TerrorisminFocus

Wednesday, June 02, 2010

சுய விமர்சனம் செய்யத் தயங்கும் பதிவுலகின் ஆணாதிக்க வக்கிரம் - ஒரு முழுப் பார்வை!!

பதிவுலகில் நர்சிம் பிரச்சினையொட்டி நடந்துள்ளவை குறித்த அசுரன் தளத்தின் பார்வைகள் இரு பகுதிகளாக வைக்கப்பட்டுள்ளன. பகுதி 1 - பொதுவாக நர்சிம் பிரச்சினையை பலரும் அனுகிய விதம், குறிப்பாக வினவில் எழுப்பட்ட மாற்றுக் கருத்துக்களுக்கு பதில் சொல்லுவிதமாக, வினவில் இடப்பட்ட அசுரன் பின்னூட்டங்கள் இந்தப் பகுதியில் உள்ளன.


பகுதி 2 - இந்தப் பிரச்சினையை ஒட்டி பைத்தியக்காரன் - சுகுணா நிகழ்வை மையமாக வைத்து கருத்துக்கள், கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

யார் யாருக்கு எப்படி விருப்பமோ அப்படி ஆரம்பித்து படித்துக் கொள்ளுங்கள், விவாதம் செய்யுங்கள்.

பகுதி 1

நர்சிம் பிரச்சினையில் பிற பதிவர்களை தேவையில்லாமல் இழுத்துள்ளது குறித்தும் சாதி குறித்தும்:

இதில் தேவையில்லாமல் பிற பதிவர்களை இழுத்துள்ளதாகக் குறைப்பட்டுள்ள நல்லவர் அன் கோவினர் (வால் பையன் போன்றோரும் கேட்டுள்ளனர் அவர்களை குறித்து அல்ல இந்த பதில்) அந்த இத்யாதி பதிவர்களின் ஆணாதிக்க வக்கிர ஆதரவுதான் இங்கு கேள்விக் குட்ப்படுத்தப்பட்டுள்ளது என்கிற விசயத்தையோ அல்லது அவ்வாறான ஆணாதிக்க வக்கிரம் தொடர்ந்து இங்கு நிகழ்கிறது என்கிற உண்மையையோ அல்லது அவ்வாறு தொடரும் ஆணாதிக்க வக்கிரத்துக்கு ஆழ்ந்த மௌனத்தையும், அதனை எதிர்க்கும் நடவடிக்கைகளுக்கு அழுத்தமான கண்டனத்தையுமே அவர்கள் பதிந்துள்ளார்கள் என்கிற உண்மையையோ திட்டமிட்டே மறைத்து வருகிறார்கள்.

பழமைபேசி என்கிற சாதிக்கு புனுகு பூசும் நல்லவருக்கு யாராவது சாதியை தட்டிக் கேட்டு எழுதிவிட்டால் பொங்கிவிடும். சாதி என்பது சாதி எதிர்ப்பாளர்களிடம் மட்டுமே நிலவும் ஒரு கற்பனை பொருள் என்பதாகத்தான் அவரது எழுத்தை படித்தால் புரிந்து கொள்ள முடியும். அவரது கருத்தில் வாயில் பீ தினிக்கும் கவுண்டனும், அதை ‘மகிழ்ச்சியுடன்’ சுவைக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்காரனும் ஒன்றுதான். அதாவது அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்களாம். இரண்டு பேரும் நிறுத்துங்கடா என்று போலீஸ்க்காரன் குரலில் சொல்வதுடன் தன்னை வரம்பிட்டுக் கொள்கிறார் இந்த புனுகு வியாபாரி. அதே நடைமுறையைத்தான் நர்சின் விவகாரத்திலும் கை கொள்கிறார்.

பஸ்ல டிக்கெட் கொடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மட்டுமே பொங்கு ஜாக்கி சேகர் என்ற நல்லவர் பொதுவாக மக்கள் கொத்து கொத்தாக செத்தொழிவது குறித்தெல்லாம் கருத்து சொல்வதில்லை(ஈழப் பிரச்சினை ஒரு எக்ஸெப்சன்). ஆனால் அது போன்ற மக்கள் பிரச்சினைகளை பேசுபவர்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்லவன் வேசம் கட்டி திட்டுவதற்கு அணி சேர்வார். அவருக்கு ஏற்ற ஆட்களின் சேர்மானம் அவருக்கு தேவைப்படுகிறது அல்லவா?

ஜாக்கி சேகர்: இவரும் சாதியை ‘எதிர்க்கும்’ ஒரு நல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது, அதாவது சாதி வெறியுடன் நடக்கும் தாக்குதல்கள் குறித்தது எல்லா காலங்களிலும் வாய் திறாவதிருந்து விட்டு அவ்வாறான சாதி வெறியை நுட்பமான வேறொரு தளத்தில் அம்பலப்படுத்தும் போது ‘மட்டும்’ அம்பலப்படுத்துபவரையே சாதி வெறியர் என்று அவதூறு செய்து எதிர்க்கும் டிகால்டி சாதி ‘எதிர்ப்பாளர்கள்’ இவர்கள்.

சுருக்கமா சொன்னாக்க, “ஏம்பா நாங்க அமைதியா வாழ்க்கையை ரசிக்க வந்திருக்கோம் இங்கயும் வந்து பொதுப் பிரச்சினையை பேசி எங்க அமைதியை ஏம்பா கெடுக்குற” என்ற ரகம் இவர்கள்.

இந்தப் பிரச்சினையில் சாதி எங்கே வந்தது என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது. பொதுவாக சாதிய ஒடுக்குமுறை நிகழும் விதம் எப்படிப்பட்டது என்பதை இங்கு பொருத்திப் பார்த்தால் புரியும்.

ஒரு கவுண்ட சாதி பன்னியும் இன்னொரு கவுண்ட சாதி பன்னியும் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் கொலை செய்து கொள்வார்கள். அடித்துக் கொள்வார்கள். ஆனால் இதுவே ஒரு தரப்பு தாழ்த்தப்பட்ட சாதி எனில் வாயில் பீ திணிப்பது, அம்மாவையும் – பையனையும் வன்புணர வைத்து கொடுமைப்படுத்துவது போன்ற மனு தர்ம தண்டனைகளை கையிலெடுப்பார்கள்.

இதுதான் நர்சிம்மின் எதிர் பதிவிலும் நிகழ்ந்துள்ளது. ‘அவளோட பிறப்பு அப்படிப்பட்டது’ என்றும் ‘ என்னோட வளர்ப்பு அப்படிப்பட்டது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளவை, அதுவும் தாம்புராஸ் என்ற பார்ப்பன சாதி வெறி சங்கத்தில் உயர் பொறுப்பில் இருப்பவரின் பிள்ளையிடம் இந்த கருத்து வருகிறது எனில் அது அப்பாவித்தமான ஒன்றாக கருத இயலாது.

சாதி குறித்து வினவுதான் பேசுகிறது என்று கதறும் ஜாக்கி சேகர், உ.த. போன்ற நல்லவர்கள் நடைமுறையில் இது போல சாதி சங்கங்களுடன் ஒட்டி உறவாடி, சாதியத்தை நடைமுறையில் கொள்ளும் நபர்களுடன் விமர்சனமின்றி பழகி வருகிறவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அங்கு விமர்சனமின்றி சாதியத்தை ஆதரிக்கும்(மௌனமாக இருப்பதன் மூலம்) ஆதரிக்கும் இவர்கள். இங்கு சாதியை வினவுதான் கிளப்புகிறது என்று சீன் போடுகிறார்கள். இன்று வினவு சாதி பேசிவிட்டதாக கதறும் பழமை பேசி முதலான இவர்கள் இதே தமிழ்மணத்தில் நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டு பார்ப்பனசாதியை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரியும் டோண்டுவை என்றாவாது இப்படி சொல்லியிருப்பார்களா?

ஒருவேளை ஆணாதிக்க வக்கிரமும் ஒரு கருத்து சுதந்திரம்தான் என்ற அதி உன்னத கருத்து சுதந்திர காவாளிகளா .. அன் கோவினர் இருக்கலாம். ஆனால் வினவுக்கு மட்டும் கருத்து சுதந்திரத்தை இவர்கள் புறக்கணிக்கும் மர்மம் என்ன? லீனா விவகாரத்திலும் சரி, நர்சிம் விவகாரத்திலும் சரி பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் பார்ப்பனிய நரித்தனமே இவர்களின் அளவு கோலாக இருக்கும் மர்மம் என்ன? நாட்டாமைகளின் தவறுகளுக்கு ஒரு மன்னிபே போதும் என்று இவர்கள் தடவிக் கொடுக்கும் மர்மம் என்ன?

அதாவது நாட்டாமை நம் வாயில் பீ திணிக்கலாம் அல்லது ஆண்குறியை திணிக்கலாம். ஆனால் நீ அதனை எதிர்க்கும் பொழுது சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, அவாளின் நாகரிக வரம்புகளுக்கு உட்பட்டே எதிர்க்க வேண்டும் என்பதே இவர்கள் சொல்ல வரும் தீர்ப்பு.

பதிவுலக சர்வாதிகாரம் என்று வினவு குறித்து பேசும் .. ஜாக்கி சேகர் போன்ற ஜனநாயகவாதிகள் (அல்லது ஆணாதிக்கவாதிகள்) பதிவுலகில் நிகழும் பெண்களுக்கு எதிரான சர்வாதிகாரம் குறித்து வினவு எழுப்பிய கேள்விக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார்கள். இது தொடர்பில் ஒரு வார்த்தை என்பவரது பதிவிலிருந்து சில வரிகள்:
http://oruvaarthai.blogspot.com/2010/06/blog-post.html
//நானெல்லாம் பதிவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகின்றது.பதிவுலகம் ஒருசுதந்திரமான உலகம்என்று தான் நான் கேள்விப்பட்டு வந்தேன்.

