TerrorisminFocus

Monday, February 25, 2008

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

CPM போன்ற போலி கம்யுனிஸ்டுகள் மக்களை மொத்தமாக புறக்கணித்துவிட்டு கேரளாவில் பில்லி சூனியம் வைத்து உள்கட்சி எதிரிகளை ஒழிப்பதிலும் மேவாவில் டாடா சலீம் கும்பலுடன் சேர்ந்து சொந்த மக்களை சுட்டு சாகடிப்பதிலும் கைதேர்ந்த பாசிஸ்டுகளாகிவிட்டனர்.(முக்கிய மேட்டர படிக்க விரும்புகிறவர்கள் இங்கிருந்து ஒரு நாலஞ்சு பத்தி கீழே போயி நேரா லெனின், மார்க்ஸ் இவிங்களோட உரையாடுங்க - இடையில நானும் வருவேன்).

பாசிஸ்டுகளுக்கு மார்க்ஸியத்தை திரிப்பது ஒன்றும் பெரிய பிரம்ம வித்தையல்ல. அப்படி ஒரு திரிப்புதான் கார்ப்போரேட் பார்ட்டி ஆப் டாடாயிஸ்டு அதாவது CPM கட்சியின் இணைய பிரசங்கியினுடைய சமீபத்திய பதிவ. அது பிரபாத் பட் நாயக்னு ஒருத்தர் எழுதுனதாம். அதப்பத்தி நமக்கு கவலையில்ல. ஆனா இதுக்கு முன்ன நடந்த எந்தவொரு விவாதத்திலும் நமது எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லாத சந்திப்பு ஏதோ அவரது கட்சி எல்லா விவாதங்களுக்கும் பாய்ந்து வந்து பதில் சொல்வது போல போலி ஆவேசம் காட்டியுள்ளதுதான் மகா காமெடியாக இருக்கிறது. அவருக்கு தெரிஞ்சதெல்லாம் மக இக காட்டுக்குள்ள உக்காந்து கட்சி நடத்துறாங்ககிறதும், அவர எதிக்குறவங்க எல்லாம் நக்ஸலைட்டுகள் என்பதுமான டேப்ரிக்காடர் மேட்டர்தான். அவருக்கு ஒரே ஒரு ப்ளாஷ்பேக் ஒட்டினால் நன்றாக இருக்கும் என்று படுகிறது. அந்த சாம்பிளுக்கு இங்க போயி பார்க்கலாம்: கம்யூனிஸ்டுகளின் (CPI-M) பிரச்னை

அரசும் புரட்சியும் புத்தகத்தில் இது போன்ற சமூக ஜனநாயக தேசிய வெறியர்கள் (அதாவது பாசிஸ்டுகள்) மார்க்ஸியத்தை திரிப்பது குறித்து லெனின் வெகு விமரிசையாகவே அம்பலப்படுத்தியுள்ளார். அவரது ஒவ்வொரு வரிகளும் இன்றைக்கும் வெகு பொருத்தமாக இருக்கின்றன. என்ன செய்ய ஒரு வரலாற்று கட்டத்தில் ஒரே விதமான கதாபாத்திரங்கள்தான் மேடையில் நடமாட வேண்டியிருப்பது வரலாற்றின் கட்டளை. லெனின் காலத்தில் அலைந்த அதே, அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகளாகிய சந்தர்ப்பவாதிகள் செய்தது போலவே இன்றைய CPM உள்ளிட்ட புல்லுருவி பாசிஸ்டுகளும் செயல்படுகிறார்கள். என்ன ஒரே வித்தியாசம் CPM போன்ற பாசிஸ்டுகள் அன்றைய சமூக தேசிய வெறியர்கள் செய்த அளவுக்கூட மார்க்ஸியத்தை மேற்கோள் காட்டுவதில்லை அவ்வளவுதான். இனி லெனின் என்ன சொல்கிறார் என்று பார்ப்பதற்க்கு முன்பு கார்ப்போரேட் கட்சியின் இணைய பிரசங்கியினுடைய தளத்தில் வந்துள்ள கட்டுரையில் சில வரிகளை பார்த்து விடலாம்.

//ஆனால் சோசலிசத்தை அடைய ஒரு சமூகப் புரட்சி தேவை. அப்புரட்சி தனியுடமையாக உள்ள உற்பத்திக்கருவிகளை சமூக உடைமையாக்கும். //

அதென்ன பொல்லாத சமூக புரட்சி? நந்திகிராமிலும், கேரளாவிலும் செய்து வருவதா? ஏன் கேட்கிறேன் என்றால் தனியுடைமையை (உற்பத்தி கருவிகளில்) அழிப்பது என்பதன் பொருள் நந்திகிராம் மக்களின் தனியுடைமையை அழித்து அதை டாடா சலிம் உள்ளிட்டவர்களின் உடைமையாக்குவது என்று போலிட் பிரோவில் முடிவெடுத்து சொன்னால் அதை சந்திப்பு இங்கு பிரசூரிக்கும் அபாயம் உள்ளது(அபாயம் என்ன அபாயம் அல்ரெடி அதெல்லாம் செஞ்சி முடிச்சி அந்த இடத்துல புல்லே முளைச்சிருச்சி - பார்க்க சந்திப்பின் பழைய பதிவுகள்).

மார்க்ஸ் கம்யுனிஸ்டு கட்சி அறிக்கையிலேயே தெளிவாக சொல்கிறார் - சிறு உடைமையாளர்களின் சொத்துடைமையை அழிப்பதா கம்யுனீஸ்டு புரட்சியின் நோக்கம்? இல்லை அதை ஏற்கனவே முதலாளித்துவம் செய்து வருகிறது என்று(மாறாக சொத்துடைமையின் சமூக தன்மையை மாற்றுவதுதான் கம்யுனிஸ்டுகளின் நோக்கம்). ஆக இங்கு கார்போரேட் பார்ட்டி ஆப்பு டாடாயிஸ்டு கட்சி கம்யுனிஸ்டு கட்சியாக செயல்படுகிறதா அல்லது முற்றிய முதலாளித்துவம் AKA பாசிசம் ஆக செயல்படுகிறதா என்பதை படிப்பவர்களின் புரிதலுக்கே வீட்டு விடுகிறேன். ஏனெனில் அவரது கட்சி சிறு உடைமையாளர்களீன் சொத்தை அழித்து டாடா சலீம் சமூகத்தின் சொத்தாக மாற்றி வருகிறார்கள் அதனால்தான்.

இந்த வரிக்கு பிறகு அவர் கொடுத்துள்ளதெல்லாம் ப்லப்பல்ப்லப்லல்லா.....தான். அவற்றை சுருக்கமாக தொகுத்து கட்சி கொள்கை என்று ஒரு லிஸ்டு கொடுத்துள்ளார்.

//உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
வர்க்க சேர்க்கையை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
வர்க்க உணர்வை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
பாட்டாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
//

இதில் ஒன்றில் கூட மேவாவுல் சரி, கேரளாவும் சரி மற்றெந்த மாநிலங்களையுவிட பின்தங்கி தவழ்ந்து கொண்டுதான் உள்ளன. வர்க்கச் சேர்க்கையை வலுப்படுத்துவது என்கிற அம்சத்தில் மட்டும் அவர்கள் சிறிது முன்னேறிச் சென்றுள்ளனர். அவை மூறையே, மேவாவில் டாடாயிஸ்டுகளுடன், சலீம்களுடன் கூட்டணீ வைத்து மக்கள் ஜனநாயகத்தை ஒடுக்கியதும். கேரளாவில், மேவாவில் பார்ப்ப்னியத்துடனும், மூடநம்பிக்கை பில்லி சூனியத்துடனும் ஒட்டி உறவாடி வருவதுமே ஆகும். நல்ல வர்க்க கூட்டணி. சரிதான். வேற மாதிரி நடந்திருந்தாதான் ஆச்சரியம்.


//சூழ்நிலை மைகளின் முழு பரிமாணத்தையும் கணக்கில் கொண்டு சரியான வழி முறையை தீர்மானிப்பது,
முதலாளிகளுக்கிடையேயான போட்டியை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் அதீத கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்காமல் முதலீடுகளை செய்ய வைப்பது.
தனியார் மூலதனத்திற்கு இணையாகவும், அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அரசு முதலீட்டைப் பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். //

இந்த அம்சத்திலும் கூட பாசிஸ்டு கட்சியினர் சிறிது முன்னேறியுள்ளனர். அதாவது முதலாளிகளின் போட்டியை பயன்படுத்தி அவர்களின் அதீத கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்காமல் முதலீடுகளை செய்ய வைப்பது என்கிற அம்சத்தில் சிங்கூர் விளை நிலங்களை அடி மாட்டு விலைக்கு புரொக்கரிங் செய்து கொடுத்ததும் அப்படி குறைந்த விலைக்கு வாங்க வசதியாக அரசாங்கமே டாடாவுக்கு கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் நஸ்டத்தில் கடன் கொடுத்ததும் நிகழ்ந்துள்ளது. இங்கு யாருடைய அதீத கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்பதற்க்கு நந்திகிராம் சாட்சியாக உள்ளது. யாருடைய மூலதனம் யாருடைய பாக்கெட்டு போனது என்பதற்க்கு சிங்கூர் உதாரணமாக இருக்கிறது.

சரி உண்மையில் லெனின் இந்த பாசிஸ்டுகள் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

அதாவது அரசும் புரட்சியும் (அத்தியாயம் 1, 4வது தலைப்பு - அரசு "உலர்ந்து உதிர்வதும்" பலாத்கார புரட்சியும்)

"கருத்து வளத்தில் சிறந்து விளங்கும் ஏங்கெல்ஸின் இந்த வாக்குவாதத்தில் ஒரேயொரு விவரம் மட்டும்தான் நவீன கால சோசலிஸ்டு கட்சிகளுடைய சோசலிச சிந்தனையில் இடம் பெறுகிறதெனெ திடமாய் கூறலாம்............ அரசு ஒழிக்கப்பட வேண்டும் என்னும் அராஜக கோட்பாட்டுக்கு மாறாக மார்க்ஸின் கருத்துப்படி அரசு உலர்ந்து உதிர்ந்துவிடும் என்கிற ஒரேயொரு விவரம் மட்டும்தான் ஏற்கப்பட்டுள்ளது. மார்க்ஸியத்தை இந்த அளவுக்கு வெட்டி குறுக்குவது என்பது மார்க்ஸியத்தை சந்தர்ப்பவாதமாக சிறுமைப்படுத்துவதே அன்றி வேறல்ல".

இப்படி நான் சொல்லல சாமி. சாட்சாச் லெனின் என்ற நக்ஸலைட்டுதான் இப்படி சொல்லிறுக்காறு. இங்க நம்ம பிரபாத் கூட அதே சந்தர்ப்பவாத திரிபு வேலையத்தான் செய்யுறாரு(அரசு உலர்ந்து உதிரும் என்பதை மட்டும் வைத்து தனது வாதத்தை கட்டியமைத்துள்ளார்).

