TerrorisminFocus

Wednesday, April 28, 2010

பின்னுட்டம்

நேற்று மாலையிலிருந்து எனது பதிவில் நானே பின்னூட்டம் இட முடியவில்லை. கீழ்வரும் தகவல் வந்து மன்னிப்பு கேட்கிறது. (test என்று பின்னூட்டமிட்டால் வருகிறது)

""
We're sorry, but we were unable to complete your request.

When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

* Describe what you were doing when you got this error.
* Provide the following error code and additional information.

bX-6rscy0
""

எனவே, எனது பின்னூட்டங்களுக்காக ஒரு பதிவு. இந்தப் பதிவில் உ.த. அண்ணாச்சிக்கான எனது பதிலின் 3வது பாகம் மற்றும் சுகுணாவுக்கான பதில்கள் இடம்பெறுகின்றன.

இந்தப் பதிவு ஏன் என்று பிற்கால சந்ததியினர் குழம்பிவிடக் கூடாது என்பதால் இந்த பின்னூட்டப் பதிவுக்கான மூலத்தை இங்கு கொடுக்கிறேன் "வினவை அவதூறு செய்யும் அராஜகவாதிகளின் புனிதக் கூட்டணி!!"

முதலில், உ.த.வுக்கான 3வது பாகம்:

//ஆனால் கை கலப்பும், நேரடித் தாக்குதலும் மட்டும் கூடவே கூடாது..!
//

மீண்டும் மீண்டும் உ.த. பொய் சொல்கிறாரே? யாருடன் கைகலப்பு நிகழ்ந்தது, யாரை நேரடியாகத் தாக்கினார்கள்?


//இதைத்தான் தப்பு என்கிறோம். இதைச் செய்ய நீங்கள் யார்? யார் உங்களுக்கு இந்த அனுமதியைக் கொடுத்தது...? இந்திய அரசா..? தமிழக அரசா..? இந்திய அரசியலமைப்புச் சட்டமா..? மொதல்ல அதைச் சொல்லுங்க..! அரசுகளையும், சட்டத்தையும் நம்பித்தான் இங்கே மக்கள் வாழ்கிறார்களே தவிர.. உங்களை நம்பி அல்ல.. உங்களுக்காகவும் அல்ல.! உங்களிடம் இது பற்றி விளக்க வேண்டிய அவசியமும் மக்களுக்கில்லை..!
//

தமிழச்சியை வெளியே அனுப்பு என்று சொன்னவர், தியேட்டரில் படம் பார்க்க வந்த அப்பாவி ரசிகர்களை 'டேய்' 'நாய்' என்று கத்தி ரவுடித்தனம் செய்து கலவரப்படுத்தியவர் கேட்கும் கேள்விதான் இது. உ.த இவ்வாறு ரவுடியிசம் செய்துள்ளது குறித்து அவரது கேள்வியை அவருக்கே திருப்பிக் கேட்டால் எப்படியிருக்கும்? இதோ: இதச் சொல்ல/செய்ய நீ யாருயா? யார் உங்களுக்கு இந்த அனுமதியைக் கொடுத்தது...? இந்திய அரசா..? தமிழக அரசா..? இந்திய அரசியலமைப்புச் சட்டமா..? மொதல்ல அதைச் சொல்லுங்க..!


உ.த. அவர்களே, எதைச் செய்யனும்னு நீங்கள் சட்டப் புத்தகத்த பாத்து கண்டுபிடியுங்கள், எங்களுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை/அவசியமில்லை. எது ஜனநாயகத்திற்கு பொருத்தமானதோ அதை செய்வோம். அதில் ஒன்று கூட்டத்தில் கேள்வி கேட்கும் உரிமை.

நேத்து வரைக்கும் 'கருத்துரிமை' என்ற புனித வார்த்தைகளின் பின்னே ஒழிந்து கொண்டு கல்லெறிந்தவர் அந்த புனித கோவனம் கிழிந்தவுடன், சட்டவாதம் என்ற புதருக்குப் பின்னே ஒழிந்து கொள்ள முயற்சிக்கிறார். வாழ்த்துக்கள் உ.த. இவ்வாறே தொடர்ந்து எழுதுங்கள்...

மேலும், இவரது இந்த பிதற்றலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட பதில்

@@@@
உண்மைத்தமிழனோ, அய்யனாரோ இது சார்ந்து பதிவு போட்டதாக தெரியவில்லை. அவர்களது அதிகபட்ச கருத்துரிமை எதிரிகள் கள்ள டிக்கெட் விற்பவன், சூடு வைத்த ஆட்டோ மீட்டர், போன் கனெக்சனுக்கு கமிசன் கேட்பவன், அப்புறம் லீனாவை எதிர்க்கும் வினவு போன்றோர். லீனாவின் யோனிக் கவிதையில்தான் உனது கருத்துரிமை கொப்புளிக்கிறது என்றால், ஆப்புரேசன் கிரின் ஹண்டு போன்றவற்றில் கருத்துரிமை பறி போவது பற்றி நீட்டி முழக்க நீ தயாரில்லை எனில், உன்னுடைய கருத்துரிமை என்ற பெயரிலான அராஜகவாத பிதற்றலை யோனி மசிராகக்கூட நான் மதிக்க வேண்டிய அவசியமில்லை.
@@@@



//"அவர்களுக்கு எதிரான கூட்டம் என்று தெரிந்தும், வந்திருந்து கூட்டம் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தது தப்பு"ண்ணேன்.. இது தப்பா..?
//

இவர் தனது முந்தைய பதிவில் சொன்னது, அந்தக் கூட்டம் இ.ம. கட்சிக்காக நடக்கிறது என்று தெரிந்தும் அழையா விருந்தாளியாக வினவு வந்தது தப்பு என்று. இப்போது அதே ஆர்க்யுமெண்டை தலைகீழாக மாற்றிப் பேசுகிறார்(மாத்தி பேசுவது அவருக்கு கை வந்த கலை). மொத்தத்தில் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்யாதே என்பது உ.த.வின் கருத்து.


//"லீனாவின் கவிதையே ஆபாசம் என்றால் அதற்கு வினவு எழுதிய மறுப்பு கவிதை அதைவிட ஆபாசம்.. இருவருமே ஒருவராக மாறிவிட்டார்கள். பின்பு வினவுக்கு லீனாவைக் குற்றம் சொல்ல என்ன உரிமை இருக்கிறது?" அப்படீன்னு கேட்டேன்.. இது தப்பா..?
//

லீனா எழுதியதற்கு வினவு எழுதியது, லீனா கூட்டம் போட்டதற்கு வினவு அதே கூட்டத்தில் கலகம் செய்தது. சரியாகப் போய்விட்டது இல்லையா? பிறகு ஏன் உ.த. வினவை அராஜகவாத கம்யூனிசம் என்று விமர்சித்து பதிவு எழுதுகிறார்? அதான் சரிக்கு சரி இடிக்கு இடின்னு முடிஞ்சதே என்று சோடா குடித்துவிட்டு சும்மக் கிடக்க வேண்டியதுதானே?

மற்றபடி மீண்டும் மீண்டும் ம.க.இ.க.வினர் லீனா கூட்டத்திலும், 'இனிய நண்பர்' விசயத்திலும் அடிதடியில் இறங்கியதாக அவர் கட்டமைக்க முயன்று பொய் சொல்கிறார். அசுரனில் பதிவு எழுதி அம்பலப்படுத்திய பிறகு சில விசயங்களை 'ஆமா சொல்ல மறந்துட்டேன்' என்பது போல ஒத்துக் கொள்கிறார். அதில் ஒன்று லீனா 'ஆவேசமான கோபத்துடன் ஏதோ சில வார்த்தைகளைச் சொன்னபடியே' வந்ததாம், அப்படி வந்தது கேள்வி கேட்பதற்காகவும் இருக்கலாம் இல்லையா? என்று உ.த. கேட்கிறார், இவ்வாறு சந்தேகத்தின் பலனை லீனாவுக்கு அளிக்கும் உ.த. இதே போல சந்தேகத்தின் பலனை ம.க.இ.க.வுக்கு அளிக்க மறுப்பதோடு இட்டுக்கட்டி அவதூறும் செய்கிறார் என்பதே அவரது பிரச்சினை. மேலும் ஏதோ ம.க.இ.க.வினர் ரவுடிகள் போல வீட்டுக்கு ஆட்டோவில் வறாதீங்க என்றெல்லாம் கட்டமைக்கிறார். இவையெல்லாம் உ.த.வின் கேவலமான நோக்கங்களையே காட்டுகின்றன.


