TerrorisminFocus

Monday, February 04, 2008

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

நன்றி: செய்திரசம்

Photobucket

Photobucket நன்றி: நன்றி: தினமலர்

தென்காசியில் RSS பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் மக்களை பிளவுபடுத்தி எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். சமீபத்தில் நில உரிமை பிரச்சினை என்ற தனிப்பட்ட பிரச்சினையை மத பிரச்சினையாக திசை திருப்பி கலவரம் செய்து சில உயிர்கள் சிவலோக பதவியடைய உதவி செய்தவர்களும் இந்த கும்பல்தான்.

இன்னிலையில் அந்த பகுதியில் தமது செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக RSS அலுவலகத்தில் தாங்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர் மீது பலி போடும் தனது பாரம்பரிய தந்திரத்தை இங்கும் செய்து அம்பலப்பட்டு போயுள்ளது RSS பார்ப்பன இந்துத்துவ வெறி கும்பல்.

இது போன்ற நடைமுறை இவர்களுக்கு புதிதானதொன்றும் இல்லை. ஏற்கனவே நாண்டடில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து அம்பலப்பட்டு போனவர்கள்தான் இவர்கள். அந்த சம்பவத்தில் இறந்தவன் தவிர்த்து மாட்டிக் கொண்ட வெறியர்கள் முஸ்லீம் மசுதி குண்டு வெடிப்புகள், நாக்பூர் RSS அலுவலக குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டிருந்தது வெளிவந்தது.

இதே கும்பல் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சி செய்வதும் இவற்றை தமது ஊர்வலங்களில் உபயோகப்படுத்துவதும் எல்லா பத்திரிகைகளிலும் வந்து அம்பலமானதுதான். குஜராத்தில் ராக்கேட் லாஞ்சர்கள் உபயோகித்தது குறித்து பாஜக கட்சி MLA வே வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

காந்தியை கொன்ற கோட்சே தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையின்றி கோழைத்தனமாக, ஒரு பன்றியைப் போல முஸ்லீமின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டு இந்திய முஸ்லீம்களை கொன்றொழிக்க நினைத்தவனின் வாரிசுகள் வெறு விதமாக செயல்பட்டிருந்தால்தான் ஆச்சரியம்.

Photobucket

Photobucket

Photobucket

குண்டு வைத்தவனின் வாக்குமூலம்:

"இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்."

குண்டு வெடித்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய் என்று ஏற்கனவே திட்டமிட்டபடி இந்துத்துவ வெறியுடன் பேசிய RSS குரங்கு படையின் தலைவன்.

"திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தென்காசியில் கடந்த வருடம் ஹிந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன் அவரது வீட்டு முன்பே படுகொலை செய்யப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவரது சகோதரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர். இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது தாக்குதல் தடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்."

இவன் கணக்குபடியே குண்டு வைச்சவனை கைது செஞ்சாச்சி. ஆனா இந்த கும்பல் இப்போ கைது செஞ்சது தப்புன்னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


Related Articles:

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

10 பின்னூட்டங்கள்:

said...

நாட்டை சுடுகாடாக்கிட, மக்களை பிளவுபடுத்தி தங்களை வளப்படுத்திடும் சங்பரிவார சாக்கடைகளின் சதி சாதாரண பொது மக்களால் உணரபட்டாலும், விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டியவர்கள் கண்களை கட்டிக் கொண்டு ISI, லக்ஸரி பாக்கிஸ்தானின் சதி என்று குண்டு வெடித்த சத்தத்துடனே தரும் பேட்டிகளால் இது வரை உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதில்லை. இதனால் தொடர்கிறது மனித குல விரோதிகளின் குண்டு வெடிப்புகள்.

ISIயும், லக்ஸரியும் தெளிவாக தெரிந்த எதிரிகள். இவர்களை எதிர் கொள்வது நமக்கு எளிதான காரியம். ஆனால் நயவஞ்சகர்களோ இவர்களை விடவும் ஆபத்தானவர்கள்.

