TerrorisminFocus

Wednesday, August 30, 2006

பசுக் கலாச்சாரமும், பன்னிக் கலாச்சாரமும்

இந்தக் பதிவின் பின்னூட்டத்தில் பெரியார் சிலையை அசிங்கப்படுத்தியதை ஏதோ மிகப் பெரிய சாதனை போல பேசும் சில அற்ப பன்னிகள் பற்றிய எனது கருத்தை பதிய வைத்துள்ளேன்(இதுக்கெல்லாம் தனி பதிவு அவசியமில்லை). விருப்பமுள்ளவர்கள் பாடித்து ரசிக்கலாம்.
************
பசுவுக்காக தலித்துகளின் தோலுரிச்சவங்களையும், அதற்க்கு ஆதரவாக சாஸ்திரம் நம்பிக்கை என்று விளக்கு பிடித்தவர்களையும் (அனைவரும் அர்ச்சகராகலாம், தமிழ் வழிபாடு போன்றவை நம்பிக்கை, பாரம்பரியத்துக்கு எதிர் என்பது போல திண்ணைகளில் உட்கார்ந்து பிடில் வாசிக்கிறார்களே சிலர் அது போல) சில பன்னிகளை டீசன்டாக மாடு என்கிறார் விவேகானந்தர்.
********************


பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், “மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால் இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்” என்றார் விவேகானந்தர்.

இதைக் கேட்ட பசு பாதுகாப்பு பிராச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார். பிறகு சமாளித்துக் கொண்டு “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே” என்றார். சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி “ஆமாம். பசு நம் தாய்தான். எனக்குப் புரிகிறது. வேறு யாருதான் நம்மைப் போன்ற இவ்வளவு புத்திசாலிகளான பிள்ளைகளைப் பெற முடியும்” என்றார்.

(ஆதாரம்: ‘எனது சிந்தனைகள் - விவேகானந்தர்')
*********
நன்றி: கீற்று

26 பின்னூட்டங்கள்:

said...

very true.Is that not applicable to the extravagant conferences
and lavish lifestyles of followers
of Periyar.

said...

Yes applicable to any one who goes aginst the wellfare of people....

"பசுக் கலாச்சாரமும், பன்னிக் கலாச்சாரமும்"

said...

சில ஆண்டுகளுக்கு முன் ஹரியானா மாநிலத்தில் இந்து மேல் சாதி வெறியன்கள், செத்த பசுமாட்டை உரித்துக்கொண்டிருந்த தலித் மக்கள் நால்வரைக் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியாவெங்கும் அதிர்ச்சி அலையைக் கிளப்பியபோது, தோழர் நல்லக்கண்ணு, விவேகானந்தர் குறித்த இந்தச் செய்தியை ஒரு பேட்டியில் கூட தெரிவித்திருந்தார்.

பசுக்களின் காவலர்களான-மாட்டுக்குப் பொறந்த இந்து மதவெறியன்கள் ஆழமாய் வேரூன்றி இருக்கும் கோயம்புத்தூர் வட்டாரத்தில், 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, காளாப்பட்டி என்ற ஊரில், தங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதுமில்லை என்று அருந்ததியர்கள் (அதாவது சக்கிலியர்) தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் மீது இந்து மேல்சாதி வெறியன்களான கவுண்டர்கள் மிகக்கொடூரமான தாக்குதலில் இறங்கினர். பல அருந்ததியின மக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலை அந்தத் தேர்தலில் மண்ணைக்கவ்விய பாரதீய ஜனதா கட்சி பின்னின்று இயக்கியது.

அக்கொடூரத் தாக்குதலின்போது அருந்ததியின மக்கள் வளர்த்து வந்த பல பசுமாடுகள் பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தப்பட்டன. கோழிகளும் ஆடுகளும் இதில் அடக்கம்.

இந்து மேல் சாதி வெறியர்கள் பசுமாட்டைக் கொளுத்தியதை எந்த இந்துப் புடுங்கியும் ஏனென்று கேட்கவில்லை.

இவர்கள் பேசும் பசு நேச வாதமே பிராடு என்பதை அப்போது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி எனும் அமைப்பினர் கோவைப் பகுதியில் அம்பலப்படுத்தி போஸ்டர் ஒட்டியதை இப்போது நினைவு கூர்கிறேன்.

மருதுபாண்டியன்

said...

பாப்பன குஞ்சுகள் தைரியமா ரோட்டில இறங்கி மற்ற மா நிலங்களில் கூத்தாடுவது போல இங்கு தமிழ் நாட்டில் கூத்தாட முடியவில்லையென்னு அரிப்பெடுத்துப் போய் ரொம்ப நாளா அலைஞ்சாங்க....

இப்போ அவிங்க அரிப்ப சொறிஞ்சு விடுறதுக்கு ஏதோ ஒரு பன்னி பெரியார் சிலையை அசிங்கம் செஞ்சிருக்கு..

இதுலயும் அம்பலப்படுறது அந்த மக்கள் விரோத பன்னிக் கோஸ்டிதான்...

