TerrorisminFocus

Tuesday, June 05, 2007

கவுண்ட சாதி வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

“சாமியப் பத்தி பேசு, இடஒதுக்கீடு கேளு; ஆனா, இரட்டை டம்ளர் பத்திப் பேசாதே!''

கன்னல்

நன்றி: தலித் முரசு

சாதி இழிவுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்க்கத் துணியும் எவருக்கும் இந்த சமூகம் அளிக்கும் ஒரே பரிசு அவமானமும், அடி உதை யும் மட்டுமே. இச்சமூகத்தின் பிற கேடுகளை எதிர்க்கும் சமூகப் போராளிகள் சந்திக்க நேரிடும் அச்சுறுத்தல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் நடுவே அவர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச அங்கீகாரம்கூட, சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு கிடைப்பதில்லை. மனதையும் உடலையும் வருத்திக் கொள்வதிலேயே சாதி ஒழிப்புப் போராளிகளின் பயணம் நீடிக்கிறது. அதை விரும்பி ஏற்று, அயராது தொடர்பவர்களாலேயே சமூக விடுதலையும் சாத்தியமாகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அண்மையில் கையிலெடுத்த ஒரு பிரச்சினை நமக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

திண்டுக்கல் மற்றும் பழனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இன்று வரையிலும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், இரட்டை இருக்கை முறையும் நிலவி வருகிறது. சாதி இந்துக்களுக்கு, கண்ணாடி குவளையிலும், தலித் மக்களுக்கு பிளாஸ்டிக் குவளையிலும் தேநீர் வழங்கப்படுகிறது. மேலும், தலித் மக்கள் அமர்வதற்கு சற்றே தாழ்ந்த பெஞ்சோ, சிமெண்ட் திண்ணை அல்லது தரையோதான் ஒதுக்கப்படுகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகத்தினர் 11.4.2007 முதல் பிரச்சாரப் பயணத்தை மேற் கொண்டனர். இதனால் சாதி இந்து கவுண்டர்களால் மிரட்டி விரட்டப்பட்டுள்ளனர்.

“முதலில் இரட்டை டம்ளர் முறை ஒழிப்பு பற்றி மட்டுமே பிரச்சாரம் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். அச்சமயத்தில் அதாவது பிப்ரவரியில் ஒட்டன்சத்திரம் அருகே பழையபட்டி என்ற கிராமத்தில் தலித் ஒருவருக்குச் சொந்தமான பூமிதான நிலத்தை, செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு கைப்பற்றி, நிலத்துக்குச் சொந்தக்காரரான தலித்தை தாக்கி நிலத்திலிருந்து விரட்டியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டக் கலெக்டர் வாசுகி மற்றும் எஸ்.பி. பாரி ஆகியோர் இருந்தனர். தங்கவேல் என்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும் இதற்கு துணையாக இருந்தார். இந்தப் பிரச்சனையை கையிலெடுத்த தமிழக தலித் விடுதலை இயக்கம், பெரியார் திராவிடர் கழகத்தின் ஆதரவைக் கோரியது. அச்சமயத்தில் அப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பஞ்சமி நிலங்கள் பற்றியும் அறிந்தோம். எனவே, இரண்டு பிரச்சனைகளையும் இணைத்துப் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்தோம்'' என்கிறார், பெரியார் திராவிடர் கழக களப்பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைக் கண்ணன்.

ஏப்ரல் 11 அன்று திண்டுக்கல் மாவட்ட கிழக்கு எல்லையான குருவன் வலசில் இருந்து 20 தோழர்கள் ஒரு மினிடோரிலும், 4 இரு சக்கர வாகனங்களிலும் பயணத்தைத் தொடங்கினர். "இரட்டை டம்ளர் ஒழிப்பு பஞ்சமி நில மீட்பு இந்திய தேசிய பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை எதிர்ப்புப் பயணம்' என விளம்பரப் பதாகை பொருத்தப்பட்ட பிரச்சார வாகனத்திலேயே ஒலிபெருக்கி இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஊரிலும் மக்கள் அதிகம் கூடும் தேநீர்க் கடைகள் முன்பு முதலில் ஒரு பாடல் பாடி, பிறகு அரை மணிநேரம் அங்கு சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக உரை நிகழ்த்தப்படும். அப்போதே துண்டறிக்கை விநியோகம் மற்றும் உண்டியல் வசூல் என்று பிரச்சாரம் நடைபெற்றுள்ளது.

“5 நாட்கள் நடந்த இப்பிரச்சாரத்தில், உண்டியல் வசூல் 4,600 ரூபாய் என்பது மக்களிடம் உள்ள வரவேற்பைக் காட்டியது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் நாங்கள் எதிர்பாராத ஆதரவு கிடைத்தது. ஒரே நாளில் 90 "தலித் முரசு' இதழ்கள் விற்பனை ஆனது'' என்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தோழர் ஜவகர்.

காவல் துறைக்கு தெரிவித்த ஊர்களைத் தவிர, இக்கொடுமை எங்கெங்கு உள்ளது என கேள்விப்பட்ட பெரும்பாலான ஊர்களுக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்றுள்ளனர். குறிப்பாக, பழனி ஒன்றியத்தில் அவர்கள் பயணம் செய்த மிடாப்பாடி, மயிலாபுரம், நல்லெண்ணக் கவுண்டன் புதூர், பாப்பாகுளம், அய்யம்பாளையம், சின்னாக் கவுண்டன் புதூர், வேலாயுதம்பாளையம் புதூர், காவலப்பட்டி ஆகிய ஊர்களிலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கோவில் அம்மாபட்டி, அத்திமரத்துவலசு, ராஜாம்பட்டி, பணம்பட்டி, அக்கரைப்பட்டி, சரவணப்பட்டி, ஆலாவலசு, புலாம்பட்டி, வாகரை, மரிச்சிலம்பு, போதுப்பட்டி, கொழுமங்கொண்டான், சங்கஞ்சட்டிவலசு, பெரியமொட்டனூத்து, தாளையுத்து, நாச்சியப்பன்கவுண்டன் வலசு ஆகிய ஊர்களில் இரட்டை பெஞ்ச் முறையும், இரட்டை டம்ளர் முறையும் உள்ளதை நேரில் பார்த்துள்ளனர்.

“முதலில் எதிர்ப்பு வரவில்லை. சேரிகளுக்குச் சென்று அங்குள்ள கொடுமைகள் பற்றி விசாரித்தோம். வேலாயுதம்பாளையம் புதூர் என்ற ஊரில் அப்படிப் பேசுவதைப் பார்த்த கவுண்டர்கள் சிலர், நாங்கள் கிளம்பியதும் தலித்துகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதைப் பார்த்தோம். எனவே, தலித்துகளிடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்தோம். முதல் நாள் அய்யம்பாளையம் என்ற ஊரில் ஆங்காங்கே தனியாக நின்றுகொண்டு கண்டபடி ஆபாசமாக சாதி இந்துக்கள் திட்டத் தொடங்கினர். பெரும்பாலும் அனைத்து வகையான கெட்டவார்த்தைகளையும், முறைப்புகளையும் கண்டோம்'' என்கிறார் தாமரைக் கண்ணன்.

