அக்காமாலா, கப்ஸியும் - இம்சை அரசன் துன்பமணியும்
அவையை தலைமை தாங்கி நடத்தும் புலவர் பானபத்ரஒனாண்டியும், அரசன் துன்பமணியும், தளபதி மெலிந்த முத்துவும் வெகு மும்மரமாக விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவை நடவடிக்கைகளை பார்வையிட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இனி அவர்களின் உரையாடல்...)
தளபதி மெலிந்தமுத்து: மன்னா!... நாடு இருக்கும் நிலைமையில் அக்காமாலா, கப்ஸி போன்ற நச்சு பானங்கள் தேவையா?
இம்சை அரசன் துன்பமணி: நச்சு இருக்கிறதா இல்லையா என்று ஆய்வு செய்ய ஒரு குழுவை போட்டுள்ளோம் ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் சங்கதி தெரிந்து விடும்...
இம்சை அரசன் துன்பமணி: லகுட பாண்டியா.... மண்டை மேல் மண்டை இருந்தால் மட்டும் போதாது மதி வேண்டும். மக்கள் நச்சு பானம் குடிக்ககூடாது என்று தெரிந்துதான் பஞ்சாயத்துக்களுக்கு தகுந்த அறிவுரைகளைக் கூறி ஓலைகளை அனுப்பியுள்ளோம். சோழபுர சட்டம் 7ன் படி பஞ்சாய்த்து புளியமரங்களுக்கு நச்சு பானங்களை தடை செய்ய உரிமை உள்ளது. அப்புறம் அது அவர்கள் பொறுப்பில் உள்ள விசயம். மன்னர் செய்வதற்க்கு ஒன்றுமில்லை.
இம்சை அரசன் துன்பமணி: யோவ்.. தளபதி.... உனது அப்பா போன முறை ஆட்சியிலிருந்த போது தடை செய்தாரா? இப்பொழுது மட்டும் என்னை கேட்கிறீர்கள்.... கிராதகா.... மூக்குக்குள் மீசையை விட்டு மூளையை குதறி விடுவேன்... ஜாக்கிரதை...
தலைமைப் புலவர் பானபத்திர ஓனாண்டி: ஆமாம், ஆமாம்... தடை போட்டீர்கள் பிறகு அதை தூக்கி விட்டீர்கள்....
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் குடிமகன்: என்னடா இது..... கடைசி வரைக்கும் நாடு முழுவதும் தடை செய்றத பத்தி மன்னரும் ஒன்னும் சொல்லல... புலவரும் ஒன்னும் சொல்லல... தளபதியும் ஒன்னும் சொல்லல.... கடசில விவசாயத்தில ஏதோ பிரச்சனன்னு சம்பந்தமில்லாம ஒரு வார்த்த விடுறாரு..... எல்லாரும் வெள்ளிப் பணத்த எண்ணி வாங்கிட்டாங்களோ..... வேற வழியில்லை உக்கிரபுத்திரன்ட்ட போயி சேர்ந்திர வேண்டியதுதான்...
*****************
மேலே காணப்படும் உரையாடலுக்கும் நாடாளுமன்றத்தில் நடந்த கோக் ஆதரவு சதியாலோசனைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
*********
மொக்கைப்பாண்டி: ஆமாம் மன்னா, எனக்குக்கூட அப்படித்தான் உள்ளது.
மொக்கைப்பாண்டி: உக்கிரபுத்திரன் ஓலை அனுப்பினானே.... அக்காமாலா, கப்ஸியை தடை செய் இல்லையின்னா மக்களோட கோபத்துக்கு ஆளாவன்னு... கேட்டீர்களா?..... அனுப்பிய ஓலையை கிழித்துவிட்டு. புறாவை வறுத்து அக்காமாலவுடன் கலந்து ஒரு பிடி பிடித்தீர்களே..... இப்பொழுது வருத்தப்பட்டு என்ன செய்வது....
மொக்கைப்பாண்டி: சிரிக்கிறார்.....
தொடர்ந்து சிரிக்கிறார்......
துன்பமணி: ஏனய்யா சிரிக்கிறீர்.... மொக்கை..... சொல்லித் தொலையுமய்யா... மணிக்கொருதரம் மொக்கை என்பதை நிரூபித்துக் கொண்டே இரும்...
மொக்கைப்பாண்டி: நம்மை சமணச் சாமியார்கள் போல கற்பனை செய்து பார்த்தேன்... அம்மணமாக... சிரிப்பை அடக்க முடியவில்லை...
துன்பமணி: அமைச்சரே.... அது என்ன சத்தம்?......