அப்படியெனில் உலர்ந்து உதிருவது என்கிற இடத்தை பேசும் போது ஏங்கெல்ஸ் அராஜகவாதிகள் தவிர்த்து வேறு யாரை சந்தர்ப்பவாதிகள் என்று அம்பலப்படுத்துகிறார்? அது வேறு யாருமல்ல சாட்சாத் நம்ம பாசிஸ்டு கட்சியான CPM கும்பலைத்தான் அவர் அம்பலப்படுத்துகிறார்:

"சுதந்திர மக்கள் அரசு என்னும் தொடர் எந்த அளவுக்கு மதிக்கத்தக்கது என்பதையும் - கிளர்ச்சியை முன்னிட்டு சில நேரங்களில் எந்த அளவுக்கு அதன் பிரயோகம் நியாயமென்பதையும், முடிவில் விஞ்ஞான வழியில் அது எவ்வளவு குறைபாடானதென்பதையும் - அராஜகவாதிகளுடைய கோரிக்கையாக சொல்லப்படும்....." - ஏங்கெல்ஸ் (அதே புத்தகம் அதே பகுதி).

இங்கு பாசிஸ்டு CPM கட்சியினர் அராஜகவாதி குறித்த பகுதிகளை மட்டுமே பேசுவர். ஏங்கெல்ஸ் சுதந்திர மக்கள் அரசு என்று குறிப்பிட்டுள்ளது குறித்து எதுவுமே சொல்லமாட்டார்கள் கள்ள மௌனம் சாதிப்பர். ஏனேனில் அங்கு சுதந்திர மக்கள் அரசு என்று குறிப்பிடுவது முதலாளித்துவ அரசில் பங்கெடுப்பதைத்தான். அதையே சோசலிசத்துக்கான பாதையாக கொள்வதைத்தான் ஏங்கெல்ஸ் குத்திக் காட்டுகிறார். இந்த அம்சத்தில் லெனின் கீழே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

"சுதந்திர மக்கள் அரசு என்பது 1870-80 ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளது வேலை திட்டத்தில் குறிக்கப்பட்ட கோரிக்கையாய் அமைந்து அவர்களிடையே பெருவழக்கமாகிவிட்ட முழக்கமாயிருந்தது(note: இங்கு CPMயை ஒப்பிட்டு கொள்ளவும்). இந்த முழக்கம் ஜனநாயகம் என்னும் கருத்தோட்டத்தை ஆடம்பரமான அற்பவாத பாணியில் சித்தரிக்கிறதென்பதைத் தவிர வேறு அரசியல் உள்ளடக்கம் சிறுதும் இல்லாததே ஆகும். சட்ட முறையில் அனுமதிக்கப்பட்ட வழியில் சூசகமாய் அது ஜனநாயக குடியரசை குறித்தவரை "சிறிது காலத்துக்கு' அதைக் கையாளுவதில் நியாயமுண்டு என்பதை ஏங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். ஆனால் அது சந்தர்ப்பவாத முழக்கமே ஆகும். ஏனேனில் அது முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு மெருகூட்டி மினுக்கச் செய்வதுடன் நின்றுவிடுவதில்லை. பொதுவாய் அரசு குறித்த சோசலிச விமர்சனத்தைப் புரிந்துக் கொள்ளத் தவறிவிடுகிறது."

இங்கு வெகு தெளிவாக CPM கட்சியினரின் துரோக நடத்தையை லெனின் தோலுரித்துக் காட்டுகிறார். ஒரு உண்மையான ஜனநாயக குடியரசாய இருக்கின்ற பட்சத்தில்தான் லெனின் அதில் சிறிது காலத்துக்கு அதுவும் கிளர்ச்சியை முன்னிட்டு(ஏங்கெல்ஸ் மேற்கோள்) பங்கெடுக்கலாம் என்கிறார். ஆனால் இந்தியாவிலோ குறைந்த பட்ச ஜனநாயக அரசு கூட இல்லை. இதையே சோசலிசத்துக்கான பாதை என்று சொல்லி உழைக்கும் மக்களை ஏமாற்றுவதுடன் இந்திய பிற்போக்கு அதிகாரவர்க்க தரகு அரசை மெருகூட்டி மினுக்க செய்யும் வேலையை தமது வாழ்நாள் கடைமையாக சோம்நாத் சாட்டர்சியும் இன்ன பிற CPM பாசிஸ்டுகளும் ஏற்றுள்ளனர்.

லெனின் மேலும் கூறுகிறார்:
"ஆனால் மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவ குடியரசிலுங்கூட கூலியடைமையிலேதான் மக்கள் உழல வேண்டியிருக்கிறதென்பதை மறக்க நமக்கு உரிமையில்லை".

நாம் மறப்பதில்லை. ஏனேனில் அவர் சொல்கின்ற 'நாம்' லிஸ்டில் நாங்கள் இருக்கின்றோம். மேவாவில் ஸ்டைரைக் செய்யக் கூடாது என்று சொன்ன CPM யாருடைய லிஸ்டில் சேரும் என்பதை படிப்பவர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

முதலாளித்துவ அரசை உள்ளிருந்தே அப்படியே மாற்றி சோசலிச புரட்சி கொண்டு வந்துவிட முடியுமா? இப்படித்தான் CPM சொல்கிறது ஏதோ புதிய விசயம் போல. மாறாக ஏங்கெல்ஸ் உள்ளிட்ட மார்க்ஸிய ஆசான்கள் வெகு தெளிவாக சோசலிச அரசுக்கு முந்தைய அரசு பலாத்காரத்தால் தூக்கியெறியப்பட வேண்டும் ஏனேனில் அவையெல்லாம் இதற்க்கு முந்தைய புரட்சிகளினால் மேலும் மேலும் வலுவாக்கப்பட்டு வந்த அதிகாரத்துவ அரசுகள் எனவே அவை தூக்கியெறியப்பட்டு அதன் அதிகாரத்துவ அம்சங்கள் நீக்கப்பட்ட முற்றிலும் 'உலர்ந்து உதிரும்' தன்மை கொண்ட சோசலிச அரசு அமைக்கப்பட வேண்டும் என்கிறார்.

திரிபுவாதிகள் ஏற்கனவே மார்க்ஸ் ஏங்கெல்சை திரித்தது போதும் இனிமேலும் அதை அனுமதிக்க முடியாது என்று லெனின் இந்த விசயத்தை மிக தெளிவாக சொல்லிவிடுகிறார்:

"பலாத்கார புரட்சி இல்லாமல் முதலாளித்துவ அரசு பாட்டாளி வர்க்க அரசாய் மாற முடியாது. பாட்டாளி வர்க்க அரசு, அதாவது பொதுவில் அரசெனப்படுவது "உலர்ந்து உதிரும்" நிகழ்ச்சிப் போக்கின் மூலமாகவே அன்றி வேறு எவ்வழியிலும் அகற்றப்பட முடியாத".

மேலும் லெனின் சொல்கிறார்:
"பலாத்கார புரட்சியைப் போற்றும் இந்த புகழ்மாலையை எங்கெல்ஸ் 1878க்கும் 1894க்கும் இடையில் - அதாவது அவர் இறக்கும் தருணம் வரையில் - ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் கவனதுக்கு ஒயாது கொண்டு வந்த வண்ணமிருந்தார். இதனையும் அரசு 'உலர்ந்து உதிரும்' தத்துவத்தையும் இணைத்து ஒருமித்த ஒரே தத்துவமாக்குவது எப்படி?

வழக்கமாய் கதம்பத் தேர்வுவாத வழியில் முதலில் ஒன்றும் பிற்பாடு மற்றொன்றுமாய்த் தான் தோன்றித்தனமாய் கொள்கை கோட்பாடின்றி அல்லது குதர்க்கவாத முறையில் தேர்வு செய்யப்பட்டு இவை இரண்டும் இணைக்கப்படுகின்றன
."

இங்கே வெகு குறிப்பாக அரசு உலர்ந்து உதிர்வது குறித்தான தத்துவமும், பலாத்கார புரட்சி குறித்த தத்துவம் ஒன்றையொன்று இயங்கியல் ரீதியாக சார்ந்தே உள்ளன என்பதையும் அவை கால வரிசைப்படி அதாவது காலையில் பல் தேய்த்தவுடன் சாப்பிடுவது (தேவைப்பட்டால் பல் தேய்க்கமாலேயே சாப்பிடலாம் தோழர்) என்பது போன்று தேர்வுவாத முறையிலான விசயமல்ல என்பதைத்தான் வலியுறுத்துகிறார் லெனின். இந்த வேலையை அதாவது தேர்வுவாத முறையை கை கொண்டிருப்பது பாசிஸ்டு CPM கும்பல்தான்.

"சந்தர்ப்பவாத முறையில் மார்க்ஸியத்தை புரட்டிப் பொய்யாக்குவதில், இயக்கவியலுக்குப் பதிலாய்த் தேர்வுவாதத்தைக் கைகொள்வதுதான் மக்களை ஏமாற்ற மிகவும் எளிய வழி. இது பிரமையான போலி மனநிறைவு அளிக்கிறது" - லெனின

மேலேயுள்ள இந்த வரிகள் சந்திப்பு போன்ற பாவபட்ட பலியாடுகளுக்கு(கறுப்பு ஆடு என்று நான் சொல்லவில்லை).

குறிப்பாக இந்த கட்டுரையில் உடனடியாக சோசலிச புரட்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று மார்க்ஸிய பெருந்தகை பிரபாத் சொல்லியுள்ளார் அதை சந்திப்பு வழிமொழிந்துள்ளார். இவர்கள் எல்லாம் தயவு செய்து லெனினிசத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லிவிடலாம். ஏனேனில் மாவொயிஸம் என்கிற சொல் பதத்தை எந்த அம்சத்தில் இவர்கள் விமர்சிக்கிறார்களோ அதே அம்சத்தில் லெனினிசத்தில் இவர்கள் செய்யும் திரிபு உள்ளது. (இவர்கள் அந்த தத்துவத்தை விமர்சிக்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டு விடுகிறேன். திரிபுவாதிகள் சொன்னதை விட்டு சுரையை பிடுங்குவதில் சூரர்கள். எனவேதான் மாவொயிசம் என்று பெயர் வைத்ததில் உள்ள நொல்லை நொட்டைகளை ஆய்வு செய்பவர்கள் அந்த தத்துவம் குறித்து எந்த பதிலும் சொல்வதில்லை).

லெனின் ருஸ்ய புரட்சியை சோசலிச உலக புரட்சியின் இணைப்பு என்கிறார். அதாவது அவரது வரையறைப்படி ஏகாதிபத்தியம் அல்லது முதலாளித்துவம் அல்லது சொத்துடமை சமூகத்தின் இறுதி மூச்சுக்கு பயணிக்கும், புரட்சிகளின் காலகட்டம் ருஸ்ய புரட்சியிலிருந்து ஆரம்பித்து விட்டது என்பதுதான். அதாவது இந்த வரலாற்று காலகட்டம் என்பது சோசலிச புரட்சிகளின் கட்டம் என்பதுதான். அதாவது அல்ரெடி புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விசயம். லெனினிசம் என்பதின் அர்த்தம் இதுதான். லெனினிசத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்பவர்கள் சோசலிச புரட்சி இப்போ தேவையில்லை என்பது விந்தையானதல்ல ஏனேனில் சொல்வது பாசிஸ்டு திரிபுவாதிகள் அல்லவா(இங்கு இந்தியா போன்ற ஜனநாயக புரட்சி நடைபெறாதா நாடுகளில் சோசலிச புரட்சியின் தன்மை என்னவாக இருக்கும் என்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை).