ஏப்ரல் 11 அன்று தொடங்கிய பயணம் பழனி மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியங்களில் உள்ள பல கிராமங்களைக் கடந்து ஏப்ரல் 15 அன்று மாலை 5 மணிக்கு திண்டுக் கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த வாகரையை அடைந்தது. பிரச்சாரக் குழுவினர், ஒலிபெருக்கியில் துண்டறிக்கையை முதலில் வாசித்தனர். “நாங்க துண்டறிக்கையை வாசிக்கத் தொடங்கிய உடனே அவ்வூரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்லத்துரையை அழைத்து "மரியாதையாகக் கூட்டத்தை நிறுத்து' என்றனர். சிறிது சிறிதாக மக்கள் குவியத் தொடங்கினர். தேநீர்க் கடையில் இருந்த நானும் தோழர் மருத மூர்த்தியும் அங்கு ஓடினோம். "மரியாதையாக ஓடிவிடுங்கள். இரட்டை டம்ளர் அது இதுன்னு பேசினா... உயிரோட போக மாட்டீங்க. ஓடுங்கடா முதல்ல' என்றனர். கடுமையான கெட்டவார்த்தை ஒன்றால் திட்டினர். தோழர் மூர்த்தி கொஞ்சம் ரோஷப்பட்டு, முகத்தில் கொஞ்சம் கோபத்தைக் காட்டிவிட்டார். உடனே ஒரு பத்துப்பேர் சேர்ந்து அவரைப் பிடித்துக் கீழே தள்ளினர். வேறொரு டீக்கடையில் இருந்து பிற தோழர்கள் ஓடிவந்தனர். வாகனத்தை சுமார் 50 பேர் சூழ்ந்து கொண்டனர். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பெட்ரோலை எடுத்துட்டு வாடா, வண்டியக் கொளுத்தணும் எனக் காட்டுக் கூச்சல் கேட்டது. தோழர் ஜவகர் அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்.

“என்ன சொல்ல வர்றோம்னு கொஞ்சம் கேட்டுட்டுப் பேசுங்க, என நானும் கெஞ்சிப் பார்த்தேன். "பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்கு? தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம்? ஒரு மாசமா இங்க பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு, இங்க வந்து கலகம் பண்றீங்களா? யார் சொல்லிடா வந்தீங்க? எங்க பஞ்சாயத்து தலைவன் சொன்னானா? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். கூட்டமோ, என்னடா பேச்சு ஊத்துடா பெட்ரோல என்றது. சரி நாங்க பேசல. இப்படியே போயிடறோம் என்றோம். ஓடுங்கடா ஓடுங்கடா என விரட்டி விட்டனர்'' என்கிறார் தாமரைக்கண்ணன்.

தேவகோட்டை பகுதியில் ‘நாடு' அமைப்பு உள்ளது போல பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களில் உள்ள சாதி இந்து கவுண்டர்கள், சாதி வளர்ச்சிக்காக நிதி திரட்டி ஒருங்கிணைப்பாக உள்ளனர். இக்கிராமங்கள் "பண்டு கிராமங்கள்' (Fund) என்று குறிப்பிடப்படுகின்றன. இக்கிராமங்களில் காவல் துறையோ, இந்திய அரசியல் சட்டமோ – சாதி இந்துக்களை மீறி எதுவும் செய்ய முடியாது. ஒரு ஊரில் தலித் மக்கள் ஏதாவது கலகம் செய்தால், கிட்டத்தட்ட 50 கி.மீ. சுற்றளவில் அவர்கள் பிழைக்க வழியிருக்காது என்ற நிலையை பண்டு கிராமங்கள் உருவாக்கியுள்ளன. வாகரை அம்மாதிரியான கட்டமைப்பில் உள்ள ஒரு கிராமம்.

வாகரையின் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பூசாரிக் கவுண்டன் வலசைச் சேர்ந்த அருந்ததியரான சின்னான். இவர் குடியிருக்கும் பூசாரிக் கவுண்டன் வலசு பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தருவதற்காக வாகரையிலிருந்து பைப்லைன் போட்டுள் ளார். சாதி இந்துக்கள் அந்த பைப் லைனை வெட்டி, தண்ணீர் கொண்டு செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். பிறகு மீண்டும் பைப்லைன் பதிக்கிறார். அதையும் சாதிவெறியர்கள் வெட்டி விட்டனர். எனவே, இது பற்றி தொப்பம்பட்டி பி.டி.ஓ.விடம் புகார் செய்த தலைவர், சின்ன தொப்பம்பட்டி பி.டி.ஓ. அலுவலகம் சென்றபோது, அவரை அலுவலக வாசலிலேயே கவுண்டர்கள் அடித்து உதைத்தனர். இது தொடர்பாக கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு பஞ்சாயத்து தலைவர் சின்னான், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் அருள்செல்வனை அணுகி ஆதரவு கோரியுள்ளார். அதன் பிறகுதான் சட்டமன்றத்தில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது.

உடனே திண்டுக்கல் கலெக்டர் வாசுகி வாகரைக்கு நேரில் சென்று விசாரித்து அங்கே இரட்டை டம்ளர் முறையோ, எந்த அடக்குமுறைகளுமோ கிடையாது என அறிவித்தார். தலைவர் சின்னõனும் அவ்வாறே கூற வைக்கப்பட்டார். பிறகு ஜெயா டி.வி.யில் கொடுமை நடப்பதாக தொலைபேசியில் கூறினார். இந்த சிக்கல் அண்மையில் நடந்துள்ளதால், அந்த பஞ்சாயத்து தலைவர் சின்னான் சொல்லித்தான் பிரச்சாரக் குழுவினர் வந்திருப்பார்கள் என சாதி இந்துக்கள் கருதியிருக்கின்றனர். அதன் பிறகு பிரச்சாரக் குழுவினர் அங்கிருந்து தப்பி 12 கி.மீ. தொலைவிலுள்ள கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். உதவி ஆய்வாளர் சீனிவாசன் புகாரை வாங்க மறுத்திருக்கிறார்.

"யாரைக்கேட்டு அங்கு சென்றீர்கள்? யாரைக் கேட்டு உள்ளே நுழைந்தீர்கள்' என மிரட்டி, புகாரையும் வாங்க மறுத்திருக்கிறார். அதற்குள் செய்தி கேள்விப்பட்டு பழனி ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து சுமார் 50 தோழர்கள் காவல் நிலையம் முன் திரண்டனர். அதே நேரத்தில் துண்டறிக்கையில் இருந்த தாமரைக் கண்ணனின் எண்ணை வைத்து, பண்டு கிராமப் பகுதியிலிருந்து அவரது எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், "உங்களைத் தாக்க பண்டு கிராமம் எல்லாம் திரளுகிறது. உடனே கள்ளிமந்தையத்தை விட்டுக் கிளம்புங்கள்' என்று கூறியுள்ளார்.

