பொங்கலும், இந்துத்துவ வெறியர்களும்!!
பதிவில் நான் சொல்ல வந்த விசயம் கூர்மையாக இல்லையென்று படித்த பலரும் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததால் சில பகுதிகளை சேர்த்துள்ளேன்.
எந்த ஒரு மதத்தை மிக நேர்த்தியாக கடைபிடிப்பவருக்கும் அதன் சம்பிரதாயங்களை மீறுவதில் சிக்கல் உள்ளது. இதில் புகுந்துதான் இந்து/பார்ப்ப்னிய மத வெறியர்கள் பொங்கல் பண்டிகை விசயத்தில் மத வெறி அரசியல் செய்கிறார்கள்.
அவர்கள் இந்து மதத்தவர்கள் கிருத்துவ பண்டிகை கொண்டாட முடியும் போது ஏன் இஸ்லாம் மதத்தவரால் இந்து பண்டிகை கொண்டாட முடிவதில்லை என்பதை சொல்லி மத வெறி தூண்டுகிறார்கள்.
நான் இங்கு மதத்தின் அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடுவது, பண்பாட்டு நடவடிக்கைகளை வரம்பிட்டுக் கொள்வதை பற்றி எதுவும் பேசப் போவதில்லை. அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு.
ஆனால், இந்த அம்சத்தை ஏதோ இந்து பார்ப்ப்னியம் மதம் ஆக ஜனநாயகமானது என்ற பொய்யின் பலத்தில் மாற்று மதத்தை கடைபிடிப்பவர் மீது வெறுப்பை உமிழ பயன்படுத்தி மக்களை பிளவு படுத்தும் பட்சத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்க ,முடியாது.
கிருத்துவ மத பண்டிகையை கொண்டாட முடிந்த ஒரு பார்ப்பனரால், தலித் வீட்டு திருமணச் சடங்கையோ அல்லது தலித் விழாக்களையோ கொண்டாட முடியாது ஏன்?
ஏனேனில், கிருத்துவ பண்டிகை கொண்டாடுவதில் இவரது சம்பிரதாயத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஆனால் தலித் விழாவை கொண்டாடுவதில் இவரது ச்ம்பிரதாயத்துக்கு குந்தகம் வருகிறது. இதே விசயம் இந்து பண்டிகை கொண்டாடுவதில் இஸ்லாமியர் தனது சம்பிரதாயத்தை மீற வேண்டிய விசயம் இடிக்கிறது. ஆக இந்த உண்மையை வசதியாக மறைத்து விட்டுத்தான் சாணியடிக்கிறார்கள் ஜாடாயு கோஸ்டிகள்.
இந்தியாவில் இஸ்லாம், கிருத்துவம் தவிர்த்த அனைத்து வழிபாட்டு முறைகளும் சாதி அடிப்படையில் உள்ளது, மத அடிப்படையில் இல்லை. அதனால்தான் சாதி அடிப்படையில் சம்பிரதாயங்களை மீறுவதில் இந்து/பார்ப்ப்னியத்துக்க் சிக்கல். மத அடிப்படையில் சம்பிரதாயங்களை மீறுவதில் இஸ்லாம் கிருத்துவத்துக்கு சிக்கல்.
இதில் இஸ்லாமியர் விசயத்தை மட்டும் பேசி மத வெறியை அவர்கள் கிளப்புவதையே நான், செந்தழல் ரவி, யெஸ். பாலபாரதி உள்ளிட்ட பலரும் கண்டித்தார்கள். அம்பலப்படுத்துவது என்றால் எல்லா மதங்களிலும் உள்ள இந்த சகிப்புத்தன்மையற்ற நிலையை அம்பலப்படுத்துவதுதான் சிறப்பாக இருக்க முடியும்.
இதை சுட்டிக் காட்டவே பார்ப்ப்னிய மதத்திலும் சம்பிரதாயங்களை மீறுவதில் மிக மோசமான ஆகக் கேடான சகிப்புத் தன்மையற்ற நிலை நிலவுவதை முன்னிறுத்தி கேள்வி எழுப்பினோம்.
அவ்வளவுதான் விசயம்...
**********************
பொங்கல் பண்டிகை இந்து பண்டிகையா இல்லையா என்பதை நான் இங்கு விவாதிக்க போவதில்லை. அதை எல்லாரும் கொண்டாட வேண்டுமா இல்லையா என்பதையும் நான் இங்கு விவாதிக்க போவதில்லை.
ஆனால், இதை சாக்கிட்டு மத வெறி பிரச்சாரம் செய்யும் சில போலி தேசப் பற்றளார்களை நான் கேள்வி கேட்க்க வேண்டியுள்ளது.
இவர்கள் ஏற்கனவே இந்த பதிவில் இருமுறை கேட்ட கேள்விகளுக்கு (#1, #2) பதில் சொல்லும் நேர்மையின்றி தொடர்ந்து தமது மத வெறி பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். முதுகெலும்பை கழட்டி வைத்துவிட்டால் இப்படியெல்லாம் மான ரோசமின்றி செயல்படுவது சுலபமே.
பொங்கல் இந்து பண்டிகைதான் ஆயினும் அது இந்திய பண்டிகை எனவே இஸ்லாமியரும் கூட தமது மத நம்பிக்கைக்கு விரோதமாக இருப்பினும் கூட அதனை கொண்டாட வேண்டும் என்று அரைக்கூவும் புண்ணிய ஆத்மாக்களே...
