அனானிக்கு ஒரு பதில் - அதிகார ருசி, புரட்சி, கம்யுனிசம்
விஜயகாந்த் பற்றிய ஒரு முந்தைய பதிவில் ஒரு அனானி கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்க்கு நான் பின்னூட்டமிட தீர்மானித்திருந்த பகுதியே நல்ல விவாதத்துக்குரியதாக இருந்ததால் அதை தனி பதிவாக இடுகிறேன்.
***************
//திராவிட கட்சிகளும் புரட்சியின் விளைவாக வந்ததுதானே.எல்லா புரட்சிகளும் அதிகார ருசி கண்டபின் வழக்கம் போலசுரண்டல் கட்சிகளாக மாறிவிடும். அல்லது அப்படி மாற்றிவிடுவார்கள்.//
அனானி,
திராவிட கட்சிகள் புரட்சி செய்ததாக நீங்கள் சொல்லும் தகவல் புதிதாக உள்ளது.
அவை தங்களது வரலாற்றுக் கடமையை ஓரளவு(அதாவது ஒரு 10% அளவு என்று வைத்துக் கொள்ளலாமா?) நிறைவேற்றீனார்கள். தமிழக முதலாளித்துவ வளர்ச்சியில் அவர்களது ஆட்சி ஒரு முக்கிய காரணம். ஆனால் புரட்சியெல்லாம் ஒன்றும் செய்து விடவில்லை.
சுரண்டல் பொருளாதாரத்தை அடித்து நொறுக்கும் தத்துவ பலமில்லாத எந்த ஒரு அமைப்பாலும் அடித்தட்டு மக்களுக்கு நெடு நாட்களுக்கு சேவை செய்ய முடியாது.
அது பெண்ணியம், தலித்தியம், சாதியம் என்று எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சுரண்டலுக்கு மருந்து தரும் தத்துவம் இல்லையெனில் நீங்கள் வருத்தப்பட்டது போல் சீரழியும்.
அப்படிப்பட்ட தத்துவத்தை நடைமுறையில் கொண்ட புரட்சிகர அமைப்போ ஆளும் வர்க்கத்தின் சதிகளிலிருந்து தப்பிக்கும் வகையில் மிக் கவனமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு தத்துவம் கம்யூனிசம்தான். அப்படிப்பட்ட ஒரு புரட்சிகர அமைப்பு, அந்த தத்துவத்தை நடைமுறையில் கொண்டுள்ள அமைப்பு. அந்த கம்யுனிஸ்டு புரட்சிகர அமைப்புகளும் தொடர்ச்சியான ஏகாதிபத்திய சதிகளுக்கு பலியாகி செழுமையான அமைப்பு அனுபவங்களைப் பெற்றுள்ளனர். எந்த வகையிலும் லெனின் காலத்து அமைப்பைவிட பல மடங்கு இன்றைய அமைப்புகள்(அனுபவங்களை சரியாக உள்வாங்கிக் கொண்ட கம்யுனிஸ்டு அமைப்புகள்) பலம் பொருந்தியதே.
இத்தகைய தத்துவ பலம் பொருந்திய ஒரு அமைப்பு பிற்போக்கு சக்திகள் தலைமையை, ஸ்டிரிங்கை கைப்பற்ற அனுமதிக்காது.
புரட்சி என்பது சமூக மாற்றம், அதாவது பொருளாதார 'உற்பத்தி முறையில்' மாற்றம், 'அதற்க்கு ஏற்ற அரசு' என்ற மாற்றம். அது இதுவரை இந்தியாவில் நடைபெறவில்லை(இப்பொழுது இருக்கும் அரசுகள் கூட பிரிட்டிஸ்கால ஏகாதிபத்திய சேவையை தொடர்கின்றன).
அப்புறம் பாட்டளிகள் நடத்தும் புரட்சியின் சிறப்பு அம்சமே சுரண்டல் சமூகத்துக்கு முடிவுகட்டுவதுதான் (வரலாற்றில் வேறு எந்த புரட்சியும் செய்யாதது). இன்னொரு சிறப்பு அம்சம் 'தங்களது கோரிக்கைகளுக்காக' உழைக்கும் மக்கள் போராடும் ஒரே புரட்சி இது தான். மற்ற புரட்சிகள் எல்லாம் அந்த காலகட்டத்தின் வியாபாரிகளின் கோரிக்கைகளுக்கானதுதான். இந்த பகுதி பலருக்கு புரிய வாய்ப்பில்லை. பின்னொரு விரிவான பதிவில் இதை விளக்குகிறேன்.
எனவே, தங்களது கவலையை விட்டுத் தள்ளுங்கள். இப்படி ஒரு முற்று முதலான மாற்றத்தை உள்ளடக்கிய, மனித சமூக வரலாற்றிலேயே ஒரு அடுத்தக் கட்ட மேல் நிலை சமூகத்துக்கான ஒரு புரட்சியாக இருப்பதானால் இந்த பாட்டாளீ வர்க்க புரட்சி மிக மிக கடினமான கட்டங்களை கடந்தே நடக்கும்.
தொடர்ச்சியான தோல்விகள், ஒவ்வொரு தோல்வியிலும் கைவரப்பெறும் "ஒரு படியேற்ற" வெற்றி என்று அது பூரணமடையும். ஆனால் புரட்சி ஒன்றை யாராலும் தடுக்க முடியாது. அதைத் தடுக்கக் கூடிய ஒரே விசயம் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அழிவு.
அந்த அழிவுக்கான சாத்தியக்கூறு இன்றைய பொருளாதார உற்பத்தி முறையின் அராஜக தன்மையை நாம் எந்த அளவு நீட்டித்து நிலை பெறச் செய்கிறோமோ அந்த அளவு அதிகமாகிறது.
ஆக கடைசியில் நமக்கு இருக்கிற சாய்ஸ் ரொம்பத் தெளிவாக உள்ளது:
# ஒரு சமூக மாற்றத்துக்கான பங்களிப்புகளைச் செய்வது.
அல்லது
# மனித குல அழிவின் கடைசி நிமிடம் வரை அனுபவித்து ஒட்டு மொத்தமாக சாவது(இடையிலும் சாகலாம்).
இது பற்றிய மேலதிகமான புரிதல்களுக்கு பின்வரும் எனது முந்தைய பதிவுகளை படிக்கலாம்:
#1) தமிங்கலப் பதிவு
47 பின்னூட்டங்கள்:
அப்புறம் ஒரு சூடான செய்தி....
புரபசனல்(professional tax) tax-யை 200 ரூபாயிலிருந்து 650 ரூபாயா ஏத்திருக்காங்க. இத்த செய்றதுக்கு ஒரு வாரம் முன்னதான் அத்தனை IT infrastructure project க்கும் எதேதோ செக்சன்ல( நமக்கு அந்த விசயமெல்லாம பிரியல) income tax exemption கொடுத்திருக்காங்க.
கூடிய விரைவில் நமக்கு வரதேல்லாம் income இல்ல அதனால அதுக்கு exemption கிடையாது என்று சொல்லும் நிலமை வந்தாக்கூடா, சும்மா வடிவேலு மாதிரி சிரிச்சுக்கிட்டே நிப்போமுல்ல.
(யப்பா.... என்னா கனம்...ம்.......தடிச்ச தோலு வேற......)
சும்மா ஒரு கடும் சாயாவோட இந்தப் பதிவ படிச்சா நல்லா இருக்குமுன்னு இந்த தகவல போட்டு வைக்கிறேன்.
நன்றி,
அசுரன்.
நீங்கள் சொல்லும் அமைப்பில் மக்கள் பங்கு பெறுவதற்கு வழி என்ன?
அதுவும் ஒரு சிலரின் அதிகாரக் கோட்டையாக மாறாமல் இருக்க
checks and balance எங்கே இருக்கிறது? keetru வில்
அம்பேத்கரின் பொதுவுடமை கட்டுரை படித்தீர்களா?
கம்யூனிஸ்டு அமைப்புகள் மக்களின் பங்களிப்பு இல்லாத அமைப்புகளா?
மற்ற எந்த அமைப்பையும் விட கம்யூனிஸ்டு அமைப்புகளில்தான் மக்களின் பங்களிப்பும், அனைவருக்குமான ஜனநாயகமும் கிடைக்கும்.
உதரணமாக இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு மக்கள் எழுச்சிகளை கம்யூனிஸ்டு இயக்கம் தலைமை தாங்கி நடத்தியுள்ளதை குறீப்பிடலாம்.
அதை மாவோ பின்வருமாறு கூறுவார்.
"கம்யூனிஸ்டுகள் மக்கள் என்ற கடலில் நீந்தும் மீன்கள்".
மக்களை பிரிந்து எந்த கம்யூனிஸ்டு கட்சியாலும் வாழ்க்கை நடத்த முடியாது.
மற்ற கட்சிகளுக்கு(சுரண்டலை கேள்விக்குள்ளாக்காத) அதிகார வர்க்கத்தின் வலைப் பின்னலில் ஏதோ ஒரு பகுதியில் வயிறு வளர்க்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கம்யூனிஸ்டு கட்சிகளோ அந்த அதிகார வர்க்கத்தின் தாக்குதலை மீறி பிழைத்திருக்க முற்றுமுதலாக மக்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.
கீற்றுவில் அம்பேத்காரின் பொதுவுடமை கட்டுரை படிக்கவில்லை.
சரி, நான் இதுவரை இந்த வலைப்பூவில் பேசிய பல்வேறு பிரச்சனைகளுக்கு நீங்கள் கூறும் தீர்வு என்ன என்று சொல்லுவது நேர்மையாக இருக்கும். விவாதிக்க வசதியாக இருக்கும்.
நன்றி,
அசுரன்.
அனானி,
"checks and balance" என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?
ஒரு கம்யூனிஸ்டு கட்சியை சீரழிவிலிருந்து காக்கும் சூட்சமம் என்பது, தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் தலைமையின் கையிலும் அந்த தலைமையை தொடர்ந்து கண்காணித்து விமர்சன்ம் செய்து தவறான நிலைப்பாடு எடுக்க விடாத கீழ் மட்ட அணிகளின் கையிலும் இருக்கிறது.(ஜனநாயக மத்தியத்துவம் என்று கம்யுனிஸ்டு புத்தகங்களில் படித்திருக்கிறேன்).
இதற்க்கு கீழ்மட்ட அணிகளிடம் தத்துவ புரிதலை ஆழமாக கொண்டு செல்லுவது , கட்சிக்குள் வர்க்க போராட்டத்தை கறாராக நடத்துவது, வெளியில் ஆளும் வர்க்கத்தை கடுமையாக ஒடுக்குவது போன்ற விசயங்களில் ஆளும் வர்க்க தாக்குதலால் ஏற்படும் சீரழிவிலிருந்து காக்கப்படுவது அடங்கியுள்ளது.
நன்றி,
அசுரன்.
http://www.keetru.com/rebel/ambedkar/39.html
இப்பொழுது உள்ள அமைப்பில் ஐந்து வருடத்திற்கு ஒரு முறையாவது
ஆட்சியை மாற்றும் உரிமை மக்களுக்கு உள்ளது. நீங்கள் சொல்லும்
அமைப்பு எப்படி செயல்படும் என்று எனக்கு புரியவில்லை.எல்லோரும்
மனிதர்கள்தான். நீங்கள் சொல்லும்படியே கட்சி செயல்படுமா அல்லது
அதிகார மயக்கத்தில் அவர்களே கடவுளாவார்களா? சர்வாதிகார ஆட்சியில்
மக்களின் பங்கு எங்கே இருக்கும்?
இப்பொழுது உள்ள அமைப்பில் உள்ள பெரிய பிரச்சினையாக தெரிவது
மத்திய மாநில அரசுகளிடம் குவிந்திருக்கும் அதிகாரம். அதை பிடுங்கி
லோக்கல் அமைப்புகளை பலப்படுத்த வேண்டும்.மாநில
சுயாட்சி பேசியவர்கள், உள்ளாட்சிகளின் சுயாட்சி என்று பேச மாட்டார்கள்.
எங்கோ இருக்கும் டெல்லி அரசுக்கு வரி கொடுத்துவிட்டு பின்னர்
மானியம் வருமென்று உட்கார்ந்திருக்கும் முட்டாள்தனம். தஞ்சையில்
விளையும் அரிசிக்கு டெல்லி அரசு விலை நிர்ணயம் செய்கிறது.
ஏதோ ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் விட்டார்களாம்.
முதலில் பஞ்சாயத்துக்கு பணம் அப்புற தான் ஓட்டு என்று.
இப்பொழுது இருப்பதைவிட அப்பொழுது அரசு நிர்வாகத்தின் முடிவெடுக்கும் விசயத்தில் மக்கள் நேரடியாக பங்கெடுப்பதற்க்கான முறை இருக்கும்.
ஏனெனில் வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வர்க்கமில்லாமல் செய்யும் அதே நேரத்தில். அரசு என்பதன் பாத்திரத்தையும் காலாவதியாக்கும் நிகழ்ச்சியும் நடந்தேறுவதுதான் கம்யூனிச புரட்சியின் சிற்ப்பு... அரசு என்பது மத்தியில் ஒருங்கிணைப்பை மட்டுமே சேய்யும் ஒரு குழுவாக எஞ்சி நிற்க்கும். அதிகாராமே இல்லாதபோது எப்படி நீங்கள் சொல்லுவது போல் சீரழிவு ஏற்ப்படும்.
இன்றைய சட்டமன்ற நாடாளுமன்ற பாணி அரசில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை யாரை தேர்ந்தெடுக்கிறேர்கள்?
ஆனால் உண்மையில் நாட்டை ஆள்வது யார்? IAS, IPS அதிகாரிகள்.
திட்டமிடுவது, பலதரப்பு ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி கையெழுத்திடுவது, உள்ளுரில் போலிஸ், நீதிமன்றம், தாலுகா ஆபிஸ், கலெக்டர் என்று சட்டங்களை நடைமுறைபடுத்தும் அதிகாரிகள்தான் உண்மையில் நம்மை ஆள்கிறார்கள். அவர்களை தேர்ந்தேடுக்கும் உரிமையை இந்த சட்டமன்ற நாடாளுமன்ற பாணி அரசில் சாத்தியமா?