இருப்பினும், புகார் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல மனமின்றி பிரச்சாரக் குழுவினர் புகாரை வாங்கச் சொல்லி, உதவி ஆய்வாளரிடம் வாதம் செய்து கொண்டி ருந்திருக்கின்றனர். அச்சமயம், இரவு 7 மணி அளவில் 2 மினி லாரிகளில் சாதி இந்துக்கள் சுமார் 100 பேர் அங்கு வந்து இறங்கினர். 7.15 மணியளவில் மீண்டும் 2 மினி லாரிகளில் ஆட்கள் இறங்கினர். காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மட்டுமே இருந்திருக்கிறார். காவலர்கள் யாரும் இல்லை. அதனால் அந்த உதவி ஆய்வாளர் வெளியே வந்து கவுண்டர்களிடம் பேசி, "உங்கள் புகாரைக் கொடுங்கள் வாருங்கள்' எனக் கூறி, அவர்களைத் தனியே அழைத்துச் சென்றுள்ளார். கவுண்டர்கள் விலகிச் சென்ற உடன், பிரச்சாரக் குழுவினர் தப்பி ஓடி வந்துள்ளனர்.

ஆனால், இப்பிரச்சினையை பெரியார் திராவிடர் கழகத்தினர் இத்துடன் விடுவதாக இல்லை.

“எத்தனை நாட்கள்தான் மென்மையாகப் போராடுவது? சாதி வெறியர்களுக்கு அழுத்தமாக உணர்த்தும் வகையில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். ஒத்த கருத்துள்ள அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஆகியவற்றையும் இணைத்துக் கொண்டு, அதே கிராமங்களில் ஆகஸ்டு 15 அன்று இரட்டை டம்ளர் மற்றும் இரட்டை பெஞ்சு உடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம். அது வரையில் மே 26 தொடங்கி அக்கிராமங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டும் பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம்'' என்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

உண்மைதான். சாதியின் கோர முகத்தை மென்மையான கரங்களால் பிய்த்து எறிய முடியாது. சாதி தனது இருப்பை என்றுமே மென்மையாக வெளிக் காட்டியதில்லை. கீழ் வெண்மணி, மேலவளவு, கயர்லாஞ்சி என எங்கும் நாம் கண் டது, சாதியின் கொடூர முகத்தை மட்டுமே. எதிர்ப்புகளும் போராட்டங்களும் மட்டும் எதற்கு மென்மையாய்?


Related Post

கயரலாஞ்சி காட்டும் பேருண்மைகள் - உலகமயம் - தலித்தியம் - தலித் விடுதலை

39 பின்னூட்டங்கள்:

said...

ஐயா அசுரன் அவர்களே,

கடுமையாக ஆனால் சின்சியராக எழுதியுள்ளீர்கள். ஆனால் முக்கிய விஷயத்தில் கோட்டை விடுகிறீர்களே. எலிக்குட்டி சோதனை என்பதை கேள்விப்பட்டுள்ளீர்களா? கடந்த இரு ஆண்டுகளாக நான் இது பற்றி எவ்வளவு முறை கூறினும் அதைச் செய்ய சோம்பல் படுகிறீர்களே.

உண்மைத் தமிழன் பெயரின் மேல் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால், கீழே பிளாக்கர் எண் 04330845515232444148 என்று பல்லிளிக்கிறதே.

நீங்கள் எல்லாம் படித்துத்தான் எழுதுகிறீர்கள் என நினைத்தேன். ஆனால் இந்த சின்ன விஷயத்தைக் கூட பார்க்காது செயலாற்றும் போது நீங்கள் விஷயங்களை அவதானிக்கும் முறையை பற்றி அவநம்பிக்கை வருகிறதே.

அது இருக்கட்டும். இரட்டை தம்ளர் விஷயத்தில் உங்கள் மனக்கொதிப்பை நானும் மனப்பூர்வமாக பகிர்ந்து கொள்கிறேன். சாதி வெறியன்கள் கிட்டே எல்லாம் பேசி ஒன்றும் ஆகாது. நேரே செருப்படிதான் சரிப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

கொஞ்சம் டீசண்டா திட்டி இருக்கலாமே தலைவா..

:(((

said...

//சாதி வெறியன்கள் கிட்டே எல்லாம் பேசி ஒன்றும் ஆகாது. நேரே செருப்படிதான் சரிப்படும்.//

அப்படி செருப்பால் அடிப்பதென்றால் முதலில் வடகலை அய்யங்கார் என்பதால் பெருமை படுகிறேன் என்று சொன்னவனை தான் செருப்பால் அடிக்கவேண்டும்.

said...

"பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்கு? தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம்?"

பெரியாரின் தி,கவை இப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் - சாமி இல்லை என்பார்கள், 69% இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பார்கள், தலித் பிரச்சினையில் ஒதுங்கி நிற்பார்கள். இப்படிப் பட்ட ஒரு கருத்து பிற்பட்ட சாதியினர் மத்தியில், அதுவும் இட ஒதுக்கீட்டினால் பயன்பெறும் சாதியினரிடம் இருப்பதே தி.க வின் 'வெற்றி'யை காட்டுகிறது.
வாழ்க பெரியார், வாழ்க ஆசிரியர் வீரமணி, வாழ்க தி.க.

said...

போலி உண்மைத் தமிழனின் பின்னூட்டங்களையும் அதற்க்கான எனது எதிர்வினைகளையும் நீக்குகிறேன். சுட்டிக்காட்டிய டோ ண்டுவுக்கு நன்றிகள்.

தவறு செய்வது இயல்பு. தவறே செய்யாதவன் கிடையாது. ஒருவேளை நீங்கள் சொல்லுவது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் இது போன்ற அல்பத்தனமான விசயங்களை வைத்து எனது அவதனிப்புகளை எடை போடும் குறுக்கு வழியை விட நேரடியாக எனது அவதனிப்புகளை யாதர்த்த நிலைமைகளுடன் உரசிப் பார்த்து எடை போடுவதே சரியாக இருக்குமெனக் கருதுகிறேன். அந்த வகையில் உங்களது மாற்றுக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் :-))

அசுரன்

said...

//கொஞ்சம் டீசண்டா திட்டி இருக்கலாமே தலைவா..//

என்ன செய்ய நான் டீசண்டான ஆள் கிடையாதே.... :-))

அசுரன்

said...

வாழ்க திக என்று எழுதியுள்ள அனானி திகவின் நடவடிக்கைகளதான் இது போன்ற கருத்துக்கள் தோன்ற காரணமாக இருக்கிறது என்பதை உணராமலேயே திக புகழ பாடியுள்ளார்.

அதுவும் இன்று திக என்பது ஒரு NGO குரூப்பாக திரிந்து போய் பெரியாரை வைத்து பிசினஸ் செய்து வரும் வேலையில் இன்னும் அவர்களிடம் சுயமரியாதை என்று ஏதுவோ மிச்சமிருக்கிறது என்று நம்புவது மிக மிக முட்டாள்தனமானது.

அவரை நினைத்து பரிதாபப்பட வேண்டியுள்ளது.

அசுரன்

said...

கவுண்ட சாதி வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

50 சதம் இடஒதுக்கீடு

said...