இதன் ஊடாக இந்திய மரபுகள் எல்லாம் இந்து மரபு என்ற பொய்யையும், இஸ்லாமியர் அந்த மரபுகளுக்கு எதிரான தேசத் துரோகி என்ற கருத்தையும் உணர்வு தளத்தில் பதியும் நயவஞ்சகர்களே...
Questions:
இதே போல தமிழகத்தில் கொண்டாடப்படும் நாட்டார் வழிபாட்டு கிடா வெட்டு சடங்குகளில் பங்கேற்று மாமிசம் சாப்பிட பார்ப்பன பண்பாட்டு மத நம்பிக்கைகளை விட்டொழித்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அது கூட வேண்டாம் பொங்கலுக்கு மறு நாள் கறிநாள் கொண்டாடுவோமே அதை எல்லா இந்துக்களும் கொண்டாட இந்த புண்ணியாத்மாக்கள் இதே போல கோரிக்கை வைக்க வேண்டும்.

கோழிக் கறி குருமாவை மூக்க முட்ட வெட்டி கோழிகளுக்கு ஆத்மா சாந்தி கிடைக்க வழிவகை செய்ய உதவிட இந்த நன்னாளாம் கறி நாளை எல்லா இந்து மதத்துக்காரர்களும் - குறுகிய பார்ப்ப்னிய மத கண்ணோட்டத்தை களைந்து அகண்ட 'இந்து'யா பண்பாட்டின் படி கொண்டாட அவர்கள் அரைக் கூவ வேண்டும்.
செய்வார்களா? பண்டிகைக்கு வருவார்களா? குறைந்தது இந்த கேள்விகளுக்காவது பதில் சொல்வார்களா?
இந்த ரெட்டை நாக்குக்காரர்களை எதைக் கொண்டு அடிப்பது? பிய்ந்த செருப்பு?....
சே.... சே.... அது உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த செருப்பின் உழைப்பை அசிங்கப்படுத்துவதாகும்.
அசுரன்
Related Articles:
#1) இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!
#2) இந்து/பார்ப்பினிய மதம்-பிரியானி-கறிவேப்பிலை
31 பின்னூட்டங்கள்:
//கோழிக் கறி குருமாவை மூக்க முட்ட வெட்டி கோழிகளுக்கு ஆத்மா சாந்தி கிடைக்க வழிவகை செய்ய உதவிட இந்த நன்னாளாம் கறி நாளை எல்லா இந்து மதத்துக்காரர்களும் - குறுகிய பார்ப்ப்னிய மத கண்ணோட்டத்தை களைந்து அகண்ட 'இந்து'யா பண்பாட்டின் படி கொண்டாட அவர்கள் அரைக் கூவ வேண்டும்.//
:-)
கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு அவங்களுக்கும் தெரியாதா என்ன?
:))
சிநேகிதன் அவர்களே,
நான் லூசாகவே இருந்து கொள்கிறேன். இந்திய மரபு என்பது இப்படி மதம் என்ற அடையாளத்தை கடந்து சாதி ரீதியாக பல்வேறு அடையாளங்களுடன் உள்ளது. மேலும் இஸ்லாம், கிருத்துவம் உள்ளிட்ட பல்வேறு இந்திய, வெளி தேசத்து தத்துவ பண்பாட்டு மரபுகளையும் உள்ளடக்கியே உள்ளது. விசயம் இப்படி இருக்க இஸ்லாமியர் பொங்கலை கொண்டாடததற்க்கு காரணம் மத வெறி தேசத் தூரொகம் எனவும், பொங்கலை கொண்டாடினால் அது தேசப் பற்று என்றும் மத வெறி தூண்டும் அவசியமென்ன?
உள்ளூரில் ஒரு சாதிக்காரன் கொண்டாடுவதை இன்னொருவன் கொண்டாடுவதில்லை என்ற அளவில் பிரிவினை தலைவிரித்தாடும் பொழுது மத பிரிவினையை மட்டும் முன்னுக்கு கொண்டு வந்து பேசுபவர்களின் யோக்கியதையை நான் கேள்வி கேட்க்கிறேன்.
'ஆவுரித்து தின்னும் புளையர்' பெரும்பான்மை சாதியாக இருக்கும் இந்தியாவில் ஏன் அதை இந்தியப் பண்பாடாக மாற்றக் கூடாது?
விழா என்பது பண்பாடுதானே? மாடு தின்பதும் பண்பாடுதானே? இறைச்சி தின்பதும் பண்பாடுதானே? அதை ஏன் எல்லாரும் செய்யக் கூடாது? அதை செய்யச் சொல்லி இந்த அரை லூசுக்கள் குரல் கொடுப்பதில்லையே ஏன்? அப்பொழுது எங்கே ஓடி ஒளிகிறது உங்க 'இந்து'யத்துவம்.
எல்லா கோயில்களையும் பெரும்பான்மை இறை வழிபாட்டு முறையான பலியிடும் முறைக்கு ஏன் மாற்றச் சொல்லி இதே போல பதிவிடுவதில்லை ஜடாயு கோஸ்டிகள்?
பார்ப்பனருக்கு ஒத்து வருவதெல்லாம் 'இந்து'யக் கலாச்சாரம் மற்றவை குறித்து அமைதி, பிற மதத்தினர் குறித்து அவதூறு.... ரெட்டை நாக்கு என்று இதைத்தான் சொன்னேன்.
