கழிசடைத் தளபதி விஜயகாந்தும், புரட்சிக்காரன் ரமணாவும்
ரமணா படத்தில் வரும் ஒரு காட்சி:
ரமணா சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். அவரைப் பற்றி கேள்விப்படும் மக்கள் அவரைப் புகழ்ந்து பேசுவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒரு காட்சியில் ஆட்டோ க்காரர் ஒருவர் பின்வருமாறு கூறுவார், " நான் நாத்திகன்தான் ஆனால் ரமணா சாரோட படம் கிடைத்தால் அவரை கடவுளாக வைத்து கும்பிடுவேன்", என்று.
இதை குறிப்பிட்டு ரமணாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், மக்களுக்காக பல சேவைகள் செய்த நீங்கள் உங்களது படத்தையும் வெளியிடலாமே என்று கேட்பார். அதற்க்கு புரட்சிக்காரர்(??) ரமணா சொல்வார், "அய்யா, இந்த சட்டையை நெய்த நெசவாளி யார் என்று தெரியுமா உங்களுக்கு?, நாம் சாப்பிடுகிறோமே அந்த அரிசியை விளைவித்த விவசாயி யார் என்று தெரியுமா?" இப்படி சில எடுத்துக்காட்டுகளைக்(வழக்கம் போல புள்ளிவிவர பாணியில்) கூறிவிட்டு கடைசியில் இவர்கள் எல்லாம் தங்களது கடமையை செய்துவிட்டு எதுவும் விளம்பரம் தேடாதபோது நான் மட்டும் என் கடமையை செய்ததற்க்கு ஏன் விளம்பரம் தேட வேண்டும் என்று கேட்டிருப்பார்.
மிக மிக நியயாமான நேர்மையான ஒரு புரட்சிக்காரனுடைய பதில் இதுவாகத்தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை சொல்லுவதற்க்கு விஜயகாந்திற்க்கோ அல்லது ரமணாவிற்க்கோ அருகதை துளிக்கூட கிடையாது.
ரமணாவைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அது முடிந்துபோன கதை. ஆனால் விஜயகாந்த்? அது நமது மக்களைப் பிடித்த சனி. அது எதிர்கால தலைவலி.
சரி நடைமுறைக்கு வருவோம், ரமணா வெற்றியடைந்தது அந்த படத்தின் டிக்கெட் விற்பனையிலும் கூட ஊழல், முறைக்கேடு புகுந்து விளையாடியிருக்கலாம். விஜயகாந்தின் பாக்கெட் நிரம்பியது. தேர்தல் வந்தது. இப்பொழுது நிழல் ரமணா ஒரு M.L.A.
சமீபத்தில் வட மாவட்டங்களிலொன்றில் ஒரு இடத்திற்க்கு ஏதோ பிரச்சனைக்காக ஆறுதல் சொல்லவோ அல்லது நிவாரணம் கொடுப்பதற்க்கோ நமது கழிசடைத் தளபதி/இன்னாள் M.L.A செல்கிறார். அவரைக் காண பெரும் மக்கள் கூட்டம் கூடுகிறது.
தேர்தல் சமயமாவது மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் வோட்டு சீட்டுக்கள் முண்டியடிப்பதாக ஒரு மயக்கம் தோன்றும். தேர்தலோ கண்ணுக்கெட்டிய தொலைவில் எங்கும் இல்லை. ஆக, மக்கள் கூட்டத்தை பார்த்து மயங்க தற்பொழுது ஒரு முகாந்திரமும் இல்லாத நிலை. இந்த கழிசடைத் தளபதியோ மக்கள் மத்தியில் நெருக்கமாக சிக்குண்டு எரிச்சலுற்றிருந்த வேலை. அப்பொழுது அவரது அருகிலிருந்த ஒரு பாதிக்கப்பட்டவர் தனது பிரச்சனைகளை கூறி திரும்ப திரும்ப விண்ணப்பமிட்டுக் கொண்டே இருந்திருக்கிறர். கடுப்பான நமது தளபதி "போலேர்" என்று விட்டார் ஒரு அறை.