தேர்தல் குறித்து ஏங்கெல்ஸ்:(அரசும் புரட்சியும் - அத்தியாயம் 1, 3. அரசு-ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டுவதற்கான கருவி)

"அனைத்து மக்களின் வாக்குரிமை, "தொழிலாளி வர்க்கத்தினுடைய முதிர்ச்சியின் அளவுகோலாகும். தற்கால அரசில் அது இதற்க்கு மேல் எதுவாகவும் இருக்காது. இருக்கவும் முடியாது""


தேர்தல் குறித்து லெனின்:(மேலேயுள்ள வரிக்கு அடுத்த வரிகளில்)

"நம்முடைய சோசலிஸ்டு புரட்சியாளர் கட்சியினரையும் மென்ஸிவிக்குகளையும் போன்ற குட்டி முதலாளீத்துவ ஜனநாயகவாதிகளும், இவர்களுடைய உடன் பிறந்த சகோதரர்களான மேற்கு ஐரோப்பிய சமூக-தேசிய வெறியர்கள், சந்தர்ப்பவாதிகள் அனைவரும் அனைத்து மக்களின் வாக்குரிமையிடமிருந்து இதற்க்கு மேற்பட்ட ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். 'இன்றைய அரசில்' அனைத்து மக்களின் வாக்குரிமை உழைப்பாளி மக்களில் பெரும்பாலானோரின் சித்தத்தை மெய்யாகவே புலப்படுத்திக் காட்ட வல்லது, இந்த சித்தம் நிறைவேற வழி செய்ய வல்லது என்ற பொய்க் கருத்தை இவர்கள் கொண்டுள்ளனர்; மக்களுக்கும் இதனை ஊட்டி வருகின்றனர"

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும் என்பது போல மார்க்ஸியத்தை வெட்டி குறுக்கி சிதைத்து கடைசியில் பாசிஸ்டுகளாக நிற்கும் CPM தான் மக்களுக்கு அடிமைத்தனத்தை மேலே லெனின் சொன்னது போல ஊட்டி வளர்த்து வருகின்றனர். ஆயினும் அவர்கள் கொள்கை புத்தகத்தில் சொல்லியுள்ளது போல புரட்சிதான்(அவர்களது மக்கள் சனநாயக புரட்சி) வருகிற பாட்ட காணோம்.

சரி இதையெல்லாம் விட சூப்பராக இந்த துரோகிகளை பாசிஸ்டுகளை அம்பலப்படுத்த சில விசயங்களை சொல்லிச் சென்றுள்ளனர் நமது மார்க்ஸிய ஆசான்கள்.

"பலாத்கார புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியமென்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸின் போதனை அனைத்தின் ஆணி வேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது நடப்பிலுள்ள சமூக-தேசியவெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்துவரும் துரோகமானது, இந்த போக்குகள் இத்தகைய பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கைவிட்டுவிட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது".-லெனின் (அதே புத்தகம், அத்தியாயம் 1, 4. அரசு உலர்ந்து உதிர்வது...)

அய்யா அதிமேதாவிகளே, மார்க்ஸியத்தின் ஆணி வேருன்னு ஒன்ன சொல்லிறுக்குறாரே அவர நக்ஸ்ல்பாரின்னு CPM கும்பல் முத்திரை குத்தும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். அதை அவர் செய்யும் முன்பாகவே நாஙக செய்ய விரும்புகிறோம். லெனின் சொன்ன மாதிரி பிரச்சாரம், கிளர்ச்சியை கைவிட்ட துரோகிகள் யாருங்கறத காமரேடு சந்திப்பின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

அம்புட்டுதாம்பா.....


அசுரன்

24 பின்னூட்டங்கள்:

said...

தோழர் அசுரனுக்கும் மற்ற தோழர்களுக்கும் புரட்சிகர வணக்கங்கள்,காலத்திற்கு ஏற்ற மிகப் பொருத்தமான பதிவு இது.

நான் சில மாத‌ங்களுக்கு முன்புவரை சி.பி.எமின் தீவிர ஆதரவாளர்/உறுப்பினர். அதனாலேயே பல விஷயங்களை (சி.பி.எம் சார்பு ஏடுகளைத் தவிர) தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன். கடந்த சில மாதங்களாகத்தான் இது போன்ற இனையதள செய்திகள் முதல் சில தத்துவார்த்த பத்திரிக்கைகள் வரை (புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் உள்பட) படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளேன். சி.பி.எம்ஐ இப்போதுதான் வெகுஜன நோக்கில் பார்க்க நேர்ந்துள்ளது. மகஇக மற்றபிற புரட்சிகர அமைப்புகளின் தத்துவார்த்த விமர்சனங்களையும் மிகச் சரியென்று ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. இதனடிப்படையிலேயேதான் சந்திப்பு தரப்பிலிருந்து பதிலெழுதவேண்டிய நான் மற்றும் என்னைப்போன்ற பல தோழர்கள், இன்று அவர்களையே கேள்வி கேட்கவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். ஆனால் நம்முடைய கேள்விகள் அவருக்கும், அவருக்கு சொல்லிக்கொடுத்து எழுதவைப்பவர்களுக்கும் மிகுந்த ஆத்திரத்தைத்தான் ஏற்படுத்துகிறது. இந்த ஆத்திரத்தின் அவலம் தான் அக்கட்சியின் இன்றைய பரிதாப நிலைக்குக் காரணம்.

ச‌ந்திப்பின் மேற்ப‌டி க‌ட்டுரையில் பின்னூட்ட‌மிட்டுவிட்டு அவ‌ரின் ப‌திலுக்காக‌ இதுவரை காத்திருக்கிறேன், ப‌திலில்லை. இப்போது த‌ங்க‌ளுடைய‌ இந்த‌ப் ப‌திவின் மூல‌மாக‌த்தான் தெரிகிற‌து இது அவ‌ருடைய வழக்கமான 'மான் க‌ராத்தே' பானி என்ப‌து.

பிரபாத் பட்நாயக் கேரள மார்க்சிஸ்ட் அரசாங்க பதவி கிடைத்துவிட்ட நன்றிக் கடனுக்காக‌ எழுதுகிறார். நம்ம சந்திப்பு பதவி எதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் எழுதுகிறார், என்பதைவிட இவர்களுடைய செய்திகளில் சாரம் எதுவுமில்லை. நீங்க‌ள் இந்த‌ப் ப‌திவில் காட்டியுள்ள‌‌ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சித்தாந்த மேற்கோள்க‌ள் இவ‌ர்க‌ளுக்கு புரியுமா என்ப‌தே ச‌ந்தேக‌ம் தான். பொறுத்திருந்து பார்ப்போம்.

said...

பிரபாத் பட்நாயக் JNUவில் பொருளாதாரப் பேராசிரியர்.சர்வதேச அளவில் அறியப்பட்ட மார்க்ஸிய
பொருளாதார நிபுணர்.அவர் கட்டுரை
வெளியான EPWவிற்கு உங்கள் பதிலை
எழுதி அனுப்பலாமே.

“பிரபாத் பட்நாயக் கேரள மார்க்சிஸ்ட் அரசாங்க பதவி கிடைத்துவிட்ட நன்றிக் கடனுக்காக‌ எழுதுகிறார்.”

இது சரியான வாதமல்ல.ஏனெனில்
பல ஆண்டுகளாக அவர் சிபிஐ
(எம்) கட்சி கருத்துக் கேட்கும்
முக்கியமான அறிவுஜீவிகளில்
ஒருவர்.கொள்கையில் சமரசம் செய்திருந்தால் அதை விட பெரிய, அதிகாரமிக்க பதவிகள் இந்தியாவிலும்/வெளி நாட்டிலும் கிடைத்திருக்கும்.உலகமயமாதல்,
தாராளமயமாக்கல்,உலக வங்கி
போன்றவற்றின் தீவிரமான
விமர்சகர் அவர்.முடிந்தால் அவர்
எழுதியுள்ளவற்றைப் படித்து
புரிந்து கொள்ள முயலுங்கள்.
சிபிஐ(எம்) ஆதரவாளர் என்ற
அளவில் மட்டும் அவரை மதிப்பிடுவது
சரியானதல்ல.

மேலும் அவர் கட்டுரை லெனின்
நூலை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டதல்ல. இன்றைய சூழலில்
கோட்பாடு- நடைமுறை குறித்த
கட்டுரை அது.ஒட்டுமொத்த
மார்க்ஸிய கோட்பாடு-நடைமுறை-
செயல்தந்திரம் குறித்தவற்றை அது
பேசுகிறது.லெனின் கூறியதை மட்டும்
அது சார்ந்திருக்கவில்லை.
நீங்கள் உங்கள் விமர்சனத்தினை
ஆங்கிலத்தில் எழுதி EPWவிற்கு
அனுப்புங்கள்.

said...

//அவர் கட்டுரை லெனின்
நூலை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டதல்ல. இன்றைய சூழலில்
கோட்பாடு- நடைமுறை குறித்த
கட்டுரை அது.ஒட்டுமொத்த
மார்க்ஸிய கோட்பாடு-நடைமுறை-
செயல்தந்திரம் குறித்தவற்றை அது
பேசுகிறது.லெனின் கூறியதை மட்டும்
அது சார்ந்திருக்கவில்லை.//

//அவர் கட்டுரை லெனின்
நூலை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டதல்ல. இன்றைய சூழலில்
கோட்பாடு- நடைமுறை குறித்த
கட்டுரை அது.ஒட்டுமொத்த
மார்க்ஸிய கோட்பாடு-நடைமுறை-
செயல்தந்திரம் குறித்தவற்றை அது
பேசுகிறது.லெனின் கூறியதை மட்டும்
அது சார்ந்திருக்கவில்லை.//

கருத்துக்களுக்கு நன்றி அனானி(ஏன் அனானியா எழுதுறீங்க So and So? உங்க எழுத்து நடை எளிதாக அடையாளப்படுத்தும் வகையில் இருக்கும் பொழுது இது தேவையற்றது என்று கருதுகிறேன்),

பிரபாத மார்க்ஸியத்தை அவரது சொந்த புரிதலில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் வி(தி)ரித்துச் செல்லும் முழு உரிமையுடையவர். அதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் லெனினை நிராகரித்து விட்டு இன்னும் சொன்னால் மார்க்ஸ் ஏங்கெல்ஸை நிராகரித்து விட்டு மார்க்ஸியத்தை அவர் எங்கோ கொண்டு செல்வதும் அதை லெனின் மார்க்ஸ் பெயரில் கட்சி நடத்தும் பாசிச CPM பிரசூரிப்பதும் அம்பலப்படுத்தப்பட வேண்டிய பித்தலாட்டங்கள்.

ஆங்கிலத்தில் எழுத அவகாசமில்லை. முயற்சி செய்து பார்க்கலாம்...

அசுரன்

said...