இப்போ நம்ம அண்ணன் சுகுணா:

வாங்க சுகுணா. நீங்க என்ன சொன்னாலும் உங்க அளவுக்கு எனக்கு எழுத்து திறமை கிடையாதுண்ணே. பாருங்க, அவதூறையே அக்கறையான வார்த்தைகளிலும், விமர்சனம் போலவும், பரிதாபகரமான கேள்வி போலவும் முன் வைக்கும் உங்களது திறமை எனக்கு உண்மையிலேயே சுட்டுப் போட்டாலும் வராதுண்ணே. சுகுணாவோட அவதூறுகள் அல்லது அக்கறையான-பரிதாபகரமான கேள்விகளைப் பட்டியலைப் பார்ப்போமா?

முதல் அவதூறு:
//அது எப்படி தோழர் முந்தாநேற்றுவரை உங்கள் நிலைப்பாடுகளை ஆதரிக்கும்போது தியாகு தோழராயிருந்தார், இப்போது சுகுணாவின் பினாமி ஆகிப்போனார்? உங்கள் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிற ஒருவர் ஏதாவது ஒரு கருத்தில் மாறுபடும்போது அவருக்கு அல்லக்கை, பினாமி, துரோகி பட்டம் சுமத்தி அவதூறு செய்வது//

இதற்கு முன்பு வினவுடன் முரன்பட்ட தோழர்கள் யார்? மணி என்பவர் வந்த நாள் முதல் ஒரே லடாய்தான், அப்புறம் இராயகரனுடனான காரசராமான விவாதப் பதிவுகள். இவர்களெல்லாம் இன்றும் தோழர்களாகத்தான் உள்ளனர். இது தவிர்த்து பலர் கடுமையான முரன்பாடுகள் இருந்த பொழுதும் நண்பர்களாகவும், தோழர்களாகவுமே உள்ளனர். தியாகுவே கூட முரன்பட்டுள்ளார் முன்பு. தியாகுதான் காரல் மார்க்ஸ் என்ற முகமூடி அம்பலாமன பிறகும் கூட தோழர்கள் அவருக்கு பல விதங்களில் விளக்கவே முற்பட்டனர்(புறக்கணிக்கவில்லை). பலமுறை அவரது பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் (லீனா கூட்டத்தில் அடிதடி செய்ததாக ஒரு பொய், அவரை வேசி என்றதாக ஒரு பொய், இன்னும் பல) விளக்கம் கொடுத்த பிறகும், அவைகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்ட பிறகும், அவை குறித்து சட்டை செய்யாமல் எதிரிகளின் வார்த்தைகளில் விமர்சித்து அதே அவதூறுகளுடன் ஒரு பதிவும் இட்டார். அவரது நோக்கம் விமர்சனம் செய்வதல்ல, சேறு அடிப்பது என்றே புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பிற்பாடு அவர் காரல் மார்க்ஸ் என்ற பெயரில் லீனா விவகாரத்துக்கு முன்பிருந்தே வினவு தோழர்களை அவதூறு செய்துள்ளதும் வெளிவந்தது. இவ்வாறு கறுப்பு ஆடாக நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளதே தியாகு விசயத்தில் மிகக் கடுமையாக தோழ்ர்கள் அவரை புறக்கணிக்கக் காரணமானது. ஒருவருடன் பழகுவதற்கு பரஸ்பரம் நம்பகத்தன்மை வேண்டும். அதுவும் புரட்சிகர அமைப்புகளில் தோழர்களாக இருப்பதற்கு இது மிக அவசியம். அது இல்லாத ஒருவருடன் யாருமே பழகுவதை தவிர்க்கவே செய்வார்கள். தியாகுவின் நம்பகத்தன்மைதான் இங்கு பிரச்சினையேயொழிய அவரது விமர்சனம் அல்ல. வினவு பின்னூட்ட விவாதங்களே இதற்கு சாட்சி.

எதை எதையோ படித்து பார்க்கும் சுகுணாவுக்கு வினவில் நடந்த விவாதம் தெரியவில்லை போலும்? ம.க.இ.கவுடன் இத்தனை நாள் பழ்கிய சுகுணா லீனா(தியாகு) விசயம் என்றவுடன் எப்படி இது மாதிரி சடாரென்று தோழர்கள் மீது அவதூறு செய்ய முடிவு செய்தார்? அவருக்கு என்ன பிரச்சினையோ?

மேலும் ம.க.இ.க. உங்களது நெருங்கிய தோழர்கள் என்று சொல்லும் நீங்கள் ஏன் இந்த விவகாரத்தில் இத்தனை நாள் அந்தத் தோழர்களை அனுகாமல் இருந்தீர்கள்? தோழர் எனில் விமர்சனம் செய்திருக்க வேண்டுமில்லையா? அதற்குப் பதிலாக தியாகுவுக்கு தகவல் சப்ளை செய்ததையும், ரோசா போன்றோரின் தளங்களில் மட்டுமே பின்னூட்டம் அதுவும் நெம்ப எச்சரிக்கையாக விட்டுள்ளதும், தியாகு மட்டுமே சுகுணாவின் கருத்து முகமூடியாக நான் புரிந்து கொள்ளது தூண்டியது.

//தியாகுவின் பதிவிலும் அய்யனார் விஸ்வநாத் பதிவிலும் அனானியாக வந்த பின்னூட்டத்தை எடுத்துக்கொள்வோம். அந்த பின்னூட்டத்தின் இரண்டாம் பகுதி இது.//

தியாகுவை பினாமி என்றது அவரது அந்த அறிவுப்பூர்வமான கேள்வி அவருக்கு உதித்திருக்காது என்ற எனது அனுபவத்திலிருந்தும் (அந்தக் கேள்வியை அவரே வினவு தளத்தில் இட்டிருந்தார்) லீனா விசயத்தில் தியாகுவுக்கான சோர்ஸ் நீங்கள்தான் என்ற நம்பிக்கையான தகவல்களிலிருந்துமே சொல்கிறேன்.

//உங்களுக்குத் தெரிந்த அளவுக்குக்கூட எனக்குத் தியாகு பழக்கம் கிடையாது. //
தியாகு வேறு மாதிரி சொல்கிறார்? உங்களிடம் அவர் எல்லா விசயங்களையுமே பேசியுள்ளாராம்?


//ஆனால் அந்த பிரச்சினை பற்றி எழுதும்போது அதைப் பதிவு செய்யாத உங்கள் அரசியல் மனச்சாட்சிக்கு நன்றி தோழர்.//

தமிழச்சியை விவகாரத்தில் உ.த. அய்யனார் குலாமினரின் முரன்பட்ட சந்தர்ப்பவாத நடவடிக்கையை அம்பலப்படுத்தவே எழுதினேன். எனவே, தமிழச்சி விவகாரத்தின் முழுப் பரிமாணம் தேவையில்லை என்றே குறிப்பிடவில்லை. மேலும், தமிழச்சியை ஆதரித்தவர்கள் என்று தோழர்கள், நண்பர்கள், முற்போக்கானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளேன். அதில் நீங்களும் உண்டு.

//ஆனால் நடந்த நிகழ்வுகளில் உங்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டும் எழுதி, தேவையான பிம்பத்தை உருவாக்கிக்கொள்கிறீர்கள். //

ஏன் இந்த படபடப்பு சுகுணா? நான் தமிழச்சி நிகழ்வை முன்னிறுத்தி எதை எழுதியுள்ளேன் என்பதை உ.த.வால் புரிந்து கொள்ள முடியவில்லை (அல்லது புரிந்து கொள்ள முற்படவில்லை) எனில் அது எனக்குப் புரிகிறது. நீங்களும் அப்படித்தான் எனில் நான் என்ன செய்ய முடியும்?

//’கண்டன ஒன்றுகூடல்’ கூட்டத்தில் ம.க.இ.க நடத்திய குழப்பத்திற்குப் பின்னான பதிவுகளில் //

//நீங்களும் உங்களது தோழர்களும் நான் எழுதாத பின்னூட்டங்கள் குறித்து அவதூறுகளைப் பரப்புகிறீர்கள்..//

சுகுணாவைக் குறிப்பிட்டு இப்போ கொஞ்ச நாளைக்கி முன்பிருந்துதான் கருத்துக்கள் வருகின்றன. அதுவும் தியாகுவுக்கு பின்னால் நீங்கள் உள்ளீர்கள் என்ற நம்பகமான தகவலுக்குப் பிறகுதான் இவை நடக்கின்றன.

//ஆனால் உங்களது கருத்தில் மாறுபடும்போது அல்லக்கை என்றும் பினாமி என்றும் சிஷ்யப்பிள்ளை என்றும் மிக மோசமான முறையில் இழிவுசெய்கிறீர்கள்.//

எங்களது கருத்தில் மாறுபடுவதாக வெளிப்படையாகத் தெரிவிக்கும் நேர்மைகூட இவ்வளவு இழுத்தப் பிறகுதான் உங்கள் வாயிலிருந்து வருகிறது. அவ்வளவு எம்முடன் தோழமை எனில் எம்மை இந்த நிகழ்வுகளின்(லீனா கவிதை வினவு பதிவு) ஆரம்பத்திலேயே விமர்சித்திருக்கலாமே? போராடியிருக்கலாமே? லீனா கவிதை எழுதி அசிங்கப்படுத்தினால், நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் கருங்காலித்தனமாக கள்ளமௌனம் சாதித்து முதுகில் குத்தி அசிங்கப்படுத்தியுள்ளீரக்ளே? இவை எமக்குக் கோபத்தை உண்டாக்காது என்று நினைக்கிறீர்களா?