ஆனால் இது கம்யூனிச சமூகத்தில் சாத்தியம் ஏனெனில் அங்கு கட்சி, அரசு நிர்வாகம் இரண்டும் தனித்தனி கிடையாது என்வே கட்சி எப்படி மக்களை நம்பி இருக்கிறதோ, கட்சியில் எப்படி மக்களுக்கு ஜனநாயக, விமர்சன் உரிமைகள் உள்ளதோ அதே அளவு உரிமை அரசின் ஒவ்வொடு உறுப்பின் மீதும் மக்களூக்கு உண்டு.
கம்யூனிச சமூகத்திலும் தேர்தல் உண்டு. மிக முக்கியமாக தேர்ந்த்தெடுத்தவர்களை திருப்பியழைக்கும் உரிமை உண்டு. அதிகாரிகளையும் மக்களது விசயத்தில் முடிவெடுக்கும் அதிகார கொண்ட அத்தணை பேரையும் மக்கள் தேர்ந்தேடுத்து திருப்பியழைக்கும் உரிமை உண்டு.
மேலும் ஒவ்வொரு தேசியத்துக்கும் பிரிந்து செல்லும் உரிமை உண்டு. பிரிந்து செல்லுவதற்க்கான முகாந்திரமே ஏற்படாது என்பதுதான் உண்மை.
சொல்லுங்கள் அனானி.... இதைவிட ஒரு சிறப்பான, மெஜாரிட்டி மக்களுக்கான ஒரு சமூகத்தை, ஒரு அரசை - சுரண்டலை உடைத்தெறிந்த ஒரு சமூகத்தை தவிர்த்து வேறெந்த சமூகத்தில் நடைமுறைப்படுத்த முடியும்?
நன்றி,
அசுரன்.
அம்பேத்காரின் கட்டுரையை படித்தேன். அவரது கட்டுரை இரண்டு விசயங்களை கணக்கிலெடுக்கவில்லை.
#1) இந்த சமூகம் வர்க்கங்களாக பிளவுண்டு உள்ளது. (இந்தியாவில் சிறப்பாக சாதி என்ற பண்ப்பாட்டு அடக்குமுறை அதை பிறப்பினடிப்படையில் கட்டிக் காக்கிறது.)
#2) அரசு உலர்ந்து உதிருவது, சர்வாதிகாரம் போன்ற விசயங்களைப் பற்றி அவர் சொல்லும் பொழுது, கம்யூனிச தத்துவ சாரத்தை முழுமையாக புரிந்து கொண்டு அந்த கட்டுரையை எழுதியதாக தெரியவில்லை.(அது அம்பேத்காரின் தவறு அல்ல. அவ்வாறு முழுமையாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்காது. ஏனெனில், அன்று கம்யுனிஸ்டுகள் என்றூ சொல்லிக் கொண்டவர்களுக்கே அதை நடைமுறையில் செயல் படுத்துவதில் புரிதல் இல்லை).
சர்வாதிகாரத்தை பொறுத்தவரை, அரசு என்பதே ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம்தான் என்பது கம்யுனிஸ்டு definition. அதாவது வர்க்க பிளவினால் ஏற்படும் சமூக குற்றங்களை கட்ட பஞ்சாயத்து செய்யும் ஒரு கருவி. அதாவது அரசு என்ற ஒன்று இருப்பதே வர்க்க பிரிவினை இருப்பதின் அடையாளம்தான். அதன்படி இதுவரையான அரசு எல்லாமே சிறுபான்மை அரசு, அதாவது சுரண்டு வர்க்க சர்வாதிகாரம் (கண்டதேவி தேர், பாப்பாபட்டி கீரிப்பட்டி, கோயிலில் தமிழில் பாடுவது, தாமிரபரனி கோக் பிரச்சனை etc).
உழைக்கும் மக்கள், மனித சமூக வரலாற்றிலேயே முதல் முறையாக தன்னை தானே உண்ர்ந்து கொள்ளூம் வாய்ப்பை முதலாளித்துவ சமூகம் கொடுக்கிறது. அவன் தனக்கான கோரிக்கையுடன் போராடி அதை மறுக்கும் சிறுபான்மை அரசை தூக்கியெறிந்து பெரும்பான்மை அரசை நிறுவுகிறான். அது பழைய அதிகாரத்திலிருந்த சிறுபான்மை வர்க்கத்துக்கு சர்வாதிகாரமாக இருக்கும்.
இதைத்தான் கம்யுனிஸ்டுகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் ஒரு தொழிலாளி என்றால் கவலையை விட்டுத் தள்ளுங்கள் அது நமக்கான அரசு...:-). நம்மை சுரண்டியவர்களுக்கான சர்வாதிகாரம்.
அரசு உலர்ந்து உதிர்வது பற்றி:
அதிகாரத்தை, ஆட்சியை இழந்த பழைய முதலாளி வர்க்கம், பிற்போக்கு சக்திகள் மீண்டும் பழைய பொற்காலத்தை கொண்டுவர பிரம்மபிரயத்தனம் செய்வார்கள்(தற்பொழுது பார்ப்பன வெறியன் சங்கராச்சாரி செய்தானே அது போல, அதைவிட மிக மிக கடுமையாக, மிக மிக நயவஞ்சகமாக). ஆக புரட்சி முடிந்த பின்புகூட வர்க்கபோராட்டம் இருக்கும்.
பணம் எனற ஒரு வஸ்து ஒழிவது, கிராமம், நகரம் இடைவெளி குறைவது, உலகம் முழுமைக்கும் பாட்டாளி வர்க்க புரட்சி நடந்தேறியிருப்பது(இன்னும் சில conditions விடு பட்டிருக்கலாம்) ஆகிய நிலை வரும் வரை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருக்கும்(தன்னியல்பில்). ஏனெனில் மேற்கூறிய அந்த லிஸ்டில் உள்ள அம்சங்கள்தான் முதாலாளிய சிந்தனைக்கான சமூக பொருளாதார ஊற்றுமூலமாக இருக்கின்றன. அது இருக்கும் வரை முதலாளி குறைந்த பட்சம் சிந்தனையிலாவது இருப்பான். அவனை அடக்கி ஒடுக்க பெரும்பான்மையினரின் சர்வாதிகாரம்(அதாவது அரசு) தேவைப்படுகிறது.
சிறிது சிறிதாக் வர்க்க உணர்வுகள் ஊற்றெடுப்பதற்க்கான சமூக, பொருளாதார தத்துவ ஊற்று மூலங்கள் வற்றும் பொழுது வர்க்கங்கள் அழியும். அப்பொழுது அதி உயர் தொழில் நுட்ப உற்பத்தி முறை காரணமாக சமூகத்துக்கு வேண்டிய விசயங்கள் தட்டுபாடின்றி கிடைக்கும். தட்டுப்பாடான விசயங்களையும் பொறூப்பாக பயன்படுத்திக் கொள்ளும் டிஸிப்ளின் மக்களிட்ம் தழைத்தோங்கியிருக்கும். இது அரசு என்ற நாட்டமையின் தேவையை இல்லாமல் செய்துவிடும். இதைத்தான் உலர்ந்து உதிர்தல் என்று இலக்கிய நடையில் மார்க்ஸிய முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இவையனைத்துமே சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் தன்னியல்பில் நடக்கும்(ஒரு கம்யுனிஸ்டு கட்சி இல்லாவிட்டாலும். நீங்கள், நான், அம்பேத்கார், மார்க்ஸ் இவர்கள் விரும்பாவிட்டாலும்). அப்படியில்லாமல் இந்த சமூகத்தின் இயல்பான வளர்ச்சிப் போக்கு தடையாகிறது என்றால் அது கிழ்கண்ட எடுத்துக்காட்டைப் போல முடியும்.
அதாவது ஒரு முட்டை தன்னியல்பில் பொறிந்து குஞ்சு வெளிவர வேண்டும். மாறாக ஏகாதிபத்தியங்கள் தங்களது லாப வெறிக்காக முட்டை பொறிவதை தடுத்தால் கூமூட்டைதான் மிஞ்சும். அதாவது மனித சமூகத்தின் அழிவு. (சுற்றுச்சூழல், யுத்தம், சமூக அழுத்தத்தின் விளைவான குற்றச் செயல்கள் etc etc).
சுட்டியில் கொடுத்துள்ள கட்டுரைகளை படியுங்க்ளேன் நிறைய விசயங்கள் புரிபடும்.
நன்றி,
அசுரன்
சரியான பதிவு
--> பதிவுக்குச் சம்பந்தமில்லாத பின்னூட்டம் <---
அசுரன் என்னும் பெயரிலேயே வருகிறார் பாருங்க.. பேசாம பழையபடி போனபர்ட் ஆய்டுங்க.. அதுவே நல்லா இருந்தது.. :)
தங்கள் வருகைக்கு நன்றி மெஜாரிட்டு பீப்பிள்,
அனானி தங்களுக்காவே ஒரு தனிப் பதிவு போட்டால் பாதியில் ஆளைக்காணும்.....பரவாயில்லை எப்பொழுது வேண்டுமானாலும் வந்து தங்களது விமர்சனங்களை வைத்து வாதாடலாம்
போன்ஸ்,
தங்கள் வருகைக்கு நன்றி.
அந்த அசுரன் என்னைவிட சீனியர்(2004 பேட்ஜ்).
பரவாயில்லை இரண்டு அசுரர்களும் சேர்ந்து குட்டைப் புளுதி கிளப்பிட்டு போறோம்.
நன்றி,
அசுரன்.
சமீபத்தில் கேள்விப்பட்ட செய்தி. சீன அரசு திருமணம் ஆகதவர்களுக்கு
ஒரு பெட் ரூம் அபார்ட்மென் டும் திருமணமானவர்களுக்கு இரண்டு
பெட் ரூம் அபார்ட்மென் ட் கொடுக்கிறது. இதற்காக திருமணம்
ஆனவர்கள் டைவர்ஸ் செய்துவிட்டு இரண்டு வீடுகள் பெற்று ஒன்றில்
குடியிருந்துக்கொண்டு மற்றொன்றை வாடகைக்கு விடுகிறார்களாம்.
இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வேலைகளுக்கான சம்பளத்தில் இருக்கும் வித்தியாசம் பெருமளவில்
குறைக்கப்பட வேண்டும். ஆனால் சோம்பேறிகளுக்கு சோறு போடும்
ஒரு அமைப்பு உதவவே உதவாது.இந்த வட்டி தொழில், பங்கு
மார்க்கெட் இரண்டையும் ஒழித்தாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.
இடைத்தரகு, வட்டி இரண்டையும் ஒழிக்க வேண்டும்.
முதலாளித்துவ நாடுகள் கூட அப்பன் சொத்தை மகனுக்கு கொடுத்தால்
அதில் 50-70 சதவிகிதம் வரி போடுகிறார்கள். இந்திய கம்யூனிஸ்டுகள்
வாய் கிழிய சொத்துரிமையினால் பிரச்சினை என்று பேசுவார்களே
தவிர இப்படி எதுவும் செய்யாமல் சொத்துரிமையை பாதுகாக்கிறார்கள்.
minimum wagesக்கும் ceo க்களின் சம்பளத்திற்கும் உள்ள
மலை அளவு வித்தியாசத்தை சரிபடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்
என்ன செய்துள்ளது?
அரசாங்கமே ஒரு நிறுவனத்தை நடத்தினாலும் கூட அவையும் போட்டியிட வேண்டும்.
இன்று பொதுத்துறை நிறுவனங்கள் ஏன் சரியாக வேலை செய்வதில்லை.?
வேலை பாதுகாப்பு இருப்பதால் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும்
பிரச்சினையில்லை .
அனானி,
சீனாவில் கம்யுனிசம் இருக்கிறதா?......
குறிப்பாக சீனாவில் முதலாளித்துவம் வளராத நிலையில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஆளாகி தனது இயல்பான முதலாளித்துவ பரிணாம வளர்ச்சி தடையுற்ற நிலையில் அங்கு மாவோ தலைமையில் நடந்தது உண்மையில் ஒரு முதலாளித்துவ புரட்சிக்கு பதிலியான புரட்சி(அதாவது முதலாளி செய்ய வேண்டிய புரட்சியை பாட்டாளி செய்வது - புதிய ஜனநாயக புரட்சி).
முதலாளி புரட்சி செய்யாமல் இருந்ததன் காரணம், அங்கு அவன் ஒரு பலமான சக்தியாக வளரும் முன்பே நசுக்கப்பட்டான் மேலும் அவனுக்கே உரிய ஊசலாட்டம் வேறு.
ஆக முந்தைய சமூகத்தின் உள்முரன்பாடுகளே தீர்க்கப்படாத நிலையில் புதிய சக்திவாய்ந்த முரன்பாடுகளாக -
நிலபிரபுத்துவம், ஏகாதிபத்தியம் Vs மக்கள்(மாணவர், உழவர், தேசிய முதலாளி, தோழிலாளி) இருந்த நிலையில் புரட்சி செய்த பிற்ப்பாடு, அதாவது ஏகாதிபத்தியமும், நிலபிரபுத்துவம் தோற்கடிக்கப்பட்ட பிறகு...முதலாளி Vs தொழிலாளி முரன்பாடு முன்னுக்கு வருகிறது....
இந்த முரன்பாடுதான் சீனா கம்யுனிஸ்டு கட்சியில் மாவோவை மையமாக வைத்து நடந்த பிரச்சனைகள், காலாச்சார புரட்சி, விவசாய சீர்திருத்தத்தில் நிகழந்த குளறுபடிகள் இவற்றுக்கு காரணம். அதாவது சீனா மக்கள் மீது செல்வாக்கு பெற்ற மாவோ தலைமை, கட்சி நிர்வாக படிக்கட்டில் செல்வாக்கு பெற்ற முதலாளித்துவ தலைமை என்ற இந்த முரன்பாடு கட்சியிலும் தலைகாட்டுகிறது. மாவோவுக்கு பின் இந்த முரன்பாடுகளை சரிவர கையாள்வதற்க்கான தலைமை இல்லாமலிருந்தது கட்சியின் விசையை முறுக்கும் அதிகாரம் முதலாளித்துவ சக்திகளின் கைகளூக்கு சென்றது. ஆக சீனாவில் வெற்றிகரமான ஒரு முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டது.
அதனால் சீனாவில் வறுமை, சீனாவில் கோகோ கோலா, பேசன் ஷோக்கள், கள்ளத் தோனியேறி ஐரோப்பா செல்லுதல், போதை, பொருளாதார ஏற்றத்தாழ்வு etc இவை எல்லாம் இருந்தே தீரும்.
தங்களது தகவலுக்கு, தற்பொழுது உலகில் சோசலிச நாடு என்று ஒன்றுமே கிடையாது...