பிரபாத் ரசிகர்மன்ற தலைவர் (அனானியக வந்தால் இந்த நாமகரணம்) அவர்களே,

/// இது சரியான வாதமல்ல.ஏனெனில்பல ஆண்டுகளாக அவர் சிபிஐ(எம்) கட்சி கருத்துக் கேட்கும் முக்கியமான அறிவுஜீவிகளில்ஒருவர்.கொள்கையில் சமரசம் செய்திருந்தால் அதை விட பெரிய, அதிகாரமிக்க பதவிகள் இந்தியாவிலும்/வெளி நாட்டிலும் கிடைத்திருக்கும்.
உலகமயமாதல், தாராளமயமாக்கல்,உலக வங்கி போன்றவற்றின் தீவிரமான விமர்சகர் அவர். முடிந்தால் அவர் எழுதியுள்ளவற்றைப் படித்து புரிந்து கொள்ள முயலுங்கள். சிபிஐ(எம்) ஆதரவாளர் என்ற அளவில் மட்டும் அவரை மதிப்பிடுவது சரியானதல்ல.///


அவ‌ருடைய‌ சில‌ க‌ட்டுரைக‌ளை சி.பி.எம். 'சிறு வெளியீடாக' வெளியிட்ட‌வ‌ற்றில் ஒன்றிரண்டு ப‌டித்த‌ அனுப‌வ‌ம் என‌க்கு உண்டு. அது முற்றிலும் அவ‌ர்க‌ளின் 'பொலிட்பீரோ'வின் வழக்கத்திலும் வழக்கமான சப்பைக்கட்டுகளின், பொழிப்புரைக‌ளாக‌த்தான் இருக்கும். நீங்க‌ள் மிகைப்ப‌டுத்தியிருப்ப‌தாக‌வே தோன்றுகிற‌து.


"அவ‌ர் கொள்கையில் ச‌ம‌ர‌ச‌ம் செய்திருந்தால்..." என்று வேறு ச‌ற்று நீட்டுகிறீர்க‌ள். மார்க்சய‌த்தின் வ‌ரைய‌ரைப்ப‌டி சி.பி.ஐ/எம் இர‌ண்டுமே ச‌ம‌ர‌ச‌வாதிக‌ள் தான் (நமக்குள் நிகழும் கருத்து மோதலின் தோற்றுவாயே அதுதான்). இதிலென்ன பிரபாத் மட்டும் விதிவிலக்கா? அவர் சமரசம் செய்துகொள்ளாதவரானால் உலகமயமாக்கலின் தீவிரமான விமர்சகரானால் மே.வங்கத்தில் அதை ஏற்றுக்கொண்டு செய‌ல் ப‌டும் சி.பி.எம் க‌ம்பெனியைத்தான் முதலில் விம‌ர்சிக்க‌ வேண்டும்.

said...

//அவர் கட்டுரை லெனின்
நூலை மட்டுமே அடிப்படையாகக்
கொண்டதல்ல. இன்றைய சூழலில்
கோட்பாடு- நடைமுறை குறித்த
கட்டுரை அது.ஒட்டுமொத்த
மார்க்ஸிய கோட்பாடு-நடைமுறை-
செயல்தந்திரம் குறித்தவற்றை அது
பேசுகிறது.//


இதுதான் பெரிய அயோக்கியத்தனம் என்பது. எந்த வகையில் லெனினின்/மார்க்ஸ்/ஏங்கெல்ஸ் வரையறுப்பிலிருந்து இன்றைய சூழல் நடப்பு அவர்களின் அனுபவங்களுக்கு பாதகமாக இருக்கிறது என்பது குறித்து இதுவரை ஒரேயொரு தத்துவ வியாக்கியானம் கொடுத்துள்ளனரா இவர்கள்? வெறுமே மார்க்ஸியத்தை திரிக்கும் வேலையை மட்டும் செய்வதற்க்கு இப்படி யாதார்த்தவாத முகமூடி வேறு.

அட அப்படித்தான், இது லெனினிசத்தின் காலகட்டமல்ல(அது முடிந்துவிட்டது என்று)என்று இவர்கள் மார்க்ஸியத்தின் வழியில் கண்டு கொண்டால் ஏன் தங்களை லெனின் பாதையாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள். லெனினிசம் காலவதியாகிவிட்டது என்று வெளிப்படையாக சொல்வதை யார் தடுத்தார்கள்?

சரியான தரவுகளுடன் ஆழ்ந்த தத்துவ விளக்கங்களுடனும் விவாதங்கள் நடத்தப்பட்டால் அவற்றை புரிந்து கொண்டு செழுமைப்படுத்திக் கொள்வதில் யாருக்கென்ன சிக்கல்?

அப்படி ஒரு முயற்சியை CPM செய்ததில்லை என்பதும் அது அவர்களின் நோக்கமில்லை என்பதுதான் அவர்களை நேற்றைய போலிகளாகவும் இன்றைய பாசிஸ்டுகளாகவும் கருத அடிபப்டை அமைத்துக் கொடுக்கிறது.

அசுரன்

said...

I had invited Frnd. Santhippu to come and put his words in this postings, but till now there is no reply from him.
I hope he may be on medical leave for another one or two months.

said...

அய்யகோ என் செய்வேன்????!!!!!

சந்திப்பு என்ற CPM ஊழியர் கொஞ்ச நாளுக்கு முன்ன வீராவேசமாக சித்தாந்த விவாதம் நடத்த தயார் என்று அறிவித்திருந்தார். நாமும் என்னாடாயிது கடந்த சில மாத கேப்பில் மார்க்ஸியத்தை ஓரளவு கற்று தேர்ந்துவிட்டார் போலருக்கு என்ற நம்பிக்கையில் முன்பு போல பொது அறிவின் அடிப்படையிலான கேள்விகளை கேட்பதை விடுத்து மார்க்ஸியத்தின் மூலவர்களையே அவர்களிடம் கேள்வி கேட்க்க இந்த கட்டுரையில் அழைத்து வந்தேன்.

உடனே ஒரு யுக புரட்சி நிகழ்ந்தது சந்திப்பின் தளத்தில். முன்பு நாம் கேள்விகள் கேட்ட பொழுதெல்லாம் இந்த சந்திப்பு எந்த டேப்ரிக்கார்டரை சுவிட்ச் ஆன் செய்வாரோ அதே டேப்ரிக்கார்டரை இந்த முறையும் சுவிட்ச் ஆன் செய்துள்ளார்.

அவருக்கு இரண்டு தகவல்கள்,

ஒன்று வெகுஜன அரங்கில் CPMயைவிட அல்லது வேறெந்த ஓட்டு கட்சிகளையும் விட ஆழமாக வேலை செய்பவர்கள் மக இக வினர் என்ற விசயத்தை நாங்கள் சொல்லவில்லை இணையத்திலேயே இயங்கும் பல்வேறு மாற்று அர்சியல் ஜனநாயக சக்திகள் உங்களிடமே நேரடியாக எமது சார்பில் பேசியுள்ளனர் (பல்வேறு முந்தைய சண்டைகளில்). ஆயினும் அந்த பழைய விவரங்களை புதிதாக இணையத்திற்க்கு வருபவர்கள் வாசிக்க்வா போகிறார்கள் என்ற தைரியத்தில் தனது அதே பழைய பொய்-பித்தலாட்ட, தத்துவ- அரசியல் விமர்சனமற்ற அவதூறு நடைமுறையை சந்திப்பு மீண்டும் முன்னுக்கு கொண்டு வருகிறார். செல்வநாயகியிலிருந்து, மிதக்கும்வெளிவரை இந்த அம்சத்தில் பலரது பழைய பின்னூட்டங்கள்(அவை உங்களது தளம் அல்லது அவர்களது தளத்தில் பிரசூரிக்கப்பட்டவை) என்னால் முன்னுக்கு கொண்டு வர முடியும்.

இரண்டு, உங்களைப் போல ஆளும் வர்க்கத்தின் அங்கீகாரத்தையே ஏதோ பெரிய அங்கீகாரமாக தூக்கிப் பிடித்து பெருமை பேசுவதைத்தான் லெனின் ரொம்ப சுருக்கமாக "அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகள்' என்று அவமானப்படுத்துகிறார். ஏன் சந்திப்பு இந்த பதிவில் கேள்வி கேட்டுள்ளது நான் இல்லையே? லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ்தானே?

அவர்களது ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியே பதில் சொல்லலாமே?

உங்களை சித்தாந்த அரசியல் தளத்தில் அம்பலப்படுத்தும் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து புதிதாக கற்றுக் கொண்டு முன்னுக்கு வருவது என்ற இயங்கியல் உங்களிடம் வெளிவரவில்லை மாறாக மேலும் மேலும் இழிவான, மோசடியான, பித்தலாட்ட நிலைக்கு பின் தங்கிச் செல்லும் போக்கே உங்களிடமிருந்து வெளி வருகிறது. இப்படி பயந்து ஓடுவதும் அதை அவதூறு பேசி மறைப்பதும் பாசிசத்தின் கூறுகளே.

உங்களது அமைப்பை நினைத்து கோபமுற்றாலும், உங்களை நினைத்து முதல் முறையாக பரிதாபப்படுகிறேன் சந்திப்பு :-(

அசுரன்

said...

சந்திப்பின் தளத்தில் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கும் எனது பின்னூட்டம்:

தலைப்பை பார்த்து விவாதத்திற்கு அழைத்திருப்பீர்கள் என்று நினைத்து உள்ளே வந்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. "இந்திய சமூக நிலைமைகேற்ப மார்க்சியத்தை பொருத்துகிறோம்" என்று திரிபுவாதத்திற்கு சப்பைக்கட்டு கட்டும் அதே பழைய வாதங்கள். அப்படி என்னதான் பொல்லாத இந்திய சமூக நிலைமை என்பதை எங்களுக்கும்தான் கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன், ஒவ்வொரு தேசம் தனக்குள்ளே பிற்போக்கான கூறுகளையும், முற்போக்கான கூறுகளையும் உள்ளடக்கியிருக்கிறது என்றார் தோழர்.லெனின், பொருள்முதல்வாதம் எனும் போர்வாளை கொண்டிருக்கும் மார்க்சிய தத்துவம் அந்த சமூகத்தினுடைய போராட்ட மரபிலிருந்து முற்போக்கான கூறிளிருந்து முகிழ்தெழ வேண்டும். இதுதான் உண்மையில் அந்த மண்ணுக்கேற்ற மார்க்சியமாக அமையும்., ஆனால் உங்களுடைய மரபுத்தொடர்ச்சியாக இந்த மண்ணில் அமைந்தது எது? உழைக்கும் மக்களின் மீது வெறுப்பை உமிழ்ந்து அவர்களை தஸ்யூக்களாக இகழ்ந்த வேத மரபில்லல்லவா மார்க்சியத்தை நீங்கள் இணைத்தீர்கள், இது ஒன்று போதுமே நீங்கள் இந்த மண்ணிலிருந்து எப்படி மார்க்சியத்தை வளத்தெடுத்தீர்கள் என்பதற்கான அத்தாட்சி. வேண்டுமானால் உங்கள் நம்பூதிரி பாடு வேத மரபை விதந்தோதிய விசயங்களை எடுத்துக்காட்டட்டுமா?

