார வர்க்கத்திற்க்கு கூழை கும்பிடு போடுவது வரை, தனது சொந்த பிரச்சனையை சமூக பிரச்சனையாக விளம்பரப்படுத்தி ரசிகர்களை தூண்டிவிடுவதிலிருந்து, சமூக பிரச்சனைக்கு போராடுபவர்க்ளை 'உன்னைப் பார் உன் குடும்பத்த பார்' போன்ற் வசனங்கள் மூலம் களங்கப்படுத்துவது வரை. அத்தனை நியாயவான் வேசம் எல்லாம் வெளிவேசமாய் இருந்து கொண்டு தனது படத்தில் பெண்களை படு கேவலமாக பயன்படுத்துவது. பெண்கள் என்றால் பொத்திக் கொண்டு வலம் வர் வேண்டும் என்று சில புரியாத சம்ஸ்கிருத சூத்திரங்களை சொல்லி ரசிகனை வாய் பிளகக் வைத்த கையோடு, ரவிக்கை எங்கே நழுவி விழுந்து விடுமோ என்று பயப்படும் அதல பாதாளா குழியில் இருந்து கொண்டு ரசிகனை இன்னோரு முனை சென்று மயக்கும் ஒரு பாடலை போடுவது. அரசியலையும், பொதுமக்களையும் தனது சொந்த ஈகோ பிரச்சனைகளுக்கும், வியாபரங்களுக்கு பலி கொடுத்தது இப்படி இந்த கேடு கெட்ட காரியவாதி அம்பலப்பட்ட சம்பவ்ங்கள் ஆயிரத்தெட்டு இருக்கும் பொழுது இன்னமும் அவந் அமைதியானவன், புனிதமான்வன் என்று நீங்கள் சொல்லுவது பேரதிர்ச்சியாக இருக்கிறது.

தைரியலட்சுமி என்று அம்மாவின் காலில் விழுந்த இந்த பன்றி, ஏன் இதே அம்மாவை எதிர்த்து ரசிகர்களை தூண்டினான். அதுவும் தனது சொந்த பிரச்சனைக்காக.

எனது ஆத்திரம் சொரனையற்ற ரசிகன் மீதும், அதனை எல்லாவகை ஆதிக்க கருத்து நிறுவனங்கள் மூலம் வலுப்படுத்தி லாபம் சம்பாதிக்கும் நயவஞ்சக நாய் ரஜினி மீதும், இப்படி இருப்பதிலேயே ஆகக் கேவலமான ஒட்டுண்ணியாகிய ரஜினியை அவர் அமைதியான் etc போன்ற பொய் பிம்பத்திற்க்காக தாங்கி பிடிக்கும் உங்களைப் போன்றவர்களின் மயக்கத்தின் மீதும் எனக்கு படு பயஙக்ர ஆத்திரம்.

எது உழைப்பு? அவன் உழைப்புக்கு 63 கோடியா? "ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த" தமிழகத்துக்கு அவன் கொடுத்ததெல்லாம் அதிகபட்சம் அந்த ஒரு துளி நாற்றம் பிடித்த வியர்வை மட்டும்தான். அதற்க்கு ஈடாக திரையரங்கிலேயே ஒரு சட்டி வியர்வையையும் கூட பிடுங்கிக் கொள்கிறான். இது தவிர்த்து அதற்க்கு ஈடாக அவன் இங்கிருந்து மக்களீடமிருந்து சுரண்டி சேர்த்து கோடிகளீல்.

""அடிமட்டத்திலிருந்து ஒரு விபச்சார தரகன் வாழ்க்கையை ஆரம்பித்து மக்களின் ரசனைகளை ஆக விமரிசையாக நிவர்த்தி செய்து மிகப் பெரும் பணக்காரனாய் ஆகிவிட்டான், அவன் இன்னமும் தன்னடக்கதோடு த்னது விபச்சார பிசினஸோடு, கஞ்சா, அபின் போன்ற அடுத்தக்கட்ட பிசினஸ்களையும் செய்கிறான்.

அவன் ஒவ்வொரு பிராண்டு ரீலிஸ் செய்யும் போதும் முதல் ஆளாக போய் அவனோட ஏஜெண்டு வீட்டு வாசலில் முட்டி மோதி அதை வாங்கி அனுபவிப்பதை நான் Miss விரும்பாத அனுபவம். அந்த மொட்டை பாஸினுடைய அடக்கம், அவர் போலித்தனமில்லாத பழக்கவழக்கம்.... அவர் நல்லவர்.... """

இந்தளவுக்கு நீங்க வெள்ளேந்தியாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை சுவாமி.


//Human psycology தான். For someone to get angry, they have to relate. A mojority of the audience here probably wouldn't. என்னமோ!//

வெகு சரியாகவே சொல்கிறீரகள்.

ரசிகனுக்கும் விவசாயிக்கும் இருக்கும் ரிலேசன் தன் உண்மையில் வலுவானது. ஆனால் அது அவன் பார்வையில் படுவதில்லை.

ஆனால் ரஜினிக்கும் ரசிகனுக்குமான ஒரு பலவீனமான ரிலேசனை உறுதிப்படுத்தி மிகப் பிருமாணடமானதாக மாற்றுவதில் ரஜினியை போன்ற் வெட்டி பந்தா ஹீரோக்களை தொடர்ந்து உற்பத்தி செய்து சினிமா தொழில் தன்னை தக்க வைத்துக் கொள்ளும் அந்த Industryன் ப்ங்கு என்ன? இந்த விளைவை நிரந்தரமாக்குவதுதான் சினிமா தொழில் நிரந்தாமாக இயங்குவதற்க்கு அவசியமென்பதால்தான் ஹீரோக்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதும் ஊடகங்கள் அவர்களை வைத்து சாமியாடுகீறார்கள் என்பதும் உண்மையில்லையா?