கட்டுரையின் நோக்கம் இவர்கள் சொல்லுவது போல இந்திய பண்பாட்டு அடையாளங்களை ஒற்றை பண்பாட்டு அடையாளமாக காட்ட முடியாது என்பதையும், அதில் இஸ்லாம்,. கிறுத்துவ, இன்னும் பிற இந்திய தத்துவ மரபுகளின் ப்ண்பாட்டு அடையாளங்கள் பொதிந்தே காணப்படுகிறது என்பதுமே.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதையே நான் இங்கு கூறுகிறேன். இதை மறுத்து, மறக்கடிக்க செய்யும் பதிவு போட்ட மதவெறியர்களின் தளத்தில் உங்க ஆவேசத்தை காட்டி அவாள் வேசத்தை கலைக்கவும்.
பொங்கல் மதப் பண்டிகையா இல்லையா என்பது இங்கு வாதம் இல்லை என்பதும் அதை இங்கு வாதிடப் போவதில்லை என்பதையும் பதிவின் முதல் பத்தியிலேயே சொல்லியுள்ளேன். இதை ஜடாயுவின் பதிவில் சென்று வாதிடவும். உண்மையை நிலை நிறுத்தவும்.
ஜாடாயு பொங்கலின் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த அம்சங்களை சொல்லியா எல்லாரும் கொண்டாட வேண்டுமென்கிறார்? இல்லையே அது 'இந்து'யாவின் பண்டிகை என்று கருதி தங்களது மத அடையாளங்களை களைந்து கொண்டு கொண்டாட வ்ரச் சொல்லி அரைக்கூவும் இவர்..... அமெரிக்காவில் 'இந்து'ய பண்டிகை கொண்டாடுபவர்களை என்ன சொல்வார்? 'இந்து'யாவில் கோவில் கருவறைக்குள் நுழைவை தடுத்து தமது பார்ப்ப்னிய மத அடையாளத்தை விட மறுப்பவர்களை என்ன சொல்லுவார்?
இஸ்லாமியனுக்கு ஒரு நியாயம், நாட்டார் வழிபாட்டு முறைக்கு ஒரு நீயாயம், பார்ப்பனியத்துக்கு ஒரு நியாயமா? இப்படி ரெட்டை நாக்கு அம்பிகள் பேசிப் பேசி மத வெறியில் இந்த நாட்டை மூழ்கடிப்பதை கேள்வி கேளும் வோய்... சிநேகிதன்.... இங்கு வந்து குடுமி அவிழ கூத்தாடுவதால் பயனில்லை...
இதைத்தான் கேள்வி கேட்கிறேன்... மற்றபடி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது, அது இந்து பண்டிகையா இந்திய பண்டிகையா என்பதை நிலை நிறுத்துவது இவற்றையெல்லாம் எல்லா மத வெறியர்களிடமும் வாதாடி நிலை நாட்டவும். வாதத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அசுரன்
ஆயுத பூசை தமிழர்களின் பண்பாடா? நக்சலைட்டுகள் ஆயுத பூசை செய்தால் பூணூல் அம்பிகள் ஊதுவத்தி கொழுத்தி மங்கலம் பாடுவாங்களா?
ஆயுத பூசை தமிழர்களின் பண்பாடா? நக்சலைட்டுகள் ஆயுத பூசை செய்தால் பூணூல் அம்பிகள் ஊதுவத்தி கொழுத்தி மங்கலம் பாடுவாங்களா?
Right to religion and freedom
of faith is a fundamental right.
USA grants it,Swiss grants,
India grants but not that muslim
country Saudi Arabia.It forms part
of Universal Human Rights.India
gives special rights to minorities.
But why some islamic countries
refuse these rights to non-muslims.
Is that fair.Anyway such things
wont bother Asuran or his gang
in the tamil blogs.PK/PJ folks
will give evasive replies to
such questions.
To celebarate Pongal is a question
of choice.To make it compulsory
as a part of Tamil culture is
wrong.Leave it to the individuals
and communities to decide.So I wont
support arguments that Pongal should be celebarated by all Tamils
irrespective of religion.
Asuran and other pseudo-secular,
psedo-leftists prefer to attack Hindutva,brahminism but
not islamic fundamentalism.How
many blog posts he has written
against islamic fundamentalism,
how many against hindutva.
I am applying his logic to his
own writings.It is as simple as
that.
அமெரிக்காவுக்கு போனாலும் காவடி எடுக்குறீங்களே சாமி. காவடியைக் கண்டு பிடிச்சவன் அமெரிக்காக்காரனா?
If so why the hell you muslims build mosques in USA.USA gives
you more rights than what you
give to Hindus in many muslim
countries.With muslims like you
Hindutva in India is assured of
a bright future.
ஆக, இஸ்லாமிய மத வெறியை காரணம் காட்டி இந்து மதவெறியை நியாயம் என்கிறார் நம்ம் PJ/Pk என்று எழுதும் அனானி. எல்லா மத வெறியர்களையும் புறக்க்ணி என்றுதான் முந்தைய இரண்டு பதிவிலும் சொல்கீறேன். அதே பதிவில் உள்ள ஒரு கட்டுரை இஸ்லாமிய மத வெறியர்களையும் சேர்த்தே விமர்சிக்கிறது. இந்த அனானி அந்த பதிவையெல்லாம் படித்தாரா அல்லது தனது சார்பு நிலை கண்ணாடி கொண்டு பார்த்தார தெரியவில்லை.