பொறிபறக்க வெடித்து கிளம்பினார் அடிவாங்கியர். விஜயகாந்தை அடிக்க அல்ல, மாறாக திருப்பி அடிக்கும் திரணியற்ற முடியாத மற்ற தொண்டரடி பொடிகளை அடித்து தனது கோபத்தை தீர்த்துக் கொள்ள. அவர் சுற்றியிருந்தவர்களை சும்மா சுழற்றி சுழற்றி அடித்தார். சினிமாக்களில் கதாநாயகன் அடிவாங்கினாலும், வில்லன் அடிவாங்கினாலும் வேடிக்கைப் பார்த்துப் பழக்கப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டம் அங்கு தானே அடிவாங்கியும்கூட திருப்பி அடிக்காமல் வேடிக்கை பார்த்தது. அந்த இடமே சிறிது நேரத்திற்க்கு அமளி துமளியாகிவிட்டது. காமெராக்கள் 'க்ளிக்கின', விடியோக்கள் படம் பிடித்தன. அன்றைய செய்திகளில் இந்த சம்பவம் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்டது.
அடித்த தளபதி ஒரு கீறலும் இன்றி வீட்டுக்கு திரும்பினார். அடிவாங்கிய பாதிக்கப்பட்டவரும் திரும்பினார், அடிவாங்கியவரிடம் அடிவாங்கியவர்களும் திரும்பிச் சென்றனர், கெமாரக்கள் மட்டும் திரும்பவில்லை. அவை அந்த காட்சியை சளைக்காமல் ஒளிபரப்பின. அது தொலைக்காட்சி சேனல்களுக்கு மற்றொருமொரு ரேட்டிங்கை உயர்த்தும் சம்பவம். மக்களுக்கோ ஒரு மாலை வேளை காபி, மிச்சருக்குள் அடங்கும் அளவே கிசுகிசுக்கப்பட வேண்டிய ஒரு பரபரப்பு சம்பவம். சுயமரியாதை பற்றி இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட எந்த இடத்திலும் பேசப்படவில்லை.
கும்பகோணம் 94 குழந்தைகளின் சாவுக்கும், சுனாமி, வெள்ள நிவாரண படுகொலைக்களுக்குமே கூட வெறுமனே துக்க அஞ்சலி சுவரொட்டிகள் அடித்து தனது சமூக உணர்வு அரிப்பை சொறிந்து விட்டுக் கொண்ட சாலச்சிறந்த பண்ப்பாட்டு பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ்ச் சமூகம் இந்த அல்ப சம்பவத்துக்கு சலசலத்துக் கிளம்பும் என்ற எதிர்பார்ப்பின் விளைவு அல்ல இந்த கட்டுரை.
மாறாக இப்படி ஒரு சமூகம் சீரழிந்து வெறுமனே 'அமைதிப் பூங்கா' சர்டிபிகேட்டுக்கு சுயமரியாதையை அடகுவைத்துள்ளதே அந்த நிலையை நாமும் ஒரு சினிமா பார்வையாளனைப் போல் பார்த்துக் கொண்டிருப்பதா அல்லது இந்த சமூகத்தின் முகத்தில் அறைந்து அதன் மயக்கத்தைப் போக்குவதா என்று கேள்வி எழுப்பும் உத்வேகமே இந்த கட்டுரையின் நோக்கம்.
இந்த தளபதி தனது கட்சி ஆரம்பித்த புதிதிலேயே இப்படி மேடையில் வைத்து ஒருவரை அடித்த பெருமை உண்டு. இவ்வளவுதான் மக்கள் மீதான இவர்களின் அன்பு, சகிப்புத்தன்மை. இவ்வளவுதான் இவர்களின் அரசியல்.
கடமையை செய்தவனுக்கே விளம்பரம் தேவையில்லை என்று வியாக்கியானம் பேசியது ரமணா என்ற நிழல். அந்த நிழலின் நிழல் கடமையை செய்ததை அல்ல மாறாக களாவானித்தனம் செய்ததையே விளம்பரப்படுத்தி ஒரு மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இந்த கருப்பு எம்ஜிஆர் சாதி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு சொல்லுகிறார். அதாவது யாரும் தன்னை தாழ்த்தப்பட்டவர், தீண்டத்தாகாதவர் என்று எண்ணிக் கொள்ள வேண்டாமாம். அவர்கள்(தலித்துகள்) தங்களை உயர்ந்தவர்களாக நினைத்தாலே போதுமாம், சாதிப் பிரச்சனை தீர்ந்துவிடுமாம். இவரை திண்ணியத்துக்கு கூட்டிச் சென்று சிறிது மலம் திங்கச் சொல்லி பிறகு அவரது தீர்வு பலன் கொடுக்கிறதா என்று கேட்டுப் பார்க்கலாம்.
லஞ்சம் கொடுப்பதற்க்கு எதிராக இவர் சமீபத்தில் ரமணா படத்தில் வருவது போலவே ஒரு குரூப்பை உருவாக்கியிருக்கிறார் என்று சமீபத்தில் சிலர் வலைப்பதிவில் எழுதி ஏதோ சமுக மாற்றத்துக்கான ஆரம்பம் அதுதான் என்பது போல் பரஸ்பரம் சிலாகித்துக் கொண்டனர். ஆனால் இவர்கள் மிக வசதியாக மறந்த விசயம் இந்த கழிசடைத் தளபதியே வரியேய்ப்புகள்(கருப்புப் பணம்) செய்து வருமானத்தை பெருக்குபவர்தான். ஒரு வேளை 'கருப்பு' என்பதால் விஜயகாந்திற்க்கு பிடிக்கிறதோ என்னவோ.
கடந்த ஜெயலலிதா ஆட்சி, கருணாநிதி ஆட்சிகளில் மக்கள் மேலே ஏவிவிடப்பட்ட பல்வேறு அடக்குமுறைகளின் போது எந்த ஒரு கண்டனத்தையும் அவர் தெரிவித்ததில்லை. மக்களை விடுங்கள் அவரது சொந்த துறையில் சில காலம் முன்பு தொடர் தற்கொலைகள் நிகழ்ந்த பொழுது இந்த கழிசடையின் தார்மீக ஆவேசம் எங்கே சென்றது என்று தெரியவில்லை.
மாஞ்சோலை தேயிலை தோட்டப் பிரச்சனை, பல சாதி வெறி தாக்குதல்களுக்கு இவர் எந்த கருத்தையும் இது வரை வெளியிட்டதில்லை, இதுவரை. இவர் ஒரு காவி வெறியர் என்பதும் இவரது படங்களை பார்த்தால் தெரியவரும்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தாழ்த்தப்பட்டோர் தன்னிச்சையாக பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனுகூட தாக்கல் செய்ய முடியவில்லை. இதைப் பற்றி பேச வக்கில்லாத இந்த கழிசடை-இந்து மத வேறியன், தனது படங்களில் "இந்தியாவில் ஒரு முஸ்லீம் ஜனநாதிபதியாக முடிகிறது, கவர்னராக முடிகிறது, etc etc..பாகிஸ்தானில் ஓரு இந்து, வார்டு பிரதி நிதியாக முடிவதில்லையே ஏன்? ஏன்?" என்று R.S.S குரலில் பேசுகிறான்.
குஜராத படுகொலைகளை உலகமே கண்டித்தது ஆனால் இந்த கழிசடை, அந்த படுகொலை பற்றி அப்பொழுது தனக்கு சரிவர தகவல் கிடைக்கவில்லை அதனால்தான் குரல் எழுப்பவில்லை என்று இப்பொழுது பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து R.S.S-யை பற்றி கருத்து சொல்லுவதில் இருந்து நழுவுகிறது.
அவர் சொன்னதிலேயே சாலச் சிறந்த கருத்து பின்வருமாறு:"ஆட்சியை பிடிக்கிறதுக்காகத்தான் இந்த அரசியல்வாதிங்க (காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள்) பா.ஜ.காவை மதவாதக் கட்சிங்கறாங்க. தங்களை மதவாத கட்சின்னு அவங்க சொல்லியிருக்காங்களானு எனக்கு தெரியாது". இப்படிக் கூறி மதவெறிக் கட்சிக்கு மதசார்பற்ற நல்லிணக்க முத்திரை குத்தினார் தளபதி. இவர் இந்தி திணிப்பை ஆதரிப்பவரும் கூட. ஆனால் சொல்லிக் கொள்வது என்னவோ தமில், தமிலன் என்றுதான். சத்யராஜ் தனது படத்தில் இதை சரியாகத்தான் கிண்டலடித்துள்ளார்(மகாநடிகன் படம்) .
விஜயகாந்த் என்ற கழிசடை ஒரு சக்தியாக உருவாகியிருப்பதற்க்கான அடிப்படை இந்த சமூகத்தில் உள்ளது. இந்த சமூகத்தின் சினிமா கவர்ச்சியும், மறுகாலனியாதிக்க பொருளாதார சீர்திருத்தங்களால் அவதியுறும் மக்களின் - மாற்று அரசியல் அமைப்புக்கான ஏக்கமும் சேர்ந்து அவரை ஒரு மாற்று சக்தியாக மக்கள் நம்புவதற்க்கு ஒரு காரணம் என்றால். ஏகாதிபத்திய தாக்குதலுக்காலான இந்தியாவின் அரைக்காலனிய, அரை நிலபிரபுத்துவ சமூக அமைப்பின் இயல்பு அதன் தீர்மானகரமான சக்தியாக உதிரிப்பாட்டாளி வர்க்கத்தை/அதற்குரிய பண்பாட்டையே அதிகப்படியாக உருவாக்குகிறது. அந்த வர்க்கத்தின் வாழ் நிலை விஜயகாந்தின் கவர்ச்சி, வாய்சவடால் அரசியலுக்கு அவர்களை(உதிரிபாட்டாளி) மயக்க்கி பழியாக்குகிறது. பழியாடுகளின் எண்ணிக்கை விஜயகாந்துக்கு அங்கீகராத்தை வழங்குகிறது.
இந்த உலகத்தின் எந்த ஒரு வளர்ச்சிப் போக்குக்கும் மூலாதாரமாக எதிர்மறை கூறுகளின் முரன்பாடுகளிடையேயான இயக்கம் காரணமாக இருக்கிறது என்ற இயங்கியல் தத்துவம் உண்மையெனில். ஒரு கழிசடை பிரதிநிதி சமூக சக்தியாக வளர ஏதுவான அதே சமூக பொருளாதார அடித்தளம் அதன் எதிர்மறை கூறான புரட்சிகர சக்திகள் வளரவும் காரணமாகிறது.
ஆக, இங்கு எதிர்காலம் சமூக மாற்றத்திற்க்கா அல்லது கழிசடை தளபதிக்கா என்பதை சமூக மாற்றத்தில் ஆர்வம் கொண்டவர்கள், ஜனநாயக சக்திகள்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவர்கள் யாருடன் அணி சேர்கிறார்கள் என்பதை பொறுத்து உள்ளது. இந்த சமூகத்தில் கழிசடைத்தனத்திற்க்கும் மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கும் எதிர்மறைக்கூறான புரட்சிகர சக்தி எது என்பதை அடையாளம் கண்டு அதனுடன் ஐக்கியப்பட்டு அதை வலுப்படுத்த வேண்டியது அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளின் (குறிப்பாக நடுத்தர வர்க்க அறிவு ஜீவிக்கள்) வரலாற்று கடமையாக உள்ளது.
(இந்த கட்டுரையின் சில் பகுதிகள் புதிய ஜனநாயகம் ஆகஸ்டு மாத இதழில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)
17 பின்னூட்டங்கள்:
ஒரு திருத்தம்:
விஜயகாந்த வடமாவட்டங்களொன்றுக்கு சென்ற பொழுது ஒருவரை மேடையில் அடித்ததாக எழுதியுள்ளேன். அது மதுரையில் நடந்த சம்பவம்.
நன்றி,
அசுரன்.
http://muthuvintamil.blogspot.com/2006/06/2011.html
நேற்றைய தமிழ்முரசு நாளிதழை பார்க்க நேர்ந்தது.அதில் கட்டம் கட்டி போடப்பட்டிருந்த ஒரு செய்தி கருத்தை கவருவதாக அமைந்திருந்தது.
*******************
முதலில் செய்தி:
கடலூரில் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த விஜயகாந்திடம் உங்கள் கட்சி சட்டசபை தேர்தலில் செலவு செய்த தொகை எவ்வளவு என்று கேட்டதற்கு முதலில் இதை அதிமுகவிடமும் திமுகவிடமும் கேளுங்கள் என்றாராம்.கடலூர் மாவட்டத்தில் தங்கள் கட்சியி்ல் இருக்கும் உட்பூசல் எல்லா கட்சியிலும் இருப்பது போலத்தான் என்று கூறியுள்ளார்.
1.ஈழத்தமிழர் பிரச்சினையில் உங்கள் நிலைப்பாடு என்ன?
2.இடஒதுக்கீடு பற்றிய உங்கள் கருத்து என்ன?
3.10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டது பற்றி உங்கள் கருத்து என்ன?
போன்ற கேள்விகளை கேட்ட தமிழ்முரசு(?) நிருபரிடம் இந்த கேள்விக்கு எல்லாம் பதில் கூறமுடியாது.இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் எங்கிட்ட கேட்காதீங்க என்றாராம்.
நீங்கள்தான் எங்களை கூப்பீட்டீர்கள்.அதனால் கேள்வி கேட்கிறோம் என்று அந்த நிருபரும் தன் கடமையை( வேறென்ன குட்டையை குழப்பறதுதான்) செவ்வனே செய்ய
"என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்.நான் கேள்வி கேட்டால், உங்களால் பதில் சொல்ல முடியாது" என்றாராம் கேப்டன்.
விஜயகாந்தின் ஆவேசத்தால் அதிர்ச்சியடைந்த நிருபர்களை பண்ருட்டி ராமச்சந்திரன் சமாதானப் படுத்தினாராம்.
*****************
நான் ஏற்கனவே சிலமுறை கூறியிருந்தபடி முக்கிய பிரச்சினைகளில் தன் கருத்து என்ன என்றே கூறாமல் கள்ள அரசியல் நடத்தி வருகிறார் விஜயகாந்த் என்பது தான் இந்த செய்தியின் சாராம்சம்.
விஜயகாந்தின் தர்மசங்கடத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. முக்கிய பிரச்சினைகளில் தன் கருத்து வெளியே தெரிந்தால் தமக்கு ஆதரவு கொடுத்து வரும் சிலர் தொடர்ந்து ஆதரவு தரமாட்டார்கள் என்று நினைக்கிறார் அவர்.
தமிளன், தமில்மொலி என்றெல்லாம் அடிக்கடி முழங்கியவர்தான் அவர். தம் மகனுக்கு பிரபாகரன்(விடுதலைப்புலி தலைவர் நினைவாக) என்று பெயர் வைத்துள்ளவர்தான் அவர்.
ஆனர்ல இதை இன்று உரத்து கூறினால் அவருக்கு சப்போர்ட் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட லாபி ஆதரவை வாபஸ் வாங்கலாம்.( தினமலர் வகையறாக்கள்). இதுதான் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.இதனால் தான் கள்ள மெளனம் அனுசரிக்கிறார் அவர்.
ஆனால் இவ்வகையாக முக்கிய பிரச்சினைகளில் தன் கருத்தை வெளியே சொல்லாமலே அரசியல் நடத்துவது நியாயமா என்ற கேள்வி முக்கியமானது. ஓட்டு போடும் மக்களுக்கு சில முக்கிய விஷயங்களி்ல் இவர் கருத்து என்ன என்று தெரிவிப்பது மிகவும் அவசியம். அரசியல் தெளிவு உள்ள ஒரு சமுதாயத்தில் இப்படி எல்லாம் இவர் பம்மாத்து செய்யமுடியாது.(தமிழகத்தில செய்யலாம். டிவி பெட்டிக்கும் சைக்கிளுக்கும் ஓட்டு போடறவன்தானே தமிழன்).
இந்த கள்ள மெளன டெக்னிக்கை இவருக்கு கூறியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் மிக புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும். இங்கிருந்து விஜயகாந்தை முன்னிலைப் படுத்தி வரும் புனித பிம்பங்களும் சரி. விஜயகாந்தும் சரி.மிகவும் ஜாக்கிரதையாக தங்கள் காய்களை நகர்த்துவார்கள்.
இவரை முன்னிலைப்படுத்தி வரும் ஆட்கள் தங்களின் எண்ணத்திற்கேற்ப இவரை வளைக்க முயற்சிப்பார்கள். அவர்களின் வலையில் விஜயகாந்த் விழுந்துவிட்டார் என்று வெளியே தெரிந்தால் கண்டிப்பாக பெரும்பான்மை மக்களின் ஆதரவை விஜயகாந்த் இழப்பது உறுதி.
ஒருவேளை இவர்களை அனுசரித்து விஜயகாந்த் ஆட்சியை பிடித்தவுடன் விடுதலைபுலிகளை ஆதரித்தோ, தமி்ழ், தமிழ்மொழி என்று பேச ஆரம்பித்தால் புனிதபிம்பங்களின் ஆதரவை இழந்துவிடுவார். அவர் அப்படி பேசக் கூடியவர் தான் என்பது என் சொந்த கருத்து.ஆனால் ஆட்சியை பிடித்தவுடன் புனித பிம்பங்களின் ஆதரவு அவருக்கு தேவைஇல்லை என்றும் ஆகிவிடலாம். ஆனால் ஆட்சியை பிடிப்பதுவரை விஜயகாந்த் கள்ளமெளனம் அனுசரித்து சமாளிக்கமுடியுமா என்பது முக்கிய கேள்வி.
முதலில் இப்போது வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல்கள் அவருக்கு ஒரு சவால். விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் வாங்கியுள்ள ஓட்டுக்கள், சட்டமன்ற தேர்தலில் அவர் வாங்கிய ஓட்டுக்களினால் கவரப்பட்டு அவரை ஆதரிக்க தயாராக இருப்போரின ஓட்டுக்கள்,இவை இரண்டும் சேர்ந்தால் ஓரளவு சீட்டுக்களை அவர் வெல்லமுடியும் என்று தோன்றுகிறது.
இங்கு ஒரு சிக்கல் உள்ளது. விஜயகாந்த் புதியவர்தான்.ஆனால் அவர் கட்சியில் உள்ள அனைவரும் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல.பல கட்சிகளிலும் இருந்து அரசியல் எதிர்காலத்தை தேடி அவர் கட்சியில் இணைந்தவர்கள்தான். இவர்கள் அனைவரும் சுத்தமானவர்கள் என்று கூறமுடியாது.உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் ஜெயித்துவந்தால் ஊழல் செய்யாமல் இருக்கச்செய்ய விஜயகாந்தால் முடியுமா? அப்படி முடியாத பட்சத்தில் பொதுமக்கள் மத்தியில் இவர் இமேஜ் பாதிக்கப்படலாம்.
அதிமுக எம்.ஜீ.ஆர் காலத்தில் இருந்தே பொதுவாக உள்ளாட்சி அமைப்புகளை முடக்கி போடுவதற்கு காரணம் இதுதான் என்பார்கள்.சில அதிகாரங்களை கையில் வைத்துக்கொண்டு இந்த தலைவர்கள் செய்யும் சிறுசிறு ஊழல்கள் பொதுமக்கள் மத்தியில் கட்சியின் பெயரை கெடுக்கும்.ஆனால் திமுக இத்தேர்தல்களை நடத்துவதும் உள்ளாட்சிகளுக்கு அதிகாரத்தை கொடுப்பதும் பல வளர்ச்சி பணிகள் நடக்க துணை புரிந்தாலும் கட்சி ஆட்களும் தலைவர்களும் பணத்தை சுருட்டுவதும் நடக்கும்.அது பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயரை பெற்றுத்தரும்.
அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு தலைவர் எப்படி நடந்துகொள்கிறார் அல்லது கட்சி எப்படி நடந்துகொள்கிறது என்பது ஒரு முக்கிய அம்சம்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை தொடர்ந்து விஜயகாந்தின் செயல்பாடுகளை பொருத்தே 2011ல் தேர்தலில் விஜயகாந்த கனவு பலிக்குமா என்று தெரியவரும்.மற்றபடி ஒரு தலைவராக விஜயகாந்த் முக்கிய பிரச்சினைகளில் கள்ள மெளனம் அனுஷ்டிப்பது நான் முன்னிலைப் படுத்தும் அரசியலின் பிரகாரம் தவறு என்பேன் நான்.
எப்படி?????
One more correction asuran sir,it happened in srirangam and not in madurai.
நன்றி அனானி,
இந்த தகவல் ஒரு நண்பர் என்னிடம் விளக்கிக் கூறித்தான் எனக்குத் தெரியும், அதனால்தான் தவறான இடத்தைக் குறிப்பிட்டுவிட்டேன்.
மன்னிக்கவும், சுட்டிக்காட்டியதற்க்கு நன்றி,
அசுரன்
இந்து மதவெறியன் -ய்ன் முகமுடியை கிழிததற்கு ,,,,
தமிழ் மக்கள் சார்பாக நன்றி!!!!!!
இந்து மதவெறியன் -ய்ன்
முகமுடியை கிழிததற்கு ,
தமிழ் மக்கள் சார்பாக நன்றி!!!!!!
இந்து மதவெறியன் -ய்ன் முகமுடியை கிழிததற்கு ,,,,
தமிழ் மக்கள் சார்பாக நன்றி!!!!!!
இந்து மதவெறியன் -ய்ன் முகமுடியை கிழிததற்கு ,,,,
தமிழ் மக்கள் சார்பாக நன்றி!!!!!!
இந்து மதவெறியன் -ய்ன் முகமுடியை கிழிததற்கு ,,,,
தமிழ் மக்கள் சார்பாக நன்றி!!!!!!
ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்திருப்பவர் விஜயகாந்த், ஆனால் அவரது சினிமா சம்பாத்தியத்தை பற்றி மட்டும் யாரும் கேட்கக்கூடாது. விஜயகாந்த் கட்சியில் பல கட்சிகளில் இருப்பவர்கள் இணைவதாக தினமும் கதைக்கிறார்கள். யார் இவர்கள்? பழைய மொந்தையில் புதிய கல்... அவ்வளவுதான். ஊழல், ரவுடியிசம், தெரு பொறுக்கி வேலைகள், கொலை, கொள்ளை, ஊரை அடித்து உலையில் போடுதல் போன்ற சம்பவங்களை மேற்கொள்வர்கள்தான் இவர்கள் எல்லோரும் பழைய கட்சியால் புண்ணியம் கிடைக்காது என்பதை உணர்ந்து புதிய கட்சியில் சேர்ந்து பாவ (பதவி) மன்னிப்பு கேட்க வந்திருக்கின்றனர். தமிழக மக்கள் அரசியல் ரீதியாக அணிதிரட்டாமல் இந்த பிரச்சினைக்கு விடிவு இல்லை. தமிழக மக்களை அரசியல்பாணிகளாக்குவோம். ஒரு தொழிலாளியை பொலேர் என்று அடித்தவரை மக்கள் நொறுக்கும் காலம் வெகு தூரம் இல்லை. வாழ்த்துக்கள் அசுரன்.
நன்றி முத்து தமிழினி,
//சிலமுறை கூறியிருந்தபடி முக்கிய பிரச்சினைகளில் தன் கருத்து என்ன என்றே கூறாமல் கள்ள அரசியல் நடத்தி வருகிறார் விஜயகாந்த் என்பது தான் இந்த செய்தியின் சாராம்சம்.//
ஆம் அவர் ஒரு கள்ளழகர்தான்(அவரது படத்தின் பெயர்).
அவரது கள்ளத்தனம் பற்றிய தங்களது விமர்சனம் சரியே..
அவரை இனிமேல் கள்ளக்கழிசடைத் தளபதி என்று அழைக்கலாம்..ஆனால் அந்த 'கள்ள' என்பது சாதியை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று யாரும் காவடி தூக்கிக் கொண்டு வந்துவிடக் கூடாது...:-))
(ஸ்ஸ்ஸ்....அப்பா....ஒரு பக்கம் சாதி வேனான்றாங்க இன்னொரு பக்கம் சாதியை கேவலப்படுத்தினா எங்களை கேவலப்படுத்தினா மாதிரி இருக்குன்றாங்க.....அதுக்கு ஒரு எழுபத்தெட்டு பதிவுகள் வேற......)(ஹ.... நாங்கள் இதுக்கெல்லாம் பய்ந்துர மாட்டமுல்ல....அடி எத்தனை வாங்கினாலும் கடசில 'ரொம்ப நல்லவன்ன்னு..' பேர் எடுத்துருவம்ல).
ஆனால் என்னால் அவரது தேர்தல் வெற்றி தோல்வி பற்றிய பகுதிகளுக்கு கருத்து சொல்ல இயலாது. ஏனெனில் இந்த சட்டமன்ற நாடளுமன்ற வடிவமே போலி என்பதை மிக உறுதியாக நம்புகிறேன்.
ஆனால் அவர்தான் இந்த சமூகத்தின் எதிர்கால தலைவர் என்பதை மறுக்க முடியாது. அவருக்கு(அவருக்கு மட்டுமல்ல) அடி கொடுப்பதற்க்கு ஒரு புரட்சிகர கட்சியால் மட்டுமே முடியும் என்பதும் இந்த சமூதாய முரன்பாடுகாள் தீர்மானிக்கின்ற விதியாக உள்ளது.
ஆகவே(விளம்பர பாணியில்) உடனடியாக ஏதாவதொரு புரட்சிகர அமைப்பில் சேர்ந்து பணியாற்றுவீர்
:-)))) (அது உறுதியாக திமுக அதிமுக வோட்டு கம்யுனிஸ்டுகள் போன்ற ஓட்டு கட்சிகள் கிடையாது).
நன்றி,
அசுரன்.
சந்திப்பு.....வாருங்கள்......வெகு நாட்கள் கழித்து சந்திக்கிறோம்......
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி......
// பழைய மொந்தையில் புதிய கல்... அவ்வளவுதான். ஊழல், ரவுடியிசம், தெரு பொறுக்கி வேலைகள், கொலை, கொள்ளை, ஊரை அடித்து உலையில் போடுதல் போன்ற சம்பவங்களை மேற்கொள்வர்கள்தான் இவர்கள் எல்லோரும் பழைய கட்சியால் புண்ணியம் கிடைக்காது என்பதை உணர்ந்து புதிய கட்சியில் சேர்ந்து பாவ (பதவி) மன்னிப்பு கேட்க வந்திருக்கின்றனர். //
சேர்த்த பணத்தை முதலீடு செய்ய இரண்டு வழி உள்ளது....
