அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்
ஒரு மறுகாலனியாதிக்கச் சதியின் கிளைக் கதை
(இக்கட்டுரையின் கீழே தாமிரபரணி கோக் பிரச்சனை பற்றிய ஒரு presentation இணைக்கப்பட்டுள்ளது).
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு அருமையான சிறு பிரசுரத்தையும் படிக்கவும்:
தண்ணீர் தாகத்திற்க்கா, லாபத்திற்க்கா?
*************
அக்காமால/கப்ஸி நிர்வாகி: நன்கு காய்ச்சிய பின்பு ஆற வைத்து அதில் ஒரு முயலை மூன்று நாட்கள் ஊறப்போட வேண்டும்.
இம்சை அரசன்: ஓவ்வ்.....
ஏற்கனவே BJP ஆட்சி செய்த பொழுது இந்த குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்து இருப்பதை கண்டுபிடித்து அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த விசயம் எல்லாம் தெரிந்தும் கூட, வழக்கம் போல் நடுத்தர வர்க்க மோகிகள் கோகோகோலா, பெப்ஸியை தொடர்ந்து பருகிக் கொண்டு "ஏ தில் மாங்கே மோர்' என்று கூறி அலப்பரையாக பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். இதையும்கூட இம்சை அரசனில் நக்கல் செய்திருப்பார்கள்.
இப்பொழுது இந்த விசயத்தை ஊர்ஜிதம் செய்யும் விதமாக மீண்டும் இந்த குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி இருப்பதாக
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட, அந்த பூச்சிக் கொல்லி மருந்து கலப்படத்திற்க்கு, பிற்பாடும் கூட நிலைமை இன்றுவரை மாறவில்லி என்று அந்த செய்தி கூறுகிறது (cnnibn breaking news - cnnibn.com). அந்த சம்யத்தில், பாரளுமன்ற கூட்டு கமிட்டி(Joint Parliamentary Committee (JPC)) சமர்பித்த ஆலோசனைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. உடல் நலத்திற்க்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதற்க்கு என்று நிர்னயிக்கப்பட்ட தரக் கட்டுப்பாட்டுகள் கம்பேனியின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டதாக் அந்த செய்தி கூறுகிறது.
2006 -ல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment (CSE)) என்ற நிறுவனம் மீண்டும் இந்த குளீர்பானங்களை ஆய்வு செய்து பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
12 மாநிலங்களில் உள்ள 25 கோக் மற்றும் பெப்ஸி நிறுவன பானங்களை தாயாரிக்கும் ஆலைகளிலிருந்து பெறப்பட்ட பாட்டில்களை ஆய்வு செய்ததில், பிரோ ஆப் இன்டியன் ஸ்டண்டார்டு பரிந்துரைக்கும் அளவை விட, சராசரியாக 24 மடங்கிற்க்கும் அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்தின அளவு இந்த குளிர்பானங்களில் இருக்கிறது.
கொல்கத்தவிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளில் லிந்தேன் என்ற மிகவும் அபாயகரமான நச்சு பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 140 மடங்கிற்க்கும் அதிகமாக உள்ளது.
தானே விலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளீல் நியுட்ராக்சின் குளோர்பிரிபோஸ் என்ற நச்சு 200 மட்ங்கு உள்ளது.
பூச்சிக் கொல்லிகள் இவ்வாறு உடலில் செர்வது உடனடி விளைவுகளை ஏற்படுத்தவிடினும். நீண்ட கால பயன்பாட்டில், மலட்டுத்தன்மை, கான்சர், வேறு இனம் தெரியாத வியதிகள். உடல் குறைபாடுகள், மரபனு குறைபாடுகள் என்று பல வகையில் ஒரு சமூகத்தையை பாதிக்கும் அபாயகரமானது.
CSE நடத்திய ஆய்வின் முடிவில், பூச்சிக் கொல்லிகள் 2003ல் இருந்த அளவுக்கும் இப்பொழுது 2006-ல் உள்ள அளவுக்கும் 30 மடங்கு அதிகரித்திருப்பதாக சொல்கிறது.
மேலும் மிக அபாயகரமான இன்டேன், DDT, மாலாதின் மற்றும் குளோர்ப்ய்ரிபொஸ் போன்ற நச்சுகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட எல்லா பானங்களிலும் இருப்பதாக CSE சொல்லுகிறது.
இப்படி வெளிப்படையாகவே விளம்பரம் செய்து நஞ்சை விற்பனை செய்யும் இவர்களை அரசு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் இந்திய மருந்து சந்தையை பன்னாட்டு கம்பேனிகளுக்கு திறந்து விடும் திட்டத்துடன் உள் நாட்டு மருந்து பொருட்களை தரம் என்று காரணம் கூறி தடை செய்கிறது இந்த அரசு.
தடை செய்யப்பட்ட அந்த விலை குறைந்த மருந்துக்களைத் தான் இது நாள் வரை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வந்தனர். patent rights-ன் மூலம் ஒரு புறம் மருந்து பொருள் விலைகளை ஏற்றிய அரசு மறுபுறம் மக்கள் நலம் என்று நாடகமாடி பன்னாட்டு கம்பேனிகளுக்கு மாமா வேலை செய்கிறது. அரசின் இந்த காலனியாதிக்க சேவை - கோக் மற்றும் மருந்துப் பொருட்களில் தரம் என்ற விசயத்தில் கடைபிடிக்கும் இரட்டை அனுகுமுறையின் மூலம் அம்பலமாகிறது.