ஆக, உஙக்ளுக்கும் ரஜினிக்கும் ரிலேசன் ஆக சாதரணமானதாக இருப்பினும் அது ஊதி பெருக்க வைக்கப்பட்டு உங்களது உண்மையான அழுத்தமான இதர சமூக ரிலேசன்கள் மறக்கடிக்கப்படுகின்றனவே இது பிரச்சனையில்லையா?

அப்படியானால் சுவாமி முதல் ரஜினி ரசிகனாய் இருக்கும் ஒவ்வொருவனும் தனது உண்மையான ரிலேசநன் யாருடன் உள்ளது என்பதை புரிந்து கொண்டால் மட்டும்தான் அவன் சமூகத்தின் பிரச்சனையை பார்க்க முடியும். அப்படி அவன் உண்மையான ரிலேசனை புரிந்து கொள்ள விடாமல் ரஜினி போன்றவர்களுடனான போலியான ஊதீப் பெருக்க வைக்கப்பட்ட ரிலேசன் அவர்களை மயக்கி தடுக்கீறது எனில் என்னைப் போன்றவர்களின் முதல் கடமையாக இந்த போலி ரிலேசன்ஷிப்பை உடைத்து நொறுக்கி, தட்டி தவிடாக்குவது உள்ளது.

ரஜினி என்பவனை பற்றிய விவாதம் என்பது ஒரு தனிமனித்னைப் பற்றிய விவாதம் அல்ல, அது ஒரு சுரண்டல் சமூகத்தின் ஒரு சுர்ண்டல் கருத்தியல் குறித்த விவாதம் என்ற புரிதல் இந்த இடத்தில் கிட்டியிருக்கும் என்று நம்புகிறேன்.


//imagination of so many millions for so long a time, my bet
would be 'He is probably Good!'. So I cheer him on. //

இந்த வரிகளை நான் மறுக்கவில்லை. Rajini is not probably but Exceptionaly good... at Prostitution, - எனது கஞ்சா தாதா எக்ஸாம்பிளை பார்க்கவும். ஒருவன் திறமையானவனா என்பதல்ல கேள்வி, எதில் திறமையானவன் என்பதுதான் கேள்வி. கழிசடைத்தனத்திலும், பிற்போக்குத்தனத்திலும், காரியவாதத்திலும் திறமையான ரஜினியை நீங்கள் வியக்கிறீர்கள் எனில்... நீங்கள் உங்களது ரசனையை பரிசீலனை செய்யக் கோருகிறேன்.



அசுரன்

said...

இத்த படிச்சுப் பாருங்கப்பா.... செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும்.... சும்மா அதிருதுல்ல....

http://poarmurasu.blogspot.com/2007/06/blog-post_14.html

****
இது கேடுபய ரஜினியின் பாபா வந்த போது அவனையும் அவனின் பக்த கேடிகளையும் நேருக்கு நேர் சந்தித்த புரட்சிகர சக்திகளின் முழக்கங்களில் ஒன்று.
.
பாபா வெளியிடப்பட்ட ஆகஸ்டு 15 (2002) தமிழகத்தின் சூழல் என்னவென்பதை தெரியாத சிலருக்காக நினைவுபடுத்திக் கொள்வோம். அன்று நெசவாளர்களுகுக் கஞ்சித் தொட்டி வைத்த தி.மு.க.வினர், முட்டை பிரியாணி போட்ட அ.தி.மு.கவினர்; ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கும் நெசவாளர்கள்.
.
காவேரியில் தண்ணீர் விடாமல் கர்நாடகம் அடாவடி செய்து கொண்டிருந்தது.தஞ்சை பஞ்சபூமியாகி விவசாயிகள் எலிக்கறி தின்னும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். தமிழக மெங்கும் ஆசிரியர் போராட்டம் , வழக்குரைஞர் போராட்டம்.

இந்த சூழலில் தமிழகப் பத்திரிக்கைகளில் பாபா தான் அட்டைப்படக் கட்டுரை அல்லது முக்கிய செய்தி. இதைவிடப் பெரிய பூச்செண்டை பாபாவைத் தவிர யாரும் ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்க முடியாது. அந்த அளவிற்கு இருட்டடிப்பு செய்யப்பட்டன மக்கள் பிரச்சினைகள்.

பாபா வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன் ராமதாஸ் ரஜினியைப் பற்றித் தெரிவித்த விமர்சனம் பத்திரிகைகளில் பெற்ற முக்கியத்துவத்தைக் காட்டிலும், ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத் திய செய்திதான் முக்கியத்துவம் பெற்றது. ரசிகர்கள் "கொத்தளிப்பு - ஆவேசம்" என்றும் ரஜினி மட்டும் தடுத்து நிறுத்தாமலிருந்தால் ரசிகர்கள் தமிழ்நாட்டையே கொளுத்தி விடுவார்கள் என்பது போலவும் ஒரு பயங்கரத் தோற்றத்தையும் உருவாக்கின பத்திரிக்கைகள்.

இதற்கிடையே ஆகஸ்டு 14 ம் தேதியன்று போலிச் சுதந்திரத்தை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டமொன்றை நடத்திருந்த திருச்சி நகர ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு தோழர்கள். ஆகஸ்டு 15ம் தேதியன்று வெளிவந்த பாபாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்க்ளை நடத்தினர்.

இதற்காக பாபாவை அம்பலப்படுத்தி 3500 சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டன. இவற்றை 14 ம் தேதி இரவு ஒட்டுவதைக் காட்டிலும் காலையில் ஒட்டுவதன் மூலம்தான் பக்த கேடிகளை ' நேருக்கு நேர் சந்திக்கும்" வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், ரஜினி ரசிகர்கள் எனும் "மாபெரும் சக்தி" பற்றி மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமையை உடைக்க முடியும் என்பதாலும் ஆகஸ்டு 15 அன்று காலையில் ஒட்டுவதென முடிவு செய்தனர்.