அ.மார்க்ஸ், சிபிஎம் புனித கூட்டணிக் கும்பலின் நோக்கம் வினவை அராஜகவாதி என்று சித்தரிப்பது எனில் எமது தோழர் என்று சொல்லும் நீங்கள் இந்த நிகழ்வுகளில் வினவு அவ்வாறான தோழர்கள் அல்ல என்று அவர்களிடம் என்னவிதமான போராட்டம் நடத்தீனீர்கள்? மாட்டிக்கிட்டான் என்று மொத்தமாகத்தானே குத்தினீங்க? இப்போ திருப்பிக் குத்துகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள்.

இரண்டாவது அவதூறு:
//என்னைப் பொறுக்கி என்றும் சமூகவிரோதி என்றும் அழைத்து அடையாளப்படுத்திய உங்கள் அன்புக்கு நன்றி தோழர்.//

அது உங்களது (அல்லது தியாகுவின்) 'அறிவுப்பூர்வமான கேள்வியின்' லாஜிக்கில் முடிவு என்று நான் சொன்னவை அவை. எனது முடிவு அல்ல அது. அவை அந்தக் கேள்வியின் முட்டாள்தனம் என்னவென்று சுட்டிக்காட்ட குறிப்பிட்டவை. அடுத்த வரியிலேயே அந்தக் குறிப்பிட்ட 'அறிவுப்பூர்வமான கேள்வி'யிலிருந்து தியாகு (அல்லது நீங்கள்) நிரூபிக்க விரும்பியது பின்நவீனத்துவத்திற்கே வெளிச்சம் என்றும் குறிப்பிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிடுவதன் பொருள், உங்களை சமூகவிரோதி, பொறுக்கி என்று நான் சொல்லவில்லை என்பதற்கான அத்தாட்சி.


//ஆனால் அதற்காக ம.க.இ.கவை விமர்சிக்கிற விமர்சன உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். //

ம.க.இ.க.வை இதுவரை நீங்கள் விமர்சிக்கவே இல்லையே? இதோ இந்த நிமிசம் வரை லீனா விவகாரத்தில் தியாகுதான் உங்களது முகமாக எனக்குத் தெரிகிறாரே ஒழிய உங்களது கருத்துக்களை எங்குமே நேரடியாக நீங்கள் சொல்லவில்லயே? ஏன்?

அசுரன்

34 பின்னூட்டங்கள்:

said...

கூகிளுக்கும் தெரிஞ்சு போச்சா?

said...

அன்பின் அசுரன் அண்ணன் அவர்களுக்கு,

//உண்மைத்தமிழனோ, அய்யனாரோ இது சார்ந்து பதிவு போட்டதாக தெரியவில்லை. //

இது தொடர்பான சிறு விளக்கம் மாத்திரம்.. அதுவும் உ.த. பற்றியில்லை. அய்யனாரைப் பற்றி மாத்திரம்.

தற்சமயம் அய்யனார் இணையத்தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார். அய்யனாரிடமிருந்து உடனடி பதில் வராமைக்கு இதுவே காரணமாய் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. தங்கள் பதிவு குறித்தும் அவர் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவே..


அவரிடம் உங்களின் இச்செய்தியை தெரிவித்து விடுகிறேன். அய்யனாரின் பதில் தேடும் தங்களின் புரிந்துணர்விற்கு நன்றி!

said...

நன்றி சென்ஷி,

ஆனால் ஒரு சிறு கம்முனிகேசன் தவறு நிகழ்ந்துள்ளது.

உ.த. மற்றும் அய்யனார் பதிவு இடவில்லை என்று குறிப்பிட்டது ஆபுரேசன் கிரின் ஹண்ட் பற்றி அவர்கள் பதிவிட்டதில்லை என்பதையே. நான் குறிப்பிட்டது லீனா பற்றிய அசுரன் பதிவுக்கான எதிர்வினையை குறிப்பிட்டு அல்ல.

இனிமேல் நான் காப்பி பேஸ்ட் செய்யும் போது கொஞ்சம் எச்சரிக்கையாக செய்ய வேண்டும் என்று புரிகிற்து. :-)



எனவே, அய்யனாரிடம் இது குறித்து சொல்வதில் பிரயோசனமில்லை :-)

அசுரன்

said...

:)

தகவல் பகிர்விற்கு நன்றிண்ணே..

said...

பார்வையாளன் அவர்களே,


//வில்லன்களுடன் மோதும் உங்களுக்கு, லீனா போன்ற காமெடியன் களிடம் மோதுவது எந்த விதத்திலும் பெருமை தராது...//

லீனாவுக்கு பின்னே இருக்கும் அராஜகவாத புனிதக் கூட்டணி காமேடிப் பீசுகள் அல்லவே?


//
மற்றபடி, நடுநிலையாளர்களையும், சாமான்யர்லையும் அரவணைத்து செல்வதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது... உங்கள் உழைப்பின் பலன் பெருமளவு கிடைப்பது நடுத்தர வரகதிற்குத்தான்... அனால், அவர்கள் உட்பட அனைவரையும் திட்டி எழுதி, அனைவரையும் எதிர்பதுதான் உங்கள் அமைப்பின் வேலை என்ற தவறான என்னத்தை ஏறப்டுத்துகிர்றேர்கள்...//

ம்.... இதற்கு தோழர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்....


//
இணையத்தில்தான், இந்த நிலை... தனிப்பட்ட முறையில், நாம் சந்திக்கும் உங்கள் இயக்கத்தினர் மக்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்... என் ஆசிரிகர்களிலேயே, நகைசுவை உணர்ச்சி உள்ள, இனிமையான, மறக்க முடியாத ஆசிரியர், உங்க இயக்கத்தை சார்ந்தவர் தான்...
//

நன்றி....


//
இணையத்தில் , உங்கள் மேல் நல்லெண்ணம் கொண்டவர்களுடன் மோதுவது, ஆச்சர்யமாக உள்ளது//

இல்லை நண்பரே.. முரன்படுவதும், விமர்சனம் செய்வதும் மோதுவது ஆகாது. லீனா விவகாரத்தை குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள் எனில், அவ்வாறு மோதியது போல எனக்குத் தெரியவில்லை.

அசுரன்

said...

நன்றி தோழர்!

முதலாவதாக தியாகு உங்கள் இயக்கத்தின் தோழரா, தோழர் இல்லையா, முன்னாள் தோழரா என்பது குறித்த உள்விவகாரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அவர் கட்சியின் தோழரே இல்லை என்று உங்கள் தோழர்கள் மறுப்பதும் அதைத் தியாகு மறுப்பதும் உங்கள் இயக்கம் சார்ந்த விவகாரங்கள். ஆனால் அவரை என்னுடைய பினாமி என்று சொல்வதைத்தான் நான் அவதூறு என்கிறேன். என்னுடைய கருத்துக்களைத்தான் அவரைக் கொண்டு பின்னூட்டமாக எழுதியுள்ளேன் என்கிற கருத்துப்பட உங்கள் தோழர்கள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்கள். அதனால்தான் நீங்களும் அவரை என்னுடைய பினாமி என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இரண்டுமே தவறு. தியாகுவைத் தூண்டி விடுகிற நோக்கங்கள் எதுவும் என்னிடம் இல்லை.

said...

/எங்களது கருத்தில் மாறுபடுவதாக வெளிப்படையாகத் தெரிவிக்கும் நேர்மைகூட இவ்வளவு இழுத்தப் பிறகுதான் உங்கள் வாயிலிருந்து வருகிறது. அவ்வளவு எம்முடன் தோழமை எனில் எம்மை இந்த நிகழ்வுகளின்(லீனா கவிதை வினவு பதிவு) ஆரம்பத்திலேயே விமர்சித்திருக்கலாமே?/

மன்னிக்கவும் தோழர், வினவின் முதல் பதிவிலேயே என்னுடைய பின்னூட்டம் உள்ளது. மேலும் வினவைக் கண்டித்து ரோசாவசந்த் எழுதிய பதிவிலும் நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.

