TerrorisminFocus

Tuesday, February 26, 2008

தமிழச்சியை விமர்சிக்க புகுந்த ஆணிய தற்குறிகள்

மிழச்சி பெண்ணியம் என்ற பெயரில் எழுதி வருவம் விசயங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை. அவர் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆயினும் இங்கு புனித பிம்பம் வேசம் கட்டிக் கொண்டு அவரது தளத்தை நீக்க வேண்டும் என்று கலாச்சார காவலர்களாக அவதாரமெடுத்துள்ளவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசத்தின் மீது ஏதோ அதீத அருவெறுப்பு கொண்டவர்கள் போல நடிக்கும் இந்த கயவர்கள் முடிந்தால் தமது வீடுகளிலும், சாலைகளிலும், வெகுசன ஊடகங்களிலும் இருக்கும் ஆபாசத்தை எதிர்த்து அட்டை கத்தி சுழற்றட்டும். ஏன் அவ்வளவு கஸ்டம்? இங்கே இணையத்தில் கிளு கிளுப்பாக, இரட்டை அர்த்தங்களில் எழுதி பெண்ணுடலை விற்று தமது வலைப்பூ கட்டுரைகளை சூடாக்கியவர்களுக்கு எதிராக தமது அட்டை கத்திகளை சுழற்றி விட்டு பிறகு தமிழச்சியை பார்த்து பேசட்டும்.

இந்த விசயம் வேறு எந்த சில்லரை பிரச்சினைகள் போலவும் சிற்சில சலசலப்புக்கு பிறகு அமுங்கிவிடும் என்றே தலையிட விரும்பமின்றி இருந்தேன். ஆயினும் இந்த பிரச்சினை மேலதிகமாக தமிழச்சி ஒரு பெண் என்ற அடிப்படையில் அவரை மையப்படுத்தி வக்கிரமாக தனிமைப்படுத்தும் எல்லையை அடைந்துவிட்ட நிலையில் இதனை பார்த்துக் கொண்டு இருக்க இயலாது என்பதால இந்த பதிவு.

தமிழச்சி பதிவுகள் ஆபாசம் என்பது எனது கருத்தல்ல. அவை ஆபாசமல்ல என்பதை அறிவிக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் விவாதம் செய்ய வரலாம். அவை பிரச்சினைகளை பேசாமல் வெறும் பரபரப்பு சமாசாரமாக தீர்ந்து போகிற அம்சத்தில்தான் அவர் மீது எனது விமர்சனங்கள் என்பதை குறிப்பிட்டு விடுகிறேன். ஒருவேளை தமிழச்சி தமிழ்மணத்திலிருந்து யோனி என்கிற வார்த்தை பிரயோகத்திற்க்காக நீக்கப்படுவார் எனில் எனது பதிவுகளில் தலைப்புகள் எல்லாவற்றிலும் இனிமேல் யோனி உள்ளிட்ட பெண்ணிய உடல் சார்ந்த வார்த்தைகளை இடம் பெறச் செய்வதன் மூலம் போராட தலைப்பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழ்மணத்தில் ஆபாசம் சார்ந்த விசயங்களை தடுக்கும் கொள்கைகளை தமிழச்சிக்கு பயன்படுத்தும் அதே சட்ட வரம்புகளின் அடிப்படையில் எல்லார் மீதும் பயன்படுத்த தமிழ்மண சமூகத்தை நிர்பந்திக்கவும் தயாராக இருக்கிறேன். தமிழ்மணத்தில் முன்பொருமுறை தமிழச்சி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே கடுமையான கண்டனத்துக்குரியது எனும் போதும் அது சூழ்நிலை கருதி எடுக்கப்பட்ட ஒரு தன்மையான நடவடிக்கை என்ற அளவில் சமரசமாக இருந்து கொள்ளலாம். ஆனால் இது தொடர்வதை பார்த்துக் கொண்டிருக்க இயலாது.

தமிழ்மணம் இந்த விசயங்களை அதன் சரியான அம்சத்தில் உள்வாங்கி பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். அல்லது இன்னும் சிறப்பாக இந்த அம்சத்தில் அது தலையிடாமல் இதனை விட முக்கிய வேலைகள் இருந்தால் அதில் உருப்படியாக நேரம் செலவழிக்கலாம் என்று கருதுகிறேன். இதில் எனது தெளிவான முந்தைய நிலைப்பாடுகளையே வைக்கிறேன். தமிழ்மணம் எனும் சுதந்திர வெளியின் சட்டங்கள் இங்கு உலாவும் தனிப்பட்ட ஒவ்வொருவராலும் தீர்மாணிக்கப்பட வேண்டும். தமிழ்மண வாசகர்களின் கையில் கலாச்சார காவலர் உரிமை இருக்கட்டும் என்கிற எனது ஆரம்ப கால நிலைப்பாட்டை இங்கு மீண்டும் நினைவுறுத்துகிறேன்.