இஸ்லாமிய, பார்ப்ப்னிய மத அடிப்படைவாதத்தை எதிர்ப்பது என்பதும் விமர்சிப்பதும் என்பதும் நல்ல விசயம்தான், தேவையான விசயம். ஆனால், ஒன்றைக் காரணம் காட்டி மற்றொன்றுக்கு நியாயம் கற்பிப்பதை என்ன சொல்வது? பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பதா? இஸ்லாம் பயங்கரவாதம் குறித்து வெகு விமர்சையாக தனியாக எழுதும் தேவையின்றி ஒரு சின்னக் குழந்தையும் சொல்லுமளவு விஜயகாந்த் முதல் மன்மோகன் சிங் வரை பிரச்சாரம் செய்கிறார்கள். இந்து/பார்ப்ப்னிய பயங்கரவாதத்திற்க்கு யார் பிரச்சாரம் செய்வது? அந்த வெற்றிடத்தை இட்டு நிரப்புவதும் அப்படி யொரு பிரச்சாரம் வலுவாக இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் மத அடிப்படைவாதிகளை அம்பலப்படுத்துவமே எனக்கு பிரதான கடமையாகிறது.
//.India gives special rights to minorities.
//
மத அடிப்படையில் சலுகைகள் கொடுப்பதை நான் வன்மையாக எதிர்க்கிறோம் இதில் அனானி வசதியாக சொல்லும் புளுகு சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகை என்பது. ஆயினும் இது உண்மைதான் எப்படியெனில் சிறுபான்மை பார்ப்ப்ன கலாச்சாரமான - கருவறை நுழைவு, கர்நாடக சங்கீதம், தமிழில் பூசை, கிடா வெட்டு தடை, கும்பமேளாவுக்கு பல கோடியில் பாதுகாப்பு - இப்படி சிறுபான்மையினருக்கு அரசு சலுகை கொடுப்பதை நானும் எதிர்க்கிறேன். இந்த எதிர்ப்பில் சிறுபான்மை பெரும்பான்மை என்று எல்லா மதக் குப்பைகளும் சேர்கிறது. எல்லாவற்றையும் என்னால் எழுதி அனானியிடம் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டிருக்க முடியாது. இங்கு ப்ளாக்கில் எனது எழுத்து மிகப் பெரும்பாலும் எதிர்வினைதான். இந்த அம்சத்தில் எனது எதிரி கோஸ்டியை எதாவது எழுதச் சொல்லுங்கள் அது பரவலாக வாசகர்களை சென்றடையட்டும் நானும் விலாவாரியாக பதில் எழுதுகிறேன்.
நான் இந்தியன் எனது நாட்டின் கேட்டைத்தான் முதலில் முன் வந்து விமர்சிக்க முடியும். வெளிநாட்டு பிரச்சனை எதையாவது பேசினால் அதில் எனது நாட்டின் நன்மைக்கு ஏதேனும் இருக்கிறது என்ற அம்சத்திலேதான் முக்கியத்துவம். அல்லது எனக்கு கொஞ்சம் நேரம் அதிகமாக இருந்தால்.
///To celebarate Pongal is a question
of choice.To make it compulsory
as a part of Tamil culture is
wrong.Leave it to the individuals
and communities to decide.So I wont
support arguments that Pongal should be celebarated by all Tamils
irrespective of religion.
///
பொங்கல் குறித்த உங்களது கருத்துதான் எனதும்...... இந்த விசயத்தை மத துவேச அரசியல் செய்த ஜடாயு கோஸ்டியிடம் சென்று இதே அவேசத்துடன் தெரியப்படுத்தி புண்ணியம் தேடிக் கொள்ளவும் Ravi srinivas... sorry Annony..(little confusion as the writting style of both looks similer).
அசுரன்
சிநேகிதன் அவர்களே,
நான் லூசாகவே இருந்து கொள்கிறேன். இந்திய மரபு என்பது இப்படி மதம் என்ற அடையாளத்தை கடந்து சாதி ரீதியாக பல்வேறு அடையாளங்களுடன் உள்ளது. மேலும் இஸ்லாம், கிருத்துவம் உள்ளிட்ட பல்வேறு இந்திய, வெளி தேசத்து தத்துவ பண்பாட்டு மரபுகளையும் உள்ளடக்கியே உள்ளது. விசயம் இப்படி இருக்க இஸ்லாமியர் பொங்கலை கொண்டாடததற்க்கு காரணம் மத வெறி தேசத் தூரொகம் எனவும், பொங்கலை கொண்டாடினால் அது தேசப் பற்று என்றும் மத வெறி தூண்டும் அவசியமென்ன?
உள்ளூரில் ஒரு சாதிக்காரன் கொண்டாடுவதை இன்னொருவன் கொண்டாடுவதில்லை என்ற அளவில் பிரிவினை தலைவிரித்தாடும் பொழுது மத பிரிவினையை மட்டும் முன்னுக்கு கொண்டு வந்து பேசுபவர்களின் யோக்கியதையை நான் கேள்வி கேட்க்கிறேன்.