//எத்தனை நாட்கள்தான் மென்மையாகப் போராடுவது? சாதி வெறியர்களுக்கு அழுத்தமாக உணர்த்தும் வகையில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். ஒத்த கருத்துள்ள அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஆகியவற்றையும் இணைத்துக் கொண்டு, அதே கிராமங்களில் ஆகஸ்டு 15 அன்று இரட்டை டம்ளர் மற்றும் இரட்டை பெஞ்சு உடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம். அது வரையில் மே 26 தொடங்கி அக்கிராமங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டும் பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம்''//

டம்ளரையும் பெஞ்சையும் உடைப்பதோடு அப்படி போட்டவன் நாலைந்து பேரின் கை காலையும் உடைத்தால் சிறப்பாக இருக்கும்..

கலெக்டரும் காவல் துறையும் ஆதிக்க வெறி நாய்களுக்கு ஆதரவாய் இருப்பதும் ஆச்சர்யமல்ல.

said...

போலி உண்மைத் தமிழனின் பின்னூட்டங்களை நீக்கிய உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.

இரட்டை தம்ளர் விஷயத்தில் நான் உங்கள் கருத்துடன் முழுக்க ஒத்துப் போவதாக ஏற்கனவே கூறியுள்ளேனே. இது பற்றி தனிப் பதிவே நான் போட்டுள்ளேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html

//ஆனால் இது போன்ற அல்பத்தனமான விசயங்களை வைத்து எனது அவதனிப்புகளை எடை போடும்...//
குதிரைக்கு லாடம் கழன்ற அல்ப விஷயத்தை கவனிக்காமல் போனதால் போர்க்களத்தில் தோல்வி வந்த கதையைப் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

http://osho-tamil.blogspot.com/2007/06/blog-post_420.html

?

said...

தலித்துக்களுக்கு உண்மையான விரோதி இந்த ஜாதி இந்துக்களே. உயர்சாதி என்று சொல்லப்படும் பார்ப்பனர்கள் அல்ல. இதை இப்போது தலித்துக்கள் நன்றாக புரிந்துகொண்டு விட்டார்கள்.

உத்தரப்பிரதேசம் முதலான இடங்களில் தலித்துக்கள் உயர்சாதி ஆட்களுடன் சேர்ந்து இந்த உண்மை விரோதிகளை எதிர்க்க முன்பட்டுவிட்டார்கள். தமிழகத்திலும் இது விரைவில் நடக்கும். ஆனால், இங்கு தலித்துக்கள் பல அரசியல் பிரிவுகளில் சிதறுண்டு கிடப்பதே இதை உடனடியாக வரவிடாமல் செய்கிறது. தலித்துக்கள் இணைய வேண்டும். சாதி இந்துக்களின் கொட்டங்களை அடக்கவேண்டும். இணையத்திலும் இந்த சாதி இந்துக்களின் சாதீய வெறி மண்டிக்கிடப்பதை தினசரி பார்க்கிறோமே.

- மூக்கா


இணையத்திலும்

said...

இரட்டை டம்ளர் முறையை எதிர்ப்பதாக சொல்லும் டோண்டு பாப்பார ஜாதியை ஆதரித்து பதிவுகள் எழுதுவது முரண்பாடாக இல்லையா?

டோண்டு மாதிரி ஜாதிவெறியன்களால் தமிழ்மணம் மட்டுமல்ல சமூகமும் இரண்டு படும்.

said...

//வாழ்க திக என்று எழுதியுள்ள அனானி திகவின் நடவடிக்கைகளதான் இது போன்ற கருத்துக்கள் தோன்ற காரணமாக இருக்கிறது என்பதை உணராமலேயே திக புகழ பாடியுள்ளார்.//
அசுரன்,
பெரியார் தொடங்கி வைத்தது என்ற ஒரே காரணத்துக்காக திராவிடர் கழகத்தின் மீது சேறள்ளிப் பூசும் சராசரி 'அவாள்' பாணி எள்ளலுக்கெல்லாம் இப்படிப் பதில் சொல்ல வேண்டாமே..

பொது எதிரி என்றாலும், இது போன்ற சாதிய ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பாராட்டப்பட வேண்டியவர்கள் தான் தி.க.வும்..

said...

முதலில் ஜாதியை பெருமையாக பேசும் அய்யர், அய்யாங்கார் பசங்களை செருப்பால் அடிக்கனும்.

said...

iTTakaiya saaTi inTukkalukku eTiraaka en kaNdanangkaLai seRuppadiyaaka Terivikkiren.


sorry for English

said...

சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கிராமங்கள் சுய ராஜ்ஜியம் நடத்துவது மோசமான செயல்கள்.

பஞ்சாயத்துராஜ்/கிராமராஜய்ம் என்பதை தப்பாகப் புரிந்து கொண்டார்களோ? இது போன்ற ஊர்களுக்கு மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைத் துண்டிக்க வேண்டும்.

ஏன், இது போன்ற விசயங்கள் கழகங்களின் பொதுக்குழு, செயற்குழுவில் விவாதிக்கப்படுவது இல்லை. சாதி ஒழிப்பு இவர்களின் அஜெண்டாவில் கிடையாதா? கலைஞர் நினைத்தால் இதை ஒரே நாளில் இரும்புக்கரம் கொண்டு அடக்கலாம்.இது போன்ற பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் கண்டிக்க வேண்டும்.

***

பிராமணீயம் என்பது தன்னை அடுத்து தாழந்த நிலையில் இருப்பவர்களின்மீது இன்றும் பிரயோகிக்கப்படும் வன்முறையே.இது ஐயர்,ஐயங்கார் தொடங்கி கடைசி நிலைசாதி வரை பிரயோகிக்கப்படுகிறது.பிராமணீயத்தின் வெற்றியே இதுதான். மக்கள் மனமார பல யுகங்கள் வேண்டும் போல :-((

said...

//டம்ளரையும் பெஞ்சையும் உடைப்பதோடு அப்படி போட்டவன் நாலைந்து பேரின் கை காலையும் உடைத்தால் சிறப்பாக இருக்கும்..

கலெக்டரும் காவல் துறையும் ஆதிக்க வெறி நாய்களுக்கு ஆதரவாய் இருப்பதும் ஆச்சர்யமல்ல.//



//பிராமணீயம் என்பது தன்னை அடுத்து தாழந்த நிலையில் இருப்பவர்களின்மீது இன்றும் பிரயோகிக்கப்படும் வன்முறையே.இது ஐயர்,ஐயங்கார் தொடங்கி கடைசி நிலைசாதி வரை பிரயோகிக்கப்படுகிறது.பிராமணீயத்தின் வெற்றியே இதுதான். மக்கள் மனமார பல யுகங்கள் வேண்டும் போல //


//iTTakaiya saaTi inTukkalukku eTiraaka en kaNdanangkaLai seRuppadiyaaka Terivikkiren.//


//இது போன்ற ஊர்களுக்கு மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைத் துண்டிக்க வேண்டும்.
//

//கவுண்ட சாதி வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

50 சதம் இடஒதுக்கீடு //

இவையனைத்தையும் செய்ய வேண்டும். பிராமணீயம் என்று சொல்லாதீர்கள் கல்வெட்டு. அதுவே ஒரு உயர்வான மதிப்பாக பார்ப்பனரால் பார்க்கப்படும் சொல். எனவே பார்ப்பானியம் என்ற பதமே செருப்பால் அடித்தது போல உறைக்கும்.