ISIயும், லக்ஸரியும் இந்தியாவின் நலன்களுக்கு எதிரானவர்களே, என்பதில் கருத்து வேறுபாடு அல்ல. குண்டு வெடிப்புகளை நிகழ்த்த கூடியவர்கள்.என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இதை சாதகமாக்கி கொண்டு நயவஞ்சக கூட்டம் நம்மை அழித்து விட கூடாது. எனவே எந்த குண்டு வெடிப்புகளானலும் முறையான விசாரணையை நடத்தினால் மட்டுமே சரியான தீர்வு வரும். அதன் ஆரம்பமே தென்காசி குண்டு வெடிப்பில் தங்களுக்கு தாங்களே குண்டு வைத்து முஸ்லிம்கள் மீது பலி போட முயன்ற சங்கரிவார நயவஞ்சகர்களின் சதி தமிழக காவல்துறையால் அம்பலபடுத்தபட்டுள்ளது.

தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.

நீதிமான்

said...

http://thatstamil.oneindia.in/news/2008/02/05/tn-3-including-kumar-pandian-brother-arrested.html

தென்காசி குண்டு வெடிப்பில் திடீர் திருப்பம் - 3 பேர் கைது
செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 5, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற



தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்தில் சமீபத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக தென்காசியில் முன்பு படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவிப்பாண்டியன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்காசி குண்டு வீச்சு தொடர்பாக ரவிபாண்டியன், கே.டி.சி.குமார், நாராயண சர்மா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குமார் பாண்டியன் குடும்பத்தில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியும் அக்குடும்பத்துக்கு இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.

குமார் பாண்டியனின் அண்ணனே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசிய சம்பவம் தென்காசியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

said...

காலம் காலமாக தொடரும் இந்த பாப்பன சதி, தற்கால இளைஞர்கள் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் ஆகா எடுத்து எடுத்து கொள்ளலாம் , எந்த பாப்பான் தூண்டிவிடுகிறனோ அவன் இனம் இது போன்ற பிரச்சனைகளில் சிக்குவது இல்லை.
அப்பாவி தமிழனை மத போதை ஏற்றி தங்கள் தாகங்களை தீர்த்து கொள்ளும் சதியினை புரிந்து கொள்ளுங்கள். பாப்பன கூட்டத்தை தமிழகத்தை விட்டு ஒட்டுங்கள்

said...

நன்றி அசுரன்!
தமிழக போலிஸ்துறைக்கு வாழ்த்துக்கள். தென்காசியில் தனது அலுவலகத்தில் குண்டு வைத்துக்கொண்டது மாதிரிதான் -குஜராத்தில் ரயிலில் - சென்ற ராம பக்தர்களை திட்டமிட்டு கொளுத்திவிட்டு பலியை இஸ்லாமியர்கள் மீது போட்டு - 2000கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொண்டு குவித்து - ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை சொந்த மாநிலத்திலேயே அகதியாக்கியது சங் பரிவார். பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவானே அப்படி மாட்டிக்கொண்டனர் - தென்காசி சங்பரிவாரிகள்.

சங்பரிவாரிகளுக்கு இப்படி பதட்டத்தை உருவாக்குவது கை வந்த கலை. பல ஆண்டுகளுக்கு முன்பாக
சென்னை தியாகராய நகரில் பள்ளிவாசலுக்கான இடத்தில் திடீர் பிள்ளையார் முளைத்தார் (பாப்ரி மஸ்ஜிதில் 'ராமர் சிலை' வந்தது மாதிரி). தமிழக போலீசார் உண்மையை கண்டுபிடித்ததும் மூக்குடைப்பட்ட சங்பரிவாரத்தினர் 'பிள்ளையார் சிலையை' தூக்கிக்கொண்டு ஓடியது நிணைவுக்கு வருகிறது.

said...