'ஆவுரித்து தின்னும் புளையர்' பெரும்பான்மை சாதியாக இருக்கும் இந்தியாவில் ஏன் அதை இந்தியப் பண்பாடாக மாற்றக் கூடாது?
விழா என்பது பண்பாடுதானே? மாடு தின்பதும் பண்பாடுதானே? இறைச்சி தின்பதும் பண்பாடுதானே? அதை ஏன் எல்லாரும் செய்யக் கூடாது? அதை செய்யச் சொல்லி இந்த அரை லூசுக்கள் குரல் கொடுப்பதில்லையே ஏன்? அப்பொழுது எங்கே ஓடி ஒளிகிறது உங்க 'இந்து'யத்துவம்.
எல்லா கோயில்களையும் பெரும்பான்மை இறை வழிபாட்டு முறையான பலியிடும் முறைக்கு ஏன் மாற்றச் சொல்லி இதே போல பதிவிடுவதில்லை ஜடாயு கோஸ்டிகள்?
பார்ப்பனருக்கு ஒத்து வருவதெல்லாம் 'இந்து'யக் கலாச்சாரம் மற்றவை குறித்து அமைதி, பிற மதத்தினர் குறித்து அவதூறு.... ரெட்டை நாக்கு என்று இதைத்தான் சொன்னேன்.
கட்டுரையின் நோக்கம் இவர்கள் சொல்லுவது போல இந்திய பண்பாட்டு அடையாளங்களை ஒற்றை பண்பாட்டு அடையாளமாக காட்ட முடியாது என்பதையும், அதில் இஸ்லாம்,. கிறுத்துவ, இன்னும் பிற இந்திய தத்துவ மரபுகளின் ப்ண்பாட்டு அடையாளங்கள் பொதிந்தே காணப்படுகிறது என்பதுமே.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதையே நான் இங்கு கூறுகிறேன். இதை மறுத்து, மறக்கடிக்க செய்யும் பதிவு போட்ட மதவெறியர்களின் தளத்தில் உங்க ஆவேசத்தை காட்டி அவாள் வேசத்தை கலைக்கவும்.
பொங்கல் மதப் பண்டிகையா இல்லையா என்பது இங்கு வாதம் இல்லை என்பதும் அதை இங்கு வாதிடப் போவதில்லை என்பதையும் பதிவின் முதல் பத்தியிலேயே சொல்லியுள்ளேன். இதை ஜடாயுவின் பதிவில் சென்று வாதிடவும். உண்மையை நிலை நிறுத்தவும்.
ஜாடாயு பொங்கலின் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த அம்சங்களை சொல்லியா எல்லாரும் கொண்டாட வேண்டுமென்கிறார்? இல்லையே அது 'இந்து'யாவின் பண்டிகை என்று கருதி தங்களது மத அடையாளங்களை களைந்து கொண்டு கொண்டாட வ்ரச் சொல்லி அரைக்கூவும் இவர்..... அமெரிக்காவில் 'இந்து'ய பண்டிகை கொண்டாடுபவர்களை என்ன சொல்வார்? 'இந்து'யாவில் கோவில் கருவறைக்குள் நுழைவை தடுத்து தமது பார்ப்ப்னிய மத அடையாளத்தை விட மறுப்பவர்களை என்ன சொல்லுவார்?
இஸ்லாமியனுக்கு ஒரு நியாயம், நாட்டார் வழிபாட்டு முறைக்கு ஒரு நீயாயம், பார்ப்பனியத்துக்கு ஒரு நியாயமா? இப்படி ரெட்டை நாக்கு அம்பிகள் பேசிப் பேசி மத வெறியில் இந்த நாட்டை மூழ்கடிப்பதை கேள்வி கேளும் வோய்... சிநேகிதன்.... இங்கு வந்து குடுமி அவிழ கூத்தாடுவதால் பயனில்லை...
இதைத்தான் கேள்வி கேட்கிறேன்... மற்றபடி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது, அது இந்து பண்டிகையா இந்திய பண்டிகையா என்பதை நிலை நிறுத்துவது இவற்றையெல்லாம் எல்லா மத வெறியர்களிடமும் வாதாடி நிலை நாட்டவும். வாதத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அசுரன்
வருகை தந்து கருத்து தெரிவித்த நண்பர்கள் பாலபாரதி, அயுப், திரு, சிநேகிதன், அறிவுடை நம்பி, அசலாமோன், அமெரிக்க அனானி, PJ./PK அனானி ஆகியோருக்கு எனது நன்றிகள்.... அடிக்கடி வந்து போகவும்.. அவ்வளவுதான்
அசுரன்
அசுரன்
ஒரு + குத்து..
நன்றி
நேடுநாள் கழித்து வருகை தரும் நண்பர் சிவபாலனுக்கு நன்றிகள்....
அசுரன்
//இஸ்லாமியனுக்கு ஒரு நியாயம், நாட்டார் வழிபாட்டு
முறைக்கு ஒரு நீயாயம், பார்ப்பனியத்துக்கு ஒரு நியாயமா?
இப்படி ரெட்டை நாக்கு அம்பிகள் பேசிப் பேசி மத //
1,2,3 இது எப்படி ரெட்டை நாக்காகும். குறைந்தது மூன்று
வருகிறது.