செஞ்சட்டையணிந்த தோழர்கள் பல குழுக்களாகப் பிரிந்து திருச்சி நகரின் எல்லாப் பேருந்துகளிலும் சுவரொட்டிகளை ஒட்டினர். ரசிகர்கள் நின்று படித்து விட்டு மவுனமாக இடத்தை விட்ட்டு அகன்றனர்.

ஒட்டும்போது வம்புக்கு வந்தாலோ ஒட்டிய பிறகு கிழித்தாலோ என்ன நடக்கும் என்பது சுவரொட்டியிலேயே அச்சிடப்பட்டிருந்தது.படித்துப் புரிந்து கொள்ளத் தவறும் ரசிகர்கள் பார்த்தே புரிந்து கொள்ள ஏதுவாக உரிய தயாரிப்புடன் சென்றனர் தோழர்கள். "ராமதாசுக்கு தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்தினார்கள், கொதிக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள்" என்று பத்திரிகைகளால் வருணிக்கப்பட்ட ரசிகர்கள் ஒரு இடத்திலும் மூச்சு விடவில்லை.

தேநீர்க் கடைகள், தெருக்கள் என்று நகரின் உட்பகுதிகளெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுருந்தன. ஓரேயொரு தெருவில் சுவரொட்டியைக் கிழித்த ரசிகர் கூட்டத்தைத் "தக்கபடி கவனித்து" கையில் பசைவாளியையும் சுவரொட்டிகளையும் கொடுத்து அவர்களையே ஒட்டச் செய்தனர் தோழர்கள்.

புதிய கலாச்சாரத்தில் செப் 2002 வந்த "பாபாவும் பக்தகேடிகளும்" கட்டுரையில் இருந்து....இதனுடன்
ரசிகர்கள் விடலைகளா ? விபரீதங்களா?
பாட்ஷா பாபாவான கதை
என்ற பகுதிகள் உள்ளடங்கிய இதன் முழு கட்டுரையும் கிழே க்ளிக் செய்து படிக்கவும்
*******

said...

இவ்வளவு சீக்கிரம் எப்படி தட்டச்சு செய்கிறீர்கள்? Speed ல் ரஜினியை விட fast ஆக இருப்பீர்கள் போல. நேரமாகிவிட்டது. கண்டிப்பாக நாளை பதிலிடுகிறேன்.

சுவாமி

said...

//அது ஒரு சுரண்டல் சமூகத்தின் ஒரு சுர்ண்டல் கருத்தியல் குறித்த விவாதம் என்ற புரிதல் இந்த இடத்தில் கிட்டியிருக்கும் என்று நம்புகிறேன்.//

அசுரன்,

ஆணித்தரமான வாதம்.. அப்போ இது ரஜினிக்கும் மட்டும் இல்லை.. கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று சமூகத்தின் நன்மதிப்பை சுரண்டும் அனைவருக்கும் பொருந்தும் இல்லையா?...

அரசியல்வாதிகள், பெரும் வியாபார முதலைகள் எல்லோரும் செய்வது இதை தானே? பயன் படுத்தும் முறைகள் வேறு வேறு..

உலகில் இந்த ஹீரோ ஒர்ஷிப்பை நல்லவிதமாக பயன் படுத்திய மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா?

நீங்கள் ரஜினியை மட்டும் இவ்வளவு சாடுவது ஏன்?

ஒரு புரிந்து கொள்ளுதலுக்காக கேட்கிறேன்...

said...

அசுரன்,
நீங்க கோபப்படுறதுன்னா, இந்த hero worship ஐ extreme க்கு எடுது செல்லும் ரசிகர்களின் மீதுதான் கோபப்பட முடியும். வேற யார்மீதுமல்ல. ரஜினியை கேப்மாரி, பன்றி, வக்கிரமானாவன், அல்பை நாய், அயோக்கியன், கேடு கெட்ட காரியவாதி, நயவஞ்சக நாய், கேவலமான ஒட்டுண்ணி, கழிசடை, என்பதையெல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால், நீங்கள் சொல்வது கீழே:

1) பொழுது போக்கு 73 கோடி. இந்தளவுக்கு எல்லாவற்றயும் விரயம் செய்யுமளவு அப்படியென்ன உசத்தியான சரக்கு வைத்திருக்கிறார் அந்த ரஜினி?
2) பெண்களை அவமானப்படுதுகிறார்
3) தனது சொந்த பிரச்சனையை சமூக பிரச்சனையாக விளம்பரப்படுத்தி ரசிகர்களை தூண்டிவிடுகிறார்
4) தைரியலட்சுமி என்று அம்மாவின் காலில் விழுந்து, பின் இதே அம்மாவை எதிர்த்து ரசிகர்களை தூண்டினார்.
5) அவர் உழைப்புக்கு 63 கோடியா?
6) அன்றாடம் காய்சிக்களாய் இருபப்வர்களை அவர் சுரண்டுகிறார்.