மறுகாலனியாதிக்கச் சூழல் மக்களுக்கு கிடைத்து வந்த குறைந்த பட்ச ஜனநாயகத்தையும் கூட தடுக்கிறது. கோகோ கோலா என்ற விச பானம் உறப்த்தி செய்யும் நிறுவனத்தை, உள் நாட்டு உற்பத்தியாளர்களை நாசமாக்கிய கம்பேனியை இம்சை அரசனை போல போசித்து பாதுகாக்கும் இந்த அரசு, அதற்க்கு எதிராக ஒரு சிறு துரும்பு எடுத்துப் போட்டால் கூட அரசுக்கு எதிராக சதி என்று கூறி கைது செய்கிறது. இதன் மூலம் அரசு என்பது பன்னாட்டு கம்பேனிகள்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது அரசு. புரிந்து கொள்ளாத மரமண்டைகள் இன்னும் அக்கமால, கப்ஸி குடித்துக் கொண்டு மாடுகளாக(அதுவும், எருமை மாடு) வலம் வந்து கொண்டிருக்கின்றன.
ம.க.இ.க பாடல் ஒன்று:
"தேசத் துரோகி ஆகனுமா பெப்ஸியக் குடி! - வெள்ளக் காரன் வாரிசாகனுமா கோலா குடி!"
ம.க.இ.க பிரசுரங்கள் கோக்கை "அமேரிக்க மூத்திரம்" என்று கூறி அதை சப்புக் கொட்டி பந்தாவாக குடிப்பவர்களை கேலி செய்கின்றன.
தாமிரபரனி பிரச்சனையில், குடிக்க தண்ணீரின்றி திருநெல்வேலி பகுதி மக்களே கஸ்டப்படும் பொழுது கோகோகோலாவுக்கு லிட்டர் 1.2 பைசாவுக்கு தண்ணீர் விற்ப்பது ஒரு பொறுப்புள்ள அரசு செய்யும் வேலையா என்று கேட்டு போராடிய ஜனநாயக சக்திகளுக்கு(ம.க.இ.க., CPI, CPM, தலித அமைப்புகள்) சிறைத்தணடனைதான் பரிசாக கிடைத்தது. வால்போஸ்டர ஒட்டிய ம.க.இ.க வை செர்ந்த ஒருவருக்கு அரசை எதிர்த்து சதி செய்ததாக சிறைத் தண்டனை (அந்த வால்போஸ்டரில் இருந்த வார்த்தைகள் - "அமெரிக்க கோக்கே வெளியேறு, கோக் மற்றும் பன்னாட்டு பொருட்களை எரித்து போராட்டம்").
தாமிரபரனி பிரச்சனை பற்றி எடுக்கப்பட்ட 'மூழ்கும் நதி'(தமுஎச) படத்தை திரையிட தடை போடப்பட்டது. கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் கோகோகோலாவுக்கு தடையாக தீர்மானம் நிறைவேற்றி விடுவார்கள் என்ற உளவுத்துறை செய்தியை அடிப்படையாக வைத்து கிராம பஞ்சாயத்து கூடும் அடிப்படை ஜன நாயக உரிமையை தடை செய்தார் கோகோகோலாவின் வாட்ச்மேனாக புல் டைம் வேலை பார்க்கும் கலெக்டர். இப்படி அரசும் அதன் இயந்திரங்களும் முழு வீச்சில் வாட்ச்மேன், கங்கானி, கூலிப்படை உத்தியோகம் பார்த்து கோகோகோலாவுக்கு பன்னாட்டு சேவையை செவ்வன செய்தன. இதை மீறி தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர் கம்சனை உற்சாக பானம் கொடுத்தே கொன்றது கோகோகோலா. இப்படி மறுகாலனியாதிக்கத்தின் கோர முகம் அப்பட்டமாக வெளியே தெரிந்தும்கூட சிலர் இந்த போலி ஜனநாயக அமைப்புக்கு முட்டு கொடுப்பது காரியவாதமான செயல்.
இந்த குளிர்பான நிறுவனங்களால் ஏற்படும் சூற்றுச்சூழல் மாசுபாட்டிற்க்கு கேரளா பிளச்சிமேடா ஒரு சிறந்த உதாரணம். மிளகு பயிரிடும் அளவு வளமான அந்த பூமி இன்று நஞ்சாக மாறிவிட்டது. காரணம், ஒரு லிட்டர் கோக்குக்கு 8 லிட்டர் நிலத்தடி நீரை நஞ்சாக்கும் தாயாரிப்பு முறையும், அதில் கிடைக்கும் அபாயகரமான நச்சு கழிவை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு உரமாக விற்றதும்.
இந்த குளிர்பான நிறுவனங்களின் கோட்டம் லத்தின் அமேரிக்க நாடுகளில் மிகவும் மோசமாக உள்ளது. பொலிவியாவில் இதுவரை 8 தொழிற்சங்கத் தலைவர்களை அந்த நாட்டு பாரமிலிட்டரி படையின் துணையோடு படுகொலை செய்துள்ளது கோகோகோலா நிறுவனம். இதை குறிப்பிட்டு கண்டிக்கிறது பொலிவிய உயர் நீதிமன்றம்.