அதில் என்ன வேண்டுமானாலும் நம் மனம் விட்டு எழுதலாம், நாம் வெளியிலே சொல்லத் தயங்கும் கருத்துகளை துணிந்து வெளிஉலகுக்கு சொல்லலாம் என்று தான் கேள்விப்பட்டு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது இந்த பதிவுலகமும் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரின் பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது என்று.

புதிதாக யார் வந்தாலும் அவர்கள் பதிவுலகில் தாக்கு பிடிப்பது மிகவும் கடினம் தான்.

ஏற்கனவே இங்கு கோட்டை கட்டி கோவணத்தை கொடியாக்கி பறக்க விட்டுக் கொண்டிருக்கும் ஒரு கும்பல் புதியவர்கள் எழுதும் நல்ல எழுத்துகளை எல்லாம் மட்டமாக விமர்சனம் செய்தும்,கேவலமான முறையில் பின்னூட்டங்கள் போட்டும் அவர்களை பதிவுலகை விட்டே துரத்தி விடுவார்கள் என்று நண்பர் ஒருவர் சொன்னதை கேட்டு நான் அதிர்ந்து போனேன்.

இப்படி இவர்களின் கையில் பல பிரபலங்களும் (பெயர்கள் வேண்டாம்…) சிக்கி, கடைசியில் அவர்களும் பதிவுலகம் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருக்கிறார்கள் என்றும் அவர் சொன்ன போது இங்கும் இலங்கை அரசாங்கத்தைப் போல ஒரு சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறதோ..? என்ற சந்தேகம் எழுந்தது.

அங்கே தமிழர்களுக்கு எதிரான சர்வாதிகாரம் என்றால்…! இங்கே நல்ல எழுத்துகளுக்கு எதிரான சர்வாதிகாரம்..!//

வினவின் கருத்துக்களால் தமது பொந்துகளில் இருந்து பதறித் துடித்து வெளிவந்துள்ள இந்த கரப்பான் பூச்சி பதிவர்கள் அத்தனை பேரும் நர்சிம் நடு ரோட்டில் ஒரு பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கிய பொழுது தமது பொந்துகளில் பதுங்கிக் கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில .. கரப்பான் பூச்சிகள் ஸ்லைட்டாக தலையை தூக்கிப் பார்த்துவிட்டு அவர்களின் மென்மையான இதயத்திற்கு நர்சிமின் பயங்கரவாதம் ஒத்து வராது என்பதால் தமது முகம் கோண மீண்டும் பொந்துகளில் பதுங்கிக் கொண்டனர். சொல்ல மறந்துவிட்டேனே, நர்சிம்மின் காதில் விழுமாறு அவர்கள் இவ்வாறு கூறிய பிறகுதான் தமது பொந்துகளில் பதுங்கினர்: ‘அய்யா நர்சிம் அவர்களே, உங்களிடம் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்பார்க்கவில்லை, நன்றி வணக்கம்’ (நன்றி வணக்கம்நமது உபயம், பொருத்தமா இருக்குமென்பதால்).

அதே அவர்கள் இந்த வன்முறை குறித்து பேசி வினவு தோழர்கள் அதே களத்திற்க்கு வந்தவுடன் ஆக்ரோசத்துடன் ஒன்று கூடி கரப்பான் பூச்சி பாதுகாப்பு அமைப்பாக அன் அபீசியலாக அணி திரண்டு வினவை புறக்கணிப்போம் இயக்கம் ஆரம்பித்துள்ளனர். நல்ல கூட்டணி.

இந்த புதிய கூட்டணியில்முக்கி நபர் ஒருத்தரை சொல்லாமல் விட்டு விட்டேன். அவர்தான் கோவி கண்ணன். நர்சிம் பிரச்சினை பற்றிய பதிவுகளில் கூட தனது மனிதாபிமான கோமணத்தைகழற்றி காயப் போட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் பற்றிய தனது நெம்ப நல்லவன் கருத்தை எழுதிக் கொண்டு செல்கிறார். இதில் சில விசயங்கள் உள்ளன, ஒன்று ரயில் தகர்ப்புக்கு மாவோயிஸ்டுகள் பொறுப்பேற்கவில்லை என்று அன்றைக்கே ஒரு அறிக்கை விட்டனர் இரு நாட்கள் கழித்தும் விரிவான அறிக்கை விட்டுள்ளனர் ஆனால் அது கோவிக்கு தேவையில்லாத விசயம். மேலும், ‘அப்பாவிசி ஆர் பி எப் மற்றும் போலீஸால் அங்கு கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கிலானவர்கள் (வேற யாரு மக்கள்தான், அதப்பத்தி நமக்கென்னையா) பற்றியும் அவருக்கு கவலையில்லை. அவரது கவலையெல்லாம் நர்சிம் பற்றிதான்ஸாரி சேத்துப் போன அப்பாவி போலீசு பற்றிதான்(ரெண்டும் ஒன்னுதான்). அதே சிங்கப்பூர் சிந்தனையோட்டம் நர்சிம் விசயத்திலும் வெளிப்படுகிறது, நர்சிம் விசயத்தில் இவர் நடுநிலைவாதியாம். அப்படின்னா என்னவென்றால், நர்சிம் நடுரோட்டில் வன்கொடுமை செய்யும் பொழுது அமைதியாக பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பிறகு கருத்துச் சொல்லுவது ஆகும். சூப்பரப்பு

கோவி கண்ணன் இந்த பிரச்சனையில் தீர்வை தேடுகீறாராம், என்ன வகையான தீர்வு? அதாவது நர்சிமை முல்லையே ஹன்டில் செய்து கொள்வாராம், மற்றபடி நர்சிமின் ஆணாதிக்க வக்கிரம் உள்ளிட்ட இன்ன பிற ஆதிக்க உட்க் கூறுகளை கண்டித்து எழுதினால் அது நமது விளம்பரம் அல்லது அரசியலுக்கு பயன்படுத்துவது என்கிறார். நல்லது கோவி எமது அரசியல் எது என்பதை வெளிப்படையாகவே வைத்துள்ளோம், அது ஒடுக்குமுறை நிகழும் இடமெல்லாம் அதனை ஏறி அடிப்பத்தே ஆகும். ஆனால் நரசிம் மற்றும் நீங்கள் உள்ளிட்டவர்களின் அரசியல் என்ன? அரசியலே இல்லாத அத்துவான காடுகள் எதிலும் வாழ்கிறீர்களா என்ன?

அல்லது ஆணாதிக்கம், பார்ப்பனியம் நரசிம் எழுத்துக்களில் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா என்ன? அப்படியெனில் அதுதான் உங்களது அரசியல்.

நல்லவர்களின் புனிதக் கூட்டணி மீண்டும் கூடியுள்ளது. நர்சிம்மை சும்மா மென்மையாகத் தட்டியுள்ள உ.த. அண்ணாச்சிதான் வினவை வெளியேற்றுவோம் இயக்கத்துக்கு மீண்டும் தலைவராக முன்னிலை வகிக்கிறார். இந்தப் பிரச்சினைக்கு இவர்களின் தீர்வு, ரேப் செஞ்சிட்டு 2000 ரூவா அபராதம் கட்டிட்டு போயிடு என்ற மைனர் குஞ்சு தீர்ப்புதான். அட்வான்ஸ் புக்கிங்கில் இனிமேல் ரேப் செய்யும் வசதி வரவுள்ளதாக பட்சி சொன்னது.

அட்வான்ஸ் புக்கிங் விவரத்தை வினவை புறக்கணிக்கும் இயக்கத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு உ.த. அண்ணாச்சி அறிவிப்பார்(பிறகு தனது பெயரையும் அதற்குப் பொருத்தமாக மாற்றிக் கொள்வாரா’மாம்(ஸ்)’).

இதனிடையே சிலரது வரலாற்றை மீண்டும் ஒரு முறை கிழித்து பார்ப்போம்.

STD1:
குசும்பன் நெம்ப நல்லவனைப் போல தனது பதிவில் இன்று எழுதியுள்ளார்.

//இதுவரை பதிவுலகில் நடந்து வந்த பிரச்சினைகளின் பொழுது எல்லாம் அந்த அந்த சமயத்தில் பிரச்சினனகளள பற்றி பதிவு போட்டே வந்திருக்கிறேன், எவ்வித உள்நோக்கமும் இன்றி, இப்பொழுதும் அதன் படியே செய்திருக்கிறேன்.//

இது குசும்பு எழுதியுள்ளது. குசும்பு ஏற்கனவே இது போல பெண்களுக்கெதிரான வன்முறைகளை குசும்பாக எழுதியுள்ளார் என்பதற்கு உதாரணம் தமிழச்சி விவகாரம். அவரை நர்சிம் பிரச்சினையில் இங்கு சொல்லிக் காட்டியவுடன் அவருக்கு கோபம் வருகிறது, ஆனால் அவரோ இஸ்டம் போல பாதிக்கப்பட்டவர்களையே கிண்டல் நையாண்டி செய்து எழுதுவார், யாருக்கும் கோபம் வரக்கூடாது. இதுதான் குசும்பனுடைய ஆட்ட விதி. இனி தமிழச்சி விவகாரத்தில் குசும்பனுடைய ஆட்டம் எப்படிப்பட்டது என்பது குறித்து அசுரன் பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது:

//குசும்பன் பதிவில் உண்மையில் குசும்புதான் செய்துள்ளார். அவற்றில் எனக்கு ஒப்புதல் இல்லை. உண்மையில் அக்கறையெனில் தமிழச்சியை நேரடியாக சரியான தர்க்க முறையில் விமர்சித்திருக்க வேண்டும். அதைவிடுத்து குசும்பன் எழுதியது ஒரு கீழ்த்தரமான விளம்பர யுக்தியே. ஏனெனில் இதற்க்கு முன்பு தமிழச்சி எழுதியதை சாக்கிட்டு தமிழ்மண பதிவர்கள் சிலர் அதே போன்ற பாணியில் கிண்டல் நடையில் பல பதிவுகள் எழுத கடைசியில் பாதிக்கப்பட்டது தமிழச்சியே. சில்லுண்டி வேலை செய்த பதிவர்கள் பாதுகாப்பாக ஒதுங்கி கொள்ள பாதிக்கப்பட்டவருக்கே தண்டனை கொடுக்கப்பட்டது.