இதில் எதுவுமே நியாயமான் குற்றச்சாட்டாக தெரியவில்லை. நான்
புதுசாக ஒன்றும் சொல்லப்போவதில்லை. ரஜினி தன் உழைப்பாலும் திறமையாலும் முன்னுக்கு வந்து, இனம் காணமுடியாத தன் magnetism ஆலும் shrewdness ஆலும் லட்சக்கணக்கானவர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டு யாரும் லேசில் அடையமுடியாத உயரத்தில் இன்று இருக்கிறார். அப்போதும் ஒரு நல்ல மனிதராக இருக்கிறார். அவர் தொழிலில் 75 கோடியில் முதலீடு செய்து படமெடுக்க ஒரு முதலாளி வந்தால், அது அவரது சரக்கின் மீது முதலீடூ செய்பவர் வைத்திருக்கும் நம்பிக்கையைதான் காட்டுகிறது. இதில் ரஜினி என்ன செய்யவேண்டூம் என நினைக்கிறீர்கள். "வேண்டாம் சரவணன் சார். 75 கோடி அதிகம். ஒரு 80 லட்சத்திற்குள் படத்தை முடித்துக் கொள்ளுங்க்கள். அதையும் எதெதிற்க்கு செலவு செய்கிறீர்கள் என்று எனக்கு கணக்கு காட்டூங்கள். விரயம் என்று எனக்கு தோண்றினால் அதையும் cut செய்துவிடுகிறேன்' என்றா? அந்த முதலீட்டில் அவரது சம்பளம், வரும் வருமானத்தில் அவரது பங்கு என்ன என்பதை வைத்து தீர்மானிக்க படப்போகிறது. இன்று யார் 'என்னது, எனக்கு XXX லட்சம் தருகிறீர்களா? வேண்டாங்க. ரொம்ப அதிகம். அதில பத்தில ஒரு பங்கு கொடுங்க போதும். மீதி எல்லாம் நீங்களே வச்சுக்கோங்க' என்று சொல்லப்போகிறார்கள்? (அப்படி சொல்வதினால் வேறு வகையில் லாபம் வருமானால் சொல்லலாம்!!)அப்படியானாலும் தொழிலாளி ரஜினி, முதலாளி சரவணனின் பாக்கெட்டில் போக இருக்கும் பங்கை குறைக்கிரார்தானே என்று நீங்கள் ஆதரிக்க அல்லவா வேண்டும்?!!! இதையே இன்று சென்னையில் இருக்கும் real estate ஓடு ஒப்பிட்டு பாருங்கள். விலை தாறுமாறாக இருக்கிறது. வீடு விற்பவர் யாராவது, எனது 2000 sq ft வீட்டுக்கு 2 கோடியா? நியாயமாக 30 லட்சத்திற்க்கு விற்போம் என்று நினைப்பார்களா? உங்களுக்கு (என்னைப் போல) அநியாயமாக பட்டால் வாங்காதீர்கள். ஆனால் விற்பவரை அயோக்கியன் என்று வையாதீர்கள். விருப்பம் இல்லையென்றால், இது மாதிரி விஷயங்களில் யார் யாரை சுரண்ட முடியும்? பெண்களை அவர் படத்தில் கேவலப்படுத்துவதால் அவரை திட்டுகிறீர்களா? அப்போது அவர் படத்தில் தாய்மையை தூக்கி வைத்தாலோ, முதலாளித்துவத்தை இறக்கி வைத்தோலோ, தமிழை உயர்த்தி வைத்தோலோ, அதை அவரது personal contribution என்று பாராட்டுவீர்களா? பெண்களை பேச்சு மூலமாகவோ படத்தின் மூலமாக மட்டுமாவோ கேவலப்படுத்துகிறார்கள்? The subtle messages that our society keep sending to keep the women down is unbelievable. I try to be careful with my daughter, but it is a loosing battle that I am not going to give up. கடைசியாக, ரஜினியிடம் எனக்கு ஒரு reservation உண்டு. அதும் இன்னும் clear ஆக இல்லை. அரசியல்வாதிகளை, specific ஆக பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளை எல்லோரும்தான் இணக்கமாக போக பார்க்கிறார்கள். கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, அவர்கள் கருணை கடவுள் தான். என்ன, ரஜினி தன் மனதில் பட்டதை பட்டென்று முடிந்த வரை மறைக்காமல் சொல்லிவிடுகிறார். பாராட்டோ, இடிப்புரைப்போ. கடந்த அநுபத்தால், இப்போது பாராட்டை மற்றும் வெளியே சொல்லி, criticism ஐ மனதிற்குள்ளே வைத்துக்கொள்கிறார் போல. அவருடைய அரசியல் சம்பத்தப்பட்ட occurence ல் அவர் இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி பண்ணியிருக்கலாம். அது hindsight தான். Monday morning quarterback . ரஜினியை நான் கடவுளாக நினைக்கவில்லை. அதனால்,அவர் தவறுவதை தவறாகவும் நினைக்கவில்லை. தவறியபின் உணர்ந்து திருத்திக்கொள்கிறவரை. பின் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ..வேண்டாம்...!! எதற்கு!!
எனக்கு முக்கியமாக தோண்றூம் ஒன்று. குழந்தைகள் ரஜினிக்கு instictive ஆக react செய்யும் விதம். என் பெண், சந்திரமுகி பார்த்த பின் 'லகலகலக' என்று ஒரு மாதம் சொல்லி கொண்டிருந்தாள். இப்போது 'டகால், ட்கால், டமால், டுமீல்' என்று சொல்லி கொண்டிருக்கிறாள்!! That is one of the reason I pay my good money for, for a rajini film.

சுவாமி

said...

படிக்க வக்க்ற்ற, அனைத்து வசதி வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட, சமூகத்தின் சுரண்டலை உணரக் கூடாது என்பதற்க்காவே அனைத்து விதமான போதைகளுக்கும் அடிமைப்படுத்தப்பட்ட ரசிகனை குற்றம் சொல்ல சொல்லும் ரஜினி ரசிகர் சுவாமி,

இந்த பலவீனங்களை பயன்படுத்தி ரசிகனை சுரண்டி எந்தவொரு நியாயமும் இன்றி கோடிகளில் சுரண்டும் ரஜினையை குற்றம் சொல்லமாட்டாரம்.

ரஜினிக்கு மூத்திர கும்பா தூக்கும் வேட்கை எனக்கு புரிகிறது சுவாமி.