எப்படின்னா...

பெரியார் மக்கள்ட்ட பொதுகூட்டம் நடத்தி வெளிப்படையா செருப்பு மாலை போட்டாரு... மக்களுக்கு அதுல ஒப்புதல் இருந்தனாலதான் அவரு இன்னிக்கும் தமிழகத்தின் தவிர்க்க இயலா சக்தி....

ஆனா பெரியார் சிலையை அசிங்கம் செஞ்சி அரிப்ப சொறிஞ்சுக்கிட்ட அந்த பன்னிகளும், அதை மிகப் பெரிய சாதனை போலவும் அதனால் பெரியாருக்கு அவமானம் என்பது போலவும் சிலாகிக்கும் 'வக்கிர' 'மோச'மான வலைப்பூ பன்னிக் குழுமமும் உண்மையில் அசிங்கப்பட்டிருப்பது தாங்கள்தான் என்பதை உணரும் அளவுகூட மூளையற்ற ஒரு கூட்டமாக உள்ளது...

அவர்களுக்கு ஒரு பந்தயம்... தைரியமிருந்தால்... வெளிப்படையாக அறிவித்து பெரியாரின் சிலையை அசிங்கப்படுத்தி விட்டு தமிழ் நாட்டில் நடமாட ஒரு பெற்றோருக்கு பிறந்த எவனும் வரலாம்....

அப்படி ஏதேனும் ஒரு பெற்றோருக்கு பிறந்த ஒருவனை அந்த பன்னிக் கூட்டம் கண்டுபிடித்து விட்டு பிறகு கூப்பாடு போட்டல் அதில் ஒரு அர்த்தம் உள்ளது.

அந்த மாதிரி நேர்மையா செயல் படுவதெல்லாம் கனவில் கூட அவர்களுக்கு சாத்தியமில்லை.... அப்புறமில்ல ஒரு பெற்றோருக்கு பிறந்தவன கண்டுபிடிக்கிறது.

நன்றி,
அசுரன்.

said...

Anbu Asura,
Thani ina thaakudhalai niruthadha varai ungalukkudhan nashtam,
please try to inculcate decency in your writings.
am 100% with you those who are aganist any humans.
it should be vehemently opposed.
but stop promoting hatred in Thamiz manam, your contribution is more in this.
try to write positive articles,
spread good feelings, good thoughts,refined thinking,
yadhum oore , yavarum kelir
Vidadhu anbudan.
Mayilsamy

said...

Asuran,

There are many SOBs in the DK/DMK/PMK which are nothing but terrorist organizations. But you probably are the meanest SOB going.

said...

மயில்சாமி தங்களது அன்புக்கு நன்றி,

தங்களது விமர்சனங்களை பொறுத்தவரை, தமிழ்மணத்தில் அன்பை பரப்ப நான் எழுதவில்லை.

டிசன்டாக எழுதி ஒருவரையொருவர் சொறிந்து கொள்ளுவதற்க்காக எழுதவில்லை.

நாட்டின் ஆகப் பெரும்பானமையான மக்கள் மிகக் கேவலாமானதொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதைப் பற்றிய சொரனையின்றி, தனது சொந்த வாழ்க்கையே உத்தரவாதமின்றி இருப்பதைப் பற்றிய சொரனையின்றி ஒரு சமூகம், ஒரு கூட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறதே, அதை கொஞ்சம் விழிப்படைய செய்யவும், அந்தக் கூட்டத்தின் நடுவே அலையும் சில பிற்போக்கு மக்கள் விரோத தத்துவங்களை விரட்டி விடவும்தான் எழுதுகிறேன்.

அதனால் சிறிது ஆக்ரோசமான அனுகுமுறை தவிர்க்க முடியாதது.

இது குறித்து மேலும் தங்களது விமர்சனங்களை வைத்தால் விளக்க கடமைப்பட்டுள்ளேன். தவறெனில் திருத்திக் கொள்ள தயக்கமில்லை.

நன்றி,
அசுரன்.

said...

//There are many SOBs in the DK/DMK/PMK which are nothing but terrorist organizations. But you probably are the meanest SOB going. //

SOB என்றால் என்னவென்று தெரியவில்லை. ஆனால் திட்டுகிறேர்கள்(மகா மோசமான வார்த்தையாகக் கூட இருக்கலாம்) என்று தெரிகிறது.

ஒரே ஒரு விளக்கம் நான் DK/DMK/PMK போன்ற மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் பிச்சைக்கார, போரோக்கர் கட்சிகளுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

நன்றி,
அசுரன்.

said...

பசுத்தோல் போர்த்திய குள்ள நரிகளாம் பார்ப்பனர்களுக்கு உங்கள் விளக்கம் புரியவா போகிறது?

said...