கோழியின் ஆத்மாவுக்கு சாவு கிடையாது. கோழியின்
உடலுக்குதான் சாவு. அதனால் பார்ப்பனர்களும் நாட்டார்
வழிபாட்டில் கலந்துகொண்டு கோழி உண்டு தேசப்பற்றை
பறைசாற்ற வேண்டும்.
I am not able to view your post with Firefox 2.0 web browser.
Some time before one of the reader of this blog reported the problem, I went to Thamizmanam Help page and did whatever suggessted there...
I am wondering still the problem Persists.
If somebody could help me in this regard, that would be greatfull to them....
Asuran
\\ கோழியின் ஆத்மாவுக்கு சாவு கிடையாது. கோழியின்
உடலுக்குதான் சாவு. அதனால் பார்ப்பனர்களும் நாட்டார்
வழிபாட்டில் கலந்துகொண்டு கோழி உண்டு தேசப்பற்றை
பறைசாற்ற வேண்டும் // விருந்துக்கு முக்கியமாக இந்துக்களை உயிராக மதிக்கும், வீரத்துறவி ரமகோபாலன்,வேதாந்தம்,இ.ல கனேசன், எச்.ராஜா போன்ற தலைகளை அழைக்கveentum
//நாம் எந்த மதமாக இருந்தாலும், இருக்கும் இடத்தின் தன்மைகேற்ப கலாச்சாரத்திற்கேற்ப இருப்பதே தாங்கள் சார்ந்துள்ள சமூகம் வளர வழி வகுக்கும்.
commented by சிநேகிதன், January 17, 2007 6:26 PM//
நன்று.
Comment in Senthalal Ravi's Blog:
Comment #1):
முதல் விசயம் இந்து மதம் என்பதை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இல்லாததும், மதத்தின் தத்துவம், அது வலியுறுத்தும் சம்பிரதாய சடங்குகள் என்று பார்க்குமிடத்து அது பார்ப்பன மதம் என்று இருப்பதையும் இங்கு மறந்து விட்டு பேசினால் செந்தில் குமரன் சொல்வது நியாயம் என்றே தோன்றும்.
ஆக, இந்து என்று வரையறுக்கும் ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்து மதத்தின் மூல தத்துவத்திற்க்கு ஏற்றவர்களே கிடையாது. இந்த சுந்தந்திர மக்கள் சம்பிர்தாய தாத்பிரியங்களால் மத்ம் என்ற அடிப்படையில் கட்டுண்டவர்கள் கிடையாது. மாறாக சாதி என்ற அடிப்படையிலேயே கட்டுண்டவர்கள். அதனாலேயே இவர்களால் எந்த பிரச்சனையும் இன்றி கிருத்துவ, இஸ்லாமிய மத சடங்குகளை கொண்டாட முடிகிறது.
மதம் என்று நிறுவனப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இந்த சகிப்புத்தன்மையை காண முடியாது. இதை சுட்டிக் காட்டவே எனது பதிவில் பார்ப்பன மதம் எனும் நிறுவனப்படுத்தப்பட்டுள்ள மதத்தை சார்ந்தவர்களால் பிற நாட்டார் வழிபாட்டு சம்பிரதாயங்களை, சடங்குகளை கொண்டாட முடிவதில்லை என்பதை சுட்டிக் காட்டி இது இஸ்லாம், கிருத்துவ மதம் சார்ந்த பிரச்சனையல்ல. மாறாக மதம் என்ற வடிவத்தின் மூலப் பிரச்சனை என்பதை சுட்டியிருந்தேன்.
இப்போ செந்தில் குமரனின் வாதத்தில் என்ன பிரச்சனை என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
//இங்கே நாத்திகம் வலியுறுத்த வரவில்லை நான், 'மதம்' பிடித்த சில ஜந்துக்கள் மனிதரை பிரிக்க எந்தெந்த வழிகளில் முயலுகிறன்றதே என்ற ஆற்றாமையில் எழுதுவது...///
இதேதான் என்னை தொடர்ந்து மூன்று, நான்கு பதிவுகளுக்கும் மேல் எழுத வைத்து விட்டது. இடையில் இன்கெம்டேக்ஸ் விலக்குகளை நீக்கும் பட்ஜெட் திட்டஙகள் பற்றியும் வேறு சில பொருளாதார பிர்ச்சனைகள் பற்றியும் எழுதும் திட்டம் இதனால் தள்ளிப் போய்விட்டது.
மத வெறியை எதிர்த்து பாலாபாரதி, செந்தழல் ரவி போன்ற ஜனநாயக சக்திகள் குரல் கொடுப்பது உற்சாகமளிப்பதாக உள்ளது. வாழ்த்துக்கள்
அசுரன்
Comment #2:
//மதம் என்று நிறுவனப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இந்த சகிப்புத்தன்மையை காண முடியாது. இதை சுட்டிக் காட்டவே
எனது பதிவில் பார்ப்பன மதம் எனும் நிறுவனப்படுத்தப்பட்டுள்ள மதத்தை சார்ந்தவர்களால் பிற நாட்டார் வழிபாட்டு
சம்பிரதாயங்களை, சடங்குகளை கொண்டாட முடிவதில்லை என்பதை சுட்டிக் காட்டி இது இஸ்லாம், கிருத்துவ மதம் சார்ந்த
பிரச்சனையல்ல. மாறாக மதம் என்ற வடிவத்தின் மூலப் பிரச்சனை என்பதை சுட்டியிருந்தேன்.