ரஜினி உழைப்பாலும் திறமையாலும் முன்னேறினாராம். அது என்ன ஒரு விவசாயின் உழைப்பை விட மிகபெரியதொரு உழைப்பை ரஜினி இந்த சமூகத்துக்கு கொடுத்துவிட்டான்? முடியை சிலுப்புவதும், சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிப்பதும், பெண்களை அவமானப்படுத்துவதும் மிகப் பெரிய திறமைதான். இதை செய்வதற்க்கு இந்த சமூகத்தின் பலவீனத்தை சுரண்டுவானாம் அவன். அதனை இவர் கொஞ்சம் கூட சூடு சொரனையின்றி ரசிப்பாராம்.

சுவாமியின் கருத்தில் நம்மால் விமர்சனம் செய்ய இயலாத பிற திறமையாளர்கள் யார்? நரேந்திர மோடி, ஜார்ஜ் புஷ், ஹர்சத மெத்தா, ஜெயலலிதா, இப்படி ஒரு பெரிய லிஸ்டே போடலாம். ஏனேனில் இவர்கள் எல்லாம் இப்படி கொழுக்க காரணம் மக்கள் அவர்களை ஆதரிப்பது, அவர்களின் உழைப்பும் திறமையும்தான். மக்களை குற்றம் சொல்லுஙக்ள் சார்?

தலித்துக்களின் ஆண்டாண்டு கால அடிமைத்தனத்திற்க்கு அவர்களையே குற்றம் சொன்னால் போகிறது.

இது தவிர்த்து சாராயம் விற்பவ்ர், போதை மருந்து தயாரிப்பவர், பாலியியல் புரோக்கர்கள், தாதாக்கள் எல்லாருமே திறமையானவர்கள்தான் சுவாமி கருத்தில்.

ரஜினி சுரண்டுவது குறித்து எழுதினால் ரஜினி குறைந்த கூலிக்கு நடித்தால் என்னாகும் என்று கணக்குச் சொல்கிறார் சுவாமி, ரஜினி செத்தால் என்ன இருந்தால் என்ன? அவனால் இந்த சமூகத்து கழிசடைத்தனத்தையும், பிற்பொக்குத்தனத்தையும் கொடுக்க முடிந்ததைத் தவிர்த்து வேறு என்ன பயன் விளைந்துள்ளது?

ரஜினியை நியாயப்படுத்து அவருக்கு அருகில் வேறு சில மொள்ளாமாறித்தனஙக்லை முன் கொண்டு வைக்கும் கடைசி மூத்திர கும்பா வேலையில் சுவாமி இறங்கி விட்டார்.

அதாவது ஒரு கோடு அதை சிறிதாக காட்டுவத்ற்க்கு அருகே ஒரு பெரிய கோடு வரையும் தந்திரம்தான்.

ரஜினியை ஏன் விமர்சிக்கிறாய் என்றால் அவனுக்கு ஏன் நீ இவ்வளவு பில்டப் கொடுக்கிறாய் என்பதுதான் எமது பதில். வேறு யாருக்கு இந்த தேவையற்ற விளம்பரமும், வாய்ப்புகளும் கொடுக்கப்ப்ட்டுள்ளது?

நான் ஏற்கனவே சொல்லியிருந்த விசயம்தான் சுவாமியின் பிற கருத்துக்களில் வெளிவருகிறது.


//ஆக இப்படி ஒரு பெரும்பான்மை மக்களின் கடுமையான உழைப்பின் ஊதியத்தை எந்தவொரு நியாயம் சொல்ல முடியாத ஒரு விசயத்தில் விரயமாக்க அவனை மயக்கும் ரஜினியைப் பார்த்தால் உங்களுக்கு கோபம் அல்லவா வரவேண்டும்?

வரவில்லையே? உங்களது எண்டெர்டெயின்மெண்ட் முதன்மை காரணியாக உங்களை செலுத்துகீறதே?
//


ரஜினியை அவர் ரசிப்பதில் அவருக்கு இதுவரை ஒரு பிரச்சனையும் இல்லை. அதனாலேயே அவனது சமூக விரொத சம்பாத்தியத்தை நியாயப்படுத்துகிறார் சுவாமி. இந்த சுயநலமும், சமூக பார்வையற்ற போதையும் மிக மிக அருவெறுக்கத்தக்கது.

இதுவும் கூட போன பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன்

//ரஜினி எப்படிப்பட்ட அயோக்கியனாய் இருந்தால் எனக்கென்ன அவனை நான் ரசிக்கீறேன் அவ்வளவுதான் என்று நீங்கள் சொல்லவில்லை. ஆனால் ரொம்ப கேள்விகள் கேட்டு நோண்டி சென்றால் சிலர் அங்கு சென்று நின்று கொள்வார்கள்.
//


இதோ சுவாமியும் கூட ரஜினியின் சமூக விரோத நடவடிக்கைகள் குறித்து ஏதேதொ மழுப்பி விட்டு கடைசியில் நான் அவனை ரசிக்கத்தான் செய்வேன் அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பது குறித்து எனக்கு கவலையில்லை என்று போய் நின்றுவிட்டார்.


இது சுவாமி சொன்னது,
// That is one of the reason I pay my good money for, for a rajini film.///

ஆமாம், இவர் வீட்டு பெண்களை சிவாஜி ஸ்ரேயே போல அவிழ்த்துப் போட்டு ஆடவிட்டால் கூட சுவாமி நாக்கில் எச்சில் ஒழுக ரசித்துவிட்டே வருவார். அது பகுத்தறிவற்ற ரசனை உருவாக்கும் அவலம்.

அசுரன்

said...

சுவாமிக்கும் உங்களுக்குமான விவாதம் மூலம் பல விசயங்கள் புரிந்துக்கொண்டேன்.

ரஜினி ஒரு சினிமா நடிகன். சினிமா நடிகனை கடவுளாக பார்க்கும் நம் ஜனங்கள் தான் முட்டாள்களே தவிர ரஜினியல்ல.