ܲó¡, àƒèœ «è£ðˆF¡ H¡Âœ÷ eè Ý«õꈬ «è£ðˆ¬î»‹ ¹K‰¶ªè£œ÷ º®Aø¶. Ýù£™ " å¼ ÜŠð‚°Š Hø‰îõù£J¼‰î£.." â¡ð¶ ñ£FKò£ù ªê£™ô£ì™èœ ªõÁñ«ù ï£èKè‹ ê‹ð‰îŠð†ì¶ ñ†´ñ™ô, ܶ å¼ Ý‡ ñŒò ªê£™ô£ì½‹ Ãì. «ñ½‹ Þ‰î '«õC ñè¡' â¡ø Þù ÞN¬õ åN‚èˆî£«ù ªðKò£˜ õ£›ï£œ º¿¶‹ ð£´ð†ì£˜. âù«õ Þˆî¬èò ªê£™ô£ì™èO™ èõùñ£è Þ¼ƒèœ.

said...

காமராஜ் நாடாரைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

said...

//அசுர஡, உஃகஜ கோபஈF஡ H஡னுஜள தா஘eக ஆவேசஈதையு஋ கோபஈதையு஋ புKஉதுகொஜள முடிAறது. ஆனாங " ஒரு அஊபனுஂகுஊ HறஉதவனாJருஉதா.." எ஡பது மாFKயான சொஙலாடஙகஜ வெறுமனே நாகKக஋ ச஋பஉதஊபஆடது மஆடுமஙல, அது ஒரு ஆஇ ம஌ய சொஙலாடலு஋ கூட. மேலு஋ இஉத 'வேC மக஡' எ஡ற இன இNவை ஒNஂகஈதானே பெKயா஘ வா஛நாஜ முழுது஋ பாடுபஆடா஘. எனவே இஈதகைய சொஙலாடஙகOங கவனமாக இருஃகஜ. //

மிதக்கும் வெளி,

தங்களது எழுத்துருவை யுனிக்கோடுக்கு மாற்றாமல் அப்படியே போட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒன்றுமே புரியவில்லை.

ஏதோ ஒரு தவறை சுட்டிக் காட்டுகிறேர்கள் என்று மட்டும் தெரிகிறது.

என்ன தவறு என்று தெரியாமல் தவிக்கிறேன்.

தயவு செய்து மீண்டும் வந்து தங்களது பின்னூட்டத்தை இடுங்களேன்

நன்றி,
அசுரன்

said...

நண்பரே விடாது கறுப்பு,

வெகு நாட்கள் கழித்து வருகிறேர்கள்.

தங்களது சில பதிவுகளை பார்த்தேன். தற்பொழுது அதிக நேரம் இணையத்தில் செலவழிக்க முடிவதில்லை. எனவே கருத்துக்களை பதிய வைக்க முடியவில்லை.


வருகைக்கு நன்றி,

அசுரன்.

said...

அசுரரே,

விவேகானந்தரின் கூற்றை வெளியிட்டதற்கு நன்றிகள். என் ஸந்தோஷங்கள். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அவருடைய மற்ற கருத்துக்களையும் படிக்க வேண்டுமாய் கோருகிறேன்.

தாங்கள் மேலே சொன்னது மட்டுமல்ல, சில பார்ப்பனர்களின் பிற்போக்கு வாதங்களையும் அவர் கண்டித்துள்ளார் (பிணங்கள் என்றெல்லாம்).

அவருடைய உடன்பிறந்த சகோதரர் இந்தியாவில் கம்யூனிஸ சித்தாந்தங்களை நிறுவியதில் மிகப்பெரிய தலைவர் அவர். ஹிந்துத்துவவாதிகளுக்கு விவேகானந்தர் எவ்வளவு பெரியவரோ, அதுபோல வங்காள தேசத்திலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு விவேகானந்தரின் தம்பி.

விவேகானந்தரின் இல்லத்திற்கு இந்த இருவரின் வழிவந்தவர்களும் வருவதுண்டு.

விவேகானந்தரின் தம்பி அவருடைய ஒரு புத்தகத்தில் விவேகானந்தர் ஒரு கம்யூனிஸ்ட் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அது பற்றியும் தாங்கள் எழுதலாமே.

said...

மிதக்கும் வெளியின் பின்னூட்டம் யூனிகோடில்:
அசுரன், உங்கள் கோபத்தின் பின்னுள்ள தார்மீக ஆவேசத்தையும் கோபத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் " ஒரு அப்பனுக்குப் பிறந்தவனாயிருந்தா.." என்பது மாதிரியான சொல்லாடல்கள் வெறுமனே நாகரிகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது ஒரு ஆண் மைய சொல்லாடலும் கூட. மேலும் இந்த 'வேசி மகன்' என்ற இன இழிவை ஒழிக்கத்தானே பெரியார் வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். எனவே இத்தகைய சொல்லாடல்களில் கவனமாக இருங்கள்.

ஈ.வே.ராமசாமி நாயக்கர்

said...

மிதக்கும் வெளி -ன் பின்னூட்டத்தின் யுனிகோட் மாற்றம்.

நன்றி பொங்குதமிழ்
http://www.suratha.com/reader.htm
----------------------
அசுரன், உங்கள் கோபத்தின் பின்னுள்ள தார்மீக ஆவேசத்தையும் கோபத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் " ஒரு அப்பனுக்குப் பிறந்தவனாயிருந்தா.." என்பது மாதிரியான சொல்லாடல்கள் வெறுமனே நாகரிகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அது ஒரு ஆண் மய்ய சொல்லாடலும் கூட. மேலும் இந்த 'வேசி மகன்' என்ற இன இழிவை ஒழிக்கத்தானே பெரியார் வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். எனவே இத்தகைய சொல்லாடல்களில் கவனமாக இருங்கள்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

இது குறித்த மிதக்கும் வெளியின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறேன்.

ஏற்கனவே லிவிங் ஸ்மைல் சுட்டிக்காட்டியதால் 'வேசி' போன்ற ஆணாதிக்க சொற்களை உபயோகப்படுத்துவதில்லை என்று முடிவு செய்தேன்.

தற்பொழுது பாலுறுவு சார்ந்த உறவுகள் பற்றிய சொற்களை வெகு கவனமுடன் பயன்படுத்துவது என்று உறுதியேற்கிறேன்.

சுட்டிக்காட்டிய 'மிதக்கும் வெளி' க்கும். அதை யுனிக்கோடில் மாற்றீத்தந்த நண்பர் 'கல்வெட்டு' மற்றும் 'அனானி'க்கும் எனது நன்றிகள்.

அசுரன்.

said...

ம்யுஸ்,


விவேகானந்தரின் தம்பி பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது.

இருந்தாலும் எனக்கு தெரிந்த அளவில் விசாரித்து அவரை எழுத முயற்சி செய்கிறேன்.

தகவலுக்கு மிக்க நன்றி.


//விவேகானந்தர் ஒரு கம்யூனிஸ்ட் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.
//

இந்தக் கருத்தைப் பொறுத்தவரை.

அந்த காலகட்டத்தின் புரட்சிகர நிலைமைகளுக்கு சிந்திக்க தெரிந்த எவருமே பாதிக்கப்பட்டார்வர்க்ள்தான். இதில் விவேகானதரும் பாதிக்கப்பட்டு சில முற்போக்கு புரிதலுடன் கருத்துக்களை வைத்தார் அவ்வளவுதான். மற்றபடி இந்துத்துவத்தின் மூல வேரை அவர் கேள்விக் குள்ளாக்கினாரா என்றால் கேள்விக் குறிதான் (நான் அதிகம் அவரை படித்ததில்லை. விவேகானந்தரைப் பற்றிய எனது நண்பர்களின் புரிதலில் நம்பிக்கை வைத்து இதை சொல்கிறேன்).

இந்த மேற்கோளைப் போட்டதே ஒரு அரசியல் தந்திரம்தான். இந்துத்துவவாதிகளின் கையில் தான் தற்பொழுது விவேகானந்தர் உள்ளார். எனவே அவர் மூலமாகவே இந்துத்துவவாதிகளை அம்பலப்படுத்த உதவுகிறதே என்று இந்தப் பதிவை இட்டேன்.

மூயுஸ், எனது மற்ற பொருளாதார பதிவுகளையும் படித்து கருத்துச் சொல்லுங்களேன்.

முக்கியமாக எனது ஆங்கில பதிவில் உலகமயம், IT துறை குறித்து சில பதிவுகள் போட்டுள்ளேன்.. kaipulla.blogspot.com

பத்ரியின் கிராம பொருளாதாரம் குறித்த எனது பதிவு.



நன்றி,
அசுரன்.

said...

மாசிலா,

தங்களது வருகைக்கு நன்றி.

//. இப்போ இது இண்டர்னெட் காலமாயிடுச்சுங்கல. முன்ன மாதிரி சாதி சனங்களை எதஎதையோ சொல்லி நம்ப வச்சி இனிமேயும் ரொம்ப காலத்து புருடா உட்டுகினு, ஏமாத்தி சொரண்டினு இருக்க முடியாது சார்//

இந்தியாவில் இன்டெர்நெட்டின் வீச்சு என்பது கேள்விக் குறியான் ஒரு விசயம்தான். வெகு ஜன் கருத்துக்களை ஆளுமைப்படுத்தும் அளவுக்கு இது ஒரு சக்திவாய்ந்த ஊடகம் அல்ல என்பதை முதலில் நினைவில் கொள்க.

//இப்பல்லாம் இந்த ( 'இ'னா, 'மு'னா , 'கி'னா )மதவாத பசங்க அத்தினி பேருக்கு டின்னு கட்டிக்குச்சு சார். நம்ப சனங்க எல்லாரும் கொஞ்ச கொஞ்சமா முழிச்சிகினு வராங்க சார்.//


இந்துத்துவ மற்றும் பிற மத வெறி பற்றி மிகவும் குறைவாக மதிப்பிடுகிறேர்கள். குறிப்பாக இந்துத்துவத்தை எடுத்துக் கொள்வோம். இது தனது உயிரை பார்ப்பனமயமாக்கம் என்ற செயலில் கொண்டுள்ளது. இதற்க்கான உரம், மண்? - ஏற்கனவே பார்ப்பன கலாச்சாரம் குறித்து சமூகத்தில் நிலவும் ஒரு உயர்வான மனப்பான்மை. இதனால்தான் நடுத்தர வர்க்க தலித்த்து வீட்டு தாயும் வெகு சுலபமாக சாஸ்திர சம்பிரதாயத்துடம் தனது வீட்டில் பூசை செய்யும் வழக்க்த்தை கற்றுக் கொண்டு தனது வளமையை அனுபவிக்கிறார். இது அவரது தவறு அல்ல. மாறாக சமூகத்தில் ஏற்கனவே கட்டியமைக்கப்பட்ட கருத்துக்களுக்கு அந்த பெண் - (தனது முந்தைய தலைமுறைவரை ஒரு அவமானகரமான வாழ்க்கை வாழ்ந்த அந்த உழைக்கும் பரம்பரை) பலியாகிறார்.

இதை துலக்கமாக சமீபத்திய அதிகரித்து வரும் விநாயகர் ஊர்வலங்கள், காவி கொடி கட்டிய கோயில்கள், சம்ஸ்கிருதத்தில் பார்ப்பன முறைப்படி பூசை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்படும் நாட்டார் தெய்வங்கள் சாட்சி.

இந்த இடத்தில் இன்டெர்நெட் குறித்து மேற்சொன்ன விசயத்தை நினைவில் கொள்க.

இதே அளவு இல்லாவிட்டாலும், குறிப்பிடத்தகுந்த அளவு மற்ற மத அடிப்படைவாத மூடத்தனங்களும் வளர்ந்து வருகின்றன.

ஆக இப்படி ஒரு அபாயகரமான ஒரு சக்தியாக் மத வெறி பாசிசம் வளர்ந்து வருகிறது.


நீங்கள் வேறும் தேர்தல் தோல்வையை வைத்து இந்த மேற்சொன்ன பயங்கர ஆபத்துக்களை மதிப்பிட்டால். முதல் தவறு செய்கிறேர்கள்.




எந்த சமூக சூழ்நிலை புரட்சிகர சக்திகள் வளர காரணமாகிறாதோ அதே சூழ்நிலை பிற்போக்கு ஜனநாயக மறுப்பு பாசிச சக்திகள் வளரவும் காரணமாகிறது.

இன்றைய காலகட்டம் அப்படி. சட்டமன்ற பாணி அரசியல் நிரந்தரதன்மை என்பது மாயை என்பதை நினைவில் கொள்க.

பெரியாரின் பணி என்பது இங்கு(தமிழ் நாட்டில்) முற்போக்கு சக்திகள் வலுவாக இருக்கும் ஒரு சூழ் நிலையைத்தான் உறுதிப்படுத்தியுள்ளதே தவிர. பிற்போக்கு சக்திகளின் அழிவை அல்ல.

பெரியாரின் பாதையில் சென்று அதை செய்ய வேண்டியது நமது கடமை.


//நமக்குதான் அந்த வெள்ள தாடிகார கெழவரு லைட்டு போட்டு, காது கிழிய கத்தி "சனியன்களா இது வரைக்கும் தூங்கனது போதும், எழுந்திரிச்சி உங்கள சுத்தி இன்னா நடக்குதுன்னு கொஞ்சம் பாருங்க"னு சொல்லி வச்சிட்டு போயிட்டாருல, அப்புரம் என்ன, நம்ப பங்குக்கு இவனுங்க டங்கு வார கிழிகிழின்னு கிழிச்சிடுவோம் சார். அவ்லோதான் சார். இதுக்கு போய் கவலப்பட்டுக்னு கெடக்கிறீங்கள//

இதை,-(குறிப்பாக உற்பத்தி உறவிலும் வன்முறை செலுத்தும் பார்ப்பனியம்), எதிர்த்து எல்லா தளங்களிலும் போராட வேண்டியுள்ளது. இணையத்தில், அது ஒரு வெகு சன ஊடகமாக இல்லாவிட்டாலும், நடுத்தர வர்க்க அறிவு ஜீவிக்களின் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஒரு முக்கியமான கடமையாக உள்ளது.

அதனால் பெரியார் செய்து விட்டார் என்று நாம் சும்ம இருக்கக் கூடிய நிலைமையில் இன்று இல்லை.

பெரியாரின் பணி என்பது இங்கு(தமிழ் நாட்டில்) முற்போக்கு சக்திகள் வலுவாக இருக்கும் ஒரு சூழ் நிலையைத்தான் உறுதிப்படுத்தியுள்ளதே தவிர. பிற்போக்கு சக்திகளின் அழிவை அல்ல.

பெரியாரின் பாதையில் சென்று அதை செய்ய வேண்டியது நமது கடமை.
*******


ஒரு சின்ன கேள்வி:
//வாழ்க்கன்றது ஒரு சக்கரம் மாதிரி சார். ஒரு டைமுக்கு கீழ கிறவன் மேலக்க வருவான். பெறகு மேல கிறவன் கீழக்க வந்துதான் சார் ஆவனும். //

உழைக்கும் வர்க்கம் இது வரை கீழேயேதான் கிடக்கு(தற்போதைய முதலாளித்துவ சீனாவிலும் கூட). இது மட்டும் ஏன் எப்பொழுதுமே கீழேயே உள்ளது. சிறிது யோசியுங்கள் மாசிலா. இது குறித்து தங்களது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.

*****
அப்புறம்:
//பயங்கர கம்யூனிஸ்டு சைனாவுலேயே//

இது தவறான கருத்து கம்யுனிச சீனாவைப் பற்றி தங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். இந்த கருத்து தவறு என்ற அளவில் முடித்துக் கொண்டு. பின்னொரு(கம்யுனிச சீனா குறித்து ப்திவிடும் எண்ணம் உள்ளது) பதிவில் விவாதிக்கலாம்.

நன்றி,
அசுரன்.

said...

//அப்பதான் சார் நமக்கு விடுதல. எப்பவுமே சண்ட போட்டு போராடி வாங்குற விடுதலக்கிதான் சார் மவுசு அதிகம்!//

ஆம். விடுதலை என்பது பிச்சை அல்ல கேட்டு வாங்குவதற்க்கு. அது அடிமைத்தனத்தின் ஆசனத்தை அடித்து நொறுக்கும் போராட்டத்தின் இறுதி வெற்றி.

சும்மா.. கேட்டவுடனே நம்ம கஸ்டத்த உணர்ந்து ஆளும் வர்க்கம் விடுதலய கொடுத்துரும் என்பது ஐம்பது ஆண்டுகாலமாக இந்திய 'கேப்பை சட்டியில் வடியும் நெய்'. அதை இன்னும் பலர் நம்பிக் கொண்டிருப்பது வெகு காலம் நீடிக்காது.


நன்றி,
அசுரன்.

said...

//இந்து மேல் சாதி வெறியர்கள் பசுமாட்டைக் கொளுத்தியதை எந்த இந்துப் புடுங்கியும் ஏனென்று கேட்கவில்லை.

இவர்கள் பேசும் பசு நேச வாதமே பிராடு என்பதை அப்போது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி எனும் அமைப்பினர் கோவைப் பகுதியில் அம்பலப்படுத்தி போஸ்டர் ஒட்டியதை இப்போது நினைவு கூர்கிறேன்.
//

மருதுபாண்டியரே,

மிகச் சிறப்பாக பார்ப்பன பயங்கராவதீகளின் மக்கள் வீரோத தன்மையையும் மக்கள் பெயரால் அவர்கள் போடும் வேசத்தையும் அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்,
அசுரன்

said...

//இந்து மேல் சாதி வெறியர்கள் பசுமாட்டைக் கொளுத்தியதை எந்த இந்துப் புடுங்கியும் ஏனென்று கேட்கவில்லை.

இவர்கள் பேசும் பசு நேச வாதமே பிராடு என்பதை அப்போது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி எனும் அமைப்பினர் கோவைப் பகுதியில் அம்பலப்படுத்தி போஸ்டர் ஒட்டியதை இப்போது நினைவு கூர்கிறேன்.
//

மருதுபாண்டியரே,

மிகச் சிறப்பாக பார்ப்பன பயங்கராவதீகளின் மக்கள் வீரோத தன்மையையும் மக்கள் பெயரால் அவர்கள் போடும் வேசத்தையும் அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்,
அசுரன்

said...

//காமராஜ் நாடாரைப் பற்றி உங்கள் கருத்தென்ன? //

காமராசர் குறித்து இங்கு சம்பந்தமில்லாமல் கேட்ட அனானி அவர்களே, இது குறித்து ஏற்கனவே பதில் சொல்லியுள்ளேன்.

எந்த ஒரு வோட்டு கட்சிகளையும் எப்படி மதிப்பிடுகிறேனோ அதே போலத்தான காமராஜர் என்கிற வோட்டு கட்சி தலைவரையும் மதிப்பிடுகிறேன்.

அவர் குறித்து இந்த கிழ்க்கண்ட சுட்டியுளிலுள்ள(சாதி வெறியர் தேவர் குறித்த பதிவு) ஒரு பின்னூட்டத்தில் உள்ளது.

இது குறித்து அங்குதான் விவாதம் நடந்தது எனவே விவாதம் செய்ய விருப்பமென்றால் அந்த பதிவில் தொடருவோம்:

பின்வரும் சுட்டியில்,
//எமது நிலைப்பாட்டை// இந்த வார்த்தையை தேடுங்கள்.

http://www.blogger.com/comment.g?blogID=28837873&postID=115435141584756402

நன்றி,
அசுரன்

said...

//ரொம்ப நல்ல கேள்விதான் சார். கொஞ்சம் ஓசிச்சி பதில் சொல்லனும். டைம் குடுங்க ப்ளீஸ்! //

மாசிலா,

யோசிச்சி பதில் சொல்லுங்க.... பதில் சொல்லாம போயிராதீங்க :-))


//சிந்திய ரத்தத்தை நிலத்தில் ஊற்றி
வந்து பிறக்கும் தலைமுறை பல, பறைசாற்றி
முந்தைய சந்ததியின் வீரத்தைப்போற்றி
என்றும் வாழும் தன்மானம் காப்பாற்றி!

இப்போ உடனடியா நான் எழுதியதுங்க இந்த கவித.
//


நன்றாக இருக்கிறது. எனக்கு இந்த இலக்கணம் கவிதை இவை பற்றியெல்லாம் அந்த அளவுக்கு அறிவு கிடையாது. ஆனாலும் படிக்க இந்த கவித நன்றாக இருக்கிறது.

நன்றி,
அசுரன்.

said...

சுந்தர வடிவேலு(http://bhaarathi.net/sundara/?p=293
) என்பவர் பார்ப்பினியம் குறித்து இட்ட பதிவில் எனது இரு பின்னூட்டங்கள் வரவில்லை. அவர் தளத்தில் உள்ள SPAM FILTER என்னை ஒரு spam என்று குறிப்பிட்டு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. அவை ஏற்கனவே நான் அங்கு பின்னூட்டிய சில கேள்விகளுக்கான எதிர்வினைகளுக்கான எதிர்வினை ஆகவே அவற்றை இங்கு இந்த பதிவில் மறு பிரசூரம் செய்யலாம் என்று கருதுகிறேன்.

*****************
***************
Bad News India,

ஒரு இடத்தில் அணைந்து கொண்டிருக்கும் என்று கூறுகிறேர்கள், இன்னொரு இடத்தில் இவை தொடர்ந்து கொண்டிருப்பது குறித்து நான் சொல்லுவதை சரி என்றும் ஒத்துக் கொள்கிறீர்கள். உங்களது பிரச்சனை இன்னும் பிறப்பின் அடிப்படையில் நாங்கள் எதிர்ப்பதாக கருதுவதுதான்.

அடக்குமூறை என்பது நேரடியான வடிவில்(பொருளாதார மற்றும் கலாச்சார) ஆதிக்க சாதியினரான தேவர், கவுன்டர் போன்றோரிடமிருந்தே வருகிறது. ஆனால் இந்த விசயத்துக்கு தேவையான அதாவது ஆதிக்க சாதியினரின் அந்த நேரடியான அடக்குமூறையை நியாயப்படுத்தும் அந்த தார்மீக நியாயக் கருத்தை உருவாக்கும் தத்துவ மூலமாக பார்ப்பினியம் உட்கார்ந்து கொண்டிருப்பதை எப்படி எதிர்ப்பது. அதற்க்கு எடுத்துக்காட்டாகத்தான் சில விசயங்களைக் கொடுத்தேன்.

எப்படி ஏகாதிபத்திய காலனியாதிக்கம் நேரடியாக ஆட்சி செய்வது இனி வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து ஏகாதிபத்திய சுரண்டலை உறுதிப்படுத்தும் யார் வேண்டுமானாலும் பதவியில் உட்காரும் பரிணாம வளர்ச்சியடைந்ததோ அதே போல பார்ப்பினியம் என்னும் தத்துவமும், அதன் அடித்தளம்(கலாச்சார, பொருளாதார) பாதிக்காவண்ணம் அது கோடிட்ட வட்டத்திற்குள்ளேயே பவணி வரும் எந்த சாதிக்காரனும் அதிகாரத்துக்கு வரலாம் என்று பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. இதுதான் அம்பேத்காரின் அனுபவமும் கூட, இந்த சட்டமன்ற சலுகைகளால் பலன் பெற்ற யாரும் இதன் அடித்தள மக்களுக்கு எந்த உதவியும் செய்யமாட்டார்கள் என்று சில வரிகளில் தனது வாழ்க்கை அனுபவம் மொத்தத்ததையும் தொகுத்து கொடுத்தார். அதாவது கறுப்புப் பார்ப்பனர்கள்.

கர்நாடக சங்கீதத்தை எத்தனை பேர் ரசிக்கிறார்கள்? ஆயினும் அது ஏதோ சிறந்த கலைப் படைப்பாக இன்று மாறியுள்ளதே ஏன்?

நாட்டார் வழிபாட்டு தெய்வங்களையும் பார்ப்பனமயமாக்கி அது சார்ந்த கலாச்சாரங்கள் அழிகிறதே அதை எப்படி தடுப்பது?(DD-யில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பியா?).

ஊடகங்கள் யார் கையில் இருக்கின்றன? யாருக்கு சாதகமான கருத்துக்கள் பொதுக் கருத்தாக உருவாக்கப்படுகிறது.

2003 இறுதியில்(அக்டோ பர் அல்லது நவம்பர்) ஆனந்த விகடனில் ஒரு சிறுகதை ரொம்ப நைச்சியாக கருவறை நுழைவு பாப்பனனுக்கு மட்டுமே என்று நியாயப்படுத்தி எழுதியிருந்தது அதே புத்தகத்தில் அதற்க்கு அடுத்த பக்கத்தில் இஸ்லாம பெண்கள் தனி மசூதி ஆரம்பித்தது குறித்து ஒரு கட்டுரை. வார்த்தை ஜாலங்கள் மூலம் ஆக பிற்போக்கான ஒரு சம்பிரதாயத்துக்கு புனித வட்டம் கட்டி அதே வேளையில் அதற்க்கு அடுத்த பக்கத்தில் விஜயகாந்த பாணியில் இஸ்லாம் மதம் மட்டுமே பிற்போக்கான மதம் என்ற பொதுக் கருத்தையும் வலுப்படுத்தியது. இந்த நைச்சியான வேலைகளுக்கு எதிரான போராட்டத்தை எந்த தளத்த்ல் நடத்துவது என்பதையும் நீங்களே சொல்லுங்களேன்.


ராமேஸ்வரம் கோயிலில் இன்னும் சமையல் செய்யும் இடத்தில் இங்கு பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்று உள்ளதே அதன் பொருள் என்ன? அதை பார்த்துக் கொண்டே சாமி கும்பிடச் செல்லும் மக்களின் பண்பாட்டு அடிமைத்தன்ம, சுயமரியாதையின் சாவு எங்கு புதைந்துள்ளது?

அதை தோண்டியெடுத்து ஒரு பண்பாட்டு புரட்சிக்கு வித்திட வேண்டியது எமது கடமையில்லையா?

ஒரு ஊத்தைவாயன் தமிழில் பூசை செய்யக் கூடாது என்கிறான் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கொண்டே, தமிழ் பூசை செய்யாமல் தடுக்க போலிஸ் பாதுகாப்பு, கோர்ட் தடை உத்திரவு, கலெக்டர் பந்தோபஸ்து... என்ன பூ சுற்றுகிறேர்களா பார்ப்பினியம் செத்து விட்டது என்று?

ஆடு மாடு கிடா வெட்டு தடை சட்டத்தின் நோக்கம் என்ன? மனிதாபிமானமா?

சம்ஸ்கிருதமயமான நாட்டார் வழிபாட்டு தெய்வங்களின் கோயில்களில் பலியிட்டால்(ஆயிரம் வருட பாரம்பரியம்) அதை மூன்று நாள் வேத பாராயணத்துடன் தீட்டு கழிக்கும் சடங்கு யாரை அவமானப்படுத்துகிறது?

இதையே சட்டத்தின் மூலம் செய்ததுதானே பார்ப்பினியம்?

ஏன் இந்த தொன்மையான, விலங்குகளை பலி கொடுக்கும் சம்பிரதாயத்தை உங்களது பார்பினியம் பிடுங்கி அழிக்கும் பொழுது உங்களுக்கு கலாச்சாரம் அழிகிறது என்ற கோபம் வரவில்லை.

ஆனால், சக மனிதனை இழிவுபடுத்தும் அதை விட கேவலமான கருவறை நுழைவு, தமிழ் பூசை போன்ற விசயங்களுக்கு உங்கள் அரசு ஆதரவாக போலிஸ் பந்தோபஸ்து போடுகிறதே?

ஆடு கிடா வெட்டு சட்டத்தை நியாயப்படுத்தி மதன் எனும் பார்ப்பன வெறியன் ஒரு கட்டுரை முதல் பக்கத்தில் எழுதியிருந்தான். அதில் வரலாற்றில் இல்லாத ஒரு பொய்யைச் சொல்லி கிடா வெட்டு சட்டத்தை நியாயப்படுத்தி அதே நேரத்தில் பெரிய தெய்வங்கள் சிறப்பானவை என்று எமது முன்னோர்களான உழைக்கும் தெய்வங்களை அவமானப்படுத்தியிருந்தானே அந்த விபச்சாரத்தனத்தை நான் எந்த தளத்தில் எதிர்ப்பது? எனது எழுத்தை பிரசூரிக்கும் வெகு சன ஊடகம் எது? எமது ஊடக வெளி என்பதன் பரப்பெல்லை வெகு சொற்பம். ஆனால் இந்த ஆதிக்க கருத்தியலின் சூத்திரதாரிகளின் ஊடக எல்லையோ எல்லையின்றி பரந்து விரிந்தது. யாரிடம் பூ சுற்றுகிறீர்கள் அடக்குமுறை இல்லையென்று? வேண்டுமானல் சொரனையின்றி இரு என்று கேட்டுக் கொள்ளுங்கள்.


இவையெல்லாம உங்களுக்கு முக்கியமில்லை என்கிற பட்சத்தில் பெரும்பான்மையின் அந்த பண்பாட்டு சீதனங்களின் மிச்ச சொச்சத்தை பாதுகாக்க சிறுபான்மையின் பண்பாட்டு அடக்குமுறையை ஒவ்வொரு வடிவத்திலும் எதிர்ப்பது எமது தவிர்க்க இயலா வரலாற்றுக் கடமையாகிறது.

அசுரன்

Related Posts with Thumbnails