இங்கு சந்தடி சாக்கில் பார்ப்பனர்களுக்கு புனித வட்டம் கட்ட முற்ப்பட்டு முதுகெலும்பில்லாத பிறவி எனது ஆங்கில பதிவுகளில் கும்மியடிக்கும் பார்ப்பன வெறியர்களை கொஞ்சம் பார்த்து வரட்டும். பிறகு சொல்லட்டும் பார்ப்ப்னியத்தின் தலைமை பீடத்தில் உட்கார்ந்து உண்டி வளர்க்கும் வெறியர்கள் யார் என்று. இது போல கோள் மூட்டி குளிர்காய்வதுதானே காலம் காலமாக செய்து வருகிறீர்கள்.

அசுரன்

said...

குமுதினி திக குறித்து பரவசமாக நாம் பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாது. அவர்கள் நமது எதிரியாக மாறி வெகு காலமாகிவிட்டது. அவ்ரகள் நமது பொது எதிரிகளுடன் ஐக்கியமாகி பல காலமாகிவிட்டது.

எனது தற்போதைய திகவின் NGO வெலை குறித்த கட்டுரையை படியுங்கள்

அசுரன்

said...

ஆட்களை திரட்டி அடிக்க வந்தா நாமும் ஆள்களோடுதான் போகனும்

அடிக்குஅடிதான் லாயக்கு என்ன சொல்றீங்க

said...

"பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்கு? தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம்?"

பெரியாரின் தி,கவை இப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் - சாமி இல்லை என்பார்கள், 69% இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பார்கள், தலித் பிரச்சினையில் ஒதுங்கி நிற்பார்கள். இப்படிப் பட்ட ஒரு கருத்து பிற்பட்ட சாதியினர் மத்தியில், அதுவும் இட ஒதுக்கீட்டினால் பயன்பெறும் சாதியினரிடம் இருப்பதே தி.க வின் 'வெற்றி'யை காட்டுகிறது.
வாழ்க பெரியார், வாழ்க ஆசிரியர் வீரமணி, வாழ்க தி.க.

------------------------------
வாழ்க திக என்று எழுதியுள்ள அனானி திகவின் நடவடிக்கைகளதான் இது போன்ற கருத்துக்கள் தோன்ற காரணமாக இருக்கிறது என்பதை உணராமலேயே திக புகழ பாடியுள்ளார்.

அதுவும் இன்று திக என்பது ஒரு NGO குரூப்பாக திரிந்து போய் பெரியாரை வைத்து பிசினஸ் செய்து வரும் வேலையில் இன்னும் அவர்களிடம் சுயமரியாதை என்று ஏதுவோ மிச்சமிருக்கிறது என்று நம்புவது மிக மிக முட்டாள்தனமானது.

அவரை நினைத்து பரிதாபப்பட வேண்டியுள்ளது.
---------------------------
அந்த அநானி திகவை பாராட்டுவது போல் எழுதி கண்டித்திருக்கிறார். இப்படி கிண்டலாக எழுதி விமர்சனம் செய்தால் அசுரன்களுக்குப் புரியாதா. எல்லாவற்றையும் தோலுரிக்கும் நடையில்தான்
எழுத வேண்டுமா?

said...

//பிராமணீயம் என்று சொல்லாதீர்கள் கல்வெட்டு.//

தவறைத் திருத்தியமைக்கு நன்றி

said...

//அந்த அநானி திகவை பாராட்டுவது போல் எழுதி கண்டித்திருக்கிறார். இப்படி கிண்டலாக எழுதி விமர்சனம் செய்தால் அசுரன்களுக்குப் புரியாதா. எல்லாவற்றையும் தோலுரிக்கும் நடையில்தான்
எழுத வேண்டுமா? //

ஹி... ஹி....

said...

பெரியார்ன்னு ஒரு மனுசன் பிறக்கலைன்னா என்னாவாகி இருக்கும் :(

said...

//பெரியார்ன்னு ஒரு மனுசன் பிறக்கலைன்னா என்னாவாகி இருக்கும்//

தமிழ் நாடு ஓரளவுக்கு உருப்பட்டிருக்கும்.அசுரன் இப்படி ஆவேசமா எழுதவேண்டிய தேவை இருந்திருக்காது.

said...

முக்கியமான பதிவு. இப்பிரச்சினைபற்றித் தமிழ்நாளிதழ்கள் ஏதிலும்கூடப் படித்த நினைவு இல்லை (அவசர மேய்ச்சலில் கவனிக்காமல்கூட இருந்திருப்பேன்) நீங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

கிராமப்புறச் சாதீய அடக்குமுறைகள் இன்னும் பலமாகவே உள்ளன. இதில் அடக்குமுறைகளைக் கையாளுகிறவர்களுக்குத் திமிரும், "இவன் நம்மிடம் கும்பிட்டுக்கொண்டு இப்படித்தான் இருக்கப்பிறந்தவன், நாம் இன்னொருவரிடம் சாமி எனக் கும்பிட்டு வாழப்பிறந்தவர்கள்" என்ற அறியாமையும் சரிவிகிதத்தில் உண்டு. எல்லாவிதங்களிலும் மிக மோசமாகப் பாதிக்கப்படும் அடித்தட்டு வர்க்கத்தினருக்கு மீட்சி அமைய, அவர்கள்மீது தம் சாதித்திமிரைச் செலுத்துபவர்களுக்கெதிராக இன்னும் கடுமையான சட்டங்களும், அதைச் சரியாகச் செயல்படுத்துகிற நேர்மையான அரச இயந்திரமும், எல்லாவற்றுடனும் முக்கியமானதாய் இப்படியான அடக்குமுறைகளுக்கு ஆளாகும் மக்களை அதற்கான சூழல்களிலிருந்து விடுவிக்கும் வகையில் அவர்களுக்கென ஒரு சார்பற்ற வாழ்க்கையை, தொழிலை ஏற்படுத்திக்கொடுத்து இவன் இன்னதுதான் செய்யப்பிறந்தவன் எனும் ஏமாற்றுக்காரர்களின் விதியைத் தக்ர்த்தெறியும் தீவிர நடவடிக்கையும் வேண்டும். திராவிடப் பரம்பரை பேசுபவர்களும்கூடத் தமக்கு வேண்டிய ஓட்டுக்களுக்காகச் சாதிகளையே நம்பியிருந்தும், அதனால் அவற்றை மறைமுகமாக வளர்த்தும் விடுவது நமது சோகம்:((

said...

//பெரியார்ன்னு ஒரு மனுசன் பிறக்கலைன்னா என்னாவாகி இருக்கும் :( //

ஒருவேளை மாயாவதி போன்ற தலித் தலைவர் முதலமைச்சராக ஆகியிருக்கலாம்.

said...

அசுரன்,

கவுண்டர்கள் சாதி வெறி 'பிடித்தவர்கள்' என்று எனது கவுண்டர் நண்பரே ஒப்புக் கொண்டுள்ளார். கீழே தடுமாறி விழப்போன கவுண்டர் வீட்டு குழந்தையை பிடிக்கப் போன ஒரு தலித் பெண்மணியை 'கீழ் சாதிக்கார நாயே, என் பேரனை தொட எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் ?' என்று வயிற்றில் எட்டி உதைத்ததைப் பார்த்து இருக்கிறேன் என்றார்.

