தமிழர் வழிபாட்டுரிமை போரில் வென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமிக்கும், தோழர்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!
இன்று காலை சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வெற்றிகரமாக தேவாரத்தை பாடி வழிபட்டிருக்கிறார் சிவனடியார் ஆறுமுகச்சாமி.
( திருத்தம்: இன்று காலை சிவனடியார் ஆறுமுகசாமி திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது, அது தவறான தகவலாகும் ஆறுமுகச்சாமி காவல் துறையால் கைது செய்யப்பட்ட கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் இந்த நிலையில் காலையில் சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் வேறு சில சிவனடியார்களே தேவாரம் பாடி வழிபட்டனர், அரசை பகைத்துக் கொள்ள விரும்பாத தீட்சித ரவுடிக் கும்பல் அவர்களை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்தர் பல்டி அடித்தது.)
மூன்று நாட்களுக்கு முன்பாக சிதம்பரம் திருக்கோவிலில் தமிழில் பாடி வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது, அந்த ஆணையை பெறுவதற்கென, சிவனடியார் ஆறுமுகச்சாமியும் அவருக்கு பக்கத்துணையாக மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான ம.க.இ.க, பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் நடத்திய போராட்டம் நெடியதாகும்.
முன்னொரு சமயத்தில் திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகச்சாமி தேவாரம் பாடுவதற்கு முயன்ற பொழுது அவரது கையை முறித்து கோயிலுக்கு வெளியே வீசியெறிந்தது பார்ப்பன தீட்சித ரவுடிக் கும்பல், பார்ப்பன கும்பலின் இந்த அடாவடித்தனத்திற்கு பிறகு, தமிழில் பாட முயன்று தாக்கப்பட்ட அந்த முதியவருக்காக களத்தில் இறங்கியது மனித உரிமை பாதுகாப்பு மையம்., அதன் தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கிய கழகமும் தமிழ்நாட்டில் தமிழில் வழிபட உரிமையற்ற இந்த கேவலமான நிலையை மக்களிடம் விளக்கி தெருமுனை கூட்டம், சுவரொட்டி பிரச்சாரம், பேருந்து பிரச்சாரம், கையெழுத்து இயக்கம் என்று வீச்சாக இயங்கியது, இந்த பிரச்சார இயக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தின, அதே சமயத்தில் (மனு)நீதிமன்றமோ மொக்கையான காரணங்களை கூறி தமிழ் வழிபாட்டுரிமையை மறுத்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்பளித்தது, "உங்கள் மனதுக்குள்ளேயே பாடிக் கொள்ளுங்கள்" என்று திமிர் வழிய பேசியது நீதிமன்றம்."
தொடர்ந்து செய்யப்பட்ட மேல்முறையீடுகளாலும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த வழக்கறிஞர்களின் அயராத உழைப்பு, சிவனடியார் ஆறுமுகச்சாமியின் சமரசமில்லாத போராட்டம் இவற்றின் காரணமாகவும் இறுதியில் அரசும் நீதிமன்றமும் அடிபணிந்தன, சிதம்பரம் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபடலாம் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டது.,
தமிழக அரசு வெளியிட்ட இந்த ஆணைய நிறைவேற்றுவதற்காக, சிவனடியார் ஆறுமுகச்சாமியும், மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலின் உள்ளே நுழைந்த பொழுது அவர்களை சுற்றி வளைத்து தாக்கியது தீட்சித பொறுக்கி கும்பல், இந்த தாக்குதலில் சிவனடியாரின் மூக்கு கண்ணாடி உடைந்து சிதறியது, இத்தோடு நிறுத்தாமல் அங்கு 'காவலுக்கு' வந்திருந்த காவல்துறையினரையும் சேர்த்து தாக்கியதோடு அவர்களை கடித்து குதறியது தீட்சித வெறிநாய்கள், இருப்பினும் இந்த வெறிநாய்களை அடித்து உதைகாமல், பவ்யமாக தூக்கி வெளியில்விட்ட போலீசு, போராடிய தோழர்கள் மீது தடியடி நடத்தி தீட்சிதர்களை விட தாங்கள் பெரிய வெறி நாய்கள் என்பதை நிரூபித்தது. போலீசு வெறிநாய்கள் நடத்திய இந்த தாக்குதலில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட தோழர்களின் மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது, குருதி கொட்ட கொட்ட அவர்களை துரத்தி துரத்தி தடியால் தாக்கின போலீசு வெறிநாயகள், தமிழ்நாட்டில் தமிழில் வழிபடும் உரிமை வேண்டி போராடியதற்காக அந்த தோழர்கள் தாக்கப்பட்டனர், தாக்கப்பட்டதோடு பல தோழர்கள் கைதும் செய்யப்பட்டனர், ம.க.இ.க.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த 35 தோழர்களை கைது செய்து சிறையிலடைத்தது போலீசு.
