TerrorisminFocus

Sunday, June 24, 2007

வீர'Money' - சுயமரியாதை பிரச்சாரமா? மாமா வேலை விபச்சாரமா?

வீரமணியைப் பற்றி எல்லாருக்கும் ஓரளவு தெரியும் ஆனாலும் கூட ஏன் மாமா என்று சொல்கிறீர்கள். அது எங்களைப் புண்ப்படுத்துகிறது என்று பலரும் சொல்கிறார்கள்.

வீரமணியை மாமா என்றவுடன் புண்பட்ட உங்களது மணம், எமது மக்களையும், எமது மண்ணையும், வளங்களையும் விபச்சாரியாக அவர் மாற்றிய பொழுது ஏன் புண்படவில்லை என்று எமக்கு கேள்வி எழுகிறது. அதுவே இந்த பதிவு.

*********************************

வீரமணிக்கு தரப்படும் வேன் சுயமரியாதை பிரச்சாரத்துக்கா?

சிறு தொழிலிலோ ஏற்றுமதி நிறுவனத்திலோ உழைப்புச் சுரண்டல் மூலம் பல லட்சம் லாபம் சம்பாதிக்கும் தொழில் அதிபர்கள் தாம் சொகுசாக இருப்பதற்கு பங்களாக்கள் கட்டிக் கொள்வதையும், ஏ.சி. கார்கள் வாங்கிக் கொள்வதையும் பார்த்திருக்கிறோம். கார்களை வாங்கும்போது சந்தையில் வந்திருக்கும் அதி நவீன, விலை உயர்வான, முடிந்தால் இறக்குமதி செய்யப்பட்ட கார்களாக வாங்குவது அவர்களிடையே உள்ள வழக்கம். ஆனால் எந்தத் தொழில் அதிபராவது காரை வாங்குவதை தொழிலாளர்களைக் கொண்டு விழா எடுத்து, தொழில் வளர்ச்சிக்காக 'அன்னாருக்கு' கார் வழங்கும் விழா நடத்தியதை எங்காவது பார்த்தது உண்டா?

அப்படி ஒரு அதிசய நிகழ்வை மாணவர் தி.க. சென்னையில் 21 ஜூனில் நடத்துகிறது. மானமிகு வீரமணிக்கு கலைஞர் கரத்தால் சுயமரியாதைப் பிரச்சார வேன் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது அந்த அமைப்பு. இந்த வேனை வாங்க பணம் எங்கிருந்து திரட்டப்பட்டது? பெரியார் பெயரில் வீரமணி நடத்தி வரும் கல்வி வியாபார நிறுவனங்களான பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், பார்மசி கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட கட்டாய நன்கொடையால்தான் வேன் வாங்கி இருக்கின்றனர்.

வீரமணிக்கு வேன் வழங்குவது இது முதன்முறை அல்ல.. ஏற்கெனவே 2001 இலும் வழங்கி இருக்கின்றனர். அப்போதும் ஊழியர்களின் பையில் இருந்து பிடுங்கினர். அங்கு பணியாற்றும் பலரும் "ஒரு மாசம் கூட சம்பளத்தை முழுசா தந்ததில்ல.. ஆசிரியருக்கு வேன் வழங்குறோம். எடைக்கு எடை நாணயம்..தர்றோம்னு 10%மாவது பறித்துக் கொள்கிறார்கள்" எனப் புலம்புகிறார்கள்.

சரி.. வழிப்பறி செய்து வேன் வாங்குகிறாரே, மானமிகு தளபதி! அதை வைத்துக்கொண்டு என்ன சுயமரியாதையைப் பிரச்சாரம் செய்கிறார்? அதிமுக ஆட்சிக்கு வந்தால் சமூகநீதி காத்த வீராங்கனையை ஆதரித்தும் திமுக ஆட்சிக்கு வந்தால் சூத்திரரை ஆதரித்தும் மானம்கெட்ட பிரச்சாரம் செய்கிறார்!


ஏற்கனவே ஆரம்பித்து விட்ட மாமா வேலைகள்..... மேலை நாட்டினரைக் குஷிப்படுத்தும் புரா

இப்போது 3 ஆண்டுகளாக தஞ்சை விவசாயக் கிராமங்களை அந்நியனுக்கு அடகு வைக்கும் புரா திட்டத்துக்கு பிரச்சாரம் செய்கிறார்.
தமிழ் நாட்டின் நெற்களஞ்சியத்தை சுடுகாடாக்கிட மூங்கிலையும் காட்டாமணக்கையும் பயிர் செய்யச் சொல்லி பிரச்சாரம் செய்கிறார்.

கார்பொரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், புராக்கள் இனிமேல் கிராமங்களில் விருந்தோம்பலையும் சுற்றுலாவையும் மேம்படுத்த செயல்திட்டங்களை வகுத்து வருகின்றன. புரா கிராமங்களுக்கு வருகை தரப்போகும் மேலை நாட்டு எஜமானர்களை மனம் குளிர வைக்கும் (குஷிப்படுத்தும்) இத்திட்டத்தை வகுத்துத் தர இருப்பவர்கள் 'லே மெரிடியன்' பழனி பெரிய சாமி போன்ற நட்சத்திர விடுதி முதலாளிகள். அதாவது சுற்றுலா, விருந்தோம்பல் எனும் பெயரில் விபச்சாரத்தை ஊக்குவிக்கப் போகின்றனர்.

சுற்றுலாத்தொழில் எந்த எந்த ஊர்களில் எல்லாம் ஊக்குவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் சிறுவர், சிறுமியர் உட்பட பலரும் விபச்சாரத்தில் தள்ளப்பட்டனர். மாமல்லபுரத்திலும், கோவாவிலும் இது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

இப்போது சொல்லுங்கள்... வீரமணிக்கு தரப்படும் வேன் சுயமரியாதை பிரச்சாரத்துக்கா? பெரியார் புரா மூலம் விபச்சாரத்துக்கா?

சின்ன கட்டபொம்மன் (பின்னூட்டத்தில்)



Related Articles:


இது பெரியார் புராணம் அல்ல!


ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொருவன் கன்னத்தை காட்ட...

42 பின்னூட்டங்கள்:

said...

//இப்போது சொல்லுங்கள்... வீரமணிக்கு தரப்படும் வேன் சுயமரியாதை பிரச்சாரத்துக்கா? பெரியார் புரா மூலம் விபச்சாரத்துக்கா?//

ரொம்ப சூடாக இருக்கிங்க !

:)

said...

//அதே வேளை உலகத்தில் யாரையுமே ஒப்புக்கொள்ளமாட்டோம் ,நாங்கதான் பெரிய புடுங்கி என்றும் பிற இயக்கத்தலைவர்களையும்,இயக்கங்களையும் வாய்க்கு வந்தபடி ஏசுவதுதான் புதிய ஜனநாயகபூர்வமான (அ )!!! புரட்சிகர வழிமுறை என்று கொண்டிருப்பது இலேசான புன்னகையைமட்டுமே வரவழைக்கிறது. //

இப்படி எழுதியுள்ளார் வரவனையான். நமக்கு நகைப்பை வரவழைப்பது எல்லாம் நாம் விமர்சிக்கும் தரகு புரோக்கர் கொஸ்டி கட்சிகளை மட்டுமே அரசியல் கட்சியாக பார்க்கும் வரவனையானினுடைய அப்பாவித்தனம்தான்.

நாம் விமர்சிப்பது எல்லாம் வோட்டுக் கட்சி சீர்குலைவு அமைப்புகளை மட்டும்தான்.

மக்களின் விடுதலைக்காக மாற்று அரசியல் பேசும் அமைப்புகளை இது மாதிரி விமர்சிப்பதில்லை.

வியாபாரிகள் சங்கம் முதல் பெரியார் திராவிட கழகம் வரை நட்பு சக்திகளாய் பார்க்கும் அமைப்புகள் லிஸ்ட் பெரிது.

துரதிருஷ்டவசமாக இங்கு எழுப்பியுள்ல கேள்விகள் எதையும் தர்க்க ரீதியாக எதிர்க் கொள்ளும் திராணியின்றி நெருப்புக் கோழி போல பொந்துக்குள் தலையை விட்டு தப்பித்தாதாக எண்ணிக் கொள்ளும் தவறை செய்கிறார் வரவனையான். பாவம்...

அசுரன்

said...

வரவனையான் எழுதியது இருக்கட்டும் தோழரே.

தோழர் மருதையன் பிறப்பில் பார்ப்பனரா இல்லையா?

இதற்கு ஆம் அல்லது இல்லை என்ற பதிலை மட்டும் சொல்லுங்கள்.

இன்னும் யார், யாரைத்தான் நம்பி ஏமாறப் போகிறோமோ தெரியவில்லை :-(((((((

said...