//ஆனால் சோம்பேறிகளுக்கு சோறு போடும்
ஒரு அமைப்பு உதவவே உதவாது.//
எந்த அமைப்பை சொல்கிறேர்கள். நமது இன்றைய சட்டமன்ற பாராளுமன்ற வடிவைத்தானே? இதில்தான் சோம்பேறீகள் நன்கு உண்டு கொழுப்பதும், உழைக்கும் எமது மக்கள் கட்டுமான பணியிடங்களிலும், விவசாய நிலங்களிலும் நொந்து மடிவதும் நிகழ்கிறது.
மாறாக புரட்சிக்கு பிந்தைய சமூகத்தில் உழைப்பு சிறைகள் இருக்கும்(சிறைகளில் கூட சும்ம உட்கார்ந்து திங்க முடியாது).....
//சம்பளத்திற்கும் உள்ள
மலை அளவு வித்தியாசத்தை சரிபடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்
என்ன செய்துள்ளது?//
இந்திய கம்யுனிஸ்டு கட்சி (CPI அல்ல, மாறாக எல்ல கம்யுனிஸ்டுகளையும் சேர்த்து குறிப்பிடுவதாக கருதுகிறேன்) இந்திய அமைப்பில் புரட்சிதான் செய்ய முடியும்..சீர்திருத்தம் செய்வது எமது வேலைஅல்ல. அதற்க்கான சில அமைப்புகள் செய்கின்றன சில செய்யாமல் சமரசம் பேசுகின்றன.
//அரசாங்கமே ஒரு நிறுவனத்தை நடத்தினாலும் கூட அவையும் போட்டியிட வேண்டும்.
இன்று பொதுத்துறை நிறுவனங்கள் ஏன் சரியாக வேலை செய்வதில்லை.?
வேலை பாதுகாப்பு இருப்பதால் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும்
பிரச்சினையில்லை .
//
போட்டி என்பது மனித சமூகத்தின் இயல்பா?....இல்லை...அது முதலாளித்துவ சமூகத்தின் இயல்பு....
மேலும் இந்திய அரசுத்துறை நிறுவனங்களின் வலிமை பற்றி ஒரு பாமரனுக்கு கூட நல்ல புரிதல் உள்ளது. NALCO, BEML, BHEL, IOCL, GAIL, HAL, SBI இன்னும் சில பத்து கம்பேனிகள்(சதி செய்து மூடப்பட்ட ஸ்டாண்டார்டு கம்பேனி-சென்னை, மாடர்ன் பிரட் கம்பேனி etc) இதுபோல கம்பேனிகளின் சாதனைகளூக்கு முன்னால் தனியார் நிறுவனங்களான என்ரான் மற்றும் சமீபத்தில் மஞ்சள் நோட்டிஸ் காட்டிய சில அமேரிக்க நிறுவனங்களின் அராஜக உழல் தங்களது கண்களுக்கு தெரியாதது எந்தளவுக்கு நீங்கள் அவர்களின் பிரச்சாரத்திற்கு மயங்கியுள்ளீர்கள் என்று தெரிகிறது. இந்தியாவில் மாநில அளவிலான போக்குவரத்து துறை, தண்ணீர், மின்சாரம் இவற்றை தனியார் மயமாக்கினால் அதன் கேடு கெட்ட விளைவை யோசிக்கக்கூட முடியவில்லை(டில்லி, மும்பை). மற்றபடி நீங்கள் சொல்லிய குறைபாடுகள் நிர்வாக பிரச்சனைதான். அது எல்ல நிறுவனங்களுக்கும் உள்ள பிரச்சனை(தனியார் நிறுவனங்களிலும் இருக்கும் என்பதற்க்கான எடுத்துக் காட்டுதான் மேலே சொன்னவை).
முதலாளியின் சுரண்டல், அந்த உற்பத்தி முறையால மனித சமூகத்தின் இருப்புக்கே இன்று ஏற்பட்டுள்ள அபாயங்களை பற்றி எதுவும் சொல்லாத நீங்கள் தொழிலாளிக்கு கொடுக்கப்பட்டுள்ள பணி உத்திரவாத குறைந்தபட்ச சட்டபாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.
இன்றைக்கு பொதுத் துறை நிறுவனங்களின் பரப்பெல்லையை தகர்த்து முற்று முதலாக தனியார்மயம் நோக்கி அடிஎடுத்து வைத்த இந்திய சமூகம், சோசியல் இன்டிகேட்டர் எனப்படும் தர வரிசையில் ஐநா சபையால் 127 வது இடத்திலிருந்து 147வது இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள், சிறுவர்களுக்கு அபாயகரமான இடத்தில் உலகிலேயே 6வது இடத்தில் இந்தியா உள்ளது. இதுதான் தனியார்மயத்தினால் இந்தியா குறுகிய காலத்தில் கண்ட பலன்.
ஒருவேளை நீங்கள் முதலாளிகளின் வறுமை நிலை பற்றி பேசுகிறேர்களோ?
நீங்கள் எனது பதில்களை முழுமையாக படிக்கிறேர்களா?
எனது முந்தைய கட்டுரைகளை படித்தீர்களா?
நன்றி,
அசுரன்.
கம்யூனிஸம் தேவை என்ற உங்கள் கருத்து புரிகிறது.
இந்திய திருநாட்டில் பொதுத் துறை நிறுவனங்களிடம் உள்ள சிக்கல் தங்களை யாரும் கேட்க முடியாது என்று நினைத்து கொள்வதால் தான். அவர்கள் "Monopoly" யாக செயல்படுவதால் அவர்கள் தருவதே சேவையாகிவிடுகிறது. ஒரு போட்டி நிறுவனம் இல்லாமல் இவர்களுக்கு இலக்கும் தெரிவதில்லை, பயன்படுத்துபவர்களின் வேதனையும் புரிவதில்லை.
BHEL, NALCO, NLC எல்லாமே தங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் வருமானமாக உடனுக்குடன் தெரிவதால் அந்த உத்வேகத்துடன் செயல்படுகிறார்கள். அவர்களுக்கே இன்னும் பத்து வருடம் கழித்து என்ன என்று தெரியுமா? கணிம வளம் குன்றிவிட்டால் மாற்று ஏற்பாடு என்ன என்று தெரியுமா?
ஆனால் அஞ்சல் துறை, தொலைபேசி, மின்சாரம் இவற்றில் தனியார் வந்தவுடன் தான் அரசு தரும் அதிகாரத்தின் மூலமாக சுதாரித்தார்கள்.
இந்தியாவில் உள்ள இரயில் நிர்வாகமும் தனது பெரும் வருவாயை பென்ஷனுக்கு தான் ஒதுக்கி கொண்டிருக்கிறது.
சேவைத்துறைகளில் வேலை செய்பவர்கள் கூட சட்டங்கள் கட்டுப்பாடுகள் மற்றவர்களுக்கு தான் என்றளவிலேயே நடந்து கொள்கிறார்கள். போக்குவரத்து ஓழுங்கு செய்யும் அதிகாரி தான் சாலை நடத்தை விதிகளை மீறுகிறார்.
போட்டியில்லாமல் சாதித்த துறை அதிமுக அரசு உருவாக்கிய "டாஸ்மாக்" தான். இவர்கள் தங்கள் வருவாய்களுக்கு இலக்கு வைத்துக்கொண்டு என்ன பிரமாதமாக செயல்பட்டார்கள். (அதன் வருமானத்தை உரிய வழியில் சொ
ரஸ்யா - ஒரு பஞ்சம், உள் நாட்டு சதி, ஒரு தலையீட்டு போர், எல்லையில் தொடர் பிரச்சனைகள், இரண்டு உலகபோரிலும் மிக கடுமையான சேதம், இயல்பிலேயே மற்ற முதலாளித்துவ நாடுகளைவிட மிகவும் பின் தங்கிய முதலாளித்துவ வளர்ச்சி பெற்றிருந்த நிலை - இத்தனை இடர்பாடுகளுடனும் 30 வருடங்களில் எந்த நாட்டையும் சுரண்டாமல் அமெரிக்காவைவிட வல்லரசாக வளர்ந்து காட்டியதற்க்கு காரணம் நிச்சயம் 'போட்டி' என்ற விசயம் காரணமில்லை.
அனானி உங்களது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நிலவுகின்ற நம்பிக்கைகள், சமூக அமைப்பு, கருத்துக்கள் தான் நிரந்தரமானது என்ற நம்பிக்கைதான் உங்களை செலுத்துகிறது.
ஆனால் மாற்றம் ஒன்று மட்டுமெ மாறாதது.
மேலும்,
முதலாளித்துவ உற்பத்தி முறையினால் மனித குலத்திற்க்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.
முட்டை - எடுத்துக்காட்டு மூலமாக மனித குலத்திற்க்கு உள்ளதாக நான் குறிப்பிட்டுள்ள இரண்டு சாய்ஸ்கள் பற்றி தங்களது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.
கம்யுனிச சமூகம் மனித சமூகத்தின் பரினாம வளர்ச்சியில் தவிர்க்க இயலாதது(அல்லது மனித சமூகத்தி அழிவு). அதை பகுத்தறிவோடு கணித்து வன்முறையின் வீரியத்தை சாத்தியப்பட்ட அளவுகளில் குறைக்கும் வேலையைத்தான் கம்யுனிஸ்டு கட்சி செய்கிறது. அதாவது பிரசவத்திற்க்கு உதவும் ஒரு செவிலித்தாயின் பாத்திரம்.
செவிலித்தாய் இல்லையென்றால் பிரசவமும் நடக்கலாம்(சிக்கல் நிறைந்ததாக), மரணமும் நடக்கலாம்.
நன்றி,
அசுரன்.
என்னய்யா - இவ்வளவு கனமான சப்ஜெக்டை எடுத்து பிரிச்சு மேயுரீங்க..
என்னால முடியலப்பு...அவ்வ்வ்வ்வ்வ்வ்
எனது முந்தைய பின்னூட்டத்தில் ஒரு மிகப் பெரிய தவறு ஏற்ப்பட்டு விட்டது. அதை சரி செய்து மேலும் சில விவரங்களை இணைத்து மீண்டும் பதிப்பிக்கிறேன்.
*********
அனானி,
//அவர்களுக்கே இன்னும் பத்து வருடம் கழித்து என்ன என்று தெரியுமா? கணிம வளம் குன்றிவிட்டால் மாற்று ஏற்பாடு என்ன என்று தெரியுமா? //
இது பொதுத் துறை நிறுவனங்களின் பிரச்சனை மட்டுமல்ல. ஒட்டு மொத்த மனித குலத்தின் பிரச்சனை. இதில் தாங்கள் ஆதரிக்கும் தனியார் துறையினரும் உள்ளனர். இது பற்றி ஒரு தொடர் கட்டுரையை (மருதையனின் கட்டுரை) பதிப்பித்துள்ளேன். படித்துப் பார்க்கவும்.
ஒரு சின்ன கொசுறு செய்தி: புதிய ஜனநாயக (இந்தியா போன்ற நாடுகளில்) புரட்சி முடிந்தவுடன். இங்குள்ள சிறு முதலாளிகள் தனியார் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப் படுவார்கள். இதற்க்கு காரணம் இந்தியாவில் அரைகுறையாய் வளர்ந்துள்ள முதலாளித்துவ வளர்ச்சியை முழமை பெறச் செய்யும் ஒரு(one of the) நடவடிக்கை.
சரி ஏகாதிபத்தியங்கள் ஒரு நாட்டை ஆக்கிரமித்து, அதை தொழில் நுட்ப வளர்ச்சி என்று எண்ணினால் என்ன நடக்கும்.? அந்த நாட்டின் முதலாளிகள் தங்களது முதலாளிய வேட்கையோடு புதிது புதிதாக முதலீடு செய்து ஆராய்ச்சி செய்து ஒரு சுய சார்பு அறிவியல், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய இயலாமல் போய்விடும். அதாவது ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் சிந்தனை வளர்ச்சி தடைபடும்(தடைபடுகிறது). அதுதானே இப்பொழுது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.
அதனால்தான் தேசிய முதலாளி வெள்ளையன்(வியாபாரிகள் சங்க தலைவர்) ம.க.இ.க போன்ற நக்சல்பாரி அமைப்புடன் இணைந்து போராடுகிறார்.
அதனால்தான் அகில இந்திய சில்லைறை வியாபாரிகள் சங்கம்(retail business association) இந்திய இடது சாரிகள்தான் மக்கள் மீது அக்கறையுடன் உள்ளதாக கூறுகிறார்கள்.
என்னாடா இது முதலாளி கம்யுனிஸ்டு கட்சியோடு சேர்கிறானே என்று ஆச்சரியப் படும் அனானியே...இதைத்தான் மாவோ ஆய்வு செய்து சொன்னார். இது இந்தியா போன்ற முதலாளித்துவ வளர்ச்சி முழுமை பெறாத, ஏகாதிபத்திய தாக்குதலுக்காலான நாடுகளின் இயல்பு என்றார்.
மற்றபடி நீங்கள் சொல்லிய சட்டங்களை மீறூதல், ஊழல் போன்ற விசயங்கள் ஒரு சுரண்டல் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான விசயம்(மேலே பிரதமரிலிருந்து, கீழே ரிக்சா ஓட்டுபவர் வரை). ஆனால் ஒரு குறிப்பிட்ட சாரரை மட்டும் சுட்டிக் காட்டுவதன் மூலம் ஆளும் வர்க்க சேவைக்கு ஏதுவான நிலை எடுக்கிறேர்கள். இது ஷங்கர்(இயக்குனர்) போன்றவர்களுக்கு பணம் கொழிக்கச் செய்யும் சுலபத்திட்டம்.
போட்டியை ஆதரிப்பது முதலாளித்துவம், போட்டியை முறித்து நொறுக்கி சாகடிப்பது ஏகாதிபத்தியம்.
மோனோ போலி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
micosoft, sony, mansanto, SunTv, Wallmart, coke, pepsi, Lever Etc இவையெல்லாம் போட்டியுடனா உள்ளன?
மீண்டும் சொல்கிறேன். போட்டியை ஒழிப்பது ஏகாதிபத்தியம்.
சுரண்டலை ஒழிப்பதுதான் கம்யுனிசம்.
நன்றி,
அசுரன்.
வாங்க செந்தழல் ரவி,
கொஞ்சம் சிரத்தை எடுத்து படிங்க....அப்போதான் நம்ம நாட்டு நிலமை என்ன? நம்ம நிலைமை என்ன? எதிர்காலம் எப்படி என்று கொஞ்சமாவது புரியவரும்.....
படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை உங்களுக்கே உரிய நக்கலுடன் பதிய வையுங்கள்(ஆக்கபூர்வமான விவாதத்திற்க்கு வித்திடும் வகையில்).
நன்றி,
அசுரன்
//போட்டியை ஒழிப்பது ஏகாதிபத்தியம்.//
இந்தியாவில்தான் மொனாபலி கொடி கட்டி பறக்கிறது.
பெப்சியும், கோக்கும் போட்டியாளர்கள்.
மைக்ரோசாப்ட்டின் போட்டி ஒழிப்பு வழிமுறைகளை எதிர்த்து அமெரிக்க
பெற்றல் அரசாங்கமும் ஏகப்பட்ட மாநில அரசாங்கங்களும் வகைவகையாக
antitrust வழக்குகள் போட்டதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஐரோப்பிய
யூனியன் மைக்ரோசாப்டுக்கு 357 மில்லியன் டாலர் பெனால்டி போட்டது.
ஒரு "நாளைக்கு" ஒரு மில்லியன் டாலர் பைன் போடுவேன் என்று சொன்னார்கள்.
ஆனால் இந்தியாவில்தான் பில் கேட்சுடன் நம் அரசியல்வாதிகள் கோபாலபுரத்திலிருந்து
இளித்தபடி போஸ் கொடுக்கிறார்கள்.
வால் மார்டுக்கு ஏகப்பட்ட போட்டி உள்ளது. மற்றவர்களை விட இவர்கள் திறமையாக
செயல்படுகிறார்கள்.வால்மார்ட் வங்கி துறையில் நுழைய பெரும் முயற்சி செய்து
அரசாங்கத்திடம் அனுமதி பெற முடியவில்லை.
ஆனால் இந்தியாவில் பல்பொடியிலிருந்து பெறட் ரோ கெமிகல் வரை
அனைத்து தொழில்களையும் அம்பானியும், டாடாவுமே செய்யலாம் என்று
பட்டயம் எழுதி கொடுக்கிறார்கள்.
கடந்த ஐம்பது வருடங்களில் இந்திய அரசு எத்தனை மொனொபலிகளுக்கு
எதிர் வழக்கு போட்டிருக்கிறது? சன் டிவியை எதிர்த்து வழக்கு போட்டதா?
இந்தியாவில் இருப்பது க்ரோனியிசம்.
கம்யூனிசம் என்ன புதுசா? பழங்காலத்தில் அனைவரும் உழைத்ததை ஒரே
இடத்தில் கொட்டி வைத்து பகிர்ந்து கொண்டார்கள். பின்னாளில்
பகிர்ந்து கொடுப்பவர்களே நிலச்சுவாந்தார்களாக மாறினார்கள்.
//
மாறாக புரட்சிக்கு பிந்தைய சமூகத்தில் உழைப்பு சிறைகள் இருக்கும்
(சிறைகளில் கூட சும்ம உட்கார்ந்து திங்க முடியாது).....//
வேலை செய்யாதவனை சாட்டையால் அடித்து வேலை வாங்குவீர்களா?
SBI - பற்றி நினைவூட்டியதற்கு நன்றி, கம்ப்யூட்டர் கொண்டு வந்தால் வேலை
போய்விடும் என்று ஸ்ட் ரைக் செய்தார்கள். நான் இந்தியாவில் இருந்த காலத்தில்
வார இறுதியில் அரை நாள் SBI லைனில் நிற்பதற்கே செலவாகும்.
அவ்வளவு efficiency !
இங்கு ஏதோ ஒரு மாநிலத்தில் இருக்கும் வங்கியில் ஆன்லன் வைப்பு அகவுண்ட்
தான் உபயோகிக்கிறேன். வங்கிக்கு போக வேண்டியதே இல்லை.
//என்ரான்/
இவர்களை அமெரிக்க அரசாங்கம் ப்ரெட் சாப்பிட ஜெயிலுக்கு அனுப்பியாச்சு.
HBO is showing its own film known as "Strip Search", which I find a beautiful political movie.
Requesting your review on that film.
1.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் பேச்சு, எழுத்து உரிமைகள் என்னாகும்?
2. முந்தைய USSR ( Soviet Union) உண்மையான கம்யூனிச அமைப்பாக இருந்து பின்பு அதன் வீழ்ச்சி கம்யூனிசத்தின் தோல்வியாக ஏகாதிபத்தியங்களால் சித்தரிக்கப்படுகிறது. wHAT IS your comments on collapse of USSR?
3 திறமைக்கேற்ற வேலை தேவைக்கேற்ற ஊதியம்- நடைமுறையில் இது எப்படி சாத்தியமாகும்?
For example a cleaner in a municipality will get 10000 Indian Rupee & a Heart surgen 15000 INR ( Because this may be the case in a Communist system where everyone is a govt. employee and no private sector..). How will it work in the long run?? At one stage everyone wants to work in a less competitive & less headache, comfortable work environment. I read that in former Soviet even the actors in soviet films were paid by the government like an ordinary worker.
4. பொலிட்பீரோ தவறு செய்தால் யார் தட்டிக்கேட்பது?
5.ஒவ்வொரு தனிமனிதனும் திறமை, அறிவு, ஆளுமையில் வேறுபடும்போது வேறுபாடில்லாத சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்படும்?
5. How many countries truly practice communism as of Now? Why communist system is not adopted by other poor countries?? Why China adopt capitalist policies?
I have been reading Puthiya Jananayagam & Puthiya Kalacharam for more than 10 years.
I am a strong supporter of MA.KA.I.KAõ.
I send a set of questions to MA.KA.I.KA ( Puthiya kalachram) I did not receive any replies or articles published by them clarifying my questions.
எனது கேள்விகள் எளிய பாமரர்கள் புரியுமாறு கேட்கப்பட்டுள்ளது. என்னால் மிக உயர்வக மதிக்கப்படும் மக்கள் கலை இலக்கிய கழகம் இக்கேள்விகளுக்கு அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும்படி விளக்கம் தர வேண்டும். தமிழக சாதாரண மக்களில் எத்தனை பேருக்கு புரட்சி பற்றி தெரியும்? புரட்சிக்குப்பின்னால் எத்தகைய அரசு அமைப்பு இருக்கும்? ம.க.இ.க இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
I am a stong supporter of communist ideology. But I cannot practically understand some points.
அனானி, இசாத்,
தற்பொழுது அவகாசம் இல்லாத காரணத்தால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.
ஏனெனில் இருவரும் எழுப்பியுள்ளவற்றுக்கு பதில் சொல்லுவதற்க்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.
இரண்டு நாட்களில் பதிலிடுகிறேன்.
அனானி நான் பதிலிட்டவுடன் தங்களக்கு எப்படி தெரியப்படுத்துவது?
அதற்க்கு முன்பு, இந்த பின்வரும் பதிவை படித்தால் அனானியின் சில கூற்றுகள் அடிப்படையற்று இருப்பதை அவர் உணர வாய்ப்புள்ளது.
http://tamilarangam.blogspot.com/2006/08/blog-post.html
நன்றி,
அசுரன்.
இசாத தங்களது கேள்வியை இப்பொழுதுதான் படித்தேன்:
தங்களது கேள்வி எனக்கு கேட்கப்பட்டதா? அல்லது ம.க.இ.க விற்க்கு கேட்க்கப்பட்டதா?
ஏனேனில் தங்களைப் போலவே நானும் ம.க.இ.க வின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவன், அவ்வளவே.
மற்றபடி எனது சொந்த முயற்சியில்தான் கம்யுனிச தத்துவங்களை படித்து வருகிறேன்.
அதனால் தங்களது கேள்விகளுக்கு எனது சொந்த புரிதலில் பதில் சொல்கிறேன்.
சீனா பற்றிய கேள்விகளுக்கு முந்தைய பின்னூட்டங்களிலேயே பதில் இருக்கிறது. படித்துப் பார்க்கவும்
நன்றி,
அசுரன்.
முயுஸ்,
அந்த படம் எங்கே கிடைக்கும் என்று தகவல் கொடுத்தால் பார்த்து நமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வசதியாக இருக்கும்
நன்றி,
அசுரன்
ஆழ்ந்து படிக்கும் போது உங்கள் கருத்துக்கள் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கருத்துக்களை ஒத்து இருக்கின்றன. மேலும் இதுவரை எனக்கு கம்யூனிச சித்தாந்த்தத்தின், புரட்சியின் ஆதரவாளர்கள் இடமிருந்து இத்தகைய கேள்விகளுக்கு விடை பெற முடியவில்லை. எனவேதான் உங்கள் கருத்துக்களை கேட்டுள்ளேன்.
The questions are for you. In my understaning you are a strong supporter of Communism & Revolution (like P.Irayakaran (Tamil circle).
I personally thank you for all your efforts and your valuable time to write and clarify our questions dear Asuran.
இஸ்ஸத்
Requesting you to review the HBO movie "Strip Search", which will be telecasted on august 14th.
Details available on the following link:
http://www.hbosouthasia.com/southasia/movie/1212
இசாத் அவர்களுக்கு,
//1.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் பேச்சு, எழுத்து உரிமைகள் என்னாகும்?
பாட்டளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் அது முதலாளித்துவ சர்வாதிகாரம் போன்று நீங்கள் சிந்திக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உழைப்பவர்களுக்கான அனைத்து அதிகாரமும் வழங்கக்கூடிய அமைப்பு ஆகும்.
இதில் பேச்சு எழுத்துரிமைகள் இருக்கும். இந்த சர்வாதிகாரம் உழைக்கும் பொரும்பான்மை மக்களுக்கானது.
முதலாளித்துவ சர்வாதிகாரமும், பொதுவுடமை சர்வாதிகாரமும் வேவ்வேறானது, எதிர் எதிரானது.
இசாத் தங்களது கேள்விகள் மிகவும் பயனுள்ளவை. மேலும் இந்த கேள்விகளை அசுரனிடம் நீங்கள் கேட்டிருப்பதால், அவர் இது குறித்து விரிவாக பதிலளிப்பார். அதை நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இருப்பினும் என் பங்கிற்கு ஒன்றிரண்டு வரிகளில் பதில் கூற முற்படுகிறேன்.
1. தற்போதைய முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் பேச்சு, எழுத்து, ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்ற உரிமைகள் பாட்டாளிகளுக்கு மறுக்கப்பட்டதுபோலவே, எதிர்புரட்சிகர சக்திகளுக்கும், முதலாளித்துவ சக்திகளுக்கும் மறுக்கப்படும். ஏனெனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது 99 சதவீத மக்களின் ஜனநாயகம். முதலாளித்துவ சர்வாதிகாரம் என்பது 1 சதவீதத்தினரின் சர்வாதிகாரம். எனவே பரந்து பட்ட மக்களின் பேச்சு, எழுத்து, கருத்து உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, மேலும் விரிவுப்படுத்தப்பட்டு வளர்க்கப்படும்.
2. உலக கம்யூனிச இயக்கத்தில் சோவியத் யூனியனியன் தற்காலிகமாக பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கிறதே தவிர, அது தோல்வியடையவில்லை. மேலும் சோவியத் யூனியன் கம்யூனிசம் பெற்ற முதல் குழந்தை அதன் நடையில் பிசகல்கள் இருக்கும். இருந்தது. இதன் அனுபவத்தில் எதிர்கால சோசலிச உலகம் பிரகாரசமான ஒளியைப் பெற்றுள்ளது. இதுவே சோசலிச சக்திகளுக்கு பெரும் பலத்தினை கொடுத்துள்ளது. அடுத்து சோவியத் அரசு இருக்கும் வரை அது உலக தொழிலாளி வர்க்கத்திற்கும், உலக காலனி நாட்டு மக்களுக்கும் செய்த சேவைகளை எதற்கும் ஒப்பிட முடியாத அளப்பரிய சாதனைகள். சீரழிந்த முதலாளித்துவம் உலக மக்களை தன்னுடைய சுரண்டல் ஆயுதமாகத்தான் பார்த்ததே தவிர மிருகமாகக்கூட பார்க்க வில்லை.
3. தாங்கள் கூறியிருப்பது கம்யூனிச கட்டத்தில்தான் நடைபெறும். ஏன், தற்போது ஒரு புரிதல் உள்ள சின்ன குடும்பங்களை எடுத்துக் கொள்வோம். அந்த குடும்பத்தில் ஒரு சிலர் கைநிறைய சம்பாதிக்கலாம். ஒரு சிலர் வேலையில்லாமல் இருக்கலாம். அதற்காக வேலையில்லாத இளைஞர்களை வஞ்சிப்பதில்லையே! அவருக்கு வேண்டியதை அவர் எடுத்துக் கொள்ளும் உரிமைகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறதே. எனவே, கம்யூனிசம் என்பது மிக அதிகமான புரிதலுடன் - சமூக சிந்தனை வாய்ந்தது.
இசாத் அவர்களுக்கு,
//2. முந்தைய USSR ( Soviet Union) உண்மையான கம்யூனிச அமைப்பாக இருந்து பின்பு அதன் வீழ்ச்சி கம்யூனிசத்தின் தோல்வியாக ஏகாதிபத்தியங்களால் சித்தரிக்கப்படுகிறது.//
மார்க்சு பொதுவுடைமை அரசு எழுந்தால் அது மீண்டும் விழலாம். என்று முன்கூட்டியே தெரிவித்திருக்கிறார். ஆனால், அது மீண்டெழுவது தவிர்க்க இயலாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த வீழ்ச்சி தற்காலிகமானது தான். இது பொதுவுடைமைத் தத்துவத்தின் வீழ்ச்சியல்ல தற்காலிக பின்னடைவு அவ்வளவுதான்.
எப்போது முதலாளித்துவம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, இது போலி பிரச்சாரம். நம்ப வேண்டாம்.
பொதுவுடைமையின் வெற்றி காலத்தின் கட்டாயம். ஆனால், அதற்கான காலம் தொலைவில் கூட இருக்கலாம்.
தோழர்கள் சந்திப்பு, இரா. சுகுமாரன்,
இருவருக்கும் எனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கம்யுனிசம் பற்றி நடுத்தரவர்க்க மக்களுக்கு இருக்கும் கேள்விகளை கேட்டு அதற்க்கான விளக்கத்தை அனைவரும் படித்து தெளிந்து கொள்ள வாய்ப்பளித்த இசாத அவர்களுக்கு மிக்க நன்றிக் கடன் பட்டுள்ளோம்.
இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து அதன் மூலம் பல விசயங்களை பொது தளத்தில் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த அனானி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
தற்பொழுது எனது வேலைச் சூழல் இடம்தராதலால் மிக அத்தியாவசியமான விசயங்கள் தவிர்த்து எனது இணைய உலா வரம்பிட்குட்ப்பட்டது. நான் ஏற்கனெவே சொன்னபடி நாளை உறுதியாக அனானி, மற்றும் இசாத்துக்கு பதில் அளிக்கிறேன்.
நல்ல ஆக்கப்பூர்வமான கம்யுனிச விவாதத்திற்க்கு இது ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும் என மனது விரும்புகிறது.
நன்றி,
அசுரன்.
முயுஸ்,
நன்றி....அந்த படத்தை பார்த்து எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அசுரன்
இசத் சார்,
டாக்டரும் 8 மணி நேரம்தான் உழைக்கிறார். கடைநிலை ஊழியரும் எடு மணி
நேரம் உழைக்கிறார். அனைவருக்கும் ஒரே ஊதியம் இருக்கும்போது அவரவர்
திறமை, ஆர்வத்துக்கு ஏற்ற வேலை செய்வார்கள். இப்பொழுது இந்தியாவில்
பாருங்கள், பிரமாதமாக வரையக் கூடியவன் மருத்துவக் கல்லூரியில் மாங்கு
மாங்கென்று படிக்கிறான், காசுக்காக. சிறந்த ஓவியனாக விருப்பம்
இருந்தாலும், அதன் வருமானத்தை கணக்கு போட்டு கடைசியில் ஒரு
soso டாக்டராகிறான்.
அசுரன்,
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். அப்படியே இன்னொரு கேள்வி.
இந்த பிடெல் கேஸ்ற்றோவுக்கு அடுத்து அவர் தம்பியை விட்டால் வேறு
ஆளே அந்த நாட்டில் கிடையாதா? தத்துவம் வேறு, அமைப்பு வேறு.
தத்துவத்தை செயல்படுத்த சரியான அமைப்பு வேண்டும். இல்லையெனில்
தடம் புரண்டு போய்விடும்.
//கம்யுனிசத்தின் வெற்றிக்கு அந்த நாட்டை உதாரனமாக கூறலாம்/
எதை வெச்சி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.க்யுபா நாட்டு மக்கள் இன்னும் ஏழையாகதான் உள்ளனர்.கம்யுனிசம், ஒரு நல்ல சிந்தாந்தம் என்றால் க்யுபா மக்களை ஒரு நல்ல நிலைமைக்கு அது கொண்டுவந்திருக்கும்.மக்களின் துயரம் கம்யுனிசத்தின் வெற்றியா?
இன்னொரு விசயம்,கம்யுனிச நாட்டில் தேர்தலே நடக்காதமே?அப்படியென்றால் ஏன் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டிடுகின்றன?அதுவும் மற்ற கட்சிகளின் முதுகில் ஏறிக்கொண்டு...வெட்கமா இல்லை உங்களுக்கு?உங்களுக்கும் திராவிட கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?
நான் நேற்று இட்ட பின்னூட்டத்தில் ஒரு சிறு தவறு உள்ளதால் அதை மறுபடியும் இடுகிறேன்.
//க்யுபாவைப் பற்றி சுருக்கமாக:
அங்கு உண்மையில் சோசலிச கட்டுமானத்திற்க்கான வேலைகளை ஆரம்பிக்க ஏதுவான சுழல் உள்ளது. ஆனால் இன்னமும் முழுவீச்சில் அதற்க்கான வேலைகளை ஆரம்பிக்கவில்லை என்று நினைக்கிறென்.
அது ஒரு முழுமையான கம்யுனிச நாடு என்று சொல்ல >>முடியாது<<. இருந்துக் கூட கம்யுனிசத்தின் வெற்றிக்கு அந்த நாட்டை உதாரனமாக கூறலாம்.
அவர் தம்பியை எந்த வழிவகையில் அவர் அடுத்த தலைவராக்கியுள்ளார் என்று தெரியவில்லை.
அங்கு இருப்பது கம்யுனிஸ்டு கட்சி( நான் அப்படித்தான் நம்புகிறேன்) என்று அவர் கூறுவாரேயானால், கட்சி மத்திய கமிட்டி கூடித்தான் இந்த முடிவை எடுத்திருக்கும் என்று நம்பலாம்.
அமைப்பு பற்றிய தங்களது கருத்து சரியே
நன்றி,
அசுரன்
//
முந்தைய க்யுபா-அனானி,
//கம்யுனிச நாட்டில் தேர்தலே நடக்காதமே?அப்படியென்றால் ஏன் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டிடுகின்றன?அதுவும் மற்ற கட்சிகளின் முதுகில் ஏறிக்கொண்டு...வெட்கமா இல்லை உங்களுக்கு?உங்களுக்கும் திராவிட கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்? //
வெறும் பின்னூட்டத்தை மட்டும்தான் படித்து கருத்துச் சொல்வீர்களா?
அதுவும் கடைசி பின்னூட்டங்களை.....
சோசலிச நாட்டில் - தேர்தல், ஜனநாயகம், கட்சி மற்றும் அரசு நிர்வாகம் பற்றி சுருக்கமாக சில பின்னூட்டங்களையும், கட்டுரையில் சில விசயங்களையும் இட்ட பிற்ப்பாடும் அவற்றையெல்லாம் படிக்காமல்(மூளை சோம்பெறித்தனம்), வக்கனையாக கேள்வி கேட்பது அசிங்கமாக உள்ளது.
கம்யுனிசத்தில் ஜன நாயகம் இன்றைய முதலாளித்துவ போலி ஜன் நாயகத்தைவிட ஆயிரம் மடங்கு அற்புதமானது. எனது முந்தைய பின்னூட்டங்களை படிக்கவும்.
மேலும் இந்திய ஜன நாயகம் போலி ஜன நாயகம் என்பதையும், இந்திய தேர்தல் போலி என்பதையும் பல இடங்களில் வலியுறுத்திதான் எனது பல பதிவுகள் உள்ளன. அவற்றையும் படிக்காமல் கருத்துச் சொல்லுவது,,....அன்பரே தங்களது வேட்டி கழண்டுவிட்டது.
வோட்டு போடாதே , புரட்சி செய்! என்னும் ம.க.இ.க வின் முழக்கங்களால் ஈர்க்கப்பட்டவன் நான்.
//எதை வெச்சி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.க்யுபா நாட்டு மக்கள் இன்னும் ஏழையாகதான் உள்ளனர்.கம்யுனிசம், ஒரு நல்ல சிந்தாந்தம் என்றால் க்யுபா மக்களை ஒரு நல்ல நிலைமைக்கு அது கொண்டுவந்திருக்கும்.மக்களின் துயரம் கம்யுனிசத்தின் வெற்றியா?//
எதையும் படிக்காமல் அடுத்தவர் சொல்லுவதையும் மனதில் தோன்றுவதையும் வைத்து தாங்கள் கருத்துச் சொல்லுபவர் என்பது எனது ஒரே பின்னூட்டத்தை வைத்து தாங்கள் ஒட்டு மொத்தமாக எழுப்பிய கேள்விகளிலிருந்தே தெரிகிறது.
க்யுபா பற்றிய தங்களது அறியாமையை எண்ணி நான் வியக்கவில்லை. க்யுபா பற்றி 8 மாதங்களுக்கு முன்பே சில கடிதக் கட்டுரைகள் எழுதியிருந்தேன் அதை மறுபிரசூரம் செய்யும் திட்டமிருந்தது. தங்களுக்காக அதிலிருந்து சில
தகவல்கள்:
# க்யுபாவிற்க்கு நீர் என்ன சர்டிபிகேட் தருவது. அமேரிக்கா செப் 11 யை ஒட்டி க்யுபாவையும் 'ஆக்ஸிஸ் ஆப் ஈவில்' என்று கூறி கூவிக் கொண்டிருந்த பொழுது, ஐநாவின், WHO க்யுபாவை உலகின் சிறந்த ஜன நாயகம் என்று கூறியது. அதற்க்கு காரணமாக, அந்த சிறிய நாட்டின் மீது 40 வருடங்களூக்கும் மேலாக அமேரிக்கா பொருளாதார தடை போட்டு வைத்துள்ளது. அதை மீறி அந்த நாடு கரும்பு ஒன்றை மட்டுமே பிரதான பொருளதாரமாக கொண்டு மிகச் சிறப்பாக மக்களுக்கு செவை செய்கிறது என்று WHO கூறியது(அதாவது கனடா போன்ற மக்கள நலனுக்கு அதிகமாக செலவிடும் நாடுகளுக்கு இணையாக க்யுபா அந்த கஸ்டத்திலும் செலவிடுகிறது). மேலும் ஜன நாயகம் என்று WHO கூறீய காரணம்: எந்த ஒரு அரசு தனது மக்களுக்கு - கல்வி, மருத்துவம், சுற்றுச் சூழல், வேலை வாய்ப்பு (இன்னும் சில விசயங்கள் மற்ந்து விட்டன) இவற்றிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதோ அந்த அரசு ஜன நாயகமான அரசு என்கிறது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் க்யுபா கம்யுனிசத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
# க்யுபா டாக்டர்களின் புகழ் உலக முழுவதும் பிரபலம். இமாலயத்தில் நில நடுக்கம் வந்த போது கடைசி சில மாதங்கள்(குளிர் கடுமையாக இருக்கும் மாதங்களில்) எல்லா நாட்டு நிவாரண பணீயாளர்களும் தங்களது சேவையை குறைத்துக் கொண்டார்கள். க்யுபா மட்டுமே கடைசிவரை முழு வீச்சில் சேவை செய்தது(இது பற்றி அந்த சம்யங்களில் வந்த கட்டுரைகளை அலசவும்).
# க்யுபா டாக்டர்கள் ஆப்பிரிக்காவில் சேவை செய்யும் ஐ. நா டாக்டர்களின் எண்ணீக்கையை விட அதிகம்.
#தங்களது பிரியமான அமெரிக்காவின் கேவலத்தை சிறிது பாருங்கள்: கேத்ரீனா சூறாவளி தாக்கிய பொழுது பக்கத்து மா நிலமான டெக்ஸாஸ் கவர்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு துடைக்க ஒரு துண்டு கொடுக்கக்கூட வக்கற்று, அவர்களை மா நிலத்தின் உள்ளே வரவிடாமல் செய்தார். அதற்க்கு அவர் கூறிய காரணம். டெக்ஸாஸில் எல்லாமே தனியார்மயம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாரிடமிருந்து துட்டு கொடுத்து வாங்கி செய்யும் அளவு பணமில்லை என்று. இதே நேரத்தில் அங்கு சுமார் 300 க்யுப டாக்டர்கள் மருத்துவ சேவை செய்ய விரைந்தனர்.
# ஒரு நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் என்ற உண்மையை மனதில் கொண்டு, குழந்தைகள் ஆரோக்கியமாக படிக்க அரசு நிர்ணயம் செய்துள்ள ஊட்டச்சத்து எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்க்காக ஒரு நாடே தீய்ந்த ரோட்டிகளை காலை உணவாக உண்கிறது. அந்த நாட்டில் பெட்ரோல் இறக்குமதியை குறைத்தால் மிச்சமாகும் பணத்தால் குழந்தைகளுக்கு நல்ல உணவும் படிப்பும் கொடுக்கமுடியும் என்று கார்கள் ஓட்டுவதை குறைத்துக் கொண்ட நாடு. இவையெதுவும் அரசு நிர்பந்தித்து செய்யப்பட்டதல்ல. அதனால்தான், தமது வளர்ச்சியில் ஒட்டு மொத்த நாட்டின் பங்கு இருப்பதை உணர்ந்ததால்தான் க்யுபா இளைஞர்கள் டாக்டர்களாக உலகம் முழுவதும் சேவை செய்து வருகிறார்கள். IIT-யில் அரசாங்க வரிபணத்தில் பட்ட்ம் வாங்கிவிட்டு ஓடும் கூட்டத்தின் மன நிலையை இங்கு ஒப்பிட்டு பார்க்கவும். உலகின் 50% malnutirtioned குழந்தைகள் இந்தியாவில் இருப்பதை ஒப்பிட்டு பார்க்கவும்(இந்த அளவு சஹாரா பலைவனத்தில் உள்ள அளவைவிட மோசம்), உலகில் குழந்தைகளுக்கு ஆபத்தான நாடுகளின் தரவரிசையில் இந்தியா ஆறாவது இடம்.... நல்ல ஜன நாயகமான நாடுதான் நம்ம நாடு.
# கரும்பு விவசாயத்தி நம்பி க்யுபாவை ரொம்ப காலத்துக்கு ஓட்ட முடியாது என்று உணர்ந்து தற்பொழுது வேறு விசயங்களுக்கு மாறிவருகிறார்கள். ஆனால் அது இந்தியாவில் நடப்பது போல் எட்டு வருடத்தில் லட்சம் விவசாயிகளை காவு கொடுத்து(இது அரசாங்க கணக்கு, உண்மையான கணக்கு இதுபோல் இரு மடங்கு இருக்கும்) அவர்கள் செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு நவீன தொழில் நுடபங்கள் பற்றி பயிற்சி அளித்து இதை செய்கிறார்கள். புரட்சி நடந்து குறுகிய காலத்தில் 100 % கல்வியறிவு பெற்ற நாடுகள் கம்யுனிஸ்டு நாடுகள் மட்டுமே.
க்யுபாவால் நிலைத்து நிறக்கமுடியுமா என்பது கம்யுனிசத்தை எந்த அளவுக்கு சரியாக நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதீல் அடங்கியுள்ளது. நான் கேள்விப் பட்டவரை கம்யுனிசத்தை அங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இது உண்மையில் அதிகமாக கவலையளிக்கும் விசயம்.
மற்றபடி க்யுபா-அனானி எனது மற்ற கட்டுரைகளையும் படித்து விமர்சனம் செய்யுங்கள் அரைகுறையாக வாந்தி எடுத்து அசிங்க்ப்படாதீர்கள்.
நன்றி,
அசுரன்.
சில தகவல்கள்:
Vote against US economy Blockade on Cuba at UN...This USA never have respected. The economic Blockade is 46 year old.
1992 59
::::::::::::::::::::::::::
::::::::::::::::::::::::::
1997 137
.........................
2000 167
2003 139
2005 182
**********************************
Some more excerpts as i find this is worth sharing....I request everybody to spend time and read this and compare what is happening in our country....
we privatise health care, We cut supsidy to food while hunger deaths are happening...