விசயம் அப்படியிருக்க அதே உத்தியை மீண்டும் குசும்பன் செய்வார் எனில் தமிழச்சி பார்த்து கொண்டு சும்மாயிருப்பார் என்று எனக்கு தெரியவில்லை. குசும்பன் தமிழச்சியை கிண்டல் செய்யலாம் எனில் Provided அந்த சூழல் தமிழச்சியை கிறுக்கச்சியாக்கும் எனில் தமிழச்சிக்கும் ‘யாருடா டேய்’ என்று கேட்க்க அதே சுதந்திர உரிமையுள்ளது என்றே கருதுகிறேன்.//

இப்படி குசும்பனை குறித்து எழுதியவுடன் குசும்பன் அன்றைக்கும் வந்து இதே போல வசனம் பேசித் திரிந்தார்.

எப்படி அன்றைக்கு தமிழச்சி 'யாருடா டேய்' என்று ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் உரிமையை அசுரன் தளம் ஆதரித்ததோ, அதே போலத்தான் லீனாவுக்கு எதிரான வினவின் குரலையும், நர்சிம்மை எதிர்க்கும் வினவின் குரலையும் ஆதரிக்கிறது அசுரன் தளம்.

இதுல இன்னொரு முக்கிய புரளி என்னவென்றால் நர்சிம் மன்னிப்பு கேட்டு விட்டாராம். இப்படி அவரது கொ.ப.செக்கள் புரளி கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் (அதில் உ.த.வும் உண்டு).

யாரிடம் கேட்டார் என்பது தெரியாது. அவரது பதிவில் அப்படி எதுவும் இல்லை(மன்னிப்பு என்றால் முதலில் தவறு என்னவென்று சொல்ல வேண்டும், இல்லையெனில் எதற்கு மன்னிப்பு கேட்கிறார் என்பதே நமக்கு தெரியாது).

இவர்களின் இன்னொரு நியாயம், அதான் ரேப் செஞ்சவனும், பாதிக்கப்பட்டவனும் சகஜமா போயிட்டானுங்கள்ள என்ற வாதம். இது அப்படியே சாதிக் கொடுமை நடந்த இடங்களில் வன்கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஆதரவாக பேசுபவர்களை எதிர்த்து ஆதிக்க சாதி அடிவருடிகள் வைக்கும் வாதத்தின் இன்னொரு பிரதியே ஆகும்(கோவி கண்ணன்).

நடந்துள்ள அநீதி இரு சாரரும் அமைதியாக போனவுடன் ஆறிப் போகின்ற ஒன்று அல்ல. பதிவுலகில் தொடரும் ஆணாதிக்க வக்கிரத்தின் ஒரு வெளிப்பாடுதான் நர்சிம். எனவே இதை தனியொரு சம்பவமாக திரிக்கும் உ.த. போன்றவர்களின் நோக்கம் மிக கேவலமானது மட்டுமல்ல, அது மிகவும் சுயநலமான ஆணாதிக்க தன்மை கொண்டது.

//பிரச்சினையை பற்றி மற்றும் பேசினால் நன்று. அதைவிட்டு சம்பந்தமில்லாதவர்களை இழுப்பது நோக்கத்தை திசைதிருப்பும். அவரவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் பதிவிடுவதுதான் இயல்பு. இவர் சொல்லவில்லையே என டிமாண்ட் செய்வது நல்லதல்ல.//

இந்தக் கருத்தைப பொறுத்த வரையில் அவ்வாறு கோருவது சரி என்றே கருதுகிறேன். எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லாதவர் பிற்பாடு விளக்கம் கொடுத்தால் முடிந்தது பிரச்சினை. ஆனால் இவ்வாறு கோராமல் இருந்தால் அந்த மௌனமே அநீதிக்கான அங்கீகாரமாகிவிடும். எனவே, இங்கு மௌனம் உடைக்கப்பட வேண்டும் என்ற வினவின் அனுகுமுறை 100% சரியே.


பாகம் - 2

இனி சுகுணா - பைத்தியக்காரன் - வினவு விவகாரத்தை மையமாக வைத்து:

//லீனா பிரச்சினை போன்ற ஒருசில பிரச்சினைகளில் உங்களோடு முரண்பட்டாலும்

தொடர்ச்சியாகப் பல சமயங்களில் உங்களை ஆதரித்து எழுதியிருப்பவன் நான்.//

இவ்வாறு எழுதியுள்ளார் சுகுணா. அதாவது ரொம்ப நியாயவான் போல. அவர் மீது லீனா பிரச்சினையின் போதே அசுரன் தளத்தில் வைக்கப்பட்ட விமர்சனம், 'சுகுணா நீங்கள் வினவின் முதுகில் குத்தியுள்ளீர்கள்' என்பதே ஆகும். லீனா பிரச்சினையிலும் சுகுணா நெகிழ்ச்சியுடன் அசுரன் தளத்தில் சில பல பின்னூட்டங்கள் இட்டார். அந்த நெகிழ்ச்சியின் பின்னால் உள்ள போலித் தனங்களை அவரது அதே நெகிழ்ச்சியுடன் அசுரன் தளத்தில் கேள்விக் குட்ப்படுத்திய பொழுது சுகுணா வழக்கம் போல காணமல் போயிருந்தார். அவரது பழைய பிரதி மட்டும் பின்னூட்டத்தில் கேட்பாரற்று கிடந்து என்னைப் பார்த்து பல்லிளித்தது.

இன்று இதே வகையான 'நெகிழ்ச்சியுடன்' நர்சிம் பிரச்சினையில் வினவை கேள்வி கேட்கிறார் சுகுணா. அவரை வினவு அறம் நழுவி அவதூறு செய்ததாக சொல்லும் சுகுணா அவற்றை ஒரு பகடியாகத்தான் வினவு வெளிப்படுத்தியிருந்தது என்பதை மறைக்கும் அதே வேளையில், சுகுணா ஆணித்தரமாக வினவின் மீது பல அவதூறுகளை செய்துள்ளது குறித்து அசுரனில் மிக 'நெகிழ்ச்சியுடன்' கேள்வி கேட்கப்பட்டிருந்தது. சுகுணா நேர்மையான விளக்கம் தருவார் என்ற அதீத நம்பிக்கையுடன் கேட்டிருந்த கேள்விகளுக்கு இன்று வரை பதில் சொல்லாமல் இருக்கும் அவரது அறம் எங்கு வழுவியது என்று அவர்தான் சொல்ல வேண்டும்.

//நர்சிம்மின் பார்ப்பனத்திமிர், ஆணாதிக்கத் திமிரை அம்பலப்படுத்த உங்களிடம் உண்மையிலேயே சொந்தமாகச் சரக்கு இல்லையா?//

என்று கேட்டுள்ளார் சுகுணா. உருவாக்கப்படுபவை அனைத்துமே பிரதிகள் என்று கருதும் சுகுணா இந்தக் கேள்வியை எழுப்புவது ஒரு வேடிக்கை என்றால், சொந்தச் சரக்கு இல்லாத அறிவிழிகள்தான் வினவு உள்ளிட்ட நாங்கள் என்று ஒத்துக் கொள்வதில் எமக்கு வருத்தம் ஒன்றுமில்லை.

ஆனால் நிறைய சொந்த சரக்கு உள்ளதாக நம்பும் நீங்கள் ஏன் இது வரை ஆணாதிக்கத்தை எதிர்த்து ஆக்கப் பூர்வமான ஒரு பங்களிப்பை முன் வைக்கவில்லை? மாறாக ஆணாதிக்க வக்கிர எதிர்ப்பை சிதைக்கும் வகையில் உங்களது சொந்த சரக்கை அடுத்தவனின் இ மெயில் ஐடியை திருடி அம்பலப்படுத்தும் அளவுதான் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதுதான் ஆக வெட்கக் கேடானதாக கருதுகிறேன் சுகுணா.

ஆதரவு சக்தி என்று சொல்லிக் கொண்டு முதுகில் குத்துவேன் என்பவர்களை அதே போலத்தான் திருப்பி அடிக்க முடியும் என்று லீனா விவகாரத்தில் சொன்னதை சுகுணாவின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரக் கடமைப்பட்டுள்ளேன்.

இனி பைத்தியக்காரன் விவகாரம், பைத்தியக்காரன் எழுதிய ஒரு பதிவை அடிப்படையில் மாற்றம் செய்து அதை விட இரு மடங்கு பெரிய பதிவாக வினவு இட்டுள்ளது. இதன் பொருள் அந்தப் பதிவு ஒரு கூட்டு முயற்சி என்பதே ஆகும். இதனைத்தான் வினவும் சொல்லியுள்ளது. பைத்தியக்காரனின் பங்களிப்பை வெளியிடாமல் மறைத்ததில் வேறு காரணங்கள் இருக்கலாம். இது போன்ற நிகழ்வுகள் பதிவுலகில் வெகு சகஜமான ஒன்று. இது போல நடவடிக்கைகளை பட்டியலிட்டால் இன்றைக்கு நல்லவன் வேசம் கட்டி ஆடும் ஒருத்தன் பாக்கியில்லாமல் (அசுரன் உள்ளிட்டு) துரோகிகளாக மாறிவிடுவார்கள். இந்த விவகாரத்தை சுகுணா வெளிப்படுத்திய விதம் தெளிவாகத் திட்டமிட்டு நர்சிம் எதிர்ப்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி ஒற்றுமையை குலைக்கும் நோக்கமே ஆகும். இதை பெரிய குற்றமாக முன்னிறுத்துபவர்களில் பலரின் நோக்கம் நர்சிம்மின் ஆணாதிக்க திமிரின் வீரியத்தை குறைத்துக் காட்டுவதாகவே உள்ளது (அல்லது அந்த நோக்கத்திற்கு பழியானதாகவே உள்ளது).