சமீபத்தில் இந்த நிறுவனங்களின் பானங்களை அமேரிக்கவிலிலுள்ள 11 யுனிவர்சிட்டிகள் தடை செய்தன. அதற்க்கு அவர்கள் சொன்ன காரணம்: இந்தியாவில் இந்த நிறுவனங்கள் செய்த சுற்றுசூழல் சீர்கேடுகள், லத்தின் அமெரிக்காவில் செய்த படுகொலைகள், மனித உரிமை மீறல் செய்ல்கள்.
அமேரிக்க இளைஞர்களின் இந்த நடவடிக்கை, இது போன்ற நிறுவனங்கள் ஆளூமைக்கு வருவதற்க்கு காரணாமான அரசியல் பொருளாதார அடித்தளம், ஏகாதிபத்திய சுரண்டல் பொருளாதாரத்துக்கும் இது போன்ற கம்பேனிகளுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவு போன்றவற்றை உணர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. அதனாலேயே இந்த நடவடிக்கை வெறுமனே கோக்கை மற்றும் குற்றம் சாட்டி விலகி விடுகிறது, உண்மையான குற்றவாளியான ஏகாதிபத்தியத்தை இவர்கள் அடையாளம்கூட காணவில்லை.
கோக் ஒரு அடையாளம் மட்டுமே. அது மறுகாலனியாதிக்கத்தின் குறியீடு. கோக் தண்ணீர் தனியார்மயத்தின் ஒரு அம்சம், அவ்வளவே. சமீபத்தில் வந்த செய்திகள் பிரிட்டனில் இன்னும் சில வருடங்களில் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்பார்த்து தண்ணீர் சிக்கனம் பற்றி பிரச்சாரம் செய்கிறார்களாம். அவர்களுக்கு கவலையில்லை, தண்ணீர் பிரச்சனை வரும் காலத்தில் இந்தியாவின் அனைத்து நீராதரங்களும் பன்னாட்டு கம்பெனிகளின் கையில் இருக்கும்(தண்ணீர் வியாபாரத்தில் ஐரோப்பாதான் கிங்). தண்ணீர் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு போகும். அதை சிலர் டெவலப்மென்ட் என்றும் கூறுவார்கள். ஆக உண்மையில் பிரச்சாரம் தேவைப்படுவது இந்தியாவில்.
சினிமா கதைகளில்தான் அநியாயம் நடக்கும் பொழுது ஹீரோ உக்கிரபுத்திரனைப் போல குதிரையிலோ அல்லது பறந்தோ வந்து நியாயத்தை நிலை நாட்டிச் செல்வார். உண்மையில் இப்படி தனி மனித சாகச படங்களை ஆளும் வர்க்கம் அனுமதிப்பது மக்கள் தங்களது கூட்டு சக்தியை உணர்வதை தடுக்கவும், மக்களது கோபங்களுக்கு அந்த படங்கள் வடிகாலாக இருப்பதுமே காரணம். மற்றபடி இதில் ஜன நாயகம் எல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படி உண்மையிலேயே ஜன நாயகம் இருந்தால் கோக் பிரச்சனையில் போஸ்டர் ஒட்டவும், 'மூழ்கும் நதி' படத்தை திரையிடவும் தடை போடுவதேன். வரலாற்றில் மக்கள் தங்களது விடுதலையை தாங்களேதான் போராடி பெற்றுள்ளனர். பிச்சையாக போடப்படுவது விடுதலையாக இருக்காது.
ஆகவே இந்த அநியாயங்களை, மறுகாலனியாதிக்கச் சதிகளை மக்கள்தான் வெகுண்டெழுந்து ஆங்காங்கே போராடி வீழ்த்த வேண்டும். தத்துவ பலம் கொண்ட புரட்சிகர அமைப்புகளில் மக்கள் அணிதிரண்டு தங்களது உண்மையான எதிரிகளான ஏகாதிபத்தியத்தையும் அவர்களின் பிரதிநிதிகளான பன்னாட்டு கம்பேனிகளின் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் இருப்பை கேள்விக் குறியாக்க வேண்டும். மறுகாலனியாதிக்க ஏஜென்டான இந்த போலி அரசை தூக்கியெறிய வேண்டும். இல்லையெனில் குடிக்க கோக் கூட இன்றி எதிர்கால சந்ததி தங்களுக்குள் சண்டையிட்டு தமது தாகத்தை தீர்த்துக் கொள்வர்கள்.
இத்துடன் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மெயிலில் வந்த ஒரு Flash presentation-யை கீழே வழங்குகிறேன்.
Water - It's Not F... |
Hosted by eSnips |
தொடர்புடைய சுட்டிகள்:
#1) Indian Freedom and Imperialism - Immediately after August 15
#2) கடல் நீர் தனியார்மயம், காற்றும் ஆகலாம் எதிர்காலத்தில்
#5) தண்ணீரில் எழுதிய புதிய மனு நிதி
#6) நீரில் வணிகம், நீரில்லா துயரம்
#7) பாட்டில் தண்ணீர் பாண்டியர்களே கொஞ்சம் இங்கே பாருங்கள்
28 பின்னூட்டங்கள்:
TEST
அசுரா,
மற்றொரு சிந்தனையூட்டு, அபாயமணி அடிக்கும் கட்டுரை உங்களிடமிருந்து.