Sugar is the only means of business in Cuba when it liberated.....They didn't kill their farmers to make their country relying on some other means of economy..
But look what is happening in our country....For doing nothing good for anybody we are killing every day our rural population.....
People who have conscience will think.... where we are going???
Interveiw with Sergio Corrieri Hernandez is President of ICAP-Cuban Institute of Friendship with the Peoples....
Cuba was for a long time dependent on sugar exports. How important is it now?
Sugar is not the business to be in. There is no future in it. The price of sugar in the international market is lower than its cost of production. It is only viable in countries where growers are subsidised. The European Union pays 24 cents a pound to its sugar farmers but sugar in the world market sugar is traded for five to six cents a pound.
But what about farmers who used to grow sugar in Cuba earlier? How are they coping?
The decision to move out of exporting sugar was a planned move. It did not happen suddenly. We rehabilitated sugarcane growers by providing them other avenues. Many hundreds of them went to study. I can assure you that nobody is on the streets without work. Of course, Cuba still produces some sugar for its needs (including industrial needs such as alcohol). But sugarcane is not very important now. In rural Cuba, cattle rearing is a very important occupation. Growing fruits and vegetables is also a very important source of livelihood.
We also have a massive plan - we call it "Agriculture in the Cities" - to use every piece of land available in the urban areas. This gives employment to thousands of people. Agriculture in Cuba has been difficult in recent times. We had dry weather for many years and in 2005 we were hit by three hurricanes.
Cuba has gone through a major crisis in the last decade. How did the country manage to sustain investment in the social sectors, particularly health and education?
It has been difficult. In many fields we have been unable to invest. For instance, for many years we lacked medicines. Some of the needs were met by donations from people all over the world. We had the pharmaceutical factories but we did not have access to raw materials for producing drugs. But gradually we managed to revive these units. During the past year the pharmaceutical industry has grown 26 per cent. We are now self-sufficient to the extent of 80 per cent of our needs of pharmaceuticals. But because of the blockade, importing the drugs we need is sometimes very difficult. The situation is improving slowly but you must not imagine that all the problems have been solved in Cuba. There are still many problems and some aspects of daily life in Cuba are very difficult.
Let me try and explain the situation in Cuba while comparing it with other countries. Many things that are extraordinary in other countries are quite ordinary in Cuba; but there are also some things which are quite common in other countries but are extraordinary in Cuba. For example, a heart operation which costs $200,000 in other countries is completely free for all Cubans. The son of an ordinary worker can attend the best ballet school in Cuba and if he has the talent he could go on to become the best dancer of the company he represents. There is no discrimination on the basis of race or sex in Cuba. You do not have to belong to a rich or famous family to do these things in Cuba. But we also have problems with many necessities of daily life. In many countries transportation is not a problem at all. But in Cuba people may have to wait for a long time to get a bus. This may appear to be paradoxical and difficult for our friends from other countries to understand.
நண்பர் இசாத்திற்கு,
//3 திறமைக்கேற்ற வேலை தேவைக்கேற்ற ஊதியம்- நடைமுறையில் இது எப்படி சாத்தியமாகும்?
For example a cleaner in a municipality will get 10000 Indian Rupee & a Heart surgen 15000 INR (Because this may be the case in a Communist system where everyone is a govt. employee and no private sector..). How will it work in the long run?? At one stage everyone wants to work in a less competitive & less headache, comfortable work environment. I read that in former Soviet even the actors in soviet films were paid by the government like an ordinary worker. //
திறமைக்கேற்ற வேலை, தேவைக்கேற்ற ஊதியம் என்பது சாத்தியமான ஒன்றுதான்.
உற்பத்தியும், உடமைகளும் பொதுவாக இருப்பதால் இது சாத்தியமாகிறது. அதாவது, நீங்கள் குறிப்பிடும் நகராட்சி ஊழியர் குடும்பத்தில் 10 பேர் இருப்பார்கள் எனில் ஒருவருக்கு 1000 எனப் பிரித்து 10,000/- தேவைக்கான ஊதியம் வழங்கப்படும். அதே போல், மருத்துவர் குடும்பத்தில் 2 பேர் இருந்தால் அவர்க்ளுக்கு தேவையான ஊதியமாக 2,000 மட்டும் வழங்கப்படும். மற்றும் அவர் அவர் பணி தொடர்பான வசதிக்காக வேண்டுமானால் கூடுதல் தொகை வழங்கப்படுமே தவிர வேறு வகையில் கூடுதல் ஊதியம் பெற வாய்ப்பு இல்லை.
உற்பத்திகள் பொதுமைப்படுத்தப்படுவதால், பிரச்சனை ஏதும் இல்லை. வீடு, மருத்துவ வசதி, கல்வி, உள்ளிட்ட எல்லாவற்றையும் அரசு வழங்துகிறது. கல்வியும் மக்கள் பணத்தில் வழங்குவதால், அதன் பயனை மக்கள் பயன்பாட்டிற்கே உபயோகிக்கிறார்கள். மருத்துவர் படிப்பு என்பதற்காகவே, அல்லது வேறு பணி என்பதற்காக சிறப்பு சலுகை ஏதும் அங்கு இல்லை.
Thank you so much Mr.Sukumaran, Santhippu, Anonymous and Asuran for answering to my questions.
I will write my comments after reading all your comments within 1 or 2 days.The whole web is full of capitalist supporters and Hindutva forces.I am so happy to know that there are comrades like you guys advocating communism and Marxist lensnist ideology in the web.
Once again thank you for your efforts and time to answer my questions.
Izzath
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் பிற்போக்கு சக்திகள் எப்படி நயவஞ்சகமாக நல்லவர்கள் போல் நடித்து பிரச்சாரம் செய்வார்கள் என்று பார்க்க விரும்புகிறவர்கள் தேவர் பற்றிய $சல்வனின் சமீபத்திய கட்டுரையை படிக்க பரிந்துரைக்கிறேன் அவரது கோக் கட்டுரையையும் சேர்த்து படித்தால் இன்னும் சிறப்பாக அந்த வர்க்கத்துடன் அறிமுகமாகிக் கொள்ளலாம்.(அவருடைய மற்றைய கட்டுரைகள் அனைத்தும் அந்த வகையே ஆனாலும் இந்த கட்டுரைகள் சாதரண வாசகனும் புரிந்து கொள்ளும் அளவு அப்பட்டமாக நடிக்கும்)
நன்றி,
அசுரன்
1.ஒவ்வொரு தனிமனிதனும் திறமை, அறிவு, ஆளுமையில் வேறுபடும்போது வேறுபாடில்லாத சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்படும்? இக்கேள்விக்கு உங்கள் கருத்து என்ன?
2.இப்போதைய கால சூழலில் எல்லா மனிதர்களும் சுய நலம் பிடித்தவர்களாக இருக்கும் போது எத்தனை பேர் கம்யூனிச புரட்சிக்கு ஆதரவு தருவார்கள்?? அப்பா, மகன் , பேரன் என்கின்ற 3 தலை முறையில் உதாரணமாக அப்பா, மகன் - தலை முறை புரட்சிக்கு ஆதரவு கொடுத்து பொதுவுடைமை சித்தாந்த்தத்தின் அடிப்படை புரிந்து உழைப்பார்கள் அதன் பின்னால் வரும் தலை முறையினர் எதற்காக கஷ்டப்பட்டு படிக்க, உழைக்க வேண்டும் என்கின்ற மன நிலைக்கு தள்ளப்படுவார்கள். I think this particular issue happened in USSR with generations of 1980, 90. எனது புரிதலில் கம்யூனிச அடிப்படைகள் ஒவ்வொரு தனி மனிதணும் சமூக அக்கறையுடன் மனதளவில் ஏற்றுக்கொண்டு பிறருக்காகவும், தான் சார்ந்து இருக்கும் சமூகத்திற்காகவும் தன் அறிவையும் தனிப்பட்ட திறமைகளையும் உழைப்பையும் பங்கிட்டுக்கொள்வது. இத்தகைய சுயநலமில்லாத மனப்பக்குவத்தை எவ்வாறு ஏற்படுத்துவது??
பாட்டாளி வர்க்க சர்வாதிகார புரட்சி மூலமாக கட்டாயப்படுத்தி இத்தகைய மனப்பக்குவத்தைக் கொண்டுவந்த்தாலும் காலம் காலமாக வரும் புரட்சிக்கு பிந்தைய தலை முறையினறும் இக்கோட்பாடுகளை பின்பற்றுவார்களா?? முக்கியமாக நடுத்தர வர்க்க, பணக்கார வர்க்க மக்கள் தங்கள் சொத்து சுகங்களை விட்டு விட்டு பாட்டாளி வர்க்க மன நிலைக்கு வருவார்களா??
சினிமா, ஓட்டுப்பொறுக்கி அரசியலில் சிக்கி சீரழியும் தமிழக மக்களில் எத்தனை பேருக்கு இத்தகைய கோட்பாடுகளில் நம்பிக்கையும் உடன்பாடும் உள்ளது?? Please take your time to think about these questions.
Among your close friends how many of them can be convinced by you to agree with the ideology of communism??
3.What is the core difference between CPI- M vs MA.KA.I.KA, PWG & other naxal groups??? இடதுசாரி இயக்கங்கள் ஏன் பிரிவு பட்டு தங்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள்?
CPI, CPI-M அளவுக்கு MA.KA.I.KA, PWG, RSU, போன்ற புரட்சி ஒன்றே தீர்வு என போதிக்கும் இயக்கங்கள் வெகு ஜன மக்களிடையே அறியப்படாமல் உள்ளன. உங்கள் கருத்து என்ன?
I understand that There are exploitation against poor & landless, Globalisation, privatization, Growing Poor-Rich gap, anti-people , anti-poor policies, communalisation, Governmentt sponsored terrorism and N number of problems in India and throughout the globe. How do we oppose these evils? Is Revolution is the only cure for all these problems???
எல்லா பிரச்னைகளுக்கும் புரட்சிதான் தீர்வு என்று அதற்காக உழைக்க வேண்டுமா?
Please write your views about this.
மிக்க நன்றி
இஸ்ஸத்
இசாத்,
தங்களது ஆர்வம் உற்சாகமளிக்கிறது.
தங்களது முந்தைய கேள்வி, இப்போது கேட்டுள்ள கேள்வி, இந்தப் பதிவுக்கு காரணமான அனானியின் முந்தைய கேள்வி எல்லாவற்றுக்கும் பதில் சொல்லுவது உண்மையில் நாம் நம்புகிற கருத்துக்களை மற்றவர்களுக்கு கொண்டு செல்லக் கிடைத்த வாய்ப்பு.
இவைகளுக்கு பதில் சொல்வேன். தொடர் வேலைப் பளு என்னை, இந்த விசயத்தில் சிறிது ஆழ்ந்து ஈடுபட்டு பதில் சொல்ல வேண்டியுள்ளதால், தடுக்கிறது. அதனால் கொஞ்சம் அதிகப்படியான தாமதம்.
அடிப்படைக் கேள்விகளல்லாவா.....
தொடர்ந்து கேள்விக் கனைகளை தொடுத்து எனது ஆர்வத்துக்கு உரம் போடுங்கள் :-)
நன்றி,
அசுரன்
Dear Asuran,
Take your own time to post your comments. It is not so urgent. I am thankful to you for your valuable comments and your contribution.
Anbudan
Izzath
நன்றி இஸ்ஸத்
இனி உங்களுக்கு வலைப்பதிவர்களுக்கு அளிக்கு உடனடி பதில் போல் நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
எனவே நாளை விளக்கமாக எழுதுகிறேன்.
உங்களின் ஆர்வத்திற்கு நன்றி பொதுவுடைமை என்றால என்ன என்று தங்களின் அறியும் ஆர்வம் குறித்து மகிழ்ச்சி.
சுகுமாரன்
இசாத் உங்களின் கேள்வி
1.ஒவ்வொரு தனிமனிதனும் திறமை, அறிவு, ஆளுமையில் வேறுபடும்போது வேறுபாடில்லாத சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்படும்? இக்கேள்விக்கு உங்கள் கருத்து என்ன?
நீங்கள் உள்ளார்ந்து சிந்திக்கிறீர்கள்.
இன்னும் நன்றாக சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கே பதில் விளங்கும்.
எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப் படும். என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மனிதன் சிவப்பாகவோ கருப்பாகவோ, உயரமாகவோ, குள்ளமாகவோ பிறந்தால் பொதுவுடமை கொள்கைகள் மூலம் அவை சரி செய்ய இயலாது. அது மரபியல் சார்ந்த விசயம்.
கூட்டறவே நாட்டுயர்வு என்று சொல்கிறார்கள் இல்லையா அது தான் பொதுவுடைமை. எல்லோரும் சேர்ந்து எல்லா மக்களின் உயர்வுக்காக உழைப்பது.
//////
//போட்டியை ஒழிப்பது ஏகாதிபத்தியம்.//
இந்தியாவில்தான் மொனாபலி கொடி கட்டி பறக்கிறது.
பெப்சியும், கோக்கும் போட்டியாளர்கள்.
மைக்ரோசாப்ட்டின் போட்டி ஒழிப்பு வழிமுறைகளை எதிர்த்து அமெரிக்க
பெற்றல் அரசாங்கமும் ஏகப்பட்ட மாநில அரசாங்கங்களும் வகைவகையாக
antitrust வழக்குகள் போட்டதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஐரோப்பிய
யூனியன் மைக்ரோசாப்டுக்கு 357 மில்லியன் டாலர் பெனால்டி போட்டது.
ஒரு "நாளைக்கு" ஒரு மில்லியன் டாலர் பைன் போடுவேன் என்று சொன்னார்கள்.
ஆனால் இந்தியாவில்தான் பில் கேட்சுடன் நம் அரசியல்வாதிகள் கோபாலபுரத்திலிருந்து
இளித்தபடி போஸ் கொடுக்கிறார்கள்.
வால் மார்டுக்கு ஏகப்பட்ட போட்டி உள்ளது. மற்றவர்களை விட இவர்கள் திறமையாக
செயல்படுகிறார்கள்.வால்மார்ட் வங்கி துறையில் நுழைய பெரும் முயற்சி செய்து
அரசாங்கத்திடம் அனுமதி பெற முடியவில்லை.