இதில் அடுத்த விசயம், பைத்தியக்காரன் நடைமுறை வாழ்வில் ஒரு பார்ப்பனராக உள்ளார் என்ற குற்றச்சாட்டு இதற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர் பைத்தியக்காரன், இவற்றை அவர் பொய் என்று மறுத்துள்ளார் தனது பதிவில். இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதனை இன்று சொல்லும் அவரது நண்பர்களான சுகுணா போன்றோர் அவர் ஒரு வேளை பார்ப்பன நடைமுறைகளைக் கொண்டவராக இருப்பின் அவரை விமர்சினமின்றி சந்தர்ப்பவாதமாகவே நட்பு பாராட்டியுள்ளனர் என்று தெரிகிறது. சந்தர்ப்பம் பாதகமாக போனவுடன் திருப்பி அடிக்கிறார்கள்.

இந்த விசயத்தில் பைத்தியக்காரன் நர்சிம்மை நேரடியாக, வெளிப்படையாக, முதல் ஆளாக கண்டித்ததுடன் இல்லாமல், வினவில் வெளிவந்த பதிவையும் வெளிப்படையாக ஆதரித்தும் எழுதியுள்ளார். மேலும், நர்சிம்மை கண்டித்து பதிவு எழுதுவேன் என்றும் நர்சிம்மிடமே கூறியதாக பதிவில் எழுதியுள்ளார். இது பாராட்டத்தக்கது.

இதில் அடுத்து வருகின்ற இன்னொரு விசயம், முல்லை வன்னியர் சாதி போரத்தில் உள்ளார் என்பது மற்றும் பார்ப்பன நடைமுறையுள்ள பைத்தியக்காரனை வினவு எப்படி பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள். பைத்தியக்காரனின் சொந்த வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புள்ள, பார்ப்பனிய எதிர்ப்பாளராக தங்களைக் காட்டிக் கொள்ளும் சுகுணா போன்ற சந்தர்ப்பவாதிகள் பைத்தியக்காரனது பார்ப்பன நடைமுறைகளை (ஒருவேளை பைத்தியக்காரன் அவ்வாறனவரெனில்) கண்டிக்காதிருந்துவிட்டு, இன்று பைத்தியக்காரனை அவரது எழுத்தின் மூலம் அறிந்து கொண்டு அவரது முற்போக்கு கூறுகளின் அடிப்படையில் அவருடன் செயல்பட்டுள்ள வினவு குழுவை அதற்குப் பொறுப்பாக்கியுள்ளது மிகக் கேவலமானதொரு உத்தி.

நியாயமாக, சுகுணாதான் இதற்கு பதில் சொல்லவேண்டும். எப்படி சுகுணா இத்தனை நாள் பைத்தியக்காரனை விமர்சிக்காமல் இருந்துவிட்டு இன்று நர்சிம் என்ற பார்ப்பானிய ஆணாதிக்க வெறியனை காப்பாற்றுவதற்காக முற்போக்கு வேசம் கட்ட இயலுகிறது உங்களால்?

பைத்தியக்காரன் நர்சிம்மை எதிர்ப்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டுதான் செயல்பட்டுள்ளார். அவரது பங்களிப்பு இருந்த பதிவில் அவர் பெயர் மறைக்கப்பட்டது ஒன்றுதான் அவரது-வினவினது தவறு. மற்றபடி பெர்சனல் தகவல் என்று என்ன வெளிவந்துவிட்டது என்று தெரியவில்லை. ஒருவருடைய தந்தையின் முக்கியமான அரசியல் பின்னணி அம்பலப்படுத்தப்படுவது பெர்சனல் எனில், பெயர் சொல்லி அழைப்பதே பெர்சனல் என்று ஆகிப் போகும். இதனை மன்னிக்கவே முடியாத துரோகமென்று கதறும் நல்லவர்கள் சுகுணாவும், பைத்தியக்காரனின் இமெயிலில் இருந்து திருடி வெளிப்படுத்திய நண்பரும் செய்ததை என்னவென்று சொல்வார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இவ்வாறு பைத்தியக்காரனை மன்னிக்கவே முடியாத துரோகி என்று அவதூறு செய்துள்ளவர்கள்தான் நர்சிம்மை மன்னித்துவிடலாம் என்று சொம்பு தூக்கி கிளம்பியுள்ளனர். பைத்தியக்காரனோ, வாய் திறந்து தம்மீதான ஒடுக்குமுறையை வெளிப்படுத்தத் தயங்கிய பெண் பதிவர்களின் சார்பில் துரோகி பட்டம் வாங்கியுள்ளார். சுகுணா, உ.த., கோவி. கண்ணன் போன்றோர் என்னவாகியுள்ளனர் என்பது அவர்களுக்கே தேவையில்லாத ஒன்று? அடுத்த வேளை சோறு கிடைக்குதா ரைட்டு விடு....

இந்தச் சம்பவம் எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் எடுக்கும் நிலைப்பாடுகளின் போது பல்லிளிக்கும். அன்று தெரிந்து விடும் எது சரியென்று மிகத் தெளிவாக, சந்தேகங்களுக்கிடமின்றி, மனக் கிலேசங்களுக்கிடமின்றி.

மேலும், இன்று பைத்தியக்காரனை அம்பலப்படுத்த என்ற முகாந்திரத்தில் இமெயில் ஐடியிலிருந்து திருடி எழுதியுள்ள சுகுணா, இதே போல உயர்வான தனது லட்சியங்களுக்காக ஆனந்த விகடனிலிருந்து திடுடித் தரலாமே? தருவாரா என்று வினவு கேள்வி எழுப்புகிறது. ஆனந்த விகடனா அல்லது லட்சியமா என்றால் ஆனந்த விகடன் என்றே சொல்வார் சுகுணா, ஆனால், பைத்தியக்காரன் நட்பா, ஆணாதிக்க பார்ப்பனிய எதிர்ப்பா என்ற கேள்வியில் அவர் தேர்ந்தெடுத்துள்ளது ஆணாதிக்க பார்ப்பனிய எதிர்ப்பையே. இதுவும் பாராட்டத்தக்கதே.

இரண்டாவது, முல்லையின் வன்னிய சாதி சார்பு. இது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவ்வாறெனில் அது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அதனை உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் கூட முல்லை வன்னிய சாதி சார்பாக இருப்பதே அவர் மீதான வன்கொடுமையை நியாயப்படுத்தி விடுமா? இந்தக் கேள்வியை வெகு திறமையாக முன் வைக்கும் அல்பவாதி தியாகு அவரது பதிவுகளில் அவருக்கு ஆதரவாக எழுதிக் கொண்டிருக்கும் ஒற்றை பதிவரான குழலியின் வன்னிய சாதி ஆதரவு தெரியாதோ என்னவோ? தோழர் தோழர் என்று ஈசிக் கொண்டுள்ளார். தியாகு தன்னை தியாகியாக் காட்டிக் கொள்ள பகித பிரயத்தனம் செய்து வருகிறார், அவர் தோழர்களால் புறக்கணிக்கப்பட்டதன் பின்னணி கருங்காலித்தனம் என்ன என்பது இங்குள்ளது. இது குறித்த சின்னதொரு கேள்விப் பட்டியலுக்கு பதில் சொல்லுங்கள் என்ற பொழுது ஓடிப் போனவர்தான் தியாகு. அன்றைய அவரது எதிர்வினையின் சுருக்கம் இதுதான் 'எந்த அடிப்படையில் தோழர்களை இவ்வளவு கேவலமாக தொடர்ந்து குறிபிடுகிறீர்கள்' என்றதற்கு அவரது ஒற்றை வார்த்தை பதில் 'அதை விவாதம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்' என்பதே ஆகும்.

அதாவது இன்று முல்லையை நர்சிம்முடன் (நர்சிம் ஏதோ செஞ்சுட்டார் விடுங்க பாசு) சமதானமாக போகச் சொல்லி இவர்கள் வைக்கும் அதே கருத்துத்தான் தியாகு வைத்ததும். அதாவது நர்சிம்முக்கு எப்படி எந்த வரையரையுமின்றி ஆகக் கேவலமாக அவதூறு செய்யும் உரிமையுண்டோ - அதை வரையரையின்றி மன்னிக்க மட்டுமே நமக்கு உரிமையுண்டோ அதே போல, லீனாவுக்கு எப்படி எந்த வரையறையுமின்றி ஆகக் கேவலமாக அவதூறு செய்யும் உரிமையுண்டோ - அதை ஆக நாகரிகமாக மறுத்து விளக்க கேட்க மட்டுமே நமக்கு உரிமையுண்டோ அதே போல தியாகுவுக்கும் சகட்டு மேனிக்கு அவதூறு செய்ய உரிமை உண்டு - நமக்கு அதை விவாதம் என்று எடுத்துக் கொண்டு கண்டுகொள்ளாமல் செல்லும் உரிமை மட்டுமே உண்டு என்பதே தியாகு முன்னிறுத்தும் தீர்ப்பு. தியாகு மட்டுமல்ல இந்த பிரச்சினையில் சகல வண்ணங்களிலும் வினவுக்கு எதிராக நிலைப்பாடெடுத்துள்ளவர்களின் பொது அரசியலும் இதுவே(தெரிந்தோ தெரியாமலேயோ). அதனால்தான் லீனாவின் மொழிக்கு பொருத்தமான வினவின் மொழி நடை அதிர்ச்சியுடன் பேசப்படுகிறது (வினவு பின்னூட்டங்கள் குறித்து தமிழச்சி, செல்வநாயகி போன்றோரின் கருத்துக்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்), நர்சிம்மின் பொது அரசியலான ஆணாதிக்க பெண் ஒடுக்குமுறை உடல் மொழியினை எதிர்க்கும் வினவின் ஆக்ரோசமான மொழி நடையும் இதே அம்சத்தில்தான் விமர்சிக்கப்படுகிறது.