மருதையன் பார்ப்பனர் எனபதை பல இடங்களீல் நானே குறிப்பிட்டுள்ளேன் என்பதிருக்க, மருதையனின் அரசியலை ஒன்றும் இங்கு நான் பேசவில்லை. மேலும் புரட்சிகர அமைப்பைச் சேர்ந்தவர் மருதையன் அது திக, பமக, திமுக போன்ற அமைப்பு அல்ல. கனிமொழியை தீடிரென்று அமைச்சராக்குஅவ்து போல செய்ய.

கம்யுனிஸ்டு அமைப்பை பொறுத்தவரை ஒரு வெகு சன அமைப்பின் தலைவர் என்பவர் பிரதிநிதிதானே தவிர முடிவெடுப்பவர் அல்ல. மருதையனை ஆட்டுவிப்பது மக் இகவின் மைய கமிட்டியாக இருக்கும். மேலும் இங்கு வீரமனி குறித்து விவாதம் நடக்கிறது என்று நினைக்கீறேன். அவரைக் குறித்தும் உங்களது தலைவர்கள் குறித்தும் பேசினால் உடனே புரட்சிகர அமைப்பின் தலைவர்கள் குறித்து விவாதத்தை திசை திருப்புவது நேர்மையா என்று பரிசீலிக்கவும். ஏனேனில் இதே தந்திரத்தை கையாண்டததற்க்கா நாம் எல்லாரும் சேர்ந்த பார்ப்ப்னிய சக்திகளை கண்டனம் செய்துள்ளோம். நாமே அந்த தவறை செய்வது எப்படி என்று யோசிக்கவும்.

அப்புறம் மருதையன் தான் இந்த வாதஙக்ளை வைத்தாரா? இது எனது சொந்த புரிதலில் நான் முன் வைக்கும் வாதம்.

இதனை வாதம் செய்ய வாருங்கள் நண்பர்களே.. :-))

வீரமணி குறித்து உங்கள் பதில் என்ன?

ராமதாஸ் குறித்து உங்கள் பதில் என்ன?

அசுரன்

said...

//மருதையன் பார்ப்பனர் //

ஆனால் பிறப்பினால் மட்டுமே!

ஆனால் கருணாநிதி, துரைமுருகன் பிறப்பினால் சூத்திரர்கள், சாய்பாபாவின் மந்திர சக்தியை விதந்தோத்திய போது அவர்கள் யார்?

நான் ஆட்சியில் இருந்திருந்தால் ஜெயேந்திரன் மேல் கை வைத்திருக்க மாட்டேன் என்று சொன்ன கருணாநிதி தான் உங்களுக்கு சூப்பர் சூத்திரனா லக்கிலுக்?

பெரியார் சிலையை உடைத்த போது சூரமனியின் சூரத்தனம் என்னவானது? அவாளை எதிர்க்காத வீரம் தான் சூரமனியின் சூத்திர வீரமா?

முதலில் நீங்க எதைப் பார்ப்பனியம் என்று நினைக்கிறீர்கள் லக்கிலுக்?

ஒருத்தன் பார்ப்பனனாய் பிறந்த ஒரே காரணத்துக்காக அவன் கண்டத்துக்குறியவன் என்பதற்கும் ஒருவன் பறையனாய்ப் பிறந்த ஒரே காரணத்துக்கு அவன் கண்டனத்துக்குறியவன் என்பதற்கும் சாராம்சத்தில் என்ன வித்தியாசம் என்பதை லக்கிலுக் விளக்கினால் நன்றாக இருக்கும்.

said...

அது சரி லக்கி லுக்,

வீரமணி, கருணாநிதி, வைகோ, இவர்களெல்லாம் நடைமுறையில் திராவிட கருத்தியலை கொண்டு இயங்குபவர்களா என்பதனை கூற முடியுமா? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த ஏகாதிபத்திய தரகர்களையும், பார்பனீயத்தோடு சமரசம் செய்துக்கொள்ளும் இந்த நரிகளையும் பிறப்பால் திராவிடனாக பிறந்துவிட்டார்கள் என்ற ஓரே காரணத்தாக நம்பி ஏமாற போகிறீர்களோ.. எந்த ஒரு தத்துவமும் சரி, அதனை கொண்டு செயல்படுகின்ற மனிதனையும் சரி நடைமுறையிலிருந்து உரசிப்பார்க்க வேண்டும்.. அப்படி தோழர். மருதையன் மீது ஏதாவது விமர்சனமிருந்தால் சொல்லுங்கள், அவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல மாறாக அவர் பிறப்பால் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்திற்காக அவருடைய புரட்சிகர நடைமுறையையும், பிறப்பால் திராவிடர் என்பதற்காக கருணாநிதி, வீரமனி போன்ற ஏகாதிபத்திய தரகர்களின் துரோக நடைமுறையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டேன் என கூறுவது சுத்த பத்தாம்பசலித்தனமானதாக இருக்கிறது

ஸ்டாலின்

said...

வீர மணி இருக்கட்டும் தோழர்களே,
நேபாளத்தில் கலப்புப் பொருளாதரத்தைக் கொண்டு வருவோம் என்று கூறும் மோவோயிஸ்ட்டுக்களின் தலைவர் பிரச்சண்டாவின் கூற்றைப் பற்றி என்ன விமர்சனத்தை முன் வைக்கிறீர்கள் என்று அறிய விரும்புகிறேன்?

அவரும் உங்கள் பார்வையில் ஒரு மாமாவா?

said...

கலப்பு பொருளாதாரம் என்று சொன்னதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்ல. நேபாளத்தின் நிலமை என்னவென்று தெரியவில்லை. இவையெல்லாம் தெரியாமல் அந்த் பிரச்சனை குறித்து பேசுவது என்று நீங்கள் விரும்புவது இந்த விவாதத்தை திசை திருப்பும் உங்களது ஆர்வமாகவே தெரிகிறது $சல்வன் அவர்களே.. ஓ ஸாரி.. அனானி அவர்களே...

மேலும் நேபாளத்தின் பிரசந்தா ஏகாதிபத்தியத்திற்க்கு தனது நாட்டை கூட்டிக் கொடுக்கீறார் எனில் அவரும் மாமாதான். இதில் என்ன சந்தேகம் வேண்டிக் கிடக்கீறது.

அசுரன்

said...

ஐயோ பாவம்!

லக்கிய வுட்டுடுங்க!

அவரு ரொம்ப நல்லவரு.

said...

தோழரே!

இப்பதிவில் வரவனையான் பதிவுகுறித்த விவாதத்தை நீங்கள் ஆரம்பித்ததாலேயே என்னுடைய சந்தேகத்தை கேட்டேன். விவாதத்தை திசை திருப்பும் எண்ணமல்ல!

மற்றபடி திராவிட இயக்கங்கள் குறித்தான உங்களது விமர்சனங்கள் "மாமா" மாதிரியான வார்த்தைகள் இல்லாமல் நியாயமாக அமைந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருக்கிறேன்!

said...

பதிவர்களே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

மருதையன் பார்ப்பனரா என்கிற விவாதம் நடக்கிறது
ஆனால் அதைவிட ஒரு ஸ்பெக்ஷலான சூப்பர் நியூசை
நான் இங்கே சொல்லப்போகிறேன்..............



நம்ம அசுரன் அய்யாவே சாதுவான......

பார்ப்பனர் தானுங்கோ

said...

அன்றே வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடிப்பதற்காகவும்,
அவர்களது போருக்கு ஆள் பிடிப்பதற்காகவும் மாமா வேலை பார்ப்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்து, வாழ்நாளெல்லாம் உழைத்து, வெள்ளைக்காரனே ஆளவேண்டும் என்று மாமா வேலை பார்த்த மூத்த மாமாவை ஒப்பிடும்போது மற்றவர்கள் எல்லோரும் சுண்டைக்காய் மாமாக்கள்தான் என்று கூற கடமைப்பட்டுள்ளேன் தோழரே.

said...

//இப்போது சொல்லுங்கள்... வீரமணிக்கு தரப்படும் வேன் சுயமரியாதை பிரச்சாரத்துக்கா? பெரியார் புரா மூலம் விபச்சாரத்துக்கா?//
அசுரன்,
வீரமணி இதை எல்லாம் எந்த காலத்துல செய்து இருக்காரு. ஆட்சிக்கு எந்த கட்சி வருதோ அதை நக்கியே வாழ்ந்துட்டாரு. எங்க எதிர்த்தா அவரோட கல்வி சேவை வெளியே வந்துவிடும் என்று அதை எல்லாம் அவரு செய்றது இல்ல.

said...

இந்த பின்னூட்டம் எனக்கும் வந்திருந்தது அசுரன் அவர்களே.

தீர விசாரித்து கண்டனப் பதிவு போடலாம் என்று இருந்தேன்.

அதற்குள் முந்திக் கொண்டீர்கள்!

said...

// தோழர் மருதையன் பிறப்பில் பார்ப்பனரா இல்லையா?

இதற்கு ஆம் அல்லது இல்லை என்ற பதிலை மட்டும் சொல்லுங்கள்.

