திரு. நீலகண்டன் மிகவும் திறமையாக நாட்டார் தெய்வங்களுக்கு பிற மதங்களால் வரும் ஆபத்து குறித்து இடது சாரிகள் பேசுவதில்லையே என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
எல்லா இடங்களிலுமே இந்த மூன்று மதங்களும் மக்கள் விரோத வேலையைச் செய்கின்றன என்பதையும், அவை மூன்றுமே எதாவது காரணத்தை கூறீ சுதந்திர வழிபாட்டு முறையை உடைய நாட்டார் தெய்வங்களையும் அது சார்ந்த மக்களையும் முழங்க முற்படுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறோம்.
இதில் குறிப்பாக பார்ப்ப்னியம் தனது சொந்த நலனுக்காக நாட்டார் வழிபாட்டு நலனுக்கு சேர்த்து அழுவது போல நடிக்கும் பொழுது அதை அம்பலப்படுத்தும் தேவை ஏற்ப்படுகிறது. அதுதான் அவருக்கு பிரச்சனை. அதாவது அவரது மதத்தை நாம் அம்பலப்படுத்துவது. எனது
முந்தைய கட்டுரையில் கூட எல்லா மதங்களுமே மக்கள் விரோதமானவை என்றே எழுதியுள்ளேன்.
ஏன் இதே இந்துத்துவ மத வெறியர்களுக்கு நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டு அதன் பாரம்பரியம் அழிக்கப்படுவது ஆக்கிரமிப்பாக தெரிவதில்லை? ஏனேனில் மற்ற மதங்களைப் போலவே இந்து/பார்ப்பினிய மதமும் தனது மத வெறி பிரியானிக்கு இந்த சுதந்திர மக்கள் கூட்டத்தை கறிவேப்பிலையாக பயன்படுத்த முற்ப்படுகிறது. தனக்கு கிடைத்த கறிவேப்பிலை பிறருக்கு கிடைக்கக் கூடாது என்பதுதான் இந்த மத வெறிய்ர்களின் ஆற்றாமை.
நாங்கள் கறிவேப்பிலையாக உபயோகப்படுத்துவதை மறுத்து அதை எதிர்த்து பேசினால். அவன் உபயோகப்படுத்துகிறான் , இவன் உபயோகப்படுத்துகிறான் என்று ஒரு உடலுறவு தொழிலாளியிடம் பேசுவது போல பேசுகிறார்கள்.
நாட்டார் வழிபாட்டு தெய்வங்களுக்கு ஆபத்து என்று பார்த்தால் அதில் இந்து/பார்ப்ப்னியம் நட்புடன் செய்யும் துரோகமே மிகப் பெரிய ஆபத்தாக உள்ளது.
இதற்க்கு பலியான தெய்வங்களை, தனது அழகை இழந்து, மக்களிடமிருந்து பிரிந்து - பூணுல் போட்ட அய்யரிடம் சரணடைந்த, சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்த நாட்டார் தெய்வங்களை பரவலாக காண முடியும்.
அந்த தெய்வங்கள் அவமானமுற்று கோயில் கருவறைக்கும் முடங்கி, மூச்சு முட்ட திணறும் சத்தம் எல்லாருக்கும் கேட்ப்பதில்லை.
குழந்தைகளின் பாதம் படா அந்த தெய்வங்களின் திரு மேனி ஆவாலின் வேர்வைப் பட்டு கூனிக் குருகுகின்றன. காக்கை, குருவி, முதல் இரட்டைக் கால் நாலு கால் பிராணிகள், மனிதர்கள் அனைவரிடமும் பழ்கி அந்த மக்களின் உடை கலாச்சாரத்தை தனதாக கொண்டு வலம் வரும் இந்த தெய்வங்களை இந்து/பார்ப்ப்னிய வெறிய்ர்கள் அவமானப்படுத்தியதை விடவா வேறு யாரும் செய்து விடப் போகிறார்கள்?
இந்து/பார்ப்ப்னிய மதம் எல்லாரையும் ஏற்றுக் கொள்ளும் ஆனால் ஒரேயொரு நிபந்தனை, அது தனது வர்ணாஸ்ரம பசிக்கு இரையாகி வயிற்றில் செட்டிலாகத் தயாராக வேண்டும் எனப்துதான்.
அந்த மதங்களாவது நேர்மையாக் உன்னோட முந்தைய கடவுளை விட்டு விட்டு இங்கே வா என்கிறார்கள். இவர்களோ உன்னோட முந்தைய தெய்வத்தையும் பார்ப்பன் சேவை செய்யும் அடிமை நிலைக்கு தாழ்த்தி என்னுடன் ஐக்கியமாகு என்கிறார்கள்.