/அ.மார்க்ஸ், சிபிஎம் புனித கூட்டணிக் கும்பலின் நோக்கம் வினவை அராஜகவாதி என்று சித்தரிப்பது எனில் எமது தோழர் என்று சொல்லும் நீங்கள் இந்த நிகழ்வுகளில் வினவு அவ்வாறான தோழர்கள் அல்ல என்று அவர்களிடம் என்னவிதமான போராட்டம் நடத்தீனீர்கள்?/

முதலாவதாக இந்த புனிதக்கூட்டணி என்பதெல்லாம் உங்கள் கற்பனை. லால்கர் பிரச்சினையில் சி.பி.எம்மைக் கடுமையாக விமர்சித்துத்தான் அ.மாவின் ‘லால்கர்-மூன்றாம் பார்வை’ புத்தகம் அமைந்துள்ளது. ஒரு சில கூட்டங்களில் பேச வருபவர்களுடன் நாம் நூறுசதவிகிதம் உடன்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்களும் பெரியார்தாசனையும் விடுதலைராசேந்திரனையும் வெள்ளையனையும் உங்கள் மேடை ஏற்றிருக்கிறீர்கள் தோழர்!

said...

/தியாகுவுக்கு பின்னால் நீங்கள் உள்ளீர்கள் என்ற நம்பகமான தகவலுக்குப் பிறகுதான் இவை நடக்கின்றன/

இந்த ‘நம்பகமான தகவல் சப்ளை’ செய்தது யார் என்று சொல்ல முடியுமா? நடந்தது என்ன என்று கேட்டால் நானே சொல்லி விட்டுப்போகிறேன். புலனாய்வு செய்வதற்கு எதற்குத் தனிப்படை அமைக்க வேண்டும் தோழர்? தியாகு வினவின் பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கும் கருத்துகள், விவாதங்கள் எல்லாம் என்னுடையவை என்று சொல்ல முடியாது. என்னுடன் அவர் பேசிய ஒருசில விஷயங்களை அவர் எழுதியிருக்கிறார் என்பது உண்மை. ஆனால், அதை அவராகத்தான் எழுதியிருக்கிறார், நான் அப்படியெல்லாம் எழுதவில்லை என்னும்போது அவரை என்னுடைய பினாமி என்று சொல்வது நீதி கிடையாது.

said...

/அதற்குப் பதிலாக தியாகுவுக்கு தகவல் சப்ளை செய்ததையும்,/ என்று எழுதியுள்ளீர்கள். கூட்டம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, வினவைப் படித்தபிறகு அவர் எனக்குப் போன் செய்தார். ‘கூட்டத்தில் என்ன நடந்தது?’ என்று கேட்டார். நானும் கூட்டத்தில் கலந்துகொண்டவன் என்ற முறையில் விவரங்களைச் சொன்னேன். நீங்கள் எனக்குப் போன் செய்திருந்தால் உங்களுக்கும் ‘தகவல் சப்ளை’ செய்திருப்பேன்((-.

நீங்கள் இப்போது தியாகுவிற்கு நான் தகவல் சப்ளை செய்ததாகத்தான் சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் தோழர்களோ ’கருத்து சப்ளை’ செய்ததாகச் சொல்கிறார்கள். அது தவறான கருத்து. என்னுடைய கருத்தை நான் நேரடியாக சப்ளை செய்துகொள்வேனே தவிர, யாரையும் ஏஜென்சியாக நியமிக்கும் எண்ணமில்லை ((-.

தியாகு அறிமுகம் ஆன பிறகு இதுவரை ஒரு பத்து தடவை பேசியிருப்பார். அந்த பத்து தடவைகளில் கண்டன ஒன்றுகூடல் விவகாரத்துக்குப் பிறகு அவர் பேசியது அதிகம். பல விஷயங்களை விவாதித்தார் என்பதும் உண்மை. ஆனால் வினவில் தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு சண்டையிடுங்கள் என்று நான் ஏவவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

said...

/ம.க.இ.க.வை இதுவரை நீங்கள் விமர்சிக்கவே இல்லையே?/

உண்மையில் கண்டன ஒன்றுகூடலுக்குப் பிறகு மூன்றுநாட்களுக்குப் பிறகுதான் வினவின் பதிவைப் படிக்க நேர்ந்தது. அதைப் படிப்பதற்கு முன்பு வரை அங்கே விவாதிக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அவர்கள் கூட்டத்தைப் பதிவு செய்திருந்த மொழிநடை, அல்லக்கைகள், அய்ந்திலக்கச் சம்பளம் என்றெல்லாம் இழிவுபடுத்தியது இவையெல்லாம் நம்பிக்கைகளைத் தகர்த்தன. மேலும் கீற்று தளமாக இருந்தாலும் வினவு தளமாக இருந்தாலும் ஒரு பின்னூட்டம் போட்டால் பல முகங்களில் வருகிற ஏராளமான பின்னூட்டங்கள், அதில் இடம்பெறும் வதந்திகள், நாம் போடுகிற பின்னூட்டத்தைத் திசை திருப்புகிற பின்னூட்டங்கள் என்று இத்தகைய கும்பல் வன்முறையின் மத்தியில் நின்று பேசுவதற்கான நேரமோ நிதானமோ எனக்கில்லை. அதனால், கீற்று தளத்திலும் வினவு தளத்திலும் பின்னூட்டம் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். நம்மை யாராவது ஒருவர் வந்து திட்டுவது கூட பிரச்சினையில்லை. ஆனால் அவர் எந்த திசையிலிருந்து திட்டுகிறார், அவர் யார், நண்பரா, எதிரியா என்றே தெரியாமல் இதை எதிர்கொள்வது என்பது சரியானதில்லை என்றுதான் கருதுகிறேன்.
இந்த கும்பல்வன்முறை இல்லாமல் நீங்கள் மட்டும் ஒரு வெளிப்படையான விவாதத்திற்குத் தயார் என்றால் இதே தளத்திலேயே உங்களுடனேயே விவாதிக்கிறேன்.

said...

/தியாகுவை பினாமி என்றது அவரது அந்த அறிவுப்பூர்வமான கேள்வி அவருக்கு உதித்திருக்காது என்ற எனது அனுபவத்திலிருந்தும் (அந்தக் கேள்வியை அவரே வினவு தளத்தில் இட்டிருந்தார்/ இப்படி நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் ஏழரை, அய்யனார் பதிவில் போட்ட பின்னூட்டத்தில், ‘அனானிக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் வெளியே மிதக்கிற ஐயா கொஞ்சம் வெளியே வாரும். தியாகு தளத்திலேயே உங்களுக்கு பதில் சொல்லியிருக்கலாம்தான் ஆனால் சொந்த அடையாளத்தையே ம்றைக்கும் உங்களிடம் நக்சலைட்டுகள் அடையாளத்தை பற்றி கூற எனக்கு கூசுகிறது' என்று சொல்வதன் மூலம் அந்த அனானிப் பின்னூட்டங்களையே நான் தான் போட்டேன் என்கிறார். கண்டன ஒன்றுகூடல் முடிந்த பிறகும், அரங்கத்திலிருந்த, இப்போதும் இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கும் ம.க.இ.க தோழர், அவராகவே வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். அவரிடமும், ‘’எனக்கு ம.க.இ.கவின் அரசியல் நிலைப்பாடுகள் பலவற்றில் ஆதரவு உண்டு. ஆனால் இன்று அவர்கள் நடந்துகொண்டதை ஆதரிக்கவில்லை” என்றே சொன்னேன். எனவே நான் நேரடியாகவே விமர்சிப்பேன், உள்ளடி வேலைகள் பார்க்க மாட்டேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

said...

உங்கள் விளக்கங்களுக்கு நன்றி தோழர் சுகுணா,

//முதலாவதாக தியாகு உங்கள் இயக்கத்தின் தோழரா, தோழர் இல்லையா, முன்னாள் தோழரா என்பது குறித்த உள்விவகாரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது.//

எனக்கும் தெரியாது.

பினாமி என்று குறிப்பிட்டிருந்த கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். இவை குறித்த பரஸ்பர புரிதல் குறைபாடுகள் உள்ள நிலையில் இவ்வாறு எழுதிய தவறு என்று உணர்கிறேன். அந்த வரிகளை தூக்கிவிடுகிறேன்.

ஆயினும், அ.மார்க்ஸ் லால்கருக்கு சிபிஎம் ஐ அம்பலப்படுத்தியதும், லீனாவுக்காக ம.க.இ.க.வை 'குறி' வைத்து கூட்டணி சேர்ந்துள்ளதும் ஒன்றாகிவிடாது தோழரே.

தோழமையுடன் அனுகியிருக்க வேண்டிய விசயத்தை எதிரிகளுடன் அணி சேர்ந்து மோதலாக மாற வித்திட்டது கருத்துரிமைக்காக கூட்டணி சேர்ந்த அ. மார்க்ஸ் கும்பலே என்பதில் இன்னும் உறுதியுடனே இருக்கிறேன். மேலும், லீனா விசயத்தில் 'வினவு' என்று நேரடியாக கூட்டம் நடத்துவதை விடுத்து கிசு கிசு பாணியில் அ.மார்க்ஸ் செயல்பட்டுள்ளதும், அதில் நீங்களும் அணி சேர்ந்துள்ளதும் எனக்கு ஒவப்பானதாக இல்லை தோழரே.