//
செந்தில் குமரன்,
உங்க கருத்துதான் எனதும், ஆயினும் பொங்கல் பண்டிகையை பொறுத்த வரை அதை கிருத்துவ, இஸ்லாம் மதத்தினர்
கொண்டாததற்க்குக் காரணமாகவும், இந்து மதம் எனப்படுவதில் உள்ள பிறர் கிருத்துவ மத பண்டிகையை
கொண்டாடுவதற்க்குக் காரணமாகவும் நீங்கள் குறிபிட்டுள்ள் விசயம் தவறு எனப்தைத்தான் நான் சுட்டிக் காட்டினேன்,
மத அபிமானம் வளர்ந்தால் அது மக்களின் சகிப்புதன்மையை பாழாக்குகிறது. இது அனைத்து மதத்திற்க்கும் பொருந்தும்.
இதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் நானும் சொல்கிறேன். ஆனால் அதை நடைமுறைக்கு அப்ளை செய்யும் பொழுது,
இந்து/பார்ப்னிய மதம் குறித்த உங்களது புரிதலில் உள்ள் சிறு குறைபாடு தவறான நிலைக்கு இட்டுச் செல்கிறது.
இதை சுட்டிக் காட்டவே பார்ப்ப்னிய மத அபிமானிகள் கொண்டாடத் தயங்கும் பண்டிகைகளை, சம்பிரதாயங்களை நான்
எனது பதிவில் சுட்டிக் காட்டினேன்.
அதே நேரத்தில் இந்த பதிவின் பின்னூட்டத்தில் இந்து மத பிரிவினர் பிற மத பண்டிகைகள் சிலவற்றை
கொண்டாடுவதற்க்குக் காரணமான விசயத்தையும் குறிப்பிட்டேன்.
///முதல் விசயம் இந்து மதம் என்பதை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இல்லாததும், மதத்தின் தத்துவம், அது
வலியுறுத்தும் சம்பிரதாய சடங்குகள் என்று பார்க்குமிடத்து அது பார்ப்பன மதம் என்று இருப்பதையும் இங்கு மறந்து விட்டு
பேசினால் செந்தில் குமரன் சொல்வது நியாயம் என்றே தோன்றும்.
ஆக, இந்து என்று வரையறுக்கும் ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்து மதத்தின் மூல தத்துவத்திற்க்கு
ஏற்றவர்களே கிடையாது. இந்த சுந்தந்திர மக்கள் சம்பிர்தாய தாத்பிரியங்களால் மத்ம் என்ற அடிப்படையில் கட்டுண்டவர்கள்
கிடையாது. மாறாக சாதி என்ற அடிப்படையிலேயே கட்டுண்டவர்கள். அதனாலேயே இவர்களால் எந்த பிரச்சனையும் இன்றி
கிருத்துவ, இஸ்லாமிய மத சடங்குகளை கொண்டாட முடிகிறது.
///
கிருத்துவ மத பண்டிகையை கொண்டாட முடிந்த ஒரு பார்ப்பனரால், தலித் வீட்டு திருமணச் சடங்கையோ அல்லது தலித்
விழாக்களையோ கொண்டாட முடியாது ஏன்?
ஏனேனில், கிருத்துவ பண்டிகை கொண்டாடுவதில் இவரது சம்பிரதாயத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஆனால் தலித்
விழாவை கொண்டாடுவதில் இவரது ச்ம்பிரதாயத்துக்கு குந்தகம் வருகிறது. இதே விசயம் இந்து பண்டிகை கொண்டாடுவதில்
இஸ்லாமியர் தனது சம்பிரதாயத்தை மீற வேண்டிய விசயம் இடிக்கிறது.
இதில் இஸ்லாமியர் விசயத்தை மட்டும் பேசி மத வெறியை அவர்கள் கிளப்புவதையே நான், செந்தழல் ரவி கண்டித்து
எழுதினோம்.(if they are so honest then expose all religion)
புரியவில்லை என்றால் தயவு செய்து தெரியப்படுத்தவும்.... எனது எழுத்து வன்மை மிக அதலபாதாளத்தில் இருப்பது ஒரு
பிரச்சனையாகவே இருக்கிறது. கூடிய விரைவில் மற்றவர்களைப் போல எழுதும் திறமை கை கூடும் என்று நம்புகிறேன்.
அசுரன்
எனது எழுத்து வன்மை மிக அதலபாதாளத்தில் இருப்பது ஒரு
பிரச்சனையாகவே இருக்கிறது
only that ? :)
Test
i am aasath
pls see this post-modernist blog for such good post:
http://www.satiyakadatasi.com/
அசுரன்!
அழகிய பதிவு.
நான் இனத்தால் திராவிடன். மொழியால் தமிழன். மதத்தால் இஸ்லாமியன். இப்படி மூன்றையுமே ஒரு சேரக் கொண்டு செல்ல முடியாதா என்றால் தாராளமாக கொண்டு செல்லலாம். தமிழன் என்ற முறையில் நான் பொங்கல் வைத்து கொண்டாடலாம். ஆனால் அந்த பொங்கல் குறிப்பிட்ட தெய்வத்துக்கு படைக்கப்படாமல் இருக்க வேண்டும். இந்த ரீதியில் பொங்கலைக் கொண்டாட இஸ்லாம் எந்த தடையும் விதிக்கவில்லை.