உங்கள் மீது எனக்கு பல நாளாகவே ஒரு சந்தேகம் இருந்து வருகிறது சந்திப்பு அதாவது நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா அல்லது ஒரு காவல் துறை உளவாளியா? என்பதுதான் அது. ஏன் கேட்கிறேன் என்றால் பொதுவாக தன்னை கம்யூனிஸ்டாக கருதிக் கொள்பவன் யாராயிருந்தாலும் அவன் தத்துவ விவாதத்தில்தான் ஈடுபடுவானேயொழிய நீங்கள் செய்வது போல "நம்மோடு விவாதிப்பவர் ஒருவரே எழுதுகிறாரா, தனித்தனியாக எழுதுகிறாரா, அவரது பெயர் என்ன? ஊர் என்ன? அவருடைய தலைவர்கள் பேரென்ன?" என்றெல்லாம் புலனாய்வு செய்து கொண்டிருக்க மாட்டார், உங்களுடைய அரசியல் ஓட்டாண்டித்தனம்தான் தத்துவ விவாதங்களை தவிர்த்துவிட்டு இது போல உளவு வேலைகளை செய்யச் சொல்கிறது.

//இவர்களது கட்சியின் பெயரை எங்கும் இவர்கள் பயன்படுத்துவதில்லை. இவர்களது கொள்கை இதுதான் என்று வெளிப்படையாக அறிவிப்பதில்லை.//

இதுதான் நீங்கள் கம்யூனிசத்தை புரிந்து வைத்திருக்கும் இலட்சணம் போல, விமர்சணம் என்பது கருத்துக்களின் மீது வைப்பது, ஒருவரின் கருத்துக்கள் தவறாக இருக்கும் பொழுது அதனை சுட்டிக்காட்டி மாற்றிக்கொள்ளும்படி கோருவது ஒருவர் விவாதத்திற்கு அழைத்து உங்களது நடைமுறையில் குறைகளை சுட்டிக்காட்டும் பொழுது, அவரிடம் உங்கள் கட்சி பெயரை சொல்லுங்கள் என்று கேட்பதுதான் நேர்மையா? நாங்கள் ம.க.இ.கவை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படும் பொழுது அந்த அடையாளதோடேயே எங்களோடு உரையாடுவதில் உங்களுக்கென்ன சிக்கல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாமா சந்திப்பு. மேலும் எங்கள் கொள்கை என்னவென்று இதுவரை நாங்கள் வெளிப்படையாக அறிவித்ததில்லை என்று நீங்கள் சொல்வதை தமிழ்மண வாசகர்கள் படித்தால் வாயால் சிரிக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. வேண்டுமானால் உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன், இந்த நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு கூட்டிக்கொடுக்கும் டாடா போன்ற தரகு முதலாளிகளுக்கும் அவர்களது பாதம் நக்கும் பாரளுமன்ற கட்சிகளுக்கு எதிராகவும் மக்களை அணிதிரட்டி நாடு மறுகாலனியாவதை முறியடிப்பது, ஏக இந்து இந்தியா என்று பேசிக்கொண்டே ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்து கொன்டு உழைக்கும் மக்களை சூத்திரர்களாகவும் பஞ்சமர்களாகவும் வைக்க முனையும் ஆயுதம் தாங்கிய பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்களை திரட்டி முறியடிப்பது, புதிய ஜனநாயக புரட்சி என்னும் இலக்கை அடைவது இதுதான் சந்திப்பு எங்களது கொள்கை, இங்கு நான் சுருக்கமாகத்தான் குறிப்பிட்டிருக்கிறேன், எங்களது தோழர்கள் இதனை விரிவாக விவரித்து கூட எழுதியிருக்கிறார்கள், உங்களுக்கு எங்கு வசதியோ அங்கேயே நாம் இது பற்றி விவாதிக்கலாம்.

இந்த பின்னூட்டம் அளவுக்கு அதிகமாக நீண்டு விட்டதால் உங்கள் பதிவில் இருக்கும் காமெடியான விசயங்களை இங்கு குறிப்பிட்டு காட்டாமல் தவிர்க்கிறேன், விவாதத்தின் போக்கில் இது போன்ற பல காமெடிகள் உங்களிடமிருந்து வெளிப்படும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிருக்கிறது, அப்போது அது பற்றியெல்லாம் பேசிக் கொள்ளலாம்.

ஸ்டாலின்

said...

//நாங்கள் ம.க.இ.கவை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படும் பொழுது அந்த அடையாளதோடேயே எங்களோடு உரையாடுவதில் உங்களுக்கென்ன சிக்கல் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாமா சந்திப்பு. மேலும் எங்கள் கொள்கை என்னவென்று இதுவரை நாங்கள் வெளிப்படையாக அறிவித்ததில்லை என்று நீங்கள் சொல்வதை தமிழ்மண வாசகர்கள் படித்தால் வாயால் சிரிக்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. //

கருத்துக்களுக்கு நன்றீ தோழர் ஸ்டாலின்

said...

// சி.பி.எம்.மை விமர்சனம் செய்வதன் மூலம் நீங்கள் பாசிசத்தை நோக்கி பயணிக்கிறீர்களோ என்ற அச்சமும் மனதில் எழாமல் இல்லை.
//

மேலேயுள்ளது பகத் என்ற தோழருக்கு சந்திப்பு கொடுத்துள்ள எதிர்வினை. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

அசுரன்

said...

மக்கள் புரட்சி மக்கள் புரட்சின்னு ஒன்னு சொல்றாங்க தோழர் அதான் எனக்கு இன்னும் புரிய மாட்டேங்குது

said...

//ஒவ்வொரு தேசம் தனக்குள்ளே பிற்போக்கான கூறுகளையும், முற்போக்கான கூறுகளையும் உள்ளடக்கியிருக்கிறது என்றார் தோழர்.லெனின், பொருள்முதல்வாதம் எனும் போர்வாளை கொண்டிருக்கும் மார்க்சிய தத்துவம் அந்த சமூகத்தினுடைய போராட்ட மரபிலிருந்து முற்போக்கான கூறிளிருந்து முகிழ்தெழ வேண்டும். இதுதான் உண்மையில் அந்த மண்ணுக்கேற்ற மார்க்சியமாக அமையும்., ஆனால் உங்களுடைய மரபுத்தொடர்ச்சியாக இந்த மண்ணில் அமைந்தது எது? உழைக்கும் மக்களின் மீது வெறுப்பை உமிழ்ந்து அவர்களை தஸ்யூக்களாக இகழ்ந்த வேத மரபில்லல்லவா மார்க்சியத்தை நீங்கள் இணைத்தீர்கள், இது ஒன்று போதுமே நீங்கள் இந்த மண்ணிலிருந்து எப்படி மார்க்சியத்தை வளத்தெடுத்தீர்கள் என்பதற்கான அத்தாட்சி. வேண்டுமானால் உங்கள் நம்பூதிரி பாடு வேத மரபை விதந்தோதிய விசயங்களை எடுத்துக்காட்டட்டுமா?//

Good one Stalin....

said...

//நான் சில மாத‌ங்களுக்கு முன்புவரை சி.பி.எமின் தீவிர ஆதரவாளர்/உறுப்பினர். அதனாலேயே பல விஷயங்களை (சி.பி.எம் சார்பு ஏடுகளைத் தவிர) தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன். கடந்த சில மாதங்களாகத்தான் இது போன்ற இனையதள செய்திகள் முதல் சில தத்துவார்த்த பத்திரிக்கைகள் வரை (புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் உள்பட) படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளேன். சி.பி.எம்ஐ இப்போதுதான் வெகுஜன நோக்கில் பார்க்க நேர்ந்துள்ளது. மகஇக மற்றபிற புரட்சிகர அமைப்புகளின் தத்துவார்த்த விமர்சனங்களையும் மிகச் சரியென்று ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. இதனடிப்படையிலேயேதான் சந்திப்பு தரப்பிலிருந்து பதிலெழுதவேண்டிய நான் மற்றும் என்னைப்போன்ற பல தோழர்கள், இன்று அவர்களையே கேள்வி கேட்கவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். ஆனால் நம்முடைய கேள்விகள் அவருக்கும், அவருக்கு சொல்லிக்கொடுத்து எழுதவைப்பவர்களுக்கும் மிகுந்த ஆத்திரத்தைத்தான் ஏற்படுத்துகிறது. இந்த ஆத்திரத்தின் அவலம் தான் அக்கட்சியின் இன்றைய பரிதாப நிலைக்குக் காரணம்.
//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பகத்,

அந்த கட்சியின் அவல நிலையல்ல அது. அந்த கட்சியை நாம் அவலத்துடன் இருப்பதாக பர்த்து பரிதாப்படும் நிலையில் இல்லை. கொழுப்பெடுத்த பாசிஸ்டு கட்சியாக அது மாறி விட்டது. :-)

அசுரன்

said...

சந்திப்பு CPM பத்திரிகையின் வெளியீடுகள் தவிர்த்து வேறு எதுவுமே படிப்பதில்லை என்று மட்டும் தெரிகீறது.

படு அல்பத்தனமாக வெகு ஜன அரங்கு எண்ணிக்கை எனும் வாதத்தில் போய் ஒளிந்து கொள்கிறார். இது ஓட்டு அரசியல் அவரை எந்த அளவுக்கு எண்ணிக்கை சார்ந்த ஓட்டுப் பொறுக்கியாக மாற்றியுள்ளது என்பதைத்தான் காட்டுகிறது.

மக இகவின் வெகு ஜன அரங்கு செயல்பாடுகளுக்கு லிஸ்ட் கொடுத்தால் அதை எனது கட்சியாக ஏற்றுக் கொள்வேன் என்கிற அளவில்தான் அவரது மார்க்ஸிய அறிவு எண்ணிக்கை சார்ந்து உள்ளது. மக இகவின் தொழிலாளர் அரங்கும், மாணவ்ர் அரங்கும், விவசாயிகள் அரங்கும் CPM யைவிட சிறப்பாகவே உள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த லிஸ்ட் என்னிடம் கிடையாது :-)

மாறாக மக்கள் அரங்கு கணக்குக்கு இன்னொரு அளவுகோல் உள்ளது அது இவர்களின் அரசியலை மக்களிடம் கொண்டு செல்லும் போக்கு, தமிழகத்தில் இவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பார்ப்பினிய எதிர்ப்பு போராட்டம் எத்தனை நடத்தியுள்ளனர்? மக்களிடம் சென்று மார்க்ஸிய அரசியல் பேசியுள்ளனர்? வெறுமே வோட்டுக்கு பிச்சை எடுப்பதை தவிர்த்து. ரிலையன்ஸை எதிர்த்தும், கோக்கை எதிர்த்தும், சேது பால பிரச்சினையிலும், சிதம்பரம் கோயில் முதல் சமிபத்திய நேபாள கூட்டமைப்பு வரை பல்வேறு பிரச்சினைகளில் அதனை வீச்சாக பொது ஜனங்களிடம் கொண்டு செல்லும் அரசியல் நடைமுறை கொண்டது மக இக.