எத்துனை பேர் இதனை படிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள். நிலத்தடி நீரை மாசுபடுத்தி, அதனை நச்சாக்கி, அந்த நீருக்கு ஒரு நிறத்தையூட்டி மக்களை புத்தியிழக்கச் செய்து, இயற்கையை சுரண்டும் இந்த மறுகாலனியாதிக்கம் மிக விரைவாக உலகத்தை சுருட்டி விடும்.
எழுதுவதற்கு எவ்வளவு இருக்கிறது, படித்து சிந்திப்பதற்குத்தான் ஆட்களை காணோம்.
நீங்கள் கொடுத்த சுட்டிகளின்றி, மற்றொரு விசயமும் விஷமாக பரவிக்கொண்டுள்ளது bio-technology and genetical engineering என்ற பெயர்களில், அங்கும் நடப்பதனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை லாபமே.
இவர்களின் கை விதை தனியங்களுடன் நின்று போகவில்லை, இப்பொழுது மீன் வகைகளிலும் கைவரிசை காட்ட ஆரம்பித்திருப்பது அறிவீர்களா?
பத்து வருடங்களுக்கு முன்பாகவே, டிலெபியா என்று மீன் மரபணு-மாற்று தொழிலியுக்தில், இயற்கையில் கிடைக்கும் டிலெபியாவைவிட எடை ஆதிகமாகவும், கட்டற்று உண்டு பெருப்பதை போலவும் மாற்றங்களை சொறுகி, அவைகளின் இனப்பெருக்க, பழக்க வழக்க மரபணு விசயங்களை உருவி...
இந்த மறுகாலனியாதிக்கத்தின் உக்தி, உலக சந்தையை தன் கைக்குள் கொண்டுவருவது, அது ஒன்றுதான் முன் நிக்கிறது. மற்றபடி இயற்கை, மனித சுகாதாரமோ அவைகளின் பன்மைத்தன்மையோ கருத்தில் கொள்ளப்படவே இல்லை.
இது ஒரு இருட்டடிப்பு உண்மை, நாம் எங்கு செல்கிறோம்...? எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா!!
அசுரா,
மற்றொரு சிந்தனையூட்டு, அபாயமணி அடிக்கும் கட்டுரை உங்களிடமிருந்து.
எத்துனை பேர் இதனை படிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள். நிலத்தடி நீரை மாசுபடுத்தி, அதனை நச்சாக்கி, அந்த நீருக்கு ஒரு நிறத்தையூட்டி மக்களை புத்தியிழக்கச் செய்து, இயற்கையை சுரண்டும் இந்த மறுகாலனியாதிக்கம் மிக விரைவாக உலகத்தை சுருட்டி விடும்.
எழுதுவதற்கு எவ்வளவு இருக்கிறது, படித்து சிந்திப்பதற்குத்தான் ஆட்களை காணோம்.
நீங்கள் கொடுத்த சுட்டிகளின்றி, மற்றொரு விசயமும் விஷமாக பரவிக்கொண்டுள்ளது bio-technology and genetical engineering என்ற பெயர்களில், அங்கும் நடப்பதனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை லாபத்தை முன்னெறுத்தியே அன்று வேறன்னெ.
to be continued---2
the end part---2
இவர்களின் கை, விதை தனியாங்களுடன் நின்று போகவில்லை, இப்பொழுது மீன் வகைகளிலும் கைவரிசை காட்ட ஆரம்பித்திருப்பது அறிவீர்களா?
பத்து வருடங்களுக்கு முன்பாகவே, டிலெபியா என்று மீன் மரபணு-மாற்று தொழிலியுக்தில், இயற்கையில் கிடைக்கும் டிலெபியாவைவிட எடை ஆதிகமாகவும், கட்டற்று உண்டு பெருப்பதை போலவும் மாற்றங்களை சொறுகி, அவைகளின் இனப்பெருக்க, பழக்க வழக்க மரபணு விசயங்களை உருவி, அந்த மலட்டு மீன்களை இயற்கையினுல் திணிபதனால் ஒரிஜினல் மீன் வகைகள் அவற்றுடன் போட்டியிட முடியாது காணமலே இவ்வுலகத்தை விட்டு அகற்றப் படுகிறது... உங்களுக்கு புரிகிறதா இந்த வியபார யுக்தி?
இந்த மறுகாலனியாதிக்கத்தின் உக்தி, உலக சந்தையை தன் கைக்குள் கொண்டுவருவது, அது ஒன்றுதான் முன் நிக்கிறது. மற்றபடி இயற்கையோ, மனித சுகாதாரமோ அவைகளின் பன்மைத்தன்மையோ கருத்தில் கொள்ளப்படவே இல்லை.
இது ஒரு இருட்டடிப்பு உண்மை, நாம் எங்கு செல்கிறோம்...? எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா!!
ஐயோ! எனக்கு தலை எல்லாம் சுத்துதே.. இது எங்கே போய் முடியும்னு தெரியலையே..
கீழக்கிந்திய வியாபாரிகளை விரட்டியடித்த நாம், இப்போது அவர்களுக்கே சிவப்பு கம்பளம் விரிக்கின்றோம்.