இதற்கான தீர்வு என்ன என்று சொல்லுங்கள்.

said...

//ரஜினி ஒரு சினிமா நடிகன். சினிமா நடிகனை கடவுளாக பார்க்கும் நம் ஜனங்கள் தான் முட்டாள்களே தவிர ரஜினியல்ல.
//

ஆம், ரஜினி முட்டாளல்ல. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ரசிகனை கண்டிக்க வேண்டும் என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இன்னும் சொன்னால் அந்த விசயங்கள் இங்கு விவதிக்கப்படவில்லை. ரஜினியை திட்டகிறாயே அது தவறு என்று சிலர் இங்கு கும்பா தூக்குகிறார்களே அவர்களின் சமூக அக்கறைதான் மகா கேவலமானதாக இருக்கிறது. இங்கு ரஜினியைத் திட்டுகிறேன் எனில் அது ரசிகனின் மூடத்தனமான ரசனையையும், அந்த கழிசடை ரசனையில் மயங்கி ரஜினி நல்லவன் என்று சொல்பவர்களையுமே திட்டுகிறேன்.

அடுத்த கேள்வி ஏன் ரஜினியை திட்டுகிறீரக்ள் என்று இருக்கும் பட்சத்தில் அதற்க்கு பதில் சொல்கிறேன்.


//இதற்கான தீர்வு என்ன என்று சொல்லுங்கள். //

வேறு என்ன? இங்கு ரஜினியை திட்டி அதற்க்கான காரணங்களை விளக்கிய பிற்பாடு ஒரு கூட்டம் வெகு சீரியசாக வந்து ரஜினிக்கு கும்பா தூக்கியதே, அப்படி தூக்கியவரக்ளை நாக்கை பிடுங்கிக் கொள்ளுமாறூ கேள்விகள் கேட்க்க நமக்கு வாய்ப்புக் கிடைத்ததே, அது போல வீதிகளீல் இறங்கி ரஜினி பட தியேட்டர் வாசலில், தெருக்களில் ரசிகனை நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமாறு கேள்விகள் கேட்டு ரஜினி ஒரு சமூக விரோத ஒட்டுண்ணி என்பதனை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்வதுதான் தீர்வு. ரஜினையைத் திட்டாமல் ரசிகனை ஒரு சீரியஸான விவாதத்திற்க்கு அழைக்க முடியாது, ரஜினியைத் திட்டாமல் ரஜினியின் சமூக விரோத மக்கள் விரோத பிழைப்பை ரசிகனிடம் விவாதிக்க முடியாது.

ரஜினி ரசிகர்கள் அடிகக் வருவார்கள் என்று அஞ்ச அவசியமில்லை. ரஜினி ரசிகனைப் போல ஒரு கேடு கெட்ட கோழைப் பன்றியை இந்த உலகத்தில் பார்க்க முடியாது. திருச்சி மக இக தோழர்கள் இது போல பாபா பட திரையிடப்பட்ட போது ரசிக்ரகளை வீதிகளில் சந்தித்து விரட்டியுள்ளனர். இதோ இங்கு அது குறீத்த விவரம் உள்ளது.

http://poarmurasu.blogspot.com/2007/06/blog-post_14.html


ரஜினீ படம் குறித்து இன்னும் ஒரு தெளிவான மிகச் சிறப்பான விமர்சனம் இங்குள்ளது:
http://kedayam.blogspot.com/2007/06/i.html

அசுரன்

said...

maappu.. unnai vetchu comedy pannirukkaanga... paarthiyaa rajinifans.blogspot.com comments section

said...

தோழர் வீரியமிக்க உங்கள் விவாத்தில் அடிபட்டோருக்கு அனுதாபத்தையும், கொஞ்சமும் வெட்கமும் மானமுமில்லாத அந்த ஜீவன்களுக்கு அதனை ஏற்படுத்தப் போராடும் விளாசலான உங்கள் எழுத்துக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

ஸ்டாலின்

said...

அனானிக்கு நன்றி,

அங்கே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளனர் ரஜினி ரசிக சிகாமணி முதுகெலும்பிழிகள். இருந்திருந்தும் ஒரு கறுப்புப் பண பேர்வழிக்கும், ஜெயலலிதாவின் காலை நக்கிய ஒரு தறுதலை காரியவாதிக்கு மூத்திர கும்பா தூக்கி ஒரு பதிவு வேற....

இவிங்கள்ளாம் தினமும் என்ன தின்கிறார்கள் என்று சந்தேகம் வருகிறது...

http://rajinifans.blogspot.com/2007/06/blog-post_9639.html

இங்கு படிக்கவும். அன்போடு கேள்வி கேட்ட அரசு பால்ராஜுக்கு இன்னைக்கு வரை பதில் சொல்ல வழியின்றி ஓடி ஒளிந்து கொண்டுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

அசுரன்

said...

வேலை செய்த காசில்
விருப்பமான ரஜினிபடம்
வீட்டுக்கு போனா
சோறில்லை என சொன்னா
சொரணை அதிருதில்ல!

குழந்தைக்கு பிடிக்குதுன்னும்
குமரிக்கு பிடிக்குதுன்னும்
கொட்டுகின்ற பால்குடங்கள்
குடிசைக்குவருவதில்லை
கும்பிடுடா ரஜியன்னா
கும்பி அதிருதில்ல

குத்துகின்ற அலகும்
வெட்டுகின்ற ஆடும்
வெளியே காட்டுகின்ற
விளங்காத பந்தாவும்
கதி களங்க செய்யும்
கலாசாரம்மென
காட்டுது உன் கோபம்
அசுரா அதிருதில்ல !

