TerrorisminFocus

Monday, June 11, 2007

பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…

நன்றி: விவாதமேடை

ஏய்! சாயிபாபா

வெறுங்கையிலிருந்து விபூதியும் பூச்செண்டும்

வரவழைத்தாயே! அதுவா அற்புதம்?

வெயிலறியா உன் தலைமுடியிலிருந்துவிதவிதமாய்

கடிகாரங்களை வரவழைத்தாயே!

அதுவா அற்புதம்?

பசியறியா உன் வயிற்றியிலிருந்து

பலப்பல லிங்கங்களை வரவழைத்தாயே!

அதுவா அற்புதம்?

அடே! சாயிபாபா

வழியறியா உன் காவிக் கஜானாவிலிருந்து

கடைசியில் கருணாநிதியை

வெளியே வரவழைத்தாயே!

அதுவன்றோ அற்புதம்!!

வீழ்ந்திற்றோ கொள்கைக் குன்று என்று

விளங்காத உடன்பிறப்பே...

இருநூறு கோடி எதிரே வருகையில்

பெரியார் பார்வையா பார்க்க முடியும்?

கொஞ்சம் பகுத்தறிவோடு பார்!

யாருக்கும் தலைவணங்காத சுருள்முடியையே

கோபாலபுரம் தன் காலடிக்கு வரவழைத்தது

ஆன்மீகத்திற்கே பேரடி அல்லவா?

அதிசயம் அல்லவா?

அற்புதத்தில் விஞ்சி நிற்பது

பாபாவா? கலைஞரா? பார்!

வெறுங்கையிலிருந்து நோக்கியாவை

வரவழைத்தார்!

இதோ... ஊமைகள் பேசுகிறார்கள்!

காலிக் கஜானாவிலிருந்து

கலர் டி.வி.யை வரவழைத்தார்!

அதோ... குருடர்கள் பார்க்கிறார்கள்;

வாயிலிருந்தே இரண்டு ஏக்கர் நிலத்தை

வரவழைத்தார்!

அதோ முடவர்கள் நடக்கிறார்கள்.

அது மட்டுமா...?

அணுவைத் துளைத்து, மலைகள் விழுங்கி,

ஆழ்கடல் குடித்து ஆயிரமாய் விளைநிலங்கள் செரித்து

குறுகத் தறிக்கும் உலகமயப் பொதுமறையை

ஓவியமாய்த் தீட்டும் அற்புதம்

அந்த பாபாவுக்கு வருமா?

அவரா, இவரா?

அற்புதத்தைத் தெரிவு செய்ய முடியாமல்

திக்குமுக்காடி நெளிகிறது தெலுங்கு கங்கை.

ஆசீர்வாதத்திற்குப் பயந்து

ஓடி ஒளிகிறது கூவம்!

துரை. சண்முகம்

13 பின்னூட்டங்கள்:

said...

//அடே! சாயிபாபா

வழியறியா உன் காவிக் கஜானாவிலிருந்து

கடைசியில் கருணாநிதியை

வெளியே வரவழைத்தாயே!//

:)))

அசுரன்,

சென்னை தண்ணீர் பிரச்சனையில் வழிய உதவ வந்தவருக்கு மரியாதை செய்தது கொள்கையை குழிதோண்டி புதைத்தது என்று சொல்ல இயலாது.

said...

ஊரெல்லாம் கொள்ளையடிச்ச நாதாரிகள் இந்த சாமியாரிடம் தமது கள்ளப் பணத்தைக் கொடுத்துள்ளனர். அதை வைத்து பல்வேறு பிசினஸ்கள் செய்து அதில் மக்களுக்கு பிச்சை போடுகிறான். மக்களுக்கு குடிநீர் கொடுக்க வக்கில்லாத அரசு என்னாத்துக்கு ஆட்சி செய்ய வேண்டும்.

இதே கருணாநிதி குறைந்த விலைக்கு தண்ணீரும், மின்சாரமும், இலவச நிலங்களூம் பன்னாட்டு கம்பேனிகளுக்கு கொடுக்க எந்த சாயிபாபா துட்டு கொடுத்தார்?

கொள்ளையடித்த பணத்தில் ஒரு கொசுறை இப்படி பிச்சை போட்டால் அந்த திருட்டுத்தனத்துக்கு புனிதப் பட்டமா?

திருப்பதியில் பணம் போட்ட பழைய காலம் போய் இப்பொழுது தெருப்புழுதி வோட்டு கட்சி தரகர்களிடம் போடுவது இன்றைய காலம்.

அசுரன்

said...

கோவியாரே...

இன்னும் ஒரு சில பதிவுகளிலும் நீங்கள் சாயிபாபாவை நிந்தித்தவர்களிடம் இதே பல்லவியை தான் பாடினீர் இல்லையா...

ஏன் பாபா நினைத்தால் மந்திர சக்தியால் கிரவுண்ட் வாட்டர் லெவலை 1 அடிக்கு கொண்டுவந்துவிட்டால் குடிநீர் பஞ்சமே இருக்காதே ?