மொக்கைப்பாண்டி: ஜங்கு சத்தம்.... மக்கள் கிளர்ந்து விட்டனர். மன்னா கிளம்புங்கள்..... உங்கள் உத்தியையே செய்லபடுத்துவோம்....
தொடர்புடைய பதிவுகள்:
தொடர்புடைய சுட்டிகள்:
#1) Indian Freedom and Imperialism - Immediately after August 15
#2) கடல் நீர் தனியார்மயம், காற்றும் ஆகலாம் எதிர்காலத்தில்
#5) தண்ணீரில் எழுதிய புதிய மனு நிதி
#6) நீரில் வணிகம், நீரில்லா துயரம்
#7) பாட்டில் தண்ணீர் பாண்டியர்களே கொஞ்சம் இங்கே பாருங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு அருமையான சிறு பிரசுரத்தையும் படிக்கவும்:
தண்ணீர் தாகத்திற்க்கா, லாபத்திற்க்கா?
இத்துடன் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மெயிலில் வந்த ஒரு Flash presentation-யை கீழே வழங்குகிறேன்.
Water - It's Not F... |
Hosted by eSnips |
16 பின்னூட்டங்கள்:
நல்ல நகைச்சுவை
உங்கள் முகவரியை வெளி படுத்தினால்
"அக்காமாலா, கப்ஸி""
நிறுவனம்
உங்களையும் கவனிப்பார்கள் !!!
மின்னுது மின்னல்,
வருகைக்கு நன்றி,
நான் முதுகெலும்புள்ள மனிதன்....
அக்கமால், கப்ஸீ குரூப்கிட்ட கவனிப்பு வாங்கிட்டு மக்களிடம் கவனிப்பு வாங்க நம்ம மனதில் தெம்பு பத்தாது(அவிங்களவுக்கு).....
நானேல்லாம் ரொம்ப கெட்டவனாக்கும்.....
அசுரன்
பின்னூட்டக் காவாளீத்தனம் #1
பின்னூட்டக் காவாளீத்தனம் #1
அசுரன்,
இது பற்றிய விழிப்புணர்வூட்டும் உங்கள் பதிவுகளுக்கு நன்றி.
சென்ற முறை சென்னை புத்தக கண்காட்சியில் தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா என்ற புத்தகத்தை குறைந்த விலைக்கு விற்றார்கள்.
அதில் இருந்துதான் தெரிந்து கொண்டேன், 'தண்ணீர் என்பது எல்லா உயிர்க்கும் அடிப்படை உரிமை என்பதை'.
அந்த புத்தகத்த்ற்கான link கொடுத்தமைக்கு நன்றி.
நண்பனுக்கு பரிந்துரை செய்ய உதவும்.
Sees Act kku oru cartoon podunga
அசுரன்,
அன்புமணியை நான் மற்ற விஷயங்களுக்கு ஆதரித்தாலும் இந்த சமாச்சாரத்தில் காவாளி என்று சொன்னாலும் தப்பில்லை.
உங்கள் நகைச்சுவை கட்டுரை மற்றும் கார்ட்டூன் அருமை.
அசுரன்,
கோக் விசயத்தில் கேவலமாக நடந்து கொண்ட அன்புமணி மற்றும் அவனை வழிநடத்தும் கூட்டுக்களவாணி மன்மோகன் சிங் ஆகியொர்களின் அம்மணக்குண்டி படம் அருமை.
ஓவியர் முகிலனின் 'அமெரிக்க கோக்கே! வெளியேறு' என்ற ஓவியக்காட்சி சென்னையில் நடந்தது.
அக்காட்சியில் ஒரு கார்ட்டூன்:- சச்சின் டெண்டுல்கர் உடல் முழுக்க 'பெப்சி','பூஸ்ட்','அடிடாஸ்','ஹோண்டா' என ஸ்பான்ஸர்கள் தந்த விளம்பர வில்லைகளுடன் காட்சி கொடுக்கிறார். அவரின் கையுறை மாட்டிய கைகள் அவர் அணிந்திருக்கும் ஜட்டியை நோக்கி இருக்கும்.
இவரைப்பார்த்து இருவர்:-
ஒருவர்:- 'அண்ணே..டெண்டுல்கர் ஒடம்பு பூரா ஒரே வெளிநாட்டுக்கம்பெனி வெளம்பரமா இருக்குதேண்ணே!... தேச பக்திய எங்கண்ணே வச்சுருப்பாரு!"
மற்றவர்:- அதான் அவரு சிம்பாலிக்கா கையக் காமிக்காருல்லா... அங்க கண்டா தேசபக்தி கெடந்தாலும்கெடக்கும்..