இவையனைத்தும் நாட்டாமைகள் அப்படித்தான்யா இருப்பாங்க நீ கண்டுக்காம போவயா என்ற பொது புத்தி அடிப்படையிலே எழும் தீர்ப்புகள் ஆகும். அதாவது
நாட்டாமைகள் அப்படித்தான்யா இருப்பான் நீ அதே மாதிரி திருப்பிச் செய்வியா? இப்போ பாரு அமைதியா தீர்க்க வேண்டியது சிதைஞ்சு போச்சி என்று கூறுபவர்கள் எப்படி நாட்டமையின் ஒடுக்குமுறையை எதிர்மறையில் நியாயப்படுத்துகிறார்களோ அதுவேதான் இன்று வினவு விசயத்திலும் நடந்துள்ளது. குறிப்பாக தியாகுவின் ஒரு கருத்தைக் கவனிக்கலாம், புதிய தமிழகம், வி.சி. போன்றவை சாதி சண்டையைத் தூண்டுவதாக எழுதி வினவை அவர்களுடன் ஒப்பீடு செய்துள்ளார். இந்த ஒப்பீடு மிகச் சரியானது என்பதே எனது கருத்தும். அதாவது ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்வன்முறையை, எதிர்வினையை வினவு தூண்டுகிறது என்பது மிகச் சரியே. ஆனால் சாதிச் சண்டை என்பது சாதி ஒடுக்குமுறையை (தியாகு பாசையில் அமைதி) விட மேலானது என்பதை தியாகு போன்ற ஆதிக்க சாதிவெறிக்கு சொம்படிக்கும் துரோகிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனது வாயில் திணிக்கப்படும் பீயை விட அதனை எதிர்த்த எனது வயிற்றில் ஒரு கத்தி செருகப்படுவதை ஏற்றுக் கொள்வேன் என்ற விடுதலை உணர்வே தாழ்த்தப்பட்ட சாதியினரின் வன்முறைக்கு பின்னுள்ளது. இதனை இழிவுபடுத்தி எழுதும் தியாகு போன்றோர் லீனாவுக்கு ஆதரவாகவும், நர்சிம்மை மறைமுகமாக நியாயப்படுத்துபவர்களாவும் இருப்பதில் ஆச்சர்யமில்லை.

தியாகு ஓடிப் போன பின்னணி:

"இதற்கு முன்பு வினவுடன் முரன்பட்ட தோழர்கள் யார்? மணி என்பவர் வந்த நாள் முதல் ஒரே லடாய்தான், அப்புறம் இராயகரனுடனான காரசராமான விவாதப் பதிவுகள். இவர்களெல்லாம் இன்றும் தோழர்களாகத்தான் உள்ளனர். இது தவிர்த்து பலர் கடுமையான முரன்பாடுகள் இருந்த பொழுதும் நண்பர்களாகவும், தோழர்களாகவுமே உள்ளனர். தியாகுவே கூட முரன்பட்டுள்ளார் முன்பு. தியாகுதான் காரல் மார்க்ஸ் என்ற முகமூடி அம்பலாமன பிறகும் கூட தோழர்கள் அவருக்கு பல விதங்களில் விளக்கவே முற்பட்டனர்(புறக்கணிக்கவில்லை). பலமுறை அவரது பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் (லீனா கூட்டத்தில் அடிதடி செய்ததாக ஒரு பொய், அவரை வேசி என்றதாக ஒரு பொய், இன்னும் பல) விளக்கம் கொடுத்த பிறகும், அவைகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்ட பிறகும், அவை குறித்து சட்டை செய்யாமல் எதிரிகளின் வார்த்தைகளில் விமர்சித்து அதே அவதூறுகளுடன் ஒரு பதிவும் இட்டார். அவரது நோக்கம் விமர்சனம் செய்வதல்ல, சேறு அடிப்பது என்றே புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பிற்பாடு அவர் காரல் மார்க்ஸ் என்ற பெயரில் லீனா விவகாரத்துக்கு முன்பிருந்தே வினவு தோழர்களை அவதூறு செய்துள்ளதும் வெளிவந்தது. இவ்வாறு கறுப்பு ஆடாக நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளதே தியாகு விசயத்தில் மிகக் கடுமையாக தோழர்கள் அவரை புறக்கணிக்கக் காரணமானது. ஒருவருடன் பழகுவதற்கு பரஸ்பரம் நம்பகத்தன்மை வேண்டும். அதுவும் புரட்சிகர அமைப்புகளில் தோழர்களாக இருப்பதற்கு இது மிக அவசியம். அது இல்லாத ஒருவருடன் யாருமே பழகுவதை தவிர்க்கவே செய்வார்கள். தியாகுவின் நம்பகத்தன்மைதான் இங்கு பிரச்சினையேயொழிய அவரது விமர்சனம் அல்ல. வினவு பின்னூட்ட விவாதங்களே இதற்கு சாட்சி.
"

பேக் டூ முல்லையின் வன்னிய சாதி அடையாளம், பதிவுலகில் பொது எதிரிகளுக்கு எதிராக அனைத்து வேறுபாடுகளையும் களைந்து
கொண்டு போராடியுள்ளதற்கு சுகுணாவே சாட்சி. பொது எதிரிகள் என்பதில் பொதுவாக பார்ப்பனியம், மத அடிப்படைவாதம், பெண்ணடிமைத்தனம், ஈழம் போன்றவை இதுவரை பதிவுலகில் பல வகையான ஐக்கியக் கூட்டுகளை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு அரசியல் முன்னுக்கு வருவதும் அது சார்ந்து அணி சேர்க்கை நிகழ்வதும் நடதுள்ளது. அன்றைக்கு இவர்கள் யாரும் இது போன்ற அல்பத்தனமான காரணங்களை முன் வைத்து பிரதான தாக்குதல் இலக்கிலிருந்து திசை திருப்பவில்லை. இன்றைக்கு வினவை எதிர்க்கும் தேவை இவர்களை இது போன்ற காரணங்களை கண்டுபிடிக்கத் தூண்டுகிறது.


சரியாகச் சொல்வதென்றால், தூய்மைவாதிகளைத்தான் கூட்டுச் சேர்க்கலாம் எனில், பெண்களை செக்ஸ் வக்கிரத்தின் இலக்காக சித்தரிப்பதில் ஒன்று படுபவர்கள் செந்தழல், லக்கி போன்றோர். ஆனால் இன்று இருவரும் எதிரெதிர்
நிலைப்பாடுகளில் நிற்கிறார்கள் (லக்கி நர்சிம்மை ஆதரிக்கிறார் என்று தோனவில்லை. அவரது இயல்பான எதையும் பகடி செய்யும் குசும்பனுடைய நடைமுறை இங்கும் செயல்பட்டிருக்கலாம் என்பது எனது அனுமானம்) ஆனால் லக்கி பொதுவாக ஒரு விசயம் தவறு என்று அழுத்தமாக விமர்சனம் செய்யப்பட்ட இடங்களில் அவற்றை ஒத்துக் கொண்டுள்ளார் (சில சொற்பமான சம்பவங்கள் தவிர்த்து). செந்தழலோ மிகப் பாராட்டத்தக்க வகையில் நர்சிம்மின் ஆணாதிக்க பார்ப்பனியத்தை சமரசமின்றி எதிர்த்து நிற்கிறார். இன்னொரு பக்கம் குழலி (வன்னிய சாதி அடையாளத்தை முன்னிறுத்தியவர்) நர்சிம்மை சமரசமின்றி எதிர்த்து நிற்கிறார். எனவே குழலியின் சாதி அடையாளம் அவரை புறக்கணிக்க அடிப்படை வழங்கிவிடுமா? செந்தழல் மற்றும் லக்கி போன்றோர் முல்லைக்கு ஆதரவாக பேசுவதற்கு அருகதையே இல்லை என்று சொல்ல இயலுமா? நியாயவான் கல்லெறியட்டும் என்ற நடைமுறை பிரதான குற்றத்தை நோக்கிய தாக்குதல் இலக்காக செயல்படுத்த மட்டுமே பொருத்தமான ஒரு நடைமுறை தந்திரமாகும். எதிர்ப்பவரெல்லாம் கல்லெறியட்டும் என்பதே ஆதிக்கத்துக்கு எதிரான தந்திரமாக இருக்க முடியும். ஆதிக்க வெறிக்கும், ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்வினைக்கும் ஒரே தண்டனை என்பது எனக்கு ஒவ்வாத விசயம். எப்படி போலீஸு ரவுடிகளுக்கு பாசத்தையும், அவர்களால் கொல்லப்பட்ட போராடும் மக்களின் மீது வெறுப்பையும் கோவி கண்ணனால் தர இயலுகிறதோ அப்படிப்பட்டதொரு சார்பு நிலைதான் என்னுடையதும்.


இது தவிர்த்து வினவின் மீது வெகு சொற்பமான சிலரால் ஆக்கப் பூர்வமான விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவையும் புதிதானவை அல்ல. அசுரன் தளத்தில் ஆரம்ப காலங்களில் வெளிவந்த பதிவுகளின் ஆணாதிக்க சொல்லாடல்கள் இடம் பெற்றதை தோழி லிவிங் ஸ்மைல் குறிப்பிட்டதன் பேரில் திருத்திக் கொள்ளப்பட்டது. இன்று வரை அது போன்ற சொல்லாடல்களை பயன்படுத்துவதில் மிக எச்சரிக்கையாகவே அசுரன் தளம் இருந்து வருகிறது. அது போன்ற விமர்சனங்களை தோழர்கள் பரிசீலித்து உள்வாங்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மேலும், இன்று தமிழச்சி, செல்வநாயகி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை தோழர்களுக்கு உணர்த்தாது இருந்துவிட்ட தடித்தனத்திற்கும் வருந்துகிறேன். பரவசநிலையில் வினவின் பின்னூட்டத்தில் நிகழ்ந்த அதீதங்களை கடந்து சென்றது மிக வெட்கமுறச் செய்கிறது. இது குறித்து தோழர்களுக்கு வேறு கருத்துகூட இருக்கலாம்.