இவரது கணக்குப்படி விஜயகாந்த்துதான் மிகச் சிறந்த கம்யுனீஸ்டு ஏனேனில் ஆரம்பிக்கும் போதே அவரிடம் CPMக்கு இணையாக வெகு ஜன அரங்கு இருந்தது.

தத்துவத்தில் விளக்கம் கேட்டால் எண்ணிக்கை சார்ந்த விஜயகாந்த் அரசியல் பேசுவது, அதையும் உடைத்துவிட்டால் கொஞ்சா நாள் அமைதியாக இருந்துவிட்டு பிறகு வந்து மீண்டும் இவர் மற்றும் இவர் சார்ந்த கட்சி ஏதோ பெரிய புடலங்காய் கூட்டு போல கதையளப்பது விவாததுக்கு இழுத்து கேள்விகள் கேட்டால் மீண்டும் அதே ப்ல்லவியை பாடுவது....ஸ்ஸ்ஸ்... அப்பா.... நமக்குத்தான் போரடிக்குது :-)

இதில் இன்னொரு ப்ல்லவி வேறு அதாவது கம்யுனிஸ்டு கட்சியாக புரட்சிக்ர அரசியல் பேசுப்வர்கள் இருந்தால் அவர்கள் வர்க்க எதிரியைத்தானே அம்பலப்படுத்தி பேச் வேண்டும்? ஏன் CPM யை பேசுகிறார்கள்? என்று.

முதல் விசயம் CPMதான் நமது வர்க்க எதிரிகளில் முதலில் நிற்ப்வர்க்ள் என்ற உண்மை. ஹிட்லர் கூட சோசலிஸ்ட் பார்ட்டி என்று பெயர் வைத்திருந்தால் அவனை முதலில் எதிர்க்காமல் வேறு யாரையாவதா எதிர்க்க முடியும்? நந்திகிராமிலும், சிங்கூரிலும் மாமா வேலை பார்ப்பதும், நாடாளுமன்றத்தில் ஏகாதிபத்தியங்களின் காலை நக்கி அரசியல் செய்வதுமான இந்த பாசிஸ்டு கட்சிதான் நமது முதல் எதிரி என்பதிருக்க.

இரண்டாவது விசயம் இன்றைய யுகத்தில் கம்யுனிசத்தின் முதல் எதிரி திரிபுவாதம்தான். அதனால் அதனைத்தான் முதலில் எதிர்க்க வேண்டியுள்ளது. அந்த அம்சத்திலும் இவர்களே முதல் எதிரிகள்(ஒருவேளை இவர்கள் திரிபுவாத போலிகள் என்ற தகுதி படைத்தவர்கள் என்று கருதினால்).

அசுரன்

said...

excerpts from Writer jayamohan pages about pure marxism and phony communists :

http://jeyamohan.in/?p=6

////நான் எழுதிய பதிலில் என் நாவலில் மார்க்ஸியக் கோட்பாட்டை விமரிசனமேதும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தேன். அந்நாவல் முழுக்க முழுக்க இடதுசாரி அரசியலானது கருத்தியலை எப்படி ஓர் அடக்குமுறை அதிகார ஆயுதமாக பயன்படுத்தியது என்பதையும் எல்லா கருத்தியல்களுக்கும் அப்படி ஒரு முகம் உண்டு என்பதையும் மட்டுமே விரிவாகப்பேசுகிறது. அப்படி பயன்படுத்தப்பட்ட கருத்தியல் என்ற அளவில் மார்க்ஸியம் விவாதிக்கப்படுகிறது. அந்நாவலில் மார்க்ஸியத்தின் தத்துவார்த்தமான வரலாற்றாய்வுமுறையும் அதன் மனிதாபிமான நோக்கும் அதன் அறவியலும் மிக விரிவாக விளக்கவும் பட்டுள்ளன. ஆனால் மார்க்ஸியம் உருவாகி முக்கால் நூற்றாண்டுக்காலம் கழிந்தும் அது பல நாடுகளில் பலவகையில் விளக்கப்பட்டு அதனடிபப்டையில் அதிகாரம் கையாளப்பட்ட பின்னரும் ‘தூய மார்க்ஸியம்’ ஒன்று உண்டு அது மட்டுமே உகந்தது என்று சொல்வது ஒருவகை மதவாதமே என்று வாதிட்டிருந்தேன். இஸ்லாமிய மதவாதிகள் ஒரு இஸ்லாமிய அரசு எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு காணும் என்று வாதிட்டு மதததைப் பரப்புவார்கள். ஏற்கனவே இருக்கும் இஸ்லாமிய நாடுகளை சுட்டிக்காட்டினால் அவையெல்லாம் இஸ்லாமிய கோட்பாட்டை முழுக்க கடைப்பிடிக்கவில்லை என்பார்கள். அதாவது மண்ணுக்கு மேல் நிற்கும் ஒரு ‘தூய’ தத்துவத்தை சுட்டிக்காட்டும் ஆழ்ந்த நம்பிக்கை மட்டும்தான் இது./////

/////எவருடனும் ஓயாமல் விவாதிக்கும் குணம்கொண்ட சோதிப்பிரகாசம் மார்க்ஸிய முன்னோடிகள் பலர் முறைப்படி மார்க்ஸியம் கற்காமல் அதன் மனிதாபிமான அடிப்படையை மட்டுமேஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணினார். எனவே மார்க்ஸியத்தை முறைப்படி முழுமையாகப் பயில பதினைந்து வருடங்களை முழுமூச்சாகச் செலவிட்டார். அதில் அவரது மொழித்திறனும் கல்வித்திறனும் வளர்ந்தது.//////

said...

இந்த பின்னூட்டத்திற்க்கும் இந்த பதிவிற்க்கும் ஒரு வேளை தொடர்பு இருக்குமெனில் அது இந்த பதிவை திரித்து புரிந்து கொள்ளும் அதே அதியமானின் அரைகுறை வாசிப்பு முறைதானேயன்றி வேறல்ல.

இயற்பியல், வேதியியல் கண்டு பிடிப்புகளை நாம் தூய விஞ்ஞானம் என்று நிராகரித்து விடுவதற்க்கும் மாறாக அவற்றீல் தவறுளளது என்று கண்டுபிடித்து நிராகரிப்பதற்க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

முதல் விசயம் வெறுமே அது பிடிக்கவில்லை என்று நிராகரிப்பது அல்லது தனது வசதிக்கேற்ப்ப திரிப்பதற்க்காக நிராகரிப்பது. இரண்டாவது அதை உண்மையில் முழுமையாக அறிந்து கொண்டு அதிலுள்ள தவறுகளை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்து நிராகரிப்பது.

மார்க்ஸியத்திற்க்கும் இரண்டாவது விதிமுறை பொருந்தும். மார்க்ஸீய மூலவர்களின் கருத்துக்கள் அனுப்வங்களிலிருந்து மாறுபடுவதற்க்கும் இந்த முறை பொருந்தும்.

மார்க்ஸியத்தை மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் சொன்னபடி அப்படியே கடைபிடிக்க வேண்டும் எங்காவது வறட்டு மார்க்ஸியம் பேசியிருந்தால் நாம் பேசியிருந்தால் இவரது ஜெயமோகன் பின்னூட்டத்திற்க்கு ஏதாவது பொருத்தப்பாடு இருந்திருக்கும்.

அல்லது குறைந்த ப்ட்சம் இந்த கட்டுரை சுட்டிக்காட்டியுள்ள அம்சங்கள் எதுவும் இப்போது உண்மையில்லை எனவே கட்டுரை பேசும் மார்க்ஸியம் பொருத்தப்பாடு இழந்துவிட்டது என்று நிரூபித்த பிறகு இந்த பின்னூட்டத்தை சேர்த்து விட்டிருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும். என்ன செய்ய எப்போதுமே இல்குவான வழிகளில் ஆதாயம் அடையும் முதலாளித்துவ குறுக்கு புத்திக்கு பழகிய அதியமான் இந்த முறையும் அரைகுறையாகவே எதிர்வினை தொடுத்துள்ளார். பரிதாபம்தான்.

ஜெயமோகன் கருத்தை பரிசீலிக்காமல் அதன் உணர்வு தளத்தில் அப்படியே எடுத்துக் கொள்வது எனில் ஏற்கன்வே குறிப்பிட்டது போல இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான விதிகளை கறாராக கடைபிடிப்பதும் கூட மதவாதமே ஆகும். ஆயினும் இங்கு வசதியாக ஒன்றை இவர்கள் அனைவரும் மறைக்கிறார்கள்.

மதவாதம் பேசுபவனை விஞ்ஞான அடிப்படையற்ற விசயத்தை கண்மூடித்தனமாக வழிபடுபவனை விவாதத்தில் தோற்கடித்து விடலாம். இதுவரை அதியமானோ அல்லது வேறு யாரிடமோ இங்கு நேரடியான மார்க்ஸியம் பேசப்படவில்லை. பொது அறிவுக்குட்ப்பட்ட விசயங்களை மார்க்ஸிய ரீதியாக ஆய்வு செய்து வந்தடைந்த மறுக்க் இயலாத உண்மைகளே முன் வைக்கப்பட்டன. ஆயினும் அவற்றை மறுத்து வாதிட வக்கில்லாத இவர்கள். சகல்விதமான முகமூடி போட்டு வந்தும் நமது கருத்துக்களை எதிர்க்கும் விஞ்ஞானமில்லாத இவர்கள் இப்பொழுது நம்மையே அஞஞான வழி மதவாதிகள் என்று குற்றம் சொல்வது நகைப்பை வரவழைக்கீறது.

ஒருவேளை ஜெயமோகனின் வரிகளுக்கு பொருத்தப்பாடு இருக்குமெனில் அது உங்களையும் உள்ளிட்ட ஏகாதிபத்திய அடிவருடி கும்பலுக்கும், பார்ப்பன் கும்பலுக்குமே பொருந்தும். ஏனேனில் உங்கள் முன் வைக்கப்பட்ட எந்த ஆதாரத்தையும் மறுக்க வக்கில்லாமல் ஓடி ஒளிந்தவர்கள் எப்பொழுதுமே நீங்கள்தான்.

அசுரன்

said...

சும்மா ஒரு ரவுண்டு விட்டுப் பார்ப்போமேன்னு தொனிச்சி...

said...

யாருக்கோ பயங்கர வயித்து கடுப்பு போல தெரியுது.... ;-)))

கடுக்கட்டும்... கடுக்கட்டும்.... :-))

said...

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்.. நம்ம சந்திப்பு அழுது கொண்டே சிரிக்கிறார்.

வயித்துக் கடுப்போட சேர்ந்து உள்ளே கனெக்சன் மாறிப்போச்சு போல, அதான் வாயாலேயே போறார்.

இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு.. இன்னும் என்னென்ன கதிக்கு ஆளாகப்போறாரோ நம்ம சந்திப்பு.

:-)

said...

http://santhipu.blogspot.com/2008/04/blog-post_23.html

சந்திப்பு அல்லது அவரது தளத்தில் எழுதும் CPM நபர் முதல் முறையாக ஒரு சின்ன முயற்சி செய்துள்ளனர் பாராட்டுக்கள். அதற்கான நமது எதிர்வினை.