மத வெறியோடு ஆயுத வெறியையும் குழந்தைகளுக்கு ஊட்டி, குழந்தைப் போராளிகளை உருவாக்குகின்றன ஆர். எஸ். எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள். இவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள். அதிர்ச்சியூட்டும் படங்கள். இப்படங்கள் பெருமளவில் பரப்பப் பட வேண்டும். இது போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் தலைவர்கள், வியாபாரிகள், இவர்களது கொள்கைகளைப் பரப்பி நாட்டுக்குள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பத்திரிகைகள், பொதுமக்கள் ஆகியோருக்குக் கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் பார்ப்பனீய இந்துத்துவ சக்திகள் தலையெடுத்து மக்களின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்துவிடக் கூடாது. இந்து பயங்கரவாதத்துக்கு எதிராகக் கலைஞர் ஆட்சி கடும் நடவடிக்கைகளை எடுக்கிறதா என்பது இந்த வழக்கிலிருந்து தெரியவரும்.

said...

எது எப்ப‌டி இருந்தாலும் இனி ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌வேண்டிய‌து ஆர்.எஸ்.எஸ் இந்துமுன்ன‌னி தொண்ட‌ர்க‌ள்தான், எவ்வளவுதான் அவர்கள் ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ கைதேர்ந்த‌ கொலைகார‌ர்க‌ளாய் இருந்தாலும் கூட‌, அதே போன்று ப‌யிற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌ இன்னொரு ஆர்.எஸ்.எஸ் கொலைகாரனாலேயே அவ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் அவர்களூக்கு மிகப்பெரும் சவாலாய் அமைந்திருக்கிறது.

இன்று இஸ்லாமிய‌ர்க‌ள் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ த‌ங்க‌ள‌து அலுவ‌ல‌க‌த்திலேயே குண்டு வைத்துக்கொண்ட‌ ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள், நாளை இராம‌.கோபா‌ல‌ன் போன்ற ஹிந்து த‌லைவ‌ர்க‌ளின் க‌ட்ட‌ளையால் த‌ங்களது க‌ட்சி ஊழிய‌ர்க‌ளையே போட்டுத‌ள்ளூம் வாய்ப்பு இருக்கிற‌து, ஆக‌வே இந்துத்துவவாதிக‌ளே உஷார், இஸ்லாமிய‌ர்க‌ளின் மீது ப‌ழி போடுவ‌த‌ற்காக‌ நாளை நீங்க‌ளும் ப‌லி க‌டாவாக்க‌ப்ப‌ட‌லாம்.

சம்பூகன்

said...

ஆர் எஸ் எஸ்சின் சதியை ஒரு பத்திரிகைச் செய்தி பூசி மெழுகுவதை இங்கு காணலாம்:


http://www.newindpress.com/NewsItems.asp?ID=IET20080204215052&Page=T&Title=Southern+News+-+Tamil+Nadu&Topic=0

said...

அசுரன்,

இந்த கட்டுரையில் (?) நீங்கள் இங்கனம் எழுதியுள்ளீர்கள்:

"காந்தியை கொன்ற கோட்சே தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையின்றி கோழைத்தனமாக, ஒரு பன்றியைப் போல முஸ்லீமின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டு இந்திய முஸ்லீம்களை கொன்றொழிக்க நினைத்தவனின் "

இந்த தகவல் புதிதாக உள்ளது. இந்த தகவலை எந்த ஆதாரத்திலிருந்து பெற்றீர்கள்?

said...

narayana sharma becomes narayana dharma in english? sharma is clearly poonul name.

said...

ஆர். எஸ் .எஸ் தலைமை கட்டளையை ஏற்க தயங்கும் ஆ.எஸ்.எஸ். காரனையே போட்டு தள்ளிவிட்டு பின்பு முஸ்லிம்மும் , கிருத்தவனும் செய்தான் என்று வதந்தி பரப்பிவிடும் வாய்ப்பு உள்ளது

ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்து விடுவார்கள் இந்த ராமகோபாலன் கூட்டத்தினர்.

ஆர் .எஸ்.எஸ். காரனே உஸார் !

Related Posts with Thumbnails