யாரு ரஜினின்னும்
ஏன் அவனை
தூக்கிறேன்னும்
சமூக அக்கறைன்னும்
தோழா நீ
சரியா சொன்னபோது
ஜீவன் அதிருதில்ல!

said...

அசுரனுக்கு,
அருமையான கருத்துக்களை மிகவும் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிரீர்கள். வாழ்த்துக்கள்.

தமிழினத்தலைவரும் - புரட்சித்தலைவியும் அவர்களது இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்வில் (தொழிலில்!) இதுவரை மாற்றுக்கருத்துக்கொள்ளாமல் - ஒருமித்த கருத்தைக்கூறவைத்த ஒரே விஷயம் இதுதான் (வெட்கக்கேடு).
'ஸ்பெஷல்' ஷோ பார்த்துவிட்டு - ஒரே மாதிரியாக இருவரும் படம் சூப்பர் என்று விசிலடித்திருக்கிறார்கள்.

இருவரும் 'போஸ்டர்' ஒட்டாதக்குறையாக - படத்திற்கு விளம்பரம் செய்து உடன்பிறப்புக்களையும்- இரத்தத்தின் இரத்தங்களையும் - தியேட்டர் வாசலில் சங்கமிக்க வைத்திருக்கின்றனர்.

அரசியல் தொழிலில் 'ரசிகர்களின்' வாக்குகளை பொறுக்க வேண்டுமென்பதற்காக - வக்கற்றதுகளின் பின்புறத்தை நக்கியும் விடுவாரகள் நமது அரசியால்வாதிகள் (மருத்துவர் இராமதாஸ் தவிர) என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா?.

தங்களின் கட்டுரையையும் - அதைத்தொடர்ந்த விவாதத்திற்கான ஆனித்தரமான பதிலையும் படித்து பயன்பெற்றவர்களில் நானும் ஒருவன்..வாழ்க உங்கள் பணி.

தோழமையுடன்
பிறைநதிபுறத்தான்

said...

//ஆமாம், இவர் வீட்டு பெண்களை சிவாஜி ஸ்ரேயே போல அவிழ்த்துப் போட்டு ஆடவிட்டால் கூட சுவாமி நாக்கில் எச்சில் ஒழுக ரசித்துவிட்டே வருவார். அது பகுத்தறிவற்ற ரசனை உருவாக்கும் அவலம்.

//
தோழர் இந்த சுவாமி இனிமேல் பேசமாட்டார் ஏனெனில் நீங்க அவர் வீட்டு பெண்களை ஒப்பிட்டி பேசிவிட்டீர்கள் பரிதாபமாக ஒரு விவாதம் முடிவுக்கு வந்ததில் உங்கள் மேல் எனக்கு வருத்தமே !

படத்தில் காட்டும் பெண்களை தன்வீட்டு பெண்களோடு சேர்த்து யாருமே பார்பதில்லை அது ஆபத்தும்கூட !

அவ்வாறு பார்க்க சொன்னால் அவன் ரஜினியாக தன்னை நினைத்து பார்க்கும்
விசயத்தை நாம் ஆதரிப்பதாக தானே ஆகும் !

அதைத்தான் செய்து வருகிறான் அவன் !

ரஜினிபோல நாமும் ஒரு ஹீரோன்னு ஒவ்வொருத்தனும் நினைக்கிறான்

தான் ரஜினியாக மாறி எதிரிகளை வேட்டை ஆடும் நினைப்பில் ஒரு ப்போதையில் மிதக்கிறான் .
அது அவனது வடிகால் என சொல்லி
சமூக பிரச்சனைகளை மறந்து ரஜினி துதி பாடுகிறான் .

இந்த கோணம் தப்பு !

மற்றபடி நீங்கள் பேசிய ரஜியின் சுரண்டல் எல்லாம் சரிதான் !

சுவாமி இனிமேல் பேசமாட்டார் அந்த இடத்தை தொட்டு அவரது பலகீனத்தை சோதித்து விட்டீர்கள் .

said...

தோழர் தியாகு,

பொதுவாக ரஜினி ரசிகர்களிடம் நாம் பேசுவது அடாவடியாகத்தான் அப்படி பேசாமல் பெரிய நன்னூல்(நல்ல நூல்) போல பேசினால் அவன் நம்மை கிண்டலடித்து சென்று விடுவான்.

ஆனால் சுவாமி ஆரம்பத்தில் ஒழுங்காகவே பேசி வந்தார். நாம் ரஜினியின் சமூக விரோத தன்மையை முன்னுக்கு கொண்டு வர கொண்டு வர அவன் எதை செய்தாலும் நான் ரசிப்பேன் அது எனது ரசனை சம்பந்தப்பட்ட விசயம் ரஜினி சமூக விரோதி என்பது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை என்ற நிலையை கடைசியில் அப்பட்டமாகவே அறிவித்தார். இந்த நிலையில் அவரது சமூகவுணர்வற்ற சுயநலத்தை கோடூரமாக குத்திக் கிழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது .....

அவருக்கான கடைசி எதிர்வினை முழுவதையும் படியுங்கள். அவரது கண்மூடித்தனமான ரஜினி ரசனையை அம்பலப்படுத்திய பிற்பாடு அதில் மயங்கி சமூக பிரக்ஜை இழந்து அவர் தெரிவித்த கருத்தை வெளியிட்ட பிற்ப்பாடே கடைசி அஸ்திரமாக இந்த கோடூரத்தை ஏவி விட வேண்டியதாகியது. தனக்கு என்றால் வலிக்கிறதல்லவா? அது போலத்தானே ரஜினி பிறரை மயக்கி போதையில் ஆழ்த்தி சுரண்டுவதை காணும் போதும் வலிக்க வேண்டும்? அப்படி வலிக்காத சொரனையற்ற தோல்களுக்கு என்ன சுயமரியாதை வேண்டிக் கிடக்கீறது?