சீரணிக்க இயலாத முரன்பாடாகவே என்னுள் தைக்கிறது.

லீனா கூட்டத்தில் நடந்த நிகழ்வுகள் என்று தியாகு சொன்னவைக்கு நீங்களே ஆதாரம் என்று தோழர்களிடம் அவர் சொல்லியுள்ளார். அதாவது அடிதடி செய்தது, வேசி என்றது போன்றவற்றை தியாகு சொன்னது உங்களது தகவலின் அடிப்படையில் என்றால் உங்களது விளக்கம் இங்கு முக்கியமானதாகிறது.

மேலும், ம.க.இ.கவின் தோழர் என்பதாக அறியப்படுகிற நீங்கள் இந்த லீனா கூட்ட பிரச்சினைக்குப் பின்பான ஒட்டுமொத்த நிகழ்விலும் அமைதியாக நின்றது ஏற்புடையது அல்ல தோழரே. உங்களது வார்த்தைகளின் படியே தோழர் என்று அறியப்படுகிற ம.க.இ.க. மீது அவதூறுகள் அள்ளித் தெளிக்கப்படும் போது எப்படி உங்களால் வேடிக்கை பார்க்க இயலுகிறது? லீனாவின் கன்றாவிக்கு அந்தளவுக்கு கருத்துரிமை முக்கியத்துவமடைகிறதா? அப்படியெனில் ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனியவாதிகளுக்கு கருத்துரிமை மறுத்து நாம் நடத்திய தமிழ்மணப் போராட்டங்கள் எந்த வகை தோழரே?


அசுரன்

said...

///.செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை, தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது. /

இதை எந்த அடிப்படையில் எழுதுகிறீர்கள் தோழர்? ஷோபாசக்தி புலிகள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதாலா? அவர் எங்காவது இதற்கு முன் ‘’புலிகளால்தான் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று கூறியிருக்கிறாரா? நீங்களும் கூடத்தான் புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கிறார்கள். இதனால் உங்களையும் இந்திய அரசின் உளவாளிகள் என்று த.தே.பொ.க உள்ளிட்ட தமிழ்த்தேசிய அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஆனால் புலிகளை விமர்சிப்பதாலேயே ராஜபக்‌ஷேவிடம் பணம் வாங்கியவர் என்றும் உளவாளிகள் என்றும் முத்திரை குத்திப்போகிற கண்மூடித்தனமான புலி ஆதரவாளர்களின் மொழியிலேயே நீங்கள் எழுதுவது யாரைத் திருப்திப்படுத்த என்று தெரியவில்லை. ஆனால் வருத்தமாயிருக்கிறது.//

சுகுணா,

மேலே உள்ளது மட்டுமே உங்களது கருத்து என்று வினவில் பதிவாகியுள்ளது(எதையும் தவறுவிட்டுள்ளேனா என்று தெரியவில்லை).

இது எந்த வகையிலும் நான் குறிப்பிட்டிருந்த உங்கள் மீதான விமர்சனத்திற்கு பதில் அல்ல.

##
/எங்களது கருத்தில் மாறுபடுவதாக வெளிப்படையாகத் தெரிவிக்கும் நேர்மைகூட இவ்வளவு இழுத்தப் பிறகுதான் உங்கள் வாயிலிருந்து வருகிறது. அவ்வளவு எம்முடன் தோழமை எனில் எம்மை இந்த நிகழ்வுகளின்(லீனா கவிதை வினவு பதிவு) ஆரம்பத்திலேயே விமர்சித்திருக்கலாமே?/

மன்னிக்கவும் தோழர், வினவின் முதல் பதிவிலேயே என்னுடைய பின்னூட்டம் உள்ளது. மேலும் வினவைக் கண்டித்து ரோசாவசந்த் எழுதிய பதிவிலும் நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.
###

ஆஹ, இன்ன தேதி வரை லீனா விவகாரத்தில் வினவையோ, ம.க.இ.க.வையோ விமர்சிக்கவில்லை நீங்கள்.

அசுரன்

said...

சுகுணா,

//உண்மைத்தமிழன் பதிவில் அ.மார்க்ஸ்தான் போலீஸை ஏற்பாடு செய்தார் என்பதைத் தவிர பெருமளவு சரியாக இருந்ததாக நினைவு. அன்றைய கூட்டத்தில் தோழர்கள் புரட்சி செய்ததாகக் கருதிப் பெருமிதம் செய்வார்களானால் இந்தியாவில் புரட்சி வர வேண்டாம் என்று கடவுளை வேண்டிக்கொள்ள விரும்புகிறேன். மற்றபடி உங்கள் பெயரில் பல போலி பின்னூட்டங்கள் ஆங்காங்கே தூள் பரக்கின்றன. பார்க்கவும்.//

இது என்ன வகை தோழமையான கருத்து சுகுணா?

லீனா என்ற புளுபிலிம் தரகருக்காக புரட்சியே வேண்டாம் என்று முடிவெடுப்பது உங்களது சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவரை தோழர் என்ற எங்களால் அழைக்க இயலாது.

உ.த.வை அம்பலப்படுத்தித்தான் அசுரனின் முதல் பதிவு உள்ளது. நீங்களோ உ.த.வின் பதிவு நிகழ்வை மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது என்று சொல்கிறீர்கள்? இதை எப்படி புரிந்து கொள்வது?

இன்னும் மேற்சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் தோழர் என்ற காரணத்திற்காகவாவது அசுரன் தளத்தில் உள்ள பதிவில் உ.த. பதிவின் அவதூறுகள் குறித்த விசயங்களை நீங்கள் மறுத்து கருத்து பதிவு செய்ய வேண்டும்.

அதுவே நேர்மையானதாக இருக்கும்

அசுரன்

said...

மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்த பாட்டை நான் எழுதியதாக அசுரன் சொன்னதும் நானும் அசந்து போனேன்

நன்றி அசுரன் பினாமியை திரும்ப வாங்கியதற்கு

said...

[[[//ஆனால் கை கலப்பும், நேரடித் தாக்குதலும் மட்டும் கூடவே கூடாது..!//

மீண்டும் மீண்டும் உ.த. பொய் சொல்கிறாரே? யாருடன் கைகலப்பு நிகழ்ந்தது, யாரை நேரடியாகத் தாக்கினார்கள்?]]]

இதை எங்கண்ணே எழுதியிருக்கேன்..? நானும் தேடித் தேடிப் பார்த்து தெரியலை..!

ஒருவேளை எழுதியிருந்தாலும் பொதுவான கருத்தாக எழுதியிருப்பேன். படித்தாலே உங்களுக்குப் புரிந்திருக்குமே..!?

said...

//இதைத்தான் தப்பு என்கிறோம். இதைச் செய்ய நீங்கள் யார்? யார் உங்களுக்கு இந்த அனுமதியைக் கொடுத்தது...? இந்திய அரசா..? தமிழக அரசா..? இந்திய அரசியலமைப்புச் சட்டமா..? மொதல்ல அதைச் சொல்லுங்க..! அரசுகளையும், சட்டத்தையும் நம்பித்தான் இங்கே மக்கள் வாழ்கிறார்களே தவிர.. உங்களை நம்பி அல்ல.. உங்களுக்காகவும் அல்ல.! உங்களிடம் இது பற்றி விளக்க வேண்டிய அவசியமும் மக்களுக்கில்லை..!//

தமிழச்சியை வெளியே அனுப்பு என்று சொன்னவர், தியேட்டரில் படம் பார்க்க வந்த அப்பாவி ரசிகர்களை 'டேய்' 'நாய்' என்று கத்தி ரவுடித்தனம் செய்து கலவரப்படுத்தியவர் கேட்கும் கேள்விதான் இது. உ.த இவ்வாறு ரவுடியிசம் செய்துள்ளது குறித்து அவரது கேள்வியை அவருக்கே திருப்பிக் கேட்டால் எப்படியிருக்கும்?]]]

உங்களுடைய தோழர்கள் என்ன மாதிரியான வார்த்தைகளை தங்களது சிந்தாந்தக் கணைகளாக அ.மார்க்ஸின் மீது வீசினார்கள் என்பதை இன்று வெளி வந்துள்ள சூரியக்கதிர் என்கிற பத்திரிகையில் அ.மார்க்ஸ் இரண்டு வரிகளில் சொல்லியுள்ளார்.

அதைப் படித்த பின்பு யார் செய்தது ரவுடித்தனம் என்பதை யோசித்துவிட்டு வாங்கண்ணே.. பின்பு பேசுவோம்..!

said...