--ஸ்ரீதர்
//bio-technology and genetical engineering என்ற பெயர்களில், அங்கும் நடப்பதனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை லாபமே.//
//பத்து வருடங்களுக்கு முன்பாகவே, டிலெபியா என்று மீன் மரபணு-மாற்று தொழிலியுக்தில், இயற்கையில் கிடைக்கும் டிலெபியாவைவிட எடை ஆதிகமாகவும், கட்டற்று உண்டு பெருப்பதை போலவும் மாற்றங்களை சொறுகி, அவைகளின் இனப்பெருக்க, பழக்க வழக்க மரபணு விசயங்களை உருவி... //
இயற்கை நேசி,
தங்களது உயிரியல் அறிவு இந்த மறுகாலனியாதிக்கச் சதியை வீச்சாக அம்பலப்படுத்த பேருதவியாக இருக்கும்.
வாய்ப்பிருந்தால் விதை நெல் பற்றியும், கடல் வளங்களின் அழிவு பற்றியும் கட்டுரை எழுதலாமே...(எனக்கு தெரிந்து மிகப் பெரிய அளவில் அழித்தொழிக்கப்படுவது கடல் வளங்கள்தான். இதைப் பற்றி பரவலான விழிப்புணர்ச்சி இன்னும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மேலும் கடல் வளங்களின் அழிவுதான் மனித குலத்திற்க்கு ஆகக் கேடான அழிவாக இருக்கும்).
அல்லது தரவுகள் கொடுத்தால் இருவரும் இணைந்து எழுதலாம்.( நானும் கற்பக விநாயகமும் இப்படித்தான் சில கட்டுரைகள் எழுதினோம்- அவரது முகம்கூட எனக்கு தெரியாது).
//இது ஒரு இருட்டடிப்பு உண்மை, நாம் எங்கு செல்கிறோம்...? எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா!!//
கவலைப்பட்டு எதாவது நடந்துவிடுமா? மாறாக நமது குழந்தைகளின் நலனுக்காகவாவது வாய்ப்புள்ள இடங்களில் வாய்ப்புள்ள தளங்களில் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க திட்டத்திற்க்கு எதிராக சகலவிதமான வழிகளிலும் போராட வேண்டும்.
நன்றி,
அசுரன்.
எல்லோரும் முக்கியமாக படிக்க வேண்டிய விஷயம்.. படித்தால் மட்டும் போதாது..இதை குழந்தைகளுக்கும் எடுத்து சொல்ல வேண்டும்... இது போன்ற குளிர்பான விளம்பரப்படங்களில் நடிக்கும் celebrities ஒரு தார்மீக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்... இந்த நச்சுப் பொருட்கள் பற்றிய விளிப்புணர்வு இல்லாமலா இருப்பார்கள் அவர்கள் .. தெரிந்தும் ஒத்து ஊதுகிறார்கள் என்றால், அவர்களுக்கு சமுதாய பொறுப்பு இல்லை என்று தானே அர்த்தம்.. இவர்களைத்தானே role model களாக கருதுகிறார்கள் இளைஞர்கள் ..
நேற்று இந்த செய்தி தொலைகாட்சியில் வந்து சில நிமிடங்கள் களித்து நான் பார்த்த ஒரு காட்சி
9 அல்லது 10 மாதங்களே ஆகி இருக்கும் ஒரு குழந்தைக்கு அதன் தந்தை கோக்கை, பாட்டில் மூடியில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தார்,, அதிர்ச்சியாய் இருந்தது... இப்படிதான் இருக்கிறார்கள் பெற்றோர்களும்..
நண்பரே.. நல்ல பதிவு... என் போல் இல்லாமல் அருமையாக விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள்..
புரியவேண்டிய நம் எல்லாருக்கும் புரிந்து இதனை தவிர்த்தால் தான் இதற்கு விடிவு...
தமிழக அரசோ,மத்திய அரசோ இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததன் காரணம் என்ன ????.
மங்கை,
வெகு நாட்களுக்கு பிறகு வருகிறேர்கள், வாருங்கள் :-)
//இது போன்ற குளிர்பான விளம்பரப்படங்களில் நடிக்கும் celebrities ஒரு தார்மீக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்... இந்த நச்சுப் பொருட்கள் பற்றிய விளிப்புணர்வு இல்லாமலா இருப்பார்கள் அவர்கள் .. தெரிந்தும் ஒத்து ஊதுகிறார்கள் என்றால், அவர்களுக்கு சமுதாய பொறுப்பு இல்லை என்று தானே அர்த்தம்..//
கழிசடைகளிடமும், பிழைப்புவாதிகளிடமும் வேறூ எதை எதிர்பார்க்க சொல்கிறேர்கள்.
அது இருக்கட்டும்,
ஏகாதிபத்தியங்களின் சந்தை தேவைக்கான வளங்களை உற்பத்தி செய்யும் இடமாக/பின் நிலமாக இந்தியா போன்ற நாடுகளை மாற்ற முட்படும் மறுகாலனியாதிக்கச் சதியை உணர்கிறேர்களா?
அதாவது, நாடு மீண்டும் அடிமையாகிக் கொண்டிருப்பதை உணர்கிறேர்களா?
நன்றி,
அசுரன்.
ஸ்ரீதர்,
//கீழக்கிந்திய வியாபாரிகளை விரட்டியடித்த நாம், இப்போது அவர்களுக்கே சிவப்பு கம்பளம் விரிக்கின்றோம்.//
முன்பு ஒருவன்(பிரிட்டிஸ்) இருந்தான் இப்போ பலபேர்.