இன்று பொங்கலுக்காக குரல் எழுப்புபவர்கள் உண்மையில் இந்த பண்டிகையின் மேல் உள்ள பிரியத்தினால் அல்ல. இதை சாக்காக வைத்தாவது இஸ்லாமியர்களையும், பிராமணர் அல்லாத இந்துக்களையும் பிரித்து அதில் குளிர்காய சில பதிவர்கள் நினைக்கினறனர். பாவம் அவர்கள்.... மக்கள் மிகவும் விழிப்புடனேயே இருக்கின்றனர்.
தன்விளம்பரம்:
தமிழர் திருநாள் பொங்கல் : சில சிந்தனைகள
Asuran,
This is a very good debate which exposes the 'unification' programmes of hinduthva forces..
Pongal was a thanks giving festival, but now it is not being celebrated in that fashion. At this point in time any celebration which does not have its roots in parpanist religion is being parpanised little by little.
They give different names but their goal is one - and that is Hinduising the whole culture.
Thanks for giving a good article and exposing their secret agenda!
With Wishes
R.V
அசுரன் அவர்க்ளே
இது இந்த பதிவிற்க்கு சம்மந்தம் இல்லாத பின்னூட்டம் தான்.
நீங்கள் இஸ்லாத்தை சார்ந்தவர் என்று நினைக்கிறேன்.அசுரன் என்று இஸ்லாத்தில் பெயர் வைப்பது தவறல்லவா.மேலும் பல தவறான பெயர்கள் வழக்கத்தில் உள்ளன. உ.ம்- ரஷித், நாஸர், மலிக், அயுப், இவையெல்லாம் அப்துல் சேர்த்துதான் வைக்கவேண்டும்.ஷாகுல் ஹமீது- தவறு( சரியான அரபு வார்த்தை ஷா அல் ஹமீத்).அனுமதிக்க விரும்பினால் வெளியிடலாம்.நன்றி
லியோ சுரேஷ்
துபாய்
நண்பர் லியோ சுரேஸ்,
நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல. நான் ஒரு கம்யுனிஸ்ட். நாத்திகவாதி. மதங்களின் எதிரி. தனிப்பட்ட கடவுள் நம்பிக்கை என்பது மக்களின் இயலாமையைக் காட்டுகிறது. அதனை என்றும் நான் கேள்வி கேட்ப்பதில்லை. மதங்களையும் கூட நேரடியாக மோதி எதிர்க்கும் நோக்கமெல்லாம் கிடையாது. ஆயினும் எந்த மதத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் அவர்கள் மக்களை மதத்தின் பெயரால் தமது அரசியல் தேவைக்கு அணி திரட்டி துவேசம் பரப்புவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அதன் விளைவே இந்தப் பதிவு. இஸ்லாம் மத அடிப்படைவாதிகளை அம்பலப்படுத்தும் தேவையின்றி அது மிகப் பரவலாக அறிமுகமாகியிருக்கிறது. ஆனால் இந்து/பார்ப்ப்னிய மத வெறியோ அவ்வாறு இல்லாமல் நயவஞ்சகமாக பண்பாட்டு தளத்தில் ஊடுருவுகிறது. எனவே அதை அம்பலப்படுத்தும் தேவை எமக்கு எழுகிறது.
***********
நண்பர் ராஜவனஜ்ஜின் வருக்கைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. டெம்பேள்ட் கலர் காம்பினேசனை விரைவில் மாற்றுகிறேன்
அசுரன்
சுவனப்பிரியனின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,
நீங்கள் குறிப்பிடுவது உண்மை. மக்கள் விழிப்புடன் இருப்பினும் மத வெறியர்களுக்கெதிரான போராட்டத்தை மத அடையாளத்துடன் சேர்த்து செய்ய முடியாது என்ற விசயத்தை மட்டும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.
மாற்றுக் கருத்து இருந்தால் தெரியப்படுத்தவும். மேலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை மிகக் கடுமையாக அம்பலப்படுத்தி உங்களிடமிருந்து பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன். குறைந்த பட்சம் இஸ்லாமிய இளைஞ்ர்கள் படுகுழியில் விழாமல் பாதுகாக்க உதவும் என்பதால்.
ஏனேனில் எந்த ஒரு சமூகத்திலும் உள்ளிருந்து நடக்கும் போராட்டமே மாற்றத்தை ஏற்ப்படுத்துவதில் தீர்மானகரமான் பாத்திரத்தை வகிக்கிறது.
அசுரன்
சும்மா லுலூவாய்க்கி
இப்போ இந்த "லுலூவாய்க்கி" என்ன தேவை ஏற்பட்டது என்று என்னோட குட்டி மூளைக்கு பிரியறா மாதிரி சொல்லுங்கண்ணே..
ஆமா தமிழ்மணத்துல எதுனா சண்டையா?
அதான் லுலுவாய்க்கின்னு போட்டிருக்கம்ல... கேள்வி கேக்கப்ப்பாடாதுன்னு அர்த்தம் :-))
அது வேற ஒன்னுமில்ல சில டெம்பேளேட் மாற்றங்களை சோதிக்கும் பொழுது இந்த பதிவ திரும்ப படிச்சேன். இன்னொரு ரவுண்டு பப்ளிஸ் பன்னா நல்லாருக்குமேன்னு தோணுச்சி அவ்வளவுதான்....
அசுரன்
Post a Comment