அந்த அமைச்சரும் மயங்கிச் சரிந்தார் - 8 நாட்களாக சாப்பிடவில்லை!
ரஸ்யாவின் சோசலிச அரசு குறித்து பல்வேறு அவதூறுகளை இங்கு சொல்லி வந்தார்கள் அடிவருடிகளும், பாசிஸ்டுகளும். அவர்களுக்கு தக்க பதில் கொடுக்கப்பட்டது அப்பொழுது. ஆயினும் பலருக்கு இன்னும் கூட சோசலிசத்தின் சாதனை என்ன என்பதும் அதன் பிரமாண்டமும், தியாகமும் தெரியாத விசயமாகவே உள்ளது.
1917-ல் ஆரம்பித்து இரு உலகப் போர்கள், உள்நாட்டுப் போர், ஒரு சுற்றி வளைப்புப் போர், அதனை தொடர்ந்த பஞ்சம், மீண்டும் உள்நாட்டு சதி என்ற தொடர் பெரும் துயரங்களை சந்தித்தே அந்த நாடு ஒரு தொழில் வல்லரசாக வளர்ந்தது. இந்த போராட்டங்களின் ஊடாகத்தான் முதலாளித்துவ மீட்சிக்கான அடிப்படைகள் வேரூண்றீன என்பது தனிக்கதையாக இருக்கிறது. இந்த வரலாறு குறித்து குழந்தைகளுக்கும் புரியும் வகையில் மிக எளிமையாக எழுதப்பட்ட தொடர்-சிறு கட்டுரைகள் பின்வரும் வலைப்பூவில் காணக் கிடக்கிறது. லெனினினுடைய வாழ்க்கையின் ஊடாக இந்த கட்டுரைகள் நமக்கு சோவியத் ரஸ்யாவை புரிந்து கொள்ள உதவுகிறது. வாசிக்க சுவராசியமாக, விறு விறு என்று, எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரைகள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியால் வெளியிடப்பட்டு இந்த தளத்தில் மறு பிரசூரம் செய்யப்பட்டுள்ளது. படித்து கருத்துக்களை அங்கு இடுங்கள்.
அந்த கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள்:
@@@@
அதுமட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழுவிடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார்.
தொழிற்சாலை உற்பத்தி, விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது. அப்போதுதான் அந்தக் கொடுமை நடந்தது. ஒரு இளம் குழந்தையைக் குத்திக் குதற 22 கழுகுகள் பாய்ந்தன. சோவியத் யூனியன் மீது 21 பணக்காரநாடுகள் படையெடுத்தன.
@@@@@
@@@@@
போரினால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தலைநகரில் உணவு தானியம் மிக அரிதாகவே கிடைத்தது. உணவுப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க லெனின் அமைச்சரவையைக் கூட்டினார். அந்த கூட்டம் நடந்து கொண்டு இருந்த போதே உணவுத்துறை அமைச்சர் மயங்கி விழுந்தார். காரணம் அவர் கடந்த எட்டு நாட்களாக ஒரு வாய் உணவு கூட அருந்தவில்லை. தன் கட்டுபாட்டில் இருந்த உணவை குழந்தைகள், நோயாளிகள், பெண்கள், முதியவர் ஆகியோருக்கு விநியோகித்தார். நாட்டு மக்கள் வயிறார சாப்பிடும் போதுதான் தானும் வயிறார சாப்பிடப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார். சோசலிச சோவியத் யூனியனில் மந்திரிகள் அப்படித்தான் இருந்தனர்.
அந்த தோழர் மட்டும் அல்ல லெனினும் பலநாள் பட்டினி தான். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை. சோசலிசத்தைப் பாதுகாக்க இரவு பகலாக உழைத்தார். அவர் இராணுவத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. உணவுப் பிரச்சினையை தீர்க்க வேண்டியிருந்தது. கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டம் இடுதலை நிறைவேற்ற வேண்டியிருந்தது. பொதுவுடைமைச் சமுதாயத்தை நோக்கி நாட்டை வழி நடத்த வேண்டியிருந்தது. உள்ளுக்குள் இருந்து சதி செய்த சதிகாரங்களை களையெடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றின. அனைத்தையும் லெனினே முன்னின்று தீர்க்க வேண்டியிருந்தது.
தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் லெனினைத் தேடி வந்தனர். உழைக்கும் மக்களின் மன்றமான சோவியத்தை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்று அவரிடம் கேட்டு அறிந்தனர். அவர் ஒரு நாளைக்கு இருபத்திரண்டு மணி நேரம் உழைத்தார். இந்தக் கடினமான உழைப்பினாலும், உணவுப் பற்றாக்குறையாலும் லெனினுடைய உடல்நிலை மோசமடைந்தது.
@@@@@
நன்றி: சுனா பானா
அசுரன்
Related Articles:
சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
2 பின்னூட்டங்கள்:
Arumaiyana oru thalathai arimugapaduthiyathaRku nandRi Asuran!
தங்கள் வருகைக்கு நன்றி குரல்கள்
Post a Comment