கொச்சையாக(பச்சையாக) சொல்லுனுமுனா பாரத தாயை முன்பு வைப்பாட்டியாக வைத்திருந்தான் இப்போ விபச்சாரியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கேட்பதற்க்கு வக்கிரமாக இருந்தாலும், இதுதான் உண்மை. அப்படி இந்த வார்த்தைகள் யாரையேனும் மிகவும் பாதித்தது என்றால் அவர்கள் தங்களது உணர்வுக்கு நேர்மையாக இருந்து நமது தாயை விடுதலை செய்ய போராட வேண்டும்.
கொஞ்சம் தலையை சுற்றுவதை நிறுத்திவிட்டு, என்ன செய்யலாம் யோசியுங்கள் ஸ்ரீதர்??
எனது மற்ற பதிவுகளையும் படித்து கருத்துக்களை சொல்லுங்கள்.
நன்றி,
அசுரன்.
மனதின் ஓசை,
தங்களது வருகைக்கு நன்றி,
எனது மற்ற பதிவுகளையும் படித்து கருத்துக்களை சொல்லவும்
இது தவிர்ப்பது பற்றிய பிரச்சனையல்ல. மேலும் இது கோக் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்ச்னை அல்ல.
இது நாடு அடிமையாவது பற்றிய பிரச்ச்னை. கோக் ஒரு அடையாளம் மட்டுமே.
நன்றி,
அசுரன்.
தூபாய் ராசா,
என்ன நகைச்சுவையா?
மத்திய, மாநில மாமாக்களிடம் கூட்டி கொடுப்பதை தவிர்த்து வேறு என்ன நடவடிக்கையை எதிர்ப்பார்க்க சொல்கிறேர்கள்.
கூட்டி கொடுப்பதை தவிர்த்து அவர்கள் செய்யும் வெலைகள்:
கங்கானி, கைக்கூலி, உளவு, ரௌடி, வாட்ச்மேன்
நன்றி,
அசுரன்.
வலைப்பூ அரசியல் தேவை கருதி...
பின்னூட்ட கயமைத்தனம் 1
நன்றி,
அசுரன்.
வலைப்பூ அரசியல் தேவை கருதி...
பின்னூட்ட கயமைத்தனம் 2
நன்றி,
அசுரன்.
வலைப்பூ அரசியல் தேவை கருதி...
பின்னூட்ட கயமைத்தனம் 3
நன்றி,
அசுரன்.
வலைப்பூ அரசியல் தேவை கருதி...
பின்னூட்ட கயமைத்தனம் 4
நன்றி,
அசுரன்.
அசுரன் கோக் - பெப்சியின் முகத்திரையை கிழித்திருக்கிறீர்கள். பன்னாட்டு முதலாளிகளுக்கு மூன்றாம் உலக மக்களது உயர்களைப் பற்றியெல்லாம் எந்தவிதமான கவலையும் இல்லை. அதேபோல் அந்த பன்னாட்டு முதலாளிகளை பனியவைக்கும் அளவிற்கு நம்முடைய நீதிமன்றங்களும், ஆட்சியாளர்களும் செயல்படவில்லை. மொத்தத்தில் இந்த அரசுகளே பன்னாட்டு ஏகபோக, உள்நாட்டு பெரு முதலாளித்து அரசாக இருக்கும் போது அவர்கள் ஏன் இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டும்.
குடிக்ககூட தண்ணியில்ல சொக்க நாதா?
சிலுக்க வந்த ஆட விடு சொக்க நாதா?
சோக்கு சோக்குத்தான்!
மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீரில்லை என்ற போது கோக்கை குடியுங்கள் என்று கூறுகிறார்கள். ஜார் எப்படி மக்களுக்கு கேக்கை சாப்பிட அறிவுறுத்தினானோ அதே பாதையில் இந்திய ஆட்சியாளர்கள் பயணிக்கின்றனர். விரைவில் ஜாருக்கு வந்த முடிவு இந்திய ஆட்சியாளர்களுக்கும் வரும்!
/மொத்தத்தில் இந்த அரசுகளே பன்னாட்டு ஏகபோக, உள்நாட்டு பெரு முதலாளித்து அரசாக இருக்கும் போது அவர்கள் ஏன் இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டும்.//
சரியாக சொன்னீர்கள்.
//ஜார் எப்படி மக்களுக்கு கேக்கை சாப்பிட அறிவுறுத்தினானோ அதே பாதையில் இந்திய ஆட்சியாளர்கள் பயணிக்கின்றனர். விரைவில் ஜாருக்கு வந்த முடிவு இந்திய ஆட்சியாளர்களுக்கும் வரும்!//
அது இந்த உலகின் விதி.
தண்ணீர் தனியார்மயத்தின் ஒரு அங்கம்தான் இந்த கோக் பிரச்சனை என்பதும் இன்றைக்கு உலகில், பெட்ரோலுக்கு போன் நூற்றாண்டில் இருந்த மதிப்பு இந்த நூற்றாண்டில் உள்ளது. பெட்ரோல் ஒரு கறுப்பு தங்கம் எனில் நீர் நீலத்தங்கம்.