முகம் கழுவ காலால் பள்ளம் பறித்துக்கொள்ளலாமே...

* சாயிபாபா பல்லாயிரக்கணக்கானோருக்கு மருத்துவ உதவி செய்கிறார்

* சாயிபாபா பல்லாயிரக்கணக்கானோருக்கு கல்விக்கு உதவுகிறார்.

இந்த இரண்டு கூற்றும் 200 சதவீதம் உண்மை..

அதே சமயம்,

சாயிபாபா மக்களை தன்னுடைய மேஜிக் கலையின் மூலம் ஏமாற்றுகிறார், பகுத்தறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களை செய்கிறார் என்பது 200 % உண்மை..!!

said...

மேஜிக் கலையின் மூலம் ஏமாற்றுகிறார், பகுத்தறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களை செய்கிறார் என்பது 200 % உண்மை..!!//

மஞ்ச துண்டு அய்யாவும்,தன்னுடைய அரசியல் பதவி மூலம் ஏமாற்றி கொள்ளையடிக்கிறார்;பகுத்தறிவுக்கு புறம்பாக பலசமயம் நடக்கிறார் என்பதும் 200% உண்மை.

said...

எனக்கு இப்போ சந்திரபாபுவின் "ஒன்ணுமே புரியல ஒலகத்திலே" பாடத் தோணுது.

said...

ஒரு பகுத்தறிவு இயக்கத்தின் தலைவனான கலைஞரின் சாய்பாபா உறவு ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.

ஆயினும் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில் அவரை பார்த்தோமானால் பல விஷயங்களுக்காக அவர் Compromise செய்துகொள்ள வேண்டியதின் அவசியத்தையும் உணரமுடிகிறது.

said...

அப்படி எனக்கு தெரியவில்லை நண்பர் லக்கிலுக்,

அவர் ஒரு தரகு வர்க்க அரசியல்வாதியாக்வே இந்த காம்ப்றமைஸ் செய்கிறார். பகுத்தறிவா அல்லது தரகு வர்க்க அரசியலா என்கிற தராசில் அவர் தரகு வர்க்கத்தின் பக்கம் சாய வேண்டிய சூழல். ஏனேனில் அவர தற்போது வேலை பார்க்கும் இடம் அப்படி. அவரது உற்பத்தி உறவு - உலக வங்கியின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் ஒரு அடியாள் உத்தியோகம். அதற்க்கேற்ற கலாச்சாரமே அவரிடம் இருக்கும் என்பது விதி.

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தமிழ் காத்த நேற்றைய கருணாநிதியல்ல அவர். ஏனேனில் அவர் தலை வைக்க துணிந்த போது அவரிடம் இழப்பதற்க்கு அவர் உயிர் மட்டுமே இருந்தது. இன்று அவரது உயிரை விடவும் உயர்வான வேறு சில விசய்ங்களும் உள்ளன.

அசுரன்

said...

//ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தமிழ் காத்த நேற்றைய கருணாநிதியல்ல அவர். ஏனேனில் அவர் தலை வைக்க துணிந்த போது அவரிடம் இழப்பதற்க்கு அவர் உயிர் மட்டுமே இருந்தது. இன்று அவரது உயிரை விடவும் உயர்வான வேறு சில விசய்ங்களும் உள்ளன.//

ஒரு திமுக காரனாக இருந்தாலும் என்னால் கூட மறுக்க முடியாத அளவுக்கு இருக்கிறது உங்களது வாதம்! :-(((((((

திராவிட இயக்கங்கள் மற்றும் தலைவர்களின் மீதான உங்களது கருத்தியல்ரீதியான விமர்சனங்களை வரவேற்கிறேன்.

ஆயினும் புரட்சி பேசிய கம்யூனிஸ்டுகளும் கூட கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் தரகுவர்க்க அரசியலுக்கு துணைபோனதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்தியாவில் அரசியல் செய்யவேண்டும் என்றால் இது அத்தியாவசியமானது போலிருக்கிறது.

said...

//இந்தியாவில் அரசியல் செய்யவேண்டும் என்றால் இது அத்தியாவசியமானது போலிருக்கிறது. //

நண்பர் லக்கிலுக்,

"இந்தியாவில் அரசியல் செய்ய வேண்டுமானால்" என்கிற உங்களது வரிகளை சிறிது மட்டும் மாற்ற வேண்டும்.

"இந்தியாவில் சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் அரசியல் செய்ய வேண்டுமானால் ஒருவன் தரகு வர்க்க அரசியல்வாதியாக சீரழிய வேண்டும்" என்ற சிறு மாற்றம் சரியான பொருள் தரும்.

இப்படி சீரழிந்த லிஸ்ட்:

1) திமுக
2) திக
3) விடுதலை சிறுத்தைகள்
4) CPM
5) CPI

இன்னும் இன்னும் இந்த லிஸ்டில் ஆட்கள் சேர்வார்கள்.