இன்னும் யார், யாரைத்தான் நம்பி ஏமாறப் போகிறோமோ தெரியவில்லை //

மருதையன் கிடக்கட்டும் லக்கிலுக்கு. உங்க தல பாலபாரதி என்கின்ற பாலகிஷ்ட அய்யங்கார் பிறப்பால் அய்யிரா இல்லையா? இதற்கு ஆம் அல்லது இல்லை என்ற பதிலை மட்டும் சொல்லுங்கள். பாலபாரதியை கொண்டாடும்போது அவர் பிறப்பு தெரியவில்லை வெறும் சிறப்புதான் தெரிகிறது மத்தவங்களுக்கு மட்டும் சிரிப்பு வருகிறதா?? என்னே திராவிட குஞ்சுகளின் கொளுகை பிடிப்பு.

said...

நண்பரே!

என்னையும் எட்டு போட்டு விளையாட கூப்பிட்டாங்க, சும்மா இருக்க முடியுமா அதனால நானும் பதிவு போட்டுவிட்டேன்! எட்டு பேரை கூப்பிடனுன்னு ரூல்ஸாம் அதனால உங்களை எட்டு போட்டு விளையாட அழைக்கிறேன்… ஓடிவாங்க!!!

நன்றி,

நா ஜெயசங்கர்

said...

பெரியாரின் இயக்கம் தனது வீச்சைக் குறைத்துக் கொள்வதும், அரசுடனும் ஆதிக்க சக்திகளுடன் சமரசமாகத் தொடங்குவதும் அவரின் வயது முதிர்ச்சியுடன் தொடங்குகிறது எனலாம்.

தீவிரக் கொள்கைப் பிடிப்புடனும் செயல்பாட்டுடனும் இயங்கிய குத்தூசி குருசாமியை இயக்கத்தை விட்டு விரட்டுவதில் வீரமணி கும்பல் முனைப்புடன் இருந்து செயல்பட்டு குருசாமியின் இடத்தைப் பிடுங்கிய காலகட்டத்தில் பெரியாரின் இயக்கம் நிறுவனமாகத் தொடங்குகிறது.

பெரியாருக்குப் பின் தலைமைக்கு வந்தவர் மணியம்மா என்றாலும் அவரை ஆட்டுவிக்கும் இடத்தில் சாரங்கபாணி எனும் இயற்பெயர் கொண்ட கடலூர் வீரமணிதான் இருந்தார். தி.க., எமெர்ஜென்சியை ஆதரித்து தீர்மானம் போட்டிருக்கிறது. சஞ்சய் காந்தி கொண்டு வந்த 5 அம்ச திட்டங்களையும் இந்திரா கொண்டுவந்த 20 அம்ச திட்டங்களையும் ஆதரித்துள்ளது. இதெல்லாம் ஆளும் வர்க்கத்துடன் இசைந்து போவதற்கான திட்டங்களே. ஆயினும் பயன் இல்லை. இந்திரா வீரமணியை உள்ளே பிடித்துப் போட்டார் மிசாவில்.

பெரியாரின் இறுதிக்காலத்தில் அவரின் முழக்கம் தனித் தமிழ்நாடு கேட்கும் வரை சென்றது. விடுதலை அலுவலகத்தின் முகப்பில் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று ஒரு பலகை வைத்திருந்தனர். தி.க. செய்து வரும் சர்வதேச வணிகங்களுக்கு அது இப்போது இடைஞ்சலாக இருப்பதால் பலகை அகற்றப்பட்டு விட்டது.

திராவிட நாடு கேட்ட பெரியார், இந்திய தேசியத்தை மறுதலித்து வந்தவர். இந்திய தேசியம் பேசும் காங்கிரசுக் கும்பலை பெரியார் 'தேசியம், அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்' என்றார். ஆனால் வீரமணியோ 1999இல் கார்கில் போர் நிதி உதவி வழங்கி இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக்காத்தார். பெரியார் புரா நிகழ்ச்சியில் என்.சி.சி.யின் ராணுவ அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். வாழ்வியல் சிந்தனைகள் நூலில் 'இந்திய இளைஞர்கள் எல்லாரும் கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும்' என்றும் உளறிக் கொட்டியுள்ளார்.

2000 ஆண்டில் வீரமணி பெரியாரையும் திரிக்க முற்பட்டு 'பெரியார் இந்திய தேசியத்துக்காகக் குரல் கொடுத்தவர்' என்று தினமணியில் கட்டுரை எழுதினார். ஆய்வாளர் எஸ் வி ராஜதுரை இதனைத் தோலுரித்து 'பெரியார் மரபும்-திரிபும்' எனும் நூலை எழுதி வீரமணியை நார் நாராகக் கிழித்துப் போட்டார்.

பெரியாரின் இயக்கம் வடவருக்கு எதிராகவும் பார்ப்பனருக்கு எதிராகவும் 50களில் போராடியது. ஆனால் வீரமணியின் பெரியார் பிளாசா (ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்)வில் இன்று மார்வாரிகள் கடை பரப்பி இருக்கின்றனர்.

மார்வாரிகளாலே வீரமணி, லண்டனில் பாராட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டு ஜனவரியில் திருச்சியில் உள்ள தி.க. தொண்டர்கள் தங்கள் பகுதியில் பெரியார் சிலையை அமைத்திருந்தனர். அதன் திறப்புவிழாவுக்கு அனுமதி கிடைக்கவில்லை. காவல்துறை கண்காணிப்பாளரிடம் சென்று முறையிட்டும் பலனில்லை. எனவே பெரியார் சிலையைச் சுற்றி இருந்த சாக்குத் துணியை இரவோடு இரவாக ரகசியமாய் அகற்றி பெரியார் சிலையை 'துணிச்சலாக'த் திறந்து விட்டனர். இச்செய்தியை அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவரிடம் சென்று சொன்னார்களாம். உடனே அத்தலைவரும் 'செஞ்சது சரிதான். பெர்மிசன் தராம இருந்தாலும் எதுக்குங்க பிரச்சின பண்ணிக்கிட்டு..நமக்கு சிலை கிடச்சிருச்சுல்லா' என்று சொல்லி இருக்கிறார். பெரியாரை வெறும் சிலையாகப் பார்க்கும் மூடத்தனத்துக்கு இது சரியான சான்று.

காஞ்சிமடத்தைக் கைப்பற்று என்று புரட்சிகர அமைப்புகள் போராடியபோது வீரமணியின் மடம் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.

பெரியாரை திரைப்படமாக எடுத்த இந்த திரிபுவாதிகள் அதில் பெரியாரின் பொதுவாழ்வில் நிகழ்த்தப்பட்ட பெரும் இயக்கமான இந்தி எதிர்ப்பை மறைத்து இருக்கிறார்கள். இது எதற்காக என்றால் இந்தியில் பெரியார் படத்தை டப் செய்து டப்பு சேர்க்க. இதே கயவாளித்தனத்தை மணிரத்னம் எனும் நாதாரி 10 வருசத்துக்கு முன் இருவர் படத்தில் 'வடவர் எதிர்ப்புப் போராட்டத்தை இட ஒதுக்கீடு போராட்டமாகத் திரித்து' இருந்தான். பெரியாரின் சோசலிசக் கருத்துக்களோ, வடவர் எதிர்ப்புக் கருத்துக்களோ இல்லாமல் கவனமாக இந்திய தேசியவாதிகளை திருப்திப்படுத்தவும் தங்களது வணிகத்துக்கும் ஏகாதிபத்திய சேவைக்கும் சேதாரம் ஏற்படாதவாறும் பெரியார் படத்தைத் தயாரித்தார்கள்.

வீரமணியின் பக்தர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் பிரச்சினையை திசை திருப்புவதில்தான் கவனமாக உள்ளனர்.

சின்ன கட்டபொம்மன்

said...

//மற்றபடி திராவிட இயக்கங்கள் குறித்தான உங்களது விமர்சனங்கள் "மாமா" மாதிரியான வார்த்தைகள் இல்லாமல் நியாயமாக அமைந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருக்கிறேன்!//

நண்பர் லக்கிலுக்,

எந்த இடத்திலும் நான் திராவிட இயக்கங்களை விமர்சிக்கவில்லையே? திமுக, அதிமுக, பமக, திக எல்லாம் வெறும் பெயரில் திராவிடம் தாங்கி நிற்க்கும் இயக்கங்கள்தான். குழலி பாசையில் திராவிடம் அந்த கட்சிகளிடமிருந்து நீர்த்து போய் வருடம் பல ஆகிறது.

எனவே இந்த குற்றச்சாட்டுகள் கண்டனங்கள் எதுவும் திராவிட அரசியல் மீது அல்ல. இவையணைத்தும் தரகு அரசியல் மீதான விமர்சனங்களே.

அசுரன்

said...