தென்மாவட்டங்களில் தேவர் சமூகத்திடம் சிக்கி இருப்பதைப் போலவே, கோவை ஈரோடு மாவட்டங்கள் கவுண்டர்களிடம் சிக்கி உள்ளது. இவர்கள் ஈரோட்டில் நடத்தும் கொங்கு எஞ்சினியரிங் கல்லூரியில் படித்த மாணவர்களைக் கேட்டுப் பாருங்கள். கதைகள் கிடைக்கும்

said...

we have to struggle long days.

said...

//எல்லாவிதங்களிலும் மிக மோசமாகப் பாதிக்கப்படும் அடித்தட்டு வர்க்கத்தினருக்கு மீட்சி அமைய, அவர்கள்மீது தம் சாதித்திமிரைச் செலுத்துபவர்களுக்கெதிராக இன்னும் கடுமையான சட்டங்களும்//


செல்வநாயகியின் கருத்துக்களுக்கு நன்றி,

கடுமையான சட்டங்கள் இது வரை எதுவும் பலன் கொடுத்துள்ளதா? இல்லை. சட்டங்கள் உண்மையில் ஏமாற்று வேலை. ஏனேனில் அதிகாரம் மக்கள் கையில் இருக்கும் இடத்தில் சட்டத்திற்க்கு ஒரு வேலையும் இல்லை. இந்த் பிரச்சனையிலும் கூட சாதி வேறுபாடின்றி மக்களை அணி திரட்டி சாதி வெறியர்களை அவமானப்படுத்தி சமூக பகிஸ்கரிப்பு செய்யும் ஒரு மக்கள் திரள் போராட்ட வழியே தேவைப்படுகிறது.



//அதைச் சரியாகச் செயல்படுத்துகிற நேர்மையான அரச இயந்திரமும், எல்லாவற்றுடனும் முக்கியமானதாய் இப்படியான அடக்குமுறைகளுக்கு ஆளாகும் மக்களை அதற்கான சூழல்களிலிருந்து விடுவிக்கும் வகையில் அவர்களுக்கென ஒரு சார்பற்ற வாழ்க்கையை, தொழிலை ஏற்படுத்திக்கொடுத்து இவன் இன்னதுதான் செய்யப்பிறந்தவன் எனும் ஏமாற்றுக்காரர்களின் விதியைத் தக்ர்த்தெறியும் தீவிர நடவடிக்கையும் வேண்டும்.///

இது பொருளாதார அம்சம். இதுவும் கூட சாதி அடிப்படையிலன்றி தாழ்த்தப்பட்டவர்கள் சக மனிதர்கள் என்ற அடிப்படையில். சாதி எனும் அடையாளம் அழிந்து போகும் வகையில் செய்யப்பட வேண்டும். அங்கு பிரச்சனை என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதிக்க சாதிகளுக்கும் என்று இருந்தது போய் பொது ஜனங்களுக்கும் ஆதிக்க சாதிகளுக்கும் என்று பிரச்சனை ம்ருவி நிற்க்கும் அரசியல் சூழல் உறுதி செய்யப்பட வேண்டும்.

அதற்க்கு முதல் தேவையாக சாதியையும், அதன் சித்தாந்த தலைமை பீடமான பார்ப்ப்னியத்தையும் எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒரே குரலில் வீதிகளீல் இறங்கி முழங்க வேண்டும்.



///
திராவிடப் பரம்பரை பேசுபவர்களும்கூடத் தமக்கு வேண்டிய ஓட்டுக்களுக்காகச் சாதிகளையே நம்பியிருந்தும், அதனால் அவற்றை மறைமுகமாக வளர்த்தும் விடுவது நமது சோகம்:(( //

திராவிட அரசியல் தனக்கான அரசியல் காலகட்டத்தை தாண்டி நின்ற பொழுது அது அதற்கே உரிய வகையில் தரகு அரசியலாக திரிந்து விட்டது. இதுதான் அதன் சித்தாந்த அடிப்படைக்கான வரம்பு. எனவே அவர்களிடம் மக்கள் நலன் என்று இனிமேல் எதிர்பார்க்க ஒன்றுமில்லை.

அசுரன்

said...

As a person from the gounder community, i fully agree with the
views here and share the condemnation against the practices f goundrs and share anguish of the daliths. When i express such views among Kongu nanbargal groups, there is evasive replies and the only issue was more reservation for
gounders ! But i think the situation is much better in Tirupur and other industrialised areas, where capitalism has destroyed many social barriers and hierarchies. Live and let live is the motto there.

Brahminism justifed caste hierarchy thru manu dharmam, etc.
But blamming the Brahmins alone now
for all the caste atrocities is foolish and short sighted. the atrocities against daliths are done by OBC hindus, who demand more resevation. Why no one cares to exclude the creamy layers from all reservation benefits.

EVR Periyar would not support the present form of reservation, if he is here. He was basically honest and forthright. he would have fought to exclude the creamy layers from resrvation benefits.

K.R.Athiyaman
Chennai - 96
athiyaman.blogspot.com

said...

Why are you not publishing my comments ? is contrary opinions not tolerated here. It proves communists doen't tolerate dissent.

said...

//Why are you not publishing my comments ? is contrary opinions not tolerated here. It proves communists doen't tolerate dissent.//

தேவையில்லாத பேச்சுக்கள் எதற்க்கு அதியமான்?

இரண்டு பின்னுட்டம் ஒழுங்காகத்தான் இட்டிருந்தீர்கள். இந்த பின்னுட்டம் மட்டும் ஏன் இப்படி?

நான் எப்பொழுது இணையத்தை தொடுகிறேனோ அப்பொழுதுதான் பின்னூட்டங்களை அனுமதிக்க முடியும். வேண்டுமானால் உங்களுக்கு எனது கடவுசொல்லை தருவிக்கவா?

இதோ உங்களுடன் சேர்ந்து 15 பின்னூட்டங்கள் மட்டுறுத்த காத்திருந்தன. அவற்றில ஒன்றிரண்டு சில சாதி வெறி அனானி வசை மொழிகள். அவைகளை பிரசூரிக்கவில்லை.

விசயம் இப்படியிருக்க கம்யுனிஸ்டு என்றால் இப்படி அப்படி என்பது போல படு முட்டாள்தனமான உங்களது கருத்துக்களை முன் தீர்மானித்து இங்கு வைத்துள்ளீர்கள்.

இதே கம்யுனிஸ்டு அசுரந்தான் உங்களது முந்தைய் பின்னூட்டங்களை அனுமதித்து அவற்றிற்க்கு பதிலும் கொடுத்தான் சில அடிப்படை கேள்விகளும் கேட்டான் நீங்கள் பதில் கொடுக்காமல் ஓடிப் போய்விட்டீர்கள்(This Includes our discussions in Emails). ஆனால் அந்த கேள்விகளை கேட்க்க காரணமான அதே முட்டாள்தனமான புரிதல்களை மீண்டும் 'ஒரு கன்னத்தில் அடித்தால்..' பதிவில் பின்னூட்டமாக இட்டுருக்கிறீர்கள்(இந்தியா முதலாளித்துவ நாடு என்ற உங்களது கருத்து).