ஆக, உலக நீலத்தங்க மூலாதரங்களை தனது வசப்படுத்தி சந்தைகளை தனது விருப்பம்போல் கையளும் மறுகாலனியாதிக்கத் திட்டத்தின் ஒரு அங்கம்தான் கோக்குக்கு விளக்கு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத்தின் கதை.
இது வேறு வடிவங்களில் எப்படி வருகிறது?...
#1) மகாராஸ்டிரா தண்ணீர்(நீர் வள) ஒழுங்குமுறைச் சட்டம்.
#2) இந்திய ஆறுகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படுதல்.(கோவையில் கூட ஒரு ஆறு சமீபத்தில் அவ்வாறு ஆக்கப்பட்டது, தஞ்சை பகுதியில் ஒரு ஆறு தனியார்மயமாக்கப்பட்டது).
#3) இந்தியா முழுவதும் தண்ணீர் சப்ளை செய்யப்படும் வலைப்பின்னல்கள் தனியார்மயம்(உ.பி, கர்நாடகா, ம.பி etc).
#4) கிராம சுய தேவை பூர்த்தி செய்யும் திட்டங்கள் உலக வங்கியுன் கடனுதவியுடன் நடத்தப்படுவது. இவ்வாறான திட்டம்தான் கிராம வளங்களை கொள்ளையடிக்கும் திட்டம். (இது பற்றி மேலதிகமான புரிதல் தேவைப்படுபவர்கள் மாகாராட்டிர நீர் வள ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைக்கு வந்த இடங்களில் அது வருவதற்க்கு முன்பு என்னேன்ன தந்திரங்கள் கையாளப்பட்டன என்பதை கவனிக்கவும்).
நன்றி,
அசுரன்.
பின்னூட்ட கயமைத்தனம் எண்ணிக்கை மறந்து விட்டது.
நன்றி,
அசுரன்.
இந்தக் கட்டுரை சம்பந்தமாக பல்வேறு தளங்களில் நான் இட்ட பின்னூட்டங்களை இங்கு இடலாம் என்று நினைத்தேன்
அனைவரும் ஒரு விசயத்தை பார்க்க தவறுகிறீர்கள்,
இது கோக் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனையோ அல்லது பூச்சிக் கொல்லி பற்றிய பிரச்சனையோ அல்ல.
இது நமது நிலத்தடி நீரை, நீலத்தங்கத்தை தனது சந்தைத் தேவைக்காக ஏகாதிபத்தியங்கள் கபளீகரம் செய்யும் 'GATS' ஒப்பந்தத்தின்படியான, நாட்டை காலனியாக்கும் ஒரு மறுகாலனியாதிக்கத் திட்டம் பற்றிய பிரச்சனை.
மக்கள் தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆறு , குளங்களை தனியார் மயமாக்கி அவன் எங்கு லாபம் கிடைக்கிறோதோ அங்கு விற்பது பற்றிய பிரச்சனை.
யார் உரிமை கொண்டாடுவது என்பது பற்றிய பிரச்சனை.
தண்ணீர் தனியார் மயம் பற்றிய பிரச்சனை.
தண்ணீர் மற்றும் இயற்க்கை வளங்களான -- சமூகத்தின் சொத்துக்களை யாரோ ஒரு சிலரின் லாப வெறிக்காக சமூகத்துக்கு எந்தப் பயனுமின்றி தனியார்மயமாக்குவது பற்றிய பிரச்சனை.
நாடு அடிமையாவது பற்றிய பிரச்சனை.
பாடுபட்டு பெற்ற அரைகுறை சுதந்திரம்கூட பறிபோவது பற்றிய பிரச்சனை.
இந்த அம்சத்தை யாரும் புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை.
கோக் லிட்டர் 1.2 பைசாவுக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கிறது தெரியுமா?
எனது ப்திவையும் அதில் நான் கொடுத்துள்ள சுட்டிகளில் உள்ள விசயங்களையும் நேரம் செல்வழித்து படித்துப் பார்த்தால் நாம் எவ்வளவு பெரிய ஆபாயத்தை நோக்கிச் செல்கிறோம் என்பது தெரியும்.
http://poar-parai.blogspot.com/2006/08/blog-post.html
சிவபாலன் என்பவருக்கு நான் இட்ட பின்னூட்டம் #2
http://sivabalanblog.blogspot.com/2006/08/blog-post_07.html
பின்னூட்டம் #1 is my previous comment in this blog
*******************
சிவபாலன்,
எனது பின்னூட்டத்தில் பிரதானமாக நான் குறிப்பிட்டிருப்பது நாடு அடிமையாவது பற்றி. சுற்றுச் சுழல் பிரச்சனை சிறிதாக ஒரு தக்வல் என்ற அடிப்படையில்தான் வருகிறது.
ஆனாலும் தாங்கள் கேட்டதால் சுற்றுசூழல் பிரச்சனைக்கும் பதில் சொல்கிறேன்.
நான் பதில் சொன்னது போல் நீங்களும் எனது நாடு அடிமையாவது பற்றிய முந்தைய பின்னூட்டத்தின் பெரும் பகுதிக்கு கருத்து சொல்லக் கடைமைப் பட்டுள்ளீர்கள்.
தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவன் கம்யுனிஸ்டாக இருக்க முடியாது.
இயற்கையுடன் நமது உறவை சீராக வைத்துக் கொண்டே தொழில் வளர்ச்சியடைய முடியாதா?