அசுரன

18 பின்னூட்டங்கள்:

said...

சரியான நேரத்தில் குரல் கொடுத்திருக்கிறீர்கள் தோழர், உங்களது கருத்துக்களோடு நான் முழுமையாக உடன்படுகிறேன், எனக்கு தமிழச்சியின் மீது எவ்வளவோ விமர்சணங்கள் இருந்த போதிலும் 'யோனி' என்கிற பதத்தை பயண்படுத்திய காரணத்துக்காகவே அவர் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுவார் எனில் அதற்கு எதிராக எனது வன்மையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன், மேலும் அதற்கு எதிராக நீங்கள் கைகொள்ளும் போராட்ட முறை போன்று பெண்ணியம் பேசுகின்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுவதற்கும் நான் தயாராயிருக்கிறேன்.

தோழமையுடன்
ஸ்டாலின்

said...

அசுரன்,

நீக்க வேண்டும் என்று சொல்வது சரியல்ல என்ற உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன், ஆனால் தமிழச்சி செய்வது ஒரு மலிவான விளம்பர உத்தி என்றும் சொல்லிக்கொள்கிறேன், அது அவர் விருப்பம் , ஆனால் அதே சமயம் இப்படிலாம் எழுதுபவரை யாரேனும் விமர்சித்தால் பதில் சொல்வதை விட்டு அவரை தாக்க புகுவது ஏன்?

அவருக்கு எவ்வளவு உரிமை இருக்கோ, அதே போல வெகுஜன புழங்கும் இடத்தில் வரும் ஒன்றை விமர்சிக்க அனைவருக்குமே உரிமை உண்டு.

வெற்றிக்கொண்டான் போன்றோர் மேடை போட்டு ஜெ வை விமர்சிப்பது இல்லையா, அது என்ன நடையாக இருந்தாலும், அதுக்கும் இடம் இருக்கு என்பது போல, இவர் எப்படி வேண்டுமானாலும் எழுதட்டும், ஆனால் வரும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை, அதே சமயம் என்னை எப்படி விமர்சிக்கலாம் என்று கேட்பது ஏன்.

குசும்பன் ஒரு பதிவில் கிண்டலாக தான் சொன்னார், அதற்கே அவரை நீ யாருடா என்ற ரேஞ்சில் பேசினார்,ஏன் அவர் கிண்டல் செய்யக்கூடாது, தாராளமாக கிண்டல் செய்யலாம், தமிழ்மணத்தில் வரும் பதிவை எல்லாம் யார் வேண்டுமானாலும் அலசி ஆராயலாம், கிண்டல் செய்யலாம் .படிக்க விருப்பம் இருந்தால் படிக்கட்டும் இல்லைனா கண்ணை மூடிக்கொண்டு போகட்டுமே.

தமிழ் மணத்தில் வருவது என்றில்லை, பிளாக்கில் வந்து விட்டாலே அது அனைவரின் பார்வைக்கும், விமர்சனத்துக்கும் ஆட்பட்டதே இங்கே யாருக்கும் புனித பிம்ப ,போராளி என்ற கவசம் கிடையாது.

அவரவர் எழுத்து, பிலாக் அவரருக்கான இடம் , அதோடு அவர்கள் எல்லை முடிந்தது, அதை தாண்டி வந்து என்னை பற்றிலாம் இங்கே யாரும் பேசக்கூடாது என்பதும் தற்குறித்தனமே.

said...

//ஆனால் தமிழச்சி செய்வது ஒரு மலிவான விளம்பர உத்தி என்றும் சொல்லிக்கொள்கிறேன்,//

கருத்துக்களுக்கு நன்றி வவ்வால். இதையேதான் நானும் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

@@@அவை பிரச்சினைகளை பேசாமல் வெறும் பரபரப்பு சமாசாரமாக தீர்ந்து போகிற அம்சத்தில்தான் அவர் மீது எனது விமர்சனங்கள் என்பதை குறிப்பிட்டு விடுகிறேன்.@@@
+++++++++++

உங்களது பெரும்பாலான் கருத்துக்களின் ஒப்புதல் என்றாலும் சில விசயங்களில் கடுமையாக மாறுபடுகிறேன்.

//
அது அவர் விருப்பம் , ஆனால் அதே சமயம் இப்படிலாம் எழுதுபவரை யாரேனும் விமர்சித்தால் பதில் சொல்வதை விட்டு அவரை தாக்க புகுவது ஏன்?
//

இதற்க்காக அவரை விமர்சனம் செய்வதையும், இதற்க்காக அவரிடம் போராடுவதையும் யாரும் தடுக்கவில்லை. அப்படி போராடுவதே சரியானதாகும். அப்படி யாரும் போராடியிருந்தார்கள் எனில் வாழ்த்துக்கள். சிலர் அவரை சரியான அம்சத்தில் விமர்சித்திருந்தார்கள் என்றே கருதுகிறேன்.