பொதுவாக ஒரு எதிர்க் கருத்தை முன் வைத்த விதம் குறித்து பல மாற்று கருத்துக்கள் விமர்சனங்கள் இருக்கும். அது போலவே வினவு பதிவு குறித்து வால்பையனுடைய பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் அவரால் முன் வைக்கப்பட்டன. தேவையின்றி பதிவு திசை திரும்பி விட்டது என்பது அவரது முக்கியக் கருத்து, தேவையின்றி பதிவர்கள் பெயர்கள் இழுக்கப்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு. இது குறித்து பைத்தியக்காரன் விளக்கம் அளித்துள்ளார் (பெண் பதிவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேதான் அவ்வாறு செய்யப்பட்டது என்று). பதிவு திசை திருப்பப்பட்டது என்பதும், பதிவின் மையக்கருத்துடன் ஒன்று சேர்பவர்கள் சமரசமற்ற ஒற்றுமையை முன்னிறுத்தாததே திசை திருப்பட்டதின் முக்கியப் பின்னணி என்பதும் என் கருத்து. இப்படி பலருக்கு பல கருத்துக்கள்.

இவையணைத்தும் முன்னிறுத்தும் ஒற்றை புரிதல், பதிவுலகம் இன்னும் ஆணாதிக்க வக்கிரத்தை துணிச்சலான சுயவிமர்சனக் கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ளும் தார்மீக வலுவின்றி இருப்பதுதான் பொதுவில் அம்பலமாகியுள்ளது. இதை உணர்ந்து கொள்வதே அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு அடிகோலும்.

இந்த அடிப்படையில் வினவின் மீதான தமது பல்வேறு விமர்சனங்களை மீறி இந்த பிரச்சினையின் கூர் முனையை வலுப்படுத்தும் வகையில் ஆதராவாக நின்ற செல்வநாயகி, தமிழச்சி, ஈழப் பதிவர்கள், ஜாமலன், முத்து தமிழினி(எப்படி இருக்கீங்க தோழர் முத்து தமிழினி? ரொம்ப நாள் ஆச்சு உங்கள பாத்து), செந்தழல் ரவி, வால் பையன்(சில விமர்சனங்களுடன்) உள்ளிட்ட பதிவர்கள் சரியான செயல்பாட்டை முன்னிறுத்தியுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள். பல்வேறு தியாகங்களுடன் பதிவுலகில் ஆணாதிக்க வக்கிரம் இனி முக்காடு போட்டே எச்சரிக்கையுடன் உலாவ முடியும் என்ற நிலையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வினவு குழுவுக்கு வாழ்த்துக்கள். மற்றபடி சொந்த செலவில் சூனியம் வைத்து தாம் யார் என்பதை வெளிக்காட்டிக் கொண்டுள்ள பதிவுல நாட்டாமைகள், நடுநிலைவாத கொழுந்துகள், போலி முற்போக்கு, சுய நல சந்தர்ப்பவாதிகளுக்கும் வாழ்த்துக்கள்.


அசுரன்


தொடர்புடைய பதிவுகளின் உத்தேசத் தொகுப்பு:

ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!


12 பின்னூட்டங்கள்:

said...

//கோவி கண்ணன் இந்த பிரச்சனையில் தீர்வை தேடுகீறாராம், என்ன வகையான தீர்வு? அதாவது நர்சிமை முல்லையே ஹன்டில் செய்து கொள்வாராம், மற்றபடி நர்சிமின் ஆணாதிக்க வக்கிரம் உள்ளிட்ட இன்ன பிற ஆதிக்க உட்க் கூறுகளை கண்டித்து எழுதினால் அது நமது விளம்பரம் அல்லது அரசியலுக்கு பயன்படுத்துவது என்கிறார். நல்லது கோவி எமது அரசியல் எது என்பதை வெளிப்படையாகவே வைத்துள்ளோம், அது ஒடுக்குமுறை நிகழும் இடமெல்லாம் அதனை ஏறி அடிப்பத்தே ஆகும். ஆனால் நரசிம் மற்றும் நீங்கள் உள்ளிட்டவர்களின் அரசியல் என்ன? அரசியலே இல்லாத அத்துவான காடுகள் எதிலும் வாழ்கிறீர்களா என்ன?//

அசுரன் அண்ணே,

ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் பதிவர் போலி டோண்டுவிடம் தொடர்புடையவர் என்றும்/என்பதாலும் ஒரு ஆண்பதிவர் மூர்கமாக குற்றம் சுமத்தி போலிஸ் அது இது என்றெல்லாம் மிரட்ட அந்த பெண் பதிவர் வலையுலகத்தை விட்டு வெளியேறுகிறேன் என்று அறிவித்துச் சென்றார். அப்பவும் எல்லோரும் கண்டனம் தெரிவித்தார்கள். அப்போது சாதிப்பிரச்சனையோ, ஆணாதிக்கப் பிரச்சனையே எழுப்பபடவில்லை. சம்பந்தப்பட்ட பெண் பதிவரும் மேற்படி மிரட்டல் நபரை மன்னித்தாரோ, நிகழ்வை மறந்தாரோ திரும்பவும் எழுத வந்தார் என்று எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி.

முல்லை விசயத்தில் ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் அவரது சாதி உள்ளிட்ட அனைத்தையும் அம்பலபடுத்தி அவரை மறைமுகமாக அவமானப்படுத்தியுள்ளீர்கள், இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் ? வலைப்பதிவில் ஒருவரின் சாதி அடையாளம் தெரிந்தாலே அவர் தாழ்ந்த சாதி என்றால் சாதி ரீதியாக இழிவு படுத்துவதும், பார்பனர் என்றால் பாப்பார புத்தி என்றும் தான் அனானிகளாலும் சில தைரியசாலிகளாலும் பின்னூட்டத்தில் அர்சிப்பது வழக்கம்.

இப்படி ஒரு சூழலை முல்லைக்கும், நரசிம்முக்கும் ஏற்படுத்தியதைத் தவிர்த்து நீங்கள் சாதித்தவை என்ன ?

ஆணாதிக்கத்தை எதிர்கிறேன் என்று இது தொடர்பிலான எல்லா பதிவுகளிலும் பின்னூட்டம் போட்டு ஆஜராகும் ஒரு பதிவர் தான் அந்த பெண் பதிவரை மிரட்டியவர். அந்த ஆண் பதிவர் யார் என்பதை நண்பர் செந்தழல்ரவிக்கு கூடத் தெரியும். . மிரட்டிய நபர் எங்கும் வெளிப்படையாக பொது மன்னிப்பு கேட்கவில்லை.

பிரச்சனைகளை இவ்வளவு தீவிரப்படுத்தாமல் இருந்தால் முல்லையின் சாதியாவது மறைக்கப்பட்டு இருக்கும். ஆணாதிக்ச் சிந்தனைகள் கண்டிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. எதிர்பவனும் மாற்றுக்கருத்து சொல்லுபவனும் அடிவருடி என்கிற பட்டம் கொடுப்பது எந்தவகையான சிந்தனை என்று சொல்லுங்களேன்.

சம்பந்தப்பட்ட பெண் பதிவரும் சாதிசார்பு உடையவர் என்பதாக பிரச்சனை கிளம்பிய பிறகு, உங்கள் பதிவில் இருக்கும் சாதியத்திற்கு எதிரான கருத்துகள் வலு இல்லாமல் போய்விட்டது, கூடவே லீனா விசயத்தில் நடந்த மகஇக அத்துமீறல்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டதால், உங்கள் சார்பில் எழுதிய பெண்ணிய ஆதரவு / ஆணாதிக்க எதிர்ப்பு கருத்துகளையும் நீர்த்துப் போகச் செய்துவிட்டது என்று கருதுகிறேன்.

அவரவர் தத்தம் அரசியல் சார்பு நிலைகளை ஒட்டி தவறுகளை மறைக்கும் அயோக்கிய சிகாமணிகளாக இருக்கும் போது யாருக்கு எதிர்ப்பு யாருக்கு ஆதரவு கொடுப்பது, அதனால் தான் சம்பந்தப்பட்டவர்களே இது பற்றி பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற நிலைப்பாட்டை நான் கொண்டிருக்கிறேன். மேலே சொன்னது போல் வலைப்பதிவுக்கு திரும்பவம் எழுத வந்த பெண் பதிவர் போல முல்லையும் எல்லாவற்றையும் மறந்தோ மன்னித்தோ விட்டிருப்பார் இல்லையா ? ஆணாகத்திமிரை வண்மையாக கண்டிப்பதுடன் அப்படியே விட்டிருந்தாலவது பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர், மிகவும் பிற்பட்ட சாதியைச் சார்ந்தவர் என்கிற அடைமொழியெல்லாம் முல்லைக்கு கிடைத்திருக்காது.

said...

//முல்லை விசயத்தில் ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் அவரது சாதி உள்ளிட்ட அனைத்தையும் அம்பலபடுத்தி அவரை மறைமுகமாக அவமானப்படுத்தியுள்ளீர்கள், இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் ? வலைப்பதிவில் ஒருவரின் சாதி அடையாளம் தெரிந்தாலே அவர் தாழ்ந்த சாதி என்றால் சாதி ரீதியாக இழிவு படுத்துவதும், பார்பனர் என்றால் பாப்பார புத்தி என்றும் தான் அனானிகளாலும் சில தைரியசாலிகளாலும் பின்னூட்டத்தில் அர்சிப்பது வழக்கம்.//

அண்ணன் கோவியின் வழியில் தம்பி அசுரன், ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண்கள் பதிவுலகில் இயங்க இன்னும் ஒரு குன்ஸான ஐடியா கொடுக்கிறேன். இதோ இதுதான் அந்தத் திட்டம்

பெண்களே, நீங்கள் பெண் என்பதையே மறைத்து ஆண் பெயரில் எழுதுங்கள்....

சாதி வெறி, ஆணாதிக்கம் இவற்றை நேரடியாக மோதி முறியடிக்கத் துப்பில்லை, அவர்கள் தைரியமாக வலம் வருவார்களாம் நாம் பயந்து பதுங்க வேண்டுமாம்.

இது போல வலம் வரும் ஆணாதிக்க வக்கிரர்களை அம்பலப்படுத்தினால் கோவி போன்றோர் வந்து சம்பந்தமில்லாத நடுநிலை மாவு அரைப்பார்கள்....