அசுரன்

said...

//ஆனால் சுவாமி ஆரம்பத்தில் ஒழுங்காகவே பேசி வந்தார். நாம் ரஜினியின் சமூக விரோத தன்மையை முன்னுக்கு கொண்டு வர கொண்டு வர அவன் எதை செய்தாலும் நான் ரசிப்பேன் அது எனது ரசனை சம்பந்தப்பட்ட விசயம் ரஜினி சமூக விரோதி என்பது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை என்ற நிலையை கடைசியில் அப்பட்டமாகவே அறிவித்தார். இந்த நிலையில் அவரது சமூகவுணர்வற்ற சுயநலத்தை கோடூரமாக குத்திக் கிழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது //

உண்மைதான் ஆனால் சாமி அப்படி ஆள் இல்லைன்னு நான் நினைத்துக்கு மேல கடைசியில் ரசிகன் மட்டுமேன்ற இடத்துக்கு அவர் தவிர்க்க முடியாமல் செல்லத்தான் செய்தார் .

மேலும் இதுபோன்ற விசயத்தில் அவரை மறுபடியும் பங்கேற்ற செய்யும் இடம் எது எனவும் நான் யோசிக்கிறேன் ...

இதுவும் சமூக அக்கறையில் வருமே :)

said...

அசுரன்,

நான் வலை பதிவுக்கு புதியவன்..உங்கள் பதிவுகள் எல்லாமே உண்மையில் அதிகமான சமூக அக்கறையுடன் உள்ளன.. பாராட்டுக்கள். ஆனால் எல்லாவற்றிலும் பொதுவான ஒரு அம்சம் (தவிர்க்க கூடியது என்றே நினைக்கிறேன்) உங்களின் வார்த்தைப் பிரயோகங்கள், ஏற்கனவே சில அன்பர்கள் சுட்டி காட்டியுள்ளது போல கடுமையாகவே உள்ளன. உங்களிடம் அநீதியை கண்டு எழும் தார்மீக கோபத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இப்போது சுவாமியை எதிர் கொள்கிற இந்த விவாதத்தில் கூட அதே தான்..அதே நேரத்தில், நம் சமூகத்தில் பெரும்பாலான மக்கள் எது நடந்தா எனக்கென்ன என்று தான், அதாவது சுவாமியின் நிலையில் தான் இருக்கிறார்கள்.. அவர்களை பொறுப்புள்ளவர்களாக உணரச் செய்வது சரியா.. இல்லை.. விவாதத்துக்கு வர விடாமல் விரட்டியடிப்பது சரியா..(சில பின்னூட்டங்கள் இனி மேல் சுவாமி என்று வெற்றி களிப்புடன் வருவதை உணர்கிறேன்) சுவாமியை போன்றவர்களை விட நமக்கு அதிக சமூக அக்கறை உண்டல்லவா?
எனக்கு சுவாமியின் கருத்தில் எந்த உடன்பாடும் இல்லை.. அவர் பின்னூட்டம் தான் உண்மையில் என்னையும் ஒரு புதிய பதிவு எழுத தூண்டியது..
( பார்க்க http://www.paalveli.blogspot.com/)

நேசமுடன்,
பால்வெளி.

said...

இது போன்ற போலியான ஆட்களுடன் விவாதம் செய்து அலுத்து விட்டது பால்வெளி. பொறூமையாக என்றாலும் எவ்வளவு நேரம்தான் நாமும் அவர்களீன் போலித்தனத்தை கண்டு கொள்ளாத மாதிரியே நடிப்பது. ஒரு கட்டத்தில் அவர்களாலும் நடிக்க இயலாத தூரத்திற்க்கு வந்தவுடன் சொத்தைத்தனமாக எதையாவது முன் வைக்கிறார்கள்.

பார்ப்போம் விரைவில் பொறுமை கைகூடும் என்றூ நம்புகிறேன். இதனை எதிர்கொள்ள ஒரு வழி புலப்படுகிற்து. இனிமேல் அவர்களை கடுமையாக பேசி விரட்டிவிடாமல் அவர்களின் செயலுக்கு வெட்க்கப்படும்படி எதிர்வினை செய்வது நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இந்த புது தந்திரத்தை கற்றுக் கொள்ளா சிறிது நாளாகும்.

அசுரன்

said...

"சந்திரமுகி" படத்தில் நடந்தது என்ன தெரியுமா?

ennavaaam?

said...

அசுரன் நல்ல வாதம்... தொடருங்கள். தங்களுடைய வாதத்தில் பிரயோகபடுத்தும் வார்த்தைகளில் சற்று கடுமை தேவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் கடுமை அதிகமாகி எதிர்வினை ஆற்றத்தொடங்கினால் நோக்கம் நிறைவேறுவது தவறிவிடும்.

ஒரு விளக்கம் அல்லது சந்தேகம்...

AVM நிறுவனம் 'சிவாஜி' பெயருக்கான அனுமதியை சிவாஜி குடும்பதினரிடம் கோரியதற்கான காரணம், அந்த தலைப்பை 'சிவாஜி பிலிம்ஸ்' film chamber-ல் பதிவு செய்திருந்தார்கள் என்று ஒரு செய்தி படித்ததாக நினைவு.

said...

அசுரன்... நீங்கள் நிழலுடன் யுத்தம் செய்து உங்கள் திறமையை வீணடிக்கிறீர்கள்..

ரஜினி யாரையும் கட்டாயபடுத்தி , தன் படத்தை பார்க்க சொல்லவில்லை..... பிடித்தால் பாருங்கள் , இல்லாவிட்டால் வேண்டாம்,,,,, இதற்கு போய் , ஏன் இவ்வளவு ஆர்பாட்டம்.....

இயல்பு வாழ்க்கைக்கு வந்து பாருங்கள்....

Related Posts with Thumbnails