இந்த அராஜகத்தை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதோடு, சென்னையில் ஆர்ப்பாட்டமும் பத்திரிக்கையாளர் சந்திப்பினையும் நடத்தியது மக்கள் கலை இலக்கிய கழகம். இந்த செய்திகளையெல்லாம் எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை, கட்டுப்பாட்டாக இவற்றை இருட்டடிப்பு செய்தன. இருப்பினும் தோழர்களின் வீச்சான போராட்டத்தின் விளைவாக, தமிழில் வழிபடுவதை தடுக்கும் பொறுக்கி தீட்சிதர்களை நேற்று எச்சரித்து அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு, இந்த நிலையில்தான் இன்று காலையில் சிவனடியார் ஆறுமுகச்சாமி, மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த தோழர்கள் சிதம்பரம் கோவிலின் உள்ளே நுழைந்தனர், அப்பொழுது திருச்சிற்றம்பல மேடையில் ஏறிய ஆறுமுகச்சாமி நெஞ்சுருக தேவாரம் பாடி சிதம்பரம் நடராசனை வழிபட்டார்.
தீட்சித பார்ப்பன வெறிநாய்களின் சதி வேலைகளையும் தாக்குதல்களையும், அரசியல் செல்வாக்கினையும் மக்கள் துணையோடு எதிர்கொண்டு வீழ்த்தி தமிழர்களின் வழிபாட்டுரிமைக்கென நடத்தப்பட்ட போரில் வென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமி, மனித உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளை சேர்ந்த தோழர்களுக்கு எங்கள் செவ்வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இமெயிலில் நந்தன்
7 பின்னூட்டங்கள்:
தேவராம் என்பதை கடவுளை வாழ்த்தும் பாடல்தானே, இதை பாடுவதற்கு இவ்வளவு கஷ்டப்படவேண்டியிருக்கு. இந்த கூத்தெல்லாம் நம்மூர்ல மட்டும்தான் பார்க்க முடியும். கொடுமடா சாமீய்ய்....
இன்று(05 March, 2008) காலை பத்து மணியளவில் மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் விழுப்புரம் மாவாட்ட அமைப்பாளர் ஏழுமலை தலைமையில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புரட்சிகர மாணவர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும். நடராஜர் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். பாமக மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன், விடுதலை சிறுத்தை அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலாளர் காவியச் செல்வன் ஆகியோரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் தேவாரம் பாடுவதற்காக நடராஜர் கோயிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடினர். 30க்கும் மேற்பட்டோ ர் தேவாரம் பாடியதால் கோயில் வளாகம் முழுவதும் அது எதிரொலித்தது.
அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் தலைமையில் கடலூர் எஸ்.பி. பிரதீப்குமார், சிதம்பரம் ஏ.எஸ்.பி செந்தில்வேலன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோர்ட் புறக்கணிப்பு
சிதம்பரம் வக்கீல்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் நடனம் தலைமையில் நேற்று நடந்தது. தேவாரம் பாட ஆறுமுகசாமிக்கு ஆதரவாக சென்ற வக்கீல்கள் மீது போலிஸார் நடத்திய தடியடையைக் கண்டித்து 8ஆம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோர்ட் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழ்முரசு
தோழர் அசுரன் வணக்கம்?
விவாதம் பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருக்கிறீர்களே தோழா?
மன்னிகனும் தோழி தமிழச்சி,
விரிவாக எதுவும் எழுத அவகாசமில்லாத சூழலில் உள்ளேன். பேசலாம். உங்களது இமெயில் முகவரி இருந்தால் எனது பிளாக்கரில் போடுங்கள்.
அசுரன
தமிழனுக்குக் கிடைத்த வெற்றி அசுரன் இது. வாழ்த்துகள் முதல்வருக்கு.
தமிழச்சியுடன் எதைப்பற்றி விவாதம் அசுரன்? யோனி பற்றியா?
இது ஒரு நாள் கூத்து என்பதை போல் தெரிகின்றது. Just to take photos/video & prove that ditshidars are not against Tamil. சாதாரண மனிதர்கள் போலீஸ் துணை இன்றி தனியாக சென்று வழிபடும் நாள் வரும் என்று நம்புவோம்.
மறுபடியம் பரிகார பூஜை - தீட்சிதர்கள் மீண்டும் விஷமம்!
வியாழக்கிழமை, மார்ச் 6, 2008
http://thatstamil.oneindia.in/news/2008/03/06/tn-deekshidars-do-it-again.html
சிதம்பரம்: ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் பாடிச் சென்ற பின்னர், கோவிலைக் கழுவி பரிகார பூஜை செய்துள்ளனர் நடராஜர் கோவில் தீட்சிதர்கள். இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக சிதம்பரமே பெரும் பரபரப்பில் மூழ்கிக் கிடக்கிறது. தமிழா, தீட்சிதர்களா என்ற பெரும் கேள்விக்கு விடை காண முடியாமல் சிதம்பரம் மக்கள் பெரும் டென்ஷனில் உள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பலத்தில் (கோவில் கருவறை) தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ்த் திருமறைகளை பாட கோரி சிவனடியார்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
இப்படிப் பாட எந்தத் தடையும் இல்லை என்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்காத கோவில் தீட்சிதர்கள், தேவாரம் பாட ஓதுவார்களை அடித்து விரட்டினர். தடுக்க வந்த போலீஸாரையும் தாக்கினர்.