Thus I never ever dismissed any of your comments or Emails. and Respond to each and every - your comments. That is to say, there is no precedent that I deny your alternate veiws. But you believe that I deny alternate veiws. I could ask you to put forward the basis for this belief. Will you do so?

You won't try to know what is communism. You will believe Nehru is a communist(or Socialist). And thus post 1990 economy is socialist economy - you believe. Like this, you have umpteenth of Miss conceptions including the one about Comment moderation. If I put forward various arguments and proofs to refute this, you won't consider reading them...
But still continue with your misconception.

மாற்றுக் கருத்துக்கள் எதிரிகளை, அவர்கள் பதுங்கும் இடங்களை கண்டுபிடிக்க உதவுகிற்து. அவை எதிரியின் உள்மன விகாரங்களை உளவு பார்க்க உதவும் துருப்புச் சீட்டுக்கள். எனவே அவற்றை பெரிதும் விரும்புகிறேன்.

இந்த பின்னூட்டம் கடுமையாக இருக்கிறது எனில் காரணம் எந்த அறிவார்ந்த அடிப்படையும் இன்றி கம்யுனிஸ்டுகள் குறித்து முன் தீர்மானித்த ஒரு கருத்தை இங்கு நீங்கள் வாந்தியெடுத்த வக்கிரமே காரணம். உங்களது குறிப்பிட்ட அந்த வரிகளை அக்குவேறு ஆணி வேராக பிரித்து ஆய்வு செய்து ஒரு பெரிய கட்டுரை வடிவில் கேள்விகள் எழுப்பி விவாதிக்க முடியும். அதன் முடிவில் அந்த வரிகளுக்குப் பின்னால் உள்ள கயமைத்தனம், மூளைச் சோம்பேறித்தனம், அடிமைப் புத்தி, மெக்காலேயின் விளைவுகள் என்று பல விசயங்களை பொருத்தி காட்ட முடியும். அது வெட்டி வாதம்.

மற்றபடி உங்களது இதர பின்னூட்டங்களுக்கு அதே விதமான நாகரிகமான முறையில் பதில் கொடுக்கப்படும்.

அசுரன்

said...

///As a person from the gounder community, i fully agree with the
views here and share the condemnation against the practices f goundrs and share anguish of the daliths. When i express such views among Kongu nanbargal groups, there is evasive replies and the only issue was more reservation for
gounders ! ///

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அதியமான்,

தமிழகத்தில் ஆதிகக் சாதிகளில் இன்னுமமும் தமது ஆதிக்கத்தை கிஞ்சித்தும் சேதாரமின்றி வழக்கில் கொண்டுள்ளவர்கள் கவுண்டர் சாதி வெறியர்களே. உங்களது இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.


//But i think the situation is much better in Tirupur and other industrialised areas, where capitalism has destroyed many social barriers and hierarchies. Live and let live is the motto there.
//

இல்லை என்பது எனது கருத்து. சாதி வெறியின் வடிவம் மாறியிருக்கலாம். எப்படியெனில் தனிப்பட்ட மனிதன் மீது தனிப்பட்ட ஒருவனின் அடக்குமுறை என்ற வடிவம் போய் ஒரு சமூகத்தின் மீது இன்னொரு சமூகத்தின் அடக்குமுறை என்று மாறியிருக்கும். ஆம் உண்மைதான் நிலபிரபுத்துவ முட்டாள்களாய் நேரடியாக அடக்குமுறை செய்து அம்பலப்படும் வகையில் திருப்பூர் இல்லை. அங்குள்ள பட்டறைத் தொழில் வளர்ச்சிக்கேற்ப சாதி என்பது நுண்ணிய வடிவங்களை தாங்கி நிற்கிறது.

திருப்பூரில் எத்தனை தலித் கம்பேனி முதலாளீயாக இருக்கிறான்? அங்கு சாதி அடிப்படையிலான வியாபர வலைப்பின்னல் இல்லை என்கிறீர்களா?

சாதி அடிப்படையில் திருமண உறவுகள் கொள்வதும் வேலைக்கு ஆளெடுப்பதும் (முக்கிய பொறுப்புகள்) இல்லையென்கிறீர்களா?

திருப்பூர்தான் தமிழகத்தில் அதிகம் உற்சாக பானம் குடிக்கும் ஊர், எனில் அங்கு கொத்தடிமை போல வேலை பார்க்கும் தலித்துக்கள் மீது எந்தளவுக்கு கலாச்சார, பொருளாதார அடக்குமுறை இருக்கும் என்பதை புரிந்து கொள்ள இது ஒரு காரணி. இதை ஏன் சொன்னேன் எனில் Live and Let live ன் அர்த்தம் இப்படித்தான் இருக்கிறது.

அதெப்படி 50 கிமி சுற்றளவில் சாதி ஒழிந்து விடும்? திரூப்பூரில் இருப்பவர்கள் எல்லாம் தமது கவுண்டர் சாதி ஆதிக்க நிலப்பரப்பில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு வந்துவிட்டார்களா?



//Brahminism justifed caste hierarchy thru manu dharmam, etc.
But blamming the Brahmins alone now
for all the caste atrocities is foolish and short sighted.//


பார்ப்ப்னியம்தான் அனைத்து சாதி வெறிக்கும் தத்துவ மூலம் என்கீற உங்கள் கருத்தை ஏற்க்கிறேன். பார்ப்பனர்களை மட்டும் எதிர்ப்பதாக கூறும் உங்களது கருத்தை மறுக்கிறேன். எல்லா ஆதிக்க சாதிகளையும் எதிர்க்கிறேன். அதே நேரத்தில் பண்பாட்டு தளத்தில் இதனை நியாயப்படுத்தும் பல்வேறு கருத்து நிறுவனங்களை கட்டிக் கார்க்கும் தலைமை காவலனான பார்ப்பனரக்ளை இன்னும் விமர்சையாக கருத்து தளத்தில் எதிர்க்கிறேன். அது தேவையாக இருக்கிறது.


//the atrocities against daliths are done by OBC hindus, who demand more resevation. Why no one cares to exclude the creamy layers from all reservation benefits.
///

ரிசர்வேசன் குறித்த விசயத்தில் கிரிமி லேயர் என்ற கருத்தே ஒரு மோசடியான கருத்து. உலகில் எந்த இடத்திலும் ரிசர்வேசன் என்பது ஒருவனுடைய பொருளாதார பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்படுவதில்லை. அப்படி 100% purityயுடன் பொருளாதார அடிப்படையில் ரிசர்வேசன் கொடுத்தால் முதலாளித்துவம் சீக்கிரம் செத்துவிடும். ரிசர்வேசன் என்பதில் ஒரு சமூகத்தின் பிரதிநிதித்துவமே முன் வருகிறது. அதில் எல்லா பொருளாதார பிரிவினரும் இருப்பர். ஆதிக்க சாதிக்கு ரிசர்வேசன் கொடுப்பதில் எனக்கும் மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனால் அது நீங்கள் சொல்லும் அடிப்படையில்லல. அவர்கள் பார்ப்ப்னியத்தை நடைமுறையில் அமல்படுத்துபவ்ர்கள் என்ற அடிப்படையில் "சாதியுடன் அடையாளப் படுத்தினால் சமூகத்தின் எந்தவொரு சலுகையும் கிடைக்காது" என்பதை உணர்த்தும் வகையில் அவர்களுக்கு ரிசர்வேசன் கொடுக்கப்படக் கூடாது என்பதுதான் எனது கருத்து. ஆனால் இதே தீர்வை வலியுறுத்தும் பார்ப்பனர்களின் பார்வையுடனும், அதன் நோக்கத்துடனும் கடுமையாக நான் மாறுபடுவதுடன். இந்த தீர்வை அமல்படுத்துவதற்க்கான முறைகளீலும் நான் கடுமையாக மாறுபடுகிறேன். எனது கருத்தில் இது கீழிருந்து மக்களிடமிருந்து அமலப்படுத்தப்பட வேண்டிய விசயம். not by the State (Government).


///
EVR Periyar would not support the present form of reservation, if he is here. He was basically honest and forthright. he would have fought to exclude the creamy layers from resrvation benefits.
///

ரிசர்வேசன் குறித்து உங்களது புரிதல் தவறு என்பதை(கிரிமீ லேயர்) குறீப்பிட்டிருந்தேன். அந்த தவறான புரிதல் அடிப்படையிலேயே பெரியார் குறித்தும் குறிப்பிடுகிறீர்கள் எனப்தால் அதுவும் தவறே என்று குறிப்பிடுகிறேன். பெரியார் ரிசர்வேசன் விசயத்தில் எப்படி முடிவெடுத்திருப்பார் என்பது நம்மால் கணிக்க முடியாது. ஏனேனில் யாரோ ஒருவருக்காக நாம் சிந்திக்க முடியாது. ஆயினும் பெரியார் எப்படி முடிவெடுத்திருப்பார் என்பதை புரிந்து கொள்வதில் OBC-தலித் ஒற்றுமை முன்னணி குறித்த அவரது கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அசுரன்

said...

மெச்சுரிட்டியான அதியமான் அவர்களே பதிவுக்கு சம்ப்ந்தமாக் ஏதேனும் பேசுங்கள் இந்த பின்னுட்டத்தை தூக்குகிறேன். இதனை ஏதேனும் கம்யுனிச பதிவில் இட்டு விவாதிக்கவும்.

உங்களுடன் நேரம் செலவழித்து உங்களுக்கு எதுவும் புரிந்த மாதிரி தெரிய்வில்லை முன்பு நடந்த விவதத்தின் போது நேரம் செலவழித்து பதில் சொன்ன அதே விசயங்களை மீண்டும் கடை பரப்புவதன் மூலம் உங்களது இழிவான எண்ணத்தைத்தான் விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். இந்த பதிவுக்கு சம்பந்தமாக பேசவும் திசை திருப்பு பேச்சுக்களுக்கு இங்கு இடமில்லை.

அசுரன்

said...

FYKI

http://www.ncbc.nic.in/html/creamylayer.htm

said...

பேசாம கவுண்டனுங்களை ஃபார்வேர்ட்னு அறிவிச்சுடலாம்யா.அதைவிட கொடிய தண்டனை தமிழ்நாட்ல கிடையாதுங்கய்யா.என்ன சொல்றீங்க

said...

Anonymous
Wednesday, December 5, 2007 5:53:44

nanum unga varigalai padithen.ethana pera ungalala maatha mudiyum nu nenaikareenga...

****************

**Accidently deleted this annony comment - Asuran

said...

அதென்னய்யா "கவுண்டர்" சாதி வெறி.கவுண்டனா பொறந்த எல்லோருமே சாதி வெறியனுக மாதிரி எழுதி இருகரானுக.
ஆந்த்ராவுல இருந்து வந்த வந்தேறிகளுக்கு நீ குரல் குடுக்கிறியா ? நீ தலித்துக்கு குரல் கொடுத்தீன்னா அது தலித் சாதி வெறி தானே ?

இந்த மாதிரி தலைப்புல புரட்சி பண்ற வேலைய இத்தோட நிறுத்திக்க.இது சாதி வெறியே இல்லாம அமைதியா இருக்கறவனையும் சாதி வெறிக்குள்ள ஈசி யா கொண்டு வந்துரும் அதுக்கு நானே சாட்சி.
கோவி கண்ணன் எல்லா கவுண்டனுகளும் சாதி வெறியனுக அப்படின்னு எப்படியா ஒரு பொதுவான முடிவுக்கு வர்றே .நீயெல்லாம் ஒரு அறிவாளி நு சொல்லிட்டு ப்ளாக் உளறிட்டு இருககிற ம்ம் எல்லாம் நேரம் .உன்னோட சாதியில எல்லோரும் சாதி வெறியே இல்லாமதான் இருக்கானுகளா ?

தைரியம் இருந்தா உன்னோட சாதிய வெளியில சொல்லு நான் கொடுக்கிறேன் புள்ளி விவரத்த.

நான் கவுண்டன் தான் எனக்கு எந்த சாதி வெறியும் இல்ல.உடனே எல்லா கவுண்டனும் சாதி வெறியனுக இல்ல நு சொல்லே பாக்கலாம்

திருப்பூர் குடிக்கு சாதி வெறி காரணமா ? யோவ் அங்க எல்லாரும் வேலை செய்யறானுக காசு வருது வேற பொழுது போக்கு இல்ல அதனால குடிக்கராணுக இது கூட தெரியலையா ? பின்ன உன்ன மாதிரிவெட்டியா ப்ளாக் ல பினாத்திக்கிட்டு இருந்தா என்ன பண்றது ?
அசுரனோட அறிவை கொண்டு போய் எங்க போய் வைக்கறதுன்னு தெரியல பேசாம அறிவிலி அசுரன் நு பேர மாத்திக்கோ.
தமிழ் நாட்ல மத்த எல்லா மாவட்டங்களை விட கொங்கு மண்டலம் தான் சாதி வெறி குறைவா இருக்கற பகுதி மத எடத்து ல எல்லாம் ஒரே வெட்டு குத்து தான் அதுக்கு காரணம் இங்க எல்லோருக்கும் வேலை இருக்குது மத்த எடத்துல எல்லாம் உன்ன மாதிரி வெட்டி பயலுக தான்.சாதி அடிப்படையில வியாபார வலை பின்னல் இருக்குது ஆமா அதுக்கு என்ன இப்ப ?
நாங்க தலித்துகள பின்னல் உருவாக்க வேண்டாம்னு சொல்லலையே ?

தலித் இயக்கங்கள் எல்லாம் யோக்கிய சிகாமனிகளா ? பி.சி.ஆர் சட்டத்தை பயன் படுத்தி பொய் கேஸ் போட்டு காசு புடுங்கறதுக்கு தான் அவனுக அமைப்பே வெச்சுருக்கிரானுக.அவனுக எப்பவுமே கல்வி,சுகாதாரம், பொருளாதார முன்னேற்றத பத்தி பேசவே மாட்டானுக ஏன்னா வறுமை இருக்கற வரைக்கும் தான் அவனுக பொழப்பே ஓடும்.
உலகத்துல எல்லா எடத்துலயும் communism தகர்ந்துட்டு வருது தமிழ் பதிவுலகில் மட்டும் இன்னும் அது வாழுது சில அறிவாளிக நம்பறாங்க காமெடி கீமடி ஒன்னும் இல்லையே.

Related Posts with Thumbnails