என்றும் அன்புடன்
மருதுபாண்டியன்
மிகத் தாமதமாக, நேற்று தான் இம்சை அரசன் பார்க்கச்சென்றிருந்தேன்..
அக்கமாலா, கப்ஸி தயாரிக்கும் முறை பற்றிக் காட்டியதைச் சிரித்தபடி பார்த்த மக்கள், அது முடிந்து உடனே வந்த இடைவேளையில், அதே உருப்படாத பானங்களை வாங்கி வந்து ரசித்துக் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்கையில், எத்தனை படம் எடுத்து என்ன பயன் என்று தோன்றிவிட்டது எனக்கு..:( என்னத்த சொல்ல!!
(உங்கள் பழைய பதிவுகளின் தலைப்புகளும் இப்போது தான் புரிந்தன :) )
//Sees Act kku oru cartoon podunga //
Annony,
Sure I will do a cartoon and an article for Seed Act. Already I requested 'Thekikattan' to contribute to write an article. But unfortunately both are continuasly involved in writting postings for some other issues..
Thanks for your interest. I request you to read my other articles.
Thanks and Regards,
Asuran.
வசந்த்,
//அதில் இருந்துதான் தெரிந்து கொண்டேன், 'தண்ணீர் என்பது எல்லா உயிர்க்கும் அடிப்படை உரிமை என்பதை'. //
Thanks for your comments.
I was not in a position to type in Tamil. Water is an essential commadity.
Just think some 15 years past. Have ever imagined selling water?
Have we ever think of taking water with us whenever we go out?
Now........ No body will give you water for free....
This has killed basic humanity....
Just imagine in future oxygen also will become privatised......
What shall we do????
How will be our posterities life?
Thanks,
Asuran
//ஒருவர்:- 'அண்ணே..டெண்டுல்கர் ஒடம்பு பூரா ஒரே வெளிநாட்டுக்கம்பெனி வெளம்பரமா இருக்குதேண்ணே!... தேச பக்திய எங்கண்ணே வச்சுருப்பாரு!"
மற்றவர்:- அதான் அவரு சிம்பாலிக்கா கையக் காமிக்காருல்லா... அங்க கண்டா தேசபக்தி கெடந்தாலும்கெடக்கும்..
என்றும் அன்புடன்
மருதுபாண்டியன் //
Shameless Culprits......
Marudhu pandy Thanks for making this come in to our attention....
I will check puthiys katru's blog to see if anything has published regarding this.
Thanks and Regards,
Asuran
//அன்புமணியை நான் மற்ற விஷயங்களுக்கு ஆதரித்தாலும் இந்த சமாச்சாரத்தில் காவாளி என்று சொன்னாலும் தப்பில்லை.
உங்கள் நகைச்சுவை கட்டுரை மற்றும் கார்ட்டூன் அருமை//
"காவாளி", Yes he is a 'காவாளி'
Muthu Thamizini,
Thanks for your support for a honest criticism.
Thanks and Regards,
Asuran
வணக்கத்துடன்,
//வெறும் சுகதார பிரச்சினை மட்டுமல்ல இது, நாடு, ஏன் உலகம் தழுவிய ஓர் சுற்றுச்சூழல் பிரச்சினை.
சேது கால்வாய் பிரச்சினையில் தலையிட்டு, மீனவர்களை போராட தூண்டிய கிரீன் பீஸ் அமைப்பினர் இப்பொது கோலா பிரச்சினையில் எங்கே போயினர்? //
your usual fire brand words :-)....
This time you have exposed NGO also... :-))
Thanks for your support. And thanks for sharing my opinions.
I saw your aggressive arguments in some of the Anti people blogs.....
Thanks and Regards,
Asuran
பொன்ஸ்,
//மிகத் தாமதமாக, நேற்று தான் இம்சை அரசன் பார்க்கச்சென்றிருந்தேன்..
அக்கமாலா, கப்ஸி தயாரிக்கும் முறை பற்றிக் காட்டியதைச் சிரித்தபடி பார்த்த மக்கள், அது முடிந்து உடனே வந்த இடைவேளையில், அதே உருப்படாத பானங்களை வாங்கி வந்து ரசித்துக் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்கையில், எத்தனை படம் எடுத்து என்ன பயன் என்று தோன்றிவிட்டது எனக்கு..:( என்னத்த சொல்ல!!
(உங்கள் பழைய பதிவுகளின் தலைப்புகளும் இப்போது தான் புரிந்தன :) )
//
But still there are things that ensures that comman people will get enlighted soon.
As i am not good in english i am unable to expatiate on this.
I tried to send a mail to you but it was bounced back.
How is my template looks now?....
I read your blog...
your writting style is simple and it flows like a silent river.
Thanks and Regards,
Asuran
Post a Comment