[[[/"அவர்களுக்கு எதிரான கூட்டம் என்று தெரிந்தும், வந்திருந்து கூட்டம் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தது தப்பு"ண்ணேன்.. இது தப்பா..?//

இவர் தனது முந்தைய பதிவில் சொன்னது, அந்தக் கூட்டம் இ.ம. கட்சிக்காக நடக்கிறது என்று தெரிந்தும் அழையா விருந்தாளியாக வினவு வந்தது தப்பு என்று.

இப்போது அதே ஆர்க்யுமெண்டை தலைகீழாக மாற்றிப் பேசுகிறார்.

(மாத்தி பேசுவது அவருக்கு கை வந்த கலை).]]]

மொத்தத்தில் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்யாதே என்பது உ.த.வின் கருத்து.]]]

வினவு, ம.க.இ.கழகத்தினரை மறைமுகமாக சொல்லியிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகத் தாமதமாகத்தான் தெரியும்..

அதிலும் த.மு.எ.ச. அமைப்பினர் கொடுத்திருந்த அறிக்கையை நான் பதிவு எழுதும்போது படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

கணேசன் பேசும்போது வினவு, ம.க.இ.க.த்தின் பெயர்களை இணைப்பாகக் கொடுத்திருந்ததால் இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம் என்று குறிப்பிட்டார். இதனையும் நான் அதே பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்..!

இப்போதும் மறுபடியும் அதே கேள்வியைத்தான் கேட்கிறேன்.. உங்களைக் கண்டித்து நடத்தப்படும் கூட்டம் என்று தெரிந்தும் ஏன் வந்தீர்கள்..?

கூட்டத்திற்கு முன்பாகவே உங்களுடைய பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்க வேண்டும். முடியாதபட்சத்தில் "நீங்கள் உங்கள் வழியைப் பாருங்கள்.. நாங்கள், எங்கள் வழியைப் பார்க்கிறோம்" என்று சொல்லிவிட்டு நீங்கள் போயிருக்க வேண்டும்..!

said...

[[["லீனாவின் கவிதையே ஆபாசம் என்றால் அதற்கு வினவு எழுதிய மறுப்பு கவிதை அதைவிட ஆபாசம்.. இருவருமே ஒருவராக மாறிவிட்டார்கள். பின்பு வினவுக்கு லீனாவைக் குற்றம் சொல்ல என்ன உரிமை இருக்கிறது?" அப்படீன்னு கேட்டேன்.. இது தப்பா..?//

லீனா எழுதியதற்கு வினவு எழுதியது, லீனா கூட்டம் போட்டதற்கு வினவு அதே கூட்டத்தில் கலகம் செய்தது. சரியாகப் போய்விட்டது இல்லையா?]]]

இதென்ன எஸ்.வி.சேகர் டிராமா டயலாக்கா..?

லீனா கூட்டம் போட்டாங்கன்னா அதே இடத்துல மறுநாள் நீங்க ஒரு கூட்டம் போட்டு பேசியிருக்கலாம்.. இதுதான் சரியான பதிலடியாக இருந்திருக்கும்..!

அதே கூட்டத்துல போய் கலகம் செய்வது எப்படி சரியாகும்..?

said...

[[[மற்றபடி மீண்டும் மீண்டும் ம.க.இ.க.வினர் லீனா கூட்டத்திலும், 'இனிய நண்பர்' விசயத்திலும் அடிதடியில் இறங்கியதாக அவர் கட்டமைக்க முயன்று பொய் சொல்கிறார்.]]]

அடிதடி என்றில்லைண்ணே.. தாக்குதலின் முதல் ஸ்டெப்.. பயமுறுத்தலின் முதல் ஸ்டெப்.. வன்முறையின் முதல் ஸ்டெப்.. இப்படி வைத்துக் கொள்ளலாம்..

said...

[[[அசுரனில் பதிவு எழுதி அம்பலப்படுத்திய பிறகு சில விசயங்களை 'ஆமா சொல்ல மறந்துட்டேன்' என்பது போல ஒத்துக் கொள்கிறார். அதில் ஒன்று லீனா 'ஆவேசமான கோபத்துடன் ஏதோ சில வார்த்தைகளைச் சொன்னபடியே' வந்ததாம், அப்படி வந்தது கேள்வி கேட்பதற்காகவும் இருக்கலாம் இல்லையா? என்று உ.த. கேட்கிறார்.]]]

"அதைக் கேட்டு சட்டென்று உஷ்ணமான லீனா ஏதோ சொல்லிக் கொண்டே முன்னால் வர.."

- இதைத்தாண்ணே முதல் பதிவிலும் போட்டிருக்கிறேன்..! இதைத்தான் இப்போதும் சொல்கிறேன்..!

அடிப்பதற்காகத்தான் வந்தார் என்று நீங்கள் சொன்னீர்கள். லீனாவின் தோரணை அதுபோல் இல்லாமல் இருந்ததால் நான் அதனை மறுத்தேன்.. இதில் என்ன தவறு..? மறதி..? ஒத்துக் கொள்ளுதல்..?

[[[இவ்வாறு சந்தேகத்தின் பலனை லீனாவுக்கு அளிக்கும் உ.த. இதே போல சந்தேகத்தின் பலனை ம.க.இ.க.வுக்கு அளிக்க மறுப்பதோடு இட்டுக்கட்டி அவதூறும் செய்கிறார் என்பதே அவரது பிரச்சினை.]]]

உங்களை அவதூறு செய்து எனக்கு என்னாகப் போகிறது..? நானென்ன கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்ந்தவனா..? இல்லை வேறு கட்சி அமைப்புகளில் இருப்பவனா..? இல்லையே..? பிறகென்ன..?

[[[மேலும் ஏதோ ம.க.இ.க.வினர் ரவுடிகள் போல வீட்டுக்கு ஆட்டோவில் வறாதீங்க என்றெல்லாம் கட்டமைக்கிறார்.]]]

உங்கள் முன்னாள் செயல்பாடுகளை இப்போது கண்டித்து எழுதுவதால்.. இதுவே உங்களது பழக்கம் என்பதாலும், இப்போது லீனா விஷயத்திலும் இதையே சொல்லி அவரை நீங்கள் மிரட்டியிருப்பதாலும்தான் அப்படி எழுதினேன்..

நீங்கள், உங்களது தோழர்கள் சொல்லியிருப்பதைத்தான் நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்..!

பிளாட் வீடுன்னா எட்டு வீடாவது இருக்கும்.. குறைந்தபட்சம் வாக்குவாதம், பயமுறுத்துற மாதிரி இருக்கணும்னா ஏழு, எட்டு பேர் போனாத்தான் கரெக்ட்டா இருக்கும்..

தனித்தனி வண்டில போய் ஒருவேளை பிரச்சினையாகி கடைசில கிளம்பும்போது சிக்கலாயி யாராவது ஒருத்தர் மாட்டிக்கிற மாதிரி சூழல் வந்திரும். அதனால ஆட்டோலதான் வருவீங்க.. போவீங்களோன்னு நினைச்சு அப்பாவித்தனமா எழுதிப்புட்டேண்ணே..!

[[[இவையெல்லாம் உ.த.வின் கேவலமான நோக்கங்களையே காட்டுகின்றன.]]]

இதிலென்ன கேவலம்..?

கருத்து சொல்றதுக்கெல்லாம் கேவலம் பார்க்குறது வலையுலகத்துல கிடையாதுங்கண்ணா..!

said...

[[[உ.த. மற்றும் அய்யனார் பதிவு இடவில்லை என்று குறிப்பிட்டது ஆபுரேசன் கிரின் ஹண்ட் பற்றி அவர்கள் பதிவிட்டதில்லை என்பதையே.]]]

இது பற்றிச் சத்தியமாக இந்த நேரம்வரையிலும் எனக்குத் தெரியாது என்பதால்தான் நான் எழுதவில்லை.. நீங்களாவது சொல்லுங்கள்.. தெரிந்து கொள்கிறேன்..!

said...

[[[உ.த.வை அம்பலப்படுத்தித்தான் அசுரனின் முதல் பதிவு உள்ளது. நீங்களோ உ.த.வின் பதிவு நிகழ்வை மிகச் சரியாகப் பதிவு செய்துள்ளது என்று சொல்கிறீர்கள்? இதை எப்படி புரிந்து கொள்வது?]]]

என்னை அம்பலப்படுத்துவதற்கு ஏன் இம்புட்டு கஷ்டப்படணும்..?

என்னுடைய பழைய பதிவுகளை நீங்கள் படித்திருந்தாலே இவனுக்கெல்லாம் ஒரு பதிவு போடணுமான்னு நினைச்சு ஓடிருப்பீங்க..

தப்பை உங்க மேல வைச்சுக்கிட்டு சுகுணாவைக் குத்தம் சொல்லாதீங்க..

பை தி பை.. சுகுணாகிட்டயே என்னைப் பத்தி கேளுங்க.. உங்களைவிடவும் என்னை இன்னும் நிறையவே அவர் அம்பலப்படுத்துவார்..!