//மாமா" மாதிரியான வார்த்தைகள் இல்லாமல் நியாயமாக அமைந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருக்கிறேன்//


மாமா என்ற வார்த்தையை விலக்கி விட்டு எனது வாதங்களிலுள்ள உண்மைகளை பரிசிலிக்க உங்களை அழைக்கிறேன் லக்கிலுக். மாமா என்ற வார்த்தை உங்களை புண்படுத்துகீறது எனில் அதனை உங்க்ளுடனான விவாதத்தில் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்,.

அசுரன்

said...

//என்னையும் எட்டு போட்டு விளையாட கூப்பிட்டாங்க, சும்மா இருக்க முடியுமா அதனால நானும் பதிவு போட்டுவிட்டேன்! எட்டு பேரை கூப்பிடனுன்னு ரூல்ஸாம் அதனால உங்களை எட்டு போட்டு விளையாட அழைக்கிறேன்… ஓடிவாங்க!!!

//

கட்டாயம் வருகிறேன் ஜெய்சங்கர். எட்டு போட்டு எப்படியாவது லைசென்ஸ் வாங்கிருவேன் என்று உறுதியளிக்கிறேன். அழைத்தமைக்கு மிக்க நன்றி

அசுரன்

said...

//இந்த பின்னூட்டம் எனக்கும் வந்திருந்தது அசுரன் அவர்களே.

தீர விசாரித்து கண்டனப் பதிவு போடலாம் என்று இருந்தேன்.

அதற்குள் முந்திக் கொண்டீர்கள்!

//

தோழர் விடாது கருப்பு,



வீரMoney அய்யா இது மட்டும் செய்யவில்லை - எப்படி இந்திய பணத்தில் படித்து விட்டு அமெரிக்காவிற்க்கு ஓடிப் போய் பிழைப்பு நடத்தலாம் என்பதையும் தனது உறவினர்களுக்கு சொல்லித் தருகிறார். வீரமணி பிறந்த நாள் அன்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தார் அவருடைய உறவினப் பெண். அவர் மூன்று வருடன் அரசாங்க உத்தியோகத்துக்கு விடுப்புப் போட்டு விட்டு நர்ஸ் படிப்பு படித்திருந்தார். அவரிடம் நம்ம அய்யா சொல்கிறார் - இன்னுமா இங்க இருக்குற? அமெரிக்காவுல நர்ஸ் படிப்புக்கு நல்ல வாய்ப்பு இருக்கு சீக்கிரம் கிளம்பி போர வழியப் பாரு - என்று. இது ஒரு திக பிரமுகரிடம் இருந்து நாமது நண்பர் ஒருவர் கறந்த விசயம்.

இதே போல நிகர்நிலை பல்கலைகழகம் சான்றிதழ் வாங்குவதற்க்காக வீரமணி கும்பலின் கல்வி நிறுவனத்திற்க்கு வந்த பரிந்துரை நிறுவனத்தினுடைய ஆய்வுக் குழுவிடம் பெரியார் புரா திட்டங்களை பற்றிய பிரசெண்டேசன்களாய் போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். அவர் ஒரே வரியில் என்னய்யா இது? கல்வி பற்றி எதுவும் இல்ல ஒரே வியாபாரத்த பத்தி பிரசெண்டேசன் கொடுக்கிறீங்க.. இது பல்கலைகழகத்திற்க்கான ஆய்வா இல்லை வியாபார நிறுவனத்திற்க்கான ஆய்வா என்று கேட்டுள்ளார். பிரின்ஸ்பல் ராம்சந்திரன் முகத்தில் ஈயாடவில்லை.

ராமதாஸ் மீதும், வீரமணி மீதும் குற்றச்சாட்டு வைக்கிறோம் எனில் ஆதரப்பூர்வமாக நாம் உணர்கின்ற விசயத்தை தவறான புரிதலில் இருக்கின்ற நண்பர்களிடம் சொல்கிறோம். இங்கு நம்முடன் இது வரை தோழமையுடன் இருந்த லக்கிலுக், வரவனையான், மகேந்திரன் இவர்களை பகைக்கும் எண்ணத்திலா இதை வைக்கிறேன்?

உண்மையில் ஒரு நண்பனாக அவர்களின் தவறான கருதுகோள்கள் என்று நான் கருதுவனவற்றை ஆதரப்பூர்வமாக முன் வைக்கிறேன். இவற்றை ரொம்பவும் சாத்வீகமாக முந்தைய சில கட்டுரைகளில் வைத்த பொழுது நண்பர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. சிறிது காட்டமாக எழுதிய பிற்ப்பாடே மண்டையில் உறைத்தது எனது தவறல்ல.

ஆயினும் சில நண்பர்களின் எதிர்வினை மிக மோசமானதாகவே இருக்கிறது, மக இகவின் பார்ப்ப்ன தலைமை குறித்து எழுதுகிறார் ஒரு நண்பர். இது போல தந்திரம் 1990 களின் ஆரம்பத்தில் பார்ப்ப்னிய மேலாதிகத்தை எதிர்த்து பாபர் மசுதி இடிப்பில் பார்ப்பனர்களின் நலன் ஒளிந்திருப்பதை அம்பலப்படுத்த மக இக ஸிரங்கம் கருவறை நுழைவு போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் அமைப்புடன் இணைந்து நடத்தியது. அப்பொழுதும் கூட திக உள்ளிட்ட தரகு கோஸ்டிகள் அந்த போராட்டத்தை கொச்சைப் படுத்தியே எழுதி வந்தனர். இதனை மக இக அம்பலப்படுத்தியவுடன் ஒளிந்து கொள்ள இடமின்றி திக உள்ளிட்ட கோஸ்டிகள் கண்டுபிடித்த இடம்தான் இந்த மறைமுக பார்ப்ப்னியம் என்கிற வாதம். இதனை ஒட்டி திக சவால் விட்டது மக இகவின் தலைமையில் உள்ள பார்ப்பன்ரகளை வெளியிடு என்று. இது ஆள் காட்டிக் கொடுக்கும் கங்கானி வேலை தானேயன்றி வேறல்ல. துரதிருஷ்டவசமாக மறைமுக பார்ப்ப்னியம் பேசுவதாக குற்றம்சாட்டப்படும் மக இகதான் இன்றுவரை பார்ப்ப்னியத்துடன் தீர்மானகரமான போராட்டத்தை தனது தோழமை அமைப்புகளுடன் இணைந்து நடத்தி வருகிறது. ஆனால் பார்ப்பனிய எதிர்ப்பின் ஦ஹோல்சேல் உரிமையாளர்கள் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி தரகு வேலை செய்து வரும் கும்பலோ ஜெயலலிதாவை சமூக நீதி காத்த வீராங்கனை என்று சொன்னதைத் தாண்டி வேறெங்கும் சென்று விடவில்லை. அன்று ஆள் காட்டி வேலை செய்ய துணிந்த திக இன்றும் கூட கேட்க்கும் உனக்கு இந்த உண்மைகளைச் சொன்னவர் யார் என்று தைரியமிருந்தால் வெளியிடு என்று. அவர்க்ளுக்கு ஒரேயொரு பதில்தான் இந்த உண்மைகளை சொன்னது யாரோ ஆனால் இவற்றை உறுதிப்படுத்தியது என்னவோ பெரியார் புரா இணையத்தளம்தான்.


அசுரன்

said...

பிரக்ஞை என்ற சிற்றிதழ் தொடங்கப்பட்ட போது அதில் ஆசிரியர் குழுவில் இருந்தவர்தான் பின்னர் மக இகவில் வேறொரு பெயரில் இருப்பவர். மருதையன், வல்ல சபேசன், வீராச்சாமி போன்ற பெயர்கள் எதுவாக இருந்தாலும் நபர்(கள்) கொள்கைப் பிடிப்புடன், சமரசம் செய்யாமல்,
அதிகார வர்க்கம் காட்டும் சலுகைகளுக்கு விலை போகாமல் இருப்பதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.அவ்வாறு நோக்குங்கால் மக இக, அதன் தலைமை அமைப்பான மால்.லெ கட்சி (மாநில சீரமைப்புக் குழு) இன்னும் சமரசம் செய்து கொள்ளமல் இருப்பதையும், தன்னார்வக் குழுகள் மீது விமர்சனம் வைப்பதையும், சிறு பத்திரிகை இலக்கிய-பண்பாட்டுச் சேற்றில் புதைந்து போகாமல்
இருப்பதையும் அவதானிக்க இயலும். கொள்கைகள் சரியோ, தவறோ, அவ்வமைப்பும்,
அதன் முண்ணனி அமைப்புகளும் இன்னும் இயங்குகின்றன. இன்னொரு அமைப்பு, கேடயம்,
மன ஒசை பத்திரிகைகளை நடத்திய அமைப்பு/மாலெ கட்சி 1991ல் சிதறியதையும், அதற்குப்
பின் அது தேங்கி, குழுக்களாக பிரிந்துவிட்டதையும் கருத்தில் கொள்க.
இந்த்துவ பாசிசத்தினை தொடர்ந்து 1980களிலிருந்தே மக இக, அதன் அரசியல் கட்சி
தலைமை தொடர்ந்து தீவிரமாக எதிர்த்து வந்துள்ளது.பாஜக விலிருந்து பிரிந்து தனியாக இந்த்துவ கட்சி கண்ட உமா பாரதியை தன் கட்சி அலுவலகத்தில் வரவேற்ர வீரமணி எங்கே, மருதையன் எங்கே. மோடியின் இனப்படுகொலையினை
கண்டிக்காமல் பதவியில் கண்ணும் கருத்துமாக, பாஜகவுசன் அரசியல் சல்லாபம் செய்தவர்கள் கருணாநிதி, வைகோ, மற்றும் ராமதாஸ்,ஜெ காட்டுத்தனமாக அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய போது எந்த எதிர்ப்பும் காட்டாமல் மெளனம் காத்த வீரமணியை விட மருதையன்கள் பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் என்பதில் ஐயமில்லை.