//சோசலிசத்திற்கான பாதைiயாக சமாதான நாடாளுமன்றப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்களது துரோகத்தனத்தை சோசலிசத்திற்கான இந்தியப் பாதை என்று வர்ணிக்கிறார்கள். வர்க்கமற்ற அரசியல், வர்க்கமற்ற சோசலிசம் என்று வழிகாட்டுதல் நமது நாட்டின் பரந்துபட்ட மக்களை புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து திசை திருப்பும் முதலாளியத் தந்திரமாகும்....//

//சி.பி.எம். தனது கட்சித் திட்டத்திலோ அல்லது கொள்கை அறிக்கையிலே இவ்வாறு எதையும் கூறவில்லை.//

மேலேயுள்ள ம க இகவின் கருத்திற்கு மறுப்பு எழுதியுள்ள CPM நபர் இவை CPMன் கட்சித்திட்டத்தில் இல்லையென்கிறார். நல்லது, CPMண் கட்சித்திட்டத்தில் நந்திகிராம்கள், சிங்கூர்கள் எல்லாம் உள்ளதா என்று பார்த்துச் சொல்லிவிட்டால் நமது வேலை மிச்சம். ஏனேனில் தோழர்கள் CPM கட்சியின் நடைமுறையைவிட அதன் கட்சித்திட்டத்தையே CPMஆக கருதுகிறார்கள் என்று தெரிகீறது. எப்படி பெயரில் மட்டும் மார்க்ஸிஸ்டு உள்ளதோ அதே போல கட்சிதிட்டத்திலும் மார்க்ஸியத்தை தழுவி ஏதாவது இருப்பதே இவர்களுக்கு போதுமானது. CPM போன்ற கட்சிகள் சமாதான நாடாளுமன்ற பாதையை காட்டுவதாகத்தான் கூறியுள்ளனர்.


//இவர்களது வாதப்படியே யார் வர்க்கமற்ற அரசியல் என்று சொல்கிறார்கள்? சமாதானமான நாடாளுமன்றப் பாதை மட்டுமே புரட்சிகரப் பாதை என்று வர்ணித்துள்ளார்கள்? என்று நமக்குத் தெரியவில்லை!//

CPMன் பாதையில் சங்கராச்சாரியார் CPMன் நட்பு நந்திகிராம், சிங்கூர் மக்கள் எதிரி. எனில் மார்க்ஸியம் பேசிக் கொண்டு சந்த்ரப்பவாத நடைமுறை கொண்ட இவர்கள்தான் வர்க்கமற்ற அரசியல் செய்கிறார்கள். ஏனேனில் இவர்களின் நடவடிக்கையை தீர்மானிப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமே. சந்தர்ப்பவாதம் என்பது வர்க்க அரசியல் அல்ல. நாடாளுமன்ற பாதையின் புனிதம் காக்கும் சோம்நாத் சாட்டார்ஜியே இவர்களின் நாடாளுமன்ற பாதைக்கு சாட்சி.


//முதலாளித்துவப் பாராளுமன்றங்களையும், இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிலும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்த ஆகவேண்டும்

//

மேலேயுள்ள லெனினின் கூற்றை யாரும் மறுக்கவில்லை. இதுதான் நேபாள மாவொயிஸ்டுகளின் நிலைப்பாட்டை நாம் ஆதரிக்க உதவுகிறது. சரி இந்தியாவுக்கு இது பொருந்துமா என்பது குறித்து அந்த சந்திப்பு தளத்தின் CPM நபர் விளக்குவாரா? இந்தியா ஒரு முதலாளித்துவ பாராளுமன்றத்தை கொண்டுள்ளதா?

உலக வங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு அரட்டை மடம் என்பதை தாண்டி அதில் ஜனநாயகம் என்ற அம்சத்தில் எதுவுமே இல்லை என்கிற போது அதனை எந்த அர்த்தத்தில் முதலாளித்துவ பாராளுமன்றத்துடன் ஒப்பிடுகிறார்கள்? குறைந்த பட்சம் இந்த நேர்மை சீலர்கள் இந்திய ஜனநாயகம் ஒரு போலி என்பதை அம்பலப்படுத்தி அசுரன் உள்ளிட்ட தளங்களில் வந்துள்ள கட்டுரைகளின் ஏதேனும் ஒன்றே ஒன்றை மறுத்து வாதம் செய்தால் கூட இவர்களின் நேர்மை குறித்து நாம் பரிசீலிக்க ஏதுவாகும் அப்படி எதுவுமே செய்யாமல் ஆளும் வர்க்கத்தின் பிரச்சாரமாகிய இந்திய ஜனநாயகம் என்ற பொய்யை தமது வாதத்திற்கு அடிப்படையாக நம்பியிருப்பதே இந்த போலிகளை புரிந்து கொள்ள உதவும்.

//பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். //

தோழிலாளர்களை என்று லெனின் சும்மா பொத்தாம் பொதுவாக குறிப்பிடுவதாக சந்திப்பு போன்ற CPM பித்தலாட்டக்காரகள் நம்ப விரும்புகிறார்கள். இந்தியாவில் தொழிலாளர்கள் எத்தனை பேர் என்ற கணக்கையும் இவர்கள் கொடுத்துவிட்டால் ரொம்ப புன்னியமாகப் போகும். இந்திய ஒரு பின் தங்கிய விவசாய நாடு என்பதை சுத்தமாக மறைத்துவிட்டு அப்படியே ரஸ்யாவுடன் பொருத்தும் மொள்ளமாறித்தனமதான் சிறுபிள்ளைத்தனமதான் இங்கு வெளிப்படுகிறது.

மீண்டும் இங்கு ஒரு முதலாளித்துவ சமூகத்தின் இயல்புகளுக்கான நடைமுறைகளை இந்தியா போன்ற அரை நிலபிரபுத்துவ சமூகத்திற்க்கு பொருத்தும் பித்தலாட்டத்தை செய்கிறது இந்த் கும்பல்.

//ஆயுதப் புரட்சி என்று பேசுவது தொழிலாளி வர்க்கத்தின் குரலை வெளிப்படுத்துவதாக அமையாமல் தங்களின் உள்ளுனர்வு அடிப்படையில் இயங்கும் கற்பனாவாத தத்துவத்தைதான் ம.க.இ.க.வினரிடம் காண முடிகிறது. இது குறித்து தோழர் லெனின் கூறுவதை நோக்குங்கள்.
//

லெனின் குறிப்பிட்டுள்ளதோ மக்களை திரட்டி போராடுவதை மட்டுமே மாறாக ஆயுத போராட்டம் குறித்த பிரச்சாரத்தை நிராகரித்து அவர் எங்கும் எதுவும் கூறியதில்லை. ஆயினும் பித்தலாட்டாக்கார CPM கும்பல் லெனினை திரித்து புரட்டி தமது சந்தரப்ப்வாத கருத்துக்களை நியாயப்படுத்துகீறார்கள். இவர்களை குறித்து லெனின் என்ன சொல்கிறார் என்று கிழே பார்க்கலாம்:

"பலாத்கார புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியமென்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸின் போதனை அனைத்தின் ஆணி வேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது நடப்பிலுள்ள சமூக-தேசியவெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்துவரும் துரோகமானது, இந்த போக்குகள் இத்தகைய பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கைவிட்டுவிட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது".-லெனின் (அரசும் புரட்சியும், அத்தியாயம் 1, 4. அரசு உலர்ந்து உதிர்வது...)"

லெனின் சொல்லாததை சொன்னதாக சொல்வது, லெனின் வார்த்தைகளை பிய்த்து போட்டு தவறான பொருளில் இயந்திரகதியில் வசதிப்படி பொருத்தி பொருள் காண்பது இவை இவர்களின் ரத்தத்தில் ஊறிய்து.

சரி உண்மையில் மக்களை புறக்கணிப்பது யார்? உலகமய அரசியலையும் சரி, மார்க்ஸிய அரசியலையும் சரி மக்களிடம் கொண்டு செல்லாமல் புறக்கணிப்பது யார்? மக்களின அடிமைத்தனத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் வோட்டு பொறுக்கிகள் யார்? அது வேறு யாருமல்ல சந்திப்பு சார்ந்த CPM பாசிஸ்டு கட்சிதான் அது.

ம க இக நக்சில கும்பல் சாதித்ததில் ஒரு மசிரளவு கூட CPM சாதித்ததில்லை என்பது விந்தையான ஒரு உண்மை.

லெனின் புரட்சிகர புறநிலையிலலாதது பற்றி பேசுகிறாரே அன்றி புரட்சிகர் நடைமுறையை கைகழுவி சந்தர்ப்பவாத நடைமுறைக்கு போகச் சொல்லி எதுவும் சொல்லவில்லை ஆயினும் CPM பாசிஸ்டுகள் அப்படி லெனின் சொன்னதாக பின் குறிப்பாக தமது சொந்த நிலைப்பாட்டை சேர்த்துக் கொள்கிறார்கள்.

மீண்டும் ஜனநாயகமான விவாதச் சூழலும், மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முதலாளித்துவ பாராளுமன்றம் குறித்தே பேசுகீறார் லெனின். ஆயினும் இந்தியா ஒரு முதலாளித்துவ பாராளுமன்றம் இல்லை என்பதை நாம் எத்தனையோ முறைகள் ஆதாரப் பூர்வமாக பலரிடமும் விவாதம் செய்து நிறுவியுள்ளோம். காமரேடுகளோ அப்படி ஒரு நிருப்பிக்கப்பட்ட உண்மையின் கீழ் விவாதம் செய்ய அஞ்சி அது போன்ற் முயற்சிகள் எதிலும் ஈடுபடுவதில்லை. இதுதான் லெனின் குறிப்பிடும் சிறுபிள்ளைத்தனம்.

இதே CPM கும்பல் நேபாளத்தின் மன்னராட்சிக்கு உட்பட்ட போலி ஜனநாயக அரசையும் கூட முதலாளித்துவ பாராளுமன்றம் என்றே தூக்கி வைத்து ஆடினர். ஏனேனில் அங்கு அதனை எதிர்த்து உண்மையான ஜனாநாயக வழிப்பட்ட முதலாளித்துவ அரசை கொண்டு வர போராடிக் கொண்டிருந்தது நேபாள் மாவொயிஸ்டுகள் என்ற கும்பல்லல்லவா? அது CPM மாதிரியோ அல்லது நேபாள காங்கிரஸ் மாதிரியோ அல்லது நேபாள UML மாதிரியோ பெரிய கட்சியில்லையல்லவா?

வேண்டுமானால் இந்தியா ஒரு முதலாளித்துவ ஜனநாயகம் என்று நிரூபிக்கட்டும் காமரேடுகள். பிறகு உள்ளதெல்லாம் சரி காமெடியாக CPM பித்தலாட்டங்கள்.

முதலாளித்துவ பாராளுமன்றம் என்று சொல்லும் CPM நபர் கட்டுரையின் கடைசி பகுதியில் இப்படி குறிப்பிடுகிறார்:

//பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்தவ - நிலப்பிரபுத்துவ சமூகத்தை தூக்கியெறிந்து //

அதென்ன பெரு முதலாளிகள்? இது வெறுமே அளவை மட்டுமே குறிக்கிறது இவர்களின் கணக்கில் அப்படியென்றால் இதே பெரு முதலாளிதான் அமெரிக்காவிலும் ஆட்சி செய்கிறான்.