இந்த அம்சத்தை விரிவாக விளக்கி பல கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

இந்திய தேர்தல் அரசியலும், தரகு வேலையும், பார்ப்பன சேவையும் ஒன்றையொன்று பின்னி பிணைந்து மக்கள் மீது வன்மூறை செலுத்தி வருகின்றன.

இதில் ஏதேனும் ஒன்றில் புகுந்தால்கூட மீதியுள்ள மற்றெல்லா விசயங்களுக்கு ஒத்துப் போக வேண்டும் என்பதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்.

இந்த விதி தெரியாமல் நாம் இழந்த தலைவர்கள் பலர்... நேற்று கருணாநிதி, இன்று திருமாவளவன்.

இந்த தலைவர்கள் சாதாரண தலைவர்கள் இல்லை. அடிமட்டத்திலிருந்து முன்னேறி வந்த தலைவர்கள். இவர்களின் வளர்ச்சி என்பது விடுதலை விரும்பிய ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் மனக் குமறலின் அடையாளம். இவர்களின் வளர்ச்சிப் பாதையில் வீழ்ந்து தியாகம் செய்த மலர்கள் எத்தனை... அந்தோ பாதை சரியில்லை இன்று தியாகங்கள் அனைத்தும் வீழலுக்கு இழைத்த நீராய் பெருகி ஓடுகிறது. அம்பானிக்கும், சாய்பாபாவுக்கு, டாடாவுக்கும் பல்லக்க்கு தூக்கவா அன்றைய தியாகங்கள் செய்யப்பட்டன. காஞ்சி மடத்தை பீரங்கி வைத்து தகர்க்கும் நாளை கனவுகளில் கண்டு பூரித்த தலைவன் இன்றூ மாலுமி சரியில்லை அதற்க்காக் கப்பலை உடைப்பது சரியல்ல என்று பார்ப்ப்னியத்தின் காவலனாய் மாறிய அவலத்திற்க்கு வேறென்ன காரணம் இருக்க முடியும் இந்த தேர்தல் அரசியல் அடிமைத்தனத்தை தவிர்த்து.

கருணாநிதியோ அல்லது திருமாவளவனோ அவர்களின் பெயராலோ அல்லது உருவத்தாலோ நமது தலைவர்கள் அல்ல மாறாக அவர்கள் மக்களை பிரநிதித்துவம் செய்ததாலேயே அவர்கள் நமது தலைவர்கள் அந்த அம்சம் இல்லாவிடில் அவர்கள் கருணாநிதியாகவோ அல்லது திருமாவளவனாகவோ நீடித்து நிற்க வரலாறு அனுமதிக்காது.

அசுரன்

said...

//இந்த விதி தெரியாமல் நாம் இழந்த தலைவர்கள் பலர்... நேற்று கருணாநிதி, இன்று திருமாவளவன்//

நீங்க சொல்வது கரெக்ட்.ஆனா எங்க தலைவர்,மருத்துவர் அய்யா கொண்ட கொள்கையில் உறுதியானவர்;ஆயிரக்கணக்கான இளைஞர்களை சரியான பாதையில் வழி நடத்துபவர்;அடுத்த முதல்வராக தமிழகம் அவரை அடையாளம் காட்டப்போவது உறுதி.நீங்கள் கூட அப்பொழுது அவர் கட்சியில் உங்களை இணத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

said...

//ஒரு பகுத்தறிவு இயக்கத்தின் தலைவனான கலைஞரின் சாய்பாபா உறவு ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.

ஆயினும் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையில் அவரை பார்த்தோமானால் பல விஷயங்களுக்காக அவர் Compromise செய்துகொள்ள வேண்டியதின் அவசியத்தையும் உணரமுடிகிறது.//

கொள்கை முக்கியமா? அல்லது முதல்வர் பதவி முக்கியமா? என்றால் இவர் கொள்கையை விடும் முதல்வராக இருப்பார் போல இருக்கே?!
வாழ்க உங்கள் கொள்கை!.

said...

//மருத்துவர் அய்யா கொண்ட கொள்கையில் உறுதியானவர்//

யோய்வ் அனானி, சரியான காமெடி புடிச்ச ஆளா இருக்கீர்ரேயா.கொண்ட கொள்கைல உறுதினா பாராளுமன்ற படியை மிதிக்க மாட்டேன்னு சொல்லிகிட்டு மகனை அனுப்பி வருமானத்துக்கு வழி பண்ணறதா?? :-)

said...

கவிதையின் கடைசி பல வரிகளை ப்ளாக்கரில் இடும் போது ஸ்வாக செய்து விட்டேன். தற்செயலாக படிக்கும் பொழுதுதான் கவனத்தில் வந்தது. கவிதை முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வந்து படித்த அன்பர்கள் மீண்டும் படித்து துன்புறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அசுரன்

Related Posts with Thumbnails