இதுதொடர்பாக 11 தீட்சிதர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தேவாரம் உள்ளிட்டவற்றை பாடுவது யார் தடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கடுமையாக எச்சரித்தது.
இந்த நிலையில் நேற்று விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 25 பேர் தாங்கள் தேவாரம், திருவாசகம் பாடவிருப்பதாக முறைப்படி அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கால்துறையிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களில் ஐந்து பேர் மட்டும் திருச்சிற்றம்பலத்திற்குள் சென்று பாடலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளே சென்ற 25 பேரும் திருச்சிற்றம்பலத்திற்குள் செல்ல முயன்றனர்.
ஆனால் அனுமதிக்கப்பட்ட ஸ்டாலின், எழுமலை, ரவி, முருகன், சண்முகம் ஆகியோர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஐந்து பேரும் சட்டைகளை கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.
அவர்களுடன் மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார், டி.எஸ்.பி. செந்தில்வேலன் உள்ளிட்டோரும் சட்டைகளைக் கழற்றி விட்டு உள்ளே சென்றனர்.
மரியாதை செய்த தீட்சிதர்கள்:
உள்ளே சென்ற 5 பேரும், தேவாரத்திலிருந்து ஒரு பாடலையும், திருவாசகத்திலிருந்து ஒரு பாடலையும் மொத்தம் 20 நிமிடங்கள் பாடினர். அதன் பின்னர் அவர்களுக்கு தீபாரதானை காட்டி, மாலை அணிவித்து, பட்டாடை அணிவித்து தீட்சிதர்கள் மரியாதை செய்தனர்.
தீ்ட்டு கழிப்பு:
ஆனால் அதன் பிறகுதான் குழப்பம் நடந்துள்ளது. மாலை, மரியாதையுடன் வரவேற்று ஓதுவார்களை அனுப்பி வைத்த தீட்சிதர்கள், அதன் பிறகு திருச்சிற்றம்பலத்தை கழுவி, பரிகார பூஜை நடத்தி தீட்டுக் கழித்துள்ளனராம்.
இது சிதம்பரத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களையும், சிவனடியார்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த செளந்தரபாண்டியன் என்பவர் கூறுகையில், ஓதுவார்களும் சிவனடியார்களும் தேவாரம் பாடி விட்டு போன பின்னர் திருச்சிற்றம்பலத்தை நன்றாக குழு, தீட்டுக் கழித்து, பரிகார பூஜை செய்துள்ளனர் தீட்சிதர்கள்.
இது தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் பெரும் இழுக்கு விளைவிக்கும் செயலாகும். இந்த செயலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தீட்சிதர்கள் பரிகார பூஜை செய்ததாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் விடுதலை:
இதற்கிடையே, கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 46 பேரும் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டனர். முதல்வர் கருணாநிதியின் உத்தரவைத் தொடர்ந்து இவர்கள் கடலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி பிறப்பித்த உத்தரவின் நகல், சிதம்பரம் 2வது குற்றவியல் நீதிபதி வசந்தியிடம் வழங்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு கடலூர் சிறை கண்காணிப்பாளர் முருகேசனிடம் வழங்கப்பட்டது. அதன் பேரில் ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 33 பேரும், தீட்சிதர்கள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அதேபோல கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறார் சிறையில் அடைக்கப்பட்ட 2 சிறுவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
சிறையிலிருந்து வெளிவந்த ஆறுமுகச்சாமியை அவரது ஆதரவாளர்கள் திரளாக கூடி வரவேற்று அழைத்துச் சென்றனர். ஆறுமுகச்சாமி கூறுகையில், நாளை (இன்று) நான் மீண்டும் நடராஜர் கோவிலுக்குச் சென்று தேவாரம் பாடவுள்ளேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். அனைவரும் இன வேறுபாடின்றி தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாட வேண்டும். தமிழ் மொழி வளர வேண்டும் என்றார்.
அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதிக்கு போராட்டக் குழுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜு நன்றி தெரிவித்தார்.
இன்று நாட்டியாஞ்சலி:
இத்தனைக் குழப்பத்திற்கு மத்தியில் வருடா வருடம் நடக்கும் நாட்டியாஞ்சலி விழா இன்று சிதம்பரத்தில் தொடங்குகிறது.
5 நாட்களுக்கு நடைபெறும் இந்த நாட்டிய விழாவில், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிவனடியார்கள், தீட்சிதர்கள் மோதல் தொடர்பாக பதட்டம் நிலவுவதால் நாட்டியக் கலைஞர்களுக்கும், நாட்டியாஞ்சலி விழாவுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment