TerrorisminFocus

Wednesday, August 23, 2006

வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா?

வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா?

"எனக்கு அவன் கொடுத்த செக் திரும்பி வந்திடுச்சுண்ணே."


"விளக்கமா சொல்லு"


"அண்ணே.. அவனுக்கு நான் பத்தாயிரம் பணம் கொடுத்திருந்தனா.. அதை அவன்கிட்ட திருப்பிக் கேட்டப்போ அவன் ஒரு செக் கொடுத்திருந்தான்னே.. அது பேங்கில திரும்பி வந்துடுச்சு.. என்னன்னு கேட்டு பணத்த வாங்கித்தாங்க!"


"நீ எப்போ அவனுக்கு..பணம் கொடுத்தே?"

"அவன் பொண்டாட்டி ஓடிப்போவதுக்கு முன்னாடி?"

"என்னது அவன் பொண்டாட்டி ஓடிப்போயிட்டாளா? யார் கூட? அந்த நெட்டையா ஒருத்தன் ஊடகீட வந்துகிட்டு இருந்தானே அவனோடயா? ஏம்பா ஏன் என்கிட்டே சொல்லல இத?"

"அண்ணே! விசயம் அது இல்லண்ணே! செக்கப் பத்திக் கேளுங்க!"

"கொஞ்சம் சும்மா இருப்பா நீ! எவ்வளாவு நாளாப்பா அவன்கூட ஒன் பொண்டாட்டி பழக்கம்? எங்க ஓடிப் போனாங்க?"

********



இந்த மாதிரி உரையாடலை காமெடி என சினிமாவில் ரசித்திருப்பீர்கள்.. நிஜத்திலும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது இந்தியாவில் காங்கிரசு, பிஜேபி எனும் ஆளும் வர்க்கக்கட்சியின் வடிவில்.

வந்தே ஏமாத்தறோம் பஜனையின் பிண்ணனி:

நாட்டின் சுரங்கங்கள், விமான ஓடுதளங்கள், நிலையங்கள், ஆறு, நிலத்தடி நீர் என ஒன்றும் பாக்கி இல்லாமல் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்தாயிற்று.. சுயசார்புக்கொள்கையை அணுசக்தித்துறையில் கைகழுவி அமெரிக்காவிடம் சரணாகதி ஆன விசயம் மக்களிடம் அம்பலமாகி நிற்கும் வேளையில் 'வந்தேமாதரம் பஜனை'யைக் கையில் எடுத்துள்ளனர் இரு கயவாளிகளும்.

தேசபக்தி என்பது வெறும் பஜனைப்பாட்டு அல்ல. அது கோடானுகோடி உழைக்கும் இந்திய மக்களின் நலனுக்காக சிந்திப்பதாகும். இவர்களின் நலனை அன்னியனிடம் அடகு வைத்த விசயம் அம்பலமாகும்போது அதிலிருந்து மக்களை திசை திருப்பும் உத்தியாகவே இவர்கள் செய்து வரும் வாதம் உள்ளது. (செக்கு திரும்பி வந்த விசயத்தை விட்டு விட்டு பொண்டாட்டி ஓடிப்போனது பற்றிப் பேச ஆரம்பிக்கும் காமெடியை நினைவுகொள்க).

இவர்கள் இப்படி வந்தே மாதரம் பற்றிய சர்ச்சையை நடத்திக்கொண்டிருக்கையிலேயே ஓசையில்லாமல் கோக்கோகோலா கம்பெனிக்காரனுக்கு 'நற்சான்றிதழ்' தரும் மாமா வேலையை அமெரிக்க அடிமை மன்மோகன்சிங்கின் கூலிப்படை செய்து விட்டது.

இதே தாசானுதாசன், கொஞ்ச நாளுக்கு முந்தி, 'ராவின் அரசில் இருந்த அமெரிக்க உளவாளி யார்?" என்பதை முன்னாள் ஜஸ்வந்த் சிங்கிடம் லாவணி பாடிக்கொண்டிருந்தார். அமெரிக்க உளவாளியே பிரதமராக இருப்பதும், அவர், உளவாளி பற்றிப் பேசுவதும்தான் காலக்கொடுமை.

மருத்துவம், கல்வி, குடிநீர் எல்லாமே தேசத்து மக்களுக்குக் கிடைக்கவிடாமல் தனியார்மயமாக்கப்பட்டு அம்மக்களின் நலன்கள் காவு கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்த மாமாக்கள் (காங்கிரசு, பாஜக) 'தேசபக்தி' பற்றிப் பினாத்துகிறார்களே? அன்னிய நிறுவனமான சோனி, பத்தாண்டுகளுக்கு முன் 'வண்ட்ட்ட்ட்டேஏ மாத்த்தரம்' என்று மலச்சிக்கல் வந்தவன் முக்குகிற மாதிரி ஏ ஆர் ரகுமானை வைத்துப் பாடச்சொல்லி காசு சம்பாதித்ததே! அப்போது அன்னியக்கம்பெனி எப்படி எங்களோட 'தேசபக்தி' வியாபாரத்துல தலையிடலாம்னு குறைந்தபட்சம் 'தேசிய முதலாளிகள்' மாதிரியாவது கண்டித்தார்களா இந்த இந்துவியாதிகள் என்றால் அதெல்லாம் இல்லை.
சரி.. இவர்கள் சொல்லிவரும் வந்தே மாதரத்தின் லட்சணத்தைத்தான் பார்த்து விடுவோமே!

வந்தே ஏமாத்துறோம்! எப்படி?
"மொகலாயர் ஆட்சிக்குப் பிறகு வங்காளத்தை ஆண்ட முசுலீம் நவாபுகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் பார்ப்பன மேல்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை இழந்து தவித்தனர். எனவே நவாபுகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர்.

இந்தச் சூழ்நிலையை வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 'ஆனந்த மடம்' எனும் புதினத்தை எழுதினார். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் 'வந்தே மாதரம்' (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, சரஸ்வதி, லட்சுமி என்று தாயை விளிக்கும் 'வந்தே மாதரம்' இப்படித்தான் தோன்றியது.

"நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய் விட்டது; சமூகம் போய் விட்டது; மானம் போய்விட்டது;குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க்கொண்டிருக்கிறது.." இது 'ஆனந்தமடம்' நாவலில் வரும் ஓர் உரையாடல். இதில் யாருடைய மதம்-சமூகம்-மானம்-குலம்-பிராணன் போய்விட்டதென்பதைத் தெள்ளெனவே உணரமுடியும்.

அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த 'ஆங்கிலப் பிதாவை' அன்றைய வங்கத்துப் பார்ப்பன மேல் சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தேமாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!


காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கர்யமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன மேல்சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனீய இந்துத்துவக் கருத்தும் 'வந்தே மாதரத்தை'ப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தன.


கோவில்களில் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி "இதுதான் லட்சுமி,சரஸ்வதி,பார்வதி" என்று வரைந்து தள்ளினார் திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவி வர்மா. இப்படியே 'மாதா'க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசி வரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் 'விடுதலை கீதம்' என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையச் செய்யாதா?

பிற மதத்தினரை விடுங்கள், மக்கள் மீது மீளாக் காதல் கொண்ட எந்த ஒரு சுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும்.

மத வெறி அரசியலும், மாற்று அரசியலும்:


இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கைக் காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது.


இப்போது பிஜேபி அர்ஜூன் சிங்கை நெளிய வைக்கவும் தனது இந்துவியாதி அரசியல் ஆயுதத்தை கூர்மைப் படுத்தவும் இந்த பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

ஏகாதிபத்திய அடிமைகளான பிஜேபியும், காங்கிரசும் நாட்டின் மூல வளங்களையும், நாட்டின் இறையாண்மையையும் டாலர் தேவதையின் முன் சமர்ப்பித்து விடுவதில் போட்டாபோட்டி போடுகின்றன. போராடும் உழைக்கும் இந்திய மக்கள் மீது , ஹூண்டாய் காரனின் எச்சில் காசுக்காக அடக்குமுறையையும், உரிமைப்போர் நடத்தும் மக்கள் மீது தாமிரபரணியில் கோக் கொடுக்கும் எலும்புத்துண்டுக்காக அரசு எந்திரத்தை ஏவி விடுவதிலும் இந்த இரண்டு கூட்டுக்களவாணிகளும் கள்ள மவுனமே சாதித்தன.


இது இன்று நேற்றல்ல. நூறாண்டுகளாக நடந்து வரும் துரோக வரலாறுதான். மக்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராய் எப்போதெல்லாம் போராடினரோ அப்போதெல்லாம், காங்கிரசு மக்களை அன்னியனுக்குக் காட்டிக்கொடுத்தே வந்துள்ளது. (புன்னபுரா, சவுரிசவுரா, தெலங்கானா உழவர் எழுச்சிகள், பகத்சிங்கின் புரட்சிப்படை ஆகியவற்றுக்கு எதிராக இருந்தமை).

பாஜகவின் மூல வேரான இந்துமகாசபையும் ஆர் எஸ் எஸ் ம், மற்ற இந்துவியாதிகளும் இதே மாமா வேலையைத்தான்(விளக்கு பிடித்தல்) 1947க்கு முன்னரும், பின்னரும் செய்தனர் (வெள்ளையனே வெளியேறு, தல்வார் புரட்சி ஆகியவற்றிற்கெதிராக வேலை செய்தமை). இன்றும் தொடர்கின்றனர்.


ஒட்டுண்ணிகளை அழிக்கும் வீரிய மருந்து - உழைக்கும் வர்க்கம்:


வந்தே மாதரம் பாடி நம்மை ஏமாற்றும் அரசியல் ஒட்டுண்ணிகளும், அவர்களின் எச்சில் பொறுக்கி அல்லக்கைகளும் நம்மைப் பார்த்து 'வந்தே ஏமாத்துறோம்' எனச்சொல்வது கேட்கிறது.


இந்த தேசத்தின் நலன்களையோ, தேசத்தின் செல்வங்களையோ, உழைப்பாளர்களையோ மதிக்காமல், அவற்றுக்கெல்லாம் எதிரானவர்களாய் நடந்து கொண்டு, வெறுமனே 'வந்தே மாதரம்' போன்ற பஜனைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு 'போலி தேசப்பற்று' பேசி அதற்கென 'நாய்ச்சண்டை இடுவது' எவ்வாறு சாத்தியமாகின்றது?


மக்களிடம் நாம் உண்மையான அரசியலை - அதாவது ஏகாதிபத்தியத்தை, அதற்கு நக்கிப்பிழைக்கும் காங்கிரசு, பாஜக கூட்டத்தை - பற்றி பேசத்தொடங்க வேண்டும். அவர்களின், இந்த அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.


பிளாக்ஸ்பாட்டுகளில் நுழைந்து அங்குள்ள பல போலி தேசிய கூமுட்டைகளை உடைக்க வேண்டும்.

கற்பக விநாயகம்
vellaram@yahoo.com

42 பின்னூட்டங்கள்:

said...

kalakurey machi

said...

Dear Asuran,

மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.
நாட்டையே ஏகாதிபத்தியங்களுக்கு அடகு வைத்து விட்டு "வண்டே மாட்ரம்" என பம்மாத்து காட்டுகின்றன BJP,காங்கிரஸ் கும்பல்.
இவற்றை எல்லாம் பதிவு செய்யும் உங்களுக்கு ஆழ்ந்த நன்றிகள்.

Izzath

said...

மிஸ்டர் கலக்கலுக்கு நன்றி....

மிஸ்டர் கலக்கல் எனது மற்ற கட்டுரைகளையும் கலக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

********

நண்பர் இஸாத் அவர்களின் வருகைக்கு நன்றி,


நன்றி,
அசுரன்.

said...

//பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 'ஆனந்த மடம்' எனும் புதினத்தை எழுதினார். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் 'வந்தே மாதரம்' (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, சரஸ்வதி, லட்சுமி என்று தாயை விளிக்கும் 'வந்தே மாதரம்' இப்படித்தான் தோன்றியது.
"நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய் விட்டது; சமூகம் போய் விட்டது; மானம் போய்விட்டது;குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க்கொண்டிருக்கிறது.." இது 'ஆனந்தமடம்' நாவலில் வரும் ஓர் உரையாடல். இதில் யாருடைய மதம்-சமூகம்-மானம்-குலம்-பிராணன் போய்விட்டதென்பதைத் தெள்ளெனவே உணரமுடியும். அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த 'ஆங்கிலப் பிதாவை' அன்றைய வங்கத்துப் பார்ப்பன மேல் சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தேமாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை! //

கேக்கும் போது பத்திக்கிட்டு வருது.. Raskals இப்படியெல்லாம் ஏமாத்திருக்கானுக.. இத்தன நாளா தெரிஞ்சுக்காம இருந்துருக்கேன். தெரியப்படுத்திய அசுரனுக்கு ஒரு நன்றி..

// முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் 'விடுதலை கீதம்' என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையச் செய்யாதா?பிற மதத்தினரை விடுங்கள், மக்கள் மீது மீளாக் காதல் கொண்ட எந்த ஒரு சுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும்.மத வெறி அரசியலும், மாற்று அரசியலும்:
இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கைக் காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது. //

இதில் இவ்வளவு நடந்திருக்கா என்று எண்ணி எண்ணி வியக்கத்தான் முடிகிறது.. தொடர்ந்து செய்தியைத் தாருங்கள்...

ஒரு வேண்டுகோள்....

// ஊரறிந்த வேசி, பதிவிரதைத்தனம் பற்றி பேசியது மாதிரி இருந்தது அது என்பது வேறுகதை. //

உங்கள் கோபம் நியாயமானதே. ஆனால், பெண் பாலைக் கேவலப்படுத்தும் விதமான சொல்லாடலை தவிர்க்கலாம் தானே.. யோசித்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும் என்று நம்புகிறேன்..

said...

லிவிங் ஸ்மைல்,

கம்யுனிச அரசியல் கற்றுக் கொள்ள ஆரம்பித்த காலத்தில் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி எழுதும் பல்வேறு முற்போக்கு கட்டுரைகளில் தங்களைப் போலவே எனக்கும் விமர்சனம் இருந்தது...

ஆனால் பிறகு எனக்கு இதில் வேறு விதமான் புரிதல் ஏற்ப்பட்டது

வேசி என்ற வார்த்தையை உபயொகப்படுத்தலாமே....

அது இருபாலருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

உதாரணத்திற்க்கு மன்மோகன் சிங்கை வேசி என்று சொன்னால், பொருளாதார நிர்பந்தங்கள் காரணமாக வேசித் தொழில் புரியும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்கூட மன்மோகனை நினைத்து சிரிப்பார்கள் என்றே கருதுகிறேன்....

தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தவும். தவறென்றால் திருத்திக் கொள்கிறேன்.

நன்றி,
அசுரன்

said...

// பிறகு எனக்கு இதில் வேறு விதமான் புரிதல் ஏற்ப்பட்டது

வேசி என்ற வார்த்தையை உபயொகப்படுத்தலாமே....

அது இருபாலருக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். //

பால் கடந்த சிந்தை பரவலாக உள்ள பட்சத்தில் நீங்கள் சொல்ல வருவது பொருத்தமாகலாம்.

ஆனால், எத்தனைப் பேர் அதனை நீங்கள் குறிப்பிடும் பொருளில் பொதுவாக பார்ப்பார்கள்.. சேர்வது என்னமோ பெண்களைப் போல, வேசி(பெண் வேசிகளை) போல, அந்த அளவிற்கு மோசமான என்று விதத்தில் தானே பொருள் கொள்ளப்படும்.

மேலும், வேசைத்தனம் அத்துனை இழிவானது அல்ல அதையும் விட கொடுமையானது.. வேசிகளின் வாழ்க்கையை நன்கு அறிந்தவள் என்ற முறையில் உளறுகிறேன்!!.

சொன்னதில் தவறேதும் இல்லையென்றே நம்புகிறேன்.

பதிலுக்கு நன்றி..

said...

// ஒரு சுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும். //

அருமை.. கலக்கல்...

said...

இது நல்ல விசயத்திற்காக....1

said...

Another pseudo-secular post that appeeases muslims.There is nothing
objectionable in the first two stanzas and only that will be sung.
If Muslims care so much about their religious feelings then let them not declare India as their
mother land.Let them move to Pakistan or Saudi.

said...

லிவிங் ஸ்மைல்,

தங்களது உணர்வுகளை மதிக்கிறேன்.

இனி அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்துவதைப் பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

இது பற்றி தங்களுக்கு விரைவில் தனி மடல் எழுதுகிறேன்.

*******


ஆன்மாவை விற்றுப் பிழைக்கும் அரசியல் தரகு வர்க்கப் பன்றிகளையும், அவர்களின் அல்லக்கைகளையும், அவர்களுக்கு ஆதரவாக மக்கள் விரோதமாக பிரச்சாரம் செய்பவர்களையும் எப்படி திட்டுவது.....

அல்லது 'ஆன்மா வேசி'கள் என்பது போல் ஏதேனும் அருமையான சொல்லாடல் இருந்தால் யாரேனும் கூறி உதவுங்களேன்....

மக்களுக்கு துரோகம் செய்யும் கும்பலை கடுமையாக திட்ட வேண்டுமே....... என்ன செய்ய?

நன்றி,
அசுரன்.

said...

சிவபலனுக்கு,

எனது நன்றிகள்

சுய மரியாதைப் பற்றிய விசயத்தில் தாங்கள் க.க.க.போ (கருத்துக்களை கச்சிதமாக கவ்வினீர் போங்கள்).......


நன்றி,
அசுரன்.

said...

//Another pseudo-secular post that appeeases muslims.There is nothing
objectionable in the first two stanzas and only that will be sung.
If Muslims care so much about their religious feelings then let them not declare India as their
mother land.Let them move to Pakistan or Saudi. //

இந்தியா என்ன உன்னுதா?

செகுலரிசம்னா இந்துத்துவமா?

நான் செக்குலர் வாதியே கிடையாது.. மதத்தை அழிப்பதுதான் எனது முதல் கடமையாக கருதுகிறேன் அதிலும் இந்து பொந்து டூபாக்கூர் பாப்பன மதம்தான் எனது முதல் எதிரி......

யோவ்..... நீயும்... உன்....... கோய்யா.....

**********

சரி அத்த வுடுயா..... வந்தே மாதரம் பாடல்ல அப்படியென்னய்யா நாட்டுப் பற்றுக்கான அம்சம் உள்ளது....

அது பிறந்ததே... ஒரு கேவலமான பார்ப்பன அபிமானத்தில்தான்.

இதைத்தான் கட்டுரையில் எழுதியுள்ளார் கற்பக வினாயகம்..

கட்டுரையை படிக்கமலேயே ஜல்லியடிக்க வந்து விட்டார் சுயமரியாதையற்ற அனானி.....

அய்யா! தங்கள்து புரிதலில் இந்தியா என்பது பார்ப்பன நாடா.....

அப்படியெனில் தங்களுக்கு under ground-ல் கல்லறை கட்டித் தருகிறோம் நிரந்தரமாக குடியிருக்கவும்....

ஒரு பார்ப்பன பாடலை நாட்டுப் பற்றுப் பாடலாக சொல்லி ஒரு வரலாற்று மோசடி...

அதற்க்கு ஒரு புரோக்கரைப் போல விளக்கு தூக்கிக் கொண்டு வந்துவிட்டார் இந்த அனானி.....

சிவபாலன் மேற்கோள் காட்டியிருந்த பின்வரும் வரிகளை தங்களது முதுகெலும்பற்ற உடலுக்கு உரைக்குமென்று நம்பி கீழே இடுகிறேன்:

//// ஒரு சுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும். //

இந்த கட்டுரை, வந்தே மாதரம் பாடலை முன்னிறுத்துவதில் இஸ்லாமியரை தனிமைப்படுத்தும் பாப்பன தந்திரம் உள்ளதை அம்பலப்படுத்தும் அதே வேளையில் அந்த பாடல் ஒட்டு மொத்த இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கே ஒரு அவமானகரமான பாடல் என்பதும் அதை யாருமே பாடக் கூடாது என்பதும்தான் வலியுறுத்துகிறது மேலேயுள்ள வரிகள்.....

அசுரன்.

said...

Hi Asuran,

I am not too sure when you "real" communists are going to see and accept reality. I am not talking about "Vande Mataram" here. Nor i think great of Congress, BJP, Kazhagams, PMK, CPM and all other political parties. I do feel pity on those who are misguided and take up arms.

First of all, your ideal state is an utopia. Even your "Cuba" do not have it. There are no social or economic basis to what you guys have been blabbering.

Secondly, democracy at least provides a chance to correct our own mistakes. Your favourite "government of the working classes" is only replacing one set of people with another. Do you think average chinese is happy with what is being done by your brother comrades? You might disown them today; what is the guarantee that you would not reach the same conclusion as theirs when turn 80 like Deng? In history, communists are the only ones who have made historical blunders (right from allying with britishers when Soviet Union allied with Allies, to preventing Jyoti Basu becoming a PM.) What has happened to all the other non political communist groups every where? Either they have joined mainstream or in the process of joining sooner or later; I won't be surprised you to come aboard.

Thirdly, it is easier to be a critic on everything; Unless you have been part of Government or worked with Government, you will never realise how difficult is to manage such a huge country of contradictions. I strongly disagree with the words that you have used for Dr.Man Mohan Singh. Your political opportunism is exposed when you take a lenient way of Arjun Singh and Natwar Singh; They are no angels; At least no one can point a finger at our present prime minister. He might be toeing American line on certain matters only because he probably genuinely feels that the right approach. He does not have to become another Chavez, to get India ahead.

Fourthly, how can you be sure that masses want a equitable society and not a 'market driven econmy'? Divisions are present in every class and human mind does not satisfy with "status quo". If that was the case, you and me would not have been discussing this on internet. We would have still remained as animals, as rest of them have remained. Each Animal family is a true microsm of a Communist Nation. Among elephants, they may not explot each other, shre the same resources equally but no advancement;

Finally, you seem to be so worked up against Brahmins and other upper castes like Thevars. You seem to find fault individuals based on their caste. This population is atleast 20% of indian population. Given a chance, it looks like you would behave like your brother "Pol Pat" and make India also a failer state like he had done with Combodia. Why should we put our faith people like you?

This response is no way relevant to the current topic. I have been reading all your and your friends' writings on the internet and i quite irritated with your thinking that you guys know what is good for the rest of us where as the 99% of indians seem to be idiots who can't think for themselves. If we are accusing that "erstwhile Brahmins' misused this privelge bestowed on them earlier, how are you going to be different? Even they might have started with an "ideal" dream based on their circumstances and gradually would have ended in the mess what we have today.

Knowing your past postings, i am expecting an honest feedback from you. I do not question your intentions; i am only putting across a point that you need not be correct in everything.

said...

அனானி அவர்களே,

எனது கருத்துக்களை கேள்வி கேட்பதை என்றுமே நான் வரவேற்கிறேன்.

நீங்கள் தொகுப்பாக எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகள் புதியவை அல்ல.

தங்களது கேள்விகளை பார்த்தால் எனது கட்டுரைகளை அல்ல, Instead தலைப்புகளை மட்டுமே படித்தது போல ஒரு சந்தேகம் வருகிறது.

இவை அனைத்திற்க்குமே ஏற்கனவே இந்த தளத்திலேயே பதில்(கட்டுரைகளிலும், பின்னூட்டங்களிலும்) சொல்லியிருக்கிறேன்.

அவற்றை படித்துப் பார்த்து விட்டு பிறகு நான் இங்கு பேசும் விசயங்கள் fancy ஆனவை அல்ல என்பதைப் பற்றி தங்களது கருத்துக்களை வையுங்கள்.

க்யுபா பற்றிய கேள்வி, கம்யுனிசத்தில் ஜன நாயக பற்றிய கேள்வி, சீனா பற்றிய கேள்விகள், இந்திய வோட்டுக் கட்சி கம்யுனிஸ்டுகள் பற்றிய கேள்விகள், முதாலாளீத்துவ அராஜக உற்பத்தி, சோசலிச மாற்று உற்பத்தி, சமூகத்தின் இயக்கப் போக்கு, பார்ப்பனியம் ஏன் எதிர்க்க வேண்டும் என்று பலவற்றிற்க்கும் பதில் சொல்லியிருக்கிறேன்.

தங்களது கேள்விகளை கீழ்காணும் கட்டுரையில் சிறிது சிரமம் பார்க்காமல் பின்னூட்டமாக இடவும். அங்கு நமது விவாதத்தை தொடருவோம்:

http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_115375045154005106.html


************
மற்றபடி தங்களது கேள்விகளில் புது விசயமாக ஒன்றெயொன்று கண்ணில் பட்டது அதை மட்டும் இப்பொழுது பதில் அளிக்கிறேன்:
// I strongly disagree with the words that you have used for Dr.Man Mohan Singh. Your political opportunism is exposed when you take a lenient way of Arjun Singh and Natwar Singh; They are no angels;//

நட்டுகிட்ட சிங்கையும், அரைவேக்காட்டு அர்ஜூன் சிங்கையும் நான் என்னைக்கி தூக்கிப் பிடிச்சேன் கொஞ்சம் சொன்ன வசதியா இருக்கும்.

*********

தங்கள் வருகைக்கும் ஆர்வத்திற்க்கும் நன்றி,
அசுரன்.

said...

நல்ல காரியத்திற்காக கயமைத் தன உதவியில் லிவிங் ஸ்மைலின் பங்கு -1

said...

கயமைத்தனமான பின்னூட்டம் தேவையா எனக் கேட்டுக் கொண்டிருப்பவர்

மருதுபாண்டியன்

said...

மருதுபாண்டியனனின் மறைமுக ஆதரவுக்கு நன்றி :-))

அசுரன்.

said...

உங்கள் கட்டுரைகள் எழுச்சிகரமாக உள்ளன..
வந்தே மாதரம் பாடலின் தோற்றம் பற்றி உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.. அது உண்மையாயின் அப்படிப்பட்ட பாடலை தேசபக்தி பாடலாக ஆக்கியது ஏமாற்றுத்தனமே... இந்த செய்கை வருத்தம் அளிக்கிறது..

மற்ற கருத்துக்கள் பற்றி எனக்கு முழுமையாக தெரியாததால் கருத்து சொல்ல இயலவில்லை.. தொடரட்டும் உங்கள் பணி..

said...

//அது உண்மையாயின் அப்படிப்பட்ட பாடலை தேசபக்தி பாடலாக ஆக்கியது ஏமாற்றுத்தனமே... இந்த செய்கை வருத்தம் அளிக்கிறது..//


மனதின் ஓசை,

அது உண்மைதான்....

உண்மையில்லை என மறுக்க திராணியின்றித்தான் வக்கிரர்கள் இது வரை எந்தக் குரலும் எழுப்பவில்லை.....

பிரச்சனை அதுமட்டுமல்ல...... நாட்டை அமேரிக்காவுக்கு அடகு வைக்கும் அணு சக்தி ஒப்பந்தம் எனும் தந்திரம் வேளியே தெரிந்து நாறிக் கொண்டிருக்கும் பொழுது இந்த விசயம் பூதகரமாக உருவாவதை இரு மாமாக்களும்(BJP மாமாவும் காங்கிரசு மாமாவும்) ஆதரிப்பது என்பதில் உள்ள மொள்ளமாறித்தனம்... அதுவும் மிக முக்கியமான விசயமல்லவா?

தங்கள் வருகைக்கு நன்றி,
அசுரன்.

said...

//கேக்கும் போது பத்திக்கிட்டு வருது.. Raskals இப்படியெல்லாம் ஏமாத்திருக்கானுக.. இத்தன நாளா தெரிஞ்சுக்காம இருந்துருக்கேன். தெரியப்படுத்திய அசுரனுக்கு ஒரு நன்றி..
//
என்னுடைய உணர்வும் இதுதான்..

இத்தகைய பதிவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்...


நன்றி,
புதிய காற்று

said...

1990 ஆம் ஆண்டில் விபி சிங் அரசு மண்டல் பரிந்துரையை அமுல்படுத்திட முனைந்தது.. பா.ஜ.க. பதறிப்போய் விட்டது.. மண்டல் வந்து விட்டால், மேல் ஜாதி ஓட்டு மட்டும் தானே கிடைக்கும்.. எனவே அதை முறியடிக்க ஒரு சூப்பர் அஸ்திரம் இந்தியாவின் ஹிட்லர் அத்வானியால் ஏவப்பட்டது... அது ரதயாத்திரை எனும் குரங்குப்படையின் ரத்தவெறி யாத்திரை.. மக்கள் மண்டலை மறந்து விட்டார்கள்... அத்வானியின் குரங்குப்படை பற்றிப்பேச ஆரம்பித்தார்கள்..

அதே பாணியில்... இன்று...
காங்கிரசின் யோக்கியதை அணு சக்தி ஒப்பந்தத்தில் சந்தி சிரிக்கும்போது, பிரச்சினையை மக்கள் மறக்க 'யார் உளவாளி?' பிரச்சினையை ஜேம்ஸ்பாண்ட் பட ரேஞ்சுக்கு ஜஸ்வந்த் சிங்கும் மன்மோகன் சிங்கும் போட்டு துப்பறிந்தார்கள். ரெண்டு காட்டிக்கொடுக்கும் களவாணிகளும் சேர்ந்து 'யார் துரோகி' என்பதைத் தேடிடும் சாகச நாடகம் போட்டார்கள்... பிசுபிசுத்த இந்த நாடகத்தை விட அர்ஜூன் சிங்கின் 'வந்தே மாதரம்' சீரியல் ரெண்டு நாளாய் மக்களை சொக்க வைத்தபோது, காங்கிரசும் பாஜகவும், அடுத்த மேடை நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றன இப்போது 'இட ஒதுக்கீடு 27% ஓ பிசிக்கு' என்று காங்கிரசு சொன்னால், அதை எதிர்த்து மீண்டுமொரு பார்ப்பனீய எதிர் நாடகம் ஆரம்பம்..

மக்கள் எத்தனையைத்தான் மண்டைக்குள் நினைவு வைக்க முடியும்?

ஆக அணு ஒப்பந்த துரோகமும், அன்புமணியின் 'கோக்குக்கு சர்டிபிகேட்'டும் மக்களிடமிருந்து மறக்கடிக்கப்பட்டு விடும்...

சாணக்கியர்கள்தான் இவர்கள்..

4 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியெல்லாம் நம்ம வாசுபாயி கஷ்டப்பட்டதில்லை... பிரச்சினை எதுவும் பூதாகரமாகும்போதெல்லாம் ராணுவப்படைகளை எல்லையில் கொண்டுபோய் நிப்பாட்டி 4 மாசம் வரைக்கும் ஒரு தோட்டா கூட சுடாமல் (எப்படி சுட முடியும்? அண்ணாத்தே அமெரிக்கா சும்மாவிட்டிருமா?) 'தேசபக்தி' காய்ச்சலை ஊதிப் பெருக்கியே 'சவப்பெட்டி'யில் இருந்து 'பால்கோ விற்பனை' வரைக்கும் சகலத்தையும் மக்களிடமிருந்து மறைக்க முடிந்தது..

அவ்வப்போது 'எல்லை தாண்டிய பயங்கரவாதம்'னு குரங்குப்படையினர் சொல்லி பீதி ஊட்டி வேறு வந்தனர்..

என்னய்யா இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்? யார் மொதல்ல இந்த வேலையை செய்தாங்கன்னு பார்த்தோமுன்னா ... அனுமான் தான் இந்த வேலையை -- எல்லைய தாண்டி சிலோனுல்ல போய் தீ வச்சவன்... செஞ்சிருக்கான்.

யாரோ சொன்னாங்களாமே -- அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்தான் தேசபக்தின்னு --- அது இந்த ரெண்டு மாமாப்பசங்களுக்கும் சாலப்பொருந்தும்..

மருதுபாண்டியன்

said...

அடேங்கப்பா

இந்த நாட்டுப் "பட்ரு" பஜனை இம்புட்டு விஷயம் இருக்கா?

அதான் அவிய தெளிவா சொல்லிப்புட்டாகல்ல "வந்தே ஏமாத்தறோம்" அப்டின்னு

அசுரா.. போர்ப்பறையின் முரசொலி தாங்காமல் பல பார்ப்பனிய செவிப்பறைகள் கிழிஞ்சு தொங்குதய்யா

நன்றி

said...

Why I'm bullish about India - Rediff - nice reading !

***********
This is what happened to me when I was born 46 years ago.
I was born to Tamil speaking parents, my father had a dark skin and my mother a light one. My ayah was a light-skinned woman from UP who spoke Hindi. We lived in a thickly forested area in Jharkhand, where the majority of the population was dark-skinned tribal people who spoke a language called Ho. On my trips out of home I saw people wearing all kinds of attire -- from sadhus wearing nothing at all, to the locals who went topless, to women in burqas.

Most of the guests in our home spoke English. We were Hindu, my ayah was Muslim, and the tribals were either Christian or Animists who worshipped trees, animals or the spirits of their forefathers. People around me had all kinds of food habits. Some ate only vegetables, some did not eat cattle, some did not eat pigs, some ate anything including rats and monitor lizards.

Our small mining community celebrated festivals of all religions with equal gusto. We lived in the middle of an almost virgin forest that was home to a huge variety of wild animals that included elephants, bears and deer. The animals added to the fun and the unpredictability of life by occasionally walking into our tiny community of 10 houses (sometimes into them).

This was my small introduction to the enormous diversity of this wonderful land. Even as an infant I was listening to people of different colours and facial features speaking four languages, of four religions, dressing in different ways, and eating a variety of food.

These must have been the lessons that I learnt: anyone looking like a human was a human, irrespective of skin colour or features; humans worshipped all sorts of gods, wore all sorts of clothing, ate all kinds of food, and spoke all kinds of languages.

As I grew up, my father's company transferred him every two or three years through about half the states in India. I saw the rest of India. I learnt that Indians believe in far more gods than the four that I was introduced to as an infant. I learnt that each state has three or four different regions. People in each of these regions speak different languages or dialects and may not even understand the other dialects in their own state. Each region eats a different kind of food, wears different clothing, is culturally very different, and looks very different geographically.

Today, nobody can convince me that I am superior to someone else because of my religion, skin colour or language. The diversity that I experienced, accepted and enjoyed as an infant is not unique to me. Every Indian experiences this -- only the details differ. I believe that this is what makes us the most tolerant country in the world. I enjoy our diversity so much that I cannot even think of living in one of those countries where everything is homogeneous -- everybody looks the same, eats the same food, believes in the same religion. Think of countries like the Netherlands, Germany, Japan, Sweden... hundreds of them.

Yes, the diversity occasionally makes us kill each other, usually over different religions or sub-religions. This is tragic and should never happen, but look at this way: Sunnis, Buddhists, Roman Catholics, Sikhs, Bohras, Digambar Jains, Parsis, Khurmis, Iyers, Agarwals, Nairs, Syrian Christians, Shias, Shwetambar Jains, Jews, Ismailis, Seventh Day Adventists, Bishnois and a whole lot of other groups live together in India.

In Britain and Yemen two sects of the same religion were killing each other for decades. In Lebanon, people from two religions have been killing each other. The US and South Africa have seen huge problems over two skin colours. In Canada it's over two languages.

As an Indian, I laugh at these silly reasons for their conflicts -- two religions, two colours, two languages. I feel like saying "Hey guys, try Digamber Jain, Gujarati-speaking, pyjama-kurta-wearing herbivore coexisting with Syrian Christian, Malayalam-speaking, mundu-wearing carnivore". Where would we be if we had been as intolerant as them?

I believe that the religious intolerance that we are seeing now is confined to a small percentage of us, and that in the long run we have the sense to not take our differences too seriously, to acknowledge that the whole lot of us are a wonderful amalgam of different races, religions and cultures.

I can never be a global citizen. Contrary to the advice that any stockbroker would give, I've invested all my emotional stocks in this company called India, because I'm sure that the value of these stocks can only go up. Not because of the amount of steel, armaments and textiles we can make, but because we know how to live together.

G V Dasarathi is director of a software products development company

said...

பின்னூட்ட கயமைத்தனத்தில் பங்கெடுத்த சிவபாலன், லிவிங்ஸ்மைல், மற்றும்
மருது பாண்டியருக்கு எனது நன்றிகள்.

*********

//ஆக அணு ஒப்பந்த துரோகமும், அன்புமணியின் 'கோக்குக்கு சர்டிபிகேட்'டும் மக்களிடமிருந்து மறக்கடிக்கப்பட்டு விடும்...

4 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியெல்லாம் நம்ம வாசுபாயி கஷ்டப்பட்டதில்லை... பிரச்சினை எதுவும் பூதாகரமாகும்போதெல்லாம் ராணுவப்படைகளை எல்லையில் கொண்டுபோய் நிப்பாட்டி 4 மாசம் வரைக்கும் ஒரு தோட்டா கூட சுடாமல் (எப்படி சுட முடியும்? அண்ணாத்தே அமெரிக்கா சும்மாவிட்டிருமா?) 'தேசபக்தி' காய்ச்சலை ஊதிப் பெருக்கியே 'சவப்பெட்டி'யில் இருந்து 'பால்கோ விற்பனை' வரைக்கும் சகலத்தையும் மக்களிடமிருந்து மறைக்க முடிந்தது..

அவ்வப்போது 'எல்லை தாண்டிய பயங்கரவாதம்'னு குரங்குப்படையினர் சொல்லி பீதி ஊட்டி வேறு வந்தனர்..//

மிகச் சரியாக தரகு வர்க்க அரசியல் பன்றிகளின் உண்மை முகத்தை
அம்பலப்படுத்திய மருதுபாண்டியருக்கு வாழ்த்துக்கள்

//யாரோ சொன்னாங்களாமே -- அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்தான் தேசபக்தின்னு --- அது இந்த ரெண்டு மாமாப்பசங்களுக்கும் சாலப்பொருந்தும்..

மருதுபாண்டியன்//

மிக்க சரி மருதுபாண்டியரே.. இப்பொழுதுகூட சிலர் போலி தேசபக்தியில் மூழ்கி உணர்வு ரீதியாக வந்தே ஏமாத்தறோம் பாடல் சிறந்தது என்று நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டுரையின் அடிப்படை கேள்வி ஒன்றுக்கூட பதில் சொல்லாமல்.


*************
//கேக்கும் போது பத்திக்கிட்டு வருது.. Raskals இப்படியெல்லாம் ஏமாத்திருக்கானுக.. இத்தன நாளா தெரிஞ்சுக்காம இருந்துருக்கேன். தெரியப்படுத்திய அசுரனுக்கு ஒரு நன்றி..
//
எம்முடன் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்ட புதிய காற்றுக்கு நன்றீ

************

//அடேங்கப்பா

இந்த நாட்டுப் "பட்ரு" பஜனை இம்புட்டு விஷயம் இருக்கா?//

திராஸ்கோலுக்கு நன்றி,

*************

கொஞ்சம் பெரிய ஆங்கில அனுபவம் ஒன்றை போட்ட நல்லிணக்க அனானிக்கும் நன்றி


அசுரன்

said...

வாங்க ariyavan,

லக்கிலுக பக்கத்தில் நீங்கள் நன்றாக பின்னூட்டியிருந்தீர்கள். சொந்தமாக பதிவுகள் போட்டு சொந்த செலவில் சூனியம் வைச்சிக்கலாமே(அப்பா.. இந்த வார்த்தைய யூஸ் பன்னிட்டேன்).

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,
அசுரன்.

said...

'வந்தே மாதரம்' பார்ப்பனர்களின் இந்துக் கடவுள் வாழ்த்து என்றால் 'ஜனகனமன' ஆங்கில மன்னனை வாழ்த்தி வரவேற்று தாகூர் எழுதிய பாடலாகும்.

"ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா" என்ற இக்பாலின் பாடல்தான் உண்மையான நாட்டு வாழ்த்துப் பாடல். ஆயின் இக்பால் முஸ்லிம் என்பதால் காங்கிரசுப் பார்ப்பனர்கள் அதை நாட்டு வாழ்த்துப் பாடலாக ஒப்புக் கொள்ளாமல் அடிமைப் படுத்திய ஆங்கிலேயனை வரவேற்ற பாடலை நாட்டுப் பாடலாக்கினர் என்பது வரலாறு.

வந்தே மாதரம் எப்படி நாட்டு வாழ்த்துப் பாடலாகும்.?

பார்ப்பன ஆதிக்கம் அர்ஜுன்ஸிங்கையும் அடக்குகின்றது.

said...

அசுரன்,

தங்களின் பதிவுகள் வியக்க வைக்கின்றன. ஒரு நாட்டின் பல கோடி மக்களையும் இப்படி ஏமாற்ற முடியுமா.

இதை வலையுலகில் பதிந்த்தற்கு நன்றி.

இது மக்களிடம் ஏதாதவது வகையில் எடுத்து செல்லப்பட்டதா என அறிய ஆசை.

//கேக்கும் போது பத்திக்கிட்டு வருது.. Raskals இப்படியெல்லாம் ஏமாத்திருக்கானுக.. இத்தன நாளா தெரிஞ்சுக்காம இருந்துருக்கேன். தெரியப்படுத்திய அசுரனுக்கு ஒரு நன்றி..
//

இப்படி ஏமாற்றியதற்கு ஏதாவது தத்துவ விளக்கங்கள் கண்டிப்பாக வரும். விழிப்புடன் இருக்க வேண்டும்.

said...

//எச்சில் பொறுக்கி அல்லக்கைகளும் நம்மைப் பார்த்து 'வந்தே ஏமாத்துறோம்' எனச்சொல்வது கேட்கிறது.//
எனக்கும் அப்படித்தான் கேட்கிறது. சிங்கை இஸ்மாயில்

said...

பின்னூட்ட கயமைத்தனம் ஒன்னு....

said...

பின்னூட்ட கயமைத்தனம் ரெண்டு.....

said...

பின்னூட்ட கயமைத்தனம் மூனூ.......மீண்டும் வருவேன்.

said...

அடி-அதிரடி,

//"ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா" என்ற இக்பாலின் பாடல்தான் உண்மையான நாட்டு வாழ்த்துப் பாடல். ஆயின் இக்பால் முஸ்லிம் என்பதால் காங்கிரசுப் பார்ப்பனர்கள் அதை நாட்டு வாழ்த்துப் பாடலாக ஒப்புக் கொள்ளாமல் அடிமைப் படுத்திய ஆங்கிலேயனை வரவேற்ற பாடலை நாட்டுப் பாடலாக்கினர் என்பது வரலாறு.
//

Yes.....

You are correct....



//வந்தே மாதரம் எப்படி நாட்டு வாழ்த்துப் பாடலாகும்.?//

Again.... You are correct....


//'வந்தே மாதரம்' பார்ப்பனர்களின் இந்துக் கடவுள் வாழ்த்து என்றால் 'ஜனகனமன' ஆங்கில மன்னனை வாழ்த்தி வரவேற்று தாகூர் எழுதிய பாடலாகும்.
//

Once again you are correct....


Thanks and Regards,
Asuran

***********
Vasanth,

//இப்படி ஏமாற்றியதற்கு ஏதாவது தத்துவ விளக்கங்கள் கண்டிப்பாக வரும். விழிப்புடன் இருக்க வேண்டும். //

There are already some blog pseudo Patriots justyfying this fake patriotism song.

Thanks and Regards,
Asuran.

**********

சிங்கை இஸ்மாயில்,

Thanks for your interest shown..

Thanks for participating in 'பின்னூட்ட கயமைத்தனம் ' :-))

Thanks and Regards,
Asuran

said...

அருமையான பதிவு.
பார்ப்பனர்கள் பிடித்து தொங்குகிற 'வந்தே ஏமாத்துற'தின் முகத்தை தோலுரித்து காட்டியுள்ளீர்கள். அங்கே மணிகண்டனுடைய பதிவிலே இசுலாமியர்களையும் அதை பாடவைக்க பார்ப்பனர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

'பாடமல் இருக்கறதுக்கு மதத்தை காரணம் காட்டுறதா?'ன்னு கேக்கான்.
அப்ப 'பூணூலை புடிச்சிக்கிட்டிருக்கியே அதுக்கு என்னாத்த காரணம் காட்டுறே?'ன்னு கேட்டுட்டு வந்தேன்.
-TJS

said...

//அருமையான பதிவு.
பார்ப்பனர்கள் பிடித்து தொங்குகிற 'வந்தே ஏமாத்துற'தின் முகத்தை தோலுரித்து காட்டியுள்ளீர்கள். அங்கே மணிகண்டனுடைய பதிவிலே இசுலாமியர்களையும் அதை பாடவைக்க பார்ப்பனர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

'பாடமல் இருக்கறதுக்கு மதத்தை காரணம் காட்டுறதா?'ன்னு கேக்கான்.
அப்ப 'பூணூலை புடிச்சிக்கிட்டிருக்கியே அதுக்கு என்னாத்த காரணம் காட்டுறே?'ன்னு கேட்டுட்டு வந்தேன்.
-TJS //

TJS தங்களுடைய வாதங்களை அந்த பதிவில் பார்த்தேன் வாழ்த்துக்கள்!

அதற்க்கெல்லாம் நேர்மையாக பதில் சொல்லும் தைரியமற்றவர்கள் அவர்கள்.....

அந்தப் பாடலே இந்தியாவுக்கு ஒரு அவமானம். இதில் முத மூனு வரியப் பாடு, ரண்டு வரியப் பாடுன்னு முயுஸ் சமரசம் பேச வந்தாரு....

அப்படியென்னய்யா அந்த பாட்டுல நாட்டுப்பற்றுக்கான அம்சம் உள்ளதுன்னு கேட்ட, பதில் சொல்ல முடியாதுன்னு ஜகா வாங்குறாப்புல நம்ம வஜ்ரா.....

ஜன கன மனவும் ஒரு வௌங்காத அடிமைத்தனப் பாடல்தான். உண்மையில் நல்ல பாடல்னு சொன்னா இப்பொதைக்கு 'ஸாரே ஜாகன் சே அச்சா...'

ஒரு வேளை எதிர்காலத்துல மக்கள் தங்களோட உரிமைகளை மீட்கும் போராட்டத்தின் ஊடாக சாலச் சிறந்த பாடல்கள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்புள்ளது....

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கு நன்றி TJS,
அசுரன்


**************

வசந்த்,

//இது மக்களிடம் ஏதாதவது வகையில் எடுத்து செல்லப்பட்டதா என அறிய ஆசை.//


இது பற்றி ம.க.இ.க இட்ட ஒரு அருமையான புத்தகத்திலிருந்துதான்(கண்ணை மறைக்கும் காவிப் புழுதி) கற்பக விநாயகம் சில பகுதிகளை எடுத்தாண்டுள்ளார்.

புத்தகம் கிடைக்கும் இடம் கீழைக்காற்று வெளியீட்டகம் அல்லது புதிய கலாச்சாரம் அலுவலுகம், சென்னை.

இது புதிய கலச்சாரம் பத்திரிக்கையில் வந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்பு..

தங்களது ஆர்வத்துக்கு நன்றி,
அசுரன்

said...

அசுரன்,

மத அடிப்படை வாதிகளல், சர்ச்சைக்கு பயனபடுத்தபடும் ஓரு பாடலின் மூலத்தையும், சர்ச்சையின் பின்னிருக்கும் அரசியலையும் அறிய தந்த கற்பக விநாயகம் அவர்களுக்கும், அதை பதிப்பித்த உங்களுக்கும் நன்றி.

மற்றபடி கற்பக விநாயகம் அவர்களுக்கு என் கேள்வி.

பதிவின் கருத்தில் இருக்கும் நியாயத்தை முழுக்க முழுக்க மறைக்கும்படி வெறும் வசவாக மாற்றி எழுவதன் நோக்கம் என்ன?

ஒரு தவறான நிகழ்வையும், அதன் சூத்திரதாரிகளை சுட்டினால் பொதாதா?

சூத்திரதாரி எப்படி பட்டவன், அவனை எங்கே வைப்பது என்பதை வாசிப்பவனால் கணிக்க இயலாது என நம்புகிறீர்களா?

உதாரணமாக இப்பதிவை வாசிக்கும் சமத்துவபுர ஜென்டில்மேன் ஒருவர், இது ஒரு ஆபாசமான பதிவு என்ற முடிவுடன் உலவியை மூடிவிடும் வாய்ப்புள்ளதை அறிவீரா?

மிகுந்த உழைப்பை கொண்டு சேகரிக்கப்படும் தகவலின் அடிப்படையில் நீங்கள் எழுதுவதை (இதுவரை நான் வாசித்த, அசுரனால் பதிப்பிக்கப்பட்ட இரண்டு பதிவுகளில் நான் கண்டது), வலுவிழக்க செய்யும் எழுத்து நடை குறித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.

நன்றி.
வணக்கத்துடன்...

பி.கு: பிளாக்கர் உள் நுழைய முடியவில்லை, சொதப்புகிறது. அனாமதேயமாக வந்தமைக்கு வருதுகிறேன்.

said...

வணக்கத்துடன்,

தங்களது அக்கறையான விமர்சனத்திற்க்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கற்பக விநாயகத்தின் பார்வைக்கு இதை உடனடியாக கொண்டு செல்கிறேன்.


விரைவில் இது குறித்த எனது கருத்துக்களை வைக்கிறேன்.

மீண்டும் தங்களது அக்கறையான விமர்சனத்திற்க்கு நன்றி தெரிவிக்கிறேன்.

தங்களது மெயில் ஐடி இருந்தால் தெரியப்படுத்தவும்.

மேலும் இது குறித்தும், மற்றைய விசயங்கள் குறித்தும் தங்களது விமர்சனங்களை எனக்கு தெரியப்படுத்தி எனது பணியை செழுமைப்படுத்த உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எனது ஐடி: asurann@indiatimes.com
CC to: asuran@inbox.com

கற்பக வி நாயகத்தின் ஐடி கட்டுரையின் கீழே பார்க்கலாம்

நன்றி,
அசுரன்.

said...

அசுரா

வந்தே ஏமாத்தறோம் பாட்டப் பாடச் சொல்லி ஏமத்திக்கிட்டு இருக்குற போலி தேசபக்தி கூட்டம் இன்னொரு பக்கம் என்ன செய்யுது தெரியுமா

தீவிரவாதிகளோட கொஞ்சிக் குலாவி பெட்டி வாங்கிட்டு அவனுங்கள விடச் சொல்லி மிரட்டுனது சாட்சாத் நம்ம வாஜ்பேயும் ஆட்வானியும் தானாம். வக்கிர மூசுகள் இப்போ என்ன சொல்லி சப்பைக்கட்டும்?

said...

அனானிமஸ் நண்பரே,

எமது நடையை சீர்படுத்திட உங்களுடைய ஆக்கபூர்வமான ஆலோசனை உதவும் என்று நம்புகிறேன்.

கற்பகவிநாயகம்

said...

பல பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

said...

//தீவிரவாதிகளோட கொஞ்சிக் குலாவி பெட்டி வாங்கிட்டு அவனுங்கள விடச் சொல்லி மிரட்டுனது சாட்சாத் நம்ம வாஜ்பேயும் ஆட்வானியும் தானாம். வக்கிர மூசுகள் இப்போ என்ன சொல்லி சப்பைக்கட்டும்? //

தி ராஸ்கோலு,

இந்த நாதாரி போலி தேசபக்தி.... மாமா பன்னிகளோட டபுள் ஸ்டாண்டு... அப்புறம் இந்தியவ தாய்ன்னு சொல்லிக் கிட்டே கூட்டிக் கொடுக்கிறது... இதெல்லாம் திரும்பத் திரும்ப அம்பலப்படுத்தனும்....

திண்ணையிலெ திரும்பவும் அவிங்க ஆட்டத்த பாத்திகளா?....

திண்ணையில அவசியமேற்ப்பட்டாலொழிய எழுதுவதில்லைன்னு முடிவு செஞ்சிருக்கேன்....

ஏன்னா இந்துத்துவ பன்னிகளோட விச எழுத்துக்கள அப்படியே போடறவிங்க... நம்ம எழுத்துக்கள கட் பன்னி தலைப்புகள மாத்தி கடிதம் பகுதில போடறது அப்படிங்கற மாதிரி வேலைகள செய்றாங்க...

சில நேரங்கள்ள பிரசூரம் பன்னாததுக்கான காரணத்த கேட்டா கட்டுரைல நிறைய குறை இருக்கும் பாங்க... சரி சொல்லுங்க அடுத்தமுறை திருத்திக்குறோம்னா கட்டுரையை பிரசூரம் பன்னுவாங்க....

இந்துத்துவம், பார்ப்பினியம் இவற்றின் பண்பாட்டு மூல வேர்களை சாதரண வாசகனும் படிக்கும் வண்ணம் எளிமையாக எழுதப்பட்ட, எதையும் நிராகரித்து வாசகனின் பார்வைக்கு போவதை எவ்வளவு சிதைக்க முடியுமோ அவ்வளவு செய்வார்கள்....

சிதைப்பிலிருந்து நமது கட்டுரைகள் தப்பிப்பதற்க்கான அளவுகோல் என்பது திண்ணை ஒரு ஜன நாயக தளம் என்கிற பெயர் வாங்கி இந்துத்துவம் பரப்ப வேண்டிய தந்திரத்தின் தேவை மட்டுமே..

இவர்களை அம்பலப்படுத்த வேண்டும்... மாற்று ஊடகங்களை பலப்படுத்த வேண்டும்....

அதற்க்கு உங்களைப் போல என்னைப் போல ஜன நாயக சக்திகள் இணைந்து செயல்பட வேண்டும்

இது குறித்து ஒரு சிறு பதிவு போட்டால் என்ன என்று தோன்றுகிறது,,,,,

ஏற்கனவே விடாது கறுப்பு போட்டிருந்தார்..

நன்றி,
அசுரன்.

said...

சுவனப்பிரியனின் வருகைக்கு நன்றி,

மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்து சொல்லுங்கள்

அசுரன்

said...

http://www.keetru.com/puthiyakaatru/sep06/editorial.php

http://www.keetru.com/periyarmuzhakkam/aug06/vande_mataram.php

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1281%3A2008-05-08-20-29-19&catid=35%3A2006&Itemid=1

Related Posts with Thumbnails