வரலாறு தெரியாத
வரவனையான்கள் தாங்கள் முட்டாள்கள் என்பதை எத்தனை முறைதான் நிருபீப்பார்கள்.
-----------------------------------
2000 ஆண்டில் வீரமணி பெரியாரையும் திரிக்க முற்பட்டு 'பெரியார் இந்திய தேசியத்துக்காகக் குரல் கொடுத்தவர்' என்று தினமணியில் கட்டுரை எழுதினார். ஆய்வாளர் எஸ் வி ராஜதுரை இதனைத் தோலுரித்து 'பெரியார் மரபும்-திரிபும்' எனும் நூலை எழுதி வீரமணியை நார் நாராகக் கிழித்துப் போட்டார்.

-----------------------------------------------------------------------------

ஆம், அதில் ஒரு அத்தியாயத்தில் தி.க தலைமை பெரியார் மறைவிற்குப் பின் குறிப்பாக
அவசர நிலையின் போது செய்த சமரசங்களை ஆதாரத்துடன் தோலுரித்திருப்பார். வீரமணி
தி.க/பெரியார் வரலாற்றை திரிக்க செய்த முயற்சியை அம்பலபடுத்தும் அந்த நூல் பெரியார், திக
குறித்த குறிப்பிடத் தகுந்த நூலும் கூட. ஆனால் மக இகவிற்கு ராஜதுரை என்றால் ஆகாது.இது ராஜதுரையில் நூல்களை படிப்பதிலிருந்து அசுரனை தடுக்கிறதா?. வரவனையான்கள், லக்கிலுகள்,
குழலிகள் ராஜதுரை-கீதாவின் எழுத்துக்களை படித்திருக்கிறார்களா?
வீரமணியின் பெரியாரியம் அறக்கட்டளை சுரண்டலாக மாறிவிட்டது. இதுதான் உண்மை.
பலர் பெரியார் திகவில் சேர இதுவும் ஒரு காரணம். திக தோழர்களிடம் கறாராக இடத்திற்கு
இவ்வளவு நன்கொடை என்று வசூலித்தவர் வீரமணி.பெரியார் கல்வி நிறுவனங்கள் வணிகமயமான கல்வி தருகின்றன. அடுத்து என் ஜிஒ வேலையில் அவர்கள் ஈடுபடுவது பரிணாம
வளர்ச்சிதானே?

ஏகாத்திபத்தியம் அனைத்து நிறத் தோல்களுடைய தரகு முதலாளிகளையும் எப்போதும் வரவேற்றுள்ளது.இப்போது அதில் வீரமணி, திகவும் சேர்ந்துள்ளன.

said...

வீரமணியை மாமா என்று சொன்னதன் காரணத்தை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. நமது தோழர்களும் கூட பொதுவாக இந்திய வளங்களைக் கூட்டிக் கொடுப்பதாலேயே வீரMoneyயை நாம் மாமா என்று சொல்கிறோம் என்று வாதிட்டு வருகிறார்கள். உண்மை அதுமட்டுமல்ல, அய்யா அவர்கள் தற்போது இறங்கியுள்ள விசயம் உண்மையான மாமா விவகாரமாக இருப்பதே இந்த கட்டுரையின் கடுமையான தலைப்பிற்க்கு காரணம். இதை விளக்கி வரும் கட்டுரை வரிகளைப் பார்க்கவும்:

@@@
கார்பொரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், புராக்கள் இனிமேல் கிராமங்களில் விருந்தோம்பலையும் சுற்றுலாவையும் மேம்படுத்த செயல்திட்டங்களை வகுத்து வருகின்றன. புரா கிராமங்களுக்கு வருகை தரப்போகும் மேலை நாட்டு எஜமானர்களை மனம் குளிர வைக்கும் (குஷிப்படுத்தும்) இத்திட்டத்தை வகுத்துத் தர இருப்பவர்கள் 'லே மெரிடியன்' பழனி பெரிய சாமி போன்ற நட்சத்திர விடுதி முதலாளிகள். அதாவது சுற்றுலா, விருந்தோம்பல் எனும் பெயரில் விபச்சாரத்தை ஊக்குவிக்கப் போகின்றனர்.

சுற்றுலாத்தொழில் எந்த எந்த ஊர்களில் எல்லாம் ஊக்குவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் சிறுவர், சிறுமியர் உட்பட பலரும் விபச்சாரத்தில் தள்ளப்பட்டனர். மாமல்லபுரத்திலும், கோவாவிலும் இது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
@@@

சுற்றுலாத் துறைக்கும் குழந்தை விபச்சாரத்திற்க்கும் என்ன தொடர்பு, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் ஹை ஃபை விபச்சாரம் பற்றியெல்லாம் கூகிளில் தேடினால் வெகு தெளிவான புரிதல்கள் கிட்டும்.

அசுரன்

said...

தேவனென்றும் அசுரனென்றும்
தெருசண்டை நமகெதுக்கு
சேவை வேறு புரட்சிவேறு
போக போக தெரியும் பாரு !

மாமாவை மாமாவென்றும்
மச்சினனை மச்சினன்னும்
மறைக்காம சொல்லிப்புட்டா
சிரிக்காம போகலாமா -தம்பி
(தலையிருக்க) சிகை மட்டும் ஆடலாமா!

சொன்னாக்க குத்தமுன்ன
செயலை நீயும் காட்டுடான்னா
புண்ணாக்கா புளியஞ்சோறா
போறபோக்கில் கொடுப்பதற்கு !

வீரமா பேர் இருக்கு
வீதியெங்கும் சிலை இருக்கு
காப்பாத்த வக்கில்லயே
கண்சிவந்து என்ன பயன் !

பார்பானை திட்டிபுட்டா
பழிமேல போட்டுபுட்டா
பருப்பதுதான் வெந்துடுமா
பாட்ட நீ மாத்திபோடு !

சிங்கமும் சிறுநரியும்
சிலநேரம் ஒண்ணாகும்தான்
சிங்கத்தை சிறுநரிதான்
சீறினாக்கா சிரிப்புவரும் !

வேதத்தை திட்டிபுட்டோம்
வேகத்தை குறைக்கலாமோ
வேகாத வெங்கயத்தை
வேகவைக்க முயற்சிக்காதே !

தப்பதை தப்புன்னும்
மப்பதை மப்புன்னும்
மனம் விட்டு சொல்ல இங்கு
மாண்புமிகு அசுரன் வேணும் !

said...