வாழ்த்துக்கள் கோவி

said...

//பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர், மிகவும் பிற்பட்ட சாதியைச் சார்ந்தவர் என்கிற அடைமொழியெல்லாம் முல்லைக்கு கிடைத்திருக்காது.//

கிடைச்சுட்டு போகுது? என்ன வந்தது இப்போ? நான் பாப்பான் நான் பாப்பான்னு சொல்லிட்டு ஒரு சில பேரு தைரியமா திரியறான் இல்லையா? அதுக்கு இப்போ என்ன செஞ்சு கிழிச்சுட்டோம்? குறைந்த பட்சம் சாதியை முன்னிறுத்துபவர்களை அவர்களை சந்திக்கும் போது மூஞ்சிக்கு நேராக கேள்வி கேட்கும் துப்பு கூட, தைரியம் கூட இல்லமல்தானே இங்கே நடுநிலையும், மனிதாபிமானமும் வாழுது?

இந்த சந்தர்ப்பவாத முகத்தை வைத்துக் கொண்டு ஏன் பிறருக்கு அறிவுரை சொல்லும் நோக்காடு வேலையையும் இழுத்துக் கொள்கிறீர்கள்?

said...

கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..!
http://kaargipages.wordpress.com/2010/06/03/kaavaalithanam-parti/

ஏன் ஆரம்பத்திலேயே பதிவுக்கான தரவுகளைக் கொடுத்தது சிவராமன் என்று வினவு சொல்லவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். அது
அவசியமில்லை என்பது எனது கருத்து. அவ்வாறு சொல்லப்பட்டிருக்குமானால் அது இரண்டு நன்பர்களுக்குள்ளான முரண்பாடாகவும் நட்பா அரசியலா என்கிற முட்டல்களும் முன்வந்திருக்கும். உண்மைத்தமிழன் சொம்போடு ஆஜராகி ‘ரெண்டு பேரும் கை கொடுத்து கட்டிப் புடிச்சி எல்லாத்தியும் மறந்திருங்க’ என்றிருப்பார். இப்போது சுகுணா அடிக்கும் ரங்காராவ் டயலாகான – “அது எப்படிங்க நன்பனையே போய்….” என்கிற ஊளைத்தனமான் போலி செண்டிமெண்டுகள் முன்வந்து பார்ப்பனிய அரசியல் பின்னுக்குப் போயிருக்கும். சந்தனமுல்லைக்கு நேர்ந்த அநீதி மறைந்து போயிருக்கும்.

எமது வினவு தோழர்களுக்கோ அவ்விதமான உட்டாலக்கடி செண்டிமெண்டுகள் எதுவும் கிடையாது. தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் நட்பு, உறவு, பாசம், நேசம் என்று எதுவாயிருப்பினும் ஏற்றுக் கொண்ட அரசியலுக்கு இடையில் வருமானால் தூக்கியெறியவும் தயங்காதவர்கள்.
உண்மைத்தமிழனின் சொம்பு வினவு தோழர்களிடம் பஞ்சராகி விடும். இந்த உண்மையை எமது செயல்பாடுகளைத் தொடர்ந்து அவதானித்து வரும்
சிவராமன் அறிந்திருக்க வேண்டும் – எனவே தனது பெயரை முன்னுக்கு கொண்டு வர வேண்டாம் என்று கோரியிருக்கிறார். மேலும் எல்லாப்
பதிவுகளிலும் தரவுகள் கிடைத்த மூலம் என்று அறிவித்துக் கொள்வது இயலாதவொன்று. அவ்வாறு செய்யுமாறு ஒரு பதிவரை நெருக்குதல்
கொடுப்பதும் அவரது எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகவே கருத முடியும்.

said...

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7143:2010-06-03-08-11-35&catid=322:2010

இந்தளவுக்கும் வினவு தளம் செய்தது என்ன?1.பெண் எழுத்தாளர்களை இழிவாடிய ஆணாதிக்க எழுத்தாளர்களை அம்பலமாக்கியது தான். இதுதான் அவர்கள் செய்த ”குற்றமாக” இருந்தது. இதை செய்யக் கூடாத அறமாக முன்னிறுத்தி, ஆணாதிக்க கூட்டமே அலைபாய்கின்றது.2.இதன் மேல் இந்தக் கட்டுரைக்காக மற்றொருவரிடம் பெற்ற தரவுகளில் இருந்து அதை வெளியிட்டதை குற்றமாக்குகின்றது. தரவைத் தந்தவரின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி, ஆணாதிக்கத்துக்கு எதிரான விவாதத்தை பார்ப்பனிய குள்ளநரித்தனத்துடன் களத்தில் எதிர்த்து வசைபாடுகின்றனர்.ஆணாதிக்கத்தை பாதுகாக்க, மற்றவர் தந்த தரவு பற்றிய உரிமை குறிப்பிடவில்லை என்கின்றனர். வேடிக்கை என்ன வென்றால் குறிப்பைக் கொடுத்தவர், அது வினவுவின் கட்டுரையாக கூறுவதுடன், தன் உரிமை பற்றி எந்த ஆட்சேபனையையும் வினவுக்கு எதிராக எழுப்பவில்லை என்பதுதான். இப்படியிருக்க ஆணாதிக்க அணி, அதற்கு கொள்கை விளக்கம் வழங்கி, அதில் கும்மியடிப்பதன் மூலம் பெண்களுக்கு எதிரான விடையத்தை திசைதிருப்புகின்றனர்.தரவுகளை கட்டுரைக்காக வழங்கியவர், வினவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை வினவு மதிக்கின்றது. இதில் யாரின் அறிவையும், வினவு திருடவில்லை. வினவுக்கு எழுதும் ஆற்றல் இல்லை என்று சொல்லும் மக்குகள் வரை, பதிவுகளில் இருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. வினவு தன்னை ஒரு குழுவாகத்தான் அறிமுகம் செய்கின்றது. கூட்டு உழைப்புத் தான், வினவுவின் ஆதாரமாகும். இதில் தரவுகளை கொடுத்தவரும் பங்காற்றுகின்றார். இதைக் குறிப்பிட வேண்டும் என்பது கேலிக்குரியது.

said...

முல்லையின் துணைவன் முகில் செந்தழல் ரவியின் பதிவில் எழுதியுள்ளார்:

http://tvpravi.blogspot.com/2010/06/blog-post.html

//போதும் பதிவர்களே, உங்கள் இருதரப்பு நியாங்களுக்கும் மேலாய் இறைவன் இருக்கிறான், இருப்பான். இனியாரும் இதைப்பற்றி எழுதாதீர்கள். எங்களுக்கு நியாயம் வாங்கித்தாருங்கள் ப்ளீஸ். அதுபோதும்!!!

என் மனைவி இன்னும் எழுதுவாள், பின்னூட்டமிடுவாள். இனி சற்று எச்சரிக்கையாய், மனிதர்களைப் பற்றி மட்டும்.

ஏனென்றால் நான் அவளைமட்டும் காதலிக்கவில்லை, அவள் எழுத்தையும்தான்.

-முகில் //

இந்த வரிகளில்தான் எத்தனை அர்த்தங்கள். பெண்ணுரிமை பீடத்தில் இன்னொரு பலி....

இன்னும் இது போல நிகழாமல் தடுக்க என்ன செய்யப் போகிறோம்?

//முடிந்தால் பதில் சொல்லுங்கள். இல்லை என்றால் மவுனமாயிருங்கள்.//

என்கிறார் ரவி. மவுனமாயிருக்க இயலவில்லை.

said...

நிதானமாகவும் கணமாகவும் பெய்த மழையைப் போல் உள்ளது. கசடுகள் அனைத்தையும் அவை பதுங்கிக் கிடந்த பொந்துகளிலிருந்து வெளியேறி
மிதக்கச் செய்துள்ளது இந்த பதிவு (அடை மழை!?).

ஆர்குட்டில் வன்னியசாதி போரமில் சந்தனமுல்லை இணைந்து இருக்கிறார் எனவே அவர் சாதி அபிமானி எனும் குற்றச்சாட்டே ஒரு லூசுத்தனமான உளரல் என்று கருதுகிறேன். அந்த போரமில் அவர் வன்னிய சாதியையும் அதன் ஆதிக்க வெறியையும் மன்னர் / சத்ரிய பழம்பெருமைகளை
உயர்த்திப் பிடித்தாரா இல்லையா என்பதைத் தான் பார்த்திருக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த நன்பன் ஒருவன் பத்து பதினைந்து ஜிமெயில் ஐ.டிக்கள் வைத்துக் கொண்டு இருக்கும் அத்துனை ஆர்குட் சாதி சங்க குரூப்புகளிலும் மெம்பராய் இருக்கிறான். அவன் கருத்துப்படி அவர்களுடைய அடிப்படையைப் புரிந்து கொள்ள அது பயன்படும் என்பதோடு சாதி ஆதிக்க கருத்தை எதிர்த்து பேசவும் வாய்ப்புக் கிடைக்கும் - சில கம்யூனிட்டிகளில் மெம்பர்கள் மட்டுமே கமெண்டு போடவோ போரமை பார்க்கவோ முடியும்.
அதுவும் போக அவனுக்கு இந்த சாதி அபிமானிகளை அடிக்கடி குத்தி விட்டு ஊமைக் குசும்பு செய்து குழப்பம் விளைவிக்கும் விளையாட்டு பிடிக்கும். ஒரு கம்யூனிட்டியில் இருந்து பேன் (Ban) செய்யப்படுவதும், மீண்டும் வேறு பெயரில் போய் விமர்சனங்கள் செய்து வாதாடுவதும் ஆர்குட்டில் இயங்கும் யாரும் செய்வது தான் (போலி ஐ.டிக்களில்) - சுகுணாவுக்கு என் நன்பன் மெம்பராய் இருக்கும் சாதி குழுமங்களின் பட்டியல்
கிடைத்தால் அவர் அவனை "கவுண்நாடாதேவதேந்திரசத்திரிமுதலிநாயக்கய்யரய்யங்கார் சாதியினன்" என்று தான் அழைக்க வேண்டியிருக்கும்


எனவே ஒரு ஆர்குட் போரமில்
இணைவது என்பது அதன் நடவடிக்கைகளை கவனிப்பதற்கா, இல்லை அந்த நடவடிக்கைகளில் சாதி சார்பாக கலந்து கொள்ளவா, இல்லை
அந்த நடவடிக்கையை விமர்சித்து அம்பலப்படுத்தவா என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும். சுகுணா முல்லை விஷயத்தில் அறிவுக்கு எந்த
வேலையும் தராமல் - முல்லை சாதி சார்பாக எழுதினாரா, வெறும் பார்வையாளராக மட்டும் இருந்தாரா, அல்லது உள்ளே குழப்பம் விளைவித்துக்
கொண்டிருந்தாரா என்பதையெல்லாம் ஆராயாமல் அவசரத் தீர்ப்பெழுதுகிறார்.