BJP என்ன பெரு முதலாளி கட்சியா?

அதெப்படி நிலபிரபுத்துவ சமூகத்தை முதலாளித்துவம் பேணி பாதுகாக்கும் விந்தை? ஒரு வேளை மார்க்ஸியமே தவறோ?

//மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்க அரசை ஆட்சியில் அமர்த்துவது என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்றுகிறது.//

மக்கள் ஜனநாயக புரட்சி என்றால் என்னவென்பது ஒரு தனி கேலி கூத்து குறைந்தது அந்த செயல் தந்திரத்தில் காமரேடுகள் முன்னேறியுள்ளனரா என்றால் அதுவும் இல்லை., கட்சி திட்டத்தை மட்டும் ரீ பிரிண்டு போட்டுக் கொண்டு நடைமுறையில் மக்கள் ஜனநாயக புரட்சி என்பதற்க்கு எதிர்திசையில் சென்று கொண்டுள்ளனர் சுய முரன்பாட்டு முத்தண்ணாக்கள். இவர்களின் தற்போதைய கூட்டாளிகள் யார் என்று பார்த்தால் இது தெரிய வரும்:

#1) இந்தோனேசிய சலிம் கும்பல், டாடா, அம்பானி.
#2) அமெரிக்க அதிகார வர்க்கம், அரசியல் தலைமைகள்
#3) சங்கராச்சாரி, பில்லி சூனிய கும்பல்
#4) பார்ப்ப்னியமே எமக்கு முதல் என்ற வெளிப்படையாக அறிவித்து விட்டே அமைச்சராக தொடர்வது.

நல்ல நடைமுறை தந்திரம்.

//மேலும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை அவர்களது கூடாரத்திற்குள்ளே நின்று வெகுவாக அம்பலப்படுத்த முடியும் என்பதோடு//

இந்த அம்சத்தில் முற்றிலும் அம்பலப்பட்டு போய் இன்று கம்யுனிஸத்திற்கு கரும்புள்ளீ குத்தும் நடைமுறை தந்திரமாக் இருப்பது CPM னுடையதுதான்.


//இரண்டு முறை பிரதமர் பதவி உட்பட மத்திய மந்திரிப் பதவிகள் தேடி வந்த போது அதை வேண்டாம் என்று உதறித் தள்ளிய கட்சி சி.பி.எம்.! //

கடைசியில் மிஞ்சியது இதுதான். இந்த வரையறைப்படி சோனியா காந்தி கூட நல்ல கம்யுனிஸ்டுதான்.

CPMன் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஊழல்களுக்கு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வசூல் வேட்டைகளுக்கு ஆதாரங்களை அளவிட முடியாத அளவு இருப்பினும் இவையெதையும் சட்டை செய்யாம வாய் சவாடால் அடிக்கிறார் இந்த CPM நபர். ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் தந்திரம்தான் இது. நாம் ஆதாரங்களை வைத்தால் கள்ள மௌனம் சாதித்து ஓடிவிடுவதும் இதற்க்கு முன்பும் நடந்துள்ளது.

தொழிலாளி வர்க்கம் என்று தனது வாதத்தை நடைமுறையை சுருக்கிக் கொள்ளும் CPM இந்தியாவில் பெரும்பான்மை வர்க்கம் எது என்ற ரகசியத்தை கொஞ்சம் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

அசுரன்
Related Articles:

"பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!"
==>http://poar-parai.blogspot.com/2008/02/cpm.html


மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத...
http://poar-parai.blogspot.com/2008/03/blog-post_24.html

சி.பி.எம். - இன் மதச்சார்பின்மை : நரியின் சாயம் வெளுத்தது
http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/march/PJ_2008_3_11.html

போதையில் நடந்த மாநாடு :
மார்க்சிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சி

http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/march/PJ_2008_3_08.html


காவிமயமாகும் சி.பி.எம்.
http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/feb/PJ_2008_2_03.html


ஜனநாயகம் என்றால் என்ன? http://tamilcircle.net/unicode/general_unicode/104_general_unicode.html

said...

Published in Santhipu Blog:

// தமிழகத்தில் சட்டபூர்வமற்ற புரட்சிகர வேலை செய்வதாக கூறிக் கொள்ளும் ம.க.இ.க.//


எங்கே அப்படிச் சொல்கிறது என்று சந்திப்பு சொல்லவாரா?

//உங்களை சட்டப்பூர்வமாக செயலாற்ற அனுமதிக்கும் காலத்தில் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு மக்களை சந்தித்து அரசியல் ரீதியாக அவர்களை வளர்த்தெடுத்து புரட்சிகர அமைப்புகளை கட்டியெழுப்பாமல் - சட்டப்பூர்வமற்ற புரட்சிகர வேலையை செய்கிறோம் என்று காட்டுக்குள் ஒளிந்துக் கொல்வதால் //

ம க இக காட்டுக்குள் வேலை செய்கிறதா?

மக்களை அணிதிரட்டி அவர்களிடையே செயல்படுவதைத்தான் ம க இக செய்கிறது. மாறாக பாராளுமன்றத்தில் ஒளிந்து கொண்டு மக்களுக்கு எந்த பதிலும் விளக்கமும் கொடுக்காமல் பிற வோட்டு கட்சிகள் போலவே செயல்படும் CPM, மக்களை ஒவ்வொரு பிரச்சினைக்கும் அனுகும் ம க இகவினரை காட்டுக்குள் அரசியல் செய்வதாக சொல்வது நகைப்பை வரவழைக்கிறது.

said...

Published in Santhipu blog:

//

இந்திப் புரட்சியின் முதல் கட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கட்டியதோடு முடிந்து விட்டது.

//

1947 ஐத்தான் சந்திப்பு இப்படிக் கருதுகிறார் போலும். ஆட்சிமாற்றத்தையே ஏகாதிபத்தியம் ஒழித்துக் கட்டப்பட்டதாக இவர் கருதுகிறாரே.

அப்படி என்றால் இந்தியாவில் 2004இலேயே இந்து மதவெறி பாசிசம் ஒழித்துக் கட்டப்பட்டு விட்டது என்றும் உளற வாய்ப்புள்ளது.

அதுதான் பி.ஜே.பி தோற்கடிக்கப்பட்டு விட்டதே.



47இல் மவுண்ட்பேட்டன், ஜவஹர்லாலிடம் ஒப்படைத்துப் போனது வெறும் ஆட்சி அதிகாரத்தைத் தான். ஆனால் மதுரை ஹார்வி மில், கிளாக்சோ, பின்னி, கிளைட்டன், ஜி.ஈ.,கிரீவ்ஸ் எனப் பல பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம் அப்படியேதான் 47க்குப் பிறகு தொடர்ந்தன. இதன் பேரில் சந்தேகம் இருந்தால் காம்ரேட் பி.ஆர். எழுதிய ‘திராவிட மாயை’ புஸ்தகத்தை சந்திப்பு மறுபடி வாசிக்கட்டும்.

இதற்க்கும் பதில் சொல்லட்டும்:

The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh

http://www.rupe-india.org/43/ghosh.html

தொழில், சுரங்கம், வங்கி எனப் பல கண்ணிகளால் இந்தியப் பொருளாதாரமே சிக்குண்டு அந்நியனுக்கு அடிமையாகிக் கிடப்பதில் இருந்து விடுபடாமலேயே வந்த ஆட்சிமாற்றத்தை சுதந்திரம் என்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக்கப்பட்டு விட்டது என்றும் கருதுவதும், தேர்தலில் தோற்றதாலேயே இந்துத்துவம் ஒழிக்கப்பட்டு விட்டது எனக்கருதுவதும் ஒன்றுதான். பி.ஜே.பிதான் ஆட்சியில் இல்லையே..ஆரெஸெஸ் காரன்கள் சிபிஎம் தொண்டர்களை எப்படி கேரளத்தில் கொல்லமுடிகிறது?


கட்டபொம்மன்

said...

//

தோழர் ஜோதிபாசு மாநில அரசின் அதிகாரம் குறித்து இரத்தினச் சுருக்கமாக கூறியது என்ன தெரியுமா? அது ஒரு பெரிய முனிசிபாலிட்டி... அவ்வளவுதான்.

//



முனிசிபாலிடி எனத் தெரியவே 25 ஆண்டுகள் ஆனது பெரிய சோகம்தான் என்றாலும் முனிசிபாலிட்டிக்காக போராடுவதுதான் கம்யூனிஸ்ட்களின் லட்சியமா? தமிழ்நாட்டில் இதை அப்படியே பொருத்தினால் 10 அல்லது 12 கவுன்சிலர்களை வென்றெடுப்பதுதான். இழப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால் வெல்வதற்கோ 12 முனிசிபல் சீட் இருக்கிறது என்பதைச் சொல்லவா ஏடறிந்த வரலாற்றில் இருந்தெல்லாம் சமூகவிசாரணை மேற்கொள்ளப்பட்டது?

கேவலமாக இல்லையா?



பன்றித் தொழுவத்தின் தலைமை மேய்ப்பனாகிப் போன பிறகுதான் சோம்நாத் காம்ரேடுக்கு பன்றிக்குட்டிகளின் நாத்தம் தெரிகிறதாம்.. வேசம்தான் போட்டாச்சே.. ஒழுங்குக்கு வராத பன்றிகளை அடித்துத் திருத்தவாவது செய்கிறாரா? பன்றிமேய்ப்பர் பன்றிக்குட்டிகளின் முன் மண்டியிட்டு “பன்றிகளே..நான் ஓடிப் போய் விடலாம் போலிக்கிறது” இதனை விட அபத்தமாக கிரேசிமோகம் கூட வசனம் எழுத முடியாது.


கட்டபொம்மன்

said...

//

இந்திராவின் எமர்ஜென்சி அடக்குமுறையின் போது இத்தகைய சட்டபூர்வமற்ற வேலைகளையும் - சட்டப்பூர்வமான வேலைகளையும் சி.பி.எம். மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் கூட நக்சலிசவாதிகள் தங்களை சீனாவின் ஏகப்பிரதிநிதிகளாகவும் அவர்கள் வழிவந்தவர்களாகவும் மார்தட்டிக் கொண்டனர். அதே போல் சி.பி.ஐ. ரஷ்யப் பிரதிநிதியாக தோள் உயர்த்திக் கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இந்த இரண்டு ஆதரவுகளையும் நிராகரித்து தன்னந்தனியாக களத்தில் நின்று போராடி தற்போது முன்னேறியுள்ளது.

//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் தலைமை புளுகியதே அது ஏன்? அதற்கெல்லாம் ஒரே பதில்தான்.. உங்கள் தலைமையே எமெர்ஜென்சியின்போது தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.. ஆதரவு தருவதற்கு தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தொண்டர்களின் தியாகத்தை பி.ஆர். பேரம் பேசினார். இப்போது எமெர்ஜென்சியை எதிர்த்த மாதிரி பம்மாத்து செய்கிறீர்கள்.

கட்டபொம்மன்

Related Posts with Thumbnails