ஆனால் இந்தியாவில் பல்பொடியிலிருந்து பெறட் ரோ கெமிகல் வரை
அனைத்து தொழில்களையும் அம்பானியும், டாடாவுமே செய்யலாம் என்று
பட்டயம் எழுதி கொடுக்கிறார்கள்.
கடந்த ஐம்பது வருடங்களில் இந்திய அரசு எத்தனை மொனொபலிகளுக்கு
எதிர் வழக்கு போட்டிருக்கிறது? சன் டிவியை எதிர்த்து வழக்கு போட்டதா?
இந்தியாவில் இருப்பது க்ரோனியிசம்.
கம்யூனிசம் என்ன புதுசா? பழங்காலத்தில் அனைவரும் உழைத்ததை ஒரே
இடத்தில் கொட்டி வைத்து பகிர்ந்து கொண்டார்கள். பின்னாளில்
பகிர்ந்து கொடுப்பவர்களே நிலச்சுவாந்தார்களாக மாறினார்கள்.
//
மாறாக புரட்சிக்கு பிந்தைய சமூகத்தில் உழைப்பு சிறைகள் இருக்கும்
(சிறைகளில் கூட சும்ம உட்கார்ந்து திங்க முடியாது).....//
வேலை செய்யாதவனை சாட்டையால் அடித்து வேலை வாங்குவீர்களா?
SBI - பற்றி நினைவூட்டியதற்கு நன்றி, கம்ப்யூட்டர் கொண்டு வந்தால் வேலை
போய்விடும் என்று ஸ்ட் ரைக் செய்தார்கள். நான் இந்தியாவில் இருந்த காலத்தில்
வார இறுதியில் அரை நாள் SBI லைனில் நிற்பதற்கே செலவாகும்.
அவ்வளவு efficiency !
இங்கு ஏதோ ஒரு மாநிலத்தில் இருக்கும் வங்கியில் ஆன்லன் வைப்பு அகவுண்ட்
தான் உபயோகிக்கிறேன். வங்கிக்கு போக வேண்டியதே இல்லை.
//என்ரான்/
இவர்களை அமெரிக்க அரசாங்கம் ப்ரெட் சாப்பிட ஜெயிலுக்கு அனுப்பியாச்சு.
//////
அனானி,
ஏகாதிபத்தியம் என்பது இந்தியாவில் இல்லை என்பது தங்களது புரிதலா?
இந்தியா ஏகாதிபத்தியங்களால் சூரையாடப்படுவதைத்தான் போன மாதம் முழுவதும் பல்வேறு பத்திரிக்கைகளில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளே புலம்பினார்கள்.(WTO -ஆல் இந்தியாவிற்க்கு எந்த நன்மையும் இல்லையென்று).
இந்தியாவில் மோனோபோலி பல இடங்களில் தெளிவாக இல்லை என்பதன் காரணமும், இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி கடுமையான ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளது என்பதையும் பொருத்திப் பார்க்க இயல்கிறதா?
அப்படி குறுகிய காலத்தில் மோனோபாலி செய்யும் அளவிற்க்கு இந்தியா சிறிய நாடு கிடையாது.
அப்ப்டியொரு மோனோபோலியை இந்தியாவில் உருவாக்கும் கவந்த பசியுடன் தான் ஏகாதிபத்தியம் இங்கு முகாமிட்டுள்ளதை தங்களால் உணர முடிகிறதா?
இந்தியாவின் மிகப் பெரிய சந்தை சிறு முதலீட்டாளர்கள்/விவசாய இடு-விளை பொருள்/சில்லறை விற்பனையாளர்கள் கையில், இருப்பது தங்களுக்கு தெரியுமா?
இந்த சந்தையையும், வேளான் இடுபொருள், விளைபொருள் சந்தையையும், கிராம வளங்களையும் கைப்பற்றுவதுதான் இந்தியாவை பொறுத்தவரை WTO வின் திட்டங்களில் ஒன்று என்பது தெரியுமா?
நீங்கள் குறிப்பிட்ட வழக்குகள் பில்கேட்சின் பிசினஸ் பாதித்ததா?
அல்லது உலகளாவிய MNCக்களின் மோனோபாலியில் ஏதேனும் பாதிப்பு ஏற்ப்பட்டதா?
வால்மார்ட்டின் திட்டங்களை (அது தனது எதிரிகளை ஒழித்துக் கட்டும் முறைகளை) அதனது போன வருட போர்ட் ஆப் மெம்பர்ஸின் அறிக்கையை அனுப்பினால் நம்புவீர்களா(என்னிடம் ஒரு காப்பி உள்ளது)?
நீங்கள் சொல்லும் வழக்குகள் தீர்ப்புகள் எல்லாம் MNCக்கள் தங்களுக்குள் செய்துகொள்ளும் கட்டைபஞ்சாயத்துதான். இது ஏகாதிபத்தியங்களுக்கு இடையே உள்ள போட்டியின் ஒரு வெளிப்பாடுதானே ஒழிய, போட்டியை ஏகாதிபத்தியம் உக்குவிக்கிறது என்பதற்கு ஆதாரம் கிடையாது.
Cokeஆல் பாதிக்கப்பட்ட ஒரு தேசிய முதலாளி(வெள்ளையன் சங்கத்தில் உள்ள ஏதேனும் ஒரு வணிகர்) வழக்கு போட்டு வெற்றி பெற்ற கதையை எனக்கு சொல்லுங்களேன்....
வழக்கு போடுவதை விடுங்கள்... வால்போஸ்டர், நோட்டீஸ் கூட போடக்கூடாது என்று DGP எழுதிக் கொடுத்தது தொலைக்காட்சிகளில் நாறவில்லை?
ஆக, நீங்களே குறிப்பிட்டது போல இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளால் MNCக்களின் கால் தூசியைக் கூட தொட முடியாது.
//கம்யூனிசம் என்ன புதுசா? பழங்காலத்தில் அனைவரும் உழைத்ததை ஒரே
இடத்தில் கொட்டி வைத்து பகிர்ந்து கொண்டார்கள். பின்னாளில்
பகிர்ந்து கொடுப்பவர்களே நிலச்சுவாந்தார்களாக மாறினார்கள்.//
இரண்டு சூழ்நிலைக்கும் வித்தியாசம் உள்ளது. இன்று மனித சமூகம் மொத்தத்திற்க்கும் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் அளவில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துள்ளது. மனித சமூகமும் மொத்தமும் உற்பத்தியில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் வினியோகத்தை சிலர் கையில் வைத்திருப்பதுதான் பிரச்சனை. இந்த வினியோகத்தில் உள்ள் தனிமனித உடமையை உடைப்பதுதான் கம்யூனிச புரட்சி.
இந்த இடைப்பட்ட காலத்தில்(பழைய மற்றும் புதிய பொதுவுடைமை இடையே உள்ள காலத்தில்) மனித அறிவு வளர்ச்சி, மனித பன்பாடு வளர்ச்சி, தனிஉடமையின் அபாயத்தை அனுபவப்பூர்வமாக உணரந்த மனிதன் என்று பல வித்தியாசங்கள் உள்ளன. நீங்கள் பார்ப்பது போல் இயந்திரகதியில் ஒரே பரிணாம வளர்ச்சி பாதையை(அதாவது இப்போது உருவாகும் பொதுவுடைமை சமூகம் மீண்டும் தனிவுடைமை ஆகும் என்று) இரண்டு சமூகங்களும் தேர்ந்தெடுக்கும் என்று நீங்கள் பயப்படுவது அவசியமில்லாத(baseless) பயம் :-))
//வேலை செய்யாதவனை சாட்டையால் அடித்து வேலை வாங்குவீர்களா?//
ஏன்? அதில் உங்களுக்கு ஏதேனும் வருத்தம் உள்ளதா?
உண்மை என்னவெனில் எல்லா விசய்ங்களும் மக்களிடம் வைக்கப்படும். ஆகவே வேலை செய்யாதவனை மக்களே அவமானப்படுத்தி விடுவார்கள். கௌரவாமான வாழ்க்கை வாழ்வதற்க்கு உழைத்தே தீர வேண்டும் என்ற பண்பாடு கீழிருந்து/மக்களிடமிருந்து திணிக்கப்படும்.
*********
வங்கி கணிணி மய எதிர்ப்பு குறித்து வருத்தப்படும் அனானி அவர்களே....இந்தியாவின் இழி நிலை குறித்து போன பதிலில் குறீப்பிட்டிருந்தமை குறித்து மௌனமாக இருப்பது ஏன்?
ஆக தங்களது சொந்த சுக துக்க நலன்களை தான்டி வேறு சிந்தனை தங்களுக்கு கிடையாது(அதுவும் கூட உத்திரவாதமில்லாமல் இருக்கிறது).
எல்லாமே வளர்ச்சிதான் - வெறுமனே கம்யுனிஸ்டுகள் கம்ப்யுட்டருக்கு எதிரி என்று அவதூறு கிளப்பாமல் அதனால் ஒட்டு மொத்த சமூகத்துக்கு விளைந்த நன்மைகள், SBI யில் அப்ப்டி ஒரு கோரிக்கை வைத்ததன் முகாந்திரம் என்ன என்பதை ஆய்வு செய்யவும்.
சிறிது நாட்களுக்கு முன்பு கூட ஒருவர் ATM கார்டின் மாகாமித்தியங்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஒரு அடிப்படை விசயம் நியபகம் இல்லை அல்லது மறந்து போல் நடிக்கிறார். ATM card மட்டும் இருந்தால் பத்தாது அக்கவுண்டில் பணமும் வேண்டும்.
அப்புறம் SBI நீங்கள் சொன்ன விசயம்தான் நடந்தது, அதாவது வேலையிழப்பு. தொழில்சங்கங்கள் பலமாக இருந்ததால் சிறிது அவகாசம் கிடைத்துள்ளது. இப்பொழுது அரசு வேலைக்கு ஆள் எடுப்பதே இல்லை. போலிஸ், ராணுவம் மட்டும் விதிவிலக்குகள்.
இந்தியாவில் தங்களது தாராளமயத்தால் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டதாக RBI சொல்லுகிறது.
கம்ப்யுட்டர், செல் போனை முன்னேற்றம் என்று சொல்லும் அனானி அவர்களே சோத்துக்கு சிங்கியடிப்பதும் அதை(வேளான் பொருட்களை) இறக்குமதி செய்ய அனுமதித்திருப்பது பற்றியும் என்ன கருத்து கூறுகிறேர்கள்?
ஒரு பக்கம் மருத்துவம் வளர்ந்து medical tourism நடக்கும் அதே வேளையில், பொது மருத்துவ வசதியை கெடுத்து குட்டி சுவர் ஆக்கியிருப்பதைத்தான் வளர்ச்சி என்று சொல்வீர்களா?(patents Right).
விவசாய துறையின் அபரிமித(???!!!) வளர்ச்சி பற்றிய தங்களது புகழாரத்தையும் கேட்க ஆவலாக உள்ளேன்.
மேலும் தண்ணீர் தனியார்மயம், விதை நெல் சீர்திருத்தச் சட்டம் போன்ற மக்கள் நல திட்டங்களேல்லாம் எப்படி இந்தியாவை முன்னேற்றும் என்றும் நீங்கள் விளக்கிக் கூற கடைமைப்பட்டுள்ளீர்கள்.
தொழில் நுட்ப வளர்ச்சி என்ற ஒரே காரணம்தான் உலகமயத்தை இந்தியாவில் விட ஆதரிப்பவர்களின் கடைசிப் புகழிடம். அவர்களுக்கு ஒரு வார்த்தை, இந்திய தேசிய முதலாளிகளை சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதித்தால் MNCக்களுக்கு கூட்டிக் கொடுத்து வளர்ச்சியுறும் தொழிழ் நுட்பத்தைவிட பல மடங்கு அதிக வளர்ச்சி இந்தியாவில் ஏற்படும்(எ-கா: சீனா - 1960-70)
***
என்ரானை பொறுத்த வரை இந்திய அரசு 7000 கோடி ரூபாய் கொடுத்து பழைய என்ரானின் இந்திய சொத்துக்களை(தபூல் ப்ராஜெக்ட்) GE போன்ற சில நிறுவனங்களிடமிருந்து வாங்கிய கேடுகெட்ட கதை தெரியுமா?
அந்த நிறுவனங்களை என்றைக்கு பிரட் சாப்பிட அனுப்ப திட்டமிட்டிருக்கிறேர்கள்?
என்ரான் ஒரு கம்பேனி அவ்வளுவுதான். ரஜினி இல்லையெல் விஜயகாந்த் என்பதுபோல் தனிமனிதர்களான ஏகாதிபத்திய வெறியர் கும்பல் தனது சுரண்டலை என்ரான் போன்று பல முகமூடிகள் அணிந்து உறுதிப்படுத்திக்கொள்வர்.
நன்றி,
அசுரன்.
எனது முந்தைய பின்னூட்டத்தை மற்றவர்களின் கவனத்திற்க்கு கொண்டு வருவதற்க்காக இந்த பின்னூட்ட கயமைத்தனம்
மகேந்திரன் என்பவரது பதிவின் பின்னூட்டத்தில் சிலர் கம்யுனிசம் பற்றி அவதூறு கிளப்பும் முயற்சி செய்திருந்தார்கள் அதற்க்கு பதில் சொல்லும் முகமாக:
***************
கலாச்சார புரட்சி பற்றிய விசயத்தில் அரைகுறையாக ஆடுபவர்களுக்கு ஒரே ஒரு விசயம்தான்,
ஒரு நாட்டின் வரலாறை முழுமையக புரிந்து கொண்டு பேசவும், குறைந்த பட்சம் எந்த விசய்ததைப் பற்றி பேசுகிறோமோ அந்த காலகட்டத்தின் வரலாற்று தொடர்புகளை தெரிந்து கொண்டு பேசவும்.
இது போன்ற அனுகுமுறை பாசிச மத வெறி பன்றிகளுக்கு கிடையாது என்பதை பல இடங்களில் அம்பலப்படுத்தியதுதான். அதனால் அவர்களைப் பற்றி மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் மற்ற வாசகர்களுக்கு சில விசயங்களை சொல்வது சரி என்று படுகிறது.
#1) மேற்கு வங்க பற்றிய செய்தி உண்மையா பொய்யா என்ற விரிவான பகுதிக்கு நான் செல்ல அவசியமில்லை. எனது கருத்துப்படி வோட்டுக் கட்சி கம்யுனிசத்தின் விளைவு ஒன்றும் மக்கள் நலமல்ல. அது கம்யுனிசமே கிடையாது என்பதுதான் எனது நிலைப்பாடு அதனால் கம்யுனிசம் இல்லாத ஒன்றை கம்யுனிசம் என்று தூக்கிக் கொண்டு பேசுவது திரிபுவாதம்.