1) தொழில் முதலீடு.
2) அரசியல்.
சினிமா அவருக்கான பிசினஸ் கிடையாது...எவனாவது இழிச்சவாயன் இன்வெஸ்ட் பன்னினால் அதில் வரும் ரொட்டேசனை நக்கி பிழைக்கும் திறமை மட்டுமே கொண்டவர் நம் தளபதி....
மற்ற தொழில் துறைகளோ ஏகாதிபத்திய தாக்குதலால் தேசிய முதலாளிகள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்க்ம் நேரமிது....
மாவோ கணித்தபடி அவர்கள் புரட்சிகர கம்யுனிஸ்டு கட்சிகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் காலமிது....
அப்ப மிஞ்சி இருக்கிற ஒரே லாபமீட்டும் துறை அரசியல்தான்....அதுவும் இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் தரகு அரசியலுக்கு கிடைக்கும் கமிசன் பெர்சன்டேஜ்!!!....அதெல்லாம் நமக்கு கணக்கு போடக்கூட அறிவு பத்தாது......வக்ரா... நேசக்குமார் போன்ற இன்டெலிஜென்ட் அதிபுத்திசாலிகளிடம்தான் கேட்க வேண்டும்.....
//தமிழக மக்களை அரசியல்பாணிகளாக்குவோம். ஒரு தொழிலாளியை பொலேர் என்று அடித்தவரை மக்கள் நொறுக்கும் காலம் வெகு தூரம் இல்லை. //
அடிப்பதற்க்கு வர்க்கரீதியாக அரசியல் உணர்வு பெற்ற அணிகள் வேண்டும்(நம்ம R.S.S. அம்பிகள் சென்னையில் வாங்கினார்களே) அப்படிப்பட்ட அணிகளின் எண்ணிக்கை CPM-யை விட ம.க.இ.க என்ற நக்சல்பாரி அமைப்பில் அதிகம் என்பது போல் தெரிகிறது.....:-)))..
நன்றி,
அசுரன்
வாங்க புதிய ஜனநாயகம் என்ற மேஜாரிட்டி பீப்பிள்,
என்ன செய்ய இந்து மதவேறி நேரடியாக தமிழ் நாட்டில் நுழைய பல முயற்சிகள் செய்து தோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியது பிறகு பலவித 'முகமூடி'-களுடன் வருகிறது(இங்கு எந்த உள்குத்தும் இல்லை என்பதை மிக்க தாழ்மையுடன் அறிவிக்கிறேன்:-))).
தங்கள் வருகைக்கு நன்றி...மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்துக்களை விட்டு செல்லுங்கள்....
நன்றி,
அசுரன்
திராவிட கட்சிகளும் புரட்சியின் விளைவாக வந்ததுதானே.
எல்லா புரட்சிகளும் அதிகார ருசி கண்டபின் வழக்கம் போல
சுரண்டல் கட்சிகளாக மாறிவிடும். அல்லது அப்படி மாற்றி
விடுவார்கள்.
//திராவிட கட்சிகளும் புரட்சியின் விளைவாக வந்ததுதானே.
எல்லா புரட்சிகளும் அதிகார ருசி கண்டபின் வழக்கம் போல
சுரண்டல் கட்சிகளாக மாறிவிடும். அல்லது அப்படி மாற்றி
விடுவார்கள். //
நியாயமான சந்தேகம் எழுப்பிய அனானி தங்களுக்கான பதில் பின்வரும் பதிவில் உள்ளது. படித்து தங்களது விமர்சனங்களை பதிய வைக்கவும்.
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_115375045154005106.html
நன்றி,
அசுரன்.
அய்யோ அய்யோ. எல்லாம் வீணாயிடுத்தே!!!.
ஸண்டாளன் இப்படி ஸொல்லிட்டானே.
"இது 3-வது தலைமுறை. நாம் திராவிட கட்சியா இல்லையா என்பதை மக்கள் உணர்த்துவார்கள். நாம் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் இல்லை." (நன்றி தினத்தந்தி)
ஸொன்னவர் தேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கேப்டன் விஜய்காந்த் அவர்கள்.
சட்டிய போட்டு உடைச்சுட்டன்....
தங்கள் வருகைக்கும் அந்த தகவலுக்கும் நன்றி அருண்மொழி
நன்றி,
அசுரன்
Post a Comment