எனக்கும் நல்லா பொழுது போவும்..!

said...

அசுரன்,

தங்களுக்கு எதிராக விமர்சனங்களை வைத்தவர்களை அதிரடியாய் கெட்ட வார்த்தைகள்(?!) ( முட்டாள்,மசிர்,மேதகு,அசடுகள் ) தூவித் திட்டுவது, பயமுறுத்துவது (ஆசிட், தீவிரவாதி,காட்டான்) பூச்சிக் காட்டுவது (மாட்டுக்கறி, பிட்டு படம்) போலிப் பெயரில் அல்லது அடையாளமின்றி அச்சுறுத்தவது போன்றவைவைதாம் என்னுடைய இரண்டிரண்டு நான்கு வரி விமர்சனத்திற்கு வினவு அண்ட் கோ வினரிரிடமிருந்து கிடைத்த பரிசாக இருக்கிறது. மேலும் இந்த அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் வார்த்தைத் தூவல்கள் யாவும் வினவு அவர்கள் தங்களின் அடையாளங்களாக சித்தரித்துக் கொண்டதுதானே தவிர நானாய் சொல்வதல்ல.(பார்க்க வினவின் பின்னூட்டம் http://www.ayyanaarv.com/2010/04/blog-post_23.html) இம்மாதிரி தாக்குதல்களை எளிதில் கடந்து விடலாம்தான். மேலும் இத் தாக்குதல்கள் அந்த நேரத்தின் கோபத் தெறிப்பாக, தன்னை விமர்சித்து விட்டார்களே என்கிற ஈகோவின் கொந்தளிப்பாக இருக்குமே தவிர விமர்சனத்தை திசை திருப்பி, விமர்சித்தவனை அராஜகவாதியாக்கி, விமர்சித்தவனின் குடும்ப பெண்டிரின் கற்பை லேசாய் உதாரணங்களின் மூலம் சோதிப்பதாய் அதிர்ச்சியளித்து சித்தரிக்காது. ஆனால் சற்றும் எதிர்பாராது இந்த வன்முறையை, புத்திசாலித்தனமான அச்சுறுத்தலை நீங்கள் நிகழ்த்தியிருக்கிறீர்கள். நல்லது.

முதலில் ஒன்றை மிகத் தெளிவாக சொல்லிவிடுகிறேன். நான் எங்கேயும் எப்போதும் லீனா மற்றும் சங்கரின் கவிதைகளுக்கு வக்காலத்து வாங்கவில்லை. மாறாய் லீனாவிற்கு தேவையில்லாமல் தரப்படும் விளம்பரங்களைத்தான் சுட்டிக் காட்டியிருந்தேன். லீனாவிற்கு எதிரான வினவு கட்டுரை, அவர்கள் இருவரையும் எதிர்கொண்ட ம,க.இ.கவினரின் செயல்பாடுகள் மீதுதாம் எனக்கு விமர்சனங்கள் இருந்தன. அதையே நான் வெளிப்படுத்தினேன். இதற்குப் பெயர் அராஜகமென்றால் அதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தொடர்ந்து செய்வேன். இரண்டாவது தமிழச்சி விவகாரத்தில் உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மிக சாதுர்யமாக இங்கே சொல்லியிருப்பது வினவு போன்ற திடீர் இணைய குழந்தைகளுக்கு க்ரைம் ரெக்கார்டுகளாகத் தெரியவரலாம். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இணையத்தில் இயங்குபவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரிந்துதான் இருக்கும். அதை திரும்பத் திரும்ப நினைவூட்டுவது அலுப்பாய் இருக்கிறது.

மற்றபடி புதிய பெயருக்கு நன்றிகள். 'அ'னாவிற்கு 'அ 'னா படு கச்சிதம்.

said...

எல்லாஞ் சரிண்ணே..!

உங்களுக்கு வசதிப்பட்டவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கு சாதூரியமாக முலாம் பூசி மேட்டரை முடித்துவிட்டீர்களே..!

நான் எனது முந்தைய பதிவில் கேட்டிருந்த கீழ்க்கண்ட கேள்விகளுக்கு என்னங்கண்ணா பதில்..?

///ஆகவே தோழர் தமிழச்சியின் பதிவுகளில் பொருந்தியிருந்த உட்கருத்துக்கள் பற்றிய உங்களுடைய கருத்தும், எனது கருத்தும் ஒன்றுதான்..!

ஆனால் நீங்களோ, [[[“நியாயமாக இவர் தமிழச்சியிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும், விவாதம் செய்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் அறிவுரை வழங்கியிருக்கிறார் இந்த பெரிய மனிதர்.”]]]

என்று எழுதியிருக்கிறீர்கள். அறிவுரை சொல்லி பின்னூட்டம் போட்டவர்களுக்கெல்லாம் என்னென்ன மாதிரியான மரியாதையான பதில்கள் கிடைத்தன என்பது அப்போதைய பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரியும். ஏன் உங்களுக்கே தெரியும்..?

எனக்கும் பட்டம்தான் கிடைத்தது. காயடிக்கப்பட்ட காளை. இதற்கு மேல் ஜனநாயக உணர்வுள்ள அந்தத் தோழரிடம் நான் என்ன விவாதம் நடத்தியிருக்க முடியும்..? யாரால் முடிந்தது.?///

///[[[“அதற்கு அடங்காத பொழுது வெளியே போ என்று வன்முறையை ஏவியுள்ளார் இன்றைய கருத்துரிமை காவலர்.
அன்றைய புனிதக் கூட்டணியில் உ..த. அண்ணாச்சி”]]]

எது வன்முறைங்கண்ணா..?///

///“ஆபாச வார்த்தைகளை தலைப்புகளாக வைக்காமல், சக பதிவர்களை நண்பர்களாக பாவித்து பதில் சொல்லி, அவர்களைத் திட்டாமல், வையாமல், ‘நாயே, சொரி நாயே, டேய்., அவனே, இவனே.. கொட்டையை கட் பண்ணிருவேன்.. பக்கத்துல வந்து பாரு.. ஒரு செகண்ட்ல அது இருக்காது.. காணாப் போயிரும்..’ என்றெல்லாம் பதில் சொல்லாமல் மரியாதையாக பேசும்மா..” என்று சொன்னது வன்முறையா..? சிரிப்புதாண்ணே வருது உங்களோட..!///

///ஒரு ஆள் என்ன வேண்ணாலும் எழுதட்டும்.. பிடிக்கலைன்னா நீங்களும் எதிர்க் கருத்தை எழுதுங்க.. பேசுங்க.. கூட்டம் போடுங்க.. நடத்துங்க.. இல்லைன்னா கோர்ட்ல கேஸ் போடுங்க.. போலீஸ்ல புகார் கொடுங்க.. அப்படீன்னு சொன்னேன்.. இது தப்பா..?///

///இதையெல்லாம் விட்டுப்போட்டு வீட்டுக்குப் போய் விளக்கம் கேட்பேன். அக்கம்பக்கத்துல அவரைப் பத்திச் சொல்லி விளக்கம் கேட்பேன்.. இழுத்துட்டுப் போயி ஆபீஸ்ல கட்டப் பஞ்சாயத்து செய்வேன்.. இப்படியெல்லாம் செய்றது நியாயமா.. அப்படீன்னு கேட்டேன்.. இது தப்பா..?///

///இத்தனை கூறிய பிறகு ஒரு கேள்வி எழலாம் கருத்துச் சுதந்திர புனிதக் கூட்டணியாளர்கள், எப்போதுமே அராஜகவாதம் தவறுதான் என்று சொல்லும் உத்தமர்கள், ஆனால் ம.க.இ.க.வினரோ அயோக்கியத்தனத்திற்கு அராஜகமே பதில் என்று சொல்லும் வன்முறையாளர்கள் என்ற கருத்து சரிதானே?

முட்டாள்தனமான வாதம்..! எது அயோக்கியத்தனம் என்பதே இன்னும் முடிவாகலை.. அதையும் நீங்களே முடிவு பண்ணிக்கி்டடீங்கன்னா எப்படிங்கண்ணா..?///

///ஈராக், ஆப்கானில் போராடும் மக்களை படு மோசமாக இழிவுபடுத்தி கவிதை என்ற பெயரில் குடித்துவிட்டு எழுதினார்கள் அவரது ‘இனிய நண்பர்’கள். அவர்கள் உண்மைத்தமிழனின் ‘இனிய நண்பர்’கள் என்பதால் ம.க.இ.க.வினர் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதும், அதுவே ஜனநாயகம் என்பதும் அவரது எதிர்பார்ப்பாக இருக்கலாம்.]]]

நான் எங்கண்ணே அப்படிச் சொன்னேன்..!?///

said...

கடைசியா இன்னொரு லாஜிக்கான கேள்வி..