ஒரு மருந்தை, ஒரு பத்தியத்தை அரைகுறையாக எடுக்கலாம் என்று எங்காவது படித்ததுண்டா? அப்படி அரைகுறையாக எடுத்தால் என்னாகும்? கேடு விளையும். அதே விசயம்தான் கம்யுனிசத்திலும். அதை வெட்டிக் குறுக்கி நமது மன உந்துதலுக்கேற்ப பயன்படுத்துவது ஆபத்தே. மக்கள் மக்கள் மட்டுமே கம்யுனிசத்தின் ஒரே உந்து சக்தி.
#2) சீனாவில் தியன்மென் சதுக்கத்தில் - நாட்டின் நிலைமை, விடுதலையைப் பெற அந்த நாடு செய்த தியாகம் பற்றி எல்லாம் கிஞ்சித்தும் புரிந்துண்ர்வு இன்றி ஏகாதிபத்திய நுகர்வு வெறி பிடித்து ஆட்டம் போட்டவர்களை என்ன செய்வது?
அய்யா.. ஒரு விசயத்தை புரிந்து கொள்ளவும் சீனாவின் புரட்சி ஒரு நாள் இரண்டு நாளில் நடந்து விடவில்லை சில பத்து வருடங்கள் தொடர்ந்து நடந்த ஒரு விசயம். குறீப்பாக மக்கள் மன்றங்களை கட்டியமைத்து எல்லா அரசு அதிகாரத்திலும் மக்களின் முழுமையான பாத்திரத்தை உறுதிப்படுத்திய ஒரு புரட்சி அது.
அதனால் அங்கு ஆட்சிக்கு வரும் ஒரு தலைமை மக்கள் விரோதமாக இப்படி அப்பட்டமாக வெல்லாம் நடந்து கொள்ள் முடியாது. அப்படி நடந்து கொண்டு ஆட்சியில் நிலைக்க முடியாது. ஒவ்வொரு பகுதி அளவிலும் மக்களின் கைகளீல்தான் அதிகாரமுள்ளது. இது சீனாவின் அந்த கால நிலைமைகளை நேரில் சென்று பார்த்து எழுதிய பல்வேறு முதலாளித்துவ அறிஞர்களின் கட்டுரைகளைப் படித்தால் தெரியும்(எழுதிய பலர் கம்யுனிசம் மாற்று என்று நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதை கவனத்தில் கொள்க).
அன்றைய கம்யுனிஸ்டு கட்சியில் இரு விதமான போக்கு நிலவியது: ஒன்று கட்ரியில் அதிகாரம் செலுத்திய முதலாளித்துவ கோஸ்டிகள், இரண்டு மக்களின் தலைவரான மாவோவின் தலைமையிலான சோசலிச குழு. முதல் குழுவால் கட்சியில் அதிகாரம் செலுத்தியும் நாட்டின் கொள்கை முடிவுகளில் அதிகாரம் செலுத்த இயலாத நிலைமையை ஒப்பிட்டு புரிந்து கொள்ளவும். இதற்க்கு காரணம் கீழே மக்கள் மீது ஆதிக்கம் செலுத்திய சோசலிச குழு(இந்த அதிகார பிரிவினை எவ்வாறு இப்படி perfect ஆக ஏற்பட்டது என்பதை புரட்சி நடந்த வரலாறைப் படித்தல் புரிந்து கொள்ளலாம்).
அதாவது முதாலாளித்துவ மீட்சிக்கான திட்டங்களை தலைமையின் ஒரு பகுதி வைக்கும் போதெல்லாம் மாவோ அதை எதிர்த்து அம்பலப்படுத்துவார், அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்துவார். இது அடிமட்டத்தில் கிளப்பும் அழுத்தம் தாங்காமல் மவோ தலைமையிலான குழுவின் கூற்றுக்களே கடைசியில் பெரும்பான்மை பலம் பெறும்.
இந்த முதலாளித்துவ மிட்சி முயற்சியை மாவோ இருந்த வரை கட்டுப்படுத்த முடிந்தது. மாவொவிற்க்கு பிறகு கட்சியில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திய முதலாளித்துவ தலைமை அதிகாரத்துக்கு வந்து நிதானமாக மக்களின் கண்ணை உறுத்தா வண்ணம் தனது திட்டத்தை நிறைவேற்றியது.
சரி மாவோ தலைமையிலான கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்ப்பட்ட சிக்கல் என்ன? இதை நடைமுறையில் சீர்குலைக்க கட்சி அதிகாரத்தில் இருந்த எதிரணி தனது அதிகார வலிமையைக் கொண்டு திட்டங்களை பாய்ச்ச்லாக நடைமுறைப்படுத்தும் ஒரு முனைக்கு செல்வது அல்லது நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடும் இந்த முனைக்கு செல்வது என்று அழிவு வேலைகளில் நைச்சியாக ஈடுபட்டனர்(ஒரு பகுதியில் உற்பத்தி குறித்து ஒரு அள்வு-எ.காவுக்கு ஒரு டன் - என்று நிர்ணயித்தால் இந்த குழு ஒன்று பாய்ச்சல் வேகம் பத்தாது அதனால் 10 டன் என்று மாற்றச் செய்து அழிவுண்டாக்கும், இல்லை சூழ் நிலை சரியில்லை அதனால் 0 டன் என்று அழிவுண்டாக்கும்). இவையெல்லாம் கட்சியில் அம்பலப்படுத்தப்பட்டு அவர்கள் மக்கள் மத்தியில் பதில் சொல்லவைக்கப்பட்டனர், பலர் தண்டிக்கப்பட்டார்கள்.
குறிப்பாக (அவரது பெயர் தற்பொழுது ஞ்பாகம் இல்லை) ஒரு தலைவரை இருமுறை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய மாவோ அவரை கடைசிவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை. இதன் காரணம் வேறொன்றுமில்லை, மக்கள்... மக்கள்... மக்கள் முடிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை. ஆனால் மக்களிடம் தலைமையில் உள்ள எதிரணீகளீன் சதியை கொண்டு செல்லும் இணைப்பு இழை மாவோவுக்கு பிறகு அறுந்தது. அந்த இருமுறை மன்னிக்கப்பட்ட தலைவரே அதிகாரத்தைப் பிடித்தார்.
மற்றபடி அபின் தேசம் என்ற அறியப்பட்ட சீனா, தொடர்ந்து 30 வருட உள் நாட்டு, வெளி நாட்டு, ஆக்கிரமிப்பு யுத்தத்தால் முற்றிலும் சீர்குலைந்து, அதே காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சியை விட பல மடங்கு அதல பாதாளத்தில் இருந்த ஒரு நாடு. புரட்சிக்கு பிறகு அபரிமிதமான வளர்ச்சி பெற்றது. எந்த நாட்டையும் சுரண்டாமல். இது அதிசயம்தான். இதில் முந்தைய சமூகத்தின் படு கேவலமான நிலைமையின் பாதிப்பின்றியா நடந்திருக்கும்? பாதிப்பு இருக்கும்.. அவைதான் ஏகாதிபத்தியங்களால் ஊதிப் பெருக்கப்பட்டது.
மாவோவின் ஒரு அரைகூவலுக்கு மக்கள் எதையும் தியாகம் செய்ய தயாராயிருந்தார்கள். கொசு ஒழிப்பு இயக்கம், நதிகளை கட்டுப்படுத்தும் அதிசயங்கள் பல செய்த இயக்கம், நாட்டின் ஐந்தாண்டு திட்டங்களை திட்டமிட்ட காலத்தைவிட குறுகிய காலத்தில் சாதித்து மிக விரைவாக் சோசலிசத்தை எட்டிய பொருளாதார வளர்ச்சி. பொருளாதாரம் சோசலிசத்தை எட்டுவது ஒன்றும் சாதரணமான விசயமில்லை. அதுவும் சீனா ட்புள் ஜம்ப் செய்தது - ஒன்று இந்தியாவைவிட படுபாதளத்தில் இருந்த பொருளாதாரத்தை முதலாளித்துவ பொருளாதராத்துக்கு நாடு முழுவதும் பரவலாக கொண்டு வந்தது, அடுத்து சோசலிச பொருளாதாரத்துக்கான கட்டுமானங்களை வெற்றிகரமாக நிறுவியது..... இப்படி பல சாதனைகள் கொண்ட காலகட்டம் அது. அதனால்தான் இன்றும் மாவோ, சீனாவின் மக்கள் நாயகன்.
ரஸ்யா ஸ்டாலின் பற்றீயதும் கூட பல புரளிகளின் அணிவரிசைதான். இது குறித்து பல இடங்களில் எழுதியாயிற்று.
இவர்களின் ஆட்சிக்காலங்களில் பலர் இறந்தனாரா? ஆம், ஆனால் அவை சுற்றீ வளைத்து எதிரி நாடுகள் செயற்கையாக உருவாக்கிய பொருளாதார நெருக்கடிகள், ஏற்கனவே உலகப்போரில் அழிந்து நாசமான உள்கட்டமைப்புகள்(குறிப்பாக ரஸ்யா, ஒரு உலகப் போர், தொடர் உள் நாட்சு யுத்தம், எல்லை அபகரிக்கும் யுத்தம்(இந்த யுத்தத்தில் மாஸ்கோவில் 4 லட்சம் தொழிலாளர்கள் லெனின் அழைப்பை ஏற்று அதிகப்படியாக உழைக்க முன் வந்தார்கள்- சிலர் சொல்வது போல மக்கள் எதிராக இருந்தால் எப்படி ஆட்சி நிலைத்து நிற்க்க முடியும்?), பிறகு வந்த பஞ்சம், ஒரு உள் நாட்டுச் சதி, இரண்டாம் உலகப் போர்), புரட்சிக்கு பிந்தய உள் நாட்டு, வெளி நாட்டு ஏகாதிபத்திய சதிகள்...
இன்னும் சிறப்பாக சொன்னால் அன்றைய நிலைமையில் வேறு விதமான ஆட்சியிருந்தால் இதைவிட படுகேவலாமன நிலை ஏற்பட்டிருக்கும் ஆனால் அதை ஊதிப் பெருக்க வேண்டிய அவசியம் ஏகாதிபத்தியத்துக்கு இருக்காது. நாமும் அதைப் பற்றி இன்றுவரை விவாதம் செய்து கொண்டிருக்க மாட்டோ ம்.
ஒன்னுமில்லாத லோக்கல் ரௌடி சதாம் அண்ணாச்சியை ஆப்படிக்கவே பல தில்லாலங்கடி வெலை செய்த ஏகாதிபத்தியம்(பிபிசி யின் முக்கிய பிரமூகரின் மர்ம மரணம், டாகுமெண்ட் போர்ஜரி, அதிபயங்கர ஆயுதம் பற்றிய டூபாக்கூர், இதில் கொடுமையாக் செப் 11 யை அரசே செய்திருக்கு என்று பல முதலாளித்துவ அறிஞர்களே ஆதாரத்துடன் பேசுகிறார்கள்). ஸ்டாலின், மாவோ விசயத்தில் எந்த அள்வு வேலை செய்திருப்பார்கள்?
சாதாமுக்கே இப்படியென்றால். அமேரிக்காவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியா மாபெரும் தலைவர்கள் பற்றி என்னவிதமான முயற்சிகள் நடந்திருக்கும் என்பது கற்பனைக்கெட்டாத ஒரு விசயம்.
அதனால் இந்த அவதூறுகள் பற்றி எடை போட விரும்புகிறவர்கள் சீனா, ரஸ்யா பற்றிய தங்களது வரலாற்று , பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ளவும்.
இது குறித்து மேலும் ஆணித்தரமான தகவல்களுக்கு:
tamilcircle.net (இங்கு சுந்தர ராமசாமி பற்றீய ஒரு விமர்சன கட்டுரையில் விரிவாக பேசியிருக்கிறார்கள் - புத்தகங்கள் பகுதி)
புதியகாற்று எனும் வலைப்பூவில் சில கட்டுரைகள் உள்ளன.
யார் வேண்டுமானலும் வந்து எனது வாயை பிடுங்கலாம். தக்க பதில் கொடுக்கப்படும்.....
**************
மாவோ காலத்து கட்டமைப்பிலிருந்தான் இன்றைய வளர்ச்சி. அது பற்றி கிஞ்சித்தும் வரலாற்று அறிவின்றி கதை விடுகிறார்கள் சிலர். இன்னும் சொன்னால் மாவோ காலத்து நடைமுறையை கைகழுவியதுதான் வேலையில்லாத் திண்டாட்டம், விபச்சாரம், கள்ளத் தோனி ஏறி செல்வது, வர்க்க வேறுபாடுகள், தனிச் சொத்து, சுரண்டல், பேசன் ஷோ, கோக் எல்லாம் சீனாவில் வந்து விட்டது. ஒரு வெற்றிகரமான சோசலிச நாடாயிருந்திருக்க வேண்டியது... என்ன செய்ய...
நன்றி,
அசுரன்
இந்த சந்தையை ஒட்டுமொத்தமாக அம்பானிகள் கைபற்றினால்
பரவாயில்லை என்று சொல்கிறீர்களா? வால்மார்ட் ரீடெய்லில்
நுழையக்கூடாது என்று சொல்பவர்கள், அதையே அம்பானி
செய்தால் அமைதியாக இருப்பதேன்? அமெரிக்காவுக்கு
அடிமையாக மாட்டோம். அம்பானிக்கு அடிமையாவோம்
என்று சொல்கிறீர்களா? மொத்த supplychain உம்
அம்பானி கட்டுப்படுத்த துடிக்கிறார். காந்த்ராக்டில் பூ விவசாயம்
செய்வித்து ஏற்றுமதி செய்கிறார்கள். பல்பொடியிலிருந்து
பெட் ரோகெமிகல் வரை அனைத்து தொழிலையும் செய்ய
ஒரே நிறுவனம். இந்த மொனாப்பலியை ஏன் கண்டுக்கொள்ளாமல்
இருக்கிறீர்கள்?
யாருய்யா சொன்னா அம்பானிய நான் எதிக்கலன்னு.... அம்பானி ஒன்னும் தேசிய முதலாளி கிடையாது. அவன் ஒரு தரகு முதலாளி. இதுட அர்த்தம் கம்யுனிஸ்டுகளின் முதல் எதிரி அவந்தான்.
Post a Comment