அசுரன், நீங்க சொல்ற மாதிரியேதான் நடந்துகிட்டு இருக்குது. வீரமணி நேற்றைய விடுதலையில் எழுதிய 'வாழ்வியல் சிந்தனைகள்'-ல் மெடிசின் டூரிசம் - அதாவது மருத்துவ சுற்றுலா பற்றி சிலாகித்து அதன் மூலம் நாட்டுக்கு வர இருக்கும் வருவாய் பற்றி பீத்தி இருந்தார். அவரின் புரா கூட ஓர் ஊரில் இது மாதிரி தொலை-மருத்துவ மையம் நடத்த ஆரம்பித்து விட்டது. மருத்துவம் தனியார் மயமாகி ஏழைகளின் சுகாதாரம் இங்கே கேட்பாரற்றுப் போய்விட்டது பற்றியெல்லாம் இந்த மாமாவுக்கு (அதாவது மானமிகு மாமாவுக்கு) கவலை இல்லை. ஆனால் அமெரிக்க நோயாளிகள் குறைந்த செலவில் நம்மூரில் வந்து சிகிச்சை பெற்றுச் சென்றால் நமக்கு லாபந்தானே என்று எழுதுகிறார். இன்றைக்கு இந்தியா முழுக்க பெருநகரங்களில் மருத்துவ சுற்றுலாவுடன், ஆயுர்வேத முறைப்படி எண்ணெய்க்குளியல், மசாஜ் என்று நட்சத்திர விடுதிகள் வெளிநாட்டு கிராக்கிகளைப் பிடிக்க ஆரம்பித்து உள்ளன. மாமல்லபுரம் கடற்கரை ஓர விடுதிகளில் கேரள நன்னாட்டிளம் பெண்களுடனே ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை செய்து தோணிகள் ஓட்டி விளையாடி வர மென்பொருள் தொழில் அதிபர்கள் கூட்டமாய் மொய்க்கிறார்கள். கார்ப்பொரேட் சோசியல் ரெஸ்பான்சிபிளிட்டி, மேற்படி..மசாஜ் மாதிரியான விருந்தோம்பலை இந்தியாவின் கிராமங்கள் முழுக்க எடுத்துச் செல்லப்போகிறது. இதனை வரும் ஐந்தாண்டுத்திட்டத்திலும் இந்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த மசாஜ் சிகிச்சை என்பது உடல் நலம் சம்பந்தப்பட்டது என்று நம்பிக்கொண்டிருக்கும் ஏமாளிகள் சென்ற மாதம் சென்னை,தியாகராய நகரில் போலீசால் கைது செய்யப்பட்ட 'கேரள பாணி மசாஜ் நிலைய அழகிகள்' செய்தியை மறுவாசிப்பு செய்யலாம். ஜி.ஆர்.டி. அல்லது கார்ப்பொரேட் சோசியல் ரெஸ்பான்சிபிளிட்டி (பெரியார் புரா போன்ற திட்டங்கள்) போன்று சர்வதேச அளவில் செய்தால் அதை இந்திய தரகர்கள் ஆதரித்துக் கொண்டே லோக்கலில் செய்யும் ஆட்களை விபச்சாரிகள் என்று கைது செய்கிறார்கள்.

சின்ன கட்டபொம்மன்

said...

தோழர் அசுரன்,

இப்போது திராவிட நன்பர்களோடு நடந்து வரும் இந்த விவாதங்களால் ஏற்கனவே பல்லைப் பிடுங்கி ஓரமாக உட்கார வைக்கப் பட்டிருக்கும்
ஜந்துக்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே அடிபட்டு விழுப்புண் வாங்கிய இடங்களில் டார்ச் அடித்து யாராவது ஆதரவுக்கு
வரமாட்டார்களா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைய ஆரம்பித்துள்ளார் சந்திப்பு செல்வபெருமாள்..

பார்க்க ரொம்பவே பரிதாபமாக இருக்கிறது..

இதற்கிடையில் தமது வழக்கப்படி ரத்தம் குடிக்கத் துடிக்கும் பார்ப்பனிய பன்னாடைகளும் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்..

இங்கே நடக்கும் விவாதங்களினூடாக அந்த நரிகளுக்கு சரியனதொரு செய்தியையும் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்

மேலும் திராவிட நன்பர்களுக்கு இந்த விவாதங்களில் பங்குபெற எந்த மனத்தடையும் இருக்காது என்றும் நம்புகிறேன்

வாழ்த்துக்கள்!

said...

*பாசிசக் கொடுங்கோலன் ராஜீவ் சாகடிக்கப்பட்டபோது, அவனைக் கொன்றது சரியானதே என்பதைப் பேசிட அரங்கம் தர மறுத்தவரை,
*ராஜீவ் கொலையில் குற்றவாளியாக்கப்பட்ட பேரறிவாளனின் தாயாரை, திடலுக்குள் தங்க வேண்டாம் எனத் தடுத்து அவரை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்கு துரத்தியவரை,
*ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 26 பேருக்கு அளிக்கப்பட்ட தூக்குக்கு எதிராக நிதி திரட்டப்பட்டபோது, அதற்கு உதவுதல் கூடாது என்று சொல்லிட்டவரை,
*மாணவிகள் மூவரைக் கருக்கி எரித்த கூட்டத் தலைவியின் கரத்தைத் தன் கரத்துடன் கோர்த்து ('மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே') அக்கரத்தை அன்புக்கரமென்று சொன்னவரை,
*ஒரே கையெழுத்தில் இரவோடு இரவாக 2 லட்சம் ஊழியர்களைத் துரத்திய பாசிசப்பேயின் மற்றொரு கரத்தை 'இரும்புக்கரம்' என்று விதந்தோதியவரை,
*மஞ்சள் துண்டை பரட்டைத் தலை வீடு தேடி வந்ததையும் பெரியாருக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்த்த சூரரை,
*பெரியார் நினைவிடம் பார்க்கவந்த பெரியார் திக பெண்களை உருட்டுக்கட்டையால் தாக்கி திருடவந்தவர்கள் எனப்பழிபோட்ட மனிதாபிமானியை,
*தன்னைச் சுற்றி சாதி வெறிக் கள்ளர்களை வளர்த்து விடும் சமூகநீதி காக்கிரவரை,
*எதையாவது செய்து வாழ்க்கையில் முன்னேறு எனும் நவீன பார்ப்பனியத்தை வாழ்வியல் சிந்தனையாகத் தருபவரை,
மாமா என்று சொல்வது நியாயமாகப்படவில்லை. மக்கள் விரோதி என்றோ தமிழர் துரோகி என்றோ சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

கவிராஜன்

said...

தோழர் குரல்கள்,

பார்ப்ப்னியவாதிகளும், அவர்களுக்கு ரகசியமாய் பல்லக்கு தூக்கும் டாடாயிஸ்டுகளும் எழுந்து நடமாடும் தெம்பு பெற்றால் இங்கு காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருக்கும் நாம் ஒன்றிணைந்து தாக்குவோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

ஏனேனில் எதிரி யார் என்பதில் நம்மிடையே கருத்து வேறுபாடு இல்லை. நண்பன் யார் என்பதில்தான் நமக்குள் கருத்து வேறுபாடு. அதுதான் தற்போது நம்மிடையே நிலவும் விவாதத்தின் அடிப்படை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்ப்னியர்களுடன் கைகோர்த்து திராவிட அரசியலையும், புரட்சிக்ர அரசியலையும் அசிங்கப்படுத்திவர்தான் இந்த டாடாயிஸ்டுகள் என்பது குறித்து யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.

அசுரன்

said...

ஓசை செல்லா வழக்கமாக் கொஞ்சம் கேள்விகளை புத்திசாலித்தனாமாக முன் வைப்பார். இன்று உண்மைகளை சீரணிக்க வழியின்றி ஏதையாவது செய்ய வேண்டுமே என்று செய்துள்ளார். பாவம் நண்பருக்கு வாழ்த்துக்கள்.

ஏன் யாருமே கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வர மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரேயொரு ஆள் வந்தார் அது குழலி மட்டுமே. இன்னொரு ஆள் பாரி அர்சு சில விசயங்களை தெளிவுபடுத்தினால் பேசலாம் என்றவர ஒரேயடியாக விவாதத்தை வேறு தளத்திற்க்கு இட்டுச் செல்வதை மட்டுமே குறியாக கொண்டு செயல்படுகீறார்.

மற்றபடி முத்து தமிழினி மட்டுமே எந்த ஒரு முன் தீர்மானங்களும் இன்றி பரீசிலித்து எழுதியுள்ளார்.

அசுரன்

said...

தோழர் அசுரன் ,

இந்த விவாதங்கள் உள் அரங்கில் நடத்தப்படவேண்டும் , நமது நேச சக்திகள் திரட்டுவதற்கு அதுதான் உதவும் என்பது எனது சொந்த கருத்து .

said...

எது? வீரமணீ ஒரு மாமா எனப்து குறித்த விவாதங்களா? அப்படியல்ல தோழரே. ஒரு வேளை லக்கிலுக் மீதோ அல்லது குழலி மீதோ தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தால் அது அவர்களுடன் தனியாக பேசி தீர்த்துக் கொள்ளலாம். மற்றபடி துரோகிகள் குறித்த விவாதம் பொது சபையில் நடப்பதுதான் சரி. ஏனேனில் பொதுச்சபையில் எல்லா விசயங்களும் எல்லார் பார்வையில் இருக்கும் வாய்ப்புள்ள போதே விவாதத்தை திரித்து கொண்டு செல்ல முயல்பவர்கள் இருக்கும் பொழுது திரைமறைவில் இது நடக்கும் போது அதனை திர்க்க என்னவெல்லாம் நடக்கும் என்பது நமது கட்டுப்பாட்டுக்கப்பாற்ப்பட்டது.

அசுரன்

said...

அன்புள்ள தோழர்,

சரியானதொரு சமயத்தில் நல்லதொரு விவாதத்தைக் கிளப்பியதற்கு மீண்டும் வாழ்த்துக்கள்.. இந்த விவாதங்களின் போக்கைப் பற்றிய என்னுடைய சில கருத்துக்களை இங்கே முன்வைக்கிறேன்.

1) முத்துவின் தளத்தில் நீங்கள் தெரிவித்த பார்ப்பனியம்-ஏகாதிபத்தியம் இரண்டுக்கும் உள்ள கள்ள உறவைப் பற்றிய கருத்து மிகச் சரியானதொன்று..ஆயினும் இதன் அடிப்படைகள் பற்றிய சரியான பார்வை வலையுலகில் இயங்கும் நமது திராவிட நன்பர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை என்றே கருதுகிறேன்.

இது பற்றிய கருத்துக்கள் இல்லாத நிலையிலேயே அவர்கள் மனதளவில் மதிக்கும் தலைவர்களின் மேலான விமர்சங்களைப் பற்றிய விவாதங்களில் அவர்கள் பங்கேற்க மனத்தடையாய் இருக்கிறது என்று நினைக்கிறேன்..

உதாரணம் உங்கள் முந்தைய பதிவில் கலைஞரை விமர்சித்த போது நன்பர் லக்கிலுக் முன்வந்து "தான் ஒரு தி.மு.க ஆதரவாளராயினும் இந்த குற்றச்சாட்டுக்கள் மறுக்கவியலாத ஒன்றாக இருப்பதாக" சொல்லிச் சென்றது..

அவர் அந்த பதிவில் நிச்சயம் புண்பட்டிருப்பார்.. ஆனாலும் அந்த விமர்சனத்தின் நியாயம் சரியாக உள்வாங்கியிருப்பாரா என்பது சந்தேகம் தான்.. இது தான் தற்போது வீரMoneyயை விமர்சிக்கும் போது அடக்கமாட்டாமல் முன்வந்திருக்கும்.

இந்நிலையில் மேலே நாம் முன்வைக்கும் வாதமான "பார்ப்பனிய -ஏகாதிபத்திய" கள்ள உறவின் இயங்கியல் பற்றியதொரு விரிவான பதிவு / கட்டுரை நமது திராவிட நன்பர்களுக்கு நல்லதொரு புரிதலை உண்டாக்கும் என்று நினைக்கிறேன்.

குறிப்பாக பார்ப்பனியம் என்னும் கருத்தியல் தொடர்ந்து நீடிக்க ஆதாராமாய் இருக்கும் பொருளாதார அடித்தளம் என்ன? அது எப்படி ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாய் இருக்கிறது?என்பது பற்றிய விளக்கங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த விடயங்களை உங்களது முந்தைய சில பதிவுகளில் தொட்டுச் சென்றுள்ளீர்கள்.. ஆயினும் இது பற்றிய எக்ஸ்க்ளூசிவான பதிவு இருப்பின் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இது ஒரு அபிப்ராயம் தான். இந்தப் பதிவுக்கு இப்பின்னூட்டம் பொருத்தமில்லாதது என்று கருதினால் இதை ஒரு தனிமடலாக கருத்தில் கொள்ளவும்

நன்றி

said...

தோழர் புரிகிறது ,

நான் சில தோழர்களிடம் பேசியபோது
அசுரன் சொல்வதில் நியாயம் இருக்கு
ஆனால் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் தனிமனித தாக்குதலா இருக்குன்னு அபிப்பிராய படுகிறார்கள்
"மாமா" ங்கிற வார்த்தை அவர்களை
எதிர்வினை ஆற்ற வைத்து இருக்கலாம்

உங்கள் கவனத்துக்கு கொண்டுவருவது தவறல்ல என முடிவு செய்து இதை எழுதுகிறேன்.

வீரமணியின் சந்தர்ப்பவாதம் என்றும் ,
இன்னும் பிற சொற்களை பயன்படுத்துங்கள் என உங்களை கேட்டு கொள்கிறேன் .

பொதுதளத்தில் பார்பனிய எதிர்ப்பில்
நாமும் அவர்களும் ஒருங்கே இருக்கிறோம் இல்லையா அந்த அடிப்படியில் சொல்கிறேன் .

said...

//தேவையற்ற வார்த்தை பிரயோகம் சரியில்லை என்று நீஙக்ளும், அரசு பால்ராஜும் கருதுகின்ற பட்சத்தில் அவற்றின் வன்மையை குறைத்துக் கொள்கிறேன்.

அசுரன் //

இந்த பதிவிலும் மீண்டும் உங்களிடம் தொடருவதாக நான் உணருகிறேன்.

said...

மொத்த விவாதமும் ஒற்றைச் சொல் குறித்த விவாதமாகி விட்டது.

அசுரன் முன் வைத்திருக்கிற கருத்துக்களுக்குள் உட்புகாமலே, அதன் தர்க்க நியாயங்களுக்கு பதில் சொல்லாமலேயே,
பகுத்தறிவை ஆதரிப்பதாகச் சொல்பவர்கள், ஒற்றைச் சொல்லிலேயே நின்று கொள்வதும், அதிலிருந்து திருப்பித் தாக்குவது என்ற முறையில் எவ்வித அவசியமுமின்றி தோழர் மருதையன் பிறந்த சாதியை சுட்டி அதனையொரு எதிர்வாதமாக முன்வைப்பதும்...இவை தவறான விவாத முறைகள் எனக் கருதுகிறேன்.

அசுரன் பயன்படுத்திய சொல் தவறா, இல்லையா என்றால், அது நிச்சயம் தவறாக இல்லை. ஆனால் அது அவரது எழுத்துமுறையின, காலப்போக்கில் மாற்றிக் கொள்ளத்தக்க ஒரு குறைபாடு மட்டுமே என நான் கருதுகிறேன்.

அசுரன் முன்வைத்திருக்கிற பெரியார் புரா செயல்பாடுகள் அடிப்படையிலான விமர்சனத்தின்படி,அப்படி ஒரு சொல்லை பயன்படுத்த முடியுமா என்றால், அவ்விமர்சனத்தின் அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு, அப்படி ஏன் முடியாது என்று மறுப்பவர்கள் என்று சொல்ல வேண்டும்.

அதே வேளை பொதுவில் சில வார்த்தைகளை நேரடியாக அடிப்பதன் மூலம், பலர் கருத்துக்களுக்குள்ளேயே செல்ல மறுக்கும் தன்மையை கணக்கில் கொள்ள வேண்டியதன் அடிப்படையில், நான் ஏற்கெனவே அசுரன் மீது தோழமைரீதியாக விமர்சித்திருப்பது போல் இது ஒரு குறைபாடென்றே நான் கருதுகிறேன்.

ஆனால், இதில் ஆச்சரியத்திற்குரிய விசயம் என்னவென்றால்,இதனால் புண்படுவதாக அறுதியிடுபவர்கள், தவறான அம்சங்கள், சரியான அம்சங்கள் எனத் தாம் கருதுவனவற்றை முழுமையாக எடுத்து வைத்து ஆரோக்கியமாக விமர்சிக்காமல்,ம.க.இ.கவின் மீது தமது மதிப்பை சொற்களில் வெளிப்படுத்திக் கொண்டே,அதன் மீது சேற்றை வாரி இறைப்பது தான்.

அண்ணா ஒரு வெளியீட்டில் எழுதியிருந்தது தான் எனது நினைவுக்கு வருகிறது.ஆரம்ப காலங்களில், தந்தை பெரியார் கூட்டங்களுக்கு செல்லும் பொழுதெல்லாம், அவர் பயன்படுத்தும் சொற்கள் தனக்கு எத்துணை எரிச்சலூட்டும், ஆனால் சில மணி நேரங்கள் கழித்து சிந்தித்துப் பார்த்தால் அவை எத்துணை நியாயமானவையாகத் தோன்றும் எனக் குறிப்பிடுவார்.

எனவே, ஒரு வேளை தவறாகவே கருதினாலும்,வரவணையான் போன்றவர்கள் தோழமை ரீதியில் விமர்சனம் செய்ய முடியாமல், ஆதாரமில்லாத, சம்பந்தமில்லாத, வாதங்களை முன்வைப்பதற்கு காரணம், அசுரன் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியாததே.
தோழமை சக்திகள் என்று எண்ணுபவர்கள் இவ்வடிப்படையில் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

said...

//அப்படி ஏன் முடியாது என்று மறுப்பவர்கள் என்று சொல்ல வேண்டும்.//

அப்படி ஏன் முடியாது என்று மறுப்பவர்கள் சொல்ல வேண்டும்.

said...

//அசுரன் முன்வைத்திருக்கிற பெரியார் புரா செயல்பாடுகள் அடிப்படையிலான விமர்சனத்தின்படி,அப்படி ஒரு சொல்லை பயன்படுத்த முடியுமா என்றால், அவ்விமர்சனத்தின் அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு, அப்படி ஏன் முடியாது என்று மறுப்பவர்கள் என்று சொல்ல வேண்டும்//

தோழர் அதுக்கு வெறும் கேள்விகள் மட்டும் வைக்கலாமே .

ஒருத்தன் திட்டினா அவன் ஏன் திட்டுறான்னு பார்க்காம திருப்பி திட்டுவது என நம் மூளை பழக்கப்பட்டு விட்டது .