//குசும்பன் ஒரு பதிவில் கிண்டலாக தான் சொன்னார்,//

குசும்பன் பதிவில் உண்மையில் குசும்புதான் செய்துள்ளார். அவற்றில் எனக்கு ஒப்புதல் இல்லை. உண்மையில் அக்கறையெனில் தமிழச்சியை நேரடியாக சரியான தர்க்க முறையில் விமர்சித்திருக்க வேண்டும். அதைவிடுத்து குசும்பன் எழுதியது ஒரு கீழ்த்தரமான விளம்பர யுக்தியே. ஏனெனில் இதற்க்கு முன்பு தமிழச்சி எழுதியதை சாக்கிட்டு தமிழ்மண பதிவர்கள் சிலர் அதே போன்ற பாணியில் கிண்டல் நடையில் பல பதிவுகள் எழுத கடைசியில் பாதிக்கப்பட்டது தமிழச்சியே. சில்லுண்டி வேலை செய்த பதிவர்கள் பாதுகாப்பாக ஒதுங்கி கொள்ள பாதிக்கப்பட்டவருக்கே தண்டனை கொடுக்கப்பட்டது.

விசயம் அப்படியிருக்க அதே உத்தியை மீண்டும் குசும்பன் செய்வார் எனில் தமிழச்சி பார்த்து கொண்டு சும்மாயிருப்பார் என்று எனக்கு தெரியவில்லை. குசும்பன் தமிழச்சியை கிண்டல் செய்யலாம் எனில் Provided அந்த சூழல் தமிழச்சியை கிறுக்கச்சியாக்கும் எனில் தமிழச்சிக்கும் 'யாருடா டேய்' என்று கேட்க்க அதே சுதந்திர உரிமையுள்ளது என்றே கருதுகிறேன். மீண்டும் ஒரு விசயம்தான் இவற்றையெல்லாம் எடை போட்டு சான்றிதழ் தரும் பிரச்சினையை வாசகர்களிடம் விட்டு விடலாம்.

அசுரன்

said...

தமிழச்சி விளம்பர மோகத்தில் யோனியைக் கையில் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அவருடைய விளம்பர மோகம் இன்னுமா தணியவில்லை?

தமிழ்மணமும் விளம்பரத்திற்காகத் தமிழச்சியை பலி ஆடாகப் பயன்படுத்துகின்றார்களோ?

said...

thamizachi mudhalil ozungaga dhan ezhudhi kondirundhar. avarai over aka thoondi vittadhu ivargal dhaan.avar ezudhiyadhai vida vakkiramana, abathamana, thattaiyana padhivugal thamizmanathil varugiradhu.
nadigaigalin ulladai virkum padhivugal ellam enna vagai saarnthavai?

said...

சரியான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவு

உங்கள் போராட்டத்துக்கு நானும் ஆதரவு தெரிவிக்கிறேன் தோழர்

said...

சமஸ்கிருத "யோனி" என்கிற சொல்லை பயன் படுத்தக்கூடாதாம். தமிழில் அதை சொல்ல வேண்டுமாம். தமிழில் சொல்லியிருந்தால், இந்த கும்பல் பெரிய கூப்பாடு போட்டிருக்கும்.

கன்னடத்தில் இதே போன்றதொரு சர்ச்சை வந்திருந்தது. "துண்ணெ" "துல்லு" என்கிற சொற்களை பயன் படுத்தக்கூடாதென்றும், சமஸ்கிருத "ஷிஷ்ண" "யோனி" என்கிற சொற்களை பயன்படுத்தலாமென்றும் கூறப்பட்டது.

கூதி, சுண்ணி என்றோ கூட தமிழச்சி அவர்கள் சொல்லியிருக்க‌லாம். அதிலும் ஆபாசம் இருப்பதாக தெரியவில்லை. ஆபாசம் என்பது சொற்களில் இல்லை.

J.P.Ravichandran, Bangalore

said...

//குசும்பன் பதிவில் உண்மையில் குசும்புதான் செய்துள்ளார். அவற்றில் எனக்கு ஒப்புதல் இல்லை. ///

நிச்சயமாக குசும்புதானே ஒழிய அதில் அவர் பதிவை பற்றியோ அல்லது அவரை பற்றியோ விமர்சனம் ஏதும் இல்லை. அந்த பதிவுக்கு நிச்சயமாக உள்நோக்கமும் கிடையாது.