இதற்க்கு தடையாக இருப்பது என்ன?
ஏகாதிபத்தியத்தின் சந்தை வெறி.
அதற்க்காக, அராஜகமாக தேவைக்கு அதிகப்படியாக இயற்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கி உறப்த்தி செய்வது. (அதாவது 100 எண்ணிக்கை விற்பனையாகும் வாய்ப்புள்ள கார் சந்தைக்கு, 4 கம்பெனிகள் 60 எண்ணிக்கையில் மொத்தம் 240 கார்கள் உறப்த்தி செய்வது. இழப்பு - 140 கார்களுக்கான மனித உழைப்பு, இரும்பு, சுற்றுச் சூழல் மாசுபாடு, ETC).
இதுதானே....காரணம்
க்யொட்டா பொராட்டோ கால் என்ன சொல்கிறது.
அமெரிக்கா மாசு படுத்துவதை மற்ற நாடுகளிடம் விற்கிறது.(அதாவது அமெரிக்கா தனது மாசில் 50%(Example) மற்ற ஏழை நாடுகளில் மாசைக் குறைக்க உதவி செய்தோ அல்லது பணம் கொடுத்து மற்ற ஏழை நாடுகள் அந்த மாசுக்கு பொறுப்பாக்கிக் கொள்ளாச் செய்து தான் மாசு படுத்துவதை தொடர்கிறது)
இது இந்த பொருளாதார அமைப்பின் failure இல்லையா?
நீங்கள் சொன்ன சாயப் பட்டறைகள், பனியன் தொழிற்சாலைகள் எல்லாமே புரட்சிக்கு பிந்திய சமூகத்திலும் இருக்கும். ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட தேவைக்காக இயற்க்கையை மாசுபடுத்துவது தவிர்க்க முடியாது எனில், ஒருங்கிணைந்து போராடி தனது விடுதலையை தேடிக் கொண்ட, புரட்சி செய்த அந்த சமுதாயத்துக்கு வேறு கஸ்டமான மாற்று வழிகளை கையாளுவதோ அல்லது தனது தேவைகளை மாற்றிக் கொள்வதோ பெரிய பிரச்சனையாக இருக்காது.
அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் தேவைகளுக்காக உற்பத்தி இருக்கும் மாறாக சந்தைகளுக்கான உறப்த்தி இருக்காது.
சந்தை உற்பத்தியில்தான் தேவைகளை விளம்பரங்கள் மூலம் உருவாக்க வேண்டியுள்ளது. அதாவது 'தேவை உற்பத்தி'(விளம்பரங்கள்) என்பதே ஒரு தனி தொழிலாக உருவாகியுள்ள கோமாளித்தனம் ஏகாதிபத்திய சமூக்த்தின் சீரழிவைத்தான் காட்டுகிறது.
தன்னுள் இயைந்து செயல்படும் இயற்கையை, தனித்தனியாக தனக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் ஒருங்கிணைப்பு இல்லாத ஏகாதிபத்திய மனித சமூகம் எதிர் கொள்ள முடியும் என்று நினைப்பது அடி முட்டாள்தனமானது.
இது பற்றி இரு விரிவான கட்டுரைகள் இட்டேன்:
http://poar-parai.blogspot.com/2006/07/1.html
http://poar-parai.blogspot.com/2006/07/ii.html
படித்துப் பார்க்கவும்
நன்றி,
அசுரன்
அசுரன்,
அட்டகாசமான பதிவு. இன்று தான் படித்தேன்.
அந்த Flash presentation ஐ உங்க பக்கத்தின் top right ல் எல்லாருக்கும் எப்பவுமே தெரியர மாதிரி போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.
என் இணையத்திலும் இதர்க்கான ஒரு லிங்க் போடுகிறேன்.
கோக், பெப்ஸி இனி நம்மவர் யாரும் குடிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
பயமா இருக்கு....
ஆனால் நம்பிக்கையாக இருக்கலாம்..... தொடர்ந்து போராட்டமும், எதிர்ப்பும் தீவிரமாக இருக்கும் பட்சத்தில்..
இருக்கும்.....
Bad News India,
தங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி,
நீங்கள் குறிப்பிட்ட படி அந்த பிரசன்டேசனை வலது புறம் பதிக்க முயற்சி செய்கிறேன்(டெக்னிக்கல் விசயங்களில் நான் கொஞ்சம் மக்கு).
கோக்கை புறக்கணிப்பது மட்டுமல்ல. ஒட்டு மொத்த அன்னிய பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும். இந்திய வளங்களை தாரை வார்த்துக் கொடுக்கும் நமது அரசையும் புறக்கணிக்க வேண்டும்....
அசுரன்
லிவிங் ஸ்மைல்,
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
போராட்டமும் எதிர்ப்பும் தீவிரமாக இருப்பதற்க்கு நம்மைப் போன்ற ஜனநாயக சக்திகளின் பங்களிப்பு ஆக முக்கியமான தேவையாக இருக்கிறது.
அசுரன்
antha velekkena myraandi ennatha inntha naatukkaka kiluchannu ennga paathalum silai vachurukkainga............................................................aayokkiya payaluka.............
நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தவர்கள் மற்றும் கட்சிகளைக் குறிப்பிடாமல் விட்டதால் கட்டுரை முழுமையடையவில்லை.
செல்லதுரை.
Post a Comment