ஒருவேளை அவர் ஆதரவாக செயல்பட்டிருப்பின் அது கண்டிக்கத்தக்கது - ஆனால், அப்படியான ஒரு சூழலில் கூட முல்லைக்கு நர்சிம் இழைத்த
அநீதியை மன்னித்து விட முடியாது.

said...

http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_04.html

இடையில் ரவியும் முகிலும் தொடர்பு கொள்கிறார்கள். கவிதாவும் ஏதோ உடன்படிக்கை கொண்டு வர முயற்சி செய்கிறார். இதில் எதுவும் எனது consensus இல்லாமலே நடைபெறுகிறது. ஏனெனில் எனக்கு வேண்டியது தனிப்பட்ட தீர்வுகள் அல்ல.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை யாராவது ஒரு பெண் பதிவரை இப்படி பலியாக்குகிறார்கள். உதாரணங்கள் சொல்ல விரும்பவில்லை. இதற்கு சில வருடங்களுக்கு முன்பு கூட உதாரணம் காட்டலாம். கடைசி பலியாக என்னோடு இது முடியட்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். முகிலிடம் நான் பார்த்துக்கொள்கிறேன், என்னால் முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறேன்.

''அவரை மயக்க நான் பிராக்கெட் போட்டதாகவும், அதற்கு அவர் 'மசியாததால்' அவரை வஞ்சம் தீர்க்க நான் செயல்படுவதாகவும்'' தனது நண்பர்களிடம் சொன்னதுடன், எனக்கு ஆதரவாக நிற்கும் நண்பருடன் நான் 'கள்ளத்தொடர்பு' வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் தன் நண்பர்கள் மூலம் கிசுகிசு எழுத வைத்திருக்கிறாரே...

இப்படிப்பட்ட ஒரு நபரை நான் மன்னிக்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்


வினவு திங்களன்று இடுகையை எனக்கு அனுப்பிவிட்டு சம்மதத்தை கேட்கிறார். பழைய இடுகைகளிலிருந்தும், அவரை தொடர்பு கொண்ட பிற பதிவர்கள் சொன்ன தகவல்களை வைத்தும் எழுதியிருப்பதாக கூறுகிறார். வன்புணர்ச்சி என்ற வார்த்தை ஒன்றும் “பூக்காரி”யை விட
என்னை பாதித்துவிடவில்லை. தாராளமாக இடுகையிடுங்கள் என்று சம்மதிக்கிறேன். பதிவுலகில் பூக்காரியின் அருமை பெருமைகளை வார்த்தைகளால் நாறடித்த பிறகு அதை கண்டிப்பவர்களின் கையை கட்டிப்போட நான் விரும்பவில்லை. சொல்லப்போனால் எனது உணர்ச்சிகளின் குமுறலாய் அதைப் பார்க்கிறேன். தனிமையில் சலித்திருந்த என்னை அந்த இடுகை தோளில் கை போட்டு பார்க்கலாம் ஒரு கை என்றது.

தொடர்ந்து தோழர்கள் நர்சிமின் வக்கிர புத்தியை அம்பலப்படுத்துகிறார்கள். இமேஜ் நாசமாவதை தாங்க முடியாமல் புனைவு சிலரை காயப்படுத்தியதாகவும் என்னிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும் இடுகிறார். ஆனால் அதாவது என்னை கேவலபடுத்தியதற்கும், பப்புவின் இடுகைகளை ரசித்து மறுமொழி இட்டவர்களை கேவலப்படுத்தி இருந்ததையும், மற்ற பெண்பதிவர்களை சில்வண்டுகள் என்றும் “அவளுகளுக்கு இருக்கு” என்ற அச்சுறுத்தலையும் விட்டு விட்டார். பூக்காரி என்ற உண்மையான 'புனைவினால்' நைந்திருந்த எனக்கு அந்த மன்னிப்பு ஒரு பச்சையான புனைவு என்று புரிந்து கொள்வதற்கு மெனக்கெடவில்லை.

இனி யாரும் பெண் பதிவர்களை கிண்டலடிக்க இந்த ஒரு வழியை எடுக்க மாட்டார்கள் என்பது இதற்கு கிடைத்த வெற்றி. அதற்கு வினவுக்கும் மற்ற தோழர்களுக்கும் நன்றி! வினவின் அந்த இடுகை ஒரு கல்வெட்டாக இருக்கட்டும்.

இது குறித்து சாதி வெறியையும் ஆணாதிக்கத்தையும் அம்பலப்படுத்திய அத்தனை தோழர்களுக்கும் நன்றி!

இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானோ, முகிலோ மட்டும் முடிவு செய்வது நியாயமாக இருக்காதோ என்று தோன்றுகிறது. தோழர்களும், நண்பர்களும் கூறட்டும்!

said...

தோழர் சந்தனமுல்லையின் முன்னுதாரணத்தை அடியொற்றி, இதுவரை வலையுலகில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தம்மீது ஆணாதிக்க, பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டவர்களை வெளிப்படையாக அம்பலப்படுத்த முன் வர வேண்டும்.

சந்தனமுல்லை இதனை தனது தனிப்பட்ட சொந்தப் பிரச்சினையாக பார்க்காமல் பெண்கள் மீதான ஆணாதிக்க தாக்குதல் என்ற அம்சத்தில் முறியடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளார் என்ற வகையில் பிற பெண் பதிவர்களும் அவரது இந்த முன் முயற்சியில் பங்கேற்க வேண்டும் என்று கோருகிறேன்.

தோழமையுடன்,
அசுரன்.

said...

முல்லையின் பதிவில் மாதவராஜின் பின்னூட்டம்:

http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_04.html?showComment=1275644699397#c4373088518446910344

இந்தப் பெரும் கொடுமை நடந்தபின் “இந்தப் பதிவுலகம் இப்படி இருக்கிறதே என வெட்கித் தலைகுனிகிறேன்” என்றுதான் உங்களுக்குச் செய்தி அனுப்பினேன். அதையே இங்கேயும் சொல்கிறேன்.

வெற்று சமரசங்களைத் தாண்டிய உங்கள் உறுதியும், தெளிவும் அரிதானது. கடினமானது.

சித்திரக்கூடத்தை யாராலும் எரித்துவிட முடியாது. அது மகாகவியின் அக்கினிக் குஞ்சாய் சுடர் விடுகிறது!

said...

இதே கருத்துடன் ஒத்துப்போன பின்னூட்டம் ஒன்றை முல்லை பதிவில் எழுதியுள்ளேன். அது இங்கும் பொருந்துவதால் இங்கேயும் வெளியிடுகிறேன்.

---------

--வலையுலகம் ஆரம்பித்ததில் இருந்து, எல்லா பெண்களும் இதே முறையில் இழிவுப் ப்டுத்தப்பட்டு வருகிறார்கள். மூத்த பதிவரான என்னிடம் லிஸ்டே உள்ளது. பயந்து ஓடுவது சுலபம். நின்று ஜெயித்துக் காட்டுங்கள். உங்களின் இந்த பதிவு அதை உறுதிப்படுத்துகிறது.
---

உஷா அவர்களே.

மதுரா அக்கா பற்றி நீங்கள் தீபாவின் பதிவு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தீர்கள்.

தொழில்நுட்பத்தில் அதிக அறிவுடைய போலி டோண்டு தீவிரமாக ஆட்சிசெய்த காலத்தில் - யாருடனும் உரையாடி தொடர்போ - தொலைபேசியிலோ பேசாத பதிவர்கள் பெயரில் ஆபாச பின்னூட்டங்கள் - மடல்கள் பலருக்கும் பல பதிவர்கள் பெயரில் சென்று இருக்கிறதை அறிவேன்.

அதை வெளியில் சொல்லாமல் பதிவுலகை விட்டே வெளியேறியவர்கள் - ஆண்களும் சரி - பெண்களும் சரி - இருக்கிறார்கள்.

கவிதாவுடனான என் பிணக்கே - போலி டோண்டுவை ஒரு புரட்சியாளர் ரேஞ்சுக்கு உயர்த்தி - பேட்டி எல்லாம் எடுத்தது தான். தினம் தினம் அவனிடம் இருந்து என்னுடைய குடும்பத்தாரை நலம் விசாரித்து மின் அஞ்சல்கள் பெறும் வேளை - இப்படியான பேட்டி வெளியானதால் நானும் கோபத்துடன் நடந்துகொண்டது - இப்போது அவர் என்னை புரிந்துகொண்டுள்ளார். நானும் அவரை அறிந்துள்ளேன். மன்னிப்பும் கோரி பெற்றுள்ளேன்.

ஆனால் இன்னும் யார் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், எப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்தால் தான் - அதன் உண்மைத்தன்மையை கண்டறியமுடியும்.

ஆகவே நீங்கள் அதனை முழுமையாக வெளியிடுவதே சிறந்தது.

said...

//
ஆனால் இன்னும் யார் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், எப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்தால் தான் - அதன் உண்மைத்தன்மையை கண்டறியமுடியும்.

ஆகவே நீங்கள் அதனை முழுமையாக வெளியிடுவதே சிறந்தது.//

மிகச் சரியான கோரிக்கை செந்தழல் ரவி

Related Posts with Thumbnails