//உண்மையில் அக்கறையெனில் தமிழச்சியை நேரடியாக சரியான தர்க்க முறையில் விமர்சித்திருக்க வேண்டும். //

நிச்சயமாக அக்கறை எல்லாம் கிடையாது, இருந்தால் தானே விமர்சிக்க, அவர் பதிவு அவர் என்ன வேண்டும் என்றாலும் எழுத்தட்டும் இதில் கருத்து சொல்ல நான் யார்?

//அதைவிடுத்து குசும்பன் எழுதியது ஒரு கீழ்த்தரமான விளம்பர யுக்தியே. //

:((((

said...

How can it be vulgar word when they have built temples to worship the same stuff in india in public place

said...

/////தமிழச்சி பெண்ணியம் என்ற பெயரில் எழுதி வருவம் விசயங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை. அவர் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன./////

வணக்கம் தோழர்!

உங்களுடைய பதிவுகளை இதுவரையில் படித்ததில்லை. என்னைப் பற்றிய பதிவு போட்ட பின் படிக்க ஆரம்பித்திருந்தேன். சமீபத்தில் தோழர் இரயாகரனுடன் பேசிக் கொண்டிருந்த போது உங்களுடைய பதிவுகளை படித்துப் பார்க்கும்படி சிபாரிசு செய்தார். முடிந்தால் உங்களுடன் விவாதம் செய்ய சொன்னார். பயந்திடாதீங்க... என் தமிழ் அறிவையும், அரசியல் அறிவையும் வளர்த்துக் கொள்ளத் தான். மற்றும் தோழர்கள் ஸ்டாலின், தியாகு என்ற இருவர் பின்னூட்டங்களையும் படிக்க நேர்ந்தது. உங்களின் அனுகுமுறை வித்தியாசமாக இருந்தது. சற்றென யார் மீதும் நல்லெண்ணம் வந்து விடுதில்லை எனக்கு. தோழர் இரயாகரன் மீது எனக்கு மதிப்பு உண்டு. அவருடைய கணிப்பு பொய்திருக்காது.

மற்றும் என்மேல் ஏதோ விமர்சனங்கள் இருக்கிறதாக சொல்கிறீர்கள். என்னவென்று பேசித் தீர்த்துக் கொள்ளலாமே தோழர்!

///வவ்வால் said...

குசும்பன் ஒரு பதிவில் கிண்டலாக தான் சொன்னார், அதற்கே அவரை நீ யாருடா என்ற ரேஞ்சில் பேசினார்,ஏன் அவர் கிண்டல் செய்யக்கூடாது, தாராளமாக கிண்டல் செய்யலாம், தமிழ்மணத்தில் வரும் பதிவை எல்லாம் யார் வேண்டுமானாலும் அலசி ஆராயலாம், கிண்டல் செய்யலாம் .படிக்க விருப்பம் இருந்தால் படிக்கட்டும் இல்லைனா கண்ணை மூடிக்கொண்டு போகட்டுமே.

தமிழ் மணத்தில் வருவது என்றில்லை, பிளாக்கில் வந்து விட்டாலே அது அனைவரின் பார்வைக்கும், விமர்சனத்துக்கும் ஆட்பட்டதே இங்கே யாருக்கும் புனித பிம்ப ,போராளி என்ற கவசம் கிடையாது.////

வவ்வாலு கவுந்துக்குனு பார்க்காதே! விமர்சிக்கட்டும், என்னை விமர்சிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. நான் புனித பிம்பம் என்றோ, பெரிய புடுங்கி என்றோ என்றும் சொன்னது இல்லை. ஆனால் என்னை விமர்சித்தால் மறுத்து பேச எனக்கு இருக்கும் உரிமையை நீங்கள் விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயமாக நினைக்கிறீர்கள்.

said...

///ஸ்டாலீன்

எனக்கு தமிழச்சியின் மீது எவ்வளவோ விமர்சணங்கள் இருந்த போதிலும் ///

என்ன பிரச்சனை பேசித் தீர்த்துக் கொள்வோம் தோழர்!

said...

///ஸ்டாலீன்

எனக்கு தமிழச்சியின் மீது எவ்வளவோ விமர்சணங்கள் இருந்த போதிலும் ///

என்ன பிரச்சனை பேசித் தீர்த்துக் கொள்வோம் தோழர்!

said...

அன்புமிக்க தோழர் அவர்களுக்கு என்னுடைய புரட்சிகர வணக்கங்கள். இது தான் என்னுடைய வளைதளம், தங்களுடன் இணைத்துக் கொள்ளவும். தொடர்ந்து பார்த்து என்னுடைய எழுத்துக்களை விமர்சனம் செய்து இந்த எழுத்துலகில் நீடித்திருக்கச் செய்ய வேண்டுகிறேன்.

தோழமையுடன்,
பகத்

Related Posts with Thumbnails