[[உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆமாம்.. அது ஏண்ணே நான் எழுதின பதிவுல இருந்து எல்லாத்தையும் இங்கே எடுத்திட்டு வந்து பதில் சொல்றீங்க..? கவுரவம் பார்க்குறீங்களோ..?]]

இது போன பதிவுல நான் போட்டிருந்த பின்னூட்டம்..!

இன்னும் இதுக்கு நீங்க நேரடியான, தெளிவான பதிலைச் சொல்லலியேண்ணே..!

உங்க மனசுக்குள்ள இருக்குறதை மறைக்காம, வெளிப்படையா தயவு செய்து அப்படியே சொல்லிருங்கண்ணே..!

என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு இந்தத் தொடருக்கு ஒரு மங்களம் பாடிரலாம்..!

said...

அப்பாடி ஒரு வழியாக சுகுணா வந்து கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.அதற்காக அவருக்கும் அதை செய்து காட்டிய அசுரனுக்கும் நன்றிகள்.

மற்றபடி சுகுணா எழுதியிருக்கும் வினவு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தனித்தனியாக பதிலளிக்க ஆசைதான், என்றாலும் நேரமில்லை. இதனால் இந்த விவாதத்தில் பங்கேற்கவில்லை என்று தோழர் அசுரன் நினைத்துவிடக்கூடாது. மேலும் போகிற போக்கைப் பார்த்து வினவில் எழுத இயலுமா என்று பார்க்கிறோம்.

சீமாட்டி பிரச்சினை குறித்து சுகுணா இதுவரை வினவு தளத்தில் விமரிசனம் எதுவும் செய்யவில்லை. அவர் கவலைப்பட்டது ஷோபாசக்தியை பற்றி வினவு எழுதியதை மட்டும்தான்.

ரோசாவசந்த் பதிவில் சுகுணா தெரிவித்திருக்கும் கருத்து பற்றி இப்போதே தெரிவித்தால் பின்னால் எழுதுவதற்கு சஸ்பென்ஸ் போய்விடும்.

வினவில் எங்களைத் திட்டி வரும் மறுமொழிகள் கணிசமான அளவில் இருக்கின்றன. இதற்கு பதிலளிக்கும் முகமாக தோழர்களும் வசவில் இறங்கினால் அதை பல முறை கண்டித்திருக்கிறோம். சான்றாக தியாகு அதியமானை அவன் இவன் என்று எழுதியதை கண்டித்த்தற்காகத்தான் அவர் இன்று வினவு எது எழுதினாலும் எதிர்ப்பேன் என்று அவதாரம் எடுத்து நிற்கிறார்.இந்த வகையில் தியாகுவின் புதிய எழுச்சி பின்னணியை சுகுணா புரிந்து கொள்ளவேண்டும்.

அடுத்து வினவு மொழி நடை, சம்பளம் என்று அவர் ஒதுக்குவது ஏன்? 'விளிம்பு நிலை' மக்கள் சண்டை போடுவதை அவர் தன் வாழ்வில் இதுவரை பார்த்திராத ஜென்டில்மேன் போலும்.மற்றபடி அவரது விமரிசனங்களுக்கு தோழர் அசுரன் பதிலிளத்திருக்கிறார். அதற்கு சுகுணா என்ன சொல்கிறார் பார்ப்போம்.

said...

தோழர் அசுரன் பிளாகரில் பின்னூட்டம்போடும் போது நீண்ட பின்னூட்டங்களை அது சமயத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அப்போது பதிவின் முதலில் நீங்கள் போட்ட வாக்கியம் வரும். பின்னூட்டங்களை பிரித்து சற்று அளவாக போட்டால் எடுத்துக் கொள்ளும் என்பது என் அனுபவம்.

said...

//முதலில் ஒன்றை மிகத் தெளிவாக சொல்லிவிடுகிறேன். நான் எங்கேயும் எப்போதும் லீனா மற்றும் சங்கரின் கவிதைகளுக்கு வக்காலத்து வாங்கவில்லை. மாறாய் லீனாவிற்கு தேவையில்லாமல் தரப்படும் விளம்பரங்களைத்தான் சுட்டிக் காட்டியிருந்தேன். லீனாவிற்கு எதிரான வினவு கட்டுரை, அவர்கள் இருவரையும் எதிர்கொண்ட ம,க.இ.கவினரின் செயல்பாடுகள் மீதுதாம் எனக்கு விமர்சனங்கள் இருந்தன.//

அய்யனார் அவர்களே, நீங்கள் அதை மட்டும்தான் செய்தீர்கள் என்பதே பொய். நீங்கள் அவதூறும் செய்தீர்கள் என்பதைத்தான் பதிவில் பதிவு செய்துள்ளேன்.

அசுரன்

said...

என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள பின்னூட்டங்களை பெறுவதற்காக!

said...

அய்யனார் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. விமரிசனங்களுக்கு பதில் சொல்லமால், இல்லை சொல்ல தெரியாமல் மிரட்டல், கெட்டவார்த்தை, பூச்சி என்று ஒன்றுமே இல்லையென எஸ்ஸாகிறார். திமிரெடுத்த பார்ப்பனர்களிடம் மல்லுக்கட்டி விவாதித்தால் " ஒனக்கு என்ன வேய் தெரியும்" என்று எளிதாக கடந்து போவார்கள். இப்படி அக்மார்க் பார்ப்பனியத்தை சுமந்து திரியும் இந்தக் கவிஞர் தமிழக சூழல் குறித்து கவலைப்டுவதாக சொன்ன காமடியை நினைத்து சிரிக்க ஆரம்பித்து இன்னும் நிற்கவில்லை. மற்றபடி அய்யனாரை இந்த உலகிலேயே மிகவும் சீரியசான காமடி பீஸாகத்தான் கருதுகிறோம் என்பதை மைலார்டு, யுவர் ஆனர் அய்யனார் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

said...

//சான்றாக தியாகு அதியமானை அவன் இவன் என்று எழுதியதை கண்டித்த்தற்காகத்தான் அவர் இன்று வினவு எது எழுதினாலும் எதிர்ப்பேன் என்று அவதாரம் எடுத்து நிற்கிறார்.இ//

வினவு எழுதியதை பல இடங்களில் பாராட்டவும் செய்து இருக்கிறேன் ஆகவே வினவு என்னை பற்றி தவறாக கற்பனை செய்யவேண்டாம்

1.பினாமி
2.புதிய அவதாரம்
3.பொறாமை காரன்

இன்னும் எத்தனை பேர் வரப்போகுதோ அந்த பிளாக்காண்டவனுக்குத்தான் வெளிச்சம்

said...

//உண்மையில் கண்டன ஒன்றுகூடலுக்குப் பிறகு மூன்றுநாட்களுக்குப் பிறகுதான் வினவின் பதிவைப் படிக்க நேர்ந்தது. அதைப் படிப்பதற்கு முன்பு வரை அங்கே விவாதிக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அவர்கள் கூட்டத்தைப் பதிவு செய்திருந்த மொழிநடை, அல்லக்கைகள், அய்ந்திலக்கச் சம்பளம் என்றெல்லாம் இழிவுபடுத்தியது இவையெல்லாம் நம்பிக்கைகளைத் தகர்த்தன.//

லீனாவின் மொழிநடை சுகுணா திவாகருக்கு நம்பிக்கைகளைத் தகர்க்கவில்லையா?
ஏனேனில், லீனாவின் அவதூறு கவிதையை பொறுத்துக் கொண்டு லீனாவின் கருத்துரிமைக்காக அவருடன் சுகுணாவால் மேடையேற முடியுமெனில், வினவு தளத்தில் சில தோழர்களின் மேற்படி நம்பிக்கையைத் தளரச் செய்யும் மொழிநடையைப் பொறுத்துக் கொண்டு(அல்லது கண்டுகொள்ளாமல் - அதையும் முன்பு பலமுறை செய்திருக்கிறோம் அல்லவா?) தோழமைக்காக வினவுடன் விவாதித்திருக்கலாமே?

அவ்வாறு சுகுணாவை முடிவெடுக்கவிடாமல் தடுத்தது எது?

ஒருவேளை லீனாவின் கழிசடை மொழிநடை சுகுணாவுக்கு கவிதையாகத் தெரிகிறது எனில் (மார்க்ஸ் முதல் உழைக்கும் மக்கள் வரை ஆண்குறிகள்தான் என்று அவமானப்படுத்தியுள்ள போதிலும்) அதே போல வினவு தோழர்களின் மொழிநடையும் விளிம்பு மக்களின் விவாத மொழியாக தெரிந்திருக்க வேண்டுமே? அவ்வாறு ஏன் சுகுணாவுக்கு தெரிந்திருக்கவில்லை?

லீனாவுக்கு கொடுக்கப்படும் சலுகை கூட வினவுக்கு கிடையாதா?

அசுரன்

said...

http://suguna2896.blogspot.com/2010/06/blog-post.html

Related Posts with Thumbnails