நீங்க மாமான்னா அவன் மருதையன் பாப்பான் அப்படிங்கிறான் .

கம்யூனிசம் சரியான்னு ஒரு கேள்வியை முன்வைக்கிறான் .
ஆனா பெரியார் புராவின் செயல் பாடுகள் பத்தி இன்னும் ஏன் பேசலை

அதான் தற்பாதுகாப்பு வெளியே வராதவனை இன்னும் உள்ள தள்ளி விடுவது .

புனிதங்களின் மேல் ஒன்னுக்கடித்த தலைவன் பெரியாரின் சிஸ்யர்கள் புனிதங்களை புடுச்சி தொங்குவது ஆச்சரியமானது ..

அசுரன் முன்வைக்கும் விவாதங்களை விட அவர் சொல்லும் வசவுகளின் மேல் விவாதங்கள் தொடர்வது அதைவிட ஆச்சரியமானது அல்ல

said...

தியாகுவின் கருத்தை நான் மறுக்கவில்லை. ஆனால்... விரமனியின் மீது நாம் இதற்க்கு முன்பு வைத்த விமர்சனங்களீன் போது எந்தவிதமான விவாதங்களும் நடக்கவில்லை. அப்பொழுது இங்கு வந்து விவாதம் செய்தவர ரவி சிரினிவாஸ் போன்ற ஒருவரும், அதியமான் என்பவருமே.

ஏனேனில் அது ப்பொன்ற கட்டுரைகள் வீரமணியின் அரசியல் அடித்தளத்தில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமாலேயே இருப்பதால்தான் அவரது ஆதரவாளர்கள் அது போன்ற கட்டுரைகளை ஒதுக்கிச் சென்றுவிடுகிறார்கள். மாறாக காரணங்களைச் சொல்லி அதற்க்கு ஒரு புரொவகேட்டிவ்வான தலைப்பு வைக்கும் போதுதான் சோடு சுரனை பற்றிய பிரக்ஜை வந்து ஒவ்வோருவனும் தனது சொந்த நிலைப்பாட்டை பரிசீலிக்கிறான். என்ன செய்ய இன்றைய மறுகால்னிய சூழலில் தோல் தடிமன் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. எனவே நமது வார்த்தைப் பயன்பாடும் சில நேரங்களில் மிக கோடூரமானதாகவே இருக்க வேண்டியுள்ளாது. பாருங்கள் லக்கிலுக் செல்வனுக்கு நன்றி சொல்லியுள்ளார். நாம் CPMயை விமர்சித்தோம் உடனே அவர் போய் அடைக்கலம் ஆன இடம் ஏகாதிபத்திய-பார்ப்ப்னிய முகாம், நாம் லக்கிலுக்கின் திமுக அரசியலை விம்ர்சிக்கிறோம் உடனே அவர் போய் அடைக்கலம் ஆன இடம் ஏகாதிபத்திய-பார்ப்ப்னிய முகாம்.

ஆனால் லக்கிலுக், நேற்று வரை நம்மால் பார்ப்ப்னிய ஆதரவாளர், இந்தியாவை ஏகாதிபத்தியங்கள் சுரண்டுவதை ஆதரிப்பவர் என்று விமர்சிக்கப்பட்டு பல முறை அவரது முட்டாள்தனங்களுக்காக அம்பலப்பட்ட $சல்வன் ஏன் வீரமணியை காப்பாற்ற வேண்டும்? ஏன் அவரை ஆபத்பாந்தவனாக நீங்கள் ஏற்க வேண்டும்? இதற்க்கு உஙகளுக்கு விடை தெரியாமல் இருக்கலாம் ஆனால் தரகு அரசியல் இயங்கியல் புரிந்த எமக்கு உங்களது இந்த செயல்பாடு ஆச்சர்யம் அளிக்கவில்லை. ஒரேயொரு கோரிக்கை திராவிட அரசியல், பெரியார் என்று பேசி இரண்டையும் அவமானப்படுத்தாதீர்கள்.

அசுரன்

said...

//ஒரேயொரு கோரிக்கை திராவிட அரசியல், பெரியார் என்று பேசி இரண்டையும் அவமானப்படுத்தாதீர்கள்.

//
தோழர் இது எனக்கா இல்லை லக்கிலுக்குக்கா

said...

தோழர்... நீங்க வேற... இருக்குற குழப்பம் பத்தாதுன்னு புதுசா ஒரு குழபத்த உண்டு பன்னுறீங்க :-)))

அது நம்ம நண்பர் லக்கிலுக்கப் பாத்து சொன்னதுதான்.

அசுரன்

said...

இது நம்ம இடம்

பொழுதுபோகாத
பொட்"டீ"கடைகளும்
போண்டாவாயன்களும்-உலகின்
புதிய கடவுள்களும்
கழுதகெட்டா
குட்டிசுவரா
பொழுத போக்கவந்த இடம்

புரட்சி பத்தி
பேசுதுப்பா
(புண்)ணாக்கு
திண்ண வாயவச்சு

வீர(மணி)தான்னா
வீரமெங்கே
கேட்டு சொல்லு
சாதி பேர
சொல்லிகிட்டு
சாமியாடி பிழைக்க
சொல்லு!

பொத்தி வச்ச
பொங்க சோறு
பொழுதுபோனா
கிடைக்காது

வீரமணிக்கு
மணியாட்டி
வீரத்த நீ
காட்டி புடு

வேறமணி
கிடைக்காது
விசயமல்லாம்
உனக்கேது !

மண்டிபோடும்
மாமாவேலை
மவுசுமிக
உள்ளதுனா

மண்டிபோட்டு
வணக்கஞ்சொல்லு
உண்டு போட்ட
வெங்காயமே!

புராவுக்கு புகழாரம்
லக்கியார்க்கு
பலகாரம்
தீண்டாமைக்கு
ஆமணக்கு!

விளைநிலமா
களைநிலமா
மாமா சொன்னா
சரிதானா
அமெரிக்கா
அமெரிக்கா
அதுக்கு மேல
இல்லைய்யப்பா!

போனாவராது
பொழுவந்தா
கிடைக்காது
போட்டு வைச்ச
பலகாரம்
புராவின் பலகாரம் !

said...

Dear Sir,
I am new to the Tamizh Blogs and I don't know how to type in Tamizh. So forgive me for typing in English.

I don't understand why everyone hate brahmins by birth. It is like if a father is a thief, so will the son be!! That is stupid.

Please forget about the past but remember the lessons you have learned from them.

If something is wrong it is wrong no matter who does it and no one can deny that we can give examples of very good and very bad men in any community.

Only because we are acting without unity among ourselves, politicians or any one else can take advantage of us.

We should bring the awareness to the people to keep the big picture in mind.

If you see a brahmin acting unfairly against a non-brahmin you should fight then and there especially if you are a fellow non-brahmin and if that act was solely happening because the other person is not a brahmin.

This is just an example and I gave it this way because no one would object to this.

If my example is vice versa then I will get a lot of objections rather than registering the fact in anybody's mind.

There are lot of descriminations existing in this world and every other person is trying to practice it as long as they are not hurt.

Rich vs poor, young vs old, educated vs not college educated, men vs women, married women vs single (widows, divorcees), beautiful people vs not so beautiful people (ugly ones don't stand a chance in this competition and we all know that), white or fair skin vs dark colored skin (this is the white men's dream and they added it in their religious book like we have added unwanted things in our handbooks), smart ones vs dumb ones, women from a family vs women from the streets, our kids vs orphan kids, healthy people vs handicaps, all the caste differences....There is no end to this.

But whenever someone treats the other person not as themselves, it is the ego which is controling them. We don't have to hate them but firmly make them realise whatever they are doing is wrong and unless they stop they will be punished.

We have to form a group to fight this and support people defending themselves against any act of discrimination and take a vow never to practice the descrimination in our lives. We may not succeed 100 per cent immediately. But the positive change can come.

Be strong, fair, fearless and unselfish in every act of your life.

I feel that we all forgot to fight against the injustices that we know wrong and we face it on a day today basis. Also support whoever does this.

The one thing lacking among good people is networking.

If you see the criminals, they have a very strong network and they always work as a group because they are afraid if they are alone it is easy to get caught.

But good people act alone thus their effort is diluted and too weak to make any kind of impact.

Whether it is Kanchi Mutt or DK as long as they don't discriminate against any particualr community and serve a good cause they should be supported. On the other hand if they try to act selfishly, we should not be lenient until they change their ways. It doesn't matter whether it is a whole hearted change or a superficial change , but they should change to only serve people and not hurt them.

That is possible only when everyone is open minded and respect the others.

All of you writing in the blogs coming from various parts of the society can come together and do something really really positive .

Instead of just writing about all this, why can't you go ask Mr.Veeramani or Mr.Anbumani or Jayendrar about whatever they are doing wrong and advice them to change it because it is not serving the people or any other cause. Is it not doable?

Thanks for reading this.

Related Posts with Thumbnails