இது வரை திருப்பதி சாமியோ அல்லது ராமனோ அல்லது கிருஷ்ணனோ நாட்டார் வழிபாட்டு மரியாதைகளை ஏற்றுக் கொண்டதாக பார்த்ததில்லை. பார்ப்ப்னிய பண்பாடு ஏதோ ஆக சிறந்தது என்ற கருத்தை வைத்து மத அரசியல் செய்கிறார்கள். ஏற்கனவே பல ஆயிரம் வருடம் நிலை பெற்ற இந்த ஒரு கருத்தை இவர்கள் வசதியாக உட்கார்ந்து கொண்டு இன்று அறுவடை செய்கிறார்கள். அதனால்தான் அந்த பார்ப்ப்னியம் சார்ந்த பண்பாடு மிக உயர்ந்தது புனிதமானது என்ற போலி பிம்பத்தை உடைக்க முட்படுபவர்களை இவாள் ருத்ரதாண்டவமாடி இடை மறிக்கிறார்கள்.
இதன் மூலம் தெய்வங்களையும், அதன் பண்பாடுகளையும், அது சார்ந்த மக்கள் கூட்டத்தையும் உறிஞ்சுகிறார்கள்.
சில கேள்விகள்:
ஏன் இந்து/பார்ப்பினிய மதத்திற்க்குள் நுழைக்கப்படும் நாட்டார் தெய்வங்கள் பார்ப்ப்னிய மயமாக்கப்படுகின்றன?
எந்த வகையில் நாட்டார் வழிபாட்டு முறை இழிவானது?
எந்த வகையில் பார்ப்ப்னிய வழிபாட்டு முறை உயர்வானது?
இப்படி மாறுவது எந்த வகையில் சம்பந்தப்பட்ட மக்கள் கூட்டத்தின் குறைந்த பட்ச பிரச்சனைகள் எதாவதிற்க்கு தீர்வு சொல்கிறதா? ஏதாவது பிரச்சனை... எதுவாகிலும் பரவாயில்லை.
இந்த கேள்விகளுக்காவது பதில் சொல்லும் நெஞ்சுறுதி உண்டா மத வெறியர்களுக்கு?
இவர்களின் ஒரே ஆயுதம்/பலம் ஆயிரம் வருட ஆதிக்கம் உருவாக்கியுள்ள கருத்து- அதாவது பார்ப்ப்னிய பண்பாடு உயர்வானது/புனிதமானது என்பதுதான்.
**********
நாட்டார் மரபைப் பின்பற்றும் இக்கோவில்களில் தற்போது தீவிரமாக ஆரியமயமாக்கல் நடந்து வருகின்றன. அதன் முறைகளைக் கீழ்க்கண்டவாறு அ.கா.பெருமாள் பட்டியலிடுகிறார்.
1) ஆகம நெறிப்படி கோவிலைக் கட்டுதல்.
2) பலி, சாமியாட்டம், சடங்குகள் போன்ற கூறுகளுடைய நாட்டார் கலைகள் நிறுத்தப்படல்
3) வழிபாடு, விழாக்களில் வைதீக முறை பின்பற்றப்படல்; வட மொழி மந்திரம் ஓதப்படல்
4) துணைத் தெய்வங்களாக நவக்கிரகங்கள், விநாயகர், சுப்பிரமணியர் போன்ற பெருநெறித் தெய்வ உருவங்களை ஆகம முறைப்படி நிறுவுதல்; கருவறைத் தெய்வ உருவத்தைப் பெருநெறித் தெய்வமாக்கல்
5) கோவில் தொடர்பான பிரயோகங்கள் கூட வைதீக மரபில் கூறப்படல் (அபிஷேகம், நைவேத்தியம், கும்பாபிஷேகம், ஸ்ரீபலி, உற்சவ விக்ரகம், கர்ப்பக் கிரகம் முதலியன)
6) கோவிலின் பூசை செய்பவரைப் பிராமணராக நியமித்தல்
7) கோவிலின் முக்கிய தெய்வத்தின் பழைய கதை மறைக்கப்பட்டு, புராணங்களுடன் தெய்வம் தொடர்பான வரலாறு இணைக்கப்படல்
8) சமயப் பிரச்சாரக் கூட்டங்கள், பட்டி மன்றம், வழக்காடு மன்றம், கருநாடக இசைக் கச்சேரி நடத்தல்
9) பெண்களை ஒரே இடத்தில் கூட்டுவதற்குரிய திருவிளக்கு பூசை முதலியவற்றை நடத்தல் (இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்/ஹிந்து முன்னணி முதலிய அமைப்புகள் துணை நிற்கின்றன)
10) முக்கிய தெய்வத்தை கர்மா, மாயா போன்ற தத்துவார்த்தங்களுடன் இணைத்துப் பேசுதல்.
****
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய நோக்கமே அ.கா. பெருமாள் பட்டியலிட்டுள்ள வழிமுறைகளின்படி செயல்பட்டு, சிறு தெய்வங்களை இந்து மதத்துள் கரைத்து, ஒற்றைப் பண்பாட்டை ஏற்படுத்துவதுதான். ஆயினும், இச்செயல்கள் மூலம் சைவ,வைணவக் கோவில்களுக்கும், நாட்டார் தெய்வக் கோவில்களுக்கும் இடையிலான வேறுபாட்டை முழுமையாக நீக்க முடியவில்லை. இரண்டு வழிபாட்டு முறைகளையும் இணைப்பதற்குத் தடையாக சாமியாடலும், உயிர்ப்பலியும், சாராயமும் உள்ளன.
அண்மைக்காலத்தில், சிறு தெய்வங்களின் கோவில்களில் விநாயகர் சிலை / சிவலிங்கம் நிறுவி, அதனையே சாக்காக வைத்துப் பலியிடலைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். மக்களும் சளைத்தவர்கள் அல்லர். துணி ஒன்றால் விநாயகர் சிலையை மூடி விட்டு அவர்களின் சாமிக்குக் கெடா வெட்டிக் கொண்டனர். சில ஊர்களில் இந்தத் தடங்கலைச் சரி செய்ய, நிறுவப்பட்ட விநாயகர் சிலையைப் பெயர்த்து கோவிலுக்கு வெளியே நிறுவி விட்டு, வழக்கம் போல் கெடா வெட்டை நடத்த ஆரம்பித்து விட்டனர்.
ஆர் எஸ் எஸ் விரும்பிப் போற்றும் வட மொழி சார்ந்த பிராமணீயப் பண்பாட்டுக்கு எதிராய் நாட்டார் தெய்வங்கள் இருப்பதும், பெரும்பான்மை மக்களின் வழிபாடாக அவை இருப்பதும் இடஞ்சலாய் இருக்கின்றது. எனவேதான், இக்கோவில்களில் பூசை செய்து வந்த அ-பிராமணப் பூசாரிகளுக்கு சமஸ்கிருத மந்திரம் கற்றுக் கொடுப்பதும், தந்திரமாக சைவப் படையலுக்கு அச்சாமிகளை மாற்றுவதும் நடக்கத் தொடங்கி உள்ளது.
இது நிச்சயமாகப் பண்பாட்டுப் படையெடுப்புதான். இத் தாக்குதலை நாட்டார் தெய்வங்கள் சமாளிக்குமா ? அல்லது இவர்கள் விரும்பும் ஒற்றை அடையாளத்துள் கரைந்து போகுமா ? என்பதைக் காலம் தான் முடிவு செய்யும்.
*************
ஊரில் உள்ள சில பொறுக்கிக் கூட்டங்களிடையே உள்ள போட்டிக்கும் பொறாமைக்கும், இந்த மத வெறிய்ர்களிடையே உள்ள போட்டி பொறாமைக்கும் என்ன வித்தியாசம்?
இவர்களின் கூச்சலில் தொலைந்து போவது என்னமோ எல்லா மதத்தை சேர்ந்த உழைக்கும் மக்களின் உயிராதார பிரச்சனைக்கான குரல்தான்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி இந்த இருபது வருடங்களிலேயே சில ஆயிரம் உயிர்களை ஒன்றுக்கும் இல்லாமல் பலியிட்டுள்ளனர். இவர்களால்(மத வெறியர்களால்) இது வரை ஏதேனும் உபயோகமாக நடந்துள்ளதா என்றால் ஒன்றும் கிடையாது.
இந்த மக்கள் விரோதிகளை இனம், மதம் அடையாளங்களைத் தாண்டி நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் சுயநல வெறியை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களை முற்றாக நிராகரித்து தனிமைப்படுத்துவதன் மூலம் இவர்களின் குரல் இவர்களுக்கே கேட்க்க முடியாத நிலையை அடையச் செய்ய வேண்டும்.
கலாச்சாரமும், பண்பாடும் அழிவது யாரால் என்ற கேள்விக்கு இது வரை எமக்கு பதில் சொல்ல வக்கற்ற இந்த கயவர்கள் மீண்டும் கோயபல்ஸின் செயல்முறையையே பயன்படுத்துகிறார்கள்.
நேர்மையற்ற கயவர்களின்/கழிசடைகளின் கடைசிப் புகலிடம் மத அடிப்படைவாதம்!!!
அசுரன்
Related Article: